31.10.25

சோகம் கொண்டு சோர்ந்து நின்றால் ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே...

 

1980 ல் வெளியான படம் உல்லாசப் பறவைகள்.  ஜெர்மனியின் செந்தேன் மலரே,  அழகிய மலர்களின், அழகு ஆயிரம்,  தெய்வீக ராகம், மற்றும் இன்று நான் பகிரும் நானுந்தான் தாயாகவேண்டும் பாடல்கள் இனிமையான பாடல்கள்.  பஞ்சு அருணாசலத்தின் பாடல்களுக்கு இளையராஜா இசை.  சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் கமலஹாசன், ரத்து, தீபா, சுருளிராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம்.

இந்தப் பாடலில் எஸ் ஜானகியின் திறமையும், இனிமையும்  தெரியும்.  பாடல் நாற்பது மார்க் என்றால், 60 மார்க் இன்டர்லூட் எனப்படும் இடையிசைக்கு.  ஆரம்ப இசை  முதலே இளையராஜா அனுபவித்து அமைத்திருக்கிறார்.  வயலின் இசையும், Flute இசையாக ஜமாய்த்திருக்கிறார்.

கேட்டுப்பாருங்கள்.

நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா

நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்…..

ஆ…..போன காலம்
போன பின்னே
மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே
வானம் யாவும் மேகம் வந்து
தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே

நீயும் இங்கே நானும் அங்கே
தீபம் எங்கே கோவில் இங்கே
ஏக்கமா இன்னுமா தேவையா…..

நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்…..

ஆ…..சோகம் கொண்டு
சோர்ந்து நின்றால்
ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே
வாழ்க என்று ஆசை கொண்டால்
காவிய இன்பங்கள் என்றும் கோடியே

காதல் உள்ளம்
கண்ணில் நிற்கும்
காதல் கொள்ளும் பாசம் சொல்லும்
நேசமே தாய்மையின் கீதமே…..

நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா…

லால லாலலா லால லாலலா….

===========================================================================================

செந்தில்வேல் சிவராஜ் என்று ஒரு தீவிர சிவாஜி ரசிகர் பேஸ்புக்கில் சிவாஜி பற்றி எழுதிக் கொண்டே இருப்பார்.  அவர் எழுதியதிலிருந்து ஒன்று...

பாவமன்னிப்பு படத்துல சிலர் அழுவார்சிலர் சிரிப்பார் பாடலை அந்த பிளாக் அண்ட் படத்துலேயே பிரமாதமா எடுத்திருப்பாங்க.இந்த பாடலில சிரிப்பார் ஒரு உணர்ச்சி பாவம் அழுவார்ங்கற ஒரு உணர்ச்சி பாவம் இந்த ரெண்டும் சேந்த ஒரு உணர்ச்சி பாவம்னு வரிகளா விவரிச்சிருப்பார் கவிஞர் .

கவிஞர் எழுதுன இந்த பாட்டை சாதாரணமா எடுத்தாலே பாட்டோட பெர்பார்மன்ஸால பாக்கறதுக்கு நல்லாவே இருக்கும். ஒரு ரிஸ்க் எடுக்க வேணுண்ணு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லே.ஆனா சிவாஜிய வெச்சுகிட்டு அப்படி இருக்க முடியாதுல்லே .பீம்சிங்குக்கு இப்படி பல யோசனைகள் வந்துச்சு.பாட்டை எப்படியாச்சும் டிபரெண்டா எடுக்கணும்னு அவருக்கு விருப்பம்.

பாவமன்னிப்பு படத்துலே பாட்டுக எல்லாம் பிரமாதமாக போட்டு கொடுத்திருப்பாரு மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு பாட்டையும் ரொம்ப பிரமாதமா எடுத்திருப்பாரு பீம்சிங்.

வந்தநாள்முதல் பாட்டை சிவாஜி சைக்கிள் ஓட்டிடிகிட்டே பாடிட்டு வர்றமாதிரியும் பேக்கிரவுண்டா இயற்கை காட்சிகளா ஆறு ஆகாயம் குளத்து மேடு அப்படியே ரம்மியமா எடுத்திருப்பாரு.

காலங்களில் அவள் வசந்தம் பாட்டை ஒரு கார்டன்ல அழகா எடுத்திருப்பாரு.எல்லோரும் கொண்டாடுவோம் பாட்டை டேப்ங்கற வாத்தியத்தை சிவாஜி வாசிச்சுகிட்டே பாடற மாதிரியும் இடையிலே அழகா அம்சமா கோரஸெல்லாம் சேத்து பிரமாதப்படுத்தியிருப்பாரு.

பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டை சிவாஜி ஹம்மிங் மட்டும் குடுக்கற மாதிரியும் சுசீலா, தேவிகா பாடற மாதிரியும் கவிதை மாதிரி எடுத்திருப்பாரு.
இப்படி எல்லா பாட்டையும் ரசிகன் எந்திரிச்சு போகாத மாதிரி அட்டகாசமா எடுத்த பீம்சிங்குக்கு சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் பாடலை ஒரு வித்தியாசமா எடுக்கணும்னு விருப்பமா இருந்துச்சு.படத்துல எல்லா பாட்டுகளும் சுகமான ராகங்கள்.ஆனா இந்த பாட்டோ சோகப் பாட்டு.இதையும் வித்தியாசமா எடுத்துக் காமிக்கணும்னு அவருக்கு விருப்பம் இருந்துச்சு.
இந்த பாட்டோட வரிகளுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு ஷாட்டையும் ஒவ்வொரு பிரேமையும் வித்தியாசமா அதே சமயம் அசத்தலாவும் எடுக்கணும்னு பெரிய எண்ணம்.
பாட்டோட வரிகளான சிரிப்பார் அழுவார் சிரித்துக்வொண்டே அழுவார் வரிகளுக்கு சிவாஜி பிரமாதமா பாவனை கொடுத்துருவாரு. சிரிக்கறதுக்கு ஒரு ஷாட் அழுகறதுக்கு ஒரு ஷாட் அடுத்ததா சிரிச்சுகிட்டே ஒரு ஷாட்டுன்னு சிவாஜிய வெச்சு குளோசப் எடுத்துரலாம்.
இந்த மூணையும் ஒரே பிரேம்ல காண்பிக்கணும்னு பீம்சிங்க்கு ஒரு ஐடியா இருந்துச்சு.இப்ப இருக்கற மாதிரி டெக்னிகல் உத்தியெல்லாம் இருந்தா இது ஈசியா எடுத்துடலாம்.ஆனா அந்த காலத்துல இதுக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாகணும்.ஷீட் பண்றப்போ சிவாஜியோட ரெண்டு சைடு போஸ் ,நேரா ஒரு குளோசப் ஷாட்டூனு எடுத்தாகணும்.

இந்தமூணையும் ஒரு பிரேமுக்குள்ள காட்டறப்போ பேக்கிரவுண்ட் எபக்ட் வித்தியாசமா இல்லாம ஒரே மாதிரிஎடுக்கணும் .பிரேமுல காட்டணும்.

பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் , "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" என்ற இந்த பாட்டை இந்த படத்தின் இயக்குனர் A பீம்சிங் அவர்கள் என்ன நினைத்தாரோ என்னவோ, ஒரு காட்சியில், ஒரே முகம் வெவ்வேறு கோணத்தில், பாடலுக்கேற்ற மாதிரி வெவ்வேறு உணர்ச்சியில் ,அதுவும் ஒரே இடத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைச்சார் அவரோட கற்பனையில..
அப்போது கிராபிக்ஸ் இல்லாத காலம் அது ...எல்லாமே manual Work தான்.. பிலிம் சுருள்களை வைச்சு இதை செய்யணும்.ஷுட் பண்றதுக்கு முன்னாலே இந்த ஐடியாவை ஏவி எம் கிட்டேசொன்னாரு பீம்சிங்
பிரேம் சரியாக இருந்தால் போதும்... ,உடனடியாக செய்துவிடலாம் என்று ஏவிஎம் நிறுவனம் சொல்லிருச்சு.

உடனே தயாராயிட்டாரு பீம்சிங்.

சிவாஜி கிட்டேயும் இந்தபாட்டை எப்படி எடுக்கப் போறேன்னு அந்தகாட்சியை விவரிச்சு சொல்லிட்டாரு பீம்சிங்.
, 10 நிமிடம் direction ,10 நிமிடம் framing ...பாட்டை எடுத்து முடிச்சாச்சு..........எப்படி சாத்தியம் ஆச்சு இது ? நான் எதோ ஒருநாள் வீணாகிவிடும் என்று கவலைப்பட்டேன்டா பீமு என்றாராம் மெய்யப்ப செட்டியார்
இதுக்கு ..பீம்சிங் சொன்ன ஒரே பதில் என்னான்னா ,சிவாஜி
கணேசன் இருக்கும்போது நான் ஒரு நடிகரை பத்துன கவலையை விட்டுருவேன்.
framing மட்டும்தான் பார்ப்பேன் , காரணம் , சிவாஜி கணேசன் மீது உள்ள நம்பிக்கையோ இல்லை என்னவென்று தெரியவில்லை , அவரது ஒவ்வொரு நாடிதுடிப்பும் கேமரா முன்னால் யாரையும் ஏமாற்றாது .எவ்வளவு வேணும்னாலும் வாரிக்கொடுக்கும் அவரது நடிப்பு என்ற ஒரே காரணத்தால்தாலதா இது ரொம்ப ஈசியா சாத்தியாமாச்சுன்னார் பீம்சிங்.... .. நினைச்சதை விட மிக அருமையாக செஞ்சுட்டார் .முதலில சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லணும் என்றார் பீம்சிங் .

- செந்தில்வேல் சிவராஜ்

==================================================================================

1983 ல் ரஜினியை வைத்து தமிழில் தாய்வீடு என்றும், ஜீத்ஹமாரி என்று ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.  தமிழில் ஜெய்சங்கர் செய்த பாத்திரத்தை ஹிந்தியில் ராகேஷ் ரோஷன் செய்தார்.  தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே டியூனில் பாடல்கள்.

சங்கர் கணேஷ் இசையில் இனிமையான மற்றும் ரசிக்கும்படியான பாடல்கள்.  இன்று எஸ் ஜானகி பாடி இருக்கும் ஆசை நெஞ்சே நீ பாடு பாடல் பகிர்வு.  அண்ணணை நினைத்து பாடும் பாடல்.  காட்சியில் சுஹாசினி.  படத்தில் அவர்தான் ரஜினியின் தங்கை.

எஸ் ஜானகியின் குரல் வளத்துக்கு ஒந்தப் பாடலும் ஒரு முத்து.  ரசிக்கலாம்.  பாடல் வாலி. 

ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

{கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
கனவுகள் நனவாய் காணும் போது
மணநாள் வரலாம் மாலை கொண்..டாட
என்னை நீ வாழ்த்தி காவியம் பாட} (2)

கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான்.. தாய் வீடு……

{பாசம் என்றொரு நூலிழை கொண்டு
தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
நினைத்தது போலே எதுவும் நடக்கும்} (2)

நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

ஆசை நெஞ்சே நீ பாடு……..
அண்ணன் வந்தான்.. தாய் வீடு…

28 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இனிமையான வெள்ளிப் பாட்டுடன்
    அதை ரசித்துக் கேட்டு அதுவும் சிவாஜியைப் பற்றிய அல்வாத்துண்டு செய்தி.
    மிக நன்றி ஸ்ரீராம்.சிவாஜி சிவாஜி தான்.
    மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... வாங்கம்மா... வணக்கம். நல்வரவு. நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படியிருக்கிறீர்கள்? நீங்கள் இன்று எபிக்கு வந்தது, உங்களைப் பார்த்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வாருங்கள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாங்க ரேவதி, நேத்திக்குத் தான் மீனா உங்களைக் காணவே முடியறதில்லையேனு ரொம்ப விசாரித்தாள். நானும் எ.பி. குழுவின் பதில்களில் தவிர்த்து வேறேங்கேயும் உங்களைப் பார்ப்பதில்லைனு சொன்னேன். இங்கே வந்திருப்பது ஜிவாஜிக்காகவா? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    4. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      உங்களை இங்கு பார்த்தது மகிழ்ச்சி.
      அடிக்கடி வாங்க

      நீக்கு
    5. வெள்ளி காலையில் அதிசய வரவு திருமதி வல்லிசிம்ஹன் அவர்கள். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் . தொடர்ந்து சந்திப்போம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிராத்திப்போம்.

      நீக்கு
  3. சிவாஜி பற்றிய பகுதியை ரசித்தேன். ஆனால் வளவளன்னு எழுதியிருக்கார்

    அருமையான பாடல்கள் பலவற்றை பதிலில் குறிப்பிட்டிருந்தாலும் முதல் பாடலை ஏன் பகிர்ந்தார் என யோசிக்க வைத்தது. வெகு சுமார்

    இரண்டாவது பாடல் பரவாயில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை....

      // முதல் பாடலை ஏன் பகிர்ந்தார் என யோசிக்க வைத்தது. வெகு சுமார் //

      நான் பகிர்ந்ததா, அவர் பகிர்ந்ததா?

      நீக்கு
    2. நீங்கள் பகிர்ததுதான். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று இல்லையா

      நீக்கு
  4. முதல் பாடல் கேட்ட நினைவு இல்லை, இரண்டாம் பாடலின் துவக்கத்தில் அண்ணனைப் பார்த்து பாடும் பாடலில் ஏன் வெட்கப்படுகிறார் சுஹாசினி?
    நேற்றுதான் தமிழருவி மணியன் 'பாலும் பழமும்' படத்தைப் பற்றி புகழ்ந்து பேசியதை காணொலியில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. அண்ணனைப் பார்த்து வெட்கப்பட காரணம் அவர் மணக்கப்போகும் மணமகன் பற்றி சொல்லி இருப்பார்.  அதனால்.

      நீக்கு
  5. தாய்வீடு திரைப்படத்தை நானும் குழந்தைகளுமாக அம்பத்தூர் "ராக்கி" தியேட்டரில் பார்த்தோம். கதாநாயகி கூட வட இந்திய நடிகை. அனிதானு ஏதோ பெயர் மறந்துட்டேன். இதுவும் உலக்கை நாயகரின் "விக்ரம்" படமும் ஒரே சமயம் வந்ததுனு நினைக்கிறேன். குழந்தைங்க விக்ரம் படத்துக்குப் போனாங்க. எங்க பையர் உலக்கையின் ரசிகர். பெண் அப்படியெல்லாம் வைச்சுக்கலை. இப்போப் பெண் தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லை. வெறுத்துப் போச்சு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க பையர் இந்தியன் 2 பார்த்தபிறகும் உலக்கையின் ரசிகராக இருந்தால் கின்னஸ் புத்தகத்தில் நானே இடம்பெறச் செய்துவிடுவேன்

      நீக்கு
  6. ரத்து என்பது ரதி அக்னிஹோத்ரி தானே? பார்த்தால் அவர் மாதிரித் தான் இருக்கு. இவருக்கும் உலக்கை நாயகருக்கும் பனிப்போர் உண்டே! என்றாலும் ஹிந்தி மரோசரித்ராவில் இவர் தான் கதாநாயகி.

    பாவமன்னிப்புப் படம் மதுரை மீனாக்ஷி தியேட்டரில் வந்தது. படம் வந்து 2,3 மாதங்களுக்குப் பின்னர் வழக்கம்போல் அப்பாவுக்குக் கிடைத்த பாஸில் போனோம். பின்னர் தொலைக்காட்சியில் வந்தப்போவும் பார்த்தது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வார்ப்புகள் பட அறிமுகம்னா இந்த ரத்தி அக்னிஹோத்ரி. நினைத்தாலே தம்தன தம்தன என மனதில் மணி அடிக்குமே. இவரையும் கமலதாசரையும் இணைத்து எழுதுகிறாரே கீசா மேடம். இது அடுக்குமா?

      (கச்சி வரதராஜப் பெருமாள் திருமஞ்சனம் சேவித்தபின் அலங்காரம் செய்துகொண்டிருப்பதால் வெளியில் காத்திருக்கும் உனக்கு இந்த விவகாரம் அவசியமா? ஹிஹிஹி)

      நீக்கு
  7. ஜெர்மனியில் செந்தேன் மலரே பாடல் மட்டும் தான் நினைவு இருக்கு ஸ்ரீராம் இந்த பாட்டு கேட்டுவுட்டு வரேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் உந்தன் தாயாக வேண்டும் பாடல் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    ஆரம்ப இசை அது சூப்பர் நோட் பேசுவது போலயே இருக்கு

    மோஹனம் ராகம் அசத்தலாகப் போட்டிருக்கிறார். எத்தனையோ மோகனம் போட்டிருக்கிறார் ராஜா. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.!!!

    இன்டெர்லூடும் திசை திரும்பாமல் மோஹனத்திலேயே அந்த நோட்ஸ்லியே சஞ்சரிக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நல்லாருக்கு ஸ்ரீராம் பாடல். ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதைப் பகிர்ந்தாலும் நல்லாருக்கு என்கிறாரே. இவர் ரசனையே கேள்விக்குறியோ

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. பாடல்கள் பகிர்வு அருமை. செய்திகள் நன்றாக இருக்கிறது,
    பாவமன்னிப்பு பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. தாய் வீடு பாடல் கேட்டு வெகு காலம் ஆச்சு, இன்று கேட்டேன். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவது பாட்டு கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். ஆனால் பாடல் வரிகள் பார்த்ததும் டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

    ஆனால் அப்ப கேட்ட பிறகு இப்பதான் கேட்கிறேன். கல்லூரி சமயம் இந்தப் பாடல் பேருந்து நிலைய வானொலியில் கேட்டதுண்டு ஆனால் படம் எல்லாம் இப்பதான் தெரிந்தது, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே வீட்டுல ஒரு படத்தையும் பார்க்க விடமாட்டேங்கிறாங்களேன்னு சின்ன வயசுல கடவுள்ட முறையிட்டதுனால அப்போ பார்க்காத படங்களையும் இப்போ பல தடவைகள் பார்க்கும் வாய்ப்பு அக்காக்குக் கிடைக்குதோ?

      நீக்கு
  15. முதல் பாடல் அருமையான பாடல் கேட்டிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் கேட்டேன்.

    இரண்டாவது பாடல் இடப்பொழுதுதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!