சனி, 12 ஏப்ரல், 2025

P. Suseela மற்றும் நான் படிச்ச கதை

 


================================================================================================


7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலி; இந்திய வம்சாவளி சிறுவனுக்கு குவியும் வாழ்த்து

தலாஸ்: 7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தலாஸ் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா. இவர் ஆந்திராவின் ஐதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர். உலகளவில் ஏ.ஐ., சான்றிதழ் பெற்ற இளம் மென்பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைக்கு உதவும் விதமான புதிய படைப்பை உருவாக்கி உலகளவில் கவனத்தை பெற்றுள்ளார். 7 விநாடிகளில் இதய துடிப்பின் சத்தத்தை வைத்து இதய நோயை கண்டுபிடிக்கும் சர்காடியன் ஏ.ஐ., எனும் செயலியை உருவாக்கியுள்ளார்.  உலகளவில் நிகழும் இறப்புகளில் 31 சதவீதம் உயிரிழப்புகள் இருதய நோய் தொடர்பானது என்பதே, தன்னை இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்க தூண்டியதாக சித்தார்த் நந்த்யாலா தெரிவித்துள்ளார்.  இந்தியா, அமெரிக்கா என இருநாடுகளிலும் சேர்த்து 2,000 நோயாளிகளிடம் இந்த சோதனை செய்து பார்க்கப் பட்டது.  அண்மையில் சித்தார்த் நந்த்யாலாவை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

=========================================================================================


நான் சொல்லும் உண்மை கதை (JKC)


பாப்பையா விட்ட ராக்கெட்

 

என்ன அண்ணாச்சி ரொம்ப டல்லா இருக்கீங்க?

நான்: அதுவா… ஒரு சம்பவம் அதை கதையா எழுத என்னன்னமோ செய்கிறேன். கதை மட்டும் கோர்வையா வரமாட்டேங்குது. திறமை இல்லை.

அதுக்கென்ன கதையை கேள்வி பதில் ஆக சொல்லிட்டா போச்சு. ஆரம்பிங்க. தலைப்பு என்ன? 

நான்: பாப்பையா விட்ட ராக்கெட்.

என்னது பாப்பையா பட்டிமன்றத்தில் தான் நடுவரா இருப்பார். அவர் ராக்கெட் விட்டாரா?

நான்: இது வேறே பாப்பையா.

சரி கதையை சொல்லுங்க.

நான்: இடம் : ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுகணை தளம். நாள்: 19 சூலை 1980.

இந்தியாவின் முதல் உபக்கிரக ஏவுகணை slv3, ரோகினி என்ற உபகிரகத்தை சுமந்தபடி தூரத்தில் ஏவுகணை மேடையில் நிற்கிறது. ஏவுதற்கு சில நொடிகளே உள்ளன. ஆனால் ஏவுதல் கட்டளை நிறுத்தப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாட்டு அறையில் சேர்மன் தவான், மற்றும் திட்ட இயக்குனர் கலாம் முகங்களில் கவலை, மற்றும் ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுகிறது.

இது கதையா? என்னமோ ரிப்போர்ட் மாதிரி அல்லவா இருக்கிறது. சரி மேலே சொல்லுங்கள். 

ஏற்கனவே சென்ற வருடம் (1979) செலுத்தப்பட்ட slv3 -E 1 ஒரு சிறு கோளாறு காரணம் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் கடலில் சென்று விழுந்து விட்டது. எல்லோரும் கேலியாக  ISRO ராக்கெட்டுகளுக்கு கடல் மேல் காதல் என்று கேலி பேசினர். தற்போது ஒரு புதிய சிக்கல்.

என்ன, ஏன்?

கொஞ்சம் விவரமா சரித்திரம் சொல்ல வேண்டி இருக்கிறது. சரித்திரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு பத்திகளை தாண்டுங்கள்.

1963இல் சின்னதாக ஒரு திட்டம் விண்வெளி ஆராய்ச்சிக்காக திருவனந்தபுரத்தை அடுத்த தும்பா வில் துவங்கப்பட்டது. இந்த இடத்தைத் தேர்ந்ததற்கான காரணம் பூமியின் காந்தப்புலத்தின் மத்திய ரேகை (magnetic equator) தும்பா வான் வழியாக செல்கிறது. அதை பற்றிய ஆராய்ச்சிக்காகவும், மற்றும் பருவ மழை பற்றிய ஆராய்ச்சிக்காகவும் ஒரு ராக்கெட் ஏவுதளம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு தொடங்கப்பட்ட திட்டத்தின் இயக்குனர் விக்ரம் சாராபாய் ISRO என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினார். அதன் படி ரோகினி வரிசை ராக்கெட்டுகள் (Sounding Rockets) தயாரிக்கப்பட்டு ஏவப்பட்டன. இவை சிவகாசி ராக்கெட் போன்றவை. மேலே சென்று எரிபொருள் தீர்ந்தவுடன் கடலில் விழுந்து விடும். ராக்கெட் செல்லும்போது கண்ட்ரோல் என்பதோ கட்டளைகள் படி நடக்கும் திறமையோ இல்லாத ராக்கெட்டுகள் இவை.

அடுத்த கட்டமாக உபக்கிரக ராக்கெட்டுகள் (launch vehicles) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி சின்ன ரோகினி உபக்கிரகத்தை பூமியை சுற்றி வருமாறு செலுத்தக்கூடிய அமைப்புகளில் slv என்ற ராக்கெட் செய்ய முடிவானது.  இது பலமடங்கு நவீனமானது. (முதல் இந்திய உபக்கிரகம் ஆர்யபட்டா உருசிய விண்வெளி கழகத்தால் ஏவப்பட்டது)  

திட்டப்படி 1975இல் முதல் slv ஏவப்பட்டிருக்க வேண்டும். சாராபாய் மரணம், திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை என்பவை காரணம் திட்ட நடப்பு தாமதம் ஆகியது. இவ்வாறு இருக்கும் போது இதோ கடைசி நிமிடத்தில் ஒரு சிக்கல்.

ராக்கெட்டுக்கு அடுத்துள்ள டவரில் இருந்து ராக்கெட்டிற்கு செல்லும் தொப்புள் கொடி (umbilical cord) அறுபடவில்லை. தொப்புள் கொடியை விலக்கும் அமைப்பு வேலை செய்யவில்லை.  

டெக்னீசியன் பாப்பையா 60 அடி டவரில் ஏறி தொப்புள்கொடியை பிடுங்க முன் வந்தார். அவர் டவரில் இருக்கும்போது ராக்கெட் புறப்பட்டு விட்டால் ஆபத்து தான். ஆனாலும் முன் வந்ததை பாராட்டி அவரை அனுமதித்தனர். அவர் டவரில் ஏறி தொப்புள் கொடியை அறுத்து விட்டு பத்திரமாக இறங்கினார்.

இவ்வாறாக இந்தியாவின் முதல் உபக்கிரக ஏவுகணையை வெற்றியுடன் ஏவிய பெருமை பாப்பையாவிற்கு கிடைத்தது.

சரி  

ராக்கெட் புறப்பட்டது.  நேரடி ஒளி பரப்பில் ஈடு பட்டிருந்த (1980) தூர்தர்சன் வழக்கம் போல் “தடங்கலுக்கு வருந்துகிறோம்” கார்டை காட்டிக் கொண்டிருந்தது. ரெக்கார்ட் செய்யப்பட்ட காட்சிகள் பின்னர் ஒளி பரப்பப்பட்டன.

ஏன்?

ஒளிபரப்பு உபக்கிரகங்கள் இல்லாத காலம். FM மூலம் ஒளிபரப்பு அலைகளை மெட்ராஸ் தூர்தர்சனுக்கு அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. வானத்தில் ஒரு பலூனை நிறுத்தி அதில் ட்ரான்ஸ்மிட்டர் ஒன்றை பொருத்தி சிக்னல்களை  வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் பலூன் கட்டப்பட்ட கயறு அறுந்து பலூன் காற்றில் எங்கோ போய்விட்டது. ஆகவே நேரடி ஒளிபரப்பு இல்லாமல் போனது.

அப்புறம்

அதற்கு அடுத்து வந்த வேறு ஒரு திகைப்பு  mission வெற்றியை கேள்விக்குறியாக்கியது. உபக்கிரகம் ராக்கெட்டை விட்டு பிரிந்தது வரை எல்லாம் சரியே. ஆனால் பிரிந்த  உபக்கிரகத்தில் இருந்து ஒரு சிக்னலும் ஹரிகோட்டா மையத்திற்கு கிடைக்கவில்லை. நிகோபாரில் இருந்த கண்காணிப்பு மையத்திற்கும் சிக்னல் கிடைக்கவில்லை. காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது திருவனந்தபுரத்தில் இருந்து நற்செய்தி. உபகிரகம் அதன் பாதையில் சுற்றுகிறது என்று.

உபகிரகம் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயரத்தில் செலுத்தப்பட்டதால் மற்ற இரண்டு கண்காணிப்பு மையங்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.

ஆக இது போன்ற சின்ன சின்ன இடைஞ்சல்களைக் கடந்து தான் இஸ்ரோ செயல் படுகிறது, செயல் பட வேண்டும். ராக்கெட்டின் பல்லாயிரம் பாகங்களும் சரியாக இருக்கவேண்டும். பறக்கும் போது ஒன்றையும் சரி செய்ய முடியாது. DO or DIE தான்.  

சில படங்களும் விவரங்களும் பார்வைக்காக.

படுக்கை வாட்டில் அசெம்பிள் செய்யப்பட slv3 ட்ரைலர் மூலம் ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தலைமை தாங்கி நடப்பவர்கள் கலாம், மற்றும் தவான்.


ஏவுதளத்தில் ராக்கெட்  வான் நோக்கி நிலை நிறுத்தப்படுகிறது.
ஏவு தளத்தில் ராக்கெட்.  

விண்ணில் பாய்கிறது slv3.

அப்பாடா ஒரு வழியாக ஒரு பதிவை ஒப்பேற்றி விட்டாயிற்று. கதை அமைப்பு இன்னும் சரியாக அமையவில்லை.

தமிழில் சொல் உண்டு. “தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்”. எல்லோருடைய கதைகளிலும் குறை கண்டுபிடிக்கும் நான் தற்போது என்னுடைய கதையிலும் குறைகளைக் கண்டு பிடிக்க வேண்டிய நிர்பந்தம்.  

ஆகட்டும் பார்க்கலாம். முடிந்தவரை சரி.

 

34 கருத்துகள்:

  1. ISROவின் முன்னேற்றம் மிகச் சிறப்பானது. பிற்காலத்தில் தடகள வீரனாக வரப்போகிறவனும், குப்புறக் கவிழ்ந்து, தவழ்ந்து, நிமிர்ந்து, தளர் நடை நடந்து என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பி சுசீலாவே தான் ரொம்பக் கஷ்டப்படுவதாக காணொளிகளில் தெரிந்துகொண்ட எனக்கு, அவர் டிரஸ்ட் அமைத்திருக்கிறார் என்ற செய்தி வியப்பு.

    பதிலளிநீக்கு
  3. எவ்வளவு இளமையான கலாம்!  

    சுவாரஸ்யமான விவரங்கள்...  தடங்கல்கள் பற்றி சுலபமாக சொல்லிச் சென்று விடுகிறோம்.  விவரம் தெரிகையில்தான் சிரமங்களும் சாதனைகளும் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கலாமைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

      ஆமால் எப்பவுமே எதிர்மறைதானே முதலில் வந்து நிற்கும், ஸ்ரீராம் இது மாஸ் சைக்காலஜியும் கூட. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் பல சிரமங்கள் உழைப்புகள் , சிரமங்கள்..ஆனால் அது பேசப்படுவதில்லை.

      கலாம் அவர்களே சொல்லியிருக்கிறார், ஒவ்வொரு செய்தித்தாளிலும் முன்பக்கம் நல்ல செய்திகள் வர வேண்டும் என்று. ஆனால் எல்லாமே எதிர்மறையாகத்தான் வருகின்றன என்று சொல்லியிருந்ததை வாசித்திருக்கிறேன். அதற்கு உதாரணமாக இஸ்ரேல் செய்தித்தாள் ஒன்றை சொல்லியிருந்தார்.

      இது பற்றி எழுத அவர் பேசியதையும் சுட்டியையும் எடுத்து வைத்திருந்தேன்/ருக்கிறேன். எழுத வேண்டும். நான் படித்ததில் பிடித்தது என்று

      கீதா

      நீக்கு
  4. ​//(முதல் இந்திய உபக்கிரகம் ஆர்யபட்டா ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் ஏவப்பட்டது) // இந்த வாக்கியத்தில் உள்ள ஐரோப்பிய என்பதை உருசிய என்று திருத்தி வாசிக்கவும். நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா எனக்கு பவர் போய் போய் வந்து கொண்டிருந்தது ரொம்ப வே படுத்தியது பவர்....அதில் மாற்றியது சேவ் ஆகாமல் போயிருந்திருக்கிறது ஆனால் நான் கவனிக்க வில்லை.

      ப்ளாகர் சொல்லிக் கொண்டே இருந்தது தளத்தில் இருந்து வெளியில் செல்லும் முன் சில மாற்றங்கள் சேவ் ஆகலை சேவ் ஆகலைன்னு...எனக்கு அது டக்கென்று புரிபடவில்லை. படங்கள் எல்லாம் இருக்கா என்று செக் செய்தேன் உரையாடல்கள் எல்லாம் சரியா இருக்கான்னும் பார்த்துக் கொண்டேன் இதைக் கவனிக்கத் தவறவிட்டிருக்கிறேன்.

      ஸ்ரீராமிடமும் கேட்டேன் பதிவு சரியா வந்திருக்கா என்று ஆனால் பாருங்க இந்த இடம் மாற்றியது வந்திருக்கா என்று நான் அவரிடம் கேட்க விட்டுப் போச்சு.

      அடுத்த வாட்டி இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. // ஸ்ரீராமிடமும் கேட்டேன் பதிவு சரியா வந்திருக்கா என்று ஆனால் பாருங்க இந்த இடம் மாற்றியது வந்திருக்கா என்று நான் அவரிடம் கேட்க விட்டுப் போச்சு. //

      அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?  JKC  முன்னாலேயே சொல்லி இருந்தாரா?  எனக்கு வரலையே...

      நீக்கு
    3. ஆம் ஸ்ரீராம். அதுதான் எனக்கு உங்களிடம் கேட்க விட்டுப் போச்சு.

      கீதா

      நீக்கு
  5. ஒன்று தெரியுமோ.....

    இன்று சர்வதேச விண்வெளி தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸு...பாருங்க கரெக்டா இங்கு வந்திருக்கு ஜெ கெ அண்ணாவின் பதிவு.

      கீதா

      நீக்கு
  6. பி.சுசிலாவுக்கு உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை நேற்று படித்தேன். இன்று பி.சுசிலா என்று தலைப்பில் பார்த்ததும் கொஞ்சம் பயந்து விட்டேன். அவர் செய்து வரும் நல்ல விஷயங்களைப் பற்றி அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உடல் நலக்குறை செய்திகளெல்லாம் பாதிக்கும் மேல் பொய்யாய் இருக்கும்.

      நீக்கு
  7. ஜெ.சி. சார் கதை வடிவம் இல்லாவிட்டாலும், ராக்கெட் ஏவுவதைப் பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாகவே கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் நான் படிச்ச கதை என்னும் தலைப்பு சரியில்லை. எழுத விரும்பிய கதை என்று வேண்டுமானாலும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நான் படிச்ச கதை வடிவத்தில் வராதுதான்.

      நீக்கு

    2. ​தலைப்பை கவனியுங்கள். "நான் சொல்லும் உண்மை கதை". உண்மை எனும்போது கதை செய்தியாக மாறுகிறது. கற்பனை கலக்க முடியாது. பாராட்டுகளுக்கு நன்றி.

      Jayakumar

      நீக்கு
    3. உண்மை.  வித்தியாசமாதான் இருக்கு!

      நீக்கு
  8. இன்றைய தினத்திற்கு ஏற்ற உண்மைக்கதை, ஜெ கே அண்ணா. நம் நாடு அப்போது பின் தங்கிய நாடு என்று சொல்லப்பட்ட வேளையில் விண்வெளி மையம் தொடங்கி இன்று விண்வெளித் துறையில் அசாத்திய முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கு நிகராக உலகளவில் நிமிர்ந்து நடை போடுவது என்பது பெருமையான மகிழ்வான விஷயம். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி, அசராத உழைப்பு என்ற பாடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் தீபாவளி சிவகாசி ராக்கெட் மாதிரிதான் விட்டிருக்காங்கங்கறதே நியூஸ் எனக்கு!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம். ஆனா பாருங்க....எவ்வளவு முன்னேற்றம் என்று இல்லையா?

      கீதா

      நீக்கு
  9. சுசீலாம்மா செய்தி மனதை நெகிழச் செய்த செய்தி. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    இரண்டாவது செய்தி வாசித்த நினைவு இருக்கிறதே. இங்கோ இல்லை கூகுள் செய்திகளிலோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு இருக்கும்தானே..   பொதுவெளியிலிருந்துதானே எடுத்து கோர்க்கிறேன்!

      நீக்கு
  10. ஜெ கே அண்ணா உங்கள் பதிவின் கடைசி வரியை வாசித்து சிரித்துவிட்டேன்....தலைவலி திருகுவலி...

    அப்படி வாங்க வழிக்கு....பாருங்க நாங்கலாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் கதை எழுத என்று பாருங்க....அதுவும் குறிப்பாக நான்...ஹிஹிஹிஹி அண்ணா அது அவ்வளவு சுலபம் அல்ல. உங்களை சும்மா கலாய்த்தேன்!!!!

    முதலில் மனம் கதை எழுதுவதற்கான மூடில் இருக்கணும் அதற்கான சூழல், அமைதி எல்லாம் தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு எப்படி இருந்தாலும் எழுதும் கலை உள்ளது. ஆனால் எனக்கு அது இல்லை. full concentration க்குத் தேவையான மனம். கதைக்குள் பயணிக்க வேண்டும் அபப்தான் கதாபாத்திரம் வழி இயல்பாக வந்து விழும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறய்ய நிறைய கதைகள் படிக்கும் JKC ஸாருக்கு இந்நேரம் கதை எழுத வந்திருக்கும்னு நெனச்சேன்!

      நீக்கு
  11. அண்ணா உண்மைக் கதை உரையாடல் பாணியில் நல்லாதான் சொல்லியிருக்கீங்க.

    அந்த தொப்புள் கொடி அறுபடவில்லை எனும் இடத்தில் கொஞ்சம் பதற்றத்தைக் கொண்டுவந்து. பாப்பையா செய்ததை ட்விஸ்ட்டாக வைத்துப் பண்ணியிருந்தால் இதை அத்தனையையும் ஒரு கதாபாத்திரம் பார்த்ததாகவோ இல்லை இந்த ப்ராஜெக்டில் ஈடுபட்டகதாபாத்திரமாகவோ கொண்டு போனா....கதை அவ்வளவுதான் அண்ணா. நீங்க முயன்று பாருங்க. உங்களுக்கு முடியும்.

    அப்படித்தானே பல அறிவியல் கதைகளும் எழுதப்படுகின்றன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்களுக்கு நன்றி. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. இனி ஒரு எபிசோடு கூட இது போன்று எழுதலாம் என்றிருக்கிறேன். நாயகன் நானே!

      நீக்கு
    2. கலக்குங்க.. எழுத எழுத எழுத்து கைவசப்படும்!

      நீக்கு
    3. அதனால என்ன இனி ஒன்றும் செய்வதில்லைன்னு எல்லாம் இல்லை....இனியும் எழுதலாமே!!

      ஆஹா கலக்குங்க ஜெ கெ அண்ணா...சூப்பர் வாங்க வாங்கன்னு கைதட்டி வரவேற்கிறேன், ஜெ கே அண்ணா,

      கீதா

      நீக்கு
  12. இளம் கண்டுபிடிப்பாளர் சித்தார்த்துக்கு இனிய வாழ்த்துகள். மேலும் அவருடைய திறமைகள் சிறக்கட்டும்.

    ராக்கெட் ஏவுகணை பகிர்வு படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. பி. சுசீலா அவர்கள் நோயில் கஷ்டபடுகிறேன் என்று சொல்லி இருப்பார்கள் பொருளாதார கஷ்டம் என்று சொல்லி இருக்கமாட்டார்.
    அவர் நலிந்த இசை கலைஞர்களுக்கு உதவி வருவது மகிழ்ச்சி.

    பாப்பையா விட்ட ராக்கெட் கதையும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பி. சுசீலா அவர்களின் வயது காரணமாக பலசெய்திகள் தவறுதலாக யூடியூபில் வந்திருக்கும். இங்கு பகிர்ந்துள்ள செய்தி பாராட்டுக்குரியது. பி. சுசீலா அவர்களுடைய நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இந்திய வம்சாவளி சிறுவனின் அபார கண்டு படிப்புக்கு வாழ்த்துகள்.

    இன்றைய உண்மை கதை பகிர்வு நன்றாக உள்ளது. திரு கலாம் அவர்களின் தீவிர முயற்சிகளுக்கும், அவரின் திறமைகளுக்கும் பாராட்டுக்கள்.

    ராக்கெட் ஏவுகணை பற்றிய செய்திகளும், படங்களும் நன்றாக உள்ளது. படித்தறிந்து கொண்டேன். எதுவுமே கஸ்டமான வேலைகள்தான். அதேச் சமயம் அதை தப்பாக எடை போடுவது மனிதர்களின் அறிவீனம். ஏவுகணை விஷயத்தில் விஞ்ஞானிகளின் சிரமங்களை உணராமல் பேசி விடுவது எளிது. விண்வெளி துறையில் திறமையாக பணியாற்றிய திரு. கலாம் அவர்களுக்கு நம் வணக்கங்களை தெரிவித்துக் கொள்வோம். இன்றைய பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!