29.1.26

அறிவுதான் உடம்பையும் வளர்க்குது... உயிரையும் வளர்க்குது.

சட்டென முடிவெடுத்து புத்தகக் கண்காட்சி சென்று வந்ததற்கு அண்ணனின் அனத்தலும் காரணம். கைகளை இறுக்கமாக பின்பக்கம் கட்டியபடி புத்தகம் வாங்கக்கூடாது என்றே போய்வந்தேன். 90% வெற்றி பெற்றேன்!

உள்நுழைவுக் கட்டணம் இல்லை என்றார்களே... அப்புறம் ஏன் டிக்கெட் கவுண்ட்டர் என்று நெருங்கிப்பார்த்தால் அதில் Free entry என்று போட்டிருந்தது.
'அட ராமா.... இதை கவுண்ட்டர் வைச்சு சொல்லணுமா' என்கிற என் மனக்கேள்விக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் பதில் கிடைத்தது!
உள்ளே மீண்டும் மீண்டும் "வாசகர்களின் கனிவான கவனத்தை" ஈர்த்து, டிக்கெட் வாங்கும் படி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. "ஃப்ரீன்னாங்களே.. நான் கூட சும்மாதானே உள்ளே வந்தேன்" என்று என்று நான் நின்று கொண்டிருந்த ஸ்டால் காரரிடம் கேட்டதும் அவர் சொன்னார், "வாங்கி உங்கள் பெயர் எழுதி போட வேண்டும். இரவு குலுக்கல் நடக்கும். பரிசு கொடுப்பார்கள்" என்றார்.

உள்நுழைவுக் கட்டணம்தான் இல்லை.  கார் பார்க்கிங் 50 ரூபாய்!  அதை படமெடுக்க மறந்து விட்டேன்!

உள்ளே செல்வதற்கு முன் ஒரு காஃபி சாப்பிடலாம் என்று சென்றதன் பலன் 40+40 எண்பது ரூபாய் காலி!
"பன்னிரு திருமுறைகள்". எப்படியும் புத்தகம் வெயிட் குறைந்தது அஞ்சு கிலோ தேறும்.  எப்படி வைத்து படிப்பார்கள் வாசகர்கள் என்று விற்பனையாளரைக் கேட்டேன்.  "நீ வாங்கல்ல இல்ல....  வுடு" என்று சொல்லாமல் தினசரி பாராயணம் செய்பவர்கள் படிப்பார்கள்.  ஸ்டேண்டில் வைத்து படிப்பார்கள் என்றார்.  அதுவும் சிரமம்தான் என்று சொல்லி வந்தேன்.  வாசகர்கள் சிரமம் அறியாத பதிப்பகத்தார்!


போரும் அமைதியும் போல போரும் சமாதானமும்.  பல்வேறு புத்தகங்கள் புதிதாக கண்ணில்பட, விற்பனையாளரிடம் எண்பதுகளில் தடை செய்யப்பட சட்டானிக் வெர்சஸ் இருக்கிறதா என்று கேட்டேன்.  சல்மான் ருஷ்டி புத்தகம் அல்ல, பாலசிங்கம் புத்தகம்.  விற்பனையாளர் யாருக்கோ அலைபேசிவிட்டு என்னிடம் மேல்விவரம் கேட்டார்.  நெட் ரிசல்ட் இல்லை என்பதே,,

முத்துக்குமார் கவிதை ஒன்று...  சாம்பிள்...


உள்ளே நுழைந்ததுமே விருட்சம் சென்று திரு அழகியசிங்கர் மற்றும் திரு கிருபானந்தன் இருவரிடமும் அரைமணி உரையாடிவிட்டுதான் சுற்றினேன்.

வித்தியாசமான ஸ்டால் பெயர்!

காலியான கண்காட்சி, அழகிய அடுக்கலில் புத்தகங்கள்!

அல்லயன்ஸ் ஸ்டாலும், சந்தியா பதிப்பக ஸ்டாலும் 

10 நாவல்கள் ஐநூறு ரூபாய்க்கு!


 
சும்மா ஒரு Feel க்காக உள்ளே நுழையுமிடத்து ஒரு சிறுகாணொளி...  உள்ளே உயிர்மை பதிப்பகத்தில் ஒரு வரிசை ம் முழுக்க சுஜாதா புத்தகங்கள் இருப்பதை ஒரு சிறு காணொளி...   முதல் காணொளி முடித்து உள்ளே நுழைகையில் சஃபாரி அணிந்த ஒருவர் என்னை வலமிருந்து இடம் பின்பக்கமாக க்ராஸ் என்னையே பார்த்தபடி செய்தார். "நாம் முன்னர் பார்த்திருக்கிறோமா, ஒருவரை ஒருவர் அறிந்திருக்க்கிறோமா" என்று கேட்டேன்.  நீங்கள் டாக்டர் நாராயணன்,,," என்று இழுத்தார்.  இல்லையென்று முறுவலுடன் தலையசைத்து நகர்ந்தேன்!   உள்ளே ஆங்காங்கே குழுமி இருந்த சில எழுத்தாள வி ஐ பிக்கள் நான் தாண்டும்போதெல்லாம் என்னை சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தது சங்கடமான பெருமையாக இருந்தது!!!  வாசகர்களுக்கு சம அளவில் எழுத்தாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது!



வெளியே வந்து முதல் கடையில் 'கணேஷ்பாலா தொப்பி' இரண்டு வாங்கினேன்!


ஊறுகாய், வடாம், ஊட்டி வர்க்கி போன்றவை விற்பனை செய்த கடை.- வெளியே.
டெல்லி அப்பளம் நூறு ரூபாய் என்றார்கள்.  மிளகாய் பஜ்ஜி ஐம்பது ரூபாய்.  வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடிவந்து விட்டோம்.  நான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எனக்குள் பேசுகிறேன், காந்தி அடிச்சுவடும் அதிகாரச்சுவடும், காலச்சக்கரம் நரசிம்மாவின் நவகண்டநாயகி, அப்புறம்  பாஸுக்கு ஒரு ஸ்தோத்ர மாலை புத்தகம்  ஆகிய ஐந்து  புத்தகங்கள் வாங்கினேன்.

==============================================================================================

 Taskari - the smugglers web(Hindi series)

பானுமதி வெங்கடேஸ்வரன் 


தஸ்காரி என்னும் ஹிந்தி வார்த்தைக்கு கடத்தல் என்று பொருள். ஸ்பெஷல் ஓ.பி.எஸ், காக்கி, போன்ற தொடர்களை எடுத்த நீரஜ் பாண்டே எடுத்திருக்கும் இந்த சீரீஸ் விமானங்கள் மூலம் நடைபெறும் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. 

விமான நிலையங்களில் இருக்கும் சுங்க அதிகாரிகளையும், விமான ஓட்டிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தங்கம், போதை பொருள்கள் போன்றவை எப்படி இந்தியாவுக்குள் வருகின்றன? அதை தடுக்க நினைக்கும் நியாயமான சுங்க அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான எமோஷனலாக மிரட்டப்படுவது, கொல்லப்படுவது போன்றவற்றை சொல்கிறது.

"எத்தனை சுங்க அதிகாரிகளின் குழந்தைகளின் உயர் கல்வி, அவர்கள் குடும்பத்தினர்களின் மருத்துவ செலவு என்று எவ்வளவு செலவு செய்து ஒரு ராஜாங்கமே நடத்துகிறேன், உன்னைப் போல நியாமானவர்கள் திடீரென்று முளைத்து உனக்கு தோதானவர்களை தேர்வு செய்து கொண்டு. என்னை செயல்படுத்த விடாமல் தடுத்தால் என்ன அர்த்தம்? நான் அவ்வப்பொழுது 'டிப்'போடு துப்பும் தருகிறேன், அதை நீ பிடித்து அலுவலகத்தில் பெயர் வாங்கிக் கொள். என்னுடைய மற்ற கடத்தல்களை அனுமதித்து விடு" என்று விரட்டியதையும், மிகவும் நேர்மையானவர் என்று நினைத்த தன்னுடைய மேலதிகாரியும் கடத்தல் முதலைகளுக்கு கட்டுப்பட்டவர் என்பது தெரிந்தும், தன்னுடைய நண்பனை பலி கொடுத்தும் தன் நிலைப்பாட்டிலிருந்து பிறழாமல் செயல்படும் ஒரு சுங்க அதிகாரியின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. 

எல்லா நடிகர்களும் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பித்திருக்கிறார்கள். கதை முழுவதும் விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலும் நடப்பதால் ரிச் லொகேஷன்கள், செட்டுகள். சினிமா போல சில சண்டைக் காட்சிகள் இருந்தாலும் விறுவிறுப்பாக கதை நகர்த்தப் படுகிறது. ஏழே எபிசோடுகளில் இந்த சீரீஸை முடித்து விட்டதற்கும், கடத்தல்காரர்கள் தடுக்கில் பாய்ந்தால், கோலத்தில் பாய்கிறவர்களாக சுங்க அதிகாரிகளை காட்டியிருப்பதற்கும் பாராட்ட வேண்டும்.  

=================================================================================================

    முன்னாள் வானிலை ஆராய்ச்சி அதிகாரி திரு ரமணன் பாஸ்கிக்கு அளித்த பேட்டியிலிருந்து....

புயல்களுக்கு பெயர் வைப்பதே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத்தான். இந்தப் புயல் என்ன மாதிரி விளைவுகளைக் கொடுத்தது என்று அறிந்து கொளல் வேண்டி.  முதலில் அமரிக்காவில்தான் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது.  அதிலும் காலப்போக்கில் ஒரு பிரச்னை வந்ததது.  பெண்கள் பெயராகவே வைக்க, பெண்ணுரிமை இயக்கங்கள் போர்க்கொடி பிடித்தன.  அப்புறம் மாற்றி, மாற்றி ஒரு ஆண் பெயர், ஒரு பெண் பெயர் என்று வைக்கத் தொடங்கினார்கள்.  இந்தியாவையும் இதே மாதிரி பெயர் வைக்கச் சொன்னார்கள்.  இந்தியர்கள் முதலில் நோ சொல்லி விட்டார்கள்.  எங்களை பொறுத்தவரை அது மசூலிப்பட்டணம் புயல், வேதாரண்யம் புயல் என்று வைத்து விடுவோம் என்றார்கள்.    அப்புறம் இதிலேயே ஒன்று இரண்டு என்று நம்பர் வைத்து நினைவு வைத்துக் கொள்ள முடியாது என்று இவர்களும் பெயர் வைக்கத் தொடங்கினார்கள்.  அப்படி பெயர் வைக்க ஆரம்பித்தது ஆரம்பித்தது 2004.  ஒரு base  வைத்து பெயர் வைப்பார்கள்.  

தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் உருவானால் பாதிக்கப்படக்கூடிய மொசாம்பிக், மடகாஸ்கர் மொரீஷியஸ் என்று ஒரு புயல் எந்த நாடுகளை, நிலப்பரப்பை அதிகம் தாக்கும் என்று பார்த்து அவர்கள் தயாரித்து அனுப்பி வைத்திருக்கும் லிஸ்ட்டிலிருந்து சம்பந்தப்பட்ட நாடுகள் ஒரு பெயரை தெரிவு செய்து ஜெனீவாவில் இருக்கும் WMO மையக் குழுவுக்கு அனுப்புவார்கள்.  அவர்கள் அதை அங்கீகரித்தால் அந்தப் பெயர் வைப்பார்கள்.  எந்தப் புயலாவது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தினால் அந்தப் பெயரை எடுத்து ஓரம் கட்டி வைத்து விடுவார்கள்.  சென்டிமெண்ட்!  மறுபடி வைக்க மாட்டார்கள்.  பசிபிக் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு 'டைபூன்' என்று பெயர்.  அதற்கு ஜப்பானில் இருக்கும் டோக்கியோதான் பெயர் தெரிவு செய்யும் சென்டர்.    தாய்லாந்து இரண்டு பக்கமும் வரும்!  வடக்கு இந்தியப்பெருங்கடல் B  பங்களாதேஷில் தொடங்கி அவர்கள் எல்லாம் டெல்லிக்கு அனுப்புவார்கள்.  கடைசியில் இருக்கும் நாடு ஏமன். ஒவ்வொரு நாடும் நான்கு நான்கு பெயர்கள் கொடுக்கும்.  அது சுழற்சியில் வரும்.

உண்மையில் அலர்ட் செய்தியெல்லாம் மக்களுக்கு இல்லை.  அது அரசு அதிகாரிகளுக்கு என்கிறார்.  விடுமுறை எல்லாம் எடுக்காமல் அலுவலகம் செல்லவேண்டும் என்று விதிகள் இருக்கும். மக்களைப் பொறுத்தவரை கனமழை வருமா, மிக கனமழை வருமா என்று சொன்னால் போதும்.
மிதமான மழை, கனமழை என்று சொல்கிறார்களே...  அது என்ன?  நிறைய பேர்களுக்கும் அது தெரியாது, சொல்ல மாட்டாங்க... - பாஸ்கி 

ஒரு இடத்துல ஏழு சென்டிமீட்டர் மழை பெய்தால் அது கனமழை - ரமணன்.

எப்படி?  ஸ்கேல் வச்சு பார்க்கணுமா? - பாஸ்கி 

ஆமாம் ஸ்கேல் வச்சுதான் பார்க்கணும்.  ஒரு பெரிய அண்டாவா இருக்கட்டும், இல்லை, சின்ன சிலிண்டர் வடிவ பத்திரமா இருக்கட்டும்.  அதை உங்க வீட்டு வாசல்ல வச்சுடுங்க..   24 மணி நேரம் கழித்து நீங்கள் எப்பொழுதும் உபயோகிக்கும் ஸ்கேலை விட்டு அளந்து பார்த்தால் அது என்ன காட்டுகிறதோ அதுதான் உங்கள் வீட்டு வாசலில் பெய்த மழை அளவு.  

ஆறுமாதம் கிழக்கிலிருந்து காற்று அடிக்கும்.  ஆறு மாதம் மேற்கிலிருந்து காற்று அடிக்கும்.  ஓரளவுக்கு ஏப்ரல் பதினைந்திலிருந்து அக்டோபர் 15 வரை மழை வருமா என்றால் நீங்கள் மேற்கேதான் பார்க்கணும்.   மழை வருமா வராதா என்று திறந்த வெளியில் திரைப்படம் எடுக்கும் சினிமா சம்பந்தபப்ட்டவர்கள் கேட்பதுண்டு.

சென்னையே மூழ்கும் என்று சொல்கிறார்களே..
அது எப்போது நடக்க வாய்ப்பு என்றால் மாலத்தீவுகள் மூழ்கினால் அப்புறம் சாத்தியம்.  மாலத்தீவு கடலிருந்து ஒன்றரை அடி.   நாமெல்லாம் மூன்றரை அடி, நான்கடிக்கு மேல் இருக்கிறோம். அடி அலலது மீட்டர்.   கடல் மட்டத்திலேயே இருக்கும் தீவுகள் எல்லாம் இருக்கிறது.  காரணம் என்னவென்று பார்த்தால் தொழிற்புரட்சி எல்லாம் வந்தபிறகு உலகத்தின் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.  கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்திருக்கிறது.  1860 லிருந்து பார்த்தோமானால் 2016, 2017 வரை 25 சென்டிமீட்டர் அதிகமாயிருக்கிறது.  இது ஒரு மீட்டர் என்று போனால் அப்போதுதான் சில இடங்கள் எல்லாம் தண்ணீருக்குள் போகும்.  நெதர்லாந்து ஹாலந்தில் கடல் மட்டம் சமமாக இருந்ததால் கடலுக்கு முன்னே ஒரு பெரிய சுவர் கட்டி விட்டார்கள்.  இடையில் இருந்த நீரை பெரிய மெஷின்கள் மூலம் எடுத்து விட்டு உவர் மண்ணை நல்ல மண்ணால் மூடி அகலமான தெரு போல கட்டி விட்டார்கள்.

வீட்டைச் சுற்றி சிமெண்ட் போடக்கூடாது.  மழைநீர் சேகரிப்பு என்பதை இங்கு யாரும் பெயரளவில்தான் வைத்திருக்கிறார்கள்.  குறைந்தபட்சம் கூழாங்கற்களாவது போடவேண்டும்.  

நிலநடுக்கம் வந்தால் எல்லோரும் வெளியில் சென்று வெட்ட வெளியில் நிற்க வேண்டும்.  ஆனால் அதேசமயம் எல்லோரும் ஒரே சமயத்தில் ஒரே லேயரில் கூட்டமாக ஓடுவதும் ஆபத்து.  இது மாதிரி சமயங்களில் ஒரு கனமான மேசையின் கீழ் இருக்கலாம்.  கட்டிடமே இடிந்தாலும் நாளை  மீட்ப்புப் பணியில் இருப்பவர்கள் ஓட்டை போட்டு எடுத்துக் காப்பாற்ற வசதியாக இருக்கும்.

நிறையபேர் தலைச்சன் பிள்ளை இடியில் போகக்கூடாது என்பார்கள்.  அதற்கு காரணம் உயரமாக இருப்பதால் இடியை அவன் வாங்கி விடுவான் என்பதால்.  அவன் போகாமல் அடுத்த பையன் போனால் அவன் அடிவாங்குவான்.  உயரம்தான் கணக்கு,  எனவே மின்னும் வேளையில்  வெட்ட வெளியில் நிற்காதீர்கள்.  காருக்குள்ளேயே இருக்கலாம்.  தரையில் கால் வைக்க வேண்டாம்.  பட்ட மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.  ஒற்றை மரமாயிருந்தால் ஆபத்து.  நிறைய மரங்கள் இருந்தால் உயரமான மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.  வீட்டுக்குள் இருந்து விடுவது சிறப்பு.  மின்னும் சமயங்களில் சுவர்களை எல்லாம் தொடாமல் இருப்பது நல்லது.  

டிஷ் ஆன்டெனாதான் மொட்டை மாடியைவிட உயரமானது.  எனவே மின்னல், இடி சமயங்களில் டீவியை அனைத்து வைப்பதைவிட இணைப்பையே துண்டித்து வைப்பது சிறந்தது.

2004 வரை இந்தியாவில் சுனாமி தடுப்பு கிடையாது.  இங்கு வராது என்று நினைத்தார்கள்.  ஆழிப்பேரலை என்கிற வார்த்தையை நான்தான் முதலில் உபயோகபபடுத்தினேன்.

நான் (ரமணன்) சொல்லியபிறகுதான் ஹைதராபாதில் ஒரு ஆய்வு மையம் தொடங்கினார்கள்.  கடலுக்கடியில் சென்சார்கள் வைத்து சுனாமியை கவனிக்கத் தொடங்கினார்கள்.   24 மணிநேரமும் கவனிப்பார்கள்.   சுமத்ரா அருகில்தான் அதிக வாய்ப்பு.  அந்தமான் உள்ளிட்ட இடங்களில் சுனாமி வந்தால் அவர்களுக்கு சுனாமி அலர்ட் கொடுக்கக் கூட நேரமிருக்காது.  ஜப்பானில் இப்போதெல்லாம் நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் விழாமலிருக்க கட்டிடங்களுக்கு அடியில் ஸ்ப்ரிங் வைத்திருக்கிறார்களாம்.  நிலம் ஆடும்போது இதுவும் ஆடும்.  விழாது.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உங்கள் கனவுகளை சொல்லுங்கள்" என்று முதல்வர் நிகழ்ச்சி பற்றி செய்தித்துளி அல்லது படச்செய்தி பார்த்ததும் இதை எழுதினேன்.  பேஸ்புக்கில் போடுவதற்கு.  தைரியமில்லாததால் விட்டு விட்டேன்.

கைது செய்ய காவலரை 
அனுப்பாவிட்டால் 
கனவுகளை சொல்வதில் 
தயக்கமில்லை!
ஊழலில்லா ஆட்சி வேண்டும் 
ஊழல் செய்தோர் சிறையில் 
அடைக்கப்பட வேண்டும் 
உறவுகளே பதவியேற்கா 
பண்பாட்டு முறைகள் வேண்டும் 
கனிமவள கொள்ளையர் 
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் 
மணற்கொள்ளையரை மரத்தில்  
கட்டிவைக்க வேண்டும் 
பாலியல் குற்றவாளிகளின் 
குறிகள் நீக்கப்பட வேண்டும்
போலி மதச்சார்பின்மை பேசும் 
பொய்யர்களின் 
நாவுகள் அறுபடல் வேண்டும் 
கோவில் சொத்தைக் 
கொள்ளையடிப்போரை விதி.
கொண்டுபோக வேண்டும் 
பிரச்னைகளை திசைதிருப்ப 
மடைமாற்றும் கடையர்களை
கடைவீதியில் நிறுத்தி 
கசையடி  கொடுக்க வேண்டும் 
விமர்சனம் செய்வோரை வீணே 
சிறையிலடைத்து வழக்குப் போடும் 
சர்வாதிகாரம் நிற்க வேண்டும் 
கைது நடவடிக்கை வந்துவிடுமோ .
பயமாகத்தான் இருக்கிறது  
வெளியில் சொல்ல 
மதிக்கப்படும் உணர்வுகள் 
பார்த்து,  ஆபத்தில்லை என்றால் 
சொல்ல 
இன்னும் இருக்கின்றன கனவுகள் 

==========================================================================================

ஒரு நாள், ஸ்டெல்லா புரூஸே எனக்கு போன் செஞ்சு வீட்டுக்கு வரச்சொன்னாரு.
இரவு 7 மணிக்கு, கோடம்பாக்கத்துல இருந்த அவங்க வீட்டுக்குப் போனா...
அவரும் அவரோட மனைவி ஹேமாவும் விளக்கு போடாமல், இருட்டுல நடு ஹால்ல உட்கார்ந்திருந்தாங்க!
நான் ஸ்விட்ச் போட்டுட்டு, “என்ன சார் இருட்ல உட்கார்ந்திருக்கீங்க”னு கேட்டேன்.
“வெளிச்சத்தைப் பார்க்கவே பிடிக்கல தம்பி... எனக்கு சர்க்கரை நோய், மனைவிக்கு கிட்னி பெஃய்லியர், டயாலிஸிஸ்... மருத்துவத்தோட போராடிக்கிட்டு இருக்கோம்.  நாங்க ரெண்டு பேருமே காதல் திருமணம் செஞ்சுக்கிட்டதால உறவுகளோட ஆதரவு இல்ல. பேச்சுத் துணைக்கு யாரும் இல்ல. தைரியம் சொல்லவும் ஆளில்ல.  அதான்... ரெண்டு பேருமே தற்கொலை செஞ்சுக்கலாம்கிற எண்ணம் வந்துக்கிட்டே இருக்கு..!  அதுக்கு முன்னாடி விகடன் பாலு சாரோட முகத்தைப் பார்க்கணும்னு நெனச்சுத்தான் உனக்கு போன் போட்டேன். அவரை எப்போ எப்பிடி சந்திக்கலாம்..?”னு கேட்டார்.
நான் பேச வாய் இல்லாமல், அதிர்ச்சியா அவரது மனைவியைப் பார்த்தேன்.
உடனே அவர்,
“காசு பணத்துக்கு அவ்வளவு பிரச்னை இல்லன்னாலும்... உறவுக்காரங்க ஆறுதலுக்குக்கூட வரமாட்டேன்றாங்க தம்பி..!"னு கண் கலங்கினார்.
நம்ம ஆசிரியர் செய்த பல நல்ல காரியங்கள் பற்றியும், கதைகளுக்கு அவர் அனுப்பும் பணத்தை, ‘அள்ளித்தரும் பொற்காசு’ என்றும் உண்மையான பெருமிதத்தோட சொன்னாரு.
“கவலைப்படாதீங்க... நான் ஆசிரியர்கிட்ட காலைல சொல்றேன்”னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு வெளிய வந்தேன்.
ஒருகிலோ ஆப்பிள் வாங்கிக் கொடுத்து நம்ம பாசத்தைக் காட்டி, அவங்களோட தற்கொலை எண்ணத்தை மாத்திறலாம்னு நெனச்சு, பக்கத்துல ரோட்டுக் கடையில ஒரு கிலோ ஆப்பிளும் பிரட்டும் வாங்கிட்டுப் போனேன்.
'“என்ன தம்பீ... வீட்டுக்குப் போகலயா...
அடடே... இங்க பாருங்க... நான் ராத்திரி நேரத்துல வெளிய போய் ஆப்பிலும் பிரட்டும்தான் வாங்கி குவிக்கிறேன்...! வீட்டுக்குக் கொண்டு போங்க!”
என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்..? புரியவில்லை.
வயதான பிறகோ, நோய் வந்த பிறகோ மனதில் ஒரு வெறுமை வந்து சேருமோ! எழுத்தாளருக்கு என்ன வெறுமை..?
மறுநாள்,
காலையில விகடன் ஆபீஸ் போனதும், ஆசிரியர்கிட்ட எல்லாம் சொன்னேன்.
“என்ன எதிர்பார்க்கிறாங்க... சரி... நான் வீயெஸ்வி சார்கிட்ட பேசிக்கிறேன்”னு என்னை அனுப்பிவிட்டார்.
மாலையில்,
ஸ்டெல்லா புரூஸ் எனக்கு போன் செய்து,
“வீயெஸ்வி சார்கிட்டயும் எல்லா விஷயமும் சொன்னேன்.
பாலு சார் 25000 பணம் அனுப்பி வச்சிருக்கார்.
‘பணத்தை விட உங்க முகத்தைப் பார்க்கணும் சார்’னு சொன்னேன்.
’சனிக்கிழமை பொன்ஸீகூட படப்பைக்கு வாங்க’னு சொன்னார். மகத்தான மனுசன்..”னு சொல்லி உருகினாரு.
நம்ம ஆசிரியரும் என்னைக் கூப்பிட்டு, “அவங்களுக்கு கார் அனுப்புறேன். நீங்களும் வந்துருங்க. கேமரா வேணாம்”னு சொன்னாரு.
சனிக்கிழமை அதிகாலையில்
புரூஸையும் அவரது மனைவி ஹேமாவையும் கார்ல அழைச்சுட்டு படப்பைக்குப் போனேன்...
அங்க இருந்த பசும்பச்சையான மரங்களையும், கலர் கலரான பறவைகளையும் பார்த்த ஹேமாவோட முகத்துல அப்படி ஒரு பிரகாசம்!
நிறைய பேசினார்.
ஆனா, ஸ்டெல்லா புரூஸ் மட்டும்,
“நீங்க கொடுத்த பணம் மருந்துகள் வாங்க ரொம்ப உபயோகமா இருந்துச்சு. அதவிட, இந்த உடம்பையும் உயிரையும் எப்படி வெச்சுக்கிறதுனுதான் தெரியல..?” என்று ஒரு கேள்வியோட நிறுத்திக்கிட்டார்.
“முதல்ல இந்த முட்டை தோசையைச் சாப்பிடுங்க... முட்டை சைவம்தான். முட்டையைப் பொறிக்கி எடுக்கிறோம். முட்டையைக் கிள்ளினா கோழிக்கு வலிக்காது.
ஆனால், கீரையைக் கிள்ளி பிடுங்கும்போது கீரைச்செடிக்கு வலிக்கும்... அதுக்கு உயிர் இருக்கு... உணர்வு இருக்கு! அதனால, கீரை அசைவம்!
‘முட்டை சைவம்தான்!’னு ஒரு கட்டுரையை நான் 1956-ல ஆனந்த விகடன்ல எழுதினேன்!”னு நம்ம ஆசிரியர் சொன்னதும்,
உடனே ஸ்டெல்லா புரூஸ்,
“எப்ப இருந்து மனுசன் சைவம் - அசைவம்னு பிரிச்சுப் பார்த்தான்..?”னு கேட்டு, ஆசிரியரோட முகத்தைப் பார்த்தாரு.
“ம்ம்ம்... சரியான கேள்வி கேட்டீங்க...
நீங்க முதல்ல என்கிட்ட எழுப்பின சந்தேகத்துக்கு இப்ப நீங்க கேட்ட கேள்வியேதான் பதில்.
அறிவு!
‘உடம்பையும் உயிரையும் எப்படி வெச்சுக்கிறதுனு தெரியலையே’னு கேட்கிற அறிவு!
அந்தத் தேடல் அறிவு, வேட்டை அறிவு, பசி அறிவு, எந்த சீஸன்ல எது கிடைக்கும்கிற அறிவு, எந்தப் பக்கம் தப்பிச்சு ஓடலாம்கிற அறிவு... அதாவது எப்படியும் உயிர் பிழைக்கலாம்கிற அறிவு! இந்த அறிவுதான் உடம்பையும் வளர்க்குது... உயிரையும் வளர்க்குது..!”
- ஸ்டெல்லா புரூஸிடம் அடுத்த வார்த்தை வரவில்லை.
உடனே ஆசிரியர் என் பக்கம் திரும்பி, “புரியுதா பொன்ஸீ..?”னு கேட்டார்.
பெரியவர்கள் பேசும்போது இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். ‘முட்டை சைவம்தான்னு இதுவரைக்கும் 25 தடவ சொல்லியிருக்கீங்க சார்’ என்றா சொல்வது..?
இங்கிதம் தெரிந்தவன் என்பதால், ஸ்டெல்லா புரூஸின் மனதை மாற்ற நம்ம ஆசிரியர் அவருக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார் என்பதைப் புரிந்து கொண்ட நான்,
“நல்லா புரியுது சார். இந்த விளக்கம் இதுவரை எனக்குத் தெரியாது சார். இதுமாதிரி விளக்கங்களை பள்ளிக்கூடத்துலயே வாத்தியார்கள் சொல்லிக் கொடுக்கணும் சார். ‘உடம்பையும் உயிரையும் வளர்க்கிறது எது’ன்னு என் பையன்கிட்ட சொல்லி வளர்ப்பேன் சார்!”னு சொன்னேன்.
உடனே புரூஸ்,
“எனக்குச் சொல்லித் தந்த வாத்தியாரே, அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சிட்டு வேலைக்கு வந்துட்டாரு. நான் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொடுத்தே ஓஞ்சு போனேன்..”
இப்போது ஸ்டெல்லா புரூஸும் ஹேமாவும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் இடையில் பேசவே இல்லை.
சிறிது நேரத்தில் சென்னைக்குப் புறப்பட இருந்த சமயத்தில்,
நம்ம ஆசிரியர்,
ஒரு அழகான கூண்டை அவர்கள் இருவரின் கைகளில் கொடுத்தார். உள்ளே...
இரண்டு 'காதல் கிளிகள்' (Love Birds).
“இவங்க உங்க கூடவே இருப்பாங்க. இவங்ககூட மனசுவிட்டுப் பேசுங்க. நல்லா பொழுது போகும்!”
- பொன்ஸீ

நன்றி: விகடகவி  ;  நன்றி R  கந்தசாமி, FaceBook 

=============================================================================

1992 ஜனவரியில் திரைக்கு வந்த 'அமரன்' திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள்.  இரண்டுமே S P பாலசுப்ரமணியம் பாடியது.  பிறைசூடன் பாடலுக்கு ஆதித்யன் இசை.  ஹிந்தியின் ஷம்மி கபூர் தமிழில் நடித்த முதல் படம். கார்த்திக், பானுப்ரியா, ராதாரவி நடித்த படத்துக்கு கேமிரா பி ஸி ஸ்ரீராம்.  அவர் கைவண்ணம் பாடல் காட்சியைப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும்.

முதல் பாடல் 'வசந்தமே அருகில் வா ' எனும் பாடல்.

=================================================================================================
இரண்டாவது பாடல் 'சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே எனும் பாடல்.

=================================================================================================

1955 -56 ம் வருடங்களில் விகடனில் வந்த ஜோக்ஸ்....







===============================================================================================================

OTT யில் பார்த்த படம்.


நாய் படத்தைப் பார்த்த உடன் செல்லம் பற்றிய படம்தான் என்று, பார்த்துக்  கண்கலங்கத் தயாராய் படம் பார்க்க அமர்ந்தால், செல்லத்தை அடிப்படையாக வைத்து, பாக்கியராஜ்,  R. சுந்தரராஜன் டைப்பில் ஒரு காதல் கதை.  ரஸ் மற்றும் ஆனா சேர்ந்திருக்கும்போது வாங்கிய மெர்வ் அவர்கள் பிரேக்கப் ஆனதில் டிப்ரஸ் ஆகிறது.  மருத்துவர் அதற்காகவாவது அவர்களை மீண்டும் சேரச் சொல்கிறார்.  நாயை மகிழ்விக்க ரஸ் வெளியூரில் ஒரு நாய் ஹோட்டலுக்கு மெர்வை அழைத்துச் செல்ல ஆனாவும் பின் தொடர்கிறாள்.   
சில பொறாமை, சில தயக்கங்களுக்குப் பின் இருவரும் சேர்ந்தார்களா என்பது கதை.  மனதுக்குள் மறைத்து வைத்திருக்கும் காதலை ஆனாவுக்கு ஏன் வெளிப்படுத்த முடியவில்லை என்பதும் கதையில் ஒரு பகுதி.   ஆங்கிலப்படத்தில் ஒரு தமிழ்ப்படக் கதையைப் பார்க்கலாம்.  தமிழில் வசனத்துடன் கிடைக்கிறது!

133 கருத்துகள்:

  1. இன்றைய தலைப்புகள் மிகுந்த இன்டெரெஸ்டிங்.

    நிறைய படிக்கும்படி இருக்கு. ரமணன் பகுதி முக்கால் வரை முடித்துவிட்டேன்.

    புத்தகத் திருவிழாவுக்குப் போய் புத்தகங்கள் வாங்கிவருவதைச் சடங்காக ஆக்கிவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..

      ரமணன் பேட்டி பார்ப்பதற்கு சுட்டியும் இணைத்த நினைவு!

      சடங்கு இல்லை. அண்ணன் அனத்தினார் என்று அவருடன் போனேன். பாருங்கள் புத்தகங்கள் கம்மியாக வாங்கி இருக்கிறேன்!

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...  நீங்க பழைய மாதிரி லிங்க் என்று கொடுத்து கீழே httpsல்/ என்று வரும் வரிகளை எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!!  ஹிஹிஹி நான் மாடர்னுக்கு மாறி ரொம்ப நாளாச்சாக்கும்!  அந்தப் பகுதியின் தலைப்பை க்ளிக் செய்யுங்கள்.

      நீக்கு
  2. ஓடிடி சீரீஸ் அறிமுகம் நன்று. இரண்டு நாட்களுக்கு முன் இந்த சீரீஸ் பற்றி எங்கோ படித்தேன். பார்க்கணும். நல்ல சீரீஸ் படங்கள் அறிமுகம் தொடரணும்.

    யாரேனும் திரில்லர் அல்லது சுவாரசியமான மலையாள சீரீஸ் படங்கள் பற்றி எழுதுவாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் த்ரில்லர் ரசிகன். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்! நான் அவ்வப்போது கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறேன் நெல்லை...!

      நீக்கு
    2. ஸ்ரீராம் +1 எனக்கு த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், கோர்ட் கதைகள் ரொம்பப் பிடிக்கும்.

      நெல்லை ஸ்ரீராம் அவ்வப்போது பகிர்கிறார். எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதாவது ஓடிடி வாய்ப்பு, கண்டிப்பாக தேடித் தேடிப் பார்த்து சொல்லலாம்தான்!!!!!! ஆனா மீக்கு இன்னும் அது கைவசப்படவில்லை...

      கீதா

      நீக்கு
    3. வாங்க கீதா... இப்போதெல்லாம் ஓ டி டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்!

      நீக்கு
    4. மொபைலுக்கு, தொலைக்காட்சிக்கு, பலவித ஓடிடிக்களுக்கு என்று மிக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருப்பதைக் கவனித்தீர்களா? பத்து வருடங்களுக்கு முன்பு இந்தச் செலவே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தோம்.

      நீக்கு
    5. அப்போ தங்கம் என்ன விலை? இப்போது போல் வீட்டில் உட்கார்ந்த படங்கள் பார்க்க முடிந்ததா?!!

      நீக்கு
    6. நான் மொபைல் பயன்பாடும் குறைவு. ஓடிடி எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்காருவதே இல்லை. படங்களை எல்லாம் பார்த்தே ஆகணும்னு தோணுவதும் இல்லை. என்னமோ ஏன்னு தெரியலை.










      நீக்கு
    7. தங்கம் விலையை மோதி தான் உயர்த்திட்டார்னு ஒரு வாரமாக முகநூலில் ஒரே புகார்கள், மோதியைத் திட்டிப் பதிவுகள். பொருளாதாரம் பலவீனமாகி இருக்குனு புலம்பல். ஹிஹிஹி!

      நீக்கு
    8. // படங்களை எல்லாம் பார்த்தே ஆகணும்னு தோணுவதும் இல்லை. என்னமோ ஏன்னு தெரியலை. //

      பார்த்தே ஆகணும்னு இல்லைதான்.  ஆனால் பார்க்காமல் ஏன் விடணும் என்றுதான்...!

      நீக்கு
    9. யார் உசாதாரங்களோ..  தங்கம் விலை கவலையை அளிக்கிறது.  சரியா அடுத்த கல்யாணம் வேற வருது..

      நீக்கு
  3. வழக்கம் போல கனமான பதிவு..
    சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா. பதிவு கனமா?! ஆஹா...

      நீக்கு
    2. பின்ன என்ன ஶ்ரீராம்? தலையணை சைசுக்கு புத்தகங்கள் படங்களைப் பகிர்ந்தால் பதிவு கனக்காதா?

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... அதை நான் யோசிக்கவில்லை பாருங்க

      நீக்கு
    4. என்கிட்டேயும் திருமுறைப் புத்தகம் கனமாகத் தான் இருக்கு. பரிசாக வந்தது. தெய்வத்தின் குரல் மட்டும் நான் ஆன்மிகப் பொருட்காட்சியில் வாங்கிக் கொண்டேன். நான் போன/பார்த்த/வாங்கிய ஒரே புத்தகக் கண்காட்சி அது தான். ஏழு தொகுதிகளும் கனமாகத் தான் இருக்கும்.

      நீக்கு
    5. தெய்வத்தின் குரலை ஆன்மீகப் பொருட்காட்சியில்தான் வாங்கணுமா?  சாதா பொருட்காட்சியிலும் வாங்கலாமே! அபப்டிக் பார்த்தா சமையல் புத்தகங்களை சமையல் கண்காட்சியில்தான் வாங்கணும்!!  ஹிஹிஹி கோச்சுக்காதீங்க கீதா அக்கா..  சும்மா சோக்கு!

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா..  சில சமயம் இப்படி நடந்து விடுகிறது!!

      நீக்கு
  5. ஹஹாஹா ஸ்ரீராம் நானும் அப்படி மனதிற்குக் கட்டுப் போட்டுக் கொண்டுதான் போவது வழக்கம். மூன்று முறைதான் போயிருக்கிறேன். சென்னையில் இருந்தப்ப. வாங்குவதற்குப் பேராசை எழும். ஆனால் ஒரே ஒரு புத்தகம் சுஜாதாவினுடையது சின்ன நாவல் புத்தகம்...அதுவும் தனியாகப் போனதால் வாங்கினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று முறை மட்டும் போன உங்களுக்கே அப்படி என்றால், வருடா வருடம் சென்று வரும் எனக்கு எப்படி இருக்கும் பாருங்கள்!

      நீக்கு
  6. அனுமதி இலவசம்னுட்டு அப்ப டிக்கெட் எடுத்தா குலுக்கல்? இதுக்கு எதுக்கு எடுக்கணும்? மக்கள் எடுத்திருப்பாங்களான்ன? குலுக்கலில் பரிசு என்பதற்கு ஏமாறுவாங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. டிக்கெட்டுக்கு காசு கிடையாது. ஒரு சிறிய பேப்பர் தருவார்கள். அதில் அச்சிடப்பட்டிருக்கும் விவரங்களுக்கு நாம் நம் பெயர் விவரங்களை எழுதி, குலுக்கல் செய்வதற்காக வைத்திருக்கும் உண்டியலில் போட வேண்டும்.

      நீக்கு
  7. கணினியில் இருந்து கமெண்ட் போட முடியவில்லை எங்கள் தளத்தில் மட்டும் .அனுமதி கிடையாது என்றே வருகிறது... எனவே பதில்கள் மொபைலில் இருந்து.... மற்ற தளங்களில் கணினியில் இருந்து கமெண்ட் கொடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. போரும் சமாதானமும் இருக்கிறதே பாலசிங்கம் எழுதியது...

    முத்துக்குமார் அவரின் கவிதை சூப்பர். ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப்போட்டியில், ரத்னமாலா அவங்க எழுதி, பரிசு பெற்ற கதை நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லும் புத்தகம் போரும் சமாதானமும் கிடையாது என்று நினைக்கிறேன் கீதா. அது சாத்தானின்........... என்று வர வேண்டும். முத்துக்குமார் கவிதை அதை நினைவு படுத்துகிறது என்று தான் நானும் உங்களிடம் சொல்லி இருந்தேன்!

      நீக்கு
    2. ஓ சரி சரி....

      ஆமாம் நீங்களும் சொல்லியிருந்தீங்க....

      கீஹா

      நீக்கு
  9. குலுங்கா நடையில்!!!!!!!!!!!!!!!!!!! வித்தியாசமாக இருக்கிறது. குலுங்கா நடையில் எழுதிய புத்தகங்களாக இருக்குமோ!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலுங்கா நடையில் இல்லை கீதா.. குலுங்கா நடையன்!

      நீக்கு
    2. ஆமாம் குலுங்கா நடையன்....குலுங்கா நடையில் எழுதியிருப்பாரோன்னு! முதலில் யன் னுக்குப் பதிலா யில் வந்திருச்சு மனசுல ஓடியது அப்படியே வந்துவிட்டது...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ​குலுங்கா நடை என்ற சொற்தொடர் patent உரிமை கோணங்கியுடையது. மதினிமார்கள் கதையில் தகர டப்பா பஸ் குலுங்கா நடையில் சென்றது என்று எழுதியிருப்பார்.

      Jayakumar

      நீக்கு
    4. ஓ... நான் அறிந்திலேன். ஒருவேளை அவர் ஸ்டால் தானோ என்னவோ அது!

      நீக்கு
    5. நடையன் .. செருப்பு. குலுங்கா நடையன்... சாஃப்ட் செப்பலாக இருக்குமோ?

      நீக்கு
    6. செருப்பு குலுங்குமா என்ன! ஸ்டூல் போல ஹை ஹீல்ஸ் அணிந்து சென்றால் இடறலாம்... விழலாம்!!

      நீக்கு
    7. மதினிமார்கள் கதையில் தகர டப்பா பஸ் குலுங்கா நடையில் சென்றது//

      ஜெ கே அண்ணா இந்த வரி எனக்கு நன்றாக நினைவு இருக்கு ஆனா பாருங்க அது கோணங்கியின் பேட்டன்ட் என்று சொல்ல வரவில்லை. அப்படினா அது கோணங்கியின் புத்தகங்களாக இருக்குமா?

      கீதா

      நீக்கு
    8. மதினிமார்கள் கதையில் தகர டப்பா பஸ் குலுங்கா நடையில் சென்றது//

      ஜெ கே அண்ணா இந்த வரி எனக்கு நன்றாக நினைவு இருக்கு ஆனா பாருங்க அது கோணங்கியின் பேட்டன்ட் என்று சொல்ல வரவில்லை. அப்படினா அது கோணங்கியின் புத்தகங்களாக இருக்குமா?

      கீதா

      நீக்கு
    9. தமிழ்வாணன் தான் முதலில் செருப்புக்களை "நடையன்கள்" என அறிமுகம் செய்தார்.

      நீக்கு
    10. // தமிழ்வாணன் தான் ...//

      ஆமாம்.  எனக்கும் ஞாபகம் இருக்கு!

      நீக்கு
  10. /// கைது செய்ய காவலரை 
    அனுப்பாவிட்டால் 
    கனவுகளை சொல்வதில் 
    தயக்கமில்லை!. ///

    அதானே முக்கியம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு பயந்து தான் உடனே நான் அதை பேஸ்புக்கில் போடவில்லை!!!

      நீக்கு
  11. என்றும், எப்பவும், காலத்திற்கும் சுஜாதா!!!!! அதுதான் அவர்! நேற்று அவரது கதை ஒன்று வாசித்தேன்....இதன் பெயரும் கொலை....கதையின் தொடக்கத்திலேயே கொஞ்ச நேரத்திலேயே சஸ்பென்ஸ் அந்த ஆள் யாரென்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் அவர் எழுத்து சுவாரசியம்.

    அது போல உங்களில் ஒருவர் கணேஷ், கதைகளில் 4 வாசித்து அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு விடை பார்க்காமலேயே விடை சொல்ல முடிந்தது. விடைகளில், க்ளூக்களில் ஒன்று அல்லது மிஞ்சிப் போனால் இரண்டுதான் கொடுக்கப்பட்டிருந்தது. நமக்கு இன்னும் கூடுதல் க்ளூக்கள் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனைக்கெத்தனை படிக்கிறோமோ, அத்தனைக்கத்தனை எழுத்தும் வசப்படும் இல்லையா!

      நீக்கு
    2. நிச்சயமாக.....எழுதும் ஆர்வமும் இருக்க வேண்டுமே. எல்லா வாசகர்களும் எழுதுவதில்லை. எழுதுபவர்கள் எல்லாரும் ஆழ்ந்த வாசகர்களாக இருப்பதில்லை. ஆனால் இரண்டும் இருப்பவர்களுக்கு நிச்சயமாக வாசிப்பு இருந்தால் எழுத்து வசப்படும்.

      கீதா

      நீக்கு
    3. கரெக்ட்டா சொன்னீங்க கீதா.

      நீக்கு
  12. புத்தகம் அடுக்கி வைத்திருக்கும் அழகு சூப்பர். சுற்றி விட்டுப் பார்க்கறாப்ல ஒரு ஸ்டாண்ட் இருக்குமே அது போல இருக்கு..

    அது என்ன கணேஷ்பாலா தொப்பி ஸ்ரீராம்? நம்ம எழுத்தாளர் நட்பு கணேஷ்பாலா போட்டுக்குவாரா?

    கைவினைப்பொருட்கள் கடை மனதைக் கவர்கிறது. என்ன அழகா முடைஞ்சிருக்காங்க! டப்பாக்கள், கூடைகள், விசிறி என்று!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பவுமே புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள்.  பாலகணேஷ் இப்படித்தான் தொப்பி போடுவார்.  அவரே பக்கத்தில் வந்து அந்த சமயம் பார்த்து நின்றது ஆச்சர்யம்.  கலர்ஃபுல் கைவினைப்பொருட்கள்.

      நீக்கு
  13. நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாழன் புத்துணர்ச்சிப் பெற்றிருக்கிறது.
    கவிதை பிரமாதம்! ஜோக்குகளும் நன்றாக இருக்கின்றன.
    மனைவி இறந்த பிறகு ஸ்டெல்லா ப்ரூஸ் தற்கொலை செய்து கொண்டார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் follower ஆன இவர் மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொண்டார். மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும், வருத்தமும் அளித்த மரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுக்கா.. நன்றி. ஆனால் எது ஏன் நன்றாயிருக்கிறது, நன்றாயில்லை என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. மனைவி இறந்த பிறகு.... இது தவறான செய்தியைத் தருகிறது. மனைவி உடல் நலச் செலவுக்கு பணம் இல்லை. விகடன் பாலசுப்ரமணியம் கொஞ்சம் உதவினார் மனைவி இறந்தபிறகு பொருளாதாரம் தனிமை வாழ்க்கை இவற்றை எண்ணி அச்சம் கொண்டு இறந்துபோனார் பாவம்.

      நீக்கு
    3. பானுமதியின் கருத்தைக் "கன்னாபின்னா"வென ஆதரிக்கிறேன். உண்மை அது தான்.

      நீக்கு
    4. மனைவி இறந்தபிறகு என்றுதான் நானும் படித்தேன்.  உண்மையும் அதுதான்.  தனிமை.  வெறுமை.

      நீக்கு
  14. புத்தகக் கண்காட்சி....
    80 களில் நான் வாங்கிய பல புத்தகங்கள் இன்றைக்கு பொல பொல என்று ஆகி விட்டன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ..  அபப்டியா?  ஆனால் இப்போதெல்லாம் புத்தகங்கள்  காகிதங்களில் வருகிறது



      .
      என்றுதான் நினைக்கிறேன்!!!

      நீக்கு
  15. Taskari சீரீஸ் பற்றி பானுக்கா என்னிடம் சொன்னாங்க. யுட்யூபிலும் கிடைக்க சான்ஸ் இருக்கு என்று. யுட்யூபில் இருக்கிறது. பார்த்துவிடுவேன்...

    அறிமுகப்படுத்தியது நல்லாருக்கு, பானுக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   அது யு டியூபிலும் வருகிறதா?  Enjoy...

      நீக்கு
    2. ஹாஹாஹ....யுட்யூப்ல இருக்கு அதே பெயர்...அதே டைட்டில் எல்லாமும். ஆனால் அது இந்தப் படம் இல்லை. இப்படி சில சானல்கள் பெயரை மட்டும் போட்டுவிட்டு உள்ளே வேற படங்கள் கொடுப்பதுண்டு பொய் சானல்கள். அப்படித்தான் இதுவும். டெய்லி மோஷனில் இருக்கு ஆனால் சார்ஜ் கேட்கும் சீரிஸில் ஒன்று.

      ஸ்ரீராம் பொதுவாக, வெப் சீரீஸ் யுட்யூபில் போடுவதில்லை. படங்கள் வேணா வரலாம்...இல்லை டப்ட் படங்கள் இருக்கும். வெப் சீரீஸ் வருவதில்லைன்றதுதான் நான் அறிந்து.

      இதிலும் ஏமாந்தேன்.

      கீதா

      நீக்கு
    3. அச்சச்சோ... வாட்ட பிட்டி!

      நீக்கு
  16. ரமணன் - பாஸ்கி வீடியோ பார்த்திருக்கிறேன். நிறைய சுவாரசியமான தகவல்கள்.

    //ஓரளவுக்கு ஏப்ரல் பதினைந்திலிருந்து அக்டோபர் 15 வரை மழை வருமா என்றால் நீங்கள் மேற்கேதான் பார்க்கணும். //

    மகனின் நினைவு வந்தது. அவனுக்கு இதிலும் ஆர்வம் உண்டு. இங்கிருந்த போது என்னிடம் திசை, மேகக்கூட்டங்களின் நகர்வு இதைக்காட்டிச் சொல்வான். அவனும் கூர்ந்து கவனித்த காலம் அது. இப்ப ஸ்னோ பற்றி குளிர் பற்றிச் சொல்கிறான் அப்பப்ப...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணன் அப்போதெல்லாம் ரொம்ப பேமஸ்..   இப்போவும் அந்த பதவியில் வேறு ஆட்கள் வருகிறார்கள்.  இவருக்கிருந்த மவுசு அவருக்கில்லை!!!

      நீக்கு
    2. ஆமாம்....அவருக்கு இருந்த மவுசு அதன் பின் இவரைப் போல் யாரும் பேசப்படவும் இல்லை என்றே எனக்கும் தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    3. என்ன..  அந்த ஐடி காணாமல் போச்சா?!!

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம். அப்பப்ப காணாமல் போய்விடுகிறது,

      கீதா

      நீக்கு
  17. ரமணனை எல்லோரும் அப்ப ஓட்டுவார்கள். ஆனால் பாருங்கள் மனுஷர் எவ்வளவு அழகா பேசுகிறார் இல்லையா? பார்க்கவும் இளமையாக இருக்கிறார்!!! Handsome! அழகான களை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ஜாலியாதான் ஓட்டுவார்கள் அவரை.

      நீக்கு
    2. மேற்கு மாம்பலத்தில் தம்பி வீட்டுக்குப் பக்கத்தில் தான் இவர் வீடும் இருந்தது. இப்போவும் அங்கேயே இருக்காரானு தெரியலை.

      நீக்கு
    3. அங்க இருக்காரோ இல்லையோ, எல்லார் நினைவிலயும் இருக்கார்..  ஹிஹிஹி...

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா வணக்கம் இணைந்து பிரார்த்திப்போம்

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. புத்தக கண்காட்சி படங்கள், அதைக்குறித்த விமர்சனங்கள் நன்றாக உள்ளது. நாங்கள் முன்பு ஒருகாலத்தில் சென்னையிலிருநதும் இது போன்ற இடங்களுக்குச் சென்றதில்லை. ஒருவேளை அப்போது இந்த மாதிரி கண்காட்சிகள் வரவில்லையோ என்னவோ.? (வந்தாலும்...!! என மனசாட்சி இடிக்கிறது. உண்மைதான் எனக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பு உங்களுடையதைப்போல அவ்வளவு நெருக்கம் இல்லை.) நீங்கள் நல்ல புத்தகங்களை வாங்கியிருப்பதற்கு வாழ்த்துகள்.

    கவிதை அருமை. வரிகளை மிகவும் ரசித்தேன்.
    /வெளியில் சொல்ல
    மதிக்கப்படும் உணர்வுகள்
    பார்த்து, ஆபத்தில்லை என்றால்
    சொல்ல
    இன்னும் இருக்கின்றன கனவுகள். / அருமை. இது போன்ற எல்லாமே கனவில்தான் நம்மாலும் காண இயலும். முகநூலில் வெளியிட தயங்கும் நீங்கள் இங்கு வெளியிடலாமா..! என யோசிக்கிறேன். இது போன்ற கவிதைகளை இங்கும் யாராவது படித்து விட்டால்.? என்ற பயங்களும் எனக்கு எப்போதும் தோன்றும். மீண்டும் வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகக் கண்காட்சி பல வருடங்களாக நடக்கிறது. நீங்கள் சென்றதில்லை என்று நினைக்கிறேன். கவிதை இங்கு வெளியிட்டு இருப்பதற்கு பயமுறுத்துகிறீர்களே.... !!

      நீக்கு
  20. ///புத்தகங்கள் இன்றைக்கு பொல பொல
    என்று ஆகி விட்டன....///

    ஒரு வார்த்தைக்கு இப்படி எழுதினால் பிடித்துக்
    கொண்டு விட்டீர்களே...

    அவையெல்லாம் ராணி முத்து மாதிரியான மலிவு விலை பதிப்புகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.... ஹா.... அப்படி இல்லை செல்வாண்ணா... என்னிடமுள்ள பைண்டிங் புத்தகங்கள் சில புத்தகங்கள் பொடிப்பொடியாக உதிர்கின்றன. அதனால் அப்படி இருக்குமோ என்று நினைத்து சொன்னேன்.

      நீக்கு
  21. ​புத்தகக் காட்சியா? புத்தகக் கண் காட்சியா? காட்சி எனும்போதே பார்வைக்காக என்ற அர்த்தம் வந்து விடுகிறதே. நடுவில் கண் எதற்கு? புத்தகங்கள் வாங்குவது பெரிதில்லை, வாசிப்பது தான் முக்கியம். தற்போது தலைமைச் செயலகம் (மூளை) தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் படிப்பதும் நின்று விட்டது.

    டும் டும் கவிதை கவிதையாக தோன்றவில்லை. மனதில் தோன்றியதை அப்படியே கூறு கட்டி வைத்தது போல் இருக்கிறது.

    ரமணனின் முகத்தில் இருந்த அந்த confidence, மற்றும் ஆசிரியத்தன்மை தற்போது இல்லை. பரிதாபமாக இருக்கிறது.

    பா வெ மேடம் ஹிந்தி சீரியல் விமரிசனத்திலும் புகுந்து விட்டார். ஹிந்தி ஆகையால் கலந்துரையாட யாரும் வரமாட்டார்கள்.
    ஜோக்குகள் பரவாயில்லை ரகம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC sir .. . nஇந்தப் புத்தகக் காட்சி புத்தகக் கண்காட்சி குழப்பங்கள் எப்போதுமே உண்டு. புத்தக விற்பனை திருவிழா என்று போடுவதில்லை!! ஏனோ தெரியவில்லை!! பாதிப்பேர் வெறுமனே பார்த்து விட்டு செல்வதால் இருக்கலாம்! ஆனாலும் லாப கணக்கு தான் கொடுக்கிறார்கள்.

      அதை கவிதை என்று சொல்லலாம், ஏக்கங்களை வெளிப்படுத்தி இருக்கிறோம், அவ்வளவுதான். கவிதையாக இருந்தால் என்ன வசனமாக இருந்தால் என்ன.... நிறைய சீரியல்களுக்கு தமிழ் வசனங்கள் கிடைக்கின்றன

      நீக்கு
  22. புத்தக விலை ஐநூறு ரூபாய்னா அதிகமாத் தெரியும். ஆனால் அந்தப் பணத்திற்கு ஹோட்டலில் உணவு உண்டால் அதற்கு ஆயுள் இல்லை. கண நேர சந்தோஷம். ஆனால் புத்தகம் (நல்ல புத்தகம். எனக்கு மனுஷன் வையிர போன்றவர்களின் தலையாணி புத்தகங்கள் அலர்ஜி) காலாகாலத்துக்கும் நம்மிடம் இருக்கும். நம் உடைமையாகப் பாவிப்போம். இந்தச் சிறப்பு உடைக்குக்கூடக் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நினைத்துதான் ஒவ்வொரு செயலையும் செய்வது!!

      நீக்கு
  23. ரமணன் புகழ் பெற்றது, நம்மிடம் அப்கோ டெக்னாலஜி இல்லாத்தால். இப்போல்லாம் கைக்குள் உலகம் இருப்பதால் செய்தி வாசிப்பவர், வானிலை சொல்பவர் என எதையுமே நாம் நினைவில் கொள்ளும் அவசியம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவு அப்போதும் அப்படித்தானே?

      நீக்கு
    2. ரமணனைப் போலவே அவர் உதவியாளர் ஒருத்தர் பாலசந்திரனோ என்னமோ பெயர். அவரும் கொஞ்சம் பிரபலம் ஆனார்.

      நீக்கு
    3. பாலச்சந்திரன்தான்.  கொஞ்சூண்டு.

      நீக்கு
  24. கவிதை பெரும்பான்மையோர் மனதில் ஓடும் கனவுகள் சூப்பரா சொல்லிட்டீங்க. ஃபேஸ்புக்கை விட, ப்ளாக் கொஞ்சம் பாதுகாப்புன்னு!!!!!!!! இங்க சொல்லிட்டீங்க போல!

    நல்லாருக்கு ஸ்ரீராம். இன்னும் கனவுகள் நீளும். அட்லீஸ்ட் இத்தனையும் செஞ்சாலே போதுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அடுத்து வர்ற அரசாங்கமாவது ஒழுங்கா இருக்கும்ங்கறதுக்கும் கியாரண்ட்டி இல்லையே...

      நீக்கு
  25. ஆவி - பாலசுப்ரமணியம் அவர்கள் ஸ்டெல்லா புரூஸ் இந்த சந்திப்பை வாசித்த நினைவு இருக்கு. எங்கு என்று சரியாக நினைவில்லை. ஸ்டெல்லா ப்ரூஸ் மறைந்த பிறகு ஆவியிலேயே வந்திருக்குமோ அப்படி ஏதோ ஒரு டயத்தில் எப்படியோ வாசித்த நினைவு.

    ரொம்ப வேதனையான வாழ்க்கை புரூசின் கடைசி நாட்கள் வாழ்க்கை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தியைப் படித்து திடுக்கிட்ட ஞாபகம் இருக்கு.

      நீக்கு
  26. முதல் பாடல் கேட்டது லைட்டா நினைவு. பாலைவனம் போன்று ஒரு மலைப்பகுதி வரும் இடம் அட்டகாசமான படப்பிடிப்பு அப்புறம் வருவதிலும் லைட்டிங் ல தெரியும் பிசி ஸ்ரீராமின் கைவண்ணம்.

    ரெண்டாவது பாட்டும் லைட்டாகத்தான் நினைவு.

    லைட்டிங் பார்க்கறப்ப மணிரத்னம் படங்கள் பார்க்கறாப்ல இருக்கு ஏன்னா மணியின் சில படங்களில் கேமரா பி சி ஸ்ரீராம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் ஒரு படம் தொலைக்காட்சியில் பார்த்தேன். படம் பெயர் நினைவில் இல்லை. அதில் நடித்த நடிகையை மட்டும் "தல" அஜீத்தின் காதலி என்பார்கள். பெயர் மறந்துவிட்டது. தமிழ் ராணுவ அதிகாரி ஒருவரின் பெண். நடிப்பு நல்லா இருக்கும். ஆனால் சோபிக்கவில்லை. ஸ்ரீராம் படத்தில் அவர் தான் கதாநாயகி என நினைவு. படம் பெயர் திருடா திருடாவா? சரியாத் தெரியலை.

      நீக்கு
    2. ஸ்ரீராமின் ஒரே மகள் விபத்திலோ தற்கொலை செய்து கொண்டதாலோ இறந்து போனது தான் எப்போவும் நினைவில் வரும்/வருது. :(

      நீக்கு
    3. யாரைச் சொல்றீங்கன்னு ஞாபகம் இல்லை. பெண் மரணம் லேசா ஞாபகம் இருக்கோ...

      நீக்கு
    4. பாடல்களை ரசித்தீர்களா கீத்தாரங்கன்?

      நீக்கு
    5. மன்னிக்கவும். குரல் வழி டைப்பிங்கில் அழுத்தம் திருத்தமாக ஒரு 'த்' வந்துவிட்டது

      நீக்கு
    6. திருடா திருடா படத்தின் அந்த நடிகை பெயர் ஹீரா ராஜகோபால். நன்றாக இருப்பார். அஜித்தை ஒரு தலைப்பட்சமாகக் காதலித்ததாகச் சொல்லுவார்கள். அதே சமயம் அஜித் ஷாலினியுடன் ஏதோ ப்டத்தில் (அமர்க்களம்?) நடித்த சமயம் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டார் என்றும் சொல்லுவார்கள். கிட்டத்தட்ட ராஜேஷ் கன்னா/அஞ்சு மஹேந்துரு ஜோடி பிரிஞ்சாப்போல். அஜித்தும் ஹீராவும் பிரிந்து அஜித்/ஷாலினி கல்யாணமே செய்து கொண்டார்கள்.

      நீக்கு
    7. google கொடுத்தது.

      நீக்கு
  27. ஆவி ஜோக் முதல் ஜோக் சிரித்துவிட்டேன்!!!!!

    மாம்பழம் வாங்க குட்டிப்பையனின் டெக்னிக்கை ரசித்தேன்!

    திருவனந்தபுரத்தில் டூட்டோரியல் காலேஜ் ரொம்பப் பிரசித்தி. இப்ப எப்படின்னு தெரியலை.

    ஒருகாலத்துல மாப்பிள்ளை அழைப்புக்கார் ரொம்ப டிமான்ட்!! இப்பலாம் வேறு மாதிரி ஆகிடுச்சு இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மெர்வ் படம் பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது. மெர்வின் முகபாவங்களைப் பார்ப்பதற்காகவே!!

    ஒன்று தெரியுமோ? உங்களுக்குத் தெரியாமல் இருக்க சான்ஸ் இல்லை, ஸ்ரீராம். இருந்தாலும் இப்படி ஒன்று சொல்லிப்போம்!!!

    சென்னையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பன்னாட்டு படங்கள் விழாவில் பல படங்கள் பார்த்தப்பதான் தெரிந்தது எல்லா நாடுகளிலும் நம்ம ஊர்ப்படங்கள் போல எடுக்கிறார்கள் என்று. சென்டிமென்ட்ஸ், உணர்வுகள், குடும்பக்கதை என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... நமக்கு அல்லது எனக்கு செய்திதான்!

      நீக்கு
  29. இதுவரை புத்தகக் கண்காட்சியே போனதில்லை. நம்மவருக்கு பயம். உங்கள் கண்காட்சி பற்றிய விமரிசனமும் படங்களும் நன்று. பானுமதி விமரிசனம் செய்திருக்கும் படம் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தக் கிழமைக்கு இவங்க பங்களிப்பு எனத் தீர்மானம் செய்திருக்கீங்க போல. ரமணன் அவர்களின் விபரமான பேட்டி தேவையான ஒன்று.

    பதிலளிநீக்கு
  30. நீங்கள் விமரிசனம் செய்திருக்கும் படமும் நன்றாக இருக்கும் போல் தான் தெரிகிறது. நல்லவேளையாக உங்கள் கவிதையை முகநூலில் பகிரவில்லை. இங்கே பகிர்ந்திருப்பதும் கொஞ்சம் கவலையைத் தான் தருது. எங்க பொண்ணு என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அரசியல் சார்ந்து எதையும் எழுதிடாதே, விமரிசனம் செய்துடாதே என்று. நானும் கவனமாக்த் தான் இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்காவும் பயமுறுத்துகிறார் ; நீங்களும் பயமுறுத்துகிறீர்கள்.
      எடுத்து விடவா? கே ஜி ஜி இதை பேஸ்புக்லையே போடலாம் என்று சொன்னார்.

      நீக்கு
    2. உண்மைதான் என்றாலும் இந்தக்காலத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் அதை நீக்குவதே நல்லது. :( இது போல நானும் நிறையக் கட்டுரைகள் எழுதிட்டுப் பின்னர் போடவில்லை. எதுக்கு வம்பு என்னும் எண்ணம் தான்!

      நீக்கு
  31. நல்ல ;வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்ட நபர் என ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களைச் சொல்லலாம். ஏதோ மன நோய் என நினைக்கிறேன். கடைசியில் தற்கொலை பண்ணிக்கொண்டு தூக்கில் தான் தொங்கினார்னு நினைப்பு. நிச்சயமாகச் சாதாரண மரணம் இல்லை. மனோ தைரியம் இல்லாத கோழை. கதைகளோ, நாவல்களோ எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. ஆனாலும் விகடனில் அடிக்கடி அல்லது தொடர்ந்து எழுதினார்னு நினைக்கிறேன். மரபு மீறிய உறவுகள் குறித்தே அதிகம் எழுதுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய கதைகள் இரண்டு படித்திருக்கிறேன். ஆனால் நினைவில் இல்லை.

      நீக்கு
  32. கார்த்திக் (முத்துராமனின் பிள்ளை) நடிப்பு எனக்குப் பிடிக்கும். அநாயாசமாக நடிப்பார். (என் கருத்து) மற்றபடி இந்தப் படங்கள் எதுவும் பார்த்ததாக நினைவில் இல்லை. பானுப்ரியா/மமூட்டியுடன் ஜோடியாக நடித்த ஒரு படம் (பாலசந்தரோ?) பிடிக்கும். அதுக்கும் பெயர் அமரனோ/அழகனோ! நினைவில் இல்லை. அதில் இருவர் நடிப்பும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் படம் அழகன். எனக்கும் கார்த்திக் நடிப்பு பிடிக்கும்.

      நீக்கு
    2. எனக்கும் கார்த்திக் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  33. தொடர்ந்து கொஞ்ச நாட்களாக விகடன் ஆசிரியர்கள் குறித்த செய்திகளே இடம் பெறுகின்றன. வாசனின் மகன் பாலசுப்பிரமணியம் பறவைகளின் காதலர். சலீம் அலிக்கு அடுத்தபடியானு சொல்லலாம். அதான் பறவைகளைப் பரிசாக அளித்திருக்கார். ஆனால் அதன் மதிப்புப் புரியாதவங்களுக்கு! :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவர் பல்கலை வித்தகர். இந்த செய்திகள் எதேச்சையாகத்தான் இடம்பெறுகின்றன. சமீபத்தில் அவருடைய பிறந்த நாளோ, மறைந்த நாளோ வந்தது. அதை ஒட்டி இணையத்தில் வெளியானதை எடுத்தது.

      நீக்கு
  34. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  35. புத்தக கண்காட்சி பற்றிய பதிவு அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பனை ஓலை பொருட்கள் அழகாய் இருக்கிறது.

    புத்தகங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் ரசனைக்கு ஏற்ற மாதிரி பரிசளிக்க வாங்கலாம்.

    புத்தக கண்காட்சிக்கு போனால் நாங்கள் அப்படித்தான் வாங்கி வைத்துக் கொள்வோம். பன்னிருதிருமுறை புத்தகங்கள் தர்மபுர ஆதீனம் போட்ட புத்தகங்கள் நிறைய வாங்கி சாரின் அண்ணா உறவுகளின் மணி விழா சமயம் பரிசளித்தார்கள். வீடுகளில் திருமுறைகள் இருக்க வேண்டும் என்று இல்லாதவர்கள் வீட்டுக்கு பரிசளித்தார்கள்.

    பெரிய கனமான புத்தகமும் இருக்கிறது எங்கள் வீட்டில் மாமியார் மேஜை மேல் வைத்து கொண்டு படிப்பார்கள்.

    பன்னிரு திருமுறை பாராயணம் என்று ஆனி மாதம் ஆரம்பித்து அடுத்த வருட ஆனிக்குள் முடிப்பார்கள் பன்னிரு திருமுறையும் , மாமியார் போல என் கணவரும் , அவர்கள் அண்ணாவும் அப்படி படிப்பார்கள் .

    பதிலளிநீக்கு
  36. பானுமதி வெங்கடேஸ்வரன் பட விமர்சனம் நன்றாக இருக்கிறது. முன்பு குட்டி பத்மினி இது போன்ற சீரியல் எடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. குட்டி பத்மினி தன்னுடைய சீரியல் பற்றி நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார். அதுதான் தொலைகாட்சியில் வந்த முதலி தொடராம். நான் பார்த்ததில்லை.

      நீக்கு
  37. //வீட்டைச் சுற்றி சிமெண்ட் போடக்கூடாது. மழைநீர் சேகரிப்பு என்பதை இங்கு யாரும் பெயரளவில்தான் வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் கூழாங்கற்களாவது போடவேண்டும். //

    ரமணன் அவர்கள் சொன்னதை கடைபிடித்தால் நல்லது.
    வீட்டை சுற்றி சிமெண்ட் பிளட்பார்ம் தான் போட்டு வைக்கிறோம்.
    ரமணன் நிறைய பயனுள்ள விஷ்யங்கள் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்று ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்தவர்கள் ஏராளம். பேருக்கு ஏதோ ஒன்று போட்டு வைத்து ஏமாற்றியவர்களும் ஏராளம் அதனால் தங்களுக்கு தான் நஷ்டம் என்று அவர்கள் உணரவில்லை.

      நீக்கு
  38. ஸ்டெல்லா புரூஸுக்கு காதல் கிளிகள் பரிசளித்தார் விகடன் ஆசிரியர்
    என்றதும் மேலும் வருத்தம் தான் ஏற்படுகிறது,

    காதலித்து மணந்த மனைவியை பிரிந்து, உடல் நிலையும் சரியில்லாமல் தனிமையை எதிர்கொள்ள முடியாமல் அவரும் தற்கொலை செய்து கொண்டார் .

    பதிலளிநீக்கு
  39. பாடல்கள் கேட்டேன், நகைச்சுவை , மற்றும் மெர்வ் பட விமர்சனம் எல்லாம் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    சென்னையிலிருக்கும் போது, தீவுத்திடல் பொருட்காட்சிக்கு ஒரிரு வருடங்கள் அதிசயமாக சென்றோம். அங்கு அந்த பெரிய அப்பளம் அப்போது பத்து ரூபாய். அதையை நாங்கள் வாங்குவதில்லை ஒருதடவை மட்டும் குழந்தைகள் விருப்பத்திற்காக ஒன்று வாங்கி அதில் பங்கு. அப்போது எங்களைப் போன்று வந்திருப்பவர்களில் சிலரும் வாங்க யோசனை செய்வார்கள்.இப்போது அது நூறு ரூபாயை எட்டி விட்டது. ஆனால், அதிகமாக வாங்குபவர்கள் இப்போது அதிகம். ஏனெனில் நூறு ரூபாய் பணமென்பது இப்போது சதாரணமாகி விட்டது . எல்லாம் விலைகள் ஏறி விட்டன. மக்களும் விலையைப் பற்றி சிறிதளவும் கவலைப் படவில்லை.

    வானிலை அறிவிப்பாளர் ரமணன் சொன்ன செய்திகள் அனைத்தையும் ரசித்தேன். வானிலையை நம்புகிறோமோ இல்லையோ அவர் சொல்வதை நம்பும் ஒரு காலம் அது.

    பகிர்ந்த படங்கள், பாட்டு விபரங்கள் அனைத்தையும் படித்து ரசித்தேன். ஜோக்ஸ் நன்றாக இருக்கிறது. புதுப் படங்கள் நான் முக்கால்வாசி பார்ப்பதில்லை. நன்றாக இருப்பதாக யாராவது சொன்னால் பார்ப்பேன். குழந்தைகள் கண்டிப்பாக சனிக்கிழமைகளில் பார்ப்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய தலைப்பு நன்றாக உள்ளது. கருத்தில் குறிப்பிட மறந்து விட்டேன். ஆனால், அதன் சொற்படி கேளாமல் உயிரை துறந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புருஸ் அவர்களின் கட்டுரை மனதை வருத்தியது. இவரின் கதைகளை சின்ன வயதில் படித்த நினைவு. ஆனால், கதையின் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  41. புத்தகக் கண்காட்சி குறித்த பகிர்வு அருமை.

    எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸுக்கு தற்கொலை எண்ணம் பலகாலமாகவே இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. வருத்தமானது.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!