வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
கீழைச் சாளுக்கிய மன்னனும், ராஜேந்திர சோழனின் மருமகனுமாகிய இராஜராஜ நரேந்திரனுக்கு ஒரு மகன் பிறந்தான். ராஜேந்திர சோழன் மறைந்து ஒரு சில நாட்களில் பிறந்ததாலும், அவனுடைய முக உடலமைப்பு ராஜேந்திர சோழனை நினைவுபடுத்தியதாலும், பாட்டனின் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள் (ராஜேந்திரன்). இளமையில் இவன், தன் தாத்தாவின் அரண்மனையிலேயே தங்கியிருந்தான். அதனால் தமிழ் மொழியும், தமிழர்களின் பழக்கவழக்கமும் இளமையிலேயே இவனுக்கு அத்துப்படியாயிற்று. இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, சாளுக்கிய மரபுப்படி இவனது பெயர் விஷ்ணுவர்தன் என்றாயிற்று. இவனுடைய தந்தை 1062ல் இறந்தபோது, இவனுடைய வயது 18. இராஜராஜ நரேந்திரனின் தம்பியான விஜயாதித்தனுக்கு தான் ஆட்சிபுரியவேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்தது. அதனால் தன் அண்ணன் மறைந்தவுடன் இளவரசன் இருந்தபோதும், தான் பட்டத்துக்கு வந்துவிட்டான். இது பற்றி விஷ்ணுவர்தனுக்கு (ராஜேந்திரன்) கோபமும் வருத்தமும் இருந்தது. ஆனால் தன் மாமனான வீர ராஜேந்திரன் பல படையெடுப்புகளில் ஈடுபட்டிருந்ததாலும், கீழைச் சாளுக்கிய தேசம் சோழருக்கு நட்பு நாடு என்பதாலும், விஷ்ணுவர்தனுக்கு அரசனாகப் பட்டம் கிடைக்கவேண்டும் என்பதில் சோழ தேசம் முனையவில்லை. இருந்தாலும் இந்தப் பகையுணர்ச்சி விஷ்ணுவர்தனனுக்கு இருந்தது என்பதை விஜயாதித்தன் மற்றும் அவன் மகனான சத்திவர்மன் செப்பேடுகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். (இந்தப் பகையுணர்வும் பிற்காலத்தில் மறைந்தது). விஜயாதித்தன் 1062ல் கீழைச் சாளுக்கிய அரசனானான் என்பதைப் பார்த்தோம்.
1063ல் அவனுடைய மகன் சத்திவர்மன் இறந்துவிடுகிறான். அதன் பிறகு விஜயாதித்தனுக்கு தன் அண்ணனின் மகனான விஷ்ணுவர்தனன் மீது பாசம் மேலிட்டுவிடுகிறது. இதுவும் பகையுணர்ச்சி மறைந்ததற்கான காரணம். தன் பாட்டன் வீட்டில் இருந்த ராஜேந்திரன் (குழப்பவில்லை. கீழைச் சாளுக்கியர்களுக்கு அவன் விஷ்ணுவர்தனன். சோழ தேசத்துக்கு அவன் ராஜேந்திரன். ஹா ஹா ஹா) சோழர் படையில் ஒரு தலைவனாகி, போர்களுக்குச் செல்கிறான். பல போர்களிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறான்.
இதற்கிடையில் 1070ல் வீரராஜேந்திரன் இறந்துவிடுகிறான். உடனேயே இளவரசனாக இருந்த அதிராஜேந்திரன் சோழ அரசனாகிவிடுகிறான். 7-8 மாதங்களே அரசனாக இருந்த அதிராஜேந்திர சோழன், உடல் நலக்குறைவால் திடும் என்று மரணித்துவிடுகிறான். அதிராஜேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அரசனின்றி நாடு தவித்தது. குறுநில மன்னர் கலகங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டன.
கலிங்கத்துப் பரணியில் இது பற்றி ஜெயங்கொண்டார் குறிப்பிட்டுள்ளார்.
மறையவர் வேள்விகுன்றி மனுநெறி அனைத்தும் மாறித்
துறைகள் ஓராறுமாறிச் சுருதியும் முழக்கம் ஓய்ந்தே
(அரசனில்லாததால் வேள்விகள் நடக்கவில்லை. மனுநெறிப்படி ஆட்சி நடக்கவில்லை. வேதம் ஓதுவதும் நின்றது)
சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும்
ஓதிய நெறியின் இல்லாது ஒழுக்கமும் மறந்து போயே
சாதிகளுக்கிடையே கலகமும், ஒழுக்கக் குறைவும் நடந்தது.
ஒருவரை ஒருவர் கைம்மி உம்பர்தம் கோயில் சாம்பி
அரிவையர் கற்பு சோம்பி அரண்களும் அழிய ஆங்கே
கலியிருள் பரந்தது
தலைவன் இல்லாவிட்டால், சட்டப்படி மக்கள் நடக்க மாட்டார்கள் என்பதை மேலுள்ள கலிங்கத்துப் பரணிச் செய்யுள்கள் சொல்கின்றன. ஒட்டக்கூத்தரும் இந்தக் காலத்தில் வாழ்ந்தவர்.
இந்த நிலையில், வடக்குப் பகுதியில் போரில் ஈடுபட்டிருந்த இராஜேந்திரன், தலைநகரின் நிலைமை தெரியவர, தான் கங்கைகொண்ட சோழனின் மகள் வயிற்றுப் பேரன் என்பதால், தனக்குள்ள உரிமை பற்றிப் பேசி சோழ அரசனாகலாம் என்று நினைத்து தலைநகரம் வந்தான். அங்கிருந்த அமைச்சர்கள், படைத்தலைவர்கள் முதலான அரசியல் அதிகாரிகள் இவனது வரவு கண்டு மிக மகிழ்ந்து (இவனின் வீரம் பற்றியும் அவர்கள் அறிவர், தலைநகர் அரண்மனையிலேயே வெகுகாலம் வாழ்ந்ததும் அறிந்தவர்கள்) இராஜேந்திரனை, சோழ தேசத்து அரசனாக 1070 ஜூன் மாதம் 9ம் தேதியில் முடிசூட்டினார்கள். முடிசூட்டும்போது அபிஷேகப் பெயராக குலோத்துங்கச் சோழன் என்ற பெயர் பெற்றான்.
அதிராஜேந்திர சோழன் ‘பரகேசரி’ என்ற பட்டம் வைத்துக்கொண்டிருந்ததால், சோழ அரசு வழக்கப்படி ‘இராஜகேசரி குலோத்துங்கச் சோழன்’ என்ற பெயரை இவன் பெற்றான். நேரடிச் சோழ ரத்தம் இவனிடம் ஓடவில்லை என்பதாலும், தந்தை வழி சாளுக்கிய மரபு என்பதாலும், இவன் தொடங்கி சோழ தேசத்தை அரசாண்டவர்கள் சாளுக்கியச் சோழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
குலோத்துங்கன் என்ற பெயர் அதுவரை யாருக்கும் இருந்திராதலால், வரலாற்றில் இவன் முதல் குலோத்துங்கச் சோழன் என்று அழைக்கப்படுகிறான்.
இவன் அரசனானதும், தேவையில்லாத போர்களைக் கைவிட்டான். இவனுடைய மாமன்கள், துங்கபத்திரை ஆற்றிற்கு வடக்கேயுள்ள பிரதேசத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்குடன் மேலைச் சாளுக்கிய நாட்டுடன் பல போர்களில் ஈடுபட்டனர். போர்களில் வெற்றிபெற்றாலும், சோழ நாட்டு வீரர்கள், அரச குமாரர்கள் உயிரிழப்புகள், நாட்டை முழுமையாகக் கைப்பற்ற இயலாமை போன்றவற்றால் பெரும் துயரம் அடைந்தனர். போர்களால் கண்ட பலன், மேலைச் சாளுக்கிய நகரங்களை அழித்தமைதான். அதனால் குலோத்துங்கச் சோழன், கீழைச் சாளுக்கியத்திற்கு அப்பால் நாடு பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். இருக்கும் பிரதேசத்தை நன்கு ஆட்சி செய்ய எண்ணினான். வடக்கே கீழைச் சாளுக்கியப் பிரதேசம் சோழ நாட்டின் பிரதேசத்துடன் சேர்ந்ததாகி விட்டது. தேவையில்லாத போர்கள் இல்லாததால் நாட்டின் செல்வச் செழிப்பு கலை போன்றவை மேன்மையடைய ஆரம்பித்தன.
முதல் குலோத்துங்கச் சோழன் 50 ஆண்டுகாலம் சோழப் பிரதேசத்தை ஆண்டான். (1070லிருந்து 1120 ஆண்டு வரை). அவனுடைய கொள்ளுப் பெயரன் இரண்டாம் இராஜராஜ சோழன், இந்த தாராசுரத்தில் காலத்தை வென்று நிற்கும் இரண்டு கோயில்களை, குலோத்துங்கச் சோழன் காலத்துக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுப்பினான்.
அனைத்துச் சிற்பங்களையும், சிதிலமான கல்வெட்டுகள்/சிற்பங்களைத் தனியாக வைத்திருந்த பொருள் பாதுகாப்பு அறையையும் கண்டு களித்துவிட்டு (பிரமித்துவிட்டு) ஐராவதீஸ்வரர் கோயிலிலிருந்து வெளியே வந்தோம். இன்னும் நிறைய படங்களை, விளக்கங்களோடு இங்கு வெளியிட ஆசை. படங்கள் இருக்கின்றன, ஆனால் விளக்கத்துக்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது.
ஐராவதீஸ்வரர் கோயிலின் வெளியே உள்ள நந்தி மண்டபம், இசைப் படிகள் உள்ள முற்றம்.
இரண்டாம் இராஜராஜச் சோழனால் (1143-1175) எழுப்பிக்கப்பட்ட இக்கோயில் கல்வெட்டுகளில் இராஜராஜேஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அகாரமண்டபம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்க்கி உயரமான அதிட்டானத்தின் மீது அமைந்துள்ளது. அகாரமண்டபம்/இராஜகம்பீர திருமண்டபம் தேர் போன்று வடிவமைக்கப்பட்டு திருபுராந்தகத் தேர் என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் சுற்றுப்புரங்களில் புராண கதைகளான திருபுராந்தகர், காலாந்தகர், கோமாரி போன்ற சிற்பங்களுடன் அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மூன்று முகங்கள் கொண்ட அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், அகத்தியர், நடனம் ஆடும் மார்த்தாண்ட பைரவர், சரப மூர்த்தி மற்றும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. ஐந்து தளங்கள் கொண்ட இக்கோயில் விமானத்தின் உயரம் 24 மீட்டர். வட்டமான கிரவம் சிகரத்தினால் விமானத்தின் உச்சி அலங்கரிக்கப்-பட்டுள்ளது. இக்கோயிலின் அருகே வட புறத்தில் தெய்வநாயகி அம்மனுக்கு என தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தான் இந்திய தொல்துறையினால் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை சொன்னது.
ஐராவதீஸ்வரர் கோயிலை முழுமையாகப் பார்த்துவிட்டு, அங்கு ஐராவதீஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு நாங்கள் கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ள தனிக்கோயிலான (இங்கு முதலிலிருந்தே தனி மதிள் சுவரைக் கொண்ட தெய்வநாயகி கோயில் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது) தெய்வநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கு கண்ட தை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.
(தொடரும் )
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குசோழர்களின் செப்பேடுகள், கேரளத்திலும் (இராஜேந்திரன் காலம்) கண்டெடுக்கப்பட்டதுன்னு வரலாறு. அவர்கள் கட்டிய கோயில்கள் நிறைய அங்கும். திருச்சூர் பகுதியில் மஹாதேவர் கோயில் ஒன்று. அப்புறம் கொஞ்சம் வடக்கே கண்ணூரில் ராஜராஜேஸ்வரா - தளிப்பரம்பும் சொல்லப்படுகிறது. அது பல இடிபாடுகளுடன் இருக்கு கோபுரம் கூட கொஞ்சம் இடிந்த நிலையில். ஏனோ அது சரிப்படுத்தப்படவில்லை. சிற்பங்கள் எல்லாம் ரொம்பவே சிதைந்த நிலையில்.
பதிலளிநீக்குகீதா
மாம்பள்ளித் தகடுகளும், வேள்விக்குடி செப்பேடுகளும் முக்கியமாக அங்கு...
நீக்குதுளசி, அப்போதைய கேரளத்தில் 108 சிவாலயங்கள் ப்ளஸ் 9 முக்கிய சிவாலயங்கள், குறித்து பதியணும் என்று ஒரு திட்டம் அதிலிருந்து தெரிந்து கொண்டது
கீதா
படங்களெல்லாம் சூப்பர். வழக்கம் போல
பதிலளிநீக்குநீங்க நிற்கும் படத்துக்கு மேல உள்ள சிற்பம் ரொம்பவே வியக்க வைக்கும் ஒன்று...நடுவில் இருப்பவரின் காலகளின் அடியில் குட்டியாவிலங்கு ஆனால் படுத்திருப்பவர் கைகளைக் கூப்பி இருப்பது போன்றும் இருக்கு..., ஈட்டி/வேலால் குத்துவது பொன்று, சண்டைக்காட்சியோ?
கீதா
வாங்க கீதா ரங்கன்.
நீக்குகாரளம் கர்நாடகா தமிழகம் என்பதெல்லாம் தற்காலத்தில்தான்.
முன்பு பாண்டிய நாடு, சேரநாடு, சோழமண்டலம், நடுநாடு, தொண்டை மண்டலம், கொங்குநாடு, கீழைச் சாளுக்கியம், இரட்டபாடி, தணிகைபாடி, மேலைச்சாளுக்கியம் என்றெல்லாம்தானே பிரிவுகள் இருந்தன.
சோழர்கள் மாபெரும் வெற்றிகள் பெற்றபோது இங்கெல்லாம் கோயில்கள் எழுப்பியிருக்கிறார்களே
நாம்கூட கர்நாடகத்தின் பல இடங்களில் சோழர் கட்டிடக் கலையுடன் கூடிய கோயில்களைக் கண்டிருக்கிறோமே
ஆமாம் நெல்லை அது தெரியும் அப்போதைய இந்த நாடுகள்....அதுவும் சோழ அரசு தற்போதைய கேரளம், கர்நாடகா, தமிழ்நாடு அதையும் தாண்டி விரிந்து இருந்தது என்பதும் கொஞ்சம் தெரியும். ஆமா....நாம பார்த்தோம்.
நீக்குஇங்கு ஒரு 6. 7 கிமீ அருகிலும் இருக்கிறது. இன்னும் படங்கள் காணொளிகள் தொகுத்து எழுத முடியலை. அத்தனை வேலைப்பளு
கீதா
காக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க.
நீக்குகாலையில் ஐபேடிலிருந்து எழுதின கருத்துகள் ஒண்ணொண்ணும் போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தன.
இன்று திருமழபாடியில் நந்தி திருக்கல்யாணம்..
பதிலளிநீக்குஅனைவருக்குமாகப் பிரார்த்தனைகள்..
வாங்க துரை செல்வராஜு சார். திருமழபாடியைப் பற்றியும் ஒரு நாள் எழுத எண்ணியிருக்கிறேன் (என்ன காரணம் என்று சட் என என் நினைவுக்கு வரவில்லை)
நீக்குசுந்தர்ரின் தேவாரத்தில்,
பொன்னார் மேனியனே புலித் தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நிளைக்கேனே
எனத்்தொடங்கும் பாடல்கள் அறியாதார் யார்?
நீங்க போர்க்காட்சியைப் பற்றிச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான சிற்பத் தொகுதி அது.
இன்றைய பகுதியைப் படிக்கும்போது, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாற்பதாவது பகுதி நினைவுக்கு வருது.
நெல்லை இது எனக்கான கருத்துதானே....
நீக்குஆமாம் நெல்லை. காலடியில் பார்த்தீங்கனா சட்டுனு விலங்கு போலத் தோன்றும் கொஞ்ச்ம பெரிசு பண்ணிப் பார்த்தா படுத்துக் கொண்டு கையைத் தலைக்கு மேல் தூக்கி கூப்பியிருப்பது கூப்பிய கைகளின் நுனியில் ஒரு முக அமைப்பு போல அது என்னன்னு தெளிவாகத் தெரியலை.
அசாத்தியமாக இருக்கு அது ஆமா நீங்க சொல்றாப்ல போர்க்காட்சிகள் எல்லாமே ரொம்பவே அழகான சிற்பத் தொகுதி
கீதா
கலைப் பொக்கிஷமாகப் பதிவு...
பதிலளிநீக்குதனி நூலாக வெளியிட வேண்டும்...
மகிழ்ச்சி..
அதை நோக்ஙித்தான் கௌதமன் சார் செல்கிறார் என நினைக்கிறேன். தவறுகள் மலிந்திருக்கக் கூடாதே என்ற அச்சம் வேறு
நீக்குவரலாறு முக்கியம் தான். ஆனால் வயதாகிவிட்ட காரணத்தால் வேண்டியன வேண்டாவாதவை என்று பிரிப்பதில் H Q (மூளை) இந்த சோழர் வரலாற்றை வேண்டாதவையில் சேர்த்து மறக்கடிக்கிறது. பெயர் குழப்பங்கள் வேறு. தெரிந்தவர்கள் பெயரையே குழப்பிக் கொள்கிறேன். வயதொத்தவர்கள் (கீதா) இவ்வரலாறு மனப்பாடம் செய்யட்டும்.
பதிலளிநீக்குபடையெடுப்புகளில் இருந்து தப்பித்த தென் நாட்டு கோயில்கள் சொல்லும் சரித்திரம் ஏராளம். நன்று.
படங்கள் நன்றாக உள்ளன.
ஒரு கல்வெட்டு தற்கால தமிழில் உள்ளதே. அதில் ஆங்கில வருடம் என்று வார்த்தையும் உள்ளதே!
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். சில வரலாறுகளை வரலாற்றுச் செய்திகளைப் படித்தால், அவர்கள் வரலாறு இவ்வளவு மோசமா என்று எண்ணத் தோன்றுகிறது. எதையும் தூர இருந்து பார்த்தால் அழகு. நீங்க முன்பு சொல்லியிருந்தீங்க, வெறும் போர்கள்தானா என்று. அதை மீறி சொந்த வரலாறை (குறிப்பாக மராத்தியர்), கொஞ்சம் அரசர்கள் மீதான பிரமிப்பு அகல்கிறது
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமையாக இருந்தது. இன்றைய பதிவிலும், தாராசுரம் கோவில் படங்கள் எப்போதும் போல் அழகாக இருக்கிறது. நல்ல நல்ல மிக கோணங்களில் அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள். தேர் போன்ற வடிவில் ஒரு பக்கம் யானையும், மற்றொரு பக்கம் குதிரையுமாக அருமை. இந்தக் கோவிலுக்கு இன்னமும் செல்லும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை. சென்ற வருடத்திற்கு முந்தின வருடம் தஞ்சை பெரிய கோவில் மட்டும் செல்லும் பாக்கியம் ஈசனருளால் கிடைத்தது.
நிறைய கற்கள் என ஒரு ஓரத்தில் குவியலாக காணப்படுகிறதே.. அவை எல்லாம் உடைந்த தூண்களின் ஒரு பகுதிகளா? .அதில் ஒரு யாளியின் சிற்பம் அமைந்த பகுதியொன்று தனியாக உள்ளது.
சோழர், சாளுக்கியச் வரலாறு நன்றாக உள்ளது. சுவாரஸ்யமான நல்ல பதிவு. தயவு செய்து இந்த சோழர் வரலாற்றை, ஒரு மின்நூலாக வெளியிடுங்கள். அனைவரும் கோர்வையாக படித்து பயனுற வாய்ப்பாக அமையும். அடுத்தப்பகுதிக்கும் தொடர்ந்து வருகிறேன்.
இன்று காலையிலிருந்து ஸ்ரீ ராம நவமி வேலைகள், பூஜையறையை சுத்தப்படுத்துதல், பானகம், நீர் மோர் கலந்து நைவேத்யம் இடையே சமையல் ஏதேதோ வேலைகள் என கைப்பேசியை தொட விடாது தாமதமாகி விட்டது. மாலை அருகில் ஒரு ராமர் கோவிலுக்கு சென்று விட்டு இப்போதுதான் வந்தோம். (ஒரே கூட்டம்.) இரவு சாப்பாடு இப்போதுதான் முடிந்து பதிலிடுகிறேன். தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ராம நவமி எளிய பண்டிகை, பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ணஜெயந்தி போன்றவைகளை ஒப்பிடும்போது.
நீக்குகோவில் தரிசனங்களே அவனருளால் கிடைப்பதுதானே. பதிவு போரடிக்காமலிருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் பகுதியில் முன்பு கிடந்த உடைந்த தேண்கள் சிற்பங்கள் கல்வெட்டுகள் போன்றவையே குவியலாக்க் கிடக்கின்றன என நினைக்கிறேன். இவர்கள் சீர் செய்யாது இருந்தபோது கோவில் எப்படி இருந்திருக்கும் என யோசிக்கிறேன்.
ராம நவமி கோவில் தரிசனம் மிக்க மகிழ்ச்சி.
இல்லை பதிவு போரடிக்கவில்லை. மாறாக சுவாரஸ்யமாக உள்ளது. நான் எப்போதுமே எந்த கதை படித்தாலும், கதையின் சம்பவங்களை கண்முன்னே நடப்பது போன்ற உணர்வுடன் மனதிற்குள் கொண்டு வந்து படிப்பேன். அதன் பின் நினைவில் எப்போதும் தங்குவது அச்சம்பவங்களை பேசி, நினைவுக்குள் கொண்டு வரும் போதுதான். அதனால் இந்த சேர சோழ அரசர்கள் கதைகளும் சுவாரஸ்யமாக மனதில் பதிகிறது. ஆனால், அரசர்களின் பெயர்கள் ஒவ்வொரு பதிவிலும் நினைவு வைத்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு ஒன்றிரண்டு தடவைகளுக்கு மேலாக படிக்க வேண்டும். நீங்கள் அரசர்களின் வாழ்வின் தகவல்களை கோர்வையாக படித்து திரட்டி எழுதி தருகிறீர்கள்.அதற்கு மிகுந்த பொறுமையும், தேடுதலுக்கான நேரங்களும் மிக முக்கியம். அதற்கு உங்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். அதனால்தான் இதை திரட்டி மின்னூலாக தந்தால் என்னைப்போல் சரித்திரக் கதைகள் விரும்பி படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்கிறேன். நன்றி.
நீக்குமிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு பகுதி எழுதும்போது பலவற்றைப் படித்து எனக்குப் புரிந்த பிறகு எழுதுகிறேன். சட் என்று என்னிடம் ஏதேனும் கேள்விகள் கேட்டால் பதில் தெரியாது. பதிவை மீண்டும் படித்துத்தான் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருக்கும்.
நீக்குஇதன் தொடர்ச்சியாக நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். தற்போது எழுதிக்கொண்டிருக்கும் 38-40 பகுதிகளுக்காக தஞ்சை மராட்டியர் வரலாறு பல புத்தகங்களில் படித்தேன். சிலவற்றைப் படித்தபோது தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போன்று அவ்வளவு குழப்பம்.
வரலாறு அருமை.
பதிலளிநீக்குமாயவரத்தில் இருக்கும் போது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை பலதடவை பார்த்து இருக்கிறேன், இப்போது உங்களின் பதிவின் மூலம் இப்போது கோயிலின் ஒவ்வொரு பகுதியும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன். இனி இந்த கோயில் நினைவுகளில் எப்போதும் இருக்கும்.
அடுத்து தெய்வநாயகி அம்மனின் தரிசனம் பெற தொடர்கிறேன்.
இப்போது கீழே கிடக்கும் தூண்கள் எல்லாம் முன்பு வட்ட வட்டமாக காட்டிய இடத்தில் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
உறவினர் வருகை, தங்கை வீடு செல்லல் அதனால் பதிவுகளுக்கு வர முடியவில்லை.
வாங்க கோமதி அரசு மேடம். நீங்கள் நலமா? பல வேலைகளில், பயணங்களில் பிஸியாக இருக்கீங்களா? நேற்றே கேட்கணும் என்று நினைத்தேன்.
நீக்குகருத்தின் கடைசிப் பகுதியை இப்போது பார்த்தேன். எல்லாம் நல்லபடி அமையட்டும்.
நீக்குவட்டவடிவமாக இருந்த இடத்தில் தூண்கள் இருந்திருக்குமா? இருந்திருக்கலாம், ஆனால் இல்லாமல் இருக்கத்தான் வாய்ப்பு. இல்லையென்றால் கோயில் வெளிப்பகுதி மறைவாக இருக்கும் அல்லவா (தூண்கள் மேலே மண்டபம் இருந்தால்?)
தங்கை கணவரின் முதல் ஆண்டு திதி அதற்கு அவள் வீட்டுக்கு போய் விட்டேன். வெளியூரிலிருந்து சகோதரிகள், தம்பி வந்து இருந்தார்கள். அவர்களுடன் தங்கை வீட்டில் இருந்தேன்.
பதிலளிநீக்கு6 ஆம் தேதிதான் வந்தேன்.
நான் நீங்க பிஸியாக இருப்பீர்கள் அல்லது ஒருவேளை உடல்நிலை சரியில்லையோ என்று தோன்றியது. இப்போல்லாம் தளத்தில் சந்திப்பதால், யாரேனும் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரவில்லை என்றால் என்ன ஆச்சோ என்று தோன்றுகிறது. நன்றி
நீக்கு