யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனாரின் இந்த வரிகள் வெகு பிரசித்தம். அடுத்த வரியும்தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா. கடைசி வரிகள் கூட பிரபலம். "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே?யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
SPB : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
P. Suseela : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
SPB : நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
பெண் : நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
SPB : இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
SPB, P. Suseela : இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
SPB : ஏரிக்கரையில் ஜோடிப்பறவை
எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள்
அதிலே உலகம் ஆரம்பம்
P. Suseela : சீனத் தலைகள் மலையக மான்கள்
இந்து கிளிகள் நடமாட்டம்
சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான்
சிரிக்கும் ஆயிரம் மலராட்டம்
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா……
P. Suseela : யாதும் ஊரே யாவரும் கேளீர்
SPB : அன்பே எங்கள் உலக தத்துவம்
P. Suseela : ஆடல் கலைகள் பாடும் இசைகள்
அதிலே என்ன பேதங்கள்
காதல் கடலில் நீந்தும் சுவர்கள்
அதிலே என்ன வாதங்கள்
SPB : எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிய சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள்
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா……
P. Suseela: யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
P. Suseela : சிட்டுப்போல செவ்வந்திப் பூவே
திருமகள் உன்னுடன் உறவாடி
SPB : எட்டு திசையும் செல்வேன் இன்று
பிள்ளை போலே விளையாடி
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா……
அனைவரும் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
===============================================================================
என்னதான் டான்ஸ் பாடலாக இருந்தாலும் என்ன ஆகுமோ.. என்ன நடக்குமோ என்று எண்ண வைக்கும் காட்சி. நாயகிக்கு கேன்ஸர் என்பது எல்லோருக்கும் தெரிந்து இனி ஒன்றும் செய்ய முடியாது என்னும் நிலையில், அவள் விருப்பப்படி ஆட்டம் பாட்டம் என்று (மிச்ச) காலத்தைக் கழிப்பது போல காட்சி அமைப்பு. சமயங்களில் 'எவனோ சொன்னானாம் எவனோ கேட்டானாம் என்னும் மூன்றாவது சரணமே இருக்காது!
வாணி : ஸபஸ ஸபஸ
குழு : ஸபஸ ஸபஸ
வாணி : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநிச சநிதபமகரிச
குழு : சரிகமபதநிச சநிதபமகரிச
வாணி : வண்ண மலர்களில்
சரம் தொடுத்தால் பூமாலையாகும்
சந்தத் துணை கொண்டு
ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும்
வாணி : வண்ண மலர்களில்
சரம் தொடுத்தால் பூமாலையாகும்
சந்தத் துணை கொண்டு
ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும்
வாணி : ராகங்கள்……தாளங்கள்…..கீதங்கள்…..
சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ
குழு : சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ
வாணி : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
SPB : ராகம் அற்புத ராகம்
ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ……
ராகம் அற்புத ராகம் கீதம் இன்னிசை கீதம்
இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்……..
இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்……..
SPB : திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே
SPB : ச……ரிசரிச…..நி…..சநிசரி…..த….நிதபத
சரிக ரிகம கமப மபத பதநி தநிச
பெண் : சசரிநி ததமப மபமக
கம..கமக…மபத….பதநி…..தநிச
சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச……
வாணி : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
ஆ……ஆ….ஆ….ஆ….ஆ….ஆ……ஆ…..
சரிகமபதநிச சநிதபமகரிச
குழு : சரிகமபதநிச சநிதபமகரிச
சரிகமபதநிச சநிதபமகரிச
பெண் : தபக தபக
குழு : தபக தபக தபக தபக
தபக தபக தபக தபக
காக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குயாதும் ஊரே ..
பதிலளிநீக்குயாவரும் கேளிர்..
தமிழ் தமிழ்!..
__/\__
நீக்குஅருமை.. அருமை...
பதிலளிநீக்குசிறப்பான பதிவு..
நன்றி செல்வாண்ணா...
நீக்குவணக்கம்! நி.இ. பாடல்கள் ஓரளவு இனிமைதான், இருந்தாலும் ஓவர் டோஸ்! இதற்கடுத்து 'இலக்கணம் மாறுதோ?' பாடல் வருமா? அழியாத கோலங்களில் 'நான் எண்ணும் பொழுது..' என்னும் பாடலை பகிர முடியுமா?
பதிலளிநீக்குபார்ப்போம். ஓவர் டோஸ் என்று சொல்ல முடியாது! தொடர்ந்து வரவில்லை பாருங்கள்! வார்த்துக்கொரு முறைதானே!
நீக்குநினைத்தாலே இன்னிக்கும் பாடல்கள் நிஜமாகவே இனிக்கும்.
பதிலளிநீக்குயாதும் ஊரே யாவரும் கேளிர் ரொம்ப பிடிச்ச பாட்டு. அந்தப்படத்தில் எதுதான் பிடிக்காது! அப்பா எங்களுக்குள்ள ஏதாச்சும் சண்டை வந்துச்சுன்னா கா விட்டத பழமாக்க இந்தப் பாட்டுதான்!! நான் தான் பெரும்பாலும் பஞ்சாயத்து செஞ்சு வைக்கணும் சோ இந்தப் பாட்டை சும்மா பாடி..கா விட்ட ரெண்டு பேரையும் இல்லைனா க்ரூப்பை.
கீதா
அதேதான்... உற்சாகப பாடல்கள். பானு அக்காவைப் பாருங்க ஓவர் டோஸ்னு சொல்றாங்க!
நீக்குஇனிமை நிறைந்த உலகம் பாட்டு நம்ம நட்புகள் எல்லாம் சும்மா சேர்ந்து ஆடிக் களித்த பாடல். நான் ஒரே ஒரு முறைதான் one day excursion போயிருக்கிறேன். கல்லூரியில் அதுவும் என் ஆசிரியை எனக்குப் பணம் போட்டுக் கூட்டிச் சென்றார். வீட்டில் அனுமதி இல்லை பணம் தரமாட்டேன் என்று. திருவனந்தபுரம். தும்பா ராக்கெட் தளம் கடற்கரை என்று போய் வந்தோம். அப்ப பேருந்தில் இதைத்தான் நம்ம நட்புகள் பாடி ஆடி ...ஒரு வழி பண்ணிட்டாங்க. நான் என்ன செய்கிறேன் என்று என் ஆசிரியை உஷா தாமஸ் அப்பப்ப பார்த்துக் கொண்டே இருப்பாங்க. நானும் ஜாலியாகப் பங்கெடுக்கிறேனா என்று.
பதிலளிநீக்குகீதா
ஹௌசிங் யூனிட்டில் ஒரு சுதந்திர தின விழாவில் பாடிய இசைக்குழு இந்தப் பாடல்களை பாட ரகளைதான்!
நீக்குசென்ற வாரம் ராகபந்தங்கள் படத்திலிருந்து கே ஜே யேசுதாஸ் பாடிய 'மலரோ நிலவோ' பாடலைக் கேட்டும் இப்படி ஒரு படமோ பாடலோ வந்தது தெரியாது என்று கீதா ரெங்கன் சொல்லிய காரணத்தால் இன்று அதே படத்திலிருந்து இரண்டு ஒரு பாடல்கள். //
பதிலளிநீக்குநன்றி நன்றி ஸ்ரீராம். நான் இந்தப் படத்தைக் குறித்து வைத்துக் கொண்டேன் யுட்யூப்ல பாட்டும் படமும் இருந்தா கேட்கலாம் பார்க்கலாம்னு.
ஸ்ரீராம் நீங்க சொன்னது சரியே. மாயாமாளவ கௌளௌதான்.
தெளிவாக இருக்கே. அதுவும் இடையில் வரும் ஸ்வரங்கள் அடிப்படை வரிசைகள் கற்போமே அது வருகிறதே.
ரொம்ப அழகான பாடல் ஸ்ரீராம் ரசித்துக் கேட்டேன். நல்லா போட்டிருக்கார் கு வை. அவர்கள்
ஸ்ரீராம் நீங்க கொடுத்திருக்கும் இந்த யுட்யூப் லிங்க் போய் பார்த்தேன். அவந்த தலைப்புல தோடிராகம்னு சொல்லிருப்பது, படம் பெயரைத் தப்பா சொல்லிருக்காப்ல. தோடி ராகம்னு ஒரு படம் வந்துச்சே சேஷு நடிச்சு..கண்றாவி படம்...நான் பார்த்ததில்லை ஒரு சீன் பாடல் பார்த்தப்பவே தெரிந்துவிட்டது. சேஷுக்குத் திடீர்னு என்ன ஆசை வந்துச்சோ படம் எடுக்கவும் நடிக்கவும்னு! அதுவும் குன்னக்குடி தான் இசை. அதனால யுட்யூபர் தப்பா போட்டிருப்பார்னு நினைக்கிறேன்.
கீதா
எனக்கு ஸ்வரம் எல்லாம் தெரியாது! இது நம்ம ஆளு படத்தில் பாக்கியராஜ் இசையில் - ஆம், பாக்கியராஜ் இசையில் - 'அந்தி வரும் நேரம்' என்று ஒரு பாடல் உண்டு. அதுவும் இதே ராகம்தான்!
நீக்குஅப்புறம் ஒரு விஷயம்.. படம்லாம் பார்க்காதீங்க... பாட்டு கேட்பதோடு நிறுத்திக்குங்க... இப்போ வேணாம். அடுத்த வாரத்துக்கு அப்புறம் கேளுங்க!
ஓ சரி சரி...இன்னும் அந்தப் பாட்டைக் கேட்கலை...படமும் யுட்யூபில் தேடலை. நீங்க பகிர்ந்த பிறகுதான்....ஆனா உங்க எச்சரிக்கை மணி அடிக்குது. இப்ப டைமும் இல்லை இப்படி வீணாக்க ஹாஹாஹா.
நீக்குதோடி ராகம் படப் பாடல்கள் நல்லாருக்கும். தோடியில் பாட வந்தேன் ஓடி வா முருகா.....பாட்டு.. கர்நாடக இசைப்பாடல்கள் எல்லாமே சேஷு-சேஷகோபாலன் பாடியிருப்பார், ஒரு பாட்டு எஸ்பிபின்னு நினைக்கிறேன்.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் அனைத்துமே அருமையான பாடல்கள். "நினைத்தாலே இனிக்கும்" வாரந்தோறும் விடாமல் இனித்தபடி தொடர்கிறது. இன்றைய பகிர்வான இனிக்கும் பாடல்கள் கேட்க, கேட்க எப்போதும் இனிக்கிறது.
ராக பந்தங்கள் படப்பாடலும் அருமை. நீங்கள் சொல்வது போல், "அந்தி வரும் நேரம்" என்ற பாக்கியராஜ் படப்பாடலை இந்தப்பாடல் நினைவூட்டுகிறது.
ராகங்களைப்பற்றி, நீங்களும், கீதாரெங்கனுந்தான் அதிகம் அறிந்தவர்கள். எனக்கு பாடலின் இனிமை மட்டுந்தான் சொல்லத் தெரியும். இன்றைய பகிர்வான வந்த பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூன்று பாடல்களும் நல்ல பாடல்கள்.
பதிலளிநீக்குகுன்னக்குடி வைத்யநாதன் இசையில் முதல் பாடல் SPB வாணி ஜெயராம் பாடிய பாடல் கேட்ட நினைவே இல்லை, இப்போது கேட்டேன் நன்றாக இருக்கிறது.
மூன்று பாடல்களையும் கேட்டேன்.