சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்.
நாம் சிச்சன் இட்ஸா என்ற வரலாற்றுச் சிறப்புள்ள இடத்தில் இருக்கிறோம். நாம் நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் மெக்சிகோ பழங்குடியினரின் (மாயன்) திருவிழாக்கள் நடக்கும் கோயில் அமைந்த இடமாக இருந்திருக்கிறது. சுற்றியும் உள்ள பல்வேறு குழுக்களும் விழாக்காலத்தில் இங்கு கூடுவார்களாம். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியின்படி சுமார் 50,000 மக்கள் இந்த இட த்துடன் தொடர்போடு இருந்தனராம்.
இட்ஸா கிணற்றின் வாயில் என்று அழைக்கப்பட்ட இந்த இடம்தான் அவர்களின் சமூக பொருளாதார ஆன்மீக இடமாக அமைந்திருந்தது (கிபி 600-1200)
Guide சொன்னதைச் சிறிது நான் கேட்டுக்கொண்டேன். இந்த பிரமிடின் உச்சியில்தான் தலைவர்/அரசர் மற்றும் அமைச்சர்கள் இருப்பார்களாம். பூசாரியும் அவர்களுடன் இருப்பாராம். இங்குதான் தண்டனையும் பலியும் நடைபெறுமாம். குற்றம் சாட்டப்பட்டவர் பலி கொடுக்கப்பட்டு வீசி எறியப்படுவாராம்.
கூட்டம் வருவதற்குள் பிரமிடின் முன்னால் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு அவள் கேமராவில் போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டு, என்னையும் எடுக்கச் சொன்னேன்.
நம்முடையது கருங்கல் கட்டிடம் (தளிகள் என்று சொல்கின்றனர்) இங்கு சிமெண்ட் பிளாக்போல, அல்லது சாந்துபூசின கற்கள் போல இருந்தன.
மிக அருகில் பார்த்தால் ஒழுங்குமுறை இல்லாத கற்களால் பிரமிட்டை உயர்த்திவிட்டு அதைச் சுற்றி கல் ப்ளாக்குகளை அடுக்கியிருப்பது போலத் தெரிகிறது.
படிகள் போல மேல வரைல செல்கிறது. ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. முன்னாலாம் ஏறிப் பார்க்கலாமாம். சின்னப் பசங்க ஏறுகிறேன் என்று சில பகுதிகளைச் சிதைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். கல் விழுந்தால் ஆபத்து என்பதால் ஏறுவதற்கு தடா.
உள்ளேயே கடைகளெல்லாம் இருக்கும்படியாக ஒரு இடம் இருந்தது. நாங்கள் அங்கெல்லாம் செல்லவில்லை. நல்லவேளை மழை தூறலாகத்தான் இருந்தது. பெரிய மழை பெய்திருந்தால், எங்களால் ஒன்றையும் பார்த்திருந்திருக்க முடியாது.
சுற்றுலாவிற்கு பேருந்தில் அழைத்துச் செல்பவர்களும், இந்த இடத்தில் உள்ள கடைகளில் உள்ள பொருட்கள் விலை மலிவானவை என்று தெரிந்தும் தனியாக கலைப்பொருட்கள் விற்கும் கடைக்குத்தான் அழைத்துச் சென்றிருந்தார்கள். அந்தக் கடை ஒழுங்குமுறையாக நடக்கும் கடையாக இருக்கலாம், இருந்தாலும் பொருட்கள் விலை மிகவும் அதிகம். இங்கோ விலை மலிவு.
இந்த முகமூடியை இப்போது பார்க்கும்போது பாகுபலி முதல் பார்ட் திரைப்படம் நினைவுக்கு வருது (தமன்னா-அப்போதிருந்த தமன்னா ரசிகனுக்கு இது நினைவுக்கு வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். அந்தப் படத்தில் மிகவும் கவரப்பட்டு நான் இருந்த தேசத்தில் தியேட்டரில் தொடர்ந்து மூன்று நாட்கள் பார்த்தேன். நாலாவது முறையாக என் குடும்பத்தோடு உதயம் காம்ப்ளக்ஸில் பார்த்தேன். சுமாரான ஃபீல், காரணம் கொஞ்சம் ஒழுங்குமுறை இல்லாத நம்ம மக்கள்தாம்)
அந்தக் காலகட்டத்தில் நம் கலாச்சாரம், திறமை (தமிழர்களின், இந்தியர்களின்) எங்கோ இருந்தது. இவையெல்லாம் ஒப்பீட்டளவில் பார்க்கும்போதுதான் நம் திறமை, பாரம்பர்யம் நமக்கே புரியும்.
இந்தப் படங்களை இப்போது பார்க்கும்போதும் பயமாக இருக்கிறதே… இரவு சரியாகத் தூக்கம் வருமா?
படிகளின் இருபுறமும் பாம்பு இருப்பதுபோலவும், தரையில் அதன் வாய் பிளந்துகொண்டு இருப்பதுபோலவும் அமைத்திருக்கிறார்கள். மாயன் கலாச்சாரத்தில் பாம்புகளுக்கு ஒரு தனி இடம் இருந்திருக்கிறது (மயன், நாக உலகம்…. இதுக்கெல்லாம் உள்ள தொடர்பை கீதா சாம்பசிவம் மேடம் சொல்லக்கூடும்)
எம்மாம் பெரிய பாம்புத் தலை. நிச்சயம் அனகோண்டா போலத்தான் தோன்றுகிறது
இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. தூரப்பார்வையில் எப்படி இருக்கிறது என்று கீழே கொடுத்துள்ளேன்.
இதனைப் பார்க்கும்போது சாரநாத்தில் நான் பார்த்த பெரிய கட்டிடம் நினைவுக்கு வருகிறது. அதுவோ செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப் பெரிய கூடம் மாதிரி அமைந்திருக்கிறது (படம்லாம் கயா யாத்திரையில் வரும்). அதன் முன்னால் இருக்கும் புல்வெளியில் இருந்து வெளிநாட்டிலிருந்து வந்த பௌத்தர்கள் குழு (100 பேர்கள் இருக்கும்) புத்தகம் ஒன்றை விரித்து வைத்துக்கொண்டு அதை ராகத்துடன் வாசிக்கிறார்கள். அவர்கள் மனதில் நினைக்கும் புனிதத் தன்மையை மற்ற பார்வையாளர்கள் அறியாமல், அவர்கள் ப்ரார்த்தனை பண்ணும் இடத்திற்கும் கட்டிடத்திற்கும் குறுக்கே போய் வந்தார்கள். (அவர்கள் மனதில் நினைத்திருப்பார்கள்… இவனுவளுக்கு நாகரீகமே இல்லையே என்று)
இது இந்த இடத்தில் இருந்த வானிலை ஆராய்ச்சி மையம் (மாயன் காலத்துல) என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு சன்னலிலும், அந்த அந்த கோள்களின் இருப்பைப் பொறுத்து பார்க்கமுடியும், சூரிய வெளிச்சம் வரும் என்று சொல்கின்றனர் (அவங்க புத்தகத்துலயும் இதனைப் பார்த்தேன்)
இன்றைய படங்கள் ரசிக்கும்படி இருந்தனவா? நாம் சிச்சன் இட்ஸாவை முழுமையாகப் பார்த்து முடித்துவிட்டோம். அடுத்தது என்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
(தொடரும்)
= = = = = = = =
படங்கள் கவர்கின்றனதான். ஆனால் பிரமிடின் படம் மீண்டும் மீண்டும்...
பதிலளிநீக்குஒருவேளை உள்பக்கமாக அதனுள் ஏறிப்பார்க்க வழி கருக்குமோ... ரகசிய வழி...
வாங்க ஶ்ரீராம். சில இடங்களில் சில நம் மனதை மிகவும் கவர்ந்துவிடும். கூடவே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் நிற்கிறோம் எனத் தோன்றிவிடும். மீண்டும் வர இயலுமா?
நீக்குபிரமிட் போன்று இதில் ரகசிய அறைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ரகசிய அறை அல்ல, அதன் கீழே, உள் பக்கமாக மேலே உச்சி வரை ஏறி செல்ல படிக்கட்டுகள், பாதை.
நீக்குநம்மிடம், அதாவது பொது மக்களிடம் சொல்ல மாட்டார்கள்!
எனக்கென்னவோ சாய்வாக மேலே ஏறிச் செல்கிறதே படிக்கட்டுகள் அவைதாம் மேலே ஏறிச் செல்ல உபயோகித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
நீக்குஇந்த மாதிரி அபூர்வமான இடங்களை பார்க்க முடிவது ஒரு பாக்கியம்தான்.
பதிலளிநீக்குபாம்பு வாய் பயமுறுத்துகிறது.
வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன். இது போல சில பல வாய்ப்புகள் இறைவன் அருளால் கிடைத்திருக்கின்றன. இறைவன் கருணை, என் ஆர்வம் என்னைக் கெடுக்காமல், நெறி பிறழாமல் காப்பாற்றியிருக்கிறது. இது பற்றி பின்னொரு சமயத்தில் எழுதுகிறேன்.
நீக்குபடங்கள் எல்லாமே நல்லாருக்கு நெல்லை.
பதிலளிநீக்குபிரமிட் அதான் அந்த பிட்ஸா ஹிஹிஹீ இட்ஸா படிகளின் அடியில் சைட்ல ஒரு நுழைவு வாயில் இருக்கிறதே. அதுக்குள்ள போகவும் அனுமதி இல்லையோ? ஆனா உள்ளே எதுவும் இருக்கலாமோ!!
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. (இரண்டு பேரும் சேர்த்துப் படம் எடுத்துக்கொண்டால், க்கா என்று எழுதுவது நகைச்சுவையாகிவிடும் என்று தோன்றுகிறது). பீட்ஸா... எனக்கு டொமினோஸை நினைவுபடுத்துகிறது. மனைவியைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். ஆனால் அமெரிக்க உணவகங்களை புறக்கணிக்கணும் என்று சிலர் சொல்கிறார்களே
நீக்குஇன்னிக்கு அப்பெயர் கிச்சன் பிட்ஸான்னு ஹாஹாஹாஹா...எப்பவும் திங்கற நினைப்பு!
பதிலளிநீக்குகீதா
நேற்றைய பயணம் சுகமாக இருந்திருக்கும். தின்பதைத் தவிர வாழ்க்கையில் வேறு ஏதேனும், போதும் என்று சொல்லும்படி இருக்கிறதா?
நீக்குஅந்த மாஸ்க் படங்களும் சரி, பாம்பு வாய் பிளப்பது போன்றதும் சரி ஒன்றும் பயமுறுத்தவில்லை.
பதிலளிநீக்குமாயன் கலாச்சாரத்துல பாம்பு ரொம்ப முக்கியத்துவம்னு வாசித்த நினைவு. சிம்பாலிக்கா, அதிகாரம் மற்றும் பாதுகாப்பு, மூன்றிற்கும் அதாவது பாதாள உலகம், உலகப் பரப்பு அதாவது இந்த பூமிப்பரப்பு அப்புறம் வானம் மூன்றுக்கும் போய்ட்டு போய்ட்டு வருவது வாழ்க்கைச் சுழற்ச்சி. இதனைக் குறிப்பது பாம்பு தோல் உரிப்பதாம். மறுபிறப்பு.
ஒரு வேளை அவங்க பாதாள உலகம் என்று சொல்வது நரகம்னு சொல்வதும் வானம்னு சொல்றதை சொர்கம்னு சொல்றதாகப் படுகிறது. நடுல இந்த பூமி. இந்த வாழ்க்கை.
கீதா
பாம்பு வாய் பிளப்பது போன்று உள்ளது பயமுறுத்தவில்லை என்றாலும் அதன் அளவு மிகப் பெரிதாக இருந்தது. மனதில் நடுக்கத்தை வரவழைக்கும்.
நீக்குஉண்மையாகவே நாக உலகம் இருப்பதை நான் நம்புகிறேன். இது பற்றி ஸ்ரீ எம். அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்திப்போம்.
நீக்குஅழகான வரலாறு சொல்லும், சிறப்பு மிக்க இடம், நெல்லை.
பதிலளிநீக்குசூப்பர்.
கீதா
இருந்தாலும் நம் தமிழக, பாரத வரலாறு மிகவும் சிறப்பானது என்பது என் எண்ணம். நாம் எங்கோ உயரத்தில் இருந்திருக்கிறோம்.
நீக்குரொம்ப உயரத்திற்கு போய் விட்டாலும், அனைவரின் பார்வையும் நம் மேல் விழாது போய் விட கூடுமில்லையா?
நீக்குஅதற்குக் காரணம், நம்முடைய சாதனைகள் மத்த்தின் தொடர்புடையது (தஞ்சை பெரியகோயில் மற்றும் எல்லா வரலாற்றுச் சின்னங்களும் கோயிலுடன் தொடர்புடையது). அதனாலும் அவைகளை ரொம்பவே கொண்டாடுவதில்லை என நினைக்கிறேன். ஆயிரம் ஆண்டுப் பழமையானவை நம்மிடம் ஆயிரத்துக்கு மேல் வரலாற்றுச் சான்றுகளோடு இருக்கும். மற்ற நாடுகளில் ஆயிரம் ஆண்டு என்பதே கனவுதான்.
நீக்குஉங்கள் கருத்து உண்மைதான்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் துல்லியமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய அந்த பிரமிட் மீது ஏறுவது கடினந்தான். அதுவும் படிகளைப் போல தோற்றமளித்தாலும், ஒவ்வொன்றும் மிக குறுகிய அமைப்புடன் காணப்படுகின்றன. அனைவரும் ஏறிச் சென்று பார்க்க தடா மட்டும் போடவில்லையென்றால், அந்த பழங்கால கட்டிடத்திற்கு கண்டிப்பாக பாதிப்பு வரும். நினைவுச் சின்னங்களை பார்த்துதான் ரசிக்க வேண்டும்.
மெக்சிகோ பழங்குடியினரின் இருப்பிடத்தைப் பற்றி விபரமாக தெரிந்து கொண்டேன். (உங்கள் புண்ணியத்தில்.) உங்களுக்கும் நேரில் சென்று இவற்றையெல்லாம் பார்த்து ரசிக்குமாறு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது சிறப்புத்தான். எல்லாம் இறைவன் செயல். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு அது ஒரு அபூர்வ வாய்ப்புத்தான். அவங்க கலாச்சாரத்தைச் சிறிது காண இயன்றது. ஆனால் பாருங்க, எனக்கு உணவுப் பிரச்சனைதான்.
நீக்குநானும் கிச்சன் பிட்ஸா என்றுதான் படிப்பேன்;))))
பதிலளிநீக்குவாங்க கேஜிஜி சார். காலை உணவுக்குப் பிறகு படித்தால் சரியாகப் படிக்க முடியுமோ?
நீக்கு:)))
நீக்குஇந்த கிச்சன் பிட்ஸா வை நெ த பரிந்துரைத்த
பதிலளிநீக்குஅந்த யூகலிப்டஸ்(!) ஆங்கிலப் படத்தில் பார்த்ததிலிருந்து
இதைப் பார்க்கவே பயமாக இருக்கு.
நம்ம ஊர்ல அரவான் என்றொரு படம் வந்தது. அதுவும் கொஞ்சம் முற்காலத்தைய படம்தான். இருந்தாலும் பெண்ணை மிக அழகாக்க் காட்டியதால் அந்தப் பகுதி மாத்திரம் பார்த்து ரசிக்கும்படி இருந்தது. யூகலிப்டஸில் அப்படிக் காட்சிகள் இல்லையே. பொதுவா எனக்கு ஆங்கிலப் படங்களில் போர் சம்மந்தமான படங்கள், திரில்லர் சஸ்பென்ஸ் மூவிகள், மாபியா படங்கள் மற்றும் ஜுராசிக் பார்க், போன்ற படங்கள் பிடிக்கும். தமிழில் நகைச்சுவைப் படங்கள்தாம் பிடிக்கும்.
நீக்குவாவ்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்களை ரசித்தேன். அத்தனையும் நன்றாக உள்ளது கலைப் பொருட்கள் விலை மலிவானாலும், வெளி நாட்டவர் எவரும் வாங்குவது சிரமம்தான். முகமுடிகள் பயமுறுத்துகின்றன. அவ்வூர் மக்களுக்கு வேண்டுமானால், அவர்களின் பாரம்பரியம் மிகவும் பிடித்துப் போவதால் வாங்குவார்கள்.
பற்கள் அனைத்தும் கொட்டி விடாமல் மண்டையோடுடன் இருக்கும் படமும், அடகோண்டா நாகத்தின் படமும் சற்று பயத்தை உண்டாக்குகிறது. தொப்பிகள் வேண்டுமானால் நாம் சென்று வந்த நினைவாக வாங்கலாம். அதுவும் மிகப் பெரிதாக இருக்கிறது. நீங்கள் அவைகளில் ஏதாவது வாங்கினீர்களா ? பழமை மிகுந்த நகரமான சிச்சன் இட்சாவைப் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நீங்கள் நேற்றைய என் பதிவுக்கு வந்து தந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் வீட்டில் கோகுலாஷ்டமி சிறப்பாக நடந்தேறியதா.? நேற்று முழுவதும் நான் பதிவுகளுக்கு வர இயலவில்லை. தங்களுக்கும், மற்றும் கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இன்று இறைவன் அருளால், நன்றியுடன் பதில்கள் தர முயற்சிக்கிறேன் . இன்றைய தங்களின் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாஜ்மஹல் போனால் பளிங்கில் செய்த தாஜ்மஹலை நிறைய விற்றுக்கொண்டிருப்பார்கள். அதுபோல அங்கும் முகமூடி மற்றும் பலவித பொருட்கள் விற்பனை.
நீக்குநேற்று பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்தேன். அம்பேரிக்க அதிபர் "அமெரிக்காவில் தயாரியுங்கள்' என்று எழுதிய தொப்பியுன் கூடிய புகைப்படம். அதற்கு சீன வெளியுறவுத் துறையைச் சேர்ந்தவர், அந்தத் தொப்பியே சீனாவில் தயாரிக்கப்பட்டதுதான் எனச் சொல்லியிருப்பார்.
எங்களுக்கு இன்னும் ஶ்ரீஜெயந்தி ஆன மாதிரித் தெரியலையே
வருகைக்கு மிக்க நன்றி