வாழைப்பூ நறுக்குவது என்பது கொஞ்சம் லொள்ளு பிடித்த வேலை. கொஞ்சம் பொறுமை வேண்டும். கொஞ்சம் திறமை வேண்டும்!
யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பான ஓரிடத்திற்கு அரசியைக் கொண்டு போய்த் தக்க வசதிகளுடன் வைப்பதென்று தீர்மானித்தார்கள். நல்ல வேளையாக இந்தக் காரியத்தில் அவர்களுக்குப் பெருந்துணையாக ஒருவர் வாய்த்திருந்தார். இரும்பிடர்த் தலையார் என்பவரே அவர். அவர் பெரும் புலவர்; மதுரைச் சங்கத்துப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். இது மட்டும் அன்று; அரசியின் சகோதரர் அவர். அவருடைய பாது காப்பில் அரசியை விடுவதில் யாருக்குத்தான் தடை இருக்கும்?
பல காலம் வள வாழ்வில் தான் வாழ்ந்து வந்த அரண்மனையை விட்டுச் சென்றாள் அரசி. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பிரிந்த காட்சி சான்றோர்களின் உள்ளத்தை உருக்கியது. "வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் தாங்கியிருக்கும் மாணிக்கம் தக்க காவலில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால்தான் உங்களை அனுப்புகிறோம். திருடர்கள் வந்துசாரும் இடத்தில் வைர மணிப் பெட்டகத்தை வைக்கலாமா? உங்களுக்குத் திருமகன் பிறந்துவிட்டால் மீண்டும் இந்த அரண்மனை வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும்" என்று அரசிக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ நம்பிக்கை இருந்தது. தனக்கு மகன்தான் பிறப்பான் என்ற உறுதி இருந்தது. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தால்-? அதை நினைக்கும்போதே அவள் உடம்பு நடுங்கியது. அவள் வாழ்ந்த வாழ்வென்ன! அரசன் உயிரோடிருந்தால் அவள் இருக்கும் நிலை என்ன! எல்லாம் கனவாகத் தோன்றின.
'இளஞ்சேட்சென்னி இருந்து பார்த்து முறைப்படி குழந்தையைச் சீராட்டக் கொடுத்து வைக்கவில்லையே!" என்ற துயரம் அவர்களுக்கு இப்போது உண்டாயிற்று. ஆண்குழந்தை பிறந்த செய்தி அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் வேறு வகையில் அவர்களுடைய உள்ளம் மறுகியது. குழந்தை பிறந்ததை உலகத்தார் அறியத் தெரிவிப்பது உசிதமன்று என்று தீர்மானித்தனர். சோழநாட்டில் உள்ள சில வேளிர் கலகம் செய்யக் கிளம்பியிருந்தனர்.
குழந்தை பிறந்த செய்தி அவர்களுக்குத் தெரிந்தால் ஏதேனும் செய்துவிடக் கூடும். அரண்மனைக்குக் குழந்தையைக் கொணர்ந்து வளர்த்தால் தக்க பாதுகாப்பு வேண்டும். அதற்குரிய படைப்பலம் இல்லை. ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ஒருவரும் அறியாமல் குழந்தை வளர்வதே நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இரும் பிடர்த்தலையாரும் அந்த முடிவுக்கு உடன் பட்டார். குழந்தையைக் காக்கும் பொறுப்பு அவரிடமிருந்து அகலவில்லை. இன்ன இடத்தில் குழந்தை வளர்கிறது என்ற செய்தி மிகவும் இரகசியமாகவே இருந்தது.
நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.
சகலகலாவல்லி
பானுமதி அம்மா வாரந்தோறும் திங்கட்கிழமையன்று சோமவார மவுனவிரதம். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் மவுனம் அனுஷ்டிப்பார். எவரோடும் எதுவும் பேசாமல், கையில் துண்டுக் காகிதங்களை வைத்துக்கொண்டு எழுதி எழுதிக் காட்டுவார்.
சாஸ்திர சம்பிரதாயங்களுடன் கைரேகை, ஜோதிடம் முதலிய கலைகளைக் கற்று ‘சகலகலாவல்லி’யாகத் திகழ்ந்தவர் அவர்.
பானுமதி பரிமாறிய ‘பெஸரட்’
நளதமயந்தி டப்பிங் தொடங்கிய அடுத்த நாள் காலை 9 மணி. நான் பானுமதி அம்மாவுக்காக காத்திருந்தேன். மற்ற குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் தொடங்க இருந்த நேரத்தில், பக்கத்தில் ஸ்டூடியோவிற்குள்ளேயே இருந்த பானுமதியம்மாவின் பங்களாவில் இருந்து ஒரு பையன் என்னிடம் ஓடிவந்தான்.
‘இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா இங்கே வர்றாங்க. ஒங்களை டிபன் சாப்பிட வேண்டான்னு சொல்லச் சொன்னாங்க’ என்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மஞ்சள் நிற அன்னப்பறவை வந்தது.
(அனைத்து அன்னப்பறவைகளும் தூய வெண்ணிறமாகத்தான் இருக்கும். ஆனால், பானுமதி இரண்டாகப் பிளந்த ஈரோடு மஞ்சள் நிற மேனி கொண்டவராதலால் மஞ்சள் அன்னப்பறவை என்றேன்)
ஒயிலாக உள்ளே வந்தவர் மயிலாக இருக்கையில் அமர்ந்தார். கூடவே ஒரு ஹாட்பேக்கும், பிளாஸ்க்கும், தட்டுகளும் கொண்டு வந்த பையன் அவற்றை எதிரில் இருந்த டீப்பாயின் மீது வைத்தான்.
‘நீங்கள் ‘பெஸரட்’ சாப்பிட்டிருக்கீங்களா?’ என்று கேட்டார்.
‘நிறைய சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆந்திரா பச்சைப்பயறு தோசைதானே. கூடவே கோதுமை உப்புமாவும் சைடுக்கு இஞ்சிச் சட்னியும் இருக்கும். அதோட வெள்ளை மெதுவடையும் வைப்பாங்க’.
இதைக்கேட்டு அவர் சிரித்தபடி, ஆச்சரியத்துடன் ‘ரொம்ப கரெக்டா சொல்றீங்களே! எப்படி?’
‘சாவித்திரி வீட்டிலேயும், டைரக்டர் ஜம்பனா வீட்டிலேயும் சாப்பிட்டிருக்கேன்’.
‘சாவித்திரியை உங்களுக்குத் தெரியுமா?’
‘ரொம்ப நல்லாத் தெரியும். சினிமாவுக்கு நான் வந்த நாளில் எனக்கு கிடைச்ச முதல் நடிக நண்பர்கள் ஜெமினிகணேசனும், சாவித்திரியும்தான். அவுங்க சேர்ந்து நடிச்ச சவுபாக்கியவதி படத்துக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும், அஸோஸியேட் டயலாக் ரைட்டராகவும் வேலை செய்தேன்.
ஜெமினியை ‘அண்ணன்னு’ கூப்பிடுவேன். சாவித்திரி என்னைவிட 6 வயசு இளையவர். ஆனாலும் ஒரு அன்புக்காக அண்ணின்னு அழைப்பேன். ரெண்டு பேருமே எங்கிட்டே ரொம்பப் பிரியமா இருப்பாங்க.
இலக்கியத் தெலுங்கைக்கூட நான் நல்லா பாலோ பண்ணுவேன். ஆனா கொஞ்சம் கொஞ்சந்தான் பேசத்தெரியும். அதுக்குக்காரணம் சாவித்திரிதான். அப்பப்போ சின்னச்சின்ன வார்த்தைகள் எனக்குச் சொல்லிக்குடுக்கும்’.
‘இருக்கட்டும். நான் ஒங்களுக்கு கிராமரோட நல்லா தெலுங்கு பேசக் கத்துக்குடுக்குறேன்’.
‘ரொம்ப நன்றி. பெற்ற மொழி தமிழ்! கற்ற மொழி ஆங்கிலம். அதுக்கு அடுத்தபடியா தெலுங்கு மொழி எனக்குப் பிடிக்கும். ஒங்க தெலுங்கு சங்கீத மும்மூர்த்திகள் தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் மூணு பேருமே எங்க திருவாரூர்ல அவதரிச்சவுங்கதான்’.
‘அப்படின்னா ஒங்க சொந்த ஊர் திருவாரூரா?’
‘ஆமா, அதனாலதான் ஆரூர்தாஸ்னு என் வாத்தியார் எனக்குப் பேர் வச்சாரு. ஆரூர்னா திருவாரூர்! திருவாரூர் ஸ்தல மூலவர் தியாக ராஜசுவாமி. அதனாலதான் அங்கே பிறந்த அவருக்கு தியாகராஜர்னு பேர் வச்சாங்க. அதை நீங்க தியாகய்யான்னு ஆக்கிட்டிங்க’.
‘பரவாயில்லே. நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே. இப்படித்தான் இருக்கணும். சரி, சாப்பிட்டுட்டு டப்பிங் ஆரம்பிக்கலாம்’.
சூடான பெஸரெட்டையும், சுவையான கோதுமை உப்புமாவையும் அத்துடன் அதிகக் காரமான இஞ்சிச் சட்னியையும் அவர் கையாலேயே எடுத்து பீங்கான் பிளேட்டில் வைத்துப் பரிவுடன் எனக்குக் கொடுத்தார்.
அன்னலட்சுமி பரிமாறினார்!
கொண்ட மட்டும் உண்டேன்!
வயிறும் நிறைந்தது!
மனமும் நிறைந்தது!
சினிமாவின் மறுபக்கம் - ஆரூர்தாஸ்
=================================================================================











வாழைப்பூ நறுக்குவது என்னன்னா கையில் அந்த பிசு பிசுப்பு ஒட்டுமே கறுப்பா...நான் கொஞ்சம் தேங்காய் எண்ணை தடவிக் கொண்டு நறுக்குவேன் ஆனா கத்தி வழுகிப் போகும். சில சமயம்.
பதிலளிநீக்குநல்ல உவமை ஸ்ரீராம் தலையை சிலுப்பி......
நான் நினைப்பேன் பூவுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியக் கள்ளனை அப்பூவின் கைகளை விலக்கி கள்ளனை உருவி ஆஹா பாரு உன்னைக் காப்பாத்திட்டேன்னு ஆனா அது சொல்லும் அடப் பாவி அந்த ரெண்டும்தானே நான் வாழைக்காயா உருவாகப் பாதுகாப்புன்னு!!!! அதுக்கு முன்னாடி என்னை உதிர்த்து...
கீதா
வாங்க கீதா... நான் ஒவ்வொரு முறையும் எண்ணெய் தடவிக் கொள்ள மறந்து விடுவேன்.
நீக்குவாழைப்பூவை நறுக்கி மோர் ஜலத்தில்தானே போடுவோம், அப்போதுதான் வாழைப்பூ கருக்காமல் இருக்கும், அந்த மோர் ஜலத்திலேயே அவ்வப்பொழுது கையை தோய்த்துக் கொண்டால் கை கருப்பாகாது. இல்லாவிட்டால் கொஞ்சம் புளியை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது கையில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
நீக்குவாழ்க்கைத் துணை நீ. கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமனைவியை உள்ளன்போடு நேசித்தால்தான் இப்படி எழுத இயலும்.
எல்லா வார்த்தைகளும் படிக்க முடிந்தது. துன்னிய வார்த்தை உபயோகம் ரசித்தேன். தடாக்க் ... அடுத்த வார்த்தை மாத்திரம், குன்றமையா? புரியவில்லை, யோசித்தும்.
வாங்க நெல்லை... ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இது அப்பா திருமணத்துக்கு முன் தன் பதின்ம பருவத்தில் எழுதியது!
நீக்குஆஹா... அருமை. கவிதை மனது அவருக்கு. உங்களிடமெல்லாம் மென்மையாக நடந்துகொண்டாரா இல்லை அப்பா ஸ்தானத்தில் கொஞ்சம் கண்டிப்போடு இருந்தாரா?
நீக்குஆமாம் இல்லை
நீக்குரகசியமானது வாழைப்பூ! நிஜமாகவே ரொம்ப வியந்ததுண்டு வாழைப்பூவை முதன் முத்லாக நறுக்கிய போது.
பதிலளிநீக்குஅதற்குள் எத்தனை ரகசியங்கள் என்று வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் ரகசியம் னு எழுதும் முன்னரே!!!!
கீதா
உண்மைதான்
நீக்குஅட! அடுத்த பாட்டு அந்த வரி நல்லாருக்கே! உணர்வோடு கலந்து உணர்வதுதானே மாபெரும் சக்தி!
பதிலளிநீக்குகாதல் ம்ம்ம் அப்படிக் கலந்தால் அது தெய்வீகக் காதலய்யா!!
கீதா
ஹா... ஹா... ஹா..
நீக்குஅதுதான் தெரியாதே!!!!!
பதிலளிநீக்குஹாஹாஹா இப்பதான் பார்க்கிறேன் ஸ்ரீராம். சுவாரசியம். நாகேஷ் லெஜன்ட்
கீதா
இன்றைய பாடலும் அவருக்கே அர்ப்பணம்
நீக்குநிஜமாகவே நாகேஷ் சீன்ஸ் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த சீன்ஸ் இப்பவும் கூட. ஊரில் தேரடியில் பார்த்த படம் திருவிளையாடல்.
பதிலளிநீக்குஇணையம் வந்த பிறகு இக்காட்சியை யுட்யூபில் பார்த்துப் பார்த்து ரசித்ததால், எங்கள் தளத்தில் கூடப் பதிவு எழுதியதுண்டு இதன் இன்ஸ்பிரேஷனில்!!!
எங்கள் தளத்தில் நான் இப்படியாக எழுதியவை அப்ப நிறைய.
கீதா
இப்ப வாசிப்பவர்கள் எங்கள் தளத்திற்கு அப்ப கிடையாது.
நீக்குகீதா
ஓ...
நீக்குஎல்லோருமே அந்த ரசனைகள் நிறைய அப்படி எழுதி இருப்பார்கள் இல்லையா?
நீக்குஆமாம் ஸ்ரீராம். கண்டிப்பாக எழுதியிருப்பாங்க.
நீக்குஊர்ல இருந்தப்ப இந்தப் படம் தேரடில பார்த்த பிறகு வீட்டில் நாங்கள் எங்களுக்குள் இந்த தருமி சீனுக்கு எங்கள் கற்பனைல இட்டுக்கட்டி பேசி ரசித்ததுண்டு. அது போல பள்ளியிலும் கல்லூரியிலும் ...அப்படித்தான் என்னை நாடகத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
கீதா
நிஜமாகவே சிவாஜி நல்ல ரசிகரும் கூட அதாவது நடிப்பின்.....அப்படி ரசிகராக இருந்தால்தானே தன்னாலும் நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
பதிலளிநீக்குகீதா
அடுத்தவர்களின் திறமையை மதிப்பவர்
நீக்குஅதே!
நீக்குகீதா
என்ன மோசம்ல அந்த அசோசியேட் டைரக்டர் ...இப்படியும் மனுஷங்களா?!
பதிலளிநீக்குஹையோ சஸ்பென்ஸ்ல முடியுதே காணொளி....ஸ்ரீராம். சரி யுட்யூபில் எடுத்துப் பார்த்துவிடுகிறேன்!
கீதா
இத்தனைக்கும் இன்களூடு ஆல் இந்த ஆப்ஷனை கிளிக் செய்து வெளியிட்டேன் அப்படியும் இவ்வளவு தான் வருகிறது போல
நீக்குமு மேத்தாவின் வரிகள் ரொம்ப ரொம்ப ரசித்தேன், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
எனக்கும் பிடிக்கும்
நீக்குகவிஞர் பிறைசூடன் காணொளி எடுத்து வைத்திருக்கிறேன் ஸ்ரீராம். சுட்டியை ஆனால் இன்னும் பார்க்கவில்லை. மெயினாக சித்ராலக்ஷ்மணன் எடுக்கும் பேட்டிகளைப் பார்ப்பதுண்டு.
பதிலளிநீக்குகீதா
நான் எதேச்சையாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன் அவரது எளிமையும் நேர்மையும் எனக்கு பிடித்திருந்தது
நீக்குஆமாம் அதே ரொம்ப ரசித்தேன்
நீக்குகீதா
அடப் பாவிங்களா! பிறைசூடன் எனும் பெயர் நல்லால்லியாமா? மனதைக் கவரும் பெயர். சே ரசனையே இல்லாதவங்க.
பதிலளிநீக்குஇயல்பான பேட்டி தன் மீதான குறைகளையும் வெளிப்படையாகச் சொல்கிறார்.
சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் ஆனால் பாவம் பேசும் போது தான் யோசிக்காமல் பேசுவதையும் சொல்கிறார். (நீங்களும் சொல்லிருக்கீங்க ஸ்ரீராம்)
பாருங்க, அவருக்காவது சின்ன வயசு....அப்ப பக்குவம் இருந்திருக்காமல் போகலாம்...தப்பில்லை எல்லோரும் படிப்படியாக வளர்ந்து வருபவர்கள் தானே பக்குவம் என்பது அப்படித்தானே...... இல்லையா.....ஆனால் வயதான பிறகும் ஆன்மீகம் நாட்டம் உள்ளவர்கள் மனம் பக்குவமடையாமல் பேசிவிடுகிறார்கள்.
கீதா
ஆமாம் ரசனையாக பார்த்தேன்
நீக்குரொம்பப் பக்குவமாகப் பேசுகிறார். இயல்பாகப் பேசுகிறார். முழுவதும் பார்க்க வேண்டும்
பதிலளிநீக்குகீதா
எனக்கு பேஸ்புக்கில் தொடர்ந்து பிட்டு பிட்டாக நிறைய பிட்டுகள் வந்தது
நீக்குமகுடநிலா அத்தியாய முகப்புக்கான கவிதைகளை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅவருடைய கவிதைச் சிதறல்களும் ரொம்ப நல்லா இருந்தது. மிகவும் திறமையான கவிஞர்.
மற்றதையும் தேடி எடுத்து போட்டு இருக்கலாமோ..
நீக்குஇதைத் தொடர்ந்து பதிவிடலாம். நல்ல கவிதைகளை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
நீக்குதிருவரங்கத்தில் நான் பார்த்து வியந்த, ஆசைப்பட்ட ஒன்று, கள்ளன் இல்லாமல் விற்கும் வாழைப்பூ. சென்றமுறை போயிருந்தபோது,அரை மணி நேரம் கொடுத்தீங்கன்னா கள்ளன் எடுத்துவிட்டுத் தருகிறேன், கூட பத்து ரூபாய் என்றார். திருவரங்க புடலையும் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குவீட்டில் கள்ளன் எடுப்பது நச்சுப்பிடித்த வேலை.
அதிரா, இலங்கையில் கள்ளன் எடுக்காமல் அப்படியே வாழைப்பூவைத் திருத்தி கறி செய்யும் முறையைப் போட்டிருந்த நினைவு. நல்லா இருக்குமா?
ஏன் கள்ளனை நீக்கணும்?
சென்னையில் கூட சில இடங்களில் கள்ளன் எடுத்து திருத்தி கொடுக்கிறார்கள்
நீக்குஎல்லா நடிகர்களுக்கும் இருக்கும் நிர்பந்தம்தான் சிவாஜிக்கும் இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குஉடனே காசு பார்த்துவிடுவோம், கதை கிடக்கிறது கதை என வரும் அட்டுத் தயாரிப்பாளர்களால் வரும் அனர்த்தம் இது (அல்லது அட்டு இயக்குநர்களால். கால்ஷீட் கிடைத்துவிட்டது. கதையைத் தேடு அல்லது கதை பண்ணு கேசுகள்)
:)))
நீக்குநேற்றைக்கு சொல்ல விட்டுப்போய் விட்டது.
பதிலளிநீக்குசில மகளிர், தி.மோ படத்துக்கு பத்மினி பொருந்தலை, வயசாச்சு, சிவாஜி சூப்பர், வேறு நடிகையைப் போட்டிருக்கலாம் என எழுதியிருந்தார்கள். நியாயமாரே?
ஆண் கதாநாயகன் உரல் மாதிரி இருப்பாராம். பெண் கதாநாயகி குழவி மாதிரி இருக்கக்கூடாதாம். என்ன அநியாயம் பாருங்கள்.
நல்ல கேள்வி. அந்தக் காலத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவருமே உரல் மாதிரி தான் இருந்தார்கள்! கண்ணதாசன் தேவிகா போன்றோரைப் பார்த்து துடியிடை பிடியிடை என்று கவிதை எழுதினார்!!
நீக்குநெல்லை தி.மோ.வை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதில் சிவாஜி ஃபிட்டாக இருப்பார். மேலும் 36 வயது ஜெமினி, 18 வயது சாவித்திரியோடு நடித்தது பார்க்க நன்றாகத்தானே இருந்தது. (இதற்கு என்ன பதில் நெல்லையிடமிருந்து வரும் என்று யூகிக்க முடிகிறது).
நீக்குசபாஷ் சரியான போட்டி
நீக்குஹா ஹா ஹா... பா.வெ மேடம் சொல்வதைப் பார்த்தால் ஆண்கள் வயதில் பாதி உடைய பெண்களை கதாநாயகியாகப் போட வேண்டும் என்கிறார். கொஞ்சம் நியாயம்தான். இதை ரஜினி, கமல், விக்ரம் காதில் ஊதக்கூடாதோ. அவர்கள் மூன்றில் ஒரு பங்கு வயதான பெண்களை கதாநாயகியாகப் போட்டுக்கொள்கிறார்.
நீக்குஆனால் உண்மையைச் சொல்லணும். தி மோவில் சிவாஜி திருமணம் ஆகும் வயதுக் கதாநாயகனாகவா இருந்தார்? அந்தப் படத்தை இருமுறைக்கு மேல் பார்த்து ரசித்திருக்கிறேன். நாகேஷை பொடதியில் அடிக்க வேண்டும் என்ற கோபம் வரும் அளவு நன்றாக நடித்திருப்பார்.
பெண்களுக்கு சீக்கிரம் முதிர்ந்த தோற்ற வந்து விடும், ஆண்களுக்கு அப்படி அல்ல. தோற்றம் மட்டுமல்ல உடல் முதிர்வதும் ஆண்களை விட சீக்கிரம், அதனால்தான் முன்பெல்லாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஆறு வயதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்பார்கள். இன்றைய இளம் பெண்களுக்கு அது புரியாமல் 3 வயதிற்கு மேல் மூத்தவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
நீக்குஉண்மைதான். அவங்க, தன் உடல் நலம் இளமை போன்றவற்றைக் கொஞ்சம் இழந்துதான் வாரிசுகளை உருவாக்குகிறார்கள். அதனால் அழகு என்பதை முன்னிறுத்தி அவங்களை கமென்ட் செய்யக்கூடாது என்பது உண்மைதான்.
நீக்குஅது சரி பா.வெ மேடம்.. நீங்க ரஜினியோட கமலோட நடித்த குஷ்பு அழகாக இருந்தார் என நினைக்கறீங்களா இல்லை இப்போது பஞ்சத்தில் அடிபட்டவர் மாதிரி ஒல்லியாக இருப்பவர் அழகு என்கிறீர்களா?
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வா அண்ணா வணக்கம்
நீக்குசித்ரா பௌர்ணமி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குசாண்டில்யன் பகுதி நீளம், அதைவிட நீளமாக இருக்கிறது கி.வா.ஜ. பகுதி, காணொளிகளும் அதிகம். நாளைக்கு படித்து, பார்த்து கருத்திடுகிறேன்.
பதிலளிநீக்குஇன்று சும்மா பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன், நெல்லை விரித்த வலையில் வீழ்ந்து விட்டேன்.
சாண்டில் என் பகுதி நீளம் போல தோன்றினாலும் படிப்பதற்கு, அதன் கருத்து சுருக்கம். இளஞ்சேட்சென்னி இறந்தபோது கரிகாலன் பிறந்திருந்தானா இல்லையா? பிறந்து இருந்தால் என்ன வயது? நாம் படித்த பாடத்துக்கு மாறுதலாக சாண்டில்யன் எழுதியிருக்கிறார் என்று சந்தேகம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது. பொறுமையாக படித்து விட்டு வருகிறேன். (எப்போது என யாரும் கேட்கக் கூடாது இன்று கைப்பேசி கைகளிலிருந்து இடம் பெயர்ந்து விடும்.
(அதிகாலை மூன்று மூன்றரைக்கே எங்கள் சேலம் பயணம் துவங்கி விடும் என்பதால் எப்போது பதிலளிப்பேன் என்று தெரியாது.)
இதைப்போல நானும் சொல்லி விட்டேன். ஆனால், அவரே எல்லா கருத்துக்கும் உடனடியாக வந்து விட்டார். நானும் அவரைப்போலவே, ஆனால், நானும் நடுநடுவில் வருவேன் எனவும் நினைக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சேலம் நோக்கிய பயணத்தில் இருப்பதால் பதில் கொடுக்கிறேன். சாலையெங்கும் கார்கள் வெள்ளம்! மூன்று நாள் விடுமுறை என்பதால் மொத்த மக்களும் வெளியூர்களுக்கு படையெடுக்கிறார்கள். நாங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு இரண்டு, இரண்டரை மணி நேரம் தாமதமாக செல்வோம் என்று தெரிகிறது.
நீக்குஸ்ரீராம், கரிகாலன் விஷயத்தை காலச்சக்கரம் நரசிம்மாவிடம் கேட்டீங்களஆ? அவர் வெர்ஷன் என்ன என்று
பதிலளிநீக்குகீதா
பாஹேயின் கவிதை ரொம்ப நல்லாருக்கு. ஓசையுடன். எழுத்தும் புரியுது.
பதிலளிநீக்குகீதா
"முடியாது' என்று மறுப்பது மிகச் சுலபம். ஆனால் அப்படிச் சொல்ல என்னால் முடியாததுதான் என் பலவீனமோ என்னமோ! "//
பதிலளிநீக்குஇதுதான் பலரையும் பல வருத்தங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாக்கும் ஒன்று. "நோ" சொல்ல முடியாமல் இருப்பது பலவீனமே
கீதா
மேத்தா கவிதைகள் செம. ஒவ்வொன்றையும் ரசித்தேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
எம் எஸ் வி வாலி பொக்கிஷம் !
பதிலளிநீக்குகீதா
ஆ!!!! இன்னும் இருக்கிறதா....அப்பால வரேன்.
பதிலளிநீக்குகீதா
பூந்தமல்லியிலே - பாடல் கேட்டிருக்கிறேனே..
பதிலளிநீக்குகிவாஜ பகுதி ரொம்ப நல்லாருக்கு ரசித்து வாசித்தேன். பண்டைய இலக்கியக் காதலுக்கும் தற்போதைய கிராமத்து மாமன் காதலும் ஒன்றுதான் என்று சொல்லும் விதம் செம. எந்தச் சூழலாக இருந்தால் என்ன காதல் காதல்தானே!
ஹூம் இப்ப மாந்தோப்பு தென்னந்தோப்புக்கு காதலர்கள் எங்க போறாங்க காஃபிஷாப்புல்லா.
அப்படி வேணும்னு நினைக்கறவங்க நம்ம ஊர்ப்பக்கம் ஒதுங்கலாம்!!!! இல்லைனா பொள்ளாச்சிப்பக்கம்!!! ஹாஹாஹா.
கீதா
சினிமால பாடல்கள் நினைவுக்கு வந்தன. ஊரு சனம் தூங்கிருச்சு, மாங்குயிலே பூங்குயிலே, மாமன் ஒருநாள் மல்லிகைப்பூகொடுத்தான், மச்சானைப் பாத்தீங்களா, இன்னும் இருக்கு சட்டுனு வந்தவை இவைதான்.
பதிலளிநீக்குகீதா
காமராஜர் செய்த தவறு என்ன?! புரியலையே! ஓ அப்போவே இப்படியான தலைப்புகள் ஈர்க்கும் என்பதால் வைச்சாங்க போல!
பதிலளிநீக்குகீதா
ஆரூர் தாஸ் பக்கம் பானுமதி பற்றிய விஷயங்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குகீதா
இந்த யவனராணி தொடரைச் சாண்டில்யன் எழுதி இருக்கும் விதத்தைப் படிக்கையில் கரிகால் பெருவளத்தான் பற்றி நான் தமிழ்ப் பாடத்தில் படித்த ஒரு பாடம் நினைவில் வருகிறது. இளஞ்சேட்சென்னி இறக்கையில் கரிகாலன் பிறக்கவில்லை. கர்ப்பிணியான பட்ட மகிஷியை மன்னனுக்கு உகந்தவர்கள் காப்பாற்றி மறைவிடத்தில் வசிக்கச் செய்கின்றனர். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இளவரசன் என்பதே தெரியாமல் அந்தக் குழந்தை அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கிறது. அதன் நடத்தையும், அதன் கம்பீரமும் இளமையிலேயே வெளிப்படத் தான் செய்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலும் அந்தக் குழந்தை மற்றக் குழந்தைகள் சண்டை போடும் சமயங்களில் நடுநிலையில் நின்று இருவருக்கும் சாதகமான தீர்ப்பைச் சொல்லும்போதெல்லாம் அக்கம்பக்கத்தினர் இவன் யாரோ தெய்வப் பிறவி போலும் என நினைக்கின்றனர். மன்னன் இல்லாத சோழ நாட்டில் மன்னனை அமர்த்த வேண்டி அமைச்சர்கள் ஆலோசித்துப் பட்டத்து யானையிடம் மாலை ஒன்றைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த யானையோ வேறே எங்கும் அலையாமல் கரிகாலன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்து அவன் கழுத்தில் மாலையைப் போட்டு அவனைத் தூக்கித் தன் மேல் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தது. தகவல் தெரிந்த பட்ட மகிஷி அங்கே ஓடி வர, யானையோ அவளைப் பார்த்துக் கண்ணீர் பெருக்குகிறது. அவளைப் பார்த்த அமைச்சர் பெருமக்கள் இவல் பட்ட மகிஷி என்பதைப் புரிந்து கொள்கின்றனர். இது தான் நான் நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் வந்த ஒரு பாடம். துணைப்பாட நூல்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் பதிவை முழுதும் படிக்கலை. இந்தப் பகுதி படித்ததும் நினைவில் வந்ததை உடனே சொல்லிட்டேன். மத்ததும் படிச்சுட்டுப் பின்னர் வரணும். நேரம் இருந்தால் இப்போவே வருவேன்.
பதிலளிநீக்குஇந்த வாரப்பதிவு காதல் ஸ்பெஸலா? வாழைப்பூவில் தொடங்கி, அப்பாவின் காதல் வழியாக மு மேத்தாவிடம் சென்று, கி வ ஜா வின் இலக்கியக் காதலில் இணைந்து, வாட வெத்தல நாட்டுப் பாடலில் முடிகிறது. எத்தனைக்காலம் தான் காதலிப்பீர்கள் என்று பார்க்கலாம்.
பதிலளிநீக்குகாதலை எதற்கெல்லாம் ஒப்பிடுவது என்பதில் விவஸ்தை இல்லையா? கடவுள் படைத்த "காதலையே" கடவுளுக்கு ஒப்பீடு செய்வது .... ஹும் என்னவோ போங்க.
Jayakumar
வாழைப்பூ இங்கே ஆய்ந்து தருகிறார்கள் - சில இடங்களில். ஆனால் அன்றைக்கே சமைத்து விடுவது நல்லது. நாமே ஆய்ந்து கொள்வது நல்லது - கொஞ்சம் சல்லியமான வேலை என்றாலும்.
பதிலளிநீக்குமற்ற பகுதிகள் - காணொளிகள் அதிகம்! :) பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
திடீரென்று நள்ளிரவில் ஏற்பட்ட அந்தச் சதியால் உறையூர் அன்னையின் முகமே சிவந்து விட்டதுபோல் தீ ஜ்வாலை வெகு தூரத்துக்குச் செக்கச்செனே லெனத் தெரிந்தது.
பதிலளிநீக்குஆமாம், இது கரூர் வரை தெரிந்ததாக ஒரு கூற்று. அரசியைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்த இடம் கரூர் என்பதாகவும் சொல்லுவார்கள்.