செவ்வாய், 8 ஏப்ரல், 2025

சிறுகதை - அப்பாவின் நாற்காலி - கீதா ரெங்கன்

நான் எழுதிய கதை, கணையாழியில் வந்த கதை!  

இது சம்பந்தமான அனுபவங்கள் பற்றிய சில விவரங்களுக்கு இங்கே  தில்லையகத்து தளத்துக்கு வரவும்....

இக்கதையை முதலில் துளசிக்கு அனுப்பினேன்அவர் நல்லாருக்கு நல்லா எழுதியிருக்கே என்று சொன்னார். எப்போதும், ‘யார் என்ன சொன்னாலும் இது நம் எழுத்து, தயங்காதே என்று ஊக்கப்படுத்துபவர்’  ‘ஆனா பார்த்துக்க, யார் மனதும் பாதிக்காமல்’ என்று சொல்லவும், நான் அப்படிப் பார்த்தால் விஷுவல் மீடியா இன்னும் பாதிக்கக் கூடியவையாச்சே அதுக்காக வராமலா இருக்கின்றன? அது காரணமல்ல என் தயக்கத்திற்கு, நான் பல பெண்களின், ஆண்களின் மன வலிகளை பிரச்சனைக்ளைப் பதிய விரும்புகிறேன், என்றதும் அவரும் ஆமோதித்தார். ஊக்கப் படுத்தினார்

இக்கதையை ஸ்ரீராமிற்கு அனுப்பியிருந்தேன். வாசித்ததும் ஶ்ரீராம் ஆழமான கதை நல்லாருக்கு எபியில் போட்டிடலாம் என்றதும் எனக்கு ரொம்பவே தயக்கம். வேண்டாம், ஸ்ரீராம் என்றேன். இக்கதையை ஒரு பெண்ணின் கோணத்தில் வாசித்துக் கருத்து கேட்கலாமே என்று (கீதாக்கா ஸாரி இதெல்லாம் நடந்த சமயத்தில் உங்க சிச்சுவேஷன் தெரியும் என்பதால் உங்களைச் சிரமப்படுத்த விரும்பாமல்...) பானுக்காவுக்கும் அப்புறம் கோமதி அக்காவுக்கும் அனுப்பிக் கேட்டேன். இருவருமே நல்லாருக்கு என்று சொன்னாலும்  கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாகக் கிடந்தது என் ஃபோல்டரில்இந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம், அந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்து ஊக்குவித்த ஶ்ரீராம், பானுக்கா இருவருக்கும் நன்றி. கடைசியில் "கணையாழிக்கு அனுப்பி முயற்சி பண்ணுங்க" என்று ஶ்ரீராம் சொல்லி ஊக்கம் கொடுக்க பானுக்காவும், கணையாழி ரீச் இருக்குமா? என்று கேட்டாலும், ஓகே எனமெயில் ஐடியை தேடி எடுத்து, ஶ்ரீராமிடம் பேஸ்புக்கில் உறுதி செய்ய அனுப்பினேன். உறுதிப்படுத்தினார். இருவருக்கும் நன்றிகள்.

உடனே கணையாழி ஆசிரியருக்கு ஒரு மெயில் தட்டினேன். சிறுகதைகள் அல்லாமல் நெடுங்கதையும் அனுப்பலாமா என்று கேட்டதில், ஆசிரியரும் அனுப்பலாம் என்று சொன்னதும் உடனே கதையை அனுப்பிக் கொடுத்தேன். என்னடா அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லையே, கதை கிடைத்ததா என்றும் கூட... என்று ஸ்ரீராமிடமும் சொல்லிட, அவரும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் ஒரு மாதம் வரை....அதன் பின் மெயில் தட்டிப் பார்க்கலாம் என்று சொல்லிக் காத்திருக்க. எதிர்பார்க்கவே இல்லை மார்ச் மாத இதழில் வெளியாகி எனக்கு மெயிலுடன் பத்திரிகையும் இணைத்து அனுப்பியிருந்தார்கள். கதையில் எந்த மாற்றமும், எடிட்டிங்கும் செய்திருக்கவில்லை என்பது கூடுதல் சந்தோஷம். 


மிக்க நன்றி கணையாழி ஆசிரியருக்கும், குழுவிற்கும். 

(அப்பாவின்) நாற்காலி

(சற்றே பெரிய சிறுகதை )


இன்னிக்கு ஞாயித்துக் கிழமை லீவு தானே? ஒரு நடை அந்த வீட்டுக்குப் போய் பாத்துட்டு வந்தாதான் என்ன? ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க

சமீபகாலமாக ஒவ்வொரு விடுமுறையிலும் வரும் குற்றப்பத்திரிகைக் கிருதியின் பல்லவி காபியில் தொடங்கியது. என் மாமன் மகள் என்பதால் கூடுதல் சுதந்திரம்.

அத்தையோட ஃபீலிங்க்ஸை மகன் உங்களால கூடப் புரிஞ்சுக்க முடியலை. அப்படி என்ன வீண் வீம்பு பிடிவாதமோ?” லயம் ஓங்கிட அனுபல்லவிக்குத் தாவியது.

ஏன் சத்தமா பேசற? அம்மாக்குக் கேட்டுச்சுனா மனசு சங்கடப்படும்

இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. அதே அம்மாவோட செண்டிமென்ட் ஃபீலிங்க்….. அவங்க ஹஸ்பண்டோட ஃபேவரிட் அந்த அழகான நாற்காலிய மட்டும்தானே கேட்டு எடுத்துட்டு வரச் சொல்றாங்க.  சொத்துப் பங்குக்கா போய் நிக்கச் சொல்றாங்க? இல்ல நான்தான் சொல்றேனா?” என்னால் சரணம் அடைய முடியாத தருணம்.

என் கோபம் அறிந்துஅவங்க ஹஸ்பென்ட்என்று, மிகக் கவனமாக அரும்பதச் சொல்லைக் கையாண்டாள். புத்திசாலி. காரியம் நடப்பதற்கான காய் நகர்த்தல். கூடவே கிடைத்த கேப்பில் தானும் சொத்துக்கு ஆசைப்படவில்லை என்ற அறிவிப்பு.

சமீபகாலமாக என்றால், என் அம்மாவின் கணவன் இறந்து சொத்துகள் எல்லாம் பிரிக்கப்படுகிறது, வீடும்மன்னிக்கவும். வீடு என்று தவறாகச் சொல்லிவிட்டேன். கேரளத்துக் கொட்டாரம்அரண்மனை போன்ற பெரிய வீடு -  விற்கப் போகிறார்கள் என்று செய்தி வந்ததிலிருந்து.  சொத்துகள்என்று வாயால் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் மதிப்பில் சொல்வது அத்தனை எளிதல்ல. அவசியமும் இல்லை.

கொஞ்சம் மரியாதை கருதி அம்மாவின் கணவன் என்றேனும் சொன்னேன். வழக்கமாகஅந்த ஆளைப்’ பற்றிய விஷயத்தில் மட்டும் என் வாயில் கெட்ட வார்த்தைதான் வரும்.

இன்னிக்கு ஒரு ஃபில்ம் ப்ரொட்யூசர் வீட்டை வாங்கலாம்னு பாக்க வராராம்.” கட்டன் காஃபியைக் கலந்து கொண்டே.

எப்படியோ இவளுக்கு மட்டும் அந்த வீட்டைப் பற்றிய செய்தி கிடைத்துவிடுகிறது.

திடீரென்று மனதிற்குள் மின்னல்.

ஒரு வேளை அவரோ? என் அம்மாவை விரும்பிய அம்மாவின் மாமா மகனாக இருக்குமோ?  பார்க்கும் ஆர்வம் எட்டிப் பார்த்தது. இவ்வளவு செய்தி தெரிந்தவளுக்கு அதுவும் தெரியாமல் இருக்குமா என்ன? தெரிந்திருந்தால் அதையும் சொல்லியிருப்பாளே? எங்கள் இருவருக்குமே நெருங்கிய உறவுதானே! ஆனால்,  கேட்பதற்கு என் தன்மானம் தடை போட்டது.

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. புல்ஷிட்”.

ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த கட்டன் காபி கசந்தது! அறையை விட்டு அம்மா வெளியில் வந்த அடையாளம் இருக்கவில்லை. கொஞ்சம் தைரியம் வந்தது. அம்மாவின் கணவனை ஓங்கி அறைந்தேன். என் மனதில்தான். அது வார்த்தையாகத் தெரித்தது.

பாஸ்டர்ட்

தமிழ்லியே திட்டுடா ரெண்டும் ஒரே அர்த்தம்தான்

அம்மா வந்துவிட்டாள். கேட்டுவிட்டது. அம்மாவிற்கு, அவள் கணவனையும், முதல் மனைவிக்குப் பிறந்த 2 யும் நான் திட்டுவது பிடிக்காது.  டிப்பிக்கல் பாரத தத்துவ நாரி! பாலச்சந்தர் படத்து ஹீரோயின். தியாகத் திலகம். ரோஷம், மானம், சூடு, சொரணை எந்த மண்ணும் இருக்காதா? அன்பிலீவபிள் வுமன்!

அத்தை! உங்க மகன் வழக்கம் போலதான் பதில்......இவருக்கு ஏன் மாமா மேல இத்தனை கோபம்? எத்தனை நல்ல மனுஷன்! நம்ம குடும்பத்தையே கரையேத்தினவரு.”

அவனுக்குப் புரிஞ்சுக்க முடியாதுமா, இந்த ஃபீலிங்க் எல்லாம்

நக்கலாகச் சிரித்தேன்

பாருங்க அத்தை, நக்கல்

இனி இருவரையும் சமாளிப்பது கஷ்டம். நைசாக அங்கிருந்து நழுவினேன்.

மாமா! கெட்ட வார்த்தை பேசக் கூடாது

என் சித்தியின் பேத்திகள். என் அம்மாவிடம் தேவாரம் கற்கும் சிஷ்யைகள். சனி ஞாயிறு விடுமுறையில் வந்து செல்லும். பேத்திகளுக்குப் பாட்டியின் நீதி போதனைகள். என்னையும் அப்படித்தானே வளர்த்தாள். இந்த நீதி போதனைகள் எல்லா காலத்திலும் உதவுவதில்லை. அட்லீஸ்ட் எனக்கு உதவவில்லை.

சிறிய வயதில் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு ஏற்பட்ட அவமானங்கள், மனவலிகள், ரோஷங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போன அழிக்க முடியாத இன்ஸ்க்ரிப்ஷன்ஸ். மேலோங்கி நிற்கத்தான் செய்கிறன. அதனால் விளைந்த தன்மான, சுயமரியாதைப் பிரச்சனை. அது பிடிவாதமாம். சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அது பிடிவாதம் அல்ல.

பிடிவாதத்திற்கும் தன்மானத்திற்கும் ஒரு சிறு இழைதான் வித்தியாசம். அந்த வித்தியாசம் என் வீட்டுப் பெண்களுக்குப் புரிவதில்லை. யாராலும் என் வலியை, நான் இழந்ததைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மா வீட்டு மனிதர்கள் யாருக்கும் எதுவும் தெரியாதே! கூட்டணிக்கட்சி, சிங்கிளான என்னால்  ஒண்டியாக வீட்டுப் பெண்களோடு மல்லுக்கு நின்று மோத முடியாது.

அம்மாவுக்கு அவள் வாழ்க்கை பிடித்திருந்திருக்கும் போலும்! அப்படி என்றால் நான் ஏன் அதில் நுழைகிறேன்? உரிமை இல்லாமல்? நான்தான் என் கோணத்தில் அதைப் பார்த்து என்னைக் குழப்பிக் கொள்கிறேனோ?

நிச்சயமாக இல்லை. என் மீதான அம்மாவின் அன்பை நான் அனுபவிக்க முடியாமல் பிரிக்கப்பட்டதால் இந்தக் கொந்தளிப்பு. இந்த எண்ணம் என் மனதில் அடிக்கடித் தோன்றி என்னைக் குழப்பிச் செல்லும் ஒன்று.

யெஸ்! என்னால் என் அம்மா என்ற உரிமையில் என்னிடமிருந்து தனித்துப் பார்க்க முடியவில்லை. அந்த வாழ்க்கையின் கதாநாயகனான ‘அந்த ஆள்’ உலகத்துக்கு என் அப்பன், எனக்கு வில்லன்.

இந்த விஷயத்தில் மட்டும், அம்மா கற்றுக் கொடுத்த போதனைகளுடன் என் மனம் முரண்பட்டுத் தொலைக்கிறது. என் மனப்போராட்டம் அம்மாவுக்குப் புரிவதில்லை. இல்லை புரிந்தும் புரியாதது போல் இருக்கிறாளோ?

அந்த ஆளின் கர்ண கவச குண்டலம் அந்த நாற்காலிதான். அந்த நாற்காலி கவர்ச்சியான கலை நயத்துடன் இதமான மெத்தையுடன் முன்னும் பின்னும் சாய்ந்தாடும்படியான எழிலான நாற்காலி. அதை ரசிக்க முடியாதபடி செய்த அந்த ஆள்! அதில் அவனைத் தவிர…..  எனக்கு ‘அவர்’ இல்லை அவன் தான்….. யாரும் உட்காரக் கூடாது, தொடவும் கூடாது. குறிப்பாக நான்.

சிறு வயதில் நான் ஆசைப்பட்டு அந்த அறைக்குச் சென்று அதில் உட்கார்ந்துவிட, அன்று என்னை அந்த ஆள் அடித்த அடி….. இதற்காகவா என்னை பெல்டால் விளாச வேண்டும்? என்ன காரணம் என்று புரியாத வயது….

என் மனதில் பதிந்த முதல் வலி.

இப்போது அந்த ஆள் செத்துத் தொலைந்த பின்னும், அம்மாவுக்கு அதன் மீது என்ன காதலோ? அந்த ஆளின் எந்தப் பொருளும் இந்த வீட்டிற்கு வருவதில் எனக்கு இஷ்டமில்லை.

‘நீயே அந்த ஆளுக்குப் பிறந்தவன் தானே!’ என் மனம் என்னை நக்கலடித்தது.

பதில் சொல்ல முடியாத இயலாமை. என் ஆத்திரம், கோபம் உச்சத்தைத் தொட்டது. டீ டம்ளரை தூக்கி எறிந்தேன். மூச்சிரைத்தது. நல்லகாலம் எவர்சில்வர் டம்ளர்.

இன்னமும் நீ கோபத்திலிருந்து வெளில வரலை இல்லையா? நல்லதில்லைடா ராஜா உனக்குகுளித்துவிட்டு வந்திருந்த அம்மா டம்ளரை எடுத்துக் கொண்டு போகிற போக்கில் என்னை ஒரு நொடி பார்த்த பார்வையில், ‘உன்னை நான் இப்படியா வளர்த்தேன்? என் வளர்ப்பில் குறையோ’ என்ற பொருள் பொதிந்த பார்வையாக எனக்குப் பட்டது. மனம் குறுகிப் போக பார்வையை வேறுபக்கம் திருப்பினேன். என்றாலும் ‘நீ வளர்த்த பையன் தான்மா, நான். நான் மோசமான பையன் இல்லைமா….என் மன நியாயங்களை உணர்வுகளைப் புரிஞ்சுக்கமா’ என்று கதறவேண்டும் போலத் தோன்றியது. 

அம்மாவின் முன் வெளிப்படுத்தத் தயங்கிய கோபம் என்னை மீறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த ஆள் நாவினால் சுட்டதும், தந்த அடிகளும் ஏற்படுத்திய அந்த ஆறாத வடுக்கள் எனக்குத்தான் தெரியும். “தே……” நாவை அடக்கிக் கொண்டேன். “ஷிட்….” வாயில் வந்துவிட்டது!

பதிமூணுசித்தியின் பேத்திகளில் பெரியது சொன்னது. கெட்ட வார்த்தைகளை எண்ணுகிறாளாம். சின்னதும் சேர்ந்துகொண்டது.

மீண்டும் வாயில் வந்த கெட்ட வார்த்தையை முழுங்கிவிட்டேன். இல்லை என்றால் 14 என்று எண்ணிக்கைக் கில்லாடி சின்னது அம்மாவின் காதில் விழும்படி ஓதித் தொலைக்கும். சிறிய வயதிலேயே ஏதோ எல்லாம் தெரிந்தது போல பாட்டிக்கு வக்காலத்து வாங்கும்.

“ம்மா எனக்கு அந்த ஆளைப் பிடிக்கலை” இதைத்தான் நான் அன்று அம்மாவிடம் அடிக்கடி சொன்னது.

என் குட்டிப் பையா, ‘அந்த ஆள்னு சொல்லாதடா கண்ணா. உங்கப்பா அவர். அவர் மேல கோபம் வேண்டாம்பா. நல்லவர். அவர் நம்ம குடும்பத்துக்கு ரொம்ப உதவறார்டா கண்ணா

என் 7 வது வயதில் என்னை அணைத்துக் கொண்டு தலையைத் தடவி ஆறுதல் சொன்னவள். ஒவ்வொரு அடியின் போதும், என் மேல் வந்து விழுந்த கெட்ட வார்த்தைகளின் போதும்

ஆறுவது சினம்” – நீ சொல்லிக் கொடுத்த ஆத்திச்சூடிம்மா.... என்னை விடப் பெரிய அந்த ஆள் படிச்சதில்லையா? அவருக்குச் சொல்லிக் கொடு.”

கண்ணா உன் நல்லதுக்குத்தான் சொல்றேம்பா....அதை ஆத்தினாலும் மனசுக்கு அடில அது குளிர்ந்து போன எரிமலை போல உக்காந்துருக்கும்டா. சில சூழல்ல அது ட்ரிகர் ஆகி வெடிச்சுடும் கண்ணா. அதனாலதான் இப்பவும் சொல்றேன், நல்லதை நினை, உங்கப்பா மேல நெகட்டிவ் தாட்ஸ் வேண்டாண்டா. அதுலருந்து முழுசுமா வெளில வந்துருன்னு. ”.

நல்லதா? என்னம்மா நல்லது? அந்த  ஆள் என் மேல எதுக்குக் கோபப்படுறார்னு எனக்குச் சத்தியமா புரியலைஆனா என் சினம் ஆறா சினம் மா.”

என் 7, 8 வயதுகளில் எனக்கும் அம்மாவிற்குமான உரையாடல்கள் இவை. வயதிற்கு மீறிய அனுபவ அறிவு எழுப்பிய பேச்சு.

அம்மா உச்சி முகர்ந்து கண்ணை மூடிக் கொண்டு என்னை அணைத்த போது அம்மா சந்தோஷமாகத்தான் இருந்தாளோ? ஆனால் என் மனம் இன்னும் வெறுத்தது அந்த ஆளை. வெறுப்பில் கூட இன்னும் என்ற சொல்லைச் சேர்த்துக் கூட்டுகிறேன்! வெப்பத்தின் டிகிரி!

அம்மா சொன்ன, ஆறிய அந்த எரிமலைதான் கொஞ்சம் கொஞ்சமாக வெடித்துக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தது, அனல் தெறிக்கும் கோபமாய்.

இப்போதும் என்னால் அந்தக் கேடுகெட்ட மனுஷன் மீதான கோபத்திலிருந்து மட்டும் வெளியில் வர முடியவில்லை. வடு அவ்வப்போது கீறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது நாற்காலி! ரணம்.

நான் அம்மாவைத் தேடினேன். அம்மா கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள். எனக்காகத்தான்….என் கோபம் என்னை விட்டு அகல வேண்டும் என்று….இந்த நல்ல மனுஷியை அந்தப் பொறம்போக்கு .…ச்சே

நானும் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்தேன். எரிமலை மீண்டும் குழம்பைக் கக்கத் தொடங்கியது.

அம்மா நாம ரெண்டு பேரும் வேற எங்கயாச்சும் போய் இருக்கலாம். நீ முன்னாடி செஞ்ச டீச்சர் வேலை பாக்கலாம். நான் உனக்குத் துணையா இருந்து பாத்துக்குவேம்மா

கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அம்மாவிடம், நான் என் 10வது வயதில் பெரிய தோரணையில், சொன்னது.

ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசறே! நீ நிறைய படிக்கணும்டா ராஜா! பெரிய ஆளா வரணும்

இந்த வீட்ருலருந்தாம்மா? இவர் அப்பாவா? அப்படினா என்ன அர்த்தம்மா? எதுக்கு என்னை உங்கிட்டருந்து பிரிக்க நினைக்கிறார்? நான் இங்க இருக்கக் கூடாதாம். இடைஞ்சலாம்இங்கருந்து என்னால படிக்க முடியாதுமா.”

அம்மா டக்கென்று கண்ணைத் திறந்து என்னை உற்று நோக்கினாள்.

நீ இடைஞ்சல்தான். பரதேசி நாயே. எங்கியாவது போய்த் தொலைடா. அப்படியே ஒழிஞ்சு போ

அந்த ஆள் அங்கு வருவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உன் பரதேசிப் பிள்ளை எதிர்த்துப் பேசறான். என்னை திருத்தறானாம். நீ அவனுக்குப் போதிக்கற பாடம்தான். யாருக்குடி வேணும் உன் போதனையும் படிப்பும் குப்பைல போடு.”

என்னை பெல்டால் விளாசினார். எதிர்க்கும் தைரியம் தலைதூக்கியது. அந்த பெல்டைப் பிடித்து இழுத்தேன். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள். அந்த ஆள் சொன்ன கெட்ட வார்த்தை அப்போது புரியவில்லை.

என்னை விட அவன் தான் உனக்கு முக்கியம்னா, வெளில இறங்கிடு. உங்க அப்பனுக்கு நான் கொடுத்த பணத்துல முழுசையும் வட்டியோடு சேத்து வைச்சுட்டு….சொல்லிக் கொண்டே உள்ளே சென்றுவிட்டான். 

இதுக்குத்தாம்மா நான் சொன்னேன், நாம போய்டலாம்மா.” வலியிலும் முனகினேன்.

உள்ளே சென்ற அந்த ஆள் ஏதோ குரல் கொடுத்தான். ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த என் அம்மா விருட்டென்று எழுந்து சென்றாள். கதவு மூடும் சத்தம் என் மனதில் அறைந்தது.

என் மனதில் ஆழமாகப் பதிந்த இரண்டாவது வலி.

அம்மா சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வந்தாள்.

இது வழக்கமாக நடந்ததுதான். நான் பள்ளியிலிருந்து வரும் போது எனக்கு அம்மா இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் கண்ணில் படமாட்டாள். அந்த ஆளின் முதல் மனைவியின் குழந்தைகள் என்று சொல்லப்பட்ட 2 சோம்பேறி தெருப்பொறுக்கித் தெனாவெட்டுகள் வீட்டில் இருந்தால் என்னைக் கெட்ட வார்த்தைகள் சொல்லி விரட்டும்.

கொட்டாரம் போன்ற அந்தப் பெரிய வீட்டில் அம்மாவை நான் தேடிக் களைத்துப் போகும் சமயம் அம்மா வருவாள். என்னைக் கண்டதும் 10 நிமிடம் என்று சைகையால் சொல்லிவிட்டுக் குளித்துவிட்டு வந்து என்னைக் கட்டிக் கொள்வாள்.  அம்மாவுக்கு அவள் வாழ்க்கை பிடித்திருந்ததோ? கேள்வியுடன் அம்மாவின் முகத்தை நோக்கினாலும் பொருள் பிடிபடாத கண்கள், புன்னகை. அம்மாவின் கண்ணில் கண்ணீர் இருந்ததோ!? என் கற்பனை!

சில சமயம் அம்மாவைத் தேடித்தேடிக் களைப்பில் தூங்கிப் போன நாட்களும் உண்டு. அப்போது எனக்குக் காரணம் தெரியவில்லை.

என் மனதில் ஆழமாகப் பதிந்து போன மூன்றாவது வலி.

அந்த ஆளின் கர்ண கவசமாகக் கிடந்த அந்த நாற்காலியின் அர்த்தம், அந்த ஆளின் கோபத்தின் காரணம், ஒரே நாளில் பல தடவை அம்மா குளித்ததன் காரணம், எல்லாம் 13 வது வயதில் பருவ வயதைத் தொட்ட போது புரிந்தது. ஹைப்பர் செக்ஷுயாலிட்டி-ஸட்டைரியாஸிஸ். நான் வெறுப்பின் எல்லையில். வெளியில் பெரும் பணக்கார நல்ல மனசுள்ள, ஊருக்கே உதவும் மனிதன். வேஷம்.

அதிர்ச்சியில் எனக்கு நான்காவது வலி.

அதனால்தான் அம்மா என்னோடு நேரம் செலவழித்தல் அந்த ஆளிற்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளின் அதிகபட்ச இச்சைக்கு நான் இடைஞ்சல். அதனால் கோபம். என் மீது வெறுப்பு. இதற்காகவா பெல்டால் விளாச வேண்டும்? ச்சே!

என்னையும் அம்மாவையும் இணைத்துப் பேசிய வார்த்தைகள் கொடூரத்தின் எல்லை.

ஐந்தாவது வலி.

என் அம்மாவிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் அப்போதும் இல்லை இப்போதும் இல்லை. எப்படிக் கேட்பது? அம்மா அதை இயல்பாக எடுத்துக் கொண்டிருந்தால்? என் மனம் கூசிப் போனது.

அப்படியான நாற்காலியின் மீது அம்மாவுக்கு ஏன் இந்தப் பற்று? அன்பிலீவபிள் வுமன். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மாவிற்கு முன்னான, அந்த ஆளின் மனைவியோ அல்லது வேறு ஏதோ ஒர் அர்த்தத்தில் சொல்லப்பட்டவளோ, இந்த ஆளை விட்டுச் சென்றதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் கட்டுக்கதைதானோ? மனைவி போகப் பொருள். பெரும்பாலும் லிபிடூ வில் இருந்தவனைச் சமாளிக்க முடியாமல், வெளியிலும் சொல்ல முடியாமல், தன் 2 குழந்தைகளும் கூட வேண்டாம் என்று ஓடிவிட்டாளோ! அப்படித்தான் இருக்க வேண்டும்.

எனக்கு அம்மாவின் மீது கோபம் வந்தது. படிப்பறிவு இல்லாத அந்தப் பெண்மணிக்கு இருந்த முடிவெடுக்கும் தைரியம், நல்ல படிப்பும், வாசிப்பு அறிவும், கல்யாணத்திற்கு முன் ஆசிரியையாக வேலை பார்த்த தன் காலில் நிற்க முடிந்த தகுதியும் கொண்டிருந்த என் அம்மாவிற்கு ஏன் இல்லாமல் போனது? சமூக பயம்? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எனும் பாரதக் கலாச்சாரம்? அறிவும், கல்வியும், வாசிப்பும் ஏற்படுத்திய ஏதோ வக்கத்து சொல்லப்படும் அன்கண்டிஷனல் லவ் என்ற தத்துவ மனப்பக்குவம்? ஸ்டுப்பிட்! ரிடிக்குலஸ்!

வழக்கமான சோஷியல் ஸ்டிக்மா! ஏழ்மை. தம்பி தங்கைகள் படித்திடக் கடன் கொடுத்த இந்த தூரத்துச் சொந்தமான ஆள் பாரிவள்ளல்! அதனால் இரண்டாவது மனைவியாக கல்வி வாசனையே சுத்தமாக இல்லாத இந்தக் குடும்பத்திற்குக் கடமைப்பட்டவளாக அவன் இச்சைக்குச் சட்டரீதியாக விலைக்குப் போன அம்மா! தியாகம்?  என்னால் ஏற்க முடியவில்லை.

பருவ வயதில் வந்த தைரியத்தில் அம்மாவின் சார்பாக நான் அந்த ஆள் கை ஓங்கிய போதும் பெல்டை எடுத்த போதும் அவனின் கையைப் பிடிக்கத் தொடங்கினேன். என் பலத்தைப் பிரயோகிக்க முயற்சித்தேன். நான் அங்கிருந்தால் என் கோபத்தில் என் படிப்பு கெட்டுவிடும் என்று என் அம்மா என்னை என் மாமாவுடன், தாத்தா பாட்டி வீட்டுக்கு அனுப்பிடத் தீர்மானித்தாள்.

என்னை அழைத்துச் செல்ல என்ன மாமா வரும் நேரம் ஆகிவிட்டது என்று மேசையில் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

“தேவாரம் திருவாசகம், திருக்குறள்னு இருந்த நீ இப்பலாம் அதைச் சொல்றதே இல்லையேம்மா!”

தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருந்த என் அம்மாவின் நிலை என்னை மிகவும் உருக்குலைத்தது.

“யார் சொன்னா? அது உன் காதுல விழலடா கண்ணா. ஏன்னா, இந்த வயசுல தேவையில்லாத சிந்தனை உன் மனசுல வேற மாதிரி போகுது…”

சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்தாள்.

“மலரினும் மெல்லிது காமம்………” மெதுவாக எனக்குள் சொல்வது போல் தண்ணீரைக் குடித்துக் கொண்டே சொன்ன நான் வேண்டுமேன்றே நிறுத்தி புரைக்கேறியது போல இருமினேன். அம்மாவின் ரியாக்ஷன், உணர்வுகள் அவள் முகத்திலோ உடலிலோ தெரிகிறதா என்று மறைமுகமாகப் படித்திட நினைத்த என் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது.

இதுக்குத்தான் கண்டதை யோசிச்சுக்கிட்டே சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு சொல்லியிருக்கேன்ல……“சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்.” என்று இயல்பாகச் சொல்லி முடித்தாள்.

அப்பாக்கு உன்னைப் பிடிக்கும்தாண்டா…..அதை அவருக்குக் காட்டத் தெரியலை அவ்வளவுதான்....”

ஹூம். ஜஸ்டிஃபிக்கேஷன்?…

நீ நம்பலை இல்லியா? அம்மா சும்மா பொய் சொல்வேனா சொல்லு?”

ஒரு வேளை உண்மையாகத்தான் இருக்குமோ? இருந்துவிட்டுப் போகட்டும். என்னால் ஏற்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

நான் பதில் சொல்லாமல் சாப்பாட்டை அளைந்தேன். என் உடல்மொழி, கண் அசைவு, சைகைகளை வைத்தே என் உணர்வுகளைப் படித்துவிடுவாள் அம்மா.

ஏதோ யோசனை ஓடுது போல?”

“யெஸ்! அப்ப ஏன் அவர் என்னை, பொறந்திருக்கக் கூடாது, வேண்டாம்னு சொல்றாரு? உன்னை அபார்ட் பண்ணச் சொன்னாராமே.” அம்மாவிற்காக நான் அந்த ஆளை மரியாதையில் பேசிய வார்த்தைகளை முடிப்பதற்குள்,

அது ஒரு கோபத்துல சொல்றது. அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கக் கூடாதுடா…..”

வெல்! அப்ப ஏன் நீ என்னை மாமாவோட அனுப்பணும்? நா போய்த்தான் ஆகணுமாம்மா? நான் இங்க உனக்கு ஆதரவா இருப்பேன்மா

எனக்கு எதுக்குடா ஆதரவு? என்ன குறைச்சல்? நீ மாமாவோடு போய்டு. உன் நல்லதுக்குத்தான்நீ சொல்லுவியே இங்க இருந்தா என்னால படிக்க முடியலைன்னு…. இப்ப கூட அப்பா மேல கை ஓங்கற……உனக்கு இது க்ரூஷியல் வயசு. உன் எதிர்காலத்துக்கு விதை போடற பீரியட். உன் கோபம் உன் எதிர்காலத்தைப் பாதிச்சுடும்னு எனக்குப் பயம் வருது…. ஸோ….”

என் கண்களில் கண்ணீர். மறைத்துக் கொண்டேன் தொண்டை அடைத்தது. அம்மா என் வார்த்தைகளை, என் கோபத்தை வைத்தே யதார்த்தத்தை, தன் முடிவை ஜஸ்டிஃபை செய்தாள். அம்மாவே சாப்பாடை எடுத்து எனக்கு ஊட்டத் தொடங்கினாள். அம்மா ஊட்டத் தொடங்கியதும் சாப்பாடு மாயமாய் தொண்டைக்குள் இறங்கத் தொடங்கியது.  அம்மாவின் அன்பின் சக்தி!

உன் எதிர்காலம் முக்கியம். வாழ்க்கையும் இந்த உலகமும் ரொம்ப அழகானது, நீ அதை ரசிக்கணும்டா கண்ணா....அதுக்குத்தான்

நான் சட்டென்று அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அவள் கண்களை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தேன். அம்மாவால் இந்த உலகை, வாழ்க்கையை ரசிக்க முடிகிறதா? என் மனதில் ஓடிய சிந்தனையை புரிந்து கொண்டது போல், அம்மா புன்சிரிப்போடுஆம்என்பது போல் கண்ணை மூடித் திறந்து இடக்கையால் என் தலையைக் கோதினாள்.

அம்மா என்னை சமாதானப்படுத்த அப்படிச் சொல்கிறாளா இல்லை நிஜமான வார்த்தைகளா என்று அவளது முகபாவத்திலிருந்து என்னால் யூகிக்க முடியவில்லை.

அகத்தின் எண்ணங்கள் கண்களின் வழி, வார்த்தைகளின் வழி தெரியும் என்பதெல்லாம் அம்மாக்களுக்குச் செல்லுபடியாகாது போலும். குழந்தையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசும் தாய்மை? இல்லை இதுவும் என் கற்பனையோ?

இதையே யோசிச்சிட்டே இருந்தா மனசு கெட்டுப் போய்டும்டா கண்ணா..”

எனக்கு அம்மா அனுப்புவதன் அர்த்தம் லேசாகப் புரிவது போல இருந்தது அப்போது.

உனக்கு இங்க டைவெர்ஷன் இல்லை. அதனாலதான் மாமாவோட போனா அங்க மனுஷங்க நிறைய. உனக்கும் மனசு டைவேர்ட் ஆகி லகுவாகிடும்டாஉனக்கு அம்மா மேல நம்பிக்கை இருக்குதானே?”

அம்மா கண்டிப்பாக எனக்கான நல்ல முடிவுதான் எடுத்திருப்பாள் என்று முழுமையாக நம்பினாலும் நீரு பூத்த நெருப்பு போல ஆழ் மனதுள் எரிமலை கனன்று கொண்டுதான் இருந்தது.

லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்? சிலருக்கு வாழ்க்கை எவ்வளவுக்கு எவ்வளவு அழகோ, ஒரு சிலருக்கு அது வில்லன்தான்”

என் வாயிலிருந்து வார்த்தைகள் தெரித்தன.

“டு யு மீன் இட்?”

“யெஸ்மா. நிச்சயமா…. எனக்கு”

நீ என் உயிர். இந்த உயிர் எனக்குக் கிடைக்க காரணம் உன் அப்பாதானே! உன் மாமா, உன் சித்திகள் எல்லாரும் படிக்க, கடன் கொடுத்து அவர் ஹெல்ப் பண்ணிருக்காரில்லையா. அவர் மேல எந்த வெறுப்பும் வைச்சுக்காம மாமாவோட போய் படிப்புல கவனமா இருந்து நல்லா படிக்கணும்டா ராஜா. நீ வெளில பறந்து பாரு. வாழ்க்கை எவ்வளவு அழகுன்னு புரிஞ்சுப்ப

வியப்புடன் அம்மாவைப் பார்த்தேன். அம்மாவா இதைச் சொல்கிறாள்? அப்ப ஏன் அம்மாவுக்குப் பறந்து செல்லும் ஆசை இல்லை? தன்னால் முடியவில்லை. மகன் பறக்கட்டும் என்ற அன்போ?

என் வாதத்தை விடவில்லை.

கடன் கொடுத்துதானே படிக்க வைச்சார்? வட்டியோட அடைக்கறாங்கதானே? நான் இடைஞ்சல்னு சொன்ன இந்த ஆளு……..எல்லாத்துக்கும் எனக்கு இப்பக் காரணம் தெரியும்மா….. ஆம் நாட் சைல்ட். என் மேல வெறுப்பைக் கொட்டற இந்த ஆளுக்கு நீ சப்போர்ட்? உன்னை என்னால புரிஞ்சுக்க முடியலைம்மா. யு ஆர் எ மிஸ்ட்டீரியஸ் வுமன்இதைச் சொன்ன போது என் கண்களில் கண்ணீர். அம்மா பதில் சொல்லாமல் சாப்பிட்ட தட்டு, பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றாள்.

மாமா வந்தார்.

“என்ன தம்பி அம்மாவை விட்டு வரோம்னு வருத்தமாருக்கா?”

அம்மா ஏன் என்னை அவருடன் அனுப்புகிறாள் என்று மாமா ஒரு வார்த்தை கூடக் கேட்காதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அம்மா சொல்லியிருப்பாளோ? மாமாவுக்கும் அந்த வீட்டினருக்கும் எல்லாம் தெரியுமோ? என்ற என் சந்தேகம் அம்மாவின் அடுத்த உரையாடலில் உடைந்து போனது.

தம்பி, திரும்பவும் கேட்டுக்கறேன்….இவனை அங்க அனுப்புறதுல நம்ம வீட்டுல எந்தப் பிரச்சனையும் இல்லைதானே? இவன் அங்க இருந்தா இன்னும் நல்லா படிப்பான். இங்க எனக்கு வீட்டு வேலை, தோட்ட வேலையே சரியா இருக்குப்பா……கவனிக்க முடியலை….அதான்…”

அம்மாவின் பதில் என்னை வியப்பிலாழ்த்தியது. பொய்மையும் வாய்மையிடத்த….?

என்னக்கா இப்படி ஒரு கேள்வி கேட்கற? காரணம் சொல்லற? எவ்வளவு பெரிய ஆளு நம்ம அத்தான்……..இதுகூட நாங்க செய்யலைனா…..? அத்தான் எங்கக்கா? அவருக்கும் சம்மதம்தானே?” 

மாமாவிற்கு அந்த ஆளின் மீதான மரியாதையைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

சம்மதம் இருக்காதா அந்த ஆளுக்கு! இந்த ஆளின் பணத்தில் நான் படிக்க விரும்பலை என்று சொல்ல வந்ததை மாமாவின் முன் வேண்டாம் என்று தவிர்த்தேன்.

சம்மதம்தான்பா. அவரு வெளிய போயிருக்காரு. ஏதாச்சும் வேணும்னா தயங்காம கேளு சரியா?”

இல்லைக்கா இப்ப என்ன குறை? எல்லாரும் நல்லாதானே இருக்கோம்! என் மருமகன எங்களால படிக்க வைக்க முடியாதா என்ன?”

என் மனதில் ஓடிய எண்ணங்களுக்குப் பதிலும் கிடைத்தது.

அம்மாவைப் பிரிய முடியாமல் என் மனம் விக்கித்துப் போனது.

இது ஆறாத ஆறாவது வலி.

மாமாவுடன் சென்றதும் பாட்டி, தாத்தா, சித்திகள் மாமா குடும்பம், அன்பு, கலகலப்பு, தேவாரம், திருவாசகம், அறிவார்ந்த விவாதங்கள் என்று அந்த வீட்டுச் சூழல் என் மனதை லகுவாக்கியது என்னவோ உண்மைதான். ஆனால் மனதின் ஓரத்தில் இருந்த அந்த ஆறாத ரணங்கள் வலித்துக் கசிந்து கொண்டிருந்தன.

அவர்களுக்கு அம்மாவின் வாழ்வு பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் நானும் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதைவிட அவர்கள் அந்த ஆளின் மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் என் நாவைக் கட்டிப் போட்டது. சொன்னால் நான்தான் குற்றவாளியாகி விடுவேனோ என்ற பயம்.

பாட்டியும் தாத்தாவும் தங்கள் உடன்பிறப்புகள், அவர்கள் தலைமுறை என்று ஒரு சிலரை அறிமுகப்படுத்தினார்கள்.

உறவுகள் பற்றி ஃபோட்டோக்களைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்த  போது பேச்சோடு பேச்சாகச் சொன்னார் பாட்டி.

இந்தா இதுதான் என் பெரிய அண்ணன் மகன். உங்கம்மாவைத்தான் கட்டிப்பேன்னு நின்னான். நல்லா படிச்சவன் தான். ஆனா உங்க தாத்தாவுக்கு அவன் சினிமா தொழிலுக்குப் போறான்னு பிடிக்கலை. மாட்டேன்னு பிடிவாதமா மறுத்துடாரு.”

அம்மாவுக்கும் அவரைப் பிடிச்சிருந்துச்சா, பாட்டி?”

எனக்கு அது சொல்லத் தெரியலை. ஆனா ரெண்டு பேரும் பொஸ்தகம், கதை, கவிதைன்னு நிறைய பேசிப்பாங்க.”

தாத்தா பிடிவாதமாக இருந்திருக்கலைனா உங்க பொண்ணோட வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும்வேதனையிலும் கோபத்திலும் என் ‘நா’ சொல்லத் துடித்தது. மனம் அதைத் தொண்டைக் குழிக்குள் பந்தாய் சுருட்டி அடைத்தது.

இப்ப அவர் எங்க இருக்காரு? என்ன செய்யிறாரு பாட்டி?”

என்ன செய்யிறான்னு யாருக்குத் தெரியும்? என் அண்ணன் மகன்லா. நல்ல பையானா இல்லாம இருப்பானா? ஆனா, அவன் சினிமா பக்கம் போனதால இந்த வீட்டுல உங்க தாத்தா அது பத்தி பேசக் கூடாதுன்னுட்டு, பெரியண்ணன் குடும்பத்தோட தொடர்பே இல்லாம போச்சு. அவங்க எல்லாம் மெட்ராஸ்லதான் இருக்காங்கன்னு கேள்வி. மத்தபடி அதுக்குப் பொறவு சேதி ஒன்னும் இல்லை. நாமளும் உங்க தாத்தா சோலிக்காக ஊரை விட்டு வந்த பொறவு ஊர் தொடர்பும் இல்லாமதானே இருக்கம்.”

பாட்டி வருத்தப்படுகிறாளா இல்லை தாத்தாவை ஆமோதிக்கிறாளா? அனுமானிக்க முடியவில்லை. சிறிது நேர அமைதி.    

ஹாங்….ரொம்பக் கஷ்டப்பட்டானாம். அவனை கெட்டியிருந்தாலும் எம்மக கஷ்டம்தான் பட்டிருப்பா. இப்ப பாரு நல்லா இருக்கால்லா? என்ன கொறைச்சல்?”

பாட்டியின் எண்ணம் எனக்கு வியப்பாக இருந்தது.

“எத்தன தடவை சொல்றது. அவன் பேச்சை எடுக்காதன்னிட்டு? இனி எடுத்த…. நடக்கறதே வேற. சின்ன பிள்ளை கிட்ட போயி இந்தக் கதை எல்லாம் …..தம்பி….உன் படிப்பை பாரு. வெட்டிக் கதை கேட்டு கெட்டுறாத

தாத்தா வந்தது தெரியாமல் பாட்டி பாட்டுக்குப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாள். நான் தாத்தாவுக்கு பதில் சொல்ல முயன்ற போது என்னிடம் சைகையால் பேசாதே என்று சொல்லி நகரச் சொன்னாள்.

எனக்கு அந்த வீட்டின் மனப்பாங்கு புரிந்தது. இவர்களின் கபடமற்ற மனதும் என் அம்மாவும் பலியாடுகள். பயமும், வக்கற்ற கொள்கைகளும், இயலாமைகளும், பாதுகாத்துக்கொள்ளும் அறிவும் திறனும் இல்லாதவர்கள் இந்த சமூகத்தின் பலியாடுகள்தான். இரையைக் காட்டி இழுத்து நசுக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

அவ்வப்போது அம்மாவைப் பார்க்கச் சென்ற போது அந்த வீடு என் மனதுள் எழுப்பிய கோபம் நாகப்பாம்பு போல் படமெடுத்துக் கொத்துவதற்குத் தயாராகக் காத்திருந்தது. 

என்னை மாமாவுடன் அனுப்பியது அந்த ஆளின் மனதில் சிறிது கூட சலனத்தை ஏற்படுத்தவில்லை. அவனுக்குத்தான் அம்மா என்னோடு நேரம் செலவழிப்பதே பிடிக்காதே. அவன் ஆட்டத்திற்கு இடைஞ்சல் தொலைஞ்சது என்று எண்ணியிருப்பான். அந்தக் கவச நாற்காலியின் ஆட்டத்தின் அர்த்தம் புரிந்த போது ...ச்சே!  மிருகம்.

அந்த வெறுப்பு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய போதெல்லாம் பயந்திருக்கிறேன். எங்கேனும் மனநோயாளியாகிவிடுவேனோ என்று.

அம்மா என்னை மாமாவோடு அனுப்பியது எவ்வளவு சரி என்று எப்போது நினைத்துப் பார்த்தாலும் தோன்றும்.

நான் விவசாயப் படிப்பில் மேற்படிப்பு, ஆராய்ச்சி என்று முடித்ததும் அம்மாவைப் பார்த்து அழைத்துவரச் சென்றேன். அம்மா பூரித்துப் போனாள்.

அம்மா! அக்ரிகல்சுரல் ரிசர்ச் டிப்பார்மென்ட்ல போஸ்டிங்க்..”

என்னை உச்சி முகர்ந்தாள். அம்மாவின் உடல் மிகவும் நலிந்து போயிருந்தது. கேட்டேன்.

வயசாகுதில்லையா….நாச்சுரல் தானே

டோன்ட் திங்க் ஸோ.”

ஸ்டில் இன் எமோஷனல் ஹாங்கோவர்?” சிரித்துக் கொண்டே கேட்டாள். “நல்லதில்லைடா செல்லம்……நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்பா.”

கிளம்பும்மா, என் கூட வா. அதுக்குத்தான் வந்திருக்கேன்

எங்க?”

என்னம்மா கேள்வி? ஆர் யு மாட்? நம்ம வீட்டுக்கு. எனக்குதான் வேலை கிடைச்சிருச்சே

“……………………… கொஞ்ச நாள் பொறுத்துக்கயேன்.”

எனக்குக் கோபம் தலைக்கேறியது. நான் கண்ணை மூடிக் கொண்டு பெருமூச்செடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். புரியாத புதிரான அம்மா! என் தலையை வருடினாள்.

நீ எனக்குச் சொல்லியிருக்கியே கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதன்னு. கடமைனா என்னம்மா?”

சொல்லியிருக்கேன்……”

ஸ்டாப் இட். அந்தக் கடமை அப்பன்ற அந்த ஆளுக்கும் பொருந்தும்தானே?” என் குரல் உயர்ந்தது.

“……………………”

உன்னால பதில் சொல்ல முடியாது. நான் சொல்றேன். எதிர்ல இருந்த சொந்தபந்தங்களோட சண்டை போடணுமான்னு அர்ச்சுனனுக்குக் கலக்கம்…..கிருஷ்ணர் என்னம்மா சொன்னார்? நீ சொல்லிக் கொடுத்ததுதான்….

 “…………………..நீ வளர்ந்துட்ட. ரொம்ப யோசிக்கிறன்னு தெரியுது

டோன்ட் டைவெர்ட் மீ. உனக்கு வேணா ஹஸ்பென்ட் அப்படின்ற கடமையோதத்துவமோஎன்னவேணா இருக்கலாம்…..ஆனா எனக்கு அப்படி இல்ல. வெல், நீ சொல்லிக் கொடுத்தியே, அதான், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னதை அப்ளை பண்ணட்டுமா? அந்த ஆள்கிட்ட? இது எனக்கும் அந்த ஆளுக்குமான போர்க்களம். யுத்தம்

வேண்டாம்டா கண்ணா. கோபம் வக்கிரத்துக்கும், பழி வாங்கவும் தூண்டிவிடும்டா. ப்ளீஸ். அதிலருந்து வெளில வந்துடு. இப்ப உனக்கு வேலை கிடைச்சிருக்குஉன் வாழ்க்கை தொடங்கற நேரம், நிறைய தூரம் போணும்டா ராஜா.”

ஸ்டாப் இட் மா.  உன்னை மாதிரி ஐ ஆம் நாட் புத்தா.”

“……………………”

அன்கண்டிஷன்ல் லவ் ன்றது எல்லாம் ஐடியாலஜி! ஹம்பக்! ஸாரி புத்தான்னும் சொன்னது தப்புதான். அவர் தன் கடமையைச் செய்யலை.….ஸாரிம்மா இந்த விஷயத்துல உன் போதனைகளை என் மனசு மீறுது

அம்மா கண்ணை மூடிக் கொண்டு பெருமூச்சு விட்டாள். “டீப்பா யோசிக்கற…....நான் சொல்ல வரதகொஞ்சம் லிசன் பண்ணு ராஜா….”

ஐ அம் அன் இண்டிபெண்டன்ட் அடல்ட் நௌ. எங்க அந்த ஆளு? எனக்கு அந்த ஆள நிக்க வைச்சுக் கேட்க வேண்டியது நிறைய இருக்கு. இவ்வளவு நேரம் சத்தமாதானே பேசிட்டிருக்கேன். வீட்ல இல்லையா? இல்லை…..போர்க்களத்துல எதிர்க்க தைரியமில்லாம புறமுதுகோடிட்டானா?” என் கண்கள் அந்த ஆளைத் தேடியதைப் பார்த்த அம்மா புரிந்துகொண்டாள்.

அவர் இப்ப உன் கூட சண்டை போடுற நிலைல இல்லை….படுக்கைல…”

ஹ்ஹ….இயற்கைக்கு முரணா போனா அது அப்படித்தான் பழி வாங்கும்ஆனா …..” என் குரல் தடுமாறியது. “அதுல என் அம்மாவும் சிக்கிக்கிட்டு” என்ற வார்த்தைகள் வெளியில் வரவில்லை. என் அம்மாவின் நலிந்த தேகம் என்னை உடைய வைத்தது.

இங்க பாருடா கண்ணா, கொஞ்ச நாள் பொறுத்துக்க….நான் உன் கூட வந்துருவேன்…”

என் மனம் விரக்தியடைந்தது.

என்ன சாப்பிடறடா ராஜா?”

ஹ்ஹ….இந்த வீட்டிலயா? நெவர்உன்ன கூட்டிட்டுப் போறதுக்குத்தான் வந்தேன். நீ வரமாட்டே. அந்த ஆளுக்கு உடம்பு சரியில்லைன்னு காரணம். உனக்கும் தான் ஹெல்த் பிரச்சனை. தெரியுது. ஆனா நீ சொல்ல மாட்டே. ஹஸ்பன்ட், கடமை, லொட்டு லொசுக்குன்னு தத்துவ டயலாக் விடுவ. உனக்கு மட்டும் ஏதாவதுனா…..நோட் திஸ் வேர்ட்ஸ்… “உனக்கு மட்டும்”.. உடனே எனக்குச் சொல்லு. அடுத்த நிமிஷம் இங்க நான் இருப்பேன்.”

அதற்கு மேல் பேசவும் முடியவில்லை. இருக்கவும் விருப்பமில்லை. கிளம்பிவிட்டேன் வேதனையுடன்.

சில நாட்களில் என் மாமா மகள் என் மனைவியானாள். மிகவும் எளிமையாகக் கோயிலில் நடந்த திருமணத்திற்கு அம்மா வந்தாள். அம்மாவுக்கு மகிழ்ச்சி. அந்த ஆளுக்கு மனமும் உடலும் சரியில்லை என்றாள். 

பின்னே அவன் போட்ட ஆட்டம் என்ன கொஞ்சமா? ஏற்கனவே மனநோயாளி அவன். கூடியிருக்கத்தானே செய்யும். அம்மா! ஸ்ட்ராங்க் அண்ட் அன்பிலீவபிள் வுமன்!

எனக்குத் திருமணம் ஆனதும் ஒரு பெண்ணுடனான உறவின் அர்த்தமும், புனிதமும் புரிந்தது. அந்த ஆளிடம் என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்? மனம் வலித்தது.

அடுத்த சில மாதங்களில் அந்த ஆள் செத்து ஒழிந்தான். நான் ஸ்பெஷல் தீபாவளி கொண்டாடினேன்! என் அம்மா இனி என்னோடு!

சாவிற்கு நான் செல்லவில்லை. அம்மாவைக் கூட்டிக் கொண்டு வரச் சென்றேன். அம்மா அந்த ஆளின் அறையில் அந்த நாற்காலியின் அருகில்! அதையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஆச்சரியம்! நான்தான் அம்மாவை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ கற்பனை செய்துகொண்டுவிட்டேனோ?

நான் காரியம் முடிஞ்சு …….” அம்மா சொல்லி முடித்திருக்கவில்லை

அந்த 2 தெனாவெட்டுகளும் வந்துவிட்டன. அந்த வீட்டில் எந்தப் பொருளிலும் சொத்திலும் அம்மாவுக்கோ எனக்கோ உரிமை கிடையாது என்றும் அந்த ஆளும் அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறான் என்றும் நாங்கள் ஏதோ பிச்சைக்கு நிற்பது போல் சொல்லி வெளியில் போகச் சொல்லிக் கை காட்டின.

இனியும் கடமை, அன்கண்டிஷனல் லவ், பொறுப்பு, கருமாதி அப்படினு எங்கிட்ட லெக்சர் கொடுக்காம கிளம்பு”. பல்லைக் கடித்துக் கொண்டு தழைவான குரலில் உறுமினேன். அம்மாவை இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு வந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் எனக்கு ஆசுவாசமாக இருந்தது. இத்தனை வருடங்கள் பிரிந்திருந்த அம்மா என்னோடு. நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

முதல் வேலையாக டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். நான் யூகித்ததுதான். கர்ப்பப்பை இத்யாதிகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு அறுவை சிகிச்சை.

அந்த வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே அந்த நாற்காலியைக் கேட்டு வாங்கி வரச் சொல்லிக் கொண்டே இருந்தாள். எனக்கு மீண்டும் அவமானப்பட விருப்பமில்லை. அந்த ஆள் ஒழிந்து இரு மாதங்களுக்கும் மேல் ஆகியிருந்த நிலையில், வீடு விற்கப்படும் செய்தியும் வர அந்த நாற்காலி போய்விடுமே என்ற கவலை என் அம்மாவிற்கு. அதை மட்டுமேனும்  நினைவாகக் கொண்டு வர வேண்டும் என்ற பிடிவாதம். அம்மாவிற்குப் பக்கவாத்தியம் என் மனைவி.

என்ன? எதுவுமே சொல்லாம கண்ணை மூடிட்டு உக்காந்திருக்கீங்க? சாமியார் மாதிரி! அப்ப போகப் போறதில்லை? அப்படித்தானே?  பிடிவாதம்!…..”

சித்தியின் பேத்திகளுக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மனைவியின் கேள்வி் என் மனதில் அம்மா அந்த நாற்காலியைத் தடவிப் பார்த்த அந்தக் காட்சியை விரித்தது. என் மனம் ஏற்கவில்லை என்றாலும் அம்மாவிற்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு விருட்டென்று எழுந்து கிளம்பிச் சென்றேன். ஏதோ சொல்ல நினைத்த என் மனைவி என்னை வியப்புடன் பார்த்தததெரிந்தது.

என்னைப் பார்த்ததுமே அந்தத் தெனாவெட்டுகள் வந்துவிட்டன. நாற்காலி பர்மா தேக்கு விலை உசந்தது என்று என்னென்னவோ சொன்னார்கள். வீட்டைப் பார்த்து வாங்க வந்தவரைக் கை காட்டினார்கள்.

நான் தயக்கத்துடனேயே நின்று கொண்டிருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர் என்னருகில் வந்தார்.  அவர் நான் யார் என்பதைப் புரிந்து கொண்டார் போலும். தன் பெயரைச் சொல்லி ஃபில்ம் ப்ரொட்யூஸர் என்று மட்டுமே அறிமுகம் செய்து கொண்டார்.

அம்மாவைக் காதலித்த அம்மாவின் மாமன் மகன்! நான் அவரையே ஏக்கத்துடன் உற்றுப் பார்த்தேன். கோபம் என்றால் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்று கேட்கும் அமைதி தவழும் அன்பான கண்கள். என் மனதில் உணர்ச்சிக் குவியல்கள். அம்மா இவருடன் வாழ்ந்திருந்தால்…..

தம்பி

சட்டென்று சுதாரித்துக் கொண்டு மெதுவாகத் தயக்கத்துடன் நாற்காலி பற்றிச் சொன்னதும், அவர் ஒரு நிமிடம் கண்களைச் சுருக்கி கேள்வியோடு என்னையே உற்றுப் பார்த்தார்.  

அவர் மனதில் ஓடிய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? அந்தப் பார்வை எதையோ சொல்வது போல இருந்தது. காதல் வலியா? அல்லது சொத்தில்லை என்றான பிறகும், ஆஃப்டர் ஆல் இந்த நாற்காலியை ஏன் அம்மா கேட்கிறாள்? கணவன் மீதான அன்பின் அடையாளமாகவா?

என்னால் அடையாளப்படுத்த முடியவில்லை

தான் பேசுவதாகச் சொல்லி என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

மறுநாள் மாலை வீட்டிற்கு அந்த நாற்காலி வந்தது. கூடவே ஒரு பெரிய தொகைக்கு செக். நான் அதிர்ந்து போனேன். செக்கைத் திருப்பிவிட்டேன்.

நாற்காலி என் கண்ணில் படும்படி இருந்தால் என் கோபம் அதிகமாகும் என்று அம்மா நினைத்திருக்க வேண்டும். என் மனநிலை அறிந்தவள். என்னையோ என் மனைவியையோ கூட உதவிக்கு அழைக்காமல் அதை உடனே தன் அறைக்குள் இழுத்துச் சென்று வைத்துவிட்டாள்.

பாருங்க அத்தையோட சென்டிமென்டல் ஃபீலிங்க். இதுக்குத்தான் நான் உங்ககிட்ட ஒவ்வொரு வாட்டியும் அடிச்சுக்கிட்டதுதன்னை நியாயப்படுத்திக் கொள்ள என் மனைவிக்குக் கைகொடுத்த தருணம்.

அம்மாவின் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரவில் இடையில் எழுந்து தாழில்லாமல் மூடியிருக்கும் அம்மாவின் அறைக் கதவை மெதுவாகத் திறந்து நன்றாகத் தூங்குகிறாளா என்று பார்ப்பது என் வழக்கமாக இருந்தது. அந்த வழக்கத்தில், அன்று நாற்காலி வந்த மகிழ்ச்சியில் அவள் மகிழ்ச்சியுடன் தூங்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டே மெல்ல எட்டிப் பார்த்த நான் அதிர்ந்துவிட்டேன்.

....அதை ஆத்தினாலும் மனசுக்கு அடில அது குளிர்ந்து போன எரிமலை போல உக்காந்துருக்கும்டா. ஒரு நாள் அது ட்ரிகர் ஆகி வெடிச்சுடும் கண்ணா.”

அம்மா எனக்குச் சொன்ன வரி. அவளுள் வெடித்துக் கொண்டிருந்தது.

ஆவேசத்துடன் மூச்சிரைக்கக் கத்தியால் நாற்காலி குஷனை குத்திக் குதறிக் கொண்டிருந்தாள், அம்மா! 



******************


கதை வெளியானது பற்றி எனக்கு மின்னஞ்சல் வழியாக இதழ் இணைப்புடன் வந்ததும், உடனே ஸ்ரீராமிற்கு அனுப்பினேன். அவர் என்னிடம் குழுவில் பகிர்ந்தீர்களா என்றார். நான், இல்லை. பகிரணுமா? எனக்கு என்னவோ போல் உள்ளது...வேண்டாமே என்றாலும் உடனே அவர் மிகுந்த சந்தோஷத்துடன் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுவில் பகிர அங்கு, பானுக்கா, கேஜிஜி, அப்பாதுரைஜி, வல்லிம்மா, நெல்லை, சுஜாதா, கீதாக்கா, ஸ்ரீராம் உட்பட கருத்து சொல்லியிருந்தார்கள். அதன் பின் எனக்குத் தனிப்பட்ட முறையில், இராயசெல்லப்பா சார், வெங்கட்ஜி மற்றும் இதுவரை எனக்குப் பரிச்சயமில்லாத பிரபல எழுத்தாளர் வளவ.துரையன் ஐயா அவர்களும் எனக்குத் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லியிருந்தார்கள். ஊக்கம் கொடுக்கும் கருத்துகள் சொன்ன எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

114 கருத்துகள்:

  1. கதை நன்று. கருத்து வழங்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை நெடியது. முழுமையாக வாசித்தேன்.

      கடைசி சில வரிகள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட வைத்தது. எல்லோரும் அவரவர் துணைக்கு என்ன செய்கிறோம் என யோசிக்க வைத்த கதை.

      மிகவும் பிடித்திருந்தது.

      நீக்கு
    2. வாங்க நெல்லை அண்ணே/தம்பி!!!!! நன்றி.

      //எல்லோரும் அவரவர் துணைக்கு என்ன செய்கிறோம் என யோசிக்க வைத்த கதை//

      இது நான் அடிக்கடி நினைக்கும் ஒன்று, vice versa வாகவும்.

      இந்த வரிக்கு ஒரு குடிகாரனை நினைத்துப் பாருங்க படித்தவனும் சரி படிக்காதவனும் சரி.....பெண்ணிற்கு அடியும் உதையும்....ஆனால் இரவில்?

      கேரளத்தில் இருந்தப்ப நான் பெண்களிடம் இருந்து அறிந்தவை பல.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. என்னில எப்பவுமே இருக்கும் பழக்கம், போஸ்ட் படிச்சிட்டு, என் மனதில் உள்ளதைப் படபடவென கொமெண்ட்டாகப் போட்டிடுவேன், பின்பு நேரமிருந்தால் தான் ஏனையோரின் கொமெண்ட்ஸ் படிப்பேன், அதுக்கும் பதில் போடுவேன் ஹா ஹா ஹா..

      ஏனெனில், போஸ்ட் படிச்சபின் நமக்கு ஒரு கருத்திருக்கும், சிலசமயம் கொமெண்ட்ஸ் ஐயும் படிச்சால் நம் கருத்தில் மாற்றம் வந்திடலாம், அப்படி வரக்கூடாது, என் சொந்தக் கருத்தே எப்பவும் எழுதோணும் என நினைப்பேன் அதனாலயே என் கொமெண்ட்ஸ் போட்டபின்னரேதான் ஏனையோரைப் படிப்பேன்/.

      சில சமயங்களில், சில கேள்விகள் கேட்டால், ஸ்ரீராம் சொல்லுவார் ஏன் அதிரா மேலே கொமெண்ட்ஸ் பார்க்கவில்லையா பதிலிருக்கே என, நான் பார்க்காமையாலதான் அப்படிக் கேட்டிருக்கிறேன் ஹா ஹா ஹா ஓகே .

      நீக்கு
  2. ஏன் அப்பாவைப் பிடிக்கலை (அவரின் கோப குணம்), அப்பாவின் மற்ற விஷயங்களுக்குள் செல்லாமல் சொல்லிச் சென்ற கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நெல்லை. கதையில் நீங்கள் ஒரு சில வரிகளை நீங்கள் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன். கோப குணம் என்பது சாதாரண கோபம் என்றால் பரவாயில்லை. அது எல்லாருக்கும் உள்ளதுதான். கோபப்பட்டாலும் குழந்தைகளைப் படிக்க வைப்பது வாங்கிக் கொடுப்பது அன்பு செலுத்துவது என்பது வேறு.

      இது அந்த மனிதருக்கு இருந்த அந்த வேட்கையினால் குழந்தைகள் கூடப் பிறக்கக் கூடாது தன் வேட்கைக்கு இடைஞ்சல்....இது ஒரு நோய்....அதனால் பாதிக்கப்படும் அம்மா பையன்....அம்மாவுக்கும் பையனுக்கும் இடையிலான உணர்வுகள்

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. அப்பா அவற்றை அறியாமல் செய்தாரா? தன் மன அழுத்தத்தால் கூட இருந்தவரையும் மன அழுத்தத்துக்கு உண்டாக்கிவிட்டாரே.

    கடைசி சில வரிகள் இல்லையென்றால் இதுவும் சாதாரண கதையே. அம்மாவின் மன அழுத்தத்தைக் காண்பித்ததுதான் கதையின் வெற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, இது ஒரு நோய்....அதீத வேட்கை என்பது ஒரு மன நோய். எல்லோருக்கும் இருக்கும் உணர்வுதான் ஆனால் அது வேறு. இது வேறு.

      இதில் அந்தப் பையனின் உணர்வுகளும் அதில் தான் கதையே. அம்மாவின் அன்பைப் பெற முடியாமல் தவிக்கும் பையன். அதைச் சாதாரணமாகக் கொள்ள முடியாது நெல்லை. அதுவும் குழந்தைகளைப் பாதிக்கும்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. கதையைப் படித்த எனக்கு அந்த நோய், மனப்பிறழ்வு லாம் நினைவுல் தங்கலை (அப்படீன்னாக்க அதை அழுத்தமா படிக்கிற வாசகனை உணர வைக்கலை). தன்னை ரொம்பவே ஆளுமைப்படுத்தி, அளவுக்கு மீறிய பொறுமையைக் கடைப்பிடிக்கவைத்து, தன்னை உபயோகித்துக்கொண்டு ஆனால் பையனைத் தவிக்கவிட்ட கணவனின் மீது மனதில் படிந்திருந்த ஆத்திரத்தை, நாற்காலிமீது தன் கோபத்தைக் காண்பிப்பதுமூலம் வாசகனை உணரச் செய்கிறாள் என்பது கதை எசன்ஸ்.

      சொன்னவிதம் நெடியது. கிளைமாக்ஸ் சூப்பர், கதையை அதுதான் அடுத்த லெவலைக்கு எடுத்துச் செல்கிறது.

      ஒரு வேளை பல மனைவிகள், கணவன் இறந்தபின், உறவினர்கள், அறையைச் சாத்திவிட்டு, கணவன் சடலத்தின் அருகில் நின்று அழுது தீர்த்துவிடு, பிறகு கதவைத் திறந்துகொண்டு வா, மற்றவர்கள் அவனுக்கு இறுதி மரியாதை செலுத்த, என்று வாய்ப்புக் கொடுத்தால் அவனை, (சடலத்தை) விளக்குமாறால் அடி பின்னி எடுத்துவிடுவார்களோ?

      நீக்கு
    3. (அப்படீன்னாக்க அதை அழுத்தமா படிக்கிற வாசகனை உணர வைக்கலை).

      நன்றி நெல்லை.

      கடைசி பத்தி.....சிரித்துவிட்டேன்!

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் @நெ தமிழன்... எந்த மனைவியும் பிடிக்காத ஒரு கணவரோடு வாழ்வதெனில், அங்கங்கு கொஞ்சமாவது தன் எரிச்சலை விதைபோட்டு விடுவார், ஆனா இக்கதையில் என்னைப்பொறுத்து, கணவனில் ஏதோ ஒன்று மனைவிக்கும் பிடிச்சிருக்கு.

      இன்னொன்று, தன் மகனை அனுப்பி வைத்த தாய், நினைத்திருந்தால் தானும் தன் உறவுகளோடு போயிருக்கலாம், மகனின் பார்வையில் அம்மா மட்டும்தான் தெரியும் ஆனா, அந்த தாயாக மனைவியாக இருக்கும் ப்ண்ணுக்கு, கணவனைப் பிரிந்தால் என்ன ஆகும்???
      ஏற்கனவே 2ம் திருமணம்தான், இதையும் ஒதுக்கினால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறிதானே, அந்த கணவன், தன் மகனைத்தானே அடித்தார், மனைவியை அடித்து வெளுத்ததாக எங்கும் சொல்லப்படவில்லையே, சந்தோசமாகத்தான் மனைவி இருந்தா, அதனாலதான் மகனிடம் புரியவைக்க முடியவில்லை அந்தத் தாயால்... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா முடியல்ல என்னால ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. அதிரா... கதையின் போக்கு அப்படி இல்லை. ஒருவேளை வேலைக்குச் செல்பவளாக இருந்திருந்தால் அந்தமாதிரி முடிவு எடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். தான் எதைச் செய்தாலும் அது தன் மகனைப் பாதிக்கும் என்பதால் அவள் ஜீரணித்துக்கொண்டு கணவனுடன் வாழ்ந்திருந்திருக்கலாம். இல்லை, மனைவியின் கடமை என்று எல்லோரும் நம்புகின்ற, 'பொறுமை, எதைச் செய்தாலும் கணவனை மீறாதது' என்பதைக் கடைபிடித்திருக்கலாம். அவன் எப்படி இருந்தாலும், நான் என் தர்மத்தை மீறவில்லை என்பது போல. இதனை மகனிடம் எந்தத் தாயும் புரியவைக்க முடியாது.

      ஒருவேளை மனைவியை அடித்தார் என்பதுபோல சம்பவங்கள் வந்திருந்தால் கதையே ட்ராக் மாறியிருந்திருக்கும், பையன் அதைப் பார்த்து அப்பாவை வெளுத்தெடுப்பதுபோல.

      நீக்கு
    6. அதிரா கதையையே மாத்திட்டீங்களே....

      இப்ப போல இல்லை அதிரா ஆனா இன்னமும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை வீட்டிலோ நட்புகளிடம் கூடச் சொல்லாமல் தனக்குள் வைத்துப் புழுங்கி அது மெனோ பாஸ் சமயத்தில் வெடித்து எவ்வளவு டிவோர்ஸ் கேஸ்கள் வருது தெரியுமா?

      நாம கேட்போம் என்ன இது இத்தனை வருஷங்களுக்கு அப்புறமாஅன்னு....இப்பலாம் கவுன்சலிங்க் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் கூட...இதோ இப்ப ஜஸ்ட் ஒரு 5 நிமிடம் முன்னால் நடைப்பயிற்சியில் இருந்தப்ப ஒரு அக்கா அழைத்திருந்தார். தன் பேரன் நன்றாகப் படித்து வந்தவன் இப்ப டக்குனு ரொம்ப டல்லா இருக்கன, மார்க்கும் வாங்குவதில்லை என்று. காரணம் எதுவும் சொல்ல மாட்டேன் எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்றான் நண்பர்களிடமும் கேட்டாச்சு என்றார். சிலப்போ வீட்டில் சொல்லவில்லை என்றாலும் மூன்றாவது மனிதராக இருக்கும் நல்ல கவுன்சலரிடம் சொல்ல நேரிடும் அவன் பருவ வயது வேறு. அடுத்து கல்லூரி செல்ல வேண்டிய வயஹ்டு. கவுசல்ர்ஸ் கரெக்ட்டா போட்டு எடுத்துவிடுவார்கள் என்று நான் பரிந்துரை செய்தேன். அவர்கள் சரி நல்ல ஐடியா என்று சொன்னார். அடுத்து உடனே மெசேஜ் வந்தது உனக்குத் தெரியுமே என்று தன் கணவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார். நான் இறைவனைத்தான் பிரார்த்திக்கிறேன் என்று.

      என்ன சொல்ல முடியும்....இந்தக்காலகட்டத்திலும் இப்படி.

      பருவ வயதுக் குழந்தைகளுக்கு நண்பர்கள் மத்தியிலும், பல்ளியிலும். வீட்டிலும் சில வீடுகளில் ப்ரெஷர் அதிகமாக இருப்பதால் மன அழுத்தங்களைச் சரியாகக் கவனிக்க வேண்டும்.

      அந்த இறைவன் தானே வழி காட்டுகிறார்...அதைப் பிடித்துக் கொள்ள முடியலைனா?

      ஸோ இப்பவும் இப்படி இருக்கிறார்கள்.

      இதில் அப்பையனின் எண்ணங்களில் விரிகிறது கதை, அதிரா

      நெல்லை சொல்லிருப்பதைப் பார்த்துவிட்ட்டேன் அதேதான்

      கீதா

      நீக்கு
    7. //good question//
      மனநலம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோரும் உணரணும்.ஆனால் தான் இளவயதில் பாதிக்கப்பட்டதால் தனது வக்கிரத்தை அப்பாவியிடம் காட்டுவது வேதனை.அதே சமயம் அந்த மகன் சூழலை விட்டு விலகியதால் /விலக்கப்பட்டதால் வாழ்வில் முன்னேற முடிந்தது .

      நீக்கு
    8. //அந்த கணவன், தன் மகனைத்தானே அடித்தார், மனைவியை அடித்து வெளுத்ததாக எங்கும் சொல்லப்படவில்லையே,//

      சாமீ ப்ளீஸ் save me .
      இப்போ நான் என்ன சொல்றது 
      கர்ர் ஸ்ங்கஎட்டொய்க்ஞ்ஜ்ட்ஸ்ம்னவ்\மண்,ஹ்ஹஜேப்பிங்வ்ச்வ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வ் 
      யாருக்கும் புரியாத பாஷையில் பூஸாரை திட்டிட்டேன் .இப்போதான் மனசுக்கு பாரம் குறைஞ்சது 

      நீக்கு
    9. ஏஞ்சல் உங்கள் கருத்தை அப்படியே ....கை தட்டி வரவேற்கிறேன்.

      உண்மைய சொல்லணும்னா மன நலம் பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லை, ஏஞ்சல். பள்ளி கல்லூரியிலேயே இது பற்றி எனக்கு விஷயம் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் நிறைய கதாபாத்திரங்களையும் சந்தித்திருக்கிறேன், சந்திக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.

      இரு விஷயங்கள் இங்கு சொல்லவில்லை அது வேறு வடிவில் இருப்பதால்....

      உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதை விட மன நலம் மிக மிக முக்கியம். ஏனா, அதனால் உடல் நலம் கூட பாதிக்கப்படும்.

      கீதா

      நீக்கு
  4. பெற்றவனால் ஒதுக்கப்பட்ட ஒரு ஆண் பிள்ளையின் பார்வையில் கதை விரிவது சிறப்பு. இந்தக் கதையை இந்தக்கோணத்தில் இருந்து பார்க்கும்போதுதான் அதன் பாதிப்பின் வீரியம் அதே அளவில் வாசகரைச் சென்றடையும். இயலாமையோடு கூடிய ஒரு பெண்ணின் வாழ்நாள் போராட்டமும் அது முற்றுப்பெறும் விதமும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. இந்தக் கதையை வெளியிட ஏன் இவ்வளவு தயக்கம் காட்டினீர்கள் என்று வியப்பாக உள்ளது.

    உடல், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த சிக்கல்களை மிக நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்டு அருமையான கதையாக்கியமைக்கும் கணையாழியில் வெளியானதற்கும் பாராட்டுகள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மில் பலர் மனைவியும் இன்னொரு ஆன்மாவே, நம்மைப் போல அதற்கும் அபிலாஷைகள், திறமைக் குறைவுகள் இருக்கும். திறமைக் குறைவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அபிலாஷைகளுக்குக் கொடுக்கிறோமா என யோசிக்க வைத்தது.

      கடமைக்குச் செய்யாமல், ஆத்மார்த்தமாக ஒரு பார்ட்னர் மற்றவருக்குச் செய்தாலே அதுவே ஓருவர் வாழ்ந்த முறை வெற்றிபெற்றது எனச் சொல்லிவிட முடியும் இல்லையா?

      நீக்கு
    2. கதைப் படிக்க நிறைய பொறுமை தேவைப்பட்டது என்பதையும் பதிவு செய்கிறேன்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கீதா மதிவாணன். கதையைப் புரிந்து கொண்ட பாராட்டு கருத்திற்கு மிக்க நன்றி.

      பெற்றவனால் அதுவும் வேட்கையினால் ஒதுக்கப்படுவது.

      தயக்கம் இல்லாமல் இருந்தது. எபியிலும் எங்கள் தளத்திலும் கதைகள், கட்டுரைகள் வந்து கொண்டிருந்ததுதான்...இடையில் அவ்வப்போது தொய்வு. காரணம் நிறைய நேரம் தேவைப்படுகிறது. அவ்வளவுதான்,

      நன்றி கீதா மதிவாணன்

      கீதா

      நீக்கு
    4. கடமைக்குச் செய்யாமல், ஆத்மார்த்தமாக ஒரு பார்ட்னர் மற்றவருக்குச் செய்தாலே அதுவே ஓருவர் வாழ்ந்த முறை வெற்றிபெற்றது எனச் சொல்லிவிட முடியும் இல்லையா?//

      100%, நெல்லை. இதை நான் அடிக்கடி இங்கும் கூட கருத்துகளில் சொல்லியிருக்கிறேன். மனைவியோ கணவனோ, ஒருவரை ஒருவர் முதலில் மதிக்க வேண்டும். திறமைகளை, அவரவர்களின் விருப்பங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கும் புரிதல் வேண்டும்.

      ஒருவருக்கொருவரான விருப்பங்கள் வேறுபடலாம் ஆனால் அது மதிக்கப்பட்டுவிட்டால் அப்போது எல்லாமே இனிக்கும்.

      //கதைப் படிக்க நிறைய பொறுமை தேவைப்பட்டது என்பதையும் பதிவு செய்கிறேன்.//

      ஹிஹிஹிஹி....கீதாவால் முடியாமல் இருக்கும் ஒன்றாக இருக்கு. கதை ஃப்ளோவில் வந்துவிடுகிறது. வைத்து எடிட் செய்யும் போதும் கூட முடியாமல் ஃப்ளோவில்.

      நாவலுக்கான கரு வாகவும் கொள்ளலாம்...அதை இப்படி எழுதினால்!!!!? ஹிஹிஹி

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    நீங்கள் எழுதிய முன்னுரையை படித்தேன். பத்திரிக்கையில் நீங்கள் எழுதிய கதை வெளிவந்தமைக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    கதையின் தலைப்பே ஈர்க்கிறது. இதோ.. கதையை படித்து விட்டு வருகிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா..

      வாசித்துவிட்டு வாருங்கள்

      கீதா

      நீக்கு
  7. ​நான் என்னுடைய எண்ணங்களை வெளிப்படையாகக் கூறுபவன் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே முதற்கண் தங்களுடைய மன்னிப்பை கோருகிறேன். அண்ணன் சொல்லும் அபிப்ராயம் என்று நினைத்து வாசிக்கவும்.

    1. கதை சிவாஜி, மோகன்லால் நடித்து வெளியான "ஒரு யாத்ராமொழி" என்ற மலையாளத் திரைப்படத்தை நினைவூட்டியது. மோகன்லால் வெறுக்கும் அவருடைய அப்பா சிவாஜி என்பது அறியாமலே அவரிடம் வேலை செய்வார். கடைசியில் உண்மை தெரிய வரும்.

    2. அப்பாவின் நாற்காலி என்ற தலைப்பை "நாற்காலி" என்று சுருக்கலாம். காரணம் வெறுப்புடன் அப்பா என்று சொல்லாமல் "அவன்" என்று குறிப்பிடும் போது தலைப்பில் "அப்பா" ஏன்?

    3. கதை நீண்டு விட்டது. கொஞ்சம் எடிட் செய்து சுருக்கியிருக்கலாம். சில இடங்களில் வசை கூடுதல்.
    4. கதையில் ஆங்கில வார்த்தைகள் கூடுதல். அவற்றை நீக்கலாம், அல்லது தமிழ் சொற்களை தேடி பிடித்து இடலாம்.

    5. "நவாப் நாற்காலி" போன்று இருக்கும் என்று நினைத்தேன். கதை வேறு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, நிச்சயமாகத் தவறாக நினைக்க மாட்டேன்.

      //"ஒரு யாத்ராமொழி"//

      ஓ சிவாஜியும் மோகன்லாலுமா....இந்தப் படம் இப்பதான் தெரிகிறது. குறித்துக் கொண்டேன். பார்க்க.

      தலைப்பில்...ம்ம்ம் நீங்க சொல்வது சரிதான்....அதனால்தான் ப்ராக்கெட்டில் கொடுத்தேன், ஜெ கே அண்ணா.

      கதை நீண்டு விட்டது. கொஞ்சம் எடிட் செய்து சுருக்கியிருக்கலாம். சில இடங்களில் வசை கூடுதல்.//

      ஹாஹாஹா....உண்மைதான் நீண்டு விட்டது கீதா முயற்சி செய்யும் ஒன்று சின்னதாக எழுத. அது ஃப்ளோவில் வந்துவிடுகிறது. நீண்டு விடுகிறது. வசைகள் கூடுதல்? ம்ம்ம்ம்ம்ம் மகனின் உச்சக்கட்ட வெறுப்பு. அது நான் நேரில் கண்ட ஒன்று. ஒரு உளவியல் கவுன்சலிங்கில், நான் செய்தது அல்ல....நான் உதவிய ஒருவருக்கு.

      அண்ணா இப்போதெல்லாம் உளவியலில் கையாளும் விதங்கள் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஒரு 20 / 25 வருடங்களுக்கு முன்னால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குப் போயிருந்தால் நிறைய பார்க்க நேரிடும்.

      உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 90 களில் நான் திருவனந்தபுரத்தில் இருந்தப்ப, ஒரு பெண்மணியைப் பற்றி அறிய நேர்ந்தது. கதையில் வரும் பாத்திரம். வேலைக்குச் செல்லாதவர். அப்போவே இக்கதையின் கரு மனதில் வந்துவிட்டது. ஆனால் எழுத முடியாத சூழல்.

      இக்கதையை பானுக்காவுக்கு அனுப்பிய போது, நான் சொல்லியிருக்கும் முந்தைய வரியைப் போன்ற ஒன்றை, அவர் சொன்னார், மங்கையர் மலரில் பெண்கள் ஆலோசனைகள் கேட்கும் பகுதியில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண்மணி கதையில் வருவது போல, அதாவது கணவர் இப்படி இருக்கிறார், வளரும் குழந்தைகளின் முன்னில் அவமானமாக இருக்கிறது .....அதனால் குழந்தைகளை என் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று. அதற்கு அப்போதைய ம ம ஆசிரியர், நீங்கள் வேலைக்குச் செல்வதால், கணவரைக் கையாள முடியலை என்றால் (கவுன்சலிங்க் போன்றவை) விவாகரத்து பெறலாமே என்று,

      ஆனால் இங்கு நிறைய பிரச்சனைகள் வெளியில் சொல்லத் தயங்கிய காலம் அது. இப்ப போல இல்லை.

      பானுக்கா இதைச் சொன்னப்ப எனக்குத் தோன்றியது நாம் எழுதிய கதை சரிதான் என்று.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. கதையில் ஆங்கில வார்த்தைகள் கூடுதல். அவற்றை நீக்கலாம், அல்லது தமிழ் சொற்களை தேடி பிடித்து இடலாம்.//

      அதுவும் ஃப்ளோவில் வந்ததுதான். இனி அதையும் தவிர்த்து தமிழில் தர முயற்சி செய்கிறேன். தகுந்த வார்த்தைகளை நீங்கள் சொல்வது போல் கண்டுபிடிக்க வேண்டும்

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    3. ஜெ கே அண்ணா இங்கு இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன். ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் போடும் போது அதன் தாக்கம், உணர்வுகள் மாறிவிடுமோ என்ற எண்ணம். சரியான வெளிப்பாடு இருக்க வேண்டும்.

      அது போல எடிட்டிங்கில் சில வரிகளை நீக்கினால் மனம் அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது காரணம் கதையின் உயிர்ப்பு பிரதானமான அந்த உணர்வு நீங்கிவிடுமோ என்ற எண்ணம்.

      நன்றி ஜெ கெ அண்ணா

      கீதா


      நீக்கு
    4. https://www.youtube.com/watch?v=tpnaUKL_TTs&pp=ygUo4K6S4K6w4K-BIOCur-CuvuCupOCvjeCusOCuvuCuruCviuCutOCuvw%3D%3D

      நீக்கு
    5. ஓ அந்தப் படத்தின் லிங்க் என்று தெரிகிறது, அண்ணா. எடுத்துக் கொண்டுவிட்டேன். அடுத்த வாரம் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். இந்த வாரம் கொஞ்சம் பிஸி!!!!

      நன்றி அண்ணா.

      கீதா

      நீக்கு
    6. ஆவ்வ்வ்வ் கீழே நான் எழுதியதைத்தான் ஜேகே ஐயாவும் சொல்லியிருக்கிறார், உண்மைதான் கீதா, கதையை சுவாரஷ்யமாகப் படிக்கும்போது, ஆங்கில வார்த்தை ஒருகணம் நிறுத்திவிடுகிறது அச்சுவாரஷ்யத்தை, அல்லது நேரடியாகவே ஆங்கிலத்திலேயே எழுதினால் பொருந்தக்கூடும் இது தமிங்கிலிஸ் என்பதால டிஸ்ரேப் ஆகிடுது ஹா ஹா ஹா...

      நீக்கு
    7. ஆங்கிலத்தில் சிலதை எழுதினேன் சிலது தங்கிலிஷில் வந்துவிட்டது மாற்ற நினைத்து மாற்றாமல் விட்டுவிட்டேன்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    கதை அருமையாக இருக்கிறது சகோதரி. இதை வெளியிட நீங்கள் ஏன் தயங்கினீர்கள் என புரியவில்லை. அம்மாவும், பையனுக்குமான பாசம் வரிகளில் பிண்ணி பிணைந்துள்ளது. இப்படியும் ஒரு குடும்பத்தலைவன் இருப்பானா என்ற கேள்விக்கு நீங்கள் எழுதிய கதையின் தலைவனே ஒரு சாட்சி. படித்தவுடன் நானும் இது போல் நேரில் பார்த்த ஒரு உறவின் கதை நினைவுக்கு வருகிறது. அதில் அம்மாவை அவள் பெற்ற ஒரே பையனும், தன் அப்பாவுடன் அலட்சியபடுத்தி அவள் மனம் கடைசிவரை பொங்காத எரிமலையாக.... என்ன சொல்வது? இதெல்லாம் ஒரு காலக்கொடுமைதான். சிலருக்கு (சிலருக்கென நான் சுலபமாக சொல்லி விடலாம். எண்ணிக்கையில் எத்தனைப் பேருக்கோ?) இப்படி அமைந்து விடுகிறது.

    நல்ல அழுத்தமான வரிகளை கொண்ட கதை. நல்ல புரிந்துணரவும், படித்தவருமான அந்த தாய் தன் மகனுக்காவும், அவள் குடும்பத்தினர் அவள் கணவனிடமிருந்து பெறும் உதவிக்காகவும் அந்த கணவனை பொறுத்துக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் விவரித்த விதம் அருமை. ஒவ்வொரு விதத்தில் இப்படி வாழ்வில் அடிபட்ட பெண்களிடம் இருக்கும் மன வேதனையை கடைசி வரிகளில் சூப்பராக அதை பதித்து விட்டீர்கள்.

    அதுநாள் வரை கணவனின் மேலிருந்த கோபத்தை, அவர் அமர்ந்திருந்த, அதுநாள் வரை பிரியமுடன் அவரை சுமந்திருந்த அந்த நாற்காலியின் மெத்தையும் ஒரு வடிகாலாக்கி விட்டது. அந்த குஷனுக்கும், நாற்காலிக்கும் அவர் பேரில், அவர் குணங்களின் மேல் வெறுப்பிருந்திருந்தால், அது அன்றே அவரை சுமக்க ஏற்காமல் மறுத்திருக்கும். ஆனால், ஜடப்பொருளாக இருந்தும், அந்த அம்மாவின் மனதை புரிந்துக் கொண்டு காத்திருக்கின்றது.

    நல்ல கதை.இக்கதையை அருமையாக எழுதிய தங்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள். ஒரு பிரபலமான பத்திரிக்கையில் இது வெளிவந்தமைக்கும், அதை வெளியிட தங்களுக்கு ஆலோசனை தந்து உதவிய நம் நட்புக்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கணவனின் மேலிருந்த கோபத்தை," அவளின்.." என்ற ஒரு வார்த்தை தட்டச்சு பிழையால் காணாமல் போய் விட்டது. எனவே இப்படி திருத்தி படிக்கவும்.

      நீக்கு
    2. இண்டைக்கு நான் முந்திக்கொள்கிறேன்.. கமலாக்கா நலம்தானே??? வழமையாக கமலாக்காதான் முதலில் என்னை நலம் விசாரிப்பா ஹா ஹா ஹா மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)))

      நீக்கு
    3. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா சகோதரி. நானும் நலந்தான். . நான் இப்போதுதான் மீண்டும் தளத்திற்குள் பிரேவசமாகிறேன். நான் கண்டு கொண்டால், விசாரித்து விடுவேன். நீங்கள் இன்று முந்திக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம். உங்களுடைய உற்சாக விசாரிப்பில் என் நலன்கள் அனைத்தும் முழு சந்தோஷ திருப்தியடைந்து விட்டன நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலாக்கா கதையை சரியாகப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் நேரில் ஒரு உதாரணம் சொல்லிருக்கீங்க பாருங்கல்.

      இப்படிப் பல இருக்காங்க கமலாக்கா. நான் அறிந்த ஒரு பெண்மணி என்னை மிகவும் பாதித்தவர் படித்தவர்தான்...ஆனால் இந்தக் கடமை லொட்டு லொசுக்கு பாவம் புண்ணியம், என்று தன்னை வருத்திக் கொள்ளும் வகை....அப்போதெல்லாம் வெளியில் சொல்ல முடியாத சூழல் இல்லையா,,,

      நல்ல கதை.இக்கதையை அருமையாக எழுதிய தங்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள். ஒரு பிரபலமான பத்திரிக்கையில் இது வெளிவந்தமைக்கும்,//

      நன்றி கமலாக்கா. ஆமாம் ஆலோசனை தந்த நட்புகளுக்கு நன்றி நான் சொல்ல வேண்டும் ...

      தயக்கத்தின் காரணம் அதான் புலம்பிட்டேனே ஹாஹாஹா

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  9. ஹா ஹா ஹா கீத்ஸ் கதை என்றதும் நானே நினைச்சிட்டேன் கொஞ்சம் பெரிசாக இருக்குமே நேரம் வேண்டும் பொறுமையாகப் படிக்கோணும் எப்படியும் பெரியதாகத்தான் இருக்குமென...

    அப்படியே படிச்சுக் கொண்டு கீழே வந்தால்...ஹா ஹா ஹா

    //அப்பாவின்) நாற்காலி
    (சற்றே பெரிய சிறுகதை )///

    ///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா வாங்க...ட்ரம்ப் அங்கிள் செக்ரட்டரியாக இருந்து கொண்டு அவரை பத்தி வீடியோ போடுவீங்கன்னு பார்த்தா மாவு மெஷின் எல்லாம் போடறீங்க. அது சரி ட்ரம்ப் அங்கிள் அந்த மாவு மெஷினை பார்த்தாரோ!!!?

      கீதா

      நீக்கு
    2. ஓஹ் உங்களுக்கு விஷயம் தெரியாதா கீதா :)டிரம்ப் அங்கிள் அந்த மெஷினை பார்த்து க்ரீன்லாந்துக்கு  100 அனுப்ப முன்கூட்டியே ஓர்டர்  குடுத்துட்டாரு:)

      நீக்கு
    3. அல்லோ உங்களிருவருக்கும் ட்றம்ப் அங்கிளைப் பார்த்தால் ஒரு கொமெடியன்போல தெரியுதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:)) அவர் எவ்ளோ ஆள் தெரியுமோ?... குட்டி சிறீலங்காவுக்கே ரக்ஸ்[கரீட்டுத்தானே:)) போட்டிருக்கிறார்:)))

      நீக்கு
    4. ஹாஹாஹா ஏஞ்சல் அப்ப வரி என்ன எப்படி போட்டிருப்பார்ன்னு யோசிக்கிறேன்!!!!!

      நான் நினைச்சு பூஸாரை கலாய்க்க வந்தது....ட்ரம்ப் அங்கிள் வரி போட்டிருக்கிறாரே....அப்ப இதைப் பார்த்துவிட்டு அவங்க ஊர்லயே தயாரிக்க patent வாங்கிடுவாரோன்னு!!!!!! பூஸார் அவருக்குக் காட்டியதால கமிஷன் ஏதாச்சும் உண்டோன்னு!!

      கீதா

      நீக்கு
    5. ஹாஹாஹா அதிரா அதைத்தான் சொல்றேன்.....ஆனா பாருங்க....ரஸ்க் எல்லாம் கொடுத்திருக்கார் பாருங்க? இனாமா கொடுத்தாரா இல்லை அதற்கும் வரியா?

      காமெடி செய்தாலும் ஆனா அவருடைய இந்த பாலிஸி நல்லதாகவும் தோணுது. அவங்க ஊருக்குள்ளேயே தயாரித்தால் அவர்களுடைய பொருளாதாரம் தன்னிறைவு பெற்றதாகவும், உள்ளூர்க்காரங்களுக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும்னு.

      வர்த்தகத்தில் சொல்லப்படும் symbiosis இவருடைய கொள்கையில் யோசிக்கவும் வைக்கிறது.

      உளவியலில் அதற்குத் தனியாக ஒரு பாடமே உண்டு

      கீதா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கீதா தப்பு நடந்திட்டுது நான் சொல்ல வந்தது வரியைத்தான், அது உடனே தமிழ் வார்த்தை வரவில்லை அதனால tax ஐத்தான் ரக்ஸ் என்றேன் ஹையோ ஹையோ.. விடுங்கோ என்னை விடுங்கோ நான் ஓடிடுறேன்:)))

      நீக்கு
  10. முழுவதும் படித்து விட்டேன், முதலில் கீதாவுக்கு.. கீதா[க்கா] (((நெ தமிழன் முறையில ஜொன்னேனாக்கும்:)))) வாழ்த்துக்கள்.

    மிக அழகாக எழுதிட்டீங்க, "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி ஒன்று பார்த்ததைப்போல இருக்குது ஹா ஹா ஹா.

    என்னுடைய ஒரு சிறு கருத்து, உங்கள் பல கதைகள் இங்கு வாசித்திருக்கிறேன் கீதா... கதையில் முற்றிலும் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் இன்னும் மெருகேறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா...எப்படி வேணாலும் சொல்லிக்கோங்க!!!

      எல்லாக் கதைகளிலும் நான் பயன்படுத்துவதில்லை அதிரா...அது இக்கதையில் ஒரு ஃப்ளோவில் வந்தவை அது. தமிழ் வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்துப் போட்டால் அவை அங்கு என்ன உணர்வுகளைக் கொண்டு வரும் என்று ஓசிக்கிறேன்.

      உங்கள் கருத்தை மனதில் எடுத்துக் கொண்டேன் அதிரா.

      மிச்ச கருத்துகளுக்கு அப்புறம் வருகிறேன். வேலைப் பளு.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. அதிரா உங்கள் கருத்தைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், தமிழகத்தில் நடக்கும் இந்தக் கதையை இயற்கையாக இந்த மாதிரி வீடுகளில் நடப்பதை எழுதியுள்ளார். உங்களுக்கு (இலங்கைத் தமிழர்களுக்கு, அந்த மண்ணின் மைந்தர்களுக்கு) ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவதுதான் வழக்கம். எல்லாவற்றிர்க்கும் சரியான தமிழ் வார்த்தைகள் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறது, மக்களிடையே பேசப்படுகிறது. புதிய ஒரு பொருள் வந்தாலும் (செல்ஃபோன், கார், மின்சார ஸ்கூட்டர் என்று) உடனே அதற்கான தமிழ்ச்சொல்லும் உங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஆனால் தமிழகத்தில் அப்படி அல்ல. முன்னமே எழுதியிருக்கிறேன். பசங்கள் சின்னவர்களாக இருந்தபோது, விடுமுறை நாட்களில், 'இப்போதிலிருந்து தமிழ்ல பேசணும், வேறு மொழி யார் முதலில் உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்றெல்லாம் ஆரம்பித்து பல நேரங்களில் நானே தடுமாறியிருக்கிறேன், பெண் பெரும்பாலும் வெற்றிபெறுவாள். முழுத் தமிழில் பேசும் குடும்பங்கள், மனிதர்கள் தமிழகத்தில் அரிதிலும் அரிது. அப்படிப் பேசினால், ஒரு மாதிரிப் பார்ப்பார்கள், வேற்று கிரக மனிதனைப் பார்ப்பது போல (உதாரணம் Bun, Breadக்கு நீங்க பாண் என்று உபயோகிப்பீங்க, நாங்க பிரெட், பன் என்றுதான் உபயோகிக்கிறோம். சோப், பஸ், லீவு விட்டாச்சு, ஃப்ளைட்ல போறோம், பிளாஸ்டிக், டீ, என்பதெல்லாம் வழக்கமான தமிழ்ச் சொற்கள் ஹா ஹா)

      நீக்கு
    3. நெல்லையின் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன் அதிரா..

      பல குடும்பங்களில் அப்படித்தான்....அதுஇயல்பான நடையில் அதுவும் தமிழ்ல திட்டறதை விட ஆங்கிலத்தில்!!!!!!!!!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    4. ஹலோ பூஸார் நாங்க posh ஆ ஆங்கிலத்தில் தான் திட்டுவோம்.நாங்க சிறு பிள்ளையா இருந்தப்போ ,bloody idiot ,swine ,moron ,bullshit ,stupid இதெல்லாம் காதில் விழும் :) இதெல்லாம் தமிழில் எழுதுனா எப்படி வரும் புரியவில்லை 

      நீக்கு
    5. இப்போ இலங்கை மக்கள்கூட மாறிட்டினம், எல்லாத்துக்கும் காரணம், இண்டநெட், படம், நாடகம் பார்த்துத்தான். முந்தி எங்களுக்கு டிவி பார்க்கக்கூட நேரமிருக்காது, அயலவர்கள் சொந்த பந்தங்கள் கண்முன்னே வந்துபோவார்கள் அப்போ அவர்களுடனேயே பேசிப் பொழுதுபோகும்.

      ஆனா இப்போ நாங்கள் எப்பவும் இந்தியத் தமிழ் நிகழ்ச்சிகள் யூ ரியூப்புக்கள்தான் முக்கால்வாசியும் பார்க்கிறோம் அதனால உண்மையில என் தமிழ்கூட அப்பப்ப இந்தியத் தமிழ் கலப்படமாகிட்டுது...

      சீக்கிரம் எனச் சொல்லவே மாட்டோம், கெதியா வாங்கோ என்போம் இப்போ என் வாயில சீக்கிரமும் எட்டிப் பார்க்குது ஹா ஹா ஹா.. அதுபோல தமிழும் ஆங்கிலக் கலப்படமாகிட்டுது..

      இருப்பினும் எழுதும்போது இலங்கைத்தமிழ்தான் ஓட்டமெட்டிக்கா வருது.

      எங்கட சின்ன்வருக்கு தமிழ் தெரியும்.. விளங்கும், கொஞ்சம் கொஞ்சம்தான் கதைப்பார், ஆனா கஸ்டப்பட்டுக் கதைப்பார். சமீபத்தில வீட்டுக்கு வந்த ஒரு சென்னைத் தமிழ் பிரெண்ட் சொன்னார்.... "இலங்கைத் தமிழர்கள்தான் தமிழைப் பேணி வளர்க்கிறீங்கள் என நினைக்கிறோம், ஆனா ஏன் உங்கட மகனுக்கு தமிழ் நன்கு தெரியவில்லை" என..

      அது உண்மைதான் என்ன பண்ண முடியும், ஆனா அடிக்கடி ஊருக்குப் போய் வந்தால் வந்துவிடும்.

      ஊரில் இப்பவும் சுத்தத் தமிழில பேசுவினம், கேட்க ஆசையாக இருக்கும்.. பள்ளிக்கூடம் விடுமுறை விட்டாச்சு, சவுக்காரம், கடிகாரம் அல்லது மணிக்கூடு, இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

      நீக்கு
    6. ஆனா இப்போ நாங்கள் எப்பவும் இந்தியத் தமிழ் நிகழ்ச்சிகள் யூ ரியூப்புக்கள்தான் முக்கால்வாசியும் பார்க்கிறோம் அதனால உண்மையில என் தமிழ்கூட அப்பப்ப இந்தியத் தமிழ் கலப்படமாகிட்டுது...//

      ஹாஹாஹா பூஸார், நாங்களே திணறுகிறோம், நம்ம தமிழ் மறந்துவிடுமோ என்று ஆனால் என்னவோ சொல்றாங்களே இப்ப trendy னு அதுக்காகவும், இப்போதைய கதைகள் எழுதினால் இயல்பாக இருக்க வேண்டும் என்று சிலவற்றைத்தெரிந்து கொள்ள நேரிடுகிறது. ஆனால் சிலது கேவலமாக இருக்கு. உதாரணம் இப்ப புதுசா சொல்றது "சம்பவம்" அவர் வைச்சு செய்த சம்பவம் இப்படி எல்லாம் எங்கிருந்து யார் தொடங்குகிறார்கள் என்று தெரியலைப்பா.

      நிஜமாகவே எனக்கு இலங்கைத் தமிழ் கேட்க ரொம்பப் பிடிக்கும் வாசிக்கவும்.

      சமீபத்தில் இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட கதையை வாசிக்க நேர்ந்தது . நல்ல கதை. ரசித்து வாசித்தேன்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  11. கதை முடியும்வரை சந்தேகமாகவே இருந்தது, அவர் சொந்தத் தந்தையா அல்லது தாயின் 2 வது கணவரோ என ஹா ஹா ஹா. இப்படியும் பல ஜென்மங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்,
    ஆனா அதுக்கு மனைவியும் உடந்தையாக இருப்பதுதான் ஆச்சரியம், அது ஆதிகாலத்திலே சொல்லிச் சொல்லி வளர்த்துவிட்டார்களே.. கல்லானாலும்... புல்லானாலும்... என...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் இருக்கே அதிரா கணவனுக்கு இரண்டாவது மனைவி என்று.

      பெண்களை வளர்ப்பதில்தான் இருக்கு அதிரா......பல பெரிய பெரிய வேண்டாத விஷயங்கள் சின்ன மூளையில் ஆணி அடித்தாப்ல பதிய வைக்கிறாங்க. அது பல பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கு

      நீங்க சொன்னதே தான்

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. கீதா கணவருக்கு 2 வது மனைவி புரிந்தது, நான் சொன்னது, இந்த மகனின் தந்தை வேறு, இப்போதிருப்பவர் 2 வது தந்தையோ என நினைச்சேன்... அம்மாவின் கணவர் எனச் சொல்வதால்...

      இங்கு வெள்ளைகள் அப்படித்தானே சொல்வார்கள்.

      நீக்கு
    3. அம்மாவின் கணவர்னு சொல்றதுக்குக் காரணம் அவனுக்குச் சொல்ல விருப்பமில்லை காரணங்களை ஒவ்வொரு வலியாக அவன் பெற்றதைச் சொல்லிக் கடைசியில் வெறுப்பு எப்படி வருகிறது என்பதற்கான காரணமும் இருக்கு....பூஸார்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  12. குடும்பத்தைப் பார்க்க பணம் வேண்டும் என்பதற்காகவே பல பெண்கள் பொறுத்துப் போகிறார்கள், ஆனா இக்கதையில் அந்த பெண்ணாக வரும் தாயும் படித்திருக்கிறார், அப்போ எதுக்காக பொறுத்துப் போனார்???...

    ஏதோ ஒரு வகையில் அந்த அம்மாவுக்கு கணவரிடம் என்னமோ ஒன்று பிடித்திருக்கிறது, அதனாலதான் பிரிய முடியவில்லைப்போலும் என யோசிக்கையில்... முடிவில் எதற்காக கதிரையைக் குத்துகிறா??? ஹா ஹா ஹா... என்னுடைய பார்வையில், அந்த அம்மா அக்கதியையைக் குத்திக் கிழிப்பது கோபத்தினால் அல்ல....

    கணவரின் பிரிவைத்தாங்க முடியாமல், கவலையில் , அவரை எப்பவும் தன்மேல தாங்கி வச்சிருந்த கதிரையைத் திட்டுகிறாவோ.. எதற்காக என் கணவரைக் கொன்றாய் என... இப்படித்தான் எனக்கு எண்ண வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இங்கு பல குடும்பங்களில் பெண்கள் பொறுமையுடன் தான் போகிறார்கள்

      ஏன் படித்த பெண், கணவன் குடித்தாலும் வாழ்வதில்லையா? அடித்தாலும் வாழ்வதில்லையா?

      அப்படி இன்னும் பலர் இருக்கின்றனர். இப்போதைய தலைமுறை வேறு

      கதையையே மாத்திட்டீங்களே அதிரா ஹாஹாஹாஹா...

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. //கணவரின் பிரிவைத்தாங்க முடியாமல், கவலையில் , அவரை எப்பவும் தன்மேல தாங்கி வச்சிருந்த கதிரையைத் திட்டுகிறாவோ.. எதற்காக என் கணவரைக் கொன்றாய் என... இப்படித்தான் எனக்கு எண்ண வருகிறது...//

      என்னால முடியல .இங்கிருக்கிற யாராச்சும் என்னை அப்டியே கடலில் தள்ளி விட்டுருங்க ப்ளீஸ் ...ஊருக்கெல்லாம் ஒரு வழி இந்த குண்டு பூனைக்கு மட்டும் எப்படி இப்படிலாம் யோசிக்க தோணுது 

      நீக்கு
    3. நான் நேத்து தேம்ஸ் கிட்ட கொண்டு போலாம்னு நினைச்சேன்....சரி பாவம்....தேம்ஸ் நதி....அதான் விட்டுட்டேன்!

      கீதா

      நீக்கு
  13. மகன் பாவம்தான், சின்ன வயசிலேயே பெற்றோர் இருந்தும் இல்லாதவர்போல வளர்ந்தது, இருப்பினும் நல்ல உறவுகள் இருந்தமையால நன்றாக வளர்ந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

    இதில இன்னுமொன்றிருக்கு, கதையில, அத்தந்தை இறந்ததற்குப் பதில், தாய் இறந்திருந்தால்??? என்ன ஆகியிருக்கும்... மகனுக்கு தான் சாகும்வரை அம்மாவோடு சேர முடியவில்லையே எனும் கவலை இருந்திருக்குமெல்லோ...

    மகனின், தாய் மீதான பாசம்தான் கடசியிலாவது ஒன்றிணைச்சு விட்டிருக்கிறது... கடவுள் எப்பவும் நல்லதைத்தான் செய்வார்...

    அழகாக மனதைத் தொட்ட கதையாக இருக்குது கீதா, பின்பு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில இன்னுமொன்றிருக்கு, கதையில, அத்தந்தை இறந்ததற்குப் பதில், தாய் இறந்திருந்தால்??? என்ன ஆகியிருக்கும்... மகனுக்கு தான் சாகும்வரை அம்மாவோடு சேர முடியவில்லையே எனும் கவலை இருந்திருக்குமெல்லோ...//

      கதை வேற ட்ராக் அதிரா....நான் கதையில் சொல்லியிருக்கும் கருத்தே என்ன வலியைச் சொல்ல நினைத்தேனோ அதுவே அடி வாங்கிவிடுகிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அது வேறு கதையாக எழுதலாம்.,

      //அழகாக மனதைத் தொட்ட கதையாக இருக்குது கீதா, பின்பு வருகிறேன்.//

      நன்றி அதிரா

      நீக்கு
    2. இதில் இன்னொன்றும் சொல்ல விட்டுப் போச்சு. அதிரா நீங்க கேட்டதுக்கு படித்த பெண் என்று..

      கதையில் சொல்லியிருக்கேன் பாருங்க முதல் மனைவி ஓடிப் போய்விடுகிறாள் தன் குழந்தைகளைக் கூட அழைத்துச் செல்லாமல்....தப்பித்தோம் பிழைத்தோம் என்று . மகன் அதைத்தான் நினைத்துப் பார்க்கிறான் அந்தப் பெண்மணிக்கு இருந்த தைரியம் கூட படித்த பெண்மணியான என் அம்மாவுக்கு இல்லையே என்று.

      இதில் உண்மையில் நான் அறிந்த ஒரு பெண்மணியைச் சொல்கிறேன். மிக மிகத் திறமையான பாடகி. கர்நாடக இசையில் பெரிய அளவில் வந்திருக்க வேண்டியவர். அவருடைய சூழல் இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப்படுகிறார். அவர் கச்சேரியோ அல்லது வெளியிலோ பாடக் கூடாத நிலை. இப்போது அவருக்கு 82 வயது....அவர் கர்நாடக இசை உலகில் இருந்திருந்தால் இன்றைய புகழ்பெற்ற பெண்மணிகளுக்கு நிகராக இருந்திருப்பார். இதை எல்லாம் சொல்ல சிறு கதை பத்தாது எனக்கு நாவல் தான் எழுத வேண்டும். பெண்களின் வலி ஆண்களின் வேதனைகள் என்று பல விஷ்யங்கள் இருக்கின்றன.

      நேரம் தான் ஹிஹிஹி ஆக உள்ளது

      கீதா

      நீக்கு
    3. இப்படித்தானே அமிர்தாப்பச்சனின் பழைய ஹிந்திப்படம் ஒன்று வந்துதே.. பெயர் மறந்திட்டேன்.. பார்த்திருக்கிறேன்...

      இக்கதையில நான் நினைப்பது என்னவெனில்.. கணவரை விட்டுவிட்டு மகனோடு வெளியே வராமல் கணவரோடயே அப்பெண் இருந்தமைக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே.. இப்படி யோசித்தேன்... ஒரு கதையை எந்தக் கோணத்திலும் திசை திருப்பி விடலாமெல்லோ கீதா ஹா ஹா ஹா...

      நீக்கு
  14. கதை சிறப்பு
    கதையில் வசனங்களை விட நினைவோட்டங்களே அதிகம்.

    இறுதியில் ஃப்ரட்யூசர் வந்தது அவர் யாரென்று உணர முடிந்ததும் மனதை நெகிழ்த்தி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதியில் ஃப்ரட்யூசர் வந்தது அவர் யாரென்று உணர முடிந்ததும் மனதை நெகிழ்த்தி விட்டது.//

      அட! பல பாயின்ட்களில் இதுவும் குறிப்பிட்டதுக்கு நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  15. எல்லாருக்கும்  ஹாய் .  ஸ்ரீராமுக்கு மட்டும் நான் ஹாய் சொல்ல மாட்டேன் .தேடி விசாரித்த கமலாக்கா கோமதிக்கா  நெல்லை தமிழனுக்கு நன்றீஸ்  :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல் சகோதரி

      வாருங்கள். எப்படியிருக்கிறீர்கள்.? நலமா? நீங்கள் பதிவுலகம் வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. முன்பெல்லாம் அதிராவுடன் நீங்கள், இல்லை, உங்களுடன் அதிரா( தப்பாக இல்லாமல் கரெக்டாக சொல்லி விட்டேனா..! ஹா ஹா ஹா ) என தவறாது வந்து கொண்டிருந்தீர்கள்? இப்போதெல்லாம், நீங்கள் இருவரும் வராதது வலையுலகம் சோர்ந்து இருக்கிறது. இன்று உங்களையும் இங்கு கண்டதில் மிகவும் மகிழ்வடைகிறேன். தொடர்ந்து இதுபோல் இருவரும் வருகை தாருங்கள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ///தேடி விசாரித்த கமலாக்கா கோமதிக்கா நெல்லை தமிழனுக்கு நன்றீஸ் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதைச் சொன்ன அதிராவுக்கு ஒரு நன்றி ஜொள்ளாவோ பாருங்கோ சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு:).. ஊரே உறங்கிப்போய் இருக்கே ஆரையும் காணம்... இப்பூடித்தான் இப்போ புளொக்கெல்லாம் இருக்குதோ...

      நீக்கு
    3. Angel... நானும் டூ .

      என் கதையை படிக்க வராததற்கு நானும் டூ!

      என் கதையை ஏஞ்சலுக்கு சிபாரிசு செய்யாததற்கு அதிராவுடனும் நான் டூ!!!

      நீக்கு
    4. என்னடா இது.. வந்த வுடனே புதிர். (தமிழகத்தில் திருமணமா இல்லை அங்கேயா?) யாருக்கு கல்யாணம்..? ஏன் ஸ்ரீ ராம் இருவருடனும் டூ விடனும். "ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே." நானும் பேசாமே சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு: என அதிரா மாதிரி ஒதுங்கி போயிடத்தான் வேண்டு்ம் போல இருக்கு. தலையிலே இருக்கிற நாலு முடியும் பிச்சிக்கிட்டு போயிடும்... ஹா ஹா ஹா

      நீக்கு
    5. கமலாக்கா மேலே கொஞ்சம் போய்ப் பாருங்க புரியும்!!!! எதுக்கு டூ என்று!!!

      கீதா

      நீக்கு
    6. கமலாக்கா நானும் அதிராவும் இன்னமும் யூத்ஸ் :)

      நீக்கு
    7. ஓ. கே. வாழ்க.. என்றும் இளஞ்சிட்டுகளாய்...சரி. சரி திருமணம் தங்களின் மகன், மகளுக்கா..!? என் வாழ்த்துகளும் என்றும்.

      நீக்கு
    8. //
      ஸ்ரீராம்.8 ஏப்ரல், 2025 அன்று 4:48 PM
      Angel... நானும் டூ .

      என் கதையை படிக்க வராததற்கு நானும் டூ!

      என் கதையை ஏஞ்சலுக்கு சிபாரிசு செய்யாததற்கு அதிராவுடனும் நான் டூ!!!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஸ்ரீராமுக்கு டுவிஸ்ட் வைக்கும் கதைகள் தான் பிடிக்கும் எனத் தெரியும் எனக்கு அதுக்காக இப்பூடி டுவிஸ்ட் வச்சு என் எழுத்தையே மாத்திவிட்டிட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா உங்கட திறமையை மெச்சுறேன் ஸ்ரீராம்..:)

      நீக்கு
    9. ஹையோ கமலாக்கா நீங்க வேற:))...

      கீழே எழுதிட்டேன், இருந்தாலும் உங்களுக்காக திரும்ப.... ஸ்ரீராம் முதல் தடவையாக மாமனார் ஆனாரெல்லோ:).. அது எங்களிருவருக்கும் தெரியாது... நாம் புளொக் பக்கமும் வருவதில்லை அப்போ.. அதனால அவரோடு கோபம் என்றோம்...:))
      அவர் நம்மை வம்பில மாட்டி விட்டிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    10. வாட்ஸாப் நம்பர் ப்ளீஸ்... ! இரண்டாவது மருமகள் வரும்போது அழைக்க வசதியாக இருக்கும்.

      நீக்கு
    11. ///ஸ்ரீராம்.9 ஏப்ரல், 2025 அன்று 2:48 PM
      வாட்ஸாப் நம்பர் ப்ளீஸ்...////

      ஆஆஆஆஆஆஆஆஆஆஅ அபச்சாரம் அபச்சாரம்:))) இதைத் தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையோ... ஒரு சுவீட் 16 பிள்ளையிடம்[என்னைச் சொன்னேனாக்கும், சொல்லாட்டில் புரியாதெல்லோ ஹா ஹா ஹா] பப்புளிக்கில வச்சு வட்ஸ்சப் நம்பர் கேக்கிறாரே ஆஆஆஆஅ ஆண்டவா இது முறையா .. இது அண்ணிக்குத் தெரியுமோ ஹா ஹா ஹா.. என்னாலயே முடியேல்லை:)..

      அஞ்சுசூஊஊஊஊஊ ஓடிக்கம்... உங்கட எந்த நம்பரைக் குடுக்கிறது சொல்லுங்கோ.. ஊக்கே நம்பரையா? இந்தியா நம்பரையா?:)))

      நீக்கு
    12. பெட்டர் ஸ்கொட்லன்ட் நம்பர் :) நீங்க சொல்லித்தான் எனக்கு எல்லாம் தெரியுது அதனால் அந்த நம்பரையே குடுத்திடுங்க :))))))))))))))))

      நீக்கு
    13. அதிரா பேசுவது, ஜிந்திப்பது எல்லாவற்றையும் பார்க்கும்போது அதிராவுக்கும் எனக்கும் ஒரே வயதுதான் இருக்கும் என்று தெரிகிறது!!

      நீக்கு
    14. // கமலாக்கா நானும் அதிராவும் இன்னமும் யூத்ஸ் :) //

      நாங்களும்தான்!

      இல்லையா கமலா அக்கா?

      வாங்க போய் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடலாம்...

      நீக்கு
    15. ஹா ஹா ஹா தேன் மிட்டாய் அந்தக்காலமாக்கும்:)).. அஞ்சு வாங்கோ நாங்க குல்பி பீடா ஐஸ்கிறீம் குடிக்கலாம்:))

      நீக்கு
  16. omg இது பெரிய கதை .so முழுசும் படிச்சிட்டு வந்து கருத்திடுகிறேன் .தற்காலிக bye :)

    பதிலளிநீக்கு
  17. ////Angel8 ஏப்ரல், 2025 அன்று 2:59 PM
    எல்லாருக்கும் ஹாய் . ஸ்ரீராமுக்கு மட்டும் நான் ஹாய் சொல்ல மாட்டேன்///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வந்ததும் வராததுமா உப்பூடியெல்லாம் ஜொள்ளப்பிடாதாக்கும்:).. அதிராவுக்கு மட்டும் என்ன கல்யாணவீட்டுக்குச் சொன்னாரா என்ன, ஹா ஹா ஹா ஹையோ என் வாய்தேன் நேக்கு எதிரி மீ போயிட்டுப் பின்பு வாறேன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.. அப்போ ஏஞ்சலினுக்கு நம் இருவரையும்விட வயது ஆகிக்கொண்டே போகிறது என்று சொல்லுங்கள். (தமிழகத்தில் திருமணமா இல்லை அங்கேயா?) எனக்கென்னவோ வயது கூடுவதில்லை, அதற்காக குறைகிறது என்று சொல்லமாட்டேன்.

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா இந்த பூனை நல்லா இருந்த நெல்லைத்தமிழனையும் குழப்பி விட்ட்டார்  :)
      நாங்கல்லாம் இன்னமும் கல்லூரி படிக்கும் பிள்ளைகள் பெற்றோர் 

      நீக்கு
    3. அடடா ஸ்ரீராமை மாட்டிவிடச் சொன்னால், நெ டமிலன் அண்ணா[எதுக்கும் இப்பூடிச் சொல்லிட்டால் ஒத்துக்கொள்வார் தன் வயதை ஹா ஹா ஹா:)] குறுக்கே புகுந்து ரெயின் ரக் ஐயே மாத்திட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இருப்பினும்..
      ///நெல்லைத்தமிழன்8 ஏப்ரல், 2025 அன்று 5:02 PM
      அட.. அப்போ ஏஞ்சலினுக்கு நம் இருவரையும்விட வயது ஆகிக்கொண்டே போகிறது என்று சொல்லுங்கள்.///
      அப்பாடா நெஞ்சில யூஸ் வார்த்தமாதிரி இருக்கெனக்கு மீ தப்பிட்டேன் ஹா ஹா ஹா:))...

      ஊ.குறிப்பு:-
      மீ ஜொன்னது ஸ்ரீராம், அவர் முதல் தடவையாக மாமனாராகிறார் என்பதை:)) ஹா ஹா ஹா எங்களுக்குச் சொல்லவில்லை.. ..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா கண்ணதாசன் அங்கிள் அப்பவே ஜொள்ளிட்டார்:
      "நித்திரை கொள்வோரை எழுப்பிடலாம் அதிரா:[ சரி சரி ஒரு புளோல வந்திட்டுது முறைக்கப்பிடா:)... ஆனா நித்திரைபோல பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியாது என:))..

      ஹையோ எப்பவும் ஆறின கஞ்சியையே என்னை ஆத்த வைக்கினம்.. ஆரையுமே காணம் இங்கின.. நேக்குப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஊஊ:))..

      நீக்கு
    4. வாட்ஸாப் எண் இருந்திருந்தால் சொல்லியிருப்பேன். ஹி... ஹி... ஹி..

      நீக்கு
  18. அதிரா, ஏஞ்சல் இருவர் வருகையால் களை கட்டுகிறது .

    வாழ்க வளமுடன் அதிரா, ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா மியாவும் நன்றி.. நீங்கள் ஏதும் நியூ போஸ்ட் போட்டிருக்கிறீங்களோ எனப் பார்த்தேன் போடவில்லை.. போடுங்கோ வருகிறேன்.

      நீக்கு
    2. வரவே மாட்டேன் என அடம்பிடிச்ச அஞ்சுவை கத்திகாட்டி மிரட்டி இழுத்து வந்தேனாக்கும்:))

      நீக்கு
    3. ஆமாம்.  நல்லாதான் இருக்கு.  ஆனால் வரமாட்டேன் என்று நீங்கள் இருவரும் இப்பல்லாம் ரொம்ப பிகு பண்ணிக்கறீங்க... என்ன செய்ய...

      நீக்கு
  19. கீதா கதையை அன்றே படித்து விட்டு என் கருத்தை சொல்லி விட்டேன்.
    தன் தன்பி, தங்ககைகளுக்கு படிக்க உதவி செய்து இருக்கிறார்.
    பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலைமை. அவரின் போக்கிற்கு வளைந்து கொடுத்து இருக்கிறார்.
    மகன் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தபின் வந்து இருக்கலாம். சமூகத்திற்கு பயந்து இருந்து இருப்பார் போலும்.

    அழுத்தி வைத்த உணர்வுகள் மடை திறந்து விட்டது, கடைசியில் வெடித்து இருக்கிறது.

    கணையாழியில் கதை வந்து இருப்பது மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
    நிறைய கதை எழுதுங்கள் எழுதி வைத்து இருக்கும் கதைகளை வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா நீங்க அன்றே சொல்லிட்டீங்க.

      சமூக பயம் தன்னம்பிக்கைக் குறைவு....பல காரணங்கள் சொல்லலாம்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  20. கீதா மிக அருமையாக மனநல சம்பந்தப்பட்ட கதையை அழகா கையாண்டு எழுதியிருக்கீங்க.blind dog என்ற r .k நாராயண் எழுதின கதை வந்து செல்கிறது .பள்ளியில் ஆங்கில பாடத்தில் படித்தது.ஒரு வாரம் தூங்கலை நான்.ஆனால் இப்போ புரிகிறது.கதையின் நாயகி நன்றி கடனுக்காக ,தன் குடும்பத்தை கைதூக்கி விட்டதற்காக பொறுமையின் சிகரமாக இருந்திருக்கிறார்.ஆனால் இப்போல்லாம் இது சாத்தியமாகாது .கை  விரல் பிடிக்கணும்னா கூட பெர்மிஷன் கேட்கணும்.கதாநாயகி ரொம்ப பாவம் . அட்லீஸ்ட் அந்த மகனை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது சரியான முடிவு.என் கணவர் எப்பவும் கேட்பார் எதற்கெடுத்தாலும் மென்டல் ஹெல்த்தினு சொல்றீங்களே எப்படி ஒருவர் மென்டலா கெட்ட எண்ணங்களை பெற முடியும்னு ?நாம் பார்ப்பவை மூளையில் பதிவாகிடுது ,நல்லவை  பார்க்கும்போது நந்தவனத்தில் குளிர்விக்கும்  பூக்கள் பூக்கும் கெட்டவை அங்கேயே தங்கி ஆழ் மன விகாரத்தை தூண்டி விடும். ஒருவேளை அந்த நாற்காலி ஓனர் கடந்து வந்த பாதை குரூரமானதாக இருந்திருக்கும். மலையாளத்தில் போகன்வில்லா படத்தில் வந்தது அது மாதிரிதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Blind Dog, இப்ப சம்மரி பார்த்தேன், ஏஞ்சல். புரிந்தது.

      //ஆனால் இப்போல்லாம் இது சாத்தியமாகாது .கை விரல் பிடிக்கணும்னா கூட பெர்மிஷன் கேட்கணும்.க//

      அதேதான்... ஆமா மகன் தப்பித்தான் காரணம் படித்த பெண் மகனின் எதிர்காலம் முக்கியம் அவன் கோபப் படத் தொடங்குகிறான் என்பதால்....புரிந்து கொள்கிறாள்.

      உங்க கணவரின் கேள்வியும் உங்கள் பதிலும் சூப்பர் ஏஞ்சல்.

      //அந்த நாற்காலி ஓனர் கடந்து வந்த பாதை குரூரமானதாக இருந்திருக்கும். மலையாளத்தில் போகன்வில்லா படத்தில் வந்தது அது மாதிரிதான் .//

      ஆமாம் இருக்கக் காரணம் இருக்கும் அதான் இது நாவலுக்கானதை இப்படி ஆக்கினேன். ஒவ்வொருவரின் மனதையும் பார்க்கத் தொடங்கினால் உள்ளே செல்ல செல்ல நிறைய கிடைக்கும்.

      நீங்களும் ஒரு படம் சொல்லிருக்கீங்க. குறித்துக் கொண்டிருக்கிறேன் பார்க்க முடிகிறதா என்று பார்க்கிறேன். நேரம் கிடைக்கணுமே

      நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  21. Don't bottle up your feelings என்று சொல்வாங்க மன உணர்வுகளை அடக்கி வைக்கும் பட்சத்தில் அது எதிர்மறையா வெளிப்படக்கூடும் மன அழுத்தம் ,வக்கிரம் எல்லாமுமாக வெளிப்படும் அதன் விளைவே கதையின் முடிவில் கதா நாயகி வருந்தி ஆசைப்பட்டு கேட்டு குத்தி கிழிச்சிட்டார் நாற்காலியை .
    மன உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்காதவங்க மனுஷ பிறவிகளே இல்லை.ஆனால் இன்னமும் பல ஆண்கள் அந்த நெடில் குணத்துடனே இருப்பது வருத்தத்துக்குரியது .
    சில சமயங்களில் இப்படியான  சூழலில் வளரும் சிறார் தவறான பாதையில் செல்லக்கூடும் ஆனால் இக்கதையில் மகன் நல்லபடியா முன்னேறி இருப்பது அருமை .
    அருமையா எழுதியிருக்கீங்க கீதா .ஆனால் இப்படிப்பட்ட மென்மையான  கதாநாயகி குணமுள்ள பெண்களை இறைவன் படைக்காமலிருக்கக்கடவது . 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே ஏஞ்சல், ரொம்பச் சரியாகச் சொன்னீங்க. சரியா கதையின் பாயின்டை புடிச்சீங்க நீங்க பிடிப்பீங்கன்னு தெரியும்.

      மன உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்காதவங்க மனுஷ பிறவிகளே இல்லை.ஆனால் இன்னமும் பல ஆண்கள் அந்த நெடில் குணத்துடனே இருப்பது வருத்தத்துக்குரியது .//

      டிட்டோ ஹைஃபைவ் ஏஞ்சல்!!!

      vice versa வும் சொல்லலாம்.

      ஆமாம் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை நான் பார்த்துவருகிறேன், ஏஞ்சல். பெற்றோர் இருந்தாலுமே சரியான வளர்ப்பு இல்லைனா....இல்லைனா இந்த படிப்பு ப்ரெஷர் இருக்கு பாருங்க அது....எல்லாம் குழந்தைகளை ரொம்ப பாதிக்குது. இப்ப ADHD அதிகமாகி வருதுன்னும் தெரியுது.

      அருமையா எழுதியிருக்கீங்க கீதா .ஆனால் இப்படிப்பட்ட மென்மையான கதாநாயகி குணமுள்ள பெண்களை இறைவன் படைக்காமலிருக்கக்கடவது . //

      நன்றி ஏஞ்சல். இது நம்ம ஜெனரேஷன் அதுக்கு முந்தைய ஜெனரேஷன்ல பெரும்பான்மை சகிதன் இருந்தாங்க இப்ப குறைந்துவிட்டது. விழிப்புணர்வு நிறைய வந்துவிட்டது.

      ஆனால் குழந்தை வளர்ப்பில் ஒரு பக்கம் விழிப்புணர்வு, மற்றொரு பக்கம் ஊடக வளர்ச்சியினால் வேறு வித பாதிப்புகள்.

      நன்றி ஏஞ்சல் வந்து கருத்து சொன்னதுக்கு. ஆனால் எதிர்பாரா வரவு. நீங்க வந்தீங்கனா இப்படிக் கருத்து சொல்வீங்கன்னு தெரியும்!!!!!!

      கீதா

      நீக்கு
  22. கீதாவின் திறமை எ.பி. அறியும், இப்போது உலகம் அறிந்து கொண்டு விட்டது கணையாழி மூலம். மேலும் சிறந்த கதைகளை படைக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா பானுக்கா.....உலகமா!!!!? ரொம்பவே தூக்கி வைச்சிட்டீங்க என்னை...ஹிஹிஹிஹி

      நன்றி பானுக்கா.

      கீதா

      நீக்கு
    2. இப்போ அதிராவும் அறிஞ்சிட்டேனாக்கும்:)))

      நீக்கு
  23. அவ்வப்பொழுது வந்து எட்டிப் பார்க்கும் அதிராவையும் பல மாதங்களுக்குப் பிறகு வருகை தந்திருக்கும் ஏஞ்சலையும் வருக வருக வென வரவேற்கிறேன். நான் பானுமதி வெங்கடேஸ்வரன், ஞாபகம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ பானு அக்கா.. அதிராவுக்காக ஒண்ணூஊஊஊ அஞ்சுக்காக ஒண்னூஊஊ என ரெண்டு கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்களே.. நீங்கள் ஐன்ஸ்ரெயினை ஞாபகப்படுத்திட்டீங்க ஹா ஹா ஹா...
      போனதடவை நீங்களும் மருதமலைக்குப் போய்ப் பெருமாளைக்கும்பிட்ட கதை சொன்னதை[நெ.த போஸ்ட்டில:))]] நான் எப்பூடி மறப்பேன்...:) எல்லாம் அந்த சமயபுரத்து வாராஹி அம்மனுக்கே வெளிச்சம் :)))..

      ஊசிக்குறிப்பு:-
      ஐன்ஸ்ரெயின் பெரியப்பா[இது அஞ்சுட முறையில சொன்னேனாக்கும்:)] ஐன்ஸ்ரயின் கிரேன் கிரான்பா... இது அதிராட முறையில... அவர் ஒரு பூஸ் வளர்த்தாராம், அது தன் லாப்புக்குள் வருவதற்காக ஒரு கட் பிலாப் போட்டிருந்தாராம்...

      ஒரு நாள் பார்க்கிறார், அது குட்டியோடு நிக்கிறதாம்.. திகைச்சுப்போன என் கிரேட் கிரான்பா.. அவர்தான் ஐரெயின் தாத்தா[இது நான் செல்லமாக அவரை அழைப்பது:)].. அவர் பதறிப்போயிட்டாராம், அச்சச்சோ இப்பூஸ் குட்டி எப்பூடி உள்ளே ந்வரும் என... உடனே அதற்கும் தாயின் பாதைக்கு அருகில் இன்னொரு கட் பிளாப் போட்டாராம்... ஹா ஹா ஹா

      சரி சரி அங்கின கமலாக்கா வெயிட்டிங் ..ஆருக்கடா கல்யாணம் என ஹையோ ஹையோ..:))

      நீக்கு
    2. ஜொள்ள மறந்திட்டேன் நன்றி பானு அக்கா நன்றி.. இப்படி வரவேற்றால் தான் திரும்ப வரோணும் எனத் தோணுது, இல்லை எனில் எதுக்கு வேலை மினக்கெட்டுப் போனேன் என்றெல்லாம் எண்ண வைக்கும் சில சமயம்.. ஹா ஹா ஹா மனித மனமே இப்படித்தானே:))

      நீக்கு
    3. தத்துவஞானி அதிரா மறுபடி மறுபடி வரணும்!

      நீக்கு
  24. அவ்வப்பொழுது வந்து எட்டிப் பார்க்கும் அதிராவையும். பல மாதங்கள் கழித்து வந்திருக்கும் ஏஞ்சலையும் வருக வருகவென வரவேற்கிறேன். BTW I am Bhanumathy Venkateswaran, ஞாபகம் இருக்கா?

    பதிலளிநீக்கு
  25. கல்யாணத்துக்கு மொய் வைக்கிற மாதிரி நான் 101!

    பதிலளிநீக்கு
  26. 101 ஐ விட 114 தான் பெரிசாக்கும்:))) ஹா ஹா ஹா அபஸ்து:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!