21.1.26

எந்த நாட்டுப் பெண்கள் அழகு?

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1.  ஹ்யூமனாய்ட் ரோபோக்களை ஏன் பெண்கள் மாதிரியே வடிவமைக்கறாங்க? அந்த ரோபோக்களால் என்ன என்ன உபயோகம்?  

# விளம்பரத்துக்கும், சினிமா நாயகிகளாக தேர்வு ஆவதற்கும், வரவேற்பு மேஜை அருகே நின்று சிரிக்கவும் ஏன் பெண்களைக் கூப்பிடுகிறார்களோ அதே காரணம்தான். அமுல் விளம்பரங்களில் காணப்படுவது கூட ஒரு சிறுமிதானே.‌

2.   மனித உணர்ச்சிகளை இந்த ரோபோவிற்குக் கடத்துவதால் என்ன பிரயோசனம்?  பெண்களுக்குப் பதிலாக ரோபோவைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்களா?


(அட்டுப் படங்களை நீங்கள் போட்டுவிடக்கூடாது என்பதற்காக நானே படங்களை அனுப்பியுள்ளேன்!) 

3. செய்திகளை வாசிக்கவும் சில பல சேனல்களில் (இந்தியாவில் அல்ல என்று நினைக்கிறேன்) இத்தகைய ரோபோக்களை உபயோகிக்கிறார்களே.  வேலையிழப்பு ஏற்படும் என்று ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் போராடுவதில்லை (அவங்க பல வருஷங்களாகவே எதற்கும் போராடுவதில்லை, கூட்டணிக்கு ஜால்ரா போடுவதிலேயே குறியாக இருக்காங்க என்பது வேறு விஷயம்)   

# 2 & 3 : மனித மூளையை ஃபாக்டரியில் தயாரிக்கும் முயற்சியில் இதுவும் ஒரு படி.

4. எத்தனையோ எத்தர்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் யூடியூப் காணொளி வைத்துக்கொண்டு நுழைகிறார்களே. அதிலும் கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்றபடி கருத்துக்களைப் பரப்புகிறார்களே. இந்த எத்தர்களை உள்ளே தள்ள எந்தச் சட்டமும் இல்லையா?

# இந்த மாதிரி எதிர்ப்பு ஊடகக் காரர்கள் ஜனநாயகத்துக்கு இன்றைய தேவை என்று ஒரு கருத்து நிலவக் காரணம் பல பொது ஊடகங்கள் ஒரே காரணத்துக்காக நடுநிலை பிறழ்ந்து விட்டதுதான். இதற்கு மேல் இது பற்றி விளக்கமாக சொல்ல வசதி இல்லை.

5. இந்த நாட்டுப் பெண்கள்தான் மிக மிக அழகானவர்கள் என்று ஒரு நாட்டின் பெண்களைப் பற்றிச் சொல்லிவிட முடியுமா? உங்கள் கண்ணோட்டத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த பெண்கள் அழகு என்று நினைக்கிறீர்கள்?

# பதில் தெரியாத வினா. தெரிய வரும்போது எனக்கும் சொல்லுங்கள்.

& அட! உலகம் சுற்றும் வாலிபர் கேட்கின்ற கேள்வியா இது! கீழே உள்ள KGG பக்கம் படிக்கவும். 

கே. சக்ரபாணி சென்னை: 

ராஜாமணி மற்றும். சூர்யா  போன்ற சில பெயர்களை  ஆண்.    பெண்  இருபாலரும். வைத்துக்கொள்வார்கள்.   அதேபோல்   ஒரே  பெயர்கொண்ட   கணவன் மனைவியை. பார்த்ததுண்டா.  அல்லது  கேள்விப்பட்டதுண்டா? 

# தொலைக்காட்சித் தொடரில் பார்த்ததும் உண்டு ஆடியோ கேட்டதும் உண்டு. (ரமணி Vs ரமணி) 

& எங்கள் சகோதரர் ரமணி என்னும் வெங்கடரமணி, சகோதரி வனமாவி(னி)  - இருவர் பெயரும் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.   சகோதரர்களில் சந்திரா என்ற சந்திரசேகர் உண்டு! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

வாதாபி கணபதியை பரஞ்சோதி என்னும் சிறுதுண்டுகளாக பிரதிஷ்டை செய்தது திருச்செங்காட்டங்குடியிலா? திருவாரூரிலா?

# திருச்செங்காட்டங்குடியில்தான்.  திருவாரூர் ஆலயத்திலும் வாதாபி கணபதி சந்நிதி உண்டு. நடராஜர் சந்நிதி தில்லையில் விசேஷம்.  எனினும் எல்லா சிவஸ்தலங்களிலும் நடராஜர் அருள் பாலிப்பது போல் வாதாபி கணபதியும் பல தலங்களில் தரிசனம் தருகிறார்.

(சிறுத்தொண்டரை சிறு துண்டுகளாக்கிவிட்டீர்களே !)

= = = = = = = = = =

படமும் பதமும் 

நெல்லைத்தமிழன் :


இதுதான் தலைக்காவிரி என்று சொல்லப்படும் இடம். இங்குதான் காவிரி உற்பத்தியாகிறது. சிறிய ஊற்றுப்போல இருக்கும் இடம் இது. அங்கு காவிரி அன்னைக்குச் சிறிய சன்னிதி அமைத்திருக்கிறார்கள். உற்பத்தி ஸ்தானத்திலிருந்து காவிரி நீரை நமக்குத் தெளிக்கின்றனர். அதன் முன்பு ஒரு சிறிய குளம் போன்ற அமைப்பு இருக்கிறது. அங்கு நீராட (பக்தியுடன்) வசதி செய்திருக்கிறார்கள். இங்கிருந்து பக்கத்தில் நீரோடை போன்று செல்லும் காவிரி, இடையில் காட்டில் மறைந்துவிடுகிறதாம். பிறகு இன்னொரு இடத்தில் வெளியாகி சிறு ஆறாக வெளிப்படுகிறது. 


உற்பத்தியாகும் ஊற்றிலிருந்து பக்கத்தில் உள்ள தொட்டி வடிவில் இருக்கும் இடத்துக்குச் செல்லும் காவிரி நீர் பிறகு நீரோடையாக வெளியே காட்டுவழிச் செல்கிறது. 

= = = = = = = = = = = =

KGG பக்கம்:

எந்த நாட்டுப் பெண்கள் அழகு? 

உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ?

பெண்கள் என்றாலே அழகுதான். அதிலும் ஒவ்வொரு நாட்டினரும், தங்கள் நாட்டுப்  பெண்கள்தான் அழகு என்று போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். ஒவ்வொரு நாட்டினுடைய கலாச்சாரமும், பண்பாடும் கூட இதில் அடங்கும். கலாச்சார உடைகளை அணிந்து பெண்கள் வந்தால், அவர்கள் தேவதைபோல மற்றவர் கண்களுக்கு தெரிவார்கள்.

உலகின் மிக அழகான பெண்களைக் கொண்ட நாடுகளில் ஸ்வீடன், இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பொதுவாக இந்தியாவின் பாரம்பரிய உடை என்பது ஒவ்வொரு மாநிலங்களை பொருத்து மாறுபடும். ஆனால், பெரும்பாலும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பெண்களுக்கு புடவை என்பதுதான் உடையாக இருந்து வருகிறது. அதை உடுத்தும் விதம் மட்டும் மாறுபடும்.

#ஸ்வீடன்:


அழகு, சிலை, பொன்னிறம், பொருத்தம் மற்றும் உடல்வாகு என்று அறியப்பட்டவர்கள் ஸ்வீடன் நாட்டுப் பெண்கள். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காமில்தான் உலகிலேயே பேரழகு நிறைந்த பெண்களின் பேரணி இருக்கிறது என்று டிராவலர்ஸ் டைஜஸ்ட் என்ற இதழ் குறிப்பிட்டு இருந்தது.

காரணம்:

வலிமைமிக்க வைக்கிங்ஸ் தங்கள் மரபணுக்களை ஸ்காண்டிநேவிய நாடுகளில் பரப்பியதன் விளைவாகதான் சுவீடன் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்களாம். ஸ்காண்டிநேவியா முழுவதும் கிராமங்கள் மற்றும் டவுன்ஷிப்களை வைக்கிங்ஸ் தன்வசம் வைத்திருந்தபோது, அவர்கள் பெண்களை மிகவும் அழகாக அருள்பாலிகளாக எடுத்துக் கொண்டனர். இதனால் வலுவான, கட்டமைக்கப்பட்ட மற்றும் கவர்ச்சிகரமான சந்ததிகள் அவர்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கின்றன.

#இத்தாலி:


இத்தாலி நாட்டுப் பெண்கள் பாஸ்தா மீதான அதீத காதலின் காரணமாக ஆலிவ் நிறமுடைய தோல் மற்றும் வடிவான உருவங்களுடன் அழகாக இருக்கிறார்கள். இத்தாலிய பெண்கள் ஐரோப்பாவின் மிக அழகான பெண்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சோபியா லோரன் முதல் மோனிகா பெலூசி வரை, இத்தாலிய பெண்கள் தங்கள் கவர்ச்சி, வெளித்தன்மை, அழகு மற்றும் உச்சரிப்புகள் ஆகியவற்றால் இத்தாலிய மற்றும் அமெரிக்க சினிமா இரண்டிலும் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

காரணம்:

இத்தாலிய பெண்களை உண்மையில் அழகாக மாற்றுவது அவர்கள் உணவு முறைதான் என்கிறார்கள். அவர்கள் உணவை சாப்பிடுவதற்கு யோசிப்பதில்லை. மிலன் இத்தாலியின் பேஷன் தலைநகராகும். அங்கு ஒல்லியாக இருக்கும் மாடல்கள் பலர் நிரம்பிருந்தாலும், இத்தாலிய பெண்கள் பீஸ்ஸா மற்றும் ஜெலட்டோவை அதிகம் உண்பார்கள். மேலும், மத்தியதரைக் கடல் உணவுகளையும் அவர்கள் அதிகம் உண்பார்கள். அது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதே இதற்குக் காரணம்.

#கொலம்பியா:

தங்க பழுப்பு நிற சரும பராமரிப்பு, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் மற்றும் வடிவான உருவங்களுடன் கவர்ச்சியான தோற்றத்திற்கு கொலம்பிய பெண்கள் பெயர் பெற்றவர்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஷகிரா முதல் சோபியா வெர்கரா வரை, கொலம்பிய பெண்கள் தங்களுடைய அழகால் ஹாலிவுட்டில் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், வெவ்வேறு துறைகளிலும் தங்களுடைய பெயரை நிலை நிறுத்தியுள்ளனர்.

காரணம்:

கொலம்பியா பெண்கள் அழகாக இருப்பதுடன், தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருப்பார்கள். இது அவர்களை மிகவும் க வர்ச்சிகரமானதாகவும் அழகாகவும் ஆக்குகிறது.

#இந்தியா:


இந்தியா மிகவும் மாறுபட்டது என்பதால், இந்நாட்டு பெண்களின் அழகு எல்லா வடிவங்களிலும் வருகிறது. நாட்டின் தெற்கில் இருந்து வரும் பெண்கள் நேர்த்தியான பழுப்பு நிற தோல், அடர்த்தி நிறைந்த கருமையான முடி மற்றும் பெரிய  கண்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

வடகிழக்கு பெண்கள் பளபளப்பான தோல், நேரான முடி மற்றும் கவர்ச்சியான ஆலிவ் தோலுக்கு பெயர் பெற்றவர்கள். நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் வெண்மையான தோல், மெல்லிய மற்றும் வலுவான உடல்கள் மற்றும் பாதாம் வடிவ கண்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

காரணம்:

மொத்தத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மைதான் மக்களை ஈர்க்கிறது. இங்கு பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பலவிதமான உணவு முறைகள் மற்றும் விருந்தோம்பல் என எல்லாம் கலந்து பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும் பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கமும் இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை என அனைத்தும் இந்திய பெண்களை இன்னும் அழகாக காட்டுக்கிறது.

#ஈரான்:

மத்திய கிழக்குப் பகுதியின் மிகச்சிறந்த பெண்களின் வீடாக அறியப்படுவது ஈரான். பளபளப்பான தோல் மற்றும் ஒளிபொருந்திய கண்கள் மற்றும் கூந்தல் ஆகியவற்றின் மொத்த கவர்ச்சியான கலவையுடன், உலகின் அதிசயமான சில பெண்கள் ஈரானில் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஈரான் நாட்டு பெண்களின் அடர்த்தியான கூந்தலைக் கண்டு உலகெங்கிலும் உள்ள பெண்கள் பொறாமை கொள்வார்களாம்.

காரணம்:

ஈரான் பெண்கள் பெரும்பாலானோர் ஹிஜாப் அல்லது புர்காதான் அணிவார்கள். அதற்கு பதிலாக அவர்கள் முக அம்சங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இதன்காரணமாக அழகான பொலிவான சருமங்களை அவர்கள் பெறுகிறார்கள்.

#பிரேசில்:
உலகிலேயே கவர்ச்சியான உடலை கொண்ட பெண்களில் முதலிடத்தில் இருப்பது பிரேசில் நாட்டு பெண்கள்தான் என்கிறது முன்பு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று. பிரேசிலிய பெண்கள் குடியேற்றம் காரணமாக உலகின் மற்ற பெண்களை விட மிகவும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். பிரேசிலில் பொன்னிற மேனியை கொண்ட அழகிய பெண்கள் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

காரணம்:

அமெரிக்காவைப் போலவே, பிரேசிலும் வெவ்வேறு கலாச்சாரங்களை கொண்டது. பிரேசிலிய பெண்களின் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், பிரேசிலில் குடியிருப்பதுதான் என்கிறார்கள். மேலும், அவர்களின் அழகிய உடலமைப்பு, தனித்துவமான அம்சங்கள், மகிழ்ச்சி உணர்வு மற்றும் நட்பு தன்மை ஆகியவற்றால் அறியப்பட்ட பிரேசிலிய பெண்கள் குறிப்பிடதக்கவர்களாக இருக்கிறார்கள்.

#எகிப்து:


உலகின் மிக அழகான பெண் இளவரசி கிளியோபாட்ரா என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட பெயர். இந்த பட்டியலில் எகிப்து நாட்டு பெண்கள் அழகானவர்கள் என்று காண்பிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பெரும்பாலான எகிப்திய பெண்கள் இளமையான வட்ட முகங்களுடன், அழகிய கன்னங்களுடனும், ஒளிபொருந்திய கண்களுடனும் மற்றும் அழகான உதடுகளையும் கொண்டவர்கள்.

காரணம்:

தங்களின் உடல் அழகை கவனிப்பதில் எகிப்து பெண்கள் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். 2011 எகிப்திய புரட்சிக்குப் பிறகு, பெண்கள் ஒரு அரசியல் அறிக்கையை வெளியிட்டு, அதில் ஃபேஷனைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்கள் பிரகாசமான வண்ண ஹிஜாப் மற்றும் அழகிய வேலைபாடுகள் கொண்ட நகைகளை அணியத் தொடங்கினர். இது அவர்களின் அழகையும்  கவர்ச்சியையும் மேலும் மெருகேற்றியது.

#நைஜீரியா:


நைஜீரிய பெண்கள் உயரமாக இருப்பதில் பிரம்பலானவர்கள். மேலும் அவர்களுடைய பாலுணர்வு, உடல் வாகு, வசீகரிக்கும் கவர்ச்சி காரணமாக அழகானவர்களாக இருக்கிறார்கள். அழகான செப்பு நிறமுடைய தோலுடன், நடிகைகள் சிலர் நைஜீரியாவிலிருந்து வருவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் வசீகரம், துணிச்சல் மற்றும் படைப்பு இயல்பு ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றவர்கள்.

#ஆஸ்திரேலியா:

வெளீர் நிறமுடைய முடி, வெண்மையான நிறம், அழகிய உடல் அமைப்பு மற்றும் சுலபமான இயல்புடன், ஆஸ்திரேலிய பெண்கள் ஹாலிவுட்டை அசத்துவது ஆச்சரியமில்லை. நிக்கோல் கிட்மேன், மார்கோட் ராபி முதல் ரெபெல் வில்சன் வரை ஆஸ்திரேலிய பெண்கள் சுவாரஸ்யமான உச்சரிப்புகளுக்கும், நகைச்சுவை உணர்விற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் மிகவும் வேடிக்கையாகவும், ஸ்போர்ட்டியாகவும் அறியப்படுகிறார்கள்.

'உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த நாடுகளில் உள்ள பெண்கள் மட்டும்தான் அழகா?' என்றால், இவ்வுலகில் பிறந்த அனைவரும் அழகே. இறுதியாக அழகு என்பது பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது. ஒருவருக்கு அழகாக தெரிவது உண்மையில் இன்னொருவருக்கு அழகாக தெரிவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான வழியில் அழகாகவும் சிறப்பாகவும்தான் இருக்கிறார்கள். அழகு என்பது நம் எண்ணத்திலும், வாழும் வாழக்கையிலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

Facebook பதிவு ஒன்றில் பாராஞ்சி சங்கர் என்பவரின் பதிவு. 

= = = = = = = =
Facebook பதிவுக்கு படங்கள் சேர்த்து, பட்டி பார்த்து செப்பணிட்டு வெளியிட்டுள்ளேன்.  

வாசகர்கள், மேற்கண்ட படங்களில் எந்த நாட்டுப் பெண் அழகு என்று கருத்துரை இடவும். 
= = = = = = = == = = = = =
அழகு பற்றி எழுதும்போது முன்பு பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிர்வாகி திருமதி ஒய் ஜி பி அவர்கள் சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர்களின் குடும்ப நண்பர் ஒருவரின் பையன், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து பரிந்துரைக்க திருமதி ஒய் ஜி பி முயற்சிகள் செய்தாராம். 
அந்தப் பையனிடம், தமன்னா போன்ற ஒரு படத்தைக் காட்டி இந்தப் பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டாராம்.  அதற்கு அவன் இல்லை என்று சொல்லிவிட்டான். 
அப்புறம் திரிஷா போன்ற பெண் படம். ஊஹூம் அவனுக்குப் பிடிக்கவில்லை. 
அனுஷ்கா? கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் சரியில்லை. 
பாவனா? ஊஹூம் !! 
" ஏண்டா உனக்கு இவர்கள் யாரையும் பிடிக்கவில்லை?" என்று கேட்டாராம். 
" ஆண்ட்டி - இவர்கள் யாருக்குமே எங்க குஜராத்தி பெண்கள் போல அழகான பெரிய வயிறு இல்லை - அதனால் பிடிக்கவில்லை " என்று சொன்னானாம்! 



= = = = = = = = = =

84 கருத்துகள்:

  1. காலை வணக்கம்!
    தவழ்ந்தாய் வாழி காவேரி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏப்ரல் மே நெருங்குகிறது இல்லையா? கடந்த சில மாதங்கள் வரை வீறுகொண்டு பாய்ந்தவள் தவழத்தான்போகிறாள்.

      நீக்கு
    2. தவழ்ந்தாலும் ஊர்ந்தாலும் உயிர்ப்புடன் இருந்தால் போதும்!

      நீக்கு
  2. இவர்தான் அழகு என யாரையுமே சொல்லிவிட முடியாது. இந்த நாட்டு அல்லது இந்த மாநிலப் பெண்கள் அழகு என்றும் சொல்லமுடியாது. பொதுவான கருத்தும் தவறாகவே இருக்கும்.

    நான் பலமுறை யோசித்திருக்கேன், முப்பது பெண்களைப் பார்த்தால் அதில் ஒருவர் மாத்திரமே என் கண்ணிற்கு அழகாகத் தெரிவார்.ஆனால் முப்பது பெண்களுக்கும் தகுந்த, அவர்களை விரும்பும் ஒவ்வொரு கணவன் வாய்த்துவிடுவான். அழகு என்பது காண்பவர் கண்ணிலும் அவரது விருப்பத்திலும்தான் இருக்கு.

    சிலருக்கு வெண்நிறப் பெண்களையே பிடிக்கும். சிலருக்கு மாநிறம், சிலருக்கு கருப்பு எனத் தேர்வு மாறுபடும்.

    என் அனுபவத்தில் சொல்கிறேன். நிறம், அழகு போன்ற எதையும்விட ஒருவரின் நல்ல குணம், ஒரு சில மாதங்களிலேயே ஒரு பெண்ணை மிக அழகியாக, விரும்பப்படுபவராக்க் காட்டிவிடும்.

    அட்டு ஃபிகர் என நான் எண்ணிய ஜோடிகள் அனைவருக்கும் உருகி உருகிக் காதலித்த கணவன் அமைந்த காதல் திருமணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அட்டு ஃபிகர் // நான் அங்கு இருந்தவரை 'அட்டு' என்ற பதம் இருந்தாற்போல் நினைவில்லை. ஏதாவது சினிமாவில் இச்சொல் அறிமுகமாயிற்றா? தமிழில் உள்ள 'அழுக்கு' ஏனும் பொருள்தானா அல்லது வேறே மொழி இறக்குமதியா/வேறு பொருளா?

      நீக்கு
    2. அட்டு பதம் நடிகர் சந்தானம் தொடங்கியது என நினைக்கிறேன். அஷ்டகோணல்லேர்ந்து அஷ்டு வந்து அட்டாகியிருக்குமோ?

      நீக்கு
    3. அட்டு, சப்பை எல்லாம் ஒரே அர்த்தம் இல்லையா?

      நீக்கு
    4. அட்டு- தூயதமிழ் சொல்லுக்கு வெல்லம், அழுக்கு, காய்ச்சுதல் எனும் பொருள்கள் உண்டு. அட்டாலும் பால் சுவையில் குன்றாது; remember? எனக்கு, சினிமாக்காரன் ஏன் திடீரென்று தூயதமிழ் பேசுகிறான் என்று சம்சயம்.

      நீக்கு
    5. //அட்டு, சப்பை எல்லாம் ஒரே அர்த்தம் இல்லையா?// எனில், 'அட்டு' என்பது 'அட்டை' (தட்டையானது) என்பதன் குழூஉக்குறியோ?

      நீக்கு
    6. தெரியவில்லை!

      நீக்கு
    7. திருவாழ்மார்பன்.... ஷங்கரின் காதலன் படத்தையும் பார்த்துட்டீங்கன்னா, ஜில் ஜங் சக் என்பதற்கும் அர்த்தம் விலாவாரியாகத் தெரிந்துகொள்ளலாம்.

      நீக்கு
    8. "அட்டு" "அபிஷ்டு" இதெல்லாம் எங்க ஊர்ப்பக்கம் வழக்கத்தில் இருந்தவை/இப்போ இருக்கானு தெரியாது. குளிக்காமல் சோம்பேறியாக உட்கார்ந்திருந்தால், "என்ன அட்டு மாதிரி உட்கார்ந்திருக்கே! என்பார்கள். எங்க வீட்டில் (பிறந்தகம்) காலை எழுந்ததுமே பல் தேய்த்த உடனே குளிச்சுத் தோய்ச்சுடணும். அப்புறமாத் தான் மற்றவை எல்லாம்.

      நீக்கு
    9. திரைப்படங்கள் அவ்வளவாப்பார்க்காததால் திரைப்படங்களில் "அட்டு" வந்திருக்குனு தெரியாது.

      நீக்கு
  3. நான் பார்த்தவரை சில நாட்டுப் பெண்கள் அழகில்லை (பொதுவாக). இல்லை அப்படியில்லை என எண்ணுபவருக்கு அடுத்த ஜென்மத்தில் கிளியோபாட்ராவைப்்போன்றவள் மனைவியாக வாய்க்கட்டும். ஆமாம் இது வாழ்த்தா அல்லது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் பார்த்தவரை சில நாட்டுப் பெண்கள் அழகில்லை (பொதுவாக).// அட கடவுளே! நீங்க இப்புடி பொசுக்குணு சொல்லிபுட்டா, நாளைக்கு அவுங்களுக்கு எப்புடி கல்யாணம் ஆவும்?

      நீக்கு
    2. குஜராத்தி பெண் வயிற்றை இரசிக்க குஜராத்தி பையன் இருப்பது போல் அந்தந்த நாட்டு ரதிகளுக்கு அந்தந்த நாட்டு மன்மதன்கள் தயாராக இருப்பார்கள்!

      நீக்கு
    3. //குஜராத்தி பெண் வயிற்றை இரசிக்க குஜராத்தி பையன் இருப்பது போல்// குழந்தைப்பருவத்திலிருந்தே தினமும் பிள்ளையாரைப்பார்த்து பார்த்து, தொப்பை அழகில் மயக்கம் வந்திருக்குமோ? அங்கெல்லாம் காணாபத்யம் ரொம்பப்ரசித்தமாச்சே!:-)

      நீக்கு
    4. இருக்கலாம்: )))))))

      நீக்கு
    5. இப்படி ஒரு சமூகப் பெண்களைப் பற்றி எழுதக்கூடாதுதான். பொதுவா திருமணம் ஆகும் வரை மார்வாரி குஜராத்திப் பெண்கள் மிக அழகாக இருப்பாங்க, நிறமும் பளீர் இல்லையா? அதற்குப் பிறகு, இத்தனை வருடங்கள் கட்டியிருந்த வாயைத் திறந்துவிடுவதால் முன்பு இரசித்த அழகு இருக்காது என எவரேனும் சொன்னால் அது ஆணாதிக்க மனப்பான்மை அல்லவா?

      நீக்கு
    6. எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க

      நீக்கு
    7. என்னைப் பொறுத்தவரை ராஜஸ்தான், குஜராத்தின் (Gha)காட்டியாவாடா பக்கத்துப் பெண்களெல்லாம் அதீத உயரத்துடன் கொஞ்சம் ஆண்மைத் தனம் கலந்தே இருப்பாங்க. நம்ம நடிகை பத்மினி மாதிரி.

      நீக்கு
  4. ரோபோட் ஹ்யூமனாய்டுக்கான பதில்கள் தவறுன்னு நினைக்கிறேன். விவரமறிந்தவர்கள் விளக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. //எந்த நாட்டுப் பெண்கள் அழகு? // அழகு ஆராய்ச்சியின் முதல் கட்டமாக, உணர்ச்சி வசப்படாமல், முதலில் ஒன்றை நிதானமாக அலசி ஆராய்ந்து பாருங்கள். பூக்கள், பறவைகள், விலங்குகள், இவை அனைத்திலும் பெரும்பாலும் அழகில் சிறந்தது ஆணினமா அல்லது பெண்ணினமா என்று கவனியுங்கள். First things first!! அப்புறம் பார்க்கலாம் நாட்டுவாரியாகவும், ஊர்வாரியாகவும், தெருவாரியாகவும் :-)

    பதிலளிநீக்கு
  6. //ஒருவருக்கு அழகாக தெரிவது உண்மையில் இன்னொருவருக்கு அழகாக தெரிவதில்லை.// very true. லைலா மஜ்னூன் கதை எல்லரும் அறிந்ததே. ஊரார் மஜ்னூனிடம் போய் கேட்கிறார்கள், "ஏண்டா, இப்படி உருகறயே, லைலா போயும் போயும் 'அட்டு ஃபிகர்' ( நெல்லைஜி உபயம்)". அப்பொழுது மஜ்னூன் கேட்கிறான், "அவளை நீங்கள் மஜ்னூநுடைய கண்ணால் பார்த்தீர்களா?!!"
    By the way, மஜ்னூன் என்றால் 'பைத்தியம்' என்பது பொருள்! அந்த அரபி கவி/காதலனின் உண்மை பெயர் 'கெய்ஸ்'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாச் சொல்றேன்... மும்தாஜ் (ஷாஜஹானின்) அட்டு ஃபிகர்தான். படத்திலும் பார்த்திருக்கிறேன். பதிமூன்று வருடங்களில் பதிமூன்று அல்லது பதினாலு குழந்தைகள். எனக்குத் தெரிந்த ஒருவன் வரு கிறிஸ்டியனை உருகி உருகிக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அவன் நல்ல ஃபீச்சரோடு இருப்பான். பெண் ஒர்த் இல்லை என்பது என் பார்வை. இப்படி, பல சாகசங்கள் பண்ணி ஆண்கள் திருமணம் செய்தது சாதா என்று எண்ணும்படியான பெண்கள்.

      நீக்கு
    2. Beauty lies in the beholder's eye and mind.

      நீக்கு
    3. சின்ன வயசுல என் நண்பர்கள் சொல்வது 'சேட்டு பொண்ணுங்க அழகா இருப்பாங்க...' 

      இன்னொரு நண்பன் சொன்னான்..  'கல்யாணம் ஆகி  ஒரு குழந்தை பெறும்வரை..' 

      அப்புறம் அவர்கள் உடையும் தோற்றமும் மாறி விடுவதைச் சுட்டிக் காட்டினான்.  அது  சேட்டுப் பெண்களுக்கு மட்டுமில்லை, மட்டுமில்லை.  எல்லா பெண்களுக்கும் பொருந்தும் என்று தோன்றியது. 

      ஆமாம்,  ஆண்களின் அழகு இலக்கணம் என்ன?

      நீக்கு
    4. கிளியோபாத்ரா போல என்கிறார்கள்.  கிளியோபாத்ரா என்று இவர்கள் காட்டும் படங்களை பார்த்தால் நம் கண்களுக்கு அழகாகவா தெரிகிறது?  "கிளி மாதிரி இருக்காள்னு நம்மூர்ல சுருக்கமா இதைதான் சொல்றாங்களோ!  

      நீக்கு
    5. பெண் பார்க்க வந்த பையன்  :  "என்ன ப்ரோக்கர்...   அந்தப் பொண்ணு கொய்யா மரத்துல ஏறி உட்கார்ந்து கொய்யாப்பழம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கு?  இதையா காட்டுறீங்க?"

      "ப்ரோக்கர்  : "நான் சொல்லலை, பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு...!"

      - ஒரு அல்ப ஜோக்... -

      நீக்கு
    6. //ஆமாம், ஆண்களின் அழகு இலக்கணம் என்ன?//அதைப்பெண்கள் சொல்லட்டும் :-)
      In the mean time: Hefty wallet won't hurt, either ;-)

      நீக்கு
    7. கிளி மாதிரி இருக்காள்னு நம்மூர்ல சொல்றதுக்குக் காரணம் தெரியலையா ஶ்ரீராம்? கணவனை, அவன் வீட்டார்களை அப்போ அப்போ கொத்துவாள், ஜாக்கிரதைனு அர்த்தம். கம்பத்துக்கு சீலை கட்டினாலும் கட்டிக்கலாமோ என அலைபாயும் ஆண்கள், பெண் அழகில் கிளின்னு அர்த்தம் பண்ணிக்கறாங்க...

      நீக்கு
  7. //" ஆண்ட்டி - இவர்கள் யாருக்குமே எங்க குஜராத்தி பெண்கள் போல அழகான பெரிய வயிறு இல்லை - அதனால் பிடிக்கவில்லை " என்று சொன்னானாம்!// வாஸ்தவம்தான், பையா! :-) :-)
    "There is no excellent beauty that hath not some strangeness in the proportion."- Francis Bacon

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///" ஆண்ட்டி - இவர்கள் யாருக்குமே எங்க குஜராத்தி பெண்கள் போல அழகான பெரிய வயிறு இல்லை - அதனால் பிடிக்கவில்லை " என்று சொன்னானாம்!// வாஸ்தவம்தான், பையா! :-) :-)// ஓமானில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு குண்டாக இருக்கும் பெண்களைத்தான் பிடிக்குமாம். அதனால் அந்த பகுதி பெண்கள் வயதிற்கு வந்ததும் அவர்களுக்கு நிறைய வெண்ணெய் கொடுத்து அவர்களை குண்டாக ஆக்குவார்களாம்.
      நம் தென்னிந்திய ஆண்களும் இப்படித்தானோ? நம்முடைய வெற்றிகரமான கதாநாயகியர் கஷ்குமுஷ்குதான்.

      நீக்கு
    2. நல்ல ஆராய்ச்சி!

      நீக்கு
    3. பா.வெ மேடம் சொல்வது பொதுவா அராபியர்களுக்கு.

      நீக்கு
  8. பெண்ணழகு பற்றி பேசும்போது, த்ரிபுர சுந்தரியை சொல்லாமல் போக முடியுமா?! அவள் அழகைப்பாடுவதுதானே சௌந்தர்ய லஹரி (ஆழகின் அலைகள்); அடங்காத அலைகள்! வெறும் அழகு வர்ணனை மட்டுமல்ல; மந்த்ரம், தந்த்ரம், யந்த்ரம் (ஸ்ரீ சக்ரம்) - எல்லாவற்றையும் கொண்டது இது!!!
    Common theme- symmetry and pattern recognition!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நியாயமா? எல்லா நாட்களையும் பக்திப் பக்கம் இழுத்துக்கொண்டு செல்வது? வாழ்க்கைல இந்தப் பக்கத்துக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்குங்க வாத்தியாரே

      நீக்கு
    2. திரிபுரசுந்தரி என்றதும் மைக்கேல் மதன காமராஜன்
      பட திருபு ( ஊர்வசி) ஞாபகம்தான் வந்தது!

      நீக்கு
    3. //பெண்ணழகு பற்றி பேசும்போது, த்ரிபுர சுந்தரியை சொல்லாமல் போக முடியுமா?!// அது அழகு இல்லை சுவாமி, சௌந்தர்யம்! சௌந்தர்யம் என்பதை அழகு என்று தமிழ்ப்படுத்தினாலும் அழுகு வேறு, சௌந்தர்யம் வேறு.

      நீக்கு
    4. ஸௌந்தர்யலஹரி என்றதும் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் குரல் காதில் கேட்கிறது.

      நீக்கு
  9. //வாதாபி கணபதியை பரஞ்சோதி என்னும் சிறுதுண்டுகளாக பிரதிஷ்டை செய்தது// கடவுளே! ஆட்டோ கரெக்ட் செய்த அட்டூழியம்!. கவனிக்காமல் அனுப்பி விட்டேன். சபையில் வைத்து மானத்தை வாங்கி விட்டீர்கள்:(( இனிமேல் கவனமாக இருக்கிறேன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை!! கவலை வேண்டாம்! (இதில் முக்கியமான
      விஷயம் - எனக்கு கேள்வி புரியவில்லை. # கண்டுபிடித்து
      எழுதியவுடன்தான் விஷயம் புரிந்தது! சரி அப்படியே இருக்கட்டும்
      என்று விட்டுவிட்டேன்!)

      நீக்கு
    2. திருச்செங்காட்டாங்குடி விநாயகர் பற்றி கௌதமன் சார் எழுதியவை தான் சரியானது. திருச்செங்காட்டாங்குடிக் கோயிலிலும் அப்படித் தான் சொன்னார்கள். அதோடு இதன் பிறகே இந்தத் தோற்றம் உள்ள கண்பதி சிலைகள் சில கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு "வாதாபி கணபதி" என அழைக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். எனக்குத் தெரிஞ்சு பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் தான் காலத்தால் மிகவும் மூத்தவர், முற்காலப் பாண்டியர்களால் எழுப்பப்பட்ட கோயில் எனக் கேள்வி.

      நீக்கு
    3. கௌதமன் எழுதவில்லை; கே ஜி ஒய் ராமன் எழுதியுள்ளார்.

      நீக்கு
    4. இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நம்ம தேனுபுரீஸ்வரர் கோயில் மாதிரி, (தேனுபுரீஸ்வரரைவிட ஒரு சன்னிதியாக இருக்கும் பட்டீஸ்வரம் துர்கை மிக்வும் புகழ் பெற்றிருப்பதைப்போல்), பிள்ளையார்பட்டி கோயிலிலும் பிள்ளையார் சன்னிதிதான் ரொம்பவே புகழ் பெற்றிருக்கிறது.

      நீக்கு
  10. எந்த நாட்டு பெண்கள் அழகு? நான் மஸ்கட்டில் பணி புரிந்தபொழுது. எங்கள் அலுவலக கட்டிடத்திலேயே ஒரு பகுதியில் இருந்த communicable disease control அலுவலகத்திற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவார்கள். ஒரு முறை என்னுடைய அறையில் அந்த தடுப்பூசி போடுவது நடந்தது. எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, ஜான்சிபார், ஓமானியர் என்று பலரும் வருவார்கள். நான் அந்த பெண்களை கவனித்ததில் எகிப்தியர்களில் பத்துக்கு ஒன்பது பேர் அழகாக இருப்பார்கள், பாகிஸ்தானியர்களில் பத்துக்கு எட்டு பேர் அழகாக இருப்பார்கள், இந்தியர்களில் வட இந்திய பெண்கள் ஆறு பேரும், தென்னிந்தியர்களில் பத்துக்கு ஐந்து பேர்களும் ஆவரேஜாக பத்துக்கு ஐந்து பேர் அழகு என்று தோன்றியது. இது என்னுடைய ரசனை.
    பாகிஸ்தானைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் ,"நீங்கள் இன்டியனா?" என்று கேட்டார். நான் ஆம் என்றதும், "நாங்களும் இந்தியர்கள்தான்.47 க்குப் பிறகுதானே பிரிந்தோம்? எல்லாம் இந்த அரசியல்வாதிகள் செய்தது" என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்துரை. நன்றி.

      நீக்கு
    2. தென்னிந்தியப் பெண்களில் தெலுகி தேசம் பத்துக்கு ஆறும், மலையாள தேசம் (Note. திருமணம் ஆகும் வரைதான்) பத்துக்கு எட்டும், தமிழகத்தில் பத்துக்கு இரண்டு அல்லது மூன்று (டவுட்டுதான்), கன்னடம் பத்துக்கு ஆறு எனக் கொள்ளமுடியும் இல்லையா?

      நீக்கு
    3. அநேகமாக நான் விமானப் பயணங்கள் செய்யும்போதெல்லாம் வீல் சேரை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானியரோ, பங்களா தேஷியரோ தான் வருகின்றனர். இப்போ நவம்பரில் இந்தியா போனப்போ டாக்சி டிரைவர் பங்களா தேஷ். மிகவும் அன்புடனும், ஆதரவுடனும் என்னைக் காரில் ஏற்றி, இறக்கி எல்லா உதவிகளும் செய்தார். ஒரு சிலர் பேசும்போது நாமெல்லாம் ரத்த பந்தம் உள்ள சகோதரர்கள் தானே என்பார்கள்.

      நீக்கு
    4. கீசா மேடம்... இங்க நாம, பாகிஸ்தானி, பங்களாதேசி என்று பார்க்கிறோம். ஆனால் பாகிஸ்தானியர்களில் நல்லவர்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பர்களானவர்களும் உண்டு.

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம்.....

    ஆஹா..... இன்று அழகியல் ஆராய்ச்சியா? புற அழகை விட அக அழகு முக்கியம் இல்லையா? பார்க்கும் பார்வையில் தான் அழகு இருக்கிறது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிவது மற்றவர்க்கு அழகில்லாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. எந்த நாட்டு பெண்கள் அழகு?

    எல்லா நாட்டுப் பெண்களும் அழகு தான்...

    குறிப்பாக எகிப்து.....

    பதிலளிநீக்கு
  13. நம் நாட்டுப் பெண்கள் அழகின் அழகு...

    பதிலளிநீக்கு
  14. தலைக்காவிரி படங்கள் ரொம்ப அழகா இருக்கு, நெல்லை. பார்க்க வேண்டிய இடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான இடம். நாங்கள் போன தூறலுடன் கூடிய சீசன் சூப்பர்.

      நீக்கு
  15. நெல்லை, எல்லாப் பெண்களுமே அழகுதான்....புற அழகை விட அக அழகு அவர்களின் அழகைக் கூட்டும். நாம் பார்க்கும் விதத்திலும் இருக்கிறதே beauty is in the eye of the beholder!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீன்னாக்க... ரொம்ப அழகாக இருப்பவர்கள் எல்லோரும் அக அழகிலும் சிறந்தவர்கள்னா சொல்றீங்க?

      நீக்கு
    2. அக அழகில் சிறந்தவங்களின் முகமே சொல்லிடும். எம்.எஸ். அம்மா மாதிரி.

      நீக்கு
    3. எம் எஸ் அம்மா = ஷண்முக வடிவு?

      நீக்கு
    4. க்ர்ர்ர், நான் சொன்னது திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியைத்தான். எம்.எஸ்ஸோட அம்மாவையெல்லாம் யார் பார்த்தாங்க?

      நீக்கு
  16. கௌ அண்ணா உங்களின் பகுதி நல்ல விவரங்கள் அடங்கிய பகுதி.

    என் பதில் நெல்லைக்குக் கொடுத்த அதே பதில்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. போக முடியாமப் போன இடங்களில் கூர்க், தலைக்காவிரி இரண்டும் உண்டு. என்னவோ முயற்சிகள் எடுத்தும் போக வாய்ப்புக் கிடைக்கலை. :( நெல்லையின் படங்கள் அருமை. ஆனால் பல வருஷங்களுக்கு முன்னரே தலைக்காவிரி பற்றி ஆனந்த விகடனில் திரு பரணீதரன் எழுதினதைப் படிச்சிருக்கேன். அவரே எடுத்த படங்கள் தவிர்த்து கோபுலுவின் சித்திரங்களும் இடம் பெற்றிருக்கும். கயிலை யாத்திரை பற்றி ஆனந்த விகடனில் திரு நம்பியார் எழுதிய கட்டுரைகளைப் படிச்சிருக்கேன். அட்டைப்படத்திலும் நம்பியார் கயிலை மலை முன் நிற்பது போல் போட்டிருந்தாங்க. அப்போவெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை, இதெல்லாம் பார்ப்போம்னு.

    பதிலளிநீக்கு
  18. தலைக் காவிரி படங்கள் அருமை.

    எந்த நாட்டுப் பெண்கள் அழகு ? நிறைந்த பகிர்வாக தந்துள்ளீர்கள்.
    "அழகே உன்னை ஆராதிக்கிறேன்..... தான் நினைவுக்கு வந்தது.:)

    "நதியே ....நதியே காதல் நதியே நீயும் பெண்தானே....இயற்கையை விடவா பெண்கள் அழகு ? :))

    பதிலளிநீக்கு
  19. நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!
    digital declutter செய்வதற்காக கணினி, ஃபோன் இரண்டும் மூடி வைக்கப்போகிறேன். எமர்ஜென்சி யூஸ் மட்டும். எவ்வளவு நாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை; இரண்டோ, இருபதோ வேறேதாவதோ. புத்திக்கும் (அட!) மனசுக்கும் ஏதாவது உறைக்குதான்னு பார்ப்போம். :-)
    In the meantime, பொறுமை, அன்பு, ஆதரவு காட்டிய எல்லாருக்கும் ரொம்ப டாங்ஸ், சகோ!!

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    எந்த நாட்டு பெண்கள் அழகு?
    அழகு என்றால் முருகன் என்பது போல அழகு என்றாலே பெண்கள் தான்.
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு. பார்க்கும் பார்வையில் இருக்கிறது.
    அன்பான, கனிவான உவகை மிகுந்த உள்ளம் அழகு . அழகு மாறி கொண்டே இருக்கும், அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்.
    அன்பே அழகு

    பதிலளிநீக்கு
  22. கெளதமன் சார் பகிர்வும் நன்றாக இருக்கிறது.


    //எங்க குஜராத்தி பெண்கள் போல அழகான பெரிய வயிறு இல்லை - அதனால் பிடிக்கவில்லை " என்று சொன்னானாம்! //

    கடைசியில் எங்கள் ப்ளாக்கில் நிறைய பேருக்கு பிடித்த பெண்களை
    தமன்னா, திரிஷா,அனுஷ்கா, பாவனா யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாரே





    பதிலளிநீக்கு
  23. அழகு:
    பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து அழகு மாறுபடும்
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
    இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.
    இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற
    பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,
    பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்
    இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.

    அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
    கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை
    கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த
    இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
    ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
    அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.
    பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக
    இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்
    மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு
    பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு
    போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக
    வந்து விடும்.

    அப்பாடா ஒரு வழியாக வல்லி அக்கா எழுத
    அழைத்த அழைப்பை ஏற்று எழுதி விட்டேன்.

    வாழ்க்கை வாழ்வதற்கே என்ற பதிவில் நான் எழுதியது.2009 ல் வல்லி அக்கா தொடர் அழைப்பு பதிவுக்கு எழுதியது.
    வாழ்க்கை வாழ்வதறே

    பதிலளிநீக்கு
  24. https://mathysblog.blogspot.com/2009/10/blog-post_07.html

    காதல், கடவுள், அழகு, பணம், என்ற தலைப்பில் எழுத அழைத்து இருந்தார்கள் வல்லி அக்கா.
    அழகுக்கு எழுதியது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!