விசாலமான அந்த அறையின் நடுவில் போடப் பட்டிருந்த மஞ்சத்தில் கையில் அதுகாறும் தாங்கி வந்த அந்தப் பெண்ணைக் கிடத்தி, யவன வீரனை விளித்து விளக்குகளையும் தூண்டச் சொன்ன பின்புதான் கடற்கரையில் விதி தன் காலடியில் வீழ்த்தியவளின் வனப்பு எத்தன்மையது என்பதை இளஞ்செழியன் பூரணமாகப் புரிந்து கொண்டான்.
மஞ்சத்தில் கிடத்திவிட்ட அந்த நேரத்திலும் மூர்ச்சை முழுதும் தெளியாமலிருந்தாலும், இளஞ்செழியன் கடற்கரையிலிருந்து அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் அவள் குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்து விட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்றுப் பஞ்சணையில் மெள்ள அப்புறமும் இப்புறமும் அசைந்தாள். புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெள்ள அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் வெண்மை புதுத் தந்தத்தையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், இப்படியும் ஒரு வெண்மை படைப்பில் இருக்க முடியுமா? என்று பிரமித்துப் போனான்.
அதிக வெண்மையான வெள்ளத்தில் புஷ்பத்தையும், செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும்கூட உவமை சொல்ல முடியாத அத்தனை வெண்மை வாய்ந்த அந்தக் கட்டழகியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கூந்தல் லேசாகப் பொன்னிறம் பெற்றிருந்ததாலும் நெற்றியின் விசாலத்தில் படர்ந்திருந்த அயல்நாட்டுச் சாயையாலும் தான் தூக்கி வந்தது ஒரு யவனப் பெண்மணிதான் என்பதை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன், இயற்கை மிகவும் செழுமையாக்கி யிருந்த அவள் வசீகர எழிலனைத்தையும் பருகிக் கொண்டு நின்றான்.
பிரதி தினம் காவிரிப்பூம்பட்டினத்தில் எத்தனையோ நாடுகளின் அழகிகளைப் பார்த்து அலட்சியத்துடன் அசட்டை செய்து சென்றிருக்கும் அவன் கண்கள் கடலில் கண்டெடுத்த அந்தக் கட்டழகியின் இணையற்ற பேரெழிலில் சிக்கி மீளமாட்டாமல் தவித்தன.
கிரேக்க நாட்டின் சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட தெய்வ மங்கையரின் முகத்தைப் போல உயிருள்ள பெண்மணிகளுக்கும் முகம் இருக்க முடியும் என்று அவள் முகத்தை அன்று கண்ட பின்புதான் இளஞ் செழியன் நம்ப முற்பட்டான். வெள்ளை நுதலைக் கண்களி லிருந்து தடுத்து நின்ற அவள் கரிய புருவங்கள் வேண்டு மளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. சற்றுக் கீழேயிருந்த கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப்போல் வெண்மையுடனிருந்ததன்றி இமை ரோமங்களும் சங்கு மலரின் நுனிக் கறுப்பைப் பெற்றிருந்ததால் இயற்கை அவள் கண்ணுக்கென்று பிரத்தியேகமாக வகுத்த சிமிழ் போல் கண்களை மூடியிருந்த மெல்லிய சருமங்கள் காட்சியளித்தன.
கடல் சில சமயம் விசிறிபோல் ஒதுக்கும் கிளிஞ்சலின் வேலைப்பாடு உயர்ந்ததா அல்லது அவற்றைப் போலவே கண்களை மூடிக்கிடந்த இமைகளின் அழகு உயர்ந்ததா என்பதை அறியமாட்டாமல் திணறினான் இளஞ்செழியன். இயற்கையின் அந்தச் சிமிழுக்கு அப்பால் வழவழப்பாக எழுந்து சற்றே குழி விழுந்து கிடந்த அவள் கன்னங்களில் சமுத்திர மணல் உறுத்தியதால் புள்ளிப் புள்ளியாக எழுந்திருந்த ரத்தச் சிவப்புகள் வைரத்தில் இழைக்கப்பட்ட சிவப்புக் கற்கள்போல் தீபத்தில் பிரகாசித்ததைக் கண்ட இளஞ்செழியன், 'இதைப் பார்த்துத்தான் அன்னை பூமி தன் கர்ப்பத்தில் வைரங்களையும், நீரோட்டமுள்ள சிவப்புக் கற்களையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று எண்ணினான். ஆனால், மணல் உறுத்தியதால் கன்னத்தில் தெரிந்த அந்தப் புள்ளிகள் அதிகச் சிவப்பா, அல்லது நீர் தழுவியதால் பளபளத்துச் செம்பருத்தி மலரின் இதழ்களைப் போல் மிக மிருதுவாகத் தெரிந்த உதடுகள் அதிகச் சிவப்பா, என்பதை மட்டும் பல நூல்களையும் கற்றுத் தெளிந்த அந்தப் பாண்டிய நாட்டு வீரனால் நிர்ணயிக்க முடியவில்லை.
மஞ்சத்தில் கிடந்த அந்த யவன மங்கையின் உடல், சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யௌவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் தோன்றியது இளஞ்செழியனுக்கு. தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கடலரசன் தன் அலைக்கரங் களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களிலெல்லாம் பல வாளிகளால் தாக்கப்பட்டு, புயலில் அகப்பட்ட மரக்கலம்போல அல்லாடும் மன நிலைக்கு வந்துவிட்ட இளஞ்செழியன் பக்கத்திலிருந்த யவன வீரனை நோக்கித் திரும்பி, “இந்தா! ஒரு சீலையை எடுத்து வந்து இவள் உடலை மூடிவிடு" என்று பதறிக் கூறினான்......
=======================================================================================
துயிலும்பொழு திசைக்கும் இளந்
தோகைமொழி கேட்டுப்
பயிலும் ஒரு கிளியின் மொழி
பண்யாழ்மொழி எல்லாம்
உயிரில் எமதுளத்தில் உரம்
ஊட்டும் தமிழாமோ?
சந்த இனிமைக்கும் பா நடைக்கும் ஒரு காட்டாகத் தக்க இப்பாட்டுப்போல, இத்தொகுப்பில் உள்ள பல பாக்கள் சுவைஞனின் உள்ளத்தைத் தொடத்தக்கன.
மீரா மிகமிக அடக்கமானவர். அதனால் இன்றைய அரசியலாரால் கண்டு கொள்ளப்படாதவர். 'சினிமா' வெளிச்சத்தில், துள்ளித் திரியும் விட்டில்களிடையே, இவர்தம் பாடல்கள் 'கற்று அடங்கல், ஆற்றுவானது செவ்வி உடையன.
அறம் காத்திருந்து பார்ப்பதுபோல இக்கவிதைகளும் காலம் கடந்தாலும் மக்களால் கண்டு கொள்ளப்படும் என்பது உறுதி.
தமிழண்ணல்
ஏரகம்
சதாசிவ நகர்
மதுரை
மீராவின் முன்னுரையில் (21 பக்கங்கள்) சிறு பகுதி.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.
இலக்குமி அம்மாளும் எஸ்.மீனாட்சி சுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்குரு. மகாகவி பாரதி என் தெய்வம்.
என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்.
பாவேந்தரை ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். சிவகங்கை அரசர் பள்ளிக்கு திரு. நாராயணன் சேர்வை தலைமை ஆசிரியராய் இருந்தபோது வந்திருந்தார். நான் அப்போது மன்னர் கல்லூரி மாணவன்.
பாவேந்தர் பேச்சைக் கேட்கப் பள்ளிக்குப் போனேன். பாவேந்தர் பேசினார். இராசகம்பீரத்தோடு பேசினார். தமிழ் உணர்ச்சி பொங்கி வழிந்தது. மொழிப் பற்றும் இனப்பற்றும் மேலோங்க முரசறைந்தது போல் இருந்தது.
இராமநாதபுரத்தில் பள்ளியில் படிக்கும் போதே அவரைப் படித்து மயங்கிய நான் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த வாய்ப்பு சிவகங்கையில் கிடைத்தது. கூட்டம் முடிந்ததும் அவரை உணவுண்ண அழைத்துச் சென்றார்கள். அவருக்கு வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் என் கூச்ச சுபாவம் அவரை நெருங் விடவில்லை.
அப்புறம் கடைசிவரை அவரைப் பார்க்க முடிய வில்லை. கவிஞர்கள் முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னடியான் போல் பார்க்க, பழகக் கொடுத்து வைக்க வில்லை.
அவர் சின்ன வயது முதல் எழுபது தொடக்கம் வரை நான் திராவிட இயக்கத்தில் ஒன்றியிருந்ததற்கு அண்ணாவைப் போல பாவேந்தரும் மற்றொரு காரணம். கவிதைகளைப் படித்துச் சுவைத்த நெஞ்சம், அவரைப் போலவே என்னையும் திராவிட இயக்கப்பாடல்களைப் புனையத் தூண்டியது.
முரசொலி முதலிய பத்துக்கு மேற்பட்ட தி.மு.க இதழ்களில் அறுபதுகளின் ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மதுரையிலிருந்து வெளிவந்த கருமுத்து தியாகராசனாரின் 'தமிழ்நாடு' நாளிதழின் ஞாயிறு மலர்களில் அரசியல் அல்லாத பொது நிலைக்கவிதைகளை வெளியிட்டிருக்கிறேன்.
இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தனித்திராவிட நாடு தமிழ் மறுமலர்ச்சி, சாதி மதொழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம், சமத்துவ சமுதாயம், கலப்புத் திருமணம் முதலியவை என் பாடுபொருள்களாயின. கவிஞன் என்றால் காதலுக்குக் குறைச்சல் இருக்காது. (அறிஞர் தமிழண்ணல் காதலை ஒரு பக்தி இயக்கமாக வளர்த்தவன் நான் என்கிறார்.) இயற்கைப் புனைவும் இருக்கும்.
59, 60, 61 ஆண்டுகளில் தியாகராசர் கல்லூரியில் முது கலை படிக்கும் போது இத்தகைய கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் அவ்வப்போது வருவதைப் பார்த்துப் பரவசப்படுவேன்.
அப்போது கவிக்கோ அப்துல் ரகுமான் என் வகுப்புத் தோழர். நான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு முன் சில கவிதைகளை அவரிடம் கொடுப்பேன். அவர் என்னுடைய பச்சையான அரசியல் கவிதைகளை வெளியிடாதீர்கள் என்று தடுப்பார். எதிர்ப்பார். அவருக்கு சுத்தக் கவிதை தான் (Pure Poetry) பிடிக்கும்..........
காக்கைக்கு.....!
தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும்
உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்;
பாடத் தெரியாப் பறவையே! காக்கையே!
காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின்
பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற
வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன்
வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ
முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்!
என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்?
'என்னைக்கா' என்றோ இயம்புவாய்? மாட்டாயே!
எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால்
உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான்
கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக்
கா என்பாய் போலும்!
கருங்குயிலின் அண்ணனே!
நீ நன்றாய்ச் சொல்கின்றாய்; நீ வாழ்க! உன்கருத்தை
என்மக்கள் உணர்ந்தே எழும்நாள்தான் எந்தாளோ?
பொன்னாள், புதுநாள் புவனத்தில் அந்நாளே!
தான்மட்டும் தின்கின்ற தன்னலமில் லாததனால்
வான்தொட்டு மீள்கின்ற வல்லமைநீ பெற்றாயோ?
உன்னைக்கண் டிந்த உலகம் திருந்தாதா?
என்ன உலகம் - இதில்நான் பிறந்தேனே ....!
அன்னத்தைத் தூதாய் அனுப்பினனாம் ஓர் அரசன்;
உன்னை நான் தூதனுப்ப உத்தேசம்; நீ உதவு!
சேரி குறைவற்ற சென்னையில் என்இன்ப
வாரிதியாள் ஏக்கம் வளர்ப்பாள்; அவளிடம் 'உன்
சிந்தைக் குரியான் சிவகங்கை யில் இருந்து
வந்துகொண் டுள்ளான்; வருந்தாதே;' என்று நீ
கூறு! புறப்படு! கூறினால் கூட்டோடு
சோறு படைப்பாள், சுவை!
==================
பெண்ணாகப் பிறந்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
துகிலுக்குள் மூடுபடாத்
தூயமுகம் காட்டித்தான்
முகிலுக்குள் போய்நிலவை
முகம்மூடச் சொன்னேனா?
பிறந்ததுதான் பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
முள்ளில்லாத முல்லைப்பூ
முறுவலிக்கும் போதில்என்
வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு
'வெவ்வெவ்வே' என்றேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
தீந்தேனைச் சிந்துகின்ற
தென்னாட்டுப் பூக்களைஎன்
கூந்தலிலே சிறைவைத்துக்
குதூகலம்தான் அடைந்தேனா? பிறந்ததுதான்
பிறந்தேன் நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
பலாச்சுளைபோல் மின்னும்என்
பாதநடம் பார்த்துமயில்
கலாபத்தை விரித்தாடக்
கற்றுத்தான் கொடுத்தேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
மரக்கிளையில் அமர்ந்திருக்கும்
மாங்குயில்கள் மயக்கும்என்
குரல்கேட்டுப் பின்கூவக்
குருவாய்நான் ஆனேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
நள்ளிரவு நாடகத்தின்
நகைச்சுவையாய் வந்துதித்த
பிள்ளைக்குப் பாலூட்டும்
பெரும்பேறு பெற்றேனா?
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பெண்ணாகப் பிறந்தேனா?
- மீரா கவிதைகள் -
14.10.63
=========================================================================================
பாஹே பக்கம்!
அம்மா மார்ச் 27, 2002 ல் மறைந்ததும் அப்பா மிகவும் மனமொடிந்து போனார். உடனடியாக அம்மாவின் நினைவுகள் பற்றிய புலம்பல்களாக ஒரு தொகுப்புஇ தயார் செய்து 'ஹேமாஞ்சலி' என்று தலைப்பில் புத்தகமாக்கி உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் தந்தார், அனுப்பினார். இலக்கிய ரீதியாக அப்பாவை நன்கு அறிந்திருந்த, கி ராஜேந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், திலகவதி ஐ பி எஸ் ஆகியோருக்கெல்லாம் அனுப்பினார். அதில் திலகவதி அவர்களிடமிருந்து வந்த கடிதம்
மனதளவில் அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருந்தார் என்பது அப்போது புரிந்ததை விட இப்போது அதிகம் புரிகிறது.
இரண்டு மாதங்களுக்குப் பின் எங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்... அவர் எப்போதுமே சுருக்கமாக, கொஞ்சமாக எதுவும் எழுத மாட்டார். அதேபோல அவர் கையெழுத்தைப் புரிந்து கொள்வதும் சற்று சிரமமாக இருக்கும்.
எவ்வளவோ சொல்ல வேண்டும். எங்கே ஆரம்பிப்பது? ஏதாவது ஒரு இடத்தில். கடித புல்லட்டீன்ஸ் இனி என்னிடமிருந்து உங்கள் நால்வருக்கும் என் எண்ணங்கள் கருத்துக்கள் திட்டங்களைச் சொல்ல - பக்கத்தில் இருக்கும் பாரதிக்கும் (பாரதி என் அண்ணன். ஸ்டோர் போன்ற குடித்தனத்தில் அந்தப் பக்கக் குடித்தனத்தில் மனைவி, மகனுடன் வசித்தார்) சேர்த்து - அவ்வப்போது எழுத அனுப்ப நினைக்கிறேன். ஒரு கடிதம் இம்மாதிரி எழுதுவது, ஜெராக்ஸ் நாலு பிரதிகள் எடுத்து நால்வருக்குமே அனுப்புவது என்று திட்டம். கம்யூனிகேஷன் கேப் என்பது நம் எல்லோரிடம் எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது இனி கூடாது.
இவ்வரிசையில் முதல் ஒன்று அல்லது இரண்டு கடிதங்களை சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம், உஷாவுக்கு (என் தங்கை) அனுப்பி இருக்கிறேன். அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை மற்ற மூவருக்கும் அனுப்ப நினைக்கிறேன். என்ன எழுதினோம் என்று மறந்து விடுவதால் என்னிடமும் ஒரு காப்பி இருக்கும்.
இனி கடித துவக்கத்தில் வரிசை எண் கொடுத்து விட்டால் மறுபடியும் நினைவூட்ட வசதியாக இருக்கும். இது இரண்டாவது கடிதம். 2 /2002. எழுதுகிற எனக்கு இருக்கிற ஆர்வம், படிக்கிற உங்களுக்கு இருக்குமா, இதை ஒரு தொந்தரவாக நினைப்பீர்களா என்று தெரியவில்லை. சென்ற கடிதம் பாரதி, உஷாவுக்கு, ஸ்ரீராம், உஷாவுக்கு தனித்தனியாக எழுதி மற்றவர்களுக்கும் நகல் தந்துவிட சொல்லி இருந்தேன்.
ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது. இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம். வரிவரியாக படித்து மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இல்லாவிட்டால் நான் சிரமப்பட வேண்டியிராது. நான் எழுதுவதில் ரெகுலர் பீரியாடிசிட்டி இராது. காஞ்சி நாராயணன் ( அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர், காஞ்சியில் வசித்தவர்) நடத்துகிற ஒரு பத்திரிகை தலைப்பில் 'நினைத்தபோது வரும் இதழ்' என்று போட்டிருந்தது. அதுபோல என் கடிதமும் நினைத்த போது தான் வரும்.
என் மற்றொரு மன பலஹீனத்தையும் இங்கு சொல்லி விட வேண்டும். நேற்று செய்ய வேண்டும் என்று நினைப்பது இன்று வேண்டாம் என்றும் தோன்றுகிறது. பல விஷயங்களை, பலவற்றை நினைத்து செய்யவில்லை. ஆனால் கடிதம் எழுதுவது அனேகமாக அப்படி விடாது. என்ன... ஜெராக்ஸ் தபால் OR குரியர் செலவுகள் அதிகமாகும். முதலில் ஆரம்பிப்பதால் முன்னுரை இது பற்றி இப்போது நீண்டு விட்டது. இனிவரும் கடிதங்களில் ஸ்டிரெயிட்டாக விஷயங்கள் மட்டுமே இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது அடுத்தடுத்து வரிசையாக Tag கில் கோர்த்து. ஒழுங்காக பைல் செய்து வைப்பது. (நாங்கள் அதைச் செய்யவில்லை) எனக்கு ரகசியம் பிறருக்குத் தெரியக்கூடாது என்றெல்லாம் மறைக்க இதுவரை போல இனியும் இப்போது ஏதுமில்லை. எனவே நீ என் கடிதங்களை யாரிடம் வேண்டுமானாலும் காட்டலாம்.
முன்னுரையின் முக்கியமான இன்னொரு பகுதி - கடிதத் தலைப்பை பார்த்தீர்களா அல்லவா? - இது அப்பா மட்டும் எழுதுவது அல்ல. அம்மா அப்பா எழுதுவது. அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். என் குரலில் கை மூலம் ஹேமாவும் பேசுகிறாள் . அவள் கருத்துகளே என் மூலம் சொல்லப்படுகிறது. அவள் விரும்பாதது, அவளுக்கு பிடிக்காதது எதுவும் நான் சொல்லவும் இல்லை, செய்வதும் இல்லை என்பதால்.
இப்படி ஒரு கடிதத் தொடரை ஆரம்பிப்பது என்பது சில வாரங்களாகவே என் மனதில் ஊறிக் கொண்டிருந்த விஷயம். நான்கு நாட்களுக்கு முன்பே இதன் இணைப்பாக சில பழைய, புதிய கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன். கவரிங் லெட்டர் உடன் அவர்களுக்கு நகல் எடுக்க அவை காத்திருக்கின்றன. 'அன்று அப்படி' - 'இன்று இப்படி' என்ற தலைப்பில் அக்கவிதைகள். என்னை ஒளித்துக் கொள்ள முடியாதவை ; அன்றும் - இன்றும். 'அன்றும்' ஒரே ஒரு டோஸ்தான் - ஒரு ஐந்து ஆறு. இன்றும் ஹேமாஞ்சலி II என்ற வரிசையில் இப்போதே 5, 6 - இனியும் தொடரக்கூடும். மனநிலையை பொறுத்தது. இவற்றோடு 'ஹேமாஞ்சலி'யில் விட்டுப் போன 'ஒரு மகாசமுத்திரத்தின் மேலும் சில துளில்கள்' என்றும் பல நினைவுகள் தொடரும்.
==============================================================================================
வினுவின் ஓவியங்களை சரித்திரக் கதைகளுக்கு பார்த்திருப்பீர்கள். சமூகக் கதைகளுக்கு அவர் ஓவியங்கள் சில.. அப்படியும் ஒரு வரலாற்றுப் பாத்திரம் வந்து விடுகிறது!
===============================================================================================
கேட்டுப்பாருங்களேன்... இளையராஜாவின் மேதைமையை டாக்டர் நாராயணன் எப்படி எடுத்து நமக்கு சொல்கிறார் கேளுங்கள். அவர் சொல்லும் 'என்னதான் சுகமோ' பாடல் எனக்கும் பிடிக்கும் என்றாலும் எப்போதாவது கேட்கும் லிஸ்ட்டில் வைத்திருந்தேன். அந்தப் பாடலின் அருமையை இவர் சொன்னபின் அதன் சிரமங்கள், கஷ்டங்கள், நுணுக்கங்கள், இனிமை தெரிகிறது. ஸ்ரோதஸ்வினி அல்லது உதயசந்திரிகா ராகம். கூட கௌரிமனோகரியும் சேர்கிறது.
"இளையராஜாடா" என்று மனம் விம்முகிறது. இவர்கள் எல்லாம் நம்மை பரவசத்தில் ஆழ்த்த வந்த எவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ் என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறது.
கடன் என்றதும் நான் இளைஞனாக இருந்த காலத்திலேயே என் அப்பா சொன்ன அறிவுரை நினைவுக்கு வருகிறது. நண்பன் கேட்டால், வேறு வழியில்லை என்றால் இரண்டு ரூபாய் கொடு. திரும்பி வராது. கடன் கொடுக்கக்கூடாது என்ற அனுபவம் கிடைக்கும் என்றார். கடன் எப்போதுமே திரும்ப வராது. அப்போதிருக்கும் மனநிலை (வாங்கும்போது) காரியம் முடிந்ததும் மறைந்துவிடும்.
பதிலளிநீக்குஇதுக்கு உதாரணம், நமக்கு எந்த அவசர உதவி தேவைப்படும்போது நமக்கு இருக்கும் அவசரமும், உதவி கிடைத்தவுடன் ஏற்படும் நன்றி உணர்ச்சியும் விரைவில் மறந்துபோய்விடும். அவருக்கே உதவி தேவைப்படும்போது அந்த நன்றியுணர்ச்சி இருக்காது.
வாங்க நெல்லை.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆரம்ப காலங்களில் ரொம்ப எச்சரிக்கையாகத்தான் இருந்தேன். 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்து, அது திரும்பாவிட்டால், அவர்களை புரிந்து கொண்டு அவர்களே மறுபடி கேட்டால் அந்த சின்னத் தொகையையே திருப்ப முடியாத நீங்கள் இதை எப்படி திருப்புவீர்கள் என்று மறுத்திருக்கிறேன்! பின்னர் என் முகம் புன்னகைமுகமாகி விட்டது!
நீக்குதனிமை கொடிது. அதிலும் மனைவிக்குப் பின்னான வாழ்க்கை கஷ்டம்.
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவின் உணர்வு புரிந்துகொள்ளக்கூடியது.
அன்பு எப்போதும் கீழிருந்து மேல் செல்லாது.
அவர் எங்களுக்கு அப்போது எழுதிய கடிதத்தின் சில உணர்வுகள் இப்போது புரிகின்றன.
நீக்குமீராவின் கவிதைகள் அருமை.
பதிலளிநீக்குநல்ல காலத்தையெல்லாம் அரசியல் சார்ந்த பயணத்தில் வீண்டித்துவிட்டார்.
உண்மை. திராவிட மாயையில் முழுகி விட்டார்.
நீக்குசாண்டில்யன் வர்ணனைகள், காதல் உரையாடல்களை நான் என்றுமே படித்ததில்லை. பக்கங்களைப் புரட்டிவிடுவேன்.
பதிலளிநீக்குஇளஞ்செழியன் குதிரையில் காட்டுப் பாதையில் மாலை மங்கிய இரவுப் பொழுதில் வந்தான் என்பதை நாவல் ஆரம்பத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு எழுதும் அவர் உத்தி பல சமயங்களில் கடுப்படிக்கும்.
இளஞ்செழியன் குதிரையில் வரமாட்டான். நடந்துதான் வருவான். நீங்கள் அப்போது படித்திருக்க மாட்டீர்கள் என்றுதான் இப்போது கொடுத்திருக்கிறேன்... ஹா.. ஹா.. ஹா.. சாண்டில்யப் பக்கங்கள் தொடரும்!
நீக்குபோர் உத்தி, வர்ணனைகளை அவரைப்போல கண்ணில் கொண்டுவந்தவர்கள், இதிஹாசங்களைத் தவிர வேறு எவருமில்லை.
பதிலளிநீக்குஆமாம். ஆஹா.. இதோ.. இப்போது யவனராணி மீள் வாசிப்பில்.. கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்தனைகள்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம். உங்கள் திருமண நாளுக்கு எங்கள் வாழ்த்துகள்.
நீக்குமகிழ்ச்சி...
நீக்குஅனைவருக்கும் நன்றி...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல்கள் அருமை.
கடன் அன்பை முறிக்குமென தெரிந்து கொண்டே கடனை கேட்பவர்களை என்னவென்று சொல்வது.? ஒரு அவசரத்துக்கு வாங்கிய தொகையை "கடனை" என்று நினையாமல், அதை ஒரு "கடமையாக" திருப்பி தந்து விடுவது, நலமென்பதை (அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்) கடன் வாங்கியவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ .?
எங்கள் இளைய மருமகளுடன் அலுவலகத்தில் கூட வேலை செய்பவர் ஒருவர் பெற்ற கடன் ஒரு லகரத்திற்கும் மேலாக இன்னமும் வந்த பாடில்லை.என்பார். (அவரது திருமணத்திற்கு முன் நடந்தது.) இப்போது அது முழுமையாக வந்து விட்டதா என இதுவரை அறியேன். உறவுகளிடையே கடன் அன்பை மட்டுமல்ல. உறவையும் முறிக்கும். இது எங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கண்டது. நீங்கள் உஷராக இருப்பது நல்லதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் அக்கா.. இதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டிருக்கின்றனர் சிலர்! எனக்கும் தி வா க இன்னமும் உண்டு...
நீக்குஅவர்கள் சொல்லும் நிலைகண்டு இரக்கம்தான்.
பதிலளிநீக்குசில மாதங்களில்
இவர்கள் கூட இப்படி ஏமாற்றுவார்களா என்று அதிர்ச்சி காத்திருக்கும்....
அதேதான்... அவர்களின் கல்லும் உருகும் கதை கேட்டு வெள்ளிக்கிழமை பாராமல், விளக்கு வைத்த நேரம் என்றெல்லாம் எல்லோரும் பார்க்கும் காரணம் பார்க்காமல் கொடுத்திருக்கிறேன். இன்று வரை வரவில்லை.
நீக்குபாஹே அவர்களது பக்கங்களில்
பதிலளிநீக்குநெகிழ்ச்சி..
__/\__
நீக்குபொக்கிஷப் படங்கள்
பதிலளிநீக்குசிறப்பு..
நன்றி செல்வாண்ணா
நீக்குமுதல் பகுதி விஷயம் புரிந்தது, ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇது எனக்குப் பல கெட்ட சம்பவங்களையும், மன உளைச்சல்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தது. விஷயம் புரிந்ததால் அப்படியே கடந்து அடுத்த பகுதிக்குச் செல்கிறேன் அதிகம் இதுக்குள் புகுந்து விஸ்தரிக்காமல்.
கீதா
வாங்க கீதா... புரிகிறது.. ஆனாலும் படிக்காமல் தாண்டிச் செல்வது நியாயமில்லை! :)) எப்படியோ ஞாபகப்படுத்தி விட்டேன்!
நீக்குபடிச்சிட்டேனே ஃபுல்லும்!
நீக்குகீதா
(Y)
நீக்குகாசியில் காசை விட்ட சம்பவம் வேறு சிலரும் இப்படி முடித்து எழுதியிருப்பதை எப்பவோ வாசித்த நினைவு.
பதிலளிநீக்குஸ்ரீராம், உங்க வத்ராப்பு நிகழ்வு நான் வாசித்திருக்கிறேன். நினைவிருக்கு. அந்தச் சுட்டியும் கொடுத்திருக்கலாமே
கீதா
காசியில் இல்லை கீதா.. "அந்த சம்பவம்" நான் காசி சென்றபோது நடந்தது. சென்னையில்தான் நடந்தது! வத்ராப் சுட்டி தரவில்லை! தேடவேயில்லை!
நீக்குகாசியில் சில கடைகளுக்குப் போய் விட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். . ரயில் வந்ததும் எல்லோரும் ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டோம். அதில் ஒரு புடவை உட்கார்ந்திருந்தார்." //
நீக்குஇந்த சம்பவத்துககன பதில் ஸ்ரீராம். இந்த சம்பவம் போன்று முன்னர் வேறு சிலர் எழுதியிருந்ததை வேறு எங்கோ துணுககக வாசித்த நினைவைச் சொன்னேன்.
உங்க சம்பவம் வேறு அது தனியாக நினைவிருக்கு.
கீதா
ஓ.. சரி.. சரி...
நீக்குஎன் அப்பா இபப்டி மதுரை பஸ் ஸ்டாண்டில் அருகில் ஒரு முடுக்கில் ஏதோ டவல் விற்கும் வியாபாரியிடம் ஏமாந்திருக்கிறார்.
பதிலளிநீக்குநான் சமீபத்தில் ஏமாந்ததை (ஆனா ரொம்பப் பொடிக்காசு விலை) எழுத நினைத்திருந்தேன். அப்புறம் இதுக்குப் போயான்னு வருமோன்னு. காசு முக்கியமில்லை ஆனால் ஏமாற்றுபவரின் attitude நம் அறிவு, விழிப்புணர்வு ....இது முக்கியம் என்பதால் எழுதலாம்னு...
கீதா
எழுதுங்க.. எழுதுங்க.. மதுரை பஸ்ஸ்டான்ட் ஏமாற்றுவதில் மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்கிறது போல...
நீக்குகடன் வாங்கியவர்களுக்கு தூக்கம் வராது என்பார்கள், இப்போது கடன் கொடுத்தவர்களுக்குத்தான் அந்த நிலை.
பதிலளிநீக்குஉண்மை. நானும் அதை எழுத நினைத்திருந்தேன்!
நீக்குவாங்க பானு அக்கா...
நீக்கு//ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது. இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம்.// நாம் சில சமயம் உணராமலேயே பெற்றோர்களின் அதிருப்திக்கு ஆளாகி விடுகிறோம். நம் குழந்தைகளால் அது நமக்கு நேரும்பொழுதுதான் புரிகிறது.
பதிலளிநீக்குஅப்போது புரியாத சில உணர்வுகள் இப்போது புரிகிறது. என் அப்பா என்னை ஸ்கூலில் பார்க்க வந்து விட்டு வேறு வேலையாக வந்தது போல பக்கத்து க்ளாஸ் டீச்சர் (அவர் நண்பரின் மகள்) பேசியதை பார்த்து என்னைப்பார்க்காமல் போறாரே என்று அப்போது எண்ணி இருக்கிறேன். அவர் என்னைதான் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரியாத வயது. மூணாங்கிளாஸ்! ஒன்றாவது இரண்டாவது படிக்காமல் நேராக மூணாங்கிளாஸ்! அப்புறம் என் பையனைப் பார்க்க நான் அவன் பள்ளிக்குச் சென்றபோது இதை உணர்ந்தேன். அதுபோல இப்போது....
நீக்குI know இந்தக் காணொளி செம சுவாரசியமான காணோளி, ஸ்ரீராம்.. பார்த்திருக்கிறேன், காணொளி ஃபுல்லும்....
பதிலளிநீக்குஇந்த சீன்ல ரகுவரன் Classic! செம சீன். ரகுவரனை இயக்கியது ரவிகுமார் என்றாலும் அந்த சீன்ல ரகுவரன், ரவிகுமார் சொன்னது போல அந்த உடல் மொழியால் உச்சரிப்பால், முக பாவனையால் அந்தக் கதாபாத்திரத்தின் மொத்த குணத்தையும் காட்டியிருப்பார்.
கீதா
ரவிக்குமார் பாஷையில் ரகுவரன் ஒரு நடிப்பு ராட்சசன்.
நீக்குவினுவின் ஓவியம் என்றால் நினைவுக்கு வருவது ஆஞ்சநேயர். பிறகு பொன்னியின் செல்வனுக்கு அவர் வரைந்த ஓவியங்கள். சமூக கதைகளுக்கும் படங்கள் வரைந்திருக்கிறார் என்னும் செய்தியை இப்போதுதன் அறிகிறேன். அந்த ஓவியங்களில் பெண்கள் பூசினார்போல் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅவர் பாணி!
நீக்குசாண்டில்யன் அவர்களின் வர்ணனை அபாரம். நுணுக்கமாக எப்படி இப்படி வர்ணிக்கிறார் என்று தோன்றும்.
பதிலளிநீக்குஆண் எழுத்தாளர்கள் பெண்களை வர்ணித்திருப்பது போல ஏன் பெண் எழுத்தாளர்களால் வர்ணிக்க முடியவில்லை, ஆண்களின் அழகை சிலர் வர்ணித்திருந்தாலும், இத்தனை ஆழமாக வர்ணித்திருக்கிறார்களா என்று எனக்குத் தோன்றும். வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் சொல்லலாம்.
கீதா
அதானே.. அப்படி எதுவும் இருக்கான்னு தேடிப் பார்க்கணும்!
நீக்குசாண்டில்யனை ரசிக்க பொறுமை வேண்டும்.
பதிலளிநீக்குகாசிப்பட்டு சம்பவம் ஏற்கனவே படித்தது போல இருக்கிறது.
60 களில் விகடனில் வந்த சம்பவம்... படித்திருப்பீர்கள். எனக்கு பொறுமை நிறைய இருக்கிறது!
நீக்குசாண்டில்யனின் யவனராணி வாசிக்கத் தொடங்கியுள்ளேன். சுஜாதா போல....அவர் பல புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு வாசிப்பாராமே! அது போல் என்று சொல்லிக் கொண்டு நானும் இப்ப ஒரு ஹார்ட் காப்பி! 3 இ காப்பி! என்று!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா... பன்னை ஒரு கடி கடிச்சிகிட்டு... டீ ஒரு வாய் குடிச்சு.. வடையை ஒரு கடி.. இப்படி..!
நீக்குஅதே! உங்க தயவில் யவனராணி, ஏ அண்ணாவின் தயவில் ஹார்ட் காப்பி!
நீக்குகீதா
பிறந்ததுதான் பிறந்தேன்நான்
பதிலளிநீக்குபெண்ணாகப் பிறந்தேனா?//
கவிதை சூப்பர். அதற்கு முன்னானதும்.
இதில் பெருமையாகச் சொல்லிவிட்டுக் கடைசி வரி ஏன் இப்படி என்று யோசிக்கிறேன். எதனாலாக இருக்கும் என்று? உள் அர்த்தம் என்னவாக இருக்கும் என்றும்
கீதா
இந்தக் கவிதையின் வைடிவம் அந்தக் கால கவியரங்கங்களில் ஒரு வரியை மீண்டும் மீண்டும் சொல்லி கவிதை சொல்வார்கள். அதை நினைவு படுத்தியது!
நீக்குமனதளவில் அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருந்தார் என்பது அப்போது புரிந்ததை விட இப்போது அதிகம் புரிகிறது.//
பதிலளிநீக்குஸ்ரீராம் சில விஷயங்கள் அப்போது புரியாமல் ரொம்பத் தாமதமாகப் புரியும் போது சில சமயம் நமக்கு ஒரு குற்ற உணர்வும் தோன்றும். மனித மனம் இதுதான்.
அடிக்கடி நினைப்பதுண்டு அதற்கான பயிற்சியும்.....இருக்கும் போது இந்த நிமிடத்தில் நாம் conscious ஆகச் செய்ய வேண்டும் என்று நினைப்பதைச் செய்துவிட வேண்டும். பாராட்டுகளாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்தலாகட்டும், பேசுவதாகட்டும், தொடர்பு கொளல் ஆகட்டும்...ஒருவருக்கு நாம் ஏதேனும் செய்ய நினைத்தால், அன்பாகட்டும் எதுவாக இருந்தாலும், இந்த நிமிடத்தில் தோன்றினால் செய்துவிடுஅ வேண்டும். இந்த நிமிடம் கடந்தால் கடந்ததுதான் இல்லையா...
அன்கான்ஷியஸா கோபப் பட்டுவிடுகிறோம்.....திட்டி விடுகிறோம்...ஆனால் கான்ஷியஸாகப் பாராட்டுகிறோமா? மற்றவர்களை நெருங்கியவர்களைப் புரிந்துகொள்கிறோமா என்று சிந்திப்பதுண்டு.
ஆ!!!!!!! இதுக்கு மேல் எழுத மாட்டேன்.
கீதா
அனைத்துக் கருத்துகளுடனும் அப்படியே ஒத்துப் போகிறேன்.
நீக்குஸ்ரீராம், அப்பா ஆகச் சிறந்த எழுத்தாளர் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. என்ன உணர்வுகள்!!! மனம் நெகிழ்ந்துவிட்டது. கண்ணில் நீர் துளிர்த்தன ஸ்ரீராம். இதொ இதை இப்ப டைப்பும் போதும்....கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் ...
பதிலளிநீக்குகீதா
நெகிழ்ச்சிதான். நன்றி கீதா.
நீக்குஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது. இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம். வரிவரியாக படித்து மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும்.//
பதிலளிநீக்குலெட்டர் ஹெட்டில் அம்மாவின் படம்!
//முன்னுரையின் முக்கியமான இன்னொரு பகுதி - கடிதத் தலைப்பை பார்த்தீர்களா அல்லவா? - இது அப்பா மட்டும் எழுதுவது அல்ல. அம்மா அப்பா எழுதுவது. .............................அவளுக்கு பிடிக்காதது எதுவும் நான் சொல்லவும் இல்லை, செய்வதும் இல்லை என்பதால். //
ஸ்ரீராம் பொக்கிஷமான விஷயம். இப்ப வாசிக்கும் போது உங்களுக்குக் கண்ணில் நீர் கோர்த்திருக்கும் என்பது உறுதி.
நிறைய விஷயங்கள் மனதில் ஊஞ்சலாடியிருக்கும்...
கீதா
இன்று திருமணநாளை கொண்டாடும் ஸ்ரீராம் மகனுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசீரும் சிறப்புமாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்..