பானுமதி வெங்கடேஸ்வரன்:
ஒரு பொருளை வாங்கும் பொழுது எதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்?
a). அதன் பயன்பாடு
b)தோற்றம்
c). விலை,
d)வாரண்டி, கேரண்டி,சர்வீஸ் போன்றவை
e). Brand
f). குப்பன், சுப்பனெல்லாம் வாங்கிட்டான், நான் வாங்காமல் இருக்கலாமா?
# f தவிர எல்லாமே.
& முறையே : பயன்பாடு அல்லது தேவை மற்றும் விலை. அவ்வளவுதான்!
கே. சக்ரபாணி : சென்னை 28
டி.வி.யில் ஹாட்ஸ்டாரில் காட்டப்படும் படங்களை பார்த்து ஒன்றும் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் பேசும் டயலாக்குகள் சரியாக புரியாது. அதில் காட்டப்படும். ஆங்கில கேப்ஷன் நாம் படிப்பதற்கு முன்பே ஓடிவிடும். ஆக மொத்தம் இரண்டையும் சரிவர புரிந்து கொள்ளமுடியாது என்பது என் கருத்து. தங்கள் அனுபவம் பற்றி ..
# நான் ஹாட்ஸ்டாரில் படம் பார்த்ததில்லை. ஆனால் பொதுவாக எனக்கு மேலைநாட்டு படங்களில் வசனம் சரிவரப் புரிவதில்லை. எனவே என் கவனத்தில் பெரும் பகுதி படத்தோடு காட்டப்படும் சம்பாஷணைத் தலைப்புகளின் மேலேதான் இருக்கும்.
& ஹாட்ஸ்டாரில் சினிமா பார்க்கும்போது நான் சப்டைட்டில்ஸ் ஆங்கிலத்தில் பெரிய font தேர்ந்தெடுப்பேன். படத்தைப் பார்ப்பதைவிட, சப்டைட்டில்ஸ் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவேன். காட்சியை ஒரு வினாடி, caption 4 வினாடி! மாறி மாறிப் பார்த்தால் படம் புரியும்.
நாம் இருக்கும் இடத்திற்கு மேலே ஆகாயவிமானம் பறந்தால் பெரும்பாலும் எல்லோரும் மேலே தலையை தூக்கி அதை பார்ப்பார்கள் சரியா?
# ஆம். வேறு எப்படிப் பார்ப்பது ? அப்படி நாம் பார்க்கும் சமயத்தில் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் இடத்தில் அந்த விமானம் காணப்படமாட்டாது.
& அப்படி தலையை மேலே தூக்கிப் பார்க்கக் கூடாது என்று சபதம் செய்துள்ளேன். அதனால், என்னுடைய மொபைலில் ஃபோட்டோ அல்லது வீடியோ - selfie மோட்ல எடுத்து அப்புறம் பார்த்துக்கொள்வேன்!
= = = = = = = = = = =
KGG பக்கம் :
மறக்காதீர்கள் - ஏப்ரல் மாத படம் தலைப்பு " மீன்"
படங்கள் அனுப்ப இறுதி தேதி ஏப்ரல் 20 மாலை ஆறு மணி.
இதுவரை படம் அனுப்பியுள்ளவர்களுக்கு நன்றி.
---
பாண்டிச்சேரி பயணத்தில் எடுத்த சில படங்கள்:
அனைவருக்கும் வணக்கம்! காந்திக்கு சிறை என்றதும் அவருட்ய சிறை வாழ்க்கை பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ,படங்கள் துல்லியம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசக்ரபாணி சார் நியாயமான சந்தேகத்தைக் கேட்டுள்ளார். என் வீட்டில் என்னுடன் படம் (யாரேனும்) பார்த்தால் அவர்களுக்குப் பொறுமை வேணும். நான் அவ்வப்போது pause பண்ணி டயலாக் புரியலைனா அல்லது காட்சியை நன்றாக ரசிக்க Rewind செய்வேன். படம் பார்த்தால் இடையில் பேசக்கூடாது. பத்து நிமிடங்கள் பார்த்தால் அடுத்த வேலையைப் பார்த்துட்டுத் தொடர்வேன். ஒருவேளை என்னுடன் பலரும் அமர்ந்து படம் பார்த்தால் (அபூர்வம் பசங்களோடு பார்ப்பது) அதிகபட்சம் பதினைந்து நிமிடங்களில் தூங்கிவிடுவேன். முழுமையாக தொடர்ந்து நான் பார்த்ம முதல் படம் (தியேட்டரில் வேறு வழியில்லை) கோகுலத்தில் சீதை.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.
நீக்குதமிழில் டயலாக் இருந்தால் வேற்று மொழிப் படங்கள் பார்ப்பேன். அதற்கே என் மகன் திட்டுவான். அவர்களின் ஒரிஜினல் குரலில் கேட்க வேண்டும் என்பான். எனக்கு டயலாக் புரிந்தால் சரி என்று இருக்கும். தமிழ் இல்லாத ஆனால் பார்த்தே ஆகவேண்டிய படம் என்றிருந்தால் நானும் பாஸ் செய்து செய்துதான் பார்ப்பேன்.
நீக்குவடையை ஒரு கடி, டீயை ஒரு சிப் என்பது போல....
:))))
நீக்கு//தமிழில் டயலாக் இருந்தால் வேற்று மொழிப் படங்கள் பார்ப்பேன். அதற்கே என் மகன் திட்டுவான்.// தமிழில் டயலாக் எழுதுவது என்பது ஒரு கலை. பலருக்கு அது தெரிவதில்லை. ஆங்கிலப் பட த்தில் 'ஏண்டா சோமாறி... புரீதா' என்றெல்லாம் வசனங்கள் எழுதி டப் பண்ணுகிறார்கள். அப்போ கூட உட்கார்ந்திருக்கும் அடுத்த தலைமுறைக்கு அப்படி நாம் தமிழ்ப்படுத்திய ஆங்கில சீரீஸ், படங்களைப் பார்ப்பதே பிடிப்பதில்லை. மேற்கத்தையர்கள் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தும் வசவு வார்த்தைகளை (வசவு என்ற பொருளில் இல்லாமல்) அதற்கேற்ற வார்த்தைகளைப் போட்டுப் பேசினால் கேட்க நன்றாக இருக்கும். (உதாரணம் F... இதனை அடச்சே என்றோ இல்லை சே என்றோ மொழிபெயர்க்கலாம்). இருந்தாலும் ஆங்கிலப்படங்களை அல்லது மற்ற மொழிப்படங்களை ஆங்கிலத்தில் பார்ப்பது பெட்டர்.
நீக்குஜாக்கி சான் படங்கள் போன்றவற்றிற்குத் தான் இந்த மாதிரி மொழிபெயர்ப்புகள் இருக்கும். பொதுவாக நம் மொழி திரைப்படங்களுக்கு கன்னடமோ தெலுங்கோ, மலையாளமோ போன்ற மொழி படங்களுக்கு தமிழ் டயலாக் நாகரிகமாக ஒழுங்காக தான் இருக்கும்
நீக்குதற்போது காந்தி சிலை. சில பல வருடங்களுக்கு முன் புதுச்சேரி இந்தியாவில் இணைந்தபோது அங்கு இருந்தது டுப்லெ சிலை. மணிமண்டபம் மேக்கூரை கிடையாது. சுற்றிலும் எதோ ஒரு கோயிலில் இருந்து கொண்டு வந்து ஊன்றிய தூண்களுக்கு நடுவில் டுப்லெ ஒய்யாரமாக நிற்பார். டுப்லெயும் கிளைவும் சமகாலத்தியர், கலைக்கண்ணோட்டத்தில் அந்த அமைப்பு ஒரு நல்ல காட்சிப்பொருளாய் இருந்தது.
பதிலளிநீக்குhttps://www.facebook.com/photo.php?fbid=1100601144314186&id=100030929337140&set=a.758134028560901
Jayakumar
சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.
நீக்குஆனால் அந்த facebook பக்கத்தில், சிலையின் பின்புறம் கடல் இல்லை! மரங்கள் இருக்கு!
நீக்குஅவர் கடலைப் பார்த்து நிற்கிறார்.
நீக்குஓ கே
நீக்குபாண்டிச்சேரி படங்களைப் பார்க்கும்போது, நம் பக்கத்து கடற்கரையை நாம் அழுக்காக வைத்துள்ளதா இல்லை கசகசவென்ற ஓழுங்கீனமான ஜனக்கேட்டமா இல்லை கவர்ச்சியின்மையா... எது எனச் சொல்லத் தெரியவில்லை... அழகைக் குறைக்கிறது. வெளிநாட்டு கடற்கரைகள் இதைவிட அழகாக இருப்பதாகத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஎன்னதான் swachh Bharat என்று கூக்குரல் இட்டாலும நம் மக்களின் மைண்ட் செட் மாறாது.
நீக்குநம்ம ஊரில்தான் இந்த மாதிரி இடம் கிடைத்தால் மண்ணெண்ணெயில் பொரித்தெடுக்குப் பஜ்ஜி போண்டா அப்பளம் மீன் வறுவல் கடைகள் நிறைய முளைத்து அதிலும் வாங்கிச் சாப்பிடும் கேட்டம் இருக்கும். வெளிநாடுகளில் உள்ள அழகியல் சுத்தம் சுகாதாரம் இங்கு கிடையாது.
நீக்குஅதே, அதே !! (உங்களுக்கு நான் அனுப்பியுள்ள படம் பார்த்தீர்களா? )
நீக்குநல்லவேளை மடிசாருடன் அனுப்பலையே. அதுவரைல பிழைத்தேன்.
நீக்குபடம் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் அனுப்புகிறேன்! (அதே வாசகங்களுடன்! )
நீக்குடம்ளர் காணொளி, முதன்முதலில் மும்பையில் நான் சாப்பிட்ட Fried ice creamஐ நினைவுபடுத்தியது.
பதிலளிநீக்கு:)))
நீக்குகாந்தி சிலையைப் பார்த்தபோது, நல்லவேளை அம்பேத்கார் சிலைகள் போன்று இரும்புக் கிராதிகளால் முற்றிலும் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வைக்காமல் போனார்களே என்று தோன்றியது.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்!
நீக்குகாந்தியின் சிறைவாசம் என்றதும் படிக்கும்போது ஏதோ காந்தி சிறை சென்றபோது நடந்த சம்பவம் என நினைத்தேன். அடடா ......இப்படி ஒரு சிறையா?
பதிலளிநீக்குரம்ளர் ஸ்மோக்கி பொட் கறிபோல ஆவி பறக்குதே...
:))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
ஆகாய விமானம் படம் நன்றாக உள்ளது. அதை படம் எடுப்பதற்கும், தலையை மேலே தூக்கிப் பார்த்துதானே எடுக்க வேண்டும். அப்புறம் சபதம் என்னாவது?
பாண்டிச்சேரி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காந்தியை சுற்றி சுவர் எழுப்பி ஏதேனும் கட்டிடம் கட்டப் போகிறார்களா? ஆனால், இது இப்படியே இருந்தாலும், இதனால் காகம் போன்ற பறவைகளிடமிருந்து காந்தி தப்பித்தார்.
டம்ளரில் பானம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், புகை வருகிறது. (சூடாக நெருப்புடன் எரியும் பீடாவைப் போல..) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தப் படம் செல்ஃபி மோடில் - அதாவது முன் பக்க காமிரா மூலம் எடுக்கப்பட்டது. எனவே மேலே பார்க்க வேண்டாம். காந்தி வேலி அனேகமாக ஜனவரி 30 நிகழ்ச்சிகளுக்காக பெயிண்ட் அடிப்பதற்காக இருந்திருக்கலாம். கருத்துரைக்கு நன்றி.
நீக்குடம்ளரில் இருந்தது சுடுநீர்.
நீக்கு