வியாழன், 3 ஏப்ரல், 2025

ஆர்த்தோவும் 'பிசியோ'வும்

 

ஆர்த்தோ டாக்டருக்கும், பிஸியோதெரபிஸ்ட்டுக்கும் ஒரு மறைமுக கட்ட பஞ்சாயத்து இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது.  இவர் சொல்வதை அவர் மறுக்கிறார். அவர் சொல்வதை இவர் மறுக்கிறார்.

டாக்டர் இதற்காகவே படித்தவர் சரியாகத்தான் சொல்வார் என்று தோன்றும்.  பிசியோ சிலபல ஆதாரங்கள் காட்டி தன் பக்கத்தை நிறுவுவார்.  குழப்பம் என்னவோ நமக்குதான்.  உண்மையில் இவர் இல்லாமல் அவர் இல்லை, அவர் இல்லாமல் இவர் இல்லை!  ஆனால் டாக்டரைப் பார்க்காமலேயே 'பிசியோ'வை தேடி வருபவர்கள் உண்டுதான்.

இப்போதைய தொழில்களில் 'பிசியோ' படித்து விட்டு சில உபகரணங்களை வாங்கிப் போட்டால் நல்ல லாபம் என்று தோன்றுகிறது.  கொஞ்சம் சப்ஜெட் அறிவும் வேண்டும்தான்.

டாக்டர் நம் கையைக் காலை முறுக்கி ஆராய்ந்து, போதிய மெஷினுக்குள் செலுத்தி படம் பெற்று அதையும் ஆராய்ந்து ஒரு பேப்பரில் மருந்துகளோடு மூன்றெழுத்து, நான்கெழுத்துகளாக எதையோ கிறுக்கி 'பிசியோவைப் பார்....   ஒரு வாரம் பிசியோ..  அப்புறம் தவறாமல் அவர் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகள்' என்று அனுப்புவதும், 

இவர் அதை வாங்கிப் பார்த்து உதட்டைப் பிதுக்கி, 'யார் பார்த்தா..?   குப்புசாமியா...   அவரு எப்பவுமே இப்படிதான்..  தேவை இல்லாததை எல்லாம் எழுதுவார்..  நானும் எவ்வளவு பார்த்துட்டேன்..  கவலைப்படாதீங்க..  நான் பார்த்துக்கறேன்' என்பதும்..

ஆர்த்தோ Knee Cap போடாதீங்க என்பார்.  'யாரைக் கேட்டு போட்டீங்க...  பிசியோ சொல்றதை எல்லாம் ஏன் கேட்கறீங்க?'

'நீங்கதானே டாக்டர் 'அவர்ட்ட அனுப்பி, பிசியோ சொல்றதைக் கேளுங்கன்னு சொன்னீங்க?'

பிசியோவிடம் வந்து ஆர்த்தோ சத்தம் போட்டதைச் சொன்னால்,  Knee Cap போடாவிட்டால் முட்டியே இடம் மாறி விடும் என்பார்.    மறுபடி ஆர்தோவைப் பார்த்தால் ' Knee Cap போடாதீங்க..  எலும்பு கம்ப்ரெஸ் ஆயிடும்'  என்பார்.   
இவரோ, 'அவர் சொல்லட்டும், நான் சொல்கிறேன்.  போடுங்க...  போடல்லைன்னா முட்டி இடம் மாறிடும்..  நவுந்து போயிடும்...  நான் சொல்லி Knee Cap போட்ட ஸ்ரீதரனைப் பார்...  ரிஷிகேசனைப் பார்...  பத்மநாபனைப்பார்,  தாமோதரனைப் பார் என்பார்!

ஒருத்தர் நடைப்பயிற்சி வேண்டாம் என்பார்.  இன்னொருத்தர் வேண்டும் என்பார்.  இரண்டு பெரும் அதற்கான காரணங்களை பொருத்தமாகச் சொல்லி குழப்புவார்கள்.

'ஏற்கெனவே டிஜெனெரேட் ஆயிருக்கு..  நடக்காதீங்க'

'நடை எப்பவுமே நல்லது...  நடங்க.. நடக்காம இருந்தா உடம்பு வெயிட் போட்டு இன்னும் பிரச்னை ஆயிடும்.  முழங்கால் வெயிட் தாங்காது'

சொல்லி வைத்து செய்கிறார்களோ என்று கூட சந்தேகம் வரும்.

2002 லிருந்தே இடது முழங்கால் பிரச்னை இருந்தாலும் நான் ஆ. மருத்துவரை அணுகியதில்லை.  ஒருவேளை அப்போதே அணுகி இருந்தால் சுலபமாக சரி செய்திருக்கலாமோ என்னவோ!

எல்லோரும் போய்ப்பார் என்று சொன்னாலும் பார்த்ததில்லை.  நான் என்னிக்கி நல்ல விஷயங்களை காதில் வாங்கி இருக்கிறேன், மிச்ச பேர் சொல்றதைக் கேட்டிருக்கிறேன்!

இப்போது கிரிக்கெட் விளையாடி முட்டியில் நோவு கண்ட மகன் ஆர்த்தோவிடம் போகிறேன், துணைக்கு வா என்று அழைத்துப்போய் என்னையும் மாட்டி விட்டு விட்டான்.

டாக்டர் செந்தில் பேண்ட்டுக்கு மேல் என் முட்டியைப் பிடித்ததுமே கால் வளைந்திருக்கிறது என்று சொல்லி என்னை வியப்புக்குள்ளாக்கினார்.  'அட, பார்றா...   பார்க்காமலேயே கரெக்ட்டா சொல்லிட்டார்...  நல்ல டாக்டர்தான் போல..'

'போய் எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க'

 ஏதோ ஒன்றை வைத்து விழ வைத்து விடுகிறார்கள்.

கூட்டமே இல்லாதது போல தோன்றினாலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.  கன்சல்டிங் 600 ரூபாய்.  டிஜிட்டல் எக்ஸ்ரே ஆயிரம்.  பிசியோ யோசனை சொல்ல முன்னூற்றம்பது.  அங்கேயே தினசரி பிசியோ செய்தால் அது தனி ரேட்.  உங்களுக்கெல்லாமும் தெரியும்.  மறுந்தகமும் வைத்திருக்கிறார்கள்.  வேறு சில சோதனைகளும் - அதாங்க டெஸ்ட்- வைத்திருக்கிறார்கள்.  ஸ்கேனும் உண்டு.

".ஆஹா.  ஸ்கேனும் உண்டு..  எக்ஸ்ரே உண்டு... லேபும் மெடிக்கல் ஷாப்பும் உண்டு..  செலவு செய்து எடுத்துப் பார்த்து டாக்டர் பாருங்கடா... அவர் சொல்லுறதைக் கேட்டுவிட்டு எக்ஸர்சைஸ் பண்ணுங்கடா..."
(இதன் ஒரிஜினல் வரிகள் பின்வருமாறு...  "ஆஹா பருப்புமுண்டு நெய்யுமுண்டு பாயாசமும் வடையுமுண்டு...  எடுத்து போட்ட எலைய பார்க்க வெளியில் நில்லுங்கடா அதை எச்சி இல கொறவன் போல வழிச்சு தின்னுங்கடா")

ஒரு நாளைக்கு அந்த ஆர்த்தோ எவ்வளவு சம்பாதிப்பார் என்பதில் மனம் ஓடியது!

எங்கள் ஏரியா பிஸியோவிடம் ரிப்போர்ட்டைக் காட்டியதும் உதட்டைப் பிதுக்கி விட்டு என்னை 'இப்படி ஆயிடுச்சே' என்பது போல  பரிதாபமாகப் பார்த்தார்.  

நான் ஏதோ 'குற்றம் புரிந்தவன்' (வாழ்க்கையில் நிம்மதி...) போல நின்றிருந்தேன்.

"இடது முழங்காலைப் பாருங்க..  குவிஞ்சு வந்து கூடா இருக்கு' என்றார். 

'அப்படியா?'  பார்த்தேன்.

'அப்படி தெரியலையே...'

சரேலென வலது காலிலும் லுங்கியை முட்டி வரை உயர்த்திக் காண்பித்தார் - என் காலில்தான்.

'இந்த முட்டியைப் பாருங்க...   வித்தியாசம் தெரியுதா?'

எனக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் புலப்படவில்லை.  

'ஆமாம்..  தெரியுது' என்று பரவச நிலையில் பக்கத்து இருக்கை மன்னிக்கவும் படுக்கை பேஷண்ட் சொல்ல, எனக்கும் இருக்குமோ என்று தோன்றியது.  

'உன் காலை..  ச்சே...   உன் வேலையைப் பார்றி..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு பிசியோ பெண்மணியைப் பார்த்தேன்.

'அதனால?;

'நான் பார்த்துக்கறேன்..  நான் சொல்ற மாதிரி மட்டும் பண்ணுங்க' என்றார்.

என்னடா...  நாம் பாட்டுக்க நடந்து கொண்டுதானே இருக்கிறோம், இவர்கள் இப்படி சொல்கிறார்களே' என்று தோன்றியது.

சும்மா இருந்தவனை - ஏதோ கொஞ்சம் சாய்த்து சாய்த்து நடந்து கொண்டிருந்தேன்- என்னை அழைத்துப் போய் ஒரு ஆர்த்தோவிடம் காட்டி...

மனசுக்குள் இளையராஜாவின் (படம் : இதயகோவில்) சோலோ வயலின் இசை கேட்டது.  துக்கம் பொங்கியது.  

அதற்கும் பொருத்தமான காரணங்கள் வைத்திருந்தார்கள்.  

'நல்ல சமயத்தில்,  இப்பவாவது காட்டணும்னு தோணிச்சே...   இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா..'  என்று நிறுத்த மகனின் பெருமையான பார்வையைத் தவிர்த்தேன்.

இவர்கள் இப்படிதான் சொல்வார்கள்... 

அந்த வார்த்தையை அவரும் முடிக்கவில்லை.  சுஜாதாவின் சின்னஞ்சிறு கதைக்குறிப்பை அவரும் படித்திருப்பார் போல...  கொஞ்சம் கொஞ்சம் பேசி, போதுமான இடத்தில் நிறுத்தி நிறைய யூகிக்க வைத்தார்.

=================================================================================================

நியூஸ் ரூம் 

தன் மனைவி, 18 மாதங்களாக மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை, அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். குழந்தைகளை தானே வளர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  
காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால், இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.  உஷார் பார்ட்டி!

சென்னை: 'ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால், 20 லட்சம் ரூபாய்க்கு, நகை, பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்' என, செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையன் சல்மான் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இலட்சியத்திருடன்!

- ராபின்ஹுட் என்னும் தெலுங்குப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே வரும் பாத்திரத்தில் நடிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம்!

மீண்டும் மீண்டும் நிலநடுக்கத்தால் மியான்மரில் தொடரும் சோகம்!

நொய்டா: டில்லி அருகே, 'ஆட்டிசம்' பாதித்த சிறுவனை சரமாரியாக அடித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுடில்லி: டில்லியில் ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக, இறப்பு நாடகமாடிய தந்தை மற்றும் மகனை டில்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

நிறம் மாறிய கண்கள்; மின்னல் தாக்குதலின் திக் திக் அனுபவங்களை பகிர்ந்த இளம்பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கார்லியின் கண்கள் மின்னல் தாக்குதலுக்கு பின், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன.

 'காவிரி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், நீரோட்டம் தடைபட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி : ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும். இந்த காலகட்டத்தில், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், ம.பி., மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும்.

- அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்சாம்ரான்கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!










==========================================================================================

கும்மாயம் உ வே சாமிநாதையர் 


கும்மாயம்னா என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா?

அப்படி உங்களுக்கு அர்த்தம் தெரியும்னா அதுக்கு காரணம் தமிழ்த் தாத்தா உ வே சாமிநாதய்யர்தான். 

அவர் பற்றி ஷார்ட்ஸ் எனப்படும் இந்தக் காணொளியில் நான் கேட்டது இங்கே தருகிறேன்...   அவர் பேசப்பேச கேட்டு, அப்படியே  டைப் செய்திருக்கிறேனாக்கும்!

=================================

"டாக்டர் உ வே சாமிநாதையர் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க...  அவர் இல்லன்னா இன்று நமக்கு தமிழ் புக்ஸ் எதுவுமே இருக்காது.  

ஏடுகள் வடிவாக இருந்தததை அவர்தான் வீடு வீடா போய் தேடி பணம் கொடுத்து வாங்கி புக்கா பப்ளிஷ் பண்ணிணார்.  அப்படி பப்ளிஷ் பண்ணும்போது ஒரு இடத்துல ஒரு வைணவச்சொல் 'கும்மாயம்' என்று ஒரு சொல் அவருக்கு அகப்பட்டது.   

பல தமிழ் வித்வான்கள் கிட்ட 'கும்மாயம்ம்னா அர்த்தம் என்ன' ன்னு கேட்டார். 

'கும்மாயமா...  தமிழ்தானா?  நான் கேள்விப்பட்டதில்லையே அப்படீனனு சொல்றாங்க  . இவர் கேக்காத ஆளில்லை.  

அவங்க எல்லாம் என்ன சொல்றாங்க, 'இது வைஷ்ணவ வார்த்தையா இருக்கு...அதனால நாமதாரிகள் கிட்ட போய்க் கேளுங்க..  அவங்க வேணா சொல்வாங்க' னு சொல்றாங்க.  

நாமதாரிகள்கிட்ட கேக்கலாம்ன்னா  ஆழ்வார் திருநகரி -  திருநெல்வேலிப்பக்கம்  - நவதிருப்பதினு ஒண்ணு இருக்கு...  ஒன்பது 
முக்கியமான கோவில் அங்க இருக்கு.  

அங்க போனா, ஒருத்தருக்கும் தெரியல 

வார்த்தையே வழக்கொழிஞ்சு போச்சு.  

அப்போ நம்மாழ்வார் புறப்பாடு.  திருவீதி உலா எதிர்ல வர்றார்.  

அவரைப்பார்த்து உடனே "நம்மாழ்வாரே..  இந்த கும்மாயத்துக்காக நான் படற பாடு...  கொஞ்ச நஞ்சம் .இல்ல.  எனக்கு வேறு வரம் ஒன்றும் வேண்டாம். இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சா போதும் அப்படீன்னு அவர்ட்ட கேக்கறார்.  

அப்புறம் திரும்பி வர்றார்.  கும்பகோணத்துக்கு வர்றார்.  கும்பகோணத்துல அவருக்கு ஒரு வேலை.  

கும்பகோணத்துக்கு வந்தா இந்த சாரங்கபாணி கோவில் கிட்ட வந்த உடனே  மழை பிடிச்சுக்குது... உடனே சாரங்கபாணி கோவிலுடைய முகப்பு இருக்கு இல்லையா...   அங்க வந்து மழைக்கு ஒதுங்கறார்.  

அப்போ மழை லேசா தூறல் விட்டுப்போச்சு..  அப்படிங்கற நேரத்துல புறபபடலமான் னு நினைச்சுகிட்டு இருக்கற நேரத்துல உள்ளேயிருந்து பட்டாச்சாரியார் தட்டை எடுத்துக்கிட்டு கோவிலை விட்டு வீட்டுக்குப் போறார்.  அவர் வீட்டுக்கு போறார்.  தட்டை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போறார். 
இவரைப்பார்த்து யாருன்னு அவருக்கு தெரில..."ஓய் ஐயரே..  என்ன இங்க நிற்கறீர்...   உள்ளே பிரசாதம் வாங்கிக்க வேண்டியதுதானே?  இன்னிக்கி  கும்மாயம்" அப்படீன்னு போறார்.  "என்ன சொன்னீங்க?  கும்மாயமா?" அப்படீன்னு திடுதிடுதிடுன்னு உள்ளே ஓடறார்.   

உள்ளே ஓடினா பெருமாள் சன்னதில உருண்டை உருண்டையா பாசிப்பருப்பும் வெல்லமும் கலந்த உருண்டை,  அதுக்கு பேருதான் கும்மாயம்.. 

அதை வாங்கிட்டு 'ஓ  இதுதான் கும்மாயமா?  என்னைப் போட்டு கும்மி பிடிச்சுட்டா கும்மி' அப்படீன்னு எழுதியிருக்கார் நூல்வடிவிலே எழுதி இருக்கார்.  

எதுக்கு சொல்ல வர்றேன்னா ஒரு நூல்ல வந்து ஐயம் திரிபற எல்லா விஷயமும் விளங்கணும்னா  நூலாசிரியரோட தயவு வேணும்.  நூலாசிரியர் நம்மாழ்வார் கிட்ட போய் அப்ளிகேஷன் போட்டாரு.  'இந்த வைஷ்ணவச் சொல் எனக்கு புரிய மாட்டேங்குதுன்னு...    அவர் நேரா கும்பகோணம் அனுப்பிச்சிட்டார். அங்க போனா  தியரிட்டிகலா மட்டும் தெரியாது.. ப்ராக்டிகலாவும் அங்கேயே கிடைக்கும்..  அங்க போ' னு அனுப்பிட்டார்."
==============================================================================================

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்று நூலிலிருந்து முன்னுரை மட்டும் .இங்கே..

பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.

எனது ஆண்கள்....

முன்னுரை:

கேரளத்தில் ஆண்கள்

இதுவரை பழகிய மலையாள ஆண்களில் எழுபத்தைந்து சதவீதம் பேரும் பெண்களைச் சரிசமமாக நினைக்காதவர்கள்தான். பெண்கள் மிகவும் மோசமானவர்கள் என்ற எண்ணம் மலையாளிகளின் பிறப்பிலேயே வந்தது. 'மலமூத்ர விஸர்ஜனமாகுந்ந பாத்ரம், நரஜன்மம் நரகத்திலாழ்த்துந்ந காத்ரம் என்று ஸ்ரீ நாராயண குருகூட நினைத்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் -உண்மைதானா என்று தெரியாது - தங்களுக்குத் தேவையானபோதும்கூட, இதெல்லாம் தன்னுடைய பெருந்தன்மை என்ற ஏளன எண்ணம்தான் மலையாளி ஆண்களுக்கு; 'வர்றியாடீ', 'உனக்கு எவ்வளவு டீ' என்றொரு மனோபாவம்.

1. மலமும் மூத்திரமும் வெளியேற்றுகின்ற பாத்திரமாகிய பெண் உடலானது, அதனை விரும்புகிறவனை நரகத்தில் மூழ்கடித்து விடும்.

கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் நிலைமை இதுவல்ல. கர்நாடகத்தில், அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லையென்றாலும் கம்பெனி வீடுகளும் அதற்கு ஆதரவு தரும் ரவுடிகள் உட்பட்ட பலரும் இருப்பதனால், பாதி அங்கீகாரம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு எல்லைக்கு அப்பால் 'வாடீ, போடீ' என்னும் மொழியை அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டில் என்றால் ஒரு தனிப்பட்ட மரியாதைதான் மலையாளிப் பெண்களுக்கு. இப்பெண்கள் அவர்களுக்குக் குப்பைக் கூளங்கள் அல்ல, அவர்கள் ஒரு படி மேலேதான் என்ற மனோபாவத்தினால் மலையாளிப் பெண்களிடம் ஆண்களுக்கு ஒரு மோகம் உண்டு.

செக்ஸ் விஷயத்திலும் இந்த வேறுபாடு உண்டு. கர்நாடகக்காரர்களுக்கு செக்ஸின்மீது பெரும் பேராசை எதுவுமில்லை. எந்த விவசாய நிலத்திலும் தேவைக்குக் காரியம் நடக்கும். இருபத்தேழு-இருபத்தெட்டு வயதுள்ளபோது எனக்கு மங்களூரில் தனியாக வீடு கிடைப்பதற்குத் தடையேதும் இல்லாமல் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரனிடம் வழியில் வைத்துப் பல மணிநேரங்கள் பேசினாலும் பிரச்சனை எதுவுமில்லை. அவனுடைய மனைவி எதிரே வந்தாலும் எதுவும் கேட்கமாட்டாள். பேராசை இல்லை. இரவில் வீட்டைத் தட்டமாட்டார்கள். பிடித்து இழுத்தல் இல்லை. அந்த அளவுக்குக் 'கிடைக்காதது' என்ற எண்ணம் அவர்களுக்கில்லை. இரவில் கணவனைத் 'தூக்கிட்டுப் போயிடுவாங்களோ' என்ற பயமும் இல்லை. மைசூரிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான்.

கேரளத்தில் எனக்கு, இந்த அறுபத்தி நான்காவது வயதிலும் வீடு வாடகைக்குக் கிடைக்காது. சுங்கவரிபோல, 'நீ பாலியல் தொழிலாளிதானே, தந்திட்டுப் போ' என்ற கண்ணோட்டம்தான். பெண்களின் விஷயத்தில் பழைய காலம்தான் இன்னும் கொஞ்சம் நல்லது என்று தோன்றுவதுண்டு. அக்காலத்தில் நாயர்களோடு உறவு ஏற்பட்டிருந்தது, அதை வைத்துக்கொண்டு வேறொருவன் வந்து, 'என்னையும் மேல படுக்க வச்சுக்க என்று நிர்ப்பந்தம் செய்யமாட்டான் அல்லவா! நான் மண் அள்ளும் வேலைக்குச் செல்கின்ற காலத்தில் எல்லாரும் பயப்பட்ட இரண்டு ரவுடிகள்தான் தெங்கம்புள்ளி பாலனும் பள்ளிவளப்பன் குட்டப்பனும். அவர்களுக்கு ஒரு 'ஏரியா' உண்டு.

அங்கே செல்ல வேண்டுமென்றால், ஒன்று வேறுவழியில் போவார்கள், இல்லையெனில் குரூப்பாகப் போவார்கள். அவர்களுடைய ரவுடியிசம் என்னவென்றால் சீட்டாட்டம்தான். ஏதாவது பெண்கள் அந்த வழியாக வந்தால் ஓடிவந்து இரண்டு மார்பையும் பிடிப்பார்கள்; கட்டிப்பிடிப்பார்கள். மார்பைப் பிடிப்பதுதான் அவர்களுடைய அதிகபட்ச ரவுடியிசம். தூக்கிக்கொண்டு போகமாட்டார்கள். கர்ப்பிணி ஆகிவிடுவார்கள் என்ற பயம்தான். அது ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிந்தால் மானம் போய்விடும். பாலன் கே.நாயரைப் போன்ற ரவுடிகளெல்லாம் சினிமாவில் இருந்துதான் வந்தார்கள். இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் உட்படப் பலவற்றிலும் பெண்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரம் 'கன்னித்தன்மை'யை அழித்தலும், 'கர்ப்பிணியாக்குதலும்'தான்.

மலையாளி ஆண்களின் கள்ளத்தனத்திற்கு ஏற்ற நிலஅமைப்புதான் கேரளத்தினுடையது. ஊரில் சாத்தியப்படாத விஷயங்களுக்கு, பக்கத்து மாநிலத்தைத் தேடி ஓடிப்போவது எளிது. என்னுடைய வாடிக்கையாளர்களில் மிகவும் பணக்காரர்களாக இருந்தவர்கள் வர்த்தகம் செய்பவர்கள்தான். ஒரு புகழ்வாய்ந்த நபரின் நண்பர் எனக்கொரு பொருளாதார உதவி செய்துதரத் தயாரானபோது, 'என்னிடம் ஒருமுறை வர வேண்டும்' என்று சொன்னார். அவர் வடகரைக்காரர்தான். 'இங்கெயெல்லாம் வேண்டாம், மங்களூருக்குப் போலாம்' என்று சொன்னார்.வடகரைக்காரரான அவர் கம்யூனிஸ்டாகவும் இருந்தார். வடக்கன் கேரளத்தில் உள்ளவர்களுக்கு மங்களூருக்குச் செல்வதுதான் விருப்பம். அங்கே நெருங்கிப் பழகுவதற்குப் பயப்பட வேண்டாம். காசும் குறைவுதான். அதிகமான பாலியல் தொழிலாளர்களும் அங்கே உண்டு. துளுவில் 'கடப்பனக்கிள்' என்றொரு
சொல் உண்டு; 'ஒளித்து ஓடுபவன்' என்பதுதான் அதன் பொருள். மலையாளிகள் வேலை தேடியும் பெண் தேடியும் மங்களூருக்கு வருவார்கள். மாஹியில் விலை குறைந்த மது கிடைப்பதுபோல மங்களூரில் செலவு குறைந்த பெண் கிடைப்பாள். லாட்ஜுகளில் காசும் ரெய்டும் குறைவுதான். கோழிக்கோட்டுக்காரர்கள் என்றால் மைசூருக்குத்தான் போவார்கள். மைசூரில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், மலையாளிகள் அவர்களுக்கு அதிகப் பணமும் கூடுதல் அன்பும் கொடுப்பதாக என்னிடம் சொன்னார்கள். ஊர்விட்டு ஊர் செல்லும்போது குணநலன்களும் மாறுகின்றன. திருச்சூர் பகுதியில் உள்ளவர்கள் பழனிக்குத்தான் செல்வார்கள். பழனியில் வயது வித்தியாசம் எதுவும் பார்க்காமல் ரூம் கொடுப்பார்கள். பக்தர்களின் வருகை காரணமாகத்தான் இது. கோட்டயத்துக்காரர்கள், திருநெல்வேலிக்குத்தான் போவார்கள். திருவனந்தபுரத்தில் உள்ளவர்களுக்குக் கன்னியாகுமரிதான் விருப்பம். சுற்றுலாத்தலமானதால் ஆணையும் பெண்ணையும் சேர்த்துப் பார்த்தால் அங்கு பிரச்சனை எதுவுமில்லை. இப்படி மலையாளிகளின் செக்ஸ் கள்ளத்தனங்களைப் பாதுகாப்பதற்குப் புவியமைப்பு பெரிதும் உதவிசெய்கிறது.

கேரளத்திற்குள் பல்வேறு ஜாதிக்காரர்களுக்கும், மதக்காரர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே, இந்த விஷயத்தில் சிறு வேறுபாட்டைத்தான் பார்த்திருக்கிறேன். நான் வாவனூரில் ரோஸியுடன் இருந்தபோது, அந்த ஏரியாவில் முஸ்லிம்களுக்கு இடையே கொஞ்சம் சரிசமமாக நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைப்பார்கள். நான் கிழிந்த பாவாடை கட்டியிருப்பதைப் பார்த்து, ரோஸியின் நண்பருக்குக் கவலை வந்து, 'கிழிஞ்சதக் கட்டக்கூடாது' என்று சொன்னார். நாயர்களுக்கு 'டிஸ்போசபிள்' மனநிலைதான். பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிதல் 'இதுகிட்ட இவ்வளவு போதும்' என்ற மனநிலை.

இந்த மூன்று மாநிலங்களுக்கும் வெளியே எனக்கு வாடிக்கையாளர்கள் இருந்ததில்லை. கல்கத்தாவிற்கும் தாய்லாந்திற்கும் டெல்லிக்குமெல்லாம் பயணம் செய்தபோது மலையாளிகளுக்கு மட்டுமேயுள்ள சில அற்பத்தனங்களையும் குரூரங்களையும் பற்றி, பின்னோக்கிப் பார்த்து என்னால் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

தாய்லாந்தில் ஓர் அனுபவம் ஏற்பட்டது. தோழி லலிதா உடன் இருந்தார். லலிதாவிற்குக் கொஞ்சம் இந்தி தெரியும். ஆனால் அவளுக்குப் பொதுவாகவே முஸ்லிம்களிடம் ஓர் ஏளனம் இருந்தது. நாங்கள் ஹோட்டலில் உட்கார்ந்து மதுபானம் குடித்துக்கொண்டிருந்தோம். அந்தப்பக்க இருக்கையில் இரண்டு பாகிஸ்தான்காரர்கள் இருந்தனர். அவர்கள் மதுபானம் குடிக்கவில்லை. நான் எனக்கு முன்னால் இருந்த பாயச டம்ளரை உயர்த்தி அவர்களிடம் 'சியர்ஸ்' சொன்னேன்.அவர்களும் உயர்த்தி, எங்களை அங்கே அழைத்தனர். லலிதா தயங்கினார். நம்முடைய எதிரிகள் அல்லவா என்று கேட்டார். பின்னர் நாங்கள் இருவரும் அங்கேபோய் உட்கார்ந்தோம். யார் என்று கேட்டபோது உண்மையைச் சொன்னேன். பாலியல் தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்வுக்குக் கேரளத்திலிருந்து வந்ததாகச் சொல்லியும் அவர்கள் கிட்டத்தட்ட அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர். கேரளமாக இருந்திருந்தால், அப்போதே பேச்சை வெட்டிக்கொண்டிருப்பார்கள். ஒருமுறை கல்கத்தாவிலிருந்து வந்த தோழிக்குக் காய்ச்சல் வந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நாங்கள் யாரென்று தெரிந்ததும், டாக்டர் தொடுவதற்குக்கூடத் தயாராகவில்லை. ஏளனமும் புறக்கணிப்பும்தான் இங்கே. தொற்றுநோய் வருவதுபோலத் தள்ளி நிற்பார்கள்; இருந்தும் பெண்ணைப் பார்த்தால் சும்மா விடவும் மாட்டார்கள். ஒருமுறை நான் மைசூரிலிருந்து கோழிக்கோட்டிற்குப் பஸ்சில் வந்துகொண்டிருந்தேன். வயநாட்டின் வனப்பகுதியில் நுழையும்போது மாலை நேரமாக இருந்ததால், வெளியே அழகான காட்சிகள். பனிமூடிய மலைத்தொடர்கள். அதை இரசிப்பதற்காக எனக்குப் பின்னால் இருந்தவர் ஜன்னல் கண்ணாடியை முன்னோக்கி நகர்த்தியபோது அது என் கையில் பட்டது. நான் கோபமாகத் திரும்பிப் பார்த்தேன். மொத்தத்தில் நான் உட்பட ஏழெட்டுப் பேர்தான் பஸ்ஸில் என்னுடைய பார்வையைப் பார்த்து, 'பின்னால் உள்ளவர் என்னை நோண்டியிருப்பார்' என்று மற்றவர்கள் நினைத்தனர்.

சுவாரஸ்யம் அதுவல்ல; அவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டு குறுக்கிட்டனர் என்பதுதான்!'அப்படிப்பட்டவளாக இருக்கலாம்' என்று சொல்லி, விஷயம் தெரியாமல் அந்த நபரை நியாயப்படுத்தினார்கள். எனக்கு அருகிலிருந்த இளைஞன் உண்மையை விளக்குவதற்கு முயற்சித்தபோது, எல்லோரும் அவனுக்கு எதிராகத் திரும்பினர். 'உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல' என்று சொல்லித்தான் தாக்குதல் நடத்தினர். 'நம்முடைய மனைவிகள் யாரும் இப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டார்கள்; இவள் ஒரு சரியான பெண்ணென்று தோன்றவில்லை' என்றெல்லாம் சொல்லிக் கோழிக்கோடு வரும்வரை தகராறு தொடர்ந்தது.இடிப்பதையும் தடவுவதையும் பொறுத்துக்கொள்கின்ற, எதிர்த்துப் பேசாத மனைவிதான் 'நல்ல பெண்' என்ற பாடத்தை அன்று நான் படித்தேன். நேரங்கெட்ட நேரத்தில் பயணம் செய்கின்றவள் மோசமான பெண்தான். அதே சமயம்,வேலையின் காரணமாகக் கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் மைசூரில் விடியற்காலை மூன்றுமணிக்கெல்லாம் பஸ்ஸிலிருந்து இறங்கிப்போயிருக்கிறேன், எந்தவிதமான கேள்வியும் இல்லாமல்.

மலையாளிகள் மதிக்க வேண்டும் என்றால் 'போனஸாக' ஏதாவது இருக்க வேண்டும்; வெள்ளை நிறமோ,பார்ப்பதற்கு அழகோ எல்லாம்... குருவாயூரில் எனக்கு ஒரு தோழி உண்டு. கிட்டத்தட்ட முப்பதுவருடங்கள் குருவாயூரில் தங்கியிருந்து பொருளாதார அடிப்படையில் என்னைவிட மேல்நிலைக்கு வந்த தோழி ஆனால் அவளால் பகலில் எந்த ஆணோடும் சேர்ந்திருக்க முடிந்ததில்லை. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன் என்பதற்காக எனக்கு ஒருபோதும் அதிகக் காசு கிடைத்ததும் இல்லை. இரவானால் அழகு, அழகின்மை என்றெல்லாம் எதுவுமில்லை மலையாளி ஆண்களுக்கு.என்னை அவர்களுடைய மனைவி என்று சொல்லி ரூம் எடுக்க முடியும் என்னும் வாய்ப்பு இருப்பதால்தான், என்னையெல்லாம் பகலில் அழைத்துக்கொண்டு செல்வார்கள். கோவிலாக இருந்தாலும் தேவாலயமாக இருந்தாலும் அதற்குப் பக்கத்தில் ரூம் எடுப்பதற்குச் செல்கின்ற வெள்ளைநிறப் பெண்களுக்கு ரூம் கொடுப்பார்கள்; மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.

தன்னைத் தவிர்த்து யாரும் பார்க்கவில்லை என்றால், மலையாளிக்கு இரவில் எந்தப் பெண்ணும் சம்மதமே. அமலா மருத்துவமனை அருகில் எனக்கு வேறொரு தோழி இருந்தாள். அவளிடம் குளிக்கச் சொல்லும்போது, "நேத்து ராத்திரி சார் என்னெ தேச்சுக் குளிக்கவச்சாரு" என்று சொல்வாள்.

குளிக்கவைத்துச் செக்ஸ் வைத்துக்கொள்கின்ற வாடிக்கையாளர்கள் உண்டு. அழகு குறைந்தவர்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை இதற்குப் பின்னால் இருக்கிறது. 'கன்னித்தன்மை' என்ற மூடநம்பிக்கையில் அல்லவா மலையாளியின் 'தன்னுணர்வு' நிறுவப்பட்டிருக்கிறது. முதலிரவில் அழாததனால் சந்தேகத்திற்கு உள்ளான அனுபவத்தைப் பல மனைவிகளும் என்னிடம் சொன்னதுண்டு. ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதனால் பெண்குறியில் புண் ஏற்பட்டு, அதன் காரணமாக அழுதால் இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிதான்; ஏனென்றால் அந்தப் பெண் கன்னித்தன்மை உள்ளவள் என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை.

வெளிநாட்டில் வாழ்வதாலோ அல்லது வேறு ஏதோ செய்வதன் பெயரிலோ மாறுபட்டவர்கள்தான் மீதி வருகின்ற இருபத்தைந்து சதவீத ஆண்கள். ஒரு செயற்பாட்டாளராகவோ, எழுத்தாளராகவோ எதுவுமில்லாமலிருந்த காலத்தில் நான் பழகிய, என்னோடு நெருக்கம் காட்டிய சில நண்பர்களைப் பற்றித்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன்.

நளினி ஜமீலா
=============================================================================================================

ஞானக்கூத்தன் கவிதை ஒன்று இந்த வாரம்.  அவர் 1971 ல் எழுதியது.  'கல்மண்டபம்' ( நினைவிருக்கிறதுதானே?)  படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  அதன் அணிந்துரையில் வண்ணதாசன் அவருக்கு நினைவுக்கு வந்த இரண்டு ரெபஃரென்ஸ் குறிப்பிடுகிறார்.  ஒன்று இந்தக் கவிதை..  தேடி எடுத்து விட்டேன்.  இன்னொன்று வண்ணநிலவன் எழுதிய 'பிணத்துக்காரர்கள்' என்னும் சிறுகதை.  அது எவ்வளவு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை.


அன்று வேறு கிழமை
 ஞானக்கூத்தன்

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்
-------------------    1971

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொக்கிஷம்.






82 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பத்தைப் படித்தபிறகு என் மனதில் நிற்கும் விஷயம் ஆட்டிசம் மாணவரைத் தண்டித்த தலைமையாசிரியர்.

    சட் என கோபம் வந்தாலும், அவர்களைக் கையாளும் திறன் இல்லாத்தால்தான் கோபம் வரைகிறது எனப் புரிகிறது. ஆனால் அவர் ப்ரோஃபஷனில் மாணவர்களைக் கையாளும் திறன் இல்லையென்றால் வேலைக்கு லாயக்கில்லை என்றுதான் பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருமானத்துக்காக ஏதோ ஒரு வேலை என்று இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்கள் இந்த மாதிரி வேலைகளுக்கு வரக்கூடாது.

      நீக்கு
  2. உ வே சா வின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மிகவும் ரசனையானவை. பல முறை அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் இருந்த நொடித்த வள்ளல் பரம்பரையைப் பற்றிய நிகழ்வை (பரம்பரைக் குணம்) இங்கு பகிரவேண்டும் என்று நினைத்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிரலாமே... அவர் பிறந்த / நினைவு நாளையொட்டி கூட பகிரலாம்..

      நீக்கு
  3. ஆர்த்தோவை ஒரு முறை பார்த்தால் மூவாயிரம் இடம் பெயர்ந்துவிடும். பிறகு அவர் சொல்லும் பிசியோதெரபி செஷ்ன்ஸை நினைத்தாலே எனக்கு அலர்ஜி. நடப்பதால் மூட்டுவலி வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் என்றுதான் தோன்றுகிறது.  மூட்டுவலி வந்ததால் நடக்க முடியவில்லையா, நடந்ததால் மூட்டு வலி வந்ததா? இறைவா...

      நீக்கு
    2. கொடியசைந்ததும் காற்று வந்ததா?
      காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

      நீக்கு
    3. எடை குறைப்பைக்காக புனே கோர்சில் சேர்ந்தேன். மூன்று மாதங்கள் ஓரளவு நன்றாகச் சென்றாலும் தொடர்ந்த பயணங்கள் டயட் மற்றும் எடையைப் பாதித்தது. ஆச்சு.. முக்கால் வருஷம் ஓடிடுச்சு.

      சொல்ல வந்தது, அந்த கோர்ஸ் பிரகாரம் தினமும் 150 x 3 படிகள் ஏறினேன். முட்டியில் அசௌகரியம் வருவதுபோலத் தோன்றியவுடன் நிறுத்திவிட்டேன். தினமும் நடப்பதை விடவில்லை. அது சரி.. இயக்கமில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தால் மேட்டு பத்திரமாக இருக்குமா?

      நீக்கு
    4. சமீபத்தில் பார்த்த காணொளியில், தோனி 10 ஓவர்களெல்லாம் விளையாடமுடியாது, மூட்டு அதற்கு ஒத்துழைக்காது, இரண்டு மூன்று ஓவர்களே அதிகம் எனப் படித்தேன். 43 வயசு. விராட், புலாலால் அசிடிட்டி அதிகமாகி மூட்டு மற்றும் எலும்பில் கால்சியம் குறைவதால் சைவத்துக்கு மாறிவிட்டேன் எனக் கூறியிருந்தார்.

      நீக்கு
    5. இப்போது என் நிலையும் நடப்பதா நடக்காமல் இருப்பதா என்கிற குழப்பம் தான். முழங்காலுக்கு ஒரு நீ கேப் போட்டுக் கொண்டுதான் நடக்கிறேன். ஆனாலும் முழங்காலை அது - நடை - பாதிக்குமா என்கிற பயமும் இருக்கிறது. உடலும் குறைய வேண்டும்... என்ன செய்வதோ போங்கள்..

      வெந்நீரில் தேன் போட்டு எல்லாம் குடித்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    6. ஃபிசியோ தெரபிஸ்ட் என்றால் எங்களுக்கு வாய்த்தவர் தான். நல்ல மனிதர் என்பதோடு மருத்துவர்கள் எல்லாம் ஆபரேஷன் இல்லை எனில் இவர் எழுந்து; உட்காரவோ,, நடக்கவோ முடியாது எனச் சொன்னதைப் பொய்யாக்கினார். சும்மாவானும் பயிற்சிகளைச் செய்யச் சொல்லிட்டுப் போயிட மாட்டார். வந்ததில் இருந்து அவர் கூடவே இருந்து நிற்க வைத்து.நடக்க வைத்து படிகள் இறங்க வைச்சு, கீழே கார் பார்க்கில் நடைப்பயிற்சி கொடுத்துனு கிட்டத்தட்ட எட்டு மாசம் அவரோடு தினம் தினம் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்தார். கடைசி இரண்டு மாதங்கள் மட்டும் அவராகவே வாரம் 3 முறை, 2 முறை, ஒரே தரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வந்து டிசம்ப்ர் 31 ஆம் தேதியோடு முடிச்சார். வேலையில் கவனம், அதை விட்டு வேறே பாதை மாறாமல் கொண்டு வருவது எனப் பாடு பட்டார். திருச்சி பெரியாஸ்பத்திரியில் அவர் மருத்துவராக இருந்தாலும் பெரும்பாலும் கிராமங்களில் தான் வேலை. துரை முருகன் என்னும் பெயர்.

      நீக்கு
    7. எங்க பையருக்கு நெல்லை மாதிரி வேகமாக ஓடுதல் எனில் கண் மண் தெரியாமல் பத்து சுத்துப் போவார். அதிலேயே முழங்கால் பலவீனம் அடைந்து விட்டதாக மருத்துவர் சொன்னார் எனக் கேள்வி. ஆபரேஷன் எல்லாம் செய்து கொண்டார். ஆனாலும் ஒரு கால் மூட்டைச் சரியாம மடிக்க முடியாமல் விந்தி, விந்தி தான் நடக்கிறார் ரொம்பவே உடலைக் கஷ்டப்படுத்திக் கொண்டு செய்யும் பயிற்சிகள் உடலுக்குக் கேடுதான். அதனாலேயே விளையாட்டு வீரர்களுக்குச் சீக்கிரம் முழங்கால் மூட்டுத் தேய்ந்து விடுகிறது எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    8. சில சமயங்களில் இப்படி நல்ல மனிதர்கள் விடுவதுண்டு. பொறுப்பான நல்ல இருந்திருக்கிறார். அதுவும் துரைமுருகன் என்று பெயர் இருந்தும் கூட !!

      நீக்கு
  4. இத்தனை நாள் வராமல் இருந்த கீதா மாமி முட்டி வலி என்றவுடன் இன்று கட்டாயம் எங்கள் ப்ளாகுக்கு வருவார்.
    60கடந்தால் எல்லோருக்கும் முட்டி வலி. பாஸுக்கு உண்டு. knee cap பல வருடங்களாக உபயோகிக்கிறார், வெளியில் செல்ல அது கட்டாயம் அணிய வேண்டும். .
    புத்தக காட்சியில் வாங்கிய புத்தகங்களை தற்போது திறந்து பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நளினி ஜமீலா கதை மலையாளத்தில் பிரபலம் என்றாலும் அதிகம் பேசப்படவில்லை. காரணம் எல்லா பாலியல் தொழிலாளிகளும் நேரிடுவது தான். அதைக்காட்டிலும் கமலா தாஸின் சுயசரிதை அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளான ஒன்று. வார பத்திரிக்கையில் தொடராக வந்தது.

    கவிதையின் உருவகத்தை, உட்பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை. நாய் எதைக் குறிக்கிறது? மனம் ஒரு குரங்கு போலவா?
    (நாயை குளிப்பாட்டி....?)

    அரிசி பஞ்சம் பற்றி ஜோக் சுஜாதாவின் அரிசி என்ற சிறுகதையை நினைவூட்டியது. விபத்தில் அடிபட்டு இறந்து கிடக்கும் கிழவன் வாங்கியிருந்த ரேஷன் அரசி ரோட்டில் சிந்தியிருப்பதை, இரத்த கரை இல்லாதவற்றை இரு சிறுவர்கள் பொறுக்கும் கதை.

    நாங்கள் அரிசி பஞ்சத்தை கேரளாவில் அனுபவித்த காலம். ரேஷன் அல்லாது வேறு எங்கும் அரிசி கிடைக்காது. ரேஷன் கார்ட் பெற எடுத்த முயற்சிகள் ஆகிய எல்லாம் மனதில் தோன்றின.

    pdf எடிட்டிங் படிச்சிட்டீங்கன்னு தோணுது. கில்லெர்ஜீ செய்வது போல் இனி எடிட் செய்த படங்களை காணலாம். கடைசி ஆ வி ஜோக் படத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இத்தனை நாள் வராமல் இருந்த கீதா மாமி //

      இல்லையே...   கீதா அக்கா செவ்வாய் சிறுகதை உட்பட சில பதிவுகளுக்கு வந்து கொண்டிருக்கிறாரே...   சென்ற வியாழனும் வந்திருந்தாரே...

      விருது அறிவிக்கப்பட்ட உடன் கிண்டிலில் வாங்கிய புத்தகம் எனது ஆண்கள்   கமலா தாஸ் கதை எப்போதோ படித்தது!

      உருவகம் எதுவும் இல்லை கவிதையில் என்றே நினைக்கிறேன்.ஒரு பாடைக்காட்சி...  சோகம் துக்கம் ஆகியவற்றின் மறுபக்கம்.

      pdf எடிட்டிங்  எல்லாம் தேவை இல்லை. ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் கூட போதும்.

      மலையாள கும்மாயம் தெரியாது 

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
  5. மலையாளத்தில் கும்மாயம் என்றால் சுண்னாம்பு என்று அர்த்தம். தமிழிலும் சிலர் தற்போதும் உபயோகிக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  6. நியூஸ ரூம் முதல் செய்தியில் அதன் பின் ஒரு மாற்றம்.
    அந்தப் பெண்ணின் புதிய மாமியார், ' என்ன இருந்தாலும் குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பில்தான் வளர வேண்டும் என்று சொல்லி , அவள் கணவனிடமே திருப்பி அனுப்பி விட்டாராம். அவள் கணவனும் இதற்கு சம்மதித்து திரும்ப ஏற்றுக்கொண்டு இப்போ அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கிறார்கள் ஆம்!
    Truth is stranger than fiction!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ஒரு செய்தி என்று வெளியிடுகிறீர்கள். அடுத்து எப்போ ஓடுவாளோ என்று கணவனுக்கு இருக்காதா? இல்லை உறவு தொடருமா அந்த இன்னொருவனுடன்?

      நீக்கு
    2. அந்தப் பெண்மணி இந்திய நாட்டு, ஏழை எலிசபெத் டெய்லர்!

      நீக்கு
    3. தகவல் அப்டேட்டுக்கு நன்றி கே ஜி ஜி.

      ஆனால் நான் இன்று தினமலர் பார்த்தேனே... என் கண்ணில் எதுவும் பட வில்லையே...

      நீக்கு
    4. நேற்றோ அல்லது அதற்கும் முன்போ படித்தேன்.

      நீக்கு
    5. முதல் செய்தி தினமலர் மார்ச் 28. இரண்டாவது செய்தி தினமலர் ஏப்ரல் 1. இதன் லிங்க் ஸ்ரீராமுக்கு இப்போ அனுப்பியுள்ளேன்.

      நீக்கு
  7. எனது ஆண்கள் பகுதி எங்கள் பிளாக்கிற்கைப் பொருத்தமாகத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கிற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

      இப்படியும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?!!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா !வணக்கம் .பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. ஸ்ரீராம், முதல் இரண்டு பாராவை அப்படியே டிட்டோ செய்கிறேன். அதுவும் கடைசி வரியை. //ஆனால் டாக்டரைப் பார்க்காமலேயே 'பிசியோ'வை தேடி வருபவர்கள் உண்டுதான்.//

    நான் ஒரு சில பிரச்சனைகளுக்கு மட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சென்னையில் திருவான்மியூரில் இருக்கும் டாக்டர் சுந்தர் மருத்துவரும், கூடவே ஃபிசியோதெரப்பிஸ்ட். அவர் நல்ல சஜஷன்ஸ் கொடுப்பார். அவருக்கு மாத்திரை தரவும் முடியும். சர்ஜரி தேவை என்றால் சர்ஜரி செய்யும் ஆர்த்தோ மருத்துவரைப் பார்க்கச் சொல்லிவிடுவார். வழிகாட்டுதல் சரியாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மருந்தும் prescribe செய்வார்.

      கீதா

      நீக்கு
    2. மருந்து பிரிஸ்கிரைப் செய்வது என்பது இப்போதெல்லாம் பாமர மக்கள் கூட தங்கள் அனுபவங்களை வைத்து மெடிக்கல் ஷாப்பில் சென்று மருந்துகளின் பெயர் சொல்லி வாங்கி கொள்கிறார்கள்.

      நீக்கு
    3. ஹாஹாஹா....சிரித்துவிட்டேன்....Over the counter மருந்துகள் நம்மூரில் இருப்பதால்தான் இப்படி. வெளிநாடுகளில் வாங்க முடியாது.

      கீதா

      நீக்கு
  11. இப்போதைய தொழில்களில் 'பிசியோ' படித்து விட்டு சில உபகரணங்களை வாங்கிப் போட்டால் நல்ல லாபம் என்று தோன்றுகிறது. கொஞ்சம் சப்ஜெட் அறிவும் வேண்டும்தான்.//

    ஆனா கண்டிப்பா சப்ஜெக்ட் அறிவு இல்லைனா ஊத்திக்கும்.

    இதுல ஃபிசியோக்கு ஃபிசியோவே மாறுபடுவதுண்டு. இங்க நான் முதல்ல போன ஃபிசியோ ஸ்பெஷலைசேஷன் ஸ்போர்ட்ஸ் ஃப்சியோ கேர், என் Achilles tendonitis கு குதிகால் மேல ஒரு உறை திக்கா அது அசையாம இருக்க...ஆறும் வரை. போடச் சொன்னாங்க. இன்னொருத்தார் சமீபத்துல அதெல்லாம் போடக் கூடாதுன்னு இரத்த ஓட்டம் தடைபடும்னு...இவர் தமிழ் மருத்துவத்திலும் டாக்டரேட். தமிழர்.

    கடைசில எனக்கு எது சரியாக சௌகரியமாக இருந்ததோ அதைச் செய்துவருகிறேன். பெரும்பாலும் அந்த முதல் ஃபிசியோதெரப்பிஸ்ட் பெண் சொன்னதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சாதாரண மனித மனோபாவம் கீதா. ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது போல, மருத்துவருக்கு மருத்துவர் கருத்து வேறுபாடு இருப்பது போல, இவர்களும் அதே மாதிரி தான்.... மாற்றி மாற்றி சொல்வார்கள்

      நீக்கு
  12. புன்சிரிப்பை வரவழைக்கற விதத்துல எழுதியிருக்கற நீங்க சோலோ சோக வயலினிசையை வாசிச்சிருப்பீங்க க்ளினிக்ல! புரியுது. பசங்க சமத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆர்த்தோ.ஃபிசியோ நல்ல வருமானம் தான். அதுக்கேத்தா மாதிரி மக்களும் லைஃப் ஸ்டைல் மாறி நாமளும் முட்டி வலி கை வலின்னு போக வேண்டியதாயிடுச்சே....பின்ன அவங்க காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாமல் இருப்பாங்களா...

    இப்ப ஸ்பெஷலைசேஷன் எதுல ட்ரென்ட் தெரியுமா? சர்க்கரை வியாதி, ஆர்த்தோ - சர்க்கரையோட வந்துருமே இதுவும் - ஃபிசியோ, சைக்காலஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே உணவகங்களிலும், மருத்துவம் சார்ந்த இடங்களிலும் தான் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது!

      நீக்கு
  14. ஆட்டிசம் தினம் நேற்று.

    ஆட்டிசம் மாணவன் அடிக்கப்பட்டது மனதை ரொம்பக் கஷ்டப்படுத்திடுச்சு. பாவம்...

    என் தங்கை ஆட்டிசம் அவார்னெஸ் தினத்தை வரும் ஞாயுறு அன்று அக்குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி செய்கிறாள் அவள் வசிக்கும் கம்யூனிட்டியில். புத்தகமும் வெளியிடுகிறாள். புத்தகத்துக்கு அழகான அணிந்துரை ஒன்றை எழுத்தாளர் நாடகவியலாளர், திரு பொன்னேசன்/பென்னேஷ்வரன் அவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீராம் கேள்விப்பட்ட பெயராக இருக்கா? செல்லப்பாசார் நடத்திய கதைப் போட்டியில் பங்கு கொண்டவர். மத்திய அமைச்சகத்தில் பணி புரிந்தவர்/ முன்னால் எம் பி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே.... பெயர் என்ன?

      நீக்கு
    2. பென்னேஷ்வரன்னு சொல்லிருக்கேனே ஸ்ரீராம், கருத்தில்

      கீதா

      நீக்கு
    3. பெண்ணேஸ்வரன். மிக நெருங்கிய நண்பர். தில்லித் தமிழ்ச்சங்கத்தில் இவரை அறியாதோர் இல்லை. அதே போல் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த பள்ளியிலும். நான் தில்லி போனப்போ எல்லாம் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை. நாங்க இருந்தது குருகாவ். அவர் புது தில்லி அரசுக் குடியிருப்புனு நினைக்கிறேன். இப்போக் கிருஷ்ணகிரிக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார். அவர் பெண் ஒருத்தி பரத நாட்டிய நிபுணி. தில்லியில் நடைபெறும் அனைத்து நாடகங்களிலும் இவர் பங்கில்லாமல் இருக்காது. பாரதி மணிக்கு நெருங்கிய நண்பர். இன்னமும் இருக்கு சொல்ல. பின்னால் சொல்றேன். இப்போச் சொந்த வேலை காரணமாகக் கொஞ்ச நாட்களுக்காக முகநூலில் இருந்து விலகி இருக்கார். மே அல்லது ஜூனில் திரும்பி வரலாம்.

      நீக்கு
    4. சி.சு.செல்லப்பாவின் நெருங்கிய சீடர் என்பதோடு விமரிசகர் வெங்கட் சாமிநாதனுக்கும் வேண்டியவர். வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமரிசனக் கட்டுரைகளை மின் தமிழில் மரபு விக்கியில் நான் தான் வலை ஏற்றிக் கொண்டு வந்தேன். அப்போப் பழக்கம் என்றாலும் ஏதோ ஒரு கூச்சம் வெங்கட் சாமிநாதனுக்குப் பேசுவ்தற்குத் தடை செய்யும்.

      நீக்கு
    5. // வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமரிசனக் கட்டுரைகளை மின் தமிழில் மரபு விக்கியில் நான் தான் வலை ஏற்றிக் கொண்டு வந்தேன். அப்போப் பழக்கம் என்றாலும் ஏதோ ஒரு கூச்சம் வெங்கட் சாமிநாதனுக்குப் பேசுவதற்குத் தடை செய்யும். //

      உங்களுக்கு அவரோடு அந்த அளவு பரிச்சயமிருந்தது என்பது வியப்பு ப்ளஸ் பெருமை.

      நீக்கு
  15. கும்மாயம்னு பார்த்ததுமே, கேரளத்துல சுண்ணாம்புப் பொடியையும், நம்ம தமிழ்நாட்டுல, செட்டிநாட்டு ஸ்பெஷல் ஆடிக்கும்மாயம் தான் நினைவுக்கு வருது! நம்ம வீட்டுல பாட்டி செய்வாங்க கோவில்ல செய்வதுண்டுன்னு இது ஸ்வீட் பாசிப்பருப்பு வெல்லம் எல்லாம் கலந்து செய்யற ஒன்று பிடிச்சு உருண்டையா...

    இருங்க நீங்க கொடுத்ததை வாசிச்சுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டி என்கிற சொல்லுக்கு மலையாளத்திலும், தமிழிலும் வேறு வேறு அர்த்தங்கள் இருப்பது இல்லையா?!! அது போல தான்.

      நீக்கு
    2. கருப்பட்டித் தான் சேர்ப்பாங்க கும்மாயத்திலே பெரும்பாலும்

      நீக்கு
    3. ஓ... நான் சாப்பிட்டதில்லை, பார்த்ததில்லை!

      நீக்கு
  16. அட! நீங்க கேட்டுச் சொல்லிருக்கறதும் நம்ம கும்மாயம்தான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியே ஆர்த்தோ, பிஸியோ என நகைச்சுவை கலந்து, சொல்லி, சற்று பயமுறுத்தியும் இருக்கிறீர்கள். நான் பலதடவைகள் சறுக்கி விழுந்து எழுந்த போதெல்லாம் இதைத்தான் அனைவருமே வலியுறுத்துகிறார்கள். இப்போது இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டிலேயே விழுந்த எழுந்த என் சுயஅனுதாப பதிவுக்கும் நமது நட்புகள் என் மேலுள்ள அக்கறையுடன் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால், எனக்குத்தான் மருத்துவர் என்றாலே இப்போதெல்லாம் ஏனோ ஒரு தயக்கம் வருகிறது. உங்கள் பதிவை பார்த்ததும் இன்னமும் கூடுகிறது.தானே சரியாகும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்கிறது.

    /நல்ல சமயத்தில், இப்பவாவது காட்டணும்னு தோணிச்சே... இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா..' என்று நிறுத்த மகனின் பெருமையான பார்வையைத் தவிர்த்தேன். /

    ஹா ஹா ஹா. சிரித்து விட்டேன். என்னவோ ஒரு நேர்ந்தால் நம்மை இப்படி தள்ளி விட்டு தூரத்திலிருந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறது. நல்லபடியாக ஆகி விட்டால், நல்லதுதானே...! நல்லதாகவே நடக்கட்டும்.

    தங்களின் அருமையான எழுத்துக்களை மிகவும் ரசித்தேன். ஏகப்பட்ட வேதனைகளிலும் , நகைச்சுவை என்பது நல்லதா, கெட்டதா என ஒரு பட்டிமன்றம் வைக்க வேண்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "என்னவோ ஒரு நேரந்தான்" என படிக்கவும். இந்த வார்த்தை பிழைகள் வேறு அடிக்கடி வந்து வார்த்தைகளின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி விடுகிறது.

      நீக்கு
    2. அச்சச்சோ... இந்த நேரத்தில் போய் இதை எழுதி உங்கள் சந்தேகத்தையும் அதிகமாகிவிட்டேனா! நீங்கள் ஏற்கனவே மருத்துவரிடம் போக மாட்டீர்கள். இப்போது நான் வேறு அதை கெடுத்து விட்டேனா....

      கண்டிப்பாக மருத்துவரை பாருங்கள். நான் கூட சொல்லி இருக்கிறேன் பாருங்கள்... ஒரு வேளை முன்னரே பார்த்து இருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்து இருக்கலாம் என்று

      நீக்கு
    3. கமலாக்கா....கண்டிப்பா நீங்க மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்

      ஸ்ரீராம் சொல்வதை டிட்டோ செய்கிறேன்...

      கீதாக்காவும் சொல்லிருக்காங்க பாருங்க..அவங்க கஷ்டங்கள்.. பதிவுல ஆனா அவங்க கரெக்ட்டா செக்கப் போய்டுவாங்க.

      கீதா

      நீக்கு
  18. நளினி ஜமீலா மாதிரி முன்னாடி நம்ம ஊர்லயும் யாரோ எழுதின நினைவு வாசிச்சதில்லைன்றதுனால நினைவில்லை. அல்லது தான் ஏமாற்றப்பட்ட கதையோ ஏதோ குமுதம்? வந்த நினைவு.

    கேரள நிலம் பத்தி அவங்க சொல்லிருப்பது எனக்குச் சரின்னே தோன்றும். எனக்கு அங்கு பேருந்தில் பயணம் செய்வது என்றால் கொஞ்சம் அலர்ஜி. தமிழ்நாடு, இங்கு எல்லாம் போவது போன்று இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... எனக்கும், தமிழிலும் யாரோ எழுதி இருப்பது போல நினைவு. ஆனால் தமிழில் மூன்றாம் பாலினத்தவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் பிரபலம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இதெல்லாம் ஸ்ரீவேணுகோபாலன் தான் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் முதலில் தினமணி கதிரிலும் பின்னாடி சாவியிலும் எழுதி வந்தார்.

      நீக்கு
    3. என் பெயர் கமலா..

      அதுவும் உண்டு கீதா அக்கா.. அது வேற... அதைத்தவிர ஒன்றிரண்டு உண்டு..

      நீக்கு
  19. சோகம் கலந்த கவிதை - ஞானக்கூத்தன் அவர்களின் கவிதை. உட்பொருள் இருக்கிறதோ? எதையோ சொல்வது போன்று உள்ளது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ உட்பொருள் இருக்கிறதோ என்று எண்ண வைப்பதே கவிதையின் வெற்றியோ என்னவோ..

      ஆனால் கவிதையைப் படித்தால் ஏதோ ஒரு உணர்வு மனதில் நெருடுகிறது.

      நீக்கு
  20. பாலசந்தர் ரசித்த நாடகம் துணுக்கு சுவாரசியம்.

    ஜோக்குகளில் கடைசி - புன்சிரிப்பு,

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஆர்த்தோவும் பிஸியோவும் ...ரசிக்கக் கூடியதாக இருந்தது.

    நியூஸ்ரைம் கண்டோம்.

    ஜோக்ஸ் சுமார்.

    பதிலளிநீக்கு
  22. எழுத்தில் ஜாலக்கைக் காட்ட வேண்டும் என்ற ஆசை ஆர்த்தோ அலசலை மழுங்கடித்து விட்டது. இப்படிப் போகும் என்ற ஆபத்தைத் தெரிந்து தான் சுஜாதா ரொம்ப விவரிக்காது நைஸாக அடுத்த மேட்டருக்குத் தாவி விடுவார்.
    அந்த மாதிரி ஒரு வியாழனுக்கு ரெண்டு மூணு விஷயங்களைத் தொட்டு சட்டென்று விலகி விடுங்களேன். அப்படியான முயற்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் செய்திருக்கிறேன்தான்.  சமயங்களில் வியாழனுக்கு எதை எழுதுவது என்றே கூட குழப்பம் வந்து விடும்.  நன்றி ஜீவி ஸார்.  இன்று பகிர்வு கம்மிதான் கவனித்தீர்களா?

      நீக்கு
  23. ஆர்த்தோ vs ஃபிஸியோ நல்ல அலசல். ஃபிஸியோ சொன்னபடி தினசரி பயிற்சிகளை வரிசைக் கிரமமாக செய்யவே ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. நியூஸ் ரூம்.., நன்றி. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  குறைந்த நேரமே ஆனால் கூட பயிச்சிகளை நானோ, பாஸோ செய்வதே இல்லை.  என் மகன்களும் செய்வதில்லை!

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  24. ஆர்த்தோவும் 'பிசியோ'வும் தலைப்பும் பதிவும் அருமை.
    மருத்துவரிடம் போனால் அவர் கொடுக்கும் மருந்தை நம்பிக்கையுடன் சாப்பிட வேண்டும், அது போல பிசியோவிடம் போனால் அவர் சொல்லி தரும் உடற்பயிற்சிகளை நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.
    நேரம் ஒதுக்க வேண்டும், சிறிதாக இருக்கும் போதே குணப்படுத்தி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி அக்கா! ஆனால் மருத்துவர் சொல்வதும், பிசியோ சொல்வதும் வேறுபடுகிறதே... அதில் தானே சிரமம்!!

      நீக்கு
  25. ஞானக்கூத்தன் அவர்கள் கவிதை, மற்றும் பொக்கிஷ பகிர்வுகள் படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!