ஞாயிற்றுக் கிழமையாதலால் மாமல்லபுரத்தில் மிகுந்த கூட்டம் வரும், பகல் வெயிலில் எந்த இடமும் பார்க்கமுடியாது என்று நினைத்தேன். அதனால் காலையில் சீக்கிரமே மாமல்லபுரம் போய்ச்சேருமாறு திட்டமிட்டுச் சென்றதால் பல இடங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. இல்லையென்றால், மனைவி சீக்கிரம் கிளம்பலாம் என்று சொல்லியிருப்பார்.
சென்ற வாரம் கிருஷ்ண மண்டபத்தைக் கண்டோம். அதற்குச் சிறிது தூரத்திலேயே முற்றுப் பெறாத ஒரு மண்டபத்தைக் கண்டோம். இந்த முற்றுப்பெறாத மண்டபத்தை பஞ்சபாண்டவர் மண்டபம் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இடம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் படம். பழமையான படங்களைப் பார்க்கும்போது, அதிலும் தென்னிந்தியப் படங்களைப் பார்க்கும்போது மக்களின் இயல்பான உடையைக் கவனிப்பேன். நாம் பொதுவாக, இப்போதுதான் நாகரீகமாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்வோம். பிரிட்டிஷார், அவர்கள் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கோட் சூட் போட்டுக்கொண்டார்கள். வெயிலின் சூடு அதிகமுள்ள நம்மவர்கள் அதற்கு ஏற்ற உடைகளை அணிந்தார்கள். கல்ஃப் தேசங்களில் பணியாற்றியபோது அந்தக் கடும் வெயிலில் (எல்லா இடங்களிலும் ஏசி இருந்தாலும்), பிரிட்டிஷாரின் உடையையே காப்பியடித்து அலுவலகங்களில் உடையணிவது எனக்குக் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும். அதிலும் அரபிக்கள், அவர்களின் இயல்பான உடைக்கு மேல் (அவர்களின் இயல்பான உடை மிகப் பொருத்தமாக இருக்கும்) கோட்/ப்ளேசர் அணிவது பொருந்தாததுபோலத் தோன்றும்.
இன்னொரு புகைப்படம் (1880களில் எடுத்தது) அனேகமாக பிரிட்டிஷார் இதனைப் பார்க்கப்போயிருந்தபோது எடுத்ததாகஇருக்கும். அதனால்தான் இந்தியச் சேவகரைப் பார்க்கமுடிகிறது.
இருக்கும் குடைவரை மண்டபங்களிலேயே இதுதான் மிகப் பெரியது (50 அடிக்கும் அதிகமான நீளம்). இதில் இருக்கும் சிம்மத் தூண்கள்-அமர்ந்திருக்கும் சிங்கங்களை அடிப்பாகமாகக் கொண்ட தூண்கள் (இவற்றை நான் ஏராளமான கோயில்களில் கண்டிருக்கிறேன். அவ்வப்போது அவற்றைப் பகிர்கிறேன்) பல்லவர் காலத்து அமைப்பு.
மண்டபத்தின் நுழைவில் ஆறு சிங்கத் தூண்கள் இருக்கின்றன. (மண்டபத்தின் இரண்டு முடிவிலும் பாறையோடு பாறையாக உள்ள தூண்களைக் குறிப்பிடவில்லை). இதற்குப் பின்னால் நான்கு தூண்கள் உள்ளன. உள்ளே, சிற்பங்களைச் (அதாவது பஞ்சபாண்டவர்களாக இருக்கலாம்) செதுக்க சிறுசிறு பீடங்கள் (தெய்வங்களை அமைக்கும் பகுதி, பாறையிலேயே குடைந்து சிறு அறைபோன்று) அமைந்துள்ளன. ஆனால் அவற்றில் சிற்பங்கள் இல்லை. மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களைப் பார்த்தால் அவை முழுமைபெறவில்லை, ஆனால் குன்றினைக் குடைந்து தூண்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.
முற்றுப் பெறாத, மேல் விதானமாகச் செதுக்கப்படவேண்டிய தூண்கள் தெரிகிறதா?
எதனால் இந்த மண்டபம் முற்றுப்பெறவில்லை என்பதை யாரே அறிவர்? ஒருவேளை Time Machineல் போய்ப் பார்க்க நேர்ந்தால், நாம் காண்பது பத்திலொரு பங்கு, மீதம் பல பூமிக்குள் புதையுண்டு மணலால் மூடப்பட்டிருக்கின்றன, தற்போதிருக்கும் கடற்கரை ஓரிரண்டு கிமீட்டர் உள்ளே இருந்தது, அந்தப் பகுதியிலும் ஏராளமான குடவரைக் கோயில்கள்/கற் கோயில்கள் அமைந்திருந்தன என்பதைக் காண இயலுமோ?
சுனாமியின்போது நீருக்குள் புதையுண்டு இருக்கும் கடற்கரைக்
கோயில்களில் இரண்டின் மேற்பகுதிகள் தெரிந்தன, சில சிலைகளும் தெரிந்தன என்று நான் படித்திருக்கிறேன்.
பஞ்சபாண்டவர் குடவரைக் கோயிலின் வெளிமண்டபப் பகுதியின் மேற்புறம் சிற்பங்கள் தெரிகின்றனவா? அவைகள் சிறிய சிறிய கோவில் விமானம் போல அமைத்துள்ளனர். ஒருவேளை முழுமைபெற்றிருந்தால் தனித் தனிக் கோவில்/சன்னிதி போன்ற தோற்றத்தைத் தந்திருக்கும். இதையொட்டி அமைந்துள்ளது மாமல்லபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி.
அர்ச்சுனன் தபசு – சிற்பத் தொகுதி 2
இதில் (அர்சுனன் தபசு) இரண்டு சிற்பத் தொகுதிகள் இருக்கின்றன என்கிறார்கள். முதலாவது, ஐந்து ரதச் சாலையும் பேருந்துச் சாலையும் சந்திக்கும் முனையில் அமைந்துள்ளதாம் (இதனைப் பார்த்த நினைவு இல்லை). அதில்தான் இந்தக் காட்சியை முதலில் அமைக்க முயன்றிருக்கிறார்கள். இடையில் பாறை பிளந்ததனாலோ இல்லை வேறு காரணத்தாலோ, தாங்கள் அமைக்க நினைத்ததை, பஞ்சபாண்டவர் மண்டபத்தை ஒட்டி, தற்போதிருக்கும் இட த்தில் அமைத்திருக்கிறார்கள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பழைய சிற்பத் தொகுதி 70 அடி நீளமும் 30 அடி உயரமும் உடையது.
இரண்டாவதாக அமைந்துள்ள அர்ச்சுனன் தபசு மிகப் பிரபலமான சிற்பத் தொகுதி. 8ம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்மவர்மர் காலத்தில் செதுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்தச் சிற்பத் தொகுதியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், பார்க்கும்போது வரும் பிரமிப்பு வராது. இது சுமார் 43 அடி உயரமான பெரிய கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி நீளம். மஹாபாரதத்தில் வரும் நிகழ்வான, அர்ஜுன ன் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற தவம் செய்த கோலமும், இன்னொரு புறத்தில் பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த நிகழ்வும் ஒருங்கே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியும் நடுவில் இரண்டாகப் பிளந்த பாறையாக இருந்தாலும் அது தெரியாதபடி தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கிறது.
இடது பக்கத்தில், தலையை உயர்த்திப் பார்க்கும் யாளி, சிங்கம் போன்றவை இருக்கின்றன. அதைத் தொடர்ந்து வானவர்கள் (கின்னரர், கிம்புருடர் போன்றவர்கள்) ஆகியோர் செதுக்கப்படிருக்கின்றனர்.
இந்தச் சிற்பத் தொகுதியை ஒவ்வொரு பகுதியாக எத்தனை படங்கள் போட்டாலும் எனக்குத் திருப்தி வரவில்லை. ஒவ்வொரு சதுரமாக தனித் தனியாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கவேண்டுமோ என்று இப்போது யோசிக்கிறேன். யானைக் கூட்டம், அதன் காலிடையே குட்டிகள் என்று அதன் ஊர்வலத்தை எப்படி அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள் பாருங்கள்.
மேலே இரண்டாவது படத்தில், சிவபெருமான் நின்ற நிலையில் இருக்கிறார்.
அவரது வலது பக்கம் மூன்று பூதகணங்களும், இடக்கைக்கு கீழே இரண்டு பூதகணங்களும் உள்ளன. அவர்களுக்கு முன்னால் ஒற்றைக் காலில் நின்று தபசு செய்யும் தவமுனிவர் ஒருவர் காணப்படுகிறார். அவர் அருகில் அன்னப்பறவைகளும் உள்ளன.
அதற்குக் சற்றுக் கீழே, முக்கிய சிற்பமான நாக இணைகள் உள்ளன. மூன்று தலைகள் கொண்ட நாகர் தலைவனும், அருகில் நாகினியும் கைகளைக் கூப்பி கங்கையை வணங்குகின்றனர். அதாவது பிளவு வழியாக கங்கை பாய்வதாகத் தோற்றம்.
இவர்களுக்குப் பின்னால் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் திருமால் திருக்கோவிலொன்று உள்ளது. அதற்கு முன்பாக தலைகள் சிதைவுற்ற முதியவர்கள் உருவங்கள் உள்ளன. திருமாலுக்கு முன்பு தியானம் செய்யும் பெரியவர் சிற்பமும் உள்ளது.
திருமால் கோவிலுக்குச் சற்றுக் கீழே, ஆற்றங்கரையும் அதனைச் சுற்றி துறவிகளும், மான்களும், சிங்கமும் இருப்பதாகச் செதுக்கியிருக்கின்றனர். மதிய நேரம் என்பதால் சந்தியாவந்தனத்தில் சூரியனைப் பார்த்து மந்திரம் சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியை மாத்திரம் மேலே கொடுத்துள்ளேன். அடுத்து உள்ளது நாகர் தலைவன், நாகினி பகுதி.
திருமால் கோவில், தவம் செய்யும் முனிவர், தலைகள் இல்லாத சிற்பங்கள். அதன் அருகிலே உள்ள படத்தில், ஆற்றங்கரையில் துறவிகளும் மான்களும்.
இடது பக்க யாளிப் பகுதியை அடுத்து வனப்பகுதி காட்டப்பட்டு உள்ளது. சிங்கம் மானை நோக்கிப் பாய்வது போலும், பலா மரத்தின் நிழலில் ஒரு வேடன், அவனைத் தொடர்ந்து இன்னொரு வேடன், முயல் ஒன்று திரும்பிப் பார்ப்பது, மரத்தில் ஏறும் உடும்பு, மான் இவற்றோடு அமைக்கப்பட்டிருக்கிறது.
திருமால் கோவில். அடுத்தது ஏழு தலைகளைக் கொண்ட நாகம். நாகர் தலைவனும் நாக கன்னிகையும்.
யானைக்கு முன்னால் பூனைத் தொகுதிகளும், அதில் ஒரு பூனை தவம் செய்வதாக இருப்பதும், அதன் கீழே நிறைய எலிகளும் கூர்ந்து கவனித்தால் தெரியம்படி செதுக்கப்பட்டுள்ளன.
பாறையின் மேற்பகுதியில் வானவர்கள் இருப்பதாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மஹாபலிபுரம் சிற்பங்களைப் பற்றி பழைய நூல்களில் உள்ள படங்கள்
சிற்பங்கள் தெளிவாக இருப்பதைக் காணலாம்.
இடது பக்கம், யானைக் கூட்டம் காணப்படுகிறது. செழுமையான தந்தங்களைக் கொண்ட பெரிய யானை முன்னால் நிற்க, அதற்குப் பின்னால் ஒரு யானை வருகிறது. இவை இரண்டிற்கும் இடையில் ஆறு யானைக் குட்டிகளுக்கு மேல் நீரருந்தும் காட்சி உள்ளது.
இந்தச் சிற்பத் தொகுதியை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். சிறிது இடைவெளி உள்ள மிகப் பெரும் பாறையில் எவ்வளவு அழகாகக் குடைந்து செதுக்கியிருக்கிறார்கள். மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகள். ஒவ்வொன்றும் நுணுக்கமாகச் செதுக்கியிருக்கிறார்கள். அந்த முனிவரின் விலா எலும்பு, சூரியனை வணங்குபவர் என்று எல்லாமே அவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது.
அர்ஜுனன் தபசு தொகுதி 2ஐ முழுமையாகப் பார்த்த பிறகு
அடுத்து எங்கு சென்றோம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாமா?
(தொடரும்)
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகந்தக் கடவுள் நம்மைக் காக்கட்டும். தேவசேனாபதியை காலையில் நினைவுகூர்வோம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் பதிவு மிக அருமையாக உள்ளது. மாமல்லபுரம் பாண்டவர் குடவரை கோவில், அர்ச்சுனன் தவசு காட்சி பாறை என எல்லாவற்றையும் பார்த்து ரசித்தேன். எத்தனை நுணுக்கமான சிற்ப காட்சிகளை ஒரு பெரிய பாறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். எத்தனை திறமையான சிற்பகலை வல்லுனர்கள். நாம் பிறந்த பூமியில் அவர்களும் இத்தனை திறமைகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது.
அதுவும் நீங்கள் பதிவை விவரித்து சொல்லிய விதமும், அதன் விளக்கப் படங்களையும் ஒரு சேர பார்க்கும் போது நான் அந்த இடத்தில் இருப்பதைப் போன்றே, நீங்கள் விவரித்த சிற்பங்களை நேரில் கண்டு ரசிப்பது போன்றே உணர்ந்தேன். நல்ல விளக்கத்துடன் இவ்வாறு பதிவு எழுதும் தங்களது திறமைக்கும் எனது வணக்கங்கள்.🙏 நன்றிகள்🙏.
நாங்கள் இங்கு சென்று பல ஆண்டுகள் ஆகி விட்டன. சென்னையிலிருக்கும் போது ஒரு தடவைதான் சென்றோம். இப்போது இன்னுமொருமுறை சென்று பார்க்கும் ஆவல் தங்கள் பதிவு மூலமாக எழுகிறது. அது இனி நடக்குமா எனத் தெரியாது. ஆனால் உங்கள் பதிவு வாயிலாக சென்று பார்த்த ஒரு திருப்தி வருகிறது. உங்களது பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குஇப்போ அறிவியல் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளன. பண்டைக் காலத்தில் சிற்ப மற்றும் ஓவியத்துக்கான, கோவில் கட்டிடக்கலைக்கான புத்தகங்கள் ஓலைச் சவடிகளில்தான் இருந்திருக்க வேண்டும். எப்படி அது இந்தியா முழுவதும் பரவியிருந்தது, எப்படி இவற்றை வடிவமைத்து மேற்பார்வை பார்த்தார்கள் என்பதெல்லாம் மிகுந்த ஆச்சர்யத்துக்குரியது.
இங்கெல்லாம் போகவேண்டும் என்றால் அதிகாலையிலோ இல்லை மழை இல்லாமல் மேகமூட்டத்துடன் இருக்கும் காலங்களிலோதான் செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் நடக்க வேண்டும்.
மஹாபலிபுரம் சிற்பங்கள் என்றுமே அழகு தான். நுணுக்கமான வேலைப்பாடுகள் அசர வைக்கும்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். ஒரு தொகுதியாக உள்ளதாலும், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதாலும் மிகவும் பெருமைக்குரியன இவைகள்.
நீக்குசரித்திர கதைகளை வாசிக்கும் காலம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிப் போய் விட்டதோ என்ற வருத்தம் மனதைக் குடைகிறது.
பதிலளிநீக்குஜீவி சார்... கல்கி, சாண்டில்யன் இன்னபிற திறமையான ஆசிரியர்கள் எல்லா வரலாற்றையும் கதைகளாக எழுதிவைத்துவிட்டனர். 90களின் சரவணபவன் உணவைச் சாப்பிட்டவர்களுக்கு, சிறு வயதில் அம்மா, பாட்டி கையால் சாதாரண சாப்பாட்டை ருசித்தவனுக்கு, தற்போதைய உணவுகள் அதைப்போன்று ருசிக்கவில்லையோ அப்படி சரித்திர நாவல்களுக்கும் நிலைமை.
நீக்குசாண்டில்யனும் கல்கியும் நமக்குக் காண்பித்த சம்பவங்களை, வரலாற்று நாயகர்களின் குணங்களை, வேறு மாதிரி யார் எழுதினாலும் நம் மனம் ஒப்புக்கொள்வதில்லை.
இது மாதிரி மண்டபங்களை- பழைய கட்டிடக்கலையைக் கண்டால் எனக்கும் உடனே சென்று பார்க்கத் தோன்றும். கிளம்பவே மனசு இராது.
பதிலளிநீக்குமுற்றுப் பெறாத இந்த மண்டபத்தின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும். சிற்பங்களின் தொகுப்பு மட்டுமா?
ஒருவேளை ஒரு கட்டிடத்தின் மேற்புறமோ? ?கீழே இன்னும் இதன் பகுதிகள் நிலத்தினுள் இருக்கின்றனவோ..
பதிலளிநீக்குமொபைலில் படித்ததால் கொஞ்சம் பெரிசுப்படுத்திப் படங்களைப் பார்த்தேன். அதனால் படங்களின் ரசனை பற்றி விரிவாக எழுத முடியவில்லை.
பதிலளிநீக்குஅடுத்த வாரம் PC--யில் பார்ப்பேன்.
சிற்பங்களை நுட்பமாக படமெடுத்து போட்டதோடு விளக்கியும் இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎவ்வளவு உற்று உற்றுப் பார்த்தும் பூனைத்தொகுதி என் கண்ணில் படவேயில்லை!
பழையபடங்கள் ஒரு அழகு என்றால் நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் படங்கள் அட்டகாசம் நெல்லை. ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க.
பதிலளிநீக்குபடங்கள் மட்டும் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்த்தேன். பின்னர் வருகிறேன். ஒரு வேளை மாலையானாலும் ஆகலாம். வேலைப் பளு.
கீதா