மாலை மணி ஐந்தரை.
மாதவனுக்குப் பொழுது போகவில்லை.
சரி, மொட்டை மாடிக்குப் போய் கொஞ்சம் அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்கலாம் என்று போனான்.
தெருவில் வருவோர் போவோரையும் மற்றும் வாகனங்களையும் பார்த்துக் கொண்டு இருந்தால் கொஞ்சம் பொழுது போகும்.
சில சமயங்களில் தெருவில், தான் அடுத்து காணப் போகின்ற வாகனத்தின் பதிவு எண் என்னவாக இருக்கும் என்ற யோசனை தோன்றும். மனதுக்குள் ஒரு எண் தோன்றும். 8292 என்று தோன்றினால் அடுத்து வரும் வாகனத்தின் நான்கு இலக்க எண்ணில் ஏதாவது ஒரு இலக்கமாவது ஒத்துப்போகிறதா என சரி பார்ப்பான்.
அவன் வீட்டுக்கு எதிரே இருந்தது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. மாலை நேரங்களில் அங்கே காம்பவுண்டுக்குள் குழந்தைகள் விளையாடுவது நன்றாகக் காணமுடியும். சில சமயங்களில், அவர்கள் கிரிக்கெட் ஆடும் பந்து, மாதவன் வீட்டு மாடியில் வந்து விழும். அப்போது மாதவனோ அல்லது அவனுடைய அம்மாவோ அந்தப் பந்தை எடுத்து, சிறுவர்களிடம் திரும்ப தூக்கிப் போடுவார்கள். அந்த சிறுவர்களில் சிலர், மாதவனின் அம்மாவோடு சிறிது நேரம் பேசுவது உண்டு.
மாதவனின் வீட்டின் மாடிக்கு நேரே அந்தக் குடியிருப்பின் இரண்டாவது தளம். ஆனால் அந்தத் தளத்தில் இவன் வீட்டுக்கு நேரே இருந்த ஃப்ளாட் ரொம்ப நாட்களாக காலியாக இருந்தது.
முன்பு இருந்தவர்கள் விட்டுச் சென்ற துடைக்கும் துணி ஒன்று மட்டும் கிரில் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது.
மாடிக்குப் போன மாதவன் வழக்கம்போல அடுத்து வருகின்ற வாகனத்தின் எண் பற்றி யோசித்தான். 4298 என்று மின்னலாகத் தோன்றியது ஓர் எண்.
அதே நேரத்தில் அந்தத் தெரு முனையில் வந்து திரும்பியது ஒரு Pபேக்கர்ஸ் & மூவர்ஸ் லாரி. அதனுடைய பதிவு எண்ணை கவனித்தான் மாதவன். என்ன ஆச்சரியம்! அந்த எண் 4290.
கடைசி இலக்கம் மட்டும்தான் வித்தியாசம். அந்த லாரி அவன் வீட்டுக்கு எதிரிலேயே வந்து நின்றது.
அட காலியாக உள்ள எதிர் ஃப்ளாட்டுக்கு குடி வருகிறார்கள் போலிருக்கு என்று நினைத்தான் மாதவன்.
இதிலும் அவனுடைய எதிர்பார்ப்பு சரியாக இருந்தது.
பேக்கர்ஸ் & மூவர்ஸ் ஆட்கள் லாரியிலிருந்து மூட்டை முடிச்சுகளை இறக்கி படி ஏறி அந்த ஃப்ளாட்டின் உள்ளே அவைகளை அடுக்கி வைப்பது தெரிந்தது.
புதிதாக குடி வருபவர்கள் வீட்டில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். ஒன்றும் தோன்றவில்லை.
அதற்குள் சூரியன் மறைந்து செயற்கை வெளிச்சம் ஆங்காங்கே உயிர் பெற்று, பரவத் தொடங்கியது.
சரி - நாளைக்கு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கீழே இறங்கி வந்தான் மாதவன்.
அவன் வீட்டிற்குள் சென்ற அரை மணி நேரம் கழித்து வந்த காரிலிருந்து இறங்கி அந்த ஃப்ளாட்டின் உள்ளே சென்றார்கள் மூன்று பேர். அம்மா , இளம்பெண் மற்றும் அவளுடைய தம்பி. காரை ஓட்டி வந்தவர் அதை குடியிருப்பின் அடித்தள பார்க்கிங் பகுதிக்குள் ஓட்டிச் சென்றார்.
$$$$$$$$$
மறுநாள் காலையில் டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் எடுத்துக்கொண்டு, மாடிக்கு சென்றான் மாதவன்.
எதிர் ஃப்ளாட்டில் யாரையும் காணோம். 'சரியான தூங்குமூஞ்சிகள்' என்று மனதில் திட்டியபடி திரும்பி வந்தான் மாதவன்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு நப்பாசை தோன்ற மாடிக்குப் போனான்.
ஆஹா ! அந்த ஃப்ளாட் பால்கனியில் அழகான தேவதை! அரக்கு வர்ண டாப்ஸ் மஞ்சள் வர்ண பைஜாமா (லெக்கிங்ஸ் ?)
ஆனால் அவள், மாதவன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. நேற்று லக்கேஜ் இறக்குவதற்கு வந்த லாரி வந்த திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். யாரை எதிர்பார்த்து இப்படி வழி மேல் விழிகள் இரண்டும் காத்திருக்கின்றன?
வீட்டிற்கு வரவேண்டிய லக்கேஜ் இன்னும் ஏதாவது மீதி இருக்குமோ?
திடீரென்று அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி! வேகமாக லிப்ட் நோக்கி ஓடினாள்.
மாதவன் அவசரம் அவசரமாக படி இறங்கி ஓடினான். வீட்டிற்கு வெளியே வந்தபோது, குடியிருப்பின் வாசல் பக்கத்தை மறைத்தபடி பள்ளிக்கூட மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்கூல் பஸ் நின்றிருந்தது. குடியிருப்பு மாணவர்கள் வரிசையாக உள்ளே ஏறிக் கொண்டிருந்தனர்.
பஸ் நகரட்டும், அப்புறம் அவள் எங்கே என்று தேடுவோம் என்று நினைத்தான் மாதவன்.
ஆனால் - பஸ் போன பிறகு அந்தக் குடியிருப்பின் வாசலில் யாரையும் காணோம்! ஏமாற்றத்துடன் வீட்டிற்குள் வந்தான் மாதவன்.
மீண்டும் மாடி. ஊஹூம் அவளைக் காணோம்!
அடுத்த நாளும் இது போலவே எல்லாம் நடந்தது.
மாதவன் பொறுமை இழந்தான்.
அதற்கு மறுநாள் அவள் மாடியில் நின்றிருந்தபோது மாதவனுக்கு ஒரு ஐடியா வந்தது.
கீழே வீதியில் சென்று கொண்டிருந்த கீரை விற்கும் தள்ளுவண்டிக்காரரை நோக்கி பலமாகக் கைதட்டி அவரை நிற்கும்படி . சைகை காட்டினான். ஆஹா இது வொர்க் அவுட் ஆயிடுச்சு!
அந்தப் பெண் இவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். ஒரு புன்னகையை வீசினாள்.
அடுத்தடுத்த நாட்களில் காலை நேரப் புன்னகைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
ஒரு லீவு நாளில், குடியிருப்புக் காம்பவுண்டுக்குள் சிறுவர்கள் கிரிக்கட் ஆடினார்கள். ஒரு பையன் அடித்த பந்து, அந்தப் பெண் இருக்கும் இரண்டாவது மாடி பால்கனியில் விழுந்தது. பந்து விழுந்த சத்தம் கேட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் அந்தப் பெண். மாதவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தான். பந்தை அடித்த பையன், அவளை நோக்கி, பந்தை எடுத்து தங்களிடம் போடுமாறு சைகை செய்தான். அவள் மறுக்கின்ற பாவனையில் சைகை காட்டி, 'வேண்டுமானால் நீயே வந்து எடுத்துக்கொள்' என்று சைகை செய்தாள். அதைத் தொடர்ந்து படி ஏறி சென்ற சிறுவன், அவளோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். என்ன பேசிக்கொண்டு இருந்தார்களோ! திரும்பி வர பத்து நிமிடங்கள் ஆயிற்று. ஆனால் சந்தோஷமாகத் திரும்பி வந்தான்.
மாதவன் மேலும் ஒரு ஐடியாவை செயல்படுத்தினான். வீட்டுக் கம்ப்யூட்டரில் தன்னுடைய மொபைல் எண்ணை பெரிதாக பிரிண்ட் போட்டு, அவள் பார்வையில் படும்படி பிடித்து நின்றான். அவள் அங்கிருந்தபடி அதை மொபைலில் படம் எடுத்து, படத்தை ஜும் செய்து பார்த்து தம்ஸ் அப் சைகை செய்தாள்.
மாதவன், ' உன்னுடைய மொபைல் எண் என்ன?' என்று சைகை காட்டினான்.
அவள் உள்ளே சென்று, அவர்கள் வீட்டுக்கு பாக்கிங் வந்த பெரிய அட்டை ஒன்றில், மார்க்கர் பேனாவினால் தன்னுடைய மொபைல் எண்ணை பெரிய அளவில் எழுதிக்கொண்டுவந்து காட்டினாள்.
மாதவன், அதைப் படம் எடுத்து ஜும் செய்து பார்த்து, தம்ஸ் அப் காட்டினான்.
அப்புறம் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு வரி செய்திகள்.
" தமிழ் தெரியுமா?"
" தெரியும்"
" என் பெயர் மாதவன். உன் பெயர் என்ன?"
" கீதா "
" கீதா ஒவ்வொரு நாளும் உங்க டிரஸ் செலக்ஷன் மிகவும் அருமையாக இருக்கு. "
" தாங்க் யு "
இருவரும், எங்கே வேலை பார்க்கிறார்கள் என்னும் தகவலை ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பித் தெரிந்துகொண்டார்கள்.
" தினமும் மாடியில் காத்துக்கொண்டு இருப்பது யாருக்காக? "
" தம்பியின் ஸ்கூல் பஸ் வருகிறதா என்று பார்க்க "
" ஓஹோ ! ஸ்கூல் பஸ் வந்தால் ? "
"மாடியிலிருந்து இறங்கி வந்து, தம்பியை ஸ்கூல் பஸ்ல ஏற்றிவிட்டு, டாட்டா காட்டிவிட்டு திரும்பப் போவேன். "
" கீதா இப்படி தொலைதூர தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு பதில் நாம் இருவரும் அருகில் உள்ள பார்க்ல சந்தித்தால் என்ன? "
" ஓ கே - சந்திப்போம். எங்கே? "
" நாம் இருக்கும் தெருவின் வலது கோடியில் - அதாவது காலை நேரத்தில் உங்க குடியிருப்பில் உள்ள பசங்களை ஏற்றிச் செல்லும் பஸ் எந்த வழியில் போகிறதோ அதே வழியில் சென்று இடது பக்கம் திரும்பி, நூறு மீட்டர் தூரம் நடந்தால், சுதந்திர பூங்கா வரும். அங்கே உள்ளே நுழைந்து, இடது பக்கப் பாதையில் கொஞ்ச தூரம் நடந்தால் அங்கே இருக்கும் பெஞ்சுல வரும் செவ்வாய்க்கிழமை காலையில் ஏழு மணிக்கு உனக்காகக் காத்திருப்பேன். நீ முன்னால் அங்கு வந்தால் எனக்காகக் காத்திரு. "
" ஷ்யூர்"
= = = = = = = = = = = = =
செவ்வாய்க் கிழமை.
காலை மணி ஏழு ஐந்து.
மாதவன் அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். வேகமாக நடந்தான்.
பார்க் உள்ளே நுழைந்து இடது பக்கம் பார்த்தான். வெகு தூரத்தில் கீதா அவன் குறிப்பிட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது.
மாதவன், கொஞ்சம் தயங்கி, தன்னுடைய மொபைலை எடுத்து, அவளுக்கு ஒரு செய்தி அனுப்பினான்.
" கீதா - நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒரு முக்கியமான செய்தி - எனக்கு பேச வராது. "
உடனடியாக கீதாவிடமிருந்து பதில் செய்தி! " எனக்கும் பேச்சு வராது "
அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் நின்றான் மாதவன். இனி என்ன செய்வது? மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்க கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.
பார்க்கில் அப்படியே திரும்பி நடந்து இடது புறமாக திரும்பி அங்கே இருந்த காலி பெஞ்சு ஒன்றில் அமர்ந்தான். அங்கு இருந்தபடி அவனால் கீதாவையோ அல்லது கீதாவால் இவனையோ பார்க்கமுடியாது.
கொஞ்ச நேர யோசனைக்குப் பின், கீதாவுக்கு செய்தி அனுப்பினான் மாதவன்.
" கீதா - எனக்குப் பேச வராது என்றாலும் மற்ற புலன்கள் எல்லாமே நன்றாக உள்ளன. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால், 'நான் பேச நினைப்பதை எல்லாம் அவள் பேசுவாள், நான் என்னுடைய குறையைப் பெரிதாக நினைக்காமல் இருப்பதற்கு அவள் பேச்சைக் கேட்டு ஆனந்தமாக வாழ்க்கையைக் கழிக்கலாம்' என்று மனக்கோட்டைக் கட்டியிருந்தேன். அதெல்லாம் இப்படி தவிடுபொடியாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உனக்காவது எல்லா புலன்களும் நன்றாக அமைந்த ஒரு கணவன் கிடைக்கட்டும். நாம் இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் - நம் இருவராலும் பேச இயலாது என்பது நமக்கு வருத்தமாக இருக்கும். நம்முடைய குழந்தைகளும் அம்மா அப்பா குரலை, அவர்கள் பேசுவதை தங்களால் கேட்க முடியாது என்பதால் வருத்தமடையலாம். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
மாதவன். "
கீதாவிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
மாதவன் மெதுவாக எழுந்து, கீதா உட்கார்ந்து இருந்த பெஞ்சு பக்கமாக நடந்துவந்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே அங்கு கீதா இல்லை. கீதா, தூரத்தில் பார்க் வாசலை நோக்கி நடந்து செல்வது தெரிந்தது.
சோகமாக, திரும்பி வந்து, கீதா உட்கார்ந்திருந்த அதே பெஞ்சுல மௌனமாக உட்கார்ந்துகொண்டான் மாதவன். 'தான் அவசரப்பட்டு அந்த செய்தியை அவளுக்கு அனுப்பியிருக்கக்கூடாதோ?' என்ற கவலை வந்தது அவனுக்கு.
சில நாட்கள் முன்பு நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவனுடைய மணக்கண்ணில் வந்து போயின.
மனதில் தோன்றிய வாகன எண் - 4298. ஆனால் அவன் கண்டதோ லாரி எண் 4290. அப்போதே கடவுள் தனக்கு சூசகமாக இறுதியில் 'சைபர்' என்று உணர்த்தியிருப்பார் போலிருக்கு ச்சே .. இவ்வளவுதான் வாழ்க்கை! எவ்வளவு பெரிய ஏமாற்றம்!
மாதவன் கண்களில் கண்ணீர்.
@ @ @ @ @ $ $ $ $ 😷😷
கீதாவின் கதை!
பத்து நிமிடங்கள் கழித்து, பார்க் விட்டு வெளியே தளர் நடையாக வந்தான் மாதவன்.
பார்க் நுழைவு வாயில் அருகே இருந்த பெரிய மரத்தின் மறுபக்கத்தில் நின்று மொபைல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை அவன் கவனிக்கவில்லை.
கடந்து செல்லும்போது " நில்லுங்கள் மிஸ்டர் மாதவன் " என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்று, திரும்பிப் பார்த்தான்.
கீதா!
ஆச்சரியமும் அதிர்ச்சியும் அவனை ஒன்றாக ஆட்கொண்டது.
கீதா தொடர்ந்து பேசினாள். " உங்களைப் பற்றிய எல்லா விவரமும், பந்து விளையாடும் பசங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க 'உங்களுக்குப் பேச வராது; ஆனால் ரொம்ப நல்லவர், கோபமே வராது' அப்படீன்னு சொன்னாங்க. "
மாதவனுக்கு ஒருவேளை தான் காண்பது கனவா என்ற சந்தேகம் வந்தது.
" பெயரில் மட்டும் மாதவனாக இல்லாமல், ஆளும் பார்ப்பதற்கு ஆக்டர் மாதவன் மாதிரி இருக்கீங்க. அதனால் உங்களைப் பார்த்ததும், உங்களைப் பற்றிய விவரம் தெரிந்துகொண்டதும் உங்களை எனக்குப் பிடிச்சுப் போச்சு. "
' அப்படி என்றால் என்னிடம் ஏன் பேச வராது என்று பொய் சொன்னாய்? ' என்று அவள் மொபைலுக்கு செய்தி அனுப்பினான் மாதவன்.
" ஏன் பொய் சொன்னேன் என்றால், இன்றைக்கு என்ன தேதி என்று பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள் கீதா.
(தொடரும்)
@@@###$$$$
அடுத்த பகுதி.
கீதா : " சரி மாதவன் - நீங்க வீட்டுக்குப் போய், ஆபீஸ் கிளம்பத் தயார் செய்துகொள்ளுங்கள். நீங்க 9 மணிக்கு மேலதான் ஆபீஸ் போவீர்கள் என்று நினைக்கிறேன். நான் அதற்கு முன்பே என்னுடைய காரில் கிளம்பவேண்டும்! "
மாதவன் தலையை 'சரி' என்று ஆட்டி, வீட்டை நோக்கி நடந்தான்.
மாதவன் முன்னே செல்ல கீதா அவனைப் பின் தொடர்ந்தாள்.
வீட்டுக்கு வந்ததும், கீதா அமெரிக்காவில் இருக்கும் அவளுடைய அண்ணன் டாக்டர் சேகருக்கு ஃபோன் செய்தாள். " அண்ணா போன வாரம் நான் சொன்னேனே - மாதவன் என்ற கேஸ். அதான் அண்ணா - பதின்ம வயதில் திக்கு வாயாக இருந்து, ஜுரம் வந்து, கனவில் எதைக் கண்டோ பயந்து, பேச்சு இழந்தவர். "
" ஞாபகம் இருக்கு. நான் கூட மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டால் ஒருவேளை பேச்சு திரும்ப வரலாம் என்று சொன்னேனே"
" ஆமாம் அண்ணா - அவருக்கு அதிர்ச்சி கொடுக்க நான் இன்று இரண்டு முயற்சிகள் செய்தேன். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. "
" என்ன முயற்சிகள் செய்தாய்?"
" முதலில் எனக்கும் பேச்சு வராது என்று ஓர் அதிர்ச்சி கொடுத்தேன். ஒன்றும் எஃபக்ட் இல்லை. அதன் பிறகு திடீரென்று பேசி அவருக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தேன். ஊஹூம் - அதிலும் பயன் இல்லை. இப்போ என்ன செய்வது? "
" பேச்சு பறிபோகும் அளவுக்கு எந்த மாதிரி கனவு வந்தது என்று தெரிந்தால்தான் மேலே ஏதாவது யோசிக்கமுடியும். "
" சரி அண்ணா. நான் கேட்டுப் பார்க்கிறேன். "
மாதவனுக்கு ஒரு வா அ செய்தி அனுப்பினாள் கீதா. " நான் சரியாக எட்டே முக்கால் மணிக்கு ஆபீஸ் புறப்படுகிறேன். அந்த நேரத்திற்கு நீங்க மாடிக்கு வந்தால், உங்களுக்கு கை அசைத்து சந்தோஷமாக ஆபீஸ் செல்வேன்"
மாதவன் பதிலாக 'தம்ஸ் அப்' சிம்பல் ஒன்று அனுப்பினான்.
(தொடரும்)
👉👹👲😳
கீதாவின் கதை - இறுதிப் பகுதி.
மணி எட்டே முக்கால்.
வேகமாக படி ஏறி மாடிக்குச் சென்றான் மாதவன்.
ஆவலோடு குடியிருப்பிலிருந்து வெளியே வருகின்ற கார்களை ஒவ்வொன்றாகப் பார்த்தான்.
கீதாவுக்கு செய்தி அனுப்பினான். " மாடியில் காத்திருக்கிறேன். "
பதில் " இதோ இப்போ பார்க்கவும்"
அப்போது வெளியே வந்த அரக்கு வண்ணக் காரைப் பார்த்தான் மாதவன். உள்ளே டிரைவர் சீட்டில் கீதா.
இவனைப் பார்த்துச் சிரித்தபடி கையை அசைத்தாள். இவனும் ஆர்வமாக அவளைப் பார்த்துக் கை அசைத்தான்.
எதேச்சையாக அவளுடைய கார் பதிவு எண்ணைப் பார்த்த மாதவனுக்கு பெரிய அதிர்ச்சி.
"4298"
அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு கண்கள் இருண்டு மாடியில் மயங்கி விழுந்துவிட்டான் அவன்.
மாதவன் மயங்கி விழுவதைப் பார்த்த கீதா - உடனடியாக தன்னுடைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு மாதவன் வீட்டு மாடிக்கு ஓடினாள்.
மாடி நோக்கி கீதா ஓடுவதைப் பார்த்த மாதவனின் அம்மா, தானும் கீதா பின்னாடியே ஓடி வந்தாள்.
மயங்கிக் கிடந்த மாதவனின் முகத்தில், அங்கிருந்த குழாயிலிருந்து ஒரு மக் தண்ணீர் நிரப்பி, அதை கையால் கொஞ்சம் எடுத்து மாதவனின் முகத்தில் தெளித்தாள் கீதா.
மாதவன் கொஞ்சம் அசைந்தான்.
கண்களை மெல்லத் திறந்து பார்த்தான்.
கீதாவையும், அம்மாவையும் பார்த்தான்.
அவன் வாய் மெல்ல முணு முணுத்தது.
டு
ட்
ட்டு
எட்டு ..
கார் நம்பர் நாலு இரண்டு ஒன்பது எட்டு.
அதே கார்.
ஆமாம் அதே கார்!
அப்போ அது - இது இல்லையா?
கடவுளே உனக்கு நன்றி.
மாதவன் பேசுவதைக் கேட்டு அவனுடைய அம்மா சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள் !
கீதா : " மாதவன் - நீங்க பேச ஆரம்பிச்சுட்டீங்க. ஆஹா! இது போதும் எனக்கு! இருங்க - அமெரிக்காவில் இருக்கும் என் அண்ணாவுக்கு இந்த நல்ல செய்தியை சொல்கிறேன். "
கீதா: " அண்ணா - எதிர் வீட்டு மாதவனுக்கு பேச்சு வந்துவிட்டது! - தெரியலை அண்ணா - அவர் பேச்சு நின்றதற்கும் நம்ம காருக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கு. நம்ம காரைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். இப்போ பேச ஆரம்பித்துவிட்டார். .. .. .. ஓ சரி அண்ணா - அது பற்றி எதுவும் கேட்காமல் இருப்பது நல்லதுதான். --- நோ நோ - நீ இந்தியா வருவதை ஒத்திப் போட வேண்டாம். எங்கள் கல்யாணத்திற்கு நீ சீக்கிரமே வரவேண்டியிருக்கும்! "
நடந்ததை எல்லாம் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த மாதவனின் அம்மா " கீதா எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். மாதவன் பேச ஆரம்பிச்சுட்டான், எனக்கு ஒரு பிரியமான மருமகள் வரப்போகிறாள்!" என்று சொல்லி கீதாவைக் கட்டிக் கொண்டாள்!
மாதவன்: " கீதாவைக் கட்டிக்க எனக்கு ஒரு சான்ஸ் கொடு! "
அம்மா : "டேய் அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். சரியா கீதா?"
கீதா : " ரொம்ப சரி அத்தை! "
= = = = = = = = =
காதல் இவ்வளவு சுலபமா?
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் நினைத்தேன்!
நீக்குவயசான காலத்துல!?
நீக்கு:)))
நீக்குசிறுவன் அவளோடு பத்து நிமிடங்கள் என்ன பேசிக்கொண்டிருந்திருப்பான்? சந்தோஷமாகத் திரும்பிச்செல்லும் அளவு?
பதிலளிநீக்குஉடனேயே செல்போன் நம்பர்களை ஒரு பெண் கொடுப்பாளா? குரலைக் கேட்க இவன் கூப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
இருந்தாலும் எடுத்துக்கொண்ட க்ளைமாக்சை நோக்கி நகரும் கதை.
அதானே! வாய் பேச இயலாத ஒருத்தியோடு ஒரு சிறுவன் பத்து நிமிடம் பேச இயலுமா! லாஜிக் இடிக்குதே!
நீக்குஎந்த ஓவியரும் கதைக்குப் படம் கோடும்கோது, பெண்களையே வரைகிறார்களே (அல்லது தேர்ந்தெடுக்கிறார்களே). மாதவன்கள் என்ன பாவம் செய்திருப்பார்கள்?
பதிலளிநீக்குநல்ல கேள்வி. படிப்பவர்கள் மாதவன் என்றதும் ஒருவரை சுலபமாக கற்பனை செய்யமுடியும். அந்தப் பெயரில் ஒரே ஒரு நடிகர் மட்டும் இருப்பதாலோ என்னவோ! ஆனால் கீதா என்ற பெயரில் ... ?
நீக்குசரி... மாதவனுக்குத்தான் விருப்பமில்லையே. அவள் படத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் ப்ரபோஸ் பண்ண செல் நம்பரையாவது இங்கு கொடுத்திருக்கலாம். ஒரு மாதவன்இல்லாவிட்டால் என்ன? சரவணன்கள், கார்த்திக்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?
நீக்குஹிஹிஹி நெல்லை....நம்ம ஃபோட்டோ எல்லாம் போடமுடியாது!!!!!
நீக்குகீதா
ஸ்ரீராம்! தலைப்பில் கீதாவின் கதை என்று எழுதியிருக்கிறீர்கள். கதையில் கீதாவின் கதையைக் காணோமே! மாதவனின் கதை அல்லவா இருக்கு!
பதிலளிநீக்குகீதாவைக் கேட்டேன்... இரண்டும் ஒன்றுதானே என்கிறார்.
நீக்குஅட! அப்படியா!! தி கீதாவா அல்லது ஸ்ரீ கீதாவா?
நீக்குநான் உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்த கதை இதுதானா என்று எனக்கு சந்தேகம் வருகிறது. அவசரத்தில் படிக்காமலேயே அனுப்பி விட்டேன்.
நீக்குஅப்படியா! இதோ check செய்யச் சொல்கிறேன்!
நீக்குஆ! நானேதான் கௌ அண்ணா!!!!
நீக்குகீதா
ஸ்ரீராம் நல்லா செக் பண்ணீங்களா?????
நீக்குகீதா
இருங்கள் கீதா... விஷயம் விசாரணைக்குழு முன் போயிருக்கிறது,, பார்ப்போம்.
நீக்குகீதா மாதவன் எழுதி அனுப்பிய கதையை, ஸ்ரீராம் நம்ம கீதா என்று நினைத்துவிட்டார் போலிருக்கு!
நீக்குஓஹோ!!!!
நீக்குகந்தா! கதிர்வேலா! நீ விளையாடிப் பார்ப்பது தெரிகிறது. அதுதானே உன் வழக்கம். இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரேன்...!
கீதா
ஒரே நாளில் காதல் அரும்புகிறதாம். அது இரண்டே நாளில் பட்டென்று உடைகிறதாம். நல்ல கற்பனை. ஏன் இந்த காதல் நிறைவேறக்கூடாது.
பதிலளிநீக்குகதை 1972இல் வெளிவந்த ஒரு ஹிந்தி சினிமாவை நினைவு படுத்தியது. கோஷிஷ் என்ற படத்தில் சஞ்சீவ்குமார் ஜெயபாதுரி இருவரும் காது கேளாதவர்கள்/ஊமைகள்.
https://www.youtube.com/watch?v=vsfGsMGd0bw
பாருங்கள். அருமையான படம்.
Jayakumar
இதை தமிழில் 'உயர்ந்தவர்கள்' என்று கமலையும் சுஜாதாவையும் வைத்து எடுத்தார்கள்.
நீக்குஅருமையான பாலமுரளி பாட்டு ஒன்று அதில் இருக்கிறது. இரண்டு சரணங்கள் கொண்ட அந்தப் பாடலில் ஒரு சரணம் மட்டும்தான் கிடைக்கும்!
ஸ்ரீராம் என் கேள்விக்கு என்ன பதில்?
நீக்குபதில் பார்த்தேன் நன்றி. ஆனால் அங்கே மீண்டும் ஒரு கேள்வி கேட்டுள்ளேன்.
நீக்குநானும் அங்கு படித்து பதில் அளித்து விட்டேன் என்பதை இதன் மூலம் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
நீக்குஜெ கே அண்ணா, ஏன் நிறைவேற வேண்டும் போன்று முடிக்கணும்? பார்க்கப் போனா இந்த முடிவு பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. அதாவது கீதாவின் கோணத்தில்.
நீக்குமாதவன் தன் தவறை உணர்கிறான். அடுத்து அவன் அவளிடம் கொஞ்சம் பக்குவமாகப் பேசி நட்பு ரீதியைக் கூடத் தொடரலாம்....கீதா அதற்கு என்ன ரியாக்ட் செய்கிறாள்? என்றெல்லாம் கதையைக் கொஞ்சம் நெடுங்கதையாக்காலாம்.
கௌ அண்ணாவுக்கு அதைச் செய்ய முடியும்...செய்யலாம்.
கீதா
சப்போஸ் நீங்க நினைப்பது போல் முடித்திருந்தாலும் கூட, கதை தொடர நிறைய வழிகள் இருக்கின்றன.
நீக்குகீதா
நீங்க நினைச்சது என்ன?
நீக்குநான் நினைச்சது ம்ம்ம்ம்ம்ம் இருங்க ஸ்ரீராம்....நம்ம எபி மக்கள் எல்லாமே பாசிட்டிவா முடியணும்னு நினைப்பாங்களே...அப்படி முடிக்கணுமா? இல்லை ஏன் உடனே சேருவது போல்தான் சொல்லணுமா? கொஞ்சம் அலசோ அலசுன்னு அலசி.....நம்ம மக்களுக்குப் போரடிக்கறது தெரிஞ்சதும் முடிச்சிடலாம்னு!!!!!
நீக்குகீதா
கந்தா கதிர்வேலா! கௌ அண்ணா, இன்னிக்கு ஏப்ரல் ஒன்று என்று என்னை வைத்து காமெடி கீமடி பண்ணிருக்காரு பாருய்யா!!!!!!!!!!! ஹாஹாஹா. நல்லா ரூம் போட்டு யோசிச்சிருக்காய்ங்க போல!!!!!
பதிலளிநீக்குவாரேன் முழுசும் படிச்சுட்டு.
கீதா
ஏப்ரல் காமெடியா? ஹா ஹா ஹா. ஆனாலும், முடிவு எதிர்பாராத சோகந்தான்.
நீக்குகாமெடியா, டிராஜடியா கமலா அக்கா... யார் ஏமார்றாங்க மாதவனா? கீதாவா?
நீக்குமொத்தத்தில் நாங்கதான் போலிருக்கு. கதை வேறுபட்டு, மாறுபட்டு போய் கொண்டே உள்ளது. ஆனாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
நீக்குகௌ அண்ணா, கதை நல்லா இருக்கு. மாதவன் டக்கென்று முடிவு செய்துவிட்டான் உணர்ச்சி வேகத்தில்! பரவால்ல யதார்த்தம். அவன் மனசுல கற்பனைகள். அது நிறைவேறவில்லைன்னதும் ஏமாற்றத்தில் டக்கென்று உணர்ச்சி மேலோங்கிவிட்டது. புத்தியை பின்னால் தள்ளி. யதார்த்தம்தான்.
பதிலளிநீக்குகீதா கண்டிப்பாக எதிர்பார்ப்போடு வரவில்லை. அவளுக்கு மாதவனின் ஆட்டிட்யூட் தான் பிரச்சனையாகியிருப்பதாக என் அனுமானம்.
கீதா (இது அந்த கீதா இல்லைங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
எந்த கீதாவா இருந்தாலும் கதை சுமாருங்கோ
நீக்குஹிஹிஹிஹிஹி.....
நீக்குகீதா
இப்போ படிச்சா கதை வேற மாதிரி போகுத்துங்கோ !
நீக்குகௌ அண்ணா, இதுக்குன்னே நம்ம வீட்டாண்டை வந்து வீடியோ, படம் எல்லாம் எடுத்தீங்களா!!!!!!! கதைய ரொம்ப யதார்த்தம் ஒன்றிப் போகச் செய்ததும் நல்லாருக்கு.
பதிலளிநீக்குநான் பெரும்பாலும் போகும் பார்க்காச்சே! நீங்க என் கண்ணுல படவே இல்லையே...ஆனா நான் மாலைதான் வருவேன். இந்தப் பார்க்கில்தான் நேற்று கூட நடந்தேன். வீட்டின் வெகு அருகில் இந்தப் பூங்கா. நீங்க காலைல வந்தீங்களோ!!
கீதா
கதையை எழுதியவர் கீதா மாதவன் என்ற எழுத்தாளர் - புதியவர் என்று ஸ்ரீராம் செய்தி அனுப்பியிருக்கிறார்!
நீக்குஆ! கந்தா கதிர்வேலா பார் உன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாய்! இப்படி என்னை ஏமாற்றலாமா!
நீக்குகீதா
:)))
நீக்குகாலை அஞ்சு மணிக்கு ஒரு கதை! அப்புறம் மூன்று மணி நேரம் கழித்து + கொஞ்சம் கதை! இறுதியில் (தொடரும் ) வேறு! இப்பவே கண்ணைக் கட்டுதே! அடுத்தது 11 மணிக்கா ? கீதா இது நியாயமா!
பதிலளிநீக்குஇருங்கள்.. அப்போ எல்லோரும் மறுபடி போய் படிக்கணுமா?
நீக்குஇருங்க! படிச்சுட்டு வரேன்.
நீக்கும்ம்ம் நானும் வாசித்துவிட்டேன்....
நீக்குகீதா
ஆகா. கதை நிமிடத்திற்கு ஒரு முறை மாறுகிறதே ..! இன்று முழுவதும் இப்படித்தான் மாறி, மாறி மாயாஜாலம் காட்டுமோ ? சரி..! மனதில் நல்ல கற்பனைகளோடு, கையில் கம்யூட்டர் சகிதம் அமர்ந்திருக்கும் கதாசிரியர் யார்?
பதிலளிநீக்குயார் என்று தெரியவில்லை! பார்ப்போம்! இப்படியே போனால், 11 மணி மாட்னி காட்சி, 2 மணி காட்சி, மாலை 5 மணி காட்சி என்று போய்க்கொண்டே இருக்கும் போலிருக்கு!
நீக்குஆ... நல்லது.. நல்லது. இன்று புத்திசாலிகளின் தினமல்லவா? அதை குறிக்கிறது கதை எழுதுபவரின் சாமர்த்தியம். ஏப்ரல் ஒன்றை ரசிக்கும்படியாக கதை சொல்லும் திறன் அருமையாக உள்ளது.
நீக்குகமலாக்கா, நீங்க கண்டிப்பா இங்க பஞ்சாயத்துக்கு வந்தேஆகணும்...விசாரணைக் குழுவுக்கு...பின்ன? கீதா கதைய இப்படி எல்லாம் மாற்றி மாற்றி.....ம்ம் என்ன சொல்ல?
நீக்குகீதா
அனேகமாக இதை எழுதியது நீங்களாகத்தான் இருக்குமென நினைக்கிறேன் சகோதரி. இந்த மாதத்தில் முதல் செவ்வாய் தங்களது கதை என கடந்த செவ்வாய் சகோதரர் ஸ்ரீராம் செவ்வாய் மலர்ந்தருளினாரே.... :))
நீக்குஆனால், தங்களது கதை என்பதை பூடகமாக (கதையின் நாயகி பெயரைக் கொண்டு) அப்படி கூறினாரா என்பதும் அந்த ஸ்ரீ ராமருக்கே வெளிச்சம். பார்ப்போம்...! இன்றைய நாளின் முடிவில் ஒரு தெளிவு வந்து விடும்.:)) (குழப்புவதே ஒரு தெளிவை சந்திக்கத்தானே...)
// ஸ்ரீராம் செவ்வாய் மலர்ந்தருளினாரே.... :))// ஆஹா ! செவ்'வாய்' மலர்ந்து !! சூப்பர்!
நீக்குவார்த்தைகளை திறமையாகவும், சாதுரியமாகவும், சுவாரஸ்யமாகவும் கையாள்வதில் கமலா அக்கா கில்லாடி...
நீக்குகில்லேடி!
ஆகா... மனமுவந்த பாராட்டிற்கு நன்றி.
நீக்கு/கில்லேடி/
இந்த வரியை பார்த்ததும் என்னையறியாமல் விழுந்து விழுந்து சிரித்து விட்டேன் இந்த கதை எழுதிய கதாசிரியையின் பாணியில்.ஹா ஹா ஹா (ஆனால், ரொம்ப விழவில்லை. கொஞ்சம் கவனமாக...! ஏனெனில் இப்போதுதான் விழுந்த வலிகள் கவனம், கவனமென எச்சரிக்கை படுத்தி விட்டன.:)) )
வார்த்தைகளை திறமையாகவும், சாதுரியமாகவும், சுவாரஸ்யமாகவும் கையாள்வதில் கமலா அக்கா கில்லாடி...
நீக்குகில்லேடி!//
டிட்டோ,
கீதா
காக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
ஆமாம் - நமக்குப் பைத்தியம் பிடிக்காம இருக்க கனகவேல்தான் காக்க வேண்டும்! முருகா போற்றி! மாதவன் மருகா போற்றி!
நீக்குதுரை அண்ணா, நானும் கந்த கதிர்வேலா என்று நியாயத்துக்காகப் போராடி கொண்டிருக்கிறேன்!
நீக்குகீதா
கௌ அண்ணா நீங்களே சொல்லுங்க.....அந்த மாதவன் மருகன் என்னைக் கைவிட்டுவிடுவானா?
நீக்குகீதா
அடுத்த பகுதி எப்போ வருமோ? என்ன டுவிஸ்ட் வரப்போகிறதோ!
நீக்குகந்தா! கீதாவின் கதை பஞ்சர் ஆகுதே!
நீக்குகீதா
//'உங்களுக்குப் பேச வராது; ஆனால் ரொம்ப நல்லவர், கோபமே வராது'// இந்த வரி நான் செய்த பெரிய தவறு ஒன்றை நினைவுபடுத்தியது. அப்போதான் நான் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ். பஹ்ரைனி ஆட்களையும் வேலைக்கு எடுத்தாகவேண்டிய நிர்பந்தம். வாய் பேச முடியாத ஒருவனை செக்ரட்டரியாக வைத்துக்கொண்டேன். சென்ற வாரம் ஒவ்வொருவரும் செய்த வேலைகளை, எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பது உட்பட எழுதும் வீக்லி ஷீட் கண்டிப்பாக வார ஆரம்பத்தில் எனக்குத் தந்துவிடவேண்டும். சாக்கு போக்கு சொல்லாமல் இருக்க, இவனையே அந்த ஷீட்டுகளை ஞாயிறு காலையில் வாங்கி, கம்ப்யூட்டரின் பதியவேண்டும் என்று சொல்லியிருந்தேன். இவன் ரொம்பவே ஸ்ட்ரிக்டாக ஒவ்வொருவர் முன்னாலும் சென்று ஷீட்டை வாங்கி கணிணியில் பதிவான். யாரேனும் தரவில்லையென்றால் தரும் வரை நகர மாட்டான். சில மாதங்கள் சென்றன. ஆட்கள் குறைப்பை நான் அமல்படுத்த நினைத்தேன். துரதிருஷ்டவசமாக இவனையும் வேலையை விட்டு எடுக்க நினைத்து ஹ்யூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மெண்டிலும் சொல்லிவிட்டேன். அன்று மதியம் இவன் என் அறைக்கு வந்து கண்ணீர் விட்டு வேலையை விட்டுப் போகமாட்டேன் என்று சொன்னான். உடற்குறை உள்ள பஹ்ரைனி ஆளை வேலைக்கு வைத்திருப்பது எங்கள் டிபார்ட்மெண்ட், கம்பெனிக்குப் பெருமை என்பதை நான் அளவிடத் தவறிவிட்டேன். அவனுடைய அப்பா என்னிடம் மறுநாள் வந்து அவன் ரொம்பவே மனம் தளர்ந்துவிட்டான் என்றார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கம்பெனியில் வேறு வேலைக்கு அந்தப் பையனை எடுக்கவைத்துவிடுவேன் என்றேன். அவரோ அவன் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில்தான் பணி புரிய விரும்பினான், இன்னொரு கம்பெனி நேற்றே அவனுக்கு பணியிடம் வழங்கிவிட்டது என்றார். நான் செய்த தவறும், அவன் அழுதுகொண்டே வேலையை விட்டுச் செல்லமாட்டேன் என்று சொல்லி என் அறையிலேயே இருந்ததும் ரொம்ப நாள் என் மனதில் பதிந்து என்னை வருத்தப்படவைத்தது. இந்த மாதிரி பல தவறுகளை நான் செய்திருக்கிறேன். கம்பெனியின் நன்மையை மாத்திரம் முன்னிறுத்தி நான் செய்த தவறுகளை சரிசெய்ய இயலுமா?
பதிலளிநீக்குமனதை கனக்க வைத்தது தங்கள் கருத்து. இது போல் சில தவறுகளை செய்து பின் மனம் வருந்துகிறோம் . ஆனால், எல்லாம் இறைவன் செயல். ஒருவரின் நல்லதுக்காகவும், சில தவறுகளை நம் மூலம் ஆண்டவன் கண்டிப்பாக செய்ய வைத்து விடுகிறார். /விடுவார்
நீக்குநெ த விவரித்த நிகழ்வு மனதை மிகவும் பாதித்துவிட்டது. :((
நீக்குமனதை கனக்க வைத்த நிகழ்வு
நீக்குஎல்லாம் அவன் செயல்
நெல்லை, மனது என்னவோ போல் ஆகிடுச்சு பாவம் அவன் ஆனால்....
பதிலளிநீக்குநாம் நல்லது என்று நினைத்துச் செய்யும் சில விஷயங்கள் நமக்குச் சில சமயம் back fire ஆகும்...பலருக்கும் இப்படி நடந்திருக்கும், நெல்லை. குடும்பத்திற்குள்ளேயே கூட. அதனால் மனத்தாங்கல்கள் ...
அதன் பின் அப்பையனை எப்போதேனும் பார்க்கும் வாய்ப்பு வந்ததா?
கீதா
எனக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது.
நீக்குஆனால் இதை அருமையான ஒரு கதையாக எழுதி இருக்கலாம். நெல்லை நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டார்.
என்னிடம் சண்டைக்கு வந்திருந்தாலோ இல்லை என்னைத் திட்டியிருந்தாலோ இல்லை கம்ப்ளெயிண்ட் பண்ணியிருந்தாலோ என்னால் சுலபமாக அதனைச் சமாளித்துவிடுவேன், காரணம் என் நோக்கம் கம்பெனியின் நலன். ஆனால் இவன் அழுதது, அதிலும் உடற்குறை உள்ளவன் அழுதது எனக்கு ரொம்பவே மன வருத்தத்தைத் தந்தது.
நீக்குஇதை எழுதும்போது எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு சம்பவத்தையும் எழுத எண்ணம். இந்த ஸ்ரீராமோ எப்போதுமே கதாசிரியர் நினைப்பிலேயே இருப்பதால் பிறகு ஒரு முறை எழுதுகிறேன்.
ஸ்ரீராம் டிட்டோ, ஹைஃபைவ். நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்.
நீக்குநெல்லை நிஜமாகவே நல்ல கதைக்கரு. எனக்கும் அபப்டித்தான் தோன்றும். சிலர் சில அனுபவங்களைச் சொல்றப்ப...அட இது நல்ல கதைக்காச்சே என்று தோன்றும்
கீதா
பதினொரு மணி பகுதி வெளியிட ஏன் லேட்டு? கதாசிரியர் பெஞ்சு மேலே ஏறி அரை மணி நேரம் நிற்கவும்.
பதிலளிநீக்குமேட்னி ஷோ ஒழுங்கா போட்டிடச் சொல்லுங்க கதாசிரியரை. னைட் ஷோ மட்டும் வேண்டாம்னு சொல்லிடுங்க கௌ அண்ணா.
நீக்குகீதா
சொல்லிவிடுகிறேன். அடுத்த பகுதி இரண்டு மணி சுமாருக்கு அனுப்புகிறாராம்.
நீக்கு/அப்படி என்றால் என்னிடம் ஏன் பேச வராது என்று பொய் சொன்னாய்? ' என்று அவள் மொபைலுக்கு செய்தி அனுப்பினான் மாதவன்.
பதிலளிநீக்கு" ஏன் பொய் சொன்னேன் என்றால், இன்றைக்கு என்ன தேதி என்று பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள் கீதா.
தொடரும். /
இப்படியும் மாற்றி எழுதினால் என்ன என்று என்மனதில் வந்த ஒரு சிறு முயற்சி.
மறுபடியும் மாதவன் கதை.
அவள் சொன்னதை கேட்டு மனதில் பட்டாம்பூச்சிகள் மகிழ்வு வட்டமிட தொடங்கின . சில நாட்களில் மலர்ந்த காதல் சட்டென இவ்வளவு மனம் வீசி பரவுமென்று அவன் எதிர் பார்க்கவில்லை.
அளவு கடந்த சந்தோஷத்தில், அவளுடன் கை கோர்த்தபடி வீட்டுக்குச் செல்லவேண்டும் அவன் மனமும் அளவு கடந்த ஆவல் கொண்டது.
ஆனால் அவள் "வருகிறேன் மாதவன். நம் வீட்டு பெரியவர்களிடம் கலந்து விட்டு, அவர்கள் சம்மதபடி நாம் வாழ்வில் இணைவோம்." என்றபடி "பை. பை" என்று சொல்லி விட்டு நடந்தாள்.
அவள் நடந்து செல்லும் அழகை கூட ரசிக்காமல், "அவள் தன் மனதின் எண்ணங்களுக்கு இசையாமல் செல்கிறாளே. " என ஒருவிதவருத்தமான வியப்புடன் அவளை நோக்கியவாறு நின்றிருந்தான் .
அச்சமயம் தன்னை யாரோ கைத்தொடுவதை உணர்ந்து கலைந்தவன், எதிர் வீட்டில் பந்து விளையாடும் பசங்களின் ஒருவன் என உணர்ந்து "என்ன..?" என்பது போல கையசைத்தான்.
"இவன் எங்கே இங்கே" என மாதவனின் மனம் யோசிப்பதற்குள்." அங்கிள்.. நீங்கள் புதிதாக வந்த அந்த அக்காவிடம் பேசிக் கொண்டிருநதீர்களே..? எப்படி? அவர்கள் வந்த முதல் நாள் நான் அவர்கள் வீட்டில் விழுந்த பந்தை எடுக்கச் செல்லும் போது நான் கூறியது அந்த அக்காவின் காதில் எதுவுமே கேட்கவில்லையே..? கேட்டதற்கு எனக்கு காது கேட்காது.. என்றார்களே ..! "உங்களிடம் மட்டும் எப்படி பேசினார்கள்.?. அந்தப்பையன் சொல்லி விட்டு பதிலுக்காக மாதவனின் முகத்தைப் பார்த்தான்
இதைக் கேட்ட மாதவனின் வியப்பு மேலும் அதிகரித்தது. "என் குறை புரிந்து என்னைப் பிடித்திருப்பதாக சொன்னவளுக்கு இந்த குறையா? ஆனால், குறை உள்ளவர்களால்தான் மற்றொருவரின் குறையை நிறைவாக கருத முடியும். இது இயற்கையின் அற்புத குணாதிசய கொடை. இறைவன் அவர்களுக்கு பிறப்போடு அன்போடு தந்த வரம்.
கவலைப்படாதே அன்பே.. உனக்கு நான் கேட்கும் சொல்லாகவும், ,எனக்கு நீ அந்தச் சொற்களின் வடிவமாவும் இருக்கத்தான் நம்மிடையே ஆண்டவன் இந்த பந்தத்தை உருவாக்கினார் போலும்..! அதனால்தான் நீ பெரியவர்கள் சம்மதபடி என கூறி விட்டு அகன்றாயா? உன்னை அன்று பார்த்த நாளில் காதலித்ததை விட இப்போது மிகப் பிரியமுடன் நேசிக்கிறேன். "
மாதவன் மனதுக்குள் மகிழ்வானபடி கூறிக் கொண்டு அவளை உடனே சந்திக்க விருப்பம் கொண்டு, தகவலை சொன்ன பையனிடம் "வருகிறேன்" என்று கையசைத்தவாறு பார்க்கின் வாசலை நோக்கி வேகமாக நடந்தான்.
" நான் பேச தினைப்பதெல்லாம்" என்ற இனிமையான அந்த பழைய பாடல் எந்த வீட்டில் சற்று சத்தமாக ஒலித்தை இவன் காதுகள் கேட்க தவறவில்லை.
இது மேட்னி ஷோ கதை. நன்றாக உள்ளதா?
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
கதை நல்லா இருக்கு - ஆனா இப்போ கதாசிரியர் வேற ரூட்டுல திரும்பிட்டாரே !!
நீக்குஇந்தக்கதையை என்னை வைத்து (என் குறையை) புனைந்தேன். இதில் ஏதும் பிறர் மனங்கள் வருத்தப்பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நீக்குஇப்படி மன்னிப்பை கேட்க கூடாதென சகோதரி கீதாரெங்கன் அன்போடு எவ்வளவு வலியுறுத்தி சொன்னாலும், எனக்கு சில சமயங்களில் மென்மையான என் மனதில் (அடிக்கடி நானே எனக்கு இப்படி சுயகௌரவ பட்டமளிப்பு தந்து கொள்வேன். ஹா ஹா ஹா) இப்படியான மன வருத்தங்கள் வந்து விடும். (ஒரு படத்தில் செந்தில் அடிக்கடி இப்படிச் சொல்வார்.)
ஓ.. அப்படியா? மிகவும் சந்தோஷம். ஆவலோடு கதாசிரியரின் அந்தக்கதையை எதிர்பார்க்கிறேன். இதை (என் கற்பனையை) வேறு திரையரங்கில் பழைய கதையுடன் இணைத்து போட்டு விடலாமா? ஹா ஹா ஹா
நீக்குமுடிந்தால் அடுத்த செவ்வாய்க்கிழமை ஆரம்பம் ஒன்று; தொடர்ச்சி வேறு, முடிவு வேறு என்று வெளியிடுவோம்.
நீக்குஒரு குறை உள்ளவனை இன்னொரு குறை உள்ளவள்தான் திருமணம் செய்துகொள்ள இயலுமா? இருந்தாலும் புதிய முயற்சி.
நீக்குஎனக்கென்னவோ நீங்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு கற்பனையை வடிவமைப்பதற்குள், 'ஆளை விடுங்கடா சாமிகளா' என்று அவளே வேறு ஒருவனுடன் ஓடியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றுதான் தோன்றுகிறது.
கமலாக்கா.....ஹாஹாஹாஹா...வந்திட்டேன் பாருங்க. கதை நல்லாருக்கு கமலாக்கா.
நீக்குகௌ அண்ணா "நம்ம ஏரியாவில்" முன்ன எல்லாம் கதையின் தலைப்பு இல்லைனா கருகொடுப்பார் அப்படி "நான் பேச நினைப்பதெல்லாம்" என்று கொடுத்து எழுதச் சொல்லலாம்!
கீதா ஓடிக்கோ! (இது கதையில் வரும் கீதாவுக்கல்ல!!!!)
கீதா
ஒரு குறை உள்ளவனை இன்னொரு குறை உள்ளவள்தான் திருமணம் செய்துகொள்ள இயலுமா? இருந்தாலும் புதிய முயற்சி.//
நீக்குஇல்லையே இப்ப கதை மாறிடுச்சே.
கீதா
இந்தக்கதையை என்னை வைத்து (என் குறையை) புனைந்தேன்.//
நீக்குகமலாக்கா எனக்கும் இந்தக் குறை உண்டே. அதனால் என்ன? நான் என்னையே சொல்லிக் கொள்வதுண்டு... எனக்கு மூன்றாவது காது என்றுதான் சொல்வதுண்டு. நீங்கள் எதுவும் புண்படும் படி சொல்லவே இல்லையே கதையில். அப்புறமென்ன.?
நாம குறைன்னு நினைச்சால் குறை. இல்லைன்னு நினைச்சால் இல்லை.
கதை எழுதும் கீதா மாதவன் கூட அப்படித்தான். ஆனா பாருங்க என்ன ஒரு தன்னம்பிக்கை! ஜாலி ஸ்பிரிட்! அது அததான் வேண்டும்.
கீதா
ஓ... இப்படியும் எழுதலாமா!?..
பதிலளிநீக்குதெரியாமல் போயிற்றே...
அருமை..
ஆமாம் ! எனக்கும் இது புதுமையாக இருக்கு. கதாசிரியருக்குப் பாராட்டுகள்!
நீக்குகீதா என்ன ஷாக் கொடுக்கப் போகிறாள்?!!!!!
பதிலளிநீக்குஆமா இது எந்த கீதா?
கீதா
கீதா மாதவன்.
நீக்குவணக்கம் புதுமுக கதாசிரியயை(ர்) அவர்களே.
பதிலளிநீக்குமூன்றாவது கதை பகுதியும் அருமை.
/ஆனா இப்போ கதாசிரியர் வேற ரூட்டுல திரும்பிட்டாரே !!/
உண்மை.. வேறு ரூட்டில்தான் கதை பயணிக்கிறது. .ஆனால் அந்த ரூட்டை அப்போதே சகோதரர் கௌதமன் அவர்களும் அறிந்து வைத்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஹா ஹா.
ஒன்று தெரியுமோ..? நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் யதேச்சையாக "புதிய பறவை" படத்தை, அதன் பாடல்களுக்காக, வசனம், மற்றும் சிவாஜியின் நடிப்புக்காக விரும்பி யூடியூபில் பார்த்தேன். இக்கதை மூன்றாவது பகுதியை படித்ததும் அந்த படம் மின்னலாக நினைவினில் வந்தது. ஆயினும், இதன் ரூட் (வேர்கள்) இப்படி மண்ணில் வளைந்து வளைந்து போகிறதே...!
பார்க்கலாம்.. முடிவு எப்படி உள்ளதென... ஆனால் இன்று எப்போதும் செய்யும் வேலைகளை செய்ய விடாமல், கைப்பேசி சகிதம் என்னை பின்னுக்கிழுக்கும் கீதா ரெங்கன் சகோதரிக்கு (கீதா மாதவன் சகோதரிக்கு) மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
சமையல் என்னை "இப்படி அடிக்கடி சமைந்து போய் நிற்கிறாயே.." எனவும், வீட்டில் உள்ளவர்கள் "என்ன எப்போதும் கைப்பேசியுடன்" எனவும் கடுப்பாக ஆரம்பித்து விட்டனர். ஆயினும் என் மனம் புதிய பறவையாக சிறகடிக்க ஆரம்பித்து விட்டதே...! நன்றி.
இனி மாட்னி ஷோவுக்குத்தான் வர முடியும்.
/இனி மாட்னி ஷோவுக்குத்தான் வர முடியும்./
பதிலளிநீக்குமன்னிக்கவும். ஈவினிங் ஷோ. :))
"4298" - கீதா மாதவன் ரொம்பவே வேகமாக காரை ஓட்டிச் சென்று சடன் பிரேக் அடித்துவிட்டாரே!!!
பதிலளிநீக்குகீதா
அதானே!
நீக்குகைப்பேசி சகிதம் என்னை பின்னுக்கிழுக்கும் கீதா ரெங்கன் சகோதரிக்கு (கீதா மாதவன் சகோதரிக்கு) மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.//
பதிலளிநீக்குஆ! கந்தா! மாதவனின் மருகனே "4298" காரே படு வேகமா வந்து நின்னாச்சு....இன்னுமா நீ உன் விளையாட்டை நிறுத்தி அறிவிக்க மாட்டேன்ற! ஸ்பாஆஆஆ கீதாவுக்கும் மாதவனுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சுட்டுத்தான் அறிவிப்பா!!!!
கீதா
:)))
நீக்குஎனக்கு இன்னும் நேர மாற்றம் ரெஜிஸ்டர் ஆகவில்லை இந்த ஊர் நேரத்திற்கு நேற்று மாலையே ஏப்ரல் ஒண்ணு பிறந்திருக்கும். Anyway I was not fooled. இது கீதாவின் நடை கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. லாஜிக்கெல்லாம் யோசிக்காமல் இருந்தால் ரசிக்கக் கூடிய கதைதான்.
பதிலளிநீக்குபுது இடத்தில் நலமா சகோதரி. என்ன இப்படி பொசுக்கென சொல்லி விட்டீர்கள். நாங்கள் ஆணி அடித்தாற் போன்ற நம்பிக்கையுடன் கீதாவின் கதையென ஒவ்வொரு பாகத்தையும் படித்தபடி காத்திருக்கிறோமே .. :))
நீக்கு/ஆ! கந்தா! மாதவனின் மருகனே "4298" காரே படு வேகமா வந்து நின்னாச்சு....இன்னுமா நீ உன் விளையாட்டை நிறுத்தி அறிவிக்க மாட்டேன்ற! ஸ்பாஆஆஆ கீதாவுக்கும் மாதவனுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சுட்டுத்தான் அறிவிப்பா!!!!/
பதிலளிநீக்குமூன்றாவதாக வந்ததில் அது தான் நடந்தேறி விட்டதே..! ஆனால், மாதவனுக்கு வந்த கனவுடன் வேறு அது (பகுதி 4) தொடருமா ?
அது சரி.! அனைவருக்கும் காலையில் இருந்த உற்சாகம் மதியத்தில் குறைந்து விட்டதே..! எல்லோருக்கும் ஷோ, ஷோவாக இடைவெளி(வேளே) விட்டாலும், சேர்ந்தாற் போல திரைப்படங்கள் பார்த்த களைப்பா?
இந்த வாரம் முழுவதும் கமெண்ட் செய்யலாம். மாடரேஷன் கிடையாது.
நீக்குஆகா... இன்றோடு இப்படம் கடைசி இல்லையா? ஒரு வாரத்திற்கும் மேலாக ஓடும் படமா.? அதற்குள் கதையின் ஆசிரியருக்கு எப்படியெல்லாம் கற்பனைகள் விரியப் போகிறதோ..?
நீக்குகதை பகிர்ந்தவர் காசு சோபனா . கீதாவின் கதையில் சிறு கதையா? சிறு கதை தொடர்கதையா?
பதிலளிநீக்கு//அவர் பேச்சு நின்றதற்கும் நம்ம காருக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கு. நம்ம காரைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.//
காருக்கும் மாதவனுக்கும் என்ன தொடர்பு அண்ணா வந்தவுடன் தெரியுமா? அதை பற்றி கேட்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அதனால் என்ன காரணம் என தெரிய போவது இல்லை.
திருமணத்திற்கு அப்புறம் கீதா பேச நினைப்பது எல்லாம் மாதவன் பேச போகிறார் போலும்.
கீதா ரெங்கன் தான் கதையை எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன்.
விளக்கமான அலசல்! நல்ல கேள்விகள். கருத்துரைக்கு நன்றி.
நீக்குபின்னூட்டங்களில் நிறைய கதை இருக்கிறது.
பதிலளிநீக்குகமலா சொன்னகதையும் நன்றாக இருக்கிறது.
நெல்லைத்தமிழன் சொன்ன அலுவலக செய்தி நெகிழ்வு.அவருக்கு வேறு நல்ல வேலை கிடைத்து விட்டது அறிந்து நிம்மதி.
ஆம். உண்மை.
நீக்கு/கமலா சொன்னகதையும் நன்றாக இருக்கிறது./
நீக்குதங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கோமதி அரசு சகோதரி. இன்றைய பாகம், பாகமாக வந்த கதையின் நடுவில் நான் வேறு என் கற்பனையை சிறிது புதிய பறவையாக விரித்து பறக்க விட்டேன்
அப்பாடா..! படம் நூறாவது நாளைத் தொட ஏதோ என்னாலான முயற்சி.
:))))
நீக்கு