15.8.25

தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்

 இன்று இந்தியாவின் 79 வது சுதந்திர தினம்.

A V மெய்யப்ப செட்டியார் தயாரித்து அவரே இயக்கிய கடைசி படம்.  இந்தப் படத்துக்குப் பின் அவர் தன் நிறுவனத்தை காரைக்குடியிலிருந்து சென்னை கோடம்பாக்கத்துக்கு மாற்றி விட்டார்.  V K ராமசாமியின் முதல் பாடம்.  தனது 21 வயதில் கிழவனாக நடித்திருக்கிறார்.  1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.   செம வசூல்.ப. நீலகண்டன் 1936 ல் வெளியான இரு சகோதரிகள் படக்கதையைத் தழுவி தியாக உள்ளம் என்ற ஒரு கதையை எழுதி இருந்தார்.  அதுதான் நாம் இருவர் என்று படமாக்கப்பட்டது.  சில காட்சிகள் கலரில் கூட வெளியாகி இருக்கிறது.  குமாரி கமலாவின் நாட்டியம் வெகு பிரபலம்.  எஸ் வி சகஸ்ரநாமம்தான் நாயகனாக நடித்திருக்க வேண்டியது.  அவருக்கு தேதிகள் ஒத்துவராததால் டி ஆர் மகாலிங்கம் நடித்தார்.

இசை ஆர். சுதர்சனம்.  பாரதியார் பாடல்.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே

பெண் : எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பெண் : சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே
ஆடுவோமே

பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே

பெண் : நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே….
ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே….ஆடுவோமே…


=========================================================================================

அப்போது மட்டுமல்ல, இப்போதும் பாரத இளைஞர்களை பாரதத்தைக் காக்க இதுபோல அழைக்க வேண்டிதான் இருக்கிறது.


1.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிபடைத்த மொழியினாய்  வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 

தெளிவு பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய்  வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா  
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா 

2.மெய்மை கொண்ட நூலையே =அன்போடு வா வா வா 
வேதமென்று போற்றுவாய் வா வா வா 
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 
நொய்மையற்ற சிந்தையாய்  வா வா வா 
நோய்களற்ற உடலினாய் வா வா வா 
தெய்வ சாபம் நீங்கவே -நீங்கள் சீர்த் 
தேசமீது தோன்ருவாய் வா வா வா 

3.இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
இளையபார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா 
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 
உதய ஞாயிரறோப்ப  வா வா வா 

களையிழந்த நாட்டிலே-முன்போலே 
கலைசிறக்க வந்தனை வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன்போலே 
கலைசிறக்க வந்தனை வா வா வா 
விளையுமாண்பு யாவையும் -காத்தல் போல் 
விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல் 
விழியினால் விளக்குவாய் வா வா வா 

4.விந யநின்ற நாவினாய்  வா வா வா 
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா 
முழுமைசேர் முகத்தினாய வா வா வா 
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா 
கருதிய தியற்றுவாய் வா வா வா 
ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம் 
ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா 


=============================================================================================


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம்சக்தி, ஓம்

2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.


3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பி ட்ட நேரமும் "சக்தி" யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
ம்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி 
ம்புக்குந தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி 
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் வரம் 
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்திவேல் சக்தி,
வேல்சக்திவேல் சக்தி வேல்!
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல் சக்தி,
வேல் சக்தி வேல் சக்தி வேல்!

 

4 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    பாரதி பற்றிப் படிக்கும்போது என்னவோ எனக்கு கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் அனு பிரேம் அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மகவுப் பொருத்தமான பாடல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    முதல் பாடலையும், செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலையும், பசங்களைத் தூங்கவைக்கும்போது நான் பாடுவது நினைவுக்கு வருகிறது.

    வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின் வேறொன்றும் கொள்வாரோ?

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். அருமையான பாடல்கள். பாரதியாரின் பாடல்களை எப்போதும் கேட்டாலும், உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வசபபடுவதென்னவோ உண்மை. காலத்தால் அழியாத பாடல்கள். காலத்தை வென்ற பாடல்கள்.

    "ஒளிப்படைத்த கண்ணினாய் வா. வா. வா." நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும் போதே பயின்றது. இப்போதுள்ள கால கட்டத்தில் தமிழ் பாட நூல்களில் இவை இடம் பெற்றுள்தோ என்னவோ.? பாடல்கள் இடம் பெற்ற படங்களின் தகவல்களுக்கும், இனிமையான பாடல்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!