கேள்வி - பதில்கள்
கீதா சாம்பசிவம் :
தொழில் நுட்பம் முன்னேறாக் காலத்துத் திரைப்படங்களை விடக் கதையம்சம் இப்போதைய படங்களில் உள்ளதா? பாடல்களில் இசை கேட்கும்படி உள்ளதா? வசனங்கள் இப்போதைய படங்களில் தெளிவாக உள்ளனவா?
# வசனம் நல்ல வகையில் மாறி இருக்கிறது. கதை சற்று பலவீனமாகவும் இயல்பில்லாமலும் இருக்கிறது. பாடல்கள் ஒரே மாதிரியாக மனதில் நிற்காமல் கடனே என்று ஒட்டாமல் இருக்கிறது.
வசனங்களிலும் கருத்துடன், நடிப்பிலும் முகபாவங்கள் காட்டி நடிக்கும் அந்தக்கால நடிப்புக்கும். இப்போது வெறும் உதட்டசைவுக்கு நடிச்சுப் பின்னர் டப்பிங் பேசும் இந்தக்கால நடிப்பிலும் எது?
# அந்தக் காலத்திலும் வசனம் தனியாகப் பதிவு செய்து ஒட்ட வைத்ததுதான். நடிப்பு என்று வந்தால் இப்போது கொஞ்சம் கொஞ்சம் இயல்பாக நடிப்பது வளர்ந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். நான் படங்கள் பார்ப்பது ரொம்பவும் கம்மி என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள வேண்டும்.
& நான் பார்த்ததில், 'மொழி' படத்துக்குப் பிறகு நல்ல நடிப்பு என்பது எந்தப் படத்திலும் நான் காணவில்லை. நானும் படம் பார்ப்பது மிகவும் கம்மி என்று சொல்லிக் கொள்கிறேன்.
உறவுகளுக்கிடையே திருமணம் என்பது ஏற்கக் கூடியதா? விஞ்ஞான ரீதியாகக் கூடாது என்றே சொல்கின்றனர். ஆனால் தற்காலங்களில் மீண்டும் உறவுகளை ஏற்றுக் கொண்டு திருமணம் முடிப்பதாக முகநூல் கட்டுரைகள் சிலவற்றில் படிக்க நேர்ந்தது. அது சரியா?
# உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது நீண்ட கால அடிப்படையில் சில விரும்பத்தகாத அம்சங்களை கொண்டு வருகிறது என்பதில் உண்மை இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனால் சமுதாயத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு விதமான கட்டாயம் அதற்கு முன்னே வந்திருக்கும். இன்றும் கூட சில பிரதேசங்களில் உறவு முறைப் பையன்-பெண் என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது என்பதும் நாம் அறிந்ததுதானே.
நெல்லைத்தமிழன்:
இப்போது இறைவன் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?
# என்ன கேட்டாலும் இறைவன் கொடுப்பார் என்ற உறுதி இருக்குமானால் " லோகா சமஸ்தா சுகினோ பவந்து " தான் கேட்க ஆசை. பேராசைதான் - என்ன செய்ய ?
& இறைவா கரூரில் அநியாயமாக உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு மீண்டும் உயிர் கொடு. சினிமா மாயையிலிருந்து வெளிவர முட்டாள் ரசிகர்களுக்கு புத்தி கொடு.
யாரிடமும் வெளியிட முடியாது என்ற கண்டிஷனோடு, உங்களுக்கு யாருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டாலும், நடக்கப்போவதைப் பற்றிக் கேட்டாலும் சொல்ல ஒருவர் இருந்தால், அந்தத் தகவல்களால் உபயோகமா இல்லையா?
# நிச்சயமாக இல்லவே இல்லை.
& அதற்கு அவர் கட்டணம் வசூலித்தால், அவருக்கு உபயோகம்! மற்றபடி எதுவும் யாருக்கும் உபயோகம் இல்லை!
நீங்கள் சின்னக் குழந்தையாக உணரும் தருணங்கள் என்ன?
# உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த உணர்வு கடைசியாக எப்போது வந்தது என்று நினைவு கூட இல்லை.
& குழந்தைகளைப் பார்த்து, அவர்களுடன் சிறு விளையாட்டுகள் ஆடும்போது.
எதிர்மறைச் சிந்தனை, பேச்சு உள்ளவர்களிடம் நட்புக் கொள்வது நல்லதா?
# நல்ல மன இணக்கம் இருக்குமானால் எந்த இரண்டு பேரிடையேயும் நல்ல நட்பு இருக்க முடியும்.
& வடிவமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவில் நான் வேலை பார்த்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வடிவமைப்பில் ஒவ்வொரு மாற்றம் செய்யும் போதும், FMEA (Failure Mode and Effects Analysis ) என்ற ஆய்வு செய்வோம். அந்த நேரத்தில், எதிர்மறை கருத்துகள் + சிந்தனைகள் தேவைப்படும். இந்த மாற்றத்தால், இந்த வகை failures ஏற்படக்கூடும் என்று பட்டியல் இட்டு, அது நிகழ்ந்தால் என்ன ஆகும்? நிகழாமல் இருக்க என்ன நடவடிக்கை / மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை விவரமாக பதியவேண்டும். எனவே, இந்த ஆய்வின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்மறை சிந்தனை தேவை.
அடுத்தவர்களின் வெற்றிகள்,சந்தோஷங்கள் பலரை பொறாமைப்படச் செய்வதன் காரணம் என்ன?
# நமக்கும் இதுபோல் இல்லையே என்ற ஏக்கம் இயல்பானது. அவருக்கு மட்டும் இருக்கிறதே என்று நினைத்து வெதும்புவது அதன் அடுத்த நிலை.
& என்னைப் பொருத்தவரை, எனக்கும் அப்படி பொறாமை கிடையாது; என்னைச் சுற்றி உள்ளவர்களிடமும், நெருங்கிய சொந்தங்களிலும் அப்படி பொறாமை கொண்டவர்களை நான் பார்க்கவில்லை.
நேர்மையாக பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவருடைய மனைவி, குழந்தைகளாக அமைவது வரமா இல்லை தண்டனையா?
# அதிக ஆடம்பரம் பேராசை இல்லாதவர்களானால் நிச்சயம் தண்டனை இல்லை.
& வரம்தான்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பிறர் எழுத்துக்களை தன் எழுத்தாக போட்டுக் கொள்கிறவர்கள், தான் எழுதியதை சுஜாதா போன்ற பிரபலமானவர் எழுதியதாக பகிர்கிறவர்கள் இரண்டு வகையினர்களையும் எப்படி கருதுகிறீர்கள்?
# வெவ்வேறு வகைத் திருட்டு தான் - வேறென்ன ?
ஒருவரது படைப்பை வேறொருவர் பயன்படுத்தினால் அது படைப்பின் தரத்துக்கான சான்று. பிரபலங்கள் பெயரில் சபலங்கள் வந்தால் பிரபலங்களின் பிரசித்திக்கான அங்கீகாரம்.
நம்மிடம் 18 புராணங்கள் இருக்கின்றன,இருந்தாலும் பெளராணிகர்கள் ராமாயணம், மகாபாரதம், நாராயணீயம் என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது ஏன்?
# எந்தப் புராணத்தில் விவரித்துச் சொல்லும் சாத்தியங்கள் அதிகமோ, எங்கு சிறந்த போதனைகளை அதிகம் இணைத்துச் சொல்ல முடியுமோ , எதில் சிறந்த பயிற்சி இருக்கிறதோ அதுதான் முதன்மை பெற்றாக வேண்டும் அல்லவா ? " தியாகராஜ கீர்த்தனைகள் வழியே ராமாயணம் " என்று ஒருவர் மட்டுமே முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றார்.
& வேத வியாசர், தான் இயற்றிய எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து, அவற்றின் சாரத்தை மட்டும் அமைத்துக் கொடுத்ததுதான் ஸ்ரீமத் பாகவதம் என்று படித்தேன். பாகவத சப்தாகம் கேட்டால், அதிலேயே எல்லா அவதாரங்களும் அந்த அவதார நோக்கமும், பலனும், புண்ணியமும் நமக்குக் கிடைத்துவிடும்.
= = = = = = = = =
படமும், பதமும்.
நெல்லைத்தமிழன் :
பொதுவா நாம வானவில்லை எப்போதவது கண்டிருப்போம். ஒரு தடவை எங்கள் வீட்டிலிருந்து வெளியில் பார்த்தபோது வானத்தில் இரண்டு வானவில்கள் தெரிந்தன. இது அபூர்வமானது என்று நினைக்கிறேன். அப்போது எடுத்த படம்.
மேலே இருக்கும் வானவில் கொஞ்ச நேரத்தில் மங்கிவிட்டது.
- - - - - - - -
விகடன் தீபாவளி மலர் (என்று நினைவு) ஒன்றில், தஞ்சைப் பகுதி உணவு, விருந்து என்பதையெல்லாம் விஸ்தாரமாகப் போட்டிருந்தார்கள். தாட்ட இலை விருந்து என்று அதனைப் பற்றி எழுதியிருந்தார்கள்.
அதைப் படித்ததிலிருந்து நான் அடிக்கடி வீட்டில், எனக்கு மிகப் பெரிய வாழை இலையில், சுடச் சுட எல்லா வகைகளும் (சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம் என்று விஸ்தாரமாக) சாப்பிடணும் என்று ஆசை எனச் சொல்லிக்கொண்டிருப்பேன். திருமணம் போன்ற விசேஷங்களில் ஸ்பூனில் பரிமாறும் கலாச்சாரம் எனக்குப் பிடிப்பதில்லை என்றெல்லாம் சொல்வதை என் பெண் கேட்டிருந்திருப்பாள் (அவளுக்கு அப்போதெல்லாம் சிறிய வயது). 2019ல் நான் பெங்களூருக்கு புது வீட்டின் (தற்போது இருக்கும் Flat) interior வேலைகளுக்காக அடிக்கடி பெங்களூர் வந்துவிட்டு பிறகு சென்னை அடையாறு திரும்புவேன். அப்படி ஒரு சமயம், காலையில் என் பெண் அடையாறிலிருந்து போனில் கூப்பிட்டு, வழியில் எங்கும் சாப்பிடவேண்டாம், நேர வீட்டுக்கு வாங்கோ என்று சொன்னாள். அவள் எதற்குச் சொல்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. எங்கேனும் வெளியில் போகணும் என்பதற்காகவா என்றெல்லாம் யோசித்தேன். வீட்டிற்கு மாலை 5 மணிக்குப் போய்ச்சேர்ந்தேன்.
வளாகத்தைச் சுற்றி (வளாகத்திற்குள் காம்பவுண்ட் பகுதியில்) நிறைய வாழை மரங்கள் உண்டு. நான் வளாகத்துக்கு வந்த உடனேயே அவள் கீழே வந்து ஒரு நல்ல வாழை இலை பறிப்போம் என்றாள். நானும் இருந்ததில் மிகப் பெரிய வாழை இலை ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தேன்.
அவள் முந்தைய நாளில் தொடங்கி இனிப்பு, கார வகைகள் என்று பலவற்றைச் செய்திருக்கிறாள். நான் வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் சாம்பார், காய்கறி கூட்டு, சாதம் போன்றவற்றையும் செய்திருக்கிறாள். மொத்தம் 51 அல்லது 58 வகைகள் என்று நினைவு. நான் மலைத்துவிட்டேன். அவளிடம் அப்போது சொன்னேன், 'மனதில் ஆசை இருக்கும் அளவு சாப்பிடும் கெப்பாசிட்டி என்னிடம் இல்லை' என்று. ஆனாலும் உட்கார்த்தி வைத்து எல்லாவற்றையும் பரிமாறி என்னைச் சாப்பிடச் சொன்னாள். என்னால் பலவற்றையும் சாப்பிட முடியவில்லை - வயிற்றில் இடமில்லை, ஆனால் நீ இவ்வாறு எனக்கு என்றோ சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு மிகப் பெரிய வாழை இலையில் இவ்வளவு ஐட்டங்கள் செய்து பரிமாறியதை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றேன். நினைவுக்காக பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
உங்களுக்கும் இது போல உங்கள் மகளோ மகனோ நினைவில் நிற்கும்படியான காரியத்தைச் செய்திருந்தால் எழுதுங்கள். (எனக்குத் தெரியாது, எல்லாத்தையும் சாப்பிடணும், முதல்ல எல்லா ஐட்டங்களையும் பரிமாறுகிறேன் என்று ஒவ்வொன்றாகப் பரிமாறி, பிறகு நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். முழுவதும் பரிமாற இலையில் இடமில்லை)
= = = = = = = = =
KGG பக்கம்:
மதிப்புக் கூட்டல் பற்றி என் அலுவலக நாட்களில், எனக்கு வகுப்பு நடத்திய உயர் அதிகாரி சொன்ன உதாரணம் ஞாபகம் வந்தது.
ஒரு கடப்பாறை எடை ஒரு கிலோ என்று வைத்துக் கொள்வோம். இதை விற்றால் (இன்றைய விலையில்) ஒரு கிலோ இரும்பு விலை கிலோ ஒன்றுக்கு ரூ 40 முதல் 70 ரூபாய் வரை. தயாரிப்பு செலவு : ரூ 20. இதர செலவுகள் ரூ 10 என்று வைத்துக்கொண்டால் 1 கிலோ கடப்பாறை விலை அதிக பட்சம் ரூ 100 இருக்கும்.
அதே அளவு இரும்பை எடுத்து ஒரு தொழில் அதிபர், பேப்பர் கிளிப் தயாரிக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம்.
இந்தக் கிளிப்புகள் 150 ன் விலை ரூ 63. ஒரு கிளிப் விலை 42 பைசா . சரி 40 பைசா என்று வைத்துக்கொள்வோம்.
நான் இப்போது நிறுத்துப் பார்த்ததில், இந்தக் கிளிப் 20 ன் எடை = 5 கிராம். ஒரு கிளிப் = 250 மில்லி கிராம். 4 கிளிப் சேர்ந்து ஒரு கிராம்.
அப்போ 1000 கிராம் = 4000 கிளிப்.
4000 கிளிப் விலை = 4000 x 40 = 160000 பைசா = ரூ 1600.
இரும்பை 1 கிலோ கடப்பாறையாக விற்றால் = ரூ 100.
அந்த ஒரு கிலோ இரும்பை பேப்பர் கிளிப்பாக உரு மாற்றி விற்றால் ரூ 1600.
This is an example of value addition.
ஆக - குண்டூசி தயாரித்தவர், கடப்பாறை செய்து விற்றால், அது படிப்படியான அபிவிருத்தி அல்ல! பயங்கர சறுக்கல் !
- - - - - - - - - - -
சென்ற புதன் பதிவில், ட்ராகன் பழச் செடி படம் போட்டிருந்தேன். பிறகு டிராகன் பழத்திற்கு தமிழ் என்ன என்று ஆரைய்ச்சி செய்தேன். குஜராத் அரசு அந்தப் பழத்திற்கு கமலம் என்று பெயரிட்டுள்ளது தெரிய வந்தது.

கமலம் பழம் மருத்துவப் பயன்களைப் பிறகு தெரிந்துகொண்டேன்.
நன்மை 1: இரத்த சர்க்கரை/ நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)இந்நாட்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் நோயாக கருதப்படுவது சர்க்கரை நோய் ஆகும்; இரத்த சர்க்கரையின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் தீவிரமானது – இதை சரியான அளவில் வைக்க பல மக்கள் ‘சர்க்கரை இல்லா’ மற்றும் ‘கார்போஹைட்ரேட் இல்லா’ உணவுகளை உட்கொண்டு வருவதுண்டு. இது இனிப்புகளை விரும்பும் மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருக்கலாம்.இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும்.
இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிராகன் பழத்தில் உள்ள பாலிஃபினால்கள், கரோட்டினாய்டுகள், தியோல்கள், டோகோஃபெரல்கள், குளுகோஸைனோலேட்கள் போன்ற சத்துக்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன.
மேலும் டிராகன் பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது அதிக கிளைகெமிக் அளவுகள் உள்ள உணவுகளை உண்டாலும் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் காக்க உதவுகிறது.மருந்தியல் ஆராய்ச்சி இதழில், சர்க்கரை நோயாளிகளில் பொதுவாக ஏற்படும் பெருநாடி விறைப்பு காரணமாக ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தின் மீது பயனுள்ள விளைவை ஏற்படுத்த டிராகன் பழம் உதவுகிறது என்ற தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
நன்மை 2: இதய ஆரோக்கியம். டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தக்குழாய்கள் விறைப்புத் தன்மையுடன் இருப்பதை குறைக்க உதவுகிறது; இவ்விரண்டு முக்கிய விஷயங்களும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்க டிராகன் பழம் உதவும் என்பதை உறுதிப்படுத்துகிறது (2).கூடுதலாக, இப்பழத்தில் உள்ள சரியான மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளின் அளவு இதயத்தை ஆரோக்கியமான வடிவில் வைத்திருக்க உதவும்.
நன்மை 3: புற்றுநோய்உடலில் புற்றுநோய் செல்கள் பெருக்கமடைவதை தடுக்க டிராகன் பழம் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கருத்து தெரிவிக்கின்றன. டிராகன் பழத்தில் லைகோபீன் எனும் என்சைம், வைட்டமின் சி, ஆன்டி கார்சியோனேஜிக் குணாதியங்களை கொண்ட கரோட்டின் எனும் சத்து போன்றவை அதிகம் காணப்படுகின்றன இச்சத்துக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுகின்றன.சில குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுக்க உதவும் பாலிஃபினால்கள் எனும் சத்து, டிராகன் பழத்தின் தோல்களில் அதிகம் காணப்படுகின்றன.
நன்மை 4: கொலஸ்ட்ரால்இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கொலஸ்ட்ரால் என்பதாகும்; உலக மக்கள் தொகையில் 39% மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களில் கொலஸ்ட்ரால் எனும் பிரச்சனை, 40% முதல் 37% வரை என்ற அளவில் அதிகம் காணப்படுகிறது; இதனால் ஒவ்வொரு வருடமும் 2.6 மில்லியன் மக்கள் இறந்து வருகின்றனர்.சில வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வந்தால், அதுவும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பது உட்பட – ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. கொலஸ்ட்ராலை குறைப்பது என்பது உடலில் உள்ள எல்லா கொழுப்புகளையும் அகற்றுவது என்று பொருளல்ல. ஏனெனில் உடலின் சரியான இயக்கத்திற்கு அன்சாச்சுரேட்டட் வகை சார்ந்த கொழுப்புகளும் அவசியம் தான்; டிராகன் பழ விதையில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்புகள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் (4). டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
நன்மை 5: உடல் எடை மேலாண்மை. தினசரி, பிடித்த உணவுகளை உட்கொண்டு, அதனுடன் டிராகன் பழத்தை எடுத்துக் கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். தொடர்ந்து அதிக மாதங்களுக்கு எடையை குறைக்க உதவும் டயட் உணவுகள், எடையை குறைப்பதற்கான காத்திருப்பு போன்றவை உடல் எடை குறைப்பு செயல்பாட்டின் மீது வெறுப்பையே ஏற்படுத்திவிடும்; ஆனால், டிராகன் பழம் அல்லது டிராகன் பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொண்டால் எளிதில், விரைவில் எடையை குறைக்க முடியும்.இவை தவிர, இப்பழம் ஒரு சுவையான நொறுக்குத்தீனியாக, குறைந்த கலோரி அளவு கொண்டதாக இருக்கும். இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், அவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன.
நன்மை 6: வயிறு சார்ந்த பிரச்சனைகள் (செரிமானம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்). டிராகன் பழம் எனும் இந்த குறிப்பிடத்தக்க பழம் செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற எல்லா விதமான தீவிர வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். மலச்சிக்கல் பிரச்சனையால் பாடுபடும் மக்களுக்கு நிவாரணம் அளிக்க நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இப்பழம் அதிகம் உதவும்
டிராகன் பழத்தில் உள்ள இச்சத்துக்கள் மலம் எளிதில் வெளியேற உதவி, உணவு செரிமான உறுப்புகள் வழியாக சிக்கலின்றி செரிமானமாக உதவுகிறது; மேலும் டிராகனில் உள்ள நார்ச்சத்து நாள்கணக்காக சேர்ந்து காணப்படும் மலத்தை வெளியேற்றி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறைபாடை – Irritable Bowel Syndrome (IBS) குணப்படுத்த உதவுகிறது.
நன்மை 7: ஆர்த்ரிடிஸ் என்பது எலும்பு மூட்டுகளில் தீவிர வலி, எரிச்சல், நகர இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்பட காரணமாக திகழ்கிறது; டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் இந்த தீவிர நோயையும் சரி செய்ய இயலும்.டிராகன் பழம் ஆர்த்ரிடிஸ் வலியை சரிப்படுத்த உதவுவதால், இப்பழத்தை அழற்சி எதிர்ப்பு பழம் என்று அழைப்பர்.
நன்மை 8) மருத்துவ குணம் நிறைந்த இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள முயலுங்கள், ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து முழுமையான நிவாரணம் பெறுங்கள்.நன்மை 8: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்டிராகன் பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது; மேலும் இப்பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள், அத்தியாவசிய கூறுகள், திடமான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களான நியாசின், வைட்டமின் பி1, பைட்டோஅல்புமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவை நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டு திகழ்கின்றன.
நன்மை 9: கர்ப்ப காலத்திற்கு நல்லதுகர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்; இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. பல பெண்களுக்கு நிறைமாதத்தில் ஏற்படும் இரத்தசோகை பிரச்சனையை இப்பழம் உட்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும். டிராகன் பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவுகளை சரியாக வைக்க உதவுகிறது மற்றும் வளரும் கருவின் உடலிலும் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல தேவையான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இப்பழத்திலுள்ள கார்போஹைட்ரேட் கர்ப்பிணி பெண்களுக்கு ஆற்றல் அளிக்க உதவுகிறது; கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் ஃபோலேட் சத்து, கருவின் உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவதோடு, குழந்தையின் நரம்பு மண்டல குழாய்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் டிராகன் பழத்தை உட்கொண்டால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான சிக்கலையும், மலச்சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.
நன்மை 10: பலமான எலும்புகள் மற்றும் பற்கள். டிராகன் பழம் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்த்துக்களை கொண்டது; ஆகவே இது எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்த உதவும்.இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் ஒன்றையொன்று அதிகம் சார்ந்தவை; கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், எவ்வித பல் குறைபாடுகளும் ஏற்படாது. இப்பழம் எலும்புகளின் அடர்த்தியை மற்றும் வேர்ப்பகுதியின் எடையை அதிகரித்து, எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.
நன்மை 11: டெங்கு நோயாளிகளுக்கு நல்லது. டெங்கு போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குணமடைய அதிக காலம் ஆகும்; நோய் தீவிரமாக இருந்து சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் இறப்பு கூட ஏற்படலாம். ஒரு சாதாரண நபரின் உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மைக்ரோ லிட்டர் அளவுக்கும் 150,000 – 450,000 என்ற அளவில் இருக்கும்; ஆனால் டெங்கு நோயாளிகளில் வெறும் 10,000 பிளேட்லெட்டுகள் மட்டுமே இருக்கும்.இரத்த குழாய்களில் இரத்தம் கசிந்து, இரத்த உறைதல் ஏற்படுவதை தடுப்பது தான் பிளேட்லெட்டுகளின் முக்கிய பணி ஆகும்; இந்த குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில் அது இரத்தக்கசிவு நோய் ஏற்பட காரணமாகலாம். டிராகன் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் மற்றும் இப்பழத்திலுள்ள பலம் வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டு டெங்கு போன்ற தொற்று நோய்களை சரிசெய்யவும் முடியும்.
நன்மை 12: உடல் செல்களை பழுதுபார்க்கும். டிராகன் பழத்தில் சில குறிப்பிடத்தக்க புரதங்கள், என்சைம்கள் உள்ளன; இவை உடல் செல்களை புதுப்பிக்கவும், செல்களை பழுது பார்க்கவும் உதவும்; இச்சத்துக்கள் எரிந்த உடல் காயங்கள், புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன. டிராகன் பழம் மிகச்சிறந்த குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
நன்மை 13: மூச்சுக்குழாய் கோளாறுகள். மூச்சுக்குழாய் கோளாறுகள் என்பது சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களால் ஏற்படும் ஆஸ்துமா, இருமல் போன்றவை ஆகும்; மூச்சுக்குழாய் கோளாறுகளை சரிசெய்ய உதவும் முக்கிய விஷயம் வைட்டமின் சி ஆகும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.
நன்மை 14: ஹீமோகுளோபினை அதிகரிக்கும். இரத்த சோகை என்பது பொதுவாக பெண்களில் அதிகம் ஏற்படக்கூடிய நோய்க்குறைபாடு ஆகும்; இதனை அலட்சியம் செய்யாமல் இக்குறைபாட்டினை தீர்க்க உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஹீமோகுளோபின் அளவுகள் குறைந்து கொண்டே வந்தால், அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடலாம்.இரத்தசோகையை சரி செய்ய ஒரு மிகச்சிறந்த மருந்து டிராகன் பழம் ஆகும்; இதில் இருக்கும் இரும்புச்சத்து, அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 8% சதவிகிதத்தை வழங்குகிறது. இப்பழத்தில் காணப்படும் வைட்டமின் சி சத்துக்கள் உணவுப்பொருட்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகின்றன.
நன்மை 15: பிறவி கண் அழுத்த நோயை தடுக்கும். பிறவி கண் அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்க டிராகன் பழம் உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இப்பழத்தில் மனிதர்களின் கல்லீரலில் மட்டுமே காணப்படும் ஒரு புரதமான, P450 சைட்டோகுரோமை தடுக்கும் சக்தி நிறைந்துள்ளது மற்றும் இது நுரையீரல், சிறுநீரகத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இப்புரதம் பிறவி கண் அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து, அந்நோயை தடுக்கிறது.
நன்மை 16: பசி உணர்வை அதிகரிக்கும். பசியே எடுக்கவில்லையா? அது உடலில் சில நோய்கள் ஏற்பட்டிருப்பதை குறிக்கும்; காய்ச்சல், இரத்தசோகை போன்ற நோய்கள் உடலில் உண்டானால், அவை பசி உணர்வை அழித்துவிடும். பசி உணர்வே ஏற்படாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ ஒரு அற்புத பழம் உள்ளது, அது தான் டிராகன் பழம் ஆகும்.டிராகன் பழம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, பசி உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
நன்மை 17: கண் பார்வையை மேம்படுத்தும். மங்கலான பார்வை மற்றும் கண்களின் பின்புறத்தில் வலியை அனுபவிக்கும் நபர்கள், கண்டிப்பாக டிராகன் பழத்தை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்பழம் கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்; இதை நிகழ்த்த டிராகன் பழத்திலுள்ள பீட்டா கரோட்டின், பிற அத்தியாவசிய தாவர நிறமிகள் போன்ற சத்துக்கள் உதவுகின்றன. டிராகன் பழத்திலுள்ள சத்துக்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் இறந்த – தேவையற்ற செல்களிடம் இருந்து காத்து, கேடராக்ட், மாகுலர் சிதைவு போன்ற கண் தொடர்பான நோய்கள் எதுவும் ஏற்படாமல் காக்க உதவுகின்றன.
நன்மை 18: மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும். ஒட்டுமொத்த மனித உடலின் இயக்கமும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் அமைந்துள்ளது என்பது எல்லோரும் சந்தேகம் அன்றி அறிந்த உண்மையாகும். உடல் உறுப்புகள் சரியாக இயங்க வேண்டும் எனில், உறுப்புகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளித்திருக்க வேண்டியது அவசியம்.டிராகன் பழம், நம் உடலில் RBC அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது; இதிலுள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் மூளையில் சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி, மூளையின் இயக்கத்தை அதிகரிக்க உதவும்.டிராகன் பழம் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள்- Skin Benefits of Dragon Fruit in Tamilவிசித்திரமான தோற்றம் கொண்ட இந்த டிராகன் பழம் சருமத்திற்கு அதீத பயன்களை அளிக்கிறது; தீவிர சூரிய வெப்பம், எரிச்சல், முகப்பரு போன்ற நிலைகளில் இருக்கும் சருமத்தை காத்து, சருமத்தை ஆரோக்கியமானதாக மாற்ற இப்பழம் உதவுகிறது.
டிராகன் பழம் தோலிற்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதுமையை எதிர்த்து போராடும்சுருக்கங்கள், தொங்கும் தோல், சருமத்தில் காணப்படும் கோடுகள், பொலிவின்மை போன்றவை வயதாவதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும். இந்த மாற்றங்கள் இள வயதிலேயே ஏற்படுகிறது எனில், அது சருமத்தின் ஆரோக்கியம் குன்றியிருப்பதை உணர்த்துகிறது அல்லது தவறான அழகு சாதன பொருட்கள் பயன்பட்டால் தோலின் ஆரோக்கியம் கெட்டுவிட்டிருப்பதை உணர்த்துகிறது.உடல் செல்களில், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் பாதிப்பால் வயதாகுதல் ஏற்படலாம்; இதனை சரி செய்ய பல இயற்கை வழிகள் உள்ளன. அந்த வகையில் டிராகன் பழத்தை பயன்படுத்தி முதுமையை எப்படி எதிர்த்து போரிடுவது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.இந்த அருமையான பழம் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது; இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் இறந்த தேவையற்ற செல்களை எதிர்த்து போராட கூடியது .
இப்பழத்தை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இளமையான, மென்மையான சருமத்தை பெறலாம். சோர்வடைந்த சருமம், சுருக்கங்கள், கோடுகள் கொண்ட சருமத்தை சரி செய்ய கீழ்க்கண்ட முறையை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
தேவையான பொருட்கள்½ டிராகன் பழம்1 மேஜைக்கரண்டி யோகர்ட்நீங்கள் செய்ய வேண்டியது என்ன?டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து, மிருதுவான பேஸ்ட் தயாரித்து கொள்ள வேண்டும்.இப்பேஸ்ட்டில் யோகர்ட்டை கலந்து கொள்ளவும்.இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.மிதமான சூடு கொண்ட நீர் கொண்டு முகத்தை கழுவி மிருதுவான துண்டு கொண்டு முகத்தை துடைக்கவும்.இம்முறையை இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒருமுறை என செய்து வந்தால், முதுமையான தோற்றம் முற்றிலும் மறைந்து, இளமையான சருமம் கிடைக்கும்.நன்மை 2: சூரிய வெப்பத்தால் எரிச்சலடைந்த சருமத்தை இதமாக்கும்சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் பல காரணிகள் பங்கு வகித்தாலும், முதன்மை காரணமாக திகழ்வது சூரிய வெப்பம் ஆகும். சூரிய வெப்பத்தினால் தோலில் ஏற்பட்ட எரிச்சல், தடிப்புகள், சிவந்து போன சருமம் போன்றவற்றை இயற்கையான முறையில் சரிசெய்ய முடியும். டிராகன் பழத்தினால் செய்த பேஸ்ட் தோலில் ஏற்படும் அழற்சியை போக்கவும், சருமத்தில் ஏற்பட்ட சிவப்பு தடிப்புகளை சரிசெய்யவும் உதவும்.
டிராகன் பழத்தில் அற்புதமான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது; வைட்டமின் ஈ மற்றும் சி ஆகிய இரு சத்துக்களும் சருமத்தை புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து காக்க உதவும்; மேலும் சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட எரிச்சலை இதமாக்கவும் உதவும் .
தேவையான பொருட்கள்: ¼ டிராகன் பழம்1 வைட்டமின் ஈ மாத்திரைநீங்கள் செய்ய வேண்டியது என்ன?டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து கூழாக்கி கொள்ளவும்.டிராகன் பழ கூழில் வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.சூரிய வெப்பம் தாக்கிய சரும பகுதியில் இக்கலவையை தடவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி, சருமத்தை காய வைக்கவும்.இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.நன்மை 3: முகப்பருவை குணப்படுத்தும்பரு என்பது எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை மற்றும் இது பூப்படையும் காலத்திலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. இதனை சரிசெய்ய பலரும் கடைகளில் கிடைக்கும் செயற்கை அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு; இதனால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, கட்டாயம் பக்க விளைவு கிடைக்கும்.முகப்பருவை சரி செய்ய பல்வேறு இயற்கையான வழிமுறைகள் உள்ளன; அவற்றில் ஒன்றான டிராகன் பழத்தை பயன்படுத்தினால் முகப்பருவை எளிதில் போக்கி விடலாம். இப்பழத்திலுள்ள வைட்டமின் சி முகப்பருக்களை குறைத்து, அவற்றை போக்க பெரிதும் உதவும்.
டிராகன் பழத்தை உபயோகித்து முகப்பருவை போக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்¼ டிராகன் பழம்3 – 4 காட்டன் பஞ்சுகள்நீங்கள் செய்ய வேண்டியது என்ன?டிராகன் பழச்சதையை வெளியே எடுத்து, அதை மிருதுவான பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.காட்டன் பஞ்சை அப்பேஸ்ட்டில் நனைத்து, முகப்பரு உள்ள இடங்களில் தடவவும்; காட்டன் பஞ்சை பயன்படுத்துவதன் மூலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் சருமத்தின் பிற பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.தடவிய கலவையை 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும்.இச்செய்முறையை வாரம் இருமுறை செய்தால் பருக்கள் இல்லாத சருமத்தை பெறலாம்.
வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் தரும்ஆரோக்கியமான மற்றும் மிளிரும் சருமத்தை பெறுவது மிகவும் கடினமான வேலை ஆகும்; என்ன உணவுகளை உண்கிறோம், எத்தகைய செயல்களை செய்கிறோம் என்பதை கவனித்து வந்தாலே தோலின் தோற்றத்தில் நல்ல மாற்றங்களை பார்க்க முடியும்.உணவு முறையில் டிராகன் பழத்தை சேர்த்து கொள்வது சருமத்திற்கு நன்மை பயக்கும்; காலை வேளைகளில் ஒரு கப் டிராகன் பழச்சாறை பருகி நாளை தொடங்குவது மிகவும் அற்புதமான மாற்றங்களை தோலில் ஏற்படுத்தி, சருமத்தின் தன்மையை மேம்படுத்தும்; மேலும் சருமத்தை பொலிவாக்க உதவும்.டிராகன் பழம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்களை கொண்டுள்ளதால், அது தோலில் காணப்படும் இறந்த – தேவையற்ற செல்களை நீக்க உதவும்; மேலும் இச்சத்துக்கள் தொங்கும், சோர்வடைந்த சருமத்தை சரியாக்க உதவும். டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பிரகாசமாக்க உதவும்.
நன்மை #: ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்; குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணலாம் (13).ஆகவே குளிர்காலங்களில் டிராகன் பழத்தை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது, குளிர் காலத்திலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.டிராகன் பழம் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் நன்மைகள் – Hair Benefits of Dragon Fruit in Tamilதிடமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல; பல புதிய நிறுவன தயாரிப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் கூட எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். முயன்று பார்த்த மக்களுக்கு உண்மை என்ன என்பது நன்கு விளங்கும்; பல முறை தோல்வியை சந்தித்த பின்னர் கூட ஆரோக்கியமான தலைமுடியை பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?
ஆம் எனில், ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவும் எளிய முறையை பற்றி இங்கு படியுங்கள்.நன்மை 1: நிறமூட்டப்பட்ட தலைமுடியை சரிப்படுத்தும்இக்காலத்தில் ட்ரெண்ட், ஸ்டைல் என்று கூறி அழகாக, கருப்பாக இருக்கும் தலைமுடியை கலர் செய்து கொள்ளும் பழக்கம் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது; சிலர் நரை முடி போன்ற இதர கூந்தல் பிரச்சனைகளை மறைக்கவும் முடிக்கு நிறமூட்டுகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோரும் இவ்வாறு முடியை கலர் செய்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அபாயங்கள் பற்றி மறந்து விடுகின்றனர். முடியை கலர் செய்ய பயன்படுத்தப்படும் நிறமூட்டியில் கலந்திருக்கும் இரசாயனங்கள் தலைமுடியின் வேர் வரை சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.
இந்த குறைபாட்டை சரிசெய்ய, கலர் செய்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து ஆரோக்கியமானதாக மாற்ற டிராகன் பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம். டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் மீது நன்கு வேலை செய்து, முடியை – கூந்தலின் தன்மையை சரிப்படுத்தி கூந்தலை ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது.
தேவையான பொருட்கள்: 1 டிராகன் பழம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன?டிராகன் பழத்தின் சதையை வெட்டி எடுத்து, அதை மிருதுவான பசை போன்று அரைத்து கொள்ளுங்கள்.இப்பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும்.தலைமுடியை 15-20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைத்து, பின்னர் இலேசான ஷாம்பு கொண்டு அலசவும்.வாரம் ஒருமுறை இந்த முறையை செய்து வந்தால், நல்ல பலன்களை பெற முடியும்.
நன்மை #: ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்டிராகன் பழம் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், கூந்தலின் சோர்வான தோற்றத்தை போக்கி பொலிவை ஏற்படுத்த உதவும்; இத்தகைய மிளிரும் கூந்தலை பெற கொஞ்சம் புளிப்பான, வித்தியாச சுவை கொண்ட டிராகன் பழச்சாறை குடிக்க வேண்டும். டிராகன் பழச்சாறை குடிக்க விருப்பமில்லை எனில், டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க் போன்று தயாரித்து நேரடியாக உச்சந்தலையில் தேய்த்து கொள்ளலாம். இவ்வாறு டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க்காக உச்சந்தலைக்கு தடவிய பின் 20 நிமிடங்கள் ஊற வைத்து, சாதாரண நீர் கொண்டு முதலில் கழுவவும்; அதன் பின் இலேசாக ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இம்முறையை தினம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; இதனை சில மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடியின் தன்மையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம்.
டிராகன் பழச்சாறை பருகி வந்தால் கூட இதே பலன்களை பெற முடியும்.ஏன் இது வேலை செய்யும்?டிராகன் பழங்கள், குறிப்பாக சிவப்பு டிராகன் பழங்களில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள், என்சைம்கள் இருப்பதால், அவை தலைமுடியை மிருதுவாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற உதவும்.டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Dragon Fruit Nutritional Value in Tamilடிராகன் பழத்தில் ஆச்சரியம் அளிக்கக்கூடிய அளவுக்கு பைட்டோ ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் அடங்கியுள்ளன; இப்பழம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கரோட்டின், புரதங்கள் போன்றவை நிறைந்துள்ளன. டிராகன் பழத்தில் உள்ள ஜீரோ கார்போஹைட்ரேட், தையமின் சத்துக்கள் உணவு பொருட்களை எளிதில் செரிமானமடைய செய்ய உதவும். இப்பழத்தில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன; இவை ஆரோக்கியத்திற்கு அதீத நன்மைகளை அளிக்கக்கூடியவை.
டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன என்று இந்த அட்டவணையில் பார்க்கலாம்.
100 கிராம் டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு நியமம் ஊட்டச்சத்து மதிப்பு மொத்த கொழுப்பு0.61 கிராம்புரதம்0.229 கிராம்ஆஷஸ்0.68 கிராம்நீர்83.0 கிராம்பொட்டாசியம்436 மில்லி கிராம்கால்சியம்8.8 கிராம்கொலஸ்ட்ரால்0 மில்லி கிராம்நார்ச்சத்து0.9 கிராம்கலோரிகள்99
டிராகன் பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Dragon Fruit in Tamilஎந்தவொரு பழத்தையும் சாப்பிட்ட உடன் உண்ணக்கூடாது; டிராகன் பழம், கொய்யா பழம் போன்ற அதிக நார்ச்சத்து கொண்ட பழங்களை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. டிராகன் பழத்தை இரண்டாக அறுத்து, உள்ளே இருக்கும் வெள்ளை அல்லது சிவப்பு சதையை உட்கொள்ள வேண்டும்.
டிராகன் பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி மற்றும் சேமித்து வைப்பது எப்படி? – How to Select and Store Dragon Fruit in Tamilடிராகன் பழங்கள் எளிதில் கிடைக்காத காரணத்தினால், அவை கிடைக்கும் பருவ காலங்களில் தவறாமல் அவற்றை வாங்கி உட்கொள்ளலாம். அந்நேரங்களில் ஓரிரு வாரங்களுக்கு இப்பழத்தை குளிர்சாதன பெட்டியின் உதவியுடன் சேமித்து வைத்தும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரே மாதிரியான நிறம் கொண்ட, புள்ளிகள் அல்லது பழுப்பு நிறம் ஏற்படாத பழத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர்ந்த இடத்தில் இப்பழத்தை சேமிக்கவில்லை எனில், பழங்கள் அழுகிவிட வாய்ப்புண்டு.டிராகன் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Dragon Fruit in Tamilஇயற்கையில் உருவான அல்லது செயற்கையில் உருவான எந்த ஒரு பொருளுக்கும் நன்மை, தீமை என்ற இரு குணம் இருக்கும்; இந்த கூற்று டிராகன் பழத்திற்கும் பொருந்தும். இப்பொழுது டிராகன் பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்:எந்த ஒரு உணவையும் அல்லது பிற பொருளையும் அளவோடு தான் உட்கொள்ள வேண்டும்; அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சுதான்.
டிராகன் பழத்தில் உள்ள ஃப்ரெக்டோஸ் எனும் சத்து இருப்பதால், அதை அதிகம் உட்கொள்வதை தவிருங்கள்; இல்லையேல் இது உடல் எடை இழப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.டிராகன் பழத்தின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கும் அபாயம் இருப்பதால், தோல் பகுதியை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பாருங்க! 'கமலம்' எவ்வளவு நன்மை பயக்கிறது என்று!!
= = = = = = = = = = =
பாதிதான் படித்திருக்கிறேன். பிறகு வந்து கருத்திடுகிறேன்.
பதிலளிநீக்குகுண்டூசி கடப்பாறை... மிக அருமையாக எழுதியிருக்கிறார். அந்த வாரம் இதைப் பற்றி நினைத்தேன். ஒரு பொருளின் மீதான நம் முயற்சி அதிகரிக்கைம்போது அதன் மதிப்பு கூடும். ஒரு பொருளைச் சுருக்கும்போதும் அதன் மதிப்பு அதிகப்படும் (எள்-எண்ணெய்).
நன்றி, நன்றி. மீண்டும் வருக!
நீக்குநேர்மையான பொதுவாழ்க்கை - அவர்களுக்குத் தண்டனைதான். பார்ப்பவர்களுக்காக அவரின் மனைவி குழந்தைகள் வெளியில் பெருமை பேசலாம், மக்கள் glorify பண்ணலாம். எதையும் சட்டப்படி நேர்மையாக, எந்த கனிவு விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் பலருக்கு அது கஷ்டமாக இருக்கும். அந்த நிலை பழகவே ஓரிரு ஜெனரேஷன் தேவைப்படும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
சரணம் முருகா!
நீக்குஇனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் ! எல்லோருக்கும் கல்விக் கடவுளின் அருள் கிடைத்து, அறிவுக் கண் திறந்து, நாடு செழிக்கட்டும்.
எங்கெங்கும் நல்லறிவும் ஞானமும் கல்வியும்
பதிலளிநீக்குஓங்கட்டும்..
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்
அதே, அதே!
நீக்குகடப்பாறை செய்வதை விட அதே எடையுள்ள குண்டூசி தயாரிப்பது லாபகரமானது என்பது அறிய சுவாரஸ்யமான தகவல்.
பதிலளிநீக்குடிராகன் ஃப்ரூட் பற்றிய தகவல்கள் சிறப்பு. நல்லவெளை டிராகன் ஃப்ரூட் என்பதற்கு பறக்கும் நாகப் பழம் என்று பெயரிடாமல் கமலம் என்று அழகான பெயர் சூட்டியிருக்கிறார்களே.. வாழ்க!
நல்ல கருத்து! நன்றி!
நீக்குநெல்லைத் தமிழனின் மகளின் பிரியமும், நேர்த்தியும், செயலும் வியக்க வைக்கின்றன. நகைச்சுவையாக கூறினால் "மவனே இனிமே கேப்பியா?" என்பது போல செய்து விட்டாளோ? என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குஆம்! :))))))
நீக்குஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
நீக்குநெல்லை உங்க மகள் வாவ்! அவள் அன்பும் பரிமாறுதலும் சூப்பர்! நல்ல வளர்ப்பு!
பதிலளிநீக்குBlessings!
கீதா
வாழ்த்துவோம்!
நீக்குகுண்டூசி கடப்பாரை பற்றிய ஆராய்ச்சி சரியில்லை. இரண்டும் வேறுவேறு செயல்களுக்கு பயன்படுபவை. ஸ்டேப்ளர் வந்தவுடன் குண்டூசிக்கு மதிப்போ, தேவையோ அதிகம் இல்லை. ஆனால் கடப்பாரை நெம்புகோல் என்ற ஒன்றாம் விதியின்படி உபயோகம் கூடுதல் ஆக இருக்கிறது.
பதிலளிநீக்குJayakumar
கருத்துரைக்கு நன்றி. இங்கு நாங்க சொல்லியிருக்கும் விஷயம், தொழிலதிபரின் உற்பத்தித் திறன் பற்றியது. stapler pin தயாரித்தாலும் அதே நிலைதான். Value addition is the bottom line. That is all! Have a good day!
நீக்குமதிப்பீட்டுக் கணக்கு அருமை. என் போன்றவர்க்கே எளிமையாகப்ப் புரியும்படி இருக்கு.
நீக்குநன்றி, நன்றி.
நீக்குநெல்லை மகள் செய்த விருந்து கேரளா சத்ய போல் இருந்தாலும் எல்லா பதார்த்தங்களையும் ஜஸ்ட் ருசி பார்த்தாலே வயறு நிரம்பிவிடும். முயற்சிக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபாராட்டுவோம். (ருசி) பார்த்தால் பசி தீரும்!
நீக்குஎன் மகன் அவ்வப்போது ஏதாவது செய்து அம்மா இத சாப்பிட்டுப் பாரு என்பான்,
பதிலளிநீக்குஇப்ப கூட இல்லை, இருந்தாலும் புதிதாகச் செய்வதைச் சொல்லி இப்படி செஞ்சு பார். ப்ரோட்டின், அது இது என்று நிறைய பரிந்துரைகள் சொல்வான்.
அவன் இங்கிருந்த போது எனக்கு அறுவைசிகிச்சை நடந்தப்ப, அவன் அப்ப ஒரு க்ளினிக்கில் வேலை செய்தான் லீவு போட்டு என் கூடவே ஒருவாரம் மருத்துவமனையில் இருந்து அப்ப காது மெஷின் போட்டுக்க முடியாதே ஸோ பேப்பரில் எழுதி எழுதிக் காட்டி என்ன செய்ய வேண்டும் என்று காட்டுவான். கூடவே விட்டிற்கு வந்ததும் என் புண்ணிற்கு மருந்து போட்டு அவன் வேலைக்குச் செல்லும் போது நானே எப்படி அதற்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போவான். அதே போல அதற்கு முன்னும் ஒரு விபத்து நடந்தப்ப அவன் என்னை எப்படிப் பார்த்துக் கொண்டான் என்பதெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
இப்பவும் எங்கள் கஷ்டங்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறான்.
அவனிடமே நான் சொல்வேன்....இப்ப சில நாட்கள் முன் கூடச் சொன்னேன் "we , are blessed, kuttimma you are our son" என்று.
அவனுக்குப் பிறவியில் ஏற்பட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் இப்படிச் செய்வதற்கு நான் அந்த சக்திக்கு நிறைய நன்றி சொல்வதுண்டு.
அவன் சொல்வான், நான் உங்களுக்குப் பிறந்ததால்தான் என் குறைபாடுகளையும் அதைப் புரிந்து கொண்டு நீங்க சப்போர்ட்டிவாக இருந்து இன்னிக்கு நான் இப்படி நல்லாருக்கேன், என்பான். நான் சொல்வேன் அந்த சக்திக்கு நன்றி சொல்லுடா....அது எங்களை வழிநடத்தியதால்தான் இல்லைனா அந்த awareness எங்களுக்கு இல்லாதிருந்தால்?
கீதா
மிகவும் நெகிழ்ச்சியான கருத்துரை. நன்றி.
நீக்குஎல்லாம் அவன் செயல். உங்களுக்கு நல்லதே நடக்கும் கீதா ரங்கன் க்கா
நீக்குஇப்பலாம் நல்ல கருத்துள்ள, இயல்பான சிறு பட்ஜெட் படங்கள் வருகின்றன. இடையில் மாஸ் என்று படங்கள் வந்தாலும் கூட.
பதிலளிநீக்குஇயக்குநர்களும் கூட பெரிய நடிகர்கள் என்று போகாமல், தகுந்த நடிகர்கள், நடிகைகளை வைத்தும் எடுக்கிறார்கள்.
எனக்கு மாஸ் படங்கள் பிடிப்பதில்லை. சின்ன படங்கள் பிடிக்கும் ஆனால் பார்க்கும் வாய்ப்புதான் இல்லை.
கீதா
Buy Amazon Fire TV stick and enjoy entertainment with the help of internet.
நீக்குஇப்போது இறைவன் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன கேட்பீர்கள்? //
பதிலளிநீக்குஇந்திய மக்களுக்கு நல்ல ஆரோக்கியமாகச் சிந்திக்கும் திறனைக் கொடுப்பா என்றுதான் கேட்பேன். நடிகர்கள் பின்னால் அலைவதை விட்டு. ஆரோக்கியமான அரசியல், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது என்ற சிந்தனைகளைக் கொடுன்னு.
கீதா
ஆசிரியரின் பதில் நல்ல பதில்.
நீக்குகீதா
நன்றி.
நீக்குநீங்கள் சின்னக் குழந்தையாக உணரும் தருணங்கள் என்ன?//
பதிலளிநீக்குஹாஹாஹா, சின்னக் குழந்தைகளாகவே இருக்கும் கீதா, கீதாக்காவுக்கு எல்லாம் இந்தக் கேள்வி அப்ளை ஆகாதுங்கோ!!!!!!
கீதா
Grrrr... ஒரிஜினல் குழந்தையான என்னை லிஸ்டில் சேர்க்கவில்லை!!
நீக்கு"இன்னமும் சின்னப் பெண்ணாகவே இருக்கயே. வளர வேண்டாமா?" என்று சொல்லும் சின்னக் குழந்தையா? குழப்பறாங்களே இந்த கீதா ரங்கன் சேச்சி
நீக்கு: ))))) இங்கே நான் ஒருத்தன்தான் தாத்தா போலிருக்கு.
நீக்குஆமாம் ல ஶ்ரீராம். விட்டுப் போட்டுச்..உங்களையும் அந்த லிஸ்டில் சேர்த்துக்கொண்டேன்...கீழே....
நீக்குநாங்கள் குழந்தைகள், நீங்களும் குழந்தை ஏ பி குழுவில் குழந்தைகள் கூட்டம்!!!!!!
கீதா
ஆசை, தோசை, அ வ !!
நீக்குஎதிர்மறைச் சிந்தனை, பேச்சு உள்ளவர்களிடம் நட்புக் கொள்வது நல்லதா?//
பதிலளிநீக்குநட்பு கொண்டாலும், ஒரு எல்லைக் கோடு வைத்துக் கொள்வது நல்லது.
கீதா
அவர்களின் சிந்தனைகள் நம்மை பாதிக்காத வரையில். அதைக் கடக்கும் திறன் நமக்கு இருந்தால் நல்லது. நம் மனம் சக்தி வாய்ந்த ஒன்று எனலாம். ஒரு வேளை அது நமக்கு எரிச்சலை அல்லது ஒரு discomfort தந்தால், தூரத்தில் இருப்பது நல்லது. நம் மனதை வீக்காகிக் கொள்ளக் கூடாது. எரிச்சலோ கோபமோ வந்தாலும் மனம் வீக்காகிவிடும்.
நீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபிறர் எழுத்துக்களை தன் எழுத்தாக போட்டுக் கொள்கிறவர்கள், தான் எழுதியதை சுஜாதா போன்ற பிரபலமானவர் எழுதியதாக பகிர்கிறவர்கள் இரண்டு வகையினர்களையும் எப்படி கருதுகிறீர்கள்?//
பதிலளிநீக்குதிருட்டுக் கும்பல்கள்! ஹைடெக் திருட்டுக் கும்பல்கள். இவர்களைத் தூர வைப்பது நல்லது.
பானுக்காவின் கதையைத் திருடிப் போட்டுப் பரிசு வாங்கிய அப்பெண்மணி என்ன பெரிய படிப்பு படித்திருந்தாலும்....என்ன ஜஸ்டிஃபிக்கெஷன் கொடுத்தாலும், அசிங்கமான கேவலமான விஷயம். ஆனால் அதற்கு அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதன் மீதான மதிப்பும் போயே போய்விட்டது. அசிங்கமாக இருக்கு.
கீதா
உண்மை.
நீக்குவானவில் படம் நல்லாருக்கு, நெல்லை.
பதிலளிநீக்குகீதா
அ சா நன்றி.
நீக்குஊட்டியில் அடிக்கடி இம்மாதிரி இரண்டு வானவில்கள் பார்த்தது உண்டு. இப்போக் கொஞ்ச காலமாக வானத்தைப் பார்த்தே பல வருடங்கள் ஆனாப் போல் இருக்கு.
நீக்கு:))
நீக்குகுண்டூசி கடப்பாறை நலல் தகவல்
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்கு'கமலம்' - நாங்க அடிக்கடி உபயோகிக்கும் ஒன்று!!!!!
பதிலளிநீக்குஆ! இதில் கட்சி சம்பந்தப்பட்ட எதுவும் இல்லைங்கோ!
கீதா
நம்பிட்டோம்!
நீக்குஊரெல்லாம் திங்கள் பதிவுக்குக் கேட்கும் ஶ்ரீராம், கேஜிஜி சாரிடம் கேட்காத கோபம் போலிருக்கிறது. சரி.. புதனிலேயே செய்முறைக் குறிப்புகளை வெளியிடுகிறேன் என்று ஆரம்பித்துவிட்டாரோ?
பதிலளிநீக்குடிராகன் ப்ரூட் அந்நிய பழம் என்பதால் ஆர்வம் வரவில்லை. ஆனால் அந்நிய பழங்களான ரம்பூடான், லிச்சி, பியர்ஸ் ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளில் எனக்கு ருசி இருக்கிறது.
என்ன ஒரு ஓர வஞ்சனை!!
நீக்குஸ்ட்ராபெரி அம்பேரிக்காவிலும் சாப்பிட்டிருக்கேன். இங்கேயும் கிடைக்குது. ஆனால் அவ்வளவு பிடித்தம் இல்லை. மற்றவை சாப்பிட்டதில்லை.
நீக்குட்ராகன் பழம் இங்கே கிடைக்குமானு தெரியலை. கிடைச்சாலும் சாப்பிடப் பிடிக்கணும். :)
நீக்குசுவை சுமார்தான் என்றாலும் பயன் உள்ள பழம்.
நீக்குவயதில் குறைவானவர்களோடு பழகினால் நாம் சின்னவங்களா உணரலாம். குழந்தைகளோடு, நாமும் குழந்தைகளாகிவிடுவோம்.
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குடிட்டோ நெல்லை. அதான் நீங்க என் கூட, ஶ்ரீராம் கூட, கீதாக்கா கூட பேசற போது சின்ன குழந்தையா மாறிடறீங்க!!!!!!!
நீக்குகீதா
//அப்போவிட இப்போ திரைப்படங்கள் முன்னேறி/- இது எந்தக் காலத்திலும் எழும் கேள்வி. அப்போவிட இப்போ உணவுத் தரம் நல்லா இருக்கா? அம்மாவின் உணவை விட இப்போ நல்லாருக்கா என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடையே கிடையாது. பாலும் பழமும் படம் நாற்பது லட்டசம் சம்பாதித்துக்கொடுத்தால், ஜெயிலர் நானூறு கோடி சம்பாதிக்குது.
பதிலளிநீக்குஉண்மைதான். ஆனால் அந்தக் காலத்து ஒரு ரூபாய் இந்தக் காலத்து நூறு ரூபாய்க்கு சமம்.
நீக்குஎன் கல்யாணத்தின்போது ஒரு கிராம் தங்கம், 48 ரூபாய். இன்று ஒரு கிராம் தங்கம், ரூ 11300 + (235 மடங்கு விலை!)
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். சரஸ்வதி தேவி அனைவருக்கும் நல்லருள் புரிய அன்னையை வேண்டிக் கொள்கிறேன். 🙏 நன்றி. கொஞ்சம் தாமதமாக பிறகு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, மீண்டும் வருக!
நீக்குஅனைவருக்கும் நவராத்ரி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகேள்விபதில்கள் நன்றாக இருந்தன.
படமும் அதற்கான விளக்கங்களும் நன்று.
முழு வாழை இலை உணவு நெல்லையின் மகள் விருந்து வைத்து அசத்தி விட்டார். வாழ்த்துகள்.
டிராகன் ப்ரூட் கமலம் பற்றி ஒரு பெரிய சரித்திரமே தந்துள்ளார்.நன்றி.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை. விஜயதசமி
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்
கே. சக்ரபாணி
சரஸ்வதி பூஜை. விஜயதசமி
நீக்குநல்வாழ்த்துகள்.
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கந்தபுராணம் சொற்பொழிவு ஆற்றுவார்.(கதா காலட்சேபம் தான் இதுவும்) அதைத் தவிரவும் சந்தான கோபாலாசாரியார் போன்றவர்கள் பல்வேறு ஆழ்வார்கள் பற்றியும் காலட்சேபம் செய்வார்கள். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரும் அப்படியே. கௌதமன் சார் சொல்றாப்போல் பாகவத சப்தாஹமும் சொல்வதுண்டு. நாயன்மார்கள் பற்றிப் புலவர் கீரன் போன்றோர் சொன்னது உண்டு. தேவி மஹாத்மியம் பற்றியும் சொற்பொழிவுகள் உண்டு. இவை எல்லாம் குறித்து வைத்திருந்த நோட்டுப் புத்தகம் ஸ்ரீரங்கத்தில் இருப்பதால் இன்னும் விபரமாக எழுத முடியவில்லை.வாஞ்சியம் ராமசந்திர பாகவதர் அஷ்டபதி பற்றிச் சொற்பொழிவோடு நடனமும் நிகழ்த்துவார். வடக்கே உள்ள பண்டரிநாதனின் அடியார்கள் பலரையும் குறித்து மஹா பக்த விஜயம் என்னும் கதையாக ஸ்வாமி ஹரிதாஸ்கிரி சொல்லுவார். இவரும் அஷ்டபதியைப் பற்றி விளக்குவதில் விற்பன்னர். இப்போக் கூட சிறிது நேரம் முன்னால் இவர் ஜெயேந்திரர் முன்னிலையில் நிகழ்த்திய ஒரு அஷ்டபதி கீர்த்தனையைப் பாடக் கேட்டேன்.
பதிலளிநீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குபுலவர் கீரனின் வில்லிபாரதச் சொற்பொழிவுக்கு ஈடு, இணை இருக்காது. அருமையாகச் சொல்லுவார். இளம் வயது மரணம். எங்களைப் போன்ற அவர் ரசிகர்கள் எல்லாம் ஆடிப் போனோம்.
நீக்குஓ. பாவம்.
நீக்குநெல்லையின் மகளின் ஆர்வமும் அப்பாவுக்குச் செய்து கொடுத்த பாங்கும் மனதைக் கவர்கிறது. நீடூழி வாழ்க.
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குசரவணபவன் (ஒரிஜினல்) ஓட்டலில் முழுச் சாப்பாடு சாப்பிட ஆசைப்படுவேன். நம்ம ரங்க்ஸ் திட்டவட்டமாக மறுத்துடுவார். அப்போதைய விலை அவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது என்ற அளவில் இருந்தாலும் நான் எல்லாவற்றையும் சாப்பிட மாட்டேன், வீணாக்கிடுவேன் என்பார். கடைசியில் நான் சரவண பவன் சாப்பாடைச் சாப்பிட்டதே இல்லை. இந்த மாதிரிச் சாப்பாடெனில் என்னால் நிச்சயம் முடியாது. செய்தவை வீணாகும்.
பதிலளிநீக்குஆம், உண்மைதான். எனக்கும் பெரிய பந்திகளில் முழுவதையும்
நீக்குசாப்பிட முடியாது. என்ன போட வந்தாலும் கொஞ்சம்
மட்டும் போட்டுக் கொண்டு சாப்பிடுவேன்.
கேள்வி பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகடவுள் முன்னால் தோன்றினால் வரம் கேட்க தோன்றுமா? தெரியவில்லை. இருந்தாலும் நாட்டில் அன்பும் அமைதியும் வேண்டும் என்று தான் கேட்க வேண்டும்.
அதே, அதே!
நீக்குபடமும் பதமும் அருமை.
பதிலளிநீக்குநெல்லையின் மகள் அவரின் ஆசையை பூர்த்தி செய்தது அருமை.
இலையில் உள்ள உணவுகளை எப்படி எட்டி எடுத்து சாப்பிட்டு இருப்பார் என்று கேள்வி எழுகிறது. துளி துளி என்றாலும் வயிறு பார்த்தவுடனே நிறைந்து இருக்கும் எப்படி சாப்பிட்டு இருப்பார்?
அவர்தான் சொல்லவேண்டும்.
நீக்குநெல்லையின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம், பாராட்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை. விஜயதசமி
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!
சரஸ்வதி பூஜை. விஜயதசமி
நீக்குநல்வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!
//குண்டூசி தயாரித்தவர், கடப்பாறை செய்து விற்றால், அது படிப்படியான அபிவிருத்தி அல்ல! பயங்கர சறுக்கல் !//
பதிலளிநீக்குவிரிவான தகவல்.
ட்ராகன் பழ பயன்களை படிக்க வேண்டும், நிறைய இருக்கிறது. நாளை நிதானமாக படித்து கருத்து சொல்கிறேன்.
நன்றி, மீண்டும் வருக.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. இறைவன் நம் முன் தோன்றினால், என்ன கேட்போம்.? அப்படியே அதிர்ச்சியில் திகைத்து உறைந்து போய் விட மாட்டோமா? அதைத்தான் "கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்" என்றார்கள். அவரைக்கண்ட மெய்மறந்த ஆனந்தத்தில், நாம் ஏதும் கேட்கும் முன்னே மறைந்து விடுவார். என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதையும் மீறி அவர் காத்திருந்தால், "அனைவரையும் நல்லபடியாக வை" என்பதை தவிர வேறு என்ன வேண்டுவோம்.
சகோதரர் நெல்லைத்தமிழரின் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். அவரின் தந்தை பாசம் வியக்க வைக்கிறது. வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்கு//& என்னைப் பொருத்தவரை, எனக்கும் அப்படி பொறாமை கிடையாது; என்னைச் சுற்றி உள்ளவர்களிடமும், நெருங்கிய சொந்தங்களிலும் அப்படி பொறாமை கொண்டவர்களை நான் பார்க்கவில்லை. //
பதிலளிநீக்குகௌதமன்சாரின் இந்த பதிலை இப்போத் தான் கவனிச்சேன். அவருக்கு யுதிஷ்டிரரின் பார்வை. என் போன்றோரோ துரியோதனன் பார்வை. அவன் வம்சம். :( வாழ்த்துகள் கேஜிஜி.
:))) நன்றி.
நீக்கு