ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:
எனக்கு ஒரு கொஸ்ஸன்:)) இருக்குது கெள அண்ணன்.. அது கேள்வி அல்ல, ஆனா ஒவ்வொருவரும் என்ன நினைப்பினம் என அறியும் ஆவல்... முடிஞ்சால் அடுத்த புதனில பதில் சொல்லுங்கோ.. இது நீண்ட காலமாக இருக்கு ..
அது என்னவெனில்..
காலயில நித்திரை விட்டு எழும்பி வருவோமெல்லோ.. கட்டிலிலிருந்தோ.. நிலத்திலிருந்தோ.. அப்படி எழும்பியவுடன் மனதில முதன் முதலா என்ன நினைச்சுக்கொண்டு எழும்புவீங்கள்?
பெரும்பாலும் கண் முழிச்சவுடனே எல்லோரும் கை பார்ப்பது, கடவுளை நினைப்பது.. இதெல்லாம் பொதுவானது, ஆனா அந்தப் படுக்கையை விட்டு எழும்பும்போது என்ன வரும் மனதில் இதுதான் பதில் வேணும்..
# ஒவ்வொரு நாளும் நான் அன்றைக்கான காலைக்கடன்+ தியானம்+ மூச்சுப் பயிற்சியை முடித்துக் கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு சனி ஞாயிறுகளில் காலை ஆறுக்கும் மற்ற நாட்களில் ஆறரைக்கும் தயாராக நேரம் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் கண் விழிக்கிறேன்.
& காலையில் படுக்கையை விட்டு எழும்போது, " ஓம் நமோ நாராயணாய " என்று சொல்வேன். பிறகு மனதுக்குள் 'இன்று எல்லோருக்கும் எல்லாமும் நல்லதாக நடக்கட்டும்' என்று நினைப்பேன். பிறகு 'எங்கள் Blog வாசகர்கள் எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்யமாக வாழ இறையருள் கிடைக்கட்டும்' என்று நினைப்பேன்.
நெல்லைத்தமிழன்:
1. பஃஃபே முறையில் விருந்து - நம்ம நாட்டுக்குச் சரிப்படாது என்று நான் நினைக்கிறேன். நான் பார்த்த வரையில், அங்கேயே வாங்கிக்கொண்டு அந்தச் சூழலிலேயே நாலைந்துபேர் பேசிக்கொண்டு சாப்பிட்டு, நாம் வாங்கிக்கொண்டு வரும்போது நம் தட்டைத் தட்டிவிடுவார்களோ இல்லை நம் மேல் விழுவார்களோ என பயந்துகொண்டு, எங்கே இனிப்பு காலியாகிவிடுமோ என்று தேவையோ தேவையில்லையோ நிறைய இனிப்புகளைப் போட்டுக்கொண்டு பிறகு தூரப்போடுவது என்று ஒரு ஒழுங்குமுறை இல்லாததால், நமக்குச் சரிப்படாது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
# என்னைப்பொறுத்தவரை வேண்டியதை மட்டும் சாப்பிடும் வசதி நல்லது என்றே படுகிறது. தீர்ந்து விடப்போகிறதே என்று பயந்து ஓவராக சாப்பிடுவது நம் தவறு. மற்றபடி நமது மற்ற பயம் எல்லாம் தேவையற்றதும் தவிர்க்கக்கூடியதும் ஆகும் இல்லையா ?
# பஃபே முறைக்கு என் ஆதரவு உண்டு. ஆனால் அந்த முறையில் வைக்கப்படும் பீங்கான் தட்டுகள் எனக்கு அலர்ஜி. அதில் வேண்டியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, பேலன்ஸ் செய்தபடி கொண்டு வந்து நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்தவாறோ சாப்பிடுவது அசௌகரியமானது.
பஃபே முறையில் வைக்கப்படுகின்ற தட்டு படத்தில் உள்ளதுபோல இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
2. பிரசாதங்களில் (அதாவது வருடத்தில் வரும் பல்வேறு சுபநாட்களில் நாம் செய்யும் பிரசாதங்கள்-பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை, கூடாரை-சர்க்கரைப்பொங்கல்.....) எனக்கு மிகவும் பிடித்தது நாங்கள் செய்யாத பிள்ளையார் கொழுக்கட்டை, ஸ்ரீஜெயந்தி அன்று செய்யும் சுகியன் - தேங்காய் பூரணம். உங்களுக்குப் பிடித்தது என்ன? (நம்ம ஸ்ரீராமை மாத்திரம் கேட்கவேண்டாம். அவர் என் காதில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் புளியோதரை என்று எழுதிவிடுவார். கேள்வியை நன்கு வாசித்துவிட்டு பதில் எழுதச் சொல்லுங்கள்)# எனக்குப் பிடித்த பூஜைப்பிரசாதம் விநாயகர் சதுர்த்தி இனிப்பு (வெல்ல) கொழுக்கட்டை, ஸ்ரீஜெயந்தி கை முறுக்கு ( இப்போது பல் போன பிறகு முறுக்கை மிக எச்சரிக்கையாகத் தின்ன வேண்டி இருப்பது வேறு விஷயம் ).
& சர்க்கரைப் பொங்கல்.
3. இந்த ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் போன்றவற்றை தைரியமாக எடுத்துக்கொள்ளலாமா? ஏதேனும் கிட்னி ஃபெயிலியர் மற்றும் மற்ற பிரச்சனைகள் வந்துவிடாதா?
# சித்த மருந்துகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஆயுர்வேத மருந்துகளை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். அனுபவபூர்வமாக இதைச் சொல்கிறேன்.
& நான் பெரும்பாலும் பாட்டி வைத்தியம் மட்டுமே கடைபிடிப்பேன். 'சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்தை மிஞ்சின கடவுளும் இல்லை!'
4. மும்பையில் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்பே, இரயில்வே நிலையம், பேருந்து நிலையம் அருகே காய்களைக் கட்செய்து பாக்கெட்டில் போட்டு விற்கும் முறை வந்துவிட்டது. இது தமிழகத்தில் நடக்கிறதா?
# தமிழகத்தில் 1990 களில் வெட்டிய காய்களை விற்க முயன்று வெற்றி காணாதவர்களை பார்த்திருக்கிறேன். அன்றைய நிலை அப்படி. இப்போது முயன்றால் (ஏமாற்றாதவரை ) வெற்றி கிடைக்கலாம்.
& குரோம்பேட்டையில் ரயில்வே மேம்பாலத்தில் அப்படி பார்த்த ஞாபகம்.
5. நமக்கு மாத்திரம்தான் உணவு தயார் செய்துகொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தால், சாதம், குழம்பு, கறி, கூட்டு என்றெல்லாம் விஸ்தாரமாகச் செய்வோமா இல்லை ஏதோ ஒண்ணு பண்ணிச் சாப்பிட்டால் போதும் என்ற மனநிலை வந்துவிடுமா?
# வீட்டில் சமையல் என்றால், குழம்பு அல்லது ரசம், அத்துடன் கறி அல்லது கூட்டு இப்படி ஏதோ இரண்டு தான் இருக்கும். என் தகப்பனார் ரசம் தினசரி கட்டாயம் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்.
& ஏதேனும் ஒண்ணு பண்ணிச் சாப்பிட்டால் போதும் என்பதுதான் என் மன நிலை.
6. பழைய சிவாஜி படங்களை அல்லது எம்ஜிஆர் படங்களை ரீமேக் செய்தால் யார் நடித்தால் சரிப்படும்? (சிவாஜி படம், எம்ஜிஆர் படம்)
# பழைய சிவாஜி எம்ஜியார் படங்களை யாரை வைத்து எடுத்தாலும் இப்போது எடுபடாது. அதே போல இன்று பத்மினி சரோஜாதேவி சாவித்ரி வந்து நடித்தாலும் எடுபடாது. அந்தக்கால ஹிட் படங்களை இன்று பார்க்கும் போது பல நடிகர்கள் அசடு வழிகிறார்கள் என்று தோன்றுவதை கவனித்தீர்களா ?
//அவரவர் அவரவருக்குப் பிடித்த பொழுதுபோக்கை கைக்கொள்ளலாம்.// - உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு(கள்) என்ன என்ன?
# கைபேசியில் மலர்களைப் படம் பிடித்தல். வேதாந்த உரைகள் கேட்டல். கன்னடம் படிக்க-பேசக் கற்றல்.
& தூங்குவது!
ஊழல் செய்யாத பிரதமர், முதலமைச்சர்கள்னா உங்கள் நினைவுக்கு வருபவர்கள் யார் யார்?
# நேரு மேல் என்னென்னவோ புகார்கள் சொல்லப் பட்டாலும் ஊழல் செய்யாத தேச பக்தர். மோடி பேரில் கூட ஊழல் ஐயங்கள் எழவில்லை.
குமாரசாமி ராஜா ஓமந்தூரார் காலத்தில் எனக்கு சிறுவயது. காமராஜர் ராஜாஜி இருவரும் ஊழல் புகாரில் சிக்காத முதல்வர்கள்.
& ஊ செ பிரதமர் : லால் பஹதூர் சாஸ்த்ரி. ஊ செ முதல்வர் : ஜோதி பாசு.
அழகு என்பது மின்மினிப் பூச்சி மாதிரி...விரைவில் காணாமல் போய்விடும் என்பது உண்மை நிலை என்றாலும், மனது அழகை நோக்கி நகர்வதன் காரணம் என்ன?
# விரைவில் என்றால் சில வருடங்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லவா ? அழகு நம்மைக் கவர்வது அதன் ஆயுட்காலத்தைப் பொறுத்ததல்ல. அழகும் சுவையும் நேர்மையும் நல்லியல்பும் விரும்பப் படுவது இயற்கையின் நியதி. விருப்பம் தர்க்க ரீதியான விளக்கத்துக்கு உட்படாத தன்மையது.
CGSenu :
🧠 1. மனதில் அழகு என்பது மகிழ்ச்சி கொடுக்கும் ஒரு உணர்வாக இருக்கிறது
அழகான ஒன்றைப் பார்க்கும் போது, அது முகத்தில் ஒரு சிறு புன்னகையைக் கொண்டுவந்துவிடும். அது ஒரு மலராக இருக்கலாம், ஒரு சிரிப்பாக இருக்கலாம், அல்லது தமன்னாவின் முகபாவனையாகக் கூட இருக்கலாம்!
(வர வர இந்த @Senu நேற்றைய கதையில் வந்த 'கேர் டேக்கர் கண்ணன்' மாதிரி அதிகப்பிரசங்கியாக மாறிகிட்டு இருக்கான்!)
அந்த அழகு சிறிது நேரம் மட்டுமே என்றாலும், அது மனதில் நிம்மதி தருகிறது. அதனால்தான் மனது அதை நோக்கி ஈர்க்கப்படுகிறது.
💓 2. மனது எப்போதும் நம்பிக்கையையும், நல்முறையையும் நாடுகிறது
அழகு என்பது எதற்கும் அப்பாற்பட்ட பரிசுத்தமான ஒரு தன்மை போலவே இருக்கிறது. அது மாற்றமடையாத ஒரு நேர்மையான அனுபவம் போல மனதில் பதியும்.
நீங்க கவனிச்சீங்கனா, சில நேரங்களில் ஒரு அழகான காட்சி மனதுக்கு தைரியம் தரும் – அது ஒரு சூரிய உதயமாகக் கூட இருக்கலாம்.
🌌 3. மாறுபாடுகளால் கவர்தல்
அழகு என்பது சாதாரணத்திலிருந்து விலகிய ஒரு தன்மை. அதனால்தான் மனது அதை நோக்கி ஓடுகிறது – இது ஒரு அசாதாரண, சிறப்பு அனுபவம் என்று.
🔄 4. மாற்றம் தெரியும் நேரங்களில் மனம் அழகை நாடும்
✨ 5. மனது உணர்வுகளை தூண்டும் ஒன்றாக அழகு அமையும்
ஜெயகுமார் சந்திரசேகரன்:
வரலாற்றிற்கும் சரித்திரத்திற்கும் வித்தியாசம் உண்டோ? உண்டென்றால் எப்படி?
# ஒன்று வடமொழி மற்றையது தாய்மொழி.
வடமொழி தவிர்க்க விரும்புவோர் வடசொற்புகன்றவிடத்து சினந்து மடியே என்று இன்னாதசொல்லது கூறுவர்.
மடி= வறுமை / தரித்திரம்.
@CGSenu:
🔍 வரலாறு (Varalāṟu)
-
இது ஒரு பொதுவான சொல்.
-
அடிக்கடி எந்தவொரு நிகழ்வின் பின்னணியும், அல்லது ஒரு மனிதர், சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுகிறது.
-
உதாரணமாக:
-
"இந்த நகரத்தின் வரலாறு பழமையானது."
-
"அவரது குடும்ப வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்."
-
📚 சரித்திரம் (Charitthiram)
-
இது குறிப்பாக ஆதாரங்கள் மற்றும் சான்றுகளால் நிரூபிக்கப்படக்கூடிய, ஆழமான ஆய்வுகளுக்கு உட்பட்ட நிகழ்வுகள் குறித்த அறிவியல் பாணியிலான அணுகுமுறை.
-
சரித்திரம் என்பது ஒரு அத்தியாயமாக்கப்பட்ட வரலாறு எனக் கூறலாம்.
-
உதாரணமாக:
-
"இந்தக் கட்டிடத்தின் சரித்திரத்தை ஆராய்ந்தோம்."
-
"இந்தப் போர் நிகழ்வின் சரித்திரம் பல புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது."
-
🧠 எளிமையாகச் சொன்னால்:
சொல் | பொருள் / பயனுள்ள சூழ்நிலை |
---|---|
வரலாறு | பொதுவான கடந்த கால நிகழ்வுகள் |
சரித்திரம் | ஆதாரங்கள் கொண்ட, ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வுகள் |
கே. சக்ரபாணி, சென்னை 28
1. சிலநாடுகளில் வாகனங்கள் ரைட்ஹேன்ட் டிரைவ் சிலநாடுகளில் லெஃப்ட்ஹேண்ட் டிரைவ் இருப்பது ஏன்?
# இடது பக்கம் வாகனங்கள் செல்வது என்று என்ன சட்டம் ? நம்ம நாட்டிலே மாற்றிச் செய்வோமே என்கிற வீம்பு தான் ஆரம்பக் காரணமாக இருந்திருக்கும். பின் நாளாவட்டத்தில் பழகிப் போவது இயல்புதானே.
& அந்தந்த நாட்டின் சாலைப் போக்குவரத்து விதிகள்தான் காரணம். நம் நாட்டின் சாலை விதி : வாகனங்கள் சாலையின் இடது புறமாக செல்லவேண்டும். ஓவர் டேக் செய்யும்போது முன்னால் வாகனங்கள் வருகின்றனவா என்பதை ஓட்டுனர் பார்க்க, நம் வாகனங்களில் வலது பக்க ஸ்டியரிங்.
சில மேலை நாடுகளில் வாகனங்கள் சாலையின் வலது புறமாக செல்லவேண்டும். அங்கே ஓவர் டேக் செய்ய வசதியாக இடது பக்கம் ஸ்டியரிங்.
காதலிக்க நேரமில்லை படத்தின் ஆரம்பப் பாடல் - என்ன பார்வை உந்தன் பார்வை - பாடலில் முத்துராமன் மெரினா சாலையில் ஓட்டி வருவது இடது பக்க ஸ்டியரிங் கார். ஏனென்றால் அது மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்.
2. நீச்சல் குளத்தில் குளிப்பது அவ்வளவு உடல் ஆரோக்யத்திற்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?
# நீச்சல் குளங்களில் நீரை சீராக மாற்றுகிற நியதி பின்பற்றப் பட்டால் பெரிய சீர்கேடு ஏற்பட வாய்ப்பு குறைவு. பயன்படுத்துவோர் பொறுப்புடன் இருக்கும் வரை சரிதான்.
= = = =
KGG பக்கம் :
ஏப்ரல் மாதத்து படப் போட்டியான "மீன்" தலைப்பிற்கு இதுவரை 14 படங்கள் வந்துள்ளன. இதுவரை படம் அனுப்பாதவர்கள், ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் அனுப்பவும்.
CGSenu வரைந்த மீன் :
காலையில் எழுந்து கொள்ளும்போது, காலை ரொட்டீனுக்கு எவ்வளவு நேரமாகும், எத்தனை மணிக்குள் நடக்கக் கிளம்பணுபம் என்பதுதான் என் சிந்தனை. எழுந்து முக்கால் மணி நேரத்துக்குள் நடக்கக் கிளம்பணும் என்ற சிந்தனையாயிருக்கும்
பதிலளிநீக்குநல்ல சிந்தனை!
நீக்குகாலையில் எழுந்து கொள்ளும்போது, காலை ரொட்டீனுக்கு எவ்வளவு நேரமாகும், எத்தனை மணிக்குள் நடக்கக் கிளம்பணுபம் என்பதுதான் என் சிந்தனை. எழுந்து முக்கால் மணி நேரத்துக்குள் நடக்கக் கிளம்பணும் என்ற சிந்தனையாயிருக்கும்
பதிலளிநீக்குமீண்டும் பாராட்டு!
நீக்குநீச்சல் குளங்களில் வெளிநாடுகள் சிலழற்றில், பெரிய ஹோட்டல்களில் கெமிக்கல் கலப்பாங்க. சூசூ போனால் போனவன் இடுப்பு இரத்தச் சிவப்பா ஆயிடும் மாட்டிக்குவாங்க
பதிலளிநீக்குஹா ஹா ஹா !! நல்ல trap !!
நீக்குசிஜில மீன் வரைந்து அனுப்பிவிடுவாங்களோ
பதிலளிநீக்குபண்ணலாம்!
நீக்கு& என்னடா ஊழல் செ னு போட்டு ஜோதிபாசு லாம் போட்டிருக்காரே செய்த வா இல்லை செய்யாதவா?
பதிலளிநீக்கு:))) ஊழல் வேறு; அராஜகம் வேறு!!
நீக்குநாம் செய்துகொள்வது என்றால் ஏதோ ஒண்ணு எனத் தோன்றும் விஸ்தாரமா எவன் பண்ணறது என நினைப்பேன். அப்போதுதான் மனைவியின் அருமையும் தெரியும் எவ்வளவு கஷ்டப்படறாங்க என்பதும் புரியும். சிலிகுரியிலிருந்து
பதிலளிநீக்கு100% உண்மை.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
அவனருள் வேண்டுவோம்! __/\__
நீக்குசமீபத்தில் ஒரு ரிட்டயர்மெண்ட் பார்ட்டிக்கு சென்றிருந்தேன். ஒரு 3 * ஹோட்டலில் நடந்தது அது.
பதிலளிநீக்குபஃபே முறை.
தட்டு எடுக்கும் இடத்தில் பெரிய கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது.
"சாப்பிடுபவர்கள் ஒரே தட்டை உபயோகித்து சாப்பிடவும். மறுபடி ஒரு முறை தட்டு எடுக்க வேண்டாம்"
எங்கள் அக்கா பையன் திருமண வரவேற்பு சென்னை வுட்லேண்ட்ஸில் நடந்தது. பஃபே முறை சாப்பாடு, பலர் இரண்டு,மூன்று தட்டுக்களை பயன்படுத்தியதால் அதிக பணம் கொடுக்கும்படியாகி விட்டது. ஏனென்றால் ஹோட்டல்களில் தட்டைத்தானே கணக்கு பண்ணுகிறார்கள்.
நீக்குஓஹோ - இப்படி ஒரு கோணம் இருக்கா!
நீக்குசில ஹோட்டல்களில் அன்னதான டிக்கெட் போன்று டின்னெர் டிக்கெட் முன்பே தந்துவிடுவார்கள். சாப்பாட்டு அறையில் நுழையும்போது டிக்கெட் தந்தால் தான் plate கையில் தருவார்கள். சாப்பிட்டவர் எண்ணிக்கை சரியாக இருக்கும்.
நீக்கு// ஹோட்டல்களில் தட்டைத்தானே கணக்கு பண்ணுகிறார்கள். //
நீக்குஅதேதான்!
// அன்னதான டிக்கெட் போன்று டின்னெர் டிக்கெட் முன்பே தந்துவிடுவார்கள். சாப்பிட்டவர் எண்ணிக்கை சரியாக இருக்கும். //
நீக்குகொஞ்சம் ஒரு மாதிரியும் இருக்கும்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குபிரசாதங்கள் என்றில்லை. எல்லா வகையிலும் எனக்கு இனிப்பு, உளுந்து, அம்மிணி கொழுக்கட்டைகள்தான் இஷ்டம், உயிர், ப்ரீத்தி! தரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவைதான் கிடைக்கவே மாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் இரண்டு மூன்றுதான் கிடைக்கிறது!!!!
பதிலளிநீக்குஅரிசிமாவை இரும்புக்கோட்டை போல சுற்றுச்சுவர் எழுப்பி நடுவே பாதுகாப்பாய் ஒரு இணுக்கு பூரணம் வைக்கப்பட்டிருக்கும் கொழுக்கைட்டைகளைக் கண்டாலே பற்றிக்கொண்டு வரும்!
இதற்குப் பிறகுதான் சுழியன், போளி எல்லாம்.
போளியில் பருப்பு போளியை விட தேங்காய் போளிதான் இஷ்டம்!
Points noted. நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரும்பொழுது இதையெல்லாம் செய்து விடுகிறேன்.
நீக்குஎனக்கு??
நீக்கு// நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரும்பொழுது இதையெல்லாம் செய்து விடுகிறேன். //
நீக்குஇப்போதைக்கு எங்கே அது நிகழப்போகிறது என்கிற துணிச்சல்!!!!
முதலில் நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும். அப்புறம் நான் பெங்களூரு வரவேண்டும்! அப்படி வரும்போது நீங்கள் சென்னையில் இல்லாமல் பெங்களுருவில் இருக்க வேண்டும்!!!
எனினும் நன்றி நன்றி நன்றி! நல்ல மனம் வாழ்க...
ஸ்ரீராம் பெங்களூருக்கு வாங்க....கௌ அண்ணாவையும் கூப்பிட்டுவிடுவோம். அவர் எங்கள் வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறார். பண்ணிட்டா போச்சு.
நீக்குகீதா
கீதா ரங்கன் க்கா.. அவங்க இரண்டுபேரும் வர்றாங்கன்னு அனுமானித்து பிள்ளைமார் கொழுக்கட்டை பண்ணிவைங்க. நான் வந்து சாப்பிட்டு சொல்றேன்
நீக்குஆ ஹா ! இப்படியும் செய்ய இயலுமா!!
நீக்குபிள்ளைமார் கொழுக்கட்டை என்று ஒன்று இருக்கிறதா? நான் கூட பிள்ளையார் கொழுக்கட்டை என நினைத்து விட்டேன்.
நீக்குபுதுசு புதுசா சொல்றாங்க. ஆனா செய்து கொடுக்கத்தான் ஆள் இல்லை!
நீக்கு.ஆஹா.. பிள்ளைமார் கொழுக்கட்டை, முதலியார் கொழுக்கட்டை ன்னு இதுல கூட ஜாதியா?
நீக்குநாடு ரொம்ப கெட்டுப்போச்சு முத்துசாமி!
முத்துச்சாமி 'பிள்ளை'யாருக்குத் தம்பிதான்!
நீக்குதி.மு.க. அமைச்சர்களில் ராஜாராம்(பின்னாளில் இவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தாரோ?), டாக்டர் கலாநிதி(அண்ணாநகரில் இருந்தார்) போன்றவர்கள் கறைபடா கரத்திற்கு சொந்தக்காரர்கள்.
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குராஜாராம் சகோதரர்தானே துக்ளக்கில் எழுதி கொண்டிருந்தவர்... பெயர் மறந்து விட்டது! ஒரு MP.
நீக்குக சுப்பு.
நீக்குஆம். 'திராவிட மாயை' சுப்பு.
நீக்குஆனால் நான் வேறொருவரை மனதில் வைத்து சொல்லி இருக்கிறேன். அவர் ஒரு MP. அவரும் யாரென்று ஞாபகத்துக்கு வரவேண்டுமே...
திராவிட மாயை சுப்பு - வேறு ஒருவர். க சுப்பு கம்யூனிஸ்ட் என்று ஞாபகம்.
நீக்குநாவலர் நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் இரா செழியன்
நீக்கு(தரமான) புளியோதரை கிடைக்காததால் அதன் மேல் இப்போதெல்லாம் அவ்வளவு ஆசை வருவதில்லை. புளிப்பாய், இல்லாவிட்டால் வாசனையேயின்றி, இல்லாவிட்டால் வேறு ஏதோ கலவை எல்லாம் சேர்த்து, இல்லாவிட்டால் வெளுப்பாய் விரைத்துப்போய்..
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் கிடைத்ததில் வெறுத்துப்போய் விட்டது!
எனவே,
1) சீச்சீ.. இந்தப் புளியோதரை புளிக்கும்.
2) கிட்டாதாயின் வெட்டென மற
3) எட்டாப் பழத்துக்கு (புளியோதரைக்கு) கொட்டாவி விடாதே
:)))
நீக்குஹலோ....ஸ்ரீராம் கேக்குதா....நான் கொடுத்திருந்தேனே....சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொன்னீங்களே....உங்க அலுவலகத்தில் கூடச் சொன்னாங்கன்னு....
நீக்குபாருங்க மறந்துட்டீங்க!!
கீதா
அது நடந்து முடிந்த கதை. நடக்கின்ற கதைக்கு வாரும்...!
நீக்குBlog புலவர்களுக்கு பொய்யுரை தேவையில்லை என்பது உமக்குத் தெரியாதா?
நீக்குகாலையில் எழும் போது மனம் முதலில் ப்ளாங்க்! உடன் அன்றைய பணிகள் மனதில் வரிசையாக வரும். குறிப்பா அடுக்களையில் என்ன மெனு செய்ய திட்டமிட்டிருந்தோம்னு. பிரார்த்தனை. எழும் போது செய்யும் பயிற்சிகளைச் செய்ய டைம் இருக்கான்னு பார்ப்பேன்.
பதிலளிநீக்குகீதா
ஆனால் இது அவ்வப்போது மாறுபடும் என்பது என் அனுபவம்.
நீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
காலையில் எழுந்ததும், "அப்பாடா..! இன்றைய பொழுதுக்கு என்னை நல்லபடியாக எழுப்பி விட்டாய். இன்றைய நாள் அனைவருக்கும் நன்றாக அமையட்டும்" என இறைவனுக்கு ஒரு பிரார்த்தனை செய்வேன். இப்போதெல்லாம் அதை இங்கு (எ. பியில்) வந்தும் எப்போதும் சொல்லிக் செல்கிறேன். (ஒரு சில நாட்களை தவிர்ந்து)
பஃபே முறைகளிலும், கையேந்தி ஒருவரிடம் கேட்டு சாப்பிடும் முறை எனக்கு சற்று கூச்சத்தை உண்டாக்கும். அன்று உணவு நன்றாக இருந்து பிடித்திருந்தால் கூட இரண்டாம் தடவை பரிமாறுபவர்களிடம் போய் நிற்க ஒரு சங்கடம் வரும். ஆனால், நாமே எடுத்துக் கொள்ளும் முறையாக இருந்தால் அந்த கூச்சம் வராது. அதை மேல் ரக சில ஹோட்டலில் மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.
மேலும் தட்டுகளிடம் கவனப் பிசகாக இருந்தால், அது நம்மை அவமானப்படுத்தி விடும் என்ற எண்ணம் சாப்பிடும் வரை இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், இலை போட்டு பரிமாறும் முறை அருகி வருகிறதே! என்ன செய்ய? இனி எங்கும் கையேந்தி பவன்தான்.
/& நான் பெரும்பாலும் பாட்டி வைத்தியம் மட்டுமே கடைபிடிப்பேன். 'சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்தை மிஞ்சின கடவுளும் இல்லை!' /
நானும் அதேதான். சுக்கும், மிளகுந்தான் துணை. இதோ..! இப்போதும் சுப்பிரமணியத்தின் புகழ் பாடிதான் உலா வருகிறேன். (பதிவுக்கு சம்பந்த மில்லாமல் இருக்கிறதே என எண்ண வேண்டாம். சும்மா ஒரு விளம்பரம்தான்:))). ) உங்கள் பதிலை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி!
நீக்கு/// சாப்பிடுபவர்கள் ஒரே தட்டை உபயோகித்து சாப்பிடவும். மறுபடி ஒரு முறை தட்டு எடுக்க வேண்டாம்"..///
பதிலளிநீக்குஅடக் கெரகமே!..
இல்லை, சரிதான். வேறு வழியில்லை!
நீக்குஎத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று அதை வைத்துதான் கணக்கு பண்ணி காசு கொடுக்க வேண்டும். பஃபேயில் வேறெதையும் வைத்து கணக்கெடுக்க முடியாதே..
இல்லாவிட்டால் JKC Sir சொல்லி இருப்பது போல டோக்கன் சீட்டு கொடுத்து விட வேண்டியதுதான்.
பிரச்சனைதான்! என்ன செய்வது? பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அப்பளம் எவ்வளவு போடப்பட்டது என்று கணக்கு எடுப்பார்கள். பஃபே என்றால் எதை கணக்கு வைப்பது? ஆனால் ஒன்று - என் பெண் கல்யாணத்தில் டின்னர் பஃபே (2004) க்கு காண்ட்ராக்ட் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேன். அதில் எதுவும் திரும்பக் கொடுக்கப்படவில்லை; மிஞ்சிய சாப்பாட்டுப் பொருட்களை, என்னுடைய அனுமதி பெற்று சில அநாதை இல்லங்களுக்குக் கொடுத்தார்கள் என்று ஞாபகம்.
நீக்குயாருங்க அந்த CGSenu: நல்லா பதில் சொல்றாரு. அவரே இனி கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
பதிலளிநீக்குநான் வரலாறு என்பது ஒரு time sequence of kings/rulers , சரித்திரம் என்பது அவர்கள் செய்த செயல்கள் போர் உட்பட என்று அனுமானம் செய்திருந்தேன். பதில் வேறே மாதிரி. பதிலுக்கு நன்றி.
Jayakumar
அவர் சார்பில் நன்றி!
நீக்குசிறப்பான பதிவு..
பதிலளிநீக்குஅழகான படங்கள்...
வாழ்க நலம்
நன்றி, வாழ்க நலம்!
நீக்குகாலையில் எழுந்தவுடன் எனது நினைப்பு. Yes I am alive. Thank God.
பதிலளிநீக்கு__/\__
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாண்டிச்சேரி பயணப்படங்கள் அனைத்தும் அருமை. சூரியனின் கண்ணாமூச்சி படங்கள் அழகாக, மற்றும் கோர்வையாக வந்துள்ளன. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குCGSenu வரைந்த மீன் : ஆ இவரும் போட்டியில் வருகிறாரா!!!!
பதிலளிநீக்குகீதா
போட்டியில் இல்லை! ச் ச் சும்மா !!
நீக்குCGSenu நல்லா பதில் சொல்றாரு.
பதிலளிநீக்குகீதா
பாராட்டுவோம்!
நீக்குபஃபே சிஸ்டம் நல்லதுதான், நமக்குத் தேவையானதை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடலாம் வீணாக்காமல்.
பதிலளிநீக்குநெல்லை, பஃஃபே சிஸ்டமில் குறை இல்லை. நம்ம மக்கள்தான் அதை கெடுக்கறவங்க. அழகா எடுத்துப் போட்டுக் கொண்டு ஓரமாகப் போய் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவதை விட்டு...
கீதா
:)))
நீக்குஆஆஆஆஆஆ தலைப்பே அடிரடி சே சே ஆரம்பமே டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்:)) அதிரடியா இருக்கே.. வாறேன்.. விரைவில...
பதிலளிநீக்குமீண்டும் வருக!
நீக்குவந்திட்டேன், காலையில கட்டிலால எழும்பும்போது நான் நினைப்பது:)... "எப்படா திரும்ப வந்து இதில படுப்பேன்" என ஹா ஹா ஹா.. டெய்லி சத்தியமா இப்படியேதான் நினைச்சுக்கொண்டு எழும்புவேன்.... அப்படி ஒரு ஆசை என் கட்டிலில் படுப்பதில அப்படி ஒரு மகிழ்ச்சி ஹா ஹா ஹா... ஏனையோருடையதையும் கொமெண்ட்டிலும் படிச்சிட்டேன்... பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குகேள்வி கேட்ட உங்களுக்கும் நன்றி.
நீக்கு// "எப்படா திரும்ப வந்து இதில படுப்பேன்" //
நீக்குஅட பார்றா... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது! போன வாரம் கிட்டத்தட்ட இதைத்தானே நானும் சொன்னேன்!
ஹா ஹா ஹா ஶ்ரீராம் நீங்க போனகிழமை சொன்னபோது , கிட்ட நெருங்கிட்டீங்களே என நினைச்சேன்:))
நீக்கு
பதிலளிநீக்குநெ டமிலன் ஃபுஃவே சிஸ்டம்... எனக்கும் ஃபுஃவே சிஸ்டம்த்ஹான் பிடிக்கும்.... ஏனெனில்...
1. நமக்கு பிடிச்சதை மட்டும் எடுக்கலாம்[இல்லை எனில் கையை.. வேண்டாம் எனக் காட்டமுன், டக்குடக்கென தட்டில போட்டு விடுவார்கள்... தம் வேலையை முடிக்கோணும் என்பதுபோல]
2. எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுக்கலாம்[அவர்கள் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும்]
3.எங்களுக்கென பிளேட்டில ஒரு இடத்தில போடப்பிடிக்கும், இப்போ எனக்கு கறிகளை சோற்றின் மீது ஒவ்வொரு பக்கமாக போட்டால்தான் சாப்பிடப் பிடிக்கும், பப்படம் எனில் அதில ஈரம் படக்கூடாது [ஆனா அவர்கள் போடும்போது தம் இஸ்டத்துக்குப் போட்டு விடுவினம், அதைப் பார்த்தாலே மனதில கொஞ்சம் சந்தோசம் குறைஞ்சிடும்] சிலர் குழம்பெல்லாம் ஊத்தும்போது, இலைக்கு வெளியே, இலையால வழிஞ்சோடுமளவுக்கு கூட ஊத்திட்டுப் போவார்கள்.. அப்படிப் பார்த்தாலே பிடிக்காது சாப்பிட]
இப்படியான விசயங்களால ஃபுஃவே சிஸ்டம் பிடிக்கும். ஆனா எங்கட நிகழ்வுகளில் ஃபுஃவே சிஸ்டத்தில ஒரே ஒரு பிரச்சனை... சாப்பிட்டு முடிய பீடா புஃல்லா காலி ஆகிடும், சில சமயம் வடைகூட..
இதனால நாங்க உசாரா, முதல்ல பீடா, வடை எல்லாம் எடுத்து வச்சுப்போட்டு பின்பு மெயின் மீலுக்குப் போவதுமுண்டு ஹா ஹா ஹா.
நல்ல கருத்துரை. நல்ல யோசனை. எங்க ஊரில் ஐஸ்கிரீம், பீடா இரண்டுக்கும் பஃபே சிஸ்டத்தில் கூட நாமே எடுத்துக்கொள்ள முடியாது. தனி ஆள்தான் எடுத்துக் கொடுப்பார்கள்!
நீக்குபீடா காலியாகுமா.... அட.. கொஞ்சம் இருந்தீங்கன்னா மறுபடி கொண்டு வருவங்கல்லோ...
நீக்கு:)))
நீக்குஇங்கு எங்கள் தமிழ் வைபவ ஃபுஃவேக்களில் பரிமாறுவதில்லை, அனைத்தும் நாமே எடுப்பது, காலை நேரம் மட்டும் ஆட்கள் நின்று செய்து தருவார்கள் அப்பம் தோசை இப்படி.. சுடச்சுட.. கேட்கக்கேட்க.
நீக்குஇலங்கை பீடா நீங்க சாப்பிட்டிருக்க மாட்டீங்கள் ஶ்ரீராம், அது எப்படி எனில், வெறும் தேங்காய்ப்பூவோடு கொஞ்சம் இனிப்பு சிவப்பு கலரிங் மற்றும் சீரக வகையும் கொஞ்சம் சேர்த்தாக்கும் நல்ல சூப்பர் இனிப்பாக இருக்கும்.. குழந்தைகள் எல்லாம் அடிபட்டு எடுப்பினம் அதனால முடிஞ்சிடும்.. உள்ளே பாக்கு இருப்பதில்லை. சிலதில மட்டும் சீரகம் போல குட்டியாக வாயில் கரைவதுபோல பாக்கு இருந்ததாக நினைவு.
நான் பார்த்த பஃபே விருந்து ஒன்றில், பீடா செய்பவர், பீடா செய்து முடித்து திடீரென்று அதில் நெருப்புப் பற்ற வைத்து, அது எரியும்போதே சுடச்சுட பீடா கேட்டவர் வாயைத் திறக்கச் சொல்லி போட்டார்! நான் அந்தப் பக்கமே போகாமல் நழுவினேன்!
நீக்குநீங்கள் சொல்லும் வகை பீடாக்கள்தான் இங்கும் அதிகம் அதிரா....
நீக்குசிலவகை பீடாக்கள், வெற்றிலை சாப்பிட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு நாக்கு மரத்துப்போய் எது சாப்பிட்டாலும் சுவையே தெரியாது!
நீக்கு///3//நிறைய இனிப்புகளைப் போட்டுக்கொண்டு பிறகு தூரப்போடுவது என்று ஒரு ஒழுங்குமுறை இல்லாததால்,/////
பதிலளிநீக்குஹா ஹா ஹா நெ தமிழன் தன் கதையை இங்கு சொல்கிறார்... அவசரப்பட்டு இனிப்பு முடிஞ்சிடும் என ஓவரா எடுக்கிறார்போலும் ஹா ஹா ஹா, இனிமேல் அப்படி எனில் அதை மட்டும் ஒரு டிஸ் ல புறிம்பா எடுத்தால், மிச்சத்தை ஏனையோருக்குக் கொடுக்கலாமெல்லோ... நம் மேசையில இருப்போருக்கே...:)
நெ த பதில் சொல்லவும்.
நீக்குபஃபே சிஸ்டத்தில் பெயர்பெற்ற ஸ்வீட்கள் வைத்து நான் பார்த்தது இல்லை. சுமாரான இனிப்புகள்தான் இருக்கும்!
நீக்குவீட்டில செய்து படைக்கும்போது, நானே செய்வதால், செய்து முடியவே விருப்பம் போய் விடும், கோயிலில் அல்லது வேறு ஆராவது செய்து தரும்போது, சக்கரைப்புக்கை மற்றும் மோதகம் பிடிக்கும் எனக்கு. மற்றும்படி உறைப்பானது அனைத்தும் பிடிக்கும்.
பதிலளிநீக்குஎன்னவோ புது ஐட்டம் பெயர்கள் எல்லாம் சொல்றாங்க! எனக்குப் புரியலை.
நீக்குKGG... அது சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை!
நீக்குஓஹோ.
நீக்குஹா ஹா ஹா கெள அண்ணனும் என் பாசையைப் பழகோணும் எல்லோ:)) அதனாலதான். நாங்கள் பொங்கல் பொங்குவது என்போம் ஆனா புக்கை பொங்கிட்டோம் என்போம், அதாவது செயலை.. பொங்கல் என்போம்.,. பொருளை புக்கை என்போம்.. இது சிங்கள மொழித் தழுவலாக இருக்கலாம்.
நீக்குகொஞ்சம் தெளிவாக இருந்தேன்; இப்போ குழப்பிட்டீங்க.
நீக்குஇப்போ வெளிநாட்டோர் எல்லோருமே ஆயுள்வேதம், சித்த மருத்துவத்தை நோக்கி இலங்கை இந்தியாவுக்குப் படை எடுக்கின்றனர்... பலரும் சொல்லிட்டினம்.. இரண்டுமே நல்ல முறையில் பலன் தருகிறது என.
பதிலளிநீக்குஎன்ன ஒன்று, அவர்கள் சொல்வதை மற்றும் அளவுகளை அப்படியே ஃபலோ பண்ணோனும். ஒரு மண்டலம் எனில் நிறுத்தோணும்... அவற்றை ஒழுங்காக கடைப்பிடிச்சால் பிரச்சனை வராது.... அதேநேரம் போலி டொக்டர் இல்லாமலும் இருக்கோணும் ஹா ஹா ஹா.
தகவல்களுக்கு நன்றி.
நீக்குஅதுசரி... அப்போ ஹோமியோபதி ட்ரை பண்ணலியா?
நீக்குஹோமியோ பதி பெரிசா தெரியவில்லை ஶ்ரீராம்.. கிட்டத்தட்ட எல்லாமே அடிப்படை ஒன்றுதானே... இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஒரு டொக்டர் இருந்தார்... அவருக்குப் பெயர்
நீக்கு"பச்சைத்தண்ணி வைத்தியர்"...., அவர் கொடுப்பது பச்சைத்தண்ணிதான் கொஞ்சம் மெல்லிய ஃபிளேவர் இருக்கும், வருத்தம் மாறிவிடும்... அவர் ஹோமியோவோ தெரியல்லியே எனக்கு:))
ஆச்சரியமா இருக்கு!
நீக்கு//. நமக்கு மாத்திரம்தான் உணவு தயார் செய்துகொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தால்//
பதிலளிநீக்குநான் எல்லாம் சத்தியமாக சமைக்க மாட்டேன், பசிச்சால் ஏதும் உடனடி உணவு, சத்துமாவை குழைப்பது... பாணும் ஊறுகாயும் சாப்பிடுவது ஹா ஹா ஹா.. இப்படித்தான் இருப்பேன், ஆனா அதிக நாட்கள் அப்படி இருந்தால் ஏதும் சாப்பிடத்தானே வேணும்...
எனக்கு தெரிஞ்சு ஒரு மனைவி, ரைம் ரேபிள் போட்டுச் சமைப்பவராம், வீட்டில ஆருமில்லை, அதிலும் கணவர் வேலைக்குப் பயணம் போகிறார் என்றாலும் அனுப்பிப்போட்டு ஓடிவந்து அந்த ரைம் ரேபிள்படி.. அன்று பிரியாணி எனில் அதைச் செய்து சாப்பிடுவாவாம்...
ஆனா அறிஞ்சேன் சின்ன வயசில சாப்பாட்டுக்கு கஸ்டப்பட்டு வளர்ந்திருக்கிறா அவ என...
அவங்க யாரு நமக்குத் தெரிஞ்சவங்களா?
நீக்குஎனக்கு கண்களில் நீர் வருகிறது!
நீக்குஅவரின் ரைம் கேபிள் கடமை உணர்ச்சி குறித்து எனக்கும் கண்ணில் கண்ணீர் வருகிறது!
நீக்குரைம் ரேபிள்
நீக்குஹா ஹா ஹா இல்லை உங்களுக்கு தெரியாது கெள அண்ணன்.
நீக்குஓ கடமை உணர்ச்சியை நினைச்சுக் கண்ணீர் வருதோ ஶ்ரீராமுக்கு ஹா ஹா ஹா.. அது சிலரது பழக்கம், ஆர் என்ன ஆனால் என்ன, எக்கேடு கெட்டால் என்ன, நான் தினமும் செய்வதை செய்துகொண்டே இருப்பேன் என்பது., அடுத்தோரைப்பற்றிப் பெரிதாக எண்ணுவதில்லை, ஒரு வேளை அதுவும் சரியாக இருக்கலாமோ என்னமோ, ஆனால் இவை எல்லாம் மனதைப் பொறுத்ததுதானே.
:)))
நீக்குகாலையில் எழுந்திருக்கையில் அன்றாட வேலைகள் வரிசை கட்டி நிற்கும். எதுக்கப்புறம் எதுனு மனதினுள் யோசித்து வைத்துக் கொள்வேன். பொதுவாக அப்படியே நடந்தாலும் சில நாட்கள் இயலாமை காரணமாக நேரம் எடுக்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஎழுந்த உடனேயே வேலைப் பட்டியலா... சாமீ... பல்லு தேச்சு போட்டு, காபி குடித்து, குளிச்சு, அப்பால யோசிக்க வேண்டியது இல்லையா...
நீக்கு:)))
நீக்குஆயுர்வேதம் சரியான முறையில் கடைப்பிடித்தால் நல்ல பலன் தரும். நான் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக ஆயுர்வேதம் தான். அதுவும் காலுக்கு. முன்னால் எல்லாம் அண்ணா நகரில் இருக்கும் கேரளா ஆயுர்வேத மருத்துவமனைக்குத் தான் போவேன். அங்கே அடிக்கடி மருத்துவர் மாறுவதால் பின்னர் தெரினங்கோப்பில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எல்.ம்ஹாதேவனிடம் தொடர்ந்தேன். பின்னர் இங்கே வந்ததும் கரூர் வெங்கட்ரமணா வைத்தியசாலை மருத்துவர் சுரேஷ் என்பவர். மாதம் இருமுறை ஸ்ரீரங்கம் வருவார். கூட்டம் அதிகம் என்பதால் வெகு நேரம் காத்திருக்கும்படி ஆயிடும்.
பதிலளிநீக்குதெரிசனங்கோப்பு
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குநல்ல விஷயம்தான். ஆனால் எல்லோருக்கும் சரிவராது என்று நினைக்கிறேன். ஆயுர்வேதமோ, சித்தாவோ ஏதோ ஒன்றில் இருக்கு led என் பற்களை பாதித்தது.
நீக்குஓ¡
நீக்குஆயுர்வேதத்தில் லெட் (ஈயம்) சேர்ப்பதில்லை. வெள்ளீயம் (நம் ரசச்சொம்பு) கூடச் சேர்ப்பதாகக் கேள்விப் படலை. ஆனாஅல் வெள்ளி பஸ்பம், தங்க பஸ்பம் உண்டு. எங்க தாத்தா (அப்பாஓட அப்பா) வீட்டிலேயே அதற்கான கலுவம் எல்லாம் வைச்சிருந்தார். செய்முறைக்கான ஓலைச்சுவடிகள் எல்லாமும் இருந்தன. அப்பா மதுரையை விட்டு வரும்போது எல்லாவற்றையும் டவுந்கால் ரோடிலுள்ள விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலகத்தில் கொடுத்துட்டார். :( முன்னரே சொல்லி இருக்கேன்.
நீக்குஇப்போது நடப்பவை வரலாறாகிப் பின் சரித்திரம் படைக்குமோ? தெரியலை. சிஜிஎச் சேனு/சீனு கேஜிஜியின் இன்னொரு பெயரா?
பதிலளிநீக்குஇல்லை.
நீக்குபோன புதன் பதிவைப் படிக்கவும்.
நீக்குmmmmmm padichene!
நீக்குநான் மட்டும் தனியாகச் சாப்பிடுவதெனில் புழுங்கலரிசியை வறுத்துப் பொடித்துக் கொண்டு கஞ்சி போட்டுப்பேன். அதிலேயே சுக்கு, மிளகு, ஜீர்கம் வறுத்துப் பொடித்துச் சேர்த்துப் பெருங்காயம் உப்பு, தக்காளி பொடியாக நறுக்கிச் சேர்த்து நீர்க்கப் பண்ணிடுவேன். நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக் கொண்டு மிளகு அப்பளத்தோடு (நெருப்பில் வாட்டியது) சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில். அப்பளத்தில் நெய் கட்டாயமாய் விடணும். சொல்ல மறந்துட்டேன்.
பதிலளிநீக்குஆஹா! சுவையான தகவல்கள், சுவையான கருத்து!
நீக்குபஃபே முறையில் சாப்பிடுவதெல்லாம் பெரிய நக்ஷத்திர ஓட்டல்களில் தான் சரியா வருது. கல்யாணங்களில் இந்தத் தட்டுப் பிரச்னை ஒண்ணு. அதோடு நாம் எடுத்துக்க முடியாது. தட்டை நீட்டணும். பிடிக்கவே பிடிக்காது. நாமே எடுத்துண்டால் கட்டாயமாக வேறே தட்டுத் தான் ஒவ்வொரு முறையும் எடுத்துக்கணும், அதான் முறையும் கூட.அம்பேரிக்க ஓட்டல்கள், காட்மாண்டு ஓட்டல்கள், வட இந்திய ஓட்டல்களில் பஃபே முறையில் தைரியமாகச் சாப்பிடலாம். நம்மூர்க் கல்யாணங்கள் எனில் இலை போட்டுச் சாப்பாடாய் இருக்கணுமேனு பிள்ளையாரை வேண்டிப்பேன். இப்போ வெளியே போயோ, அப்படி எல்லாம் சாப்பிட்டோ 3 வருடங்கள் ஆகின்றன.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு//உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு(கள்) என்ன என்ன?//
பதிலளிநீக்குஹா ஹா ஹா பொழுது போக்கென்பது, என்னைப்பொறுத்து, என் "மூடை" ப்பொறுத்து மாறுபடும். எப்பவும் ஒரே மாதிரிப் பொழுது போக்குவது பிடிக்காது.
இப்போ கிச்சினில் கொஞ்சம் பெரிய வேலை செய்கிறேன் எனில், எப்படா இதை முடிச்சுப்போட்டு ஓடிப்போய் சோஃபால இருந்து யூ ரியூப் பார்ப்பேன் என எண்ணுவேன், ஆனா சில சமயம் திவியைப் பார்த்தாலே அலர்ஜியாகும் ஹா ஹா ஹா...
ஆனா கொமெனானது, கார் ட்ரைவ் போவது, கைவேலை, மற்றும் கொப்பி பென் வச்சு கவிதை, காதில் விழும் பொன்மொழி பயமொயி:))) இப்படி எழுதுவது மிகவும் பிடிக்கும்-ஆனா அதைச் செய்ய மாட்டேன்...
எப்பூடிச் சுத்தினாலும் என் "மூட்" ஐப்பொறுத்தே பொழுது போக்கும்:)
3 ஆவது பாராவில் பல வார்த்தைகளுக்கு யாராவது அர்த்தம் கூறவும். அல்லது தமிழில் மொழி பெயர்க்கவும்.
நீக்கு"ஆனால் காமன் ஆனது கார் டிரைவ் போவது, கைவேலைப்பாடுகள், காபியிங் பென்சில் வச்சு கவிதை எழுதுவது, காதில் விழும் பொன்மொழி, பழமொழிகளை எழுதி வைப்பது".....
நீக்குஇவையெல்லாம் பிடிக்குமாம்.
ஆஹா! பரிமேலழகர் ஸ்ரீராமுக்கு நன்றி.
நீக்குஆஆஆஆ பரிமேலளகர் பழகிட்டார் என் பாசை:)..
நீக்கு//காபியிங் பென்சில் வச்சு கவிதை எழுதுவது///
copy , pen . முக்கியமாக எழுதுவது பிடிக்குமெனக்கு. ஆனா இப்போ பழக்கக் குறைவால், கொஞ்சம் எழுதியதும் கை வலிக்குது.. நீங்களும் எழுதிப் பாருங்கோ புரியும்:).
:))
நீக்குபொதுவாக ஓட்டல்களில், மற்றும் இஸ்கானில் எல்லாம் இனிப்பு வகைகளை முதலிலேயே வைப்பதில்லை. பஃபே முறைச் சாப்பாடு தான். நாம் சாப்பிட்டு முடித்ததும் உட்கார்ந்து கொண்டால் அவங்க வந்து நாலைந்து இனிப்பு அல்லது ஐஸ்க்ரீம் அல்லது கஸ்டர்ட் பெயர் சொல்லி எது வேண்டும்னு கேட்பாங்க. சில ஓட்டல்களில் காரட் அல்வா கூட வைச்சிருப்பாங்க. சுடச் சுட முந்திரி, பாதாம், திராக்ஷை மினுமினுக்கக் கொண்டு வந்து தருவாங்க. மேலும் ஸ்டார் ஓட்டல் பஃபே காலை உணவில் நாமே எடுத்துக்கறாப்போல வைச்சிருந்தாலும் சில குறிப்பிட்ட ஐடங்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கலாம். அவற்றில் பூரி, கிழங்கு, மசால் தோசை, ஆனியன் ஊத்தப்பம், பராட்டா(தமிழ்நாட்டு புரோட்டா இல்லை) போன்றவை அடங்கும்.
பதிலளிநீக்குசுவையான தகவல்கள்! நன்றி.
நீக்கு//மனது அழகை நோக்கி நகர்வதன் காரணம் என்ன?//
பதிலளிநீக்குகெள அண்ணன்.. "உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கலாமெல்லோ".. ஹா ஹா ஹா கனி இருக்கக் காய் கவர்ந்திட்டீங்களே.. எவ்ளோ அயகான டமனாக்கா போட்டோஸ் இருக்க:).. எங்க கஸ்டப்பட்டுத்தேடி இப்படம் எடுத்து வந்தீங்க.. நெ தமிழன் பாவமெல்லோ:).. பாருங்கோ மனமொடிஞ்சு போயிட்டார்:)) ஹா ஹா ஹா..
Senu வரைந்த கேலிச்சித்திரம்! ( கார்ட்டூன்)
நீக்குஓ அதுவா சங்கதி..:)
நீக்குஆம்.
நீக்குஎனக்குப் பிடிச்ச ஒரே பொழுதுபோக்குப் படிப்பது தான். இப்போக் கொஞ்ச நேரம் படிச்சாலே கண்கள் பிரச்னை என்பதால் அதிகம் படிப்பதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியை எல்லாம் தூக்கிக் கொடுத்துட்டோம், நோ டிவி. செய்திகள் எல்லாம் மொபைலில் வந்துடும். ஆகவே ராத்திரி ஏழரைக்கெல்லாம் படுத்துடுவோம். படுத்துண்டு சில நாட்கள் பேசிண்டிருப்போம். அல்லது பெண்ணோ/பையரோ வீடியோ காலில் வருவாங்க. பேசிட்டுத் தூங்குவோம்,
பதிலளிநீக்குகீசாக்கா ரொம்ப அமைதியாகிட்டாவே, உடல் நலமில்லையோ என மனதில கொஞ்சம் கவலை இருந்தது, இன்று கொமெண்ட்ஸ் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கு..
நீக்குமாமாவுக்கு ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் போன வருஷம் ஏப்ரல் வரை இருந்தார். பின்னரும் படுத்த படுக்கை தான். 2 நர்ஸ் போட்டுப் பார்த்துக் கொண்டேன். பையர் நைஜீரியாவில் இருந்ததால் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார். ஆகவே தான் சில மாதங்களாக இணையம் பக்கம் வரலை. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. பிசியோதெரபி எடுத்துக் கொண்டு கொஞ்சம் முன்னேற்றம். வீட்டுக்குள்ளேயே நடமாட்டம். இரண்டு மாதமாகக் கொஞ்சம் வந்து எட்டிப் பார்க்கிறேன்.
நீக்குவாழ்த்துகள் கீ சா மேடம்.
நீக்குஓ கீசாக்கா இவ்ளோ நடந்திருக்குதோ. நான் புளொக் பக்கம் வந்து பார்க்கும் பழக்கமில்லை, வந்தால் கொமெண்ட் போடுவேன்... இல்லை எனில் இல்லை, ஆரோடும் ஆரைப்பற்றியும் விசாரிப்பதில்லை.. ஆனா வரும்போது உங்கட பெயர் பெரிதாக கண்ணில் தென்படவில்லை அதனால யோசிச்சதுண்டு, நான் நீங்கதான் புல்லுத் தடக்கினாலும் விழுந்திடுவீங்களே அதனால ஏதும் உடல் நலக் குறைவோ என நினைச்சேன்.
நீக்குநலமாக இருங்கோ, நன்றி பதிலுக்கு.
எனக்கும் அதே பதில்தான், நாம் பார்ப்பது அழகாக இருக்கும்போதும், நாம் அலங்கரிச்சு அழகாக இருக்கும்போதும், புத்துணர்வு, மகிழ்ச்சி உற்சாகம் எல்லாமே கிடைக்குது.
பதிலளிநீக்குநம்மைக்கூட கொஞ்சமா அலங்கரிச்சிருக்கும்போது ஒருவரைப் பார்த்தால் மகிழ்ச்சியாகப் பேச வரும், தலை இழுக்காமல், அலங்கோலமாக இருக்கும்போது ஒருவரைப் பார்க்க நேரிடின், அப்பவும் நாம் அழகாக இருந்தாலும்:)))).. நமக்கு கொன்ஃபிடெண்ட்டாக பேச வராது... ஹா ஹா ஹா
:)))
நீக்குவரலாறு.. சரித்திரம்... எனக்கும் அது ஒரு டவுட்தான்.. நல்ல விளக்கம்.. இருப்பினும் முழுசாகப் புரியவில்லை.
பதிலளிநீக்குஇடது பக்கம் வலது பக்கம் ட்றைவிங்... இதுமட்டுமில்லை, ஆண் பெண் உடைகள்.. ஜீன்ஸ் ஆயினும் ஆணுக்கு ஒரு விதம் பெண்ணுக்கு ஒருவிதம்... இப்படி நிறையவே வந்திருக்கு ஆனா வந்த பாதையை தேடினால் விடை தெரிவது கஸ்டம்தான்.
ஆம், உண்மை!
நீக்குஒரே இடத்தை ஒம்பே..ஏஏஏஏது கோணத்தில இருந்து படமெடுத்துப்போட்டு எங்களைப் பேய்க்காட்டுகிறார் கெள அண்ணன்:)...
பதிலளிநீக்குஇண்டைக்கு ஓவரா அலட்டிட்டமோ.. எதுக்கும் இனி அமைதியா, நல்ல பிள்ளையா, அதிராவா இது எனக் கேய்க்கும்:) அளவுக்கு அடக்கொடுக்கமா இருந்திடப்போறேன் ஹா ஹா ஹா:).
இன்று நிறைய கருத்துக்களை அள்ளி வீசி விட்டீர்கள். ஆனால், அத்தனையும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. இதுபோலவே தினமும் உங்களை இங்கு வரவேற்கிறோம்.
நீக்குக ஹ அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.
நீக்குஹா ஹா ஹா நன்றி கமலாக்கா, கெள அண்... இதுவும் உண்மையில் "மூடை"ப் பொறுத்ததுதான், மற்றும்படி வரோணும் எனத்தான் எனக்கும் விருப்பம்....
நீக்குவருக, வாழ்க!
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாண்டிச்சேரி கடற்கரை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்குஆவ்வ்வ்வ்வ் 100 ஐத் தாண்டி நூற்றிமுப்பத்து எட்டூ..ஊஊஊஊஊஊ:)))
பதிலளிநீக்கு:))))
நீக்கு