தமிழ் நம்பியின் பாடல் வரிகளுக்கு T M சௌந்தரர்ராஜனே இசை அமைத்து பாடி இருக்கும் பாடல்.
SPB : எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : சிரிப்பு வந்தது
அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
P சுசீலா : அழைப்பு வந்தது
அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
SPB : கோபம் வந்தது
அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
P சுசீலா : கொஞ்ச வந்தது
வெட்கம் கொஞ்சம் வந்தது
அஹஹ ஹா
SPB : ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
SPB : போகச் சொன்னது
கால் போகும் போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
P சுசீலா: பேசச் சொன்னது
வாய் பேசும் போது
நாணம் வந்து மூடச் சொன்னது
SPB : தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது
P சுசீலா : தயக்கம் வந்தது
பெண்ணின் பழக்கம் வந்தது
SPB : அஹஹ ஹா
P சுசீலா : ஒஹொஹொ ஹோ
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : அன்ன வாகனம் போல
ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்
P சுசீலா : தர்ம தரிசனம்
அதை தலைவன் மட்டும்
பார்ப்பது தான் தெய்வ தரிசனம்
SPB : கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
P சுசீலா : என்ன காரணம்
நெஞ்சின் எண்ணம் காரணம்
அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
இந்த அருணோதயம் படப் பாடல் பற்றி மேலும் ஒரு தகவல். இந்த tune Aradhana படத்தில் வருகின்ற 'Gunguna Rahe hein.. ' பாட்டின் ட்யூன் போலவே இருக்கும்.
பதிலளிநீக்கு