ஒரு எளிய காலை உணவு
தவலை அடை
என்ன இட்லி தோசை பொங்கல் பூரி உப்புமா/கிச்சடி இவை மட்டுமா காலை உணவு,
வேறு காலை உணவே கிடையாதா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஒரு மாறுதல்.
புழுங்கல் அரிசி மட்டும் போதும். தவலை அடை செய்யலாம்.
சாதாரண இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். வேண்டும்
என்றால் கொஞ்சம் கடலைப்பருப்பு தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியை
உப்பு சேர்த்து மிக்ஸியிலோ கிரைண்டரிலோ அரைத்துக்கொள்ளுங்கள். மாவு நீர்க்க தோசை
மாவு பதத்தில் இருக்கட்டும்.
அடி கனமான கடாய்/வாணலியில் அரைத்த மாவை கொட்டி, ஊறவைத்த கடலைப்
பருப்பையும் சேர்த்து அடிபிடிக்காமல்
கிளறி, சேவை நாழியில் பிழியும் பதத்திற்கு
வந்தவுடன் எடுத்து ஆறவைக்கவும்.
(என் அம்மா மாவை விறகடுப்பில் கல் சட்டியில் கிண்டுவார்கள் அது ஒரு
தனி மணம்)
பின்னர் ஒரு அடி கட்டியான வாணலியில் எல்லாப்புறமும் எண்ணெய் புரட்டி
கொள்ளவும்.
ஆறிய மாவை உருட்டி உருட்டி படத்தில் காட்டியபடி லேசாக விரல்
கனத்திற்கு தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் அடி குழியில் மாவை கொஞ்சம் ஒதுக்கி சிறிய குளம் போல்
உருவாக்கிக்கொள்ளவும்.
இந்த குளக் குழியில் ஒரு ஸ்பூன் நெய் தண்ணீருடன் சேர்த்து
நிரப்பவும். இது அடைக்கு நெய் மணம்
கொடுக்கவும் அடி பாகம் தீ மிகுதியால் தீய்ந்து விடாமல் இருக்கவும் உதவும்.
மிதமான தீயில் மூடி போட்டு அடுப்பில் வேக வைக்கவும்.
வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து துண்டுகள் ஆக்கி பரிமாறவும். பாஸ்
பொறுமையில்லாமல் பிய்த்து எடுத்து விட்டார். நான் கத்தி எடுப்பதற்கு முன் பாஸ்
பிய்த்து எடுத்த அடை கீழே
தொட்டுக் கொள்ள புளி மிளகாய் நன்றாக இருக்கும். இங்கு உபயோகித்தது
மிளகு குழம்பு + செச்சுவான் சாஸ்.
குறிப்பு
1. ருசிக்கு தேங்காய் பல் பல்லாக சேர்க்கப்பட்டது.
2. தவலை அடைக்கு என்ன பிரத்யேக குணம்?
தோசைக்கல்லில் தட்டி வேக வைக்கப்படும் அடை இரண்டு பக்கமும் மொறு
மொறுப்பாக இருக்கும். சமயத்தில் பல்லை உடைக்கும். தவலை அடை மேல் பக்கம்
மிருதுவாகவும் மறு பக்கம் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
வாசனைக்கு ஜீரகம், பெரும்காயம், வெந்தயம், சின்ன வெங்காயம் பொடியாக
அரிந்தது இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்.
3. பேசாமல் நான் மோர் களி உண்டாக்கி சாப்பிடுவேனே என்பவர்களுக்கு
மோர் களி பச்சரிசி மெஷின் மாவில் செய்வது. இந்த அடை புழுங்கலரிசி
ஊறவைத்து அரைத்து செய்வது, மோர் களி அரிசி உப்புமாவின் தனயன். தவலை அடை
கொழுக்கட்டையின் அண்ணன்.
தவலை அடை என்பது தவளை அடை அல்ல, புரிந்ததா?
நாங்கள் செய்யும் தவலை அடை செய்முறையே வேறு.
பதிலளிநீக்குஇந்த புழுங்கலரிசி அடை நல்லா வந்திருக்கு. இதுக்கு புளிமிளகாய் நல்லா இருக்கும்.
மற்ற நாட்களில் பதிவு உள்ளடக்கங்கள் மாறும். திங்கட்கிழமை மட்டும் மாறாது போலிருக்கு. வயிற்றில் கண்டதைப் போட்டு ரொப்புவதில் உடல் ஆரோல்கியத்திற்கு அப்படி என்ன நன்மை , தெரிலே. ஆனான பட்ட வியாழக்கிழமையிலேயே மாற்றங்கள் வந்தாச்சு. திங்கட்கிழமையிலும் சாப்பாட்டுக்கு சம்பந்தப்படாத ஓரிரண்டு விஷயங்கள் இருந்தால் வரட்சியான திங்கள் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை பூக்கும்.
பதிலளிநீக்குஅன்றைக்கு ஒரு நாளாவது ஶ்ரீராமுக்கு ஓய்வு கிடைக்கட்டுமே. நீங்க சொல்லிட்டதுனால தி.கிழமைல இனி, கல்யாண சமையல் சாதம், உப்புமா கிண்டிவையடி, சமைத்துப் பாரடீ போன்ற பாடல்களையும் பகிர ஆரம்பிப்பாரோ? அதைத் தொடர்ந்து, கீதா ரங்கன் அக்கா, இது வாசமஞ்சரி ராகம், இது காதம்பரி, இது வசனகுதூகலம் என ராகங்கள் கண்டுபிடிப்பாரோ?
நீக்குநெல்லை.....ஹையோ சிரித்து முடிலைப்பா...தாங்கலை!!!
நீக்குகீதா
ஜீவி ஸார்.. ஏற்கனவே யோசித்துக் கொண்டுதான் இருந்தேன். பொருத்தமாக தேடிக் கொண்டிருந்தேன்.. ஆனால் நெல்லையின் கமெண்ட் பார்த்ததும் அபப்டியே ஷாக்காயிட்டேன்!!! ஆஃப் ஆயிட்டேன்!
நீக்குநெல்லை.... ஹா ஹா.. கிர்ர்ர்ர்.. ஹா ஹா...ஹா.. grrrr...
நீக்கு// வாசமஞ்சரி ராகம், இது காதம்பரி, இது வசனகுதூகலம் //
ஹா.. ஹா.. ஹா.... நல்ல காயினிங்!
ஸ்ரீராம்... ஜீவி சார் சொன்னதில் அர்த்தம் உள்ளது. நீங்கள் ஏதேனும் யோசித்துச் செய்யுங்கள்.
நீக்கு"திங்கற" பதிவை எடுத்துட்டீங்கன்னா என்னைப் போன்றவர்கள் எதை எழுதுவோம்? கூடுதலாகச் சமையல் பற்றிய வரலாறை வேணா தொகுத்துப் போட்டுக்கோங்க. உதாரணமாகத் திருப்பதியில் எப்போலேருந்து புளியோதரை கொடுக்க ஆரம்பிச்சாங்க என்றோ லட்டு நிவேதனம் எப்போ ஆரம்பிச்சது என்றோ லட்டு தென்னாட்டு உணவா, வடநாட்டு இறக்குமதியா என்றோ கண்டு பிடிச்சுப் போடலாம். இதுக்காகப் போட்டி வைச்சுப் பரிசுகள் கூடக் கொடுக்கலாம்.
நீக்குஎன் கருத்தைச் சொல்லி இருக்கேன். அதை நீங்க ஏற்றுக்கொண்டே ஆகணும் என்ற கட்டாயம் இல்லை. சீரியோ டைப்பாக இல்லாமல் மாற்றி மாற்றி எழுதி வருவதும் தேவையாக இருக்கலாம். எல்லோருமே சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறோம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்காது. ஆகவே சாப்பாடு பற்றிய பழங்காலச் செய்திகளைத் தொகுத்துப்போடலாம். என் கிட்டே இதற்கான புத்தகமே இருக்கு. ஆனால் வேறே மடிக்கணினியில். அது ஸ்ரீரங்கத்தில் இருக்கு. :)))))
நீக்குஇல்லை கீதா அக்கா.. அந்த லைனில்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். மேலும் சிறிய வித்தியாசமான டிப்ஸ், சமையல் சம்பந்தப்பட்ட ஜோக்ஸ்... என்று தேடிப்பார்த்தேன். ஏன் தேட வேண்டும்....நீங்கள் ஆரம்பிக்கலாமே...
நீக்குநண்பர்கள் அனைவருமே நீங்களாக செய்த திப்பிச வேலைகள் இல்லாமல் நினைத்தது ஒன்று ஒன்று நடந்தது ஒன்று மாதிரி சமைத்தது ஒண்ணு சமைஞ்சது ஒண்ணு மாதிரி வந்த உங்கள் அனுபவங்களை எழுதலாமே..
நீக்கு@Sriram! நான் எழுதாத திப்பிசமா? கீழே நெல்லை கூடச் சொல்லி இருக்கார் பாருங்க. எனக்கு என்னன்னா சமையலுக்கும் முக்கியத்துவம் வேண்டும். கொஞ்சம் காரசாரமா சுசி ருசியா இருக்கட்டுமே. அரசியல் எழுத முடியாது. ஆகவே ரசனைக்குக் கொஞ்சம் இப்படி. ஒவ்வொருத்தருக்கும் இதில் மாறுபட்ட கருத்து நிச்சயமா இருக்கும்.
நீக்குஸ்ரீராம்... நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். கீசா மேடம் சொன்னதையும் மனதில் கொண்டுள்ளேன்
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதவலை அடை - வித்தியாசமான குறிப்பு. இதை எங்கள் வீட்டில் வேறு விதத்தில் செய்வார்கள்.
யெஸ்ஸு. எண்ணெயில் பொரித்து எடுப்பது தவலை வடை. வெண்கலப்பானை அல்லது இரும்புச் சட்டியில் அடியில் அடை மாதிரித் தட்டிப் போட்டு எண்ணெயை நிறையவே ஊற்றி மூடி போட்டு வேக வைப்பது இன்னொரு வகை. உப்புமா மாதிரிக் கிளறிக் கொட்டிக் கொண்டு பின்னர் தோசைக்கல்லிலோ அல்லது இரும்புச் சட்டியிலோ தட்டிப் போட்டு வேக வைத்து எடுப்பது இன்னொரு வகை. ஆகவே மஹா ஜனங்களே! தவலை வடைனு பெயர் சூட்டினதெல்லாம் தவலை வடை அல்லது அடைனு ஆகாது. அதோடு நாங்க தவலை வடை/அடைக்குப் புழுங்கலரியும் போடுவோம். வெறும் பச்சரிசி மட்டும் சேர்த்தால் கொஞ்சம் வெடக்குனு இருக்கும். என்னோட தவலை வடை/அடைப் பதிவைப் பின்னர் பகிர்கிறேன். நன்றி. வணக்கம். :)))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஅண்ணா, இது தவலை அடை என்று சொல்வீங்களஆ? இது என் பாட்டி புழுங்கலரிசி வெள்ளை அடை என்று செய்வாங்க.
பதிலளிநீக்குநாங்க செய்யற தவலை அடை, பச்சரி, க ப, து ப, மிளகு ஜீரகம் இதெல்லாம் அரிசி உப்புமாவுக்குச் செய்வது போல் பொடித்துக் கொண்டு, அதை உப்புமாஉவ்க்கு தாளிப்பது போல் தாளித்து போட்டு உப்புமா செய்வது போல் செய்து அதில் தேங்காய் துருவியோ கீறியோ போட்டு சிறிய சிறியதாக அடை போல் தட்டி நடுவில் ஓட்டை போட்டு தவலை அல்லது தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் எண்ணை நெய் கலந்து ஊற்றி எடுப்பது.
கீதா
அதே! அதே!
நீக்குஅதன் பெயர் காரடை. காரடையான் நோன்புக்கு செய்வது அல்லவே? வெண்ணெயுடன் தருவார்கள்.
நீக்குபாட்டி இப்படி செய்வாங்க பெயர் தான் வேறு. அடி மொறு மொறுன்னு, உள்ள மென்மையா இருக்கும்...பாட்டி கிளறிட்டு அடில ஒட்டினதை எங்களுக்குத் தருவாங்க சேவைக்கு கிளறும் போது அடில ஒட்டினத கொடுக்கறாப்ல இதுக்கும்.
பதிலளிநீக்குநான் செய்வதுண்டு. வெள்ளை அடைன்னு...என் மகனும், வீட்டவரும்அந்த அடியில் ஒட்டினதுக்குக் காத்திருப்பாங்க...
பாட்டியைக் கலாய்ப்பேன். சேவைக்குக் கிளறியது சரியா வரலையோ சேவை அதனால இப்படித் தட்டிப் போட்டு அடைன்னு பெயரும் வைச்சிட்டியா....என்று.
ஆனா எனக்கும் அப்படி ஆச்சு. திருமணமான புதிது. பிறந்த வீட்டில் கொடுத்திருந்த சீர் பாத்திரங்களில் தவறாமல் இடம் பெற்ற இரும்பு சேவை நாழிய பயன்படுத்த வேண்டுமே....செய்யறேன் பேர்வழின்னு புழுங்கரிசி ஊறப் போட்டு அரைத்து, கிளறு கிளறுன்னு கிளறுகிறேன். அரிசி வாகா இல்லை தண்ணீர் கூடியதா என்று தெரியலை கிளறிய மாவின் பதம் மனசுக்குத் திருப்தியா இல்லை...ஒரு கொழுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேக வைத்துப் பிழிந்து பார்த்தாலும் மாவு என்னவோ கொஞ்சம் குழைந்தாற்போல இருந்தது. பாட்டி தட்டிப் போட்டு அடை செய்வாங்களேன்னு உடனே அதில் தாளித்துக் கொட்டி அடை தட்டி அது நல்லா வந்துச்சு!
கீதா
//உடனே அதில் தாளித்துக் கொட்டி அடை தட்டி அது நல்லா வந்துச்சு!// அப்போ நீங்க நினைத்துச் செய்வதைவிட, திப்பிசமாகச் செய்வது நல்லா வருதுன்னு சொல்லுங்க. ஆனால். திப்பிச வேலைகள்ல கீதா சாம்பசிவம் மேடம்தானே சீனியர்.
நீக்குசேவைக்கு நானெல்லாம் புழுங்கலரிசியை ஊற வைச்சு நல்ல நைசாக அரைச்சு உப்புக் கொஞ்சமாச் சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி இட்லி மாதிரி வேக வைத்து எடுத்துக் கொண்டு சேவை நாழியில் பிழிந்துடுவேன். நல்லா வரும். நம்ம ரங்க்ஸுக்குப் பிடிச்சது. வெல்லசேவை விரும்பிச் சாப்பிடுவார். கடைசி காலத்தில் சேவை கேட்டப்போ என்னால் பண்ணித் தர முடியலை. ஏனெனில் என்னோட கால்கள் செய்த பிரச்னை. ஆனால் இங்கே திருச்சியில் அநேக காடரர்கள் சேவை பண்ணித் தருவதால் அவங்களிடமிருந்து வாங்கிக் கொடுப்பேன். வேறே வழியே இல்லையே! :(
நீக்குபுழுங்கலரிசியை ஊற வைச்சுத் தேங்காய்த் துருவல், கொஞ்சம் போல் மிளகு, சீரகம் சேர்த்து உப்புச் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து அடையாக வார்ப்பேன் வெறும் அரிசி அடை என்போம் இதை.
பதிலளிநீக்குசேவைக்குனு ஒரு தரம் ஐ.ஆர். 20 புழுங்கலரிசியை வேலை மெனக்கெட்டு வாங்கி ஊற வைச்சு அரைச்சுப் பண்ணினால் இட்லி கல்லுக்கல்லாக. சும்மாத் தூக்கிப் போட்டாலே காயம் படுமோனு பயமா இருந்தது. பின்னர் அதை உதிர்த்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், கருகப்பிலை கடுகு, வெங்காயம் போட்டு வதக்கிக் கொண்டு கொஞ்சம் புளியை ஊற வைச்சுப் புளி ஜலம் சேர்த்துமஞ்சள் பொடி சேர்த்துத் தேவையான உப்பைப் போட்டு பண்ணி வைச்சிருந்த இட்லிகளை உதிர்த்துச் சேர்த்துப் புளி உப்புமா மாதிரிக் கிளறி எடுத்தால் கொண்டா கொண்டா என்னும் சுவையில் அமைந்தது. என்னோட அப்பாவின் சித்தி புளி உப்புமாவுக்கு ஊற வைச்சு அரைச்சுத் தான் செய்வாங்க. அவங்க நினைவு வந்தது எனக்கு. பஜ்ஜி மாவு கலக்கக் கூட அவங்க பச்சரிசி கொஞ்சம் து.பருப்பு, க.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து உப்புக்காரம் போட்டு நைசாக அரைச்ச பின்னர் அதில் கடலை மாவைப் போட்டு நன்கு கலந்து கொண்டு பஜ்ஜி போடுவார். பஜ்ஜிகள் உப்பிக் கொண்டு நல்ல கனமாக அழுத்தமாகப் பெரிது பெரிதாக வரும். அந்தச் சுவையில் இப்போல்லாம் பஜ்ஜி சாப்பிட்டே நாளாகிறது. காராவடைக்கும் இப்படித் தான் அரைத்துக் கலந்து கொண்டு ஊற வைச்ச துவரம்பருப்பு, தேங்காய்ப் பற்கள், கருகப்பிலை சேர்த்துக் கடுகு தாளித்துத் தேவையால் பச்சை மிளகாய் போட்டுப் பின்னர் கொதிக்கும் எண்ண்யில் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றிப் பொரித்து எடுப்பாங்க. மதுரை தான் காராவடைக்குப் பிரபலம்.
பதிலளிநீக்குஇந்த பஜ்ஜி மாவு மிஞ்சினால் அதிலேயே கொஞ்சம் ரவை சேர்த்துக்கொண்டு தயிர் கலந்து உப்புத் தேவையானால் சேர்த்து பேகிங் பவுடர் அல்லது ஈனோ சேர்த்துச் சிறிது நேரம் கழித்து நல்ல எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் ஊற்றி அடுப்பில் இட்லிப் பாத்திர்த்தில் நீர் வைத்துக் கொதிக்க வைத்து இந்தத் தட்டை வைச்சு வேக விட்டு எடுத்துத் துண்டுகளாகப் போட்டுச் சர்க்கரை ஜலம் சேர்த்து எண்ணெயில் ஜீரகம், கடுகு தாளித்து எலுமிச்சைச் சாறையும் சேர்த்துத் துண்டுகளின் மேலே ஊற்றினால் டோக்ளா தயார்.
பதிலளிநீக்குஒவ்வொரு தி.பதிவுக்கும் உங்களுடைய ஒரு பகுதியை எழுதித் தர ஸ்ரீராம் சொன்னால், ஒரு பதிவிலேயே எல்லாவற்றையும் எழுதப் பார்க்கிறீர்களே. ஹா ஹா
நீக்குஎல்லாமும் மாமா இருந்தவரை. இப்போல்லாம் செய்து பார்க்கும் ஆர்வமும் இல்லை. சாப்பிடும் ஆவலோ விருப்பமோ இல்லை. இங்கே பதிவுகளுக்கு வந்து கருத்திடுவதே என்னுடைய மன ஆறுதலுக்குத் தான். இங்கே இருக்கும் நேரம் வேறே நினைவுகள் வராது. :(
பதிலளிநீக்குகீசா மேடம்... அப்படி நினைக்கக்கூடாது. குஞ்சுலுவுக்கு ஏதேனும் புதிதாகச் செய்துகொடுக்கலாம். சமையல் வேலை, இணையம் என்று இருந்தால் வேறு எண்ணங்கள் எட்டிப்பார்க்காது, பொழுதும் நல்லபடியாகப் போகும்.
நீக்குஎதோ ஒரு அடை, பெயர் என்னவேணுமானால் இருக்கட்டும். சாப்பிட ஒரு பதார்த்தம். அவ்வள்வுதான்.
பதிலளிநீக்குஜீ வி சார் திங்கறது மட்டும் தானா வேறு ஒன்றும் வேலை இல்லையா என்று ஒரு வெடியைக் கொளுத்தி போட்டுட்டார். திங்கறதை think என்று ஆக்கலாம். வெங்கட் சார் தளத்தில் ஆரம்பத்தில் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிப்பாரே அது போல் 'சிரிக்க சிந்திக்க' என்று சில சிந்திக்க வைக்கும் ஜோக்குகளை திங்க் கிழமையில் போடலாம் என்பது எனது கருத்து.
Jayakumar
தவலை அடை வித்தியாசமான செய்முறை.
பதிலளிநீக்கு