விட முடியாமல் நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்களையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். இன்று இன்னும் இரண்டு பாடல்கள்.
You are like a fountain
You are feel so uncertain
You are like a fountain
You are feel so uncertain
………………………………….
பல வண்ண கோலம் சுகமே
விரைகின்ற வேகம் அழகே
பல வண்ண கோலம் சுகமே
விரைகின்ற வேகம் அழகே
பார்க்கும் போதே விழிகள் பாவம்
You are like a fountain
You are feel so uncertain
மண்ணில் தோன்றும் வாழ்க்கை
மின்னல் ஓவியம் ஓவியம்
What a waiting what a waiting
Lovely birds tell my darling
You are watching
You are watching
Love is but a game of waiting
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு
நாத்து வச்சு காத்திருந்தா
நெல்லு கூட வெளைஞ்சிருக்கும்
காக்க வச்சு கன்னி வந்தா
காதல் உண்டா கேட்டு சொல்லு
ஹ்ம்ம்ம்……
What a waiting what a waiting
Lovely birds tell my darling
You are watching
You are watching
Love is but a game of waiting
ரு……ரு……ரு…..ரு…..ரு….ரு….
பபபப பப ருருருருரு
விசில் : ………………………………..
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம்
ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ…..ஆ….
சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம்
சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும்
சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும்
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் கிளியும் இசை பாடும்
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் கிளியும் இசை பாடும்
கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய்
ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ….
கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய்
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும்
மாலவன் சோதரி உமாமகேஸ்வரி….
ஈ…..ஈ…..ஈ……ஈ….ஈ….ஈ…..
மாலவன் சோதரி உமாமகேஸ்வரி
மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி…
மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி…
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
வாழ்வினில் உனைப்பாடும்
வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம், நன்றி.
நீக்குஇன்றைய பாடல்களில் என் மனம் கவர்ந்தது, சிவகவி படத்தின், மனம் கனிந்தே. நீங்கள் வதனமே சந்த்ர பிம்பமோ பாடலையும் பகிர்ந்திருக்கலாம், எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... இன்றைய தொகுப்புக்கு இந்தப் பாடலைப் பகிர்ந்தேன். இன்னொருநாள் அதையும் பகிரலாம்!
நீக்குமிகவும் பிற்காலத்தில் வந்த தெலுங்குப் படமான தியாகையாவில் ஐம்பது பாடல்களுக்கு மேல் என நினைவு
பதிலளிநீக்குபடத்தின் தேவை அது. அவர் இயற்றிய பாடல்களை காட்சிகளுக்கேற்றவாறு பிய்த்துப் போட்டிருப்பார்கள். படம் ஓடவில்லை என்று நினைக்கிறேன். சங்கராபரணம் பார்த்து போட்டுக்கொண்ட சூடு. ஆனால் பாடல்களின் இனிமைக்குக் குறைவில்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநினைத்தாலே இனிக்கும் படத்தில் இவ்வளவு பாடல்கள் உள்ளனவா என வியப்பாக உள்ளது. ஒருபாடலின் வீடியோ மட்டும் பார்த்தேன். பறவைகளின் அழகு மனதை கவர்ந்தது. இரு பாடல்களையும் கேட்டு விட்டு வருகிறேன் .
ரதிபதிப்பிரியா ராகம் குறித்த அலசல் படிக்க இனிமையாக இருக்கிறது. நானும் கூகுளில் சென்று அந்த ராகத்தைப்பற்றி பலவிடங்களில் படித்து வந்தேன். இது ஒரு ஆபூர்வராகங்களின் வரிசையாம் .உங்களுக்கு இசையில் கர்நாடக சங்கீதத்தில் இவ்வளவு ஆழ்ந்த ஈடுபாடுகள் இருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . இன்று நீங்கள் பகிர்ந்த ராகத்தில் வரும் மற்ற இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் அக்கா.. இனிமையான ராகம். உருக்கமாக இருக்கும்.
நீக்குநீங்கள் ஜகத்ஜனனி பாடல்களையும் கேளுங்கள். அதுவும் வெவ்வேறு பாடகர்களின் குரலில், வெவ்வேறு சமயங்களில்...
நினைத்தாலே இனிக்கும் படத்தில் சிறிதும் பெரிதுமாக நிறைய பாடல்கள் கமலா அக்கா.
நீக்குஜகத்ஜனனி பாடலை சுதா ரகுநாதனின் குரலில். அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் "வேண்டும் வரம்தர மனமில்லையோ" வரிகள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். இப்போது யேசுதாஸ் பாடலும் இதே ராகத்தில் இனிமை . இன்றைய பாடல்களை ரசித்தேன். நன்றி.
நீக்குமுதலில் எம். கே. டி பாகவதர் அவர்களின் பாடலை கேட்டேன். இனிமையான அதுவும் அவரின் கம்பீரமான குரலில் அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குஇரண்டாவதாக யேசுதாஸ் அவர்கள் பாடிய" நலம் தருவாய்" மிக மிக இனிமை. பாடல் வரிகளும், இசையும் அருமையான ராகத்ததுடன் அவரின் அற்புதமான குரலில் நெகிழ்ந்து போனேன். இன்னொரு தடவை கேட்க வேண்டும். முடிந்தால் மனப்பாடம் செய்ய வேண்டும்.
வதனமே சந்தர பிம்பமே பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். அதையும் ஒருநாள் பகிருங்கள். அந்த காலத்திய படங்களில் 50,60 என நிறைய பாடல்கள். கண்மூடி திறப்பதற்குள் ஒரு பாடல் வந்து விடும். படங்களில் பேசும் வசனங்கள் கூட பாடலாகத்தான் வெளிப்படும். திருமணத்திற்கு முன் அம்மாவுடன் எம் கே டி அவர்கள் நடித்த "திருநீலகண்டர்" திரைப்படம் தியேட்டருக்குச் சென்று பார்த்தேன். ஒரு விநாடிக்கு ஒரு பாடல். மறக்கவே முடியாது.
நினைத்தாலே இனிக்கும் பாடல்களையும் கேட்டு விட்டு வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெண் குரலில் இந்தப் பாடல், இந்த ராகம் இன்னும் இனிமையாக இருக்கும். நித்யஸ்ரீ பாடுவது நன்றாக இருக்கும்.
நீக்குஎம் கே டி பாகவதர் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார். அவருக்கு குரல் வளமும் இசைஞானமும் கூட இருந்தது சிறப்பு. என் அப்பா எம் கே டி பாகவதரின் மகா ரசிகர்.
காக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க...
வாங்க செல்வா அண்ணா வணக்கம்
நீக்குஇந்த பதிவுக்கு பதில் சொல்லாமலேயே இருந்திருக்கிறேன் இப்போதுதான் கவனிக்கிறேன்
ஜகத் ஜனனி பாடலை பலமுறை கேட்டிருக்கின்றேன்...
பதிலளிநீக்குஎன்னுடைய தொகுப்பில் உள்ளது...
ஆமாம் நல்ல பாடல்
நீக்குYou are like a fountain
பதிலளிநீக்குYou are feel so uncertain...
ஸ்ரீராம் இதுல ரெண்டாவது வரி You are like I feel so uncertain என்று தான் வரும் அப்படித்தான் அப்ப பாட்டு கேட்டு எழுதிக் கொண்டது!!!...முன்ன இந்த வரிகளை நாங்க பைஹார்ட் ஏன்னா அப்பலாம் இங்கிலிஷ் என்பது பெரிய அரிய மொழியாச்சே. வாய்ல வரவே வராது ஸோ இப்படி இங்கிலிபீச் பண்ணி பீலா விட்டதுண்டு!!!
கீதா
கூடவே பிடிச்ச பாட்டு வெஸ்டர்ன் ஸைலில் கொஞ்சம் இருக்குமே!! இப்பவும் கேட்டு ரசித்தேன்...பழைய நினைவுகள் கூடவே
நீக்குகீதா
ஆமாம் கீதா... அந்த வரியில் ஒரு தவறு இருந்திருக்கிறது. நான் கவனிக்கவில்லை .மாற்றி இருக்க வேண்டும் .இனி மாற்றி என்ன செய்ய!
நீக்குஇரண்டாவது பாட்டும் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். அப்பலாம் வீடியோ கிடையாதே வீடியோவோடு பறவைகளோடு பார்க்க நல்லாருக்கு.
பதிலளிநீக்குஇதை வைச்சுத்தான் நம்ம அலெக்ஸ் நிறைய பாட்டுக்கு ஆங்கில வார்த்தைகள் போட்டுப் பாடுகிறாரோ?!
நம்ம சின்ன வயசுல அது ஒரு ட்ரெண்டிங்கா இருந்துச்சு. பல பாட்டுகளையும் ஆங்கில வார்த்தைகள் போட்டுப் பாடி சும்மா நம்ம மக்களை கடுப்பேத்துவது...ஸ்கூல்ல ஆங்கிலம் தான் பேச வேண்டும். பேசலைனா யார் கைல பட்டன் இருக்கும்னு தெரியது அந்த பட்டனை நம்ம கைல தள்ளிவிட்டுவிடுவாங்க ஸ்கூல் முடியும் போது யார் கைல பட்டன் இருக்கோ அவங்க ஆஃபீஸ் ரூம் போய் பட்டன் கொடுத்துட்டு ஃபைன் கட்டணும். பைசா இருக்காது. பெயரை எழுதி வைச்சுக்குவாங்க அடுத்த நாள் நாம பைசா கொடுத்ததும் பெயரை கட் செய்துவிடுவாங்க. என்ட்ரி போட்டு!
அதுக்குப் பயந்தே, சும்மானாலும் பாடல்களை ஆங்கிலத்தில் வார்த்தைகள் போட்டுப் பாடி தப்பிப்பது உண்டு யாருக்கும் புரியாது என்ன பேசறோம் பாடறோம்னு அப்படி சில பாடல்களின் இரு வரிகளை மட்டும் வைத்து பீட்டர் விட்டுக்கிட்டு...!!!
நான் தமிழ்மீடியம். இதுல வேற இங்கிலிஷ், தமிழ்ல மட்டும் நல்ல மார்க் வந்திடும் மத்தது எல்லாம் கேக்கப்படாது! ஸோ என்னவோ நம்மள எலிஸபெத் ரே ஞ்சுக்கு...நம்ம ஃப்ரென்ட்ஸ் வைச்சுக்கும்...
கீதா
இந்தப் பாடலுக்கு முன்னால் சில வரிகள் வரும் .ஜெயப்பிரதாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் சரிதா .சோனா என்று கத்துவார் கமல். தொடர்ந்து டக் டக் டக் டக் என்று ஓடிவரும் சத்தமும் சந்துரு என்ற குரலும் அவர்கள் இருவரும் பேசும் டயலாக்கும் கொஞ்சம் வரும். அதெல்லாம் கிடைக்க மாட்டேன் என்கிறது இப்போது. முன்பு பாடலுடன் சேர்ந்து அந்த வரிகளும் வரும்.
நீக்குரதிப்பதிப்ரியா ராகம் நீங்க சொல்லிருக்கும் பாட்டு நித்யஸ்ரீ ரொம்ப நல்லா பாடிருப்பாங்க.
பதிலளிநீக்குஇந்த ராகம் பாட்டைக் கேட்கறப்ப எல்லாம் நம்ம மதுரை சோமுவோட பாட்டு என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை - நீலமணி ராகம்....அது டக்குனு வரும் எனக்கு.
நீலமணி ராகம் சிவரஞ்சனியோட கிரஹபேதத்தில் வரும் ராகம்.
ஜகத் ஜனனி அதே மெட்டில்தான் மனம் கனிந்தேவும் வருது இல்லையா....படம் பற்றிய பாடல் பிறந்தது பற்றிய விவரங்கள் எல்லாம் இப்பதான் தெரியுது. ஆனா நினைவில் இருக்கணுமே!!!
கீதா
ஆனால் அதெல்லாம் வேறு ராகம் இல்லையா? நீல மணிக்கும் ரதிபதி பிரியாவுக்கும் பெரிய சம்பந்தம் எதுவும் இல்லை இல்லையா?
நீக்குராகபந்தங்கள் இப்படி ஒரு படமா? ம்ஹூம் கேள்விப்பட்டதே இல்லையே கல்லூரியில் படித்த சமயம் அப்பக் கூடத் தெரியலையே...தாஸேட்டன் பாட்டும் கேட்டதில்லை. இப்பதான் கேட்கிறென். நல்லாருக்கு ஆனா இந்த ராகத்துல ஒரே மெட்டுலதான் போட முடியும் போல. விரித்துப் பாட ஸ்கோப் இல்லை போல...சில ராகங்கள் அப்படித்தான் போல.
பதிலளிநீக்குஇரண்டுமே கேட்டிராத பாடல்கள் நல்லாருக்கு ஸ்ரீராம்
கீதா
இரண்டு மூன்று நல்ல பாடல்கள் உண்டு கீதா இதில். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இதில் இருக்கிறது. முடிந்தால் பிறகு பகிர்கிறேன்.
நீக்குஅனைத்தும் அருமையான பாடல்கள் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்கு"நலன்தருவாய் தாயே மீனாக்ஷி " மிகவும் பிடித்த பாடல்.
நன்றி மாதேவி.
நீக்குபாடல்கள் பகிர்வு அருமை. சிவகவி படம் பார்த்தேன்.
பதிலளிநீக்குநலன் தருவாய் தாயே மீனாக்ஷி. ஜகஜனினி பாடல் போலவே .
ஆ.... சிவகவி படம் முழுவதும் பார்த்திருக்கிறீர்களா ?பொறுமை தான் உங்களுக்கு!! அப்போது பிடித்திருக்கும். ஆனால் பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்.
நீக்கு