இன்றைய வெள்ளியில் ஒரு சிறு மாறுதல்.
எத்தனை படங்கள் பார்த்திருப்பீர்கள்? அதில் எத்தனை கிளைமேக்ஸ் காட்சிகள் உங்கள் மனத்தைக் கவர்ந்திருக்கும்? இன்னும் நினைவில் நிற்கும் வகையில் அமையும் கிளைமேக்ஸ் காட்சிகள் வெகு குறைவாகத்தான் இருக்கும். அதில் ஒன்று இன்று.
நேர்மையான மனிதர் சிவாஜி. அந்த சிறிய ஊருக்கு நல்லது நினைப்பவர். இந்த ப்ராஸஸில் கொஞ்சம் கெட்ட நடத்தையுள்ள நம்பியாரின் விரோதத்தை சந்திக்க வேண்டியதாகிறது. ஊர் மக்களுக்கும் சிவாஜி மேல் மரியாதை. அவர்களும் அவரின் இந்த படபட குணத்தைப் புரிந்து கொண்டவர்கள்.
அவர் சிவாஜியையும் அவர் தம்பி ஜெய்சங்கரையும் பிரிக்க திட்டமிடுகிறார். தன் மகள் வாணிஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெய்சங்கரிடம் சொல்லி சொத்தைப் பிரிக்கச் சொல்கிறார். கடுப்பான சிவாஜி சொத்தைப் பிரிக்கிறார். அதுதான் இறுதிக் காட்சி. நான் ரசித்த காட்சிகளில் ஒன்று.
சிவாஜியின் பாத்திரம் இதில் தடாலடி பாத்திரம். நல்ல மனிதர் என்றாலும் எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு. சடபடவென்று பேசுபவர். முன்னதாக தம்பியின் காதலை அங்கீகரிக்காதவர் வாணிஸ்ரீ பேச்சால் கவரப்பட்டு சம்மதிக்கிறார்.
பத்மினி சமர்த்தான மனைவி. கணவனைப் புரிந்து கொண்டவர். அவர் சொல்லுக்கு மறுபேச்சு கிடையாது. ஜெய்யும் அண்ணனின் மேல் பாசம்தான். சொல்பேச்சு கேட்கும் தம்பிதான்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த சுமாரான பாடல் ஒன்று இருக்கிறது. 'உலகில் இரண்டு கிளிகள்' எனும் பாடல். அது கூட அதில் தலைவர் குரல் வருவதால்!
படம் முழுவதும் சிவாஜியின் பாத்திர படைப்பையும், அவர் நடிப்பையும் ரசித்தேன். இறுதிக் காட்சியும் அதனாலேயே மனதில் நின்றது. கதை தெலுங்கு மூலமாம். பார்த்து ரசியுங்களேன்.
"என்னங்க... எதுக்கு கூப்பிட்டீங்க" என்று கேட்டபடி பதட்டத்துடன் வீட்டுக்குள் வரும் ஊர் மக்களிடம் "என் தம்பி பாகப்பிரிவினை கேட்டான்" என்றதும் "என்னங்க... உங்க தம்பிங்களா?" என்று ஒருவர் குறுக்கிட்டு கேட்பார். சிவாஜி சட்டென குரலை உயர்த்தி "ஆமாங்க... என் தம்பிதான்.. பின்ன ஊர்ல போறவனா கேட்பான்?" என்று கேட்கும் வேகத்திலேயே பத்மினி பக்கம் திரும்பி தோள்துண்டை ஒருகையால் பிடித்தபடி "வா இங்கே" என்று அதட்டுவார்...! அதுதான் படம் முழுவதும் அவர் பாத்திரப்படைப்பு. இதில் அவர் காட்டி இருக்கும் வித்தியாசமான நடிப்பு.
வீட்டுக்குள் வரும் ஜெய்யின் நடிப்பு, வாணிஸ்ரீ பின்னால் அவர் பம்முவது, வாணிஸ்ரீ நிலைமையை சமாளிப்பது... சிவாஜியே வாணிஸ்ரீயிடம்.. விடுங்க... பாருங்க... எல்லாவற்றையும் எழுத்துல சொல்லிட்டா எப்படி!
சிவாஜிங்க....
இன்றைய வித்தியாசமான பதிவு மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குசிறிது மிகை நடிப்பு இருந்தாலும், நாடக்க் காலத்திலிருந்து காட்சி ஊடகத்திற்கு மாறிய காலம். முதுகெலும்பு போல கதையம்சத்தை அடிப்படையாக்க் கொண்ட திரைப்படங்கள்.
இந்தக் காட்சி பிடித்திருந்தது. திரைப்படத்தைப் பார்க்கணும் என்ற ஆவலும் வந்தது.
நன்றி நெல்லை. இந்தப் படம் பார்க்கலாம். படம் முழுவதும் சிவாஜி படபடவென பிரிவில்.
நீக்குமிகை நடிப்பு என்று இதில் சொல்ல முடியாது.
பிரிவில் = பொரிவார்.
நீக்குகூகுள் கர்ர்ர்ர்ர்..்
தற்போதைய காலத்தில் கதையம்சமுடைய படங்கள் தோல்வியடைவதில்லை. இருந்தாலும் பிரம்மாண்டம் என்ற பெயரில் கதையில்லாமல் காட்சிகளை வைத்து விக்ரம் போன்ற படங்கள் வெற்றிபெற்றுவிடுவதால், கங்குவா போன்ற சித்திரக்குள்ளன் படமெல்லாம் எப்படியும் அறுநூறு கோடியாவது சம்பாதித்து(சுருட்டி) விடலாம் என வரும் படங்களை மக்கள் தோல்வியடையச் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை. கதையே இல்லாமல் தற்சமயம் வெளியாகி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட படம் மெய்யழகன். அவரவர் இளமைக்கால உணர்வைத் தொட்டுப் பார்த்தது.
நீக்குமூன்று நாட்களுக்கு முன் ஓரளவு புதுப்படம் பார்த்தேன். (போகுமிடம் வெகு தூரமில்லை). என்ன அருமையான கதை. ஓடிடியில் பார்த்தேன். படம் ஓடியதா எனத் தெரியவில்லை. மிக அருமையான படம். விமல், கருணாஸ் நடித்தது. பார்க்கத் தவறாதீர்கள்.
பதிலளிநீக்குநான் முன்பே பார்த்து விட்டேன், பார்த்து ரசித்து விட்டேன்.
நீக்குஅது சரி, கிளைமேக்ஸ் (எழுதினது சரி தானே?)
பதிலளிநீக்குஅப்படீன்னா தமிழ்லே என்ன? படத்தோட இறுதி காட்சிகளில் தான் இந்த க்ளைமேக்ஸ காட்சிகள்லாம் வருமா, என்ன? நடுப்படத்லே வரக் கூடாதா, என்ன?
க்ளைமாக்ஸ் என்பதை உச்சகட்டம் (உச்சா கட்டம் அல்ல) என்று தமிழ் படுத்தலாமா?
நீக்குJKC ஸார் சொல்லி இருப்பது சரி.
நீக்குஒரே படத்லே இரண்டு.மூன்று கிளைமேக்ட் காட்சிகள் இருக்கக் கூடாதா, என்ன?
பதிலளிநீக்குகிரேக்க கதைகளில் ஆரம்பம் கிளைமேக்ஸாக இருந்து அவற்றிற்கு தொடரும் காட்சிகள் விடை சொல்கிற மாதிரி இருப்பதை வாசித்திருக்கிறேன்.
ஓ.. நான் அப்படி யோசித்ததில்லை.
நீக்குஇப்படி யோசிக்கிற மாதிரியான தமிழ்ப் படங்கள் கூட வந்திருக்கு. ஆனா, படத்தின் கிளைமேக்ஸ் என்பது கடைசிக் காட்சிகளில் தான் இருக்கும் என்று நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எண்ணங்களால் அந்த கடைசி காட்சி எப்படியிருந்தாலும் அதையே கிளைமேக்ஸாக வரித்துக் கொள்கிற பழக்கம் ஏற்பட்டு விட்டது போலிருக்கு.
பதிலளிநீக்குசாண்டியல்யன் தொடர்கதைகளையே எடுத்துக் கொள்ளுங்களேன், ஒவ்வொரு வார இறுதிப் பகுதியும் கிளைமேக்ஸ் தான். ஆனால் அடுத்த வார தொடரில் முந்தின வார பதைபதைப்புக்கு விடைகிடைத்து அந்த வார இறுதியில் இன்னொரு பதைபதைப்பு காணக் கிடைக்கும். ஆக, வாரத்திற்கு வாரம் ஒரு கிளைமாக்ஸ் என்பதால் எல்லா பகுதி விறுவிறுப்புக்கும் ஒட்டு மொத்தமாக கதை கடைசியில் கதை முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்ற அவசியமே அவருக்கு இல்லாது போயிருக்கும்.
பதிலளிநீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குநல்ல குடும்பம்.. பல்கலைக்
பதிலளிநீக்குகழகம்..
தெய்வீகம்..
அன்பும் அருளும் அடிப்படை..
நடிகர் திலகத்தின் படங்களுள் மிகவும் பிடித்த திரைப்படம்..
அந்தக் கால தஞ்சை மாவட்டத்தில் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த திரைப்படம்...
அன்றைய காலத்தில் ரசிக்கப்பட்டது இன்றைய இளைய சமூகத்தினருக்கு காமெடியாக தோன்றும்.
பதிலளிநீக்குஇப்படத்தின் அன்றைய வசூல் புர்ச்சியின் ரிச்சா படத்தினால் பாதிக்கப்பட்டது..
பதிலளிநீக்குபுர்ச்சிக்கு தேசிய விருது கிடைத்தது ரிச்சா படத்தினால் தான்
அழகிய தமிழ் மகள் என்று முந்தானை இன்றி கதாநாயகி வந்ததே அன்றைய புர்ச்சி.. (புரட்சி)
பதிலளிநீக்குஇன்னிக்கு தளதளப்பான உடைகளை தொலைத்து விட்டு இறுக்கமன டீ சட்டையுடன் மேல் துவாலை மறந்ததே பெரும் புர்ச்சி ...
வாள்க சனநாயகம்..