17.3.26

நெடுங்கதை :: அஞ்சலை 2/2 - துரை செல்வராஜு

 

 அஞ்சலை 2

துரை செல்வராஜு

*****************

 - பெரியம்மா -

***********************

அன்று வெள்ளிக்கிழமை..

பழனியின் குடும்ப விசயம் தெரிஞ்ச  ரெண்டாம் நாள்...

உள் முற்றத் திண்ணையில் ஆசுவாசமாக சாய்ந்திருந்த பெரியம்மா-

'பழனி மாதிரி நம்பிக்கையான ஆள் நம்ம தோட்டத்துக்குக் கிடைப்பது கஷ்டம்... '

உள்மனதுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் -

சிலுசிலுக்கும் பாவாடை தாவணியும் கூடை நெறைய மருதாணியுமாக அஞ்சலை வந்தாள் ... 

பிள்ளைகள் பெரியவர்கள் எல்லாருக்கும் மருதாணி இலைகளைக் கண்டதும் சந்தோஷம்..

கொப்பும் குலையுமா இருந்த மருதாணியை சுத்தமாக ஆய்ந்தெடுப்பதற்கு முனைந்த பெரியம்மா சொன்னார்கள்..

"மருதாணிய நான் அறைச்சுடறேன்.. சீக்கிரமா சாப்பிட்டு வாங்க எல்லாரும்.. "

குறுக்கிட்ட அஞ்சலை -

"நான் அறைச்சுத் தர்றேம்மா!.. " - என்றாள்.. 

மெல்லச் சிரித்த பெரியம்மா,

"இல்லடா அஞ்சலை...  மருதாணி அறைக்கிறப்போ கையெல்லாம் சிவப்பாயிடும்.. அதுக்கு மேல மருதாணி வைச்சா எடுப்பா இருக்காது!.. " - என்றபடி,

அவளது கன்னத்தை வருடிய பெரியம்மாவின் மனம் ஏதேதோ பாச உணர்வின் அதிர்வுகளால் தள்ளாடியது...

'தென்மலையின் சந்தனமே

தேன்வழியும் செண்பகமே

பொன்னி நதிப் பூங்காற்றே

வந்திடம்மா பூ முடிக்க..


பொன்னிறத்துப் பூவரும்பே

நன்னிலத்து செங்கரும்பே

தங்கநிறத் தாமரையே

வந்திடம்மா மை எழுத..

 

முத்து முத்துப் புன்னகையே

முத்தமிழின் இன்சுவையே

நெத்திச் சுட்டி சூடிடவே

வந்திடம்மா வான்மதியே...


மல்லிகையும் பூத்திருக்க

மங்கலங்கள் காத்திருக்க

மஞ்சள் முக நித்திலமே

மருதாணிச் சித்திரமே!.. '

மெலிதாகப் பாடிய படி  பிள்ளைகளுக்கும் தனது தங்கைக்கும் மருதாணி வைத்து விட்ட பெரியம்மா கடைசியாக தனக்கும் வைத்துக் கொண்டார்கள்...

கை விரல் சிவப்பைக் காட்டுவதற்காக பொழுது விடிவதற்கு முன் ஓடி வந்த அஞ்சலை உறக்கத்தில் இருந்த பிள்ளைகளை எழுப்பி விட்டாள்...

கண் விழித்து கைகளைக் கண்ட பிள்ளைகளின் முகம் கீழ் வானச் சிவப்பாகியது.. பிள்ளைகளின் புன்னகையைக் கண்டு பெரியவர்களுக்குப் பூரிப்பு...

இதெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்.. பெரியம்மா ஊருக்குச் சென்று விடுவார்கள்...

அன்று ஞாயிற்றுக் கிழமை..

மதியப் பொழுதுக்கு மேல் ஈரமான  சாக்குச் சுருளுடன் வந்தாள் அஞ்சலை..


மகளை இந்த நேரத்தில் கண்ட பழனி,

"என்னம்மா இது!.. "  - என்றார்... 

ஒன்றும் பேசாமல்  புன்னகைத்த அஞ்சலை கையிலிருந்த சுருளை விரித்துப் போட்டாள்.. வெளிர் நிற மஞ்சள் மடல்களுடன் தாழம்பூக்கள்...

"தாழங்காட்டுக்குள்ளே போய் யாரு பறிச்சது ?.. "  - 

பழனியின் கேள்விக்குப் பதிலாக - " அத்தான்!.. " - என்றாள் ஒற்றை  வார்த்தையில் ..

திண்ணையும் முன் வாசலும் தாழம்பூக்களின் நறுமணத்தால் நிறைந்தன...

பிள்ளைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை...

கொல்லையில் அரும்பியிருந்த மல்லிகை மொட்டுகள் கூடத்தில் குவிந்தன.. கொஞ்ச நேரத்தில்  ஊசியும் பட்டு நூலும் ரிப்பன் நாடாக்களும் குஞ்சங்களும் வந்து சேர்ந்தன..

இதெல்லாம் சின்னவளுக்கு சடங்கு சுத்துனப்போ வர்றவங்களுக்கு மஞ்ச குங்குமம் தாம்பூலத்தோட கையில் வச்சிக் கொடுக்கிறதுக்காக வாங்குனது...

தாழம்மடல்களைப் பிரித்து ஓரத்து முட்களை நறுக்கி விட்டு பிள்ளைகள் அனைவருக்கும் ஜடை பின்ன ஆரம்பித்தார் பெரியம்மா..

முதலில் அமர்த்தப்பட்டவள் அஞ்சலை..

சூரியப் பிரபை  ஜடைப் பில்லையுடன் மல்லிகை மொட்டுகளையும் பட்டு நூல் ஜரிகை இழைகளையும் சேர்த்துச் சேர்த்து தைத்து முத்துக் குஞ்சத்துடன் ஜடையைப் பின்னி முடித்ததும் தேவதைகள் நடமாடும் திருமாளிகை ஆனது வீடு..

வீட்டுப் பிள்ளைகள் மூவருடன் அஞ்சலையையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து நெற்றியில் பொட்டு வைத்த பெரியம்மா முகத்தைத் துடைத்தபடி முற்றத்துத் தூணில் சாய்ந்த போது அருகில் வந்த அஞ்சலை,

"உங்க தோள்..ல சாஞ்சுக்கவா அம்மா!.. " என்றாள்...


"தோள்..ல யா?.. எம் மடியிலயே சாஞ்சுக்கடி செல்லம்!.. " -  என்றபோது தாயில்லாத அந்தப் பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது..

சிறகுகள் படபடக்க தேவ கன்னியர்  வானில்  நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்...

ஃஃஃ


கூட்டு வண்டி தயாராக இருந்தது... பழனியும் அருகே...

கலங்கிய முகத்துடன்  பிள்ளைகள்.. அஞ்சலையும் நிற்கின்றாள்... 

எல்லாரையும் வாரியணைத்து முத்தமிட்ட பெரியம்மாவின் முகத்தைப் பார்த்தபடி பழனி பேசினார்...

"யக்கா.. அரும்போட தம்பி   கார்மேகம்... அஞ்சலைக்கு  மாப்பிள்ளை.. நல்ல பையன்..  தோட்டத்து வேலை.. டவுன் வாசனை இதுகள் ல பிரியம் ஜாஸ்தி ... ஒரு வழி காட்டுங்களேன்... "

" என்ன படிப்பு ... ? "

" பத்தாங் கிளாஸ்.. புத்திசாலி..   "

அன்றைக்கு - 

சிறகுகள் படபடக்க தேவ கன்னியர்  வானில்  நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது பெரியம்மாவிற்கு...

புன்னகைத்தார்...

தூரத்தே ரயில்வே ஸ்டேஷன்... 

கழுத்து மணிகள் அசைய காளைகள் விரைந்து கொண்டிருந்தன..

ஃஃஃ


========================================================================================================================================



எம்.ஆர். ராதா பேசுகிறார்!

1971ம் ஆண்டு மே1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியாண வீடுபோல் 'கலகல' வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:

"என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா ? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா ?... போங்க மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!" ... ...
ராதாவின் குரலா இது, இத்தனை யிருக்கிறதே'... சன்னமா
வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:

"உங்கள் குரல் முன்னைப் போல்..."

"அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!" என்கிறார் ராதா.

மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். "உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?" என்கிறேன்.

"டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய ஸயன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர்!' நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஓவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் 'ரத்தக் கண்ணீர் ராதா' வாயிட்டேன் ... ஏய், காந்தா!... யார் அங்கே...?"

ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், "வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே ?" என்கிறார் டாக்டர்.

"அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?" என்கிறார் ராதா.

"அது எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறேன் நான்.

சக பத்திரிகையாளர் ஒருவர், "உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்", என்கிறார் வினயத்துடன்.

"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!" என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.

"ஜெயில்லே..." என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லிசாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... 'இன்னிக்கு உனக்கு ஜெயிலர் சொன்னாக்கூட விடுதலைடா'ன்னு 'அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்... அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே?... அப்போ சொல்றேன்!"

சொன்னபடி அவர், 'கதிரு'க்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

விந்தன்

சென்னை-30
15.3.72.


========

பதிப்புரை

1971-ல் 'தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதா வைப் பேட்டி கண்டு அமரர். விந்தனா'ல் தொடராக எழுதப் பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கி யிருப்பது.
இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம். 

இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள். எம்.ஆர். இராதா, தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும்.

உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. 

- பதிப்பகத்தார் -

===================

93 கருத்துகள்:

  1. /சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது பெரியம்மாவிற்கு/
    நல்ல சுபமான முடிவு...துரை செல்வராஜ் அவர்களின் ட்ரேட்மார்க். ...வெகு நன்று!

    பதிலளிநீக்கு
  2. /தென்மலையின் சந்தனமே

    தேன்வழியும் செண்பகமே/
    அருமையான வரிகள். பாடலை வெகுவாக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. எம்.ஆர். ராதாவின் பற்றிய செய்தி படிப்பதற்கு சுவையாக இருந்தது. என்னதான் அவர் கருத்துகள் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும், எம்ஜியாரை அவர் சுட்டிருந்தாலும், அவரை வெறுப்பது கஷ்டம். எம்.ஆர்.ஆர்.வாசு வேறு டைப். அவருடைய நடிப்பையும் ரசித்திருக்கின்றேன். என்னைக் கேட்டால் அவரால் எம்.ஆர்.ராதாவின் பக்கத்தில் கூட வர முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   சரியாக சொன்னீர்கள்.  'அவரே அவருக்கு என்றும் இணையானவர்' என்று பாடலாம்!

      நீக்கு
  4. விந்தனின் புத்தகத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது எடுத்து விடுங்களேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக பகிர்கிறேன்.

      நீக்கு
  5. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. படங்கள் மனதில் நிறைகின்றன...

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா, கதை. எல்லோரும் நல்லவர்களே என்று இனிய குணங்களுடன் சுப முடிவோடு நன்று,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நல்லவரே

      மகிழ்ச்சி
      நன்றி சகோ..

      நீக்கு
  8. ஓ எம் ஆர் ராதா! இவருடைய நக்கல் நையாண்டி வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால். பார்த்த சில காட்சிகளை வைத்துச் சொல்கிறேன்.

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்.....மா மா மாப்ளே!!!! அந்தப் பாடல் காட்சியையும் பாடலையும் மறக்க முடியுமா? நான் எப்பவும் ரொம்ப ரசிக்கும் காட்சி மற்றும் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   அதைதான் 'அவரே அவருக்கு என்றும்' என்று பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. மேலே சூர்யா அவர்களுக்கு உங்கள் பதில் பார்த்துவிட்டேன்! இப்ப

      கீதா

      நீக்கு
  9. அதில் சிவாஜி பாடலைத் தொடங்கும் போது - நீயே உனக்கு என்றும் நிகரானவன் - என்று தொடங்கும் போது கையை, எம் ஆர் ஆரின் பக்கம் காட்டுவார்!! அது ரொம்பப் பொருத்தமாக இருப்பது போன்று எனக்குப் படும். ஒரு தனி பாணி எம் ஆர் ஆர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி அவர்மேல் ஏகப்பட்ட மதிப்பு வைத்திருந்தார்.

      நீக்கு
    2. சிவாஜி எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும் சீன்களில் எப்போதுமே டென்ஷனில் இருப்பாராம். "ராதா அண்ணன் ஒரு "ஸீன் ஸ்டீலர்". ஜாக்ரதையா இல்லேன்னா நம்பளை முழுங்கிடுவார்" என்று சிவாஜி சக ஆர்ட்டிஸ்ட்களிடம் சொல்வாராம்.

      நீக்கு
    3. எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் டயலாக் பேசி நடித்திருக்கிறார் எத்தனை படங்களில் எம்.ஆர்.ராதா! ஆனால் அவருக்குத் தமிழ் கூட எழுதிப் படிக்கத் தெரியாது என்ற செய்தியை நம்புவது கடினம்தான். நாடக நாட்களிலேயே பிறர் படிக்க வசனங்களை மனப்பாடம் செய்து விடுவதுதான் அவர் ஸ்டைல்.

      நீக்கு
    4. அவருடைய டயலாக் டெலிவரி ஸ்டைல் தனி ஸ்டைல். அனைவரும் ரசிப்பார்கள்.

      நீக்கு
  10. சிறுகதை மிகவும் நன்று.

    கிராமத்து மக்களின் வெள்ளந்தியான குணம், எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம்.

    கதை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் இன்னும் திருப்பங்களுடன் கொஞ்சம் நீட்டி ஒரு சில வாரங்கள் அதிகரித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. கதையின் ஊடாக வந்த கவிதை அருமை.

    படங்கள் வெகு அழகு. நன்றாக முயற்சித்திருக்கிறார் அக்கா கீதா ரங்கன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வாண்ணாவின் கவிதைகளும் எப்போதுமே நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. கவிதையை ரசித்ததற்கு
      மகிழ்ச்சி
      நன்றி நெல்லை...

      நீக்கு
  12. எம் ஆர் ராதா... இந்தப் புத்தகம் படித்திருக்கிறேன். அவருடைய திறமை, கர்வம், சுய மரியாதை எல்லோரும் அறிந்ததுதான்.

    பலர் சேர்ந்து வளர்த்த மாமரத்தை ஒருவன் சொந்தம் கொண்டாடித் தள்ளிக்கொண்டுபோய் அனுபவிக்கிறார்கள். வளர்த்தவர்களுக்குப் பயனில்லாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாய் புரியா விட்டாலும், பொதுவில் ராதா எல்லோராலும் ரசிக்கப்படுபவர்.

      நீக்கு
    2. திராவிடக் கருத்துகள், மக்களை அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைத்தது, சுயமரியாதை... என்பதில் பெரும் பங்கு எம் ஆர் ராதாவிற்கு உண்டு. இது போல் பல தலைவர்கள் மக்களிடம் இந்தக் கருத்தை உருவாக்கியிருந்தாலும், கருநாகம் குடிகொண்டதுபோல கருணாநிதி தன் குடும்பத்திற்கு மாத்திரமே அதன் பயனைக் கொண்டுபோய்விட்டார்.

      நீக்கு
  13. எம் ஆர் ராதா, வாசு, ஏன் ராதா ரவி... அந்தக் குடும்பமே நல்லா நடிக்கும். ராதா பகுதிரை ரசித்தேன், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. மனதில் அறம் இருந்த கலைஞன் எம் ஆர் ராதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதிகா, நிரோஷா, விக்ரம் வாசுவை விட்டுட்டீங்களே

      நீக்கு
  14. கதாநாயகனை மாத்திரம் சிறந்தவனாக்க் காட்டும் உத்தி, தன் திறமையைச் சிறிது குறைப்பதாக எண்ணியவர் ராதா.

    அவர் வரலாறு படிக்க இனிமை. அவரது திரைப்படக் காட்சிகள் இப்போதும் பார்க்க நன்றாக இருக்கும். திறமைக்கு அறிவுக்கு குலம் கிடையாது என்பதை இவர், என் எஸ் கே, எம் கேடி போன்ற பலர் நிரூபித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் என்றில்லாமல் எல்லா மொழிகளிலும் கதாநாயகனை அப்படிதானே காட்டுவார்கள்! ரத்தக்கண்ணீர் ஒரு விதிவிலக்கு!

      நீக்கு
  15. "என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!"//

    சூப்பர் பதில். ரொம்ப ரசித்தேன்.

    இந்த வரிக்கு முன் அவர் பேசுவது, நான் சாதாரண ஆக்டர்....நீங்க பேசுவதை நான் பாலிஷ் பண்ணி...என்று பேசுவது அட! எளியமனிதர் என்று தோன்றுகிறது. டிவிஎஸ் பற்றிச் சொன்ன கருத்தையும் ஒப்பிட்டதையும் ரசித்தேன்...இவரைப் பற்றி இருக்கும் எதிர்மறைப்பக்கங்களில் இப்படி நல்ல எண்ணங்களும் இருப்ப்பதும் தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லதும் கெட்டதும் கலந்தவைதானே மனிதன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. துரை அண்ணா, கதையின் இடையில் உங்கள் பாடல் சூப்பர். ரொம்ப ரசித்தேன். முன்னரே இக்கருத்து போட்டு வரவே இல்லை....என் பெயர் ஐடிக்கு ப்ளாகர் படுத்தும் பாடு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் இடையில் பாடல் சூப்பர்.
      ரொம்ப ரசித்தேன். ///

      மகிழ்ச்சி...
      நன்றி சகோ..

      நீக்கு
    2. நாட்டுப்புறப் பாடலாகப் பாடியும் பார்த்துக் கொண்டேன்! அந்தக் காட்சி எப்படி இருக்கும்னு

      கீதா

      நீக்கு
  17. ஏதோ விந்தன் தன் வறுமை வாட்டத்திற்கு வடிகாலாய் எழுதினார் என்றால்..
    நிகழ்கால விஷயங்களுக்கு முக்கியத்வம் கொடுங்கள்.
    உதாரணத்திற்கு தோழர் நல்லக்கண்ணு வாழ்க்கை நிகழ்வுகள்...
    அல்லது இந்த வருட சாகித்ய அகாதமியின் தேர்வும் அது பற்றிய பார்வைகளும்
    இந்த மாதிரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவகாரம் வேண்டாம் என்றுதான் விட்டு விட்டேன் ஜீவி ஸார். நல்லகண்ணு வாழ்க்கை நிகழ்வுகள் நான் அறியாதவை.

      நீக்கு
    2. நல்ல வேளை ஸ்ரீராம் பிழைத்தார். ஜீவி சார் இந்த வருட ஞானபீட விருது பற்றி ஸ்ரீராமை எழுதச் சொல்லவில்லை 😆
      பின் குறிப்பு: கவிப்பேரரசர் வைரமுத்துவின் அபிமானிகள் மன்னிக்கவும்.

      நீக்கு
    3. எனக்கு வைரமுத்துவைப் பிடிக்காது என்றாலும் அவர் வரிகள் சிலபல பிடிக்கும்.

      நானுறங்கும் நாள் வேண்டும் 
      சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் 
      என் கண்ணில் நீர் வேண்டும் 
      சுகமாக அழவேண்டும்...

      ராகம் ஜீவனாகும்
      நெஞ்சின் ஓசை தாளமாகும்
      கீதம் வானம் போகும்
      அந்த மேகம் பாலமாகும்

      வானம் என் விதானம்
      இந்த பூமி சன்னிதானம்
      பாதம் மீது மோதும்
      ஆறு பாடும் சுப்ரபாதம்
      ராகம் மீது தாகம் கொண்டு
      ஆறும் நின்று போகும்
      காற்றின் தேசம் எங்கும்
      எந்தன் கானம் சென்று தங்கும்

      நீ இல்லாமல் நடந்து
      போக கால்கள் இல்லையே

      கனவிலேனும் கடிதம்
      போடு காதல் முல்லையே

      மூடி வைத்த காதல் இன்று மோசம் போகுமோ
      மூடி வைத்ததாழம்பூவில் வாசம் போகுமோ

      நீக்கு
    4. ஆகா! சாகித்ய பீடமும் ஞான்பீடமும் ஒன்றுதானா? நான் வேறு வேறு என்றல்லவா நினைத்திருந்தேன்? இந்த வருட ஞானபீட விருது பற்றி ஜீவி சாரின் கருத்துகள் என்னவோ? அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் பிறகு வைரமுத்துவிற்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நண்பர் தமிழகத் தேர்தலுடன் இந்த விருதை முடிச்சுப் போட்டார். எனக்கென்னவோ அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. இவருக்கு விருது கொடுத்தார்களென்று தமிழக வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை.

      நீக்கு
    5. @ஸ்ரீராம் /எனக்கு வைரமுத்துவைப் பிடிக்காது என்றாலும் அவர் வரிகள் சிலபல பிடிக்கும்./
      எனக்கும் அவருடைய பாடல்கள் பல பிடிக்கும்.ஆனால் அவரைப் பிடிக்காது.
      குறிப்பாகக் "கவிப்பேரரசு" என்று ஒரு பட்டத்தைப் போட்டுக்கொண்டு "கண்ணதாசனுக்கு மேலே நான்" என்று ஸீன் போட்டதிலிருந்தே அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்கப்புறம் அவரைப் பற்றி வந்த எந்த செய்தியும் நல்ல செய்தியில்லாமல் போய் விட்டது.

      நீக்கு
    6. எதிர்ப்புப் பிரச்சாரத்தில் காரம் சற்று குறையலாம் என்று எதிர்பார்த்திருக்கலாம்!

      நீக்கு
    7. // னக்கும் அவருடைய பாடல்கள் பல பிடிக்கும்.ஆனால் அவரைப் பிடிக்காது. //

      அதேதான்.  கமலும் அப்படிதான்.  அவர் நடிப்புத் திறமை, திரைத் திறமை பிடிக்கும்.  அரசியல் வாந்தி வரும்.

      நீக்கு
    8. // சாகித்திய அகாதமியும் ஞானபீடமும் ஒன்றா?
      சூரி ஸார்.. முதலில் வேண்டுமென்றே செய்த அந்தக் கொனஷ்டையைக் கண்டுபிடித்தது நீங்கள் தான்.
      வாழ்த்துக்கள்.

      நீக்கு
    9. பை த பை. எழுத்தாளர் கொனஷ்டையைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக தாமதப்பட்டுக் கொண்டிருக்கிறது

      நீக்கு
    10. அந்த விருதே பம்மாத்து. பரிசை வாங்கிய பலர் பதர்கள். இந்தத் தடவை தமிழுக்கு என்பதால் கிறித்துவர் தேர்வுக்குழுக்குள் புகுந்து பெண்களுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரான, ரகுமான் சகோதரியிடமே தன் வேலையைக் காட்டியவரான இன்னொரு கிறித்துவருக்கு, ஏதோ காரணத்தால் விருதைக் கொடுத்திருக்கிறார். பேசாமல் இந்த விருதுகள் அனைத்தையும், கலைமாமாமணி உட்பட, ஒழித்துக்கட்டினால் அரசுக்கு பணம் மிஞ்சும்.

      நீக்கு
    11. தோழர் நல்லக்கண்ணு...... நம் நாட்டில் ஒருவன் செத்தால் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள். இருக்கும்போது கொண்டாடினால் இடைஞ்சல் இல்லையா? இவ்வளவு வானளாவப் புகழ்கிறாயே.. அப்புறம் ஏன் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவில்லை என்று கேட்டால் கொள்கை வேறு வாடகை வாய் வேறு என்கிறார்கள். கொள்கை வேறு என்றால் கூட்டணி எதற்கப்பா என்றால் பொது எதிரி என்கிறார்கள். அப்புறம் ஏன் தனிச் சின்னம் இல்லை என்று கேட்டால், மக்கள் அவங்க கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்கிறார்கள். அப்புறம் எதுக்கு ஆளாளுக்கு ஒரு கட்சி... சேர்த்து ஒரு கதம்பக் கட்சியா வைத்தால் செலவு மிச்சமாகுமே என்றால், அப்புறம் நாங்கள் எப்படி பணம் சுருட்டுவது என கம்யூனிஸ்டுகள் உட்படக் கேட்கிறார்கள்.

      இதுல என்னத்தை அவர் பற்றி எழுதி படித்து....

      நீக்கு
    12. எம்.ஆர்.ராதா அவர்கல் உண்மை பேசியதாலும், ஓரளவுக்காவது நேர்மையாக இருந்ததாலுமே கஷ்டப்பட்டார் எனச் சொல்லலாமோ? என்றாலும் அவரின் வாரிசுகள் அவர் புகழை நிலைக்கச் செய்துவிட்டனர்.

      நீக்கு
  18. திரு எம் ஆர் ராதா பற்றிய
    குறிப்புகள் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி செல்வாண்ணா...   நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கதை இங்கு தந்ததற்கு நன்றி.

      நீக்கு
  19. இப்புத்தகம் பிடிஎஃப் வடிவில் எடுத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. வாசிக்கத் தொடங்காமல் இருந்தது. அதன் சுட்டி இதோ

    https://www.tamilvu.org/library/nationalized/pdf/86-vindhan/natikavelmrradhaavinsiraichchaalaisindhanaikal.pdf

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  அப்போ மேற்கொண்டு இங்கே பகிர வேண்டாமே...

      நீக்கு
    2. ஸ்ரீராம், என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!! பகிருங்கள். ஏனென்றால் சுட்டி கொடுத்தாலும், எல்லாரும் நான் உட்பட வாசிக்க நேரம் எடுக்கும் இல்லைனாஅ வாசிக்காமல் போகலாம். எனவே இங்கு சின்ன சின்ன பகுதியாக அவ்வப்போது கொடுத்தால் பதிவுக்குக் கண்டிப்பாக வருவாங்க இல்லையா அப்படி வாசித்துவிடலாம். புக்கா படிப்பதை விடச் சில விஷயங்கள் சில நேரங்களில் துணுக்குகள் என்றோ சின்னதாகவோ படித்துவிடலாமெ.

      மீண்டும் வாசித்தாலும் என்ன குறை?

      எனவே பகிருங்கள்

      கீதா

      நீக்கு
  20. எனது குறிப்பேட்டில் தளரக் காட்சி தருகின்ற கதையின்
    ஒழுங்கமைப்பு இங்கு எப்படி இத்தனை நெருக்கடிக்கு
    உள்ளாயிற்று?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருக்கடியா?  நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்ததைவிட நிறைய இடைவெளி கொடுத்து ஜஸ்டிபை செய்து வெளியிடப்பட்டு அப்படி இடைவெளிகளுடன் தான் காட்சிக்கு வருகிறது. 

      நீக்கு
  21. நன்றி ஸ்ரீராம்....

    ஏன் இப்படி என்று
    எனக்குப் புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  22. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கமும் பிரார்த்தனையும்.

      நீக்கு
  23. இன்றைய படங்களில் மருதாணியை வரவேற்கின்ற காட்சி
    அழக்கோ அழகு...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. அஞ்சலை, பழனி சுபமான கதை முடிவு அற்புதமாக இருந்தது. மருதாணியும், மணமணக்கும் மல்லிகையும், தாழம்பூவும், தகதகக்கும் நல்ல பொருத்தமான படங்களும் கதைக்கு சுவையூட்டி அழைத்துச் சென்றன. கதையைப் படித்ததும் நல்ல மனிதர்களை சந்தித்த நிறைவு மனதை நிறைக்கவும் வைத்தது.

    சகோதரரின் கவிதையின் வரிகளின் நன்றாக உள்ளது. இசையோடு பாடவும் வைத்தது. அருமையான கதையை மட்டுமில்லாது இடையே கவிதைப்பூக்களையும் மணம் வீச தொடுத்துத் தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி.

    மங்கலமான செவ்வாயில், நல்லதொரு கதையை தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கும், அதற்குப் பொருத்தமான அழகிய படங்களை தேர்ந்தெடுத்து தந்த சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. அஞ்சலையை தாயில்லாப் பிள்ளையாகக் காட்டுவதற்கே
    என் மனது கஷ்டப்பட்டது...

    பதிலளிநீக்கு
  27. கதையின் முடிவு மனதிற்கு இதம்....

    தலைப்பை கொஞ்சம் கவனியுங்கள் - பெயரில் ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. அஞ்சலைக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் ஏதோ திருப்பம் வரப் போகிறது என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் சுருக்கமாக முடித்துவிட்டார் தம்பி. என்றாலும் முடிவு சுபமாய் அமைத்ததிற்கும் அஞ்சலையின் சுகவாழ்வுக்கும் வாழ்த்துகள். மருதாணியெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால் ஒவ்வொரு பண்டிகையின் போதும் தவறாமல் அரைச்சு இட்டுக் கொண்டது. இந்த மாதிரித்தான் என்னோட அம்மாவும் நீயே அரைச்சு இட்டுக்க வேண்டாம்னு சொல்லித் தானே அரைச்சு இட்டு விடுவார். அப்போ படுத்துக்கும்போது அம்மாவைக் கூப்பிட்டு, "இங்கே அரிப்பு, அங்கே சொறிந்து விடு எனச் சொன்னதெல்லாம் நினைவில் வந்து மோதின.

    படங்களை வழக்கம்போல் அழகாக எடுத்துக் கொடுத்திருக்கும் கீதா ரங்கனுக்கு நன்றி. (ஸ்ரீராம் கவனிக்கவும். என்ன சொல்லி இருக்கேன் பாருங்க! கீதா ரங்கன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி
      பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது...

      அது பெரியம்மா அவர்களுக்கு
      வாய்த்துள்ளது...

      நீக்கு
  29. பூத்தைத்துக் கொண்டதும் தாழம்பூ வைத்துப் பின்னிக்கொண்டதும் கூட என் சின்ன வயது ஞாபகங்களை நினைவூட்டின. எங்க வீட்டில் வீட்டு வேலை செய்த பெண்மணி பிரமாதமாகப் பூத்தைத்து விடுவார். அப்போதே உல்லன் நூல்களாலும் சின்னச் சின்ன பொம்மைகளும் வைச்சுப் பின்னுவார். ராத்திரி தலையணைக்கு மேலே பின்னலைத் தூக்கிப் போட்டுப் படுத்துக்கறச்சே பூ பாரம் அழுத்தும். என்றாலும் அதிகம் புரண்டு படுக்காமல் மறுநாள் குளிக்கையில் தண்ணீர் பட்டு உல்லன் நூல்கள் வீணாகிடாமல் பார்த்துக் குளித்து அந்தப் பூத்தைத்தலோடேயே பள்ளிக்குப் போனதெல்லாம் நினைவில் வருகின்றன. அதே போல் தாழம்பூவும். ஆனால் தாழம்பூ தைத்துக் கொண்டு பள்ளிக்குப் போக முடியாது. அதில் பூ நாகம் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குத் தாழம்பூ வைச்சுண்டு போக முடியாது. கடைசியாக 75 ஆம் ஆண்டில் எங்க பொண்ணு பிறந்தப்புறமா நம்ம ரங்க்ஸின் அத்தை கீழத்தஞ்சாவூரில் இருந்தார். அவரைப் பார்க்கப் போனப்போ ஆளை விட்டுத் தாழம்பூ கொண்டுவரச் சொல்லி நிதானமாக ஆய்ந்து எனக்குத் தைத்து விட்டார். ஒரு நாள் ஜவந்திப் பூவால் தைத்து விட்டார். அங்கே இருந்த ஒரு வாரமும் என் தலைக்கு ஏதேனும் அலங்காரம் செய்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவலைகளுக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி அக்கா...

      நீக்கு
  30. எளிமையான பொருள் பொதிந்த வரிகளால் ஆன கவிதைக்குப் பாராட்டுகள். விந்தன் அவர்களின் இந்தத் தொடரை அந்தக்கால கட்டத்தில் தினமணி கதிர் வந்தப்போவே படிச்சிருக்கேன். விந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் மிகவும் சோகமான ஒன்றே. மிகவும் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர். கல்கி அவர்களின் ஊக்குவிப்பும், அவருக்கு அளித்த வாய்ப்புகளுமே அவரை ஓரளவுக்குப் பிரபலமாக்கியது.

    பதிலளிநீக்கு
  31. இந்த நாளை இனிமையாக்கிய தம்பி துரை செல்வராஜுக்கு நன்றியும், பாராட்டுகளும். மேலேயே சொல்லி இருந்தேன். எப்படியோ அது விட்டுப் போயிருக்கு.

    (இந்த வாக்கியம் விடுபட்டுப் போயிருக்கு)

    பதிலளிநீக்கு
  32. இந்த ஞானபீடப் பரிசு பற்றி வழக்கம்போல் சாரு நிவேதிதா சித்தப்பாவை இழுத்திருக்கார். அவர் எழுதியதில் சிறிதும் உண்மை இல்லை. இம்முறை சித்தப்பாவின் கடைசிப் பையர் ஹிந்துவில் இருப்பவர் விளக்கம் கொடுத்துட்டார். என்றாலும் இன்னமும் ஏன் அவர் அது சொன்னார், இது சொன்னார், வறுமையில் உழன்றார். சாப்பிட அரிசி வாங்கக் கூட காசு இல்லைனு எல்லாம் சொல்றாங்கனு புரியவே இல்லை. சாரு இப்போவும் சொல்லி இருக்கார். அவர் வறுமையில் கஷ்டப்பட்டார் என்று. கடவுளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரு அதீத புனைவுக்கார்ர். அவரைப் பற்றி, அவர், தன்னைவிச் சிறந்த எழுத்தாளர் இல்லைனு சொல்லிக்கறார், பூனைகளுக்கு மாத்த்துக்கு லட்ச ரூபாய் செலவழிக்கிறேன் என்கிறார், கையில் பணமில்லை என்கிறார்.. என்னன்னவோ சொல்கிறார். அத்தோடு இதுவும் ஒண்ணு என விட்டுவிட வேண்டியதுதான்.

      நீக்கு
  33. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  34. கதை மிக நன்றாக இருக்கிறது.
    அன்பு , அன்பு அதை மட்டுமே சொல்கிறது கதை.
    கதையில் வரும் கவிதை அருமை.

    பெரியம்மா பாடி குழந்தைகளுக்கு மருதாணி வைத்து விட்டது என் சந்தன அத்தையை நினைவு படுத்தியது.
    அவர்கள் எல்லா குழந்தைகளுக்கும் பூ தைத்து அலங்காரம் செய்வார்கள், தாழம்பூ சீஸனில் தாழம்பூ தைத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து பார்ப்பார்கள். அன்பு அன்பு மட்டுமே காட்ட தெரிந்த ஜீவன் அவர்கள்.

    https://mathysblog.blogspot.com/2011/08/blog-post.html

    //"தோள்..ல யா?.. எம் மடியிலயே சாஞ்சுக்கடி செல்லம்!.. " - என்றபோது தாயில்லாத அந்தப் பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது..
    சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்...//

    அன்று தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு காரணம் பெரியம்மாவுக்கு புரிந்து விட்டது
    நமக்குள்ளும் சந்தோஷ பூக்கள் பூத்தன.
    அஞ்சலை நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்த சொல்லியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்ச்சியான நினைவுகள்
      கருத்து...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  35. எம்.ஆர். ராதா அவர்கள் பேசியதை விந்தன் அவர்கள் கதிரிலில் அப்படியே பகிர்ந்தது அருமை.

    பதிலளிநீக்கு
  36. கீதா , கதைக்கு பொருத்தமாய் படங்கள் அழகாய் தயார் செய்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  37. சகோதரி கீதா ரங்கன்
    அவர்களது பணி சிறப்பானது..
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!