நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
12.3.26
இன்னிக்கி மாத்திரம் இந்தப் பாடல்களை 1000 வாட்டி கேட்கலாம்...
பஜ்ஜி சாப்பிட்டு 15 நாட்களாகி விட்டன.
எனவே நடைப்பயிற்சிக்கு நடுவே இன்று ஏதாவது சாப்பிடலாம், தப்பில்லை!
இன்று என்ன சாப்பிட வேண்டும் என்று நேற்றே தீர்மானித்து விட்டேன். நேற்று அஸ்வினில் தேநீர் அருந்தும் போது பக்கத்து சீட்டுக்காரர் தட்டில் பாவ் பாஜி பார்த்தேன்.
நேற்று அமாவாசை என்பதால் நான் சாப்பிடவில்லை.
தஞ்சையில் இருந்தபோது என்னுடைய நண்பர் ராஜு, தன் அண்ணன் மகனை தூக்கிக்கொண்டு பேசுவதற்கு வருவார். அந்த அண்ணன் மகனை பாஜி என்று கூப்பிடுவார்கள். அவன் பெயர் பாலாஜி என்பதும், அதை சுருக்கமாக லாவை எடுத்துவிட்டு பாஜி என்று கூப்பிடுகிறார்கள் என்றும் பின்னர் தெரிந்தது.
எனவே பாவ் பாஜி என்கிற பெயரை கேட்டால் எனக்கு தவறாமல் அவன் நினைவு வந்து விடுகிறது!
"பாவ்" என்றால் ஏப்பம் விடுவது போல இருக்கிறது. ஒரு கதையில் அப்புசாமி தாத்தா அப்படித்தான் ஏப்பம் விடுவார். எனவே இது அஜீரண கோளாறு வராது என்று சொல்லலாம்!!
இவ்வாறு எல்லாம் மனதை தேற்றிக்கொண்டு பாவ்பாஜி ஆர்டர் செய்தேன். சீஸ் என்றும் எழுதியிருந்தது.
படத்தில் பாருங்கள்... கிரேவியின் மீது ஒரு சிறிய துணி போட்டு இருப்பது போல் தெரிகிறதா? அதுதான் சீஸ்!! பாவ் பாஜி இதுவரை சாப்பிட்டதில்லை என்பதால் எப்படி சாப்பிடுவது என்று ( !! ) மகனுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு பிரட் துண்டை பிளாட்பார்ம் போல் வைத்து, அதில் இரண்டு பன்னை ஒட்ட வைத்திருந்தது போல இருந்தது. அதன் நடுவில் ஏதோ இருந்தது போல் இருந்ததால் அதை அப்படியே எடுத்து கடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைப் பிரித்து வெங்காயத்தில் தொட்டு கிரேவியை தொட்டு சாப்பிடு என்றான் மகன். அவ்வண்ணமே செய்தேன்.
எனக்கு ருசிக்கவில்லை.
இதற்கு ஏன் ஸ்பூன் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை!
ஒரு லெமன் ஹனி டீயும் குடித்துவிட்டு பில் செட்டில் செய்யும் போது நினைவுக்கு வந்தது.....
நான் மனதுக்குள் சாப்பிட விரும்பியது பாவ் பாஜி அல்ல.. அதனால்தான் அப்படியே எடுத்துக் கடிக்க வேண்டும் என்று மனதுக்குள் தோன்றி இருந்திருக்கிறது. நான் சாப்பிட நினைத்தது
வடா பாவ். அது அந்தக் கடையில் இல்லை என்பது வேறு விஷயம்.
ஒரே குழப்பாப்பம்!
அமைதிச்சாரலின் விளக்கம்
பாவ்பாஜி கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். வெங்காயம், மல்லித்தழை தூவி பாவைப் பிய்த்து முக்கிச் சாப்பிட ஏதுவா இருக்கும். பாஜியை தனியாகவும் சாப்பிடலாம். சிலசமயம் விரும்பினால் பாவின் நடுவில் பாஜியைச் சற்றுத் தாராளமாக வெண்ணெய் போல் தடவி அப்படியே கடித்தும் சாப்பிடலாம். பாஜிக்காகத்தான் அந்த ஸ்பூன் வைக்கப்படுகிறது.
பொதுவாகவே தமிழ்நாட்டில் பாஜியை கெட்டியாக கூட்டு பதத்தில் ரெண்டு கரண்டி அளவுக்குத்தான் பரிமாறுகிறார்கள். வடக்கர்கள் இட்லி என்ற பெயரில் பேப்பர் வெயிட்டைப் பரிமாறுவது போல்..
குளிச்சப்புறம் சுத்த சாவேரி, ஜலதோஷம் வந்தா சிந்து பைரவின்னெல்லாம் சொல்ல வேண்டியதுதானே?
பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததிருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.
பழனி அடுத்த திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கொழுமம் அருகே குதிரையாற்றின் கரையில் பாழடைந்த கோயிலில் தற்பலி சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இந்த சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது: பொதுவாக கடவுளுக்கு ஆடு, கோழி போன்ற உயிரினங்கள் பலியிடப்படும். அதேபோல, யாருடைய வற்புறுத்தலுமின்றி சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்களையே பலியிட்டுக் கொள்வது தற்பலி எனப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்ட சிற்பமும் தற்பலி சிற்பமாகும். அலங்காரங்களுடன் உள்ள திருநங்கை தன் தலையை தானே அறுத்துக்கொள்வது போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நவகண்ட சிற்பம் என்றும் அழைப்பா். இவா்கள் இறந்த பின் அவா்கள் நினைவாக ஊா் மக்கள் சிற்பம் வடிப்பது வழக்கம். இந்த வகையான தற்பலிகள் ஏதாவது வேண்டுதலுக்காக கொற்றவை தெய்வத்தின் முன் கொடுக்கப்படும்.
தற்பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு ஊா்மக்களும், அரசும் நிலங்களை கொடையாக அளிப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. இதுபோன்ற பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள் ‘உதிரப்பட்டி’, ’நவகாணி’, ’நெய்த்தோா்பட்டி’, ’உதிரக்காணி’ போன்ற பெயா்களில் அழைக்கப்படுவதை தமிழகத்தின் பல கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். இங்கு தற்பலி கொடுத்த திருநங்கை அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் காணப்படுகிறாா். மேலும் தலையில் அள்ளிமுடிந்த அழகிய கொண்டை, நெற்றிச் சுட்டி, நெற்றிப் பொட்டுடன் காணப்படுகிறாா். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்கள் உள்ளன. நீண்ட வாளை கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை மட்டுமே உள்ள ஆடையை அணிந்துள்ளாா். இடையின் இரு பகுதிகளிலும், முன் பகுதியிலும் உள்ள கொசுவம் இவா் ஒரு நாட்டிய நங்கை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே இவா் அருகில் உள்ள கொழுமம் வீர சோழீஸ்வரா் கோயில் தேவரடியாராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். சிற்பத்தின் அருகில் கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் மேல் விவரங்களை அறிய இயலவில்லை. சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு கி.பி. 12- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என உறுதிப்படுத்தலாம். கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள கொங்கு சோழ அரசா் வீரநாராயணரின் 8- ஆம் ஆட்சி நடைபெற்ற ஆண்டு கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் ‘திருவின் நங்கை’ எனும் தேவரடியாரைக் குறிப்பிடுவதில் இருந்து நவகண்டம் எனும் தற்பலி செய்த இவா் நாட்டிய நங்கையாக, கோயில் தேவரடியாராக, மூன்றாம் பாலினத்தவராக இருந்திருப்பாா் எனக் கருதலாம். இந்த சிற்பத்துக்கு அருகே உள்ள குளமும் தேவரடியாா் குளம் என்று அழைக்கப்படுவதால், தற்பலி கொடுத்த இவா் பெயராலேயே இந்தக் குளம் அழைக்கப்பட்டிருக்கலாம். கொழுமம் வீரசோழீஸ்வரா் கோயிலில் உள்ள வீரசோழரின் ஆணைக்கிணங்க அவரது அமைச்சா் பொறித்த ஓா் கல்வெட்டு, கரைவழிநாட்டு காளாபிடாரி கோயில் எனும் கொற்றவை கோயிலை குறிப்பிடுகிறது. எனவே பாழடைந்த இந்தக் கோயில்தான் பிடாரி என்ற கொற்றவை கோயில் எனக் கருதலாம். இந்த திருநங்கை எதற்காக தன்னைத் தானே பலி கொடுத்தாா் எனத் தெரியவில்லை. மகாபாரதத்தில் அரவான் குருசேத்திர போா் தொடங்கும் முன்பு நவகண்டம் செய்து கொண்டதாக குறிப்பு இருக்கிறது. இவரும் தனது அரசனின் ஏதோ ஒரு போருக்காக தன்னைத் தானே பலி கொடுத்திருக்கலாம். அதை அடியொற்றி இங்கு நவகண்டம் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம். இது தமிழகத்தில் கண்டறியப்படும் முதல் திருநங்கை நவகண்டச் சிற்பமாகும் என்றாா் அவா்.
மதுரை சிந்தாமணி தியேட்டர் சில பெருமைகளை உடையது. சிந்தாமணி என்னும் படம் தந்த வசூலில் கட்டப்பட்டு அதே பெயரை தாங்கி நின்றது. 1943 ல் அதற்கு ஒரு விளம்பரம்..
நான் இளையராஜாவின் பரம ரசிகன். அவர் திறமை எல்லாம் அளவிட முடியாதது. அவ்வப்போது நான் கேட்டு அறிந்து கொள்வதை இங்கும் உங்களுக்குத் தருகிறேன். அந்த இசை மேதைமை இறைவன் அவருக்கு கொடுத்த வரம். "நீ போய் இந்திய மக்களை உன் இசையால் சந்தோஷப்படுத்து" என்று சரஸ்வதி தேவி அனுப்பி இருக்கிறார். இங்கே டாக்டர் நாராயணன் சொல்லி இருக்கும் பாடல்களில் இரண்டை இன்று தருகிறேன். எனக்கும் மிக மிக மிக பிடித்த பாடல்கள். குறிப்பாக 'என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட' பாடல்.
சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத்தான் இருக்கிறது. இந்தச் சுயசரிதைக் குறிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலாற்றில் மறைந்துபோய்விட்டார்கள். ‘திருச்சி ஜெயில்’ ஒரு விசித்திரமான நூல். வதைகளைப் பற்றியது. ஆனால் உல்லாசமாக எழுதப்பட்டிருக்கிறது. - ஜெயமோகன்
*********
1940-ஆம் வருஷம் டிஸம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் சத்தியாக்கிரகம் செய்வது நல்லது என்ற அபிப்பிராயத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் சுமிட்டித் தலைவர் தாமே ஒவ்வொரு சத்தியாக்கிரகியையும் நேரில் சந்தித்து அறிவித்திருந்தார். டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி காலை நான் சத்தியாக்கிரகம் செய்வதன ஏற்பாடாகியிருந்தது. தென்காசித் தாலூகா காங் கிரஸ் கமிட்டித் தலைவர் என்ற முறையில் தென்காசியிலேயே நான் சத்தியாக்கிரகம் செய்வதாகத் தீர்மானித்திருந்தேன். ஆனால், நவம்பர் 30-ஆம் தேதியன்று தென்காசித் தொகுதி யின் அஸெம்பிளி அங்கத்தினர் தென்காசி வந்து யுத்த எதிர்ப்பு லிகிதங்கள் அனுப்புவதன் மூலம் சத்தியாக்கிரகம் செய்வதெனத் தீர்மானிந்தார். எனவே, நான் என் தொகுதி யான சங்கரன்கோவிலில் சந்தியாக்கிரசும் செய்வதென்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று. டிஸம்பர் மாதம் 20-ஆம் தேதி, திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்டிரேட்டுக்கு நான் அடியில்கண்ட லிகிதம் எழுதி, நேரில் அன்னார் காரியாலயத்தில் கொண்டுபோய்க் கொடுத்தேன் :
திருநெல்வேலி 2-12-40 அன்பார்ந்த ஐயா,
வருகின்ற டிஸம்பர் மாதம் 4-ந் தேதி காலை பத்தரை மணிக்கு சங்கரநயினார்கோயில் கோமதி அம்மன் சந்நிதானத்தின் முன்பு யுத்த எதிர்ப்புக் கோஷங்கள் செய்யப் போகிறேன். காந்திஜியின உத்தரவின்படி இந்த முறையில் நான் சத்தியாக்கிரகம் செய்யப் போகிறேன் என்பதைத் தங்களுக்கு அறிவிக்கிறேன்.
தங்கள் அன்பன்,
எல். எஸ். கரையாளர்.
செங்கோட்டையில் என் நண்பர்களிடத்திலும் உற வினர்களிடத்திலும் நான் விடைபெற்றுக்கொண்டேன். ஜெயிலுக்குப் போக விடை கொடு' என்றால் யாருமே சந் தோஷமாக விடை கொடுப்பதில்லை.ஆனால் நான் ஜெயிலுக்குப் போகத்தான் வேண்டும் என்பதை மாத்திரம் எல் லோரும் உணர்ந்தார்கள். எனது சிறிய தகப்பனாருடைய மனைவியார் என்னை ஆசிர்வதித்து, குங்குமத் திலகமிட்டு,சீக் கிரமே சுகமாசுத் திரும்பி வரும்படி வாழ்த்தி அனுப்பினார்.
4உ காலை 9-30 மணிக்கு நான் சங்கரநயினார் கோவில் ரயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன்.ஸ்ரீ. எஸ். என். அம்பலவாண பிள்ளையும் அங்கு வந்திருந்தார். சரியாகப் பத்தரை மணிக்கு, கோமதி அம்மன் சந்நிதானத்தில் போய் நின்றேன். மூன்று வருஷங்களுக்கு முன்னால் இதே சந்நிதானத்தில்தான் முதன் முதலாகத் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும்போது நான் சொன்னது எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
'தெய்வ சந்நிதானத்தில் சொல்லுகிறேன். உங்கள் முன்னிலையில் காங்கிரஸ் கிழித்த கோட்டை நான் தாண்டமாட்டேன்.' அன்று நான் சொன்னது இதுதான். அன்று நான் பேசிய கூட்டத்திற்கும் இன்று நான் கண்ட கூட்டத்திற்கும் வித்தியாசம் இருந்தது. அன்று நான் பார்த்த கூட்டம் ஆரவாரக் கூட்டம்; தேர்தலில் காங்கிரஸ் கலந்துகொள்ளவேண்டுமென்று உணர்ச்சி மிகுதி யுடன் வந்து ஒலித்துக்கொண்டிருந்த கூட்டம்; அடிக்கடி கைதட்டி என்னை உற்சாகப்படுத்திய கூட்டம்; வெற்றி எனக்கே என்பதை உறுதிப்படுத்துவதற்கு அறிகுறியாக வந்த கூட்டம்.
இன்றைக் கூட்டம் அப்படியன்று, அங்கு கூடியிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் உணர்ச்சி ததும்பியிருந்தது பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் இருந்தும், அமைதி ஆச்சரியப்படத்தக்கதாயிருந்தது. அடுத்த நிமிஷம் ஒருவர் கைதியாகிறார் என்ற எண்ணம் இந்திய மனப்பான்மைக்கு ஒத்ததன்று என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். ஆனால் அந்தப் பெரிய கூட்டத்தில் நான் கைது செய்யப் படும் தருவாயில் இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கைது செய்வதற்குவேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். நான் வரும் வழியெல்லாம் போலீஸ். சுற்றுமுற்றும் எங்கணும் போலிஸ். கூட்டம் நடக்குமிடத் தில் ஸ்தல போலீஸ் உத்தியோகஸ்தர் அனைவரும் வந்திருந்தனர். மோட்டாரும் தயாராயிருந்தது.
கூட்டத்தில் மூச்சு விட்டால் சப்தம் கேட்கும். அவ்வளவு அமைதி.எனக்கும் உணர்ச்சி அதிகமாகத்தான் இருந்தது. சரியாகப் பத்தரை மணிக்கு நான் சொன்ன தாவது:
*பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிக்குப் பணத்தாலோ ஆள் பலத்தாலோ உதவி செய்வது தவறு. அஹிம்ஸா முறையி லேயே எல்லா யுத்தங்களையும் எதிர்ப்பதே சரியான வழி யாகும்?
முதலில் இதை ஆங்கிலத்திலும், பிறகு தமிழி லும் சொன்னேன். போலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஒரு கணம் திகைத்தார்கள். இவ்வளவு கூட்டத்தினிடையே ஒருவரைக் கைது செய்வது அவர்களுக்குக் கொஞ்சம் அருவருப்பாக இருந்திருக்கலாம். அல்லது இவ்வளவுதான் காங் கிரஸ் ' ஸ்லோகன்' என்று தெரியாமலும் இருந்திருக்கலாம்.
*நான் கடமையைச் செய்துவிட்டேன். இனி போலீஸ் காரர்கள் தான் சுடமையைச் செய்யவேண்டும்' என்று ஞாபக மூட்டினேன்.போலீஸ் அணுகினார்கள். உத்தியோகஸ்தர்கள் என்னை
'போகலாமா?'
"எங்கே ?"
'பின்னால் கார் இருக்கிறது!"
"எங்கே போகவேண்டும் ?'
"போலீஸ் ஸ்டேஷனுக்கு.'
வாரண்டு இருக்கிறதா ?"
'போகலாமே!"
ஆகவே, நான் கைது செய்யப்பட்டேன். அமைதியே உருவாக இருந்த கூட்டம் அப்படியே ஆரவாரித்து எழுந்தது. ஒரு காரில் அரை நிமிஷத்தில் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகப்பட்டேன். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு, கோவில்பட்டி ஸப்-டிவிஷனல் மாஜிஸ்டிரேட் முன்பு என்னை ஆஜர் செய்வித்து, போலீஸார் இரவு ரிமாண்டு வாங்கினர். கோவில்பட்டியில் ரிமாண்டில் இருக்கும்போது நான் சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கரைச் சந்தித்தேன். அவருக்கு முப்பத்தி மூன்று வயதிருக்கும். பல மாதங்களாகத் திருநெல்வேலி ராமநாத புரம் ஜில்லாக்களில் பயங்கரமான புயல் காற்றின் வேகத்தில் பல கொள்ளை கொலைக் குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட இவர் பார்ப்பதற்கு ரொம்பவும் சாதுவாயிருந்தார். கறுப்பு நிறம், கம்பீரமான பார்வை ; அரையில் ஒரு கதர் வேஷ்டி. உடம்பு முழுதும் மறைக்கும்படி ஒரு கதர் சால்வை. இவர் இரண்டு ஜில்லாக்களிலும்
நூற்றுக்கணக்கான கிராமங்களை ரிஸர்வ் போலீஸாரின் கையிலேயே ஒப்படைக்கவேண்டிய அளவுக்குப் பீதி உண்டாக்கியவர். இவர் சம்பந்தமாக ரிஸர்வ் போலீஸார் கையாண்ட முறையைக் கண்டித்துத் திருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் நான் முறையிட்டிருக்கிறேன்.
இதே கந்தசாமி நாயக்கர் கொலைக் குற்றத்திற்காகத தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு ஹைகோர்ட்டு உத தாவை எதிர்பார்த்துத் திருச்சி சிறையில் 'கண்டத்தில் வைக்கப்பட்டுப் பிறகு தூக்கிடப்பட்டார்........
ஸ்வர்ணலதா : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
ஸ்வர்ணலதா : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும்
ஸ்வர்ணலதா : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
ஸ்வர்ணலதா : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
ஸ்வர்ணலதா : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
ஸ்வர்ணலதா : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும்
SPB : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே
SPB : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
தேவர் மகன் - சிவாஜி, இயக்குனர் பரதன் அனுபவங்கள் பற்றி மேக்கப்மேன் மகன் அண்ணாதுரை போட்டோகிராபர்.
சிவாஜியிடம் இயக்குனர் பரதன் முன்கூட்டியே இதுல நீங்க நடிக்கக் கூடாது.. வாழணும் என்று சொல்லி விட்டாராம். அவர் அதிகமாக நடித்து விடக்கூடாது என்பதற்காக! ஒரு நாள் ஷூட்டிங்கில் சிவாஜி புடைவைகள் விநியோகம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்து மீசை முறுக்குவது போல காட்சி. இயக்கிக் கொண்டிருந்த பரதன் அருகிலிருந்த P C ஸ்ரீராமிடம் 'அதிகமா தொடுத்து.. கொஞ்சம் குறைச்சுக்கலாமோ' என்று சொல்லி இருக்கிறார். அதை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு மலையாளி உதவி புகைப்படக்காரர் -இளவயது, பெரிய மலை போன்ற உருவம் - அப்படியே சிவாஜியின் அருகே சென்று "அதிகமா இருக்கு.. குறைச்சுக்கோ.. குறைச்சுக்கோ.. என்றாராம்.
சிவாஜி ஒரு பார்வை பார்த்து விட்டு "யப்பா பரதா.. நீ பெரிய டைரக்டர்.. அவார்டெல்லாம் வாங்கி இருக்கே.. நீ சொல்லு.. இந்த எருமை கிட்ட எல்லாம் ஏன் சொல்லச்சொல்றே" என்றதும் செட்டில் சிரிப்பு பரவியதாம்.
இவர் போட்டோ ஸ்டில் எடுக்க காத்திருந்தபோது பரதன் இவரிடம் சொன்னாராம்.. அவரைத் தொடர்ந்து நீயும் போ.. வா... அவர் திடீர்னு நின்னு நடிப்பார்.. நடப்பார்.. ரெடியா இரு" என்றாராம்.
சிவாஜி பஞ்சாயத்தில் அவமானப்படுத்தப்பட்டு கோபத்துடன் நடந்து வரும் காட்சியை பரதன் சொல்லித்தரவில்லை. 'நீங்க பாத்து நடிங்க' என்று சொல்லி விட்டார். சிவாஜிதான் மாவு ஆட்டும் வசனத்துக்கெல்லாம் ஆக்ஷன் கொடுத்து நடித்தாராம். அப்படி அவர் நடந்து வரும்போது ஓரிடத்தில் சட்டென்று வேஷ்டியை தூக்கிக் கட்டினாராம். இவர் "ஸார்.. ஸ்டில்.." என்று ஞாபகப்படுத்தியபோது 'நடந்து வரும்போது இந்த இடத்துல மார்க் பண்ணிக்கோ.. அந்த இடத்துல வேஷ்டியை மடிச்சு கட்டுவேன்' என்றாராம்.. சரியாக அந்த இடத்தில அதே போல செய்தாராம்.
"நான் செத்துப் போயிடுவேனா... அவ்வளவுதானா.. டேய்.. என்னை அனுப்பிடாதீங்கடா... இன்னும் கொஞ்சம் சீன்ஸ் குடுங்கடா.. ஜாலியா இருக்கு" ம்பாராம். வடிவேலு ஒரு மேடையில் தேவர் மகன் படத்தில் அழுத காட்சி பற்றி சொன்னது மிகை என்றார். சொன்னார்... ஆனால் சாதாரணமாக சொன்னார் என்கிறார் அண்ணாதுரை.
நாசர் எங்கேயோ மலேஷியாவில் மாட்டிக் கொள்ள அவர் இடத்தில சலீம் கௌஸ்ஸை போடலாம் என்று சொன்னபோது பரதன் பிடிவாதமாக நாசர்தான் வேண்டும் வரட்டும் என்று சொல்லி விட்டாராம். துணை இயக்குனர்கள் சிவாஜியிடம் வந்து 'உங்களுக்கு 18 நாட்கள் காட்சி இருக்காது. நாசர் வெளி நாட்டில் இருக்கிறார்' என்றதும் சிவாஜி, "பொய் சொல்லாதீங்கப்பா.. சும்மா பயமுறுத்தாதீங்க.. பாய் வந்துடறேன்னு சொல்லி இருக்கான்" என்றாராம்.
இயக்குனர் பரதன் கடைசி காலத்தில் போதைக்கு அடிமையானது தனக்குப் பிடிக்கவில்லை என்றார் அண்ணாதுரை . 'இத்தனைக்கும் லிக்கர் தவிர ஹெர்பல் எல்லாம் உபயோகிப்பார், நான்தான் அதை எம் ஜி ஆர் நகர் கிட்ட சூரப்பள்ளம்ன்னு ஒரு இடம் இருக்கு.. அங்கிருந்து வாங்கித்தருவேன்' என்கிறார். 'அவர் மனைவியும் கேன்சர் வந்து இறந்துவிட்டார்' என்றாலும் அவர் தனது பணமெல்லாம் பரதனின் மருத்துவச்செலவுக்கு செலவானது என்று பரதன் மரணத்துக்குப்பின் சொன்னது அப்பட்டமான பொய் என்கிறார். பரதன் வாங்கும் அட்வான்ஸ் உட்பட எல்லாமே அவர் மனவி கைக்குதான் போகுமாம். ஒரு சிகரெட் வாங்க வேண்டுமென்றால் கூட 'சேச்சி கிட்டப்போய் ஆயிரம் ரூபா வாங்கி வா' என்று இவரை அனுப்புவாராம். சமயத்தில் காசு இல்லா விட்டால் நீ வாங்கித்தா என்று இவர்களை கேட்பாராம்.
மறுபக்கங்கள்!
இவர் பாரதனோடேயேதான் இருப்பாராம். 'வைசாலி' ன்னு ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்தார். அவரை மாதிரி எல்லாம் யார் சார் எடுப்பாங்க' என்கிறார் அண்ணாதுரை.
பயங்கரமா படம் வரைவாராம் பரதன், ஒருநாள் 'ஹெர்பல்' போட்டு விட்டு ஒரு பேப்பரில் ஒரு பெண் படம் வரைந்தாராம். ஒரு பெண் பக்கவாட்டில் பார்ப்பது போல தோள்பட்டை வரை படம். 'ஸ்ரீவித்யா மாதிரி இருக்கு சார்' என்று இவர் சொல்ல, அவர் 'எழுந்து வெளியே போடா' ன்னுட்டாராம். இருவருக்கும் காதல் இருந்து, கல்யாணம் வரை போனது எல்லாம் இவருக்குத் தெரியாதாம். பயங்கரமான லவ் என்கிறார். மேனஜர் விஜயன் அப்புறம் சொன்னாராம். ஒருநாள் கஞ்சா அடிச்சுட்டு ஸ்ரீவித்யான்னு நினச்சு இன்னொருத்திக்கு தாலிய கட்டிட்டார். வாழ்வே மாயம் படத்துல அம்பிகா ஸ்ரீதேவியா மாறுவங்களே அப்படி..
வாங்க நெல்லை... இப்போதைய சூழ்நிலை கலவரமாகத்தான் இருக்கிறது. நேற்று சென்னை முழுவதும் கடைகளில் மக்கள் வெள்ளம். அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள். பெட்ரோல் பங்க்குகளில் வரிசை கட்டி கூட்டம்.
நானும் இதுவரை வடாபாவ் சாப்பிட்டதில்லை. மகன்கள் 'வா.. ஒரு வடசென்னை கடைக்குப் போகலாம்' என்று அழைத்தும் நான் போகவில்லை. இந்த இரண்டிலும் சுவையில் பெரிய விருப்பமில்லை.
குலதெய்வம் மற்றும் பல கோயில்களில் இறைவனைத் தரிசிக்கும்போது, தெய்வத்தையும் அவன் முகத்தில் அவனைத் தரிசித்த முன்னோர்களையும் தேடும் எண்ணம் நினைவுக்கு வந்தது.
உண்மை. குலதெய்வம் கோவிலில் நிற்கும்போது, நம் அப்பாவுக்கும் அங்கேதான் முடி இறக்கி இருப்பார்கள், தாத்தாவுக்கும் முடி இங்குதான் இறக்கி இருப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் வந்து மனம் நெகிழும். பெரிய கோவில்களில் நிற்கும்போது நம் சமயக்குரவர்களும் மன்னவர்களும் காலடி பட்ட இடம் என்றும் தோன்றும்.
இங்கு போடும் நகைச்சுவைகளை சில வாரம் கழித்து பேஸ்புக்கில் போடுவேன். அப்படி நேற்று 'சிரிப்பு வராட்டி அடிக்க வராதீங்க'ன்னு போட்டு சில பழைய ஜோக்ஸ் ஷேர் செய்திருந்தேன். பார்த்தால், அவற்றை எழுதிய கீழை அ கதிர்வேல், மற்றும் பால பழனி இருவர் வந்து கமெண்ட் போட்டு விட்டார்கள்!
காலியாக வைத்திருக்கவே மனம் விரும்புவதில்லை மற்றவரிடம் பெற்றதைப் போலவே கொடுக்கவும் விரும்புகிறது நிரம்புவதும் நிரம்பியதைத் தந்து மகிழ்வதும் மாற்றி மாற்றி நடப்பதால் வழிவதற்கு வாய்ப்பேயில்லாத நிதர்சனம் நடக்கிறது. இதுவே வாழ்வின் பயனாக பெற்றதும் பெற்றதைக் கொடுத்ததும் எக்கச்சக்கம்.
அண்ணாதுரை பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் சுவைக்கும்படியாய் இருந்தன. சிவாஜி பெரும்பாலும் ஜாதிப்பெயரையோ மதப் பெயரையோ வைத்துத்தான் சக கலைஞர்களை அழைப்பது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன்தான் அப்படி இருந்தாரோ?
அவர் அந்தக் கால ஆளு. அப்போதெல்லாம் ஜாதிப் பெயரோ இல்லை மதப் பெயரோ, மனதில் காயப்படுத்தும் எண்ணமில்லாமல் விகல்பமில்லாமல் சொல்லப்படுவது. கேட்பவர்களுக்கும் வித்தியாசமாகத் தெரியாது. வாய்நா ராவுத்தரு, செட்டியாரைக் காணோமே என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் ஏவிஎம்ஐக்கூட, செட்டியார்ட்ட பேசிட்டேன் என்றுதானே சொல்வார்கள்.
ஆனால் இந்த மனது ஐம்பது வருடங்களில் மாறிவிட்டது. மனதில் விகல்பம் குடிகொண்டுவிட்டது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னால் பொதுக் குழுவில், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான் எனப் பகிர்ந்ததற்கு ஒருவர், ஏன் ஒருமைல என் ஜாதியைச் சொல்றீங்கன்னு கேட்டார். ஒருவேளை தச்சர், வெட்டமாட்டார்னு பழமொழியை மாத்தியிருக்கணுமோ தெரியலை.
'சிறை' படம் பற்றி முகநூலில் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். நான் கமெண்டில், இந்த படத்தை இப்போது எடுக்க முடியாது, ஜாதி,மதத்தையெல்லாம் இழுத்து அனுராதா ரமணனையு, ஆனந்த விகடனையும் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று எழுதினேன்.
ஆசியாவின் பெரிய தங்கம் தியேட்டரும் மதுரையில்தான் இருந்தது. இப்போது அந்த தியேட்டர் தியேட்டராக இல்லை என்று நினைக்கிறேன். நான் இரண்டு தியேட்டர்களிலும் படம் பார்த்திருக்கிறேன். சிந்தாமணி அவ்வளவு பெரிய தியேட்டரா, தெரியாது. சிந்தாமணியில் பார்க்கிங் கிடையாது. சைக்கிளை வெளியே ரோடில்தான் நிறுத்த வேண்டும். அதனால் நான் அதிகம் அங்கு சென்றதில்லை.
திருச்சி கலையரங்கம் கூட பெருசுதான். பின்னால் அதற்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்று பெயர் மாற்றினார்கள். திருச்சியின் முதல் ஏ.ஸி.தியேட்டர். இப்போதுஅதுவும் திருமண மண்டபமாக மாறி விட்டது என்று நினைக்கிறேன்.
அமைதிச்சாரலின் விளக்கத்தை ரசித்ததோடு அப்படியே டிட்டோ செய்யறேன் பாஜி கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்....பொதுவாகவே தென்னகத்தில் இப்படியான வட இந்திய உணவுகள் போங்காட்டம்!!
தில்லி/குருகிராமம் சென்றாலும் கூட வட இந்திய உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும் அங்க போய் ஏடுபி ல சீட் தேடக் கூடாது. என் தங்கை ஒரு முறை இந்த ஏடுபிக்குக் கூட்டிச் சென்றாள் குருகிராமத்தில் அங்கு நாங்க சாட் ஆளுக்கு ஒரு ஐட்டம் எல்லாரும் எல்லாத்தையும் டேஸ்ட் பங்கு....ஆனால் எனக்கு என்னவோ தென்னகம் போலவே இருந்தது.
ஸ்ரீராம் என்னுடைய ஐடி கருத்து போட மறுக்கும் சமயங்களில் மற்ற ஐடியில் வருகிறேன் அதில் மறுப்பில்லாமல் தருகிறது.
ரொம்ப நேரம் எடுக்குது ஸ்ரீராம் இங்கு மாற்றி அங்கு மாற்றி என்று...சலிப்பும் வருகிறது பேசாமல் பழைய ஐடிலருந்தே போட்டிடலாம்னு...அது ப்ளாகோடு லிங்க் ஆகியிருப்பதால் துளசியின் பெயரில்தான் வரும்.
வெங்கட்ஜி, பானுக்கா தளத்தில் பழைய ஐடிலருந்து போட்டாலும் ஆனாமதேயர் என்று போட்டு என் பெயரைப் போட்டுவிட முடிகிறது....
அப்ப லிங்க் வர மறுத்தது ஸ்ரீராம் இப்ப வருது. நெட் ரொம்பப் படுத்தல் இதுவும் போரின் விளைவா!!!!
மீம்ஸ் சிறுவன் அருண் மற்றும் அவரது ஓனர் நேரு பற்றியும் வாசித்துவிட்டேன் மனதை நெகிழ்ச்சியடையச் செய்த செய்தி. நேரு நல்ல ஓனர். இருவரும் நல்லபடியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அச்சிறுவன் இன்னும் படிக்க வேண்டும் கண்டிப்பாகப் படிப்பான் நேருவின் சப்போர்ட் இருக்கும் போது!!
பரதன் அவர்களுக்கு சென்னை கே.கே.நகரில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் வீடு இருந்தது. யானை கூட இருக்கும். அவர் மறைவுக்குப் பிறகு அதை பரதன் டவர்ஸ் என்று அடுக்கு மாடி குடியிருப்பாக மாற்றி விட்டார்கள். அவருடைய இரண்டாவது மனைவி(என்று நினைக்கிறேன்) லலிதாவும் மலையாள நடிகை. அவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சுவாமிஜி ஒருவரின் மடிப்பிச்சை எடுத்து மாவிளக்கு போடச் சொன்ன ஆலோசனையின் பேரில் எங்கள் அம்மாவிடம் மடிப்பிச்சை வாங்குவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுஅவர் நடிகை என்பது எனக்குத் தெரியாது. மஸ்கட் சென்று மலையாள படங்கள் பார்க்கத் தொடங்கியதும்தான் அட! இவரா? என்று தோன்றியது.
இரண்டு பாடல்களுமே நிறைய தடவை கேட்டு ரசித்தவை. இரண்டாவது பாடலில் பெண் குரல் சுவர்ணலதாவினுடையதா? நான் ஜானகி என்று நினைத்திருந்தேன். இன்றைக்கு கேட்கும்பொழுது ஜானகி+சுசீலாவின் இனிமை தெரிகிறது. பாவம் இளம் வயதில் மறைந்துவிட்டார். டாக்டர் நாரயணனின் விளக்கம் அருமை.
1000 வரட்டி கேட்கலாம் என்று படித்தேன், அதான் தலைப்பை. வடா பாவ் என்பது பாவ் பன்னுக்குள் உருளைக்கிழங்கு போண்டா வைத்து சாப்பிடுவது. கூடுதல் கிறீன் சட்னி சீஸ் டொமட்டோ சாஸ் போன்றவை பன்னில் வைக்கப்படுவதும் உண்டு. கேரளத்தில் டைரக்டர் பரதன் டைரக்டர் என்பதை விட KPAC லலிதாவின் கணவர் என்றே எலலோரும் மதிப்பது. KPAC லலிதா என்பவர் மனோரமா ஆசசியைப் போன்று நடிப்பாற்றல் மிக்கவர். Jayakumar
நாராயணன் அவர்கள் கலக்குகிறார், ஸ்ரீராம். ரொம்ப ரொம்ப மீண்டு ம் ரசித்தேன். ஏற்கனவே கேட்டு ரசித்தது என்றாலும் தலைப்பு கூட ஒரு சைஃபர் கூடப் போட்டுக்கலாம் அல்லது infinite....என்றும் ...
என்ன ஒரு ஆழமான அலசல். டாக்டர் இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறாரா? ஸ்ரீராம்
ஹாஹாஹா ஆமாம் இடையிடையே என் ஐடிக்கு ரெஸ்ட் கொடுத்து போட்டாதான் போடுது....அதான் இடையில் மற்ற வேலைகள்..பாருங்க மீண்டும் போட மாட்டேங்குது....2, 3 நிமிஷம் போதாதாம் ரெஸ்ட்!!!
சரிதான் நெல்லை. ஆனால் எனக்குமே இது ஸ்ரீரங்கம் வந்தப்புறமாத்தான் தெரியும். அம்பேரிக்காவிலே வட இந்தியக்கடைகளில் சீஸ் பாவ், சீஸ் தோசை எனக் கொடுக்க ஆரம்பிச்சது தெரியும். அதுக்கு அப்புறமா இங்கே இந்தியாவில் கூட இப்படி இருக்குனு 2015 க்கு அப்புறமாத் தெரிஞ்சு கொண்டேன். இப்போ சர்வ சகஜமாக ஸ்ரீரங்கம் ஓட்டல்களில் சீஸ் தோசை, பட்டர் தோசைனு கிடைக்கும் அதே வேளையில் சாட் கடைகளிலும் சீஸ் பாவ்கள் கிடைக்கின்றன.
சுதந்திரப் போராட்ட தியாகிகளை, இப்போதுள்ள அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு எண்ணும்போது, சுத்த பைத்தியக்கார்ர்களாக இருந்திருக்கிறார்களே. அவங்க மனைவி, எதிர்காலத்துக்குப் போயிட்டு திரும்பவும் வாழும் காலத்திற்கு வரும் வசதி இருந்திருந்தால், ஒவ்வொரு சு.கோ.வீர்ருக்கும் விளக்குமாறு அடிநிச்சயம் கிடைத்திருக்கும். அப்படி எண்ண வைக்கிறது இன்றைய மக்களின் மனோபாவம், அவர்களுக்கு ஏற்ற அரசியல்வாதிகள்.
பாட்டு பாட்டு பாட்டு... பாட்டுதான் கீதா!!! காணொளி பின்னர் மியூட்டில் வைத்து கூட ரசிக்கலாம்! மணி படம். பாட்டு தலைவர் பின்னி பெடலெடுத்திருப்பார். மலையாள டப்பிங்.
கரையாளர் அவர்களின் புத்தக விஷயங்கள் நிறைய விஷயங்களைக் கொடுப்பதோடு என்னென்ன போராட்டங்கள் நடந்திருக்கும் என்றும் எண்ண வைக்கின்றன. காட்சிகளாய் மனதில் விரிகிறது வாசிக்கும் போது.
நல்ல டைரக்டர் பரதனின் மறுபக்கங்கள்! இப்படியா என்று தோன்றியது.
அவரது மனைவி கே பி சி லலிதாவா? அவங்க நடிகையாச்சே. அருமையான நடிகை. ஒரு வேளை இரண்டாவது மனைவியோ அப்படினா? இதுவரை கேபிசி தான் அவர் மனைவி என்று நினைத்தேன் இதை வாசிக்கும் போது இரண்டாவதாக இருக்கும்னு தெரிகிறது.
என் பிறந்தகத்தில் நல்லெண்ணெயும், தேங்காய் எண்ணெயும் மட்டுமே வாங்குவார்கள். மற்றபடி காய்ச்சிய நெய் வாங்குவாங்க. நல்லேண்ணெயில் தான் பஜ்ஜி, பகோடா, வடை, போண்டா போன்றவைகள் செய்யப்படும். பக்ஷணங்கள், அப்பளம், வடாம் பொரித்தால் தே.எண்ணெய். பூரி மட்டும் காய்ச்சிய நெய்யில். அதோடு இல்லை பொதுவாக ஸ்ராத்தங்களில் நல்லெண்ணெயும் தே, எண்ணெயும் தான் பயன்பாட்டில் இருக்கும். இன்றளவும் அப்படித் தான். என் மாமியார் வீட்டில் கருவிலியில் இருந்தவரை தென்னந்தோப்பு இருந்ததால் தே. எண்ணெய் அதிகம் பயன்பாடு. பின்னாட்களில் நல்லெண்ணெய். கடலை எண்ணெய் இப்போத் தான் வாங்க ஆரம்பித்தேன்.
கரையாளர் என்ற பெயரையும் அவரது அனுபவங்களையும் இன்றே முதல்முறையாக வாசிக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகளில் கண்ணுக்கு மருந்து போடுவது படிக்க முடியலை. என் கண்ணுக்கும் மருந்து போடணுமோனு நினைக்கிறேன்.
வியாழக்கிழமையைப் பலரின் எழுத்துக்களோடு மாற்றி அமைத்து வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய துரையின் கவிதை அருமை. பாத்திரமும் அழகு. கவிதையும் அழகு. இந்தக் கிரிக்கெட் வீரர்கள் பற்றி இப்போல்லாம் அதிகம் தெரிஞ்சுக்கறதில் ஆர்வம் காட்டுவதில்லை. :( பெரும்பாலானவர்கள் சம்பாதிக்கும் அளவுக்கு நன்மைகள் செய்யறாங்களானு புரியலை.
பாவ் பன் "டபுள் பன்" என்னும் பெயரில் தமிழகத்தின் தேநீர்க்கடைகளில் சாலையோரக் கடைகளில் கூட சர்வ சாதாரணமாய்க் கிடைக்கும் ஒண்ணு. பாஜி தனியாப் பண்ணிக்கணும். சீஸை பாவின் உள்ளே தான் வைப்பாங்க. இப்படி பாஜி மேல் போட மாட்டாங்க. க்ரீம் இருந்தால் சூடான பாஜி மேல் அலங்காரத்துக்காகக் கோலம் போல் விடுவதுண்டு. சீஸை பாவின் உள்ளே வைச்சு லேசாகச் சூடு பண்ணிக் கொண்டு பாஜியையும் உள்ளே வைத்துச் சாப்பிட்டுக்கலாம். அல்லது பாஜியைத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வெங்காயம், எலுமிச்சை, உப்பு, தக்காளி எல்லாம் அபிடைசர் போலப் பயன்படும். எல்லாவற்றையும் கலந்து வைச்சுண்டு அவ்வப்போது கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு பாவை பாஜியோடு ஒரு கடி, பாஜியைத் தொட்டுக் கொண்டு ஒரு கடினு சாப்பிடணும். சாதாரணமாக பாவு எனப்படும் இந்த பன் இனிப்பாகவே இருப்பதால் பாஜி காரமாகத் தான் பண்ணுவாங்க.வெண்ணெய், எண்ணெய், காரம் எல்லாமே தூக்கலாக இருக்கும். நான் சொல்லுவது ஒரிஜினல் மஹாராஷ்ட்ரா பாஜி/அல்லது மும்பையில் கிடைக்கும் பாஜினு கூட வைச்சுக்கலாம்.
பாவ் வடா முற்றிலும் வேறே. சாதாரணமாக நாம் ப்ரெட் வாங்குவது போல் வட மாநிலங்களில் இந்தப் பாவும் நிறைய வாங்கி வைச்சுப்பாங்க. பாவு வடாவுக்கு வடா செய்யத் தேவையானவை உ.கி. காரப்பொடி, உப்பு, மசாலாப் பொடி, கொ.ம.அம்சூர் பொடி, சாட் மசாலாப் பொடி, எலுமிச்சைச் சாறு போன்றவை உள் பூரணத்துக்கு. வடா தயாரிக்க மேல் மாவுக்கு அநேகமாக மைதா மாவு தான். உப்பு, கொஞ்சம் சமயல் சோடா கலந்து மாவை பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொண்டு பூரணத்தைப் பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொண்டு இந்த மேல் மாவில் போட்டுத் தோய்த்துக் கொண்டு காயும் எண்ணெயில் பொரித்தெடுத்து போண்டா உருவத்தில் எடுத்து வைப்பார்கள். இவற்றில் இரண்டை பாவின் உள்ளே வைக்கணும். அதுக்கு முன்னால் பாவைச் சூடு பண்ணிக் கொண்டு இரண்டாகப் பிளந்து கொண்டு உள்ளே வெண்ணெய், கார, உப்பு, மசாலாப் பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்த கலவையை எண்ணெயில் கலந்து வைச்சிருப்பாங்க. அதையும் பாவின் உள்ளே சீராகத் தடவிக்கொண்டு இந்த போண்டாவை, (அவங்க வடானு சொல்லுவாங்க) அந்த இரட்டை பன்களின் உள்ளே வைச்சு ஒரு தட்டில் பச்சைச் சட்னி, ஒரு தட்டில் புளி இனிப்புச் சட்னி வைத்துக் கொண்டு அவற்றில் தோய்த்துக் கொண்டு போண்டாவையும் பன்னையும் சேர்த்தே கடித்துச் சாப்பிடணும். இரட்டை பன்களில் உள்ள அந்த இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. ஒரு ஆலத்தில் இது ஒரு ரூபாய்க்கு மும்பையில் கிடைத்தது. இது விலை ஏறிய போது சிவசேனா கட்சிக்காரங்க போராட்டமெல்லாம் நடத்தினாங்க. நம்ம ஊரில் அரசியல் கட்சிகள் கஞ்சித் தொட்டி வைக்கிறாப்போல் அவங்க நிறையப் பாவுகளை வாங்கி பாவு வடா தயார் செய்து மக்களுகு ஒரு ரூபாய் விலையில் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதெல்லாம் ஒரு காலம்.
பொதுவாகவே தமிழ்நாட்டில் வட இந்திய உணவு வகைகள் பெரும்பாலும் தமிழக முறைப்படியே சமைக்கப் படுகிறது. அதிலும் இந்த சாட் வகைகள். சுத்தமாய்த் தமிழர்களுக்குப் புரியலை. எப்படிக் கொடுக்கணும்னு. பாஜியும் செய்யத் தெரியாது. பாவு வடாவும் செய்யத் தெரியாது. ஏதோ இருக்கும். சுவையில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். பஞ்சாபிக்காரங்க செய்த இட்லியைச் சாப்பிடுவதைப் போல.
எப்படி இருந்தாலும் நான் சாப்பிடப் போவதில்லை! நான் பானி பூரி, பேல்பூரியே சாப்பிடமாட்டேன்! சாதா பூரியும், சோளே பூரியும் சாப்பிடுவேன்.!சோளே பூரி கூட எப்போதாவதுதான்.
ரொம்ப வருடங்கள், பரதன் என்பவர் கமலின் பினாமி, தான் டைரக்ட் பண்ணுவது தெரியக்கூடாது என்று ஒரு பினாமி பெயரை உபயோகித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
நல்ல திறமை உள்ளவங்க காசைச் சேர்த்து வச்சுக்கறதில்லை, இல்லைனா குடி மற்றும் பல பழக்கங்களில் இழந்துடறாங்க. என்ன செய்ய?
விரைவில் பஜ்ஜி சாப்பிட்டுக்கொள்ளுங்கள். கடைகளில் இனி வெரைட்டி ரைஸ் தவிர வேறு கிடைக்காதாம்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... இப்போதைய சூழ்நிலை கலவரமாகத்தான் இருக்கிறது. நேற்று சென்னை முழுவதும் கடைகளில் மக்கள் வெள்ளம். அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள். பெட்ரோல் பங்க்குகளில் வரிசை கட்டி கூட்டம்.
நீக்குஇது என்ன கூத்து? இங்கே நாங்களே அப்படி வாங்கி எல்லாம் வைச்சுக்கறதில்லை. ஆனாலும் தமிழகம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.
நீக்குஎப்பவுமே அப்படிதானேக்கா? வாங்க.. வாங்க...
நீக்குபாவ் பாஜின்னதும் எனக்கு பல நினைவலைகள் உண்டாகுது.
பதிலளிநீக்குஅம்மா பண்ணித் தராத ஐட்டம் என்பதால் பத்து வருடங்களுக்கு மேல் நான் இதைச் சாப்பிடாமல் இருந்தேன். பசங்களுக்கு பண்ணுவா, ஆனால் நான் சாப்பிடுவதில்லை.
பிறகு அதன் ருசி பிடித்துப்போயிற்று.
கடையில் பத்து பைசா பெறாத பன்னுக்கு, எக்ஸ்ட்ரா பன் முப்பது ரூபாய்னு சொல்றானே என பஹ்ரைனில் தோன்றும். ஆனால் பசங்கள்ட இதைச் சொல்ல முடியாதில்லையா?
எனக்கு பாவ் ஜெரிப்பதில்லை. வடாபாவ் சாப்பிட ஆசை. எதுக்கு வம்பு என இன்னும் சாப்பிட்டுப் பார்க்கலை, மும்பை பகுதிகளில் பயணித்திருந்த போதும்.
நானும் இதுவரை வடாபாவ் சாப்பிட்டதில்லை. மகன்கள் 'வா.. ஒரு வடசென்னை கடைக்குப் போகலாம்' என்று அழைத்தும் நான் போகவில்லை. இந்த இரண்டிலும் சுவையில் பெரிய விருப்பமில்லை.
நீக்குசெம்பூவே பூவே பாடல் வரிகள் சுத்தமா பிடிக்கலை. இதை எழுத கவிஞர்னு ஒருத்தர் வேணுமோ? ஒரு வேளை இசை நல்லாருக்கும் போலிருக்கு.
பதிலளிநீக்குதயவு செய்து பாடலைக் கேளுங்கள் நெல்லை. எதிர்ப்பில்லா மனதுடன் கேளுங்கள்! டாக்டர் நாராயணன் பேசியதைக் கேட்டு விட்டு அந்த நுணுக்கங்களையும் கவனியுங்கள்.
நீக்குஇடிந்த வீட்டிற்கு துரை செல்வராஜு சார் எழுதிய கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஉடைந்த கற்களுக்குள் கர்ஜனைகள் சிரிப்பொலிகள் படிந்திருக்கைம்தானே.
மனதை என்னவோ செய்யும் வரிகள். பாராட்டுகள்.
__/\___
நீக்குதுரை செல்வராஜு சார் எழுதிய கவிதையைப் படித்தகோது,
பதிலளிநீக்குகுலதெய்வம் மற்றும் பல கோயில்களில் இறைவனைத் தரிசிக்கும்போது, தெய்வத்தையும் அவன் முகத்தில் அவனைத் தரிசித்த முன்னோர்களையும் தேடும் எண்ணம் நினைவுக்கு வந்தது.
உண்மை. குலதெய்வம் கோவிலில் நிற்கும்போது, நம் அப்பாவுக்கும் அங்கேதான் முடி இறக்கி இருப்பார்கள், தாத்தாவுக்கும் முடி இங்குதான் இறக்கி இருப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் வந்து மனம் நெகிழும். பெரிய கோவில்களில் நிற்கும்போது நம் சமயக்குரவர்களும் மன்னவர்களும் காலடி பட்ட இடம் என்றும் தோன்றும்.
நீக்குகோட் போட்டுக்கொள்ளும் நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது
பதிலளிநீக்குஇங்கு போடும் நகைச்சுவைகளை சில வாரம் கழித்து பேஸ்புக்கில் போடுவேன். அப்படி நேற்று 'சிரிப்பு வராட்டி அடிக்க வராதீங்க'ன்னு போட்டு சில பழைய ஜோக்ஸ் ஷேர் செய்திருந்தேன். பார்த்தால், அவற்றை எழுதிய கீழை அ கதிர்வேல், மற்றும் பால பழனி இருவர் வந்து கமெண்ட் போட்டு விட்டார்கள்!
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமையான செலக்ஷன். டாக்டர் நாராயணனின் விளக்க்ம் icing on the cake.
பதிலளிநீக்குஆஹா நன்றி சூர்யா ஸார்.. வாங்க.. இது மாதிரி ரசனைகள் மனதை சந்தித்தோஷப் படுத்துகின்றன.
நீக்குதவானின் மனைவி ஆஸ்ட்ரேலியன் ஸிட்டிஸன். இந்திய கோர்ட்டின் தீர்ப்பு அவரைக் கட்டுப்படுத்துமா? சந்தேகம்தான்.
பதிலளிநீக்குஆமாம். அதையும் செய்தியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவரால் ஜஸ்ட் லைக் தாட் இப்போது பணம் கறக்க முடியாது இல்லையா?!!
நீக்குகாலியாக வைத்திருக்கவே
பதிலளிநீக்குமனம் விரும்புவதில்லை
மற்றவரிடம்
பெற்றதைப் போலவே
கொடுக்கவும் விரும்புகிறது
நிரம்புவதும் நிரம்பியதைத்
தந்து மகிழ்வதும்
மாற்றி மாற்றி நடப்பதால்
வழிவதற்கு வாய்ப்பேயில்லாத
நிதர்சனம் நடக்கிறது.
இதுவே வாழ்வின் பயனாக
பெற்றதும் பெற்றதைக்
கொடுத்ததும் எக்கச்சக்கம்.
அருமை ஜீவி ஸார்.. நீங்கள் சொல்லி இருப்பதைதான் நான் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்!
நீக்குஅருமை ஜீவி சார்.
நீக்குஅண்ணாதுரை பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் சுவைக்கும்படியாய் இருந்தன. சிவாஜி பெரும்பாலும் ஜாதிப்பெயரையோ மதப் பெயரையோ வைத்துத்தான் சக கலைஞர்களை அழைப்பது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன்தான் அப்படி இருந்தாரோ?
பதிலளிநீக்குபழகிய நெருக்கத்தால் அப்படி இருந்திருக்கலாம். அதை யாரும் தவறாக எடுக்கவில்லை என்பது தெரிகிறதே...
நீக்குஅவர் அந்தக் கால ஆளு. அப்போதெல்லாம் ஜாதிப் பெயரோ இல்லை மதப் பெயரோ, மனதில் காயப்படுத்தும் எண்ணமில்லாமல் விகல்பமில்லாமல் சொல்லப்படுவது. கேட்பவர்களுக்கும் வித்தியாசமாகத் தெரியாது. வாய்நா ராவுத்தரு, செட்டியாரைக் காணோமே என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் ஏவிஎம்ஐக்கூட, செட்டியார்ட்ட பேசிட்டேன் என்றுதானே சொல்வார்கள்.
நீக்குஆனால் இந்த மனது ஐம்பது வருடங்களில் மாறிவிட்டது. மனதில் விகல்பம் குடிகொண்டுவிட்டது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னால் பொதுக் குழுவில், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான் எனப் பகிர்ந்ததற்கு ஒருவர், ஏன் ஒருமைல என் ஜாதியைச் சொல்றீங்கன்னு கேட்டார். ஒருவேளை தச்சர், வெட்டமாட்டார்னு பழமொழியை மாத்தியிருக்கணுமோ தெரியலை.
நான் உல்ட்டா செய்த ஒரு பாட்டிலோ, அலலது ஒரிஜினல் பாட்டிலோ வண்ணான் என்றோ வேறு ஏதோ வார்த்தைகள் வந்தபோது பேஸ்புக்கில் அதற்கு எதிர்ப்பு வந்தது.
நீக்கு'சிறை' படம் பற்றி முகநூலில் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். நான் கமெண்டில், இந்த படத்தை இப்போது எடுக்க முடியாது, ஜாதி,மதத்தையெல்லாம் இழுத்து அனுராதா ரமணனையு, ஆனந்த விகடனையும் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று எழுதினேன்.
நீக்குCorrect.
நீக்குஅதுபோலவே 'பாவமன்னிப்பு' படமும்.
நீக்குசிந்தாமணி தியேட்டரின் கெப்பாஸிட்டி 1500 க்கும் மேல் என்று படிக்கும்போதுப் பிரமிப்பாகத்தான் இருக்கின்றது. அவ்வளவு பெரிய தியேட்டரை நான் பார்த்ததேயில்லை.
பதிலளிநீக்குஆசியாவின் பெரிய தங்கம் தியேட்டரும் மதுரையில்தான் இருந்தது. இப்போது அந்த தியேட்டர் தியேட்டராக இல்லை என்று நினைக்கிறேன். நான் இரண்டு தியேட்டர்களிலும் படம் பார்த்திருக்கிறேன். சிந்தாமணி அவ்வளவு பெரிய தியேட்டரா, தெரியாது. சிந்தாமணியில் பார்க்கிங் கிடையாது. சைக்கிளை வெளியே ரோடில்தான் நிறுத்த வேண்டும். அதனால் நான் அதிகம் அங்கு சென்றதில்லை.
நீக்குதிருச்சி கலையரங்கம் கூட பெருசுதான். பின்னால் அதற்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்று பெயர் மாற்றினார்கள். திருச்சியின் முதல் ஏ.ஸி.தியேட்டர். இப்போதுஅதுவும் திருமண மண்டபமாக மாறி விட்டது என்று நினைக்கிறேன்.
நீக்குஅப்படியா? தங்கம் அதைவிட பெரிது. ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்று அப்போது பெயர் பெற்றிருந்தது. வாங்க பானு அக்கா.
நீக்குபக்கத்து சீட்டுக்காரர் தட்டில் பாவ் பாஜி பார்த்தேன்.//
பதிலளிநீக்குஸ்ரீராம்!! அப்ப நீங்க போற ஹோட்டலில் பகக்த்து சீட்காரர் பெரும்பாலும் பாவ்பாஜி தான் சாப்பிடுவார் போல இல்ல அந்த டேபிளே பாவ்பாஜி டேபிளோ!!!! முன்னயும் நீங்க போயிருந்தப்ப பக்கத்து சீட்காரர் பாவ்பாஜி சாப்பிட்டார்...
நீங்க கூட ஆர்டர் பண்ணீங்களே!!!!! ஒருறை
கீதா
அப்படியா.. ஆ... ஆனால் இதுவரை நான் வடாபாவ் சாப்பிட்டதில்லை என்பது மட்டும் உண்மை!!
நீக்குபதிவின் தேதியைப் பார்த்துக் கொண்டேன் ஸ்ரீராம். ஹிஹிஹி ஏன்னா முன்னயும் இதே சீஸ் என்றும் எழுதியிருந்தது!!!!
பதிலளிநீக்குஆனா சம்பவம் வேறு!!! அப்ப நீங்க ராகுலுக்கு ஃபோன் போட்டு பாவ்பாஜி எப்படிச் சாப்பிடணும்னு கேட்ட நினைவு!!!!ஹாஹாஹா
இந்த முறையும் அதையே ஆர்டர் செஞ்சீங்களோ!!
கீதா
அச்சச்சோ.. மீளா? இது வேற புது பாவ் கீதா..
நீக்குசீஸ் போர்வை தெரியுதே!!
பதிலளிநீக்குஹாஹா வடாபாவ் வேறு பாவ் பாஜி வேறாச்சே...இப்ப குழப்பாப்பம் இருக்காது என்று நினைக்கிறேன் இந்த அனுபவத்துக்குப் பிறகு
கீதா
இல்லை.. நிச்சயம் இல்லை
நீக்குஎன்றுதான் நினைக்கிறேன்!
அமைதிச்சாரலின் விளக்கத்தை ரசித்ததோடு அப்படியே டிட்டோ செய்யறேன் பாஜி கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்....பொதுவாகவே தென்னகத்தில் இப்படியான வட இந்திய உணவுகள் போங்காட்டம்!!
பதிலளிநீக்குகீதா
திருமதி வெங்கட்டும் சொல்லி இருந்தார் என்று நினைவு.
நீக்குதில்லி/குருகிராமம் சென்றாலும் கூட வட இந்திய உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும் அங்க போய் ஏடுபி ல சீட் தேடக் கூடாது. என் தங்கை ஒரு முறை இந்த ஏடுபிக்குக் கூட்டிச் சென்றாள் குருகிராமத்தில் அங்கு நாங்க சாட் ஆளுக்கு ஒரு ஐட்டம் எல்லாரும் எல்லாத்தையும் டேஸ்ட் பங்கு....ஆனால் எனக்கு என்னவோ தென்னகம் போலவே இருந்தது.
பதிலளிநீக்குகீதா
அதென்ன மாற்றி மாற்றி இரண்டு ஐடிகளில் வருகிறீர்கள்?
நீக்குஆம், எல்லா சுவையகளையும் பார்பபது நல்லது. அதையும் ஒருமுறை! அல்லது எதையும் ஒருமுறை! விரும்பினால் தொடரலாம்.
ஸ்ரீராம் என்னுடைய ஐடி கருத்து போட மறுக்கும் சமயங்களில் மற்ற ஐடியில் வருகிறேன் அதில் மறுப்பில்லாமல் தருகிறது.
நீக்குரொம்ப நேரம் எடுக்குது ஸ்ரீராம் இங்கு மாற்றி அங்கு மாற்றி என்று...சலிப்பும் வருகிறது பேசாமல் பழைய ஐடிலருந்தே போட்டிடலாம்னு...அது ப்ளாகோடு லிங்க் ஆகியிருப்பதால் துளசியின் பெயரில்தான் வரும்.
வெங்கட்ஜி, பானுக்கா தளத்தில் பழைய ஐடிலருந்து போட்டாலும் ஆனாமதேயர் என்று போட்டு என் பெயரைப் போட்டுவிட முடிகிறது....
கீதா
காரணம் அவங்க வைத்திருக்கும் கமென்ட் மாடரேஷன் ஆப்ஷன்ஸ்...எங்கள் தளம் போல
நீக்குகீதா
ஆமாம்.. ஆமாம்.. தெரியும். உங்கள் சிரமத்தை ஒரு தரம் சொன்னால் பாரம் தீருமேன்னு கேட்டேன்!
நீக்கு"உந்தன் சோகம் சொன்னால்
உன் ஏக்கம் போய்விடும்.
எந்தன் சோகம் சொன்னால்
உன் தூக்கம் போய்விடும்"
ஹாஹாஹாஹா.....அது சரிதான்! புலம்பிடுவேன் அப்பப்ப...பாட்டே பாடிட்டீங்க ஸ்ரீராம்!!!
நீக்குகீதா
அது வைரமுத்துவோட வரிகள்!
நீக்குஅந்தப் பையன் அப்புறம் இன்னொருவர் வருவாரே டீ கப்புடன் சிர்ப்புடன்!
பதிலளிநீக்குஅச்சிறுவனைப் அப்ற்றிய தகவல் என்ன என்று பார்க்க வேண்டும் இங்கு க்ளிக்கினால் போகலையே
அதே போல அந்தக் கிரிக்கெட் வீரர் செய்தியும்
கீதா
'மீம்ஸ் அந்த சிரிப்பு நிஜம்' என்பதை க்ளிக் செய்யுங்கள். தவான் செய்திக்கு லிங்க் கொடுக்கவில்லை.
நீக்குஅப்ப லிங்க் வர மறுத்தது ஸ்ரீராம் இப்ப வருது. நெட் ரொம்பப் படுத்தல் இதுவும் போரின் விளைவா!!!!
நீக்குமீம்ஸ் சிறுவன் அருண் மற்றும் அவரது ஓனர் நேரு பற்றியும் வாசித்துவிட்டேன் மனதை நெகிழ்ச்சியடையச் செய்த செய்தி. நேரு நல்ல ஓனர். இருவரும் நல்லபடியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அச்சிறுவன் இன்னும் படிக்க வேண்டும் கண்டிப்பாகப் படிப்பான் நேருவின் சப்போர்ட் இருக்கும் போது!!
கீதா
(Y)
நீக்குதகவல்கள் அனைத்தும் சிறப்பு. படத்திற்கான துரை செல்வராஜூ ஜியின் கவிதை மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குடாக்டர் சொன்ன விளக்கங்கள் நன்று.
நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்தேன்.
வாங்க... நன்றி வெங்கட்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
நீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குபரதன் அவர்களுக்கு சென்னை கே.கே.நகரில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் வீடு இருந்தது. யானை கூட இருக்கும். அவர் மறைவுக்குப் பிறகு அதை பரதன் டவர்ஸ் என்று அடுக்கு மாடி குடியிருப்பாக மாற்றி விட்டார்கள்.
பதிலளிநீக்குஅவருடைய இரண்டாவது மனைவி(என்று நினைக்கிறேன்) லலிதாவும் மலையாள நடிகை. அவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சுவாமிஜி ஒருவரின் மடிப்பிச்சை எடுத்து மாவிளக்கு போடச் சொன்ன ஆலோசனையின் பேரில் எங்கள் அம்மாவிடம் மடிப்பிச்சை வாங்குவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுஅவர் நடிகை என்பது எனக்குத் தெரியாது. மஸ்கட் சென்று மலையாள படங்கள் பார்க்கத் தொடங்கியதும்தான் அட! இவரா? என்று தோன்றியது.
அட... பிரபலங்களுடன் சர்வ சாதாரணமாக பழகி இருக்கிறீர்கள். பரதன் யானை வளர்த்தாரா?
நீக்குநீங்க வேற, அப்போது அவர் யாரென்றே தெரியாது.
நீக்கு:))
நீக்குஇந்த முறை எல்லா ஜோக்குகளுக்கும் சிரிப்பு வருகிறது. முக்கியமாக முதல் மூன்று ஜோக்குகள்.
பதிலளிநீக்குஅடடே.. ஆச்சர்யக்குறி.
நீக்குஇரண்டு பாடல்களுமே நிறைய தடவை கேட்டு ரசித்தவை. இரண்டாவது பாடலில் பெண் குரல் சுவர்ணலதாவினுடையதா? நான் ஜானகி என்று நினைத்திருந்தேன். இன்றைக்கு கேட்கும்பொழுது ஜானகி+சுசீலாவின் இனிமை தெரிகிறது. பாவம் இளம் வயதில் மறைந்துவிட்டார்.
பதிலளிநீக்குடாக்டர் நாரயணனின் விளக்கம் அருமை.
நன்றி பானு அக்கா.
நீக்கு1000 வரட்டி கேட்கலாம் என்று படித்தேன், அதான் தலைப்பை.
பதிலளிநீக்குவடா பாவ் என்பது பாவ் பன்னுக்குள் உருளைக்கிழங்கு போண்டா வைத்து சாப்பிடுவது. கூடுதல் கிறீன் சட்னி சீஸ் டொமட்டோ சாஸ் போன்றவை பன்னில் வைக்கப்படுவதும் உண்டு.
கேரளத்தில் டைரக்டர் பரதன் டைரக்டர் என்பதை விட KPAC லலிதாவின் கணவர் என்றே எலலோரும் மதிப்பது. KPAC லலிதா என்பவர் மனோரமா ஆசசியைப் போன்று நடிப்பாற்றல் மிக்கவர்.
Jayakumar
வாங்க JKC ஸார்.. சீக்கிரமே உங்களிடம் பழைய துள்ளலை எதிர்பார்க்கிறேன்.
நீக்குசிற்பம் அழகு. ஆனால் அதன் பின்னணிச் செய்தி மனதை வருத்துகிறது, ஸ்ரீராம். தகவல் புதியதும் கூட.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அதனால்தான் பகிர்ந்தேன் என்று சொல்லவும் வேண்டுமோ..
நீக்குநான் இளையராஜாவின் பரம ரசிகன். //
பதிலளிநீக்கு+1
நாராயணன் அவர்கள் கலக்குகிறார், ஸ்ரீராம். ரொம்ப ரொம்ப மீண்டு ம் ரசித்தேன். ஏற்கனவே கேட்டு ரசித்தது என்றாலும் தலைப்பு கூட ஒரு சைஃபர் கூடப் போட்டுக்கலாம் அல்லது infinite....என்றும் ...
என்ன ஒரு ஆழமான அலசல். டாக்டர் இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறாரா? ஸ்ரீராம்
கீதா
ஆயிரம் தடவை - கடைசில டாக்டர் சொல்வதும் கேட்டேன்...
நீக்குஅப்பெண்ணும் மிக நன்றாகப் பாடுகிறார். அவர் பெயர் மறந்துவிடுகிறது அடிக்டி இந்த யுட்யூப் பார்த்தாலும்...
ஃபோன் நம்பரும் கூட கர்நாடக தேவகாந்தாரி!!!!
கீதா
எனக்கும் அவர் பெயர் நினைவில்லை. அவர் சொல்கிறார்தான்.. ஆனால் அது கர்னாடக தேவகாந்தாரியா?
நீக்குடாக்டர் நாராயணன் மகா திறமைசாலி, மகா ரசிகர்.
நீக்குடிட்டோ! ஸ்ரீராம். அசாத்தியம்... குரலும்...ஆஹா
நீக்குகீதா
திருச்சி ஜெயில் கட்டுரை நன்றாக இருக்கிறது. ஜெயில் பற்றி கட்டுரை, சிறைச்சாலை படத்திலிருந்து பாடல். தற்செயலா?
பதிலளிநீக்குஅடடே,, ஆமாம்ல...
நீக்குதற்செயல்தான் என்பது மட்டுமல்ல இவ்வளவு நேரம் நானும் அதை நினைக்கவில்லை. சாதாரணமாக இதையெல்லாம் கமலா அக்காதான் பொருத்துவார்.
பதிலளிநீக்குமனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ம்யூஸிக்//
என்று டாக்டர் சொல்வதை அப்படியே அப்படியே அப்படியே பல டிட்டோக்கள்!
இத்தனைக்கும் ப்ளெயின் நோட்ஸ்!!!!! என்று அவர் சொல்வது..
பாருங்க ப்ளெயின் நோட்ஸைக் கூட அழகுற ஆக்க முடியும் என்பது ....ச்சே சான்ஸே இல்லை. வாய்ஸ் கன்ட்ரோல் டைனமிக்ஸ் இது தலைவருங்க!!!!! தலைவர்!
இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்...சிறைச்சாலை பாடல் இல்லையா?
கீதா
அவர் இசை தேவன் கீதா... கடவுளின் துளி.
நீக்குNo doubt and No alternative opinion! at all! ஸ்ரீராம்.
நீக்குகீதா
__/\__
நீக்குநிரம்ப விடாதே - கவிதை சூப்பர். ஏற்கனவே பகிர்ந்திருக்கீங்களோ ஸ்ரீராம்.
பதிலளிநீக்குச்சே எதை வாசிச்சாலும் ஏற்கனவே வாசிச்சாப்ல கேட்டாப்ல இருக்கே - தேஜாவு வா!!!
கீதா
மனதை காலியாக வைத்தால் எதையும் ஏற்று யோசிக்கும் திறனையும் கொடுக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல்!!!
நீக்குகீதா
// ஏற்கனவே பகிர்ந்திருக்கீங்களோ ஸ்ரீராம் //
நீக்குஇங்கில்லை. அவ்வப்போது இப்படி தேஜாவு உங்களுக்குத் தோன்றுவது என்ன விஷயம்னா இன்ஸ்ட்டாவில் போட்டேன். வழக்கம்போல உங்களுக்கும் அதை அனுப்பினேன்! அதுதான்!
ஹாஹாஹா புரிஞ்சு போச்....எனக்கும் அப்புறம் நினைவுக்கு வந்துச்சு!!! இன்ஸ்டா!
நீக்குகீதா
துரை அண்ணா உங்க கவிதை பிரமாதம்!!! போங்க!
பதிலளிநீக்குகீதா
Yes.
நீக்குஓ பாட்டும் கொடுத்திருக்கீங்களா!!! இப்படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையா இருக்கும்
பதிலளிநீக்குதலைவரும் சித்ரா கலக்கல்!
கீதா
ஓ.. இப்போதான் பாட்டுக்கே வர்றீங்களா?
நீக்குஹாஹாஹா ஆமாம் இடையிடையே என் ஐடிக்கு ரெஸ்ட் கொடுத்து போட்டாதான் போடுது....அதான் இடையில் மற்ற வேலைகள்..பாருங்க மீண்டும் போட மாட்டேங்குது....2, 3 நிமிஷம் போதாதாம் ரெஸ்ட்!!!
நீக்குகீதா
பாட்டை அனுபவிச்சு கேட்கணும். டிஸ்டர்பன்ஸ் எதுவும் இல்லாம ரசிக்கணும்.
நீக்குஅட! சிறைச்சாலைப் படப் பாடலைத் தொடர்ந்து திருச்சி சிறைச்சாலை பற்றி...பொருத்தமாகக் கொடுத்தீங்களா ஸ்ரீராம்? இல்லைனா ஏதேச்சையாகவா?
பதிலளிநீக்குகீதா
ரொம்ப ரொம்ப யதேச்சை கீதா. அப்படி அடுத்தடுத்து போட்டிருக்கேன்னு நானே உணரலை.
நீக்குஅட! இப்படிச் சில சமயங்களில் அமைந்துவிடுகிறது இல்லையா ஸ்ரீராம்
நீக்குகீதா
(Y)
நீக்குபாவ் பாஜியில் சீஸ் வைத்துத் தருகிறார்களா? ஒருத்தரும் கமென்ட் பண்ணவில்லையே
பதிலளிநீக்குஎன்ன ரசனையோ. இதுபோலத்தான் பனீர் பிட்சா
இன்னும் எவ்வளவோ புதுமைகள் இருக்கு.. இதுக்கே இப்படி சொன்னா எப்படி! ஐஸ்க்ரீம் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீங்களா?
நீக்குபாவ் பாஜில சீஸ் பாவ் குள்ள வைச்சு தருவாங்க. இதுல பாஜில போட்டிருக்காங்க.
நீக்குபாவ் பாஜி எனக்குப் பிடிக்கும் ஆனால் இங்கு ஹோட்டல்களில் பாஜி சுவை ஓகே ரகம் தான் நெல்லை
கீதா
எனக்குத் தெரிந்து பாவ் வை வெண்ணெயைத் தடவி கடாய்ல வச்சு சூடுபண்ணித் தருவாங்க. சீஸ் போட்டு நான் இதுவரை சாப்பிட்டதில்லை.
நீக்குசரிதான் நெல்லை. ஆனால் எனக்குமே இது ஸ்ரீரங்கம் வந்தப்புறமாத்தான் தெரியும். அம்பேரிக்காவிலே வட இந்தியக்கடைகளில் சீஸ் பாவ், சீஸ் தோசை எனக் கொடுக்க ஆரம்பிச்சது தெரியும். அதுக்கு அப்புறமா இங்கே இந்தியாவில் கூட இப்படி இருக்குனு 2015 க்கு அப்புறமாத் தெரிஞ்சு கொண்டேன். இப்போ சர்வ சகஜமாக ஸ்ரீரங்கம் ஓட்டல்களில் சீஸ் தோசை, பட்டர் தோசைனு கிடைக்கும் அதே வேளையில் சாட் கடைகளிலும் சீஸ் பாவ்கள் கிடைக்கின்றன.
நீக்குநான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் ஹோட்டல்களில் எவ்வளவு மாற்றங்கள்...
நீக்குகரையாளர் எழுதிய பகுதி படித்தேன். நல்லா இருக்கு.
பதிலளிநீக்குசுதந்திரப் போராட்ட தியாகிகளை, இப்போதுள்ள அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு எண்ணும்போது, சுத்த பைத்தியக்கார்ர்களாக இருந்திருக்கிறார்களே. அவங்க மனைவி, எதிர்காலத்துக்குப் போயிட்டு திரும்பவும் வாழும் காலத்திற்கு வரும் வசதி இருந்திருந்தால், ஒவ்வொரு சு.கோ.வீர்ருக்கும் விளக்குமாறு அடிநிச்சயம் கிடைத்திருக்கும். அப்படி எண்ண வைக்கிறது இன்றைய மக்களின் மனோபாவம், அவர்களுக்கு ஏற்ற அரசியல்வாதிகள்.
இது புத்தகத்தின் ஆரம்பம்தான். இன்னும் உள்ளே நிறைய இருக்கு பகிர...
நீக்குமுதல் பாடல் ரொம்ப இனிமையா இருக்கு.
பதிலளிநீக்குடப்பிங் படமா? அதான் வாயசைப்புக்கு ஏற்ற மாதிரி அர்த்தமில்லாத வார்த்தைகளா?
ஆமாம்.. ஶ்ரீராம் பாட்டு கேட்கச் சொன்னாரா இல்லை காணொளி பார்க்கச் சொன்னாரா?
காணொளிக்காக இதனைப் பகிர்ந்திருப்பாரோ? இருக்காது.. இருக்காது..
பாட்டு பாட்டு பாட்டு... பாட்டுதான் கீதா!!! காணொளி பின்னர் மியூட்டில் வைத்து கூட ரசிக்கலாம்! மணி படம். பாட்டு தலைவர் பின்னி பெடலெடுத்திருப்பார். மலையாள டப்பிங்.
நீக்குகரையாளர் அவர்களின் புத்தக விஷயங்கள் நிறைய விஷயங்களைக் கொடுப்பதோடு என்னென்ன போராட்டங்கள் நடந்திருக்கும் என்றும் எண்ண வைக்கின்றன. காட்சிகளாய் மனதில் விரிகிறது வாசிக்கும் போது.
பதிலளிநீக்குகீதா
இவருடன் பல பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் தியாகிகள் அந்த சிறையில் இருந்தனர். அவர்களை பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார். அவ்வப்போது பகிர்கிறேன்!
நீக்குநல்ல டைரக்டர் பரதனின் மறுபக்கங்கள்! இப்படியா என்று தோன்றியது.
பதிலளிநீக்குஅவரது மனைவி கே பி சி லலிதாவா? அவங்க நடிகையாச்சே. அருமையான நடிகை. ஒரு வேளை இரண்டாவது மனைவியோ அப்படினா? இதுவரை கேபிசி தான் அவர் மனைவி என்று நினைத்தேன் இதை வாசிக்கும் போது இரண்டாவதாக இருக்கும்னு தெரிகிறது.
கீதா
கேரளத்தில் கே பி சி லலிதா ரொம்ப ஃபேமஸ்
நீக்குகீதா
ஆனால் அவரை இவர் விரும்பி திருமணம் செய்யவில்லையாம். அதோடு அந்த பேமஸ் நடிகை ரொம்ப சுயநலமாமே...
நீக்குஜோக்குககளை ரசித்தேன்...புன்சிரித்தேன்
பதிலளிநீக்குஅது சரி இப்ப நமக்குமே சோளப் பொரிதான் போல...
நல்லெண்ணை இப்பவும் விலை கூடுதல்தான். பாருங்க அப்பவுமே அப்படிதான் போல.
பொதுவா பொரிக்க நல்லெண்ணை பயன்படுத்த மாட்டாங்களே
கீதா
ஆமாம். ஆனால் தேங்காயெண்ணெயில் பொரித்தால் வாசனையாக இருக்கும்.
நீக்குஎன் பிறந்தகத்தில் நல்லெண்ணெயும், தேங்காய் எண்ணெயும் மட்டுமே வாங்குவார்கள். மற்றபடி காய்ச்சிய நெய் வாங்குவாங்க. நல்லேண்ணெயில் தான் பஜ்ஜி, பகோடா, வடை, போண்டா போன்றவைகள் செய்யப்படும். பக்ஷணங்கள், அப்பளம், வடாம் பொரித்தால் தே.எண்ணெய். பூரி மட்டும் காய்ச்சிய நெய்யில்.
நீக்குஅதோடு இல்லை பொதுவாக ஸ்ராத்தங்களில் நல்லெண்ணெயும் தே, எண்ணெயும் தான் பயன்பாட்டில் இருக்கும். இன்றளவும் அப்படித் தான். என் மாமியார் வீட்டில் கருவிலியில் இருந்தவரை தென்னந்தோப்பு இருந்ததால் தே. எண்ணெய் அதிகம் பயன்பாடு. பின்னாட்களில் நல்லெண்ணெய். கடலை எண்ணெய் இப்போத் தான் வாங்க ஆரம்பித்தேன்.
கடலை எண்ணெய். அப்புறம் பாமாயில் உபயோகித்து பிடிக்காமல்போய் கார்டியா லைஃப் கொஞ்ச நாள் கோல்டுவின்னர்!
நீக்குகரையாளர் என்ற பெயரையும் அவரது அனுபவங்களையும் இன்றே முதல்முறையாக வாசிக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகளில் கண்ணுக்கு மருந்து போடுவது படிக்க முடியலை. என் கண்ணுக்கும் மருந்து போடணுமோனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகரையாளர் பின்னாட்களில் எம் எல் சியாகவோ, எம் எல் ஏவாகவோ இருந்தார்.
நீக்குவியாழக்கிழமையைப் பலரின் எழுத்துக்களோடு மாற்றி அமைத்து வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய துரையின் கவிதை அருமை. பாத்திரமும் அழகு. கவிதையும் அழகு. இந்தக் கிரிக்கெட் வீரர்கள் பற்றி இப்போல்லாம் அதிகம் தெரிஞ்சுக்கறதில் ஆர்வம் காட்டுவதில்லை. :( பெரும்பாலானவர்கள் சம்பாதிக்கும் அளவுக்கு நன்மைகள் செய்யறாங்களானு புரியலை.
பதிலளிநீக்குநன்மை அவர்களால் என்ன கிடைக்கப்போகிறது! பொழுதுபோக்குதான்!
நீக்குபாவ் பன் "டபுள் பன்" என்னும் பெயரில் தமிழகத்தின் தேநீர்க்கடைகளில் சாலையோரக் கடைகளில் கூட சர்வ சாதாரணமாய்க் கிடைக்கும் ஒண்ணு. பாஜி தனியாப் பண்ணிக்கணும். சீஸை பாவின் உள்ளே தான் வைப்பாங்க. இப்படி பாஜி மேல் போட மாட்டாங்க. க்ரீம் இருந்தால் சூடான பாஜி மேல் அலங்காரத்துக்காகக் கோலம் போல் விடுவதுண்டு. சீஸை பாவின் உள்ளே வைச்சு லேசாகச் சூடு பண்ணிக் கொண்டு பாஜியையும் உள்ளே வைத்துச் சாப்பிட்டுக்கலாம். அல்லது பாஜியைத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வெங்காயம், எலுமிச்சை, உப்பு, தக்காளி எல்லாம் அபிடைசர் போலப் பயன்படும். எல்லாவற்றையும் கலந்து வைச்சுண்டு அவ்வப்போது கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு பாவை பாஜியோடு ஒரு கடி, பாஜியைத் தொட்டுக் கொண்டு ஒரு கடினு சாப்பிடணும். சாதாரணமாக பாவு எனப்படும் இந்த பன் இனிப்பாகவே இருப்பதால் பாஜி காரமாகத் தான் பண்ணுவாங்க.வெண்ணெய், எண்ணெய், காரம் எல்லாமே தூக்கலாக இருக்கும். நான் சொல்லுவது ஒரிஜினல் மஹாராஷ்ட்ரா பாஜி/அல்லது மும்பையில் கிடைக்கும் பாஜினு கூட வைச்சுக்கலாம்.
பதிலளிநீக்குஆமாம். இதெல்லாம் பின்னர் தெரிந்து கொண்டேன்.
நீக்குபாவ் வடா முற்றிலும் வேறே. சாதாரணமாக நாம் ப்ரெட் வாங்குவது போல் வட மாநிலங்களில் இந்தப் பாவும் நிறைய வாங்கி வைச்சுப்பாங்க. பாவு வடாவுக்கு வடா செய்யத் தேவையானவை உ.கி. காரப்பொடி, உப்பு, மசாலாப் பொடி, கொ.ம.அம்சூர் பொடி, சாட் மசாலாப் பொடி, எலுமிச்சைச் சாறு போன்றவை உள் பூரணத்துக்கு. வடா தயாரிக்க மேல் மாவுக்கு அநேகமாக மைதா மாவு தான். உப்பு, கொஞ்சம் சமயல் சோடா கலந்து மாவை பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொண்டு பூரணத்தைப் பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொண்டு இந்த மேல் மாவில் போட்டுத் தோய்த்துக் கொண்டு காயும் எண்ணெயில் பொரித்தெடுத்து போண்டா உருவத்தில் எடுத்து வைப்பார்கள். இவற்றில் இரண்டை பாவின் உள்ளே வைக்கணும். அதுக்கு முன்னால் பாவைச் சூடு பண்ணிக் கொண்டு இரண்டாகப் பிளந்து கொண்டு உள்ளே வெண்ணெய், கார, உப்பு, மசாலாப் பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்த கலவையை எண்ணெயில் கலந்து வைச்சிருப்பாங்க. அதையும் பாவின் உள்ளே சீராகத் தடவிக்கொண்டு இந்த போண்டாவை, (அவங்க வடானு சொல்லுவாங்க) அந்த இரட்டை பன்களின் உள்ளே வைச்சு ஒரு தட்டில் பச்சைச் சட்னி, ஒரு தட்டில் புளி இனிப்புச் சட்னி வைத்துக் கொண்டு அவற்றில் தோய்த்துக் கொண்டு போண்டாவையும் பன்னையும் சேர்த்தே கடித்துச் சாப்பிடணும். இரட்டை பன்களில் உள்ள அந்த இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. ஒரு ஆலத்தில் இது ஒரு ரூபாய்க்கு மும்பையில் கிடைத்தது. இது விலை ஏறிய போது சிவசேனா கட்சிக்காரங்க போராட்டமெல்லாம் நடத்தினாங்க. நம்ம ஊரில் அரசியல் கட்சிகள் கஞ்சித் தொட்டி வைக்கிறாப்போல் அவங்க நிறையப் பாவுகளை வாங்கி பாவு வடா தயார் செய்து மக்களுகு ஒரு ரூபாய் விலையில் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதெல்லாம் ஒரு காலம்.
பதிலளிநீக்குஅம்மாடி.. விரல்நுனில விவரம் வச்சிருக்கீங்க...
நீக்குபொதுவாகவே தமிழ்நாட்டில் வட இந்திய உணவு வகைகள் பெரும்பாலும் தமிழக முறைப்படியே சமைக்கப் படுகிறது. அதிலும் இந்த சாட் வகைகள். சுத்தமாய்த் தமிழர்களுக்குப் புரியலை. எப்படிக் கொடுக்கணும்னு. பாஜியும் செய்யத் தெரியாது. பாவு வடாவும் செய்யத் தெரியாது. ஏதோ இருக்கும். சுவையில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். பஞ்சாபிக்காரங்க செய்த இட்லியைச் சாப்பிடுவதைப் போல.
பதிலளிநீக்குஎப்படி இருந்தாலும் நான் சாப்பிடப் போவதில்லை! நான் பானி பூரி, பேல்பூரியே சாப்பிடமாட்டேன்! சாதா பூரியும், சோளே பூரியும் சாப்பிடுவேன்.!சோளே பூரி கூட எப்போதாவதுதான்.
நீக்குரொம்ப வருடங்கள், பரதன் என்பவர் கமலின் பினாமி, தான் டைரக்ட் பண்ணுவது தெரியக்கூடாது என்று ஒரு பினாமி பெயரை உபயோகித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குநல்ல திறமை உள்ளவங்க காசைச் சேர்த்து வச்சுக்கறதில்லை, இல்லைனா குடி மற்றும் பல பழக்கங்களில் இழந்துடறாங்க. என்ன செய்ய?
தலையெழுத்துதான். ஆட்டுக்கும் வாலை அளந்துதானே வச்சிருக்கான் ஆண்டவன்!
நீக்குபாலாஜி பாஜி ஆனது வருத்தம் தான்.
பதிலளிநீக்குநல்ல பேரை இப்படி சுருக்கி விட்டார்களே!
இதற்கு ஏன் ஸ்பூன் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை!//
வெங்காயம், பாஜியை எடுத்து ப்போட்டு கொள்ளத்தான்.
ஆனால் அவர்கள் தளர செய்யாமல் கட்டியாக செய்து இருக்கிறார்கள்.
மருமகள் பாவ்பாஜி நன்றாக செய்வாள்.