கேள்வி பதில்கள் :
கேள்வி கேட்டிருப்பவர் : ஜெயகுமார் சந்திரசேகரன்:
வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் என்று பாகுபடுத்துகிறோம். மற்ற பெரியவர்களை ஆச்சார்யர் என்று கூறுகிறோம் இவர்கள் ஆழ்வார்கள், இவர்கள் ஆச்சார்யர்கள் என்று பாகு படுத்தியது யார்?
ஆச்சார்யர்களுக்கும் ஆழ்வார்களும் என்ன வித்தியாசம்?
அதே போன்று சைவத்தில் 63 நாயன்மார்களை வகைப்படுத்தியவர் யார்?
வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யர்கள் உண்டோ? உண்டெனில் யார்?
பதில் அளித்திருப்பவர் : நெல்லைத்தமிழன் :
ஆழ்வார்கள் என்பவர்கள் வைணவக் கருத்துக்களை உள்ளடக்கிய திவ்யப் பிரபந்தம் என்ற தமிழ் மறையை இயற்றியவர்கள். திருமாலின் பெருமைகளில் ஆழ்ந்து அவர்கள் பால் பாசுரங்கள் இயற்றியதால் ‘ஆழ்வார்கள்’ என்று சொல்லப்பட்டனர். திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. கேட்காத கேள்வி: அந்த திராவிட வேதத்தில் அடையாளம் காட்டப்படும் வைணவ கோயில்களையே திவ்யதேசம் என்று அழைக்கின்றனர். திருப்பாற்கடல், பரமபதம் ஆகிய இரண்டைத் தவிர மற்ற 106 திவ்யதேசங்களும் இந்த நிலவுலகில் இருக்கின்றன. ஆக மொத்தம் 108 வைணவ திவ்யதேசங்கள்.
ஆழ்வார் பதின்மர் என்பர். பன்னிருவர் அல்லவா என்ற கேள்வி எழும். பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாளையும், நம்மாழ்வாரையே தன் தெய்வமாக ஏற்றுக்கொள்ட மதுரகவியாழ்வாரையும் பதின்மர் லிஸ்டில் சேர்க்கவில்லை. மதுரகவி ஆழ்வார், வேறு யாரைப்பற்றியும் பாடாமல், நம்மாழ்வாரைப் பற்றி மாத்திரம் பத்து பாசுரங்களால் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதிகத்தைப் பாடினார். ஆனால் ஆண்டாள், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடியிருக்கிறார். இருந்தும் அவரை ஆழ்வார்கள் லிஸ்டில் சேர்க்காததற்குக் காரணம், அவர், பூமியிலிருந்து தோன்றியவர், தாயாரின் அவதாரம் என்பதால், ஆழ்வார்களைவிட ஒரு படி உயர்ந்திருக்கிறார்.
ஆச்சார்யார்கள் என்பவர்கள், வேதம் மற்றும் திராவிட வேதம் (திவ்யப்பிரபந்தம்) இவற்றை அடிப்படையாக வைத்து, பரந்துபட்ட மனிதர்களிடம் வைணவத்தை வளர்த்தவர்கள். இராமானுசர் காலம் வரை ‘ஓராண் வழி சம்ப்ரதாயம்’ இருந்த தால், அதாவது வைணவ உலகத்துக்குத் தலைமையாக ஒருவரே இருந்து, அவர் மூலமாகவே வைணவக் கருத்துக்கள் ‘தலைவர்’ என்ற ஸ்தானத்திலிருந்து பரப்பப்பட்டன. நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார், இராமானுஜர்… என்று ஆச்சார்யர்கள் பட்டியல் நீளும்.
சைவ சமயத்தில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’ என்ற நூல்தான் 60 நாயன்மார்கள் என்று வகைப்படுத்துகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சோழ மன்னர் காலத்தில் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன்) வாழ்ந்த சேக்கிழார் (அரசனுக்கு அமைச்சராக இருந்தவர்) பெரிய புராணம் என்ற நூலை இயற்றினார். இதில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு கூறப்படுகிறது.
வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் உண்டா என்ற கேள்விக்கு நேரிடையான பதில், இல்லை என்பதே. இரண்டும் இரண்டு வெவ்வேறு பாதை. ஆழ்வார்களில், திருமங்கையாழ்வார் கையில் வேல் உண்டு (திருவாலியில் காணலாம்). இந்த வேல், திருஞானசம்பந்தர் அவருக்கு அளித்தது (வாதில் தோற்று, பரிசாகக் கொடுத்தது என்பர்). சமீப நூற்றாண்டில், இந்த வேறுபாடு சிறிது சிறிதாக மறைகிறது. (முழுவதுமாக அல்ல. இன்றும் வைணவர்கள் திரிதண்டி சந்நியாசிகளை மாத்திரமே விழுந்து தொழுவர். அதாவது வைணவ ஆச்சார்யர்கள் முக்கோலை ஏந்தியிருப்பர். அத்வைத சந்நியாசிகள் ஒற்றைக்கோலை ஏந்தியிருப்பர்). அதனால்தான் தற்போதுள்ள அஹோபிலமடம் ஜீயர், காஞ்சி காமகோடி பீட பரமாச்சார்யரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசும் காணொளி போன்றவற்றைக் காண இயலும்.
இந்த வேல் திருஞானசம்பந்தர் கொடுத்தது.
அலங்காரங்கள் களைந்த நிலையில் திருமங்கையாழ்வார்.
= = = = = = = = = =
ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி.
கேட்டிருப்பவர் : நெல்லைத்தமிழன்.
1) புதன் கேள்விகள் – யாருக்கு?
3) கீதா சாம்பசிவம் மேடத்திடம்: நீங்கள் கற்றுக்கொண்ட யோகா மற்றும் தியானம் எந்த அளவு உங்கள் வாழ்க்கைக்கு உதவியிருக்கிறது இப்போது உதவுகிறது?
கீதா சாம்பசிவம் பதில் :
ஆசனப் பயிற்சி மனதை ஒரு முகப்படுத்தி ஆன்மிக மேம்பாட்டிற்கு நம்மைப் பண்படுத்திக்கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையான யோகம் செய்வதற்கு ஏற்ற மனோ நிலையையும் தரும். நான் ஆசனப் பயிற்சி செய்து கொண்டிருந்தவரை எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்தேன். பிராணாயாமம் போன்றவற்றால் இரவில் நன்கு தூங்கினேன். காலையில் மணி அடிச்சாப்போல் நான்கரைக்கு விழிப்பு வந்துடும். உடல் லேசாவதோடு மனமும் லேசாகி எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை வரும். 2001 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் தொடர்ந்து யோகாசனப் பயிற்சி மேற்கொண்டிருக்கேன். அப்போல்லாம் சர்க்கரை நோயே இல்லை. உடலில் சோர்வோ, சோம்பலோ இருந்ததில்லை. கணினியில் எழுதுவதோடு ஒரு சிலருக்கு கணினி மூலம் சில வேலைகளையும் செய்து கொடுத்துச் சம்பாத்தியமும் வந்து கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டில் டிசம்பரில் கல்கத்தா, புரி, போன்ற இடங்களுக்குச் சென்று வந்தப்புறமாகக் கொஞ்சம் மனச்சோர்வு ஏற்பட்டுக் கால்களில் வலியும் அதிகமாக ஆகவே மெல்ல மெல்ல ஆசனப் பயிற்சி குறைந்து விட்டது. 2020/21 ஆம் ஆண்டுகளில் வந்த கால் பிரச்னையில் பாதம் வீங்கி நடக்க முடியாமல் ஆன பின்னர் யோகாசனம் என்றால் என்ன என்னும்படிக்குச் சுத்தமாக நின்றே போனது. ஆகவே நான் இதைப் பற்றி எழுதும் அளவுக்கு அத்தனை தகுதியானவள் இல்லை. :( நெல்லை மன்னிக்கணும். நெல்லையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போனதுக்கு மன்னிக்கவும்.
வேதா கோபாலன் :
Facebook பதிவு ( 03-03-2026)
படம் சுட்டி
விளக்குக :
பஞ்சாபில் ஒரு
விவசாயக் குடும்பத்திடம் இந்தப் பழைய.. இல்லை.. ப…ழை….ய டிராக்டர் இருந்தது. வயது நூறு. இத்தாலியிலிருந்து வாங்கியதாம். நன்றாய்ப் பயன்படுத்திய பிறகு
ரிட்டயராகிவிட்டது.
அது பாட்டுக்கு
ஒரு ஓரமாய் அவர்கள் வீட்டில் கிடந்திருக்கு. நீங்களால் என்ன செய்திருப்பீர்கள்? வாசலில் வரும் பழைய இரும்பு வாங்குபவரிடம் போட்டிருப்பீர்கள்(போம்). இவர்கள் வீட்டில் அப்படிச் செய்யவில்லை என்பதுதான் விசேஷம்.
சோஷல் மீடியாவில்
எதைப் படம் எடுத்துப் போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த (அதன் உரிமையாளரின்)
கொள்பேரன் இந்த டிராக்டரை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட நிமிடம் சுக்கிர தசை
ஆரம்பித்துவிட்டது. (முதலில் டிராக்டரின் படத்தைப் பார்த்துக் கன்னத்தில்
போட்டுக்கொள்ளுங்கள்.. அப்புறமா விஷயத்தைச் சொல்கிறேன்)
அந்தக்
கம்பெனிக்காரர்கள் அவரைத் தொடர்பு
கொண்டு.. “தம்பி தம்பி.. இது எங்க கம்பனியோட முதல் ட்ராக்டர்.. இதோட நினைவு கூட
எங்ககிட்ட மிச்சம் இல்ல தம்பி. வெக்க வெக்கமாயிடுச்சு.. உலகத்திலேயே இந்த வகை
டிராக்டரில் ஒன்றே ஒன்று கன்றே கன்று .. நல்லா இல்லையோ? சரி ‘ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு’ன்னு இது ஒன்றுதான் இப்ப மிச்சம் இருக்கு... இத்தனை நாள் எங்க
கம்பெனியில் இதோட போட்டோ மட்டும் தான் நியாபகார்த்தமாக இருந்தது. இதை எங்களுக்குத்
தருவீர்களா?” என்று
கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர்கள்
தருவதாகச் சொன்ன விலை எவ்ளோ தெரியுமா? ஒன்றரைக் கோ..டி.
தந்தார்கள்
வென்றார்கள்
சென்றார்கள்.
எனில் ஒரு
கிலோவின் விலை எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து கொள்ளுங்கள்.
(இ.அ.நீ : உங்கள் வீட்டில் பழைய பொருட்கள் ஏதாவது இருந்தால் அவசரப்பட்டுத்
தூக்கிப் போட்டுடாதீங்க. போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போடுங்க. என்னிடம் மூன்றாம்
கிளாஸில் உபயோகித்த ஒற்றை ஷூ, மாமனாரின்
தாத்தாவுடைய மூக்குக் கண்ணாடி உள்பட 72 பொருட்கள்.
உள்ளன.)
இ அ நீ என்றால்
என்னவென்று கேட்க மாட்டீர்கள். என் நட்பு வட்டத்தில் அனைவரும் என்னைவிட பு,சா ..கள்.
இந்தப் படத்தை மாத்திரம் பகிர்ந்துகொண்டால், உயரம் தெரியாது என்பதால் இதற்கு முந்தைய படத்தையும் பகிர்ந்தேன்.
முதன்முறையாக அவர் பாகவதரைச் சந்தித்த போது, "எங்கே ஒரு பாட்டு பாடுங்கள்" என்றார் வினயத்துடன்.
“சிவபெருமான கிருபை வேண்டும்!
வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்!"
என்று வழக்கமான புன்னகையுடன் ஆரம்பித்தார் பாகவதர்.
"உங்களுக்குத்தான்!" என்றார் பாகவதர், அவருடைய ஆட்சேபம் புரிந்தும் புரியாதவர்போல்.
''எனக்கு அவருடைய கிருபை வேண்டாம்; அது உங்களுக்கே இருக்கட்டும்!" என்றார் அண்ணாதுரை. மென் சிரிப்புடன்.
பின்னால் ஆஸ்திகர்களையும் ஓரளவாவது கவர வேண்டும் என்பதற்காக 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அவர் தம் கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விட்டாலும் அதற்கு முன்னால் அவர் திரு ஈ.வே.ரா.வின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி நாஸ்திகராயிருந்ததுதான் நமக்கெல்லாம் தெரியுமே? அதனால் அவர் அப்போது 'சிவபெருமான் கிருபை'யை விரும்பவுமில்லை! வேண்டவு மில்லை. இதைப் புரிந்து கொண்ட பாகவதர், அத்துடன் அந்தப் பாடலை விட்டுவிட்டு,
என்று ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார்; அண்ணாதுரையும் அதைப் பரவசத்துடன் கேட்டு அனுபவித்தார்.
பாட்டு முடிந்தது; "வேதநாயகனைப் பிடிக்கா விட்டாலும் வேதாந்தத்தைப் பிடிக்கும் போலிருக்கிறதே உங்களுக்கு?" என்றார் பாகவதர்.
'அதையும் பிடிக்காதுதான்! ஆனால் வயதானவர்களுக்குமட்டுமல்ல, வயதாகாதவர்களுக்கும் இந்தக் காலத்தில் வேதாந்தம் ஒரு சுவையான பொழுது போக்காயிருக்கிறது. அந்த வகையில் அது எனக்கும் பிடிக்கிறது. ஆனால் பிறரை ஏமாற்றுவதற்காகச்சிலர் அதைப்பயன்படுத்துகிறார்கள். நான் அதை அவ்வாறு பயன்படுத்துவதில்லை" என்றார் அண்ணாதுரை.
"எதற்காக?"
"இந்தப்படத்தில் நான் நடிக்கமுடியாமல் இருப்பதற்காக."
''உங்கள் கதைக்கு ஏற்ற கதாநாயகன் நான் அல்ல."
''உங்களுக்கென்றே நான் இந்தக் கதையை எழுதியிருக்கும்போது நீங்கள் அவ்வாறு சொல்லக் காரணம்?”
"தெரிந்தோ தெரியாமலோ, நடிக்கும் படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் நான் தெய்வ பக்தி உள்ளவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கதாநாயகனுக்கோ அந்த பக்தி இல்லை. அவனை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பேன்? நடிப்புக்காகத் தெய்வ நிந்தனை செய்யக்கூட என்மனம் துணியவில்லையே!”
''உங்கள் கொள்கை அதுவானால், அதில் நீங்கள் உறுதியோடு இருப்பது உண்மையானால், அதற்கு நான் தலைவணங்குகிறேன்!" என்றார் அண்ணாதுரை, தமக்கே உரிய பெருந்தன்மையுடன்.
"கொள்கை எதுவாயிருந்தாலும் பிறருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவற்றைத் திணிக்க விரும்பாத உங்கள் பெருங்குணம் என்னை வெகுவாகக் கவருகிறது" என்று அவரை மனமுவந்து பாராட்டினார் பாகதவர்.
"நீங்கள் மட்டும் அதற்குச் சளைத்தவரா, என்ன? பக்திப் பாடல்கள் என்னுடைய கொள்கைக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக நீங்கள் வேதாந்தப் பாடல்கள் பாடி என்னை மகிழ்விக்க வில்லையா?" என்றார் அண்ணாதுரை.
“அதற்காகப் பக்திக் கதை எழுதி, அதில் நீங்கள் என்னை நடிக்கச் சொல்லமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்!''என்றார் பாகவதர் சிரித்துக் கொண்டே.
"அது நடக்காத காரியம்; நானும் கொள்கைப் பிடிப்பில் உங்களுக்குப் பின் வாங்கியவனல்ல" என்று அண்ணாதுரை சிரித்துக்கொண்டே எழுந்து நடந்தார்.
'அது என்ன கதை?' என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களல்லவா?
அதுவே 'சொர்க்க வாசல்'.
பாகவதருக்குப் பதிலாக அதில் நடித்தவர் யார்?
அவரே திரு கே.ஆர்.ராமசாமி.


KGG பக்கம் : அடுத்த வாரம்.





இன்றைக்கு நல்ல வியாழன் பதிவைப் படித்ததுபோல (பல்சுவை) இருந்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குகேள்வி பதிலில், கீதா ரங்கன் சொன்னதை ரசிக்க இயலவில்லை. கேள்விக்கான பதிலாக அமையவில்லை. ஏன் நாய் பூனை வளர்ப்பது பிடித்திருக்கிறது ஒருவருக்கு? வினைப்பயன் என்பது உண்டா என்ற கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கலாம்.
வாசகர்கள் பதில் அளிக்கவும்
நீக்குநெல்லை மிக்க நன்றி.
நீக்குஅவை எனக்கான கேள்விகள் இல்லை
கீதா
நாய் பூனை வளர்ப்பது ஏன் பிடித்திருக்கிறது என்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது! அதில் ஏதும் மறக்க முடியாத அனுபவம் உண்டா? உங்கள் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டாலும் சொல்லலாம். இந்தக் கேள்வியில் ஒரு மறைமுக எதிர்ப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது!!!
நீக்குநெல்லை, இதற்கான என் தனிப்பட்டக் கருத்துகள் பல விதங்களிலும் எபியிலும் அவ்வப்போது வந்திருக்கின்றன. நீங்கள் அடிக்கடி சொல்வீங்க அப்ப பதில் கொடுத்திருக்கிறேன். அப்போது அதற்கான உங்கள் பதில்கள் கருத்துகள் என் கருத்திற்கு வேறுபட்டதாக இருந்ததால் விளக்கமாக இங்கு சொல்லவில்லை குறிப்பாக, நாய் பூனை கேள்விக்கு.
நீக்குகீதா
நாயை வீட்டில் வளர்ப்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். பெரும்பாலானோர் அன்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் வளர்க்கின்றனர். நாய்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கலாம். நாய் வளர்ப்புக்குப் போதிய நேரமும், சரியான பயிற்சியும், இடவசதியும் இருப்பது அவசியம். மற்றபடி சாஸ்திரம் இப்படி சொல்வதாக எதுவும் நான் கேள்விப்பட்டதில்லை.
நீக்குநாய் வளர்க்கும் இல்லங்களில் வேண்டுமானால் பூஜையறை, சமையலறையக்குள் அதை வரவிடாமல் பழக்கலாம், நிறைய இடங்களில் அப்படிதான் செய்கிறார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்புதான் பேசிக்கொண்டிருந்தேன், எங்கள் பூர்வீக வீட்டில் இருந்த அழகிய ஓலைச்சுவடிப் புத்தகங்களை என் அப்பா, வீட்டை விற்கும்போது கடாசிவிட்டார் என. எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இருந்தது தனக்குத் தெரியாது என்றார்.
பதிலளிநீக்குபஞ்சாப் விவசாயி டிராக்டர் பதிவு சுவாரசியம்.
ஓலைச் சுவடிகள் விஷயம் வருத்தம்தான்
நீக்குநல்ல இலக்கியம், நூல்கள் எழுத முயல்கிறவர்களில் ஒருவரான ஜெயமோகன் அவர்களின் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
பதிலளிநீக்குவைரமுத்துக்கி ஞானபூட விருது என்றவுடன், எப்படி சரோஜாதேவியை, பிடி சாமியை விட்டுவிட்டார்கள், ஒரு காலத்தில் தமிழ் இளம் தலைமுறைகள் விழுந்து விழுந்து வாசித்தார்களே என்று தோன்றியது.
// வைரமுத்துக்கி ஞானபூட விருது// ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு! முத்துக்கி பூட.... ! :))))
நீக்கு:))
நீக்குஎழுத்தாளர்கள் பற்றிய ஜீவி சாரின் பதில் மன நிறைவு.
பதிலளிநீக்குதமிழகத்தில் எழுத்தினால் கஞ்சி குடிக்கக்கூட இயலாது என்பது நிலைமை. இருந்தாலும் எழுத்தின்மீதான ஆர்வத்தில் எத்தனை எத்தனைபேர் எழுதுவதைக் கண்டிருக்கிறோம்?
விமர்சனங்கள் இருக்கலாம். இருந்தாலும் புதுமைப்பித்தன், மணிக்கொடி கால எழுத்தாளர்கள் எனப் பலர் எழுத்தை வேள்வியாக எண்ணி, உருகியிருக்கிறார்கள் (அழிந்திருக்கிறார்கள் எனச் சொல்ல மனமில்லை).
அனைவருக்கும் வணக்கம். வித்தியாசமான புதன். சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமற்றவற்றிர்கு பிறகு வருகிறேன். பலரின் பதில்கள் அருமை. அதைப்பற்றி எழுதுகிறேன்.
பதிலளிநீக்குநேற்று நடைப்பயிற்சியின்போது, தரை ஈரத்தால் விழுந்து மூக்கையும் இரண்டு கால் முட்டிகளையும் உடைத்துக்கொண்டேன். அதிலும் வலதுகால் நடக்க மிகச் சிரம்மாக இருப்பதால் இன்று நடைப்பயிற்சி எப்படி ஓடும் எனத் தெரியலை. யோகா, ஜிம் முடியாது என நினைக்கிறேன்.
மருத்துவரிடம் போனீர்களா? உடனே கவனித்து விடுங்கள்.
நீக்குமுதல் நாளில் அவ்வளவு வலிக்காது அடுத்த நாள் தான் அதிகமாக வலிக்கும். கவனமாக நடைப்பறிற்சி செய்யுங்கள்.
விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.
நீக்குஅச்சச்சோ... Take care நெல்லை.
நீக்குநெல்லை டாக்டர்க்கிட்ட போங்க....முதல்ல
நீக்குகீதா
கடவுளே,திருஷ்டிப் பட்டிருக்கும் நெல்லை. உடனே மருத்துவரிடம் சென்று தக்க சிகிச்சை எடுத்துக்கோங்க. விரைவில் பூரண குணம் அடையப்பிரார்த்தனைகள்.
நீக்குஆழ்வார்களில் ஒருவர் முதலில் சிவ பக்தராக இருந்து பின்னர் வைணவம் பக்கம் திரும்பியவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ பக்தராக இருந்த பொழுதும் அவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். சிவ வாக்கியரா? தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.
பதிலளிநீக்குஇதுபற்றி எழுதுகிறேன். சிவ வாக்கியராக இருந்து திருமழிசை ஆழ்வாரானவர். அவரது பாசுரங்கள் மிகவும் பெரிய த்த்துவங்களை உள்ளடக்கியது. விரிவாக எழுதுவேன்.
நீக்குஅல்சீமர் மறதி நோயைப் பற்றிப் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசோடியக் குறைபாட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டான்னு தெரியலை.
என் நெருங்கிய உறவினருக்கு இந்த நோய் இருக்கிறது.சில விஷயங்களைப் பற்றி ஒருவரிடமே பலமுறை, ஒரே நாளில் சொல்வது, புதிய விஷயங்கள் நினைவில் இல்லாத்து, பலரை மறந்துவிடுவது என நோயின் தாக்கத்தைக் காண்கிறேன்.
என் மனைவிக்கு சோடியம் குறைபாடு இருந்தது.
நீக்குசோடியம் குறைபாட்டின் விளைவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
நீக்குசோடியம் குறைந்தாலும் வரும். உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலும் வரும்.
நீக்குஸ்ரீராம் கூட எபி குழுவில் பகிர்ந்திருந்தார்
கீதா
ந்ம்ம ரங்க்ஸுக்கும் சோடியம் குறைபாடு இருந்தது. மாத்திரைகள் கொடுத்தாலும் திரு கௌதமன் சார் அறிவுறுத்தலின் பேரில் தினமும் காலை, மாலை சாப்பாட்டில் உளுந்து அப்பளம் சுட்டுக் கொடுத்து வந்தேன். சோடியம் அதிகரித்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். என்றாலும் அவருக்கு அல்சைமர் எல்லாம் இல்லை. அதிலெல்லாம் தெளிவாகத் தான் இருந்தார். மாதம் பிறந்தால் பால் கணக்கு, வேலை செய்யும் அம்மாவின் கணக்கு, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றைக் கச்சிதமாகக் கணக்குப் பண்ணி பணம் எடுத்து வைப்பார். கடைசி மே மாதம் வரை இவை எல்லாமும் அவரே செய்தார். :(
நீக்குஅதோடு கடைக்குப் போக முடிந்தபோது கண்டிப்பாக கத்தரிக்காய் வாங்க மறக்கமாட்டார் என்பதை குறிப்பிட கீதா சாம்பசிவம் மேடம் மறந்துவிட்டார்கள். சாம்பசிவம் சார் போல உதவும் எண்ணம் கொண்டவர்களைப் பார்ப்பது அரிது.
நீக்குஇறைவனின் கைச்சுவடு முதுகில்... அப்பாதுரையின் வரி சிறப்பு. இதனைப் பலரால் உணர முடியும்.
பதிலளிநீக்குவாழ்க்கையில் உயர்ந்தது... என்பதற்கு என் விளக்கம், சிறு வயதில் நாம் இப்படி உயர்வோமா என நினைத்ததற்கும் மேலான உயரத்தை நாம் அடைவது.
காளான்களில் பல உண்ணத் தகுந்தவை. நாய்க்குடை என அலட்சியமாக்க் கடந்தவற்றைப் பற்றி, புதிதாக தூய சவேரியார் மேநிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த இளைஞர், 79 காலகட்டத்திலேயே இதைப்பற்றி செயல் முறை விளக்கத்துடன் புரிய வைத்தது நினைவுக்கு வருது. அவர்தான், உண்ணும் காளான்கள் வளர்ப்பது பெரிய தொழிலாக மாறும் என்றெல்லாம் சொன்னார். அப்போ பெரிய புரிதலில்லை.
பதிலளிநீக்குஅட! அப்படியா! எனக்கு காளான் வாடை பிடிக்காது. அதனால் காளான் பிடிக்காது.
நீக்குநான் மிகச் சமீப வருடம் வரை, காளான் நான் வெஜ் என்றே நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், பெண் என்னென்னவோ ஆர்டர் செய்ததில் இதனை இலவசமாக அனுப்பியிருக்கிறார்கள். நான் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்போவும் பசங்கள்ட சொல்வது, உங்க ஊருக்கு வரேன், என்னை எக்காரணம் கொண்டும் பாஸ்தா பீஸ்தாலாம் சாப்பிடச் சொல்லக்கூடாது. உங்களுக்கு உணவு விஷயத்தில் என்னால் தொந்தரவு கிடையாது, மோர் சாதம், உருளை ரோஸ்ட் அல்லது கேரட் வதக்கலே போதும்னு சொல்லியிருக்கேன். சாத்த்தை விட்டுவிட்டேன், இருந்தாலும் அந்தூர்ல என்ன கிடைக்குமோ அது.
நீக்குஎனக்கும் காளான் என்றால் ஒருவித வெறுப்பு, அருவருப்பு (மன்னிக்கவும்) இருந்தது. மிகச் சமீபத்தில் தான் அதை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன் - அதுவும் எப்போதாவது.
நீக்குவைணவம் போற்றிய சைவ ஆச்சார்யர்கள் உண்டா என்றால் ஆதி சங்கரரே வைணவத்தையும் போற்றியவர்தானே? இப்போதும் கூட காஞ்சி மடத்திலிருந்து வெளிவரும் அறிக்கைகளை 'நாராயண ஸ்மிருதி' என்றுதான் சொல்வார்கள். மஹா பெரியவரைப் பற்றி எனக்குத் தெரியாது. ஜெயேந்திர சுவாமிகள் தன் உரையை முடிக்கும் பொழுது 'நாராயணா' என்று கூறிதான் முடிப்பார்.
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்தது அல்லது தெரியும் என்று நினைத்துக் கொண்டதை எழுதியிருக்கிறேன். தவறு இருந்தால் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள தயார்.
உங்கள் கருத்துதான் என் கருத்தும்.
நீக்குஅதற்கு அப்படி அர்த்தமல்ல பா வெ மேடம்.
நீக்குநாராயணன் மூல தெய்வம். அவரின் கீழ், மூன்று காரியங்களுக்கான மூன்று தெய்வங்கள் பிரம்மா விஷ்ணு சிவன். வைணவம் திருமால் தவிர வேறு தெய்வம் இல்லை என்ற கொள்கையுடையது (அந்நிய தேவதையை வணங்கக்கூடாது என்பது கட்டளை). வேத்த்தை மூலமாக்க் கொண்ட சைவத்தில் (ஸ்மார்த்தர்கள், ஏகதண்டிகள்), நாராயணனும் உண்டு. அதனால் சிவன் கோயில்களில் விஷ்ணு ஶ்ரீதேவி சந்நிதிகள் உண்டு. விஷ்ணு கோயில்களில் அப்படி இருக்காது (விதிவிலக்கா காண்பது பிற்காலத்தில் வந்தவை)
ஏகதண்டி சந்நியாசிகள் நாராயண நாராயண என்றுதான் முடிப்பர். ஆனாலும் அவர்களின் ஆதர்ச தெய்வம் சிவன்.
இந்து மத நம்பிக்கையின்படி, சிவன் மற்றும் நாராயணன் (விஷ்ணு) இருவருமே முதன்மைத் தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் இது அவர்கள் பின்பற்றும் பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும்.
நீக்குசைவ சமயம்: சிவனை பரம்பொருளாகவும், முதன்மைத் தெய்வமாகவும், பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியவற்றுக்குக் காரணமானவராகவும் கருதுகிறது.
வைணவ சமயம்: நாராயணனை (விஷ்ணு) பரம்பொருளாகவும், முழுமுதற் கடவுளாகவும், பிரபஞ்சத்தைப் படைத்து காப்பவராகவும் கருதுகிறது.
இந்து மதத்தின் உயரிய தத்துவமான அத்வைதத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வேறுபாடு இல்லை. இருவரும் ஒரே பரப்பிரம்மத்தின் வெவ்வேறு வடிவங்களாகவே பார்க்கப்படுகிறார்கள் (சிவனும் விஷ்ணுவும் ஒன்றே).
எனவே, தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் சமயப் பிரிவின் (சைவம் அல்லது வைணவம்) அடிப்படையில், ஒருவர் சிவனை முதன்மைத் தெய்வமாகவும், மற்றொருவர் நாராயணனை முதன்மைத் தெய்வமாகவும் வணங்குகிறார்கள்.
ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றிலும், இன்னும் சில வைதிகக்காரியங்களிலும் ஸ்மார்த்தர்கள் சொல்லுவது நாராயணா என்னும் நாமம் அல்லது க்ருஷ்ண, க்ருஷ்ண என்னும் நாமமே! பூஜைகளின் போது மட்டும் ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்பார்கள். அதே வைணவர்கள் மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தம் என்றோ நாராயண ப்ரீத்யர்த்தம் என்றோ சொல்லுவார்கள் என எண்ணுகிறேன். நெல்லை போன்றோர் தான் இது சரியானதா என்பதை நிச்சயம் செய்யணும். காசியில் அக்ஷயவடத்தில் நாராயணனே முக்கிய தெய்வம். ஹிரண்ய கர்ப்பர் எனப்படுகிறார். ஸ்ராதங்களில் வடக்கு நோக்கிச் சில அடிகள் வைத்து அக்ஷய வடத்தை நோக்கிப் பிரார்த்திப்பதும் உண்டு. கட்டாயமாக அனுசரிக்கப்படும்.
நீக்குஆமாம் கீசா மேடம். நாராயண ப்ரீர்த்தர்தம். தென்கலையார் பகவத் கைங்கர்ய ரூபம் என்பார்கள்.
நீக்குபதினைந்து வருடங்கள் யோகா செய்தும், பிறகு காலத்தின் வண்மையால் யோகா செய்ய முடியாமல், உடல் நிலைப் பிரச்சனைகள் வந்தது சோகம். வாழ்க்கையில் எதையும் தவிர்க்க முடியாது போலிருக்கு.
பதிலளிநீக்குஇறைவன் எனக்கு என்னென்ன அதிர்ச்சிகளைச் சந்திக்க வைக்கப் போகிறானோ?
கீதா சாம்பசிவம் மேடம் பதில் அனுபவ அறிவைக் கொடுக்கிறது.
நெல்லை, ஆனால் நான் சின்னச் சின்ன ஆசனப்பயிற்சிகளை இன்றளவும் செய்து வருகிறேன் என்பதும் உண்மை. முக்கியமாக என் முழங்கால் பிரச்னைக்கு வேண்டிய சின்னச் சின்ன பயிற்சிகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து வருகிறேன். அவங்க சொல்லுவது தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகளையும் பயிற்சிகளையும் செய்து வந்தால் de genration position il இருக்கும் என்னோட முழங்கால்கள் re generate ஆகலாம் என்கிறார்கள். எங்க பையரும் அதைத் தான் வற்புறுத்துகிறார். பார்க்கலாம். But எனக்குள் உள்ளூர ஒரு பயம் எங்கே நானும் என் மாமியார், இன்னும் சில முன்னோர்கள் போல எண்பது வயதைக் கடந்தும் இருப்பேனோ என்ற பயம், கவலை சில மாதங்களாக. அதனாலும் யோகா செய்வதில் கொஞ்சம் தடுமாற்றம்.
நீக்குஎதுக்குத்தான் கவலைப்படுவது என்று இல்லையா கீசா மேடம்? ஆயுள் முடிவு முன்னரே முடிவு செய்தாகிவிட்டது. அதுவரை கொஞ்சம் ஆக்டிவ் ஆக இருக்கத்தான் சிறிய சிறிய யோகாசனப் பயிற்சி. தொடர்ந்து முடிந்தவரையில் செய்யுங்கள். எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும் உங்களுக்கு.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா.
நீக்குவித்தியாசமான கேள்வி பதில் பகுதி சிறப்பு..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஜெயமோகன் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் லாபியிங் வராது என்று உத்த்ரவாதமளிக்க முடியுமா?
பதிலளிநீக்குஒரு கட்டத்தில் தகுதியானவர்கள் கிடைக்காது. ஏனோ தானோவெனக் கொடுக்கப்படலாம், இப்போ கண்டவர்களுக்கெல்லாம் ஈவெரா விருது, கருணாநிதி விருதுலாம் திமுக முப்பெரும் விழா கொண்டாடும்போது வழங்கப்படுவது போல.யாருக்கு பரிசு கொடுத்தாலும் விமர்சனம் வரும். அதை கவனத்தில் கொள்ள முடியாது.
நீக்குஜெயமோகனுக்கு நிறைய ஸ்பான்சர்கள் இருப்பதாகவும் அந்த தைரியத்தில் அவர் அறிவிப்புச் செய்திருப்பதாகவும் ஒரு கருத்து முகநூலில் உலவுகிறது. அதை நடைமுறைப்படுத்தட்டும் பார்க்கலாம். அதோடு ஞானபீட விருதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால் அனைவரும் திட்டுவது மத்திய அரசையும் அது சார்ந்த கட்சியையும் தான்.
நீக்குநாய் பூனை இவற்றை வீட்டி வளர்க்கக் கூடாது என்பதே சான்றோர் வாக்கு...
பதிலளிநீக்குநாய் பூனை இவற்றைத் தொட்டுவிட்டால் குளிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்... நாயின் ஊளையும் பூனையின் அலறலும் அபசகுனங்கள்...
தகவலுக்கு நன்றி.
நீக்கு// நாய் பூனை இவற்றை வீட்டி வளர்க்கக் கூடாது என்பதே சான்றோர் வாக்கு... //
நீக்குஎந்த சான்றோர் எப்போது எங்கே சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம் செலவாண்ணா.. பாரதத்தில் பாண்டவர்கள் ஸ்வர்க்கம் சென்றபோது, வேதம் ஒரு நாய் வடிவில்தான் அவர்கள் பின்னால் சென்றது என்று படித்திருக்கிறேன். இப்போதைய உபன்யாசகர்கள் எதையாவது பேசுகிறார்கள். உதாரணமாக முகுந்த் ஸ்ரீதர் (?) ராமரும் சீதையும் பார்த்துக் கொண்டபோது ராமருக்கு 6 வயது என்று சொன்னதாக ஞாபகம்!
ஸ்ரீராம்.. இராமருக்கு 7, சீதாவுக்கு 6 அல்லது 11,6. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் உட்டாலக்கடி
நீக்குஆதிசங்கரரை ஈசன் சோதித்தப்போதுப் புலையனாக வந்த அவருடன் நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக அவருடன் வந்தன. பைரவருக்கு நாய் தான் வாகனம்.
நீக்குகீசா மேடம்... என் கேள்விகளோ இல்லை புரிதல்களோ நாயைக் குறைத்துச் சொல்வது போல இல்லை. புராணங்கள் இதிஹாசங்களில் நாய் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். என் கேள்வி, எது நாய், பூனையை வளர்க்கும் எண்ணம் கொடுக்கிறது என்பது. என்னைப் பொறுத்தவரையில் அது கூடாது என்ற எண்ணம், ஆனால் பிறருடைய எண்ணம் என்னுடையதாக இருக்கணும் என்று நினைப்பதும் தவறு.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி - பதில்கள் சிறப்பு.
பதிலளிநீக்குபழைய ட்ராக்டர் - ஆஹா... இப்படியான பழைய பொருட்களுக்கும் மதிப்புண்டு. இப்படியான இன்னும் சில கதைகள் வடக்கில் உண்டு.
பல்சுவைப் பகிர்வாக இருந்தது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நன்றி.
நீக்கு@ நெல்லை உங்களுடைய பதில் பொதுவானதாக உள்ளதே தவிர நேரடி பதிலை தர வில்லை. உங்களுக்கு பெயர் சூட்டியவர் யார் என்று உங்களுக்கு தெரியும். அது போன்று ஆழ்வார் என்று பெயர் சூட்டியவர் யார் என்பது தெரியவில்லை. மேலும் பூதம், பேய், பெரிய, நம்ம என்றெல்லாம் விபரீதமான பெயர்களை தேர்ந்தெடுத்தது யார்? நாதமுனிகளா?
பதிலளிநீக்குJayakumar
ஜெ கே அண்ணா அன்ட் நெல்லை,
நீக்குஇறைவனை/திருமாலை வணங்கி போற்றி அந்த இன்பத்தில் அனுபவத்தில் அதைத் தவிர வேறொன்றில்லை என்று ஆழ்ந்து இருந்ததால் மூழ்கி இருந்ததால் "ஆழ் நிலையில்" இருந்ததால் அவர்களின் செயலால் ஆழ்வார் என்று அழைப்பட்டார்கள் என்றுகொள்ளலாமா?
பூதத்தாழ்வார், பேயாழ்வார் பொய்கை ஆழ்வார் என்று பெயரிட்டு அழைத்தவர் நாதமுனிகள் என்று வாசித்த நினைவு.
சரியா தப்பான்னு தெரியாது. நெல்லை சொல்லுங்க..
கீதா
ஆழ்வார்கள் என்ற பெயர் காரணம் மிகவும் சுவையானது. வேதம் என்ற ஆரியச் சொல்லை விட "மறை" என்ற தமிழ்ச் சொல் பொருள் நிறைந்தது. மறைந்து உள்ள பொருளைப் பற்றியது மறை. மறை தேடும் ஞானம் எல்லோருக்கும் வருவதில்லை.
நீக்குமறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆதலால் ஆழ்வார் எனப்படுவர். பண்டைய உரை ஆசிரியர்கள் ஆழ்வார்களை, "எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்காற்படுபவர்கள்" என்றனர். ஆழங்காற்படும் அறிவாவது, வேதத்தாலும் அளவிட்டறிய முடியாத எம்பெருமானின் எல்லாக் குணங்களையும் அவனருளால் அறிந்து அனுபவிக்கும் ஞானமாகும்.
இத்தகைய ஆழ்ந்த அறிவுடைய ஆழ்வார்கள் செய்வித்ததுதான் தெய்வத் தமிழ் பாசுரங்கள். ஆழ்ந்தறியத்தக்க சொல் நயம், பொருள் நயம் உடைய கவிதைகள் அவை. இவற்றிற்கு பொருள் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் வைணவ பரம்பரையில் உள்ள சுவை மிகுந்த வியாக்கியானங்கள். வியாக்கியானங்களுக்காக பாசுரங்களா? இல்லை, பாசுரங்களுக்காக வியாக்கியானமா? என்று மயங்கும் அளவில் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றை ஒன்றும் விஞ்சும் தன்மையாயின.
Thanks to Mantras and Miracles.
பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கை ஆழ்வார் பெயர்க்காரணம் என்ன?
நீக்குபொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் அருகே பொற்றாமரையில் அவதரித்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார்.
பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் மாதவிபூவில் அவதரித்தவர். பஞ்ச பூதங்களால் ஆன இறைவனின் தத்துவத்தை ஞானத்தினால் உணர்ந்து அறிந்ததால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்.
பேயாழ்வார் கிட்டத்தட்டக் காரைக்கால் அம்மையார் போன்றவர். இறைவன் மீது கொண்ட தீராக் காதலால் உலகப்பற்றுக்களை நீக்கி மனிதனாக வாழாமல் ஓர் பேயைப் போல் (அதாவது ஓர் அதீதப்பரவச நிலையில்) வாழ்ந்ததால் பேயாழ்வார் எனப்பட்டார். இவர்கள் மூவருமே திருமாலின் சங்கு, வாள், கதை ஆகியவற்றின் அம்சம் என்பார்கள். வேளுக்குடி அவர்கள் இவர்களைப் பற்றி இன்னமும் விரிவாகச் சொல்லி இருப்பார். அதைக் குறிச்சு வைச்சிருந்தேன். இங்கே இல்லை.
நான் எழுத நினைத்ததை அனுபவமிக்க கீசா மேடம் எழுதியது மிகுந்த மகிழ்ச்சி.
நீக்கு//விபரீதமான பெயர்களை// இது நம் மனதைப் பொறுத்தது.
//பெயர் சூட்டியவர் யார்// இப்படி முற்கால வரலாற்றில் ஏன் இந்தப் பெயர், யார் சூட்டினார்கள் என்று அறிவது கடினம். சாத்தியம் இல்லாத ஒன்று. நாம் அனுமானித்துச் சொல்ல இயலும், ஆனால் உண்மை யாருக்கும் தெரியாது.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குமனிதனின் முதல் தோழன் நாய் என்பார் எங்கள் ஆசிரியர்...
பதிலளிநீக்குஅத்தகைய நாயை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது..
ஏனெனின் அது யமதர்மன் வரவை அறியக்கூடியது
என்பார்கள்...
ஆம்.
நீக்குஅதை வளர்க்காவிட்டால் யமதர்மன் வராமல் போய்விடுவானா என்ன!
நீக்குகோபித்துக் கொள்ள வேண்டாம். யமதர்மன் எப்படியும் வந்தே தீர்வான். நம் கண்ணுக்குத் தெரியாத யமன் அதன் கண்ணுக்குத் தெரிந்தால் விசேஷம்தானே!
இந்தக் காலத்தைப் போல வீட்டுக்குள் அதுவும் நடு வீட்டுக்குள் நாய்களையோ, பூனைகளையோ வளர்க்கச் சொல்லவில்லை. மாறாக நாய்களுக்குத் தினந்தோறும் இரவில் அன்னமிடுவதை சாஸ்திரங்கள் வற்புறுத்தியே வந்திருக்கின்றன. ஆனால் வீட்டுக்குள் அவற்றை வளர்ப்பதை எந்த சாஸ்திரமும் ஆதரிக்கவில்லை.
நீக்குநெல்லை, அந்தக் குட்டி மாடுகள் படங்கள் சூப்பர்.
பதிலளிநீக்குஇவை அங்கு நிறைய பார்க்கலாம். குண்டூர் பகுதிகளிலும் பால் கறப்பதைப் பார்த்திருக்கிறேன்.
இந்தப் படத்துல நீங்க ஒல்லியா இருக்கீங்களே!!!!
கீதா
கேஜிஜி பக்கம் இல்லாதது ஒரு குறை தான். என்றாலும் மற்ற விஷயங்கள் மனதைக் கவர்ந்து இழுத்துவிட்டன. மொத்தத்தில் ரொம்பவே சுவாரசியமான ரசிக்கத் தக்கதொரு பதிவு இந்த புதன்கிழமையில் படிக்கக் கிடைத்திருக்கிறது.
நீக்குவேதா கோபாலனை முகநூலிலே படிச்சிருக்கேன். எம்கேடி பற்றிய கட்டுரை சுவாரசியம். காளான்கள் மேல் பெரிய அபிப்பிராயம் கிடையாது. பையர் மட்டும் அவ்வப்போது வாங்கி வந்து அவரே சமைச்சுப்பார். ஆந்திரா செகந்திராபாதில் குடித்தனம் இருந்தப்போ இந்தப் புங்கனூர்ப் பசுக்கள் தான் எங்களுக்குப் பால் கொடுத்தன. பால்காரர் காலை ஐந்தரைக்கெல்லாம் வந்து பால் ஊத்திட்டு என்னைத் தேநீர் தயாரித்துத் தரச் சொல்லி உட்கார்ந்து அனுபவிச்சுக் குடிச்சுட்டுப் போவார். அவங்கல்லாம் தேநீர் குடிப்பது கிட்டத்தட்ட ஒரு சொம்பில். ஆகவே சும்மா தேநீர் தானேனு நினைச்சுக்காதீங்க. எங்க பொண்ணு, பையர் இருவருக்குமே தாய்ப்பாலுக்குப் பின்னர் பசும்பால் தான். முழுக்க முழுக்கப் பசும்பால் தான். சென்னை திரும்பியதும் தான் எருமைப் பாலே வாங்க ஆரம்பிச்சோம்.
//நீங்க ஒல்லியா இருக்கீங்களே!!!!// ஹா ஹா. ரொம்ப உயரமா இருக்கீங்களேன்னு கேட்காதவரை மகிழ்ச்சி
நீக்குநெல்லையின் கேள்விகளுக்கு கீதாக்காவின் பதில், அப்பாதுரை அவர்களின் பதில் நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் உண்டா என்ற கேள்விக்கு நேரிடையான பதில், இல்லை என்பதே. //
பதிலளிநீக்குநெல்லை, இராமானுஜரை மறந்துட்டீங்களா?
கீதா
ஓ!!! ராமானுஜர் வைணவம் தழுவி ஆச்சாரியார் ஆனார்....வைணவம் போற்றிய சைவ ஆச்சார்யார்கள் என்பதுக்குப் பொருந்துமா தெரியலை..
நீக்குகீதா
ஒரு மதத்தில் இருந்துகொண்டு இன்னொரு மதத்தைப் போற்றுவது. அப்படி இருப்பவர்கள் வெகு அபூர்வம்
நீக்குநெல்லையின் கேள்விக்கு ஜீவி அண்ணாவின் பதில் நலலருக்கு....யதார்த்தம்.
பதிலளிநீக்குநிஜமாகவே எழுத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களை ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்க்கிறேன். எஸ் ரா அவர்களின் மனைவியின் முழு ஆதரவு இல்லை எனில்?
கீதா
வேதா கோபாலன் அவர்களின் பக்கம் அற்புதமான சுவாரசியமான எழுத்து. ரொம்ப ரசித்தும் சிரித்தும் வாசித்தேன்.
பதிலளிநீக்குOld is Gold!!! அந்த ட்ராக்டர்!
எங்க வீட்டுல இருந்த காஃபி கொட்டை அரைக்கும் மெஷின் இருக்கான்னு கேட்டு சென்னைக்கு ஒரு கால்!!!
கீதா
ஸ்ரீராம், காளான், கொஞ்சம் வெள்ளைச் செம்பருத்தி போல இருக்கு இல்லையா? கவர்ச்சி. ரொம்ப அழகா இருக்கு படங்கள்!
பதிலளிநீக்குநான் கூட எங்கள் மாமியார் வீட்டில் தென்னையின் அடியில் முளைத்த வித்தியாசமான பெரிய காளானைப் படம் பிடித்து எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன்.
நாய்க்குடை என்பதற்குக் காரணம் பொதுவாக இம்மாதிரியான காளான்கள் நாய் உச்சா அடிக்கும் பகுதியில் வளர்வதால் என்று எங்கோ வாசித்த நினைவு.
கீதா
வெகு சுவாரசியம் பாகவதரும் அண்ணாதுரையும். இருவரின் உரையாடல்களும் அழகான உரையாடல்கள்.
பதிலளிநீக்குகீதா
அல்ஜீமர் கட்டுரை ரொம்ப பயனுள்ளது. நிறைய வருகின்றன இது பற்றி சமீபத்திலும்.
பதிலளிநீக்குகீதா
1 கோடி பரிசுடன் தமிழ் இலக்கிய விருதா!!!! சொக்கா! சொக்கா!!
பதிலளிநீக்குகீதா
//சொக்கா! சொக்கா!!//....... சரி சரி... இனி இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் பல சிவன் கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார் போலிருக்கு. சிவன் நேர்ல வந்து நாவல் இலக்கியம் எழுதித்தர மாட்டாரா என்ன?
நீக்குஅப்பாதுரையின் பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஆரம்பகாலத்து அப்பாதுரையிடம் பல முறை மறைமுகமாகச் சொல்லி இருக்கேன் விரைவில் ஆன்மிகம் சார்ந்த பக்திப்பாதையில் திரும்புவார் என்பதை. அதுக்கு உதாரணமாக என் அத்திம்பேர்(பெரியப்பா மாப்பிள்ளை. தீவிர கம்யூனிஸ்ட். தீக்கதிர் வேலைக்காக மத்திய அரசுப் பணியையே விட்டவர். ஒரு நண்பருக்கு வழிகாட்டியாகத் திருமியச்சூர் போனவர் லலிதாம்பிகையிடம் தன்னை இழந்தார். என்ன ஆச்சுனு தெரியாது. ஏன் இந்த மாற்றம்னும் புரியாது. சாஸ்திர சம்பிரதாயங்களைக் கேலி செய்தவர் முற்றிலும் அடியோடு மாறினார். குமுதம் "பக்தி" புத்தகத்தில் "மயன்" என்ற பெயரில் பக்திச் சுற்றுலாக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள்னு எழுத ஆரம்பிச்சார். அறநிலையத் துறை இவருக்குத் தேவையான வசதிகளைச் செய்தும் கொடுத்திருக்கு.)இவரைச் சுட்டிக்காட்டி இன்னமும் சிலரையும் சுட்டிக் காட்டித் தான் அப்பாதுரையிடம் சொல்லி இருந்தேன். ஆனால் அவர் மாற்றம் நான் எதிர்பார்த்ததே என்றாலும் விரைவில் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் மாற்றம் நிகழ்ந்ததற்கான காரணம், நிகழ்வைப் பற்றிக் கேட்டேன். பகிரவில்லை. நம்ம ரங்க்ஸோ அதெல்லாம் அவரோட தனிப்பட்ட விஷயம். வற்புறுத்திக் கேட்காதே என்றார். ஆகவே கேட்கவில்லை. எனினும் அவருடைய இந்த மாற்றத்தை நாங்கள் இருவருமே முழு மனதோடு வரவேற்றோம்.
பதிலளிநீக்குநெல்லையின் கேள்விக்கான ஜீவி சாரின் பதில் ஏற்கக் கூடியது தான். பலரும் முன் காலங்களில் வேண்டுமானால் எழுத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கலாம். அதுவும் மணிக்கொடி காலகட்டத்தில் தான் அதிகமாக இருந்திருக்கு. ஆனால் அரசுப்பணியில் இருப்பவர்கள் எழுத்தைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது என்றொரு நியதி உண்டு. சுஜாதா போன்றோர் அனுமதி வாங்கி இருந்திருப்பார்கள். இல்லை எனில் இத்தனை பேட்டிகள், தனது படங்கள் ஆகியவற்றைப் போட்டுக் கொண்டிருக்க முடியாது. பொதுவாக எழுத்து என்பது ஓர் தவம். எல்லோருக்கும் எளிதில் வராது. பொழுதுபோக்கும் அல்ல. அது உள்ளார்ந்த ஓர் அனுபவம். அதை அனுபவித்துச் செய்பவர்களின் எழுத்து நம்மை ஈர்க்கிறது. மற்றபடி நான் இப்போ எழுதறாப்போல் யார் வேண்டுமானாலும் எழுதிடலாம்.
பதிலளிநீக்குஆதிகால மனிதர்கள் வேட்டையாடி உணவைச் சம்பாதிக்கையில் நாய்கள் அவனுக்குத் துணையாக நின்றதோடு அல்லாமல் விசுவாசமாகவும் இருந்திருக்கின்றன. ஆகவே அவை தொடர்ந்து மனிதர்களுடன் வாழும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். பூனைகள் அவ்வளவு விசுவாசமாய் இருப்பதில்லை. ஆனால் நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஜென்மப்பகை. எங்க வீட்டில் (ஹிஹிஹி) அம்பத்தூர் வீட்டில் தான் (நெல்லை கவனிக்க0 நாய், பூனை, எலி, பெருச்சாளி, முக்கியமாய் சுப்புக்குட்டிகள்(பாம்பார்) நு எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு வளர்த்துட்டு இருந்தோம் அனுபவங்கள் பலவும் முன்னரே பகிர்ந்தாச்சு. இது அவரவரின் தனிப்பட்ட சுய விருப்பம் சார்ந்தது. எங்க அப்பா வீட்டில் இவை எதுவும் அறவே பிடிக்காது என்பதோடு பயமும் உண்டு. அதே நான் இங்கே எங்க வீட்டில் (புக்ககம்) எல்லாவற்றோடும் வாழ்ந்தேன். இதை வளர்ப்புனு காரணம் சொல்ல முடியாது. ஏனெனில் என் கணவர், அவர் கூடப் பிறந்தவர்களில் நம்மவர்க்கு மட்டுமே செல்லப் பிராணிகள்னா பிடிக்கும். கடைசித் தம்பி கொஞ்சம் பரவாயில்லை ரகம். மத்தவங்க கிட்டேக் கூட வரமாட்டாங்க. ஒருவேளை அவரவர் கிரஹச் சேர்க்கையும் காரணமாக அமையலாம்.
பதிலளிநீக்குசுப்புக்குட்டிகளுக்கு விளக்கம்லாம் தேவையில்லை கீசா மேடம். சிலருக்கு நாய், பூனை வளர்ப்பில் ப்ரியம். அது எதனால் என்று சொல்வது கடினம். பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கலாம். இல்லை அந்தப் பழக்கம் ஆரம்பித்து, கேடுகெட்ட உறவினர்களைவிட இவைகள் எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிடவும் வாய்ப்பு இருக்கு. எது அதைத் தூண்டுகிறது என்பதே என் கேள்வி.
நீக்குநாய் நம்மை எஜமானனாகப் பார்க்கும். பூனை, நம்மை அதன் வேலைக்காரர்களாகப் பார்க்கும் என்று படித்திருக்கிறேன்.
நான் ஒரு தடவை நெல்லையில் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அங்கிருப்பவர்களின் அனுமதி பெற்று படங்கள் எடுத்துக்கொண்டேன். அவங்களுக்கு மனசுல ஒரு பயம், எங்க இவன், வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடுவானோ, பத்திரம்லாம் சரியா இருக்கா அப்படீன்னு. நீங்க தப்பித் தவறி அம்பத்தூர் போனீங்கன்னா, அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டினவருக்கு பிரஷர் வந்துடப் போகுது. ஹிஹி
பீட ஞானம்!?...
பதிலளிநீக்குஆருக்கெல்லாம் வேணும்?...
டைமண்டு பாடல்கள் சிலவற்றை வீட்டுக்குள்
பதிலளிநீக்குபோட்டால் அடுத்த வேளைக்கு சோறு கிடைக்காது..