புதியவன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
"நான்
வந்து கொண்டிருக்கிறேன்" ரிதுவிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது. ஜோ அதை
இப்போதுதான் பார்த்தான். வேண்டாம் என்று இப்போது பதில் மெசேஜ் அனுப்ப முடியாது.
அவள் வீட்டை அடைந்து, அழைப்பு மணியை அழுத்தி விட்டாள்.
கதவைத்
திறந்த அவனை அணைத்துக் கொண்டு, முத்தமிட்டாள். அவனும் பதில் முத்தத்தால் அவளை
வரவேற்றான்.
"இப்போதுதான் பார்த்தேன்" அவன் சிரித்துக் கொண்டே சொன்னதும், அவனைப் பார்த்து முறைத்தாள். "நான் அனுப்பின மெசேஜைக் கூட பார்க்க முடியாமல் ஒலிம்பிக்ஸில் ஓட பிராக்டீஸ் பண்ணினாயா?"
"அப்படி
பிராக்டீஸ் பண்ணினால் மெடலாவது வாங்கலாம்... அப்பாவுக்கு ஒரு அட்டெண்டர் தேடிக்
கொண்டிருந்தேன்"
“இப்போதானே
பழைய அட்டெண்டரை மாத்தி வேற ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணினார்கள்?”
"ப்ச்..இவரும்
சரிப்படலையாம்..ஜெரியாடிரிக் கேரிலிருந்து நேத்திக்கு கூப்பிட்டார்கள். நாளைக்கு போகணும்.." என்றவன் கொஞ்சம் தயங்கி, "நீ ரெஸ்ட் எடுத்துக்கறயா? நான்
ரிடர்ன் ஆக நைட் ஆகிடும்" என்றான்.
"வொய்?
லெட் மி ஆல்ஸோ கம் வித் யூ"
"உனக்கு
கிடைக்கறதே ரெண்டு நாள், என்னோட வந்தால் ஒரு நாள் ஃபுல்லா வேஸ்ட் ஆயிடும்"
"வேஸ்ட்னு
ஏன் சொல்ற? அப்பாவ பார்க்கப் போறது வேஸ்டா? வீட்ல தனியா இருக்கறதுக்கு பதிலா
உன்னோட இருக்கலாம்" தன் தோளில் சாய்ந்து கொண்டவள் நெற்றியில் முத்தமிட்டவன்,
"சாப்பாடு வெளில ஆர்டர் பண்ணட்டுமா?" என்றுதும்,
"நோ..
வீட்டு சாப்பாடு" என்றாள்.
"யாரு
சமைக்கறது? நீயா? நானா?"
"ரெண்டு
பேரும்"
இரண்டு
பேரும் பேசிக்கொண்டே சமைத்தார்கள், சாப்பிட்டார்கள், காலையில் அலாரம் அடித்த
பொழுது விழித்துக் கொண்டார்கள்.
ஃப்ரிட்ஜில்
சாஷேயில் இருந்த ப்ரேக்ஃபாஸ்டை காலி பண்ணி, சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டார்கள்.
"அப்பாவுக்கு
எதுவுமே வாங்கிக்கலயே..?" ரிது, ஜோவிடம் கேட்டாள்.
"இல்லை, அதை ஜெரிகேரில் பர்மிட்
பண்ணுவதில்லை" என்ற ஜோ, "கம் லெட்ஸ் கோ, ரெண்டல் ஹெலி டாக்ஸி ஹேட்
கம்" என்றான்.
******
ஜெரிகேர்,
அமைதியாக இருந்தது. சில முதியவர்கள் அவர்கள் இருப்பிடத்தின் முகப்பில்
உட்கார்ந்திருந்தார்கள். சிலர் உதவியாளர்களின் துணையோடும், சிலர் தனியாகவும்
நடந்து கொண்டிருந்தனர்.
ஒரு
மூதாட்டி அவனைப் பார்த்து புன்னகைத்து, "டிட் ஐ மீட் யூ பிஃபோர்? பார்த்த
மாதிரி இருக்கு"
"யெஸ்
ஆன்டி, போன மாசம் கூட பார்த்தீங்க, "
அவள்
நெற்றியை சுருக்கி, லேசாக நெற்றிப் பொட்டில் தட்டி யோசித்து, "ஓ... நீ கவினோட
‘சன்’னா?" என்று கேட்க, "ஆமாம்" என்றவன், அந்த பெண்மணியின் கையைப்
பற்றி, லேசாக நீவி கொடுத்து, "அப்பாவை பார்த்துட்டு வரேன்". என்றான்.
அவர்களுக்கு
தலையசைத்து விடை கொடுத்ததும், அப்பாவின் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
"இங்க
எல்லாரும் ரொம்ப வயசானவங்களா இருக்காங்க இல்ல?" ரிது கேட்கதற்கு
"இது
ஜெரியாட்ரிக் கேர் சென்டர்மா, வயசானவங்கதான் இருப்பாங்க"
"ஐ
மீன் ரொம்ப வயசானவங்களா இருக்காங்க"
ஜோ
பதில் சொல்லாமல் தோளைக் குலுக்கினான்.
அவர்கள்
அப்பாவின் வீட்டில் நுழைந்ததும், அப்பாவின் கேர் டேக்கர் கண்ணன், "வெல்கம்
ஜோ, வெல்கம் யங் லேடி, பை த வே ஹூ இஸ் ஷி?" என்றுதும், அப்பா, "எல்லாம்
உனக்கு சொல்லணும், கொஞ்சம் வெளில போ, எனக்கு என் பையனோட பேசணும்" என்றதும்,
கண்ணன் வெளியேறினான்.
"ஏம்பா
அவன் கிட்ட ரூடா பேசினீங்க?"
"இவன்
ஒரு அதிகப்பிரசங்கி, மொதல்ல இவன மாத்தணும்" என்றவர், தொடர்ந்து, "ஹு இஸ்
திஸ் யங் லேடி?" என்றார்.
"ரிது.
நான் இவள கல்யாணம் பண்ணிக்கப் போறேன்"
"எப்போ?"
"ஆறு
மாசம் முன்னாலேயே பண்ணிக் கொண்டிருப்போம், உங்களுக்கு உடம்பு சரியில்லாம
போயிடுச்சு, இப்போ இவளோட பேரண்ட்ஸ் டூரில் இருக்காங்க, அவங்க வந்ததும்
கல்யாணம்தான். எங்க வெச்சுக்கறதுனு யோசிக்கணும், பேசாம இங்கேயே வெச்சுண்டா
என்ன?"
"தாராளமா...போன மாசம் கூட இங்க ஒருத்தரோட பெண்ணுக்கு கல்யாணம் நடந்தது. உனக்கு ஒகே யாமா?"
ரிது
மெல்லிய சிரிப்போடு தலையசைத்தாள். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியில்
இருந்தாலும் வெட்கம் விட்டுப் போகவில்லை.
சிறிது
நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, "கண்ணனிடம் என்ன பிரச்சனை? ஏன்
மாத்தணும்?" என்று கேட்டான்.
"ஒவர்
பேச்சு நை நைனு"
"முன்னால
இருந்தவன் பேசவே மாட்டேங்கறான்னு சொன்ன"
"ஆமாம்,
வாயைத் திறக்கவே மாட்டான், மிஷின் மாதிரி வேலை செய்வான், இவனானால் எல்லாவற்றிலும்
மூக்கை நுழைக்கிறான். தெரிஞ்சது, தெரியாதது.." வெறுப்போடு பேசினார்.
"உங்களுக்கு
எப்படி வேணும்? பேசணுமா? பேசக்கூடாதா? ஒவ்வொரு அட்டென்டரையும் ஒவ்வொரு குறை
சொல்றீங்க. ஹைஜினீக்கா இல்ல, தமிழ் தெரியல, பேசறதில்லை, ஜாஸ்தி
பேச்சு...அட்டென்டர் கிடைக்கறது ஈசி இல்ல, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க,
பார்க்கலாம்"
ஜோ
பேசிக்கொண்டே போக அப்பா பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு வெளியே வெறித்தார்.

மெளனமாக
வந்த ஜோவிடம் ரீது, "அப்பா எந்த மாதிரி எதிர்பார்க்கராரோ, அந்த மாதிரி
அரேஞ்ச் பண்ணிக் குடேன்" என்றாள்.
"அவர்
என்ன எதிர்பார்க்கிறார்னு தெரிஞ்சாதானே..?"
“அவருக்கு
ஃபெமிலியரா இருக்கற மாதிரி யாராவது கிடைச்சா..? லைக் அவரோட கஸின், அல்லது ஃபிரண்ட்
சாயலில் யாராவது"
"ரொம்ப
கஷ்டம், கஸினுக்கு எங்க போறது? கஸின் என்பதெல்லாம் வெறும் வார்த்தையாகி மூணு
தலைமுறை ஆச்சே, ரொம்ப ரேரா சில ஃபேமிலியில் இருக்கு. அப்பாக்கு கஸின்ஸ் கிடையாது. எனக்கும்
கஸின்ஸ் கிடையாது. அட் லீஸ்ட் உனக்காவது ஒரு கஸின் இருக்கா"
"டோன்ட் வொரி, நம்ப மூணு குழந்தைகள் பெத்துக்கலாம்" கண் சிமிட்டி கூறியவளை இழுத்து
அணைத்துக் கொண்டான்.
"வாட்
அபவ்ட் ஹிஸ் ஃப்ரண்ட்ஸ்..?"
"ஹவ்
வில் தட் ஹெல்ப்?"
"தனக்கு
நெருக்கமானவர்கள் தன்னோடு இருக்கிறார்கள் என்பது மொரேல பூஸ்ட் பண்ணாதா?"
"மே
பி.. அப்பாக்கு கீரானு ஒரு ஃப்ரண்ட் உண்டு, அப்புறம் அப்பாவும் ராசு மாமாவும்
ரொம்ப க்ளோஸ்"
"சரி,
வீட்டுக்கு போனதும் அவங்களோட ஃபோட்டோஸ், வீடியோஸ் இருந்தா எடுத்துக் கொடு"
வீட்டில்
கப்போர்டை குடைந்து பென் டிரைவுகளை எடுத்து அவற்றிலிருந்த புகைப்படங்கள்,
வீடியோக்களில் ராசு மாமாவையும், கீரா அங்கிளையும் அவளுக்கு காண்பித்தான்.
அவற்றில்
சில படங்களை தன் பாம் டாப்பில் சேமித்த ரீது ஜெரிகேர் சென்டரை அழைத்து சில
விவரங்கள் சொன்னாள். கேட்டுக் கொண்டவர், "ஓகே மேம்! பண்ணிடலாம், நோ
ப்ராப்ளம், தாங்க் யூ" என்றார்.
******
மறு
நாள் ஜோவின் தந்தையிடம், "உங்கள் அட்டெண்டரை மாற்றப் போகிறோம். புதியவர்
வரும்வரை இந்த ரோபோ உங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று கூறி அவருடைய
அட்டெண்டரை அழைத்துச் சென்றார்கள்.
அவரை
அலுவலகத்தின் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
"பேசுன்னா,
ஒரேயடியா பேசுவயா?" என்று கேட்டுக் கொண்டே அவனின் உடையைக் களைந்தார்கள். அவனை
கம்ப்யூட்டரோடு இணைத்து, ரீத்து சொன்ன விஷயங்களை கட்டளைகளாக கொடுக்க, அவனின் இல்லை
அந்த மனித ரோபோவின் உடல் அமைப்பு, முகம் எல்லாம் மாறத் துவங்கின.
*************
"சார்
இவர்தான் உங்களுடைய புதிய அட்டெண்டர்"

"நீ
ராசுவோட பையனா?"
"இல்லை, நான் மாதுவோட பையன்" என்றவனை கவினுக்குப் பிடித்து விட்டது.
கதை வாசிக்கும் போதே கிட்டத்தட்ட முடிவை ஊகிக்க முடிகிறது. நல்ல "கதை". ஆனால் படத்தில் உள்ள முதியவர்கள் வெளிநாட்டவராய் தோன்றுகிறார்கள்.
பதிலளிநீக்குJayakumar
ஜெ கே அண்ணா, மீட்டாவிடம் படங்கள் குறிப்பிட்டுக் கேட்டால் தென்னிந்திய வயதானவர்கள் என்றால் சட்டை இல்லாமல் தரும். கருப்பாக. இந்தியன் என்று போட்டால் சிங் படங்களைத் தரும். ஹோம் கேர் என்றால் ஒரு பெண்மணியைத்தான் தரும். அதுவும் வீட்டுப் பெண் போல, கேளுங்க ஸ்ரீராமிடம், அவர் சொல்வார். அவரும், கௌ அண்ணாவும் மீட்டாவை நிறைய விளையாட வைச்சிருக்காங்க. அனுபவஸ்தர்கள்.
நீக்குஅதனால் கூகுள்/நெட்டில் தேடலாம். நமக்கான படங்கள் சரியாகக் கிடைக்க நிறைய நேரம் எடுக்கும்.
நமக்குக் கதை, கட்டுரை எழுதவே நேரம் எடுக்கிறது நேரம் ஒதுக்கவும் முடியவில்லை. நேர விரயம் என்பது என் அனுபவம். அதனால் ரொம்ப நேர்த்தி பார்க்காமல் ஓரளவு மீனிங் பொருந்துகிறதா என்று பார்த்து கடப்பது நல்லது.
கீதா
கரெக்ட்.
நீக்குநன்றி ஜெயகுமார் சார். //நல்ல "கதை"// கதை எனபதை இன்வர்டெட் கமாவுக்குள் கொடுதிருக்கிறீர்கள். என்ன பொருள் என்று விளங்கவில்லை.
நீக்குபானுக்கா கதை ரொம்ப நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குரசித்து வாசித்தேன். முடிவும் நன்றாக இருக்கு
அக்கா நீங்க இதற்கு அடுத்த பகுதி கூட யோசித்து ஒரு கதையாக்கலாம். நீங்க அன்னிக்குப் பேசும் போது சொன்ன விஷயங்களை.
கீதா
நன்றி கீதா! படங்களுக்கும் பிரத்யேக நன்றி. ரொம்ப மெனகெட்டிருக்கிறீர்கள். உங்கள் ஆர்வமும், திறமையும் போற்றத்தகுந்தவை.
நீக்குஉங்கள் ஆர்வமும், திறமையும் போற்றத்தகுந்தவை.//
நீக்குநன்றி, பானுக்கா.
ஆனால், என் தலைக்குள், எனக்குத் திறமை இருக்குன்ற என்ற சொற்பதங்கள் எல்லாம் இன்னும் பதியவே மறுக்கிறன!!!!!!!!
கீதா
JKC சொன்னது போல கதையைப் படிக்கும்போதே முடிவை யூகிக்க முடிந்தது. ஆனாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. முடிவில் அந்தப் பெரியவர் அந்த ரோபோ மாற்றிச் சொன்னதை ஏன் விரும்புகிறார் எனப் புரியவில்லை.? விஞ்ஞானி வளர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தி யோசித்திருக்கிறீர்கள். நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துகள் கதைக்கு தேர்ந்தெடுத்த படங்களும் அருமை.
சுஜாதா அவர்களின் கதை ஒன்றை படித்த மாதிரி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. தமிழில் விஞ்ஞான கதைகளை முதலில் எழுதியவர் சுஜாதா என்பதால் விஞ்ஞான கதைகளை யார் எழுதினாலும் அவர் நினைவு வந்து விடுகிறது போல. //கதைக்கு தேர்ந்தெடுத்த படங்களும் அருமை.// இந்த பாராட்டுக்குறியவர் தி.கீதா என்னும் கீதா ரெங்கன்.
நீக்குகதை என்னமோ பாதியில் முடிஞ்சாப்போல் இருக்கு. இந்த ரோபோவை மாற்றி வேறே வரப்போவதை யூகிக்க முடிந்தாலும் பெரியவரால் புரிஞ்சுக்க முடியலையே? அதோடு அவர் புது ரோபோ மாதுவோட பையன் எனச் சொல்வதை ஏன் ஏற்றுக்கிறார் என்பதற்கான காரணங்கள் புரியவில்லை. ஆனால் நல்ல முயற்சி. எனக்கு இன்னமும் இந்த மேட்டா அல்லது மீட்டா, ஜெமினி ஏஒன் ஆகியவற்றைப் புரிஞ்சுக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கு. திடீர்னு வாட்சப்பில் ஜெமினி வந்து நிக்கும். அல்லதூ மீட்டா அல்லது மேட்டா வரும்/ ஏன்னு புரியறதில்லை. தொந்திரவாய்த் தோன்றும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. //நல்ல முயற்சி.// பராட்டுக்கு நன்றி
நீக்கு//கதை என்னமோ பாதியில் முடிஞ்சாப்போல் இருக்கு.// சுஜாதாவையும் இப்படி சொல்லியிருக்கிறார்கள். இப்படிசொல்வதனால் என்னை சுஜாதாவோடு ஒப்பிட்டுக் கொள்கிறேன் என்று நினைக்க வேண்டாம். வாசகர்களின் யூகத்திற்கு விடாமல் எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைத்தால் கதை சொல்வதின் அழகு குறைந்து விடும் என்பதை சுஜாதா போலவே நானும் நம்புகிறேன்.
@Geetha Sambasivam & Kamala Hariharan: இந்த கதையின் முக்கிய விஷயம், எதிர்காலத்தில் மனிதர்களைப் போலவே ரோபோக்கள் வந்து விடும் என்பதுதான். அந்த ஜெரிகேர் சென்டரின் சிறப்பு அங்கிருக்கும் முதியவர்களுக்கு மனிதர்களைப் போன்ற ரோபோக்களை அட்டெண்டர்களாக கொடுக்கிறார்கள்,ஆனால் அது முதியவர்களுக்குத் தெய்யாது. இந்தக் கதையில் ரிது கவின் என்னும் முதியவரின் நண்பர்களின் தகவல்களை சேகரித்து ஜெரிகேருக்கு கொடுத்ததும் அவர்கள் அந்த விஷயங்களை ஃபீட் பண்ணி புது அட்டெண்டரை உருவாக்குகிறார்கள். அவன் தன்னுடைய நண்பனை நினைவு படுத்துவதால் அவருக்கு மிகவும் பிடிக்கிறது.
நீக்கு"அவனுடைய சிரிப்பு, பேச்சு எல்லாமே என்னோட ஃப்ரெண்டைப் போலவே இருக்கிறது" என்று அவர் மகனுக்கு தொலைபேசியில் தெரிவிப்பது போல எழுதி முடித்தேன். ஆனால் அதைவிட கதை நான் முடித்திருக்கும் இடத்தில் முடிந்தால்தான் சிக்கென்று இருக்கும் என்று தோன்றியதால் எழுதியதை அழித்து விட்டேன்.
தற்காலிகமாக அவருக்கு உதவ வந்தது ரோபோ என்று குறிப்பிட்டிருக்க வேண்டாமோ?
/எதிர்காலத்தில் மனிதர்களைப் போலவே ரோபோக்கள் வந்து விடும் என்பதுதான். அந்த ஜெரிகேர் சென்டரின் சிறப்பு. /
நீக்குஆம் சகோதரி. நானும் புரிந்து கொண்டேன். வருங்கால மாற்றங்கள் இந்த விஞ்ஞான யுகத்தில் கண்டிப்பாக முன்னேறத்தான் செய்யும். நீங்கள் மிக நன்றாக குறையேதும் இல்லாதபடிக்கு எழுதியுள்ளீர்கள். இன்னமும் சொன்னால், உங்களின் சுருக்கமான எழுத்துக்களின் ரசிகை நான். இது போல எனக்கு நிஜமாகவே எழுத வராது.
நான் கேட்டது அவர் "நீ ராசுவோட பையனா?" என்ற கேள்விக்கு "இல்லை நான் மாதுவோட பையன்" என மாற்றிச் சொல்வது அவருக்கு ஏன் பிடித்தது என்ற சந்தேகம்தான். வேறு ஒன்றுமில்லை. மாது என்றொரு நண்பரும் அவருக்கு இருந்தாரா?
நீங்கள் முடிக்கிற மாதிரி எழுதியிருந்த வாக்கியங்களும் கதைக்குப் பொருத்தமாக நன்றாக இருக்கிறது.
இதுபோல் ரத்தின சுருக்கமாக பல கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உங்கள் கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி சகோதரி.
ஜோ அதை இப்பொழுது தான் பார்த்தான்
பதிலளிநீக்கு--என்று கதை ஆரம்பம் கொள்கிற மாதிரி வரிகளை அமைத்துப் பார்த்தேன்.
எதைப் பார்த்தான் என்பதிலிருந்து விருவிருப்பை ஏற்றி கடைசி வரை தொய்வில்லாமல் இதைத் தான் என்றில்லை, எதை வேண்டுமானாலும் எழுத உங்களால் முடியும்.
ஒரு விஷயத்தை நீங்களும் உங்கள் வாசிப்பு அனுபவத்தில் பார்த்திருக்கலாம். இங்கு இருக்கும் முந்தைய பின்னூட்டங்களில் கதை கதை என்று கதைக்கிறார்களே அப்படி வரவழைத்துக் கொண்ட கதை எதுவும் நல்ல கதைக்கு தேவையே இல்லை. :))
எதை வேண்டுமானாலும் கதைங்கற பேர்லே எழுதலாம். இந்தண்டை அந்தண்டை வாசிப்பவர் கவனம்
சிதறாமல் வாசகரை அவரது வாசிப்பில் பிடித்து வைத்திருப்பது தான் முக்கியம்.
நீங்கள் பாலகுமாரனின் ரசிகை. நானும் தான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமை.
இந்தக் கதை வார்ப்பில் தன்னாலே வந்து விழுந்திருக்கும்
வித்தியாசமான நல்ல எழுத்துக்கான அடையாளங்களை ரசித்தேன்.
என்ன அதெல்லாம் என்பது ஒரு எழுத்தாளரின் புரிதலுக்கு உட்பட்டதே தவிர வாசிப்பவருக்கு அநாவசியம்.
வாசிப்பவரில் நிறைய பேருக்கு ஏனோ நாமும் இப்படி இன்னொரு தளத்தில் எழுதித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றுவதே இல்லை. அதனால் எழுது கலையின் நேர்த்திகளை மனசார உணர்தலோடு பல நேரங்களில் நிறுத்திக் கொள்ளவே தோன்றுகிறது.
அடுத்த கதை எபியில் எப்போ சகோதரி? வாசிக்கக் காத்திருக்கிறேன்.
ஜோ அதைப் பார்த்தபோது மனதில் சுரீரென்றது.. 'எப்படி இதை கவனிக்காமல் விட்டோம்?'
நீக்குஇப்படி தொடங்கினால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கலாம்..
என்றாலும்,
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டல்லவா... எல்லா கதைகளையும் ஒரு சின்ன திடுக்கிடலுடனே தொடங்குவதும் அசாத்தியம்தானே?!!
விளக்கமான, நீண்ட, பாராட்டுதலோடு கூடிய பின்னூட்டதிற்கு நன்றி.
பதிலளிநீக்கு//ஜோ அதை இப்பொழுது தான் பார்த்தான்
--என்று கதை ஆரம்பம் கொள்கிற மாதிரி வரிகளை அமைத்துப் பார்த்தேன்.// அட! அருமையாக இருக்கிறதே, எனக்கு தோன்றவேயில்லையே?
//எதைப் பார்த்தான் என்பதிலிருந்து விருவிருப்பை ஏற்றி கடைசி வரை தொய்வில்லாமல் இதைத் தான் என்றில்லை, எதை வேண்டுமானாலும் எழுத உங்களால் முடியும்.//
பதிலளிநீக்கு//
இந்தக் கதை வார்ப்பில் தன்னாலே வந்து விழுந்திருக்கும்
நீக்குவித்தியாசமான நல்ல எழுத்துக்கான அடையாளங்களை ரசித்தேன்.
//எதைப் பார்த்தான் என்பதிலிருந்து விருவிருப்பை ஏற்றி கடைசி வரை தொய்வில்லாமல் இதைத் தான் என்றில்லை, எதை வேண்டுமானாலும் எழுத உங்களால் முடியும்.//
பதிலளிநீக்கு//இந்தக் கதை வார்ப்பில் தன்னாலே வந்து விழுந்திருக்கும்
வித்தியாசமான நல்ல எழுத்துக்கான அடையாளங்களை ரசித்தேன்.// உங்களைப் போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும் இப்படிப்பட்ட பாராட்டுகள் ரொம்ப மகிழ்சியளிக்கிறது. __/\__ __/\__ கூடவே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று கவலையும் வருகிறது.
//அடுத்த கதை எபியில் எப்போ சகோதரி? வாசிக்கக் காத்திருக்கிறேன்// முயர்ச்சிக்கிறேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்கு/// முத்தமிட்டாள். அவனும் பதில் முத்தத்தால் அவளை வரவேற்றான்.//
பதிலளிநீக்குஐ ஒப்ஜக்ஸன் யுவர் ஆனர்:)... படத்தில அப்படி இல்லையே:)))
ஹாஹாஹா! படங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அவை தி.கீதாவின் கை வண்ணம்.சென்சார் செய்யப்பட்டு விடுமோ என்ற பயமாக இருந்திருக்கும்.
நீக்குஆஆ அதெப்படி முதல் படத்தில வெள்ளைக்காரப் பென் சே சே பெண் அடுத்ததில கறுப்பாகிட்டார் கர்ர்ர்ர்ர்ர்.. சரி சரி இப்ப அதுவோ முக்கியம்....
பதிலளிநீக்குஎன்னால நம்ப முடியவில்லை, ஒரு வரிக்கு மேல பதில் சொல்லாத பானு அக்கா எப்படி இப்பூடிப் பொறுமையாக கதை எழுதினா??:))..
நன்றாக இருக்கிறது கதை.
எல்லாருக்கும் மேற்கத்திய ஸ்ரைலில் பெயர் வச்சுப்போட்டு, ராசு மாமாவுக்கு மட்டும் ராசு என ஊர்ப்பெயர் சூட்டிட்டீங்களே இது ஞாயமோ... நீதியோ?:)
//நன்றாக இருக்கிறது கதை.//அதைச் சொல்லுங்க முதலில்.
நீக்குபெயர்... எனக்கே கொஞ்சம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் பெயரை மாற்றி ஒரு லிங்க் ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். அது அவருக்கு ஓபனாகவில்லை என்று தகவல்.
அதிரா இப்படி யோசிச்சுப் பாருங்க. அப்பா வயதானவர்....பையன் அந்தப் பெண் இத்தலைமுறையினர். நம் ஊரில் உள்ள பெயர்கள் வித்தியாசமாகத்தானே இருக்கும்? இக்கதை கொஞ்சம் அட்வான்ஸ்ட் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, சிறிய ஊர்களில் உள்ளவர்கள் பெயர்களை நவீனமாக டக்கென்று மாற்றுவதில்லை. கதையில் ஊர்ப்பெயர் எல்லாம் இல்லாததால் இந்தியாவில் நடப்பதாகக் கொள்ளலாம்.
நீக்குகீதா
எனக்கு இதில் வரும் இங்கிலீசுகளைத்தான் புரிஞ்செடுக்க கொஞ்சம் ஓவர் ரைம் தேவைப்பட்டுதே:)))
பதிலளிநீக்குஹா ஹா ஹா! அது நீங்கள் ஸ்காட்லாண்டில் இருப்பதாலா? இங்கிலாந்துக்கு வாங்க.
நீக்குசாதரணமாக கதை அனுப்பியவுடனேயே ஸ்ரீராம் கருத்து சொல்லி விடுவார், ஆனால் இந்தக் கதைக்கு ஏனோ கருத்து கூறவில்லை. அதைப்போல் கோமதி அக்காவின் கருத்தையும் அறிய விரும்பினேன்.
பதிலளிநீக்குகதை ஒரு புதிய பாணியில் புதிய செய்தியைச் சொல்கிறது. நல்ல முயற்சி பானு அக்கா. ரசிக்க வைத்த விஞ்ஞானக்கதை. கீதாவின் படங்களும் மெருகூட்டுகின்றன.
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து நேரடியாக அப்படியே கதையை எடுத்துக் கொள்ளும்போது பதில் சொல்லி விடுவேன். இங்கு கீதா மூலம் வந்து விட்டதால் விடுபட்டுப் போயிற்று!
சஸ்பென்ஸ் விடுபடாமல் சரியான இடத்தில் தொடங்கி கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இதே போல ரோபோ கதை ஒன்று கீதா கூட இங்கு எழுதி இருந்த நினைவு. ஏகாந்தன் ஸார் கூட 'சுஜாதா சாயல் தெரிகிறது' என்று சொல்லி இருந்த நினைவு..
ஆஆஆஆ செல்லாது செல்லாதூ...... இது ரொம்ம்ம்ம்ப லேட்டூ..ஊஊஊஊஊ அதிராவே ஸ்கொட்லாந்த்ஹில இருந்த்ஹு வந்திட்டேனாம்ம்ம்ம்ம்... ஶ்ரீ ராம் ரொம்ப லேட்டூ... பானு அக்கா 2 அவேர்ஸ் க்கு கா போடுங்கோ:))
நீக்குகீதா, எ.பி.யில் எழுதியிருந்தாரா? எப்போ?
நீக்குஸ்ரீராம், நன்றி என் கதையை பற்றிச் சொன்னதற்கு....ஜீவி அண்ணாவின் கருத்தைப் பார்த்ததும் சொல்ல நினைத்து வேண்டாம் நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்வதில் எனக்குக் கூச்சமும் தயக்கமும் அதிகமாக உள்ளது.
நீக்குபானுக்கா, உங்ககிட்ட பேசும் போதும் சொன்னேனே, நான் எழுதிய கதையைப் பற்றி....அதன் தொடர்ச்சியாக ஆனால் தொடர்ச்சி என்றும் சொல்ல முடியாது எழுதத் தொடங்கி அப்படியே நிற்கிறது. இப்ப அதை டெவலப் செய்யணும்னா இப்ப உள்ள இன்னும் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்குள் நான் போய்தான் எழுத முடியும் என்று.
உங்களுக்கு அனுப்பிக் கேட்ட நினைவு vague ஆக இருக்கு.
ஆனால் எபியில் அது வெளியானப்ப நீங்க பார்க்கலைன்னு தெரியுது.
கீதா
அதெல்லாம் இருக்கட்டும், தலைப்பு மறந்து விட்டது. தலைப்பையும் லிங்க்கையும் இங்கே கொடுங்கள் கீதா.
நீக்குகோமதி அக்காவும் தாமதம். நேற்று உறவினர் வருகை, இன்று கால கொஞ்சம் உடல் நிலை சரியில்லை அதானல் கதையை படிக்க தாமதம்.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது. எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது. வயதானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது. உடன் இருந்து பார்த்து கொள்பவர்கள் வயதானவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தால் நல்லது அப்படி கொண்டு வர இயலாத போது இப்படி ரோபோக்கள் அவசியம் தான்.
உங்கள் கதைக்கு பாராட்டுகள். கீதாரெங்கன் படங்களுக்கு பாராட்டுகள்.
நன்றி கோமதி அக்கா. உங்கள் கருத்துகள் unbiased ஆகவும் தெளிவாகவும் இருக்கும். வருகைக்கு நன்றி.
நீக்குஇன்று காலை
பதிலளிநீக்கு