வியாழன், 28 நவம்பர், 2024

"எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாமா?"

 

குடும்பக் குழுமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பகிரப்பட்ட படம் இது.  இது ஒரிஜினல் என்றான் பகிர்ந்த மாமன் மகன்.  பார்த்ததும் மனதில் சும்மா ஒரு வார்த்தை தோன்றியது..

அன்னம் அழகா - அந்தப் பெண்ணின் 
கன்னம் அழகா 

என்று..  

அப்புறமும் சில வார்த்தைகள் சும்மா பகிர்ந்து கொண்டேன்.

மடிசார் மாமி 
மயங்கிப் பார்க்கிறாள்
 மட அன்னத்தை

" நீ நெனச்சா இங்க இருந்து சுதந்திரமா பறந்து போயிடலாம்... என்னால் முடியாதே"

உன் சிறகுகளை எனக்குத் தாயேன்..  இந்தச் சிரமச் சிறையிலிருந்து விடுபட்டு பறந்து விடுகிறேன்...

பிறகு தோன்றிய ஒரு உரையாடலை அங்குதான் பகிர நினைத்தேன்.  அங்கு பகிர்வதைவிட இங்கு பகிர்ந்தால் சற்று அதிக பதில் கிடைக்கும்(தானே?) என்று தோன்றியதும் ஒரு காரணம் என்றால், இந்த வியாழனை இப்படி ஓட்டி விடலாம் என்றும் தோன்றியதும் ஒரு காரணம்!


வெண்ணிற அன்னம் செந்நிற புடைவை அணிந்த மாதிடம் கேட்டது

"எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாமா?

​"எதை?"

"என் சிறகுகளைக் கேட்டாய்..  உன்னை பூவினும் மெல்லியள் என்று சொன்னாலும், இளைய சிறகுகள் வலிய உன் உடலைத் தாங்காது. சிறகடிப்பதில் களைத்துப் போகும். உன் எடையை என் உடல் தாங்காது.."

"அதனால்...?   என்ன செய்யலாம்?"

"நான் நீயாகி விடலாம். நீ நானாகி விடலாம்..."

"ஆஹா...  நல்ல யோசனை.  வானெங்கும் பறக்கலாம்... மலை, மழை மேகம் பார்க்கலாம்.. நனையலாம்.. மரத்தடியில் ஒதுங்கலாம்.."

மனதுக்குள் ஸ்ரீதேவி பேண்ட் அணிந்து கடற்கரையில் நடந்தபடியே ஜானகி குரலில் பாடினார்...
   
 
  
"வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....  நேரம்...(குழுவினர்).. வானில் ஒரு தீபாவளி...  நாம் பாடலாம் கீதாஞ்சலி..."

"ஆம்..  பறந்து கொண்டே இருக்க வேண்டும். சிறகுகள் களைத்து விடும். ஒரு வாய் உணவுக்கு ஓராயிரம் மைல் பறக்க வேண்டும்.  உன் போலிருந்தால் மலர் மஞ்சத்தில் உறங்கலாம்.. மாளிகை முழுவதும் உயிர் பயமின்றி சுற்றி வரலாம்...  நடந்து களைத்தால்,  உண்டு களிக்கலாம்.."

"ஆனால் நான்கு சுவர்களுக்குள்ளான சிறை.. உன் போல என்னால் வெளியில் வரவோ திரியவோ முடியாது.. தங்கக்கூண்டு.. கேட்டபோது சுகம் தரும் அடிமைக்கிளி..."

"விதம் விதமான் உடைகள்... ஒருநாள் போல மறுநாள் இல்லை.. கொத்தித்தின்ன பழங்கள், பஞ்சணை மெத்தைகள்..  ஏவலுக்கு ஆட்கள்.. குளிப்பாட்டக் கூட ஆட்கள்..."

"ஆம்.. தனிமை இல்லை. தப்பித்து விடாமல் இருக்க ஏவலாட்கள் போல காவலாட்கள்...  எந்தப் பொழுதையும் தனியாகவே கழிக்க முடியாது... இயற்கைக் கடனை மட்டுமே தனியாகக் கழிக்கலாம்...  அதுவும் கூட மூடிய கதவுகளுக்கு வெளியே ஏவலாட்கள் இருப்பார்கள்... தூங்கும்போதும் உன்னைப் பார்த்தபடி நான்கு பெண்கள்..."

"எந்த வேடன் வருவானோ.. எவர் நம்மைப் பிடிப்பாரோ என்கிற அச்சம் கவலை இன்றி உறங்கலாம்... பஞ்சு மெத்தை.. பழங்கள்.. மரங்களின் மறைவில் அமர வேண்டாம்.. மயங்கும் கண்களில் பயத்தைத் தேக்க வேண்டாம்...  மழைக்கு பயப்பட வேண்டாம்"

"மறைவில் அமர்ந்தாலும் புதிய காற்றை சுவாசிக்கலாம்.. வானத்து நட்சத்திரங்களின் அடியில் சுதந்திரமாய் இருக்கலாம்....  பனியில், மழையில் நனையலாம்..."

"ம்ம்ம்ம்...  சாத்தியமில்லாத சத்தியங்கள்..."

"ஆசைகளின் அனர்த்தங்கள்.."

"உனக்கு ஏன் பறக்க ஆசை?"

"உனக்கு ஏன் ஒரே இடத்தில் இருக்க ஆசை?"

"--------------------------------------------------------------------"

"-----------------------------------------------------------------------"

"உனக்கு புரியப் போவதில்லை..."

"உனக்கும்தான்..."

பெருமூச்சு விட்டபடி  --

பறந்து சென்றது அன்னம்.



தளர்ந்த நடையில் உள்ளே சென்றாள் அவள்.

"அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை...  அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை..."

====================================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

-  பந்தலுார்: 'தமிழக- கேரள எல்லையில், வயநாடு சீரால் பகுதியில் விளையும், 'அகோனி போரா' என்ற நெல் ரகத்தில் விளையும் அரிசி, வெது வெதுப்பான தண்ணீரில் சாதமாகும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் தரமான OTT சேவையைப் பெறும் வகையில் பாரத்நெட் நிறுவனத்துடன் இணைந்து  மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரச்சார் பாரதி 'வேவ்ஸ்' என்ற OTT  .தளத்தைத் துவக்கி உள்ளது. 

-  நாய் ஒன்று நீதிமன்றத்தில் நியாயம் கேட்பது போல படம் ஒன்றை 'கூரன் என்ற பெயரில் எஸ் ஏ சந்திரசேகர், Y G மகேந்திரன், சத்யன் ஆகியோர் நடிக்க, கதாநாயாக அதாவது கதாநாயகன் இடத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் நடிக்கிறதாம்! 

-  திருவனந்தபுரம்: கர்நாடகா மாணவருக்கு மருத்துவபடிப்புக்கான எம்.பி.பி.எஸ்., சீட் தர ரூ. 7.5 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி இயக்குனர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவானார்.

கர்நாடகா: பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, ஊரை சுகாதாரமாகவும், அழகாகவும் மாற்ற லக்குண்டி என்னும் கிராம பஞ்சாயத்து ஒரு நூதன வழிமுறையை கையில் எடுத்துள்ளது. மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக சர்க்கரை கொடுக்கிறது. இதற்கு நல்ல பலனும் இருக்கிறதாம். மக்கள் சர்க்கரை பெறுவதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் போடுவதில்லை. அதனால் ஊர் சுத்தமாக இருக்கிறது என்று கிராம பஞ்சாயத்து தலைவர் பூஜாரி கூறியிருக்கிறார்.

பெங்களூர்: மதுவிற்கு அடிமையான 26 வயது இளைஞரின் வயிற்றிலிருந்து 50 டூத் பிரஷ்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கின்றன. மது போதையில் அவற்றை அவர் விழுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. 

யானைகளை பராமரிக்க விதிமுறைகள் வெளியிட்டது அறநிலையத்துறை.

டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு, காலி பாட்டில்களை வீதியில் வீசிவிட்டுச் செல்லும் குடிமகன்களின் செயலால் மனிதர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பாதிப்படைகின்றன. இதைத் தவிர்க்க காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு தீர்மானம்.

பெங்களூரில் சாதாரண ஆட்டோவை, ஸ்மார்ட் ஆட்டோவாக மாற்றி, 'சூப்பர்மேன்' என்ற அடைமொழியுடன், பெங்களூரில் வலம் வருகிறார் தமிழகத்தின் கடலுாரின் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிவேல் என்னும் இளைஞர். இவருடைய ஆட்டோவில் பயணியர் படிக்க தினமலர்(தமிழ்), விஜயவாணி(கன்னடம்), டைம்ஸ் ஆஃப் இண்டியா(ஆங்கிலம்) செய்தித்தாள்கள், இலவச wifi, ப்ளூடூத்தில் பாடல் கேட்க ஹெட்ஃபோன், பிஸ்லேரி வாட்டர் பாட்டில்கள் போன்ற வசதிகளும், வீட்டில் சாப்பிட நேரமில்லாமல் ஆட்டோவில் பயணிக்கும்போது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து வருபவர்களுக்காக மடக்கக்கூடிய மேஜையும் இணைத்திருக்கிறார். இவரைப்பற்றி அறிந்த 'நகர மீட்டர் ஆட்டோ' என்ற செயலி நிறுவனம், அந்நிறுவனத்தின் 'பிராண்ட் அம்பாசிடராக' இவரை நியமித்துள்ளது. இந்த செயலியை இதுவரை 7,000 பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர்களாம். தினமும் 700 - 800 பேர் செயலியை பயன்படுத்துகின்றனராம்.  

-  ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை. தந்தையான பத்தாம் வகுப்பு மாணவன். தஞ்சாவூர் பூமருங்க மெய்யகழன்ல தஞ்சாவூரத் தேடிக்கிட்டிருக்கற நேரத்துல தஞ்சாவூர் ஜோடி சாதனை.

-  ஊட்டி: ஊட்டியில் நவ.,9ம் தேதி லஞ்சப்பணம் 11.70 லட்சம் ரூபாயுடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


- வேலூர் வேப்பங்கனேரி கிராமத்தில் இருக்கும் படவேட்டம்மன் கோவில் வாசலில் இருந்த நாற்பதாண்டு அரசமரம் சமீபத்தில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்தது.  வருத்தப்பட்ட மக்கள் அதன் கிளைகளை வெட்டினர்.  மூன்று நாட்களாக இப்பணி நடைபெற்ற நிலையில் இரவானதால் அப்படியே விட்டுச் செல்ல, மறுநாள் காலை நான்கரை மணிக்கு மரம் தானாக எழுந்து நின்று விட்டது என்று பரபரப்பு. ஜெயா செய்திகளிலிருந்தும்...
==========================================================================================================

கவிதைக்கு கொஞ்ச இடம்...

தன்னில் கூடுகட்டி 
குஞ்சு பொரித்து 
உயிர்ப்பு தரும் 
ஒரு பறவைக்காக 
கிளைகளின் இணைப்பில் 
முகடமைத்துக் 
காத்திருக்கின்றன சிறு மரங்கள்.


காலையில் ஜனனம் 
மாலையில் மரணம் 
வெளிச்சம்

=====================================================================================================

ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!

இருமல் குறித்து கூறும், நுரையீரல் சிறப்பு மருத்துவர் சதீஷ்குமார்: 
"இயல்பாக நுரையீரல் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, ஒரு அசாதாரண செயல் நடந்தால், அதற்கு எதிர்வினையாக இருமல் ஏற்படுகிறது. 

இந்த அசாதாரண நிகழ்வு துாசியால் ஏற்படலாம்.ஆஸ்துமா தொந்தரவு, இதயம், சம்பந்தமான நோய், நெஞ்செரிச்சல், அல்சர் பாதிப்பு இருந்தாலும் இருமல் வர வாய்ப்பு உள்ளது. 

ஆஸ்துமா, காசநோய் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக இருமல் இருக்கும். வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், எரிச்சலுாட்டும் இருமல் என, நிறைய வகை உள்ளது.

வாயுத் தொல்லை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அலர்ஜியால் வறட்டு இருமல் ஏற்படும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வறட்டு இருமல் இருக்கும். 

வைரஸ், பாக்டீரியா தொற்றுகளால் அதிகமாக பாதிக்கப்படும்போது, சளியுடன் கூடிய இருமல் உண்டாகும். காலை உறக்கம் கலைந்து கண் விழிக்கும்போதும், இரவு துாங்கும்போதும், தொண்டை வறண்டு போகும்போதும், எரிச்சலுாட்டும் இருமல் ஏற்படும். 

இதுவும் ஏறக்குறைய வறட்டு இருமலாகத்தான் இருக்கும்.

இருமல் மருந்தில், இரண்டு வகை உள்ளது. ஒன்று, இருமலுடன் சளியை வெளியேற்றக்கூடிய மருந்து; மற்றொன்று, இருமல் ஏற்படுவதையே தடுத்து நிறுத்தக் கூடிய மருந்து. 

வறட்டு இருமலுக்கு, இருமலையே தடுத்து நிறுத்தும், மருந்துகளை சாப்பிடலாம்.சளியுடன் ரத்தம் வந்தால், இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளை சாப்பிடலாம். 

ரத்தம் இல்லாமல் சளி மட்டும் வெளியேறும்போது, இருமலை கட்டுப்படுத்தும் மருந்துகளை எடுக்க கூடாது. அது, சளி வெளியேறுவதை தடுத்துவிடும். இதனால், சளி அதிகரிக்கவே செய்யும்.

சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, நுரையீரலின் செயல்பாட்டை பரிசோதனை செய்து, நுரையீரல் சுவாசத்தை விரிய செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், இருமல் மருந்தை திறந்துவிட்டால், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் கூட, அதிக நாட்கள் பயன்படுத்தக் கூடாது. இதனால், பக்க விளைவு இல்லையெனினும், அந்த மருந்தால் எந்த பயனும் இல்லை.

நன்றாக துாக்கம் வர சிலர், இருமல் இல்லாதபோதே மருந்து குடிப்பர். தேவையற்ற நேரங்களில் இருமல் மருந்துகளை குடிக்கும்போது, அது சாதாரணமாக உடலில் இருந்து வெளியேறும் சளியைக் கூட வெளியேற விடாமல், உடலில் அளவுக்கு அதிகமாக சளி தங்கி, எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்.

இருமலின் போது, ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீமை தவிர்க்க வேண்டும். லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணக் கூடாது; அது இருமலை அதிகப்படுத்தும். நேரடியாக ப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து எதையும் உண்ணக் கூடாது. பழைய தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.

1-11-17 தினமலரிலிருந்து...

===========================================================================================

இணையத்திலிருந்து ஒரு  INTERESTING SHARE 


நிரந்தர நினைவு: ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரில் அருளானந்தர் ஆலயம். தன்னை அருளானந்தர் என்று அழைத்துக் கொண்ட ஜான் டி பிரிட்டோவின் நினைவாக இந்த தேவாலயம் அழைக்கப்படுகிறது. பிரிட்டோ ஜூன் 22, 1947 இல் புனிதர் பட்டம் பெற்றார். | பட உதவி: எல்.பாலச்சந்தர்

இராமநாதபுரத்தில் இரண்டு சமணர்கள் கொல்லப்பட்டு கிறிஸ்துவ மதம் பரவியது

மறவர் சீமை அன்னிய மதத்தை பொறுத்துக் கொள்ளாதவர். கிழவன் சேதுபதி, 1693 ஆம் ஆண்டில், திரியா தேவன் என்ற இளவரசரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதற்காக ஜேசுட் பாதிரியார் ஜான் டி பிரிட்டோவை தூக்கிலிட்டார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், ஆன்டனி கிரிமினலி எஸ்.ஜே (1520-1549) முஸ்லிம்கள் மற்றும் நாயக்கர் இராணுவத்தின் கூட்டணியிலிருந்து மதம் மாறியவர்களைக் காப்பாற்ற முயன்றபோது கொல்லப்பட்டார்.  

தமிழ்நாட்டு மக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை ஏற்றுக்கொண்டாலும், மறவர் சீமை என்று அழைக்கப்படும் ராமநாதபுரம், அந்நிய மதத்தை சகிப்புத்தன்மை குறைவாகவே கொண்டிருந்தது. இராமநாதபுரத்தின் தலைசிறந்த ஆட்சியாளராகக் கருதப்படும் கிழவன் சேதுபதி (கி.பி. 1671-கி.பி. 1710), 1693 ஆம் ஆண்டு இளவரசனாக இருந்த திரியா தேவனை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதற்காக ஜேசுட் பாதிரியார் ஜான் டி பிரிட்டோவை தூக்கிலிட்டார்.

தி மதுரா கன்ட்ரி மேனுவலின் ஆசிரியர் ஜே.எச்.நெல்சனின் கூற்றுப்படி, திரியா தேவன், ராமநாதரின் அரியணைக்கு சரியான வாரிசாக இருந்ததாகக் கூறப்பட்டது. பிரிட்டோ ஜூன் 22, 1947 இல் புனிதர் பட்டம் பெற்றார்.

============================================================================================

பொக்கிஷம் :



நம்ம கந்தசாமி மாடுதான்மா....







19 கருத்துகள்:

  1. அன்னத்தையும் இளவரசியையும் பார்த்து உதித்த கற்பனை நன்று. ரவிவர்மா ஓவியங்கள் எப்போதும் அழகு.

    யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    அன்னத்தையும், அழகான பெண்ணையும் பற்றிய தங்களின் எண்ணவோட்டங்கள் அருமை.

    அழகான ஓவியங்களையும், ஓவியம் போன்ற அழகான ஸ்ரீ தேவியையும் ரசித்தேன். அந்தப்பாடல் கேட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். (மூன்றாம் பிறையா?) ஆனால் கேட்ட போதெல்லாம் ரசித்திருக்கிறேன்.

    /அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை... அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை./

    உண்மையான வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருக்கும் அந்த 'உண்மையான வரிகள்' கண்ணதாசனுக்கு சொந்தம்.  அவர் எழுதிய அருமையான பாடலின் வரி.  

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  4. மடிசார் மாமிக்கு கொசுவம் இப்படி தரையைத் தொட்டு கீழே தொங்குமாக்கும்?.. ம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்...  காட்சிப்பிழையை கவிதையாக்கிவிட வேண்டியதுதான்!

      நீக்கு
  5. //பாரத்நெட் நிறுவனத்துடன் இணைந்து ...//

    இந்த நிறுவனத்தைப் பற்றி சிறு குறிப்பு வரைய முடியுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே...!  ஏதோ கேரளா பேஸ் என்கிறது இணையம்.  ஏதாவது 'க்' இருக்கிறதா என்ன?

      நீக்கு
    2. கோடி கோடியாய் வருமானம் ஈட்ட வாய்ப்புள்ள இந்த நிருவனம்,
      மத்திய அரசு சார்ந்த அரசு நிருவனமா என்று தெரிந்து கொள்வதற்காக.

      நீக்கு
    3. இல்லை என்றுதான் நினைக்கிறேன். பட், நோ ஐடியா...

      நீக்கு
    4. BharatNet, also known as Bharat Broadband Network Limited (BBNL), is a central public sector undertaking, set up by the Department of Telecommunications, a department under the Ministry of Communications of the Government of India for the establishment, management, and operation of the National Optical Fibre Network to provide a minimum of 100 Mbit/s broadband connectivity to all 250,000-gram panchayats in the country, covering nearly 625,000 villages, by improving the middle layer of nation-wide broadband internet in India to achieve the goal of Digital India.[1][2][3][4]

      -- நன்றி.


      நீக்கு
  6. புலித்தோல் ஜோக்கைப் பார்த்து இந்த கணவன்-- மனைவி ஜோக்குகளில் எப்பப் பார்த்தாலும் ஏன் பெண்களையே கிண்டல் பண்ணுகிறார்கள் என்று எரிச்சலுற்றால், அதற்கு அடுத்த கடைசி
    ஜோக் ஒரு 'திக்'.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபீசில் தூங்கும் ஜோக், டாக்டரிடம் மாட்டும் நோயாளிகள் போல இதெல்லாம் டெம்ப்லேட் ஜோக்ஸ்!

      நீக்கு

  7. ​மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றான நளன் தமயந்தி கதையில் நளன் தூது அனுப்பிய அன்னம் தமயந்தியிடம் செய்தியை சொல்லும் காட்சி ரவிவர்மாவால் வரைந்த படம். உங்களுடைய ரீமிக்ஸில் என்ன பாடு படுகிறது. சந்தடி சாக்கில் ஸ்ரீதேவி கவர்ச்சி படம் வேறே. குசும்புக்கு குறைவில்லை.

    ஜனனம் மரணம் கவிதை என்பதை விட விடுகதை என்று சொல்லலாம். வெளிச்சம் நிரந்தரம்.

    இரவில் உறங்கி
    காலையில் விழிக்கும்
    சூரிய வெளிச்சம்.

    நான் இருமிக்கொண்டு இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்.

    //இராமநாதபுரத்தில் இரண்டு சமணர்கள் கொல்லப்பட்டு கிறிஸ்துவ மதம் பரவியது//
    jesuits எப்போது சமணர்கள் ஆனார்கள். அது கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவு. கத்தோலிக்கர்கள்.

    ரெட்டை வால் ரெங்குடுக்கு இணை ரெங்குடு தான். சூப்பர்.

    நியூஸ்ரூம் செய்திகள் கூடுதலாகிறது. கொஞ்சம் குறைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமயந்தி அன்னம் உரையாடலை ரசித்தீர்களா?  மாத்தி யோசிக்கும் தக்கினிக்கி!

      நியூஸ்ரூம் செய்திகள் போன வாரத்தை விட குறைவுதானே..  போன வாரம் ரசித்ததாய் நினைவு!

      நெகட்டிவ் கவிதையை பாசிட்டிவ் ஆக்கி விட்டீர்கள்!  நாணயத்துக்கு இரண்டு பக்கம்.  நா நயத்துக்கு பல பக்கம்!

      ஓ..  நீங்களும் இருமிக் கொண்டிருக்கிறீர்களா?  எனக்கு இருமல் நிரந்தரம்.  சமீப காலங்களில் அதிகம்.  இப்போதைய பருவ நிலைக்கு தமிழகமே இருமிக் கொண்டிருக்கிறது!

      கேத்தலிக் கிறிஸ்டின் என்றுதானே சொல்வார்கள்?!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!