ஆத்தூர் M பெரியசாமி பாடலுக்கு இசை அமைத்து பாடி இருக்கிறார்கள் சூலமங்கலம் சகோதரிகள்.
சேவல் கூவியே ஞாலம் விழித்தது,
செந்தில் தேவனின் கோவிலில் பாடலும் ஒலித்தது..
ஒலித்தது. ஒலி...ஒலித்தது, ஒலி...ஒலித்தது,
ஆவலும் மீறிட உள்ளம் துடித்தது
ஆலயங்கள் தோறும் மணிகள் அடித்தது.
ஆறுமுகன் பேர் சொல்லி அடியவர்கள் பாட,
ஆனந்தக் கடலிலே காவடிகள் ஆட,
ஆறுமுகன் பேர் சொல்லி அடியவர்கள் பாட,
ஆனந்தக் கடலிலே காவடிகள் ஆட
தேடுகின்ற கண்களெல்லாம் முருகனையே தேட
தேடுகின்ற கண்களெல்லாம் முருகனையே தேட
சீறுகின்ற சதங்கை ஒலி சேயிழையார் ஆட
சீறுகின்ற சதங்கை ஒலி சேயிழையார் ஆட -
சேவல் கூவியே ஞாலம் விழித்தது
சீராகத் திருப்புகழை தேவர்களும் பாட,
சீறி வந்த சூரனும் பகைவர்களும் ஓட
சீராகத் திருப்புகழை தேவர்களும் பாட,
சீறி வந்த சூரனும் பகைவர்களும் ஓட
சித்தர்களும் வித்தர்களும் முக்தியினைத்தேட
சித்தர்களும் வித்தர்களும் முக்தியினைத்தேட
சித்துகள் விளையாடி வரும் சிவன்மகனை நாட
சித்துகள் விளையாடி வரும் சிவன்மகனை நாட
சேவல் கூவியே கூவி ஞாலம் விழித்தது...
===============================================================================================
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி பகிர்ந்த 'கழுகு' படத்திலிருந்து இன்னுமொரு பாடல். இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் மேலே தனிப்பாடலைப் பாடி இருக்கும் சூலமங்கலம் சகோதரிகளில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் மகன் முரளி.
பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளுக்கு இசை இளையராஜா. முழுக்க முழுக்க இளையராஜா இளையராஜா இளையராஜாதான். அப்புறம் முரளி.
காதல் என்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில்
காதல் என்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில் - காதல் என்னும் கோவில்
பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும்
BHபாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ - காதல் என்னும் கோவில்
காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடடும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை
மனமெல்லாம் நீ - காதல் என்னும் கோவில்
சூலமங்கலம் பாடல் ஆஹா... எத்தனை முறை கேட்ட பாடல்.
பதிலளிநீக்குசேவல் கூவி ஞாலம்.... கூவியே அல்ல
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீதேன் 1ஸ்ட்டூஊஊஊஉ:))
நீக்குவணக்கம் சகோதரி.
நீக்குஆஹா.. சகோதரி அதிரா அவர்களின் இந்தப் பாடலை கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. வெல்கம் அதிரா சகோதரி. காலை வணக்கம். நன்றி தங்களின் அன்பான வருகைக்கு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க நெல்லை...
நீக்குசேவல் கூவி என்றுதான் டைப்பினேன், தலைப்பைப் பார்த்து. கேட்கும்போது கூவிக்கும் ஞாலத்துக்கும் நடுவில் சில மாத்திரை குறைகிறது. வி என்கிற எழுத்தை வைத்து பாடலை நீட்டிக்க முடியாது. சிரமம். ஏகாரம் கொஞ்சம் ஒத்து வரும். கூவிட என்று யோசித்தால் டகாரமும் சரியாக வராது. எனவே கூவியே என்று டைப்பினேன்.
வாங்க அதிரா, வாங்க கமலா அக்கா... .! வணக்க்க்க்க்க்க்க்க்க்கம்.
நீக்குபாட்டு வரிகளைப் படித்தபின்னும் இரண்டாவது பாடல் நினைவுக்கு வரவில்லை. ஹாஸ்டலில் இந்தப் பாடலை ஒலிக்கவிடவில்லை எனத் தோன்றுகிறது. காணொளி கேட்டபின், பாடலை முன்பு கேட்ட நினைவு வந்தது. அருமையான பாடல்.
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஇளையராஜா சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதோடு, இந்தப் பாடலின் bhaaவத்துக்கு ஏற்ற குரல்.
ஆஆஆஆஆஆஆ மீ தான் 2 ண்டூஊஊஊஊஊஊ:))
பதிலளிநீக்குபர்ஸ்ட்டூ, செகண்டூ எல்லாம் ஓகே மேடம்... ஏதாவது கருத்து சொல்லுங்கோ....
நீக்குஇரு பாடல்களும் கேட்டதாக இல்லை, சூலமங்கலம் சகோதரிகளின் கந்தசஸ்டி கவசம் தான் அடிக்கடி கேட்பேன்....
பதிலளிநீக்குரஜனி அங்கிள் உப்பூடி உருண்டு பிரள்றாரே ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... நான் பின்பு வருகிறேன்ன்:)
சூலமங்கலம் சகோதரிகளின் 99& பாடல்கள் கேட்க மிக இனிமையானவை. பக்திப்பாடல்களுக்கென்ற கடவுள் கொடுத்து விட்ட குரல்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா..
நீக்குவணக்கம்,
நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஒலித்தது என்ற இறுதி வார்த்தைகளின் எக்கோ அருமையாக இருக்கும். அடிக்கடி கேட்ட பாடல்.
இரண்டாவது திரைப்பட பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன். சூலமங்கலம் சகோதரியின் மகன் முரளி அவர்களின் குரலில் பல பாடல்கள் உள்ளதென நினைக்கிறேன். எனக்குத்தான் சட்டென சொல்லத் தெரியவில்லை. பாடலைப் பற்றி தாங்கள் தந்த விபரங்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் அக்கா... அந்த 'ஒலித்தது... ஒலி... ஒலித்தது' என்னும் இடம் ரசிக்கத்தக்கதாயிருக்கும்.
நீக்குமுரளி எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாடல்தான் பாடி இருக்கிறார். அவர் ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குநேற்று அதிகாலையில் இருந்து மதியம் வரை நல்ல மழை..
பதிலளிநீக்குஇன்றும் அப்படியே...
மகிழ்ச்சியாய் இருக்கின்றது...
வறட்டு சென்னையில் பெய்வதற்கு தஞ்சைப் பகுதியில் பெய்வது எவ்வளவோ நல்லது..
வாழ்க வளம்..
// வறட்டு சென்னையில் பெய்வதற்கு //
நீக்குGrrrrrr... நிலத்தடியில் தண்ணீர் வேண்டாமா... இங்கிருக்கும் ஓராயிரம் பிளாட்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டாமா?
முதல் பாடல் பலமுறை கேட்டு திளைத்த பாடல்..
பதிலளிநீக்குஇது பிராய்லர்களின் காலம்..
சேவலாவது கோழியாவது?
இனிமையான பாடல்.
நீக்குரசினியின் ஒருசில படங்களே மனதுக்கு நெருக்கமானவை..
பதிலளிநீக்குஅந்தப் பட்டியலில் கழுகு காக்காய் இல்லை..
படம் கமர்ஷியல் மசாலா. அதையும் ரசிக்கலாம்.
நீக்குஆனால் இங்கு படமோ, ரஜினியோ மேட்டர் அல்ல. இளையராஜாவும், பாடலும்தான்.