9.4.25

எழுத்தாளர்கள் என்றாலே கர்வம் மிக்கவர்கள் என்ற எண்ணம் தோன்றுவது ஏன்?

 

நெல்லைத்தமிழன்: 

நடிகைகள்னா அழகா இருக்கணும், நடிகர்னா ஸ்டைலிஷா இருக்கணும் (அழகா இருந்தால் ரசிகர்கள் மிகவும் குறைவாக இருப்பாங்க) என்று எப்படி பொது புத்தி வருகிறது?   

# அழகை ரசிப்பதற்குக் காரண காரிய ஆராய்ச்சி தேவையில்லை.  ஆண் நடிகர்களிடம் அழகைக் காட்டிலும் மிடுக்கு ரசிக்கப் படுவது ஏன் ? அழகு பெண்களின் ஏக போகமாகக் காணப்படுகிறது. ஆண் அழகு காபியில் முந்திரி போல பொருத்தமற்றுப் போய் விடுகிறது. எனவேதான் ஆணிடம் நாம் அழகை எதிர்பார்ப்பதில்லை.(நம்மைப் போல ஒருவனின் வெற்றி என்று பார்க்கிறோமா ?) 

& கொஞ்ச நாளைக்கு ஊட்டிக்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு பார்த்தேன். அது பொறுக்கவில்லை இந்த நெ த வுக்கு. நடிகை பற்றி கேள்வி கேட்டு, என்னை இங்கே இழுத்துவிட்டார்! 

பெண்களுடைய கஷ்டம், மனநிலையை ஆண்களும், ஆண்களுடைய கஷ்டம் மனநிலையை பெண்களும் புரிந்துகொள்வது இயலுமா? (விதிவிலக்குகளை விட்டுவிடுங்கள்)  

# அடுத்தவர் (ஆணானாலும் பெண்ணானாலும்) மனநிலையை அறிவதற்கு சரியான மனப் பாங்குதான் முக்கியம் - வேறு விசேஷ தகுதி ஏதுமில்லை.

வெறும் செய்தி, கேள்வியறிவு இவற்றைவைத்து தனக்குப் பரிச்சயமில்லாத சூழலில் எழுத்தாளரால் கதை எழுத முடியுமா? உதாரணம் ஒரு பிராமண எழுத்தாளர் தலித் வாழ்க்கையைப் பற்றியும், ஒரு தலித் பிராமண சமூகக் கதை எழுதுவது போன்று   ..  

# சாத்தியம்தான். ஆனால் நேர்மையாகச் சொல்லப் போய் சங்கடங்களில் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு .

படிக்கும் காலத்தில் நாளைக்கு லீவு, நாளை ஞாயிறு என்று மனது குதூகலித்ததுபோல இப்போதும் வார இறுதி வரும்போது மனம் மகிழுமா?

# அலுவலகத்தில் உயர்பதவியில் அதிகாரம் செலுத்துவோர் தவிர மற்றைய எல்லாரும் விடுமுறை நாட்களை எதிர்நோக்குவது இயல்புதான்.

& ஹி ஹி! எனக்கு எல்லா நாளும் லீவுதான்! 

இன்றைக்கும் படிக்கக்கூடிய பழைய எழுத்தாளர்களின் நாவல்கள் பெயர் சிலது சொல்ல இயலுமா?   

# "படிக்கக்கூடிய " என்பது மிகவும் தற்சார்ந்த சொல்.  படிப்பவரது விருப்பம், மனநிலை போன்ற பல அடிப்படைகள் தீர்மானிக்கிற விஷயம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் மாதிரியான ஆரம்பகால எழுத்தாளர்களை இன்றைய வாசகர்கள் விரும்பிப் படிப்பது கடினம். என்னைக் கேட்டால் தி.ஜானகிராமன், சுஜாதா,  ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி,  கி.ராஜநாராயணன், வண்ண நிலவன் ஆகிய பெயர்கள் முன்னால் வரும்.

எழுத்தாளர்கள் என்றாலே கர்வம் மிக்கவர்கள் என்ற எண்ணம் தோன்றுவது ஏன்?    

# படைப்பாளிகளுக்கு கர்வ உணர்ச்சி இயல்பு என்று பொதுவாக நம்பப்படுகிறது.  சாதாரண மனிதர் பார்க்கத் தவறுகிற பலவற்றையும் எழுத்தாளர் பார்த்து நமக்கும் சொல்கிறார் என்பதால் அவரது கர்வம் நியாயமானதுதானே !

எங்கள் பிளாக்கில், averageஆ கிழமை வாரியாக எத்தனைபேர் படிக்கிறார்கள் என்று பகிரமுடியுமா?  

& கடந்த 6 மாத கால புள்ளி விவரங்கள் : 
ஒவ்வொரு நாளும் படிப்பவர்கள் சராசரி : 240 

(முக்கியக் குறிப்பு : ஒவ்வொருநாளும் லிங்க் மூலம் வருகின்ற பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால், பதிவுகளைப் படிப்பவர்கள் என்ற விவரம் பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட குறைவு. உதாரணமாக, மார்ச் 4 ஆம் தேதி எங்கள் Blog பார்வையாளர்கள் : 18,143) 

சராசரிக்கு மேலே 240+ பார்வையாளர்கள் : ஸ்ரீராம் வியாழன் பதிவுகள் மற்றும் ஸ்ரீராம் சமீப காலங்களில் எழுதிய சிறுகதைகள். 

அடுத்து வருபவை : நெல்லைத்தமிழனின் கோயில் தரிசனம் கட்டுரைகள். 

அதே அளவுக்கு வருபவை : கௌதமனின் புதன் பதிவுகள். 

கடந்த 9 ஆண்டுகளில், இசைத்தட்டு உடைப்பு (record break) பதிவு : 

வியாழன், 3 நவம்பர், 2016. (link கீழே உள்ளது) 

படித்தவர்கள் : 23227 பேர். 

வெயில் அதிகமுள்ள சென்னை, வாழ்வதற்கு நல்லா இருக்குமா இல்லை ஓரளவு காலநிலை நன்றாக இருக்கும் பெங்களூர் பெட்டரா? உங்கள் அபிப்ராயம் என்ன?

# உஷ்ணம் வியர்வை இல்லாத பெங்களூர் எனக்குப் பழகிவிட்டது.

& நானும் 'பெங்களூரு பெட்டர்' கட்சி. 

பஜனை, திருவிழா, வீட்டில் கொண்டாட்டம் போன்ற எல்லாவற்றிலும், பிறரைப்பற்றிக் கவலையில்லாமல் ஸ்பீக்கர் போன்றவற்றை வைத்து அலற விடுகிறோமே. இறைவன் ரொம்ப தூரத்தில் இருக்கிறார் அவர் காதில் நம் பிரார்த்தனைகள் பக்திப் பாடல்கள் விழவேண்டுமே என்ற கவலையினால் அப்படிச் செய்கிறார்களா?

# நாம் நல்ல காரியம் செய்கிறோம் என்பதை ஊரறிய வேண்டும் என்பதற்காக அப்படி நடக்கிறது. 

நடப்பதை அறிந்து நாலு பேர் வரட்டுமே எனும் உந்துதல் என்று புரிந்து கொள்ள வேண்டும் !

1960 களில் கடும் விரதம், விஸ்தாரமான பூஜை என்று இருந்த சபரிமலை யாத்திரை , இப்போது யானை ஒட்டகம் குதிரை வைத்து ஊர்வலம், தலைமை வகிப்பவரது படத்துடன் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம், பக்தி இசை கொண்டாட்டம் என்று பலவாறாக மாறிப் போயிருப்பதைப் பார்க்கிறோம்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

நம் ஊரில் ராம நவமி கோடை காலத்தில் வரும். அதனால் குளிர்ச்சீயான பானகம்,நீர் மோர், வடை பருப்பு போன்றவைகள் நைய்வேத்தியம் செய்வது நியாயம். ஆனால் கனடா போன்ற கோடை துவங்காமல் இன்னும் குளிருகிறது, இங்கே பானகம்,நீர் மோர் நியாயமா? வேறு என்ன பிரசாதம் பண்ணலாம்?

# சுடச் சுட ஒரு கப் (டிகிரி காபி அல்ல)அக்கார அடிசில்.

சீரியல்கள் பெரும்பாலும் பெண்கள் பெயரிலேயே வருவதற்கு என்ன காரணம்.

# பெரும்பாலும் பெண்களால் பார்க்கப் படுவதாலும், அவர்களுக்கு இயல்பான அறிந்து கொள்ளும் ஆர்வம்  காரணமாகவும்  இருக்கலாம் .

( "என்ன ஆச்சு அந்த குணசுந்தரிக்கு ?" )

கே. சக்ரபாணி சென்னை 28.

1. சிலபேருக்கு இடதுகை பழக்கம்  இடதுகையில் எழுதுவது  பேட்டிங் செய்வது  பௌலிங்போடுவது  போன்றவை  வருவது  ஏன்? 

# மூளை வயரிங்கைப் பொறுத்தது  என்கிறார்கள்.

@CGSenu : இடதுகை பழக்கம் என்பது ஒரு நபரின் மூளை அமைப்புடன் தொடர்புடையது. பொதுவாக மக்கள் சுமார் 90% வலது கை பழக்கம் கொண்டவர்கள், மற்றும் 10% மட்டுமே இடதுகை பழக்கம் கொண்டவர்கள். இது ஏன் நடக்கிறது என்பதை விளக்க முயற்சிக்கிறேன்:


🧠 மூளையின் பாதி கட்டுப்பாடு:

  • நமது மூளை இரண்டு பகுதிகளாக (வலது மற்றும் இடது hemisphere) பிரிக்கப்பட்டுள்ளது.

  • வலது கை இயக்கங்களை மூளையின் இடது பகுதி கட்டுப்படுத்தும்.

  • இடது கை இயக்கங்களை மூளையின் வலது பகுதி கட்டுப்படுத்தும்.

இடதுகை பழக்கம் உள்ளவர்கள், பெரும்பாலும் வலது மூளை பகுதி மேலாண்மை சிறப்பாக வேலை செய்கிறது.


🧬 மரபியல் (Genetics):

  • மரபியல் காரணமாக சிலருக்கு இடதுகை திறமை அதிகமாக இருக்கும்.

  • பெற்றோர்களில் ஒருவர் இடதுகையாளர் என்றால், குழந்தைக்கும் அந்த நெருக்கமான சாத்தியம் இருக்கும்.


🎨 திறமைகள் மற்றும் பழக்கம்:

  • சிலர் இயற்கையாகவே இடது கையை பயன்படுத்தும்படி வளர்கின்றனர்.

  • இது எழுதுவது, விளையாடுவது, சமைப்பது போன்ற பல செயல்களில் பிரதிபலிக்கிறது.

  • சிலருக்கு இது திறமையுடன் (advantage) செயல்படவும் செய்கிறது—எ.கா. சில கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இடது கை மூலம் வித்தியாசமான ஆட்டத்தை காண்பிக்கிறார்கள்.


🤹 பயிற்சி காரணம்:

சில நேரங்களில் சிறுவயதில் ஒரு கை காயம் அல்லது பலவீனம் காரணமாக, மற்ற கை பழக்கமாகும்.


📌 சுருக்கமாக:

இடதுகை பழக்கம் என்பது ஒரு தனிப்பட்ட மூளை அமைப்பு, மரபியல் மற்றும் வளர்ச்சி சூழ்நிலை காரணமாக உருவாகும்.

2. இசைஞானி இளையராஜா அவர்கள்  சிவாஜிகணேசன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எம் ஜி ஆர் . படத்திற்கு இசை அமைத்திருக்கிறாரா?

# வெளிவந்த எம் ஜி ஆர் படங்களில் இளையராஜா இசையமைத்தது எதுவும் இல்லை என்பது இணையத்தில் கிடைக்கும் செய்தி.  இது பற்றி நேரடியாகச் சொல்ல எனக்குத் தகுதி இல்லை.

@CGSenu : இசைஞானி இளையராஜா அவர்கள் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது உறுதி.

அதாவது, உதாரணத்திற்கு:

  • Thirisoolam (1979)

  • Padikkadhavan (1985)
    இவற்றில் இரண்டும் சிவாஜி நடித்த படங்களே.


✅ ஆனால், எம்.ஜி.ஆர். (மக்கள்திலகம் எம். ஜி. இராமச்சந்திரன்) நடித்த ஒரு படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கவில்லை.

இதற்கான முக்கிய காரணம்:

  • எம்.ஜி.ஆர். அவர்கள் 1977-ல் முதல்வராக ஆன பிறகு திரைப்பட acting-ஐ நிறுத்திவிட்டார்.

  • இளையராஜா அவர்கள் 1976-ம் ஆண்டு தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் (Annakili படம் மூலம்).

  • எனவே, இருவரும் ஒரே காலகட்டத்தில் திரையுலகில் இருந்து விலகிவிட்டதால், இணைபயணம் நிகழவில்லை.


📌 சுருக்கமாக:

இளையராஜா – சிவாஜி கூட்டணி: ஆம், நடந்துள்ளது.
இளையராஜா – எம்.ஜி.ஆர்.: இல்லை, எந்த படத்திற்கும் இசையமைத்ததில்லை.

& CGSenu சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன். ஆனால் CGSenu அவர்கள் சொல்லியிருக்கும் தகவலில் ஒரு சிறு திருத்தம் - இளையராஜா 1976 ல் என்ட்ரி; எம்ஜியார் 1977 ல் திரையுலகிலிருந்து எக்சிட் என்பது சரியாக இருந்தபோதிலும், 1980 ஆம் வருடம் இசையமைப்பு துறையில் நுழைந்த ஒருவர், எம்ஜியார் படம் ஒன்றின் சில பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்! 

யார் அவர்? என்ன படம்? வாசகர்கள் பதில் சொல்ல இயலுமா? 

= = = = = = = = = = = =

KGG பக்கம்: 

இந்த மாதம் ஒன்றாம் தேதி ஒருவர் என்னிடம் வேலை கேட்டு வந்தார். 

" பெயர் என்ன? "

" Senu "

" சீனு ? " 

" இல்லை Senu" 

" அதுதான் முழுப் பெயரா " 

" முழுப் பெயர் CGSenu " 

" என்ன வேலை தெரியும்? "

" என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வேன்."

"அடுத்த வாரம் வா, புதன் கிழமை கேள்வி ஏதாவது இருந்தால் தருகிறேன்" 

எட்டாம் தேதி வந்தார். 

" சரி - இதோ 2 கேள்விகள் - இதற்கு பதில் சொல்லு" 

அவர் சொன்ன பதில்கள் மேலே சக்ரபாணி சார் கேட்ட 2 கேள்விகளுக்கு பதில். 

" அப்புறம் என்ன தெரியும்? " 

" படம் வரைவேன் " 

எங்கே ஒரு படம் வரைந்து காட்டு? "



" வெரி குட் - என்ன சம்பளம் வேண்டும்? "

" சம்பளம் எல்லாம் எதுவும் வேண்டாம் சார். எங்கள் Blog வாசகர்கள் என்னைப் பாராட்டினால் அதுவே போதும்! " 

நண்பர்களே! @CGSenu அவர்களைப் பாராட்டுங்க! அதுதான் அவருக்கு சம்பளம். 

- - - - - - - - - - -

பாண்டிச்சேரி பயணப் படங்கள்: 










= = = = = = = = = = 


100 கருத்துகள்:

  1. Senu வரைந்த பெண்ணின் ஓவியம், தமன்னா புகைப்படத்தைவிட மிக நன்றாக உள்ளது.

    எபி ஆசிரியர்களில் சிலர் புதன் கேள்விக்கு பதில் சொல்லும் வேலையைச் செய்தார்கள். அந்த வேலையையே AI எடுத்துக்கொண்டால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏன் வராது?

    பதிலளிநீக்கு
  2. படத்தில் சூரியனைப் பிடிக்க நினைத்தது சரி. CSK catch பிடிப்பதுபோலப் பிடித்தால் நிச்சயம் சூரியன் நழுவிவிடுவான். Match கையைவிட்டுப் போனதுபோல

    பதிலளிநீக்கு
  3. அந்த சூரியனதான் நான் கையில புடிச்சேன்
    எபி வாசகர்கள்க்காக.....
    (எங்க எங்க கொஞ்சம் நாங்க பாக்கறோம், கண்ணை மூடுங்க கொஞ்சம் நான் காட்டுறேன் ந்னு சொல்லி வரப்ப.......)
    அது கைய சுட நான் விட்டுவிட்டேன்
    அது தூர போயி கடல்ல மறைஞ்சுருச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் படங்கள் மிக அழகு. எடுத்தவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதால் அந்தக் கால பிளாக் அன்ட் ஒயிட் படங்களாக்க் காண ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கு. பார்க்கும் வாசகர்களில் என்னைப் போன்ற இளைஞர்களும் இந்தக் கால ஆசாமிகளைம் இருப்பார்கள் என்று நினைக்காத்து ஏனோ?

      நீக்கு
    2. பாண்டிச்சேரி கடல் நீர் கருப்பாகத்தான் இருக்கு. நான் என்ன செய்வது!

      நீக்கு
  4. நான் வாழவைப்பேன், தியாகம், பட்டாக்கத்தி பைரவன், சாதனை போன்ற பல சிவாஜி படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

     திரிசூலம் படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

    பதிலளிநீக்கு
  5. எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓரிரண்டு பாடல்கள் ஒலிப்பதிவும் செய்யப்பட்டதாக கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்.  பின்னர் படம் கைவிடப்பட்டு அந்தப் பாடல்கள் வேறு படத்துக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்கலாம்.  ஆனால் அந்தப் பாடல்கள் எவை என்பதை அவர்கள் சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  6. எம் ஜி ஆர் மறைந்த பிறகு அவர் நடித்து பாதியில் நின்ற ஒரு படத்திலிருந்து அவர் நடித்த காட்சிகள் சிலவற்றை வைத்து பாக்கியராஜ் ஒரு கதை டெவலப் செய்து ஒரு படம் செய்தார்.  அதில் அந்த பழைய படத்திற்காக எடுக்கப்பட்ட இரண்டு பாடல்கள் - எம் எஸ் விஸ்வநாதன் இசையில் - உபயோகபப்டுத்தப்பட்டன.  மற்றபடி படத்துக்கு பாக்யராஜே இசை! 

    படம் ரகசிய போலீஸ் 100 (1990)

    பதிலளிநீக்கு
  7. காக்க காக்க
    கனகவேல் காக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தன் கருணை புரியும் வடிவேல்!

      நீக்கு
    2. கந்தன் கருணை புரியும் வடிவேல்!

      நீக்கு
  8. வணக்கம்! கேள்வி பதில்கள் சுவாரஸ்யம். சில புதன்கள் கேள்விகளால் நிரம்பி வழிகின்றன, சில புதன்கள் காற்று வாங்குகின்றனவே? இதற்கு என்ன காரணமாக இருக்கும்?இன்று முதல் ரகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடை விடுமறை நேரம் என்றால் மக்களுக்கு கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைக்கும்; blog படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. வேலைக்கு செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஞாயிறு கொண்டாட்டமாக இருக்கலாம், house wifeகள் "ஐயோ ஞாயிற்றுக் கிழமையா? வேலையே ஆக மாட்டேன் என்கிறது" என்று அலுத்துக் கொள்வதுதான் வழக்கம். :))

    பதிலளிநீக்கு
  10. ரகசிய போலீஸ் அல்ல
    அவசர போலீஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவசர போலீஸ் தான். எம் ஜி ஆர் பழைய படத்தோட கன்ஃபியூஸ் ஆகிவிட்டது!!!

      இதில் ஒரு பாக்கியராஜுக்கு ஜோடி சில்க் ஸ்மிதா.

      நீக்கு
  11. சிறப்பான தொகுப்பு..
    ஓவியம் அழகு

    பதிலளிநீக்கு
  12. எங்களுக்கெல்லாம் எல்லா நாளும் ஒன்றே.

    இப்ப எனக்கு சனி ஞாயிறு என்றால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும். மற்ற நாட்களில் 7 மணிக்குள் எல்லாம் தயாராக வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் சொல்வது எனக்குப் புரியலை. வார நாட்களில் ஏழு மணிக்குள் தயாராகிவிட்டால் அதன் பிறகு நல்ல ஓய்வுதானே. வார இறுதியில் ரிலாக்ஸ்டா எழுந்தால் நாள் முழுதும் வேலை இருக்கும். அதிகாலை சீக்கிரம் நான் எழுந்துகொள்ளும் நாட்களில் எனக்கு நிறைய நேரம் கிடைப்பதை உணர்கிறேன்.

      நீக்கு
    2. kகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, ஓய்வு எங்க....அடுத்தாப்ல ஒவ்வொரு வேலை. இப்ப பாருங்க அரிசி ஊற வைச்சு மாவு உலர் மாவுக்குத் தயார் பண்ணிட்டுருக்கேன்.

      அடுத்தாப்ல இட்லிக்கு அரைக்கணும்.

      சில தூசி துடைப்பு வேலைகள்

      கீதா

      நீக்கு
    3. பாருங்க..இப்போ தோசை வாக்கறீங்கன்னா, கல்லுல தோசை விட்டதும் அப்புறம் ஓய்வுதானே. பிறகு கொஞ்ச நேரம் கழித்துத் திருப்பிப் போடணும். இதுவே இட்லி, கொழுக்கட்டை என்றால் நிறையவே ஓய்வு கிடைக்கும். அது சரி... இட்லிக்கு ஊறவைத்து அரவைல போட்டால், அதுவே கடகடவென அரைத்துவிடுமே.

      சரி சரி...இன்னும் கமெண்ட் எழுதினால், கீதா ரங்கன்க்கா அடிக்க வரும் சான்ஸ் இருக்கிறது. நான் அம்பேல்.

      (அரிசி மாவு தயார் செய்வதால், ஒருவேளை அங்கு நாளை சென்றால் பிள்ளையார் கொழுக்கட்டை கிடைக்கும் வாய்ப்பு உண்டோ?... என்னைப் பொறுத்தவரையில் பெண்களுக்குக் கொடுக்கும் மிகக் கொடுமையான வேலை, மணிக்கொழுக்கட்டை பண்ணச்சொல்வதுதான்)

      நீக்கு
    4. கொழுக்கட்டை செய்ய அச்சு (மெஷின்) வந்துவிட்டதே!

      நீக்கு
    5. //கல்லுல தோசை விட்டதும் அப்புறம் ஓய்வுதானே. பிறகு கொஞ்ச நேரம் கழித்துத் திருப்பிப் போடணும்.// தீஞ்சு கறுப்பாய்ப் போயிடாதோ? மெலிசாகவும் ஓரங்களில் கொஞ்சம் முறுகலாகவும் நடுவில் லேசாக மெத்தென்றும் இருந்தால் அது தோசை. மற்றதெல்லாம் சை! தோ! தான்

      நீக்கு
    6. சில சமயங்களில் ரவா தோசை முறுகல் நாக்கைப் பதம் பார்த்துடும். ஜாக்கிரதையாய்ச் சாப்பிடணும்.

      நீக்கு
    7. தோ சை, சை தோ ! ஆஹா !

      நீக்கு
  13. துரை அண்ணா நேற்று உங்களை க் காணவில்லையே?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நெல்லை, அழகான ஆண் நடிகர்களுக்கு ரசிகர்கள்...ஓ ஆண் ரசிகர்கள் குறைவுன்னு சொல்றீங்களா!!! ஆனா பெண் ரசிகைகள் நிறைய இருப்பாங்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலதாசனுக்கு ரசிகைகள் அதிகமா இல்லை ரஜினிகாந்துக்கா?

      நீக்கு
    2. கமலதாசன் யாரு?

      நீக்கு
    3. முன்னால கமலஹாசன் நடிகர். இப்போ சிலர் காலில் விழுந்துகிடப்பதால் கமல தாசன். ஐயோ... கேஜிஜி AI விளையாட்டில் ஈடுபட்டிருப்பதால் தினச் செய்திகளெல்லாம் படிக்கிறாரா, இல்லை நினைவில் வைத்திருக்கிறாரா என்பதெல்லாம் சந்தேகமா இருக்கு

      நீக்கு
    4. :))) அப்படிப் பார்த்தால் அவர் 'கமல'தாசன் இல்லை; 'கதிர்' தாசன்!

      நீக்கு
  15. கௌ அண்ணா, தமனா படம் எல்லாம் இப்ப Out dated. நெல்லைக்கே இப்பலாம் பிடிக்கறதில்லை!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைப் பிடிக்கும் என்று அவர் சொல்லும் வரை தமன்னா தொடர்வார்.

      நீக்கு
    2. வீட்டில் ரவை ஆசையா வாங்கி வருவாங்க. அதில் ரவா தோசை, சொஜ்ஜியப்பம் இதெல்லாம் பண்ணித் தருவாங்க. ஆனால் வீட்டில் ரவா உப்புமா, ரவா கஞ்சி என்றெல்லாம் பண்ணினால், ரவை மீதான ஆசை போயிடாதோ? பேசாமல் AI யை அழகான தமன்னா படம் செலக்ட் பண்ணித்தரச் சொல்லாமல், 'ஆசையை அறவே அகற்றுகிறேன்' பேர்வழி என்று கேஜிஜி அதற்கேற்றமாதிரி தமன்னா படங்களைத் தேர்ந்தெடுப்பதால்தான் இந்த நிலைமை கீதா ரங்கன்.

      நீக்கு
    3. 'அழகான தமன்னா' என்று சொன்னதும் AI பயங்கரமா சிரிக்குது Oximoron என்று சொல்லி வெட்கப்பட்டு ஓடிப் போய்விட்டது!

      நீக்கு
    4. கெள அண்ணனும்தான் "பாவனா" க்கா:) வைக் கை விட்டு ரெம்ம்ம்ம்ம்பக் காலமாச்சூஊஊஊ இப்போ ஆரெனச் ஜொள்ளவே இல்லையே:))

      நீக்கு
    5. ட் அ செ அ - மார்ச் 19 2025 பதிவைப் பார்க்கவும்: https://engalblog.blogspot.com/2025/03/blog-post_19.html

      நீக்கு
    6. ஆஆஆஆஆஆ நான் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன் பா க்காவைப் பார்த்திட்டேன்:)))...

      அங்கு நெல்லைத்தமிழன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், தமிழ்மணக் காலத்தில எல்லோரும் எல்லோர் புளொக்கையும் படிச்சினமே இப்போ படிப்பதில்லை ஏன் என..

      என்னைப் பொறுத்து உண்மையில் ஆரும் போஸ்ட்டுக்காப் போவதில்லை, அந்தப் போஸ்ட்டைப் போடும் நபருக்காகவே போய்ப்படிச்சுக் கொமெண்ட் போடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
      அதனாலதான் நமக்காக நேரமொதுக்கி வருகிறார்களே என, ஆரம்ப காலம் முதல், நான் முடிஞ்சவரை ஒரு வரிப் பதிலாவது கொமெண்ட்டுக்குக் கொடுத்து விடுவதை முடிஞ்சவரை வழக்கமாகக் கடைப்பிடிப்பது...

      நீக்கு
    7. மிக நல்ல வழக்கம். ப்ளீஸ் கீப் இட் அப்பு ட்றம்ப் அங்கிள் செ அதி

      நீக்கு
    8. //ப்ளீஸ் கீப் இட் அப்பு ட்றம்ப் அங்கிள் செ அதி//
      :)

      நீக்கு
  16. பானுக்கா வடை பருப்பு செய்யலாமே

    கீதா

    பதிலளிநீக்கு
  17. புது கதாபாத்திரம் வந்திருக்காங்களே CGS senu!!

    படம் ரொம்ப நல்லாருக்கு. பாராட்டுகள்! Senu வந்து பார்ப்பாரா? இல்லை வரும் காசுசோபனா, குரோம்பேட் குசும்பன் போலானவரா!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பாண்டிச்சேரி படங்கள் ரொம்ப நல்லாருக்கு கௌ அண்ணா...அதுவும் படகு இருக்கும் படங்கள், சூரியன் (ஆ! இது இயற்கையான சூரியன்னுங்கோ!! வேற நினைச்சுப்படாதீங்க!) இருக்கும் படங்கள் செம

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கௌதமன் அவர்கள் இடதுகை
    பழக்கம் பற்றி விஞ்ஞான மருத்துவ ரீதியாக அளித்த விளக்கம்
    அருமை.
    நன்றிகள் பல

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் அளித்திருப்பவர் Senu. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  20. கேள்வி பதில்கள் நன்று.

    செனுவின் ஓவியம் மிகவும் நன்று.

    பாண்டிச்சேரி படங்கள் அழகு. சூரிய வணக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  21. இடது கைப்பழக்கம் பெரிய பிரச்சனை இல்லை மற்ற விஷயங்களில். ஆனால் சாப்பாட்டில் கூட உட்கார்ந்திருப்பவர் இடது கையால் சாப்பிட்டால், பார்ப்பதற்கு என்னவோ போல இருக்கும். என் உறவினரில் ஒருவர் இடது கை பழக்கம். அதுபோல பஹ்ரைனில் சில பசங்களைப் பார்த்திருக்கிறேன். இடது கை பழக்கம் உள்ளவர்கள், பௌலிங் போட்டால், இல்லை பேட்டிங் ஆடினால் ஸ்டைலிஷாக இருக்கும், அதுபோல ஃபீல்டிங், பந்தைத் தூக்கிப் போடுவது (ரன் அவுட் ஆக்குவதற்கு). ஆனால் உணவு சம்பந்தமாக இடதுகை உபயோகித்தால் கொஞ்சம் நல்லா இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் நிறைய பேருக்கு இடது கை பழக்கம். என் கடைசி நாத்தனார், என் மகன், என் கடைசி அக்காவின் மகள், அவளுடைய மகள், அதாவது அக்கா பேத்தி, என் அண்ணா பேத்தி.
      இதில் என் அக்கா பெண்ணைத் தவிர மற்ற எல்லோரும் வலதுகையால் சாப்பிடுவார்கள். ஒரு திருமணத்தில் என் அக்கா மகள் இடது கையால் சாப்பிடுவதை பரிமாறியவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அவள் திருமணத்தின் பொழுது எதற்கோ தீர்த்தம் விடச் சொன்ன பொழுது அவள் இடது கையை உபயோகிக்க, எல்லோரும் "வலது கை வலது கை" என்று கூவ, அவள் பாட்டி மட்டும் "அவளுக்கு இடது கைதான் வலது கை" என்றார்.
      என் மகன் ஒரு முறை திருச்சி மாணிக்கவிநாயகர் கோவிலில் இடது கையால் சூரைக் காய் போட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒரு பெண்மணி,"தம்பி இடது கையால் சூரைக்காய் போடுகிறார், வலது கையால்போடச் சொல்லுங்கள்" என்றார். நான்,"அவன் இடது கை பழக்கம் உள்ளவன், வலது கையில் வேகம் இருக்காது" என்றேன். சரிதானே?
      ஒரு முறை நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது கூரியர் வந்தது, என் மகன் இடது கையால் கையெழுத்திட்டு வாங்கி விட்டான். அடே இப்படி ஒரு சௌகரியம் இருக்கா? என்று நினைத்துக் கொண்டேன்.

      நீக்கு
  22. //ஆண் அழகு காபியில் முந்திரி போல பொருத்தமற்றுப் போய் விடுகிறது.// அடடா என்ன ஒரு உதாரணம்...இதுவரை நினைத்துப் பார்க்காதது. தயிர்சாதத்தில் முந்திரி என்று சொன்னாலும் ஓகே. காபியில் முந்திரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) பகளா பாத்தில் முந்திரி போடுவது உண்டு.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நாங்கள் கஜராஹோ போன போது, ஹொட்டேலில் காலை உணவு சப்பாத்திக்கு தயிர்.. வெறும் தயிர் அதனோடு பச்சை வெங்காயமும் கொஞ்சம் ஊறுகாயும்.. தொட்டுச் சாப்பிடுவதாம்.. முதன் முதலாக அதிர்ந்தேன்..

      நீக்கு
    3. வட இந்தியாவில், வெஜ் பராத்தா, ஆலு பராத்தா... போன்றவற்றிர்க்கெல்லாம் தயிரும், ஊறுகாயும்தான். ஆனால் ரொம்ப ருசியாக இருக்கும் இந்த காம்பினேஷன். ஆனால், தும்பக்காய் பிரட்டல், றவ்வை இட்லி, கம்புப்புட்டு, கம்புத்தோசை, பிர்ரியாணி சாப்பிடறவங்க கிட்ட இதைக் கொடுத்தா அதிர்ச்சிதான் வரும்.

      நீக்கு
    4. உண்மைதான் நெ தமிழன், முதல் நாள் அதிர்ந்தேன் பின்பு அதுவே பிடிச்சுப்போச்ச்ச்:))

      ///ஆனால், தும்பக்காய் பிரட்டல், றவ்வை இட்லி, கம்புப்புட்டு, கம்புத்தோசை, பிர்ரியாணி சாப்பிடறவங்க கிட்ட இதைக் கொடுத்தா அதிர்ச்சிதான் வரும்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களுக்கு ஒன்று ஜொள்ளோணும், நீங்க ஸ்ரீராம் கீதா கோமதி அக்கா எல்லோரும் பார்க்கிறீங்க என்பதாலதான், அசைவம் போடுவதை எவ்ளோ குறைச்சுப் போடுகிறேன் தெரியுமோ...
      கிட்டடியில அம்மா கேட்டா, ஏன் நீ யாழ்ப்பாணத்து இறைச்சிக் கறிகள் போடலாமே என... இப்போ எனக்கே அசைவம் போட ஒரு மாதிரி இருக்கு ஹா ஹா ஹா.. சரி அதை விடுங்கோ..

      அடுத்து வெகு விரைவில் அதீஸ் பலஸ் இல் வர இருப்பது.. "திருநெல்வேலி உளுந்துச்சோறு: ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. ரெஸ்டோரண்ட் இருக்குது "ஸ்ரீராம் டாபா"... சைவம். அங்கு போனால் நிறைய வெங்காயம் பச்சைமிள்காய் போட்டு ஒரு பெரீய சப்பாத்தி/ரொட்டியுடன், தொட்டுச் சாப்பிட ஒரு குட்டி டிஸ் முழுக்க ஒருவித அவர்களது ஹோம்மேட் நெய் தருவினம்... ஆஹா என்னா சுவை தெரியுமோ.. அத்தோடு முழுச் சின்னவெங்காயம் வினிகரில் ஊறவச்சது இவைதான் கொம்பினேசன்.. எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு....

      தமிழ் நாட்டில் உண்டோ தெரியாது.
      தமிழ் நாட்டிலும் இது

      நீக்கு
    6. முதல் லைன் அழிஞ்சுபோச்ச்ச் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
      அது இப்பூடி வரும்... டெல்லியில் ஒரு ரெஸ்டோரண்ட் இருக்குது.....

      நீக்கு
    7. நான் ஜூலையில் தில்லி போய் மூன்று நாட்கள் தங்கி ஊரைச் சுற்றிப்பார்க்க முடியுமா, வெயில் ஜாஸ்தியா இருக்குமான்னு தில்லி வெங்கட் அவர்களைக் கேட்டேன். செப்டம்பர் வரை வட இந்தியாவில் வெயில் அதிகமாக இருக்கும் என்றார். ஆனால் அடுத்த முறை போகும்போது ஒரு சைவ 'டாபா'-தாபா வில் சாப்பிடணும்னு ஆசை. பஞ்சாபி தாபா நல்லா ருசியா இருக்குனு பலர் சொல்றாங்க.

      நீக்கு
    8. /அசைவம் போடுவதை எவ்ளோ குறைச்சுப் போடுகிறேன் தெரியுமோ...
      கிட்டடியில அம்மா கேட்டா, // அப்படீல்லாம் பண்ணாதீங்க. உங்கள் பாரம்பர்ய உணவுகளைச் செய்து (நல்லா வராட்டியும் ஆஹா என்ன ருசி, சுருசியா இருக்கு என்றெல்லாம் பில்டப் கொடுத்து) காணொளி போடுங்க. உங்களுக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைக்கும்.

      உங்களுக்குத் தெரியுமா? வெறும் சைவம் மாத்திரம் போடும் யூடியூபர்களுக்கு உள்ளதைவிட, அசைவமும் போடும் யூடியூபர்களுக்கு மிக அதிகமான பார்வையாளர்கள் உண்டு

      நீக்கு
    9. //"திருநெல்வேலி உளுந்துச்சோறு: // - திருநெவேலில சோறு (கீழ) விளுந்தா (விழுந்தா) எடுக்க மாட்டோமே... இவங்க விளுந்த சோறுன்னு என்ன சொல்றாங்க? காணொளி வரட்டும். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

      நீக்கு
    10. @நெ தமிழன்

      //நல்லா வராட்டியும் ஆஹா என்ன ருசி, சுருசியா இருக்கு என்றெல்லாம் பில்டப் கொடுத்து) ///
      ஹா ஹா ஹா பின்ன என்னதான் பண்ணுவதாம்:))... உங்களுக்கு ஒன்று சொல்லட்டோ.. ஆருக்கும் சொல்லக்கூடாது ஓகே... நேக்கு ஊ ரியூப் சம்பளம் வரத் தொடங்கிட்டுதாக்கும் ...:).

      //அசைவமும் போடும் யூடியூபர்களுக்கு மிக அதிகமான பார்வையாளர்கள் உண்டு//
      இதுவும் உண்மைதான், ஆனா யூ ரியூப்பை பொறுத்தவரை, அங்கும் தானாக சேரும் மக்களைப் பொறுத்துத்தான் எல்லாம், சிலருக்கு இருமினாலும் தும்மினாலும் வியூஸ் போகும், சிலர் எவ்ளோ அழகா சூப்பராக செய்து காட்டியிருப்பினம் ஆனால் ஆரும் பார்ப்பதில்லை.. எல்லாம் சனி அங்கிள் மாற்றம் குருமாற்றம் தான்..
      லொட்றி எடுத்தனீங்களோ? கூரையைப் பிரிச்சுக் கொண்டுமாமே த... ராசிக்கு:))

      நீக்கு
    11. ///இவங்க விளுந்த சோறுன்னு என்ன சொல்றாங்க? காணொளி வரட்டும். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.///

      அச்சச்சோ.. மறுபடியுமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது என்னமோ தெரியேல்லை, எனக்கும் ழு/ளு வுக்கும் எட்டாப் பொருத்தம், கூகிளில் செக் பண்ணித்தான் சிலசமயம் எழுதுவேன், ஆனா கொமெண்ட்ஸ் இல் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாதெல்லோ:).. ட்றம்ப் அங்கிளிடம் சொல்லி இந்த ழு/ளு இரண்டையும் ஒரு எழுத்தாக்கிடச் சொல்லப்போறேன்...

      ல எனில் வித்தியாசம் இருக்கு, ஆனா இந்த ழு..ளு வில என்ன பெரிய வித்தியாசம், ஏன் தான் இந்த வித்தியாசத்தை வச்சார்களோ தெரியேல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா

      ஓகே இப்போ கரீட்டு.. உழுந்துச்சோறு இன்னும் செய்யவில்லை, செய்யலாம் என இருக்கிறேன்.

      நீக்கு
    12. அதிராக்கு எப்போதுமே தமிழைத் தவறா எழுதுவதால், சரியாக எழுதியிருப்பதைக் கலாய்த்தாலே சந்தேகம் வந்துட்டது. உளுந்து சோறு என்பது சரிதான்.

      நீக்கு
    13. எனக்கு வரவேண்டிய 2 1/2 க்கும் மேலான பணமே வரலை. அதுக்காகச் செய்த நேர்த்திகளுக்கும் வேண்டுதல்களுக்கும் பலன் இல்லை. இதுல இப்போ சனிப் பெயர்ச்சியாம், கூரைலேர்ந்து கொட்டுமாம். லாட்டரியாம். நியாயமாக எனக்கு வரவேண்டிய பணத்தில் எம்பது சதம் வந்தாலே கூரையிலிருந்து கொட்டியது போல்தான்.

      நீக்கு
  23. ஒரு ஓவியத்துக்கு ஒரு கதை சொல்லியே எல்லோரையும் பதில் சொல்ல வச்சிருக்கும் பெருமை கெள அண்ணனையே சாரும்...
    அந்தப் பொம்பிளைப்பிள்ளை மிக அழகாக இருக்கிறா.. சொல்லப்போனால்ல்.. தமனாக்காவை விட அனுக்காவை விட ரொம்ப அழகாக வரைஞ்சிருக்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பெயரை போட்டியிலிருந்து நீக்கக் கோருகிறேன்.

      நீக்கு
    2. ///ஸ்ரீராம்.9 ஏப்ரல், 2025 அன்று 2:51 PM
      இரண்டாவது பெயரை போட்டியிலிருந்து நீக்கக் கோருகிறேன்.//

      அடடா ஸ்ரீராமும் கட்சி மாறிட்டாரோ இது எப்போ கர்ர்ர்ர்ர்:)).. வயசானாலும் அன்பு பாசம் நேசம் பொறுமை கடமை எருமை எதுவும் மாறாது என அன்றொருநாள் மேசையில் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே மேடையில் பேசிய ஸ்ரீராம் எங்கே..ங்கே..ங்கே... இது எக்கோ:)))))

      நீக்கு
    3. நேற்று கதையை தவறாக புரிந்து கொண்டதைப் போலவே இதையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் செகரட்டரி.....

      அனுஷை ஒப்புமையிலிருந்து எடுக்கச்சொன்னேன். 

      அனுஷ் அனுஷ்தான்.

      நீக்கு
    4. ///
      ஸ்ரீராம்.9 ஏப்ரல், 2025 அன்று 8:45 PM
      நேற்று கதையை தவறாக புரிந்து கொண்டதைப் போலவே இதையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் செகரட்டரி.....///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. கதைக்கு ஒரு மாறுபட்ட கருத்துச் சொன்னால் அது டப்பா??:)).

      ///அனுஷ் அனுஷ்தான்.///
      ஓ மை வைரவாஆஆஆ... சற்றும் மனம்தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கையில் ஏறினார்.....:)) ஹா ஹா ஹா மீ சிரிச்சுக்கொண்டே பெயிண்ட் ஆகிறேன்ன்ன் இது வேற பெயிண்ட்:)).. எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்பி விடுங்கோ.. முடியேல்லை முச்சந்தி முனீஸ்வரா:)))

      நீக்கு
  24. எனக்கு ஒரு கொஸ்ஸன்:)) இருக்குது கெள அண்ணன்.. அது கேள்வி அல்ல, ஆனா ஒவ்வொருவரும் என்ன நினைப்பினம் என அறியும் ஆவல்... முடிஞ்சால் அடுத்த புதனில பதில் சொல்லுங்கோ.. இது நீண்ட காலமாக இருக்கு ..

    அது என்னவெனில்..

    காலயில நித்திரை விட்டு எழும்பி வருவோமெல்லோ.. கட்டிலிலிருந்தோ.. நிலத்திலிருந்தோ.. அப்படி எழும்பியவுடன் மனதில முதன் முதலா என்ன நினைச்சுக்கொண்டு எழும்புவீங்கள்?

    பெரும்பாலும் கண் முழிச்சவுடனே எல்லோரும் கை பார்ப்பது, கடவுளை நினைப்பது.. இதெல்லாம் பொதுவானது, ஆனா அந்தப் படுக்கையை விட்டு எழும்பும்போது என்ன வரும் மனதில் இதுதான் பதில் வேணும்..

    நான் என்ன நினைப்பேன்.. அதுவும் தினமும் ஹாஹாஹா என்பதை அடுத்த கிழமை சொல்கிறேன்:: அப்போ வரட்டே போட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அப்படி எழும்பியவுடன் மனதில முதன் முதலா என்ன நினைச்சுக்கொண்டு எழும்புவீங்கள் //

      இப்பவே எழுந்திரிக்கணுமா? இன்னும் கொஞ்சம் படுக்கலாமா?!!

      நீக்கு
    2. கேள்விக்கு நன்றி. அடுத்த புதன் கிழமை பதில் அளிப்போம்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நானும் வெனிஸ்கிழமைதான் சொல்லுவேன்:)))

      நீக்கு
  25. கேள்விகளும் பதில்களும் அருமை.
    பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.
    பாண்டிச்சேரி கடற்கரை படங்கள் படங்கள் நன்றாக இருக்கிறது.
    //நண்பர்களே! @CGSenu அவர்களைப் பாராட்டுங்க! அதுதான் அவருக்கு சம்பளம். //

    பாராட்டுகள் , வாழ்த்துகள்.

    ஓவிய பெண் கொஞ்சம் மருண்ட கண்களுடன் இருக்கிறாரே வாசகர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமா?

    பதிலளிநீக்கு
  26. எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே அறிவுள்ளவர்களாய் நினைச்சுப்பதால் இருக்குமோ? பொதுவாகப் பல எழுத்தாளர்களுக்கும் கர்வம் ஜாஸ்தி தான். ஒரு அலட்சியமாகத் தான் பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
  27. பாண்டிச்சேரியிலே தம்பி 2 வருஷம் இருந்தும் அங்கே போக வாய்ப்பே கிடைக்கலை. நாங்களாவும் போகலை. இனி எங்கே? படங்கள் அருமையாக வந்துள்ளன. இன்னமும் பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்பலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பப்போ தவணை முறையில் படங்கள்! படங்களின் தென்கிழக்கு மூலையில் படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம் வாட்டர் மார்க் பார்க்கவும்.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. வந்த கருத்துரைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    இன்று தங்களிடம் புதிதாக பதிலளிக்க வந்தவருக்கு மனமார்ந்த வரவேற்புகள். வாழ்த்துகள், பாராட்டுகள். நன்றிகள். நல்ல விளக்கமாக பதில்களை தந்துள்ளார்.

    பாண்டிச்சேரி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கடலின் நிறம், சூரிய பந்தை பிடிக்கும் படம் என எடுக்கப்பட்ட அனைத்தும் கலாரசனையுடன் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. வாழ்க வளமுடன்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!