திருப்தியுடன் நான் என் மனைவியிடம் "என்ன நாடகம் பிரமாதமாக அமைத்து விட்டது இல்லையா?" என்று கேட்டேன்.
சப்புக் கோட்டி விட்டாள் அவள். " என்ன ஜோடனை: என்ன ஜோடனை"அதை மெச்சுவதா? உங்கள் ரசனையை மெச்சுவதா!" என்று அடியோடு ஒரு போடு போட்டு என்னையும் என் அபிப்பிராயத்தை யும் தள்ளி விட்டாள்.
நான் அதைச் சுவைத்து ரசித்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்ட விஷயங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். எங்கள் திருஷ்டித் கோணங்களிலேயே வேறுபாடு. மன பேதங்கள், நிற பேதங்கள், கொள்கை வேறுபாடுகள் அபிப்பிராய மாறுதல்கள், இன வித்தியாசங்கள். இவைகளின் கலவைதானே உலகம்!
"என்ன சிரிக்கிறீர்கள்? நான் அழுகிறேன். 'நாடக விமர்சகர்' என்று பெயர் வாங்கியவரின் ருசி இப்படித் தரைக்கு இறங்கி விட்டதே என்று நான் உள்ளூர வருத்தப்படுகிறேன்"
"சீர்தூக்கும் மனப்பான்மையும், இடம் பொருள் கண்டு மதிப்பிடும் புத்தியும் இவ்லையே உனக்கு? எனக்கு அது வேதனையாக இருக்கிறது" என்று மறுமொழி தந்து விட்டு மீண்டும் உரக்கச் சிரித்தேன் நான்.
எங்கள் வாக்குவாதம் நீண்டு, சாப்பாடு, உறக்கம் யாவும் முடிந்து, விழிப்புக்கும் காப்பிக்கும் பிறகும் கூட நடப்பது உண்டு. ஆயினும் இன்று வீட்டுக் குறட்டை மிதிக்கும் முன்பே எங்கள் கவனம் வேறு பக்கம் சென்றுவிட நேர்ந்தது. வீட்டு வாசலில் ஒரு புதுக் கார் நின்றிருந்தது. அதன் மீது உட்கார்ந்துகொண்டு எங்கோ பார்த்தவண்ணம் காக்கிக காக்கி உடை அணிந்த டிரைவர் இருந்தான். வண்டியின் பின்புறம் சாமான்கள் வைக்கும் இடம் திறந்து கிடந்தது. குழந்தைகளை வைத்துத் தள்ளும் வண்டி காரின் மேலே சாய்த்து வைக்கப்பட்டிருத்தது. துல்லிய வெள்ள உடுத்திய ஆயா ஒருத்தி சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தாள். செல்வச் சின்னங்களாகிய பற்பல சாமான்கள் வண்டியினின்று இறங்கிக் கொண்டிருந்தன.
"மஞ்சுளா வந்திருக்கிறளாக்கும்?" என்று கேட்டாள் என் மனைவி.
"யாரு? சிகப்பியா?" என்று கேட்டேன் நான்.
"உஷ்.. அப்படியெல்லாம் அசட்டுப் பிசட்டென்று பேசாதீர்கள். சின்ன வயசிலே ஏதோ பெயர் இருந்தால் அதையே இப்பொழுதும் சொல்லக்கூடாது" என்று என்னை உடனே அடக்கி விட்டாள் என் சகதர்மிணி.
'சிகப்பி', 'கறுப்பி' என்றுதான் அந்த இரு குழந்தைகளையும் நாங்கள் அழைப்பது, தெருவிலே பாண்டி கிழித்து விளையாடிய குழந்தைகள். நானே அவர்கள் கண்ணாமூச்சிக்குத் 'தாச்சி'யாக இருந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் பெரியவள் சிகப்பி, சின்னவள் கறுப்பி.
இருபது ஆண்டுகள்ஓடி விட்டன. சிகப்பி மஞ்களாவாக, முப்பது வயது நிரம்பிய பெண்மணியாக, பணக்காரியாக இன்று வந்து இறங்கி இருக்கிறாள். அவள் கணவர் ஒரு பருத்தி ஆலையின் அதிபராம். . டிரைவரின் உடையும் நடை யுமே ராஜ கம்பிரமாக இருக்கும்போது எஜமானனின் உயர்த்தியைக் கேட்க வேண்டுமா?
என் மனைவி கதவைத் திறக்கும் திறக்கும் வரை நான் காரையும், அதிலிருந்து இறங்கும் சாமான்களையும் கண்ணுற்றவாறு இருந்தேன், குழந்தையின் பால் சீசாவை ஊறப்போடும் பேஸின் முதல் விளயாட்டுப் பொம்மைகள் வரை அதனின்று இறங்கின. உடுப்புக் கலையாமல் அப்படியே மாட்டிய 'பிளாஸ்டிக் வார்ட்ரோப்' ஊ..ம்.. செல்வம் என்னதான் செய்யாது!
"உள்ளே வாருங்கள். ஏன் வைத்த கண் வாங்காமல் பட்டிக்காடு மாதிரி பார்க்கிறீர்கள்?" என் மனைவி என்னை அவசரமாக உள்ளே அழைத்தாள்.
நான் உள்ளே வந்து விட்டேன். அவர்கள் வீட்டை நோக்கினேன். நான் முன்பு இந்த ஊரில் கல்லூரி ஆசிரியனாக இருந்தபோது அந்த வீட்டைக் கட்டினேன். பிறகு இப்போது நாங்கள் இருக்கும் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டேன். அந்த நாட்களில் அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிகப்பியின் குடும்பம் இருந்தது. மற்றொன்றில் நாங்கள் இருந்தோம்.
"சிகப்பி நல்ல பணக்காரியாக்கும்?" என்று நான் கேட்டேன்.
"புதிதாகக் கேட்பீர்கள்! அவள் பெயரில்தானே "மஞ்சுளா மில்ஸ் அவளுக்கெள்ள, பிறவியிலேயே பணக்காரி. அழகுத் தெய்வம் அவள் அங்கங்களிலே குடிகொண்டதாலே, அதுவே லட் கமி கடாட்சம்" என்றாள் என் மனைவி.
சிகப்பி பிறவியிலேயே அழகிதான். அவர்கள் எங்கள் வீட்டுக்குக் குடி வந்த போது சிகப்பிக்கு பத்து வயக, கறுப்பிக்கு எட்டு வயது. எங்கள் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக வந்தார் மஞ்சுளாவின் தகப்பனார் குப்புசாமி. அவருக்கு இந்த இரண்டே பெண்கள் தாம்.
சிகப்பி கடைந்தெடுத்த தந்தப் பொம்மைதான். அவன் பள்ளிக்கூடம் போக வீதியில் இறங்கினாலே போதும், எல்லோர் கண்களும் அவளையே தொடரும். கூடவேதான் அவள் தங்கை குந்தளா போவாள். அவள்தான் கறுப்பி. அவள் தன் தமக்கைக்கு நேர்மாறான நிறம், நடை, உடை, பாவனை யெல்லாம் தான். சிகப்பி, கறுப்பி என்று யார் பெயரிட்டார்களோ தெரியாது. எல்லோருக்கும் அதுவே பழக்கமாகி விட்டது. சிகப்பி தன் மேனி அலுங்காமல் மெதுவாகத் தன் கண்களால் இரு புறமும் நோட்டம் விட்டுக் கொண்டே நடப்பாள். சுறுப்பியும் அவளோடு கூடவேதான் கிளம்புவாள், ஆனாம் பத்தடி கூட நேரே நடக்க மாட்டாள். வீதியின் ஓரத்தில் சாக்கடையில் தண்ணீர் ஓடினால் அதில் ஒரு காகிதக் கப்பல் செய்து போட்டுவிட்டு, அதன் கூடவே கரையில் ஓடுவாள், புத்தகங்கள் நழுவி நழுவிக் கீழே விழுந்து கசங்கிப் போகும். பாவாடை அள்ளிப் பிடிக்கப்பட்டு, அலங்கோலமாகக் காட்சி தரும். தலைமயிர் இலேசாகப் பறக்கும். மூச்சு முட்ட முட்டப் பள்ளிக்கூட வாயிலை அடைவாள் பெண். அதே முன் வாயிலைத் தாண்டித்தான் நானும் கல்லூரிக்குப் போயாக வேண்டும். ஒரே ஸ்தாபனத்தாரின் கல்விக்கூடங்கள்தாம் அவர்கள் பள்ளியும், எங்கள் கல்லூரியும்.
"சிகப்பி எங்கே!" என்று கேட்பேன். "அதோ!" என்று கட்டிக் காட்டி விட்டுத் தமக்கைக்காகக் காத்து நிற்பாள் சிறுமி. அந்தச் சமயம் அவள் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகக் காட்சியளிப்பாள். எதிரே ஒயில் நடை போட்டு வரும் தன் அக்காவின் அழகையும் தன் அலங்கோலத்தையும் ஒப்பிட்டும் பார்ப்பாள் போலும்! இதுவரை காகிதக் கப்பலின் வேகத்தில் ஒன்றி ஓடிய உற்சாகம் இப்போது எங்கு போகுமோ? கவலை தோய்ந்து, சிறிதே அவமானம் தலைகாட்ட, கலைந்த புத்தகங்களுடனும் கசங்கிய உடையும், அலைந்த கேசமுமாக நிற்பாள் தங்கை.
"சிகப்பி, எனக்குத் தலையைச் சரியாகக் கோதிவிட்டு விடேன். இல்லையென்றால் வாத்தியாரம்மா முட்டி போடச் சொல்லுவார்கள்!!" என்று மஞ்சுளாவைக் கெஞ்சுவாள் குந்தளா.
"நீ புத்தி கெட்டு ஓடு, உன்னை என்னால் தொட முடியாது. அழுக்கு வழிகிறாய்" என்பாள் பெரியவள்.
நான் சில விநாடிகள் நின்று பார்ப்பேன்: குந்தளாவின் கண்களில் நீர் தளும்பும். நான் அருகே சென்று கைக் குட்டையால் அவள் கன்னத்தில் இருக்கும் மண்ணைத் துடைத்து, தெரிந்த மட்டும் தலையைக் கோதிவிட்டு, முதுகில் தட்டி உள்ளே அனுப்புவேன். அவள் கவலையுடன் "மாமா, தல பறக்கிறதா? டீச்சரம்மா முட்டி போடச் சொல்லுவாங்களா!" என்று வினவுவாள். "ரொம்பப் பறக்கவில்லை. இனிமேல் கவனமாக இரு" என்று நான் அவளைச் சலுகையுடன் கண்டித்து அனுப்புவேன். மஞ்சுளா ஒரே நிதானமாக நடந்து சென்று கொண்டிருப்பாள். குந்தளா அவளைத் தாண்டி ஓடும்போது பாவாடை நுனியில் கால் வைத்து, விழும் தறுவாயில் சமாளித்து நின்று போவதைப் பார்ப்பேன். சிரிப்பு மேலிடும். போய் விடுவேன். மாலையில் நான் வீடு திரும்பினவுடன் இது விஷயமாக என் மலைவியிவிடம் பேசினால் அநுதாபம் கிடைக்காது, "ஆமாம்! அதன் உருவத்துக்கு ஏற்றமாதிரிதான் புத்தியும் இருக்கிறது. அதே வயித்தில் பிறந்து, அதே தாயார் வளர்த்த பெண்தானே சிகப்பி! எவ்வளவு தந்துலக்கமாய், எழிலுருவாய், நாசூக்காக இருக்கிறாள்" என்பாள் அவள்.
என் மனைவி என்ன, அந்தக் குழந்தையின் பெற்றேர்கள் கூடத்தான் பாரபட்சம் காட்டினார்கள். அழகான புதுப் புது உடைகள் தைத்துப் பெரியவளுக்குப் போட்டார்கள். அவளுக்கு அளவு குறைந்து விட்டதும் அவைகளைச் சின்னவளுக்குத் தந்தார்கள். சிலசமயம் குந்தளா அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள். அதே போல் தைத்துப் போட்டாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துப் பேசாமல் இருந்தார்களா? 'அதே உடை மஞ்களாவுக்கு அழகுக்கு அழகு செய்கிறது. குந்தளாவுக்கு நன்றாகவே இல்லை' என்பார்கள். குழந்தை முகம் சுண்டி விடும்.
யார் வீட்டு விவகாரத்துக்கு யார் பதில் சொல்ல முடியும்? அல்லது உலகத்தின் நாவைத்தான் அடக்க முடியுமா?
இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவ்விரு பெண்களின் நினைவு என் மனத்தில் இன்றும் பளிச்சென்று இருந்தது. அவர்கள் இப்பொழுது எப்படியெல்லாம் . மாறி விட்டிருப்பார்களோ? மனம், குணம், நடை, பேச்சு எல்லாமே மாறி விட்டிருக்குமோ?
அவர்கள் இல்லத்தை நோக்கினேன். வெய்யிலில் கட்டப்பட்டிருந்த கம்பிக் கொடி நிறையக் குழந்தைச் சட்டைகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் ஆயா, "சிகப்பிக்கு ஒரு குழந்தைதானே என்று நான் என்னுடைய மனைவியைக் கேட்டேன்.
"ஆமாம். அதற்கு மேல் இருக்குமோ அவளுக்கு? நிறைய செல்வம் இருக்கிறது. குழந்தைகள் இல்லை.. கறுப்பிக்குப் பிறந்திருக்கிறதாம் மூன்றோ நான்கோ!"
இவளுக்கு ஏனோ வேதனை? சிகப்பிக்கு ஒரே குழந்தை. அதற்காக, பத்துக் குழந்தை துணியையும் அதற்கே போட்டு விட வேண்டுமா?
''சின்னவள் இங்கே வருவதில்லையா?"
"இப்பொழுதேல்லாம் வருகிறாளாம். முன்புதான் இரண்டு வருடங்கள் வராமலே இருந்தாளாம்...
நான் சற்றைக்கெல்லாம் கிளம்பி என் நண்பரைக் காணச் சென்றேன். 'சிகப்பி சிறு வயதிலிருந்த அதீதமான அழகுடனே இன்றும் விளங்குகிறாளா? வயதும் வாழ்க்கையும் அவள மாற்றி விட்டனவா? அவள் செல்வத்தில் இருப்பவள். இயற்கை அழகைச் செயற்கையால் அதிகரிக்க வசதியுள்ளவள். சின்னவளுக்கு இயற்கை சதி செய்துவிட்டது. செயற்கைக்கும் செயல் போதாது' என்றேல்லாம் சிந்தித்தது என் மனம்.
என்னைக் கண்டதும் நண்பர் ஓடோடியும் வந்து வரவேற்றார். பணக்காரியான பெண், காக்கி உடுப்பு அணிந்த கார் டிரைவரும் குழந்தை எடுக்க ஆயாவும், பெரிய காரும், வீடு கொண்ட சாமானுமாக வந்து இறங்கியிருப்பதைக் கண்டு ஒரு தந்தையின் உள்ளம் களிப்படைவதில் வியப்பென்ன இருக்கிறது? எனக்கே பெருமையாக இருக்கிறதே?
"சிகப்பி வந்திருக்கிறாளாமே? இப்பல்லாம் சிகப்பி என்று சொல்லக் கூடாதோ? மஞ்சுளா என்றுதான் அழைக்க வேண்டுமாக்கும்! என் மனைவி என்னை எச்சரித்துத்தான் அனுப்பியிருக்கிறாள்" என்று கூறிக் கொண்டே நான் அவர் எதிரே அமர்ந்தேன்.
"சிகப்பிதான் மஞ்சுளாவாக ஆகி விட்டாள். கறுப்பி இன்றும் முக்கால் வாசிப் பேர்களுக்குக் கறுப்பிதான். அவள் கணவனும் அப்படித்தான் அவளை அழைக்கிறான்".
"குந்தளா செளக்கியமாக இருக்கிறாளா?
"இப்பொழுது சுகமாகத்தான் இருக்கிறாள். இரண்டு குழந்தைகள். மூன்றாவது பிறக்கப்போகிறது."
"ஏன் 'இப்பொழுது சுகம்' என்று பொடி வைத்துச் சொல்கிறீர்கள்" என்று நான் கேட்டேன். என் மனைவியின் சொற்கள் என் நினைவில் இருந்தன. முன்பு இரண்டு வருடங்கள் பிறந்தகமே வராமல் இருந்ததாகச் சொன்னாளே?
"ஆமாம், சார், குழந்தை இரண்டு, மூன்று வருடங்கள் இங்கே மிகவும் கஷ்டப்பட்டதாக இப்பொழுது தெரிகிறது, பிறகு திடீரேன்று ஒரு நாள் அவளும் அவள் கணவனுமாக வந்தார்கள். இன்று வரையில் அவர்கள் வீட்டில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. - கறுப்பியும் அடித்துப் பேசுகிறாள் ஒன்றுமே நடக்கவில்ளை என்று. எப்படியோ கணவனோடு புக்ககம் போனாள். அவனோடேயே பிறந்தகம் வந்தாள். இடையில் இரண்டு, மூன்று வருட காலம் இருவரும் இங்கு வரவில்லை நாங்கள் போனாலும் மாப்பிள்ளை பேச மாட்டான். குந்தளாவும் எங்களை வரவேண்டாம் என்றுசொல்லி விட்டாள். அதை மீறி நாங்கள் போனால் என்ன கஷ்டம் நேருமோ என்று போகாமலே இருந்து விட்டோம்."
இன்று அந்தப் பழைய நாட்களை நினைத்து ஒரு கணம் வருத்தப்பட்டார் தந்தை. அவர் கண்களில் நீர் துளிர்த்தது. அந்தச் சமயத்தில் மேலும் குத்திக் குத்திப் பேசு மனமில்லாமல் நான் மௌனம் சாதித்தேன். இதற்குள் மஞ்சுளா தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தாள்.
''வா, அம்மா! கொண்டுவா இங்கே என் பேரப் பிள்ளையை" என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டினேன்.
குழந்தை தன் தாயைப் போலவே வெள்ளை வெளேரென்று அழகாக இருந்தது. மஞ்சுளா எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அப்பொழுதுதான் நான் அவளை நிமிர்த்து நோக்கினேன். என் எனம் 'திக்'கென்றது. ஏதோ ஒரு குளிர் படர்ந்து என் அடி வயிற்றில் அமர்ந்த மாதிரி இருந்தது. மஞ்சுளாவா இவள்? தெய்வத் சிற்பியின் கைவண்ணமெல்லாம் அமைந்த அற்புத எழில் சிலையாக இருந்த சிகப்பியா இவள்?" சிவப்புத் தோல் மட்டும்தான் இருந்தது, என் அற்புத வெண்கலச்சிலையை யாரோ தேய்த்து விட்ட மாதிரி இருந்தது. தீர்மை மழுங்கி விட்ட மெழுகு பொம்மையாக அவள் என் எதிரே நின்றாள். ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவள் குழந்தையையே கவனித்துப் பேசி விட்டு என் வீடு திரும்பினேன்.
"நாளைக்குச் சின்னவளும் அவள் கணவலும் வருகிறார்கள்" என்றார் நண்பர் கிளம்பும்போது.
"பெரிய மாப்பிள்ளை ஏன் வரவில்லை?"
"இன்று மாலை வருகிறார்!" என்று மஞ்சுளா பதிலளித்தாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். ஒருவித உணர்ச்சியும் எடுத்துக் காட்டப்படவில்லை அங்கு. அந்தப் பெண்ணின் வதனத்தில் ஜீவ களையே காணோம்.
தான் ஆசையோடு வரைந்த சித்திரம் மழையில் நனைந்து விட்டால் ஓர் ஓவியன் வருத்தப்பட மாட்டானா?' அது போல் பெரியதோர் ஏமாற்றத்துடன் நான் வீடு திரும்பினேன்.
வீட்டில் என் மனைவியுடன் பேச்சும் கொடுத்தேன். என்னவோ ஒரு வேதனை என்னை வாட்டியது. "என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்! கடையிலிருந்து ஏதாவது சாமான் வேண்டுமா?' என்று கேட்டேன்.
சீறினாள் என் மனைவி. அவளுக்குப் பல குறைகள். தீபாவளிக்கு அழைத்ததற்கு பெண்ணும் மாப்பிள்ளையும் வரவில்லை. மருமகள் பிரசவத்துக்காக போய் விட்டாள். பிள்ளை வெளியூர் போய் விட்டான் வேலை நிமித்தமாக. பேரனும் இங்கு நிற்க மாட்டேன் என்று தன் தாயிடம் ஓடி விட்டது.
"ஒரு சாமானும் வேண்டாம். இங்கே வீடு நிறைய மனிதர்கள் வரப் போகிறார்களாக்கும்! பட்டும், பீதாம்பரமும் சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாக்கும்! கேள்வியைப் பார், கேள்வியை!" என்று சரமாரியாக மொழிந்து கொண்டே, இயந்திரத்தின் அச்சின் மீது குண்டுக் கல்லால் அவள் நறுக்கென்று ஒன்று வைத்தாள்.
சாதாரணமாக நான் வாய் விட்டுச் சிரித்திருப்பேன். இன்று எனக்கும் ஏதோ மனம் படுத்து விட்டது. சூள் கொட்டி விட்டு நான் முன் பக்கம் போய் விசுப் பலகையில் படுத்து விட்டேன், மஞ்களாவின் முகம் அடிக்கடி என் மனத்தின் முன் வந்து வந்து துன்புறுத்தியது.
தான் வெடிப்பாக பேசியதை நினைத்து வருந்தினாள் போலும் என் மனைவி! கையில் ஒரு கோப்பை பழரசத்துடன் வந்து நின்றாள். "களைப்பாக இருக்கிறதா, என்ன?" என்று மிகுந்த பரிவுடன் கேட்டாள்.
"நீ போட்ட ராம பாணத்தினால் அடியுண்டு கிடக்கிறேன்"என்றேன் நான் ஹாஸ்யமாக.
அவள் முகம் களித்துக்கொண்டது.
நான் அதைப் பார்த்து விட்டுப் பேச்சில் இறங்கினேன். "சிகப்பியைப் பார்த்தாயா? எப்படி மாறி விட்டாள்!"
"நீங்கள் தலையில் கைவைத்துக் கவலைப்படுகிற மாதிரி என்ன மாறுதல் வந்து விட்டது? முன்பு குழந்தையாக இருந்தாள். இப்பொழுது வயதின் முதிர்ச்சி தெரிகிறது"
அவள் சுலபமாக அடித்துப் பேசி விட்டாள். நானும் பேசாமல் இருந்து விட்டேன். ஆயினும், அவ்வளவுதானா தெரிகிறது? கலை நுட்பமெல்லாம் மிகுந்த தேர் ஒன்றை உப்புக் காகிதத்தால் யாரே தேய்த்து விட் டால், வயதின் மூப்பு போன்று காட்சியளிக்குமா?
மாலை பெரிய மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார் நண்பர், பணக்காரனாக இருந்தாலும் வினயத்தோடும் பண்போடும் பழகினான் அவன். கறுப்பானாலும் லட்சணம் இருந்தது. அவனைக் கண்டதும்தான் எனக்கு நினைவு வந்தது. அவர்கள் கல்யாணம் நாங்கள் கல்கத்தா போன பிறகுதான் நடத்தது. பெரியவளுக்குக் கறுப்பான கணவனும், சின்னவளுக்குச் சிவப்பான புருஷனும் கிடைத்ததைப் பற்றி அப்பொழுது நிறைய பேச்சுதான் எழுந்தது.
இப்படித்தான் வாழ்க்கையில் நடந்து விடுகிறது. நான் வியந்து கொண்டே அன்றைய நாளைக் கடத்தினேன்.
மறு நாள் காலை நான் தோட்டத்தில் பூண்டுகளைக் களைந்து கொண்டிருந்தேன். திடீரேன்து, "மாமா!" என்ற ஓர் உற்சாகமான குரல் என்னைத் தட்டி எழுப்பியது. சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் தெறித்த அந்தக் குரல் பழக்கப்பட்ட குரல்தான். நான் சட்டென்று எழுந்து பார்த்தேன். யார்? சுறுப்பிதான்.
இடுப்பில் மூன்றுவயதுப் பெண் குழந்தையுடன் நின்றாள் அவள். நான் வைத்த வாங்காமல் அவளையே பிரமிப்புடன் நோக்கினேன். ஆம், பழைய குந்தளாவா இவள்? என்ன மாறுதல், என்ன வித்தியாசம்! எனக்கு வியப்பு மேலிட்டது. காண்போரைக் கவரும் ஒரு தனிக் கலை, ஒரு சோபை மிளிர்ந்தது அவளிடம்.
"என்ன மாமா பழைய மனிதர்களே மறந்து விட்டதா உங்களுக்கு?" என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் அவள். கலகலவென்ற வெள்ளிமணிச் சிரிப்பு.
"தெரியாமல் என்ன, அம்மா? உங்களையெல்லாம் பார்த்து வெகுநாட்களாகி விடவே, நான் நேற்றுப் பார்த்த குழந்தைகளை இப்படி வளர்ந்து விட்டீர்கள்' என்று ஆச்சர்யபப்டுகிறேன்" என்றேன் ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொண்டு.
"உங்கள் பெண் மட்டும் அப்படியே இருக்கிறாளோ? போங்கள், மாமா. எனக்குத் தெரியும், உங்கள் ஆச்சரியத்துக்குக் காரணம், 'பழைய சுறுப்பியா இப்படி அழகாக இருக்கிருள்? என்று விழிக்கிறீர்கள். நீங்கள் மட்டும் என்ன. மாமா உலகமே அந்தக் கேள்வியைதான் கேட்கிறது" என்று கூறினாள் அவள், அதரங்களில் குறுப்புச் சிரிப்பு மிளிர,
"நீ சொல்லலும் உண்மைதான், அம்மா. நான் மறுக்கவில்லை" என்று நான் அசடு வழிய ஒப்புக் கொண்டேன். அவள் என் முன்னால் நடந்து எங்கள் வீட்டுக்குள் நுழைத்தாள். "மாமீ.. மாமீ!" என்று அவள் கூவுவது சங்கீதம் போல் ஒளித்தது.
நான் என் விகப் பலகையில் அமர்ந்தேன். குந்தளா குழந்தையையும் தூக்கிக் கொண்டு என் மனைவியுடன் வந்தாள். குழந்தை, என் நீட்டின கரங்களைப் பார்த்துத் தாவி வந்தது. அழகுப் பிம்பமாக இருந்தது மகவு.
"குந்தளா! சரி, இப்ப மாமாவுக்கும் சொல், பார்க்கலாம். நீ எப்படி அழகியாக மாறி விட்டாய் என்று!"
"அது பெரிய கதை, மாமா. அது கிடக்கட்டும். நீங்களும் இருக்கிறீர்கள், என் அப்பாவும் இருக்கிறார். நீங்கள் உங்களுக்காக ஒரு வீடு, வாடகைக்காக ஒரு வீடு கட்டி விட்டீர்கள். எங்கள் அப்பாவோ, தான் இருப்பதற்குக்கூட ஒரு வீடு கட்டிக் கொள்ளவில்லை. வாடகையே தந்து கொண்டிருக்கிறர். இருவருக்கும் ஒரே மாதிரி குடும்பம், ஒரே சம்பளம்" என்று சம்பந்தம் இல்லாமல் பேச்சை மாற்றினாள் குந்தளா.
"உன் அப்பா எதற்கம்மா வீடு கட்ட வேண்டும்? அவருக்குச் சொத்து நிறைய இருக்கிறது, என்றும் வாடகை கொடுத்து எந்த வீட்டிலும் இருக்கலாம். எனக்கு அப்படி இல்லையே? இந்த வீடு தானே எனக்குச் சொத்து? ஓய்வு பெற்று வந்து விட்டேன். இந்த வீட்டு வாடகை ஒரு பாதுகாப்பாக எனக்கு வேண்டாமா? இன்று இவ்வாறு நல்ல பதவியில் இருப்பேன் என்று அப்பொழுது எப்படி எனக்குத் தெரியும்? இருக்கிறதற்குள் சௌகரியம் தேடிக்கொண்டேன்"
"அதேதான் மாமா, நானும் செய்தேன். நான் அழகற்றவளாக புக்ககம் போனேன்.. அவள் குரல் கம்மி விட்டது. பழைய நினைவுதான் என்றாலும் புண்பட்ட உள்ளம் சிறிது வலித்தது போலும்.
"மிகவும் கஷ்டப்பட்டாயா அம்மா" என்று நான் பரிவுடன் கேட்டேன்.
சிறு குழந்தையாக இருந்த போது அவள் ஒருநாள் ஓடிவந்து என் மடியில் அழுதது எனக்கு நினைவு வந்தது, பள்ளிக்கூட நாடகத்தில் அவளை அழகில்லை என்று எடுக்காமல், அதே பாத்திரத்தைச் சிகப்பிக்குத் தந்து விட்டார்கள். "அவளை விட எனக்குத்தான் மாமா, சம்பாஷணை நன்றாக வரும், சங்கீதம் வரும். . என்னை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்களே!" என்று குழந்தை விம்மி விம்மி உள்ளம் வெடிக்க அழுதது இன்று போல் பளிச்சென்றிருந்தது.
குந்தளா நிமிர்ந்தாள். அவள் முகம் மீண்டும் தெளிந்து விட்டது. "மாமா! நான் கஷ்டப்பட்டேன். யாரும் துன்புறுத்தவில்லை. . என் கணவருக்கு மட்டும் மனக் குறை. தம் பெற்றோருக்காக என்னை மணந்து கொண்டு விட்டார். ஆனால் அவருக்கு என்னைப் பார்க்கக் கூட கூச்சம். ஊரிலும் பலர் அவரைப் பார்த்து அதுதாபமாகப் பேச ஆரம்பித்து விட்டனர். "இவ்வளவு அழகாக இருக்கிறவனுக்கு ஒரு அவலட்சணமான ஒரு பெண்ணா!" என்ற சொல்லும், பார்க்கும் பார்வையும் அவரை மேலாகக் குத்தின. எனக்கும் கூட அவரைக் கண்டால் பரிதாபமாக இருந்தது.
"என்னிடம் பராமுகமாக அவர் இருப்பதைச் அவர் இருப்பதைக் கண்டு என் மாமியார் அடிக்கடி என்னிடம் , 'பிறந்த வீட்டுக்காவது போய் இரண்டு மாதங்கள் இருந்து விட்டு வா' என்று சொல்லுவார். இங்கே வந்து மட்டும் என்ன செய்வது மாமா? மறுபடியும் பழைய பல்லலி, அதே இழி சொற்கள்தானே? 'நன்றாக இல்லாத பெண்ணுடன் யார் வாழ்வார்கள்?' என்று ஊர் சுடும். வாழாவெட்டி என்று என்னைப்பற்றிப் புறம் பேசுவார்கள். அது என் பெற்றேர்களுக்கு வேதனையாக இருக்கும். அதைவிட அங்கேயே இருப்பது கெளரவம் என்று பேசாமல் இருந்து விட்டேன்..
+"பாவம்,உனக்கு இவ்வளவு பொறுமை எப்படி வந்தது!"..
''அவசியம் வந்தால் எதுவும் வருகிறது. என் கணவர் நிலையைப் பார்த்து எனக்கு வேதனையாக இருந்தது. என் அக்கா அப்படித்தானே? தன் அழகுக்கு ஏற்ற அழகு மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்று அப்படியே மழுங்கி, ஒளி மங்கிப் போய் விட்டாளே? அதே நிலையில்தான் என் கணவரும் நான் அவருக்கு ஏற்ற அழகியாக இல்லையே என்று வேதனையில் நொந்து கொண்டிருந்தார். அவர் மனக்குறையைப் போக்குவது என் கடமையல்லவா?"
"அது கிடக்கட்டும். நீ எப்படிக் கடைசியில் அழகாகும் ரகசியம் கண்டு பிடித்தாய்?"
"அவர் வீட்டில் தங்குவதே அரிதாகி விட்டது. இருந்த நேரத்திலும் என் திக்கே பார்க்கவில்லை. அதனால் நான் ஒரு வேலயில் அமர்ந்து கொண்டேன். என் நாத்தனாரும் நானும் ஒரே அலுலகத்தில் வேலை செய்தோம். அப்பொழுது எனக்கு பல பெண்களின் தொடர்பு கிடைத்தது . என் கவலையை மறக்க அவர்களிடம் ஒன்றிப் பழகினேன். அவசியத்தினால் அவர்களைப் போலவே அழகாக ஆடைகள் அணியக் கற்றுக் கொண்டேன். இயற்கையிலே அழகில்லாதவர்கள் எளிய செயற்கை முறைகளால் எப்படிப் பிறர் கவனத்தைக் கவருவது என்ற கலையைக் கற்றுக் கொண்டேன். என் எண்ணமெல்லாம் என் கணவரின் மனக்குறையைப் போக்கி அவர் உள்ளத்தில் எப்படி இடம் பெறுவது என்ற ஒன்றிலேயே லயித்திருந்தது. அழகுக்கு அங்க அமைப்பு மட்டுமே தேவையில்லை, அகத்தின் அமைப்பும் வேண்டும் என்று புரிந்து கொண்டேன், அதனால், கண்ணீர் சிந்தலை நிறுத்தினேன். ஆரோக்கியமாக இருக்கப் பயின்றேன். மனசை எப்பொழுதும் வேலையில் ஈடுபடுத்தினேன். இரவு படுக்கையில் விழுந்ததும் கேவலம் அசதி மேலீட்டில் உறங்கி விடுவேன். இப்படி ஒரு நிர்ப்பந்தம் வைத்துக் கொண்டேன்...
"தபசு செய்தாய்?"
"அப்படித்தான் இருக்கட்டுமே?" என்று கூறி விட்டுச் சிரித்தாள் குந்தளா. "தவம் பலித்து விட்டதே. மாமா!"
"எப்படிப் பலித்தது? அதுதானே சுவாரசியமான கட்டம்?" என்று கேட் டேன் நான், ஆவல் மேலீட்டுடன்.
"கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னைக் கவனிக்க ஆரம்பித்தது எனக்குத் தெரியவில்லை. ஏகாக்ர சித்தத்துடன் நான் நடத்திய சோதனைகள், என் எளிய அலங்கார முறைகள் அவர் கவனத்தை எப்படியோ கவர்ந்திருக்கின்றன. எங்கள் வீட்டில் என் அத்தை பெண்ணுக்குக் கலியாணம், நான் வருவதாக இல்லை, அன்று மாலை அவர், வீட்டுக்கு வந்து, வழக்கத்துக்கு மாறாக வீட்டிலேயே சுற்றிச் சுற்றி வந்தார். பிறகு தன் தாயாரைப் பார்த்து, சாவதானமாக, 'அம்மா, கல்யாணத்துக்குப் போகவில்லயா உன் மாட்டுப் பெண்?" என்று கேட்டார்.
''நானும் தைரியம் கொண்டு, மாமியார் பதில் சொல்வதற்கு முன் 'எதற்கு?' என்று கேட்டேன். உடனே அவர். 'நானும் வருகிறேன், இருவருமே போகலாமே?' என்றார்...
"ஒன்றுமே சலனமில்லாமல் சகஜமாகப் பேசி விட்டாராக்கும்."
"ஆமாம். மாமா! என்னுடன் வந்தார். பிறகு, அவரைப் போல் அன்பான மனிதரே உலகில் இல்லை என்றபடி இருக்கிறார்."
அதைக் கேட்கும் போது தேன் பாய்ந்தது என் செவிகளில், "என் மனமார்ந்த ஆசியும், பாராட்டும் உனக்கு. எவ்வளவு அதிருஷ்டசாலி உன் கணவன்!"
'அப்படித்தான் அவர் நண்பர்கள் சொல்லுகிறார்களாம். அவருக்கேற்ற அழகியாம் நான்! உலகம் குருடர் மாமா?" அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். என் மடியில் இருந்த அவள் குழந்தையும் அவளுடன் சேர்ந்து சிரித்தது.
"கட்டாயம் நீ அழகியாகி விட்டாய், ஆனாய் என் வரை நீ கறுப்பிதான். சிகப்பியைப் பார். எப்படி ஆகி விட்டாள்!"
"அவள் அழகினால் உலகமே அவன் காலடியில் விழுந்து பழக்கமாகி விட்டது அவளுக்கு. தானாக இன்பத்தைத் தேடிப் போய், அதைச் சேகரித்துக் கொள்ளத் தெரியவில்லை. கொஞ்சம் மனம் சோர்ந்ததும் களையிழந்து விட்டாள். நானோ ஒவ்வொரு நிமிஷமும், ஏழைச் சிறுமிகள் தெருவில் சுள்ளி சேர்ப்பது போல, அவர் மதிப்பைச் சேர்த்து வைக்கும்படி ஆகி விட்டது என் நிலைமை. என்னிடம் நிறையச் சேர்ந்தும் விட்டது."
"அவள் கணவனும் மிகவும் நல்ல மாதிரியாக இருக்கிறானே? இவள் இப்படிக் குறைப்பட்டுக் கொள்வது எனக்குச் சரியாகப்படவில்லை."
"அதெல்லாம் பிறவிக் குணம் மாமா. குழ்நிலை நெருக்கடி, அவள் எங்கள் அப்பாவைப் போல் சொத்தின் மதிப்பில் அலட்சியமாக இருந்து, இன்று ஒருவர் பார்த்து இரக்கப்படும் நிலைக்கு வந்து விட்டாள். நானோ உங்களைப் போல்...."
வெகு சாதாரணமாகப் பேசினாள் குந்தளா. ஆனால் என் மனசில் அவள் பெரிய உருவம் எடுத்து வியாபித்து விட்டாள். இன்பத்துக்கும் துன்பத்துக்குமிடையே மயிரிழைதான் இருக்கிறது. இன்பத்தைத் துன்பமாக்குவதும், துன்பத்தை இன்பமாக்குவதுமான ரசாயனம் நம் மனம்தான் என்று அழகாக எடுத்துக் காட்டி விட்டாள் அவள்.
"மாமா! உங்களுக்குத் தீபாவளிக்கு ஒரு பரிசு தரப் போகிறேன், எத்தனை வருஷம் கழித்து வந்திருக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன பிடிக்கும், சொல்லுங்கள்" என்று கேட்டாள் அவள்.
நான் பதில் சொல்வதற்குள் என் மனைவி குறுக்கிட்டாள் "கறுப்பி! நீ ஒன்றும் தர வேண்டாம். நிறைவு உள்ளத்தில்தான் இருக்கிறது எனும் படிப்பினையைக் கற்றுக் கொண்டோமே. - அதுவே போதும்" என்றாள்.
அவள் முகத் தெளிவைக் கண்டேன். எங்கள் தீபாவளியும் நிறைவு பெற்றது.
- 1964 கல்கி தீபாவளி மலர் -
======================================================================================
சில விளம்பரங்கள்...
இப்போதெல்லாம் மூட்டைப்பூச்சி என்கிற வஸ்துவே கண்ணில் படவில்லை போலவே.. இந்த மருந்துதான் காரணமோ..! எதுவாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வந்து விடும் எனக்கு! மூட்டைப்பூச்சிக்கு பாடல் இருக்கிறதோ?!**









காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குகல்கி பத்திரிகையில் வெளிவந்த கதை.என்று தெரிகிறது. அநுத்தமா கதைக்கான விஜயாவின் அந்த பெண் ஓவியங்களின் முக வசீகரம் அழகோ அழகு. ஜெயராஜ் வந்ததும் தான் இந்த குடும்பப் பாங்கான தோற்றப் பொலிவுகள் சீர்குலைந்தது போலும். மாறிக் கொண்டே வரும் காலத்தின் கோலத்தில் நாமே அறியாமல் உள்ளார்ந்த பல சிறப்புகளை ஒரு ப்ச்க்க்ச்ம் இழந்து கொண்டே வந்து இம்னொரு பக்கம் புதுசுக்கு பழக்கப்பட்டு விடுகிறோம் என்பது எவ்வளவு உண்மை!..
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். ஜெ கூட ஆரம்ப கால ஓவியங்களில் Bhaaவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரைந்தார்.
நீக்குவிஜயா, கல்பனா எஸ். பாலு இவர்களெல்லாம் அப்போதைய ஓவியர்கள்.
கதை அரும்சி என்ற ஒற்றை வரியைத் தவிர்ர்த்து விட்டு கதையை வாசித்த நேர்த்தியை யாரெல்லாம் பகிர்ந்து கொள்ளப் போகிறார்க்ள் என்ற எதிர்பாத்ப்பு எகிர்கிறது.
பதிலளிநீக்குஅரும்சி அல்ல. கண்பார்வைப் பிழை. அருமை என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
நீக்குமுதல் கமெண்ட்டிலேயே அந்த வார்த்தை அருமை என்று புரிந்து கொண்டேன்.
நீக்குஇந்தக் கதையை டைப்பி வெளியிடுவதற்கும் ரொம்பவே பாடு பட்டு விட்டேன். ஸ்கேன் செய்துதான் என்றாலும் பாராவுக்கு பாரா பிழைகள். ஒப்பிட்டு ஒப்பிட்டு பிழை திருத்தி வெளியிடுவதற்குள் அது என்ன, ஆங்... 'தாவு' தீர்ந்து விட்டது!
ஆமாம், 'தாவு' ன்னா என்ன ஜீவி ஸார்?
ஓவோமால்ட்!.. அட!/அது ஒரு பெர்டிலைஸர்ஸ் (!) கம்பெனி தயாரிப்புங்க!
பதிலளிநீக்குஹா.. ஹா... இந்தக் கால பாஷையில் பதில் சொல்வதென்றால் "வெளங்கிரும்'!
நீக்கு@ஸ்ரீராம், மால்ட் என்றாலே என்னனு புரிஞ்சிருக்கணுமே? இன்னிக்கு என்ன தி/கீதா, அட, கீதா ரங்கன் (யாரையோ சொல்றாப்போல் இருக்கு) வரவில்லை? நேத்திக்கே இல்லையோ?
நீக்குதமயந்தி தான் பிற்காலத்தில் வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்களை அனுப்பவித்தாள் என்ற கோணத்யில் விளம்பர ஒப்புமை பொருத்தமாகத் தான் இருக்கிறது!..
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. அதுவும் சரிதான். பொருத்தமாகத்தான் வருகிறது! பொடி போடுபவர்கள் பக்கத்தில் நிற்பவர்கள்தான் ரொம்ப பாவம்!
நீக்குசருமத்தில் ஏற்படும் வரட்சி!.. லபோனிக்கு சமனான மருந்து தற்காலத்தில் என்ன இருக்கிறது?...எனக்குத் தெரிந்தது சுத்தமான தேங்காய் எண்ணை ஒன்று தான்!
பதிலளிநீக்குலபோனி நான் கேள்விப்பட்டதே இல்லையாக்கும்! அதுசரி, அங்கு கேட்டிருந்த கேள்வியை கவனிச்சேளா?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குநான் சென்னையில். இன்று நேரம் கிடைத்தால் படிக்கிறேன்
பதிலளிநீக்குவாங்க நெல்லை... சென்னையில் எங்கே?
நீக்குதி நகர்
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஎல்லோரும் எல்லா நேரங்களிலும் சிகப்பியாகவோ, கருப்பியாகவோ இருந்து விட முடியாது.... மாற்றங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. அநுத்தமா அவர்களின் கதை மற்றும் அதற்கான விஜயா அவர்கள் வரைந்திருக்கும் ஓவியங்கள் இரண்டுமே சிறப்பு!
பதிலளிநீக்குஅந்தக் கால விளம்பரங்களும் நன்று. முன்பு தில்லி நூலகத்தில் தேடித் தேடி பழைய தீபாவளி மலர்களிலிருந்து விளம்பரங்கள் பகிர்ந்தது நினைவில் இன்றும்.
வாங்க வெங்கட்.. கலைமகள் அமுதசுரபி தீபாவளி மலர்களும் சுவாரஸ்யம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். அநுத்தமாவின் கதைகள் எப்போதுமே நூல் பிடித்தது போல ஒரு நேர்கோட்டில் சீராகச் செல்லும். தன்னுடைய மைனசை பிளஸ்சாக மாற்றிக் கொண்ட குந்தளா நல்ல பாத்திரப் படைப்பு!
பதிலளிநீக்குஇந்தக் கதையில் குறிப்பிட்டிருப்பதை போல நிஜத்திலும் நடந்ததை பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தை எப்படிப்பட்ட மன உளைச்ச்லுக்கு உள்ளாகும் என்பதை சுற்றி உள்ளவர்கள் உணர மாட்டார்கள்.
மஸ்கட்டில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்தக் கதை போலவே ஒருத்தி நல்ல கருப்பாகவும், இன்னொருத்தி நல்ல சிவப்பாகவும் இருப்பார்கள். சிலர் அந்த பெற்றோர்களிடமே இந்த நிற வேற்றுமை குறித்து கேட்பார்களாம்.
வாங்க பானு அக்கா.. முதலில் படித்து வரும்போது இதில் என்ன இருக்கு என்று தோன்றுவதும் முடிக்கும்போது எவ்வளவு பெரிய விஷயம் என்றும் தோன்றும்
நீக்குகவிதையும், அந்தக் கால விளம்பரங்களும் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குநேற்று எ.பி.பார்க்க மறந்து விட்டேன். இன்றுதான் பார்த்தேன். மாங்காய் சாம்பார், சேனை சிப்ஸ் அருமை! எங்கள் வீட்டில் கொட்டகாய்ச்சி மாங்காய் எனப்படும் சிறிய மாங்காயில் வற்றல் குழம்பு செய்வோம். என் அக்கா மாங்காய் பருப்பு என்று மாங்காயை பயத்தம் பருப்பில் சீவிப்போட்டு ஒன்று செய்வார். நன்றாக இருக்கும். மாங்காய் புளிசேரி என்னும் மோர்க்குழம்பு கேரள ஸ்பெஷல் ஆயிற்றே! நான் மாம்பழ மோர்குழம்பு செய்து எ.பி.யில் பகிர்ந்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குசாப்பாட்டை பற்றி நான் ஒரு வியாசம் எழுத நினைத்திருந்தேன். நெல்லை முந்திக் கொண்டு விட்டார். பந்திக்கு முந்திக்கொள்ளத்தானே வேணும்?
பதிலளிநீக்கு80,90களில் நாங்கள் திருச்சி-சென்னை-திருச்சி பெரும்பாலும் பஸ்ஸில்தான் பயணிப்போம். திருவள்ளுவர் பேருந்து வசதியாக இருக்காது என்பதால் பெரும்பாலும் கே.பி.என். போன்ற தனியார் பேருந்துகள். அவை சாப்பாட்டிற்கு தொழுதூர் என்னும் இடத்தில் நிறுத்துவார்கள். ஒரே ஒரு மட்டமான நான் வெஜ் ஹோட்டல்தான் இருக்கும். வெளியே காபி,டீ வைத்திருப்பார்கள். கழிப்பறை வசதியெல்லாம் இருக்காது. ரொம்ப கஷ்டம்!. 90களின் பின் பகுதியில் கொஞ்சம் டீசண்டாக, கட்டண கழிப்பறை வசதியோடு இருந்த ஹோட்டல் வாசலில் நிறுத்த ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் நிறைய, நல்ல தரமான சிற்றுண்டி சாலைகள். பெங்களூர், சென்னை வழியிலும் நல்ல ஹோட்டலிகள் இருந்தாலும், பேருந்துகள்நிருத்துவது என்னவவோ காமா சோமா ஹோட்டல்களிதான். பெங்களூர், திருச்சி பாதையில் ஹோட்டல்கள் மிகவும் குறைவு.
நன்றி பானு அக்கா.
நீக்குகோவில்களுக்குச் சென்றால் என் கணவர் பிரசாத ஸ்டாலில் லட்டு, தேங்குழல்,அதிரசம் போன்றவை வாங்காமல் வர மாட்டார். நாங்கள் ஸ்ரீரெங்கத்தில் பல வருடங்கள் இருந்தாலும் கோவில் பிரசாதம் எதுவும் சாப்பிட்டதில்லை. அங்கு அரவணை பாயசம் ரொம்ப ஃபேமஸ், ஆனால் வி.ஐ.பி.களுக்குத்தான் கிடைக்கும் என்பார்கள். திருவானைக்கோவிலில் பௌர்ணமி பூஜைக்கு கட்டளை கட்டுவார் என் அம்மா, அதற்கு நெய்வேத்தியம் சர்க்கரைப் பொங்கல்! அமிர்தமாய் இருக்கும்.
பதிலளிநீக்குஅநுத்தமா, லக்ஷ்மி கதைகளில் மூழ்கிஜ்
பதிலளிநீக்குகிடந்ததெல்லாம் அந்தக் காலம்..
இந்தப் பதிவைப் படிக்க இயலவில்லை...
இன்னும் எழுத்தாளர்கள் இருந்தார்கள்.
நீக்குஇந்தப் பதிவைப் படிக்க
பதிலளிநீக்குஇப்போது இயலவில்லை...
கோவில் பிரசாதம் என்றதும் காஞ்சி மஹா பெரியவர் அனுபவம் ஒன்றை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் டிரஸ்டி பகிர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. ந.ந.ஆ.கோவில் டிரஸ்டி அந்த கோவில் கட்டி முடித்த புதிதில் மஹா பெரியவரை பார்க்கச் சென்று,அவரிடம், "கோவிலில் காலை, மாலை ரெண்டு வேளையும் வருகிற எல்லோருக்கும் வயிறு நிரைய சாப்பிடும்படி பிரசாதம் கொடுக்கிறோம்" என்று பெருமையாக சொன்னாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய்"என்றாராம். இவருக்கு தங்கள் செயலை பெரியவர் பாராட்டவில்லையே என்று ஏமாற்றமாக போய் விட்டதாம். ஆனால் அளவைக் குறைக்கவில்லையாம். ஒரு முறை பிரசாதம் வாங்கிக்கொண்ட ஒருவர், "இந்த சாம்பார் சாதத்தோட ஒரு பொரியலும், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயும் கொடுங்கள்" என்றதும்தான் பெரியவர் சொன்னது இவருக்கு நினைவுக்கு வந்ததாம்.
பதிலளிநீக்கு
நீக்குபா வெ மேடம் நான் அழகர் கோயிலில் தயிர்சாதம் பிரசாதம் வாங்கியபோது தொட்டுக்கையாக அருமையான புளி மிளகாய் தொகையல் இருந்தது.
கோயிலின் உண்மையான பிரசாதமாக இருந்திருக்காது. டென்டர் மூலம் அனுமதி பெற்று வீட்டில் யாராலோ தயாரிக்கப்பட்டுப் பிரசாத ஸ்டால்களில் விற்றிருந்திருக்கலாம். உண்மையான பிரசாதம் என்பது கருவறையை விட்டு வெளியே வரும்போதே விநியோகப்பட்டு விடும். இப்போதெல்லாம் அறமற்றநிலையத் துறை அதைத் தடை செய்திருப்பதால் கொடுப்பதில்லை. அவங்க ஆட்களின் ஒப்பந்தம் வீணாகக் கூடாது என்பதால் பிரசாத ஸ்டால்களை நிறுவி மக்களின் மனதில் இது தான் பிரசாதம் என்னும் உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். இதை எவரும் தட்டிக் கேட்பதில்லை. பயம் தான் காரணம். ஜெயலலிதா ஆட்சியில் கூடப்பிரசாதங்கள் மடப்பள்ளியிலேயே வாங்கி இருக்கோம். மாலை நேரங்களில் கோயிலுக்குப் போனால் லட்டு, அதிரசம், தோசை, முறுக்கு போன்றவை இருக்கும் வரை இலவசமாகவும் பின்னர் பட்டாசாரியார்கள் குறைந்த விலைக்கும் கொடுத்திருக்காங்க.
நீக்குபொதுவாக தீபாவளி மலர் சிறுகதைகள் யாவும் கேட்டு வாங்கிப் போடும் கதைகள் தான். நாட்கெடு, மற்றும் கற்பனை மழுங்கல் என்பவை இக்கதைகளின் தரத்தை பாதிக்கின்றன. அவ்வகையில் இக்கதை மலர்கதை என்ற சிறப்பு மட்டுமே. .
பதிலளிநீக்குகதை இரண்டு சகோதரிகளைப் பற்றியது. சிகப்பி , கறுப்பி பட்டப்பெயர்கள் மூலம் அவர்களுடைய தோற்றத்தை ஊகிக்க வைக்கிறார் ஆசிரியர். இவ்விருவரும் வளர்ந்த்து பெரியவர்களாகி குடும்பம், குழந்தைகள் என்று வேற்று உலகத்தை படைக்கும்போது ஏற்படும் நடை உடை, பாவனைகள், மற்றும் மனப்பான்மை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் என்று கதை செல்கிறது. ஆனால் கதைக்கு சரியான முடிவில்லை.
ஒரு நாவலுக்கான சப்ஜெக்ட். நாவலைத் துவங்கி சிறுகதையாக முடித்து விட்டார் ஆசிரியர்.
Jayakumar
நான் படிச்ச கதை தயாரித்து சுருக் விமர்சனத்தில் தேர்ச்சி பெட்ரா JKC ஸாருக்கு நல்வரவு. நீங்கள் சொல்வது அரி என்றாலும் நாவலாக ஆரம்பித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
நீக்குகதைக்கான முடிவில்லை என்று நீங்கள் சொல்லும் கருத்து என்னைப் பொறுத்தமட்டில் ஏற்புடையது அல்ல என்பதைத் தெரிவித்துக்கொண்டு....! :)
ஜெஸி ஸார்! உங்கள் சனிக்கிழமை கதை பகிர்தலுக்கும் இந்த மாதிரி கதைகளுக்கும் எழுத்தில் வடிப்பதில் கதை அம்சத்தில் எவ்வளவு அதல பாதாள வித்தியாசம், கவனித்தீர்களா?
நீக்குஜீவி சார், கதை வெளிவந்த காலம், கதை நடக்கும் ஊர், கதை மாந்தர்களின் பழக்க வழக்கங்கள் என்ற பல காரணிகளால் நடை, பேச்சு மொழி ஆகியவை காலத்திற்கேற்ப மாறுபடும். உதாரணமாக இக்கதையே தற்போதைய Z ஜெனெரேஷன் குப்பை என்றே சொல்லக்கூடும்.
நீக்குமிக அருமையான பொருள் பொதிந்த கதை. கதை கூட இல்லை. நிஜ வாழ்வில் நடப்பது தான். ஆனால் இதே கருவை வைத்து ஒரு நாவல் கலைமகளில் நாராயணசாமி ஐயர் முதல் பரிசாக வந்திருக்குனு நினைக்கிறேன். தொடராக வந்திருந்தது நினைவில் இருக்கு.
நீக்குஇல்லை ஜெஸி ஸார்.
நீக்குஅந்நாளைய எழுத்தாளர்கள் கதையை பாத்திரங்களின் உரையாடல் மூ நகர்த்தும் கலை அறிந்தவர்கள்.
இந்நாளைய எழுத்தாளர்களுக்கு அந்த சாமர்த்தியம் கைவரப் பெறாததால் தங்கள் வாய்மொழியிலேயே மொத்தக் கதையையும் சொல்லி விடுகிறார்கள்.
ஒளவையார் மூதுரை கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது.
'கான மயில் நின்றாட' என்று ஆரம்பிக்கும் அந்த கவிதை.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
நீக்குதானும் அதுவாகப் பாவித்துத் தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற்போல்
கல்லாதான் கற்ற கவி.
@JKC Sir,
நீக்குஉண்மையில் கதைக்கு "மனம் என்னும் ரசாயனம்"
தலைப்பு மிகப்பொருத்தமே! உளவியல் ரீதியாகவே தன் கணவனை அணுகும் நேர்முறையான எண்ணங்கள் கொண்டகுந்தளாவும், அழகாக இருப்பது மட்டுமே தன் வாழ்க்கையையும் அழகாக மாற்றி விடும் என்னும் எண்ணத்தில் இருந்து தோல்வி அடைந்த மஞ்சுளாவும் சரியான கோணத்திலே சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கவிதையில் எழுத்துக்கள் என்பதற்கு பதிலாக வார்த்தைகள் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குJayakumar
ஆமாம். ஒத்துக் கொள்கிறேன்.
நீக்குகதா நாயகிகளில் ஒருத்தர் அழகி. இன்னொருத்தர் கறுப்பு. அழகில்லை. ஆனால் வாழ்க்கையில் ஜெயித்தவள் அவள் தான். அழகான பெண்ணிற்குச் சிறு வயது முதலே பாராட்டுகளும், மதிப்பும் கொடுத்துப் பழக்கிய பெற்றோர்கள் வாழ்க்கையைத் தொடங்கும் முன்னர் கொடுக்க வேண்டிய அறிவுரையைக் கொடுக்க மறந்து விட்டார்கள். தன் அழகிலேயே மிதப்பாக இருந்த பெண் அதை ஆராதிக்கும் கணவன் கிடைத்தும் அவனுடன் மனமார வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இது தன்னுடைய கர்வத்தினால் விளைந்த விளைவு என்பதை உணராமலேயே வாழ்ந்து வருகிறாள் என்பது அவளுடைய ஒரே குழந்தையின் மூலம் தெரிய வருகிறது. இப்படியும் நடக்குமா என்றால் நடக்கும். நடக்கிறது. நடந்துள்ளது. எங்க புக்ககத்திலேயே பார்த்தேன்.
பதிலளிநீக்குகணவன் நல்லதொரு வேலையில் இருப்பதால் அந்தக் காலத்தில் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் அந்தப் பெண்ணிற்கோ அவள் ஆசைப்பட்டது உறவில் ஒரு பிள்ளை. அவங்க குடும்பம் பெரிய குடும்பம் என்பதோடு அந்த ஒரு பிள்ளையின் வருமானத்தில் தான் மொத்தக்குடும்பமும் வாழணும் என்பதோடு திருமணம் ஆகாத தங்கைகள், படிக்க ஆரம்பித்திருக்கும் தம்பிகள். தங்கள் பெண் நன்றாக வசதி, வாய்ப்புடன் உள்ள பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ளணும் என்பதால் பெற்றோர் நல்ல வேலையில் இருக்கும் பிள்ளையைக்கல்யாணம் செய்து வைத்தார்கள் ஆனால் எனக்கு முன்னரே கல்யாணம் ஆகி இருந்த அந்தப் பெண் கணவனோடு நெருங்கிப் பழகிக் குழந்தையெல்லாம் பெற்றுக்கொள்ளவே இல்லை. எத்தனையோ ஜோசியம், பரிகாரமெல்லாம் பண்ணியும் குழந்தை பிறக்காமல் போகவே கடைசியாக மருத்துவப் பரிசோதனை செய்துடலாம்னு பார்த்தப்போ தான் உண்மை புரிந்தது. பின்னர் பெற்றோரே அந்தப் பெண்ணைக் கண்டித்துப் பின் திருமணம் ஆகிப் பத்து வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு ஒரு பெண்ணும், ஒரு பையரும் பிறந்தார்கள். இப்போ அனைவரும் திருமணம் ஆகிப் பிள்ளை குட்டியோடு இருக்கின்றனர். அந்தப் பெண்ணும் கணவனோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கார்.
பதிலளிநீக்கு"அநுத்தமா" மிகப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவரும் ராஜம் கிருஷ்ணனும் அந்தக் காலத்துக் கலைமகளில் நிறையவே எழுதி இருக்கிறார்கள். என் அம்மாவால் அறிமுகம் ஆன எழுத்தாளர்களில் அநுத்தமாவும் ஒருவர். இவருக்கு இவர் மாமனாரே சம்ஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுத்திருக்கார் என்பார். அதோடு கூடக் கதை எழுதினால் அதைப் படித்துப் பார்த்துத் திருத்தங்களும் சொல்லுவாராம். கணவரும் இவருடைய எழுத்துப் பணிக்கு ஊறு விளைவிக்காமல் மனைவிக்குப் பல உதவிகள் செய்திருக்கார் என்பார்கள். இவர் ஓர் பன்மொழிச் சிறப்பு வாய்ந்தவர். இவர் கதை/நாவல் எங்கே/எப்படிக் கிடைச்சாலும் மறுபடி மறுபடி தேடிப் பிடிச்சுப் படிச்சுடுவேன். "நைந்த உள்ளம்" நாவலும் "கேட்ட வரம்" நாவலும் எத்தனை முறை படிச்சிருப்பேன்னு தெரியாது. இரண்டுமே தாத்தா வீட்டுக்குப் போனப்போ ஒரே நாளில் படிச்சது. :))))
பதிலளிநீக்கு"Ovomalt" Ovaltine, also known by its original name Ovomaltine, is a brand of milk flavouring product made with malt extract, sugar (except in Switzerland), and whey. Some flavours also have cocoa.
பதிலளிநீக்குThanks to Wiki.
டால்ப், லபோனியெல்லாம் கேள்விப்படாத பெயர்கள். மற்ற விளம்பரங்கள் ஓகே. ஸ்ரீராமின் கவிதை விளம்பரத்தைப் படிக்க முயன்றேன். முடியலை. பெரிசாப் பண்ணிப் பார்க்க முயன்றால் சரியா வருவதில்லை சில சமயங்கள். என்றாலும் பார்க்க முயற்சி செய்யறேன்.
பதிலளிநீக்குடால்ப், லபோனியெல்லாம் கேள்விப்படாத பெயர்கள். மற்ற விளம்பரங்கள் ஓகே. ஸ்ரீராமின் கவிதை விளம்பரத்தைப் படிக்க முயன்றேன். முடியலை. பெரிசாப் பண்ணிப் பார்க்க முயன்றால் சரியா வருவதில்லை சில சமயங்கள். என்றாலும் பார்க்க முயற்சி செய்யறேன்.
பதிலளிநீக்கு"அநுத்தமா" போன்ற எழுத்தாளர்களெல்லாம் அந்தக் காலத்துச் சூழ்நிலை, குடும்ப விவகாரங்கள், ஆண்கள் மனப்போக்கு ஆகியவற்றை ஒட்டியே எழுதுவார். உண்மையில் தெலுங்கில் படித்து வந்த இவர் தமிழைத் தானாகவே கற்றுக் கொண்டு இவ்வளவு தூரம் பிரபலம் அடைந்திருக்கார். வெறும் ஆரம்பக் கல்வி மட்டும் பெற்ற இவரின் விசால அறிவு, தேடித் தேடி ஞானத்தை/அறிவை வளர்த்துக் கொண்ட விதம் எல்லாமும் பாராட்டுக்குரியவை. திருமணம் ஆன பின்னரே கணவரின் வழிகாட்டுதலின் பேரில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி அப்போதைய சென்னை மாகாணத்திலேயே முதல்வராக வந்திருக்கார். இந்தக் கால எழுத்துக்களோடும், அல்லது பெண் எழுத்தாளர்களோடும் ஒப்பிடமுடியாதவர்.
பதிலளிநீக்குஒரு விஷயம் சொல்லணும். சிவப்பாகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் தன்னடக்கத்துடனும் இருந்த சில பெண்கள் அந்தக் காரணத்தாலேயே மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்/பட்டிருக்கிறார்கள்/படுகிறார்கள் என்பதும் நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை.
பதிலளிநீக்குஎழுத்துக்கள் பறப்பதைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கீங்கனு புரிஞ்சாலும் முழுதும் படிக்க முடியலை. அது சரி, கடைசியில் சொல்லி இருக்கீங்களே, *இருக்கிறது! என்ன பாடல் தெரியுமோ?!! இதுக்கு என்ன அர்த்தம்???????????
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//மன பேதங்கள், நிற பேதங்கள், கொள்கை வேறுபாடுகள் அபிப்பிராய மாறுதல்கள், இன வித்தியாசங்கள். இவைகளின் கலவைதானே உலகம்!//
கதைக்கு முன்னோட்டம் போல மாமா சொல்லி விட்டார்.
சகோதரிகளிடம் நிற பேதங்கள் சிறு வயது முதலே அவர்களை கவனித்து வந்த பக்கத்து மாமா , மாமியை வைத்தே கதையை கொண்டு செல்கிறார்.
குந்தாளா தன்னை தன் கணவன் கவனிக்கவில்லையே என்று துவண்டு போகாமல் தன்னம்பிக்கை மற்றும் தன் நடை, உடை பாவனைகளை உயர்த்தி கொண்டு மற்றவர்கள் பாராட்ட படும் தோற்றத்தை, கம்பீரத்தை
உருவாக்கி கொண்டார் தன் கணவரின் அன்பையும் பெற்று விட்டார்.
மஞ்சுளா எவ்வளவு வசதிகள் இருந்தும் மனக்குறையோடு இருப்பதால் பொலிவிழந்து காணப்படுகிறார் என்கிறார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவரின் மனக்குறை
அவர் அழகை குறைத்து இருக்கிறது.
மனம் எனும் ராசயனம் கதை தலைப்பு பொருத்தம் .
வீட்டிலேயே இரு குழந்தைகளுக்கு இடையே சிவப்பு கறுப்பு என்று பேதம் காட்டினால், வெளியில் மக்கள் சொல்லமாட்டார்களா?
அது போல ஒரு குழந்தை புத்திசாலி, ஒரு குழந்தை அறிவு திறம் குறைச்சல் என்று குத்தி காட்டுவது தவறு. தாழ்வு மனபான்மை வந்து விடும்