இட்லி சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு. - ஒரு கையளவு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 1 1/2 டீ ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீ ஸ்பூன்
காய்கள்:
உருளைக் கிழங்கு. - மீடியம் சைஸ் 1
கத்தரிக்காய் - 1
காரட் - 1
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பீன்ஸ். - 4 அல்லது. 5
தாளிக்க:
எண்ணெய், கடுகு, வெந்தயம்,
வர மிளகாய் - 1
நெய் - 2 டீ ஸ்பூன்
செய்முறை:
பருப்பை கழுவி, பத்து நிமிடம் ஊற வைத்துக் கொண்டு அதோடு குறிப்பிட்டிருக்கும் காய்கறிகளையும் குக்கரில் வைத்து, ஐந்து விசில் வரும்வரை சமைக்கவும்.
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, வெந்தயம் ஒரு வற்றல் மிளகாய் தாளித்து, அதில் சாம்பார் பொடியை சேர்க்கவும். சாம்பார் பொடி கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
பிறகு அதில் புளி கரைசலை சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும். வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
புளி வாசனை போனதும் குக்கரைத் திறந்து, அதில் வேக வைத்திருந்த பருப்பு மற்றும் காய் கலவையை சேர்த்து, லேசாக மசித்து, ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி, இரண்டு டீ ஸ்பூன் நெய் சேர்த்து, கொத்துமல்லி தழையை கிள்ளி போடவும். இந்த சாம்பார் சற்று நீர்க்க இருக்கலாம்.
உங்கள் வீட்டில் மினி இட்லி ஸ்டாண்ட் இருந்தால் மினி இட்லியாக வார்த்து, இந்த சாம்பாரில் மிதக்க விட்டு சாப்பிடலாம்.












பானுக்கா இட்லி சாம்பார் மணக்கிறது.
பதிலளிநீக்குநீங்க இந்த ரெசிப்பி போட்டதும் வீட்டில் மினி இட்லி செஞ்சு 2 வாரம் ஆகிவிட்டதே செஞ்சுடுவோம் என்று ஆசை வந்துவிட்டது.
சாம்பாரில் மிதக்கும் மினி இட்லி, தயிரில் மிதக்கும் மினி இட்லி நம் வீட்டில் ரொம்பப் பிடிக்கும்.
அக்கா என்னா ச்சு படங்கள் இல்லை? எடுக்கலையா?
கீதா
எனக்கும் மினி இட்லி சாம்பார் ரொம்ப பிடிக்கும். ஹோட்டலுக்குச் சென்றால் பெரும்பாலும் 16 (mini) Idlis அல்லது ரவா தோசைதான். ஒரு முறை திருப்பதி மயூரா ஹோடலில் சாப்பிட்ட கீ இட்லியின் சுவை அபாரம்.
நீக்குபடங்களை இணைக்க மறந்து விட்டேன். ஸ்ரீராமும் கேட்கவில்லை. Not the same old Sriram.
நீக்குmay be busy with his 2nd son's marriage works.
நீக்கு// படங்களை இணைக்க மறந்து விட்டேன். ஸ்ரீராமும் கேட்கவில்லை. Not the same old Sriram. //
நீக்குநல்லாயிருக்கிறதே கதை!!! நீங்கள் படம் அனுப்பாமல் அனுப்பினீர்கள். இப்போதெல்லாம் சில பதிவுகள் படமின்றியும் வருகின்றன. அதனால் நீங்களே அனுப்பவில்லை என்று நினைத்தேன்!
ஹிஹிஹி!
நீக்கு//may be busy with his 2nd son's marriage works.// ஓ அப்படி ஒரு விஷயம் இருக்கிறதோ? I am sorry Sriram.
நீக்குடிபன் சாம்பார் செய்முறை ஒன்றானாலும் செய்பவர்களைப்்பொறுத்து ருசி மாறுபாட்டையும்.
பதிலளிநீக்குகர்நாடகாவின் தட்டே இட்லிக்கு சாம்பார் சரியாக வருவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
ஆமா நெல்லை. தட்டே இட்லிக்கு சட்னி நல்ல பொருத்தம். காரணம் இட்லிக்குப் பயன்படுத்தும் பொருட்கள் கூடவே ஹோட்டல்களில் இட்லிக்கு சோடா உப்பு பயன்படுத்துகிறார்கள்
நீக்குகீதா
அதே சாமான்கள், அதே தண்ணீர்,இருந்தாலும் இரண்டு பேர்கள் சமைக்கும் பொழுது இரண்டு விதமாகத்தான் இருக்கிறது. அதுதான் கை வாசனையோ?
நீக்குஇருக்கலாம். ஆனால் நான் வெங்காயம் சேர்த்தால் பெரும்பாலும் இட்லிக்குப் புளி சேர்க்காத சரவண பவன் சாம்பாரே பண்ணுவேன். விரத நாட்கள், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இட்லி வார்க்க நேர்ந்தால் சாம்பார் தேவைனா அப்போ இந்த மாதிரிப் புளி சேர்த்த சாம்பார் வெங்காயம் சேர்க்காமல் பண்ணிடுவேன். இங்கே வந்து இட்லியைப் பார்ப்பதே அரிதாக இருக்கு. அதோடு எனக்கு மிக்சி எல்லாம் போடுவதில் சிரமங்கள் இருக்கு. இங்கே வோல்டேஜ் பிரச்னை. ஸ்டெபிலைசர் போடாமல் எந்த மின் உபகரணங்களையும் இயக்க முடியாது. அமெரிக்கத் தயாரிப்புகள் எனில் இன்னும் கஷ்டம். கை ஒடிஞ்சாப்போல் இருக்கு.
நீக்குகீசா மேடம்.... அம்மா அப்பா தவிர கல்ஃபில் கிடைக்காத்தே இல்லை. சல்லிசு விலைல எல்லா உபகரணங்கள், காய்கறிகள் என எதுவும் சுலபமா கிடைக்கும். நம்ம ஊர்லதான் தேடணும்.
நீக்குநெல்லை, இங்கே ஒன்றுக்கு இரண்டு மிக்சிகள் இருக்கின்றன. ஒண்ணு ரொம்பப் பெரிது. இன்னொண்ணு கொஞ்சமாய்ப்போட்டு அரைக்கலாம். ஆனால் எனக்குத் தான் பயம் பயன்படுத்த. ஏதேனும் ஆகிட்டால்? அதனால் மிக்சியில் எதுவும் அரைப்பது இல்லை.
நீக்குஅரிசி எடுத்துச் செல்லத் தடை - துணுக்கு நல்ல ஐடியா. அது சரி அப்பலாம் அரசுக்குத் தேவைக்கு மேலேயே உணவு தானியத்தை வழங்கிய விவசாயிகளை ஊக்குவித்திருந்தால், இன்று தட்டுப்பாடே வந்திருக்காதே. இருக்கும் விளை நிலங்களும் பலியாகின்றன.
பதிலளிநீக்குகீதா
அப்பொழுது நம் நாட்டில் விளை பொருள்களை சேமிக்க சரியான வழிமுறை கிடையாது. இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் கூட முறையான சேமிக்கும் முறை இல்லாததால் பாதிக்கு மேல் வீணானதாக செய்திகள் வந்ததே. மேலும் அப்போதெல்லாம் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்யாது.
நீக்குஇந்த அரிசிப் பஞ்சம் குறித்தும், அப்போ ரேஷனில் கோதுமை, கேழ்வரகு போன்றவை கொடுத்ததையும் எங்க வீட்டில் அம்மா கேழ்வரகில் செய்த விதம் விதமான உணவு வகைகளையும் குறித்து நிறையத் தரம் சொல்லிட்டேன். இதே போன்ற அல்லது இதைவிடக் கடுமையான உணவுப் பஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இருந்தது. அப்போ சித்தப்பா (அசோகமித்திரன்) சிகந்திராபாத் ரயில்வே க்வார்டர்ஸில் இருந்தார். கல்லூரி மாணவர். இந்த அரிசிப் பஞ்சம் குறித்தும் அரிசிச் சாதத்தைப் பார்க்கவே சில நாட்கள் முடியாமல் போனதையும் எழுதி இருக்கார். அநேகமாக ஜெயமோகன் இதைப் படிச்சுட்டுத் தான் சித்தப்பா சின்ன வயசில் வறுமையில் உழன்றார் எனத் தப்பாய்ப் புரிஞ்சுண்டு இருப்பார்னு நினைக்கிறேன்.
நீக்குஎன் அம்மா, பெரியம்மா திருமணத்தின் போது விருந்தினர்கள் கட்டாயமாய் அவரவர் குடும்ப அட்டையைக் கொண்டு வரும்படி பத்திரிகையிலேயே போட்டார்களாம்.
நீக்குஎன் பெற்றோர்கள் திருமண பத்திரிகையில் தங்கள் ரேஷன் கார்டை கையோடு கொண்டு வரவும் என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறேன். மேலும் அப்போது கெஸ்ட் கண்டத்தில் இருந்ததால் எச்சில் இலைகளை குழிவெட்டி புதைத்தார்களாம்..
நீக்குஸ்ரீராம், எல்லா காலத்திலும் மனுஷங்கதானே! சில விஷயங்கள் மாறியிருந்தாலும் இப்படியான உணர்வுபூர்வமான விஷயங்கள் இப்பவும் இருக்கின்றன. இருக்கத்தான் செய்யும்.
பதிலளிநீக்குகீதா
??????????????????
நீக்கு???????????????????
நீக்கு???????? கீதா ரெங்கன் வந்து விளக்குவாறா?
நீக்குலிங்கன் - துணுக்கு பதிலை ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
அம்மா குறும்பு செய்யும் மகன்/மகளிடம் - என்ன திமிரு உனக்கு உன்னை எல்லாம் வாரிக்கட்டையால மொத்து மொத்துன்னு அடிச்சு விளாசணும்!
பதிலளிநீக்குவீட்டு வேலை செய்பவர் - என்னம்மா வாரிக்கட்டைய காணலை? நேத்து இங்கதானே வைச்சேன்.
ஏய் அவரு கட்டைக் கூத்துல பெரிய ஆளுடே!
என்ன ஆச்சு கட்டை விரல்ல?
கட்டை விரல்ல மோதிரம் அணியலாமா?
கட்டை விரலை குருதட்சிணையாகக் கொடுத்த ஏகலைவன்.
கீதா
வார்த்தை விளையாட்டு அருமை கீதா
நீக்குகட்டை குட்டையா இருப்பான்(ள்), அதிர்ஷ்டகட்டை இவைகளை விட்டு விட்டீர்களே?
நீக்கு:)))))
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குநெட்டும் கணினியும் மிகவும் பிரச்சனை செய்கின்றன.
பானுக்கா அதையும் சொல்ல நினைத்தேன் அடுத்தாப்ல வந்து சொல்ல விட்டுப் போச்சு.
டைப் பண்ணினால் மெதுவாக வந்து வார்த்தைகள் விழுந்து இடையில் சில காணாமல் போகின்றன.
ஆஃப் லைனில் அடிச்சாலும் சரி ஆன் லைனில் அடித்தாலும் சரி...
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇட்லி சாம்பார் குறிப்பு நன்று.
லிங்கன் பதில் - ஸ்வாரஸ்யம். மற்ற துணுக்குகளையும் படித்தேன்.... ரசித்தேன்.
நன்றி வெங்கட்!
நீக்குyesssu
நீக்குமுயல்கள் பாவம்....இது சின்னப் பூச்சிகள் கடிப்பதால் உருவாகும் எனவே ஒரு வேளை பிரதமர் வீட்டின் தோட்டத்தில் அல்லது ஜனாதிபதி வீட்டுத் தோட்டத்தில் உள்ள நச்சுப் பூச்சிகளால் இந்த வரைஸ் பரப்பப்பட்டிருக்கும்.
பதிலளிநீக்குசெய்தி இப்படி வரலையோ? முயல்களைப் பிடிக்காத பிரதமர் நச்சு வைரஸைப் பரப்பி சதி செய்தார்னு!
கீதா
அதெல்லாம் அங்கே சொல்ல முடியாது. இங்கே சொல்லலாம். சொல்லுவாங்க. சொல்லுகின்றனர். :)))))))
நீக்குஹாஹாஹா அது இங்கு சர்வசகஜமாக, கொசு கடித்தால் கூட எதிர்க்கட்சியின் சதின்னுடுவாங்க.
நீக்குகீதா
இட்லிக்கு மட்டும் தானா இந்த சாம்பார்? டிபன் சாம்பார் என்றுட் இருந்தால் இட்லி, தோசை, பொங்கல், ரவா தோசை, வடை என்று டிபன் ஐட்டம்களுக்கு எல்லாம் உப்பையோகப்படுத்தலாம்.
பதிலளிநீக்குJayakumar
ஆமாம், டிபன் சாம்பார் சரியான பெயர்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇட்லி சாம்பார் அருமை...
பதிலளிநீக்குநாங்கள் இப்போது
புளி சேர்ப்பதில்லை...
புளி சேர்க்காமல் இருப்பது நல்லதுதான். நீங்கள் நிறைய விஷயங்களை தவிர்த்து விட்டீர்கள் போலிருக்கிறதே?
நீக்குசித்த முறையில், தக்காளி, புளி, பால் பொருட்கள், பச்சை சிவப்பு மிளகாய் போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்லுகிறார்கள். வயிறு நலத்துக்கு முந்தைய நாள் சாத்த்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலைல சாப்பிடச் சொல்றாங்க. (எனக்கில்லை. கன்சல்ட் செய்யறவங்களுக்கு). இது தவிர தன் வைத்தியமாக பலர் மில்லெட்டுக்கு மாறிட்டாங்க. உடலுழைப்பு இல்லாதவங்க இப்படி மாறலாமான்னு தெரியலை.
நீக்குநாங்க மாமாவுக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரிஞ்சதில் இருந்தே சிறு தானிய உணவுகள் ஆரம்பிச்சுட்டோம். அதிலும் எலுமிச்சை, தேங்காய், புளி சாதங்கள், உப்புமா, இட்லி, தோசை, அடை, குழிப்பணியாரம் போன்றவை பண்ண முடியும். பக்ஷணங்கள் கூடப் பண்ணி இருக்கேன். வாரம் ஒரு நாளாவது ஒரு வேளைக்கு மட்டும் சிறு தானியம் சேர்க்கலாம். வரகில், தினையில் பொங்கல் நன்றாக இருக்கும்.
நீக்குதற்போது கண்ட மாதிரிக்கு சாம்பார்
பதிலளிநீக்குவைக்க முனைந்து சாம்பாரையே கெடுத்து விட்டனர் உணவு ஏவாரிகள்...
ஆமாம், தம்பி சொல்வது போல சமையலின் அடிப்படை செய்முறையே மாறி விட்டது. எல்லாவற்றிலும் சீரகம் சேர்க்கின்றனர். அதோடு இல்லை. தக்காளிச் சட்னி அரைக்கக் காரட், வெள்ளரிக்காய் எல்லாம் சேர்த்து வதக்கி அரைக்கிறார்கள். கருகப்பிலை துவையல் என்றால் தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து. பாரம்பரியம் மெல்ல மெல்லத் தொலைந்து கொண்டு வருகிறது. நல்லவேளையாக எழுதி வைச்சிருக்கேன். யாரானும் பார்த்துப் படித்து நடைமுறைக்குக் கொண்டு வர முயன்று பார்க்கலாமே. அந்த ஒரு ஆறுதல்.
நீக்குஇட்லி சாம்பார் செய்முறை படங்களுடன் அருமை.
பதிலளிநீக்குகாய்கறி வெட்டி வைத்து இருக்கும் படங்கள் அழகு.
நன்றி.
நீக்கு1966 ஆம் ஆண்டு கல்கி இதழிலிருந்து சில துணுக்குகள்! எல்லாம் அருமை/
பதிலளிநீக்குகேலியும் பதிலும் , வார்த்தைகளில் கட்டையின் பல்வேறு உபயோகங்கள் ரசித்தேன்.
"எடு துடைப்பை கட்டையை" என்பதை கீதா பயன்படுத்தி விட்டார்கள்.
துணுக்குகள் சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு அரிசி கொண்டுவர பர்மிட் வாங்க வேண்டும். திருச்சியிலிருந்த நாங்கள் தஞ்சையிலிருந்து அரிசி கொண்டுவருவதற்காக ரேஷன் கார்டில் அரிசி வாங்க மாட்டோம் என்று குறிப்பிட்டு,சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஸ்டாம்ப் அடித்து வாங்கி வந்தால் பெர்மிட் கிடைக்கும். இல்லாவிட்டால் அபராதம் போட்டு விடுவார்கள். என் சின்ன வயதில் இப்படி மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு அரிசியை தலகாணி உறையில் வைத்து எடுத்துச் சென்றார்கள். ரயிலில் திடீரென்று அதிகாரிகள் வந்து சோதனை போட்டு, அது நிஜமாகவே தலகாணிதானா? என்று செக் பண்ண கோணி ஊசியால் குத்துவார்களாம், அரிசியாக இருந்தால் ஓட்டை வழியாக கீழே கொட்டுமாம். இப்படிப்பட்ட கதைகளை கேட்ட ஞாபகம் இருக்கிறது.
yesssu. எனக்குக் கல்யாணம் ஆன புதுசில் கூட இந்த அரிசிக் கடத்தல் ரொம்பவே பிரபலம். அதிலும் திருவள்ளூர், அரக்கோணம் வழியாகச் சென்னை வரும் ரயில்களில் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனில் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி ஆந்திராவிலிருந்து தரை வழி கொண்டு வந்த அரிசி மூட்டைகளை ஏற்றுவார்கள். எப்படியோ சாமர்த்தியமாக அரிசி வியாபாரிகள் அந்த அரிசியை விற்றும் கொடுத்துடுவார்கள். திருப்பதி போகும்போதெல்லாம் இந்தக் காட்சியைக் காண முடியும். பின்னாட்களில் மொரார்ஜியின் ஜனதா அரசு காலத்தில் தான் உணவுப் பண்டங்கள் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் தாராளமாக விநியோகிக்கப்பட்டதுடன் விலைவாசிகளும் கட்டுக்குள் இருந்தன.
நீக்குவெள்ளிக்கிழமை வெளியிட்ட குறுக்கெழுத்துப்போட்டி விடை படித்து தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதினமலரில் வரும் குறுக்கெழுத்து போட்டியில் வரும் கேள்விகளை என்னிடம் இப்போதும் என் தங்கை, என் தோழி உமையாள் கேட்பார்கள் எனக்கு தெரிந்ததை சொல்வேன் ,பெரும்பாலும் சரியாக இருக்கும்.
அன்று நீங்கள் வெளியிட்ட போது கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. கீதாவும், கமலாவும் சொல்லி விட்டார்கள் சில விடைகள்.
குறுக்கெழுத்து புதிரில் திருடி, கரு இரண்டு விடைகள்தான் எனக்குத் தெரிந்தன.
பதிலளிநீக்குஅந்த இரண்டு விடைகளுடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
நீக்கு1 இடமிருந்து வலம் - - - குலேபகா
3 இடமிருந்து வலம் - - - - குயுக்தி
4 இடமிருந்து வலம் - - - - மடை
1 மேலிருந்து கீழ் - - - - - -- குடகுமலை
2 மேலிருந்து கீழ் - - - - - -- லேகாயுடை
3 மேலிருந்து கீழ் - - - - - -- பல்க்க
4 மேலிருந்து கீழ் - - - - - -- காய்
உங்கள் விடைகளைப் பார்ப்பதற்கு முன்னால் நான் போட்ட போஸ்ட். நம்புங்கள்😃
நீக்குவாங்க சூர்யா.. உண்மையிலேயே சந்தோஷமாயிருக்கிறது. நன்றி.
நீக்குஇது யாரு? காலைல செய்முறை படித்து உடனே செய்து போட்டோக்களுடன் அனுப்பியது?
பதிலளிநீக்குஹாஹாஹா!
நீக்குகுறுக்கெழுத்துப் போட்டியே நினைவில் இல்லை. முன்னால் எல்லாம் இலவசக் கொத்தனார் (ராஜேஷ் கர்கா) குறுக்கெழுத்துப் போட்டி நடத்தி வந்தார். வெளியிட்ட உடன் எனக்கு மெயில் அனுப்பிக் கலந்துக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அப்போதிருந்த ஆர்வம் இப்போது இல்லை. சிலேடையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சந்தவசந்தம் குழுவின் நண்பர் சிவசிவா என்பவர் மூலம் அரிய தமிழ் வெண்பாக்களையும் அவரின் சிலேடைப் பாடலும் பிரதோஷப் பாடலும் ஆர்வமுடன் படித்து வந்தேன். இவற்றில் எல்லாம் வெற்றி பெறுவதில் அப்போல்லாம் ஓர் மன மகிழ்ச்சி கிட்டும். இப்போ சந்த வசந்தம், ரத்தினமாலை குழுவில் இருப்பதாகப் பெயர். ஆனால் கலந்துக்கறதே இல்லை. ஐந்தாறு வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டன. :(
பதிலளிநீக்குகுறுக்கெழுத்துப் புதிர் பெரிய அளவில் கவனிக்கப்படவே இல்லை என்பதால் தொடரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நீக்குஉங்களுடைய குறுக்கெழுத்து புதிர் ஹிந்து ரேஞ்சுக்கு இருந்தது. தினமலர் ரேஞ்சுக்கு கொண்டு வாங்க.
நீக்கு/குறுக்கெழுத்துப் புதிர் பெரிய அளவில் கவனிக்கப்படவே இல்லை என்பதால் தொடரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் /
நீக்குஅப்ஜெக்ஷன்ஸ் யுவர் ஆனர் 😃
"பெரிய அளவில் கவனிக்கப்படவே இல்லை" என்று நீங்களாகவே முடிவு செய்கிறீர்களே! விடைகளை எப்படி யாருக்குப் பகிர வேண்டும் என்று நீங்கள் சொல்லவேயில்லையே! சொல்லியிருந்தால் நான் சனிக்கிழமையே அனுப்பியிருப்பேன். என்னுடைய விடைகளைப் பின்னூட்டத்தில் போட்டு மற்ற வாசகர்களின் அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை.
தொடர வேண்டாமென்று நீங்களாகவே முடிவெடுத்தது எனக்கு வருத்தமே.
வாங்க சூர்யா.. உண்மையிலேயே சந்தோஷமாயிருக்கிறது. நன்றி.
நீக்குஆரம்ப கால எங்கள் ப்ளாக் பதிவுகளின் மூலம் நிறையப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கி இருக்கேன். இப்போ நினைச்சாலும் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.
பதிலளிநீக்குஆமாம், பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி என்று இருந்தன. அப்போது நண்பர்களும் அதிக அளவில் கூடினார்கள்.
நீக்குகேஜிஜி கூட ஏதோ ஒரு சில போட்டிகளை ஒரு வருடத்திற்கு முன்பு நடத்தினாரே.
நீக்குகல்கி பத்திரிகையின் துணுக்குச் செய்திகள் எப்போதும் போலத் தரத்துடனும் உண்மையுடனும் இருக்கு. "கட்டை" பற்றிய துணுக்குகள் எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. லிங்கன் ஜோக் படிச்சது தான்.
பதிலளிநீக்குஸ்ரீராமை ஏன் காண முடிவதில்லை? கல்யாண வேலைகளில் பிசியா? அல்லது உடல் நலமில்லையா? முதலாவது காரணமாக இருக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா அக்கா... இங்கேதான் இருக்கேன்! சனி ஞாயிறு பாஸ் வழி உறவில் ஒரு விசேஷத்துக்கு ஹோசூர் பயணம். முகநூலில் பார்த்திருக்கலாம்! மற்றபடி வியாழன், வெள்ளி பதிவுகளுக்கு பதில் சொல்லியிருந்தேனே... இன்று பானு அக்கா பதில்களை பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கைதான்!
நீக்குஇங்கே நிலைமை இன்னமும் சீராகவில்லை. தவிப்பில் இருக்கோம். பிரார்த்தனை ஒன்றே பலம் தருகிறது.
பதிலளிநீக்குட்ரம்ப் போன்ற பைத்தியக்கர்களை இறைவனால் திருத்த முடியாது போல... அவன் இவனை அடித்தால், இவன் சம்பந்தமில்லாமல் பக்கத்திலிருப்பவர்களை எல்லாம் அடிக்கிறான். அவர்களாக திருந்தினால்தான் உண்டு.
நீக்குவழி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எல்லாம் ஏன் இந்தியா வந்து இந்தப் பிரச்னை தீரும்வரை இங்கு இருக்கக் கூடாது?
//இவன் சம்பந்தமில்லாமல் பக்கத்திலிருப்பவர்களை எல்லாம் அடிக்கிறான்.// உங்க வீட்டை தஞ்சாவூரில் வைத்துக்கொண்டு, சென்னையில் எல்லாத் தெருக்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அறையில் உங்கள் பொருட்களை வைத்திருந்தால், சென்னைக்காரனிடம் உதார் விட்டால், உங்கள் சென்னை வீட்டு அறைகளில்தானே அவன் திறமையைக் காண்பிப்பான்? அவர்கள், ஒவ்வொரு தேசத்திலும் அவர்களுடைய படைகளை, கலன்களை வைத்திருக்கிறார்கள்.
நீக்குவிரைவில் நிலைமை சீராக பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநானும் பிரார்த்தனையில் இணைகிறேன். __/\__ __/\__
நீக்குஅடுத்த வாரம் தோசை சாம்பார் செய்வதெப்படி? -- பற்றியா?
பதிலளிநீக்குஅடுத்த வாரம் தோசை சாம்பார் செய்வதெப்படி? -- பற்றியா?
பதிலளிநீக்குஹா ஹா ஹா! இதையே தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். மினி இட்லியை இதில் மிதக்க விட்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்பதால் இந்த பெயர்.
நீக்குகட்டை மஹாத்மியத்தில் நாத்தனாரின் "அம்மா! மன்னியைப் பாரேன்.." மிகவும் பாந்தமாக இருந்து எனக்குப் பிடித்ததாக்கும்!.. ஹி..ஹி
பதிலளிநீக்கு