பாகற்காய் அறுசுவை பச்சடி - JKC
வடுமாங்காய் சிறியது - 1
பச்சை மிளகாய் - 3
வெல்லம் 50 கிராம் துண்டு -1
புளி ஒரு புளியங்கொட்டை அளவு.
உப்பு தேவையான அளவு
காய்களை கழுவிக் கொள்ளவும்.
பாகற்காயை விதைகளை நீக்கி சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
மாங்காயை தோல் சீவாமல் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
புளியை 4 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை 4 ஆக கீறிக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.
பாகற்காயை கையால் பிழிந்து ஜூஸை குடித்து விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் தாளித்து காய்களை பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின்னர் காய்கள் மூழ்கும் அளவு நீர் ஊற்றி வேக விடவும். புளி நீரையும் சேர்க்கவும்.
காய்கள் நன்றாக வெந்தவுடன் வெல்லப்பொடியை சேர்த்து கொஞ்சம் கட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து எடுத்து பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
தாளிக்கும்போது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்க்கலாம். அதே போல் வெல்லம் போட்டவுடன் சுக்குப்பொடி கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.
உப்பு பிசறிய பாகற்காய் ஆனதால் தனியாக உப்பு சேர்க்கத் தேவையில்லை.
இந்தப் பச்சடியில் உவர்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, எரிப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய ஆறு சுவைகள் உள்ளன.
கடைசியா ஒரு சின்ன hint
ஒண்ணுமில்லை மாங்காய் வெல்ல பச்சடியில் பாகற்காய் சேர்த்து விட்டால் அறுசுவை பச்சடி. அடிக்க வராதீங்கோ!
அனைவருக்கும் அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
உண்மையிலேயே நல்ல செய்முறைதான்.
பதிலளிநீக்குபாகற்காய் சாப்பிடுவதே கசப்புச் சுவையும் வேண்டும் என்பதற்காக. அதை எதற்காக வெல்லம் சேர்த்துச் சாப்பிடணும்?
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஆறு சுவையும் ஒரே பதார்தத்தில் என்பது தான் ஹைலைட். வருடப்பிறப்பு ஸ்பெசல். வேப்பம்பூ இல்லாததால் பாகற்காய்.
நீக்குஅனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
ஜெ கே அண்ணா சூப்பர் போங்க!!! நல்லாருக்கு...நல்ல கோம்போ இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, கசப்புன்னு ...ஓ வடுமாங்காய் துவர்ப்பு கொஞ்சம் இருக்கும் என்பதால் துவர்ப்புமா!!
பதிலளிநீக்குபுதிய செய்முறை, அண்ணா.
இன்றைக்கு எப்படியும் மாங்காய் பச்சடி செய்வதுண்டே...பொருத்தமா அமையுது உங்க ரெசிப்பி, ஸ்ரீராம் அதை கரெக்டா இன்று ஷெட்யூல் செய்ததும் ....நல்லாருக்கு
கீதா
சுவைத்ததிற்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்று ஆறுசுவையும் சேர்ந்த சமையல் குறிப்பு அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்றைய திங்கள் பகிர்வாக வந்த அறுசுவை உணவு அற்புதமாக உள்ளது. ஆறுசுவைகளும் சேர்ந்த பாகல் பச்சடி படம், செய்முறை விளக்கங்கள் படம் அனைத்தும் நன்றாக உள்ளது. இதை இங்கு அருமையாக செய்து பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நான் இன்று வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுத்தாண்டில் பாகற்காய் பச்சடி அசத்தலான சமையல்.
நல்ல குறிப்பு! மாங்காயும் சேர்த்து, புளியும் சேர்த்திருக்கிறீர்கள் புளிப்பு அதிகமாகி விடாதா?
பதிலளிநீக்குமாங்காய் இல்லை. மாவடு. புளிப்பு இருக்காது துவர்ப்பு அதிகம் இருக்கும். மேலும் புளி ஒரு புளியங்கொட்டை அளவு தான்.
நீக்குJayakumar
பாகற்காயில் விதம் விதமாப் பண்ணலாமே. எங்க மருமகள் நடுத்தரமான பாகற்காயைத் தோலைச் சுரண்டி விட்டுப் பிளந்து உள்ளே ஸ்டஃப் செய்து வதக்கி வைட்துவிட்டுப் பின்னர் க்ரேவி பண்ணி அதில் கடைசியில் இந்தப் பாகற்காயையும் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுப்பாள். கத்திரிக்காயையும் அப்படிப் பண்ணுவாள்.
பதிலளிநீக்கு