தேவையான பொருட்கள் :
அவல் ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
கடுகு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
தயிர் ஒரு ஸ்பூன்
செய்முறை:
அவலை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு தயிர்மற்றும் தேவையான உப்பு போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக நறுக்கி ஊறவைத்த அவலில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய்ன விட்டு கடுகு உளுத்தம் பருப்பு போட்டு கடுகை வெடிக்க விட வேண்டும்.
அதில் ஊற வைத்த அவல் வெங்காயம் பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி உருண்டையாகவோ நீளவாக்கிலோ பிடிக்க வேண்டும்.
பிறகு அவற்றை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதை ஒரு தட்டில் ஆற வைக்க வேண்டும். இப்பொழுது மிக ருசியான பிடி கொழுக்கட்டை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடி சரியான காம்பினேஷன்.
= = = = = = = = = =
அவல் கொழுக்கட்டை செய்முறை நன்று.
பதிலளிநீக்குநம் வீட்டிலும் செய்வதுண்டு ரவை போன்று பொடித்துக் கொண்டும் செய்வதுண்டு.
அவல் உப்புமாவுக்கும், இதற்கும் வித்தியாசம்? என்று கேட்டால் என் தனிப்பட்ட கருத்து அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியலை. என்றாலும் ஒரு மாறுதல். காய்கள் போட்டும் செய்யலாம்.
கீதா
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுக்கியமாக அவல் கொழுக்கட்டைக்கு கெட்டி அவல் வேண்டும்.
பதிலளிநீக்குPaper அவல் என நான் அழைக்கும் வெள்ளை அவல் எனக்கு மிகவும் பிடிக்கும். ரோஸ் எசென்ஸ், பால் விட்டு உடனே சாப்பிடுவேன். எப்போதும் வீட்டில் ஸ்டாக் வைத்திருப்பேன். Diet இருக்க ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிறது. அதனால் இனிப்பு, வெள்ளை அரிசி, பால் சம்பந்தப்பட்டவற்றை விட்டுவிட்டேன்.
நீக்குஅவல் கொழுக்கட்டை செய்முறையும், படமும் கவர்கிறது. இப்போதே செய்யச் சொல்லலாமா என்று தோன்றுகிறது. Fasting programல் இருந்துகொண்டு, நேற்று சாப்பிட்டதால் எடை கூடியிருக்கும். சில நாட்கள் கழித்துச் செய்யச் சொல்ல வேண்டியதுதான்.
பதிலளிநீக்கு