20.3.26

ஒரு 15,000 ரூபாய் தர முடியுமா? ரெண்டு நாள்ல தந்துடறேன்...

 

நண்பன் ஃபோன் செய்தான்.  பணியில் இருந்தபோது எங்களுக்கு அடுத்த நிலை சீனியராக இருந்த ஒருவரைக் குறிப்பிட்டு - பெண் - "உனக்கு ஏதும் ஃபோன் வந்ததா?" என்று கேட்டான்.  அவர் எனக்கு ஃபோன் செய்ய மாட்டார் என்றேன்.  காரணம் கேட்டான்.  சுமார் ஒரு வருடத்துக்கு முன் அவர் என்னிடம் அவசரம் என்று சொல்லி ஒரு தொகை கடன் வாங்கியதையும், இரண்டு நாட்களில் பென்ஷன் வந்தததும் திருப்பித் தந்து விடுகிறேன் என்றும் சொல்லி இழுத்தடித்ததையும், அப்புறம் விட்டேனா பார் என்று மீண்டும் மீண்டும் என்னென்னமோ பேசி, கடுமையாகப் பேசி, அவர் வீட்டுக்கு நானே கிளம்பி வரப்போகிறேன் என்றெல்லாம் பயமுறுத்தி சுமார் இரண்டு மாதங்களில் பணத்தைத் திருப்பி வாங்கிய கதையைச் சொன்னேன்.

"அதற்குதான் கேட்டேன்..   கொஞ்ச நேரம் முன்னால் எனக்கு ஃபோன் செய்து ஆரம்ப குசல விசாரிப்பு, ஐஸ் வைத்தல்களுக்குப் பின் 'ஒரு உதவி செய்ய முடியுமா' என்று கேட்க, நானும் நீ கேட்டது போல IT போல ஏதாவது சந்தேகம் இருக்கும் என்று நினைத்து 'உங்களுக்கில்லாத ஹெல்ப்பா' என்று சொல்ல, உடனே ஒரு 15,000 ரூபாய் கடன் கேட்டார்.  நீ மாட்டிகிட்டு முழித்த உன் அனுபவம் என்னிடம் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது" என்றான்.

"எப்படி சமாளிச்சே?" 

"பொண்ணு டெலிவரிக்கு வந்தது, நகையை வச்சேன், பழைய வீட்டை விட்டு புது வீடு கட்டிக் கொண்டு வந்திருக்கேன், எனக்கே கடன்னுல்லாம் சொல்லி நழுவிட்டேன்!  நீ உஷாரா இரு"

"நிச்சயம் இந்த முறை என்னிடம் வரமாட்டார்" என்று சொன்னேன்.  அதுபோலவே வரவில்லை.  

இவரிடமாவது என்னமோ பேசி எப்படியோ கொடுத்த கடனை திருப்பி வாங்கி விட்டேன்.  அப்படி திருப்பி வாங்க முடியாத கொடாக்கண்டர்கள் சிலர் இருக்கிறார்கள்.  "ஏன் கொடுத்தே?" என்று கேட்கலாம்.  கொஞ்ச நாட்கள் முன்பு வரை அது என் பலவீனமாக இருந்தது.  

பரஸ்பர நம்பிக்கைதான்.  அவர்கள் சொல்லும் அவர்கள் நிலைகண்டு இரக்கம்தான்.  இவர்கள் கூட இப்படி ஏமாற்றுவார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது.  அதென்னவோ என்னைப் பார்த்தால்தான் அவர்களுக்கு "புன்னகை முகமா"க தெரிகிறது போலும். அவர்கள் எதிர்பார்ப்பை நானும் ஏமாற்றவில்லை இதுவரை.  இனி ஏமாறுவதில்லை என்று முடிவு.

வாங்கும்போது கல்லும் கரையும் வண்ணம் பேசி, அண்ணா, கண்ணா, நண்பா என்று வாங்குகிறார்கள்.  திருப்பிக் கேட்கும்போது அவர்களுக்கு நமக்கில்லாத சிரமங்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று விடுகின்றன.  கேட்காமலேயே கொடுத்தவர் இதுவரை எவருமில்லை.  இப்போதெல்லாம் இரக்கமே படுவதில்லை.  இதுவரை என்னை ஏமாற்றியவர்கள் புன்னகைப்பார்கள்.  இறைவன் அவர்களை ரட்சிப்பாராக.

இன்னும் சில விஷயங்கள் இந்த கடன் சம்பந்தமாக..   அடுத்த வாரம் சொல்கிறேனே...

=========================================================================================

பிரயாண அனுபவம் - பழைய விகடனில் வந்த ஒரு ஏமாந்த அனுபவம்.  இதே போன்ற ஒரு சம்பவம் நான் அலுவலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் மதுரை பேருந்து நிலையத்தில் வத்ராப் செல்லக் காத்திருந்தபோது நிகழ்ந்தது.  அதை முன்னர் பகிர்ந்திருக்கிறேன்!

காசிப்புடவை -

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் நானும், உறவினர்களும் டில்லி, ஆக்ரா, ஹரித்வார் முதலிய இடங்களுக்குப் போய் வந்தோம். டில்லியிலிருந்து அலகாபாத் போய், அங்கிருந்து இரவு ஒரு மணிக்குக் காசி போய்ச் சேர்ந்தோம். மறு நாள் காலை. காசியில் சில கடைகளுக்குப் போய் விட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். . ரயில் வந்ததும் எல்லோரும் ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டோம். அதில் ஒரு புடவை உட்கார்ந்திருந்தார்." 

அவர் எங்களைக் கண்டதும், "ஒரு (புட்வை 'ஆட் ரூப்யா' என்று கூறிக் கொண்டே எங்களை அணுகினார்.

காசியிலிருந்தாலென்ன, ராமேஸ்வரத்தில் இருந்தாலென்ன! பெண்கள் பெண்கள்தானே! புடவை என்றதும் நான், நீயென்று போட்டி போட்டுக் கொண்டு விலை பேசினோம் ! நான் ஒரு புடவை 'தோ ரூப்யா' என்றேன். என்னுடன் வந்த ஒருத்தி "ரெண்டு ரூபாய் கேட்பது ரொம்ப அநியாயம்" என்று எங்களிடம் கூறியபடி, புடவைக்காரரைப் பார்த்து 'சார் ரூப்யா' என்றாள்.

கோடை மழை எதிர்பாராது கொட்டுவது போல் அந்த வியாபாரி, "சார் ரூப்யா சீக்கிரம் எடுங்கள்... ஐந்து புடவைகள் இருக்கின்றன.  20 ரூபாய்..சீக்கிரம் கொடுங்கள். ரயில் புறப்படப் போகிறது என்று துரிதப் படுத்தினார். புடவைகள் நன்றாகவே இருந்ததால், நாங்கள் பெருமிதத்துடன் ஒருவரே எல்லோருக்குமாக 20 ரூபாயைக் கொடுத்துப் புடவைகளை வாங்கிக் கொண்டோம். ரயிலும் நகர்ந்தது. பெண்களுக்கே உரிய ஆவலுடன் அவரவர் புடவையை எடுத்து ஆராய ஆரம்பித்தோம்.

அந்தோ! அக் காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் சுண்கள் கூடப் போதாது. எட்டு முழம் வேஷ்டியை அழகாகக் கிழிசல் ஒட்டிச் சாயம் தோய்த்துப் பிரிண்ட் செய்திருந்தது. எட்டு முழக் கிழிசல் வேஷ்டியை எப்படித் தான் தைத்தாரோ? அதை மடித்தார்! சாயம் தோய்த்தார்! கொடுத்தார் ! பிடித்தார் ஓட்டம்!... இந்த அக்கிரமம் காசிக்குத்தான் அடுக்கும் போலும்!

* காசிக்குப் போனாயே எதை விட்டாய்?" என்றாள் என் மூத்த மகள். நான் என்னத்தைச் சொல்ல அவளிடம்! காசைச் கோட்டை விட்டேன். என்றேன்! 

- திருமதி ஏ. ஜகன்னாதன்.

==========================================================================

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த ரகுவரன் மேல் கடுப்பில் இருந்த இயக்குனர் ரவிக்குமார் ரகுவரனுக்காக வைத்திருந்த 10 பக்க டயலாக்கை தூக்கி எரிந்து விட்டு நீ இந்த ஒரு டயலாக்கைச் சொல் போதும் என்று சொன்ன சம்பவமும், ரகுவரன் செய்த சம்பவமும்...  அப்போதைய புகழ்பெற்ற காட்சி இதும் புரியாத புதிர் படத்தில்.  கே எஸ் ரவிக்குமாருக்கு முதல் படம்.  ஆரம்ப கால ரகுவரன்.  கடைசியில் ரகுவரன் அலுத்துப்போய் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு காட்சியை முடிக்க அங்கேயும் ஒரு I Know சேர்த்தாராம் ரவிக்குமார்.





==========================================================================================

சாண்டில்யன் :  

பைண்டிங் புத்தகம் கைக்கு கிடைத்தால் அதிலிருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு லதாவின் ஓவியங்களை பகிர்ந்து விடுவேன்.  எங்கோ ஒளிந்துகொண்டு ஆட்டம் காட்டுகின்றன அவை!

சாண்டில்யன் பெண் வர்ணனை.

விசாலமான அந்த அறையின் நடுவில் போடப் பட்டிருந்த மஞ்சத்தில் கையில் அதுகாறும் தாங்கி வந்த அந்தப் பெண்ணைக் கிடத்தி, யவன வீரனை விளித்து விளக்குகளையும் தூண்டச் சொன்ன பின்புதான் கடற்கரையில் விதி தன் காலடியில் வீழ்த்தியவளின் வனப்பு எத்தன்மையது என்பதை இளஞ்செழியன் பூரணமாகப் புரிந்து கொண்டான்.

மஞ்சத்தில் கிடத்திவிட்ட அந்த நேரத்திலும் மூர்ச்சை முழுதும் தெளியாமலிருந்தாலும், இளஞ்செழியன் கடற்கரையிலிருந்து அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் அவள் குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்து விட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்றுப் பஞ்சணையில் மெள்ள அப்புறமும் இப்புறமும் அசைந்தாள். புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெள்ள அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் வெண்மை புதுத் தந்தத்தையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட இளஞ்செழியன், இப்படியும் ஒரு வெண்மை படைப்பில் இருக்க முடியுமா? என்று பிரமித்துப் போனான். 

அதிக வெண்மையான வெள்ளத்தில் புஷ்பத்தையும், செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும்கூட உவமை சொல்ல முடியாத அத்தனை வெண்மை வாய்ந்த அந்தக் கட்டழகியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கூந்தல் லேசாகப் பொன்னிறம் பெற்றிருந்ததாலும் நெற்றியின் விசாலத்தில் படர்ந்திருந்த அயல்நாட்டுச் சாயையாலும் தான் தூக்கி வந்தது ஒரு யவனப் பெண்மணிதான் என்பதை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன், இயற்கை மிகவும் செழுமையாக்கி யிருந்த அவள் வசீகர எழிலனைத்தையும் பருகிக் கொண்டு நின்றான்.

பிரதி தினம் காவிரிப்பூம்பட்டினத்தில் எத்தனையோ நாடுகளின் அழகிகளைப் பார்த்து அலட்சியத்துடன் அசட்டை செய்து சென்றிருக்கும் அவன் கண்கள் கடலில் கண்டெடுத்த அந்தக் கட்டழகியின் இணையற்ற பேரெழிலில் சிக்கி மீளமாட்டாமல் தவித்தன. 

கிரேக்க நாட்டின் சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட தெய்வ மங்கையரின் முகத்தைப் போல உயிருள்ள பெண்மணிகளுக்கும் முகம் இருக்க முடியும் என்று அவள் முகத்தை அன்று கண்ட பின்புதான் இளஞ் செழியன் நம்ப முற்பட்டான். வெள்ளை நுதலைக் கண்களி லிருந்து தடுத்து நின்ற அவள் கரிய புருவங்கள் வேண்டு மளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. சற்றுக் கீழேயிருந்த கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப்போல் வெண்மையுடனிருந்ததன்றி இமை ரோமங்களும் சங்கு மலரின் நுனிக் கறுப்பைப் பெற்றிருந்ததால் இயற்கை அவள் கண்ணுக்கென்று பிரத்தியேகமாக வகுத்த சிமிழ் போல் கண்களை மூடியிருந்த மெல்லிய சருமங்கள் காட்சியளித்தன. 

கடல் சில சமயம் விசிறிபோல் ஒதுக்கும் கிளிஞ்சலின் வேலைப்பாடு உயர்ந்ததா அல்லது அவற்றைப் போலவே கண்களை மூடிக்கிடந்த இமைகளின் அழகு உயர்ந்ததா என்பதை அறியமாட்டாமல் திணறினான் இளஞ்செழியன். இயற்கையின் அந்தச் சிமிழுக்கு அப்பால் வழவழப்பாக எழுந்து சற்றே குழி விழுந்து கிடந்த அவள் கன்னங்களில் சமுத்திர மணல் உறுத்தியதால் புள்ளிப் புள்ளியாக எழுந்திருந்த ரத்தச் சிவப்புகள் வைரத்தில் இழைக்கப்பட்ட சிவப்புக் கற்கள்போல் தீபத்தில் பிரகாசித்ததைக் கண்ட இளஞ்செழியன், 'இதைப் பார்த்துத்தான் அன்னை பூமி தன் கர்ப்பத்தில் வைரங்களையும், நீரோட்டமுள்ள சிவப்புக் கற்களையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று எண்ணினான். ஆனால், மணல் உறுத்தியதால் கன்னத்தில் தெரிந்த அந்தப் புள்ளிகள் அதிகச் சிவப்பா, அல்லது நீர் தழுவியதால் பளபளத்துச் செம்பருத்தி மலரின் இதழ்களைப் போல் மிக மிருதுவாகத் தெரிந்த உதடுகள் அதிகச் சிவப்பா, என்பதை மட்டும் பல நூல்களையும் கற்றுத் தெளிந்த அந்தப் பாண்டிய நாட்டு வீரனால் நிர்ணயிக்க முடியவில்லை.

மஞ்சத்தில் கிடந்த அந்த யவன மங்கையின் உடல், சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யௌவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் தோன்றியது இளஞ்செழியனுக்கு. தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கடலரசன் தன் அலைக்கரங் களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களிலெல்லாம் பல வாளிகளால் தாக்கப்பட்டு, புயலில் அகப்பட்ட மரக்கலம்போல அல்லாடும் மன நிலைக்கு வந்துவிட்ட இளஞ்செழியன் பக்கத்திலிருந்த யவன வீரனை நோக்கித் திரும்பி, “இந்தா! ஒரு சீலையை எடுத்து வந்து இவள் உடலை மூடிவிடு" என்று பதறிக் கூறினான்......

=======================================================================================

மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  "யாயும் ஞாயும் யாராகியரோ" என்பது சங்க இலக்கியமான குறுந்தொகையின் (பாடல் 40) புகழ்பெற்ற காதல் பாடலை இவர் பாணியில் 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர் 
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட  உன்றன் தந்தையும் என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார் எனவே செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம் கலந்தனவே. 

என்று எழுதியவர்.


துயிலும்பொழு திசைக்கும் இளந் 
தோகைமொழி கேட்டுப் 
பயிலும் ஒரு கிளியின் மொழி 
பண்யாழ்மொழி எல்லாம் 
உயிரில் எமதுளத்தில் உரம் 
ஊட்டும் தமிழாமோ?

சந்த இனிமைக்கும் பா நடைக்கும் ஒரு காட்டாகத் தக்க இப்பாட்டுப்போல, இத்தொகுப்பில் உள்ள பல பாக்கள் சுவைஞனின் உள்ளத்தைத் தொடத்தக்கன.

மீரா மிகமிக அடக்கமானவர். அதனால் இன்றைய அரசியலாரால் கண்டு கொள்ளப்படாதவர். 'சினிமா' வெளிச்சத்தில், துள்ளித் திரியும் விட்டில்களிடையே, இவர்தம் பாடல்கள் 'கற்று அடங்கல், ஆற்றுவானது செவ்வி உடையன.

அறம் காத்திருந்து பார்ப்பதுபோல இக்கவிதைகளும் காலம் கடந்தாலும் மக்களால் கண்டு கொள்ளப்படும் என்பது உறுதி.

தமிழண்ணல்
ஏரகம்
சதாசிவ நகர்
மதுரை


மீராவின் முன்னுரையில் (21 பக்கங்கள்) சிறு பகுதி.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.

இலக்குமி அம்மாளும் எஸ்.மீனாட்சி சுந்தரமும் என் மாதா பிதாக்கள்.  புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்குரு. மகாகவி பாரதி என் தெய்வம்.
என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்.

பாவேந்தரை ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். சிவகங்கை அரசர் பள்ளிக்கு திரு. நாராயணன் சேர்வை தலைமை ஆசிரியராய் இருந்தபோது வந்திருந்தார். நான் அப்போது மன்னர் கல்லூரி மாணவன்.

பாவேந்தர் பேச்சைக் கேட்கப் பள்ளிக்குப் போனேன். பாவேந்தர் பேசினார். இராசகம்பீரத்தோடு பேசினார். தமிழ் உணர்ச்சி பொங்கி வழிந்தது. மொழிப் பற்றும் இனப்பற்றும் மேலோங்க முரசறைந்தது போல் இருந்தது.

இராமநாதபுரத்தில் பள்ளியில் படிக்கும் போதே அவரைப் படித்து மயங்கிய நான் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த வாய்ப்பு சிவகங்கையில் கிடைத்தது. கூட்டம் முடிந்ததும் அவரை உணவுண்ண அழைத்துச் சென்றார்கள். அவருக்கு வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் என் கூச்ச சுபாவம் அவரை நெருங் விடவில்லை.

அப்புறம் கடைசிவரை அவரைப் பார்க்க முடிய வில்லை. கவிஞர்கள் முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னடியான் போல் பார்க்க, பழகக் கொடுத்து வைக்க வில்லை.

அவர் சின்ன வயது முதல் எழுபது தொடக்கம் வரை நான் திராவிட இயக்கத்தில் ஒன்றியிருந்ததற்கு அண்ணாவைப் போல பாவேந்தரும் மற்றொரு காரணம். கவிதைகளைப் படித்துச் சுவைத்த நெஞ்சம், அவரைப் போலவே என்னையும் திராவிட இயக்கப்பாடல்களைப் புனையத் தூண்டியது.
முரசொலி முதலிய பத்துக்கு மேற்பட்ட தி.மு.க இதழ்களில் அறுபதுகளின் ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மதுரையிலிருந்து வெளிவந்த கருமுத்து தியாகராசனாரின் 'தமிழ்நாடு' நாளிதழின் ஞாயிறு மலர்களில் அரசியல் அல்லாத பொது நிலைக்கவிதைகளை வெளியிட்டிருக்கிறேன்.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தனித்திராவிட நாடு தமிழ் மறுமலர்ச்சி, சாதி மதொழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம், சமத்துவ சமுதாயம், கலப்புத் திருமணம் முதலியவை என் பாடுபொருள்களாயின. கவிஞன் என்றால் காதலுக்குக் குறைச்சல் இருக்காது. (அறிஞர் தமிழண்ணல் காதலை ஒரு பக்தி இயக்கமாக வளர்த்தவன் நான் என்கிறார்.) இயற்கைப் புனைவும் இருக்கும்.
59, 60, 61 ஆண்டுகளில் தியாகராசர் கல்லூரியில் முது கலை படிக்கும் போது இத்தகைய கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் அவ்வப்போது வருவதைப் பார்த்துப் பரவசப்படுவேன்.

அப்போது கவிக்கோ அப்துல் ரகுமான் என் வகுப்புத் தோழர். நான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு முன் சில கவிதைகளை அவரிடம் கொடுப்பேன். அவர் என்னுடைய பச்சையான அரசியல் கவிதைகளை வெளியிடாதீர்கள் என்று தடுப்பார். எதிர்ப்பார். அவருக்கு சுத்தக் கவிதை தான் (Pure Poetry) பிடிக்கும்..........

காக்கைக்கு.....!

தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும் 
உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்; 
பாடத் தெரியாப் பறவையே! காக்கையே! 
காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின் 
பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற 
வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன் 
வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ 
முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்!

என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்? 
'என்னைக்கா' என்றோ இயம்புவாய்? மாட்டாயே! 
எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால் 
உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான் 
கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக் 
கா என்பாய் போலும்! 
கருங்குயிலின் அண்ணனே!

நீ நன்றாய்ச் சொல்கின்றாய்; நீ வாழ்க! உன்கருத்தை 
என்மக்கள் உணர்ந்தே எழும்நாள்தான் எந்தாளோ? 
பொன்னாள், புதுநாள் புவனத்தில் அந்நாளே!

தான்மட்டும் தின்கின்ற தன்னலமில் லாததனால் 
வான்தொட்டு மீள்கின்ற வல்லமைநீ பெற்றாயோ? 
உன்னைக்கண் டிந்த உலகம் திருந்தாதா? 
என்ன உலகம் - இதில்நான் பிறந்தேனே ....!

அன்னத்தைத் தூதாய் அனுப்பினனாம் ஓர் அரசன்; 
உன்னை நான் தூதனுப்ப உத்தேசம்; நீ உதவு! 
சேரி குறைவற்ற சென்னையில் என்இன்ப 
வாரிதியாள் ஏக்கம் வளர்ப்பாள்; அவளிடம் 'உன் 
சிந்தைக் குரியான் சிவகங்கை யில் இருந்து 
வந்துகொண் டுள்ளான்; வருந்தாதே;' என்று நீ 
கூறு! புறப்படு! கூறினால் கூட்டோடு 
சோறு படைப்பாள், சுவை!

==================

பெண்ணாகப் பிறந்தேனா?

பிறந்ததுதான் பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

துகிலுக்குள் மூடுபடாத் 
தூயமுகம் காட்டித்தான் 
முகிலுக்குள் போய்நிலவை 
முகம்மூடச் சொன்னேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

முள்ளில்லாத முல்லைப்பூ 
முறுவலிக்கும் போதில்என் 
வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு 
'வெவ்வெவ்வே' என்றேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

தீந்தேனைச் சிந்துகின்ற 
தென்னாட்டுப் பூக்களைஎன் 
கூந்தலிலே சிறைவைத்துக் 
குதூகலம்தான் அடைந்தேனா? பிறந்ததுதான் 
பிறந்தேன் நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

பலாச்சுளைபோல் மின்னும்என் 
பாதநடம் பார்த்துமயில் 
கலாபத்தை விரித்தாடக் 
கற்றுத்தான் கொடுத்தேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

மரக்கிளையில் அமர்ந்திருக்கும் 
மாங்குயில்கள் மயக்கும்என் 
குரல்கேட்டுப் பின்கூவக் 
குருவாய்நான் ஆனேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?

நள்ளிரவு நாடகத்தின் 
நகைச்சுவையாய் வந்துதித்த 
பிள்ளைக்குப் பாலூட்டும் 
பெரும்பேறு பெற்றேனா? 
பிறந்ததுதான் பிறந்தேன்நான் 
பெண்ணாகப் பிறந்தேனா?


- மீரா கவிதைகள் -
14.10.63

=========================================================================================

பாஹே பக்கம்!
அம்மா மார்ச் 27, 2002 ல் மறைந்ததும் அப்பா மிகவும் மனமொடிந்து போனார்.  உடனடியாக அம்மாவின் நினைவுகள் பற்றிய புலம்பல்களாக ஒரு தொகுப்புஇ தயார் செய்து 'ஹேமாஞ்சலி' என்று தலைப்பில் புத்தகமாக்கி உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் தந்தார், அனுப்பினார்.  இலக்கிய ரீதியாக அப்பாவை நன்கு அறிந்திருந்த, கி ராஜேந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், திலகவதி ஐ பி எஸ் ஆகியோருக்கெல்லாம் அனுப்பினார்.  அதில் திலகவதி அவர்களிடமிருந்து வந்த கடிதம் 


மனதளவில் அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருந்தார் என்பது அப்போது புரிந்ததை விட இப்போது அதிகம் புரிகிறது.

இரண்டு மாதங்களுக்குப் பின் எங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்...  அவர் எப்போதுமே சுருக்கமாக, கொஞ்சமாக எதுவும் எழுத மாட்டார். அதேபோல அவர் கையெழுத்தைப் புரிந்து கொள்வதும் சற்று  சிரமமாக இருக்கும்.

எவ்வளவோ சொல்ல வேண்டும்.  எங்கே ஆரம்பிப்பது?  ஏதாவது ஒரு இடத்தில்.  கடித புல்லட்டீன்ஸ் இனி என்னிடமிருந்து உங்கள் நால்வருக்கும் என் எண்ணங்கள் கருத்துக்கள் திட்டங்களைச் சொல்ல  - பக்கத்தில் இருக்கும் பாரதிக்கும் (பாரதி என் அண்ணன்.  ஸ்டோர் போன்ற குடித்தனத்தில் அந்தப் பக்கக் குடித்தனத்தில் மனைவி, மகனுடன் வசித்தார்) சேர்த்து - அவ்வப்போது எழுத அனுப்ப நினைக்கிறேன்.   ஒரு கடிதம் இம்மாதிரி எழுதுவது, ஜெராக்ஸ் நாலு பிரதிகள் எடுத்து நால்வருக்குமே அனுப்புவது என்று திட்டம்.  கம்யூனிகேஷன் கேப் என்பது நம் எல்லோரிடம் எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது இனி கூடாது. 

இவ்வரிசையில் முதல் ஒன்று அல்லது இரண்டு கடிதங்களை சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம், உஷாவுக்கு (என் தங்கை) அனுப்பி இருக்கிறேன்.  அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை மற்ற மூவருக்கும் அனுப்ப நினைக்கிறேன். என்ன எழுதினோம் என்று மறந்து விடுவதால் என்னிடமும் ஒரு காப்பி இருக்கும்.  

இனி கடித துவக்கத்தில் வரிசை எண் கொடுத்து விட்டால் மறுபடியும் நினைவூட்ட வசதியாக இருக்கும்.  இது இரண்டாவது கடிதம். 2 /2002.  எழுதுகிற எனக்கு இருக்கிற ஆர்வம், படிக்கிற உங்களுக்கு இருக்குமா, இதை ஒரு தொந்தரவாக நினைப்பீர்களா என்று தெரியவில்லை.  சென்ற கடிதம் பாரதி, உஷாவுக்கு, ஸ்ரீராம், உஷாவுக்கு தனித்தனியாக எழுதி மற்றவர்களுக்கும் நகல் தந்துவிட சொல்லி இருந்தேன்.  

ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது.  இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம். வரிவரியாக படித்து மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இல்லாவிட்டால் நான் சிரமப்பட வேண்டியிராது.  நான் எழுதுவதில் ரெகுலர் பீரியாடிசிட்டி இராது.  காஞ்சி நாராயணன் ( அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர், காஞ்சியில் வசித்தவர்) நடத்துகிற ஒரு பத்திரிகை தலைப்பில் 'நினைத்தபோது வரும் இதழ்' என்று போட்டிருந்தது.  அதுபோல என் கடிதமும் நினைத்த போது தான் வரும். 

என் மற்றொரு மன பலஹீனத்தையும் இங்கு சொல்லி விட வேண்டும்.  நேற்று செய்ய வேண்டும் என்று நினைப்பது இன்று வேண்டாம் என்றும் தோன்றுகிறது.  பல விஷயங்களை, பலவற்றை நினைத்து செய்யவில்லை. ஆனால் கடிதம் எழுதுவது அனேகமாக அப்படி விடாது.  என்ன...  ஜெராக்ஸ் தபால் OR  குரியர் செலவுகள் அதிகமாகும்.  முதலில் ஆரம்பிப்பதால் முன்னுரை இது பற்றி இப்போது நீண்டு விட்டது.  இனிவரும் கடிதங்களில் ஸ்டிரெயிட்டாக விஷயங்கள் மட்டுமே இருக்கும்.  நீங்கள் செய்ய வேண்டியது அடுத்தடுத்து வரிசையாக Tag கில் கோர்த்து. ஒழுங்காக பைல் செய்து வைப்பது. (நாங்கள் அதைச் செய்யவில்லை) எனக்கு ரகசியம் பிறருக்குத் தெரியக்கூடாது என்றெல்லாம் மறைக்க இதுவரை போல இனியும் இப்போது ஏதுமில்லை. எனவே நீ என் கடிதங்களை யாரிடம் வேண்டுமானாலும் காட்டலாம். 

முன்னுரையின் முக்கியமான இன்னொரு பகுதி - கடிதத் தலைப்பை பார்த்தீர்களா அல்லவா? -  இது அப்பா மட்டும் எழுதுவது அல்ல. அம்மா அப்பா எழுதுவது.  அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  என் குரலில் கை மூலம் ஹேமாவும் பேசுகிறாள் .  அவள் கருத்துகளே என் மூலம் சொல்லப்படுகிறது. அவள் விரும்பாதது, அவளுக்கு பிடிக்காதது எதுவும் நான் சொல்லவும் இல்லை, செய்வதும் இல்லை என்பதால். 

இப்படி ஒரு கடிதத் தொடரை ஆரம்பிப்பது என்பது சில வாரங்களாகவே என் மனதில் ஊறிக் கொண்டிருந்த விஷயம்.  நான்கு நாட்களுக்கு முன்பே இதன் இணைப்பாக சில பழைய, புதிய கவிதைகளை எழுதி வைத்திருக்கிறேன். கவரிங் லெட்டர் உடன் அவர்களுக்கு நகல் எடுக்க அவை காத்திருக்கின்றன. 'அன்று அப்படி'  - 'இன்று இப்படி' என்ற தலைப்பில் அக்கவிதைகள்.  என்னை ஒளித்துக் கொள்ள முடியாதவை ;  அன்றும் - இன்றும்.  'அன்றும்' ஒரே ஒரு டோஸ்தான் - ஒரு ஐந்து ஆறு.  இன்றும் ஹேமாஞ்சலி II  என்ற வரிசையில் இப்போதே 5, 6 - இனியும் தொடரக்கூடும்.  மனநிலையை பொறுத்தது. இவற்றோடு 'ஹேமாஞ்சலி'யில் விட்டுப் போன 'ஒரு மகாசமுத்திரத்தின் மேலும் சில துளில்கள்' என்றும் பல நினைவுகள் தொடரும்.

==============================================================================================

வினுவின் ஓவியங்களை சரித்திரக் கதைகளுக்கு பார்த்திருப்பீர்கள்.  சமூகக் கதைகளுக்கு அவர் ஓவியங்கள் சில.. அப்படியும் ஒரு வரலாற்றுப் பாத்திரம் வந்து விடுகிறது!






===============================================================================================

கேட்டுப்பாருங்களேன்...  இளையராஜாவின் மேதைமையை டாக்டர் நாராயணன் எப்படி எடுத்து நமக்கு சொல்கிறார் கேளுங்கள்.  அவர் சொல்லும் 'என்னதான் சுகமோ' பாடல் எனக்கும் பிடிக்கும் என்றாலும் எப்போதாவது கேட்கும் லிஸ்ட்டில் வைத்திருந்தேன்.  அந்தப் பாடலின் அருமையை இவர் சொன்னபின் அதன் சிரமங்கள், கஷ்டங்கள், நுணுக்கங்கள், இனிமை தெரிகிறது.  ஸ்ரோதஸ்வினி அல்லது உதயசந்திரிகா ராகம். கூட கௌரிமனோகரியும் சேர்கிறது. 

"இளையராஜாடா" என்று மனம் விம்முகிறது. இவர்கள் எல்லாம் நம்மை பரவசத்தில் ஆழ்த்த வந்த எவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ் என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறது.

101 கருத்துகள்:

  1. கடன் என்றதும் நான் இளைஞனாக இருந்த காலத்திலேயே என் அப்பா சொன்ன அறிவுரை நினைவுக்கு வருகிறது. நண்பன் கேட்டால், வேறு வழியில்லை என்றால் இரண்டு ரூபாய் கொடு. திரும்பி வராது. கடன் கொடுக்கக்கூடாது என்ற அனுபவம் கிடைக்கும் என்றார். கடன் எப்போதுமே திரும்ப வராது. அப்போதிருக்கும் மனநிலை (வாங்கும்போது) காரியம் முடிந்ததும் மறைந்துவிடும்.

    இதுக்கு உதாரணம், நமக்கு எந்த அவசர உதவி தேவைப்படும்போது நமக்கு இருக்கும் அவசரமும், உதவி கிடைத்தவுடன் ஏற்படும் நன்றி உணர்ச்சியும் விரைவில் மறந்துபோய்விடும். அவருக்கே உதவி தேவைப்படும்போது அந்த நன்றியுணர்ச்சி இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.  ஆரம்ப காலங்களில் ரொம்ப எச்சரிக்கையாகத்தான் இருந்தேன். 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்து, அது திரும்பாவிட்டால், அவர்களை புரிந்து கொண்டு அவர்களே மறுபடி கேட்டால் அந்த சின்னத் தொகையையே திருப்ப முடியாத நீங்கள் இதை எப்படி திருப்புவீர்கள் என்று மறுத்திருக்கிறேன்!  பின்னர் என் முகம் புன்னகைமுகமாகி விட்டது!

      நீக்கு
    2. ம்ம்ம் மாமா என்னிடம் வருத்தமும், கவலையும் அடைந்த ஒரு விஷயம் இந்தப்பண விவகாரம் தான். ஆரம்பத்திலிருந்தே ஒதுங்கிஏ இருந்து வந்தேன். என்னிடம் கொடுக்கப்படும் பணத்துக்கான செலவைப் பைசா சுத்தமாகக் கணக்குக் கொடுத்துடுவேன். மற்றபடி சேமிப்போ, செலவோ என்றால் எந்தவிதமான கருத்தையும் சொல்ல மாட்டேன். சொன்னதில்லை. அதிலும் கூட்டுக் குடும்பமாக இருந்தப்போ ரொம்பவே கவனமாக இருந்திருக்கேன். ஒரு பைசாவை நான் எடுத்து வீணாகச் செலவழித்தேன் எனப் பெயர் வாங்கக் கூடாது என்பதில் ரொம்பக்கவனம். அது மாமாவுக்குப் பிடிக்கலை என்றாலும் எனக்குக் கெட்ட பெயர் வராமல் இருக்க உதவியது. இப்போவும் பென்ஷன் தவிர்த்து மற்றப் பண விவகாரங்கள் எல்லாம் பையரே கவனிக்கிறார். நான் தலையிடுவதே இல்லை. யார் கடன் கேட்டாலும் மாமாவைக் கை காட்டி விடுவேன்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா... இது நல்ல தக்கினிக்கி!

      நீக்கு
  2. தனிமை கொடிது. அதிலும் மனைவிக்குப் பின்னான வாழ்க்கை கஷ்டம்.

    உங்கள் அப்பாவின் உணர்வு புரிந்துகொள்ளக்கூடியது.

    அன்பு எப்போதும் கீழிருந்து மேல் செல்லாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எங்களுக்கு அப்போது எழுதிய கடிதத்தின் சில உணர்வுகள் இப்போது புரிகின்றன.

      நீக்கு
    2. உங்கள் தந்தையின் ஆழமான அன்பு மனதைக் கலங்க அடிக்கிறது. உண்மையில் மாமாவுக்குள் இந்த ஒரு பயம், கவலை அதிகமாக இருந்தது. கடைசியாகப் பேசினப்போக் கூட இதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கவலைப்பட்டு அழவும் செய்தார். ஓரோரு சமயங்களில் எனக்குள்ளும் இந்தக் கவலை, பயம் முகிழ்க்கும். காலைக் காஃபி முதல் இரவு உணவு வரை மாமாவுக்குத் தேவையான நேரத்தில் கொடுக்க யார் இருப்பாங்கனு யோசிப்பேன். அவருடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ளவும் யார் இருந்தாங்க? இது ஒரு முக்கியமான கேள்வி. மாமா கூப்பிடும் விதத்திலேயே எதுக்குக்கூப்பிடுகிறார் என்பதை நான் புரிஞ்சுண்டு தயாராகப் போவேன். இப்போ இங்கே வந்தப்புறமா அதிகமா அதான் நினைவில் வருது. 24 நவம்பரிலிருந்தே எங்களைக் கத்தார் அழைத்து வரப் பையர் ஏற்பாடுகள் பண்ணிட்டிருந்தார். அவர் தீர்மானமாக வரப்போவதில்லைனு சொன்னதோடு என்னிடம் நீ மட்டும் போய்க்கோ என்பார். அது போலவே ஆகி விட்டது. ஆனால் அவர் தனியாக இங்கே வந்திருந்தால் நிச்சயம் கஷ்டமாகத் தான் இருந்திருக்கும்.

      நீக்கு
    3. உங்கள் அப்பாவின் உணர்வுகள் நன்றாகவே புரிகின்றன. ஆனாலும் வேறே வழியே இல்லாமல் சகிச்சுண்டு இருந்திருக்கார். அதோடு கூட நீங்க நால்வரும் அவரைப் புரிஞ்சுப்பீங்கனு அலாதி நம்பிக்கையோடயும் தன் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்திருக்கார். நல்ல மனுஷன். ஆனால் எழுத்தில் ஏன் பிரகாசிக்கலை என்பது நான் அடிக்கடி நினைத்து அதிசயிக்கும் ஒரு விஷயம்.

      நீக்கு
    4. //ஆனால் அவர் தனியாக இங்கே வந்திருந்தால் நிச்சயம் கஷ்டமாகத் தான் இருந்திருக்கும்.// ஒரு மனைவி தன் கணவனுக்குக் கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, தான் முதலில் போவதுதான்...என்று சமீபத்தில் எங்கேயோ படித்தேன்

      நீக்கு
    5. // அவருடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ளவும் யார் இருந்தாங்க? இது ஒரு முக்கியமான கேள்வி. மாமா கூப்பிடும் விதத்திலேயே எதுக்குக்கூப்பிடுகிறார் என்பதை நான் புரிஞ்சுண்டு தயாராகப் போவேன் //

      "என் தேவையை யார் அறிவார்? உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.." பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.

      நீக்கு
    6. // அதோடு கூட நீங்க நால்வரும் அவரைப் புரிஞ்சுப்பீங்கனு அலாதி நம்பிக்கையோடயும் தன் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்திருக்கார். //

      உங்கள் இந்த வரிகள் என்னை குற்ற உணர்வில் கலங்க வைக்கின்றன.

      நீக்கு
    7. // ஒரு மனைவி தன் கணவனுக்குக் கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, தான் முதலில் போவதுதான்...என்று சமீபத்தில் எங்கேயோ படித்தேன் //

      அது மனைவி கொடுக்கும் தண்டனை அல்ல.. காலம் கொடுக்கும் தண்டனை. "காலம் செய்த கோளமடி கடவுள் செய்த குற்றமடி..."

      நீக்கு
  3. மீராவின் கவிதைகள் அருமை.

    நல்ல காலத்தையெல்லாம் அரசியல் சார்ந்த பயணத்தில் வீண்டித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  திராவிட மாயையில் முழுகி விட்டார்.

      நீக்கு
    2. மீராவும் எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவராக இருந்தவரே. அவருடைய அரசியல் பாடல்கள் பிடிக்காததால் பின்னர் ஒதுக்கி விட்டேன். என்றாலும் நல்லதொரு கவிஞர் தன் காலத்தை வீணடித்து விட்டார் என்னும் எண்ணம் உண்டு.

      நீக்கு
    3. எனக்கு அவரின் கவிதைகளில் முதல்ல படிச்சது 'உனக்கும் எனக்கும் ஒரே ஊர்' தான். அதுவும் சுஜாதா சொல்லித்தான் தெரியும்!

      நீக்கு
  4. சாண்டில்யன் வர்ணனைகள், காதல் உரையாடல்களை நான் என்றுமே படித்ததில்லை. பக்கங்களைப் புரட்டிவிடுவேன்.

    இளஞ்செழியன் குதிரையில் காட்டுப் பாதையில் மாலை மங்கிய இரவுப் பொழுதில் வந்தான் என்பதை நாவல் ஆரம்பத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு எழுதும் அவர் உத்தி பல சமயங்களில் கடுப்படிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளஞ்செழியன் குதிரையில் வரமாட்டான்.  நடந்துதான் வருவான்.  நீங்கள் அப்போது படித்திருக்க மாட்டீர்கள் என்றுதான் இப்போது கொடுத்திருக்கிறேன்...  ஹா..  ஹா..  ஹா..  சாண்டில்யப் பக்கங்கள் தொடரும்!

      நீக்கு
  5. போர் உத்தி, வர்ணனைகளை அவரைப்போல கண்ணில் கொண்டுவந்தவர்கள், இதிஹாசங்களைத் தவிர வேறு எவருமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஆஹா..  இதோ..  இப்போது யவனராணி மீள் வாசிப்பில்..  கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் கொண்டிருக்கிறேன்.  

      நீக்கு
    2. பூவழகியின் நிராகரிப்பினாலும் கோபமான பேச்சாலும் மனம் நொந்து போய் அவளையே நினைத்துக்கொண்டு கடற்கரையில் நடந்து வரும்போது கால்களில் தட்டுப்படுவாள் யவனராணி.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாங்க செல்வாண்ணா வணக்கம். உங்கள் திருமண நாளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. மகிழ்ச்சி...
      அனைவருக்கும் நன்றி...

      நீக்கு
    3. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள் தம்பி.

      நீக்கு
    4. துரை செல்வராஜு சாரின் திருமண நாளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

      இந்த வருடம் உங்களிருவருக்கும் நல்ல செய்தி வரும். கவலை வேண்டாம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் அருமை.

    கடன் அன்பை முறிக்குமென தெரிந்து கொண்டே கடனை கேட்பவர்களை என்னவென்று சொல்வது.? ஒரு அவசரத்துக்கு வாங்கிய தொகையை "கடனை" என்று நினையாமல், அதை ஒரு "கடமையாக" திருப்பி தந்து விடுவது, நலமென்பதை (அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்) கடன் வாங்கியவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ .?

    எங்கள் இளைய மருமகளுடன் அலுவலகத்தில் கூட வேலை செய்பவர் ஒருவர் பெற்ற கடன் ஒரு லகரத்திற்கும் மேலாக இன்னமும் வந்த பாடில்லை.என்பார். (அவரது திருமணத்திற்கு முன் நடந்தது.) இப்போது அது முழுமையாக வந்து விட்டதா என இதுவரை அறியேன். உறவுகளிடையே கடன் அன்பை மட்டுமல்ல. உறவையும் முறிக்கும். இது எங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கண்டது. நீங்கள் உஷராக இருப்பது நல்லதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.. இதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டிருக்கின்றனர் சிலர்! எனக்கும் தி வா க இன்னமும் உண்டு...

      நீக்கு
  9. அவர்கள் சொல்லும் நிலைகண்டு இரக்கம்தான்.
    சில மாதங்களில்
    இவர்கள் கூட இப்படி ஏமாற்றுவார்களா என்று அதிர்ச்சி காத்திருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்... அவர்களின் கல்லும் உருகும் கதை கேட்டு வெள்ளிக்கிழமை பாராமல், விளக்கு வைத்த நேரம் என்றெல்லாம் எல்லோரும் பார்க்கும் காரணம் பார்க்காமல் கொடுத்திருக்கிறேன். இன்று வரை வரவில்லை.

      நீக்கு
  10. பாஹே அவர்களது பக்கங்களில்
    நெகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. பொக்கிஷப் படங்கள்
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  12. முதல் பகுதி விஷயம் புரிந்தது, ஸ்ரீராம்.

    இது எனக்குப் பல கெட்ட சம்பவங்களையும், மன உளைச்சல்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தது. விஷயம் புரிந்ததால் அப்படியே கடந்து அடுத்த பகுதிக்குச் செல்கிறேன் அதிகம் இதுக்குள் புகுந்து விஸ்தரிக்காமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... புரிகிறது.. ஆனாலும் படிக்காமல் தாண்டிச் செல்வது நியாயமில்லை! :)) எப்படியோ ஞாபகப்படுத்தி விட்டேன்!

      நீக்கு
    2. படிச்சிட்டேனே ஃபுல்லும்!

      கீதா

      நீக்கு
  13. காசியில் காசை விட்ட சம்பவம் வேறு சிலரும் இப்படி முடித்து எழுதியிருப்பதை எப்பவோ வாசித்த நினைவு.

    ஸ்ரீராம், உங்க வத்ராப்பு நிகழ்வு நான் வாசித்திருக்கிறேன். நினைவிருக்கு. அந்தச் சுட்டியும் கொடுத்திருக்கலாமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசியில் இல்லை கீதா.. "அந்த சம்பவம்" நான் காசி சென்றபோது நடந்தது. சென்னையில்தான் நடந்தது! வத்ராப் சுட்டி தரவில்லை! தேடவேயில்லை!

      நீக்கு
    2. காசியில் சில கடைகளுக்குப் போய் விட்டு ஸ்டேஷனுக்கு வந்தோம். . ரயில் வந்ததும் எல்லோரும் ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டோம். அதில் ஒரு புடவை உட்கார்ந்திருந்தார்." //

      இந்த சம்பவத்துககன பதில் ஸ்ரீராம். இந்த சம்பவம் போன்று முன்னர் வேறு சிலர் எழுதியிருந்ததை வேறு எங்கோ துணுககக வாசித்த நினைவைச் சொன்னேன்.

      உங்க சம்பவம் வேறு அது தனியாக நினைவிருக்கு.

      கீதா

      நீக்கு
  14. என் அப்பா இபப்டி மதுரை பஸ் ஸ்டாண்டில் அருகில் ஒரு முடுக்கில் ஏதோ டவல் விற்கும் வியாபாரியிடம் ஏமாந்திருக்கிறார்.

    நான் சமீபத்தில் ஏமாந்ததை (ஆனா ரொம்பப் பொடிக்காசு விலை) எழுத நினைத்திருந்தேன். அப்புறம் இதுக்குப் போயான்னு வருமோன்னு. காசு முக்கியமில்லை ஆனால் ஏமாற்றுபவரின் attitude நம் அறிவு, விழிப்புணர்வு ....இது முக்கியம் என்பதால் எழுதலாம்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்க.. எழுதுங்க.. மதுரை பஸ்ஸ்டான்ட் ஏமாற்றுவதில் மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்கிறது போல...

      நீக்கு
  15. கடன் வாங்கியவர்களுக்கு தூக்கம் வராது என்பார்கள், இப்போது கடன் கொடுத்தவர்களுக்குத்தான் அந்த நிலை.

    பதிலளிநீக்கு
  16. //ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது. இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம்.// நாம் சில சமயம் உணராமலேயே பெற்றோர்களின் அதிருப்திக்கு ஆளாகி விடுகிறோம். நம் குழந்தைகளால் அது நமக்கு நேரும்பொழுதுதான் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது புரியாத சில உணர்வுகள் இப்போது புரிகிறது. என் அப்பா என்னை ஸ்கூலில் பார்க்க வந்து விட்டு வேறு வேலையாக வந்தது போல பக்கத்து க்ளாஸ் டீச்சர் (அவர் நண்பரின் மகள்) பேசியதை பார்த்து என்னைப்பார்க்காமல் போறாரே என்று அப்போது எண்ணி இருக்கிறேன். அவர் என்னைதான் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரியாத வயது. மூணாங்கிளாஸ்! ஒன்றாவது இரண்டாவது படிக்காமல் நேராக மூணாங்கிளாஸ்! அப்புறம் என் பையனைப் பார்க்க நான் அவன் பள்ளிக்குச் சென்றபோது இதை உணர்ந்தேன். அதுபோல இப்போது....

      நீக்கு
  17. I know இந்தக் காணொளி செம சுவாரசியமான காணோளி, ஸ்ரீராம்.. பார்த்திருக்கிறேன், காணொளி ஃபுல்லும்....

    இந்த சீன்ல ரகுவரன் Classic! செம சீன். ரகுவரனை இயக்கியது ரவிகுமார் என்றாலும் அந்த சீன்ல ரகுவரன், ரவிகுமார் சொன்னது போல அந்த உடல் மொழியால் உச்சரிப்பால், முக பாவனையால் அந்தக் கதாபாத்திரத்தின் மொத்த குணத்தையும் காட்டியிருப்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ரவிக்குமார் பாஷையில் ரகுவரன் ஒரு நடிப்பு ராட்சசன்.

      நீக்கு
  18. வினுவின் ஓவியம் என்றால் நினைவுக்கு வருவது ஆஞ்சநேயர். பிறகு பொன்னியின் செல்வனுக்கு அவர் வரைந்த ஓவியங்கள். சமூக கதைகளுக்கும் படங்கள் வரைந்திருக்கிறார் என்னும் செய்தியை இப்போதுதன் அறிகிறேன். அந்த ஓவியங்களில் பெண்கள் பூசினார்போல் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினுவின் படங்கள் சரித்திர நாவல்களுக்குப் பொருந்துகிற மாதிரி சமூக நாவல்களுக்குப் பொருந்துவதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. இங்கே உள்ள படங்களில் இருக்கும் கதைகளைப் பின்னர் சாவகாசமாகப் பெரிது பண்ணிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கும் அதே கருத்துதான். சித்திரக்கதைகளுக்கு வரைவார். நம் கண்ணில் எது முதலில் பட்டதோ அது சரியாகி விடுகிறது!

      நீக்கு
  19. சாண்டில்யன் அவர்களின் வர்ணனை அபாரம். நுணுக்கமாக எப்படி இப்படி வர்ணிக்கிறார் என்று தோன்றும்.

    ஆண் எழுத்தாளர்கள் பெண்களை வர்ணித்திருப்பது போல ஏன் பெண் எழுத்தாளர்களால் வர்ணிக்க முடியவில்லை, ஆண்களின் அழகை சிலர் வர்ணித்திருந்தாலும், இத்தனை ஆழமாக வர்ணித்திருக்கிறார்களா என்று எனக்குத் தோன்றும். வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே.. அப்படி எதுவும் இருக்கான்னு தேடிப் பார்க்கணும்!

      நீக்கு
    2. பெண்கள் பெரிதும் உணர்வுகளையே பகிர்ந்து கொள்வார்கள். அதோடு பெண் எழுத்தாளர்களில் யாருமே சரித்திர நாவல்கள் எழுதினதாத் தெரியலை. இப்போதுள்ள பெண் நாவலாசிரியர்கள் யாரையும் நான் படிச்சதில்லை.

      நீக்கு
    3. முன்னரும் கூட எந்த பெண் எழுத்தாளரும் ஒரு ஆணை வர்ணித்திருக்கிறார்களா என்பதே கேள்வி!

      நீக்கு
  20. சாண்டில்யனை ரசிக்க பொறுமை வேண்டும்.
    காசிப்பட்டு சம்பவம் ஏற்கனவே படித்தது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 களில் விகடனில் வந்த சம்பவம்... படித்திருப்பீர்கள். எனக்கு பொறுமை நிறைய இருக்கிறது!

      நீக்கு
  21. சாண்டில்யனின் யவனராணி வாசிக்கத் தொடங்கியுள்ளேன். சுஜாதா போல....அவர் பல புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு வாசிப்பாராமே! அது போல் என்று சொல்லிக் கொண்டு நானும் இப்ப ஒரு ஹார்ட் காப்பி! 3 இ காப்பி! என்று!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... பன்னை ஒரு கடி கடிச்சிகிட்டு... டீ ஒரு வாய் குடிச்சு.. வடையை ஒரு கடி.. இப்படி..!

      நீக்கு
    2. அதே! உங்க தயவில் யவனராணி, ஏ அண்ணாவின் தயவில் ஹார்ட் காப்பி!

      கீதா

      நீக்கு
  22. பிறந்ததுதான் பிறந்தேன்நான்
    பெண்ணாகப் பிறந்தேனா?//

    கவிதை சூப்பர். அதற்கு முன்னானதும்.

    இதில் பெருமையாகச் சொல்லிவிட்டுக் கடைசி வரி ஏன் இப்படி என்று யோசிக்கிறேன். எதனாலாக இருக்கும் என்று? உள் அர்த்தம் என்னவாக இருக்கும் என்றும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கவிதையின் வைடிவம் அந்தக் கால கவியரங்கங்களில் ஒரு வரியை மீண்டும் மீண்டும் சொல்லி கவிதை சொல்வார்கள். அதை நினைவு படுத்தியது!

      நீக்கு
    2. கவிஞர் மீராவுக்குக்குழந்தைகள் இல்லையோ?

      நீக்கு
    3. இரா. சுசீலா என்ற பெண்ணை, செப்டம்பர் 10, 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்குக் கண்மணி செல்மா, சுடர், கதிர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். Wiki

      நீக்கு
  23. மனதளவில் அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருந்தார் என்பது அப்போது புரிந்ததை விட இப்போது அதிகம் புரிகிறது.//

    ஸ்ரீராம் சில விஷயங்கள் அப்போது புரியாமல் ரொம்பத் தாமதமாகப் புரியும் போது சில சமயம் நமக்கு ஒரு குற்ற உணர்வும் தோன்றும். மனித மனம் இதுதான்.

    அடிக்கடி நினைப்பதுண்டு அதற்கான பயிற்சியும்.....இருக்கும் போது இந்த நிமிடத்தில் நாம் conscious ஆகச் செய்ய வேண்டும் என்று நினைப்பதைச் செய்துவிட வேண்டும். பாராட்டுகளாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்தலாகட்டும், பேசுவதாகட்டும், தொடர்பு கொளல் ஆகட்டும்...ஒருவருக்கு நாம் ஏதேனும் செய்ய நினைத்தால், அன்பாகட்டும் எதுவாக இருந்தாலும், இந்த நிமிடத்தில் தோன்றினால் செய்துவிடுஅ வேண்டும். இந்த நிமிடம் கடந்தால் கடந்ததுதான் இல்லையா...

    அன்கான்ஷியஸா கோபப் பட்டுவிடுகிறோம்.....திட்டி விடுகிறோம்...ஆனால் கான்ஷியஸாகப் பாராட்டுகிறோமா? மற்றவர்களை நெருங்கியவர்களைப் புரிந்துகொள்கிறோமா என்று சிந்திப்பதுண்டு.

    ஆ!!!!!!! இதுக்கு மேல் எழுத மாட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துக் கருத்துகளுடனும் அப்படியே ஒத்துப் போகிறேன்.

      நீக்கு
  24. ஸ்ரீராம், அப்பா ஆகச் சிறந்த எழுத்தாளர் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. என்ன உணர்வுகள்!!! மனம் நெகிழ்ந்துவிட்டது. கண்ணில் நீர் துளிர்த்தன ஸ்ரீராம். இதொ இதை இப்ப டைப்பும் போதும்....கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் ...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஃபோனில் ஸ்ரீராம் படித்து உஷா கேட்டு விட்டதாக என்னிடம் சொல்லப்பட்ட போது ஒரு அதிருப்தி தான் எனக்கு ஏற்பட்டது. இருவர் தரப்பிலும் உள்ள அசிரத்தையே இதற்கு காரணம். வரிவரியாக படித்து மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும்.//

    லெட்டர் ஹெட்டில் அம்மாவின் படம்!

    //முன்னுரையின் முக்கியமான இன்னொரு பகுதி - கடிதத் தலைப்பை பார்த்தீர்களா அல்லவா? - இது அப்பா மட்டும் எழுதுவது அல்ல. அம்மா அப்பா எழுதுவது. .............................அவளுக்கு பிடிக்காதது எதுவும் நான் சொல்லவும் இல்லை, செய்வதும் இல்லை என்பதால். //

    ஸ்ரீராம் பொக்கிஷமான விஷயம். இப்ப வாசிக்கும் போது உங்களுக்குக் கண்ணில் நீர் கோர்த்திருக்கும் என்பது உறுதி.

    நிறைய விஷயங்கள் மனதில் ஊஞ்சலாடியிருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா... சும்மா அவர் எழுதி பிரசுரமான, பிரசுரமாகாத படைப்புகளை இங்கு பகிரலாம் என்றுதான் எடுத்தேன். இஃதையெல்லாம் படிக்கப் படிக்க என் மனம் கஷ்டப்பட்டது. அதையும் இங்கே பகிர்ந்து விடலாம் என்றுதான் பகிர்ந்தேன். உங்கள் மனங்களில் கொஞ்சம் கனத்தை ஏற்றி விட்டதால் என் பாரம் குறையுமே...

      நீக்கு
  26. இன்று திருமணநாளை கொண்டாடும் ஸ்ரீராம் மகனுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    சீரும் சிறப்புமாக பல்லாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? ஸ்ரீராம் பத்திரிகை அனுப்பி இருந்தார் என்றாலும் அப்போவே மாமாவின் உடல் நலம் குன்றி இருந்ததில் எனக்கு நினைவில் வரலை.
      ஸ்ரீராமின் மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். ஆசிகள். இனியும் தள்ளிப் போடாமல் விரைவில் ஓர் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் ஆசிகள். ஒரே ஒரு தரம் தான் பார்த்திருக்கேன் ஸ்ரீராம் வீட்டில். ஸ்ரீராமின் மாமாக்கள் பரிச்சயம் ஆன மாதிரி பிள்ளைகள் பரிச்சயம் இல்லை. பாஸ் மட்டும் அவ்வப்போது நினைச்சுப்பார். என்றாலும் எனக்கு என்னமோ ஸ்ரீராமை விட அவர் பாஸ் முகம் தான் பளிச் என நினைவில்.

      நீக்கு
    2. // ஸ்ரீராமை விட அவர் பாஸ் முகம் தான் பளிச் என நினைவில். //

      Grrrrrrrrr... நான் உங்க பேச்சு கா.... இருந்தாலும் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டே நன்றி சொல்லிக் கொள்கிறேன்!

      நன்றி செல்வாண்ணா

      நீக்கு
  27. எனக்குத்​வியாழனுக்கும் வெள்ளிக்கும் வித்தியாசம் தெரியலை. சினிமாப் பாட்டு தவிர.
    நானும் திரும்பி வராது என்று தெரிந்தும் உறவுக்கு (தங்கைகள் நால்வர்) கடன் என்ற பெயரில் கொடுத்து மறந்தது உண்டு.
    மீராவின் கவிதைகள் வ்வ்வ்ன்றும் ஒரு விதம்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீராவின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்

      நீக்கு
    2. ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கே... அப்புறம், வித்தியாசம் எதிர்பார்க்கிறீர்களா என்ன!

      கடன் கொடுப்பது நம் எல்லோருக்கும் 'கைவந்த' கலை என்று தெரிகிறது!

      நீக்கு
  28. ஒன்று சொல்லப்படுவதுண்டு. உளவியலில். அதாவது நம் பெற்றோரிடம் வளரும் போது நாம் சிலவற்றை அறியாமல் செய்திருப்போம். ஆனால் அதை உணர்வும் வயதில், நாம் அதைப் புரிந்து கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும். அதாவது நாம் நம் வாழ்க்கையைத் தொடங்கும் போது. இல்லைனா அதே pattern நம் குழந்தைகளிடம் இருந்து வெளிப்படும், ......ஏன் வந்தவர்களிடம் கூட வெளிப்படும்....

    எனவே நாம் உணரும் போது நம் வாழ்க்கையைத் தொடங்கும் போது அந்த pattern ஐ நம் சிந்தனைகளில் உடைத்து மாற்றிவிட்டால் மாறிவிடும்.

    இதை நான் என் அனுபவத்தில் சொல்வது. நான் ஒரு வேளை மணம் புரிந்தால், ஒரு வேளை குழந்தை வந்தால், எப்படி இருக்க வேண்டும் என்று என் வீட்டுப் பெரியவர்களிடம் பார்த்து, என் தனிப்பட்ட சிந்தனைகளில் அந்த pattern ஐ உடைத்ததால்...history did not repeat!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இந்த உணர்வைத் தந்து உணர்த்திய அந்த மாபெரும் சக்திக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. இந்த சைக்கிள் ஒரே மாதிரி இருப்பதாகத்தான் தோன்றும். அப்பா மகனிடம், அப்புறம் மகன் அப்பாவிடம், அப்புறம் மீண்டும் மகன் அப்பாவிடம்..

      நீக்கு
  29. வினு என்றாலே எங்கள் வீட்டில் இருந்த வினு அவர்கள் வரைந்த ஹனுமன் படம் தான் அதைத்தான் சுவாமி அறையில்......அதுதான் முதலில் நினைவுக்கு வரும்.

    பகிர்ந்திருக்கும் படங்கள் எல்லாம் ஒவ்வொரு விதத்தில் அழகு. சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் வித்தியாசங்கள் காட்டினாலும், ஆணின் ஓவியத்தில் கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றனவோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. டாக்டர் நாராயணன் இந்த வீடியோவை மீண்டும் கேட்டு ரசித்து ரசித்து.....என்ன சொல்ல....ஹப்பா!!

    என்னதான் சுகமோ பாடல் ரொம்பப் பிடிக்கும்...இவரும் என்னமா பாடுகிறார்.

    மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பிரமாதமாக பாடுவதில் மறுபடியும் சென்று அந்தப் பாடல்களைக் கேட்க வேண்டி இருக்கிறது!

      நீக்கு
  31. டாக்டர் நாராயணன் பற்றி சொலல்ணுமா...இந்தக் காணொளி மீண்டும் ரசித்து ரசித்து...இந்த ராகமே அப்படியான அழகான ராகம். கூடவே நாராயணன் அவர்களின் குரலும் ஸ்வரமும்....ஆஹா! கிறக்கம்.

    நான் நான் பாடணும்...பாட்டு, ஓ வசந்த ராஜா, பூஜைக்க்தேத்த பூவிது, சிந்திய வெண்மனி....எல்லாமே இந்த ராகம்

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இந்த நாராயணன் என்பவரைப் பற்றி நான் இதுக்கு முன்னர் ஸ்ரீராம் எழுதித் தான் தெரிந்து கொண்டேன். இப்போ இரண்டாம் முறையாக அறிந்து கொண்டேன். நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசைப் பிரியர்கள் தவற விடக்கூடாத குரல், நிகழ்ச்சி அது கீதா அக்கா.

      நீக்கு
  33. ஓவியர் வினு, திரு ரா.கணபதி இருவருமே அம்பத்தூர் திருவேங்கட நகரில் தான் வசித்தார்கள். என் மாமாவின் வீடும் அங்கே இருந்ததால் அங்கே போகும்போது அவர்களைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. அப்போ ரொம்பச் சின்ன வயசு என்பதால் அறிமுகம் பண்ணிக் கொண்டு பேசியது எல்லாம் இல்லை. அதே போல் டைரக்டர் விசுவும் அம்பத்தூர் வாசி. அவர் முதல் மனைவி உமாவும் அம்பத்தூர் வாசி தான். ப்ருத்விபாக்கம் இன்ஷூரன்ஸ் காலனியில் இருந்திருக்காங்க. பித்துக்குளி முருகதாஸ், மௌலியின் அப்பா டிஎஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள், எஸ்.வி.சேகர் ஆகியோரெல்லாம் அம்பத்தூர் ராமசாமி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பார்கள். என்னோட கடைசி நாத்தனாரின் மாமனார் அம்பத்தூர் ப்ருத்விபாக்கத்தில் வீடு கட்டிக் கொண்டு இருந்தவர் என்பதால் இவங்களை எலலாம் நன்கு அறிந்திருந்தார். இந்தக் கலைஞரகளெல்லாம் இருந்ததால் தானோ என்னமோ அம்பத்தூரில் இருந்த கல்சுரல் சபா நன்றாக நடந்து வந்ததோடு அல்லாமல் இசைத் திருவிழா, நாடகத்திருவிழா என்றெல்லாம் நடத்துவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு அம்பத்தூர்வாசி மௌலியும் அப்படி என்று தெரியும். எஸ் வி சேகர் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மாணவர் இல்லையோ? விசுவுக்கு இரண்டு மனைவிகளா?

      நீக்கு
  34. காசியில் இப்படி எல்லாம் வருபவர்கள், போகிறவர்களிடம் வாங்கக் கூடாது. பொதுவாக எல்லா ஊருக்கும் இது பொருந்தும். நாம் தங்குமிடத்தில் கேட்டால் சொல்லுவார்கள். பெரும்பாலும் செட்டியார் கடைகளைத் தான் சொல்லுவார்கள். புடைவை வாங்குவதும் நாம் தங்குமிடத்தில் கேட்டுக் கொண்டே அவங்க யாரையானும் கூட அழைத்துச் சென்று வாங்குவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரிதான். ஆனா பாருங்க.. சம்பவம் நடந்தது 1963 களில்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!