30.10.25

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அல்லது பேராசை பெருந்தன்மை !

வீட்டில் பாத்திரம் தேய்ப்பதற்கு ஒரு பெண்மணி, பெருக்கி துடைப்பதற்கு ஒரு பெண்மணி என்று இரண்டுபேர் வீட்டில் வேலை செய்பவர்கள்.  பழைய வீட்டில் வேலை செய்தவருக்கு உறவு என்று ஒரு பெண் இருந்தார்.  அவரை இந்த ஏரியாவில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.  அந்த வீட்டில் வரலக்ஷ்மி விரதம் அன்று அவரை தாம்பூலம் வாங்கி கொள்ள அழைத்தால் அவர், தன் இரு சகோதரிகள்,  இன்னும் இரு பெண்கள், பக்கத்து வீட்டுக்கார பெண்மணி என்று ஒரு குழுவையே அழைத்து வருவார்.  ஒன்றும் சொல்ல முடியாது.  "உங்களுக்கு அப்படியே புண்ணியம்" என்பார்.

இங்கு அவரைப் பார்த்தபோது நாங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை பாத்திரம் தேய்க்க வைத்திருந்தோம்.  எனவே அவரை உபயோகித்துக் கொள்ள முடியவில்லை.  ஆனால் அவரோ ரொம்ப பிஸியாக இருந்தார்.  காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, ராமச்சந்திராவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் வீட்டில் சமைத்து விட்டு, பல வீடுகளில் வீட்டு வேலை செய்வார்.  மின்னல் வேகம்தான்.  'வாம்மா மின்னலு' என்பது போல விஷ்க் என்று வந்து வேலை முடித்து விஷ்க் என்று காணாமல் போவார்.

தினசரி வீடு பெருக்கி 'மாப்' போட பாஸால் ஒரு கட்டத்தில் முடியாமல் போக, பாத்திரம் தேய்க்கும் பெண்ணை அதையும் சேர்த்து செய்கிறீர்களா என்று கேட்டால் அப்போது அவரும் பல வீடுகளிலும், ஒரு லேடிஸ் ஹாஸ்டலிலும் வேலை செய்து, பிஸி ஷெட்யூலில் இருந்ததால் மறுத்து விட, இந்த பழைய பெண்மணியை அதற்கு ஒப்பந்தம் செய்தோம்.  தனித்தனியாக இரண்டு பேர் சம்பளம் என்பதால் நினைத்ததை விட கூடுதல் காசு.  ஆனாலும் வேறு வழியில்லை.  வீட்டைப் பெருக்கி மெழுகும் அந்தப் பெண்மணி ஒன்று விட்டு ஒரு நாள்தான் வருவார்.

இப்போதும் அவர் வரலஷ்மி விரதத்துக்கு நான்கைந்து பேர்களை அழைத்துக் கொண்டுதான் வருவார்!  வசூல் என்று நினைக்கக் கூடாது!  மாமிக்கு புண்ணியம் சேர்த்துத் தருகிறார் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்!

இருவருக்கும், மற்றும் குப்பை எடுக்க வரும் பெண்ணுக்கும் பாஸ் அவ்வப்போது துணிகள், பாத்திரங்கள் என்று அள்ளி விடுவார்.  பாஸ் கை தாராளம்.  தீபாவளிக்கு மூன்று பேர்களுக்கும் புடைவை உண்டு.  அதில் பாத்திரம் தேய்ப்பவர் 'என் வீட்டுக்காரர் உனக்கு மட்டும் தனியாக தரலாமா என்று கேள்.  எனக்கும் எதாவது வாங்கி கொடுக்கச் சொல்' என்று சொல்ல, அவருக்கும் சேர்த்து கொடுப்பதும் வழக்கமானது.

இதைத்தவிர பாத்திரம் அதிகம் என்று பாஸ் நினைக்கும் நாட்களில் கையில் கொஞ்சம் காசு கொடுப்பார்.  குப்பை அள்ளும் பெண்மணிக்கு அப்படியே.

சொல்லிக் காட்டுவதற்காக இல்லை, அல்லது இதெல்லாம் செய்தால் நாம் சொன்னவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அர்த்தமில்லை. ஆனாலும் சில சமயங்களில் வருத்தம் ஏற்படும்.

பாத்திரம் தேய்ப்பவர் மாதாந்திர மூன்று நாள் வரும்போது பாஸ் அவரை வரவேண்டாம் என்று சொல்லி விடுவார்.  'நான் வந்து தேய்த்து வைத்து விடுகிறேன்.  இன்னும் இரண்டு மாமிகள் வீட்டில் செய்வது போல தண்ணீர் தெளித்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அவரும் ஓரிருமுறை சொல்லிப் பார்த்தும் பாஸ் ஒப்புக்கொள்ளவில்லை.  அதேபோல ஒருமுறை அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று பத்து நாட்கள் வராதபோதும் பாஸ் அவருக்கு முழுச் சம்பளம் கொடுத்தார்.  இது மாதிரி சமயங்களில் அந்த இன்னொரு பென்னி ஒப்பந்தம் செய்து அவரை அந்த நாட்களில் வேலைக்கு வரவழைத்து அதற்கு தனியாக காசு கணக்கு பார்த்து கொடுத்து விடுவார்.  'நான் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதில்லையே...  பரவாயில்லை எனக்கு காசு வேண்டாம் என்றோ, குறைத்துக் கொடுங்கள்' என்றோ இவரும் சொல்வதில்லை.

இது மாதிரி இருப்பவர், விசேஷ சமயத்திலோ, திவச நேரங்களிலோ பாத்திரம் அதிகமாக விழும் காலங்களில் - அது கொஞ்சம் அபூர்வம் - இரண்டு வேளை வரச்ச்சொன்னால் வரமாட்டார்.  அதே போல பாத்திரம் தேய்த்தபின் அந்த இடத்தை கழுவி விடுவது கிடையாது.  சில கூடுதல் பணி சொன்னாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்.  சிலசமயம் குப்பை வண்டி வராத நாட்களில்  குப்பையை  குமரன் சில்க்ஸ் போன்ற பையில் போட்டுக் கொடுக்கிறோம், போட்டு விடுகிறீர்களா என்று கேட்டால் மௌனம்தான் பதில் என்பதோடு, கிளம்பும்போது ஒரு பதிலும் சொல்லாமல் மறந்தாற்போல சென்று விடுவார்.

சில சமயங்களில் உரிமையாக 'அம்மா..  பசிக்கிறது..  மயக்கமாக வருகிறது...  கொஞ்சம் சோறு இருந்தால் போட்டுக் கொடுங்கள்..  உங்க வீட்ல மட்டும்தான் உரிமையா கேட்பேன்" என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்.  தினசரி தேய்ப்பதற்கு போடும் பாத்திரங்களை திறந்து கறி, காய், கூட்டு, குழம்பு இருக்கிறதா என்று பார்ப்பார்.  இல்லை என்றால் ஏமாந்து போனேன் என்பார்.  அது ஆனால் அபூர்வம்.  தினசரி எப்படியும் எடுத்துப் போவதற்கு சாதம் உண்டு.  ஏனோ மனசு கேட்காமல் அவருக்கு கொடுத்தனுப்பும் அளவு தினசரி சற்று கூடுதலாகத்தான் பாஸ் சாதம் வடிப்பார்.

ஆனாலும் கொஞ்சம் கூடுதல் பாத்திரங்கள் என்றால் முகம் கூம்பிப் போவதும், எதுவும் பேசாமல் செல்வதும், எப்போதாவது நாம் சொல்லும் சில கூடுதல் வேலைகளையும் -  அதுவும் அதே பாத்திரம் தேய்க்கும் வேலையோடு சம்பந்தப்பட்ட வேலைதான், செய்யாமல் போவதும்..

இன்னொரு பெண்மணி சமீபத்தில் சம்பந்தி குடியிருந்த வீட்டை காலி செய்தபோது சுத்தப்படுத்துவதற்கு சென்றார்.  அங்கிருந்த மளிகை, காய்கறிகளில் பழங்கள், நட்ஸ் என்று நாங்களாக கொடுத்தது போக முன்னதாகவே தானாகவே எடுத்து ஒதுக்கி வைத்துக் கொண்டார்.  நட்ஸை மட்டும் மீட்டோம்.  இரண்டு படுக்கையறை ஹால், கிச்சன் க்ளீன் செய்ய காசு அப்போது உடனே வாங்கவில்லை.

ரொம்பப் பழகிய பெண் என்பதால், வேண்டாம் என்றே சொல்வாரோ (!) என்று எதிர்பார்ப்பு இருந்தாலும் 'எவ்வளவு' என்று கேட்டபோது 'நீங்களே கொடுங்கள்' என்றே மறுபடி மறுபடி சொல்ல, அவர் வாயிலிருந்து வரவழைப்பதற்காகவும், ஆழம் பார்க்கவும் நான் முன்னூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.  முகம் மாறிப்போய் மௌனமானார்.  பாஸ் என்றால் கூடுதலாக சொல்லி இருப்பார்.  அவரை அடக்கி விட்டு நான் சொன்னேன்.  பின்னர் கிளம்பும்போது பாஸிடம் சென்று ரகசியமாக ஆயிரம் ரூபாய் என்று கேட்டு வாங்கிச் சென்றார்.  

என்னைப்பொறுத்தவரை முன்னூறே போதும்.  அவ்வளவு பொருட்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்.  ஆனால் அவர் ஐநூறு கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.   ஆயிரம் அதிகம் என்று பட்டது.  பாஸிடமும் சொன்னேன்.  கொடுத்தாச்சு..  வேறு வழி இல்லை என்றார்.

===========================================================================================

"நான் பிறந்தது விருதுநகரில் உள்ள கசாப்புக்கடைக்காரர் தெருவில். விருதுநகரில்தான் என் அம்மாவின் தந்தை ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். விருதுநகரில் பிறந்தாலும் நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் அப்பாவின் ஊரான கோவில்பட்டியில்தான். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தேன். என் பள்ளிச்சூழல்தான் என்னை நடிகனாக்கியது என்று சொல்லலாம். நாடார் நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக 'பாலர் சபை' என்ற அமைப்பு இயங்கிவந்தது.

ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமையும் எல்லா மாணவர்களும் மேடையேறி ஏதாவது திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஒரு பையனுக்கு எதுவுமே தெரியவில்லை, வீட்டை நினைத்து அழுகிறான் என்றால், 'மேடையில் வந்து அழுதுவிட்டாவது போ' என்று கொண்டுபோய் நிறுத்தி விடுவார்கள். அப்படித்தான் எனக்கு மேடைக்கூச்சம் போனது. 'தேவே உன்னைப் போற்றிடுவேன்; தினமும் என்னைக் காத்திடுவாய்; நாவால் உன்னை நான் பாட நல்ல தமிழைத் தந்திடுவாய்' என்று பிரார்த்தனைப் பாடலையாவது பாடித்தான் இறங்குவார்கள். இப்படி பள்ளியில் இருந்தே எனக்குத் திறமையை எந்தக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைந்தது".

"கவிஞர் ஆத்மாநாம் என் அறைத்தோழர். அவரது இயற்பெயர் மதுசூதனன். பி.எஃப் அலுவலகத்தில் பணிபுரிந்த கவிஞர் ஆனந்த் என் நண்பர். அவர்தான் ஆத்மாநாம், ஸ்டெல்லாபுரூஸ், ஞானக்கூத்தன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். நான் தங்கிய அறையில் இருந்து 'ழ' சிற்றிதழில் முகவரி எழுதி தபால் மூலம் அனுப்பிவைத்திருக்கிறார்கள். எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது போன்றவறுக்கு எல்லாம் எழுத்தாளர்களின் நட்புதான் காரணமாக இருந்தது"
-நடிகர் சார்லி
நன்றி: சினிமா விகடன்

===================================================================================================

கூரைக்கூச்சல் 03
"சேட்டை" வேணுஜி 

கூரைக்கூச்சல் – 03

கல்லூரிக்காலம் வரைக்கும், பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களில் வருகிற பொறுப்பில்லாத பிள்ளை மாதிரி, ஏறத்தாழ ஒரு போக்கிரியாக இருப்பதே பொன்செய்யும் மருந்து என்றிருந்தவன் நான். எனக்குள்ளும் ஒரு பொறுப்பான உழைப்பாளி இருக்கிறான் என்பதை எனக்கே புறமண்டையில் தட்டி உறைக்கவைத்த இடம் டி.வி.எஸ். ஓசூர்!
காலை எட்டரை முதல் மாலை ஐந்து மணிவரை ஜெனரல் ஷிஃப்ட் என்று ஜாலியாக வேலைக்குப் போய், நாளொன்றுக்கு 200 முதல் 250 GRNகளை போஸ்டிங் பண்ணி விட்டு, ஐந்து மணிக்கு ரூமுக்கு வந்து, இரண்டாம் குளியல் போட்டுவிட்டு, சினிமா அல்லது மலைமேல் குடிகொண்டிருந்த சந்திரசூடேஸ்வரர் தரிசனம் என்று மாற்றி மாற்றி பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்டோர்ஸ் மேனேஜர் ராமச்சந்திரன் சார் என்னை அழைத்தார்.

‘நீ வந்து ஒரு மாசமாயிடுத்து. இந்த மாசத்துலேருந்து உனக்கு நைட் ஷிஃப்ட் போடப்போறோம். நல்லபடியா வேலை பார்த்து நல்ல பேர் வாங்கு,’ என்று அவர் சொன்னதும், ‘ஐயையோ’ என்று மனதுக்குள் ஒரு அபயக்குரல் கூவியது. அப்படியென்றால், சினிமா? சந்திரசூடேஸ்வரர் கோவில்? ஊர் சுற்றுவது? என்றெல்லாம் கிளைக்கேள்விகள் கிரைண்டருக்குக் கீழிருந்து ஊர்ந்துவருகிற கரப்பான்பூச்சிகள் மாதிரி கிளம்பின. ஆனால், வேறு வழி?

அடுத்த வாரமே, எனக்கு நைட் ஷிஃப்ட் போட்டார்கள். Goods Inwards Stores-ல், மாலை தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரைக்கும், வந்து சேரும் பொருட்களை இறக்குவதை மேற்பார்வை செய்து, Vendor Quality துறைக்குத் தகவல் அளித்து, ஆய்வுக்கு ஏற்பாடு செய்து, தேவைப்பட்டால் அவர்கள் பரிந்துரைப்படி reject செய்து, வருகிற லாரி, டெம்போக்களுக்கு acknowledgement ரொப்பிக் கொடுத்து, பொருட்களுக்கெல்லாம் GRN போட்டு, முடிந்தவரைக்கும் இரவிலேயே அந்தந்தப் பொருட்களை அந்தந்த ஸ்டோர்களுக்குள் உரிய இடத்தில் வைக்க வேண்டும். ஒரு ஸ்டோர்கீப்பர் இருப்பார்; அவர் சொல்லுவதை அப்படியே செய்தால் போதும். இவையே நைட் ஷிஃப்ட்டில் ஒரு ஸ்டோர்ஸ் அசிஸ்டண்ட் செய்யத்தக்க பணிகளாம்.
எனக்கு வாய்த்த முதல்  நைட்-ஷிஃப்ட் ஸ்டோர்கீப்பர் கிருஷ்ணன் சார், கட்டபொம்மன் மாதிரி மீசை வைத்துக் கொண்டிருப்பார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பது என்பது சிலுக்கு ஸ்மிதாவை புடவையில் பார்ப்பதுபோன்று அவ்வளவு அரியதான நிகழ்ச்சியாகும். வசவுக்கு ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், வருடாவருடம் அவர் பெயரை கமிட்டியே எழுதிவைத்துவிட்டுத்தான் மற்றவர்களைப் பற்றி யோசிப்பார்கள். 

ஏற்கனவே அடியேன் குறிப்பிட்டிருந்ததுபோல, அப்போதெல்லாம் அரசுப் பேருந்துகளில்தான் தொழிற்சாலைக்குப் போதல், வருதல் எல்லாம். ஆகையினால், இரவு ஷிஃப்ட் முடிந்து கிளம்பினால், தொழிற்சாலை வாசலிலேயே இரண்டு மூன்று பேருந்துகள் காத்திருக்க, உட்கார இடம் தேவைப்படுகிறவர்கள் ஓடிப்போய் ஏறிவிடுவார்கள். 
கிருஷ்ணன் சார், பாவம், கொஞ்சம் வயதானவர். பெரும்பாலும் நின்றபடியே வருவார். மனதுக்குள் விஷமச்சிரிப்பு சிரித்தபடியே அவரைப் பார்ப்பேன். ‘இன்னிக்கு ஷிஃப்ட் பூரா என்ன திட்டு திட்டுனே? வா, நின்னுக்கிட்டே வா!’

முதல்வார ஷிஃப்ட் முடிந்தது. அடுத்த வாரம் ஜெனரல் ஷிஃப்டுக்குப் போனதும், ராமச்சந்திரன் சார் கூப்பிட்டு அனுப்பினார்.

’டேய் வேணு! பிரமாதமா வேலை பண்ணியிருக்கே போலிருக்கே! கிருஷ்ணன் சார் உன்னைப்பத்தி அப்படி அப்ரிஷியேட் பண்ணினாரு! ஓடி ஓடி வேலை பார்த்தியாமே? வெரி குட்!’

என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதுவும் யாரை நான் கரித்துக் கொட்டினேனோ, அந்த கிருஷ்ணன் சாரே என்னைப் பற்றி பாராட்டியிருப்பது எனக்கு கொஞ்சம் வெட்கத்தை ஏற்படுத்தியது. கணிப்பதில் அவசரப்பட்டு விட்டேனோ? சே!

கிருஷ்ணன் சாருக்கும் எனக்கும் மீண்டும் அடுத்த நைட் ஷிஃப்ட் வர ஒரு மாதம் பிடித்தது. இதற்கிடையில் ஒரு நாள், கேண்டீனில் டிபன் சாப்பிடுவதற்காக வரிசையில் அவருக்குப் பின்னால் நின்றிருந்தபோது, தயக்கத்தை விட்டுவிட்டு, ‘ஸார், ரொம்ப தேங்க்ஸ் ஸார்!’ என்று சொன்னதும், ‘போடா!’ என்று சிரித்தபடியே வயிற்றில் லேசாகக் குத்தினார். 

அடுத்த முறை எங்கள் ஜோடிக்கு நைட்-ஷிஃப்ட் வந்தது. அன்றிரவு ஷிஃப்ட் முடிந்ததும், பஸ்ஸில் ஏறி உட்கார இடம்பிடித்தபின், கிருஷ்ணன் சார் வந்ததும் எழுந்து அவரை உட்காரவைத்துவிட்டு நான் நின்று கொண்டேன். 

’என்னடா காக்கா பிடிக்கிறியா?’

அது காக்காயோ, குருவியோ, எனக்கும் கிருஷ்ணன் சாருக்கும் இடையே பின்னாளில் மிக நெருக்கமான உறவு ஏற்படுவதற்கான ஒரு குட்டி முன்னோட்டமானது. அதே ஷிஃப்ட் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், கிருஷ்ணன் சார், ஏதோ ஒரு காரணத்துக்காக, கடைசி நாளன்று லீவு கேட்டிருந்தார். 

‘தனியா சமாளிப்பியாடா? முடியாதுன்னா இப்பவே சொல்லிடு. லீவை கேன்சல் பண்ணிடறேன்,’ என்றார். ‘ஜமாய்ச்சிடறேன் சார், நீங்க தாராளமா லீவு எடுத்துக்குங்க,’ என்று நான் தைரியமாகச் சொல்லிவிட்டேன்.

நைட்-ஷிஃப்ட் ஸ்டோர்கீப்பரின் வேலை மிகவும் கடினமானது. தொழிற்சாலை வளாகத்துக்குள், ஒரு ஏர்-கண்டிஷன் ஸ்டோர்ஸ் இருந்தது. அதில், குளிரூட்டப்பட்ட நிலையில் பல விலைமதிப்புள்ள பாகங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, Reed என்று, பாதியாக உடைக்கப்பட்ட ஷேவிங் பிளேடு போன்ற ஒரு சின்ன உதிரிபாகம்; engine assembly-யில் இடம்பெறுவது. ஒரு தீப்பெட்டி சைஸ் பாக்கெட்டுக்குள் நூறு reedகள் இருக்கும் என்றால் எவ்வளவு மெல்லியது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த ஸ்டோரைத் திறப்பதென்றால், புரொடக்‌ஷன் சூப்பரிண்டெண்டை அழைத்துக் கொண்டுதான் போக முடியும். அதே போல, pre-inspection என்ற இன்னொரு ஸ்டோரில், டிவி.எஸ்-50யில் மாட்டுவதற்குத் தயார் நிலையிலுள்ள விலையுயர்ந்த பாகங்கள். இது தவிர, ட்யூப் ஸ்டோர்ஸ், scrapyard என்று அனைத்தும் அந்த இரவு ஸ்டோர்கீப்பரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது தவிர, பொதுவாக தேவைப்படும் பேனா, பென்சில், பேப்பர், அச்சடித்த ஸ்டேஷனரி அயிட்டங்கள், உதிரியாக நட்டு, போல்ட்டுகள், ஸ்க்ரூடிரைவர், ஸ்பேனர் போன்ற சங்கதிகளை உள்ளடக்கிய ஜெனரல் ஸ்டோர் வேறு. ஓடியோடி ஒவ்வொரு ஸ்டோரிலிருந்தும் புரொடக்‌ஷன் கேட்கிற பொருட்களை உடனடியாக எடுத்துக் கொடுக்க வேண்டும். எல்லாம் முடித்தபின்னர், ஒரு நீள நோட்டில், Log Book எழுத வேண்டும். எத்தனை வண்டிகளில் சரக்கு வந்தன; என்னென்ன பொருட்கள் vendor quality தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டன, என்னென்ன சரக்குகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றன, எத்தனை வண்டிகள் இன்னும் வாசலில் நின்று கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் எழுதி வைக்கவேண்டும். எந்தெந்த ஸ்டோர்கள் திறக்கப்பட்டன, எத்தனை மணிக்குத் திறந்து, எத்தனை மணிக்கு மூடப்பட்டன, என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டன, எடுக்கப்பட்டன என்பதெல்லாம் எழுத வேண்டும். பிறகு, எல்லா ஸ்டோர்களின் சாவிகளையும் ஒரு தோல்பையில் போட்டு, பட்டன் போட்டு, டேப் போட்டு சுற்றி, மேலே கையெழுத்துப்போட்டு, தேதி, நேரம் எழுதி, செக்யூரிட்டியில் ஒப்படைத்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும். 

இதுதவிர, ஒரு ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் செய்ய வேண்டிய பொறுப்புகளையும் செய்தாக வேண்டும் என்பதால் இரட்டிப்புப் பணி. இதை என்னை மாதிரி ஒரு பச்சைமண்ணால் செய்யமுடியுமா என்ற சந்தேகம், அவுன்ஸ் கிளாஸ் அளவுக்கு அறிவுள்ளவர்களுக்கும் ஏற்படுவது இயல்பே. 

ஆனால், எப்படி நடந்தது என்று தெரியவில்லை. கிருஷ்ணன் சாரிடம் சொன்ன மாதிரியே, ஜமாய்த்துவிட்டேன். குறிப்பாக, லாக்-புக்கை நான் எழுதிய விதம் ராமசந்திரன் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘குண்டுகுண்டா உருட்டி உருட்டி எழுதறடா. இனிமேல் Inter Office Memo எல்லாம் நீதான் எழுதணும்,’ என்று கூடுதலாக ஒரு பொறுப்பையும் ஒப்படைத்தார். 

IOM என்று சுருக்கமாக அழைக்கப்படும், Inter Office Memo என்பது, ஒரு பைண்ட் செய்யப்பட்ட, மேலே வெள்ளைக்காகிதமும் கீழே மெல்லிய காகிதமும் வைத்து, கார்பன் பேப்பர் உபயோகித்து எழுதப்படுகிற ஒரு தகவல் பரிமாற்றப் புத்தகம். எழுதிக் கையெழுத்துப்போட்டு, மேல் காகிதம் peforate செய்யப்பட்டிருப்பதால், கிழித்து உரிய துறைக்குக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரலாம். இமெயில் ஆகியவை இல்லாத காலத்தில் இப்படித்தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் பிறதுகள் கூட சம்பாஷணை நடத்தி வந்தார்கள். 

IOM-ல் புதிதாக ஒரு கையெழுத்தைப் பார்த்ததும் ‘யாருடைய கையெழுத்து இது?’ என்று எல்லாரும் கேட்க ஆரம்பிக்க, அவ்வப்போது ‘your handwriting is very good,’ என்ற பாராட்டுக்களும் கேட்க ஆரம்பித்தேன். 

எங்கள் ஸ்டோர்கீப்பரின் நெருங்கிய உறவினர் காலமாகவே, ஸ்ரீசைலன் சார் பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துக்கொண்டு மதுரை போனார். அந்த பத்து நாட்களும் யாருடைய உதவியுமின்றி நானே மொத்த ஸ்டோர்ஸையும் சரிவர பார்த்துக் கொண்டதால், ‘இந்தப்பய பரவாயில்லையே’ என்று நிறைய பேர் ஆச்சரியப்படத்தொடங்கினார்கள். அவர்கள் எல்லாரையும் விட எனது ‘திறமை’யைப் பார்த்து அதிகம் ஆச்சரியப்பட்டது, நானே தான்.

‘நீ ஒண்ணும் அவ்வளவு மோசமில்லடா! உனக்குள்ளே சரக்கிருக்கு,’ என்று ஒரு நம்பிக்கைக்குரல் எனக்குள்ளிருந்து குறைந்த டெசிபல்களில் அவ்வப்போது கேட்கத்தொடங்கின.

எல்லாமே இவ்வளவு சுமுகமாகப் போனால், அப்புறம் சந்திரசூடேஸ்வரருக்கு என்ன வேலை? ‘இந்தப் பயலை கொஞ்சம் சோதிக்கலாம்’ என்று யாரோ அவரிடம் போட்டுக் கொடுத்திருப்பார்கள் போல. அதன் விளைவாக திடீரென்று சில சிக்கல்கள், மனிதர்கள் மட்டும் இயந்திரங்கள் மூலமாக ஏற்படத்தொடங்கின. 

எழுதுகிறேன் அப்பாலிக்கா!

====================================================================================================

சில செய்திகள்...


1)  மாறும் இந்த இயற்கையின் நிலை சிறிய அபாய மணியை அடித்து பயத்தை ஊட்டுகிறதோ...



2)  உண்மைதான் இல்லையா?  இந்தத்துறை சமீப காலங்களில் என்ன சாதித்தது என்று ஆராய வேண்டும்.  அடுத்த செய்திப் படத்தைப் பாருங்கள்...


இதே செய்தி போல 87 ஆம் வருடம் கல்கண்டில் கேள்வி பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வி பதில்!



3)  இந்த செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?  தினசரி இந்த 20,000 பேர்கள் என்ன செய்வார்கள்?  அரசாங்கம் எப்படி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?!  வெட்டிச் சம்பளமா?


================================================================================================

வெட்டி அரட்டையில் ஒன்று...

நிறைய காணொளிகள், பிரபலமானவர்களின் பேட்டிகள் பார்ப்பேன்.  அதில் நான் கண்ட ஒரு ஆச்சர்யம்.  எனக்குதான் அது ஆச்சர்யம் என்று நினைக்கிறேன்.  உங்களுக்கெல்லாம் இதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றலாம்.  எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டால் உள்ளங்கையின் உள்பக்கத்தில்தானே வைத்துக் கொள்வார்கள்?!  இவரின் உள்கை ப்ளெயினாக இருக்கிறது. உள்ளங்கையின் வெளிப்பக்கம் மருதாணி!


===========================================================================================

 பொட்டு வைத்த முகமோ...  

பொட்டு வைப்பதில் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என, மலைக்க வைக்கிறார், டாக்டர் சசித்ரா தாமோதரன்: பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும், கோவில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பொட்டு வைத்துக் கொள்கின்றனர். போர்களின் போது வெற்றி வாகை சூடியவர்கள், சிகப்பு நிற திலகத்தை வைத்துக் கொள்வது, தொன்றுதொட்டு நம் நாட்டில் பின்பற்றப்படும் மரபு.

இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், நேபாளம், இலங்கை, மலேஷியா, வியட்னாம் போன்ற, பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர் புருவ மத்தியில் சிகப்பு நிற பொட்டு வைத்துக் கொள்வதை காண முடிகிறது.சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இந்த வழக்கம் இருந்ததன் அடையாளமாக, அங்கே கண்டறியப்பட்ட களிமண் பெண் உருவங்களின் நெற்றியில் பொட்டு காணப்பட்டது என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

யோக முறைகளின்படி, நெற்றியில் குங்குமம் வைக்குமிடம், சிந்திக்கும் திறன் மற்றும் நினைவாற்றலுக்குரிய ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடமாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் குங்குமம் வைக்கும் போது, முகம் பிரகாசமாக மாறுவதுடன் ஞானம், அமைதி, தெளிவு கிடைக்கிறது என, கூறப்படுகிறது.இதனால் தான், புத்த மத துறவிகளுக்கு, நெற்றிக்கண் திறப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில், புருவ மத்தியில் சூடு வைக்கப்படுகிறது.
தியானம் செய்பவர்கள், பொட்டு வைக்கும் இடத்தில் ஆழமாக தொடும் போது, மன ஒருங்கிணைப்பு வாய்க்கிறது என்கின்றனர்.ஹிந்துக்களில் திருமணமான பெண்கள் என்பதை காட்டும் விதமாக, நெற்றியில் குங்குமம் வைக்கப்படுகிறது. மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய் போன்ற இயற்கை பொருட்கள் அடங்கிய குங்குமம், சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. பெண்களுக்கு மன அமைதியையும், அழகையும் தருகிறது.குங்குமம், எதிர்மறை எண்ணங்களை விலக்கி, மன வலிமையை தருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று கடைகளில் கிடைக்கும் செயற்கை நிறைந்த குங்குமப் பொடிகளில் துத்தநாகம், பாதரசம், ஈயம், ரோடமைன் போன்ற, பல ரசாயனங்கள் உள்ளன.இவை சரும அழற்சி, அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற, பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செயற்கை குங்குமத்தை நீண்ட காலம் பயன்படுத்தும் போது, நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான பொருட்களால் ஆன குங்குமம் தான் சிறந்தது.குங்குமம் வைப்பது, அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது


தினமலர் - சொல்கிறார்கள் -

============================================================================================

கவிதை :  !!



===============================================================================================


பொக்கிஷம் 










126 கருத்துகள்:

  1. டாக்டர் சுசித்ரா தாமோதரனுக்கும் அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம்? இரண்டு அனுஷ்கா படங்களை நுழைக்க இந்தச் செய்தியா?

    சேட்டைக்காரனைவிட பெரிய சேட்டைக் காரனாக இருப்பார் போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொட்டு வைத்த முகம் என்றதும் அழகிய அனுஷ் முகம் நினைவுக்கு வந்து பகிர்ந்தேன்.. வேறொன்றுமில்லை. வாங்க நெல்லை...

      நீக்கு
  2. சேட்டைக்காரன் பகுதி சுவாரஸ்யம். அவர் மேனுவலாகச் செய்த வேலைகளை கெம்ப்ளாஸ்டில் முதல் முதலாக கம்ப்யூட்டரில் செய்யும் சாப்ட்வேரை நான் எழுதிய காலம் நினைவுக்கு வருது. அது 89ல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நேற்று இதே போல TVS நிறுவனத்தில் மொபிலிட்டி சர்விஸ் சென்டரில் பணிபுரியும் என் ஒன்று விட்ட தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  இப்போது அவன் ஹோசூரிலிருந்து க்ருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டு சென்று வருகிறான்.  சேட்டை நினைவுக்கு வந்தார்.

      // கெம்ப்ளாஸ்டில் முதல் முதலாக கம்ப்யூட்டரில் செய்யும் சாப்ட்வேரை நான் எழுதிய காலம் நினைவுக்கு வருது. //

      Wow..

      நீக்கு
  3. உள்ளங்கையைக் காண்பிப்பதைவிட புறங்கையைக் காண்பிப்பது இயல்பு. பலரும் பார்க்க ஏதுவாகும். அதனால் மருதாணி புறங்கையில்.

    எனக்கு உள்ளங்கையில் மருதாணி டிசைன் போட்டுக்கொள்ள ரொம்பப் பிடிக்கும். திருமண ரிசப்ஷன் சமயங்களில் இதற்கு ஒரு கவுன்டர் இருந்தால் வெட்கப்படாமல் கையை நீட்டிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஏனோ மருதாணி போட்டுக்கொள்ள பிடிப்பதில்லை.  அதேபோல கையில் கொச கொசவென்று மருதாணி போட்டிருப்பவர்களும் அலர்ஜி.  அழகாக சிம்பிளாக மருதாணி போட்ட கைகள்தான் பிடிக்கும்.  அதிலும் தாவணி போட்டிருந்தால் கொஞ்சம் கூடுதல் விசேஷம்..  சில வருடங்களுக்கு முன் சொல்கிறேன்...

      நீக்கு
  4. அலுவலகப் பணி புரிபவர்களைவிட வீட்டு உதவியாளர்கள் பல வீடுகளில் வேலை செய்வதால் ஒப்பீடு செய்து அதிக்க் காசுக்கும் குறைந்த வேலைக்கும் ஆசைப்படுகிறார்கள். காசு மற்ற வீடு அளவுக்கு இல்லைனா வேலைல சுணக்கம் காட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ஒரே நேரத்தில் பல வீடுகளில் வேலை செய்வதால் அவசரம், அலட்சிய வேலைகள்... உண்மைதான்.

      நீக்கு
    2. ம்ம்ம்ம் இந்தப் பணிப்பெண்கள் அனைவருமே அநேகமாக ஒரே மாதிரித் தான் இருக்கின்றனர். வழக்கமாக வருஷக்கணக்கில் வந்து கொண்டிருந்த பெண் திடீரென ஏதோ சின்னக் குறையால் வரமாட்டேன் எனச் சொல்லிவிட வேறொரு பெண்ணை வைத்தோம். அந்தப் பெண்ணோ மாமாவை மருத்துவமனை கூட்டிச் செல்லும் நாட்களில் கொஞ்சம் தாமதமாக வரச் சொன்னால் வர மாட்டார். பனிரண்டு மணிக்கே வரேன் எனத் தொலைபேசியில் அழைப்பார். மருத்துவமனையில் இருக்கோம். செக்கப் முடிந்து வருவோம் இரண்டு மணிக்கு வாங்க என்றால் பதிலே வராது. வீட்டுக்கு வந்து அழைத்தால் அழைப்பை நிராகரித்துவிடுவார். பதிலே வராது. ரொம்பத் தாங்க முடியாமல் போய்ப் பழைய வேலை செய்யும் பெண்ணையே மீண்டும் அழைத்து நிலவரத்தைச் சொல்லி மறுபடி வரச் சொன்னோம். இப்போவும் அந்தப் பழைய உதவிப் பெண்மணி தான் அவ்வப்போது வந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டுப் போகிறார். வடமாநிலங்களில் இருந்தப்போ எல்லாம் உதவிக்கு ஆளே கிடையாது. குளிர்காலங்களில் துணி துவைக்க மட்டும் ஒரு பெண்மணியோ அவர் கணவரோ வருவார்கள். மற்றபடி நான் தான் எல்லாம். ஆனால் தமிழக வேலைக்காரப் பெண்மணிகளில் அதுவும் சென்னையில் இந்த அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நிறைய அவதிப் பட்டிருக்கேன்.

      நீக்கு
    3. நெல்லை சொன்ன இந்த பாயின்டை விட்டுவிட்டேன் சொல்ல. இப்ப பார்த்ததும் இதுவும் அதில் உண்டேன்ன்னு..

      கீதாக்கா வட மாநிலங்களில் இப்பவும் கூட குறைந்த விலைக்கு வருகிறார்கள். ஒட்டுதலோடும் வேலை செய்கிறார்கள். என் தங்கை வீட்டில் செய்யும் பெண்மணி என்னை அடிக்கடி கேட்பாராம். நான் சென்றால் உடனே என்னை வந்துகட்டிக் கொண்டு ஹிந்தியில் அக்கா எப்படி இருக்கீங்கன்னு கேட்டு அதுவும் முகம் முழுவதும் சிரிப்போடு....அன்று என் தங்கையுடன் தீபாவளி அன்று ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது அப்பெண்மணி, "அக்காவோடு பேசறியா....கொடு என்று எனக்கு வாழ்த்தும் சொன்னார். "

      அதே போல வேறொரு உறவினர் வீட்டில் செய்யும் பெண்ணும், அங்கெல்லாம் துடைக்க மாப் பயன்படுத்துவதில்லை இப்பவும் கையால் கீழே குனிந்து உட்கார்ந்துதான் துடைக்கிறாங்க அதுவும் மூலை முடுக்கில் எல்லாம் தூசியை எடுத்துத் துடைக்கிறாங்க.

      இங்கு பெங்களூரில் பணி செய்யும் நேபாலிப் பெண்ககள், வட இந்தியப் பெண்கள் துடைக்க மாப் வேண்டாம் என்று சொல்வதைப் பார்க்கிறேன். கையால்தான் துணி கொண்டு துடைக்கிறாங்க.

      கீதா

      நீக்கு
    4. // அதே போல வேறொரு உறவினர் வீட்டில் செய்யும் பெண்ணும், அங்கெல்லாம் துடைக்க மாப் பயன்படுத்துவதில்லை இப்பவும் கையால் கீழே குனிந்து உட்கார்ந்துதான் துடைக்கிறாங்க அதுவும் மூலை முடுக்கில் எல்லாம் தூசியை எடுத்துத் துடைக்கிறாங்க.//

      Great. அதிசய பிறவிகள்! காணக்கிடைக்காத தங்கங்கள்!

      நீக்கு
    5. தென்னிந்தியா குறிப்பாச் சென்னை தவிர்த்து மற்ற வட மாநிலங்கள், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இரட்டிப்புச் சம்பளம். எழுபதுகளில் நான் முதல்முறை ராஜஸ்தான் போனப்போ வேலை செய்யும் பெண் ஒரு மாசத்துக்கு 200 ரூபாய் கேட்டார். இத்தனைக்கும் பாத்திரம் கழுவுதல் மட்டுமே! துணிகளெல்லாம் கைகளால் தொடக் கூட மாட்டார். வீடு துடைக்கும் துணியை வாளியில் போட்டு வைத்திருந்தால் தொடாமல் அப்படியே கவிழ்த்துக்கீழே போட்டுவிட்டு வாளியைக் கழுவி எடுத்துப்பார். தினம் சாப்பாடு கொடுக்கணும். வீட்டில் காலை என்ன பண்ணுகிறோமோ அதைத் தனியா எடுத்து வைச்சு வந்ததும் கொடுத்துட்டு இஞ்சித் தேநீர் போட்டுத் தரணும். குளிர்காலத்தில் பாத்திரம் கழுவ சூடாக வெந்நீர் அடுப்பில் தயாரா இருக்கணும். நல்லவேளையா என்னிடம் பாய்லரும், பக்கெட் குமுட்டியும் இருந்தது.

      நீக்கு
    6. அவங்களிடம் சொன்னால் அந்த மேஜர் வீட்டில் இப்படிக் கொடுக்கிறாங்க. இந்த காப்டன் வீட்டில் தினமும் சாப்பாடு சூடாய்ப் பண்ணிக் கொடுப்பாங்க. சம்பளம் 500 ரூ தராங்க என்றெல்லாம் சொல்லிக்காட்டுவார்கள். ஓரிரண்டு மாதங்கள் பார்த்துட்டுப் பின்னர் நிறுத்திட்டேன். நானே தான் எல்லாம் செய்வேன். வீடு அதாவது க்வார்டர்ஸ் பெரிதாக இருக்கும் என்பதால் பெருக்கித் துடைக்க மட்டும் ஒரு குறிப்பிட்ட யூனிட்டில் சொல்லி அவங்க ஸ்வீப்பரை அனுப்புவாங்க தினமும்.

      நீக்கு
    7. இங்கு இப்போதைய நிலையில் வடநாட்டு பணியாளர்கள்தான் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் என்று கேள்விப் படும்போது ராஜஸ்தான் பணியாளர்களின் போக்கு வியப்பூட்டுகிறது!

      ஆமாம்..  அவர்களிடம் அந்த அளவு ஊதியம் கொடுத்து செய்வதற்கு நாமே செய்து விடலாம் என்று தோன்றும்தான்.

      நீக்கு
    8. ஒருவேளை சிவில் ஏரியாவில் குறைந்த சம்பளத்துக்கு வரலாமாக இருக்கும். நாங்க இருந்தது முழுக்க முழுக்க கன்டோன்மென்ட் தானே! எல்லாக் குடியிருப்புக்களிலும் ராணுவ வீரர்கள் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் எனக் குடி இருப்பதால் அவங்க லெவலுக்கு ஏற்பச் சம்பளம் கேட்டிருப்பாங்க. இப்போதும் இங்கே ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் நேபாளப் பையரை மாமா காரியங்களின் போது அதிகப்படியான வேலைகளுக்குக் கூப்பிடுவேன். வந்து செய்வார். ஒரு வேளைக்கு 200ரூபாய். அதுக்குக் குறைந்து வாங்கலை. இரண்டு வேளை வந்தால் 400 ரூபாய்.

      நீக்கு
    9. வேளைக்கு இஒருநூறு ரூபாயா?  இது என்ன அளவீடு!  நீங்கள் சொல்லும் காலத்திலேயே அவ்வளவு என்றால் இப்போது இன்னும் அதிகமாக கூட வாங்குவார்களாய் இருக்கும்!

      நீக்கு
    10. //நீங்கள் சொல்லும் காலத்திலேயே அவ்வளவு என்றால் இப்போது இன்னும் அதிகமாக கூட வாங்குவார்களாய் இருக்கும்!// நான் சொல்லி இருப்பது இப்போத் தான். மாமா காரியங்களின் போது. மே/ஜூன் மாதங்களில். நீங்க வட மாநில வேலைக்காரங்க குறைஞ்ச சம்பளம் வாங்குவதாய்ச் சொன்னதால் அதைச் சுட்டிக் காட்டி இருக்கேன். எல்லோருமே பணம் அதிகம் தான் வாங்குகிறார்கள்.

      நீக்கு
    11. ஓ...   நிலைமை மாறி விட்டது போல...   சில பீஹாரிகள் தனியாய் கடைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள் இங்கே...

      நீக்கு
  5. ஊசி முனையால் பொட்டு வைத்துக் கொள்ளும் காலம் இது.. இப்போதைய இளம் பெண்களில் பலர் பொட்டு வைத்துக் கொள்வதே இல்லை.. பாழ் நெற்றி தான்..

    பதிலளிநீக்கு
  6. மருதாணியின் மருத்துவப் பயன்கள் என்றால் உள்ளங் கை தான்... புறங்கை என்பது வெறும் பகட்டு...

    பதிலளிநீக்கு
  7. ஒன்னேகால் ரூபாய்க்கு அட்டைப் பட கவர்ச்சியுடன் நாவல்., பொன்னான நாட்களும் கனவாகிப் போனதே...

    இதயம் கனக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய விலைவாசி..  அப்போது நாம் அதிகம் படித்தோம்.  அதனால் மனதில் நின்ற தெரிந்த எழுத்தாளர்கள்.

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. எழுபது எண்பதுகளின் தொடக்கத்தில் பாக்கெட் நாவல்கள் ஒரு ரூபாய் தான்...

    சென்னை பாரிமுனையில் இருந்து தஞ்சைக்கு 18 ரூபாய் தான் விரைவு பேருந்தில் (திருவள்ளுவர்)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதுவும் சின்ன சைஸ் புத்தகங்கள்! இன்றைய விலைவாசி.

      நீக்கு
  10. எல்லா பகுதிகளும் நன்றாக இருக்கிறது.
    சேட்டைக்காரன் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக
    இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. ஆ!!!!! ஸ்ரீராம் இன்று முதல் பகுதிக்கே நிறைய கருத்துகள் போட வேண்டும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பிற பெண்மணிகளைக் கூட்டிக் கொண்டு வருவதை நான் சொல்ல நினைத்தேன்....

    ஸ்ரீராம் நீங்க கலெக்ஷனுக்குன்னு வராங்கன்னு நினைக்கக் கூடாது. அவங்க உங்களுக்கு நல்லது செய்யறாங்க புண்ணியம் கிடைக்கச் செய்யறாங்கன்னு. என்று அடித்து வைத்து வாசிக்கும் போது

    நீங்களும் அதே கருத்தைச் சொல்லிட்டீங்க!!!!! ஆனா நான் பைபாஸ் பண்ணாம போட்டுவிட்டேன் நான் அடித்ததையும்!!!!!!ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... ஆமாம்.. கூட்டமா தான் வராங்க! கேட்டா புண்ணியம்னு சொல்றாங்க!! அல்லது நம்ம நெனச்சுக்கணும் !!கட்டாய புண்ணிய டிஸ்ட்ரிபியூஷன். ஆனா கணக்கு பார்த்து அளவா கிஃப்ட் வாங்கி இருப்போமே... என்ன செய்ய?!!

      நீக்கு
    2. நீங்க சொல்றாப்போல் ஸ்ரீரங்கத்தில் எங்க வீட்டில் உதவி செய்யும் பெண்ணும் அவர் ஓரகத்திகள், நாத்தனார்கள் என அழைத்து வந்துவிடுவார். அதில் ஒரு ஓரகத்தி வரமுடியலை என்பதால் கொடுத்தனுப்புங்க என்று எனக்குச் சொல்லுவார். நம்மவருக்குக் கடுப்பாக வரும். தாக்ஷண்யம் நான் ரொம்பப் பார்ப்பதால் எதுவும் காட்டிக்கொண்டதில்லை. நம்ம ரங்க்ஸோ உனக்கு பயம், எங்கே வேலைக்கு வருவதிலும் செய்வதிலும் ஏதேனும் சுணக்கம் காட்டுவாள் எனப் பயம் என்று கோபிப்பார். :)

      நீக்கு
    3. இந்த கிஃப்ட் விஷயம் எப்போவும் 50 தேவைன்னா நான் 60 வாங்கி வைச்சுடுவேன். அதனால் சமாளிக்க முடியும். சுண்டலும் பற்றாக்குறை வராது. மிஞ்சிப் போனால் இரவில் செக்யூரிடியில் இருப்பவங்களிடம் கொடுத்துடலாம். இதுவே சென்னைனால் கேட்கவே வேண்டாம் கொடுக்க நிறையப் பேர் இருப்பாங்க.

      நீக்கு
    4. இப்போச்சில வருஷங்களாக எங்க தளத்தில் ஒருத்தர் அவங்க வீட்டில் அவங்க ஒருத்தருக்கு மட்டும் கொடுத்தால் போதும்னு சொல்லுவாங்க. அவங்க கூடவே அவங்க அம்மா, ஓர்ப்படிகள், நாத்தனார் என வருவாங்க. நான் எல்லோருக்கும் கொடுத்தால் அவங்களுக்குக் கோபம் வரும். அதோடு அவங்களைத் தினமும் வந்து வெத்திலை,பாக்கு எடுத்துக்கோங்க என்றாலும் கோபம் வரும். எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை. சென்னையில் இருந்தவரை அக்கம்பக்கத்தவர்களில் சிலர் தினமும் வருவாங்க. வரவேற்று வெத்திலை,பாக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு.

      நீக்கு
    5. சுண்டல் பிரச்னை இல்லை.  கிஃப்ட்  விஷயம் நீங்கள் சொல்வது போலதான் இங்கும்...  இப்போதாவது நவராத்திரி கொலு ஆரம்பித்திருக்கிறோம்.  அதற்கும் முன்னாலேயே எப்போதும் ஏதாவது ஒரு வகை கிஃப்ட் வகையறாக்கள் வீட்டில் இருக்கும்!

      நீக்கு
    6. சில தவிர்க்க முடியாத உறவுகளில் வராதவர்களுக்கு "தாம்பூலம்" தந்து அனுப்பும் வழக்கம் இங்கும் இருக்கிறது கீதா அக்கா.

      நீக்கு
    7. கீழ் வீடு, மேல் வீடுகளே இங்கு ஒருமுறைக்கு மேல் வருவதில்லை.  அதுவும் எங்கள் பக்கத்து வீடு சுத்......த்....தம்...  எப்போது கதவைத் திறந்து வெளியேறுகிறார்கள், உள்ளே செல்கிறார்கள் என்பதே புதிர்.  அழைத்தாலும் வருவதில்லை!

      நீக்கு
  12. இரண்டு பேர் வைத்துக் கொண்டால் கண்டிப்பாகப் பைசா கூடும்தான்.

    இன்னொன்று இங்கு அவர்களை மேனேஜ் செய்வது என்பது மிகவும்கடினம். அவர்களையும் நாம் professional ஆகக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அவங்க வந்ததும் புன்சிரிப்போடு எல்லாம் சொல்லிவிட்டு, என்ன செய்யணும்னு மட்டும் சொல்லிவிட்டு அவங்க வேலையைச் செய்ய விட்டுவிடணும் ஜஸ்ட் மறைமுகமாகக் கண்காணிப்பு ஒழுங்கா செய்யறாங்களான்னு. நாம ஒரு முதலாளி போல அதே சமயம் கொடுமைக்கார முதலாளி இல்லை என்ற உடல் மொழியில் அவர்களை நடத்த வேண்டும்.

    இல்லைனா அதுவும் நம்ம மனசு இளகும் இரக்க மனசு என்றால் பாஸ் செய்வது போலத்தான் நானும் நிறைய செய்து கற்றுக் கொண்டவை மேலே சொன்னது.

    இத்தனைக்கும் நான் இரு முறைதான் வீட்டுக்கு ஆள் வைத்துக் கொண்டது. மகன் கைக்குழந்தையாக இருந்த போதும், சென்னையில் என் ட்யூட்டி வேறு இடத்தில் அப்ப வீட்டைக் கவனிக்கணுமே அதுக்காகவும். சிறிய காலகட்டம்தான். அப்ப கற்றுக் கொண்ட உளவியல்.

    நம்மவருக்கு என்னை விட கை பெரிசு. சென்னை வீட்டை விட்டு இங்கு வந்தப்ப. சின்ன காலகட்டத்தில் வேலை செய்த பெண்ணைக் கூப்பிட்டு, நாங்கள் தச்சரை வைத்து, மகனின் புத்தகங்களை வைத்துக் கொள்ளச் செய்திருந்த மர ஷெல்ஃபை அப்படியே கொடுத்திருக்கிறார். அழகான ஷெல்ஃப். எந்தவிதக் கேடும் இல்லாமல் இருந்த ஷெல்ஃப் நீட்டாக நான் துடைத்து வைத்துக் கொண்டிருந்த ஷெல்ஃப்!! என்ன சொல்ல முடியும்?

    இங்கு நான் இதுவரை உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளவில்லை. வீடும் சின்னது நாங்க மூன்று பேர் தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கலையெல்லாம் கைவந்து பல நாட்கள் ஆகிவிட்டது!! முடிந்த வரை நன்றாக ஹேண்டில் செய்ய முடிகிறது. முதலாமவரின் நேர்மை பற்றி ம கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஒரு பதிவு போட்டிருந்தேன்... ஞாபகம் இருக்கா? ரூபாய் போட்டு எடுக்காமல் அவர் எங்களிடம் திருப்பிக் கொடுத்ததும் , அப்புறம் ஒரு தர்ம சங்கடம் பற்றியும் .... கடன் வாங்கிவிட்டு மறந்த மாதிரி இருந்ததும்..

      நீக்கு
    2. நினைவு இருக்கு ஸ்ரீராம். அவரைப் பற்றி நீங்கள் எழுதியது. !!

      கீதா

      நீக்கு
  13. பொதுவா பெண்கள் நாங்கள் செய்யும் ஒரு தவறு, வீட்டு உதவியாளர்களிடம் அவர்கள் குழந்தைகள் குடும்பம் பற்றிக் கேட்டு, கணவன் வேலை செய்வது இல்லை சரியா.....குடிப்பான் பைசா கொடுப்பதில்லை, பிள்ளைங்க படிக்கணும் இப்படி எல்லாம் சொல்லும் போது எங்கள் மனம் இளகிவிடுகிறது.

    இப்படிப் பேச்சுக் கொடுக்காமல் ஒரு கம்பெனியில் ஒரு மேனேஜர் எப்படி ஒருவரை வேலை வாங்குவாரோ அப்படித்தான் நடத்த வேண்டுமாம்!!

    நாங்கள் இருவருமே இப்படிக் கொஞ்சம் கொடுத்து ஏமாந்தது நிறைய. அடிபட்ட வாழ்க்கை இல்லையா அதனால் கொஞ்சம் விழித்துக் கொண்டு இருக்கோம் இப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்வது அலுவலகங்களுக்கு பொருந்தும். வீட்டிற்கு பொருந்தாது. பேசி, அவர்கள் குடும்பம் பற்றி அறிந்து கொண்டு, பழகுவது ஒரு நெருக்கத்தை உண்டாக்கும். பாஸ் இதில் பட்டம் வாங்கியவர். ஆனால் உண்மையாகவே அக்கறையுடன் தெரிந்து கொண்டு உதவுவார். இப்போது கூட மூன்று வருடங்களாக அவருக்கு சம்பளம் ஏற்றாமல் இருக்கிறோம் ஏற்ற வேண்டும் என்று இவர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கூட கேட்கவில்லை.

      நீக்கு
    2. அவர் சொல்வது அலுவலகங்களுக்கு பொருந்தும். வீட்டிற்கு பொருந்தாது. பேசி, அவர்கள் குடும்பம் பற்றி அறிந்து கொண்டு, பழகுவது ஒரு நெருக்கத்தை உண்டாக்கும்.//

      டிட்டோ. யெஸ் அதேதான். பாஸ் போல்தான் நானும் சென்னையில் இருந்த வரை....

      குழந்தைகள் படிக்க என்று உதவிய காலம். ஆறு மாதத்தில்யேயே சம்பளம் கூட்டியதும் உண்டு. இரண்டும் பெண் குழந்தைகள் அவருக்கு. அதனால் இரக்கம் தான்.

      கொஞ்சம் நாம ஒரு க்ளோஸ்னெஸ் கொண்டு வந்தாதான் அவங்களுக்கும் இணக்கமாக இருக்காங்க என்பதும் உண்மைதான். ஆனால் இதிலும் நபரைப் பொருத்து.

      கீதா

      நீக்கு
    3. பிராக்டிகல் அதுதான்.  உண்மையைச் சொல்லி இருக்கீங்க...

      நீக்கு
  14. ஆமாம், பாஸ் கை பெரிது. நிறைய தாராளமாகக் கொடுப்பார் என்பதும் தெரியும்.

    //இதைத்தவிர பாத்திரம் அதிகம் என்று பாஸ் நினைக்கும் நாட்களில் கையில் கொஞ்சம் காசு கொடுப்பார். குப்பை அள்ளும் பெண்மணிக்கு அப்படியே.//

    ஹைஃபைவ்!!!! ஒரு சின்ன பீரியட் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்ட போது இதே கதைதான் நம் வீட்டிலும்...நான் நிதி மந்திரி இல்லை நம்ம வீட்டாளிடம் சொல்லிட்டா அவ்வளவுதான் உடனே கொடுத்துவிடுவார்!!!!

    //சொல்லிக் காட்டுவதற்காக இல்லை, அல்லது இதெல்லாம் செய்தால் நாம் சொன்னவற்றை எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அர்த்தமில்லை. ஆனாலும் சில சமயங்களில் வருத்தம் ஏற்படும்.//

    இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் ஸ்ரீராம்.

    கண்டிப்பாக நம் இளகிய மனதையும் தாராள குணத்தையும் அவங்க நன்றாகப் பயன்படுத்திக் கொள்வாங்க என்பது மிக மிக உண்மை.

    இன்னொன்று, நாம நினைக்கிறோம் அவங்க பாவம் ரொம்பக் கஷ்டப்படறாங்க என்று...இருக்கலாம் ஆனால் அவங்க செய்யும் மிகப் பெரிய தவறு இப்படிச் சம்பாதிப்பதை குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குச் செலவழிக்காமல், தங்கம் வாங்குவது, வீட்டிற்கு டீவி வாங்குவது, விதம் விதமாக மொபைல் வாங்குவது என்று செலவழிப்பாங்க. அதுவும் கடன் வாங்கி....வீடு கூடக் கட்டிடுவாங்க சின்னதாகக் கூட....

    எனக்கு இது தெரிந்ததும்தான் உஷாரானேன். என்னடா இது நாம அந்தக் குழந்தைங்க படிக்கட்டும் ஃபீஸ் கட்டட்டும்னு கொடுத்தா, அவங்க மீண்டும் வந்து, "அக்கா பைசா செலவழிஞ்சுருச்சுக்கா இந்த மாசம் ஃபீஸ் கட்டணும்னு" வந்து கேப்பாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யும் வேலையை மனதார, அர்ப்பணிப்புடன் செய்தால் போதும். அப்படி அவர்கள் செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும்.

      நீக்கு
  15. ஒருவருக்கு இருவர். வேலைக்காரர்கள். இலவச ரேஷன், குறைந்த விலையில் மளிகை, வேலை செய்யும் இடங்களில் இலவச சாப்பாடு, 4 வீட்டு சம்பளம் 25000 என்று வேலைக்காரர்கள் பாடு மிகவும் சௌகரியமானது தான். எங்கள் வீட்டில் பாஸ் முடியலை முடியலை என்று அவரே எல்லாம் செய்கிறார், எனக்கு உதவிகள் செய்வது உட்பட. அவரது வயது 71. ஹூம் எத்தனை காலம் என்று தெரியவில்லை.

    நடிகர் சார்லி phd பட்டம் பெற்றவர் என்று எங்கோ படித்தேன். உண்மையா?

    சேட்டைக்காரன் பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. ஒவ்வொரு organanization க்கும் சில தனிப்பட்ட விதிகள், கட்டமைப்பு போன்றவை இருக்கும். அவ்ருடைய விவரணங்கள் மூலம் TVS இன் பிரத்தியேக செயல்பாடு புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் அவரவர் செய்த வேலையை பற்றி எழுதிவிட முடியும். ஆனால் அதை சுவை பட எழுதுவது சேட்டைக்காரனுக்கு மட்டுமே சாத்தியம். உதாரணமாக //கிளைக்கேள்விகள் கிரைண்டருக்குக் கீழிருந்து ஊர்ந்துவருகிற கரப்பான்பூச்சிகள் மாதிரி கிளம்பின.// அவர் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பது என்பது சிலுக்கு ஸ்மிதாவை புடவையில் பார்ப்பதுபோன்று அவ்வளவு அரியதான நிகழ்ச்சியாகும்.// போன்ற உபமேயங்கள் பொங்கலில் போட்ட முந்திரி போன்று இருக்கின்றன.

    காதல் " மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…"
    ஆம். காதல் என்றாலே கவிதை தான்.

    பொக்கிஷம் நியாய விலை கொஞ்சம் ஆலோசிக்க வைத்தது. பொட்டுவைத்த முகங்களும். பாஸ் பெரிய ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணியாளர் அனுபவங்கள் எள்ளோருக்கும் பொது போல..  எழுதியதால் தெரிகிறது!  இங்கும் அவர் பெருக்கிச் சென்றாலும் சில இடங்களில் இடுக்கில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது இல்லை.  பழையாய் வீட்டில் ஒரு பணியாளர் - பணியாளி?!! - இருந்தார்.  உண்மையில் அக்கறையுடன் உணர்ந்து ஈடுபாட்டுடன் இழுத்துப்போட்டுச் செய்வார்,  அது மாதிரி ஆட்கள் அபூர்வம்.

      ஆம்.  நடிகர் சார்லி முனைவர் பட்டம் பெற்றவர் என்று நானே இங்கு பகிர்ந்ததாய்க்கூட ஞாபகம்.

      நீங்கள் சொல்லி இருக்கும் சேட்டை வரிகளை நானும் ரசித்தேன்.  அவர் ஸ்பெஷலே அதுதான்.

      நன்றி JKC ஸார்...

      நீக்கு
  16. ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் டிட்டோ செய்கிறேன்.

    நாம் இடம் கொடுத்தால், அவங்க கண்டிப்பாக நம்மை அட்வாண்டேஜ் எடுத்துக்குவாங்க.

    எனவே தான் அவங்களையும் ஓர் எல்லைக் கோட்டில் வைக்க வேண்டும். empathy வேண்டும் ஆனால் sympathy காட்டினால் நமக்குத்தான் இழப்பு நாம் கொடுத்துவிட்டு வருத்தப்படுவோம் என்று சொல்லப்படுகிறது.

    நீங்க சொன்னது போல் 300 ரூ போதும். 1000 டூஊஊஊஊஊஊஊஊஊ மச். அதுவும் மளிகைப் பொருட்கள் வேற நட்ஸ் வேற கொடுத்திருக்கீங்க....அவங்களும் எடுத்து வைச்சுக்கிட்டுருக்காங்க இதுக்கு மேல்?

    ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.

    பாருங்க எங்க கேட்டா நடக்கும்னு தெரியுது பாஸ்கிட்ட பேசி வாங்கிருக்காங்க. இனிமேல் நீங்களும் பாஸும் பேசி வைத்துக் கொண்டு இவ்வளவுதான் என்று இருங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்களில் அவர்கள் சிரமத்தைப் புரிந்து கொள்ளலாம்.  வெளிப்படையாக அவர்களிடமே அதைச் சொல்லி விடாமல் தேவைப்படும்போது உதவலாம் என்று நினைப்பேன்.  300 -500 - 1000  எல்லாம் எங்கே போய்ச்சொல்ல..    பண்டிகைகளில் நாம் புடைவை வாங்கி கொடுப்பதையும், கிப்ட் தருவதையும் பார்த்து இவர்களிடம் நல்லா கறக்கலாம் போல என்று எண்ணம் வந்து விடுகிறது போல...

      நீக்கு
    2. ஸ்ரீராம் உங்க எண்ணம் போலதான் நானும் நினைச்சதுண்டு. வெளியில் சொல்லாமல் செய்யலாம் என்று ஆனால் நாம் அசந்து மறந்து பண்டிகைகளுக்கு ஏதாச்சும் வைச்சுக் கொடுத்தா நீங்கள் சொல்வது போலத்தான் எண்ணம் வந்துவிடுகிறது.

      இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை அப்படித்தான்.

      கீதா

      நீக்கு
    3. சமாளிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சங்கடங்கள்!!!

      நீக்கு
    4. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்குத் தீபாவளிக்கு எத்தனை ரூபாய்க்குப் புடைவை எடுத்துக் கொடுத்தாலும் போனஸ் பணமாக ஒரு மாசச் சம்பளத்தைக் கொடுக்கணும். இல்லை என்றால் வேலைக்கு வந்தாலும் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும்.

      நீக்கு
    5. எங்கள் வீட்டிலும் எப்போதுமே இரண்டும் உண்டு.

      நீக்கு
  17. எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது போன்றவறுக்கு எல்லாம் "//

    நல்லதொரு விஷயம் இது. சார்லியும் பி ஹெச் டி பெற்றவர் என்று நினைக்கிறேன் வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்லி பற்றி இங்கும் பகிர்ந்திருந்தீங்க ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  18. இன்றைய வியாழன் பதிவு சிக்கென்று இருக்கிறது.
    வேலைக்காரர்கள் குறிப்பாக சென்னை வேலைக்காரர்கள் அதீதம். நாம் ஒருவரை வேலைக்கு வைத்துக் கொள்வோம், ஒரு வாரம் அவர் செய்வார், பின்னர் தன் உறவுக்காரர் என்று ஒருவரை அழைத்து வந்து இனிமேல் இவர் செய்வார் என்பார். மாதம் முடிந்ததும் சம்பளம் கொடுக்கும் பொழுது இரண்டு பேர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பதிவு சிக்கென்று இருக்கிறது.//

      ஆ....!!! :))

      நீக்கு
  19. சேட்டைக்காரன் அனுபவங்கள் சுவாரஸ்யம்!
    ஆ! நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்!! காட்டி பட ஸ்டில்லா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காட்டி பட ஸ்டில்லா?//

      இல்லை.  பழசு...   அவங்க இளமையா இருக்கும்போது எடுத்தது!

      நீக்கு
  20. மலைமேல் குடிகொண்டிருந்த சந்திரசூடேஸ்வரர் தரிசனம்//

    அப்போதைய சந்திரசூடேஸ்வரர் கோவில் படமா? இப்ப கோவில் பல வளர்ச்சிகளை அடைந்துவிட்டது! நான் ஓசூருக்கு 2002ல் போனப்ப கூட கோவில் அதிகம் மாற்றமில்லை. இப்பதான் நிறைய மாற்றங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக அப்போது என்று சொல்ல முடியாது.  இப்போது என்றும் சொல்ல முடியாது!

      நீக்கு
    2. அறுபதுகளின் கடைசியில் நாங்க போனப்போ மலையில் ஏறித் தான் போயிருக்கோம். அதன் பின்னர் ஹோசூர் போகவே சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

      நீக்கு
    3. நான் தொண்ணூறுகளின் கடைசியில் பார்த்திருக்கிறேன்.  பாஸின் அத்தை வீடும், சித்தி வீடும் அங்கேதான்.  சித்தப்பாதான் பாஸின் அப்பாவுக்கு திதி கொடுப்பார் என்பதால் வருட வருடம் பாஸ் அங்கே விஜயம்!

      நீக்கு
    4. ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் அண்ணாவுக்கு முதல் போஸ்டிங் ஹோசூர் தான். வெல்லம், புளி, மாங்காய், பால் மற்றும் காய்கள் அங்கே நன்றாக இருக்கும் என்பதோடு அப்போ அது ஒரு கிராமம் தான். ந(க)ரகமயம் ஆகவில்லை. சுற்றிலும் மலைத்தொடர்களோடு குளிர்ச்சியான ஊர். எனக்கு ரொம்பப் பிடிச்சது. 68,69,70 களில் அண்ணா அங்கே வீடு எடுத்துத் தங்கி இருந்தார். அம்மா சமைத்துப் போட அங்கே கூட இருந்தார். நான், அப்பா, தம்பி மதுரையில் என்றாலும் அடிக்கடி ஹோசூர் போவோம்.

      நீக்கு
    5. ஆம்.  குளிர்ச்சியான ஊர்.  ஒரு அக்னி நட்சத்திரத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டால் சத்திரத்தில் குளிர் அடித்தது!  உங்கள் அண்ணா என்றால் ராமகிருஷ்ணன் அண்ணாவா?  முன்பு முகநூலில் அடிக்கடி தென்பட்டார்.  இப்போதெல்லாம் காணோம்.

      நீக்கு
    6. சமீப காலங்களில் அங்கு கிடைக்கும் கத்தரிக்காய் நன்றாக இருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறேன்!  தஞ்சாவூர் பக்கம் கிடைக்கும் கத்தரிக்காய் போல...     

      நாங்கள் வாங்கும் P S பெருங்காயம் தயாராவது அங்குதான் போல...  இங்கு கிடைப்பதைவிட கொஞ்சம் விலை சகாயமாக கிடைக்கும்.  பாக்கெட்டில் ஒரு சிறு ஸ்பூனும் இருக்கும்!

      நீக்கு
    7. அண்ணா பெயர் வெங்கடசுப்ரமணியன். அப்பா ராமகிருஷ்ணன். இப்போ மன்னிக்குக் கொஞ்சம் உடம்பு முடியாமல் போனதில் அண்ணாவுக்கு அதிகம் வரமுடியலை. மன்னிக்கு இந்த சினிமா நடிகை சமந்தாவோ யாரோ அவங்களுக்கு வந்தாப்போல் தசை இயக்கம் இல்லாமல் போய் மருத்துவமனையில் சேர்த்து இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார்.

      நீக்கு
    8. ஓ.. பெயர் மாற்றி சொல்லி விட்டேன் போல.. நான் ரொம்ப விசாரித்தேன் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    9. நான் எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கிறேன், ஆனாலும் ஹோசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை.

      நீக்கு
    10. ஒரு எதிர்பாரா தருணத்தில்தான் நானும் சென்று வந்தேன்!

      நீக்கு
  21. ‘நீ ஒண்ணும் அவ்வளவு மோசமில்லடா! உனக்குள்ளே சரக்கிருக்கு,’ என்று ஒரு நம்பிக்கைக்குரல் எனக்குள்ளிருந்து குறைந்த டெசிபல்களில் அவ்வப்போது கேட்கத்தொடங்கின.//

    சூப்பர்.

    இந்த வரிகளை வாசித்த போது பட்சி சொல்லிச்சு அடுத்த வரி என் மனசில் என்னவோ இங்க ஒரு ட்விஸ்ட் வரப் போகுதுன்னு...

    பாருங்க....அதானே ஸ்மூத்தா பாராட்டுகளோடு போனா கூடவே ஒரு செக் பாயின்டும் வந்துரும் போல!

    ஸ்வாரசியமாக எழுதறீங்க. உங்க எழுத்தை சொல்லணுமா சேட்டைககர வேணுஜி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான தொடரில் சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் வந்து விடுகிறது. தேர்ந்த எழுத்தாளர்.

      நீக்கு
  22. தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலகம் வேலை செய்யலை போல....அதெப்படி செலவு மட்டும் இவ்வளவு!!?

    அந்த 87 ஆம் வருடச் செய்தியும் பொருந்திப் போகுது. நிஜமாகவே நானும் பதிந்து வைச்ச காலம் உண்டு அதுவும் என் மாமாவின் வற்புறுத்தலால். ஹையோ என்னவோ அப்படியே நமக்கு வேலை கிடைச்சிடும் போல என் மாமா விரட்டி விரட்டி பதிய வைப்பார். அங்க போய் காத்திருக்கணும். 10 வருடமானவங்க கூட அங்க புதுப்பிக்க வந்திருப்பாங்க. அப்ப தெரிந்தது அதன் லட்சணம். அதன் பின் அந்தப் பக்கம் சென்றதே இல்லை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்டமாக ஒரு துறை.  அதில் அவ்வளவு பணியாளர்கள்.  வெட்டிச் சம்பளம்.  ஐடி நிறுவனங்கள் போன்ற தனியார் கம்பெனிகளுக்கு இந்தத்துறை எந்த அந்த முயற்சியும் எடுப்பதில்லை.  அந்தத் துறையை கலைக்க வேண்டிய நேரம் இது.

      நீக்கு
    2. நிச்சயமாக. இங்கு வருபவர்களில் யாருக்காச்சும் இந்தத் துறை வழியாக வேலை கிடைச்சதான்னு தெரிய ஆசை.

      //ஐடி நிறுவனங்கள் போன்ற தனியார் கம்பெனிகளுக்கு இந்தத்துறை எந்த அந்த முயற்சியும் எடுப்பதில்லை. //

      அவங்களும் இதுக்கு வரமாட்டாங்க லட்சணம் அவங்களுக்குத் தெரியாமயா இருக்கும்?! அவங்க நேரடியாக எடுப்பதுதானே அவங்களுக்கு நலல்து.

      கீதா

      நீக்கு
    3. எனக்குத் தெரிந்து இல்லை. அந்தக் காலங்களில் இந்தத் துறையை நம்பி பல இளைஞர்கள் கிழவர்களாகியும் காத்திருந்தார்கள்!

      நீக்கு
  23. மாணவர்களே இல்லாமல் வேலை பார்க்கும் ஆசிரியர்களா? அடப்பாவி? அப்புறம் என்ன தமிழ்நாடுகல்வியில் சிறந்ததுன்னு பறை சாற்றல்!!???

    ஆச்சரியமாக இருக்கிறது இப்படியான செய்திகளை வாசிக்கறப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுப்பில்லாத துறை, பொறுப்பில்லாத அதிகாசரிகள்..  பொறுப்பில்லாத அமைச்சர்...  விளங்கிடும்.

      நீக்கு
    2. பள்ளிகள் பற்றி அதன் தரம் பற்றித் தெரிய வரும் போது பொறுப்பில்லாத துறை அதிகாரிகள் அமைச்சர்னு நான் நினைச்சதுண்டு ஆனா இது இன்னும் மோசம்...இல்லையா? அசிங்கம்.

      கீதா

      நீக்கு
    3. மத்திய அரசிடம் கூச்சமே இல்லாமல் பணம் கேட்கும் இவர்கள் இன்னும் பல பள்ளிகளில் பல வகுப்பறைகளை மரத்தடியில் நடத்துவது மாதிரிதான் வைத்திருக்கிறார்கள்;.

      நீக்கு
  24. பொட்டு வைத்த முகமோ!!! அது அம்பிகாவா?

    டாக்டர் சசித்ரா தாமோதரன் படமோன்னு பார்த்தா அட! நம்ம அனுஷ்! ஹப்பா! எவ்வளவு நாள் கழிச்சு....எபிக்குப் பிறவிப்பயன்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...    ஆனா அம்பிகாவான்னு கேட்டுட்டீங்களே..    ஆனால் அம்பியையும் எனக்குப் பிடிக்கும்னு வச்சுக்கோங்க..   நிறையபேர் அல்லது பெரும்பான்மை பேர்களுக்கு ராதாவைத்தான் பிடிக்கும்.  எனக்கு அம்பியைத்தான் பிடிக்கும்.

      நீக்கு
    2. அப்போ அம்பிகா இல்லையா அது?!!!

      என்ன ஸ்ரீராம் உள்ளங்கைல வைச்சா எப்படி வெளியில் தெரியும். புறங்கையில் வைச்சாதான் இப்படியாச்சும் போஸ் கொடுத்துக் காட்ட முடியும்! உள்ளங்கைல வைச்சா அம்பிகை அருள் புரிகிறாள்!!! மாதிரி காட்டமுடியுமா!!!!! சொல்லுங்க!!!!

      கீதா

      நீக்கு
    3. மருதாணி போட்டிருப்பவர் அம்பிதான் கீதா...

      நீக்கு
  25. சிற்பி கணபதி அவர்கள் சொல்லியிருக்க்கும் தகவல் புதுசு. இது வரை அறிந்ததில்லை.

    பொதுவான மன்னிப்பு அந்த நூல் விஷயம் சுவாரசியம்

    விம்பிள்டன் கோர்ட்களில் மைதானம் 1 ம் மிகப் பெரியது. இங்கு விளையாடுவது நிஜமாகவே வீரர்களுக்குப் பெருமையான விஷயம்தான்.

    இந்த மைதானங்களைப் பராமரிப்பது என்பது எளிதானது அல்ல என்று வாசித்திருக்கிறேன். அந்தப் புல்லைப் பராமரிப்பது குறிப்பாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. எனவே, அதை எல்லாம் படிக்க முடிந்திருக்கிறது.. இல்லையா?

      நீக்கு
    2. வாசிக்க முடிந்ததே ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    3. இல்லை.....   பழைய புத்தக க்ளிப்புகளைப் போட்டு, படிக்க விடாமல் தந்திருக்கிறேனோ என்கிற சம்சயம்.  அதுதான் கேட்டேன்.  இல்லாவிட்டால் டெக்ஸ்ட்டும் தந்திருப்பேன்.

      நீக்கு
  26. புகழ்வது - இகழ்வது - அதானே பொதுவாகவே டக்குனு இகழ்ந்துவிடுவோம் புகழ்வதுதான் வராது டக்குனு!

    தெருவிளக்கு - புன்சிரிப்பு.

    நியாயவில்லை - புன்சிரிப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கவிதையை விட்டு விட்டேன் போல...

    கவிதை நல்லாருக்கு. தாடி வைச்சுட்டு பாடுவது போன்று!

    கவிதை யை வாசித்ததும் டக்கென்று இந்தப் பாடலின் முதல் வரி (அது மட்டும்தான் நினைவில்!!!) 'கலைந்து செல்லும் காட்சி யாவும் கலைந்து போகும் மேகங்கள்' இது நினைவுக்கு வந்தது ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவு காணும் வாழ்க்கை யாவும்

      நீங்கள் கேட்டவை பாடல்!  அதற்கு ஒரிஜினல் ஹிந்தியில் மன்னாடே பாடி கஸ்மே வாதே என்று இருக்கிறது!

      நீக்கு
  28. மதிய வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான மதிய வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. நமக்கு வீட்டு வேலைக்கு உதவி செய்யும் உதவியாளர்களுடன் ஆரம்பித்திருப்பதும், அவர்க(ளை)ளிடம் நாம் படுத்து(படு)ம், பாட்டையும் பற்றி விவரித்திருப்பதை ரசித்துப் படித்தேன். நானும் இங்கோ, வேறு யாரேனும் பதிவில் இதுபற்றி எழுதியுள்ளேன். நான் உதவிக்கென ஆள் வைத்தது தவிர்க்கவியலாத இரு பொழுதுகள்தாம். (இரண்டொரு மாதங்கள்) . பிறகு நானேதான் இந்நாள் வரை வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்கிறேன். எனக்கு உதவியாளர்கள் சரிபட்டு வரவில்லை. உங்கள் வீட்டில் இன்னமும் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் இல்லத்தில் சமீப காலங்களில் தொடரும் நிலை, வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டிருப்பது! திருமணத்துக்கு முன் எங்கள் இருவர் வீட்டிலும் இந்த பழக்கமெல்லாம் கிடையாது.

      நீக்கு
  30. வேலைக்காரி மஹாத்மியம். வேலைக்காரிகளின் உலகம் சுவாரஸ்யங்கள் நிறைந்தது! Maid management - not easy!

    சார்லி, தான் கவிஞர் ஆத்மாநாமின் ரூம்மேட்டாக இருந்ததுபற்றிக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். கவிஞர்களோடு இளம்வயதில் தொடர்பு..!

    ஸ்வாமி விக்ரஹங்கள் செய்வதற்கான கற்கள்பற்றிய தகவலும் புதிது எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்.. நீண்ட நாட்களுக்குப் பின் மறு வரவு! சார்லி நல்ல படிப்பாளி. இலக்கியங்களின் ரசிகர்.

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    நடிகர் சார்லி அவர்களின் பேட்டி நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    /எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பது போன்றவறுக்கு எல்லாம் எழுத்தாளர்களின் நட்புதான் காரணமாக இருந்தது"/

    ஆத்மார்த்தமாக உணர்ந்து சொல்லப்பட்ட நல்ல வரிகள்.

    அனுஷ்கா அழகு.குங்குமம் பற்றி சொன்னது மிக அழகு. " குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்", குங்கும பொட்டுக்காரா", "குங்குமம் பிறந்தது", இன்னும் எத்தனையோ பாடல்கள். (குங்கும பதிவை படித்தவுடன் மனதில் ஒலித்த முதல் பாடலும் எனக்கு இப்போது மறந்து ஏனைய பாடல்கள் நினைவுக்கு வந்து விட்டன.)" பொட்டு வைத்த முகமோ" பாடலும் இன்றைய தலைப்புக்கு பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது பெரிதாக யாருக்குமே (அதிலும் குங்குமம்) பொட்டுக்கள் வைத்துக் கொள்ள விருப்பமில்லாமல் போய் விட்டது. ஸ்டிக்கர்தாம், (அதிலும் கண்ணுக்கு தெரியாமல்.) நன்றி. இன்னமும் ம் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குங்குமப் பாடல்களை அணிவகுத்து வரச் செய்து விட்டீர்கள்.  இப்போதெல்லாம் எங்காவது மிகச்சிலர்தான் பெரிய பொட்டு அதுவும் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்!  எல்லாம் ஸ்டிக்கர் மாயம்!

      நீக்கு
  32. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  33. வீட்டு உதவி வருபவர்களிடம் நாம் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியதாய் தான் இருக்கிறது. சில வீடுகளில் அம்மாவை விட ஐயா தாராளம் என்று வேலை செய்பவர்கள் சொல்வார்கள். இங்கு பாஸ்தான் பார்க்கும் பாராமல் கொடுப்பார் போலும். நல்ல மனது. உங்களுக்கும் தான். நல்ல மனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு என்னைவிட பாஸுக்குதான் ரொம்ப நல்ல மனது.  நான் கொஞ்சம் கஞ்சம்!

      நீக்கு
  34. சார்லி அவர்கள் பகிர்வு அருமை. என் சின்னமாமனார் சார்லிக்கு வாத்தியார் கோவில் பட்டியில் தமிழ் ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  விருது நகரிலா?

      நீக்கு
    2. இல்லை, கோவில் பட்டியில் சார்லி படித்தது கோவில்பட்டியில்

      நீக்கு
    3. ஓ..  சார்லியும் கோவில் பட்டி என்றுதான் சொல்லி இருக்கிறாரோ...

      நீக்கு
  35. "சேட்டை" வேணுஜி அருமையாக சொல்லி வருகிறார் அவர் வேலை விவரங்களை. சந்திரசூடேஸ்வரருக்கு என்ன கோபம் அவர் மேல் சோத்தித்து பார்க்கிறார்? சோதனையில் வெற்றி பெற்றாரா என்பது அடுத்த பதிவில் படிக்க ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சார்பில் நன்றி. நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  36. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. பொக்கிஷ பகிர்வுகள் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    சேட்டை வேணுஜி அவர்களின் பதிவு அருமை. ரசித்து படிக்கும்படி எழுதியுள்ளார். வேலையின் கடின தன்மைகள்தாம் எத்தனை வகை. சந்திர சந்திரசூடேஷ்வரர் கோவில் இப்போது முன்பை விட பொலிவாக உள்ளது.

    தங்களின் கவிதை அருமை. ரசித்தேன்.

    நடிகை அம்பிகாவின் மருதாணி வைத்துக் கொள்ளும் ஸ்டைலும், செய்திகளும், நன்றாக உள்ளது. பொக்கிஷ பகிர்வில் ஜோக்குகள் நன்றாக உள்ளன. தெரு விளக்கு ஜோக் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொகுத்துச் சொல்லி ரசித்திருப்பதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  39. ​//நிச்சயமாக. இங்கு வருபவர்களில் யாருக்காச்சும் இந்தத் துறை வழியாக வேலை கிடைச்சதான்னு தெரிய ஆசை.//
    70களில் பட்டப்படிப்பு முடிந்து எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்திருந்தவர்களுக்கு நேரடியாக பள்ளியில் ஆசிரியராக நியமன உத்தரவு கிடைத்தது. எனக்கு கண்டமங்கலம் அரசு பள்ளியில் வாத்தியார் வேலை கிடைத்தது.. சேர்ந்து 3 மாதம் வேலை செய்தபின் ராஜினாமா செய்து ISRO வில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்து கொஞ்சம் நாளில் கனரா பாங்கில் மெட்ராஸ் போஸ்டிங் கிடைத்தது. ஆனால் சேரவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அந்த நேரத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே வேலையை அடைந்திருக்கிறார்கள்.  என் அப்பாவுக்கு இரண்டு துறைகளுக்கு அழைப்பு வந்து அப்பா மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்தார்.  அதேபோல நிறையபேர் உண்டு.  அதன் பணிகள் இந்நாளில் அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!