ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 15 நெல்லைத்தமிழன்

 

 வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

சோழர் குலம் முடிந்து கீழைச் சாளுக்கிய சோழர் குலம் உதயமானதை சென்ற பகுதியில் பார்த்தோம்இதற்குக் காரணம், இராஜேந்திர சோழனின் மகன்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனான பிறகு, கடைசி அரசனுக்கு வாரிசு இல்லாததால், இராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரனுக்கு சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் செல்கிறது. அவனுடைய தந்தை வழி கீழைச் சாளுக்கிய மரபு என்பதால், இவனிடமிருந்து சாளுக்கிய சோழ வம்சம் என்று வரலாறு சொல்கிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன் என்ற பெயரில் (முதலாம், இரண்டாம் என்பதெல்லாம் வரலாற்றில் நமக்குப் புரிவதற்காக வரலாற்றாசிரியர்கள் வைக்கும் பெயர்) அரசனாகிறான். அவனுக்குப் பிறகு விக்கிரம சோழன், அதன் பிறகு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன், அதன் பிறகு தாராசுரம் பகுதியில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு கோயில்களையும் கட்டிய இரண்டாம் ராஜராஜ சோழன்.

சாளுக்கிய சோழ மன்னர்கள் ஒரு புதிய சகாப்த்தைத் துவக்கினார்கள் என்றே வரலாறு சொல்கிறது. விஜயாலச் சோழன் காலத்தில் சிறிது சிறிதாக சோழ அரசு பெரிதாக ஆரம்பித்தது. மேலும் மேலும் போர் என்று சோழ சாம்ராஜ்யத்தை மிகப் பெரிதாக்கிய பெருமை ராஜராஜ சோழனுக்கும் அவனுடைய மகன் ராஜேந்திர சோழனுக்கும் உண்டு. ஆனாலும் சாம்ராஜ்யம் பெரிதாகும்போது அதைக் கட்டிக்காக்க தொடர் போர்கள் நடைபெறுவது தவிர்க்கமுடியாத து. அதுபோல, எதிரிகள் ஒன்று சேர்ந்தால் அவர்களைத் தோற்கடிப்பதும் மிகப் பெரிய சவாலாகிவிடும். போர்கள் அதிகமாக அதிகமாக, கஜானாவின் இருப்பு குறையும், மக்களுடைய நல்வாழ்வும் ஒரு சவாலாகிவிடும்

குலோத்துங்கச் சோழனோ, புதிய ஆட்சிமுறைக் கொள்கையைக் கொண்டிருந்தான். தன் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் வேறு வழியில்லாத சில போர்களை இவன் மேற்கொண்டிருந்தாலும், நாட்டை விரிவுபடுத்துவதில் இவன் ஆர்வம் காட்டவில்லை. இருக்கும் நிலப்பகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களுக்கு நல்வாழ்வு கொடுப்பதில்தான் இவன் முனைந்தான். துங்கபத்திரைக்கு வடக்கே இருக்கும் இராட்டிரகூடர் நிலப்பகுதியின்மீது தன் முன்னோர் (சோழ மன்னர்கள்) கொண்டிருந்த ஆசையை இவன் கொள்ளவில்லை. ஹொய்சளர்கள் எழுச்சி பெற்று, சோழ இராஜ்ஜியத்தின் சிறு பகுதியை இழக்க நேர்ந்தபோது அவன் கவலைப்படவில்லை. அதனால் அவனுடைய சொந்தப் பெருமையைவிட, நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவே உழைத்தான் என்று கூறுவது பொருத்தமுடையது.

இராஜேந்திர சோழன் (ராஜராஜ சோழனின் மகன்), பாண்டிய நாட்டை வெல்லும்போதெல்லாம், பாண்டிய அரசன் முளைத்தெழுந்து, மீண்டும் அவர்கள் மீது போர் தொடுக்கின்ற நிலைமை தலைமுறை தலைமுறையாக வருவதை உணர்ந்து, பாண்டிய நாட்டை, தன் வாரிசுகளைக் கொண்டு (சோழ இரத்தம் உள்ளவர்களைக்கொண்டு) ஆளும் முறையைக் கொண்டுவந்தான். அவர்கள் சோழ பாண்டியர்கள் எனப்பட்டனர்சோழ மன்ன் அதிராஜேந்திர சோழனுக்குப் பின்பு, வாரிசு இல்லையாதலால்தான் சாளுக்கியச் சோழனான குலோத்துங்கச் சோழன் பட்டமேற்றுக்கொண்டான் என்பதைப் பார்த்தோம்.

இவன் சுமார் ஐம்பது ஆண்டுகள் அரசாட்சி செய்திருக்கிறான். அதனால் சோழ அரசனாக அவன் ஆனபோது 25-30 வயது ஆகியிருக்கலாம் (காரணம் அதற்கு முன்பே சில பல போர்களில் அவன் பங்கெடுத்திருக்கிறான், வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறான்).  சோழ அரசுக்கு வாரிசில்லாத அந்தச் சமயத்தில், பாண்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், பாண்டிய நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆளத் தொடங்கினர். அந்தச் சமயத்தில் ஈழமும் சோழர் ஆட்சியிலிருந்து விடுபட்டு தனி அரசாக ஆகினர்குலோத்துங்கச் சோழன் 1070ல் பட்டமேற்றுக்கொண்டான்.

இதற்கிடையில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன், குலோத்துங்கனைத் தோற்கடித்து சோழ அரசைக் கைப்பற்றிக்கொள்ள இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணி, ஐந்து ஆண்டுகள் தன் படைபலத்தைப் பெருக்கினான். குலோத்துங்கச் சோழனும் இதனை எதிர்பார்த்து சோழப் படையைப் பெருக்கினான். மைசூரில் இரண்டு படைகளும் சந்தித்துக்கொண்டன. சோழன் வெற்றிபெற்றான். தொடர்ந்து போர், கோலார் மாவட்டத்தில் நடைபெற்றது. அங்கும் வெற்றிபெற்ற குலோத்துங்கச் சோழன், விக்கிரமாதித்தனை துங்கபத்திரைக் வரை துரத்திச் சென்று, மணலூர், அளத்தி போன்ற இடங்களில் வெற்றிபெற்றான். அந்த வெற்றியில் ஆயிரக்கணக்கான யானைகள், பெண்டிர் மற்றும் செல்வங்களைத் தன் நாட்டுக்குக் கொண்டு சென்றான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. (குலோத்துங்கச் சோழன் மெய்கீர்த்தியின் வாயிலாக).  இந்த வெற்றிகள் 1076ல் கிடைத்திருக்கவேண்டும்கலிங்கத்துப் பரணியும் இந்த வெற்றிகளைக் குறிப்பிடுகிறது.

ஈழம் சோழ தேசத்தின் கையை விட்டுப் போனது பெரிதல்ல. ஆனால் பாண்டிய நாடு கையை விட்டுப் போனால் எப்போதும் சோழநாட்டிற்கு ஆபத்து இருந்துகொண்டே இருக்கும் என்பதை உணர்ந்த குலோத்துங்கன், படைபலத்தைச் சரிசெய்துகொண்டு, 1081ல் பாண்டிய நாட்டின்மீது படையெடுது வெற்றிபெற்றான். அத்துடன் சேரநாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று மூன்று இடங்களில் (விழிஞம் துறைமுகம், கோட்டாறு மற்றும் காந்தளூர்ச்சாலை-இது திருவந்தபுரம் பகுதியில் இருந்த து.) வெற்றிபெற்றான். இந்தப் போர்கள் மிகக் கடுமையாக நடந்தன (சேரருடனான போர்கள்கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்கள் இந்தப் போர்களின் வெற்றியைப் பற்றிக் கூறுகின்றன.

அது சரிஈழம் எப்படி சோழர்கள் கையைவிட்டுப் போயிற்று?  1058ல் விஜயபாகு என்பான் ஈழத்தின் தென் பகுதியில் அரசனாகிவிடுகிறான். பிறகு வட பகுதியில், பொலனருவாவில் இருந்த சோழ ஆளுநர், விஜயபாகுவின் மீது படையெடுக்க ஆணையிட்டபோது, போரில் சோழப்படைத்தலைவன் கொல்லப்பட்டு, விஜயபாகு வென்றான். தமிழகத்திலிருந்து சோழர் படையொன்று இலங்கை வந்து மீண்டும் போர் ஏற்பட்டபோது, விஜயபாகு தோற்றோடுதலும், பிறகு மீண்டும் படையெடுத்துவந்து கடும் போர்களுக்குப் பின் வெற்றிபெறுதலும் நடந்தது. இருந்தாலும் விஜயபாகு முழுவதுமாக ஈழத்தைத் தன் கீழ் வரச்செய்ய மூன்றாண்டுகள் பிடித்தது. 1073ல் விஜயபாகு இலங்கைக்கு முழு அரசனானான். குலோத்துங்கச் சோழனோ ஈழத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படவில்லை. சோழ நாட்டைச் செம்மையாக ஆள்வதே முக்கியம் என்ற நோக்கமே அவனுக்கு இருந்தது. அதனால் அதற்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ள மேலைச் சாளுக்கிய அரசன் விக்கிரமா தித்தன், பாண்டிய அரசர்கள் ஐவர், சேர மன்னன் போன்றவர்களை மாத்திரமே போரிட்டு வென்றான். அதிலும் சேர அரசைசேர மன்னனே தன் சார்பில் ஆளச் செய்து, திறையை மாத்திரம் சோழ அரசுக்குக் கொடுக்கும்படிச் செய்தான். பத்துப் பதினைந்து ஆண்டுகள் போர் புரிந்திருந்தாலும், நாட்டு மக்கள் நலமாக வாழ வழி செய்தான்.

அதிக வரலாறு, போரடிக்கும் என்று நான் நினைப்பதால் மிகுதி அடுத்த வாரம்தான்.

நாம் இப்போது ஐராவதீஸ்வரர் கோயிலை முழுவதுமாகப் பார்த்த பிறகு, அதன் அருகில் இருக்கும் தெய்வநாயகி அம்மன் கோயிலில் நுழைகிறோம். இந்த இரண்டு கோயில்களும் தனித் தனிக் கோயில்களாகவே கட்டப்பட்டிருப்பது (சோழர் காலத்தில்) சிறப்பாகும்இந்த இரண்டு கோயில்களுமே சிற்பிகளின் கனவு என்று அழைக்கப்படுவதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை என்பதை நாம் இதுகாறும் கண்டு இன்புற்ற சிற்பங்கள் சொல்லும். இனித் தொடர்ந்து தெய்வநாயகி கோயிலில் நான் எடுத்த சிற்பங்களின் படங்களைக் காண்போம்.


சிறிய இடத்தில் கல்லில் சிற்பங்கள். 

சிங்கத்துக்கு எங்கே இவ்வளவு பெரிய நாக்கு? ஏலே அது யாளிலா.

போர்னு இறங்கியாச்சுன்னா வெற்றிதாம்லே குறி. 




பல படங்களை விளக்கவே தேவையில்லை. நமக்குத் தேவை சிற்பத்தை ரசிக்கும் மனோபாவம் மாத்திரமே


கல்லில் அமைத்த படிகள், சாளரங்கள். 











தாங்கு தூண்கள் போல அமைக்கப்பட்ட சிங்கங்கள்வாயை, முகத்தை எப்படி செதுக்கி அமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

என்னபதிவு நீளமாகிவிட்டதா? சரி..அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்) 

56 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தாக்கத் தாக்க தடையறத் தாக்க
      பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட!

      நீக்கு
    2. துரை செல்வராஜு சாருக்கு மன அமைதியும், நல்ல ஆரோக்கியமும் கிட்டட்டும்.

      நீக்கு
    3. ஷண்முகநாதன் அனைத்தையும் கண்டிப்பாக தருவான்.

      நீக்கு
  3. ​சொல்லவேண்டுமா? படங்கள் நன்றாக உள்ளன. தொடர் கொஞ்சம் நீளம் அதிகம் தான். சலிப்பூட்டாமல் இருந்தால் சரி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.... நிறைய எழுதவேண்டியிருக்கு. ஒரு பதிவுக்கு 20 படங்களாவது இருக்கணும்னு நினைக்கிறேன். இல்லைனா, பதிவுகள் அதிகமாகிடும். கௌதமன் சார், 17 படங்களும் வரலாறும் போதும் என்கிறார். இனி வரும் பதிவிலாவது (அதாவது 30க்கு அப்புறம்) நீளத்தைக் குறைக்க முயற்சிக்கிறேன்

      நீக்கு
  4. படங்களும் வரலாறும் நீளமாகவில்லை. சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. 

    கிட்டத்தட்ட இந்த மாதங்களில்தான் நானும் அங்கு சென்று வந்தேன் என்பதால் பேஸ்புக்கில் நான் பகிர்ந்த இந்த இடத்தின் படங்கள் எனக்கு நினைவூட்டலாக வருகின்றன.  இன்று நீங்கள் பகிர்ந்திருக்கும் அந்த வாளேந்தும் மங்கை படம் கூட எனக்கு நேற்று வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். ஒண்ணு கவனிச்சீங்களா? ஐராவதீஸ்வரர் கோயிலில் ஆண் வீரர்கள், தெய்வநாயகி கோயிலில் பெண் வீரர்கள் (குதிரை மீது ஆரோகணிப்பது). அப்போவே சமத்துவம் இருந்திருக்கிறது.

      சில வரலாற்றுச் செய்திகள் புரிந்துகொள்ளவே கடினமாக இருக்கும். உதாரணம் மராட்டியர் வரலாறு. அதைப் புரிந்துகொண்டு எழுதுவதுதான் சவால். படிக்கும்படி இருந்தால் சரிதான். நன்றி

      நீக்கு
  5. வைக்க பெயர்களா கிடைக்கவில்லை?  ஒரே பெயரை வைத்து ஏன் பிற்கால மக்களை சிண்டைப் பிய்த்துக் கொள்ள வைத்தார்களோ அந்த அரசர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்து பெரியவர்கள் பேர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும். பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளுக்கு தாத்தா பேர் , பாட்டி பேர் வரும் போது பேர் குழப்பம் வராமல் இருக்க பெரிய பெரியப்பா வீட்டு சுப்பையா, சின்ன சித்தப்பா வீட்டு சுப்பையா என்று அடையாளம் சொல்வார்கள் எங்கள் ஊர் பக்கம்.(எங்கள் வீடுகளில்)

      நீக்கு
    2. தாத்தா பெயரை பேரனுக்கு வைப்பது சகஜம்தானே... ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை, அவனுடைய மகள் பெயரும் குந்தவை. அரசனாக வரும்போதாவது பெயர் மாத்தலாம்னு நினைச்சாங்கன்னா, பெயர் நிலைத்து நிற்கணும், அதே மாதிரி தானும் வீரம் காண்பிக்கணும் என்று பெயர் ராசி பார்த்திருப்பாங்களோ?

      நீக்கு
    3. கோமதி அரசு மேடம்.. திரைத்துறையிலேயே கருத்த சுப்பையா, செவத்த சுப்பையா (மேகம் கருக்கையிலே பிள்ளை தேகம் குளிருதடி பாடலுக்கு ஆடுபவர்) என்றெல்லாம் அடையாளப்படுத்திக் காண்பிப்பார்களே.

      நீக்கு
  6. வரலாறு அருமை. போர் பற்றிய காரணங்கள், போர் புரியாமல் விட்ட காரணங்கள் அனைத்தும் அருமை. சரித்திரம் படிக்க விருப்பம் இருந்தால் போர் அடிக்காது. குலோத்துங்கச் சோழன் வரலாறும் நன்றாக இருக்கிறது படிக்க.

    தெய்வநாயகி கோயில் சிற்பங்கள், சாளரங்கள், படங்கள் எல்லாம் அழகு. யாளியில் வீரன் அமர்ந்த படங்கள் நன்றாக வந்து இருக்கிறது. திருநெல்வேலி மொழியுடன் உங்கள் வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். என் வரிகளில் திருநெல்வேலி மொழி எட்டிப்பார்க்குதா? நன்றி.

      நீக்கு
  7. தூண்கள் சிற்பம் எடுத்து பொருத்தும் போது வண்ணங்கள் வித்தியசமாக இருக்கிறது. சாளரங்களுக்கு இருபக்கமும் இருக்கும் துண்கள் பாக,பாகமாக எடுத்து வைத்து இருக்கும் காட்சியை சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லியிருக்கறது சரிதான். ஆனால் அது காலத்தினால் ஏற்பட்ட பழுதாக இருக்கும். இப்போ தஞ்சை பெரிய கோயிலில் எல்லாமே ஓரளவு ஒன்றுபோல் இருப்பதற்குக் காரணம், அவற்றைத் தொல்லியல் துறை தூய்மை செய்திருப்பதுதான்.

      நீக்கு
  8. நீங்கள் நிற்கும் கோபுர படம் அழகு.அம்மன் சன்னதிக்கு பின்புற படம்,
    மதில்களும் மதிகளுக்கு அப்பால் உள்ள மரங்களும் தெரியும் காட்சியும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... இன்றுதான் கேதார்நாத் பயணம் செல்லலாமா, ஹெலிகாப்டர் என்று சொல்கிறார்கள் (ஒருவேளை கேன்சல் ஆனால் மட்டக்குதிரை). ரொம்ப ரிஸ்கா என்று யோசிக்கிறேன். நீங்கள் பயணம் செய்திருந்ததைப் படித்த நினைவு வந்தது.

      நீக்கு
    2. கேதார்நாத் போய்வாருங்கள் , இப்போது நிறைய வசதிகள் வந்து இருக்கிறது. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது . நாங்கள் போன போது கொஞ்சம் கடினம், இப்போது அப்படி இல்லை என்று கோவை சரளா போய் வந்து சொன்னார்கள் ஒரு காணொளியில்.

      நீக்கு
    3. பார்க்கலாம், இறையருள் இருக்கிறதா என்று. ஆனாலும் முயற்சி செய்வேன்.

      நீக்கு
  9. போர்கள் அதிகமாக அதிகமாக, கஜானாவின் இருப்பு குறையும், மக்களுடைய நல்வாழ்வும் ஒரு சவாலாகிவிடும்.//

    அதுதானே இப்போது வரை தொடர்ந்து வருது உலகத்தில். அந்த மக்கள் எல்லாம் புலம் பெயர்ந்து தங்கள் வேர்களை இழந்து எங்கேயோ வாழ்ந்து....அது சரி இதனால சண்டை போடறவங்களுக்கு அதான் ஆட்சியில் இருப்பவங்களுக்கு என்ன பயன்? ஈகோ வைத் தவிர அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு புரியல இதனால் என்ன லாபம்? அவங்க என்னவோ நல்லா இருக்காங்க இப்ப சொல்லறேன் ஆனா அவதிப்படுவது மக்கள்தான். அப்போவாச்சும் போரில் மன்னர்களும் இறங்கி சண்டை போடுவாங்க அவங்களும் மரணம் தழுவினார்கள் இப்ப? மண் பெண் பொன்....இப்ப மதம், நீர் படுத்தும் பாடு! இன்னும் பல

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன்(க்கா).

      போர் என்பது அரசுக்கு இன்றியமையாதது. நாட்டின் எல்லையை வலிமை இல்லாமல் பாதுகாக்க முடியாது. இது படைப்பிரிவினருக்கு மற்றும் ஆயுதங்களுக்கு, யானை/குதிரை போன்ற அனைத்துக்கும் வேலை கொடுக்கக்கூடியது. வென்று அந்த நாட்டின் செல்வத்தைக் கொண்டு வருதல், தன் நாட்டிற்கு இன்னும் வளம் சேர்த்தல் இன்றியமையாதது. ஆனால் தன் உயரத்துக்கு மேலே எந்த அரசர் செல்ல நினைத்தாலும் தோல்வி நிச்சயம்.

      நாட்டைக் காக்க போர் என்கிறபோது, போரினால் ஏற்படும் கெடுதலும் அந்த மக்களையே சேரும், அதிலும் எல்லைப் பகுதியில் இருப்பவர்கள் நிச்சயம் கஷ்டப்படுவாங்க.

      எப்போதுமே, மண், பெண், பொன் ஆகியவையே போருக்கான முக்கியக் காரணம். இப்போதும் அதனை அடையவே மக்கள் வாழ்க்கைல கஷ்டப்படறாங்க. தங்களுக்கு என்று ஒரு வீடு, செல்வம், பெண்

      நீக்கு
    2. கடைசி வரியை நான் அடிக்கடி சொல்வதுண்டு.....

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் ஞாயிறு பதிவும் அருமை. படங்கள் எப்போதும் போல் கண்களை கவரும் வண்ணமாக மிக அருமை முதல் படம் கோணம் அருமையாக உள்ளது.

    கல்லில் வடித்த சிற்பங்களும், படிகள் சாரளங்களுமாக, கோவிலை எப்போது நேரடியாக சென்று காணப்போகிறேன் சென்றிருக்கிறது. ஆனால், எதற்கும் ஒரு நேரம், காலம் வர வேண்டுமல்லவா? இறைவன் அழைத்தாலொழிய அந்த நேரங்காலங்கள் வந்து அமையாது.

    நீங்களும் நெல்லை பாஷை யில் படங்களை விவரித்து அசத்தி விட்டீர்கள். இறைவனுக்கே ஒரு நொடி நாம் இப்போது இருப்பது நெல்லையா என்ற சந்தேகம் வந்திருக்கும். ஆனால் அவர் அங்கும் தாம் நெல்லையப்பராக வீற்றிருக்கிறோமே என நினைத்து வந்த சந்தேகத்தை அடுத்த நொடியில் தவிர்த்திருப்பார்.:))

    அரசர்களின் ஆட்சியை படித்து விட்டு வருகிறேன்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் நாளை வரும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.. நெல்லை பாஷையை இயல்பாகப் பேச எனக்கு வராது. அங்க போயாச்சுன்னா மத்தவங்க பேசறதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கும் (கோட்டிப்பய..என்ன பேசுதாம்ல என்றெல்லாம் சின்ன வயதில் கேட்டது)

      நாளை மாலை நான் (ங்கள்) நாட்டின் வட கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு வாரம் சுற்றுலா செல்கிறோம். வாய்ப்பிருந்தால் காமாக்யா-ஓம் சக்தி பீடம் தரிசனம் கிட்டும்.

      நீக்கு
    2. /நாளை மாலை யதேச்சையாக (ங்கள்) நாட்டின் வட கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு வாரம் சுற்றுலா செல்கிறோம். வாய்ப்பிருந்தால் காமாக்யா-ஓம் சக்தி பீடம் தரிசனம் கிட்டும்./

      நல்லது. நல்லபடியாக சென்று இறை தரிசனங்களை பெற்று வாருங்கள். இறைவன் எப்போதும் அனைவருக்கும் துணையாக இருக்கட்டும்.

      "ஞானம் அருள்வாய் நீ. ஞானதண்ட பாணியே என்னை" என்பதைச் சொல்லி வருவதால், எனக்கு ஞான திருஷ்டி வந்து விட்டது போலும். 🙏. யதேச்சையாக நாளைய வாழ்த்தை இன்றே கூறி விட்டேன். எல்லாமே நல்லதுக்குத்தான்.

      நீக்கு
    3. நாளை தர்ப்பணம் எல்லாம் இருக்கிறது. மதியத்துக்கு மேல்தான் கிளம்புகிறோம். பெரியவங்க முதலிலேயே வாழ்த்துச் சொல்வதும் நல்ல சகுனம்தானே

      நீக்கு
    4. சூப்பர் போய்ட்டு வாங்க...வடகிழக்குப் பகுதி நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
    5. /பெரியவங்க முதலிலேயே வாழ்த்துச் சொல்வதும் நல்ல சகுனம்தானே/

      ஹா ஹா ஹா. இதை பெரியவங்க வாயாலே கேட்பதும் ஒரு சந்தோஷந்தானே. .! அந்த சந்தோஷம் எனக்கு இன்று கிட்டியது. :)) மேலும், எப்படியோ யாராவது ஒருத்தர் என்னைக்காவது பெரியவர்கள் ஆவதும் வாழ்வின் இயல்புதானே.

      நீக்கு
    6. கமலா ஹரிஹரன் மேடம்... எல்லோரும் பெரியவர்களாக ஆவது இயற்கை. ஆனால் நான் பெரியவன் என்ற எண்ணம், நான் மூத்தவன் என்ற எண்ணம் மனதில் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். எப்போது அப்படி நினைக்கத் தொடங்குகிறோமோ அப்போது நாமே நம் உடல்நிலைக்குக் கேடு விளைவித்துக்கொள்கிறோம் என்று பொருள். அதனால்தான் மனதளவில் நான் சின்னவன் என்றே சொல்லிக்கொள்கிறேன். அனுபவத்திலும் அப்படித்தான்.

      நீக்கு
  11. யாருப்பா இந்த ராஜாக்களோட பேரன்களுக்குப் பெயர் வைத்தது...குயப்பமா கீது. திரும்பத் திரும்ப வாசிக்கணும்! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்ல நிச்சயம் அரசியல் இருக்கிறது. குலோத்துங்கச் சோழன் (சாளுக்கிய சோழ அரசர்களில் முதல்வன்), தன் அம்மா வீட்டுப் பெயரையும் வைத்திருந்தான், அப்பா வீட்டுப் பெயரையும் வைத்திருந்தான். கடைசியில் பதவியேற்கும்போது புதிதாக குலோத்துங்கன் என்ற பெயரை ஏற்றுக்கொண்டான்.

      நீக்கு
  12. இருக்கும் நிலப்பகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களுக்கு நல்வாழ்வு கொடுப்பதில்தான் இவன் முனைந்தான். //

    ஹப்பா நல்ல விஷ்யம். நீடூழி வாழ்க குலோத்துங்கனின் பெயர்!! குலோத்துங்கனைப் பற்றி கொஞ்சம் ரஷ்யா, பாலஸ்தீனியன் சண்டைக்காரங்களுக்கு, ஈரான் ஈராக் காரங்களுக்கு எல்லாம் யாராச்சும் க்ளாஸ் எடுத்தா நல்லாருக்கும்!!! ஹாஹாஹா...ஆனா அதனால் பயன் இல்லைன்றதும் இன்னொரு பக்கம் சொல்லுது மனசு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... குலோத்துங்கன் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவன், தாயின் சோழ தேசத்துக்கு அரசனாக ஆகிறான். அதனால் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவும், இதுதான் தன் நாட்டிற்கு நல்லது என்பதற்காகவும் இப்படி முடிவெடுத்தான். ஆனால் பாருங்க இதனால்தான் அவன் சந்ததிகள் சிலர் ஆண்ட பிறகு சோழநாடு சுருங்கி தோல்வியை நோக்கிச் சென்றது.

      நாம் இப்போ ஓரளவு வலிமையான தலைமையைக் கொண்டுள்ளதால்தான் காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகளில் சீனா பாகிஸ்தான் வால் ஆடவில்லை. நேரு காலத்தில் நடந்ததுபோல போர், அதையொட்டி நிலமிழப்பு நடக்கவில்லை. வலிமை ஒரு தேசத்திற்கு இன்றியமையாதது.

      நீக்கு
    2. ரஷ்யாவின் இப்போதைய சண்டை, அதற்கு இன்றியமையாதது. பாலஸ்தீனியர்களின் வேட்கை சரிதான் ஆனால் அவர்கள் பயங்கரவாதக் குழுக்களின் பலிகடாவாக ஆகிவிட்டார்கள், அவர்களே பயங்கரவாதத்தில் ஈடுபட்டது வரலாறு. ஈரான் ஈராக் இருவரும் முஸ்லீம் மதத்தின் இரு பிரிவினால் ஏற்பட்ட பிரச்சனை. இது அரபு நாடுகளிலும் உண்டு.

      நீக்கு
    3. அது புரியுது நெல்லை, நாம சண்டைக்குப் போறதில்லையே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தானே வலிமை. அப்படித்தான் குலோத்துங்கனும் இருந்திருக்கிறான்னும் சொல்லத் தோன்றுகிறது. வீணா சண்டைக்குப் போக மாட்டேன் வந்த சண்டையை விடமாட்டேன் என்பதான வலிமை...

      அரபு நாடுகள் பத்தி ஆமாம் தெரியும்....இன்றியமையாததுன்னு சொல்லி எவ்வளவு நஷ்டங்கள்...என்னவோ போங்க

      கீதா

      நீக்கு
    4. இது எப்படி நடக்குதுன்னா (வலிய போய்த் தாக்குவது).. எதிரி நாடு நிச்சயம் சோழ தேசத்துடன் போர் புரியலாம் என்ற திட்டத்துடன் தன் படைபலத்தைப் பெருக்க ஆரம்பிக்கும். இது பற்றி ஒற்றுத்தகவல் வந்தவுடனே, இருக்கும் படையுடன் போர் ஆரம்பிக்கும் (அவனை வலிமை பெற விடாமல்). அல்லது நீயா நானா என்று போர் நடந்து எதிரியைத் துரத்துவார்கள். ஓடி ஒளியும் எதிரியை அழிப்பது நோக்கமாக இருக்காது. இப்படிப் பல முறை சாளுக்கிய மன்னனை விரட்டியிருக்கிறார்கள். முடிந்த வரை, போரை எதிரிநாட்டில் நடத்தத்தான் முயல்வாங்க. தன்னுடைய நாடு என்றால் சேதம் அதிகம் என்பதால்.

      நீக்கு
  13. நிர்வாகத் திறமை மிக்க சோழர்கள் வடித்த சிங்கச் சிலைகளின் " வால்கள் " கூட சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும்.. நீங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கின்றது....

    !?!?!?...

    பதிலளிநீக்கு
  14. குலோத்துங்கன் ரொம்ப புத்திசாலியாகவும் இருந்திருக்கிறானே!!!

    //அதிலும் சேர அரசை, சேர மன்னனே தன் சார்பில் ஆளச் செய்து, திறையை மாத்திரம் சோழ அரசுக்குக் கொடுக்கும்படிச் செய்தான்.//

    நல்ல ஐடியா. புத்திசாலி. ஓரளவுக்கு வின் வின் மாதிரி.

    குலோத்துங்கன் ரொம்பவே ஈர்த்துவிட்டார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தற்போது போன்ஸ்லே (மராட்டியர்கள்) வரலாறு படித்துக்கொண்டிருக்கிறேன். அதில், தக்காணப் பீடபூமியின் மூன்று முஸ்லீம் ஆட்சிகளில் (நிஜாம் ஷா, கோல்கொண்டா, பீஜப்பூர் சுல்தான்கள்), நிஜாம் ஷா-மஹாராஷ்டிரா, பலரை தேஷ்முக்குகளாக நியமித்து அவர்களையும் படைகளை வைத்துக்கொள்ளச் சொல்லி, வரி, காவல் போன்றவைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி, வருடா வருடம் வரியில் முக்கியப் பகுதி தனக்கு வருமாறும், போர் என்று வந்துவிட்டால், படைகளுடன் தனக்கு உதவுவதற்கு வருமாறும் செய்துகொண்டான். அதனால் எல்லாவற்றையும் தானே கவனிக்காமல், ஆனால் வருமானத்திற்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டான். இதுவே பொதுவான ஆட்சி யுக்தி. சோழர்களும் இதனைத்தான் கடைபிடித்தார்கள்.

      நீக்கு
    2. நல்ல ஆட்சி யுத்தி...இதை இப்ப உள்ளவங்களும் கடைபிடிக்கலாமோ

      கீதா

      நீக்கு
  15. நெல்லை அண்ணாச்சி யாருக்கு சொல்லிக் கொகுடீகீறோ? அது யாளின்னுட்டு...!!!!!! சட்டுனு பாக்க சிங்கப் போலத்தான் இருக்குவே. வாய்க்குள்ளார இருந்தா வருகு அது டிசைன்லாவே...!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. இதைப் பார்த்துத்தான் 'சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே' பாடலையே எழுதினார்களா? என் கண்ணுக்கு யாளி மாதிரிதான் தெரியுது. ஒருவேளை உயிர் இருந்தால் (அதற்கு) நாம் இருவரும் அதனிடமே போய்க் கேட்டிருக்கலாம் (பெண்கள் முதலில் என்பதால் உங்களைத்தான் முதலில் அதனிடம் அனுப்பியிருப்பேன் கேள்வி கேட்க ஹா ஹா)

      நீக்கு
    2. ஹாஹாஹா சும்மா உங்களை ஓட்ட சிங்கம்னு சொன்னாய்க்க உடனே என்னை அனுப்பிடுவீராக்கும்....சின்னப் பிள்ளைங்களாத்தான் அதுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!!!

      கீதா

      நீக்கு
  16. சிற்பங்கள் படங்கள் மிக அழகு.

    ஒரு டிசைன், குரங்கு கம்பிகளில் நான்கு கால்களால் பிடித்துக் கொண்டு அடியில் படுப்பது போன்று தொங்கிக் கொண்டு நகருமே அப்படி இருக்கு

    நிறைய படங்களில் இருக்கு ....குறிப்பிச் சொல்லப் படம் தேடினேன் எதுனா... எருது/? இருபுறமும் ஆட்கள் இருப்பது போன்ற சிற்பங்களில் அடியில் உள்ள டிசைன். கடைசி படத்திற்கு முந்தின படத்தில் கூட இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு டிசைன், குரங்கு கம்பிகளில் நான்கு கால்களால் பிடித்துக் கொண்டு// ஹாஹா. இதை வாசிச்சப்பறம் படம் பார்த்தா அப்படித்தான் இருக்கு. காத்மண்டில், பசுபதிநாத் கோவிலுக்கு அருகில் குட்டிக் குட்டிக் குரங்குகள் அங்க உள்ள வயர்களில் தொங்கிக்கொண்டு ஒரே விளையாட்டு. நீங்க சொன்ன மாதிரித்தான். அதை நினைவுபடுத்திட்டீங்க. எதிர் வெயில், மேலே தெரியும் சூரியன்னு அதனை படம் எடுக்க முடியலை.

      நீக்கு
  17. வட கிழக்குப் பகுதி பயணம் சிறப்பாக இறைவன் அருளால் நடைபெற வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. தகவல்களை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் நீளம் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!