நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.9.25
வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே... மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே
பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சாதனை 1953 லேயே நிகழ்த்தி இருக்கிறார் தெரியுமா?
அவரும் அவர் கணவர் ராமகிருஷ்ணாவும் சேர்ந்து தயாரித்த சண்டி ராணி படத்தை அவரே இயக்கி, அவரே கதாநாயகியை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் நடித்ததோடு அந்தப் படத்தில் பாடலும் பாடி இருக்கிறார். பானுமதியின் கதைக்கு ராமகிருஷ்ணா திரைக்கதை எழுதி இருக்கிறார். இந்த சாதனையைச் செய்த முதல் பெண்மணி பானுமதி.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் சி ஆர் சுப்பராமன் .இந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையிலேயே மறைந்து விடுகிறார். அப்போது அவருக்கு வயது 36 தான். எனவே படத்தின் பின்னணி இசை பாடல்கள் பொறுப்பை அவரிடம் உதவியாளராக இருந்த எம் எஸ் விஸ்வநாத்தை ஏற்றுக் கொள்கிறார்.
MSV சொல்கிறார் : தமிழில். தெலுங்கில் பாடல்கள் தயார். ஹிந்தியில் பாடல் வரிகளுக்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஹிந்தியில் பாடல் எழுதுபவர் விஸ்வமித்ரா அடில் என்பவர்.
"நல்லா பனைமரம் உயரத்துக்கு இருப்பான் மனுஷன் .., முக்குடா ஆத்தா ஆத்தா நஹி ன்னு மூணு நாளா சுத்திக்கிட்டிருக்கான் மனுஷன்... என்னடா இவன் இப்படி பண்றானேன்னுட்டு நான் சொன்னேன்.. நான் ஒரு டூப் வரி கொடுக்கறேன்.. பார்க்கறீங்களா.. இத்தனைக்கும் எனக்கு ஹிந்தி தெரியாது.. ஆனாலும் நான் சொல்றேன்.. பார்க்கறீங்களான்னுட்டு ஆர்மோனியத்தை வாசிச்சுகிட்டு 'சந்தா தலே முஸ்குராயே ஜவானியா ன்னு பாடினேன். வந்து உட்கார்ந்துட்டான் மனுஷன்... அதான் அதான்னு அடுத்த அடுத்த வரியை சொல்ல ஆரம்பிச்சுட்டான்.
எம்ஜிஆரின் நம்பிக்கை நாயகன்.. மாஸ் படங்களின் வசனகர்த்தா..
படத்தில் எப்போதாவது பன்ச் டயலாக் வரும் ஆனால் படம் முழுக்க வசனங்களே பன்ச் டயலாக்காக அமைந்தால்?
அப்படிப்பட்ட அற்புதமான வசனகர்த்தாதான் ஆர்கே சண்முகம்….
தசாவதாரம் படத்தில் கமல் சொல்வார், ‘’கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே… கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்’’ என.. இதன் ஒரிஜினல் வெர்ஷன் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆர்கே சண்முகத்தினுடையது..
‘’நான் பொய்யென்று சொல்லவில்லையே..நீங்கள் சொல்வது மெய்யல்ல என்றே சொல்கிறேன்.‘’என்று எம்ஜிஆர் சொல்வார்
எம்ஜிஆருக்கு ஆஸ்தான கதை வசனகர்த்தாக்களில் ஒருவராக மாறிப்போன ஆர்கே சண்முகம், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எப்படி வந்தார்?
நடிகர் திலகம் சிவாஜியை வைத்து கப்பலோட்டிய தமிழன், பலேபாண்டியா கர்ணன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய பிஆர் பந்துலுவின் உதவி இயக்குநர்தான் ஆர்.கே.சண்முகம்.
கர்ணனுக்கு பிறகு முதல்முறையாக எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை பந்துலு எடுக்க முடிவாகி திரைக்கதை வளர்ந்தபோது, படத்தின் நச் டைட்டிலை சொன்னவர் சண்முகம்தான்.
அது பிடித்துப்போக ஆயிரம் ரூபாயை பரிசாக கொடுத்து வசனம் இவர்தான் என உறுதி செய்தார் எம்ஜிஆர்.
நெருப்பு வார்த்தைகள் கொண்டு சினிமா வசனங்களில் அனல் பறக்கவிட்டவர்கள், இளங்கோவன், கலைஞர், கண்ணதாசன், சக்தி கிருஷ்ண சாமி போன்றவர்கள்.
இவர்களுக்கு நேர்மாறாக மென்மையாய் சமூக படங்களில் வசனங்களை இழையோடவிட்டவர் ஆரூர்தாஸ்..
ஆனால் படம் முழுக்க வசனங்கள் அனைத்தையும் பஞ்ச் டயலாக்கே என்று சொல்கிற அளவுக்கு தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடையை ஏற்படுத்தியவர் ஆர்.கே.சண்முகம்தான்..
எம்ஜிஆர் பெரிதும் எதிர்பார்த்த ஆயிரத்தில் ஒருவன் அதனை நிரூபித்தது.
படம் முழுவதும் வசனங்கள் ஒவ்வொன்றும் பன்ச்…பன்ச்..பன்ச்தான். எம்ஜிஆரும் நம்பியாரும் மோதும் ஒரு காட்சி…
நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்ஜிஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்
தோல்வியே அறியாதவன் நான்
தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்..
இப்படி அனல் பறக்கும்..
விதியாம் விதி…கொதிப்படைந்த கூட்டம் விழித்தெழுந்துவிட்டால் விதிப்பயன் என்ன செய்யும்? ( ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் மிகவும் அதிகமாக ரசித்த வசனம் இது.)
நமக்கு வாய்ந்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் வாய்தான் காதுவரை நீளம்…
அடிமைக்கும் இனிமைக்கும் என்ன சம்மந்தம்?
இப்படியான வசனங்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை சாகாவரம் பெறச்செய்துவிட்டன...
எம்ஜிஆருக்காக சண்முகம் எழுதிய தேடிவந்த மாப்பிள்ளை பட வசனங்களின் 2.0 வெர்ஷன்தான் கிரேஸிமோகன் வசனங்கள்..
பேரு சோலைமலையா? யாரு இவன் பேரையே ஹேர்கண்டிஷன் பண்ணி வெச்சிருக்கான்..
அம்மாவுக்கு உடனே தகவல் தெரிவிக்கணும். தந்தி அடிப்போமா?
வேண்டாம் லெட்டர் போடுவோம் வேகமாக போய் சேரும்..
ரிக்ஷாக்காரன் படத்தில்..
வில்லு உடைந்தால் விறகாகும். கல்லு உடைந்தால் படியாகும் ஆனால் குடும்பம் குலைந்தால் குப்பை மேட்டுக்கு கூட தேறாது..
நடந்ததை நான் சொன்னேன், நடக்காததை வக்கீல் சொன்னாரு. நடக்கப்போறதை நீங்கதான் சொல்லணும்.. 1971-ன் ரிக்சாகாரன் படத்தில் கோர்ட் குற்றக்கூண்டில் இருந்து எம்ஜிஆர் பேசும் வசனம். சமீபத்தில் ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இதே வசனம் ரிப்பீட் ஆனது.
மூன்று பைசா என்றாலும் குங்குமத்தை நெத்தியிலதான் வெக்கிறோம். முப்பது ரூபா என்றாலும் செருப்பை கால்லதான் மாட்றோம்.. இது நல்ல நேரம் பட டயலாக்..
கன்னித்தாய், முகராசி நாடோடி, ரகசிய போலீஸ், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க உள்பட மொத்தம் 15 படங்கள் எம்ஜிஆருடன்..
பெரும்பாலும் முதற்காட்சியே வெற்றி, சக்சஸ் என்று எம்ஜிஆர் பேசுவதுபோல அமைப்பார்
சார் காஞ்சிபுரத்திலிருந்து ஏழுமலை வெங்கடேசன் பேசுகிறேன் என்று போன் போட்டால் நம்மை போன்ற சாமன்யனுடன் அவ்வளவு உற்சாமாக பேசுவார். ஆயிரத்தில் ஒருவன் டயலாக்குகளை, பாதரசத்தில் எதுவுமே ஒட்டுவதில்லை என ஆரம்பித்து நாம் சொல்லச் சொல்ல அவரும் போட்டி போட்டு டயலாக்குகளை சொல்வார். அவ்வளவு நினைவு சக்தி அவருக்கு.
"ஒருத்தருக்கு உதவி செய்யணும்னு நினைச்சா உடனே செஞ்சுடணும். கொஞ்சம் யோசிச்சா மனசு மாறிடுவோம்"
எம்ஜிஆருக்காக நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு அண்ணன் எழுதிய வசனம் இன்றும் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கொடுப்பதில்லை நான். எனக்கு என்ன பிடிக்குமோ அதை மக்களுக்கு பிடிக்க வைக்கிறேன். மக்களுக்கு விஷம் பிடிக்கும் என்றால் அதைக்கொடுத்துடமுடியுமா? ஒன்றிலிருந்து ஒன்றுதான் பெறப்படும். புதுசா எதுவும் கிடையாது. கல்லைத்தான் மண்ணைத்தான் ….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான்னு ஒரு பாட்டு. அந்தப் பாட்டோட இன்ஸபிரேஷன்தான் 'அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்' பாட்டு, ஒன்றிலிருந்து ஒன்று வரலாம். அது அப்படியே இருக்கக் கூடாது.
ஒண்ணுலேருந்துதான் ஒண்ணு.. பெரியவர் என் எஸ் கே சிரிப்பு சிரிப்புன்னு ஒரு பாட்டு பாடி இருப்பார். அதுலேருந்து உருவானதுதான் எனக்கொரு காதலி இருக்கின்றாள்.. பாட்டு. (அவர் இந்த பேட்டியில் ஏன் எங்கிருந்தோ வந்தாள் பாடலான சிரிப்பில் உண்டாகும் ராகத்தில் பாடலை குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை). அது மாதிரி....
நானும் தம்பி இளையராஜாவும் சேர்ந்து ஒரு படம் பண்ணோம். 'மெல்லத்திறந்ததது கதவு'ன்னு பேரு..
தம்பிக்கு ஒரு ஆசை.. என்கிட்டே சொன்னான்...
"அண்ணே.. சண்டி ராணில ஒரு பாட்டு போட்டீங்களே... வான்மீதிலே இன்பத்தேன் வந்து பாயுதே.... அந்தப் பாட்டு மாதிரி ஒரு பாட்டு போடலாமே" ன்னான்.
ஆர்மோனியத்தை எடுத்தேன். ஒன்ணுலேருந்துதான் ஒண்ணு... தானா எதுவும் இல்ல... அதனால இந்தப் பாட்டு.. வா வெண்ணிலா.. உன்னைத்தானே வானம் தேடுதே... வான் மீதிலே இன்பத்தேன் வந்து பாயுதே..
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
பெண் : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே பெண் : ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ எனக்கது போதும் பெண் : யே
எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மலர் போன்றபாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ
உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே அருமை. பாடல் பகிவுடன், தாங்கள் தந்த தகவல்களும் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பாடலாகட்டும், திரைக்கதையாகட்டும், வசனங்களாகட்டும், மக்களின் மனதிற்குள் நிலையாக இருக்குமாறு, போய் சேர ஒரு திரைப்படத்தை கூட்டுச்சேர்ந்து உருவாக்குபவர்கள், எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது என்பதை தங்களது இந்தப்பதிவு மிக அருமையாக சொல்லியுள்ளது. அதை தெளிவாக்கி நீங்கள் அழகாக சேர்த்து தந்த விஷயங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாடல்கள் இரண்டும் சிறப்பு. பலமுறைகளுக்கு மேலாக கேட்டிருக்கிறேன். பிறகு ஒரு முறை கண்டிப்பாக கேட்பேன். ஆயிரத்தில் ஒருவன் படம் கூட சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை பார்த்தேன். அருமையான வசனங்கள். அதன் விபரம் இன்று உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துகள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
வானம், வெண்ணிலா இந்த ஒற்றுமை தெரிகிறது. மற்றபடி ராகங்களுக்கிடையே ஏதும் ஒற்றுமை உள்ளதாவென சகோதரி கீதாரெங்கன் அவர்கள் சொன்னால் உண்டு. இல்லை நீங்களே அதுப்பற்றி அறிவீர்கள். இசையை ரசிக்க மட்டுந்தான் எனக்குத் தெரியும். ஆனால், அந்த இசையை வடித்து அதன் நுணுக்கங்களை பிரித்து ஆராய்ந்து, எங்களுக்கும் தந்து ரசிக்க வைப்பவர்கள் நீங்கள் இருவரும். அதற்கான ஒற்றுமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
நேற்றைய வியாழன் பதிவும் மிக நன்றாக இருந்தது. கொஞ்சம் வேலைகளுக்காக வெளியில் சென்று விட்டதால் எப்போதும் போல வர இயலவில்லை. மன்னிக்கவும். இரவு படுக்கும் போது முதல் பகுதியை (தங்களது பயணப்பகுதி) படித்தேன். மணம் வீசும்? மனம் கவர்ந்த மலர்கள் செடி, கொடிகள், இயற்கை படங்களுடன் அழகாக எழுதியுள்ளீர்கள். மாப்பிள்ளை வந்த கார் என்ற பரபரப்பில், தங்களுக்கு கிடைத்த வரவேற்பு சிறப்பு. "வாருங்கள்" என்ற இவ்வூரின் வரவேற்புக்கு நீங்கள் தந்த பதில் கண்டு சிரித்து ரசித்தேன். நானும் இங்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்த கொத்தில்லாதான். (வெளி வாசலில் தனியாக இறங்கினால்தானே வார்த்தைகளின் அர்த்தம் கொத்தும்.:))) )
பதிவின் பிற பகுதிகளையும் படித்து விட்டு பிறகு வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
இன்று இங்கு வந்து பதில் தந்தமைக்கு காரணம் என்னவென்றால், நேற்றைய பதிவுக்கு வந்த கருத்துகள் யாவும் "பரந்த வானம். " அதில் என் ஒரு கருத்து வானின் மேகத்திற்கிடையே வந்து சரியாக தெரியாமல் மறையும் "வெண்ணிலா" அதனால்தான் இன்றைய பதிவில், "வானம்" பளிச்சென இருக்கும் போதே இந்த "வெண்ணிலாவை" இங்கு தோன்றச் செய்து விட்டேன். ஹா ஹா ஹா (பகலின் சூரியனோடு போட்டியாக:))) ) நன்றி உடனே பதில் தந்தமைக்கு.
இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்களே என்றாலும் இரண்டாம் பாடல் அதிகம் ரசித்தது.
சினிமா குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. சினிமா ஒரு பொழுதுபோக்கு என்றாலும் எத்தனை பேரின் உழைப்பும் திறமையும் அதில் இருக்கின்றது என்பதை ரசிகர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை.
இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல். இரண்டையும் கேட்டேன்.
பாடல்களும் தகவல்களும் அருமை. வசனகர்த்தாதான் ஆர்கே சண்முகம்…. வசன பகிர்வில் //நமக்கு வாய்ந்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் வாய்தான் காதுவரை நீளம்…//
ரசித்தேன். இது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ராமதாஸ் பேசுவது அடிக்கடி கேட்டது. பாட்டுக்கு இடையே வரும்.
வெள்ளிக்கிழமை பதிவை நிறைய தகவல்களுடன் மெருகேற்றியிருக்கிறீர்இள்
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
வாங்க நெல்லை.. பாராட்டுக்கு நன்றி. வியாழனில் இடம்பெற வைத்திருந்த சினிமா செய்திகளை வெள்ளிக்கு ஒதுக்கி விட்டேன்.
நீக்குபாடல்கள் இரண்டும் சூப்பர் என்றாலும் அதற்கு அடிபோடும் தகவல்களை மிகவும் ரசித்துப் படித்தேன். உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்
பதிலளிநீக்குஜாம்பவான்கள் அதற்குண்டான தகுதிகளைப் பெற்றிருந்தனர்
நன்றி. MSV ஹிந்தி பாடலாசிரியருக்கு ஹிந்தி தெரியாமலே பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அவரே சொன்னாலும், எவ்வளவு நம்புவது என்று தெரியவில்லை!!
நீக்கு" வண்ணம் சேர் கலாமதி வீசும் வெண்ணிலாவிலே " என்பதுதான் பாடல் வரி.
நீக்குநன்றி. __/\__
நீக்குதிருத்தி விட்டேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே அருமை. பாடல் பகிவுடன், தாங்கள் தந்த தகவல்களும் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பாடலாகட்டும், திரைக்கதையாகட்டும், வசனங்களாகட்டும், மக்களின் மனதிற்குள் நிலையாக இருக்குமாறு, போய் சேர ஒரு திரைப்படத்தை கூட்டுச்சேர்ந்து உருவாக்குபவர்கள், எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது என்பதை தங்களது இந்தப்பதிவு மிக அருமையாக சொல்லியுள்ளது. அதை தெளிவாக்கி நீங்கள் அழகாக சேர்த்து தந்த விஷயங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாடல்கள் இரண்டும் சிறப்பு. பலமுறைகளுக்கு மேலாக கேட்டிருக்கிறேன். பிறகு ஒரு முறை கண்டிப்பாக கேட்பேன். ஆயிரத்தில் ஒருவன் படம் கூட சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை பார்த்தேன். அருமையான வசனங்கள். அதன் விபரம் இன்று உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துகள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. இரண்டு பாடல்களுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை, சாயல் தெரிகிறதா?
நீக்குவானம், வெண்ணிலா இந்த ஒற்றுமை தெரிகிறது. மற்றபடி ராகங்களுக்கிடையே ஏதும் ஒற்றுமை உள்ளதாவென சகோதரி கீதாரெங்கன் அவர்கள் சொன்னால் உண்டு. இல்லை நீங்களே அதுப்பற்றி அறிவீர்கள். இசையை ரசிக்க மட்டுந்தான் எனக்குத் தெரியும். ஆனால், அந்த இசையை வடித்து அதன் நுணுக்கங்களை பிரித்து ஆராய்ந்து, எங்களுக்கும் தந்து ரசிக்க வைப்பவர்கள் நீங்கள் இருவரும். அதற்கான ஒற்றுமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
நீக்குஇல்லை கமலா அக்கா... அந்த பழைய பாடலின் டியூனில் இருந்து தான் இந்த புதிய பாடல். கேட்கும்போது நன்றாகத் தெரியும்.
நீக்குஓ.. அப்படியா? பிறகு இரண்டு பாடல்களையும் கேட்கிறேன். நன்றி.
நீக்கு(Y)
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்றைய வியாழன் பதிவும் மிக நன்றாக இருந்தது. கொஞ்சம் வேலைகளுக்காக வெளியில் சென்று விட்டதால் எப்போதும் போல வர இயலவில்லை. மன்னிக்கவும். இரவு படுக்கும் போது முதல் பகுதியை (தங்களது பயணப்பகுதி) படித்தேன். மணம் வீசும்? மனம் கவர்ந்த மலர்கள் செடி, கொடிகள், இயற்கை படங்களுடன் அழகாக எழுதியுள்ளீர்கள். மாப்பிள்ளை வந்த கார் என்ற பரபரப்பில், தங்களுக்கு கிடைத்த வரவேற்பு சிறப்பு. "வாருங்கள்" என்ற இவ்வூரின் வரவேற்புக்கு நீங்கள் தந்த பதில் கண்டு சிரித்து ரசித்தேன். நானும் இங்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்த கொத்தில்லாதான். (வெளி வாசலில் தனியாக இறங்கினால்தானே வார்த்தைகளின் அர்த்தம் கொத்தும்.:))) )
பதிவின் பிற பகுதிகளையும் படித்து விட்டு பிறகு வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. ரசித்ததற்கும், இங்கு பதில் எழுதியதற்கும்.
நீக்குஇன்று இங்கு வந்து பதில் தந்தமைக்கு காரணம் என்னவென்றால், நேற்றைய பதிவுக்கு வந்த கருத்துகள் யாவும் "பரந்த வானம். " அதில் என் ஒரு கருத்து வானின் மேகத்திற்கிடையே வந்து சரியாக தெரியாமல் மறையும் "வெண்ணிலா" அதனால்தான் இன்றைய பதிவில், "வானம்" பளிச்சென இருக்கும் போதே இந்த "வெண்ணிலாவை" இங்கு தோன்றச் செய்து விட்டேன். ஹா ஹா ஹா (பகலின் சூரியனோடு போட்டியாக:))) ) நன்றி உடனே பதில் தந்தமைக்கு.
நீக்குஹா. ஹா.. ஹா... நன்றி கமலா அக்கா. ஆனால் அங்கு கொடுத்திருந்தாலும் பதில் சொல்லி இருப்பேன்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குதிரு ஓண நல்வாழ்த்துகள்..
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் பிடித்த பாடல்களே என்றாலும் இரண்டாம் பாடல் அதிகம் ரசித்தது.
சினிமா குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. சினிமா ஒரு பொழுதுபோக்கு என்றாலும் எத்தனை பேரின் உழைப்பும் திறமையும் அதில் இருக்கின்றது என்பதை ரசிகர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை.
உண்மைதான். சுலபமாக குறை கூறி விடுகிறார்கள். நன்றி வெங்கட்.
நீக்குவா வெண்ணிலா
பதிலளிநீக்குஉன்னைத்தானே வானம்
தேடுதே ...
அமலாவின் நடனமும் ஜானகியம்மா பாடலும் மிகவும் பிடிக்கும்
எனக்கும்.
நீக்குஇளையராஜாவும்.
S P பாலசுப்ரமணியம் குரலும்!
எம் எஸ் வி ஹிந்தி பாடலுக்கு வரிஎ டுத்துக் கொடுத்தாரா? அதுவும் ஹிந்தி தெரியாது என்றும் சொல்லியிருக்கிறாரே!
பதிலளிநீக்குஇப்படியான பாடல்கள் முன்பு இலங்கை வானொலியில் மதியம் போடுவாங்க . மதியப்பாடல்கள் என்று இப்படி நிறைய இருக்கும் இந்த மாதிரி ட்யூன்கள் ...பழைய பாடல்கள்.
வான் மீதிலே - பாட்டு கேட்ட நினைவிருக்கு இதைக் கேட்டதும் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்ற மெட்டிற்குப் போச்சு என்னை அறியாமலேயே
கீதா
அதுதான்... அதேதான்...
நீக்குபாடல்களோடு தகவல்கள் சூப்பர்.
பதிலளிநீக்கு//தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்..//
அட! இந்த டயலாக் நல்லாருக்குல்ல?
கீதா
ஹையோ... நிறைய டயலாக்குகள் ரொம்ப ரசிக்கும்படி இருக்கும்!
நீக்குவசனங்கள் எல்லாமே தூள்!!! செம. ஹேர்கண்டிஷன் - சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குசண்முகம் அவருக்கு எவ்வளவு திறமை!
கீதா
ஆமாம். இந்தக் காலத்தில் நாயகர்களுக்கு ஒரு பன்ச் டயலாக் எழுத்துவதற்கே வசனகர்த்தாக்கள் நாக்கு தள்ளும்போது வரிக்கு வரி பன்ச் கொடுத்தவர்,
நீக்குஅதைச் சொல்லுங்க, ஸ்ரீராம். ஆனா பாருங்க அப்ப கூட அங்கிருந்துதான் சிலதை உருவறாங்களோ? இல்லை அப்படி அமைகிறதோ same thought போல
நீக்குகீதா
ஆமாம் . சிங்கம் சிங்கிளாத்தான் வரும் டயலாக் ரொம்பப் பழசு. உருவி இப்போ போட்டாங்க...
நீக்குவான்மீதிலே இன்பத்தேன் வந்து பாயுதே.... அந்தப் பாட்டு மாதிரி ஒரு பாட்டு போடலாமே" ன்னான். //
பதிலளிநீக்குஅட!!!! அந்த முதல் பாட்டைக் கேட்டப்ப டக்குனு என் மனதில் வந்த பாட்டுதானா இவங்க போட்டது!!
'கீதா பரவால்ல....உனக்கும் கொஞ்சம் அங்க தொட்டு இங்க தொட்டு சின்ன கடுகு சைஸ் ஞானம் இருக்கு!!!!!"
வா வெண்ணிலா உன்னைத்தானே பாடல் ரொம்பப் பிடிச்ச பாடல். பஹாடி ராகம்.
கீதா
அடடே... இனிமே நீங்க வெறும் கீதா ரங்கன் இல்ல.. கில்லாடி கீதா ரங்கன்!
நீக்குஇரண்டு பாடல்களும் அருமை . இரண்டாவதுபாடல் பிடித்தமானது.
பதிலளிநீக்குபாடல்களுடன் அவற்றினைப் பற்றிய தகவல்களும் தந்துள்ளீர்கள் .அறிந்துகொண்டோம்.
இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஇரண்டையும் கேட்டேன்.
பாடல்களும் தகவல்களும் அருமை.
வசனகர்த்தாதான் ஆர்கே சண்முகம்…. வசன பகிர்வில்
//நமக்கு வாய்ந்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் வாய்தான் காதுவரை நீளம்…//
ரசித்தேன். இது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ராமதாஸ் பேசுவது அடிக்கடி கேட்டது. பாட்டுக்கு இடையே வரும்.