சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து பள்ளிக்கு சென்று வருகின்றார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மாணவர் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்.
(Thank you JKC Sir)
=================================================================================================
நம் கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரரும் ஒரே நேரத்தில் இருவேறு போர் கப்பல்களின் கமாண்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நம் முப்படைகளில், பெண்கள் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை துவங்கி, 30 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே அவர்கள் பணியாற்றி வந்தனர். அதிகாரிகள் பதவிக்கு குறைவான பணிகளில் பெண்களை முதல்முறையாக நியமனம் செய்த பெருமை, நம் கடற்படையை சேரும். அக்னிவீரர் திட்டத்தின் கீழ் நம் கடற்படையில், 1,000 பெண்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். நம் கடற்படையின் போர் கப்பல்களில், நான்கு பெண் அதிகாரிகள் கடந்த 2021ல் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, 40 பெண் அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். ஆனால் போர் கப்பலுக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. இதை, பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் அதிகாரி முறியடித்து உள்ளார். நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., டிரிங்கட் போர் கப்பலின் முதல் பெண் கமாண்டராக அவர் நேற்று நியமிக்கப்பட்டார். நம் கடற்படையில், கடந்த 2000ல் இணைந்த ஐ.என்.எஸ்., டிரிங்கட், 50 வீரர்களை கொண்டது. அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக, கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது. கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல், நிலப்பரப்பு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் உடையது. அதி வேகத்திலும், ஆழம் குறைவான பகுதிகளிலும் இயங்கும் திறன் உடையது. இந்த கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரேர்னாவின் சகோதரர் இஷான் தியோஸ்தலியும், நம் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், ஐ.என்.எஸ்., விபூதி போர் கப்பலின் கமாண்டராக நேற்று நியமிக்கப்பட்டார். சகோதரனும், சகோதரியும் ஒரே நேரத்தில் நம் கடற்படை போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணியாற்றுவது இதுவே முதல்முறை.
==============================================================================
நான் படிச்ச கதை
ஜீவி
"எல்லாரும் ஏறியாச்சா?" என்ற அப்பாவின் அட்டகாசமான குரலுடன் கதை ஆரம்பமாகிறது.
அப்பா இருக்கும் இடத்தில் அப்பாவின் குரல் தான் எப்பொழுதும் உயர்ந்திருக்கும். அப்பாவின் குரலே அலாதி. அது தலைமை தாங்கும் குரல். குரல் மாத்திரமில்லை. உடல் வாகும் ஆஜானுபாகுவாய் அதற்கேற்ற மாதிரி இருக்கும்.
அப்பா தான் எதையும் தீர்மானிப்பார், அப்பா தீர்மானிப்பது எதுவும் இது வரை சோடை போனதில்லை. அப்பா எதுவும் சொன்னால் இது வரை எதிர் பேச்சாய் எதுவும் எழுந்ததில்லை. சொல்வது மாத்திரமில்லை. அப்பா தான் சொல்வதை நிறைவேற்றியே காட்டுவார். அதில் எல்லாருடைய நலனும் கலந்தே இருக்கும். அதான் அதிலிருக்கும் விசேஷமே.
பையன் ஸ்ரீதரின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்ததில் அப்பாவுக்கு பரம திருப்தி. வீட்டுக்கு மருமகளாய் அமைந்த ரேவதியும் ஸ்ரீதருக்கு ஏற்ற ஜோடி போலவே பார்வைக்குத் தெரிந்தாள். திருமணத்திற்கு வாழ்ந்த வந்திருந்திருந்தவர்களில் இதைக் குறிப்பிட்டுச் சொல்லாதவர்கள் யாருமில்லை. அப்பாவுக்கு இதில் ஏகப்பட்ட சந்தோஷமும் திருப்தியும்.
அந்த சந்தோஷத்தில் தான் ஸ்ரீதர்-- ரேவதி திருமணம் முடிந்த கையோடு அத்தனை சொந்த பந்தங்களும் கலந்து கொள்கிற மாதிரி அந்த சுற்றுலாவிற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். முழுசா மூணு நாள் டூர் அது.
திருக்கோவில் சுற்றுலாவும் கலந்த டூர் அது.
இதோ அந்த மகிழ்ச்சி சுற்றுலாவிற்காக வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த மகிழ்வுந்தில் அத்தனை பேரும் ஏறியாச்சு. இந்த இடத்தில் தான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது.
யார் எழுதின கதை என்கிறீர்களா? வேறு யாருமில்லை.. நம்ம எபி குழுமத்திற்கு ரொம்பவும் நெருக்கமான
கதாசிரியர் தான் அவர். எனது நாற்பதாவது வயதிலேயே இவர் எழுத்து எனக்கு அறிமுகமானது இன்றும் தனித்த ஆர்வத்துடன் தொடர்கிறது. நிறைய பத்திரிகைகளில் எழுதும் பெருமைக்குரியவர்.
இனி நான் உங்கள் வாசிப்புக்கு குறுக்கே வரப்போவதில்லை.
என் எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே. நம் எபி வாசக சகோதரிகள் தவறாது இந்தக் கதையை வாசித்து தங்கள் கருத்தைப் பதியுங்கள். ரேவதியைப் பற்றிச் சொல்லுங்கள்.
இனி நீங்களும் இந்தக் கதையும். கதையின் பெயர்: உதிரிப்பூ. கதாசிரியர்: ரிஷபன்
கதையை வாசிக்க சுட்டி இதோ.
கதையின் ஆரம்பம் முன்னுரை நல்லா இருக்கு. ஆனால் தளம் திறக்க ரொம்ப நேரம் எடுக்குது. பிறகு படித்துவிட்டு எழுதுகிறேன்.
பதிலளிநீக்குரிஷபன் சார் எழுத்துன்னா கேட்கவா வேணும்?
அன்பு நன்றி
நீக்குவாங்க, நெல்லை. எதற்கும் இணைய தள தொடர்பைச் சோதித்துப் பாருங்கள். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது ரிஷபன் ஸாரின் இந்தப் படைப்பு. சின்னச் சின்ன வரிகளில் அற்புதமான சிறுகதை. சிக்கனமான வார்த்தைகளில் அந்த ரேவதியை உயிர்ப்பித்துக் காட்டியிருக்கும் திறமையை நினைத்து நினைத்து வியக்கிறேன். நம் எபி வாசக சகோதரிகள் ரேவதியைப் பற்றி தங்கள் சொந்தக் கருத்தாக என்ன சொல்லப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉற்சாகமாய் இருக்கிறது. நன்றி
நீக்குஆஹா இன்று ரிஷபன் அண்ணாவின் கதையா...சூப்பர்...நீங்கள் கொடுத்திருக்கும் முன்னுரையே கவர்கிறது. ரிஷபன் அண்ணாவின் எழுத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? பாருங்க ரிஷபன் அண்ணாவின் கதைன்னதும் பாசிட்டிவ் செய்திகள் கூட கொஞ்சம் பின்னாடி போய்விட்டது....
பதிலளிநீக்குஎல்லாம் வாசித்துவிட்டு வருகிறேன். ரேவதியைப் பற்றிச் சொல்ல..
கீதா
ஆஹா. மிக்க நன்றி
நீக்குவாங்க.. வாங்க.. வாசித்து விட்டு வாங்க..
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மாணவன் அபிஷேக் செய்தி சிம்பிளாக இருக்கலாம் ஆனால் கலக்குகிறார் பையன்.. வாழ்த்துகள் சொல்லுவோம்! இந்த சிந்திக்கும் தொடரவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
பிரேர்னா - கடற்படை போர்க்கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டது சூப்பர் அதுவும் சகோதரனும் சகோதரியும்...வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅர்ஷாத் மற்றும் சுரேஷ் இருவருக்கும் பாராட்டுகள். கூடவே பயணிகளுக்கும் அவங்களும் ஒத்துழைக்கணுமே...மனித நேயம் வாழ்கிறது.
கீதா
கதையை வாசித்துவிட்டேன். ரொம்ப அழகான கதை அதை எழுதிய விதம் நன்று. கதை சிறு கதை ஒரே ஒரு சின்ன பிரச்சனை....கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போக நினைக்கும் ரேவதி...
பதிலளிநீக்குமுடிவில் அப்பா பக்குவப்பட்ட மனதுடன் ஏற்பதாக முடித்திருந்தாலும் பின்னால் உள்ள வலியை
//அதன் பின் அப்பா வெளிப்புறமே வெறித்தார்.//
//ரேவதிக்கும் அவனுக்கும் இடையில் இடைவெளி காணாமல் போயிருந்தது. தலையிலிருந்த முல்லை மட்டும் வாடி மணம் தொலைத்திருந்தது.//
எல்லாம் இதைச் சொல்லிவிடுகிறது.
நான் மிகவும் ரசித்த வரிகள் மேலே சொன்னதும் இதோ கீழேயும்....ரேவதியின் மனதையும் முல்லையையும் ஒப்பிட்டு சொன்ன இந்த வரிகள்
//மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும். பாதி மலர்ந்ததும் மலராத சரம் சூடிக் கொண்டதும் முழுசுமாய் மலர்ந்து வாசனை பத்தடிக்கு முன்பே ஆளை இழுக்கும்.சரம் வாங்கும் போது தரம் புலப்படாது. ரேவதியின் மெளனம் மலரப் போவதா? மொட்டா?//
தலைப்பும் பொருத்தமாக!! உதிரிப்பூ. உதிரிப்பூ கதையில் வாடினாலும் இங்கு மணக்கிறது!
இன்னும் வருகிறேன் ரேவதிக்கு
கீதா
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. சைக்கிளில் பேட்டரி பொருத்தி பள்ளிக்கு சுலபமாக ஓட்டிச் செல்லும் மாணவரின் திறமை பாராட்டத்தக்கது. அவருக்கு வாழ்த்துகள்.
கடற்படையில் கமாண்டராக இருக்கும் சகோதரருடன் அவர் சகோதரியும் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயம் நல்ல செய்திகள். இருவருக்கும் நம் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் சொல்வோம்.
இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்ணிற்கு உதவி செய்த பேருந்து ஓட்டுனருக்கு நடத்துனருக்கும் நல்ல மனது. அவர்களின் நல்ல மனதை போற்றி பாராட்டுவோம். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதை தனிக்குடித்தனம் தேடும் புதுப் பெண்ணின் விபரீத விளையாட்டை சொல்கிறது. கதையை சொல்லிய விதம் தனி. அங்கு தான் ரிஷபன் சாரின் முத்திரை தெரிகிறது.
பதிலளிநீக்குசாதாரணமாக பெண் கோவித்துக்கொண்டு அப்பா வீட்டிற்கு சென்று விடுவாள். எல்லோரும் சமாதானப்படுத்தி திரும்ப கொண்டு விடுவார். இப்படித்தான் எல்லோரும் கதையை நகர்த்துவர். ஆனால் ஒரு பூ ஓடும் வேனில் இருந்து உதிர்கிறது என்று கதையை கொண்டு செல்வதில் திறமை வெளிப்படுகிறது.
கதையின் சிறப்பு நடை, மற்றும் திருப்பங்கள்.
//மேகமும் வெளிச்சமும் மாறி மாறி பிரதிபலிப்பு.
//இன்னமும் நெருங்கினான். புது வாசனை அடித்தது.
/நூல் தாம்புக் கயிறானது. ரேவதி எதிர்ப்புறம் நகர்ந்தாள்.
//தலையிலிருந்த முல்லை மட்டும் வாடி மணம் தொலைத்திருந்தது.
இது போன்ற உவமைகள் எழுத்தாளரின் திறமையை பறை சாற்றுகின்றது. ஆனாலும் உதிரிப்பூ என்பதற்கான கரு அல்லது நிகழ்வு கதையில் இல்லை. பூ உதிரவில்லை,
கதையின் தலைப்பு "பயணங்கள் இனிப்பதில்லை." என்று இருந்தால் சினிமாத்தனமாக நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.
கதை பகிர்வுக்கு நன்றி.
இக்கதையை முன்பே வாசித்த நினைவு.
Jayakumar
ஜெ கே அண்ணா இப்ப பூ உதிர்ந்துதான் இருக்கு! இன்னும் மலரலை.
நீக்குஇப்ப பலருமே உதிரிப்பூ போலத்தானே வாழ்க்கை வாழறங்க...அதுவும் திருமணமாகிப் பல வருடங்கள் கழித்தும் உதிரிப்பூ ஆகிடறாங்க
இந்தக் கதையில் ரேவதி இப்ப குடும்பத்திலிருந்து உதிர்ந்து போயிருக்கிறாள் நல்ல காலம் கணவனிடம் இருந்து இல்லை.
போகப் போக அவள் பக்குவப்பட்டு புரிதலுடன் சரம் ஆகலாம்!
இப்ப இந்த நிகழ்வுக்கு இந்தத் தலைப்பு பொருந்தும் இங்கு பயணம் என்பதை விட ரேவதியின் மனம் தானே சொல்லப்பட்டிருக்கிறது! கதையின் கேரக்டர் ரேவதி!
கீதா
மலரும் முன்னரே உதிர்ந்துவிட்டது என்ற அர்த்தம்
நீக்குகீதா
ஆனால் ஒரு பூ ஓடும் வேனில் இருந்து உதிர்கிறது என்று கதையை கொண்டு செல்வதில் திறமை வெளிப்படுகிறது.//
நீக்குகண்டிப்பாக
ஆனால் இப்படியான நிகழ்வுகள் நான் அறிந்தே நடந்திருக்கிறது. காரணங்கள் பல...
கீதா
மிக்க நன்றி. சரமாய் தொடுத்தபின் சில பூக்கள் காம்பிழந்து சரத்தோடு ஒட்டாமல் கிடக்கும். உதிரிப்பூ.
நீக்குஅப்போ அது உதிரிப்பூ அல்ல. உதிர்ந்த பூ. இரண்டும் வேறு வேறானவை.
நீக்குஇங்கு ரேவதியை கண்டிப்பாக நான் குற்றம் சொல்ல மாட்டேன். ரேவதி இக்கதையில் தனியாக வாழ வேண்டும் என்று சொல்கிறாளே தவிர தன் பெற்றோருடன் என்று சொல்லவில்லை ..ஆனால் கேள்வி எழுகிறது....அதற்கு முன் ...
பதிலளிநீக்குஅவள் மனம் பக்குவப்படவில்லை......
ரேவதி பயணத்தின் நடுவிலேயே இப்படிக் கோபித்துக் கொண்டு செல்வது யோசிக்க வைக்கிறது. சரியான பிஹேவியர் இல்லை. பக்குவப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த விஷயம் நான் ரேவதி செய்தது கண்டிப்பாகத் தவறு என்பேன்.
பயணம் முடிந்து வீட்டிற்கு வந்து கொஞ்சம் ஒரு சமூகமான தருணத்தில் தன் விருப்பத்தை அழகாக எடுத்துச் சொல்லி இரு பெற்றோரையும் குடும்பத்தையும் நாங்கள் இருவருமே நன்றாகக் கவனித்துக் கொள்வோம் என்று தன் விருப்பத்தையும் சொல்லியிருந்தால் கண்டிப்பாக ரேவதியைப் பாராட்டுவேன். நிற்க பெற்றோரும் இதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது அதை "பாரு வந்த உடனேயெ பிரிக்கறான்னு சொல்லாத மனப்பக்குவம்...
இது ரேவதியின் தன்னிச்சையான விருப்பமா இல்லை பிறந்த வீட்டில் போடப்பட்ட ஸ்க்ரிப்டினால் விளைந்ததா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானால் கணவன் வீட்டில் தான் வாழ்க்கை என்பது ஆண்டாண்டு காலமான எழுதப்படாத சட்டமாக (சட்டத்தில் இருக்கான்னு எனக்குத் தெரியலை) ஒரு கண்டிப்பான பழக்கமாகப் பின்பற்றப்படுவதோடு
இது ஆணின் மனதிலும் சரி, பெண்ணின் மனதிலும் சரி அழுந்தப் பதிந்து விட்டது. என்பதோடு பெண்ணும் அப்படித்தான் வளர்க்கப்படுகிறாள் ஆணும் அந்த எண்ணத்தில்தான் வளர்கிறான்.
பெண்ணும் ஆணும் திருமணம் ஆகும்வரை தங்கள் பெற்றோருடன் சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்துவிட்டு பெண் மட்டும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு கணவன் வீட்டில் வாழ வேண்டும் என்பது...
ஆண் மனைவி வீட்டில் வாழ வேண்டும் என்றால் உடனே பாரு பெண்டாட்டி தாசன் என்ற பட்டம் கொடுக்கப்படும்.
patriarchy society
அடுத்தாப்ல திருமணமாகும் போது தனியாகச் செல்ல விரும்பும் பெண் மாமியாராகும் போது அந்த விருப்பம் மாறுபடும்!!!!! அது தனிக்கதை...
ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப் பின் தனியாக வாழ்வதில் தவறில்லை, பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் ஆனால் இருவரும் பக்குவப்பட்ட மனதோடு தங்கள் பெற்றோர் இருவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. ஒரு பக்காம் சாயும் போதுதான் பிரச்சனை. ரேவதி அப்படி இருப்பாள் என்று நினைத்துக் கொள்ள்ளலாம்....
இப்ப சப்போஸ் மகன் வேறு ஒரு இடத்தில் வேலையில் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் பெண்ணும் அங்குதானே போக வேண்டும்! அப்ப தனியாகத்தானே இருப்பாங்க!
இப்படி பெற்றோர் சிந்தித்து அதே சமயம் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லாமல் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு புரிதலுடன் இருந்தால் எல்லாக் குடும்பங்களுக்கும் நல்லது.
இரு பெற்றோருக்கும் நல்லது.
கீதா
//பெண் மட்டும் உறவினர்களை விட்டுவிட்டு ஆண் வீட்டுக்கு//- என்னப்பா.. இவங்க பெண்ணியவாதியா இருப்பாங்க போலிருக்கே... இலங்கை ஈழத் தமிழர்கள் சிஸ்டமும் உண்டே.. இருந்தாலும் நம் சிஸ்டம்தான் சரி என எனக்குத் தோன்றுகிறது. அதே நேரம், நாம் என்னமாதிரி திருமணத்துக்குப்பின் நடந்துகொண்டோம், அது சரியான முடிவுதானா என யோசித்து இந்தக் காலத்தையும் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும். அடுத்த தலைமுறையின் விருப்பம்தான் முக்கியம்.
நீக்குஹாஹாஹா நெல்லை ஹையோ உங்க அக்காவை புரிஞ்சுக்கவே இல்லை விடுங்க....
நீக்குஸாரி நெல்லை, நான் பெண்ணியவாதி இல்லை. நான் இருபக்கமும் உளவியல் ரீதியாகச் சிந்திப்பவள். நானும் ஒரு பெண். ஒரே ஒரு மகன் மட்டுமே. ஆனால் நான் பொஸஸிவாக இருந்தால் அது எனக்கும் சரி மகனுக்கும் சரி அது நல்லதல்ல.
//இந்தக் காலத்தையும் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும். அடுத்த தலைமுறையின் விருப்பம்தான் முக்கியம்.//
டீட்டோ. இது எக்காலத்துக்கும் பொருந்தும். பண்டைய காலத்துக்கும் தான். நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவள் என்பதால் அதன் ப்ளஸ் நெகட்டிவ் தெரிந்தவள். அப்போதைய அடுத்த தலைமுறை நான்...!!!!!!!!
கீதா
அலசல் சிறப்பு. பல வருடங்களுக்கு முன் எழுதியது. இன்று இதே போல் வெகு சகஜமாய் கேள்விப்படுகிறேன். அன்று அது அதிர்ச்சியாய் இருந்ததால் கதையானது. நன்றி
நீக்குமிக்க நன்றி ரிஷபன் அண்ணா. கதை பல வருடங்களுக்கு முன் என்பது தெரிந்தது.
நீக்குநான் அறிந்த சம்பவமும் கிட்டத்தட்ட அந்த வருடங்களில் நடந்ததுதான். ஆம் அந்த வருடத்தில் எஅதிர்ச்சியாக இருந்தது ஆனால் ஏன் ஏன் எதனால் என்ற கேள்விகள் எழுந்தது.
அதைத்தான் இங்கும் கருத்தில் சொல்லியிருக்கேன்.
கீதா
கதை நாவலாக எழுதும் கருவையும் சம்பவங்களையும் கொண்டிருக்கிறது....அண்ணா அதில் ஒன்றே ஒன்று ஒரு சிறிய விஷயத்தை எடுத்தாண்டு அதை அழகான உவமைகளோடு சொல்லியிருப்பது செம
பதிலளிநீக்குகீதா
அன்பு நன்றி
நீக்குகதை எழுதப்பட்ட காலம் தெரியவில்லை. தற்போது மிக்க பெரிய குடும்பங்களிலும் மகன் மருமகள் தனிக்குடித்தனம் தான். காரணம் வேலை.
பதிலளிநீக்குகதையைப் படிக்கும்போது ஸ்ரீராம் அவர்களை நினைத்துக்கொண்டேன். அவரும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வந்தார். மருமகள் தனிக்குடித்தனம் போகவில்லை.
Jayakumar
ஜூலை 2010.
நீக்குதளத்தில் பதியப்பட்டது December 10, 2023
அண்ணா எல்லாரும் அப்படி இல்லை. ஒரு சிலர்தான் அப்படி....இதில் மனப்பக்குவம் என்பது மிகவும் முக்கியம்.
கீதா
மிக நன்றி
நீக்குஇப்படியான சம்பவங்களில் கதையில் அப்பா அதற்குச் சரி என்று சொல்லி பையனிடம் அதை அழகாகச் சொல்லிவிட்டார் சந்தோஷம் தான் முக்கியம் என்று....ஆனால் பையனின் அம்மாவைப் பற்றி எதுவும் இல்லையே அந்த மனம் வேறு!!
பதிலளிநீக்குஆணின் மனம் வேறு, பெண்ணின் மனம் வேறு ....பெண்ணின் மனம் உணர்வுக் குவியல்கள்....ஆணின் மனம் கொஞ்சம் யதார்த்தம்!
கீதா
என்னத்த உணர்வுக் குவியலோ. தாங்கள் திருமணம் செய்துகொண்டபோது நடந்துகொள்வதற்கும், மருமகள் என்று ஒருத்தி வந்த பிறகும் தன் இடத்தை விட்டுத் தராமல் மகனையும் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளணும் என்று நினைப்பதுதான் உணர்வுக் குவியல் போலிருக்கு.
நீக்குகதையைப் படித்தேன். நடை, நறுக்கென்று சொல்லிய விதம் என்று எல்லாமே நன்று. வேன் பயணத்தைக் கண் முன் கொண்டு நிறுத்திவிட்டார்.
பதிலளிநீக்குநடக்கும் விபரீதம் புரிந்து உடனே வண்டியைத் திருப்பச் சொன்னதும், அவள் விருப்பப்படி செய் என்று சொன்னதிலும் அப்பாவின் அனுபவம் தெரிகிறது.
ஒரு வாக்கியத்திலேயே, மாமியார்தான் இதற்குக் காரணம் என்று அனுமானிக்க வைப்பதாகத் தோன்றியது. ரேவதியின் முடிவு கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு வாக்கியத்திலேயே, மாமியார்தான் இதற்குக் காரணம் என்று அனுமானிக்க வைப்பதாகத் தோன்றியது. //
நீக்குஹாஹாஹா நெல்லை கதையில் பையனின் அம்மா பற்றி எதுவுமே வரலையே...
ஆ! ஆ! ...ரிஷபன் அண்ணா இங்கு நம் கருத்துகள் பார்த்து என்ன நினைப்பாரோ....சிரித்துவிடாம இருக்கணும்!! அதுவும் என் கருத்துகள் பார்த்து...... உம்மாச்சி காப்பாத்து.....
கீதா
அது சரி... கல்யாணமான பெண் அவள் உடமைகளை (டிரஸ்) ஒரு பெட்டியில் கொண்டுவந்திருந்தாள், அதனை எடுத்துக்கொண்டு வேனில் ஏறினாள்என்பதுதான் நம்பும்படியாக இல்லை. வேன் பயணத்திற்கே ரேவதி வந்திருக்க வேண்டாமே.
பதிலளிநீக்குஆனால் ஒண்ணு, சாப்பாட்டை வக்கணையாக விமர்சிக்கத் தெரிந்தவர்களுக்கு வெந்நீர்கூடப் போடத் தெரிந்திருக்காது. அதனால் நெடிய அனுபவம் கொண்ட ரிஷபன் சார் கதையை விமர்சிப்பதும் சரியில்லை.
நெல்லை இப்படியும் நடக்கும் என்பது நான் கண்டிருக்கிறேன். வீட்டில் பயணத்துக்கு வரமாட்டேன்னு சொல்லியிருந்தால் அங்கு கதை வேறு வடிவமாகப் போயிருந்திருக்கும்.
நீக்குவீட்டிலிருந்தும் டக்கென்று கோபித்துக் கொண்டு கிளம்பினால் கதை வேறு விதமாகப் பயணிக்கும்
அவள் பயணத்தின் போது டக்கென்று பஸ்ஸைப் பிடித்துவிடலாம் என்று ப்ளான் பண்ணி வந்திருக்கிறாள்.
நீங்க சொல்றது கதையை வேறு விதமாக மாற்றிவிடும்.
அண்ணா மிக யதார்த்தமாக எழுதியிருக்கிறார்.
கீதா
ஹாஹா. நம்ப முடியாதவை தான் நடக்கும்போது பாதித்து கதையாகி விடுகிறது. நன்றி
நீக்குவணக்கம் ஜீவி சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது.
திருமணமானவுடனே ஒரு பெண் தன் மனதிலுள்ள கருத்தை வெளியிட ஒரு தைரியம் வேண்டும். அந்தப் பெண்ணின் தைரியத்தை கதாசிரியர் முதல் பாராவிலேயே சொல்லி விட்டார்.
அருகில் அமர்ந்தும், ஒரு புது மணப்பெண்ணிற்கு இயல்பாக இருக்கும் ஒரு வெட்கம், அச்சம் படர்ந்த நாணம் இவை அவளிடம் இல்லாமல், மாறாக அவளின் மௌனம் ஸ்ரீதருக்கும் மட்டும் சங்கடம் தரவில்லை. படிக்கும் நமக்குந்தான்...!
//மொட்டாய் கட்டிக் கொடுத்த சரம் விலைக்கு வாங்க, கடைசி வரை மலராமலே வாடிப் போகும். பாதி மலர்ந்ததும் மலராத சரம் சூடிக் கொண்டதும் முழுசுமாய் மலர்ந்து வாசனை பத்தடிக்கு முன்பே ஆளை இழுக்கும்.சரம் வாங்கும் போது தரம் புலப்படாது. ரேவதியின் மெளனம் மலரப் போவதா? மொட்டா?//
அருமையான வரிகள். ரசித்தேன். ரேவதியின் மௌனம் இவ்வளவு சீக்கிரத்தில் கலையுமென நான் நினைக்கவில்லை. அவள் மெளனம் இப்படி விரைவில் கலைந்ததால் , மொத்த குடும்பத்தின் சந்தோஷங்கள் இன்னமும் கல்லாக இறுகிப் போனது வேதனைதான்.
சில பேர்களின் மனதை எவ்வளவு பழகியும் புரிந்து கொள்வது கடினம்தான். அப்படியிருக்கும் போது, மணமக்கள் இருவரும் சுமூகமான ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பை தர நினைத்தும் அது வீணாகப் போனது கதையின் திருப்பம்.
ஸ்ரீதரின் அப்பாவின் பக்குவப்பட்ட மனம் கதையில் மிகவும் பிடித்துப் போனது. "இரு கைகள் தட்டினால்தான் ஓசை" என்பதை அவர் சட்டென புரிந்து கொள்ளும் போது, பிரச்சனைகளை சமாளிக்க அவரிடம் இருக்கும் "விட்டுத் தரும் மனப்பான்மையின்" சிறப்பு வெளிப்படுகிறது. பல மனங்களின் பல வகையான வெளிப்பாடுகளை உணர வைத்த கதை. மனப்பக்குமடைய சில முடிவுகளை இப்படித்தான் எடுக்க வேண்டுமென சுட்டிக் காட்டும் வண்ணமிருந்த இக் கதையை எழுதிய சகோதரர் ரிஷபன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
கதை படித்து வரும் போது எனக்கு மோகன் ரேவதி நடித்த "மௌன ராகம்" படம் மனத்துள் வந்தது. (அதிலும் நடித்தவரின் பெயர் ரேவதிதான்.) அந்தப்படத்தின் சுமூகமான, மகிழ்வான முடிவு போலவே இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களின் இறுக்கம் கலைந்து நல்ல மன மகிழ்ச்சியான முடிவு வர வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். (ஏனெனில் இது கதைதானே என கடந்து செல்ல முடியவில்லை.கதாசிரியர் படைத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், மனதில் ஆழமாக வேரூன்றி ஆக்கிரமித்து விட்டது.)
முல்லைப்பூவின் வாசம் வாடியும் இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் மனதில் நல்ல மணம் பரப்ப வேண்டும். நல்லதொரு கதையை இங்கு பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு நன்றி
நீக்குதங்கள் நல்ல மனம் பின்னூட்டக் கருத்துக்களில் வெளிப்படுகிறது சகோதரி. மிக்க நன்றி, சகோதரி.
நீக்குஆனால் காலம் அப்படி இல்லை. சூது வாது நிறைந்தது. சென்ற காலமும் இனி மீளாது போலிருக்கு. வீட்டோடு மருமகள் வாழ்ந்து தான் புகுந்த வீட்டின் மகளாய், தாலி கட்டிய கணவனின் பெற்றோர்களுக்குத் துணையாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் அவளுக்குப் பிறக்கப் போகும் மகனுக்கோ, மகளுக்கோ கணவன் வீட்டுப் பெரியவர்களின் முக ஜாடை தான் இருக்கும் என்பதை அவளால் ஒன்றும் செய்ய முடியாது, சகித்துக் கொள்ள வேண்டியது தான்.
நீக்குஎன்ன செய்வது? இறைவன் வகுத்த நெறி அது.
ஸ்ரீதரின் அப்பாவின் பக்குவப்பட்ட மனம் கதையில் மிகவும் பிடித்துப் போனது.
பதிலளிநீக்குஅக்கா பக்குவப்பட்ட மனம் என்று சொன்னாலும் பின்னால் வலி இருப்பது கதையில் ஒரு வரியில் வருகிறது.
காரணம் ரேவதி இப்படிச் செய்த தருணம். இதே அப்பா அந்த ரேவதி வீட்டில் போய் நிதானமாக அழகாகத் தன் விருப்பத்தை பக்குவமாகச் சொல்லியிருந்தால் பக்குவப்பட்ட அப்பா அதை யோசித்து ரேவதியைப் புரிந்து கொண்டிருப்பார்.
கீதா
அக்கா பக்குவப்பட்ட மனம் என்று சொன்னாலும் பின்னால் வலி இருப்பது கதையில் ஒரு வரியில் வருகிறது.//
நீக்குஅக்கான்னு கமலாக்காவை சொல்ல எழுதி அப்பான்றது விட்டுப் போச்சு....
அக்கா, அப்பா பக்குவப்பட்ட மனம் ...இப்படி சொல்ல நினைத்து...கம்ப்யூட்டர் கீஸ் குதிப்பதால் கர்சர் வேறு இடத்துக்கு ஜம்ப் ஆகிறது.
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குஉண்மைதான்.. அவருக்கு அந்த தீராத வலி இருக்கத்தான் செய்யும். இது கதையாகினும், அந்த வலிகளை போக்கும் மருந்தாக ரேவதி நாளடைவில் மனம் மாறுபட்டு, பக்குவமடைந்து விட்டாலும் கூட மகிழ்ச்சிதான்.
ரேவதிக்கும் அந்த பக்குவம் இப்போது அவளுக்கு இல்லையென்பதால்தான் அவளிடம், கணவரிடம் கூட அந்த ஒட்டாத மெளனம். ஆனால் அந்த இடத்திலேயே, எவருமே தன் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதாக சித்தரிக்கப்பட்ட "அந்த அப்பா " கத்தி கூச்சலிட்டு மகன், மருமகளை அசிங்கப்படுத்தாமல், தானும் அசிங்கப்படாமலும் சட்டென ஒரு திருப்பமாக ஒரு முடிவை எடுத்திருப்பது அவரின் மனப் பக்குவத்தை காட்டுகிறதல்லவா? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புரிந்து கொண்டேன் சகோதரி. நாம் இப்போது அந்த அப்பாவைப் பற்றிம்தானே பேசிக் கொண்டிருக்கிறோம் .
நீக்குரேவதிக்குப் பக்குவம் இல்லை என்பதுதான் இங்கு ...
நீக்குஅவள் இப்படிச் செய்வதற்கு என்ன காரணமாக இருந்திருந்தாலும் அதை அவள் எல்லோர் முன்னிலும் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டிற்குச் சென்ற பிறகு பேசியிருக்கலாம்....அதுதான் பலரும் பக்குவமில்லாமல் நடந்து கொள்வது.
ஆண் தன் மனைவியை, அம்மாவை, சகோதரியை எல்லோர் முன்னிலும் அவமானப்படுத்திப் பேசுவது, ஒரு பெண் தன் பெற்றோரை, கணவனை கணவனின் சகோதரியை சகோதரனை எல்லோர் முன்னிலும் அவமானப்படுத்திப் பேசுவது இதெல்லாம் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கும் பிளவு ஏற்படுவதற்கும் காரணங்கள்.
கீதா
"அந்த அப்பா " கத்தி கூச்சலிட்டு மகன், மருமகளை அசிங்கப்படுத்தாமல், தானும் அசிங்கப்படாமலும் சட்டென ஒரு திருப்பமாக ஒரு முடிவை எடுத்திருப்பது அவரின் மனப் பக்குவத்தை காட்டுகிறதல்லவா? நன்றி.//
நீக்குயெஸ் கன்டிப்பாக... அழகாகக் கையாண்டிருக்கிறார். இரண்டாவது அவரது பேச்சுக்கு எல்லாரும் மதிப்பும் கொடுத்திருப்பது அவர் மீதான மரியாதையைச் சொல்லும் இடம். இல்லைன்னா எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசுவாங்களே!!!
கீதா
மற்றொன்றும் தோன்றியது....பையனுக்கும் டக்கென்று சிந்திக்கும் டயம் இல்லை. அல்லது தோன்றவில்லை.
பதிலளிநீக்குஇல்லைனா ரேவதி சொல்லும் போது ஸ்ரீதர் கேட்டிருக்கலாம், சரி உன் தனிப்பட்ட விருப்பங்கள் என்னென்ன? அதை இந்த வீட்டிலேயே நிறைவேத்திக்க முடியுமான்னு யோசிக்கலாம்.....என் அப்பா புரிந்து கொள்ளும் நேச்சர் உடையவர். பேசலாம் அவரிடம் இந்தப் பயணம் முடிஞ்சதும்....அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளறியா
நான் உனக்குக் கண்டிப்பாகப் புரிந்து கொண்டு ஆதரவோடு இருக்கிறேன் யார் மனசும் புண்படாமல்...
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குநீங்கள் சிந்திப்பது சரிதான். ஆனால், அந்தப் பெண் ரேவதி அவனிடம் கூட எதைப் பற்றியும் மனம் விட்டு பேசாமல், ஏற்கனவே முடிவு செய்து விட்ட மாதிரி டக்கென பெட்டியை எடுத்துக் கொண்டு வேறொரு பஸ்ஸில் பிறந்த வீட்டிற்கு செல்ல ஏறி அமர்ந்து விட்டாளே..!
இன்றைய கதையின் பாதிப்பு.. இது கதை போலில்லாமல், ஒர் உண்மை சம்பவமாக நம் மனதையும் அவ்வப்போது நெருடுகிறது. அதனால்தான் நாமும் இதே சிந்தனையாக இருக்கிறோம் .
புது மணமகனான ஸ்ரீதரின் தர்மசங்கடமான நிலையையும், அவர் அப்பாவின் வருத்தம் தோயும் முகத்தை எண்ணிப் பார்க்கும் போதும், நமக்குள்ளும் ஒரு சங்கடமான மன நிலைமை ஏற்படுகிறது.
நீங்கள் சொல்வது போல் சகோதரர் ரிஷபன் அவர்கள் "நாம் எழுதிய கதை வாசகர்களுக்கு இத்தனை பாதிப்பை தருகிறதா? " என சிரிக்கவோ, இல்லை, யோசிக்கவோ போகிறார் ஆனால், ஒன்று..! ஒரு சிறந்த படைப்பாளியின் கதை நம்மை பல விதங்களில் சிந்திக்க வைக்கும் என்பது உண்மை. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
அபிஷேக், போர் கப்பல் கமாண்டர்கள் , பெண்ணின் உயிர்காத்த ஓட்டுனர், கண்டக்டர், பயணிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதிரு. ரிஷபம் அவர்களின் கதைகள் படித்திருக்கிறேன் அருமையாக இருக்கும். சென்று படிக்கிறேன். கதைப்பகிர்வுக்கு நன்றி.
திருமணமான மறுநாளே ஒரு பெண் இப்படி கணவனிடம் சொல்வாளா? சற்றே அசாத்தியம்.
பதிலளிநீக்குகாரணமின்றி காரியமில்லை...
எந்த நம்பிக்கை? முதலிரவின் நம்பிக்கையா? சற்று ஆபாசமாகத் தோன்றினாலும் சாத்தியம் இருக்கிறது. சிறு நம்பிக்கை. கணவனை, கணவனின் அன்பவமின்மையை கண்டுகொண்டு கைக்குள் போட்டுக்கொள்ளலாம் என்கிற சிறு நம்பிக்கையே முதலீடு.
கோபித்துக் கொண்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா? எந்த நம்பிக்கை இப்படி முடிவெடுக்க வைக்கிறது? பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தை போல... 'சபாஷ்.. சரியான காரியம் செய்தாய்..' என்று பிறந்தகத்தில் தட்டிக் கொடுப்பார்களா? என்ன எதிர்பார்ப்பு!
மாமியார் காட்சியிலேயே வரவில்லை. முன்கதை எதுவும் இருப்பதாகவும் கதாசிரியர் கோடி காட்டவில்லை.
அப்போ-"
மனநிலை சற்றே குறைந்த பெண்? கொஞ்சகாலம் கழித்து சில அனுபவங்களுக்குப் பின், அல்லது ஒரு குழந்தை பெற்றபின் 'திருந்தினேன் மாமா' என்று வருவாரா?
பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடும் அளவு வெறுப்பு என்றால் ஏன் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்? எது 'அந்த மூன்று நாள்' அவளை எல்லா சம்பிரதாயங்களுக்கு ஒத்துக்கொண்டு தலைகுனிய வைத்தது?!
உடனடியாக ஒத்துக்கொண்டு பணியும் மாமனார் எதையோ மறைத்திருக்கிறாரா?
அன்பைக் குழைத்து, எழுத்துகளில் பூசி, வார்த்தைகளில் பாசத்தைப் பரவ வைக்கும் ரிஷபன் ஜியின் எழுத்துகளுக்கு வெறுப்பு கைவரவில்லை. அல்லது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
அதனால் என்ன, படிப்பவர் மனதில் கதை ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது பாருங்கள்...
கதை, நாம் பல்வேறு இடங்களில் கேள்விப்படுவதை நினைவுக்குக் கொண்டுவரும்போது பலவற்றைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது என்று தோன்றுகிறது.
நீக்கு/கோபித்துக் கொண்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா? // - பெண்ணின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள், இவள் ஒருவள் மட்டுமா என்பதையெல்லாம் கதையாசிரியர் சொல்லவில்லை என்பதால், ஒருவள் என்று புரிந்துகொள்ளலாம். இது போல பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
//ஏன் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்? // மாமியார் எப்படி நடந்துகொண்டாரோ (திருமணத்துக்குப் பிறகு). ஒரு சில பேச்சுக்களிலேயே பெண்ணுக்கு இவளிடம் காலம் தள்ளமுடியாது என்று தோன்றியிருக்கலாம். அல்லது வீட்டின் நடைமுறை-உறவினர்கள் என்பதும் காரணமாக இருக்கலாம்.
//கொஞ்சகாலம் கழித்து சில அனுபவங்களுக்குப் பின், அல்லது ஒரு குழந்தை பெற்றபின்// இந்த மாதிரிச் செல்பவர்கள், திரும்ப வருவதே இல்லை. கணவன் பிற்காலத்தில் போய்ச் சேர்ந்துகொண்டால்தான் உண்டு.
கதையின் நிறைய இடங்களை நாம் அனுமானித்துக்கொண்டால்தான் உண்டு. எல்லாம் எழுதிவிட்டால் சுவாரசியம் குறையும் என்று நினைக்கிறேன்.
//“என்னங்க நீங்க? அவதான்.. கொஞ்சங் கூட மரியாதையே இல்லாம.”// இது போதும் மாமியாரைப் பற்றிச் சொல்ல
/“என்னங்க நீங்க? அவதான்.. கொஞ்சங் கூட மரியாதையே இல்லாம.”//
நீக்குநெல்லை, இந்த ஒரு வரியினால மாமியார் மோசம்னு எப்படிச் சொல்லுவீங்க?....
அவங்க சொன்னது ரொம்ப சரி. ஏன்னா ரேவதி இப்படிச் செய்தது மரியாதைக் குறைவுதான்...இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இப்போது பரவலாக இது இருந்தாலும் கூட இது ஒரு personality க்கு நல்லதில்லை. வளர்ப்பு சரியில்லை என்ற ரீதியிலும் கூடப் பார்க்கலாம். இதில் எதுக்கு அநியாயமா பையன் அம்மா - மாமியாரை இழுக்கணும்? அப்படி பார்த்தா பெண்ணின் அம்மாவும் மாமியார் தானே!!!! அந்த மாமியார்களும் எல்லாரும் நல்லவங்களா இருக்காங்களா என்ன?
கீதா
எப்போதோ எழுதிய கதை (அடிப்படை உண்மை சம்பவம்) இன்றும் பேசு பொருளாகி இருப்பதில் மகிழ்ச்சி. முதல் முறை கேள்விப்பட்ட போது எனக்கு வந்த அதிர்ச்சி கதையாக்கத் தூண்டியது. இன்று கேள்விப்படுகிற செய்திகள் கதை எழுதும் ஆர்வத்தை தருவதில்லை. பாசிட்டிவ் தான் எனது பெரும்பாலான கதைகளின் அஸ்திவாரம். வாசித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஜீவி சாருக்கு பிரத்தியேக நன்றி.
பதிலளிநீக்குஅட! ரிஷபன் ஸார் கூட வந்து பார்த்து பதிலளித்திருக்கிறாரே!
பதிலளிநீக்குகொடுத்து வைத்த எபி.
அமெரிக்காவில் இப்பொழுது தான் காலைப் பொழுது. காபி குடித்தபடியே பார்த்த பொழுது சந்தோஷமாக இருந்தது. பின்னோட்டமிட்டு தங்கள் கருத்துக்களைச் சொன்ன
பதிலளிநீக்குசகோதரிகளுக்கு நன்றி.
அதன் பின் அப்பா வெளிப்புறமே வெறித்தார் -- என்ற கதையின் இறுதிப் பகுதியை வாசிக்கும் பொழுது மனம் கனத்தது.
பதிலளிநீக்குபொது இடத்தில் காட்டிக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் பண்ணுகிற வார்த்தைகள் சில வாயிலிருந்து வந்தாலும்
அந்த அப்பாவை நினைக்கும் பொழுது மனத்திற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எந்த அப்பாவுக்கும் மகனுக்குத் திருமணம் முடித்த சடுதியில் இந்த நிலை வரக்கூடாது என்ற மன நிலையே மேலோங்கியது.
'காலம் மாறி போயிருக்கு ஸார்' என்று யாரேனும் சொல்லலாம். காலம் மாறியிருக்கலாம், ஆனால் ஆசை ஆசையாய் வளர்த்த அப்பா--மகன் உறவு காலாகாலத்தில் அவனுக்கு ஒரு நல்ல காரியம் முடித்த அடுத்த நாளே மாறணுமா என்ன?
பதிலளிநீக்கு'ஒட்டும் உறவுமில்லாமல் வீட்டுக்கு தானே ராணி என்று வாழ்ந்த மகராஜி போலிருக்கு இந்த வீட்டுக்கு வந்த மருமகள்!
பதிலளிநீக்குஇந்த சொந்த பந்த கும்பலைப் பார்த்ததும்
அவெர்ஷனாகி விட்டது அவளுக்கு. இப்பொழுதே வெட்டிக் கொண்டுப் போனால் தான் தன்னால் ஜெயிக்க முடியும் என்று தோன்றி செயல்படுத்தி விட்டாள்
'என்னைச் சொல்ல வேண்டும். அந்தக் குடும்பத்த்தைப் பற்றி தீர விசாரிக்காமல் இல்லை. எந்த ஜென்மத்தில் எப்பொழுது
யாருக்கு செஞ்ச தீங்கோ, இப்போப் பிடிச்சு ஆட்டறது' என்று நிச்சயம் அந்த அப்பா நொந்து போயிருப்பார்.
எந்த கேரக்ட்டரைப் பற்றியும் தானாக இழுத்துப் போட்டுக் கொண்டு எதுவும் சொல்ல வில்லை. குட்டி குட்டி வரிகள். அதற்குள் ரேவதி என்ற தற்குறி எரிமலையைப் புதைத்து வைத்து கதை என்ற பெயரில் வாழ்க்கைப் பாடத்தைப் போதித்த ரிஷபன் ஸார்!
பதிலளிநீக்குஓ! தி கிரேட் ஸார்!