கிருஷ்ணாவின் வெண்ணெய் பாறை
அர்சுனன் தபசு சிற்பத் தொகுதியைப் பார்த்த பிறகு, அடுத்து அருகில் இருந்த மற்ற இடங்களுக்குச் செல்ல லாம் என்று நினைத்தோம். அப்போதுதான் இந்த இடங்களையெல்லாம் காண்பதற்கு டிக்கெட் இருக்கிறது, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொண்டால்தான் இந்தப் பகுதிக்குள் நுழைய முடியும் என்பது தெரிந்தது (அதற்கு முன்பே நாங்கள் 3 இடங்களைப் பார்த்துவிட்டோம்). டிக்கெட் அங்கேயே ஆன்லைனில் வாங்கிக்கொண்டேன். தொல்லியல் துறை வசம் இருக்கும் இடங்களைக் காண இந்த மாதிரி ஆன்லைனில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி சுலபமாக அமைத்திருக்கிறார்கள். அதனால் துறைக்கும் யார் யார் சென்றார்கள் என்பது தெரியும். நமக்கும் டிக்கெட் விலையில் பத்து சதம் டிஸ்கவுண்ட்.
டிக்கெட் வாங்கிக்கொண்ட பிறகு நுழைவாயில் வழியாகச் சென்றதும் முதலில் பார்த்தது இந்த வெண்ணெய்ப் பாறைதான்.
இது சுமார் 20 அடி உயரமும் 5 மீட்டர் அகலமும் உடைய ஒரு பெரிய பாறை, மலைச் சரிவில் இருக்கிறது. பாறையின் அடிப்பாகம் சுமார் 4 அடிதான். எப்படி இது விழாமல் இருக்கிறது என்பதே ஆச்சர்யம்தான். இது உருண்டை வடிவம்போல இருப்பதால், கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பாறை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
புவியீர்ப்பை எதிர்த்து இந்த 250 டன் எடையுள்ள பாறை எப்படி நிற்கிறது என்பதே அதிசயம்தான். சுனாமி, புயல் அல்லது நில அதிர்வு எதற்கும் வளைந்துகொடுக்காமல் அது அந்த இட த்திலேயே நிற்கிறது. இந்தப் பாறை சுமார் 1200 வருடங்களுக்கு முந்தையது என்று நம்ப ப்படுகிறது. (ஆனால் பாறையின் வயது என்று ஆராய்ச்சி செய்தால் அது மிலியன் ஆண்டுகளுக்கு முன்னால் என்று அறிவியல் ஆராய்ச்சி சொல்லும்)
1900களில், சென்னை கவர்னர் ஆர்தர், இந்தப் பாறை கீழே விழுந்து மக்களுக்கு ஆபத்தாகப்போய்விடப் போகிறது என்று எண்ணி 7 யானைகளை அனுப்பி அந்தப் பாறையை பத்திரமாக அடிவாரத்தில் கொண்டுவந்துவிடலாம் என்று முயன்றாராம். ஆனால் பாறை ஒரு இஞ்ச் கூட நகரவில்லையாம். மக்களும் இதற்கு கண் காது மூக்கு வைத்து, இந்தப் பாறையே தேவலோகத்திலிருந்து விழுந்தது என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
பல்லவ அரசன் நரசிம்மவர்மன் (6ம் நூற்றாண்டு 630-668) இந்தப் பாறையைக் கீழே கொண்டுவர முயன்றானாம். இந்தப் பாறை ஒரே கல் என்ற வடிவில் உலகில் உள்ள பலவற்றையும்விடப் பெரியதாம்.
இதன் முன்பு நாங்கள் படங்கள் எடுத்துக்கொண்டோம். எனக்கு சரிவான பாதையில் நிற்பது சவாலாக இருந்த து. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இன்னும் மேலே சென்று பாறையின் பின் பக்கத்திற்குச் செல்ல எனக்கு ஆசை இல்லை. கொஞ்சம் சறுக்கினாலும் ஆபத்து என்று என் உள்மனசு சொல்லியது. பிறகு நினைவுக்காக அதன் முன்பு உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
வெண்ணெய் பாறையில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு அங்கிருந்து நடந்து, வலது புறத்தில் இருந்த சில இடங்களைப் பார்ப்பதற்காக நடந்தோம். காலை 8 மணி என்பதால் வெயிலின் தாக்கம் இல்லை. வெயில் நேரத்தில் இவற்றையெல்லாம் காண்பது எளிதல்ல.
இந்தச் சிறிய குன்றில் சிற்பங்கள் வடிக்கத் தோதான பாறைகள் இல்லை என்பதால் அந்தக் குன்றை அப்படியே விட்டுவைத்துவிட்டார்களோ?
மூன்று மூர்த்திகள் கோவில்.
இதுவும் 672-700 ஆண்டுகளில் (முதலாம் பரமேச்வரவர்மன் காலம்) செதுக்கப்பட்டிருக்கலாம். இது மற்ற குடவரைக்கோயில்களை விட வித்தியாசமானது. முன் மண்டபமோ இல்லை வெளியோ இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. முழுமையாக முடிக்கப்பட்ட ஒன்று இது. இந்தக் குடவரைக்கோயிலில் மூன்று சன்னிதிகள் (சேர்ந்திருக்கும் மூன்று கோயில்கள்) இருக்கின்றன. நடுவில் உள்ள கோயில் மற்ற இருபுறம் இருக்கும் கோயில்களைவிடச் சற்று முன்பக்கமாக இருக்கிறது. (அதன் முக்கியத்துவம் கருதி அப்படி அமைத்திருக்கலாம்)
இந்தக் கோயில்கள் சற்று உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு சன்னிதிக்கும் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று கோயில்களின் வெளிப்புறத்தில் துவாரபாலகர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனர்.
மூன்று சன்னிதிகளையும் தாண்டி தனியாக துர்கையின் சிற்பம். இது தனிக்கோயிலாக இல்லை.
துவாரபாலகர்களுடன் கூடிய, மத்தியில் உள்ள சிவன் கோவில். சிவன், நான்கு கரங்களுடன், மழுவுடன் கூடியதாக இருக்கிறார். அவரது வலது கரம் அபயமுத்திரையுடனும் இடது கரம் துடையில் வைத்திருக்கும்படியாகவும் இருக்கிறது. அவரது இரண்டு புறமும் (மேல்புறம்) சிவகணங்கள் இருக்கின்றனர். அவருடைய கால் பகுதியில் இரு புறமும் இரண்டு பக்தர்கள் பணிவுடன் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். அந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் பிற்காலத்தில் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
துவாரபாலகர்களும் சிவகணங்களும், பக்தர்களும் தெளிவாகத் தெரிவார்கள். (ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் பிற்காலத்தையது)
சிவன் கோயில் நடுவில் இருக்க, அதன் இருபுறமும் பிரம்மா, விஷ்ணு கோயில்கள் அமைந்திருக்கின்றன. இடது புறம் இருப்பது பிரம்மா கோயில். பொதுவாக மும்மூர்த்திகள் என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்றுதான் அமையும். ஆனால் இந்த பிரம்மா கோயிலை, பல வரலாற்று ஆசிரியர்கள் மூன்று முகங்கள் (நாலாவது முகம் பின்பக்கம் இருக்கும்) இருப்பதுபோன்று அமையாத தால், இதனை சுப்ரமணியர் ஆலயம் என்கிறார்கள். அதிலும் ஒரு போர்வீரன் போன்று மார்பில் இரு புறமும் குறுக்காக சங்கிலி போன்று இருப்பதால், பிரம்மனுக்கே வேதத்தின் பொருளுரைத்த சுப்ரமணியர் என்று சொல்கின்றனர்.
இந்தக் கோயிலின் துவாரபாலகர்கள், தாடியுடன் நின்றிருந்த கோலத்தில் இடது கையில் தாமரையுடனும் (பூ, தாமரைதானா?) வலது கரம் இடுப்பில் வைத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
இறைவனின் மேற்பகுதியில் இரு புறங்களிலும் இரண்டு கணங்கள் (அல்லது தேவர்கள்) இருக்கின்றனர். அதில் ஒருவர் எழுதுகோலையும், தன் கையையொட்டி ஒரு புத்தகத்தையும் (அக்குள் பகுதியில்) வைத்திருக்கிறார்.
சிவன் கோயிலின் வலது புறம், விஷ்ணுவிற்கான கோயில் இருக்கிறது. மற்ற இரு கோயில்களின் துவாரபாலகர்கள் போலல்லாமல், இங்கு இரண்டு துவாரபாலகர்களும் திரும்பி நிற்கின்றனர். பாறையின் அளவு காரணமாக இப்படிச் செதுக்கியிருக்கிறார்களா தெரியவில்லை. விஷ்ணு நான்கு கரங்களுடனும், சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சிதருகிறார். வலது கை அபய முத்திரையுடனும் இடது கை, இடது துடையில் வைத்திருக்கும்படியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற சன்னிதிகளில் இருப்பதுபோலவே, மேற்புறம் இருபுறமும் கணங்களும் (தேவர்கள்), திருவடியின் இருபுறமும் இரண்டு பக்தர்களுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணு கோயிலுக்கு (சன்னிதிக்கு) வலப்புறத்தில் துர்கையின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. எருதின் தலைமீது நின்ற கோலம் (மஹிஷாசுரன்). எட்டு கரங்களில் சங்கு சக்கரம் வாள், கேடயம், வில் அம்புகளோடு காட்சி தருகிறாள். பொதுவா இத்தகைய துர்கை சிற்பத்தை சோழர் காலக் கோயில்களின் வலதுபுறச் சுவற்றில் காணமுடியும் (பிற்பாடு அவை பற்றி எழுதும்போது புகைப்படத்தில் காண்பிக்கிறேன்). ஏன், கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில், மூலவர் சன்னிதி (தேர் வடிவில்) அமைந்துள்ளதில், இதே போன்று விஷ்ணு துர்கையின் சிற்பம்/சன்னிதி சுவற்றில் உள்ளது.
இந்த மும்மூர்த்தி கோயிலின் எதிரே உள்ள பாறையில் இந்த மாதிரி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வேறு பெயர் சொன்னாலும், மழைநீர் சேகரிக்கும் தொட்டிபோன்று (மிகப் பெரிய அளவில்) அமைத்திருந்திருக்கிறார்கள்.
கல்லில்செதுக்கப்பட்ட யானைக்கூட்டம், குரங்கு, மயில்
வனத்தில் இருப்பது போல ஒரு பெரிய பாறையில் யானைக்கூட்டத்தையும் அதன் மேற்புறத்தில் மயிலும் குரங்கும் செதுக்கியிருக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் தொல்லியல் துறை, போர்ட் வைத்து அது என்ன என்று எழுதியிருக்கிறார்கள். அதனால் தெரிந்துகொள்வது சுலபமாக இருந்தது.
கொடிக்கால் மண்டபம்.
யானைச் சிற்பங்கள் பார்த்த இத்தின் அருகிலேயே கொடிக்கால் மண்டபம் உள்ளது.
இது ஒரு முழுமை பெறாத குடவரைக் கோயில் போன்று தோன்றியது. உள்ளே கருவறை போன்று அமைந்த பகுதியில் ஒன்றும் இல்லை. ஆனால் இரண்டு பெண் துவாரபாலகர்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இது பெண் தெய்வத்திற்கான கோயிலாக அமைந்திருந்திருக்கலாம். துர்கை கோயிலா என்பது தெரியவில்லை.
கணேச இரதம்
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு நாம் கணேச ரதம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வருகிறோம். இதுவும் பாறைகளைக் குடைந்து செய்யப்பட்டது.
இது முதலாம் நரசிம்ஹவர்மன் காலத்தையது. கடற்கரைக்கு அருகில் உள்ள ஐந்து ரதங்கள் போன்றவற்றிர்க்கு இது முன்னோடி என்று வரலாற்று ஆசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். இந்தக் கோயில் முதலில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கட்டப்பட்டதாம். 1880களில் மாவட்ட கலெக்டரின் அனுமதியின் பேரில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர், கணேசர் சிலையை வழிபாட்டுக்காக வைத்தனராம். இங்கிருந்த சிவலிங்கம், அருகில் இருக்கும் மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தக் கோயில் 20 அடிக்கு 12 அடி அளவில் கட்டப்பட்டுள்ளது. உயரம் சுமார் 30 அடி இருக்கும் என்று தோன்றுகிறது. மூன்று பகுதிகளாக அமைந்த ரதம் இது. தூண்கள், அமர்ந்த நிலையில் இருக்கும் சிங்கங்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. இது பல்லவர்கள் காலத்தைய முறை.
விநாயகரை வணங்கிவிட்டு நாங்கள் அடுத்துச் சென்ற இடம்
வராஹர் கோயில். அதனை அடுத்த வாரம் காண்போமா?
(தொடரும்)
ஆமாம் இந்தப் பகுதிக்கு டிக்கெட் உண்டோ? நல்லா பராமரிக்கறாங்க. நான் சென்றது பல வருஷங்களுக்கு முன்னாடி. டிக்கெட் நினைவில்லை.
பதிலளிநீக்குமலைச்சரிவா!! ஹிஹிஹி அது பாறை இல்லையோ?, நெல்லை?
மலைச்சரிவுன்னதும் பச்சைய தேடத் தொடங்கிட்டேன்! ஹாஹாஹா
கீதா
நெல்லை படங்கள் அட்டகாசம். செமையா இருக்கு...எனக்கு இப்ப போணும் போல இருக்கு கைல மொபைல், ஏதோ ஒரு கேமரா இருக்கிறதே அதை வைச்சு கொஞ்சம் எடுத்து வைச்சுக்கலாமேன்னு...
பதிலளிநீக்குஎடுத்ததையே போடலைன்னு நீங்க சொல்றது காதுல விழுது!!!!!
உண்மைதான் நெல்லை, காலைல எழுந்தா, காலைல என்ன செய்யணும்? அடுத்து மதியம், இரவு, நாளை திங்கள் என்ன வாங்கணும் இப்படியும், வீட்டு வேலைகள், அழைப்புகள் பதில்கள், ப்ளாக் ல ஒரு 3, 4 தளங்கள்தான் ஆனா அதுவும் வாசித்து சும்மா அருமை ன்னு போட முடிவதில்லை....ஆழ்ந்து சொல்லத் தோன்றுகிறது.
ஏன்னா எழுதறவங்க கஷ்டப்பட்டு எழுதறாங்க...நமக்கு எவ்வளவு தகவல்கள் தராங்க..
கொஞ்ச மாதங்கள் முன்னர் கூட ஏதோ பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தேன் இப்ப ஏன் முடியலைன்னு யோசிக்கிறேன்...உங்க படங்கள் பார்க்கறப்ப எல்லாம் நான் எடுத்டதை போட்டேனும் பதிவு எழுதணும்னு நினைக்கிறேன் ஆனா ஹிஹிஹி இல்லை...
இருங்க புலம்பிட்டேன் அடுத்தாப்ல எல்லாம் பார்த்துவிட்டு வருகிறேன்.
கீதா
இப்படியான பாறைகள் நிற்பதை இங்க மட்டும் இல்லை, சென்னை-பெங்களூர் சாலையில் வரப்ப ஒரு இடத்தில் வாலாஜா தாண்டினப்புறம்னு நினைக்கிறேன் பாறை மலைகளா வருமே அங்க பார்க்கலாம்.. படங்கள் எடுத்து பதிவிலும் போட்ட நினைவு....
பதிலளிநீக்குகீதா
இந்தப் பாறையே தேவலோகத்திலிருந்து விழுந்தது என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.//
பதிலளிநீக்குநம்மால் முடியலைனா......இதுதான் பெரும்பான்மையான டயலாக்!
அட சறுக்கு மரம் போல சறுக்கி விளையாடினீங்களா ஹாஹாஹா ஓ நீங்க சின்ன பையனாச்சே!!! (சறுக்க முடியாதுன்னு தெரியும் சும்மா உங்களை வம்புக்கு இழுக்கலைனா கருத்து நிறைவு பெறாது!!!)
கீதா
இந்தப் பாறை ஒரே கல் என்ற வடிவில் உலகில் உள்ள பலவற்றையும்விடப் பெரியதாம். //
பதிலளிநீக்குஆமாம், நெல்லை.
சறுக்கியதா? ஷூ போட்டிருக்கீங்களே அப்படியுமா?
அப்ப ஏறிப் பார்த்திருக்கிறேன் வீட்டுக் குழந்தைகளோடு சென்றதால்.
எவ்வளவு அழகா குடைந்து கட்டியிருக்காங்க இல்லையா? நானும் ரசித்துப் பார்த்தேன். இப்பவும் உங்க படங்களையும் ...
சிவலிங்கம் பிற்பாடு வைக்கப்பட்டிருக்கும் என்ற விஷயம் தெளிவாகத் தெரிகிறதே.
தாமரை மாதிரிதான் என் கண்ணிற்கும் தெரிகிறது, நெல்லை
//மற்ற இரு கோயில்களின் துவாரபாலகர்கள் போலல்லாமல், இங்கு இரண்டு துவாரபாலகர்களும் திரும்பி நிற்கின்றனர்.//
பின்னாளில் பலரும் வந்து ஃபோட்டோ எடுக்கலாம்னு (நெல்லை வந்து ஃபோட்டோ எடுப்பார்னு) ஃபோட்டோக்கு போஸ் கொடுக்கும் நிலையில் செதுக்கியிருக்காங்களா இருக்கும்!!!! ஹாஹாஹா
நான் இதை நேரில் பார்த்தப்ப எனக்கு அப்படித்தான் தோன்றியது. ச்சே கீதா வந்து ஃபோட்டோ எடுப்பான்னு அழகா இப்படி போஸ் கொடுக்கறாப்ல செதுக்கியிருக்காங்க...ஹூம் கைல கேமரா இல்லையே!! ன்னு
கீதா
பிரம்மா வித்தியாசமான வகையில் செதுக்கியிருக்காங்க. அப்போது எங்களுக்கும் இந்த டவுட் வந்தது. ப்ரம்மா போலில்லையேன்னு.
பதிலளிநீக்குநேரில் பார்த்ததை விட இப்ப உங்க படங்கள் மூலம் நல்லா பார்த்துக்கறேன். மீண்டும் எனக்கு அங்கு தனியாகப் போகணும் எல்லாம் நின்று நிதானமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. ஆனால் யதார்த்தாம் இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்கிறது!
கணேச ரதம் கோயிலின் தூண்கள் யாளி யாளி போலதான் இருக்கு அழகா இருக்கு. தென் தமிழகத்தின் வீர விலங்குன்னு சொல்லப்படும் யாளி பல வடிவங்கள் உண்டே...யானை வடிவ யாளியும் உண்டே...
இதில் முதல்ல லிங்கம் இருந்துச்சாமே அதுக்கப்புறம் அதை நீக்கி பிள்ளையார் வைச்சதாக எங்க கூட வந்தவந்த சொன்னாங்க.
நாங்கள் சென்ற போதும் இப்பவும் சுற்றுப்புறம் நிறைய வித்தியாசங்கள்.
கீதா
மஹாபலிபுரத்தை இவ்வளவு நுணுக்கமாக படம் எடுத்து, அதற்கேற்ப விவரணங்கள் விரிவாக தந்தது சிறப்பாக உள்ளது. பள்ளியில் படிக்கும்போது சுற்றுலா சென்றிருந்தாலும் இது போன்று கவனித்து ரசிக்கவில்லை.
பதிலளிநீக்குநன்றி. பாராட்டுக்கள்.
Jayakumar
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்கு