12.3.26

இன்னிக்கி மாத்திரம் இந்தப் பாடல்களை 1000 வாட்டி கேட்கலாம்...

 

பஜ்ஜி சாப்பிட்டு 15 நாட்களாகி விட்டன.
எனவே நடைப்பயிற்சிக்கு நடுவே இன்று ஏதாவது சாப்பிடலாம், தப்பில்லை!
இன்று என்ன சாப்பிட வேண்டும் என்று நேற்றே தீர்மானித்து விட்டேன். நேற்று அஸ்வினில் தேநீர் அருந்தும் போது பக்கத்து சீட்டுக்காரர் தட்டில் பாவ் பாஜி பார்த்தேன்.
நேற்று அமாவாசை என்பதால் நான் சாப்பிடவில்லை.
தஞ்சையில் இருந்தபோது என்னுடைய நண்பர் ராஜு, தன் அண்ணன் மகனை தூக்கிக்கொண்டு பேசுவதற்கு வருவார். அந்த அண்ணன் மகனை பாஜி என்று கூப்பிடுவார்கள். அவன் பெயர் பாலாஜி என்பதும், அதை சுருக்கமாக லாவை எடுத்துவிட்டு பாஜி என்று கூப்பிடுகிறார்கள் என்றும் பின்னர் தெரிந்தது.
எனவே பாவ் பாஜி என்கிற பெயரை கேட்டால் எனக்கு தவறாமல் அவன் நினைவு வந்து விடுகிறது!
"பாவ்" என்றால் ஏப்பம் விடுவது போல இருக்கிறது. ஒரு கதையில் அப்புசாமி தாத்தா அப்படித்தான் ஏப்பம் விடுவார். எனவே இது அஜீரண கோளாறு வராது என்று சொல்லலாம்!!
இவ்வாறு எல்லாம் மனதை தேற்றிக்கொண்டு பாவ்பாஜி ஆர்டர் செய்தேன். சீஸ் என்றும் எழுதியிருந்தது.
படத்தில் பாருங்கள்... கிரேவியின் மீது ஒரு சிறிய துணி போட்டு இருப்பது போல் தெரிகிறதா? அதுதான் சீஸ்!! பாவ் பாஜி இதுவரை சாப்பிட்டதில்லை என்பதால் எப்படி சாப்பிடுவது என்று ( !! ) மகனுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு பிரட் துண்டை பிளாட்பார்ம் போல் வைத்து, அதில் இரண்டு பன்னை ஒட்ட வைத்திருந்தது போல இருந்தது. அதன் நடுவில் ஏதோ இருந்தது போல் இருந்ததால் அதை அப்படியே எடுத்து கடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைப் பிரித்து வெங்காயத்தில் தொட்டு கிரேவியை தொட்டு சாப்பிடு என்றான் மகன். அவ்வண்ணமே செய்தேன்.
எனக்கு ருசிக்கவில்லை.
இதற்கு ஏன் ஸ்பூன் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை!
ஒரு லெமன் ஹனி டீயும் குடித்துவிட்டு பில் செட்டில் செய்யும் போது நினைவுக்கு வந்தது.....


நான் மனதுக்குள் சாப்பிட விரும்பியது பாவ் பாஜி அல்ல.. அதனால்தான் அப்படியே எடுத்துக் கடிக்க வேண்டும் என்று மனதுக்குள் தோன்றி இருந்திருக்கிறது. நான் சாப்பிட நினைத்தது
வடா பாவ். அது அந்தக் கடையில் இல்லை என்பது வேறு விஷயம்.
ஒரே குழப்பாப்பம்! 

அமைதிச்சாரலின்  விளக்கம் 

பாவ்பாஜி கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். வெங்காயம், மல்லித்தழை தூவி பாவைப் பிய்த்து முக்கிச் சாப்பிட ஏதுவா இருக்கும். பாஜியை தனியாகவும் சாப்பிடலாம். சிலசமயம் விரும்பினால் பாவின் நடுவில் பாஜியைச் சற்றுத் தாராளமாக வெண்ணெய் போல் தடவி அப்படியே கடித்தும் சாப்பிடலாம். பாஜிக்காகத்தான் அந்த ஸ்பூன் வைக்கப்படுகிறது.
பொதுவாகவே தமிழ்நாட்டில் பாஜியை கெட்டியாக கூட்டு பதத்தில் ரெண்டு கரண்டி அளவுக்குத்தான் பரிமாறுகிறார்கள். வடக்கர்கள் இட்லி என்ற பெயரில் பேப்பர் வெயிட்டைப் பரிமாறுவது போல்..
குளிச்சப்புறம் சுத்த சாவேரி, ஜலதோஷம் வந்தா சிந்து பைரவின்னெல்லாம் சொல்ல வேண்டியதுதானே?
சாந்தி மாரியப்பன்

===========================================================================================

மீம்ஸ் - அந்த சிரிப்பு நிஜம்.


8888888888888888888888888888888888888888888888888888888888


============================================================================================

பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.  

பழனி அடுத்த திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கொழுமம் அருகே குதிரையாற்றின் கரையில் பாழடைந்த கோயிலில் தற்பலி சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது.  இந்த சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது: பொதுவாக கடவுளுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்கள் பலியிடப்படும். அதேபோல, யாருடைய வற்புறுத்தலுமின்றி சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்களையே பலியிட்டுக் கொள்வது தற்பலி எனப்படுகிறது.  தற்போது கண்டறியப்பட்ட சிற்பமும் தற்பலி சிற்பமாகும். அலங்காரங்களுடன் உள்ள திருநங்கை தன் தலையை தானே அறுத்துக்கொள்வது போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நவகண்ட சிற்பம் என்றும் அழைப்பா்.  இவா்கள் இறந்த பின் அவா்கள் நினைவாக ஊா் மக்கள் சிற்பம் வடிப்பது வழக்கம். இந்த வகையான தற்பலிகள் ஏதாவது வேண்டுதலுக்காக கொற்றவை தெய்வத்தின் முன் கொடுக்கப்படும்.

தற்பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு ஊா்மக்களும், அரசும் நிலங்களை கொடையாக அளிப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. இதுபோன்ற பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் ‘உதிரப்பட்டி’, ’நவகாணி’, ’நெய்த்தோா்பட்டி’, ’உதிரக்காணி’ போன்ற பெயா்களில் அழைக்கப்படுவதை தமிழகத்தின் பல கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.  இங்கு தற்பலி கொடுத்த திருநங்கை அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறாா். மேலும் தலையில் அள்ளிமுடிந்த அழகிய கொண்டை, நெற்றிச் சுட்டி, நெற்றிப் பொட்டுடன் காணப்படுகிறாா். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்கள் உள்ளன. நீண்ட வாளை கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை மட்டுமே உள்ள ஆடையை அணிந்துள்ளாா்.  இடையின் இரு பகுதிகளிலும், முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவா் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே இவா் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரா் கோயில் தேவரடியாராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். சிற்பத்தின் அருகில் கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விவரங்களை அறிய இயலவில்லை. சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு கி.பி. 12- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என உறுதிப்படுத்தலாம்.  கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள கொங்கு சோழ அரசா் வீரநாராயணரின் 8- ஆம் ஆட்சி நடைபெற்ற ஆண்டு கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் ‘திருவின் நங்கை’ எனும் தேவரடியாரைக் குறிப்பிடுவதில் இருந்து நவகண்டம் எனும் தற்பலி செய்த இவா் நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக, மூன்றாம் பாலினத்தவராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். இந்த சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியாா் குளம் என்று அழைக்கப்படுவதால், தற்பலி கொடுத்த இவா் பெயராலேயே இந்தக் குளம் அழைக்கப்பட்டிருக்கலாம்.  கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள வீரசோழரின் ஆணைக்கிணங்க அவரது அமைச்சா் பொறித்த ஓா் கல்வெட்டு, கரைவழிநாட்டு காளாபிடாரி கோயில் எனும் கொற்றவை கோயிலை குறிப்பிடுகிறது. எனவே பாழடைந்த இந்தக் கோயில்தான் பிடாரி என்ற கொற்றவை கோயில் எனக் கருதலாம். இந்த திருநங்கை எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்தாா் எனத் தெரியவில்லை.  மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போா் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத் தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடியொற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம். இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும் என்றாா் அவா்.

============================================================================================



மதுரை சிந்தாமணி தியேட்டர் சில பெருமைகளை உடையது. சிந்தாமணி என்னும் படம் தந்த வசூலில் கட்டப்பட்டு அதே பெயரை தாங்கி நின்றது.  1943 ல் அதற்கு ஒரு விளம்பரம்..

=========================================================================================

நான் இளையராஜாவின் பரம ரசிகன்.  அவர் திறமை எல்லாம் அளவிட முடியாதது.  அவ்வப்போது நான் கேட்டு அறிந்து கொள்வதை இங்கும் உங்களுக்குத் தருகிறேன். அந்த இசை மேதைமை இறைவன் அவருக்கு கொடுத்த வரம்.  "நீ போய் இந்திய மக்களை உன் இசையால் சந்தோஷப்படுத்து" என்று சரஸ்வதி தேவி அனுப்பி இருக்கிறார். இங்கே டாக்டர் நாராயணன் சொல்லி இருக்கும் பாடல்களில் இரண்டை இன்று தருகிறேன்.  எனக்கும் மிக மிக மிக பிடித்த பாடல்கள்.  குறிப்பாக எண்ணைத்தொட்டு அள்ளிக்கொண்ட பாடல்.


===========================================================================================



நிரம்ப விடாதே
நிறைந்தாலும் 
பகிர்ந்து விடு
அன்பு அறிவு அனுபவம்
யார் எதை, எப்போது 
கொடுத்தாலும் 
வாங்கிக்கொள்ளத் 
தயாராய்
காலியாகவே இருக்கட்டும் 
மனது.


நேற்று மாற்றி அமைக்கப்படும் வீட்டின் படத்துக்கான  என் கவிதை படித்து இன்ஸ்பைர் ஆகி செல்வாண்ணா எழுதி இருக்கும் கவிதை கீழே...



கற்கள் கனவுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃ




எத்தனை வருடம் 
நிமிர்ந்த கற்களோ
எத்தனை வருடம் 
நெகிழ்ந்த கற்களோ!..

இன்றைய நொடியில்
வீழ்ந்தன சுவர்கள்...

ஏனடா மனிதா..
சரித்தது எதனை?.

தந்தையின் கனவையா
அழித்தாய்?..
தாயின் முறுவலையா
தகர்த்தாய்?..

​உடைந்த கற்களுக்குள் 
பாட்டனின் கர்ஜனை
அத்தையின் சிரிப்பலைகள்
ஆனந்த வளையொலிகள்

இடிபடும் வேளையில்
எப்படியெல்லாம்
அரற்றினவோ
அழுதனவோ..

எத்தனை  எத்தனை
சம்பவங்கள்..
எத்தனை  எத்தனை
சரித்திரங்கள்..

எல்லாம் உன் பொருட்டு
உன் சந்ததியின் பொருட்டு..

உடைக்கப்பட்டவை 
சுவர்கள் மட்டும்
தான்

என்றே இருக்கட்டும்..

அப்படியே நம்புவோம்..

கற்கள் உடைந்தாலும்
உடைக்கப்பட்டாலும்
கனவுகள் 
உடைபடுவதில்லை 

மீண்டும் உயிர் பெறும் 
புது இல்லங்கள்...

மனைகளைப்  போல் மனங்களும்
கனவுகளும்
 புதுப்பிக்கப்படட்டும்

சோகங்கள் சுகங்கள் 
பிரியாது வரட்டும்
சுகங்கள் நிறைந்து
மகிழ்வே தரட்டும்..

புதிய கற்கள் 
புதிய வீடு
பாட்டனும் வரட்டும்
பரிசுகள் தரட்டும்...
ஃஃஃ

===========================================================================================

SPB  : செம்பூவே பூவே
உன் மேகம் நான் வந்தால்
ஒரு வழியுண்டோ

சித்ரா  : சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே

SPB : படைகொண்டு
நடக்கும் மன்மதச்
சிலையோ ஓஹோ
சித்ரா : மன்னவன்
விரல்கள் பல்லவன்
உளியோ ஓஹோ

SPB : இமைகள் உதடுகள்
ஆகுமோ ஓ
சித்ரா : வெட்கத்தின்
விடுமுறை ஆயுளின்
வரைதானோ

SPB : செம்பூவே பூவே
உன் மேகம் நான் வந்தால்
ஒரு வழியுண்டோ

சித்ரா : சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே

SPB : அந்திச் சூரியனும்
குன்றில் சாய மேகம் வந்து
கச்சை ஆக காமன் தங்கும்
மோகப் பூவில் முத்தக்
கும்மாளம்

சித்ரா : தங்கத் திங்கள்
நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம்
தொட்டு நெஞ்சிலாடும் சுவாச
சூட்டில் காதல் குற்றாலம்

SPB : தேன்தெளிக்கும்
தென்றலாய் நின்னருகில்
வந்துநான் சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா

சித்ரா : நாளும் மின்னல்
கொஞ்சும் தாழம்பூவைச்
சொல்லி

SPB : ஆசைக் கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி

சித்ரா : கட்டிலும் கால்வலி
கொள்ளாதோ கைவளை
கைகளை கீறியதோ

SPB : செம்பூவே பூவே
உன் மேகம் நான் வந்தால்
ஒரு வழியுண்டோ

சித்ரா : சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே

சித்ரா : இந்தத் தாமரைப்பூ
தீயில் இன்று காத்திருக்கு
உள்ளம் நொந்து கண்கள்
என்னும் தூண்டில் தும்பி
பாடிச் செல்லாதோ

SPB : அந்தக் காமன் அம்பு
என்னைச் சுட்டு பாவை
நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே

சித்ரா : விம்மியது தாமரை
வந்து தொடும் நாளிலா
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலோ

SPB : முத்தத்தாலே
பெண்ணே சேலை
நெய்வேன் கண்ணே

சித்ரா : நாணத்தால் ஓர்
ஆடை சூடிக்கொள்வேன்
நானே

SPB : பாயாகும் மடி
சொல்லாதே பஞ்சணை
புதையல் ரகசியமே

சித்ரா : சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே

SPB : செம்பூவே பூவே
உன் மேகம் நான் வந்தால்
ஒரு வழியுண்டோ

சித்ரா : சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும் முத்தாகிடும்
முத்துண்டே


===========================================================================================

திருச்சி ஜெயில் 


சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத்தான் இருக்கிறது. இந்தச் சுயசரிதைக் குறிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலாற்றில் மறைந்துபோய்விட்டார்கள். ‘திருச்சி ஜெயில்’ ஒரு விசித்திரமான நூல். வதைகளைப் பற்றியது. ஆனால் உல்லாசமாக எழுதப்பட்டிருக்கிறது. - ஜெயமோகன்

*********

1940-ஆம் வருஷம் டிஸம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் சத்தியாக்கிரகம் செய்வது நல்லது என்ற அபிப்பிராயத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் சுமிட்டித் தலைவர் தாமே ஒவ்வொரு சத்தியாக்கிரகியையும் நேரில் சந்தித்து அறிவித்திருந்தார். டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி காலை நான் சத்தியாக்கிரகம் செய்வதன ஏற்பாடாகியிருந்தது. தென்காசித் தாலூகா காங் கிரஸ் கமிட்டித் தலைவர் என்ற முறையில் தென்காசியிலேயே நான் சத்தியாக்கிரகம் செய்வதாகத் தீர்மானித்திருந்தேன். ஆனால், நவம்பர் 30-ஆம் தேதியன்று தென்காசித் தொகுதி யின் அஸெம்பிளி அங்கத்தினர் தென்காசி வந்து யுத்த எதிர்ப்பு லிகிதங்கள் அனுப்புவதன் மூலம் சத்தியாக்கிரகம் செய்வதெனத் தீர்மானிந்தார். எனவே, நான் என் தொகுதி யான சங்கான்கோவிலில் சந்தியாக்கிரசும் செய்வதென்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று.
டிஸம்பர் மாதம் 20-ஆம் தேதி, திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்டிரேட்டுக்கு நான் அடியில்கண்ட லிகிதம் எழுதி, நேரில் அன்னார் காரியாலயத்தில் கொண்டுபோய்க் கொடுத்தேன் :

திருநெல்வேலி 2-12-40
அன்பார்ந்த ஐயா,

          வருகின்ற டிஸம்பர் மாதம் 4-ந் தேதி காலை பத்தரை மணிக்கு சங்கரநயினார்கோயில் கோமதி அம்மன் சந்நிதானத்தின் முன்பு யுத்த எதிர்ப்புக் கோஷங்கள் செய்யப் போகிறேன். காந்திஜியின
உத்தரவின்படி இந்த முறையில் நான் சத்தியாக்கிரகம் செய்யப் போகிறேன் என்பதைத் தங்களுக்கு அறிவிக்கிறேன்.
  
தங்கள் அன்பன்,
எல். எஸ். கரையாளர்.

செங்கோட்டையில் என் நண்பர்களிடத்திலும் உற வினர்களிடத்திலும் நான் விடைபெற்றுக்கொண்டேன். ஜெயிலுக்குப் போக விடை கொடு' என்றால் யாருமே சந் தோஷமாக விடை கொடுப்பதில்லை.ஆனால் நான் ஜெயிலுக்குப் போகத்தான் வேண்டும் என்பதை மாத்திரம் எல் லோரும் உணர்ந்தார்கள். எனது சிறிய தகப்பனாருடைய மனைவியார் என்னை ஆசிர்வதித்து, குங்குமத் திலகமிட்டு,சீக் கிரமே சுகமாசுத் திரும்பி வரும்படி வாழ்த்தி அனுப்பினார்.
4உ காலை 9-30 மணிக்கு நான் சங்கரநயினார் கோவில் ரயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன்.ஸ்ரீ. எஸ். என். அம்பலவாண பிள்ளையும் அங்கு வந்திருந்தார். சரியாகப் பத்தரை மணிக்கு, கோமதி அம்மன் சந்நிதானத்தில் போய் நின்றேன். மூன்று வருஷங்களுக்கு முன்னால் இதே சந்நிதானத்தில்தான் முதன் முதலாகத் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும்போது நான் சொன்னது எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

'தெய்வ சந்நிதானத்தில் சொல்லுகிறேன். உங்கள் முன்னிலையில் காங்கிரஸ் கிழித்த கோட்டை நான் தாண்டமாட்டேன்.' அன்று நான் சொன்னது இதுதான்.  அன்று நான் பேசிய கூட்டத்திற்கும் இன்று நான் கண்ட கூட்டத்திற்கும் வித்தியாசம் இருந்தது. அன்று நான் பார்த்த கூட்டம் ஆரவாரக் கூட்டம்; தேர்தலில் காங்கிரஸ் கலந்துகொள்ளவேண்டுமென்று உணர்ச்சி மிகுதி யுடன் வந்து ஒலித்துக்கொண்டிருந்த கூட்டம்; அடிக்கடி கைதட்டி என்னை உற்சாகப்படுத்திய கூட்டம்; வெற்றி எனக்கே என்பதை உறுதிப்படுத்துவதற்கு அறிகுறியாக வந்த கூட்டம்.

இன்றைக் கூட்டம் அப்படியன்று, அங்கு கூடியிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் உணர்ச்சி ததும்பியிருந்தது பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் இருந்தும், அமைதி ஆச்சரியப்படத்தக்கதாயிருந்தது. அடுத்த நிமிஷம் ஒருவர் கைதியாகிறார் என்ற எண்ணம் இந்திய மனப்பான்மைக்கு ஒத்ததன்று என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். ஆனால் அந்தப் பெரிய கூட்டத்தில் நான் கைது செய்யப் படும் தருவாயில் இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கைது செய்வதற்குவேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். நான் வரும் வழியெல்லாம் போலீஸ். சுற்றுமுற்றும் எங்கணும் போலிஸ்.   கூட்டம் நடக்குமிடத் தில் ஸ்தல போலீஸ் உத்தியோகஸ்தர் அனைவரும் வந்திருந்தனர். மோட்டாரும் தயாராயிருந்தது.

கூட்டத்தில் மூச்சு விட்டால் சப்தம் கேட்கும். அவ் வளவு அமைதி.எனக்கும் உணர்ச்சி அதிகமாகத்தான் இருந்தது. சரியாகப் பத்தரை மணிக்கு நான் சொன்ன தாவது:

*பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிக்குப் பணத்தாலோ ஆள் பலத்தாலோ உதவி செய்வது தவறு. அஹிம்ஸா முறையி லேயே எல்லா யுத்தங்களையும் எதிர்ப்பதே சரியான வழி யாகும்?

முதலில் இதை ஆங்கிலத்திலும், பிறகு தமிழி லும் சொன்னேன். போலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஒரு கணம் திகைத்தார்கள். இவ்வளவு கூட்டத்தினிடையே ஒருவரைக் கைது செய்வது அவர்களுக்குக் கொஞ்சம் அருவருப்பாக இருந்திருக்கலாம். அல்லது இவ்வளவுதான் காங் கிரஸ் ' ஸ்லோகன்' என்று தெரியாமலும் இருந்திருக்கலாம்.

*நான் கடமையைச் செய்துவிட்டேன். இனி போலீஸ் காரர்கள் தான் சுடமையைச் செய்யவேண்டும்' என்று ஞாபக மூட்டினேன்.போலீஸ் அணுகினார்கள். உத்தியோகஸ்தர்கள் என்னை

'போகலாமா?'

"எங்கே ?"

'பின்னால் கார் இருக்கிறது!"

"எங்கே போகவேண்டும் ?'

"போலீஸ் ஸ்டேஷனுக்கு.'

வாரண்டு இருக்கிறதா ?"

'போகலாமே!"

ஆகவே, நான் கைது செய்யப்பட்டேன். அமைதியே உருவாக இருந்த கூட்டம் அப்படியே ஆரவாரித்து எழுந்தது. ஒரு காரில் அரை நிமிஷத்தில் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகப்பட்டேன். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு, கோவில்பட்டி ஸப்-டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்பு என்னை ஆஜர் செய்வித்து, போலீஸார் இரவு ரிமாண்டு வாங்கினர். கோவில்பட்டியில் ரிமாண்டில் இருக்கும்போது நான் சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கரைச் சந்தித்தேன். அவருக்கு முப்பத்திமூன்று வய திருக்கும். பல மாதங்களாகத் திருநெல்வேலி ராமநாத புரம் ஜில்லாக்களில் பயங்கரமான புயல் காற்றின் வேகத்தில் பல கொள்ளை கொலைக் குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட இவர் பார்ப்பதற்கு ரொம்பவும் சாதுவாயிருந்தார். கறுப்பு நிறம், கம்பீரமான பார்வை ; அரையில் ஒரு கதர் வேஷ்டி. உடம்பு முழுதும் மறைக்கும் படி ஒரு கதர் சால்வை. இவர் இரண்டு ஜில்லாக்களிலும்
நூற்றுக்கணக்கான கிராமங்களை ரிஸர்வ் போலீஸாரின் கையிலேயே ஒப்படைக்கவேண்டிய அளவுக்குப் பீதி உண் டாக்கியவர். இவர் சம்பந்தமாக ரிஸர்வ் போலீஸார் கையாண்ட முறையைக் கண்டித்துத் திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் நான் முறையிட்டிருக்கிறேன்.

இதே கந்தசாமி நாயகர் கொலைக் குற்றத்திற்காகத தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு ஹைகோர்ட்டு உத தாவை எதிர்பார்த்துத் திருச்சி சிறையில் 'கண்டத்தில வைக்கப்பட்டுப் பிறகு தூக்கிடப்பட்டார்........


========================================================================================

ஸ்வர்ணலதா : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி நெஞ்சைத் தொட்டு
பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி

ஸ்வர்ணலதா : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

ஸ்வர்ணலதா : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி

ஸ்வர்ணலதா : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும்
தருணம் சொர்க்கம்
சொர்க்கம் என்னை
சீராட்ட வரணும் பொன்னி
பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ
ஆள வரணும்

ஸ்வர்ணலதா : பெண் மனசு
காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து
விடு என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை கண்டு
கொஞ்சம் காப்பாற்றி
தந்து விடு

ஸ்வர்ணலதா : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

SPB  & ஸ்வர்ணலதா : என்னைத்

தொட்டு
SPB  : நெஞ்சைத் தொட்டு

SPB  : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி

SPB  : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

SPB  : மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான
மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே கண்ணால்
கண்ணால் மொழி நீ பாடு குயிலே

SPB  : கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே

SPB  : என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்

SPB  : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி

SPB  : அன்பே ஓடி
வா அன்பால் கூட
வா ஓ பைங்கிளி
நிதமும்

SPB  : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி



=============================================================================================


தேவர் மகன் - சிவாஜி, இயக்குனர் பரதன் அனுபவங்கள் பற்றி மேக்கப்மேன் மகன் அண்ணாதுரை போட்டோகிராபர்.

சிவாஜியிடம் இயக்குனர் பரதன் முன்கூட்டியே இதுல நீங்க நடிக்கக் கூடாது..  வாழணும் என்று சொல்லி விட்டாராம்.  அவர் அதிகமாக நடித்து விடக்கூடாது என்பதற்காக!  ஒரு நாள் ஷூட்டிங்கில் சிவாஜி புடைவைகள் விநியோகம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்து மீசை முறுக்குவது போல காட்சி.  இயக்கிக் கொண்டிருந்த பரதன் அருகிலிருந்த P C ஸ்ரீராமிடம்  'அதிகமா தொடுத்து..  கொஞ்சம் குறைச்சுக்கலாமோ' என்று சொல்லி இருக்கிறார்.  அதை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு மலையாளி உதவி புகைப்படக்காரர் -இளவயது, பெரிய மலை போன்ற உருவம் - அப்படியே சிவாஜியின் அருகே சென்று "அதிகமா இருக்கு..  குறைச்சுக்கோ..  குறைச்சுக்கோ..  என்றாராம்.  

சிவாஜி ஒரு பார்வை பார்த்து விட்டு "யப்பா பரதா..  நீ பெரிய டைரக்டர்..  அவார்டெல்லாம் வாங்கி இருக்கே..  நீ சொல்லு..  இந்த எருமை கிட்ட எல்லாம் ஏன் சொல்லச்சொல்றே" என்றதும் செட்டில் சிரிப்பு பரவியதாம்.  

இவர் போட்டோ ஸ்டில் எடுக்க காத்திருந்தபோது பரதன் இவரிடம் சொன்னாராம்..  அவரைத் தொடர்ந்து நீயும் போ..  வா...  அவர் திடீர்னு நின்னு நடிப்பார்..  நடப்பார்..  ரெடியா இரு" என்றாராம்.   

சிவாஜி பஞ்சாயத்தில் அவமானப்படுத்தப்பட்டு கோபத்துடன் நடந்து வரும் காட்சியை பரதன் சொல்லித்தரவில்லை.  'நீங்க பாத்து நடிங்க' என்று சொல்லி விட்டார்.  சிவாஜிதான் மாவு ஆட்டும் வசனத்துக்கெல்லாம் ஆக்ஷன் கொடுத்து நடித்தாராம்.  அப்படி அவர் நடந்து வரும்போது ஓரிடத்தில் சட்டென்று வேஷ்டியை தூக்கிக் கட்டினாராம்.  இவர் "ஸார்.. ஸ்டில்.." என்று ஞாபகப்படுத்தியபோது 'நடந்து வரும்போது இந்த இடத்துல மார்க் பண்ணிக்கோ..  அந்த இடத்துல வேஷ்டியை மடிச்சு கட்டுவேன்' என்றாராம்..  சரியாக அந்த இடத்தில அதே போல செய்தாராம்.  

"நான் செத்துப் போயிடுவேனா...  அவ்வளவுதானா..  டேய்..  என்னை அனுப்பிடாதீங்கடா...   இன்னும் கொஞ்சம் சீன்ஸ் குடுங்கடா..  ஜாலியா இருக்கு" ம்பாராம்.  வடிவேலு ஒரு மேடையில் தேவர் மகன் படத்தில் அழுத காட்சி பற்றி சொன்னது மிகை என்றார்.  சொன்னார்...   ஆனால் சாதாரணமாக சொன்னார் என்கிறார் அண்ணாதுரை.  

நாசர் எங்கேயோ மலேஷியாவில் மாட்டிக் கொள்ள அவர் இடத்தில சலீம் கௌஸ்ஸை போடலாம் என்று சொன்னபோது பரதன் பிடிவாதமாக நாசர்தான் வேண்டும் வரட்டும் என்று சொல்லி விட்டாராம்.  துணை இயக்குனர்கள் சிவாஜியிடம் வந்து 'உங்களுக்கு 18 நாட்கள் காட்சி இருக்காது.  நாசர் வெளி நாட்டில் இருக்கிறார்' என்றதும் சிவாஜி, "பொய் சொல்லாதீங்கப்பா..  சும்மா பயமுறுத்தாதீங்க..  பாய் வந்துடறேன்னு சொல்லி இருக்கான்" என்றாராம்.  

இயக்குனர் பரதன் கடைசி காலத்தில் போதைக்கு அடிமையானது தனக்குப் பிடிக்கவில்லை என்றார் அண்ணாதுரை .  'இத்தனைக்கும் லிக்கர் தவிர ஹெர்பல் எல்லாம் உபயோகிப்பார்,  நான்தான் அதை எம் ஜி ஆர் நகர் கிட்ட சூரப்பள்ளம்ன்னு ஒரு இடம் இருக்கு..  அங்கிருந்து வாங்கித்தருவேன்' என்கிறார்.  'அவர் மனைவியும் கேன்சர் வந்து இறந்துவிட்டார்' என்றாலும் அவர் தனது பணமெல்லாம் பரதனின் மருத்துவச்செலவுக்கு செலவானது என்று பரதன் மரணத்துக்குப்பின் சொன்னது அப்பட்டமான பொய் என்கிறார்.  பரதன் வாங்கும் அட்வான்ஸ் உட்பட எல்லாமே அவர் மனவி  கைக்குதான் போகுமாம்.  ஒரு சிகரெட் வாங்க வேண்டுமென்றால் கூட 'சேச்சி கிட்டப்போய் ஆயிரம் ரூபா வாங்கி வா' என்று இவரை அனுப்புவாராம்.  சமயத்தில் காசு இல்லா விட்டால் நீ வாங்கித்தா என்று இவர்களை கேட்பாராம்.  

மறுபக்கங்கள்!  

இவர் பாரதனோடேயேதான் இருப்பாராம்.  'வைசாலி' ன்னு ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்தார்.  அவரை மாதிரி எல்லாம் யார் சார் எடுப்பாங்க' என்கிறார் அண்ணாதுரை.  

பயங்கரமா படம் வரைவாராம் பரதன்,  ஒருநாள் 'ஹெர்பல்' போட்டு விட்டு ஒரு பேப்பரில் ஒரு பெண் படம் வரைந்தாராம்.  ஒரு பெண் பக்கவாட்டில் பார்ப்பது போல தோள்பட்டை வரை படம்.  'ஸ்ரீவித்யா மாதிரி இருக்கு சார்' என்று இவர் சொல்ல, அவர் 'எழுந்து வெளியே போடா' ன்னுட்டாராம்.  இருவருக்கும் காதல் இருந்து, கல்யாணம் வரை போனது எல்லாம் இவருக்குத் தெரியாதாம்.  பயங்கரமான லவ் என்கிறார்.   மேனஜர் விஜயன் அப்புறம் சொன்னாராம்.  ஒருநாள் கஞ்சா அடிச்சுட்டு ஸ்ரீவித்யான்னு நினச்சு இன்னொருத்திக்கு தாலிய கட்டிட்டார்.  வாழ்வே மாயம் படத்துல அம்பிகா ஸ்ரீதேவியா மாறுவங்களே அப்படி..


======================================================================================

ஜோக்ஸ்...







51 கருத்துகள்:

  1. விரைவில் பஜ்ஜி சாப்பிட்டுக்கொள்ளுங்கள். கடைகளில் இனி வெரைட்டி ரைஸ் தவிர வேறு கிடைக்காதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   இப்போதைய சூழ்நிலை கலவரமாகத்தான் இருக்கிறது.  நேற்று சென்னை முழுவதும் கடைகளில் மக்கள் வெள்ளம்.  அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.  பெட்ரோல் பங்க்குகளில் வரிசை கட்டி கூட்டம்.

      நீக்கு
  2. பாவ் பாஜின்னதும் எனக்கு பல நினைவலைகள் உண்டாகுது.

    அம்மா பண்ணித் தராத ஐட்டம் என்பதால் பத்து வருடங்களுக்கு மேல் நான் இதைச் சாப்பிடாமல் இருந்தேன். பசங்களுக்கு பண்ணுவா, ஆனால் நான் சாப்பிடுவதில்லை.

    பிறகு அதன் ருசி பிடித்துப்போயிற்று.

    கடையில் பத்து பைசா பெறாத பன்னுக்கு, எக்ஸ்ட்ரா பன் முப்பது ரூபாய்னு சொல்றானே என பஹ்ரைனில் தோன்றும். ஆனால் பசங்கள்ட இதைச் சொல்ல முடியாதில்லையா?

    எனக்கு பாவ் ஜெரிப்பதில்லை. வடாபாவ் சாப்பிட ஆசை. எதுக்கு வம்பு என இன்னும் சாப்பிட்டுப் பார்க்கலை, மும்பை பகுதிகளில் பயணித்திருந்த போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதுவரை வடாபாவ் சாப்பிட்டதில்லை. மகன்கள் 'வா..  ஒரு வடசென்னை கடைக்குப் போகலாம்' என்று அழைத்தும் நான் போகவில்லை. இந்த இரண்டிலும் சுவையில் பெரிய விருப்பமில்லை.

      நீக்கு
  3. செம்பூவே பூவே பாடல் வரிகள் சுத்தமா பிடிக்கலை. இதை எழுத கவிஞர்னு ஒருத்தர் வேணுமோ? ஒரு வேளை இசை நல்லாருக்கும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயவு செய்து பாடலைக் கேளுங்கள் நெல்லை.  எதிர்ப்பில்லா மனதுடன் கேளுங்கள்! டாக்டர் நாராயணன் பேசியதைக் கேட்டு விட்டு அந்த நுணுக்கங்களையும் கவனியுங்கள்.

      நீக்கு
  4. இடிந்த வீட்டிற்கு துரை செல்வராஜு சார் எழுதிய கவிதையை ரசித்தேன்.

    உடைந்த கற்களுக்குள் கர்ஜனைகள் சிரிப்பொலிகள் படிந்திருக்கைம்தானே.

    மனதை என்னவோ செய்யும் வரிகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. துரை செல்வராஜு சார் எழுதிய கவிதையைப் படித்தகோது,

    குலதெய்வம் மற்றும் பல கோயில்களில் இறைவனைத் தரிசிக்கும்போது, தெய்வத்தையும் அவன் முகத்தில் அவனைத் தரிசித்த முன்னோர்களையும் தேடும் எண்ணம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  குலதெய்வம் கோவிலில் நிற்கும்போது, நம் அப்பாவுக்கும் அங்கேதான் முடி இறக்கி இருப்பார்கள், தாத்தாவுக்கும் முடி இங்குதான் இறக்கி இருப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் வந்து மனம் நெகிழும்.  பெரிய கோவில்களில் நிற்கும்போது நம் சமயக்குரவர்களும் மன்னவர்களும் காலடி பட்ட இடம் என்றும் தோன்றும்.

      நீக்கு
  6. கோட் போட்டுக்கொள்ளும் நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு போடும் நகைச்சுவைகளை சில வாரம் கழித்து பேஸ்புக்கில் போடுவேன்.  அப்படி நேற்று 'சிரிப்பு வராட்டி அடிக்க வராதீங்க'ன்னு போட்டு சில பழைய ஜோக்ஸ் ஷேர் செய்திருந்தேன்.  பார்த்தால், அவற்றை எழுதிய கீழை அ கதிர்வேல், மற்றும் பால பழனி இருவர் வந்து கமெண்ட் போட்டு விட்டார்கள்!

      நீக்கு
  7. இரண்டு பாடல்களும் அருமையான செலக்ஷன். டாக்டர் நாராயணனின் விளக்க்ம் icing on the cake.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஆஹா நன்றி சூர்யா ஸார்.. வாங்க.. இது மாதிரி ரசனைகள் மனதை சந்தித்தோஷப் படுத்துகின்றன.

      நீக்கு
  8. தவானின் மனைவி ஆஸ்ட்ரேலியன் ஸிட்டிஸன். இந்திய கோர்ட்டின் தீர்ப்பு அவரைக் கட்டுப்படுத்துமா? சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதையும் செய்தியில் சொல்லி இருக்கிறார்கள்.  ஆனால் அவரால் ஜஸ்ட் லைக் தாட் இப்போது பணம் கறக்க முடியாது இல்லையா?!!

      நீக்கு
  9. காலியாக வைத்திருக்கவே
    மனம் விரும்புவதில்லை
    மற்றவரிடம்
    பெற்றதைப் போலவே
    கொடுக்கவும் விரும்புகிறது
    நிரம்புவதும் நிரம்பியதைத்
    தந்து மகிழ்வதும்
    மாற்றி மாற்றி நடப்பதால்
    வழிவதற்கு வாய்ப்பேயில்லாத
    நிதர்சனம் நடக்கிறது.
    இதுவே வாழ்வின் பயனாக
    பெற்றதும் பெற்றதைக்
    கொடுத்ததும் எக்கச்சக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை ஜீவி ஸார்.. நீங்கள் சொல்லி இருப்பதைதான் நான் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  10. அண்ணாதுரை பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் சுவைக்கும்படியாய் இருந்தன. சிவாஜி பெரும்பாலும் ஜாதிப்பெயரையோ மதப் பெயரையோ வைத்துத்தான் சக கலைஞர்களை அழைப்பது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன்தான் அப்படி இருந்தாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகிய நெருக்கத்தால் அப்படி இருந்திருக்கலாம்.  அதை யாரும் தவறாக எடுக்கவில்லை என்பது தெரிகிறதே...

      நீக்கு
    2. அவர் அந்தக் கால ஆளு. அப்போதெல்லாம் ஜாதிப் பெயரோ இல்லை மதப் பெயரோ, மனதில் காயப்படுத்தும் எண்ணமில்லாமல் விகல்பமில்லாமல் சொல்லப்படுவது. கேட்பவர்களுக்கும் வித்தியாசமாகத் தெரியாது. வாய்நா ராவுத்தரு, செட்டியாரைக் காணோமே என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் ஏவிஎம்ஐக்கூட, செட்டியார்ட்ட பேசிட்டேன் என்றுதானே சொல்வார்கள்.

      ஆனால் இந்த மனது ஐம்பது வருடங்களில் மாறிவிட்டது. மனதில் விகல்பம் குடிகொண்டுவிட்டது.

      ஒரு சில வருடங்களுக்கு முன்னால் பொதுக் குழுவில், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான் எனப் பகிர்ந்ததற்கு ஒருவர், ஏன் ஒருமைல என் ஜாதியைச் சொல்றீங்கன்னு கேட்டார். ஒருவேளை தச்சர், வெட்டமாட்டார்னு பழமொழியை மாத்தியிருக்கணுமோ தெரியலை.

      நீக்கு
    3. நான் உல்ட்டா செய்த ஒரு பாட்டிலோ, அலலது ஒரிஜினல் பாட்டிலோ வண்ணான் என்றோ வேறு ஏதோ வார்த்தைகள் வந்தபோது பேஸ்புக்கில் அதற்கு எதிர்ப்பு வந்தது.

      நீக்கு
    4. 'சிறை' படம் பற்றி முகநூலில் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். நான் கமெண்டில், இந்த படத்தை இப்போது எடுக்க முடியாது, ஜாதி,மதத்தையெல்லாம் இழுத்து அனுராதா ரமணனையு, ஆனந்த விகடனையும் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று எழுதினேன்.

      நீக்கு
  11. சிந்தாமணி தியேட்டரின் கெப்பாஸிட்டி 1500 க்கும் மேல் என்று படிக்கும்போதுப் பிரமிப்பாகத்தான் இருக்கின்றது. அவ்வளவு பெரிய தியேட்டரை நான் பார்த்ததேயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசியாவின் பெரிய தங்கம் தியேட்டரும் மதுரையில்தான் இருந்தது.  இப்போது அந்த தியேட்டர் தியேட்டராக இல்லை என்று நினைக்கிறேன்.  நான் இரண்டு தியேட்டர்களிலும் படம் பார்த்திருக்கிறேன்.  சிந்தாமணி அவ்வளவு பெரிய தியேட்டரா, தெரியாது.  சிந்தாமணியில் பார்க்கிங் கிடையாது.  சைக்கிளை வெளியே ரோடில்தான் நிறுத்த வேண்டும்.  அதனால் நான் அதிகம் அங்கு சென்றதில்லை.

      நீக்கு
    2. திருச்சி கலையரங்கம் கூட பெருசுதான். பின்னால் அதற்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்று பெயர் மாற்றினார்கள். திருச்சியின் முதல் ஏ.ஸி.தியேட்டர். இப்போதுஅதுவும் திருமண மண்டபமாக மாறி விட்டது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. அப்படியா?  தங்கம் அதைவிட பெரிது.  ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்று அப்போது பெயர் பெற்றிருந்தது.  வாங்க பானு அக்கா.

      நீக்கு
  12. பக்கத்து சீட்டுக்காரர் தட்டில் பாவ் பாஜி பார்த்தேன்.//

    ஸ்ரீராம்!! அப்ப நீங்க போற ஹோட்டலில் பகக்த்து சீட்காரர் பெரும்பாலும் பாவ்பாஜி தான் சாப்பிடுவார் போல இல்ல அந்த டேபிளே பாவ்பாஜி டேபிளோ!!!! முன்னயும் நீங்க போயிருந்தப்ப பக்கத்து சீட்காரர் பாவ்பாஜி சாப்பிட்டார்...

    நீங்க கூட ஆர்டர் பண்ணீங்களே!!!!! ஒருறை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா..  ஆ...   ஆனால் இதுவரை நான் வடாபாவ் சாப்பிட்டதில்லை என்பது மட்டும் உண்மை!!

      நீக்கு
  13. பதிவின் தேதியைப் பார்த்துக் கொண்டேன் ஸ்ரீராம். ஹிஹிஹி ஏன்னா முன்னயும் இதே சீஸ் என்றும் எழுதியிருந்தது!!!!

    ஆனா சம்பவம் வேறு!!! அப்ப நீங்க ராகுலுக்கு ஃபோன் போட்டு பாவ்பாஜி எப்படிச் சாப்பிடணும்னு கேட்ட நினைவு!!!!ஹாஹாஹா

    இந்த முறையும் அதையே ஆர்டர் செஞ்சீங்களோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ.. மீளா? இது வேற புது பாவ் கீதா..

      நீக்கு
  14. சீஸ் போர்வை தெரியுதே!!

    ஹாஹா வடாபாவ் வேறு பாவ் பாஜி வேறாச்சே...இப்ப குழப்பாப்பம் இருக்காது என்று நினைக்கிறேன் இந்த அனுபவத்துக்குப் பிறகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.. நிச்சயம் இல்லை



      என்றுதான் நினைக்கிறேன்!



      நீக்கு
  15. அமைதிச்சாரலின் விளக்கத்தை ரசித்ததோடு அப்படியே டிட்டோ செய்யறேன் பாஜி கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்....பொதுவாகவே தென்னகத்தில் இப்படியான வட இந்திய உணவுகள் போங்காட்டம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி வெங்கட்டும் சொல்லி இருந்தார் என்று நினைவு.

      நீக்கு
  16. தில்லி/குருகிராமம் சென்றாலும் கூட வட இந்திய உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும் அங்க போய் ஏடுபி ல சீட் தேடக் கூடாது. என் தங்கை ஒரு முறை இந்த ஏடுபிக்குக் கூட்டிச் சென்றாள் குருகிராமத்தில் அங்கு நாங்க சாட் ஆளுக்கு ஒரு ஐட்டம் எல்லாரும் எல்லாத்தையும் டேஸ்ட் பங்கு....ஆனால் எனக்கு என்னவோ தென்னகம் போலவே இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன மாற்றி மாற்றி இரண்டு ஐடிகளில் வருகிறீர்கள்?

      ஆம், எல்லா சுவையகளையும் பார்பபது நல்லது.  அதையும் ஒருமுறை!  அல்லது எதையும் ஒருமுறை!  விரும்பினால் தொடரலாம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் என்னுடைய ஐடி கருத்து போட மறுக்கும் சமயங்களில் மற்ற ஐடியில் வருகிறேன் அதில் மறுப்பில்லாமல் தருகிறது.

      ரொம்ப நேரம் எடுக்குது ஸ்ரீராம் இங்கு மாற்றி அங்கு மாற்றி என்று...சலிப்பும் வருகிறது பேசாமல் பழைய ஐடிலருந்தே போட்டிடலாம்னு...அது ப்ளாகோடு லிங்க் ஆகியிருப்பதால் துளசியின் பெயரில்தான் வரும்.

      வெங்கட்ஜி, பானுக்கா தளத்தில் பழைய ஐடிலருந்து போட்டாலும் ஆனாமதேயர் என்று போட்டு என் பெயரைப் போட்டுவிட முடிகிறது....

      கீதா

      நீக்கு
    3. காரணம் அவங்க வைத்திருக்கும் கமென்ட் மாடரேஷன் ஆப்ஷன்ஸ்...எங்கள் தளம் போல

      கீதா

      நீக்கு
    4. ஆமாம்..  ஆமாம்..  தெரியும்.  உங்கள் சிரமத்தை ஒரு தரம் சொன்னால் பாரம் தீருமேன்னு கேட்டேன்! 
       
      "உந்தன் சோகம் சொன்னால்
      உன் ஏக்கம் போய்விடும். 
      எந்தன் சோகம் சொன்னால்
      உன் தூக்கம் போய்விடும்"

      நீக்கு
  17. அந்தப் பையன் அப்புறம் இன்னொருவர் வருவாரே டீ கப்புடன் சிர்ப்புடன்!

    அச்சிறுவனைப் அப்ற்றிய தகவல் என்ன என்று பார்க்க வேண்டும் இங்கு க்ளிக்கினால் போகலையே

    அதே போல அந்தக் கிரிக்கெட் வீரர் செய்தியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'மீம்ஸ் அந்த சிரிப்பு நிஜம்' என்பதை க்ளிக் செய்யுங்கள்.  தவான் செய்திக்கு லிங்க் கொடுக்கவில்லை.

      நீக்கு
  18. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படத்திற்கான துரை செல்வராஜூ ஜியின் கவிதை மனதைத் தொட்டது.

    டாக்டர் சொன்ன விளக்கங்கள் நன்று.

    நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. பரதன் அவர்களுக்கு சென்னை கே.கே.நகரில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் வீடு இருந்தது. யானை கூட இருக்கும். அவர் மறைவுக்குப் பிறகு அதை பரதன் டவர்ஸ் என்று அடுக்கு மாடி குடியிருப்பாக மாற்றி விட்டார்கள்.
    அவருடைய இரண்டாவது மனைவி(என்று நினைக்கிறேன்) லலிதாவும் மலையாள நடிகை. அவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சுவாமிஜி ஒருவரின் மடிப்பிச்சை எடுத்து மாவிளக்கு போடச் சொன்ன ஆலோசனையின் பேரில் எங்கள் அம்மாவிடம் மடிப்பிச்சை வாங்குவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுஅவர் நடிகை என்பது எனக்குத் தெரியாது. மஸ்கட் சென்று மலையாள படங்கள் பார்க்கத் தொடங்கியதும்தான் அட! இவரா? என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட... பிரபலங்களுடன் சர்வ சாதாரணமாக பழகி இருக்கிறீர்கள். பரதன் யானை வளர்த்தாரா?

      நீக்கு
  20. இந்த முறை எல்லா ஜோக்குகளுக்கும் சிரிப்பு வருகிறது. முக்கியமாக முதல் மூன்று ஜோக்குகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!