நெல்லைத்தமிழன்: 1. ஒரு சலூன்காரர், அவர் முடியை அவரே திருத்திக்கொள்ள முடியாது என்பது போல, திரைப்படத்தைக் குற்றம் குறைகளைச் சொல்லுபவர்கள் அல்லது பிறருக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பவர்கள், அவர்கள் தொழிலில் இறங்கும்போது தோல்வியைத் தழுவுவதன் காரணம் என்ன?
# ஆலோசனை சொல்பவர்கள் அந்தத் துறை பற்றி அறிந்தவராக இருக்கலாம், அதில் வல்லவராக இருப்பது உறுதியல்ல. நடிப்பு பாட்டு என்று கற்பிப்பவர்கள் பல மேதைகளை உருவாக்கலாம் மேதைகளாக இருக்க முடியாது. சி.வி.ராமனின் பேராசிரியர் நோபல் பரிசு வாங்கியாக வேண்டும் என்று கட்டாயமில்லை.
# இசை விமரிசகர் சுப்புடு பாடினால் எவன் கேட்பான்!
2. சீனியர் சிடிசன் ஆனால், என்ன என்னவற்றை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
# ஆசை, கோபம், பொறாமை.
& அது அவரவர்கள் விருப்பம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்தது.
3. வாழ்க்கையில் எவற்றைத் தவிர்க்கமுடியாது, எவற்றைத் தவிர்க்கலாம்?
# நம்மிடம் பிறர் காணும் குறைகள், பிறர்பால் நாம் காணும் குறைகள்.
4. அரசு எதற்காக, மாதாமாதம் ஒருவருக்கு இலவசமாகப் பணம் தரவேண்டும்?
# வோட் வாங்கத்தான்.
5. பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை போன்றவை வழக்கொழிவதன் காரணம் என்ன?
# புதிய பொருளானால் சிறப்பு வாய்ந்தது என்ற மனநிலை மற்றும் அதீத விளம்பரம்.
& அவற்றுக்கு பதிலாக இப்போது எவை வந்துள்ளன? நான் ஸ்பான்ஜ் தலையணை உபயோகப் படுத்தினாலும், பஞ்சு மெத்தையை விடவில்லை.
6. தற்போதுள்ள நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்? ஒரு தலைப்பில் ஒருவர்தான் சொல்லவேண்டும்.
# நடிகை யாருமில்லை. நடிகர் கமல்ஹாசன், பஹத் பாஸில். இயக்குனர் பெயர் தெரியாத மலையாள இயக்குனர்கள் பலர்.
& படங்கள் பார்த்தே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன. தற்போதைய பிரபலங்கள் யார் என்றே தெரியவில்லை.
== = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
முல்லைக் கொடிக்குத் தேரை ஈந்தான் என்று நாம் படித்திருக்கிறோம். நிஜமாகவே ஒரு குட்டி வேனையே அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டதால், அதன் மீது கொடிகள் படர்ந்திருக்கின்றன. நிச்சயம் முல்லைக் கொடி அல்ல என்பது மாத்திரம் புரிந்தது. (இடம்: சத்யாகாலம், கொள்ளேகால்)
-= = =--= = = = =
ஆலமரத்தின் விழுதே மிகப் பெரிய கிளையாக உருமாறி இருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இந்த மாதிரி பல மிகப் பெரிய ஆலமரங்களைக் காணும்போது அவைகள் எத்தனை வயதுடையவை என்று யோசிப்பேன். நம்மைவிட மிகப் பெரியவைகள் அல்லவா? (இடம்: சத்தியாகாலம், கொள்ளேகால்)
= = = = = = = = = = =
KGG பக்கம்.
ஒரு மெமோ தட்டி விட்டுடுங்க !
சென்ற வாரம் நான் சொன்ன விடாக்கண்டன் கொடாக்கண்டன் தலைப்பில் என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
முன்னுரை :
தொழிற்சாலையில், எல்லோரும் பங்கேற்கும் வகையில், யோசனை திட்டம் (Suggestion scheme ) அறிமுகம் செய்தார்கள். (1975). எனக்கு அப்போது ஒரே ஒரு பாஸ்.
அந்தத் திட்டத்தின் ஆரம்ப காலம் முதல், (அதாவது திட்ட அறிமுக போஸ்டர் தயாரிப்பிலிருந்து ஆரம்பித்து) மாற்றத்திற்கான இறுதி வடிவ உற்பத்திப் பொருட்களின் விலை அல்லது தயாரிப்பு வழிகளில் செலவுகளைக் குறைப்பது பற்றிய யோசனைகளை, அந்தந்த பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, யோசனையை அனுப்பி வைத்த (அப்போது தொழிற்சாலையின் பயிற்சி மையத்திடம் அந்தப் பொறுப்பு இருந்தது) துறைக்கு பதில் அனுப்புவோம்.
இந்த திட்டம் ஆரம்ப காலத்தில் அதிகம் சூடு பிடிக்கவில்லை. முதல் நூறு யோசனைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலித்து, அவற்றில் பன்னிரெண்டு யோசனைகள் ஏற்கப்பட்டு, பரிசுகள் அறிவித்தார்கள்.
பரிசு எந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டது என்றால், கொடுக்கப்பட்ட யோசனையின் மூலம், ஒரு வருடத்தில் என்ன தொகை தொழிற்சாலை செலவில் குறைகிறதோ அதில் பத்து சதவிகிதம் பரிசு என்று தீர்மானித்தார்கள்.
அந்த அடிப்படையில், ஒருவர் கொடுத்த யோசனையில், ஆண்டுக்கு 12 இலட்ச ரூபாய் செலவு குறைவு என்று கணக்கிடப்பட்டது. ஆக, யோசனை கொடுத்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு. 1975 கால கட்டத்தில் அது மிகவும் பெரிய தொகை. அந்தக் கால கட்டத்தில், என்னுடைய மாதாந்திர மொத்த சம்பளமே ஆயிரம் ரூபாய்க்குள்தான்!
அந்த யோசனையை செயலாக்க வடிவமைப்பு, புதிய பகுதிகள், எல்லாவற்றையும் வடிவமைத்து, மாற்றங்களை கொண்டு வந்ததோடு, எனக்குக் கொடுக்கப்பட்ட metrication, value engineering, standardisation என்பவைகளையும் செயல்படுத்தி, நான் செய்த மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 18 லட்ச ரூபாய் செலவு குறைத்தேன். ஆனால் எனக்கு பரிசு எதுவும் கிடையாது :(((.
முதல் batch பரிசு அறிவிக்கப்பட்டவுடன் புற்றீசல் போல யோசனைகள் குவிய ஆரம்பித்தன.
-------------
விடாக்கண்டன் :
இவைகள் ஒருபுறம் இருக்க, திட்டம் ஆரம்பித்து சில வருடங்கள் கழித்து, நேரடி உற்பத்திப் பிரிவில் இல்லாத ஒரு டிபார்ட்மெண்டிலிருந்து பொறியியல் பட்டம் பெறாத ஒருவர், என்னைப் பார்க்க வந்தார்.
தன்னிடம் சில யோசனைகள் வைத்திருப்பதாகவும், அவை குறித்து பேசி, என் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகவும் கூறினார்.
நான் அவரிடம், 'யோசனைகளை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புவது நல்லது. யோசனைகளின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது' என்று கூறினேன்.
அவரோ விடாமல், 'நான் சொல்லுகின்ற யோசனைகளில் எதெது workout ஆகும் என்று சொல்லுங்கள், அவற்றை மட்டும் நான் எழுதிப் போடுகிறேன்' என்றார்.
' சரி ஒவ்வொன்றாக சொல்லுங்கள்' என்றேன்.
ஒவ்வொன்றாக சொன்னார்.
அவற்றில் சில ஏற்கெனவே சொல்லப்பட்டு பல காரணங்களால் நிராகரிக்கப்பட்டவை. இன்னும் சில, மற்றவர்கள் ஏற்கெனவே கூறி, நிறைவேற்றம் வெவ்வேறு நிலைகளில் இருப்பவை.
சில யோசனைகளால் ஆண்டு சேமிப்பு சில நூறுகள் மட்டுமே - அதையும் உறுதியாக கூற இயலாது.
ஆக, அவர் கூறியவற்றில் எதுவுமே தேறவில்லை.
யோசனைகள் எதுவுமே workout ஆகாது என்று தெரிந்துகொண்டார்.
இறுதியாக, அவர் என்னிடம் கூறியதுதான் highlight.
" சார் - நான் சொன்ன யோசனைகளையும், அதற்கு நீங்கள் சொன்ன பதில்களையும் பட்டியல் இட்டு, எனக்கு ஒரு மெமோ தட்டிவிடுங்கள் " என்று சொல்லி, கிளம்ப எழுந்தார்.
நான், " சார் எனக்கு நீங்க சொன்ன யோசனைகளை பட்டியல் இட்டு ஒரு மெமோ தட்டுங்க. அதற்கு நான் பதில்கள் எழுதி உங்களுக்கு ஒரு மெமோ தட்டுகிறேன். ஒரு base document இல்லாமல் நான் எதையும் தட்ட மாட்டேன்" என்றேன்.
" நான் சொன்னபடி மெமோ தட்டுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சினை"
" நான் கேட்டபடி மெமோ தட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? "
" நான் மெமோ தயார் செய்து அனுப்ப எனக்கு சில நாட்கள் ஆகிவிடும். அப்போ சீனியாரிட்டி போயிடும். "
" நீங்கள் சொன்ன யோசனை எதுவுமே ஏற்கப்பட இயலாதவை. இதில் சீனியாரிட்டி ஜூனியாரிட்டி எங்கிருந்து வந்தது?"
இறுதிவரை அவரும் மெமோ தட்டவில்லை; நானும் மெமோ தட்டவில்லை!
அடுத்த வாரம் : ரயிலில் நான் பார்த்த (பைத்தியக்கார!) துப்பறியும் நிபுணர்!
= = = = = = = = = = = = =
இந்த வார கேள்வி பதில் சிறப்பாக உள்ளது. குறுக தரித்த குறள் போன்ற நறுக் விடைகள் நச்சென்று உள்ளன. பாராட்டுகள். கேள்வியின் நாயகன் யார்? கேட்டவர் பெயர் இல்லையே!
பதிலளிநீக்குJayakumar
கேள்விகள் கேட்டிருப்பவர் நெல்லைத்தமிழன்.
நீக்குவிட்டுப் போனதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி .
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.
இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. மூன்றாவது கேள்வியும், அதற்குரிய பதிலையும் ரசித்தேன்.
படமும் பதிவும் படங்கள் அழகாக இருக்கிறது. கலியுக மக்களின் தேரும், இயல்பை மீறிய ஆலமரத்தின் வேரோடிய விழுதுகளும் மனதை கவர்ந்தன. நெல்லைத்தமிழர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஆசை, கோபம், பொறாமை இவைகளை முதியவர்கள் மட்டும்தான் விட வேண்டுமா? ஆசை சிறிய வயதில் இருப்பது தவறில்லை, கோபமும் பொறாமையும் எந்த வயதிலும் கூடாது. குறிப்பாக பொறாமை கூடவே கூடாது. ரத்தத்தில் திமிர் இருக்கும் இளமையில் பொறாமை எந்த தீங்கை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஎ.பி. சகோதரர்களுக்கு கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குகீர்த்தி சுரேஷ், தனுஷ், தனுஷ்
பதிலளிநீக்குஆஹா.
நீக்குஅலுவலகத்தில் எழுத்தில் ஒரு முடிவைச் சொல்லுமுன் ஆயிரம் தடவைகள் யோசிக்கணும். வாய்மொழியா என்ன சொன்னாலும் நிர்பந்தம் ஏற்பட்டா மாற்றிக்கொள்ள முடியும். இல்லை ஞாபகம் இல்லைனு சொல்லிடலாம்
பதிலளிநீக்குநடிகரில் தனுஷ். நடிகையைக் குறிப்பிட முடியலை. (நல்லாருக்கான்னு நினைத்தால் அடுத்தபடத்தில் 70 எம்எம் ஆகிடறாங்க இல்லை யாரேனும் மேக்கப் இல்லாத மூஞ்சியைப் படமெடுத்துப் போட்டுடறாங்க வெற்றிமாறன் நல்ல இயக்குநர்.
பதிலளிநீக்கு