திங்கள், 25 நவம்பர், 2024

"திங்க:க்கிழமை   : பனீர் முந்திரி குருமா.. - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 னீர் முந்திரி குருமா..

*** *** *** *** ***

ந்தக் கடை இந்தக் கடை என்று புகுந்து சாப்பிடுவதற்கு இனி ஆசைப்பட வேண்டாம்.. ஆங்காங்கே கலப்படங்களும் தரமற்ற உணவுகளும் தலை
விரித்து ஆடுகின்றனவாம்..

இதோ
பனீர் முந்திரி குருமா 
செய்வதற்கான குறிப்பு ….




அமுல் பனீர் 250 gr
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளிப் பழம் 2
பச்சை மிளகாய் 2
தேங்காய் ஒருமூடி
பசுநெய் தேவைக்கு
முந்திரி பருப்புகள் 25 
வேர்க்கடலை 50 gr
இஞ்சி பூண்டு விழுது ஒரு Tbsp
வீட்டில் தயாரிக்கப்பட்ட
மஞ்சள் தூள் 1⁄2 tsp
சீரகத் தூள் 1⁄2 tsp
மல்லித் தூள் ஒரு tsp
கரம் மசாலாத்தூள் ஒரு tsp
கல் உப்பு தேவைக்கு




தாளிப்பதற்கு:
பட்டை கிராம்பு ஏலக்காய்  பிரிஞ்சி இலை மல்லித்தழை கைப்பிடியளவு  


குறிப்பு கள் :-
வீட்டில் பனீர் மற்றும் நெய் தயாரிக்க இயலாது எனில் உயர் தரமான  நம்பகமான பனீர் நெய் இவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.. 

இங்கே சொல்லப்பட்டிருக்கின்ற
வேர்க்கடலை  வறுக்கப்பட்டது. தோல் நீக்கப்பட்டதாகும்..

செய்முறை :-
அகலமான வாணலி ஒன்றில் ஒரு தேக்கரண்டி பசு நெய் விட்டு - சூடானதும் பனீரை வதக்கிக் கொள்ளவும்..

அதே வாணலியில்
முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ள வேண்டும்..

மேலும் சிறிது நெய் விட்டு
நீளவாக்கில் நறுக்கப்பட்ட
வெங்காயத்தை  வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்து  வதங்கும் நேரத்தில்  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

தொடர்ந்து  தேங்காயைத் துருவி வேர்க் கடலையுடன்
 சேர்த்து  சூடான வாணலியில்  சற்றே புரட்டிக் கொள்ள வேண்டும்.

தேங்காய், கடலை வறுவலை  சிறிது நேரம் ஆற வைத்து  மிக்ஸியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

பனீர் குருமா செய்வதற்கான முக்கியமான  தேங்காய் விழுது  தயார்.

அடுத்ததாக  கடாயில் 
மிதமான சூட்டில் சிறிது நெய் விட்டு தேங்காய் விழுதை
வதக்கவும்..  மிதமான சூட்டினைக்  கவனித்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து இத்துடன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், மல்லித் தூள்,  சீரகத்தூள்,  கரம் மசாலாத் தூள், கல் உப்பு சேர்த்துக்  கொள்ள வேண்டும்.

நன்றாக வதங்கியதும் வேண்டும்.  சிறிதளவு வெந்நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

முதல் கொதி வர்ந்ததும்  நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து .
வாணலியை இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்  

தக்காளி வெந்ததும்  
இந்தக் கலவையுடன்   வதக்கிய பனீர் துண்டுகள் வறுத்த முந்திரி இவற்றைச் சேர்க்கவும் .. மீண்டும் ஒரு கொதி வந்ததும்  -.
 பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து   மல்லித் தழையை நறுக்கிப் போட்டு இறக்கவும்.

சுவையான பனீர் முந்திரி குருமா...

வட்டார வழக்கில் வேறு வேறு செய்முறைகளும் இருக்கின்றன..

ஃஃஃ


25 கருத்துகள்:

  1. பனீர் குருமா செய்முறை அருமை. வீட்டில் தயாரிப்பதும் எளிது.

    இதனுடன் சப்பாத்தி மிக நன்றாக இருக்கும். நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் ஒரு மாத்த்துக்கு மேல் பால் சம்பந்தப்பட்டதோ இல்லை சர்க்கரை சம்பந்தப்பட்டதோ பச்சரிசி போன்றவைகளோ உபயோகிக்க முடியாது (இரண்டரை மாதங்களில் நல்ல முன்னேற்றம்). இவ்வளவு நாள் இனிப்பு சாப்பிடாமல் இருந்ததில்லை. மூன்று நான்கு பண்டிகைகள் இதற்கிடையே வந்துபோய்விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பது மாதங்களுக்கு மேலாக பால் பொருட்களில் இருந்து விலகி இருக்கின்றேன்..

      எப்போதாவது தண்ணீர் அதிகம் கலக்கப்பட்ட பாலுடன் காஃபி அல்லது தேநீர்...

      இதற்கு சும்மாவே இருக்கலாம்..

      நீக்கு
    2. ஓடிர்றா ஸ்ரீராம்... இது உன் ஏரியா இல்ல....!!

      நீக்கு
    3. ஶ்ரீராம்.... படிக்க பயமாத்தான் இருக்கும்... ஆனால் இரண்டு வாரத்திலேயே நமக்கே மாறுதல் தெரியும். இதற்கு முதல் படி, தினமும் நம் எடையையும், எவ்வளவு தூரம், நேரம் நடக்கிறோம் என்பதையெல்லாம் ஒரு நோட்டில் குறிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுபற்றி ஒரு ஞாயிறு எழுதறேன்.

      நீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. எனது குறிப்பினைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் குறிப்பு துரை அண்ணா.

    ஜீரக சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு நல்ல கூட்டு.

    இன்று நம் வீட்டில் கிட்டத்தட்ட இதே போன்ற குருமா தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு
    2. கீதா ரங்கன்(க்கா) ... எப்படி வந்திருக்கு என்று செக் பண்ண வரலாமா?

      நீக்கு
    3. நேத்து பார்க்காம விட்டுப் போச்சே..ஹாஹாஹா.இன்னிக்கு காலி அது!!! இருந்தாலும் தரமுடியுமா என்ன!

      கீதா

      நீக்கு
  8. நானும் வேர்க்கடலையை இப்படி அரைத்து விடுவதுண்டு.

    இன்று தேங்காய் சேர்க்கவில்லை. குருமா என்றால் தேங்காய் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..

      வேறு வேறு செய்முறைகள்.. சுவையும் பயனும் தான் முக்கியம்..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
    2. என்னடா இது எனக்கு வந்த சோதனை... காய்கறி கூட்டு, குருமா, சால்னா... இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்னு ஒரு பதிவு போடணும் போலிருக்கே

      நீக்கு
    3. சால்னா என்பதில் இறைச்சி அதுவும் மாட்டிறைச்சி வெந்த கொதி நீரில் காய்களை வேக வைத்து செய்வது.. ஈரான் ஈராக்கில் இது சகஜம்...

      இந்தப் பக்கம் எப்படியோ தெரிய வில்லை..

      எதற்கும் நெல்லை உஷாராக இருக்கவும்.

      நீக்கு
    4. என்னடா இது எனக்கு வந்த சோதனை... காய்கறி கூட்டு, குருமா, சால்னா... இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்னு ஒரு பதிவு போடணும் போலிருக்கே//

      ஹாஹாஹாஹா போடுங்க போடுங்க...அதெல்லாம் உங்க வேலை!!

      நாங்கல்லாம் குறிப்புகள் போடுவோம்....நீங்க அதுல என்னென்ன வித்தியாசம்னு சொல்லுங்க நெல்லை...ஜாலியா இருக்கும்!!!! உங்களை கலாய்க்க நிறைய கிடைக்கும்!!

      கீதா

      நீக்கு
  9. பனீர் முந்திரி குருமா சூப்பராக வந்திருக்கிறது.

    எமக்கும் வீட்டு மசாலாக்களை வைத்து உணவுகள் செய்வதுதான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  10. பனீர் முந்திரி குருமாவின் செய்முறை குறிப்பு அருமை!
    வேர்க்கடலை சேர்க்கும்போது வித்தியாசமான சுவை கொடுக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேர்க்கடலை சேர்க்கும் போது வித்தியாசமான சுவை கொடுக்கும்..

      உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  11. இன்று கருத்துரை அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!