ராஜேந்திர சோழனை வளர்த்தவர்கள் அத்தை குந்தவை நாச்சியார். அவர் தவிர செம்பியன் மாதேவியும் அப்போது பழையாறை அரண்மனையில் இருந்தார். ராஜேந்திர சோழனின் குழந்தைப் பருவம் பழையாறையில்தான்.
இராஜேந்திர சோழனுக்கு ‘பண்டித சோழன்’ என்ற பெயர் கல்வெட்டுகளில் காணப்படுவதால், அவனுக்கு தமிழ் இலக்கியங்கள், நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்தது, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையும் தமிழ் இலக்கண நூல்களையும் தன் முன்னோர்களைப் பற்றிய வரலாறுகளையும் வாசித்தான் என்று வரலாற்று அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.
இதைப்பற்றி எழுத ஆரம்பித்தபோது எனக்கு சிந்தனை, உலகத்தின் அதிசயங்கள் என்று குறிப்பிடப்படுபவற்றைப் பற்றிச் செல்ல ஆரம்பித்தது. எதை வைத்து உலக அதிசயங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்? புதிய உலக அதிசயங்கள் என்று வரலாற்றாசிரியர்களில் ஒரு சிலர் குறிப்பிடுவது அவர்களைப் பொறுத்தவரை உலக அதிசயங்களாக இருக்கலாம், ஆனால் அவற்றையும் மீறிய மிகப் பெரிய உலக அதிசயங்கள் பாரதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை இந்துமதம் சார்ந்தவை என்பதால் அவர்கள் ஒருசார்பாக அவற்றை உலக அதிசயங்கள் என்று ஒப்புக்கொள்ளவில்லை. (அதற்கு அவர்களது குறைந்த அறிவுத்திறன் காரணமாக இருந்திருக்கலாம். உலகிலேயே பெரிய பூசனி எங்க வீட்டில் விளைந்தது என்று ஒரு கிராமத்தான் சொல்வது போல)
பீசாவின் (பைசாவின்) சாய்ந்த கோபுரம் இத்தாலியில் உள்ளது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கட்டியபோது மென்மையான தரைப்பகுதி காரணமாக கோபுரம் சாய ஆரம்பித்தது. இந்தக் கட்டிடம் 14ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது (கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்லாம்) மொத்த எடை 15,000 டன்கள் இருக்கும் என்று சொல்கின்றனர். கட்டுமானப்பணி முடியும்போது, இதன் சாய்வு 4 டிகிரிக்கும் மேல் அதிகமாகியது. 1990ல் இதன் சாய்வு 5 ½ டிகிரியை எட்டியது. கட்டிடம் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சீரமைப்புப் பணிகள் செய்து, சாய்வை 4 டிகிரிக்கும் குறைவாக ஆக்கினார்கள். இது கத்தோலிக்க தேவாலயத்துடன் கூடிய பகுதி.
தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி நான் அதிகமாக எழுத வேண்டியதில்லை. 66 மீட்டருக்கும் அதிகமான உயரம். உச்சியில் 80 டன் எடையுள்ள கற்களின் தொகுதி. எந்த சிமிண்டையும் உபயோகப்படுத்தாமல் கற்களின் மீது கற்கள் என்று அழுந்தி நிற்கும் வகையில் கட்டப்பட்டது. பாறைகளே இல்லாத பகுதியில் அஸ்திவாரம் மிகக் குறைவான உயரத்தில் முழுதும் கற்களாலே ஆன பெரிய கோபுரம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். கட்டிய வருடம் 10ம் நூற்றாண்டு. ஆனால் இது உலக அதிசயம் அல்ல. காரணம் இது பாரதத்தின், தமிழகத்தின் கட்டுமானம்.
தஞ்சை பெரிய கோயிலை நான் 2024ல் எடுத்த புகைப்படம் இது.
உலக
அதிசயங்களில் 15ம் நூற்றாண்டின்
மச்சுபிச்சு,
17ம்
நூற்றாண்டின் தாஜ்மஹல், 20ம் நூற்றாண்டின் மீட்பர்
கிறிஸ்துவின் சிலை என்று பலவற்றையும் சேர்த்திருக்கிறார்கள் இந்த புண்ணியவான்கள். எதனால் இவை சிறப்புற்றவை என்று
அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. நான் 20ம் நூற்றாண்டில்
பிரேசிலில் கட்டப்பட்ட மீட்பர் கிறிஸ்துவின் சிலையை எடுத்துக்கொள்கிறேன்.
எட்டடி உயர மேடை தவிர 30 மீட்டர் உயரமுள்ள சிலை இது. கான்க்ரீட் மற்றும் Soap Stone என்று சொல்லப்படும் மாக்கல்லினால் ஆனது. கிட்டத்தட்ட 700 டன் எடையுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கொண்டது. 40 மீட்டர் உயரம். (பாறையின் உயரம் கணக்கில் கொள்ளப்படவில்லை)
8ம் நூற்றாண்டிலிருந்து 10ம் நூற்றாண்டுக்குள் முடிவடைந்த எல்லோரா குகைக் கோயில்கள், பாறையைச் செதுக்கி உருவானது. நீங்கள் நினைப்பதுபோல கல்லைச் செதுக்கவில்லை. மலையின் உச்சியிலிருந்து செதுக்க ஆரம்பித்துக் கட்டப்பட்ட கோயில் இது. நினைத்தே பார்க்க முடியாத திறமையில் விளைந்தது. எந்த புதுயுக மெஷினரிகளை உபயோகித்துக் கட்டப்பட்டதல்ல.
இங்கு இருக்கும் கைலாசநாதர் கோயில், ஒரே குன்றினை மேலிருந்து கீழாகச் செதுக்கி உருவாக்கியது. ராஷ்டிரகூட அரசர் முதலாம் கிருஷ்ணர் காலத்தில் (750-780) உருவாக்கப்பட்டது இந்தக் கோயில். இதில் சுமார், 200,000 டன் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டுள்ளார்கள். கோயிலின் புகைப்படத்தைக் கொடுத்துள்ளேன். எப்படி இதனை உருவாக்கியிருக்க இயலும் என்று யோசியுங்கள். இந்து கலாச்சாரம், பாரதீய கலாச்சாரம் என்பதனால் இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
அதனால் ‘உலக அதிசயங்கள்’ என்று சொல்லப்படுபவை, சிலரால், அவர்கள் பயணப்பட்ட இடங்களில் பார்த்தவைகளை வைத்துச் சொல்லப்படுபவையே தவிர அவற்றிர்க்கு எந்த வித அறிவியல் காரணங்கள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். இன்னொரு காரணம், அந்த அந்த நாடுகள் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட தந்திரமாகவும் இருக்கும். இல்லை, எப்போதும்போல அந்த அந்த நாடுகள் கொடுத்த காசு காரணமாகவும் இருக்கலாம்.
சரி… இராஜேந்திர சோழனைப் பற்றி எழுதுகிறேன் என்று ஆரம்பித்து உலக அதிசயங்கள் என்ற பாலிடிக்ஸுக்குள் நுழைந்துவிட்டேனே.
கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் சிற்பங்களிலேயே இது மிகவும் புகழ் பெற்றது. மிகவும் அழகான சிற்பம் இது. பலரும் இதனை, ராஜேந்திரசோழன் தன் மகன் இராஜேந்திரனுக்கு முடி சூட்டும் சிற்பம் இது என்று எழுதுகிறார்கள். ஆனால் இதனை சண்டீசப் பதம் என்பர்.
சண்டீசர் என்ற சிறுவன் மாடுகளை மேய்க்கும் தொழிலைச் செய்தவர். மாடுகள் மேய்ந்துகொண்டிருக்கும்போது, மணலால் சிவலிங்கம் செய்து வழிபடுவர். மாடுகளும் அந்த லிங்கத்தின் மீது பால் சொறியும். மாடுகள் சரியாக பால் கறப்பதில்லை என்று சந்தேகப்பட்டு தொடர்ந்து வந்து பார்த்த சண்டீசரின் தந்தை, இதனைக் கண்டு கோபம் கொண்டு, தன் காலால் மணல் லிங்கத்தை எட்டி உதைத்தார். சிவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக கோபம் கொண்ட சண்டீசர், கோபத்தில் தந்தையின் கால்களையே வெட்டிவிட்டார். சண்டீசரின் பக்தியை மெச்சும் விதமாக சிவபெருமான் உமையவளுடன் அவர் முன்பு தோன்றி, தான் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து சண்டீசரின் தலையில் சூடினார். தன்னுடைய கோயில்கள் அனைத்துக்கும் சண்டீசரையே அதிகாரியாக நியமித்தான். அந்தப் பதவியே சண்டீசப் பதம் என்று சொல்லப்படுவது.
அதனையே இந்தச் சிற்பத்தில் நாம் காணலாம். கொள்ளையழகுடைய சிற்பம் இது.
இதனை எழுதும்போது, சம்பந்தமில்லாமல் இன்னொன்றையும் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. நடிகர் சந்தானம், நேர்ல முகத்தைப் பார்த்தால் நன்றாக இருப்பார். ஆனால் சைடில் அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தால் அழகாக அமைந்திராது. முகமே சப்பையாகத் தோன்றும். அதுபோலவே இந்த சண்டீசப் பதம் சிற்பத்தில் சிவபெருமானது முக அழகு, சைடிலிருந்து பார்த்தால் நன்றாக அமைந்திருக்காது.
பாண்டியனின் மீன் சின்னம் தெரிகிறதா? பாண்டிய மன்னர்கள் முன்பு சோழப் பேரரசர்களால் பெற்ற பெரும் தோல்விகளையும் தங்கள் முன்னோர்கள் அடைந்த கஷ்டங்களையும் மனதில் கொண்டு 13ம் நூற்றாண்டில் பாண்டியமன்ன ன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழனின் அரண்மனையை முற்றிலும் அழித்து அந்த நிலத்தில் கழுதையைக் கொண்டு உழுது, வெண்கடுகை விளைத்தான் என்று சொல்வர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், கோயிலை ஒன்றும் செய்யவில்லை. இருந்தாலும் தன் வருகையைத் தெரியப்படுத்த மீன் சின்னம் பொறிக்கச் செய்திருப்பானோ?
மஹாலக்ஷ்மியும் ஞானக் கோலத்தில் இருக்கிறார்.
முதல் படத்தில் மஹாலக்ஷ்மி சிற்பத்திற்கு மேலே சிவலிங்கத்தைத் தொழும் ஒருவர் கண்ணிற்குத் தெரிகிறதா? இதைத்தான் ராஜேந்திர சோழனின் உருவம் என்கிறார்கள். அவன் ‘சிவ சரண சேகரனாக’ கடைசி காலத்தில் ஆனான் என்றும் அவனுடைய ஆபரணங்கள், மணி முடிகள் இல்லாமல் சிவனைத் தொழும் நிலையில் உள்ள அவனது சிற்பம் என்கிறார்கள். (எப்படித்தான் இந்த மாதிரி கண்டுபிடித்துச் சொல்கிறார்களோ தெரியவில்லை).
ராஜேந்திர சோழன் தெரிகிறாரா?
தஞ்சை பெரியகோயிலில் இந்த வாசல் வழியாகத்தான் (அதாவது மூலவருக்கு இடது புறம் அமைந்திருக்கும் வாசல், நாம் மூலவரைப் பார்த்தால், வலதுபுற வாசல்). அதுபோல கங்கைகொண்ட சோழீச்வரத்திலும் இருந்திருக்கலாம் என்று எண்ணி, அந்த இடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை கோயிலின் இட துபுறத்தில் (நாம் மூலவரைப் பார்க்கும்போது) அமைந்திருந்தது என்பதால், அந்த வாசலில் ஏதேனு மங்கலச் சின்னங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க விட்டுப்போய்விட்டது. அரசர் நுழைவு வாயில் என்றால் மங்கலச் சின்னங்களுடன் அமைந்திருப்பது இயற்கை.
இன்றைய பகுதியை விநாயகர்
தரிசனத்துடன் முடித்துக்கொள்வோம். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
(தொடரும்)
/அவன் ‘சிவ சரண சேகரனாக’ கடைசி காலத்தில் ஆனான் என்றும் அவனுடைய ஆபரணங்கள், மணி முடிகள் இல்லாமல் சிவனைத் தொழும் நிலையில் உள்ள அவனது சிற்பம் என்கிறார்கள்(எப்படித்தான் இந்த மாதிரி கண்டுபிடித்துச் சொல்கிறார்களோ தெரியவில்லை). /
பதிலளிநீக்குஅதானே! எனக்கு மஹாலக்ஷ்மி சிற்பத்தையே எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. அவர் கையில் என்ன வைத்திருக்கின்றார் என்பதில் எதோ க்ளூ இருக்கின்றதோ?
வாங்க சூர்யா சார். தஞ்சை பெரியகோயிலில் உட்புறத்தில் இருக்கும் ஓவியத்தில் இருப்பது ராஜராஜசோழன் மற்றும் கருவூரார் என சில வருடங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மகாலக்ஷ்மி சிற்பத்தின் மேல், சம்பந்தமில்லாமல் ஏன் இப்படிச் செதுக்கியிருக்க வேண்டும், ராஜேந்திரனின் பட்டப் பெயர், இதனைக்கொண்டு அனுமானித்திருப்பர்.
நீக்கு/அதனால் ‘உலக அதிசயங்கள்’ என்று சொல்லப்படுபவை, சிலரால், அவர்கள் பயணப்பட்ட இடங்களில் பார்த்தவைகளை வைத்துச் சொல்லப்படுபவையே தவிர அவற்றிர்க்கு எந்த வித அறிவியல் காரணங்கள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்/
பதிலளிநீக்குஆமென்! 100 சதவிகிதம் தங்களுடன் ஒத்துப் போகின்றேன். பிரேஸில் ஏசுநாதர் சிலை இந்த லிஸ்டில் இருக்கின்றது என்பதே எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.
உலக அதிசயங்கள்னு என்னென்னவோ கம்பி கட்டும் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.
நீக்குசண்டீசப் பதம் சிற்பங்கள் உண்மையாகவே கொள்ளை அழகு!
பதிலளிநீக்கு/நடிகர் சந்தானம், நேர்ல முகத்தைப் பார்த்தால் நன்றாக இருப்பார். ஆனால் சைடில் அவரது முகத்தைக் கூர்ந்து கவனித்தால் அழகாக அமைந்திராது. முகமே சப்பையாகத் தோன்றும். அதுபோலவே இந்த சண்டீசப் பதம் சிற்பத்தில் சிவபெருமானது முக அழகு, சைடிலிருந்து பார்த்தால் நன்றாக அமைந்திருக்காது./
?????? 😃
அந்தச் சிற்பத்தை நான் பலமுறை பார்த்ததினால் அப்படி எழுதியிருக்கிறேன். உண்மையா என்றறிய நான் இரண்டையும் அந்தக் கோணத்தில் பகிர்ந்திருக்கலாமோ?
நீக்கு/தன்னுடைய கோயில்கள் அனைத்துக்கும் சண்டீசரையே அதிகாரியாக நியமித்தான்/
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் விசாரசர்மா என்ற அடியாரைத்தான் சிவபெருமான் சண்டிகேஸ்வரராக அதிகாரப் பதவியில் (Internal auditor / Custodian என்றும் கொள்ளலாம்) நியமித்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர் சன்னிதியில் சொடக்குப் போடுவது அல்லது ஆடையிலிருந்து ஒரு நூலைப் பிய்த்துப் போடுவது என்று ஒரு வழக்கம் உண்டு. "நான் கோவிலுக்கு வந்துள்ளேன், கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள்" என்று அதிகாரியிடம் சொல்வது போல் ஒரு பாவம்....இப்படியெல்லாம் டீப் மெடிட்டேஷனில் இருக்கும் சண்டிகேஸ்வரரை டிஸ்டர்ப் செய்வது போல் செய்வது பாவம் என்று சொல்வோரும் உண்டு.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ப்ரும்மாவிற்குத்தான் "சண்டிகேஸ்வரப் பதவி" என்று சொல்வார்கள். அதனாலேயே சிதம்பரத்தில் மட்டும் இப்படி சண்டிகேஸ்வரர் சன்னிதியில் கை தட்டுவது/சொடக்குப் போடுவது கூடாது என்று சொல்லப் படுவது உண்டு.
ஓ.. இந்தச் செய்தி புதிது. இருந்தாலும் கோயிலில் அந்தப் பகுதியில் கை தட்டுவதைக் கண்டிருக்கிறேன்.
நீக்குசண்டிகேஸ்வரரை கோவில் காவல் பொறுப்பாளராக கருதியதால், முன் காலத்தில் இரவில் கர்ப்பகிரகத்தை பூட்டி, அந்த சாவியை சண்டிகேஸ்வரர் சன்னதியில்தான் வைத்து விட்டு போவார்களாம். சிவன் சொத்து குல நாசம் என்று கருதியதால், "நான் கோவிலிலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை, வெறும் கையோடுதான் செல்கிறேன்" என்று அறிவிக்கும் விதமாகத்தான் கையை தட்ட வேண்டும் என்பர்கள். அதைப் போல மறுநாள் விளக்கேற்றத் தேவையான திரி, எண்ணெய் இவைகளையும் சண்டிகேஸ்வரர் சன்னதியில் வைத்துவிட்டு செல்வது அந்தக் கால பழக்கமாம். கோவிலுக்கு திரி கொடுக்க விரும்கிறவர்கள் சண்டிகேஸ்வரர் சன்னதியில்தான் திரிகளை வைத்துவிட்டு செல்வார்களாம். அப்படி வந்துதான் நூல் போடும் பழக்கம் என்று சுதா சேஷய்யன் உரையில் கேட்டிருக்கிறேன்.
நீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். விரிவான விளக்கத்திற்கு நன்றி.
நீக்குவிநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிப்போம்.. இங்கு வித்யாசமாக...! நீங்கள் சண்டீச பதம் சிற்பம் உண்மையிலேயே மிக அழகு. உங்கள் விளக்கம் படிக்கும் முன்னரே படம் கண்ணைக்கட்டி நிறுத்தியது.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். இந்தச் சிற்பம் அந்தக் கோயிலிலேயே மிகவும் புகழ் பெற்றது.
நீக்குவரலாற்றைத்தான் திரித்து எழுதினார்கள் என்றால் உலக அதிசயங்களையுமா? என்ன அநியாயம்? நமமவர்களுக்கு விளம்பரம் செய்துகொள்ள தெரியவில்லை.
பதிலளிநீக்குமேற்கத்தைய நாடுகள் செய்யும் பலவும், அறிவிக்கும் பரிசுகளும் உள்நோக்கம் கொண்டவை என்பது என் கருத்து. கோவிட் சமயத்தில் பாரதம் பல நாடுகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்தது. மேற்கத்தைய நாடுகள் அந்தச் சந்தர்ப்பத்தை வியாபாரமாக்க் கருதின.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா.
நீக்குசிறப்பான பதிவு...
பதிலளிநீக்குஅழகான படங்கள்...
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி.
நீக்குசண்டீசப் பத சிற்பம்
பதிலளிநீக்குவேறெங்கும் காணக் கிடைக்காதது..
கொள்ளை அழகு!
மிக மிக அழகான சிற்பம் இது. இதனை, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டும் சிற்பம் எனச் சில காலம் சொன்னார்கள்.
நீக்குஎழுதும் விஷயத்தை குறிப்புகள் மூலம் நடத்திச் செல்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கோர்வையாக அமைத்துக் கொண்டீர்களென்றால் எழுதுதலில் அடிக்கடி ஏற்படும் விலகலைத் தவிர்க்கலாம், நெல்லை.
பதிலளிநீக்குஇது பதிவு என்பதால் வாசிப்பவர் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் இணங்கி
இந்த வாரன் இது, அடுத்த வாரம் இன்னொன்று என்று வாசித்து தமாஷாக
ஏதோ ஒன்றைச் சொன்னோம் என்று போய் விடுவார்கள். ஆனால் உங்கள் உழைப்புல்கேற்ற பலன் பெரிய அளவில் சுருங்கிப் போகும் ஆபத்து இதில் இருக்கிறது. அதலால் எழுதும் பொருளிலிருந்து விலகாமல் குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு வருகிற மாதிரி டிராப்ட்டாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் இதுதி வடிவம் கொடுப்பதற்குள் அதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தலைச் செய்து முழு திருப்தி உங்களுக்கு ஏற்படுகிற மாதிரி அமைத்துக் கொண்டு பிறகு வெளியிடுங்கள்.
இப்படியான ஒரு தயாரிப்புக்குள் எழுதும் விஷயம் அடங்கி விட்டால் பின்னால்
கம்ப்பைல் பண்ணும் பொழுது புத்தக வடிவம் கிடைத்து முழுமை பெற்று விடும்.
இந்த முழுமை தான் எழுதும் எந்த விஷயமும் ஏங்கி தவங்கிடக்கிறது.
வாங்க ஜீவி சார். உங்கள் அனுபவ ஆலோசனைகள் இளம் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இப்படி ஒரு ஒழுங்குமுறையை அமைத்துக்கொண்டுதான் நாவலாசிரியர்கள் தொடர்கதை எழுத இயலும் என்பதையே சமீப காலமாகத்தான் புரிந்துகொண்டேன்.
நீக்குசிலர் சொல்வாங்க, தொடர்ந்து ஏழெட்டு மணி நேரம் உட்கார்ந்து எழுதினேன் என்று. நாட்கள் இடைவெளிகளில் எழுதும்கோது கோர்வையாக எழுத முடியாத்தையும், எழுத நினைத்தவைகளில் சிலவற்றை மறந்துவிடுவதையும், தொடர்ச்சி குறைவதையும், முன்பு எழுதினதை திரும்பவும் எழுதுவதையும் கவனித்திருக்கிறேன்.
எழுத்து என்பது சுலபமல்ல. அதற்கு கடுமையான உழைப்பும், படிப்பும், ஆர்வமும் தேவை என்பதை உணருகிறேன்.சில நாட்கள் ஒன்றுமேழுத்த் தோன்றாத்தையும், சில நாட்கள் வெகுநேரம் உட்கார்ந்து ஒரு பகுதியையே எழுதி முடிப்பதையும் கண்டிருக்கிறேன்.
எவ்வளவு தூரம் உங்கள் அறிவுரைகளைப் பின்பற்ற முடியும் என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனை பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
தஞ்சை ராஜ ராஜ சோழன் கருவூரார் ஓவியங்கள்
பதிலளிநீக்குபற்றிய மர்மம் இன்னும் விலக வில்லை...
சனகாதி முனிவர்கள் என்றும் சுந்தரர் முதியவர் என்றும்
ஆய்வுகள் சொல்கின்றனவாம்....
நல்லவேளை....
வேறெதையும் சொல்லி வைக்கவில்லை
சனகாதி முனிவர்கள் என்றே சொல்கின்றனர். இருந்தாலும் அது ராஜராஜனாக இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன். படைப்பாளிகள் தங்கள் அன்புக்குரியவர்களை படைப்பில் கதாபாத்திரமாக்க் கொண்டுவருவதுபோல, ஓவியர்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமான பெண்களை கதைக்கு வரைவது போல, சிற்பிகள் செய்திருக்க மாட்டார்களா? ராஜராஜன் எந்தச் சிற்பத்தில் ஓவியத்தில் இருக்கிறானோ.
நீக்குஇந்த முழுமைக்குத் தான் எழுதும் எந்த விஷயமும் ஏங்கி தவங்கிடக்கிறது. -- என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம். திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பின்ணனியில் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு சரி. உள்ளே செல்லவில்லை. எப்பொது அந்த பாக்கியம் வாய்க்குமோ தெரியவில்லை.
பதிலளிநீக்குகோவில் புகைப்படங்கள் தெளிவு.
சண்டிபாவம் சிவன், சந்தானம்..What a comparison!
சண்டிபாவம் - சண்டிபதம்
நீக்குபிச்சாடனர் சிற்பமும், மஹாலட்சுமி சிற்பமும் அழகு. மஹாலட்சுமி சிற்பத்திற்கு அருகில் இருக்கும் சிற்பங்களை சூம் செய்து எடுத்திருக்கலாம். சரியாக விளங்கவில்லை.
பதிலளிநீக்கு//அவனுக்கு தமிழ் இலக்கியங்கள், நூல்களில் நல்ல பரிச்சயம் இருந்தது, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையும் தமிழ் இலக்கண நூல்களையும் தன் முன்னோர்களைப் பற்றிய வரலாறுகளையும் வாசித்தான் என்று வரலாற்று அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.// அப்படியா? பதினாறு வயதிலிருந்தே போர்களுக்குச் செல்லத் தொடங்கி விட்டவன், கடல் கடந்து தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவனுக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குராஜேந்திர சோழன் வரலாறு பற்றி சொல்லும் போது உங்களுக்கு உலக அதிசயங்கள் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி. காலத்தை கடந்து நிற்கும் நம் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிட கலையும் , சில வருடங்களே ஆன வெளி நாட்டு புராதான சின்னங்கள் ஒப்புமை நன்று.
பதிலளிநீக்குநம் நாட்டில் பல அற்புதமான கோயில்கள், , மேலை நாட்டு அதிசயங்கள் படங்கள் அருமை.
கைலாசநாதர் கோயில் மலையை குடைந்து அதில் கட்டப்பட்டது போல கழுகு மலை வெட்டுவான் கோயிலும் (குடைவரைக் கோயில்) இருக்கும்.
முன்பு இந்த கோயில் பதிவு போட்டு இருக்கிறேன்