கோயில்கள் என்பவை எதற்காக உருவானவை? அது எவ்வளவு தூரம் மக்கள் மனதில் ஒரு ஒழுங்குமுறையை உண்டாக்குகிறது, அந்தக் கோயிலையே பிரம்மாண்டமாகச் சமைப்பதால், அது சார்ந்த சமுகம், அவர்களுடைய திறமைகள் காலம் காலமாக நிலைக்க வைக்கிறது, அரசனின் பெயரைச் சொல்கிறது, ஒவ்வொரு திறமைக்கும் அரசர்களின் ஆட்சிக்காலத்தில் எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்பவை எல்லாம் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
சமூகத்திற்கு ஒவ்வொரு மனிதரும் தங்கள் பங்களிப்பத் தரும்போதுதான் அந்தச் சமூகம், ஊர், நகரம், நாடு மேன்மையடைய முடியும். இதைத்தான் பண்டைய அரசர்கள் செய்தனர்.
நாம் மஹாபலிபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலில் நிற்கிறோம். பல்லவ மன்னர்கள் காலத்தில் தொண்டை மண்டலமே சிற்பக் கலைஞர்களால் ஓஹோ என்று புகழ்பெற்றிருந்தது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை சிற்பங்கள் நிரம்பிய புகழ்பெற்ற கோயில்களைக் காண முடியும். ஒரு அரசர் காலத்தில் ஒன்றிரண்டு கோயில்கள்தாம் எழுப்ப இயலும். அத்துணை பொருட்செலவு இருந்தாலும், மன்னர்கள் காலத்தில் பலப் பல கோயில்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.
மஹாபலிபுரம் 1ம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்ற கடற்கரைத் துறைமுகமாக விளங்கியது. இந்தக் கோயில் பற்றி (தலசயனப் பெருமாள் கோயில்) 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் குறிப்பிட்டிருக்கிறார். பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று குறிப்பிடப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியவர்களில், பூதத்தாழ்வார் இந்தத் தலத்தில் பிறந்தவர். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்பு உருகு சிந்தை இடு திரியாக நாராயணனுக்கு ஞானச் சுடர் ஏற்றுவதாக ஆரம்பித்து இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் இவர். (நாலாயிரத்தில் நூறு பாசுரங்கள்)
பல்லவ அரசர்களான முதலாம் மகேந்திரவர்மன், அவருடைய மகன் முதலாம் நரசிம்ஹவர்மன் ஆகியோர் காலத்தில் மஹோன்னதமாக இருந்தது இந்த மஹாபலிபுரம் (நரசிமவர்மன் பட்டப்பெயரான மாமல்லன் என்பதே இந்த ஊரின் பெயராக அமைந்தது) பல்லவர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் (ஆதித்த சோழன்) தோற்கடிக்கப்படும்வரை தொண்டை மண்டலம் என்று சொல்லப்படுகிற பெரும் இடத்தை, காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பது தெரிந்திருக்கும். இடைக்காலச் சோழர்கள் ஆட்சியிலும் மாமல்லபுரம் கோயில்களுக்கு நிவந்தங்கள் கொடுத்ததைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கடற்கரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் 12ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் அளித்த நிவந்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோர் அளித்த நிவந்தங்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
14ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேர ரசின் அரசன் பராங்குசன், ஸ்தலசயனப் பெருமாள் கோயிலை, தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றியிருக்கிறான். அவன், கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளையும் அமைத்தான் என்று நம்பப் படுகிறது. அப்படியானால் முன்பிருந்த தலசயனப் பெருமாள் கோயில் எங்கே அமைந்திருந்திருக்கும்? தற்போது உள்ள கடற்கரைக் கோயிலில் தலசயனப் பெருமாள் கோயில் (விஷ்ணு) நடுவில் இருக்க, அதன் இரு புறமும் சிவனின் உருவத்தோடு இருந்த கோயிலாக இருக்கும் என்கிறார்கள். அதனால்தான் கோயில் மூலவர் எனக்கு மிகப் பழமையானவராகத் தெரிந்தார்.
கோயிலில் நுழைவு வாயிலில் இருக்கும் இந்தச் சிற்பத் தொகுதியைப் பாருங்கள். கோயிலின் பழைமையைச் சொல்லும். இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு நிறையச் செலவாகும். அமெரிக்கா, கல்ஃப் தேசங்கள் போன்றவற்றில் வரலாறு கிடையாது, ஆனால் பழம்பெருமையை அவர்கள் பேணிக் காக்கின்றனர். நம் நாட்டிலோ மிகத் தொன்மையான வரலாறு. அளவுக்கு அதிகமான இடங்கள். இவற்றைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது கடமை என்று எண்ணாத அரசுகள். இருக்கும் இடங்களையும் ஆக்கிரமித்து, அதிகாரிகள் துணையோடு பொய் ஆவணங்களைத் தயார் செய்து எடுத்துக்கொள்ளும் மக்கள். என்ன செய்ய?
இந்த வாசலே மிக உயரமானது. அதில் எத்தனை எத்தனை சிற்பங்கள்?
கடற்காற்றினால் பழுதுபடாமல் இருப்பது ஆச்சர்யம். காரணம் இவை கருங்கற்கள்.
கோயிலுக்குள் நுழைந்த தும் த்வஜஸ்தம்பம். அதன் முன்னால் வெற்றித்தூண் அல்லது விளக்கு வைக்கும் தூண் (ஆமாம் இரவில் எப்படி இதன் மேல் விளக்கு ஏற்றுவார்கள்? எப்போது அணைப்பார்கள்?)
கோயில் விமானம் சமீபத்தில் (ஒரு சில நூற்றாண்டுகளுக்குள்ளாக) அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இது மாதிரி பலப் பல கோயில்களில் விமானம் சமீபத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. சிதிலமடைந்த விமானத்தை அதே போல் பழமை மாறாமல் கட்டியெழுப்ப முடியாது. அதனால் தற்கால உத்திகளைப் பயன்படுத்திச் சீர் செய்துவிடுகிறார்கள். சுவர்கள் மாத்திரம் பழைமையப் பறைசாற்றுகின்றன. தவறில்லை. ஆனால் கல் தூண்கள், விதானங்கள் என்று வகை தொகையில்லாமல் பெயிண்ட் அடித்துவிடுகிறார்கள். இதுதான் அலங்கோலமாக இருக்கிறது.
இரண்டு படங்களையும் இணைத்தால் ஓரளவு மூலவர் உருவம் கிடைக்கிறது.
கருவறையில் ஸ்தலசயனப் பெருமாள் தரையில் சயனித்தவாறு இருக்கிறார் (மற்றத் தலங்களில் எல்லாம் ஆதிசேஷனைப் படுக்கையாக க் கொண்டு சயனித்த நிலையில் காட்சிதருவார்). புண்டரீக மஹரிஷிக்குக் காட்சி கொடுத்த தனால், அந்த மகரிஷியும் பெருமாள் திருவடி பக்கத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். உற்சவர் திருநாம ம் உலகுய்யநின்றான், நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இது தவிர கோயிலில் தாயாருக்கு, இராமருக்கு, லக்ஷ்மி நரசிம்மருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலின் திருக்குளம் புண்டரீக புஷ்கரணி, கோயிலுக்கு வெளியே அமைந்திருக்கிறது. இது பிற்காலத்தில் (இந்தக் கோயில் அமைக்கப்பட்ட காலத்தில்) ஏற்படுத்தப்பட்டது.
காலை 7 ½ மணிக்கெல்லாம் தரிசனம் முடிந்தது. என் மனைவி, அடுத்து பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்க்கூடம் ஆகிய இரண்டு கோவில்களுக்குச் சென்றுவிட்டு காஞ்சீபுரம் செல்லாம் என்று சொல்லியிருந்தார். மகாபலிபுரத்துக்குச் சென்ற பிறகு, பல்லவ மன்னர்கள் நரசிம்மபல்லவன், மகேந்திரவர்மன், ஆயனர் என்று பலரின் நினைவு வந்துபோனது. (சிவகாமி நினைவுக்கு வரவில்லையா என்று கேட்காதீர்கள். எனக்கென்னவோ ஒரு வானதி போல, சிவகாமியின் மீது பரிவு வரவில்லை. அரசனை தன் அடிமையாக நினைத்தது போல கல்கி அவர்கள் அந்தப் பாத்திரத்தைப் படைத்ததனால் இருக்கலாம்.) அதனால் அங்கிருக்கும் சிற்பங்களைப் பார்க்க முடிவு செய்தேன். காலைவேளை என்பதால் நடப்பதிலும் சிரமம் இருக்காது என்று நினைத்தேன்.
கிருஷ்ண மண்டபம்
கோவில் வளாகத்தின் வெளியே பின் பக்கத்தில் இருந்த கிருஷ்ண மண்டபம்தான் நாங்கள் முதலில் பார்த்தது. பல்லவர் காலத்தில் (7ம் நூற்றாண்டு) பாறையில், கிருஷ்ணர், இந்திரனின் கோபத்தின் விளைவாகப் பெய்த கனமழை, யாதவ குலத்தைப் பாதிக்காமல் இருப்பதற்காக, கோவர்தனத்தைத் தூக்கிக்கொண்டு இருப்பதாகவும், அதன் கீழே பசுக்கள், கோபிகைகள் மற்றும் பலர் எந்தக் கவலையற்று சந்தோஷமாக இருப்பதாகவும் அமைக்கப்பட்ட சிற்பக்கூட்டம் இது. இதன் முன்புறம் உள்ள மண்டபம் விஜயநகரப் பேரரசு காலத்தில் 16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாம்.
சுமார் 30 அடி நீளமும், 12 அடி உயரமும் உள்ள மண்டபம் இது.
இந்தச் சிற்பத் தொகுதியைக் கூர்ந்து கவனித்தால், வயதான ஒருவர், ஒரு குழந்தையைத் தன் தோளில் சுமப்பது, ஆயர்கள் பசுவின் பால் கறப்பது, பசு தன் கன்றை வாஞ்சையோடு நக்கிக் கொடுப்பது, கோபிகைகள் தண்ணீர் குடங்களைச் சுமந்துகொண்டு நிற்பது (அதுவா இல்லை பால் குடமா?), பசுக்களை மேய்ப்பவன் புல்லாங்குழலுடன் இருப்பது, மரம் வெட்டுபவர் உளியைக் கையில் வைத்திருப்பது, ஒரு பெண் புல்லைச் சுமந்துகொண்டிருப்பது, ஒரு குழந்தை அதன் தாயைக் கட்டிக்கொண்டு நிற்பது, காளையின் சிற்பம் என்று அந்தத் தொகுதியே கோகுலத்தை நினைவுபடுத்தும் தோற்றத்தோடு இருக்கிறது.
கிருஷ்ணமண்டபத்தின் அருகிலேயே ஒரு முற்றுப்பெறாத குடைவரைக் கோயில் இருக்கிறது.
ஒவ்வொரு இடத்தையும் பார்த்து புகைப்படங்களால் எடுத்துக்கொண்டேன்.
மஹாபலிபுரத்தில் அவ்வளவு இடங்கள் இருக்கின்றன. மிகுதியை அடுத்த வாரம் தொடரலாமா?
சாதாரண டூரிஸ்ட் உலா பாதையை விட்டு விலகி அதிகம் அறியப்படாத ஸ்தல சயனப்பெருமாள் கோயில் பற்றி எழுதிய விவரங்களும் படங்களும் அருமை. கிட்டத்தட்ட அன்றைய பாஸ்கர தொண்டைமான் எழுதியது போலவே உள்ளது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார்.. மாமல்லபுரம் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்த இடம். மூன்றாம் நூற்றாண்டிலிருந்து புகழ் படைத்த இடம். பூம்புகாரின் ஒரு பகுதியைக் கடல் கொண்டுவிட்டது. அதுபோல மாமல்லபுரத்தின் பகுதியையும் கடல் கொண்டுவிட்டதால் பல சிறப்புகள் கடலுக்குள் இருக்கின்றன என்ற நினைப்பே நமக்கு அந்த இடத்தின் பெருமையை விளக்கும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இரண்டு (தமிழ் மலையாளம்) படங்களைப் பார்த்துவிட்டதால் இந்த ஞாயிறு வீட்டில்தானா?
நீக்குதிருநெல்வேலியில் எங்கு இருந்தீர்கள்?
வணக்கம் சகோதரரே
நீக்குஹா ஹா ஹா.. வீட்டில்தான். இன்று மட்டுமல்ல..! பெரும்பாலான ஞாயறு கள் வீட்டில்தான். போன வாரம் என்னவோ தொடர்ந்து வியாழனும், ஞாயறுமாக இரு படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எல்லாம் மகன்கள் சத்தமில்லாமல் போட்ட பிளான். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் நெல்லைத் தமிழர்
பதிலளிநீக்குசகோதரரே
இன்றைய கோவில்கள் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகுடன் நன்றாக உள்ளது.
ஸ்தல சயனப் பெருமாள் கோவிலின் அமைப்பு, பல்லவ சாம்ராஜ்யத்தின் சிறப்பு, அனைத்தையும் விளக்கிய உங்களது பதிவை மிக ரசித்துப் படித்தேன்.கோவிலின் நுழைவு வாயில் படம் நன்றாக உள்ளது. கோவிலின் மூலவரையும், இறைவனின் விமானத்தையும், தரிசித்து கொண்டேன். இறைவன் அனைத்து இடங்களிலும் இருப்பதை போல பாம்பணை மேல் பள்ளி கொள்ளாமல், தனித்து பள்ளி கொண்டிருப்பதை பார்க்க மனதுக்கு என்னவோ போல் உள்ளது. (அதற்கு ஏதாவது கதைகள், காரணங்கள் இருக்கும்.)
த்வஜ்ஸ்தம்பம் அருகில் இருக்கும் விளக்குத் தூணில் அந்த காலங்களில் நிறைய எண்ணெய் விட்டு இரவு முழுவதும் எரியும்படியாக விளக்கேற்றியிருப்பார்கள் போலும்..! அப்போது இருளை அகற்றும் ஒளியாக மின் விளக்குகளின் அணிவகுப்புகள் ஏதுமில்லையே. .!
கோவில் சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் போற்றி, பாதுகாக்கும் மனம் வர வேண்டும்.
கிருஷ்ண மண்டபத்தின் குடவரை சிற்பங்களும் அழகு. நீங்கள் அதில் உள்ளனவற்றை தெளிவாக விளக்கி விட்டதும் நல்ல ரசனை. பெரியவர் தோளில் அது குழந்தையா? கைப்பேசியில் சரியாக பார்க்க இயலவில்லை கோவர்தன கிரி கிருஷ்ணர் சிற்பம் பால் கறக்கும் யாதவர் சிற்பம், எல்லாம் நன்றாக உள்ளது.
மாமல்லபுரம் சென்னையில் உள்ள போது ஒரு தடவைதான் சென்றிருக்கிறேன். நல்ல வெய்யில் காலம். அப்போது கைபேசி இல்லாத நேரம். (புகைப்பட கருவியும் எங்களிடம் இல்லாத நேரம். :)) ) அப்போது கண்களால் வாங்கி மனதில் இருத்திக் கொண்டவைகள் எல்லாம் இப்போது மறந்தே போய் விட்ட நேரமும் கூட.. :)) தங்களது பதிவின் மூலம் அனைத்தையும் கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு எழுதியபோது தலசயனப் பெருமாள் கடற்கரைக் கோவிலிலிருந்து வந்ததாக இருக்கும் என எழுதினேன். ஆனால் தலசயனம் மற்றும் ஜலசயனம் என்று இரண்டு விஷ்ணுகோவில்கள் இருந்தன என்பதை பிரபந்தம் பற்றிக் கேட்கும்போது அறிந்தேன். முனிவருக்காக தலத்திலேயே காட்சிதந்து சயனித்துக்கொள்கிறான், ஆதிசேஷனுடன் அல்ல என்பது தல விசேஷம்.
நீக்குபழைய காலத்தில் கோயில் மற்றும் அரண்மனை, வீதியின் நடுவில் என எங்கேயைம் எண்ணெய் தீபங்கள்தாம் உபயோகித்திருப்பார்கள். கோல்கொண்டா மற்றும் பல கோட்டைகளைப் பார்த்தபோது, அரச அரசி மற்றும் பிறர் சயனிக்கும் வேளை வரை விளக்கு எரிந்துகொண்டிருக்கும், பிறகு அவர்கள் அறைக்குச் செல்லும் அதிகாரம் படைத்த வேலையாட்கள் உதவியாட்கள் சென்று திரியை அணைத்திருப்பார்கள் என நினைத்தேன். மேற்கு மாம்பலம் மற்றும் பல இடங்களில் விளக்குத் தூண்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நீக்குபுகைப்படமும் எடுப்பதால் எழுதும்போது மீண்டும் கூர்மையாகப் பார்த்து நினைவுபடுத்திக் கொள்வது எளிதாக இருக்கிறது. மிக்க நன்றி
காலையில் உங்கள் பதிவைப் படித்தபிறகு, எனக்கு ஜங்ஷனில் இருந்த காலங்கள், நீங்கள் எழுதியிருந்த, எழுதாமல் விட்டுவிட்ட சிவசக்தி, லக்ஷ்மி திரையரங்கம், அங்கெல்லாம் பார்த்த படங்கள் எனப் பலவும் நினைவுல் வந்துபோனது. ஏன் எப்போதும் நம் இளமைக் காலங்கள் மிகவும் சந்தோஷமான காலமாகத் தெரிகிறது என யோசித்தேன். செலவுக்குப் பணம் கிடையாது, பெரியவர்களின் கண்டிப்பு, சாதாரண உணவு, மிக எளிமையான உடை, இருந்தும் இளமைக் காலத்தை நினைத்தால் மனம் குதூகலமடைகிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/தலசயனம் மற்றும் ஜலசயனம் என்று இரண்டு விஷ்ணுகோவில்கள் இருந்தன என்பதை பிரபந்தம் பற்றிக் கேட்கும்போது அறிந்தேன். முனிவருக்காக தலத்திலேயே காட்சிதந்து சயனித்துக்கொள்கிறான், ஆதிசேஷனுடன் அல்ல என்பது தல விசேஷம்/
நல்ல விபரமான பதில். தலசயனம் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். ஜலசயனம் என்றால் அத்திவரதர் மாதிரியா? இது போல நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உங்களைப் போல நிறைய விஷயங்களை கற்க வேண்டும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
நீக்குதாங்கள் வந்து என் பதிவை படித்து கருத்துரைகள் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.
ஆம்.. லக்ஷ்மி, தியேட்டரை எழுத மறந்து விட்டேன். சிவசக்தி நினைவில் வரவில்லை. நீங்கள் சொன்னதும் தெரிந்து கொண்டேன். திருமணமான பின்பு தி. லி வரும் சமயம் கூட இங்கெல்லாம் அதிகம் சென்றதில்லை. ஒரு படத்திற்கு (நீல வானம் என்று நினைக்கிறேன்.) எல்லோரும் சேர்ந்து சென்றோம். கல்லிடை டூரிங் தியேட்டரில் அங்கிருக்கும் உறவுகளுடன் ஒரிரு படங்கள் பார்த்துள்ளோம்.அம்பையிலும் ஒரு படத்திற்கு சென்றோம்.
/எப்போதும் நம் இளமைக் காலங்கள் மிகவும் சந்தோஷமான காலமாகத் தெரிகிறது என யோசித்தேன். செலவுக்குப் பணம் கிடையாது, பெரியவர்களின் கண்டிப்பு, சாதாரண உணவு, மிக எளிமையான உடை, இருந்தும் இளமைக் காலத்தை நினைத்தால் மனம் குதூகலமடைகிறது./
ஆம். உண்மை.. அசை போடும் போது அக்கால ங்கள் இப்போதயதை விட மகிழ்வாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. காரணம் மனது பக்குவபட்ட பின் நடுவில் வந்த பொறுப்பின் சுமைகள் தான். அதன் தாக்கங்கள், பாதிப்புகள் பழையதை எண்ணி மகிழ்வு கொள்ள வைக்கிறது என நான் நினைப்பேன். தங்கள் பதிலுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா ஹரிஹரன் மேடம்...இது பற்றிய விவரங்கள் வரும் வாரங்களில் வரும். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. (அத்திவரதர் பற்றி என் அனுமானம் வேறு. அத்திவரதர்தான் வரதராஜப் பெருமாளாக இருந்த மூலவர். சிறிய பின்னப்பட்டுப் போனதால் அவரை திருக்குளத்தில் இருத்திவிட்டு புதிய மூலவர் செய்திருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதரைக் கொண்டு வருவது என்பது புதிய நடைமுறை)
நீக்குநீங்கள் போன நேரம் என்பதாலா? கோயில் ஆள் அரவமற்று ஹோவென்று இருக்கிறதே? மஹாபலிபுரத்திலா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இது வரைப் போனதில்லை. மஹாபலிபுரம் என்றால் அர்ஜூனன் தபஸ் அப்படி..இப்படி என்று பார்த்து விட்டு வந்து விடுவதால்... சிலை எடுத்தான் ஒ.சி.பெ.
பதிலளிநீக்குபடங்கள் இடத்தின் சிறப்பைத் துல்லியமாக எடுத்தோதுகின்றன.
அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
வாங்க ஜீவி சார்... ஞாயிறு என்றாலும் வெகு சீக்கிரம் மாமல்லபுரத்தை அடைந்ததால் ஆரம்பத்தில் ஆட்கள் இல்லை. வரும் வாரங்களில் காண்பீர்கள்.
நீக்குநீங்கள் மகாபலிபுரத்தைக் காணவில்லையா? கலங்கரை விளக்கு படத்தைப் பார்த்த பிறகுமா?
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவடிவேலன் வாழ்க்கையை ஒளிபெறச் செய்யட்டும்.
நீக்குஸ்தலசயனம், பாம்பணை சயனம் அல்லாது மற்றொரு சயனக்கோலமும் உண்டு. படியளந்த பெருமாள் என்ற பெயரில் மரக்காலை தலையணையாகக் கொண்டு சயனித்திருக்கும் பெருமாளை சிலையையும் கண்டிருக்கிறேன்.(ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ), மற்றும் திருவஹீந்திரபுரத்தில் ஒரு சந்நிதி.
பதிலளிநீக்குநான் கண்டது கடலூர் திருவந்திபுரத்தில் தேவநாத பெருமாள் கோயிலில்.
நீக்குஜெயகுமார் சார்.... விஷ்ணு, பலவித சயனக் கோலத்தில் காட்சிதருகிறார். உத்தான சயனம்-கும்பகோணம் சாரங்கபாணி கோவில், திருவரங்கத்தில் புஜங்க சயனம், திருப்புல்லாணியில் தர்ப்பசயனம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வீர சயனம், திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயி, பத்ர சயனம், தில்லை கோவிந்தராஜரின் சயனம் இன்னொருவிதம் என்று பலவித சயனங்கள்.
நீக்குமற்றபடி பாம்பணை சயனம், ஆண்டளக்கும் ஐயன் சயனம் எல்லாமே இவற்றில் ஒன்றாக வந்துவிடும்.
தங்களது பாணியில் மீண்டும் சிறப்பானதொரு பதிவு..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி
நீக்கு
பதிலளிநீக்குஎன் தம்பியுடன் 80 களில் மாமல்லபுரத்திற்குச் சென்றிருக்கின்றேன்..
அப்போது இருந்ததற்கும் இப்போதைக்கும் நிறைய மாறுதல்களை நான் கண்டேன் துரை செல்வராஜு சார்
நீக்குபுராண வரலாற்றுச் செய்திகள்..
பதிலளிநீக்குஅழகான படங்கள்.
வேறென்ன வேண்டும்!..
ஏதோ படங்களை வைத்து ஞாயிறு பகுதியை ஒப்பேற்றுகிறேன். ஹிஹிஹி
நீக்குநெல்லை படங்கள் அட்டகாசம். அதுவும் சிற்பங்கள் படங்கள் அனைத்தும் வாவ்!
பதிலளிநீக்குநான் போயிருக்கிறேன் ஆனால் பாருங்க அப்ப என்னிடம் கேமராவோ மொபைலோ இல்லை. கேமரா இருந்த போது கோயில் போகலை. அவசர அவசரமாக மஹாபலிபுரம் பாறைச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம். பயணங்களும் குறைந்துவிட்டன,.
கீதா
வாங்க கீதா ரங்கன்(க்கா). பயணங்கள் குறைந்ததன் காரணம் புரிகிறது. உங்கள்ட கேமரா இருந்தாலும் மொபைல் இருந்தாலும் படங்கள் எடுத்து பதிவைத் தயார் செய்து வெளியிட ரொம்பவே நேரம் எடுத்துப்பீங்க...இல்லையா?
நீக்குஅதென்னவோ உண்மைதான், நெல்லை, இப்ப கூட பாருங்க படங்கள் பதிவுகள் இருக்கின்றன ஆனா எழுத தான் மனம் இன்னும் ஒத்துழைக்க மறுக்கிறது. ஏதோ ஒன்று தடை போட்டுக் கொண்டே இருக்கு.
நீக்குஒவ்வொரு நாளும், சரி ஒரு பதிவு ரெடி பண்ணலாம்னு எடுத்து வைப்பேன் படங்கள், வீடியோக்களை இணைக்க எல்லாம்..அது போல ஸ்ரீராம் கே வா போ கேட்கும் போதெல்லாம் முடிக்காம இருக்கும் ஒரு கதை எடுத்து வைப்பேன்.....ஹிஹிஹி அவ்வளவுதான் concentration இல்லை ஏதாவது ஒன்று வந்து டைவெர்ட் செய்துவிடும்.
கீதா
விளக்கேற்றும் அந்தக் கல் தூண் கோவில் முழுவதுமே வெளிச்சம் கொடுக்கும் அளவு பெரிதாக ஏற்றுவாங்க என்றே தோன்றும். மூங்கில் ஏணி வைச்சுத்தான் ஏறிருப்பாங்க நெல்லை. பின்ன எப்படி ஏற்ற முடியுமாம்? இல்லைனா சர்க்கஸ்ல செய்வாங்கலே ஒருத்தன் குனிய அவர் மேலே இன்னொருத்தார் அப்படி இருக்குமா என்ன?
பதிலளிநீக்குகீதா
ஏணி வைத்துத்தான் விளக்கை ஏற்றியிருப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் எவ்வளவு எண்ணெய் செலவழிந்திருக்கும், எந்தக் கணக்கில் வாங்கியிருப்பார்கள், எத்தனை பேரின் உழைப்பு இது என்றெல்லாம் யோசித்தால் மலைக்க வைக்கிறது.
நீக்குநெ தமிழன்.. உங்கட கீதா ...க்கா... ஹா ஹா ஹா , நீங்கள் இருக்கும் படத்தைப் பார்க்கேல்லைப்போல:)))
நீக்குஹாஹாஹா அதிரா, நான் நேரிலேயே பார்த்திருக்கிறேனே!
நீக்குகீதா
கீதா ரங்கன் என்னைவிடச் சில மாதங்கள் மூத்தவர். ஹா ஹா ஹா.. அப்போ அக்காதானே... இரட்டைக் குழந்தைகளிலேகூட ஒரு மணி நேரம் முந்திப் பிறந்தவன் என்று ஒரு குழந்தையை மூத்தவன் என்று சொல்கிறார்கள்.
நீக்குநீங்கள் பாரணையை வெற்றிகரமாக முடிச்சதில் சந்தோஷம். அதற்கு என்ன நிவேதனம் பண்ணினீர்கள் என்பது காணொளியில் வருமா?
மதமல்ல புரத்தில் ஸ்தலசபனப்பெருமாள் தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குசிற்பங்களின் அழகும் அவற்றின் நேர்த்தியும் தெரிகிறது.
கோகிலக் காட்சிகள் விளக்கங்களுடன் கண்டோம். அற்புதமான படைப்புகள் காப்பாற்றுவது சமூகத்தின்கடமை.
இரண்டு தடவை மகாபலிபுரம் சென்றிருக்கிறேன். வேறுபல இடங்களும் கண்டுகொண்டோம். இக்கோவில் தரிசிக்கவில்லை.
வாங்க மாதேவி அவர்கள். நிறைய நடந்தால், அதுவும் வெயில் இல்லாத காலையில், பல இடங்களையும் நிதானமாகக் காண இயலும்
நீக்குபல்லவர்கள் என்றாலே மாமல்லபுரம் தான் நினைவுக்கு வரும் முதலில் கல்லெல்லாம் சிலை செய்த பல்லவராஜா!!! பாடலும்
பதிலளிநீக்குகீதா
இந்த மாதிரி கற்குன்றுகளில் எல்லாம் சிலை, கோயில்களைக் குடைதலுக்கு எவ்வளவு திறமை, உழைப்பு, நேரம், பணம் தேவையாக இருந்திருக்கும்? அப்போதைய அரசர்கள் கலைக்கும் பணத்தை ஒதுக்கியிருப்பது மிகப் பெரிய செயல். ஆனால் அவைதான் அவர்களை நாம் நினைவுகொள்ள வைக்கிறது.
நீக்குநிறைய உழைப்பு, பணம் செலவாகியிருக்கும் நிச்சயமாக. அப்போது ஆட்பலம் மனம் எல்லாம் இருந்திருக்கு இப்போது போல் டைவர் ஷன் இருந்திருக்காது என்றும் தோன்றும்.
நீக்குகீதா
கிருஷ்ண மண்டபம் படங்கள் சூப்பர் அந்தத் தூண்கள் எல்லாம் அழகு. நேரில் பார்த்ததை விட உங்க படங்கள் நினைவுபடுத்துகின்றன.
பதிலளிநீக்குஒரு முறைதான் போயிருக்கிறேன். இப்ப படங்கள் பார்த்ததும் போய்ட்டு வரணும் என்று ஆனால் எங்க சான்ஸ்? இப்ப பயணம் என்பதே வேற வழியில்லாமல் தவிர்க்க முடியாதவை மட்டும்தான் செய்ய முடிகிறது.
மனதில் எத்தனையோ இடங்கள் பட்டியலில் இருக்கின்றன.
சிற்பங்கள் படங்களை ரொம்ப ரசித்தேன் நெல்லை.
கீதா
எல்லாவற்றிர்க்கும் நேரம் வரும் கீதா ரங்கன். ஆனால் பொதுவா ஞாயிறு அன்று நீங்க வெளியில் செல்வதால் வருவதற்கு மிகவும் தாமதமாகிறது என்று நான் நினைத்துக்கொள்வேன்.
நீக்குநன்றி உங்கள் பின்னூட்டங்களுக்கு
இல்லை நெல்லை சனி அல்லது ஞாயிறுகளில் போய் வருவது சமீபகாலங்களாக இல்லை. அப்படியே போனாலும் ஏதாவது கடைக்கு ஆனால் அதுவும் அபூர்வம். ரொம்ப காலமாகிடுச்சு சனி அல்லது ஞாயிறு போய் வருவது. அடுத்த மாதம் பார்க்கலாம்னு சொல்லியிருக்கிறார் பார்ப்போம்.
நீக்குகீதா
கௌதமன் சார், ஒரு படத்திற்குப் பதிலாக, இரண்டு படங்களை repeat செய்துள்ளார்... இது மிகவும் கடினமான வேலை. இருந்தாலும் கண்ணில் பட்டதைச் சொன்னேன்.
பதிலளிநீக்குநீங்கள் அனுப்பியிருந்த கட்டுரையில் சுலபமாக ஒட்டுப் போட்டு ஒரே படமாக அனுப்பியிருந்தீர்கள். ஆனால் நான் அரைமணி நேரம் முயற்சி செய்தாலும் அவை இரண்டையும் ஒன்றாக copy & paste செய்ய இயலவில்லை. அதனால்தான் பிரச்சனை. இப்போ நீங்க அனுப்பிய ஒட்டுப் படத்தை screen shot எடுத்து சேர்த்துவிட்டேன்.
நீக்குநான் பார்த்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன் நான் பார்த்துட்டேன்ன்ன்ன்ன்ன் நான் முழுசாஆஆஆப்ப்ப்ப்ப் பார்த்துட்டேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா அவசரப்பட்டுக் கத்திட்டமே.. அது நெ தமிழன் தானோ இல்ல வேறு ஆராவதாக இருக்குமோ?:))).. நெல்லைத்தமிழன் நீங்க முன்பு ஆனைப்பிள்ளையுடன் போட்ட படத்துக்கும் இதுக்கும் 4 வித்தியாசங்கள் இருக்கு:))))
பதிலளிநீக்குவாங்க அதிரா... அடுத்த வருடத்தில் அடுத்த தொடரில் வரும் படம் கொஞ்சம் ஒல்லியானதாக இருக்கணும்னு டயட்ல இருக்கிறேன்.
நீக்குவைகைப்புயல் வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் உபயோகித்த வார்த்தைகளோ இல்லை வாக்கியங்களோ எப்போது படித்தாலும் உடனே அந்தக் காட்சி நினைவுக்கு வந்துவிடும். கவுண்டமணி, சத்யராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காட்சி நினைவுக்கு வந்தது
///அடுத்த வருடத்தில் அடுத்த தொடரில் வரும் படம் கொஞ்சம் ஒல்லியானதாக இருக்கணும்னு டயட்ல இருக்கிறேன்.///
நீக்குஹா ஹா ஹா எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான் போலும்... என் கணவர் தன் பெஸ்ட் பிரெண்ட்டோடு போனில் அடிக்கடி பேசுவார், அப்போ மறக்காமல் சொல்லும் வசனம்.. "நான் டயட் ஸ்ராட் பண்ணப்போகிறேன், கொஞ்சம் வெயிட் குறைக்கோணும்"... இதை எப்பவுமே கேட்டுக் கேட்டுப் பொறுமையை இழந்த பிரெண்ட் ஒருநாள் சொன்னார்.... சே..சே... நீங்க ஓல்ரெடி மெல்லிசுதானே எதுக்கு மெலிய ட்றை பண்ணுறீங்கள் பேசாமல் இருங்கோ என..ஜோக்காக அல்ல சீரியசாகச் சொன்னாராம்.
போனைக் கட் பண்ணியதும் இதை என்னிடம் சொல்லி உருண்டு பிரண்டு சிரிச்சோம் ஹா ஹா ஹா அத்தோடு அவரிடம் டயட் பற்றிப் பேசுவதில்லை:))).
போன படத்தில பார்த்தபோது கொஞ்சம் கோபக்காரராக இருப்பாரோ என்பது போல இருந்தது, ஆனா இப்போ அப்படி இல்லை.... ஒருவேளை வேலையிலிருந்து ஓய்வெடுத்திட்டீங்களோ.. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)
கோயில் கடலை ஒட்டி அமைந்திருப்பதால மரங்கள் இல்லாததுபோல இருக்கோ நுழை வாயில் மண்டபப் பகுதி.
பதிலளிநீக்குபழமை என்றாலே சிற்பக் கலைகள்தானே.. எதைப் பார்ப்பது எதை விடுவது எனத் தெரியாமல் இருக்கும். இக்கோயில் படங்களும் அப்படித்தான் சிற்பங்கள் மிக ரசிக்கும்படியாக இருக்கு.
எனக்கு இப்போ கடந்த 2 வருடங்களாக சுற்றிச் சுற்றி கோயில்கள் சிற்பங்கள் பார்த்துப் பார்த்து இப்போ எந்தக் கோயில் போனாலும் ஒரே மாதிரி இருப்பதுபோல பிரமையாக வருது...
கோயில் அருகில் கடல் என்பதால் மரங்கள் இல்லை.
நீக்குநீங்கள் சொல்லியிருப்பது உண்மை. ஒரே பகுதியில் உள்ள கோயில்களில் சிற்பங்கள், தேண் சிற்பங்கள் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் இருக்கும். அதனை வடித்த, வடிவமைத்த சிற்பக் குழு ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா? கால மாறுபாடு சிறிதாக இருந்தாலும், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள்/ஏடுகள் ஒன்றாக இருந்திருக்கும்.
அது சரி.. பழங்கால ஏட்டுச் சுவடிகளைப் பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் இருந்த பூர்வீக வீட்டில் ஒரு பெரிய பெட்டி நிறைய பல்வேறு ஏட்டுப் புத்தகங்கள் (சுவடிகள்) இருந்தன. (நாங்கள் சென்னையில் இருந்தபோது என் அப்பா அந்த வீட்டை விற்றுவிட்டார். வெளிநாட்டிலிருந்து வந்தபோது நான் சொன்னேன், அந்த சுவடிகளை மட்டுமாவது கொண்டுவந்திருக்கலாமே என்று. உனக்கு அதில் ஆர்வம் இருக்கும் என எனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்)
ஏட்டுச் சுவடு பார்த்ததில்லை நெ தமிழன், ஆனால் இப்பவும் இலங்கையில் பனை உற்பத்திப் பொருள் அங்காடி, கற்பகம் எனக் கடைகள் இருக்கு, அங்கு அ..ஆ.. இ.. ஈ எழுத்துக்கள் ஓலையில் ஏடாகக் கிடைக்கும், குழந்தைகளுக்கு ஏடு தொடக்க அதனைப் பாவிப்பார்கள்.
நீக்குஏசியாவிலேயே நம் தமிழர் வரலாற்று ஏடுகள் அதிகம் தாங்கிய வாசிகசாலை... நூலகமாக யாழ்ப்பாண நூலகம் திகழ்ந்து வந்தது, ஒரு சமூகத்தின் வரலாற்றை அழிச்சால், அந்த சமூகமே அழிஞ்சிடுமாமே... அதனால இலங்கை சிங்கள ராணுவம் 1981 ம் ஆண்டில் அந் நூலகத்தை முற்றாக எரித்து விட்டது இரவோடிரவாக. நான் குட்டிப்பிள்ளை என்பதால எனக்கு அவற்றைப் படிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
மீண்டும் யுத்தகாலம் முடிஞ்சபின் அந் நூலகத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள், அது தமிழருக்கு ஒரு சோகமான நினைவாகவும், ஊருக்குப் போகும் யாரும் அந்நூலகத்தை ஒரு தடவை போய்ப் பார்க்கத் தவறுவதில்லை.... நானும் போய் வீடியோ எடுத்தேனே...
பலருக்குப் புரியாது, எதற்காக யாழ்ப்பாண மக்கள் இந்த நூலகத்தைப் படமெடுத்துப் போடுகின்றனர் என நினைப்பினம்...
https://youtube.com/shorts/16_bW3MDa60?si=KsEPhg5OQt6r6Pll
கோயிலின் உட்பகுதி கருங்கற்களால் ஆனது எனச் சொல்லியிருக்கிறீங்கள். கொழும்பிலும் கொச்சிக்கடை எனும் இடத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் உள்ளது, அதுவும் முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது, பெயிண்ட் அடிப்பதில்லை, அதனால கோயிலின் உள்பகுதி பகலில் லைட் போடாவிட்டால் இருட்டாக பயமாக இருக்கும்.
பதிலளிநீக்குஇம்முறை போனோம், வெளியே படமெடுத்தேன், வாசலில் எடுக்க, செக்குறிற்றி எடுக்கக்கூடாதென்றிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
இப்போதெல்லாம் பல கோவில்களில் படமெடுக்க அனுமதிப்பதில்லை. அதிலும் உங்கள் ஊரில் கேட்கவே வேண்டாம். பாதுகாப்புப் பிரச்சனைகள் உண்டல்லவா?
நீக்குமூலஸ்தானப் பெருமாள் வித்தியாசமாக உறங்குகிறார், அதுசரி கிரபிக்ஸ் வேர்க் எல்லாம் செய்து பெருமாளையே ஒட்டி எடுத்திட்டீங்களே ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஹா ஹா ஹா.... ஒரிஜனல் படம் எடுத்தவர் சரியான கோணத்தில் இரண்டு படங்களையும் எடுக்கவில்லை.
நீக்குசிற்பக்கூடம் மிக அழகாக இருக்கு, சிற்பங்களும் சிதைவடையாமல் அப்படியே இருக்கு ஆச்சரியமாக இருக்குது.
பதிலளிநீக்குகோவர்த்தனத்தைத் தாங்கும் கிருஸ்ணரை அவ்ளோ மெல்லிசாக செதுக்கிட்டினம்.. டயட்டில இருந்திருப்பார்போலும் ஹா ஹா ஹா ஹையோ இதை அண்ணி பார்த்தால் திட்டிடப்போறா என்னை:)))
படிக்கட்டுக்கள் எல்லாம் புதுசாக் கட்டப்பட்டதோ... அழகாக செதுக்கப்பட்டிருக்குது. பெரும்பாலும் கிரிஸ்ணர் கோயில்களில் ஒரு கதை இருக்கும்போல.
பதிலளிநீக்குஇப்போ குருவாரூர் கோயிலுக்கும் போயிருந்தோம் எனச் சொன்னேன் தானே, அங்கு போக முன் அவசரமாகத் தேடினேன் கூகிளில்.... அப்போ மஞ்சு என்பவ தினமும் கிரிஸ்ணருக்கு மாலை கோர்த்துக் கொண்டுவந்து பூஜையில் கொடுப்பது வழக்கமாம். ஒருநாள் மாலை கொண்டு வர தாமதமாகி விட்டதாம் கோயிலைப் பூட்டி விட்டாராம் குருக்கள். அப்போ இவ மாலையை எப்படியாவது கிரிஸ்ணரின் கழுத்தில் போடும்படி கெஞ்சியிருக்கிறா, கோயில் பூட்டியாச்சு திறக்க முடியாது என்றிட்டாராம் ஐய்ர்.
அப்போ இவ அழுதபடியே, வெளியே ஒரு மரத்துக்கு கீழே மாலையை வைத்துக் கொண்டு, வீட்டுக்குப் போகாமல் இருந்திருக்கிறா. இதைப் பார்த்த கிருஸ்ணர், கிழவனாகவோ என்னமோ வந்து, அந்த மாலையை , அவ இருந்த மரத்தைக் கிரிஸ்ணராக நினைச்சுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போ என்றிருக்கிறா, இவவும் அப்படியே செய்திருக்கிறா.
அடுத்த நாள் பார்த்தால் அந்த மாலை, மூலஸ்தான கிரிஸ்ணரின் தோளில் இருந்ததாம். நான் அந்த மரத்தைப் பார்த்தே தீருவேன் என அடம்பிடிச்சு விசாரிச்சால் ஆருக்கும் கோயிலுக்குள் புரியவில்லை, பின்பு கடைக்காரர்களைக் கேட்டுக் கேட்டுக் கண்டுபிடிச்சு வீடியோ எடுத்து வந்தேன்... யூ ரியூப்பில் போடுவேன் பாருங்கோ.
சீதையின் அசோகவனம் போட்டிருக்கிறேன் பார்த்தனீங்களோ??...
நன்றி வணக்கம்.. தொடரட்டும் கோயில் சுற்றுலா...
குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஏராளமான நடந்த சம்பவங்கள் உண்டு. பொதுவாக கேரளக் கோயில்களில் மரபைக் கடைபிடிக்கிறார்கள். அதுபோன்றே கேரளாவை ஒட்டியுள்ள திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் உள்ள கோயில்களிலும். ஆண்கள் சட்டை அணியக்கூடாது, வேட்டிதான், பெண்கள் புடவைதான் (சில நேரங்களில் துப்பட்டாவுடன் உள்ள வடநாட்டு உடை). நான் குருவாயூருக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு கிடைக்கும் பிரசாதமான பால்பாயசம் மற்றும் அரவணைப் பாயசம் சாப்பிட்டீர்களோ? கோயிலுக்குள்ளேயே பால்பாயசம் தயாரிப்பார்கள். நாம் காண முடியும்.
நீக்குஉங்கள் யூடியூபுகளைப் பார்த்துக் கருத்திட்டிருந்தேனே இரு நாட்களுக்கு முன்பு. கோயில், பயணம், வெஜ் எல்லா காணொளியும் பார்த்துவிடுவேன், பறங்கிக்காயை பூசனி என்று போட்டிருந்த காணொளி உட்பட. ஹா ஹா ஹா
மிக்க நன்றி அதிரா. சட் என்று பெயரைப் பார்த்தபோது பாயசம் முடித்த என்று பார்த்தேன். பாயசம் குடித்த என்று போட்டிருக்கணுமே என்று பார்த்தால் பிறகுதான் பாராயணம் முடித்த என்று கண்டுகொண்டேன்.
ஃபெப்ருவரியில் இலங்கை யாத்திரை போவதாக இருந்ததை கேன்சல் செய்துவிட்டேன். பிறிதொரு வாய்ப்பு வருகிறபோது போகணும்.
//அங்கு கிடைக்கும் பிரசாதமான பால்பாயசம் மற்றும் அரவணைப் பாயசம் சாப்பிட்டீர்களோ?//
நீக்குஅதை ஏன் கேட்கிறீங்கள்... நாங்கள் தலைக்கு 1000 ரூபா கொடுத்துத்தான் குருவாயூரப்பனைப் பார்த்தோம், அவ்ளோ கூட்டம் மக்கள்.
அதனால எங்கும் பார்க்க முடியேல்லை, ஆனா எல்லோர் கையிலும் பால்போல இருந்துது, பார்த்து விசாரிச்சோம், அது எங்கோ வெளியில் போய் வாங்கோணும் என்றார்கள், அதனால விட்டு விட்டோம்... இந்தக் கோயிலுக்கு மட்டும் ஹைட் வைக்கவில்லை நாங்கள், அதனால சில விசயங்கள் கஸ்டமாகிட்டுது.
வீடியோக்கள் பார்த்தால் லைக் போட்டு விடுங்கோ அது போதும், கொமெண்ட் கஸ்டப்பட்டுப் போடவேணும் என்றில்லை, இதைத்தான் ஸ்ரீராமுக்கும் முன்பு சொல்லியிருக்கிறேன்.. நன்றி நன்றி.
//ஃபெப்ருவரியில் இலங்கை யாத்திரை போவதாக இருந்ததை கேன்சல் செய்துவிட்டேன். பிறிதொரு வாய்ப்பு வருகிறபோது போகணும்.///
நீக்குஆஆஆஆஆஆஆஆ ஓ நோஓஓஒ நீங்க சீதா சிறையிருந்த இடமெல்லாம் பார்க்கப் போறீங்கள் என நினைச்சபடியே வீடியோ எடுத்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போயிட்டு வாங்கோ, இப்போ சூப்பராக இருக்குது இலங்கை, அதிலும் ஸ்பெசலா இந்தியால இருந்து போனால் பயங்கர வித்தியாசமாக இருக்கும்...
சூப்பரான ரோட்டுகள், எப்பவும் வாகன நெரிசலின்றி பிரீயாக இருக்கும்., கோயில்கள் எல்லாம் ஆறுதலாக இடிபடாமல் கும்பிடலாம்..:)., ஸ்பெசல் ரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது அக்கோயில்களில் ஹா ஹா ஹா...
அதீஸ் பேலஸ் நோட்டிஃபிகேஷன் வரும் போதெல்லாம் வந்து பார்த்து சமர்த்தாக லைக் போட்டுக் கொண்டிருக்கிறேனே அதிரா...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்... லைக்குகளைப் பார்க்கும்போது நினைத்துக்கொள்வதுண்டு இதில ஒன்று ஸ்ரீராமுடையது என...
நீக்கு