டிரைவரின்
நல்லவராக இருக்கலாம். நல்லவராக இருக்க முயற்சிப்பதும், நல்லவராக காட்டிக் கொள்வதும்தான் எரிச்சல் தருகிறது. ஒருவருடைய இயல்பான குணத்தை மறைக்காமல் அப்படியே விட்டு விட்டால் நாமும் புரிந்து கொள்வோம், இவர் இப்படிதான் என்று. அதின்றி உள்ளே ஒரு முகம் வெளியே ஒரு முகம் என்று காட்டும்போதுதான் சங்கடம்.
ஒரு வகையில் எல்லோருமே அப்படிதான் என்றாலும் சில நேரங்களில் எல்லை மீறி படுத்துகிறது.
இன்னொரு சம்பவம்.
என் வீட்டிலிருந்து வெளியூர் செல்ல பைபாஸ் பிடிக்க இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஒரு சாலையை அடைந்து எதிர்ப்புறச் சாலையைப் பிடிக்க யு டர்ன் போட ரொம்ப தூரம் சென்று திரும்ப வேண்டும். வலது புறம் சென்றால் இதே சாலையை மறுபடி பிடித்து அதே போல சென்று திரும்ப வேண்டும், அல்லது தாண்டிச் சென்று கொஞ்ச தூரத்தில் இடது புறம் திரும்பினால் யு டர்ன் போடாமல் டோல் சாலையைப் பிடித்து விடலாம்.
நான் ஏதோ நினைவில் 'வலதுபுறம் சென்று செல்லலாம்' என்று சொன்னதும் ஒரு கணம் தயங்கி ஓ'கே சார்' என்று ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென எனக்கு ஞானோதயம் வந்து 'இந்தப் பக்கமாகச் சென்றால் டோல் சாலையையே பிடிக்கலாமே' என்றேன். ".ஆமாம்ல. " என்றவர் சுதாரித்து, "அதுதான் சார் நானும் நினைத்தேன்.. நீங்கள் இந்தப் பக்கம் என்று சொன்னதும் உங்கள் விருப்பம் என்று வந்தேன்" என்றார்.
எரிச்சலை அடக்கிக் கொண்டு "இந்தப் பக்கமாகவே ஓட்டுங்கள். காலை நேரம் டிராஃபிக் இருக்காது. வண்டிகளும் இருக்காது. அப்படியே டோல் அருகே குறுக்கே க்ராஸ் செய்து கொள்ளலாம்" என்று சொன்னேன். "ஓகே சார்.. அது கூட நான் நினைத்தேன். நீங்கள் சொன்னால் சரிதான்" என்றார்.
நான் சொன்னேன், "இதோ பாருங்கள். நான் பயணி. நீங்கள் டிரைவர். தினசரி பல்வேறு ரூட்டுகளிலும் செல்லும் உங்களுக்குதான் பாதைகள் பற்றி நன்கு தெரியும். இதில் எஜமான-ஊழிய விசுவாசம் தேவையில்லை. நான் தவறாகச் சொல்லலாம். நீங்கள் சொன்னால் என் தவறை நான் ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்வேன்" என்றேன்.
"நீங்க சொன்னா சரிதான் சார்"
இன்னொரு டிரைவர் வருவார். தேவைக்கு மட்டும்தான் பேசுவார். ரொம்ப சிரிக்க மாட்டார். ரொம்ப பணிய மாட்டார். ஆனால் காசு அதிகமாய் வாங்குவார். சில அநியாய கட்டணங்கள் உண்டு.
- அனுபவங்கள் தொடரும் -
====================================================================================
வாலியின் வேண்டுகோளுக்காக பாடாத பாடலைப் பாடிய டி எம் எஸ் மற்றும் 'நீ வருவாய் என நான்' பாடல். காணொளியில் சொல்லாத தகவல் நான் பாடும் பாடல் படத்தில் இந்தக் காட்சி படமாக்கபப்ட்டிருக்கும்.
======================================================================================
சென்ற வார குறுக்கெழுத்துப் போட்டியின் விடை :
===========================================================================================
அறம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி சோ..
=======================================================================================
'என்றென்றும் சிவாஜி' என்னும் FaceBook பக்கத்தின் இந்த அரிய படம் கிடைத்தது!
========================================================================================
MVV கதை விமர்சனம் ஒன்று - இணையத்திலிருந்து..
பைத்தியக்காரப் பிள்ளை..
இக்கதைத் திரு எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் இயற்றப்பட்டது. புதுமையாக இருந்தது படிப்பதற்கு. ஏனென்றால் இப்படியும் ஓர் தாய் இருக்க முடியுமா என்று படிப்பவரின் மனதில் ஓர் எண்ணம் உண்டாகும். ஏன் அவனது தாய் அப்படி மாறினாள் என்பதைத் தெளிவாகத் தன் எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் மனதில் பதியும்படி கொடுத்திருப்பார்த் திரு எம்.வி.வெங்கட்ராம் அவர்கள். இக்கதையைப் படிக்கும் போது ஒருத் தகப்பனானவன் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் மற்றும் தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் தன் எழுத்தின் மூலமாக ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருப்பார்.
ராஜம் கதையின் நாயகன் அவனுக்குத் தற்போது இருபத்தி ஐந்து வயது ஆகிறது. அவனுடன் மொத்தம் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அதில் நான்கு நபர்கள் ஆண் பிள்ளைகள் மற்றும் ஐந்து பேர்ப் பெண் பிள்ளைகள். இவரது தந்தைக்கு நெசவுத் தொழில். தினம் அவனது தந்தை கள்ளுக்கடைக்குப் பேய்க் கள்ளுக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவியை மாடு அடிப்பது போல் அடித்துத் துன்புறுத்துவார். அவனது தாய்ப் பொருத்துப் பொருத்துப் பார்த்துப் பொறுமையின் எல்லையைக் கடந்தபின் தன் கணவனைத் திருப்பி அடிக்க, கடிக்க ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு சிறிது நேரம் கழிந்தவுடன் ராஜத்தின் தகப்பன் அவரது மனைவியைக் கொஞ்சுவதின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாகப் பிள்ளைகள் வரிசையாகப் பிறந்தனர். அனைவருக்கும் மூத்தவன் ராஜம்தான். தினம்தோறும் அவர்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருக்கும். இதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த ராஜம் தன் தாய் மீது இருந்த பாசத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டான். அவனின் தாயும் அதற்கு ஆமோதிக்கிற மாதிரி எப்போதும் அவனைத் திட்டித் தீர்ப்பாள். அவன் காலை எழுந்தவுடன் தன் தாய் மூஞ்சியைப் பார்த்துவிடக் கூடாது என்று எண்ணிக் கண்களை மூடிக்கொண்டு சுவரில் இருக்கும் கண்ணாடியைப் பார்ப்பது வழக்கமாக வைத்திருந்தான்.
ஒரு நாள் அப்படிதான் விடியற்காலைப் பக்கத்து வீட்டுச் சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்தான் படுக்கையை விட்டு. மணியைப் பார்த்தான் விடியற்காலை நாலே கால் ஆகியிருந்தது. எங்கே சத்தம் போட்டால் தன் தாயானவள் எழுந்துச் சண்டை இழுப்பாளோ என்று நினைத்து மெதுவாக வீட்டின் முகப்புப் பக்கம் வந்தான். காலையில் ஒரு காபிக் குடித்து விட்டு வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணினான். அப்போது அவனது தாய் எழுந்து அவனிடம் பஞ்சாமிக் கடையில் ஒரு தோசையும், டம்ளரில் சாம்பாரும் வாங்கிவரும்படி கூறினாள். இவன் முடியாது பஞ்சாமிக் கடையில் டம்ளரில் சாம்பாரெல்லாம் தரமாட்டார்கள் என்றான். இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகமாக அது சண்டையில் முடிந்தது. அவனது அம்மா அவனிடம் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேச முடியும் அவளுக்கு வேண்டும் என்று எனக்குத் தெரியாமல் சேலை, தாலி, ரூபாய் எல்லாம் சேர்க்க முடிந்த உனக்குஅம்மாவுக்கு தோசை மற்றும் சாம்பார் வாங்க மனம் மறுக்கிறது என்றாள். பிறகு இவளிடம் வாயைக்கொடுத்து வெற்றிகாண முடியாது என்று எண்ணி வீட்டினுள் அவனே போய் டம்ளரை எடுத்து வாசல் பக்கம்வந்தான்.
இவனது கடைசித் தங்கை பிறந்த சில காலங்களில் ராஜத்துடன் அப்பா தவறிவிட்டார். கள்ளுக் குடித்துவிட்டு வழக்கம் போல் தன் மனைவியிடம் சண்டை இருத்து மறுபடியும் அளவுக்கு அதிகமாகச் சாராயம் குடித்ததால் சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்து உயிரைவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு தறியை ஓட்டுவது ராஜம்தான். எப்படியோ மூன்று தங்கைகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தான் ராஜம். மிஞ்சியிருப்பது இரண்டுத் தங்கைதான்.
வாசல் பக்கம் போன அவனிடம் சாரங்கன் என்ன ராஜம் காலையில் வெளியே கிளம்பிவிட்டாயா என்றான். எங்கே அவனது தாய்ப் போட்டச் சத்தத்தால்தான் சாரங்கன் எழுந்து இங்கு அமர்ந்திருக்கிறானோ என்று நினைத்தான். அவன் கேட்டக் கேள்விக்குப் பதிலாகக் கடைக்குப் போய் ஒரு காபிக் குடித்துவிட்டு வந்து தறிவேலையில் அமரலாம் என்று எண்ணி வெளியே கிளம்புகிறேன் என்றான். சாரங்கன் உடனே அவனிடம் கடைவீதியில் அவனுக்கு இரண்டு இட்டலி மற்றும் டம்ளரில் சாம்பார் வாங்கிவரச் சொன்னான்.
ராஜம் கடைவீதிக்குப் போய்க் காபிக் குடித்துவிட்டுச் சாரங்கனுக்கும் அவனது தாயுக்கும் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து வீடு சேர்ந்தான். ஆனால் அவனது அம்மாவோ அவன் வாங்கி வந்த தோசையை மற்றும் சாம்பாரைச் சாப்பிடாமல் மீண்டும் அவனுடன் சண்டையை ஆரம்பித்தாள். கொண்டுபோய் உன் பங்கஜத்திடமே கொடு நான் சாப்பிட மாட்டேன். தாயிக்குச் சாப்பாடு வாங்கிவரச் சொன்னால் என்னிடமே ரூபாய்க் கேட்கத் தோன்றுகிறது உனக்கு. அதுவே உனக்கு மனைவியா வற்றப்போகிறவளுக்குப் பெட்டியில் காசு, தங்கத்தாலி, புடவை அனைத்தையும் பூட்டிவைக்கத் தெரியும் என்றாள். இவனுக்குப் பெருத்த கோபம் வந்தது, தன்னிடம் கேட்காமலே தன் பெட்டியை எப்படித் திறந்துப் பார்க்கலாம் என்றான். அதற்கு இந்த வீட்டில் இருக்கும் பெட்டியைப் பார்ப்பதற்கு யாரிடம் கேட்கவேண்டும் என்றாள் அவனது தாய்.
பிறகு அவனது தங்கையை அழைத்துக்கொண்டு தறி நெய்வதற்குச் சென்றான். அவனது தங்கை அவனுடன் சேர்ந்து வேலைச் செய்து கொண்டிருக்கையில் . அவனது தாய் அவளது மகளைக் கூப்பிட்டாள். இரண்டு முறை கூப்பிட்டப் பிறகு தங்கை பயந்துகொண்டு தாய் இருக்கும் இடத்திற்குச் சென்றாள். இவன் ஏன் இவளை இப்படி வேலை நேரத்தில் கூப்பிடுகிறாய் என்றான். பக்கத்துத் தெருவில் இதே வேலைக்கு முன் பணமாக நூறு ரூபாய் தருகிறார்களாம். அதனால் இனிமேல் உன் தங்கை அங்குதான் வேலைக்குப் போகப் போகிறாள் என்றாள். இவன் நான்தன் இவளை என்னுடன் ஒத்தாசைக்காக வைத்திருக்கிறேனே பிறகு ஏன் இவள் மற்ற இடங்களில் போய் வேலைச் செய்ய வேண்டும்.
நீ எப்படி உன் திருமணத்திற்குப் பணம் சேர்த்து வைத்துள்ளாயோ அதேபோல் உன் தங்கை சம்பாதித்து என்னிடம் கொடுப்பாள். நான் அவளுக்கு வேண்டியதைச் சேர்க்கப் போகிறான் என்றார். ராஜத்துக்கு இவளது உள் நோக்கம் புரிந்தது. தன்னிடம் இருக்கும் பணம், தங்கம், அனைத்தையும் பெறுவதற்கு இப்படி ஒரு செயலைச் செய்கிறாள் என்று நினைத்து. தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தன் தங்கையிடமே கொடுத்துவிட்டான். பெட்டியின் சாவியை அவன் அவளிடம் கொடுத்து எல்லாம் உனக்கே என்று கூறி விரக்தியுடன் வெளியே போனான்.
வெளியே போனவன் வீடு திரும்பினானா? அவன் எண்ணிய மாதிரி பங்கஜத்தை கைப்பிடித்தானா? என்ன நடந்தது ராஜத்துக்கு? முழுவதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
-பாலமுருகன்.லோ-
======================================================================================
கவிதைப் பக்கம் : கண்ணதாசன்
மலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு
கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு
மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு
பின்னி பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு
எண்ண எண்ண ஆசைகள் பிறப்பதுண்டு
இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு
கடைசி வரியை கவனியுங்கள்!
இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு
கண்ணதாசன்.
உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும்
ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்?
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..
எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக
=================================================================================
பாஸ்கர தொண்டைமான்
ரிவின்யூ டிபார்ட்மெண்டில் எது எடுத்தாலும் தாமதம். எல்லாம் சிவப்பு நாடா செய்கிற காரியம் என்றெல்லாம் புகார் சொல்பவர்கள் இருக்கிறார்கள். உண்மைதான் விஷயங்களை மனிதத் தன்மையோடு அணுகத் தெரியாதவர்களே இந்த சிவப்பு நாடாவைச் சுவைத்துச் சுவைத்து இன்பம் காண்கிறவர்களாயிருப்பார்கள்.
அவிழ்க்க முடியாத முடிச்சுடன் போராடுவதை விடுத்து அதை வெட்டி எறியத் தெரிந்தவர்களே உத்தியோகத்தில் வெற்றி காணத் தெரிந்தவர்கள் என்று கூறுவேன் நான். ஒரு கிராமத்தில் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இல்லை. ஒன்றரை மைல் தூரத்திலுள்ள அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கே பிள்ளைகள் எல்லாம் சென்று வரவேணும். ஊருக்கு மேல்புறம் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மறுகால் ஊரை அடுத்து இருக்கிறது.
அதில் வருஷத்தில் எட்டு மாதங்கள் முட்டளவு தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீருக்குள் இறங்கியே சிறு குழந்தைகள் எல்லாம் அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேணும். இந்த மறுகாலில ஒரு சிறு பாலம் கட்ட கிராமத்தார் பத்து வருஷ காலமாக முயல்கிறார்கள். ஜில்லா போர்டில் அந்தக் கிராமத்தில உள்ளவர்கள் செல்வாக்குடையவர் களாக இல்லாத காரணத்தால் பாலம் கட்டப்படவில்லை. பின்னர் வட்டார அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் இப்பாலம் கட்ட முயன்றிருக்கிறார்கள். வட்டார அபிவிருத்தி அதிகாரி பாலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்.
ஆனால் அதற்கு வட்டார அபிவிருத்திப் பணத்தில் ஐம்பது சதவிகிதம்தான் செலவு செய்தல் கூடும். மீதப் பாதியைக் கிராமத்தார் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஜில்லா போர்ட் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். அந்த ஜில்லா போர்டிலோ வரவுக்கு மேல் செலவு. ஆதலால், எந்த வேலைக்கும் ஜில்லா போர்டார் உதவித் தொகை கொடுத்தல் கூடாது என்பது சர்க்கார் உத்தரவு. இது காரணமாக எனக்கு முன்னிருந்த கலெக்டர் ஜில்லா போர்டாரிடம் உதவித்தொகை கேட்டு கலெக்டர் ஹோதாவில் கடிதம் எழுதுவார். பின்னால் அவரே ஜில்லா போர்ட் ஸ்பெஷல் ஆபிசர் ஹோதாவில் சர்க்கார் உத்திரவைக் குறிப்பிட்டு உதவித் தொகை கொடுத்தல் இயலாது என்று கலெக்டருக்குப் பதில் எழுதுவார். இப்படியே சிவப்பு நாடா வேலை செய்து கொண்டிருந்தது
இந்த விவகாரத்தில். நான் வேலை ஏற்ற பின் ஒருநாள் இந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பாலம் கட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். ஆபீஸ் கட்டுகளைப் புரட்டி இதுவரை நடந்திருந்த விவகாரங்களையும் படித்துப் பார்த்தேன். வட்டார அபிவிருத்தி அதிகாரியும், மற்றவர்களும் "ஜில்லா போர்ட் உதவித் தொகை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது” என்றனர். அந்தத் தொகையையும் சேர்த்துக் கிராமத்தார்களே கொடுத்தல் இயலாது என்பதையும் கண்டேன். ஓர் இரவு முழுவதும் யோசித்தேன்,
மறுநாள் காலையில் எஞ்சினீயரைக் கூப்பிட்டு அனுப்பினேன்.
ஆமாம், இந்த வேலையை வட்டார அபிவிருத்தி வேலையாகச் செய்ய வேண்டாம் ஜில்லா போர்ட் வேலையாகச் செய்ய ஏதாவது ஆக்ஷேபனை உண்டா? என்றேன்.
ஆக்ஷேபணை இல்லை. ஆனால் அதற்குரிய எட்டாயிரம் ரூபாயை ஜில்லா போர்டிலிருந்து கொடுத்தல் இயலாதே என்றார்.
சரி, எஸ்டிமேட்டை என்னிடம் கொடுங்கள் என்றேன்.
கிராமத்துக்காரரில் ஒரு பெரிய பிரமுகரைக் கூப்பிட்டனுப்பினேன்.
அவரிடம் கண்டிராக்டை ஒப்புவிப்பதாகச் சொன்னேன். கிராமத்தார் சேர்த்து வைத்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் பெறுமான கற்களையும் எடுத்துக்கொண்டு, ஜில்லா போர்டிலிருந்து ரூ 4000 மும் பெற்றுக் கொண்டு வேலையை முடியும் என்றேன்.
அப்படியே வேலையும் இரண்டு மாத காலத்தில் முடிந்துவிட்டது. பாலத்தின் திறப்பு விழாவையும் 'ஜாம் ஜாம்' என்று நானே முன்னின்று நடத்திவிட்டேன்.
இதையெல்லாம் பார்த்த எஞ்சினீயர் சொன்னார் “சார், நாங்கள் எல்லாம் காலுக்குத் தக்கபடி செருப்பைத் தறி" என்றோம். தாங்களோ செருப்புக்குத் தக்கபடி காலைத் தறி என்று சொல்லிக் காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்று குறைபட்டுக் கொண்டார்.
"சரிதான் ஐயா! சிவப்பு நாடாவை வெட்டித் தள்ளத் தெரியவேண்டும். அதற்கு மனிதாபிமானம் வேண்டும். அந்த மனிதாபிமானம் உடையவர்களாய் அதிகாரிகள் வாழ வேண்டும். அதுவே வெற்றியின் ரகசியம்" என்றேன்.
ஒரு நல்ல காரியத்தை எப்படியோ செய்து முடித்தோம் என்ற திருப்தி இருந்தது எனக்கு. அது போதாதா?
இன்னும் ஒரு சந்தர்ப்பம் நான் வேலை பார்த்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தோல் பதனிடும் தொழில் சிறப்பாக நடந்தது. அங்கு முதலாளிமார் எல்லாம் முஸ்லீம் சகோதரர்கள். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் ஹரிஜனங்கள்
இருவருக்கும் இடையே எவ்வளவோ தகராறுகள். பல வருஷங்களாக 'போனஸ்' கொடுபடவில்லை. இதற்கெல்லாம் தொழிலாளிகள் லேபர் கோட்டுக்குப் போவார்கள். அவர்களுக்கு அனுகூலமாகத் தீர்ப்புக் கூறப்படும். அதை எதிர்த்து முதலாளிகள் அப்பீல் பண்ணுவார்கள். அப்பீல் முடியும்வரை தொழிலாளர் குறைகள் நீங்காது. இந்த நிலையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்றிலிருந்து வேலை நிறுத்தம் பண்ணப் போவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அக்கிராமத்தில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படலாம் என அரசியல்வாதிகள் பீதியை வேறே கிளப்பிவிட்டுவிட்டனர்.
நான் கிராமத்திற்குச் சென்றேன். நிலைமையை அறிந்தேன். முதலாளிமார் கையாளும் கோர்ட்டு நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டேன். இரண்டு கட்சிக்காரர்களையும் தனித்தனியே அழைத்து அவர்கள் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டேன். பின்னர் முதலாளிமார் பிரதிநிதிகளைச் சந்தித்து இருக்கும் நிலையை விளக்கினேன். கோர்ட்டு நடவடிக்கைகளைக் காட்டிக் காட்டி போனஸ் கொடுப்பதை நாலு வருஷம் தள்ளிப் போட்டது தவறு என்றேன். இரண்டு வருஷத்து போனஸையாவது உடனடியாகக் கொடுக்க ஒப்புக் கொண்டால் நான் தலையிட்டு தொழிலாளர்களை வேலைநிறுத்தம் நோட்டீசை வாபஸ் பெறச் சொல்கிறேன் என்றேன். முதலாளிமார் இந்த ஏற்பாட்டிற்கு இணங்கினார்கள்.
"சமாதான உடன்படிக்கையின் ஷரத்து தெரியாமலே எப்படி சார் தொழிலாளர்கள் பணிமுடக்கம் நோட்டீஸை வாபஸ் பெற்றார்கள்" என்று அதிசயித்தார்.
"உன்படிக்கை ஷரத்து என்ன என்று தெரியலாமோ" என்று என்னிடம் கேட்டார்.
அவருக்குமே 'பெப்பே' என்று சொல்லிவிட்டேன். ஏமாற்றத்தோடேயே திரும்பினார் என்றாலும் போகும் போது 'இது உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி சார்' என்று சொல்லிவிட்டே சென்றார்.
சும்மா சட்டத்தையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காமல் மனிதாபிமானத்தையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காரியங்களைக் கவனித்தால் எந்தச் சிக்கலையும் எளிதாகத் தீர்க்கலாம் என்பது என் நம்பிக்கை.
இன்னும் மோட்டார் ரூட்டிற்குப் பெர்மிட் வழங்குதல், சினிமாக் கொட்டகைக்கு லைசென்ஸ் வழங்குதல், ரைஸ் மில்களுக்கு லைசென்ஸ் வழங்குதல் எல்லாம் கலெக்டர்களுக்கு இப்போது எவ்வளவு தலைவலியைக் கொடுக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வளவு தூரம் நியாயம் வழங்குவதை பாதிக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் விரிவாகவே நான் கூறுதல் கூடும்.
என்றாலும் அவைகளைப் பற்றி இக்கட்டுரையில் ஒன்றும் கூறுவதாக இல்லை. நான் ஓய்வு பெறவதற்கு ஒன்றிரண்டுமாதங்களுக்கு முன்னே நான் நடத்திய ஒரு நாடகத்தைப் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.
நாடகத்திற்குத் தலைமை தாங்க முதலமைச்சரை அழைத்தேன். நாடகத்தை நானே எழுதினேன். 'சர்க்கார் சேவகம் அன்றும் இன்றும்' என்று நாடகத்திற்குப் பெயர் சூட்டினேன். அன்று அதிகாரிகள் எல்லாம் மக்கள் பேரில் அதிகாரம் செலுத்தி ஆண்டார்கள் என்பதை விளக்கிய தோடு, இன்று மக்கள் எப்படி அதிகாரிகள் பேரில் குதிரை ஏறுகிறார்கள், அதற்கு அரசியல்வாதிகள் எப்படி எப்படி எல்லாம் உதவுகிறார்கள், நிர்வாகத்தில் அவர்கள் தலையிட்டு எப்படி குட்டையைக் குழப்பு கிறார்கள் என்றெல்லாம் காட்டினேன். ஏன்? சொல்லப்போனால், நானே ஒரு ரிட்டயர்டு தாசில்தார் வேடம் தாங்கி நடித்தேன்.
நாடகம் இரண்டு மணி நேரம் நடந்தது. வந்திருந்த மக்கள் எல்லாம் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயினர். கடைசியில் நான் பேசும் போது “நாங்கள் எல்லாம் வருஷம் 365 நாளும் ஆபிஸ் பேப்பர்களையே கட்டிக்கொண்டு அழுகிறவர்கள். அப்படி அழப் பிறந்தவர்கள் ஒரு நாளாவது சிரித்து மகிழலாமே என்று எண்ணினோம். நாங்கள் சிரிப்பதுடன் உங்களையும் சிரிக்க வைக்கலாமே என்றுதான் விரும்பினோம். எங்கள் எண்ணம் எவ்வளவு தூரம் நிறைவேறி இருக்கிறது என்பதை நீங்கள் சிரித்துச் சிரித்து எங்களுக்கு உற்சாக மூட்டியதிலிருந்து தெரிந்து கொண்டேன். நாடகத்தில் நல்ல நடிப்பு இருந்தது என்றால் பாராட்டுகளை நடித்த நண்பர்களுக்குக் கொடுத்து விடுங்கள். ஏதாவது குறையிருந்தால் அதை எனக்குத் தள்ளுங்கள். நான்தான் இந்த நாடகம் எழுதியவன்" என்று கூறினேன்.
தலைமை வகித்த முதலமைச்சர் நடிகர்களை எல்லாம் பாராட்டி விட்டுச் சொன்னார். "தொண்டைமான் சிறந்த ஒரு எழுத்தாளர், பேச்சாளர் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது எனக்குத் தெரியாது. மிகவும் நன்றாக நடிக்கிறார். மற்றவர்களையும் நடிக்கப் பழக்கியிருக்கிறார். இப்படி ஒரு நாடகத்தை எழுதி அதை நடிக்க வெறும் திறமை மட்டும் போதாது. மிக்க துணிச்சலும் வேண்டும். அது அவரிடத்தில் நிறைய இருக்கிறது. இந்த எழுத்தாளர் கலெக்டரை நான் பாராட்டுகிறேன்" என்று முடித்தார்.
பி.கு. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
=========================================================================
இரண்டு குறிப்புகளுடன் தான் பால்யத்தில், அதாவது திருமணத்துக்கு முன் எழுதிய கவிதையை எடுத்து அனுப்பி இருந்தார் அப்பா.
பாஹே பக்கம் :
மிஸ்ஸியம்மா - இனி இதுபோல வருமா? நிறைய காபி அடித்து எடுத்திருந்தாலும் மிஸ்ஸியம்மா மிஸ்ஸியம்மாதான்!
1955 ம் வருடம் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம். இப்போது வெளியானாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும்.
இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே இனிமை, அருமை, ஹிட். எல்லோரும் ப்ருந்தாவனமும், மாயமே நானறிவேன், எனை ஆளும், பழகத்தெரிய வேணும், அறியா பருவமடா,வாராயோ வெண்ணிலாவே பற்றி எல்லாம் சொன்னாலும் இந்தப் பாடலை எத்தனைபேர் ரசித்திருக்கிறீர்கள்?
நான் ரசிக்கும் பாடல். S. ராஜேஸ்வரராவ் இசை. தஞ்சை ராமையா தாஸ் பாடல்.
எவ்வளவு இளமையான, ஒல்லியான சாவித்திரி, R. கணேஷ் பாருங்கள்.





.png)


கவிதைப் பக்கத்தில் தெய்வத்தின் பேரைச் சொல்லி தேவியைத் தேடு பாடலில் வரும் வரிகள் வருகின்றனவா?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... இல்லை.. அது பாட்டும் பரதமும். இது அவன்தான் மனிதன்.
நீக்குகண்ணதாசன் பாடல்களில் மிகப் பிடித்த பாடல் மன்னிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குபல ப வரிசைப் படங்களில் கண்ணதாசன் மட்டுமே எழுதி இருப்பார்.
வாங்க வல்லிம்மா.. ஆமாம்.. அது ஒரு வலிய கண்ணதாசன் காலம்.
நீக்குஎங்களுக்கும் சென்னை வந்த போது அமைந்த
பதிலளிநீக்குஓட்டுனர், படுத்தி எடுத்துவிட்டார். வாய் ஓயாத பேச்சு. இல்லாவிட்டால் வாய் நிறையப்
புகையிலை. அவசரமாகப் பேச வேண்டிய குடும்ப விஷயங்களில் அவரும் ஒபினியன்
கொடுப்பார்:)
பிறகு கம்பெனிக்குத் தொலைபேசி, மாற்றினோம்.
எங்கள் டிரைவரிடமும் இதே பிரச்னை இருக்கிறது. ஆனால் குறுக்கிட மாட்டார். திடீரென வண்டியை நிறுத்தி "இதோ.. மேடம் கேட்ட கடை... என்மேல தப்பில்லைப்பா.. (என்னைச் சொல்கிறாராம்) அப்புறம் மேடம் கோச்சுப்பாங்க.."
நீக்குவரும் எரிச்சலைக் காட்டிக் கொள்ள முடியாதாக்கும்.. ஏனெனில் அநியாய டிரைவர் கிடைக்கும் இந்நாளில் இப்படி அசட்டு டிரைவர் கிடைத்தாலும் நியாயமாக இருப்பார் சில விஷங்களில். நம்பத் தகுந்தவர்.
மிஸ்ஸியம்மா ஒரு பதினைந்து தடவையாவது பார்த்திருப்பேன்.
பதிலளிநீக்குமாயா பஜார் மாதிரி இன்னோரு சந்தோஷ சாவித்திரி படம்.
ஆமாம்... ஆனால் அம்மா... பதினைஞ்சு தடவைதானா?!!
நீக்குசும்மா. அதயும் விட நிறைய தடவை இருக்கலாம். மனசு இறுக்கம் இருந்தால் சாவித்ரி ஜெமினி படம் தான். கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை.களத்தூர் கண்ணம்மா இப்படீ ஈஈஇ
நீக்குகல்யாணி மேனனின் மகன் தானே ராஜீவ் மேனன்?மின்சாரக் கனவு.
நீக்குபக்கத்துக் காம்பவுண்டில் தான் இருந்தார்.
ஷூட்டிங்க் கூட நடக்கும்.
பாவம் கல்யாணி மேனன். நல்ல குரல். சுஜாதா படம்
சரிதா எல்லாம் நினைவில்.
டி எம் எஸ் கதையும் பரிதாபம். நானொரு ராசி இல்லா ராஜா
நீக்குபாடல் பாடி, தன் பங்க்களிப்பை முடித்துக் கொண்டார்.
ஆமாம். கல்யாணி மேனன் மகன்தான் ராஜீவ் மேனன்.
நீக்குஆமாம் . அதுதான் அறம் சொல்லும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்கள்!
நீக்குநம்ம வீட்டின் எட்டுத்திசைகளிலும் இருக்கும் திக்தேவதைகள் எப்போதும் "ததாஸ்து" எனச் சொல்லிண்டே இருப்பாங்களாம். நாம் தீய சொற்களைச் சொல்லும்போது அவங்க வாயாலே "ததாஸ்து" என வந்துட்டால் அது சரியல்ல. அப்படியே நடந்துடும் என என் தாத்தா (அம்மாவின் அப்பா) சொல்லுவார்.
நீக்குதங்கவேலு போன்ற நடிகர்கள் காலத்தில் இத்தகைய அறம் கூறும் சொற்களைப் பேசி நடிக்க மாட்டார்கள். ஆனால் பின்னால் வந்த கவுண்டமணி, செந்தில் குழுவோ இவற்றைத் தான் நகைச்சுவை என்னும் பெயரில் ரசிகர்களுக்கு தாராளமாக வழங்கின. கூடவே ஒருவரின் உருவம் பற்றிய கேலி, கிண்டல்கள், மனம் புண்படப் பேசுவது, திட்டுவது என ஆகி இன்றைக்கு அவை எல்லாம் அன்றாடப் பேச்சு வார்த்தையாக மாறிவிட்டன.
நீக்குதிரு பாஸ்கரத் தொண்டைமான் பக்கங்கள் விகடனில் வரும் காலங்கள் அருமை. சிற்பி படம் வரைவார். அந்தச் சிலை தெற்குக் கோவில்களில்
பதிலளிநீக்குநிறைய காணப்படும். குறத்தி காலடியில் இன்னோரு குழந்தை இருக்கும். அந்தக் கூடையில் வேலைப்பாடு அபூர்வம்.
ஆமாம். அது தென்னாட்டு தலங்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஅம்மா.. சென்ற வாரமும் இவரின் ஒரு பகுதி வெளியிட்டிருந்தேன்.
தொண்டைமான் அவர்கள் பிரியாத திருசெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர் தானே. அதனால் அந்தப் பக்கத்துக் கோயில் கலைச்சிற்பங்கள் நிறையவே வரும். ரசிகமணி டிகேசியின் நெருங்கிய நண்பர். குற்றாலம் போனப்போ அவர் வீட்டை (ரசிகமணியின்) தேடிப் பிடிச்சுப் போய்ப் பார்த்துட்டு வந்தோம். சித்திர் சபை நாங்க போனப்போ மோசமான நிலையில் இருந்தது. பின்னால் செப்பனிட்டுவிட்டதாகக் கேள்வி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஅடேங்கப்பா.... கனத்த பதிவு..
பதிலளிநீக்குஹிஹிஹிஹி.. வழக்கம்போல...
நீக்குநேற்றைய ராசி பலன் பகுதியை மீண்டும் பார்க்க வேண்டுகிறேன்!
பதிலளிநீக்குஇப்போத் தான் வந்தேன். கதையை இன்னமும் படிக்கலை. என்றாலும் என் மனதை உலுக்கிய ஒரு கதை. இம்மாதிரித் தாயார்கள், தானும் தன் மற்றக் குழந்தைகளும், அவங்களுக்கு மூத்த பிள்ளை திருமணமே செய்துக்காமல் எல்லாம் செய்யணும் என நினைக்கும் தாய்மார்கள் பலர் உண்டு. ஆனால் கடைசி வரை எதிர்த்துப் போராடி வாழ்க்கையில் ஜெயிக்காமல் நிச்சயித்திருக்கும் பெண்ணிடம் கூட உள்ளதைப் பகிர்ந்துக்காமல் ரயிலில் விழுந்து இறந்து போவான். ராஜம் ஒரு கோழை என்னைப் பொறுத்தவரை. என்னதான் காரண, காரியங்கள் நியாயப் படுத்தினாலும் ராஜத்தின் தாய் ஒரு மோசமான தாய்க்கு உதாரணம். இனி மேலே போய்க் கதையைப் படிச்சுட்டு மத்ததையும் படிச்சுட்டு வரேன். இதுவும் சரி, எம்விவியின் "வேள்வித்தீ"யும் சரி, என்னை உலுக்கிய கதைகள். வேள்வித்தீ தொடராக வந்ததோனு நினைவு. ஆனாலும் கதையை இன்னிக்கும் மறக்க முடியாது.
பதிலளிநீக்குஒரு உண்மை சொல்லட்டுமா? நான் அந்தக் கதை படித்ததில்லை! இணையத்தில் இதைப் பார்த்தேன், பகிர்ந்தேன். அஷ்டே! உங்கள் நினைவுகளை கொந்தளிக்க வைத்தேன்!!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎப்போவானும் அபூர்வமாய் நல்ல ஓட்டுநர்கள் அமைவதுண்டு. அப்படி எங்களுக்கு இருவர் வாய்த்தார்கள். ஒருத்தர் ரங்கராஜன் என்பவர். ட்ராவல்ஸ் கம்பெனியில் வேலை செய்தார். ஆனாலும் சொந்தப் பிள்ளை போல எங்களுடன் பழகினார். இன்னொருத்தர் ஸ்ரீரங்கத்திலேயே சங்கரன் என்னும் இளைஞர். அவருடைய காரில் பயணம் செய்வது என்றால் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் கிடைக்கும் விதத்தில் அமைத்திருப்பார். உள்ளே கால்கள் வைத்துக்கொள்ள நிறைய இடம், மிதமான ஏசி. துரிதமாகவும் அதே சமயம் கவனமாகவும் வண்டி ஓட்டுவார். திருச்சியிலிருந்து காலை நான்கு மணிக்குக் கிளம்பினால் சரியாக ஏழரை மணிக்குத் தாம்பரம் வந்துவிடுவார். கடைசியாக செப்டெம்பர் 23 இல் அவர் காரில் சென்னைக்குப் போனோம். அது தான் கடைசியாக நாங்க வெளியூர் போனது, கார் பயணம் எல்லாமும். பின்னர் மருத்துவமனை வாசம் தான். அதுக்காக அழைத்த கார்கள் தான். :(
பதிலளிநீக்குசொல்லிக்கொள்ளும்படி சில ஓட்டுனர்கள் அமைந்தததுண்டு. என் முன்னாள் ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் கூட என்னோடு இருந்தவரை நல்ல பிள்ளையாக இருந்தார். இன்றும் அவர் மனைவி அதைச் சொல்லிக் காட்டுவார்!
நீக்குகண்ணதாசன் கவிதைக்கு விமரிசனம் தேவை இல்லை. எப்போதும் போல் பொருள் பொதிந்த அருமையான கவிதை. "பாஹே" அவர்களின் கவிதையை இன்று படிக்க முடியலை. எழுத்துப் புரியவில்லை. மத்தியானமாப் பெரிசு பண்ணிப் பார்க்கணும். டி.எம்.எஸ். காணொளியையும் மத்தியானமாப் பார்க்கிறேன். ஜிவாஜியின் இந்தப் படம் முகநூலிலா? எனக்கு வரலை. ஒருவேளை பகிர்ந்தவர் நண்பர்கள் பட்டியலில் இல்லை போல. பானுமதியின் குறுக்கெழுத்து விடைகளில் ஒரு சில தவிர்த்து மற்றவை தப்பு. ஆனால் அனுப்பவெல்லாம் இல்லை. நானே எழுதி வைச்சுக்கொண்டிருந்தது தான்.
பதிலளிநீக்குஎம்.வி.வியின் விமரிசனத்துக்குப் பதிலைச் சொல்லிட்டேன். ஆனால் கதையின் சுட்டி? கொடுக்க மறந்துடுத்தா? அல்லது எனக்குக் கிடைக்கலையா? தொண்டைமான் அவர்களின் எழுத்தும் இந்தப் பதிவும் முன்னால் படிச்சேனா நினைவில் இல்லை. தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் தலைப்பில் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் வந்திருக்கும். நாங்க போனப்போ அதைத் தான் நினைச்சுண்டேன். இந்தக் குறத்தியைப் படம் எடுப்பதற்குள்ளாகக் கோயில் ஊழியர் வந்துட்டார். :(
பாஹே கவிதையை எடுத்து எழுதுங்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
நீக்குஎம் வி வி கதைக்கு சுட்டி எல்லாம் கிடையாது. விமர்சனம் மட்டும்தான்.
குறுக்கெழுத்து போட்டியை சூர்யா, நான், பானு அக்கா தவிர யாரும் லட்சியம் செய்வதில்லை என்பதால் அதை டிராப் செய்துவிட ஐடியா.
நான் சில முறை கிருஷ்ணாபுரம் சென்றிருக்கிறேன். ஒரு தடவை மனைவியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு படங்கள் எடுத்தேன். இன்னொருமுறை வளைத்து வளைத்து படங்கள் எடுத்தேன்.
நீக்குகீசா மேடத்துக்கு மாத்திரமே இப்படியெல்லாம் நிகழ்கிறது.
மிஸ்ஸியம்மா படம் வந்தப்போவெல்லாம் நான் தாத்தா வீட்டில் தான் இருந்திருக்கேன். மீ த குழந்தை ஒன்லி. அம்மாவுக்குத் தம்பி வயிற்றில் இருந்திருக்கார். நிறைமாத கர்ப்பிணி. ஆகவே இந்தப்படத்துக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். யாருக்கோ மதுரையில் படம் வந்த தியேட்டரில் சிரிச்சுச் சிரிச்சு பிரசவமே ஆகிவிட்டதாம். அதனால் சொல்லி இருக்காங்க. தாத்தா/பாட்டி/மாமாக்கள்/சித்திகள் எல்லாம் அப்போ மதுரை கிருஷ்ணராஜபுர அக்ரஹாரத்தில் இருந்திருக்காங்க. பக்கத்திலேயே தமிழ்ச்சங்கம் சாலை, சந்தை?திலகர் திடல் என்பாங்க. எல்லாம் இருந்தன. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கு. அப்போக் கொள்ளுப்பாட்டி அதாவது தாத்தாவின் அம்மா, கொள்ளுத்தாத்தா அதாவது பாட்டியின் அப்பா ஆகியோர் இருந்தனர்.
பதிலளிநீக்குசிரிச்சு சிரிச்சு பிரசவமே ஆகி விட்டதா? பார்றா.... லேபர் வார்டில் மிஸ்ஸியம்மா படம் போட்டால் வேலை சுளுவாகுமே!! :))
நீக்குஅப்படீன்னாக்க தொந்தி உள்ள தாத்தாக்களெல்லாம் படத்தைப் பார்த்தால் என்னவாகும்னு யாரு சொல்லுவா? எடை குறையுமா?
நீக்குமிஸ்ஸியம்மா அதன் பின்னர் பல முறை மதுரையில் வந்திருக்கு. முக்கியமா மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி முனைக்குக் கொஞ்சம் தள்ளி சம்பந்த மூர்த்தித் தெருவுக்கு அருகே இருந்த பழனி என்ற சந்திரா தியேட்டரில் காலைக்காட்சி (அப்போவே) போடுவாங்க. அதில் வந்திருந்தாலும் எனக்குப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. பின்னாட்களில் தொலைக்காட்சிப் பெட்டி வந்து அதில் போட்டப்போத் தான் பார்த்தேன். ஆனால் அதன் பிறகு வந்த பாவ மன்னிப்பு, பாகப்பிரிவினை, போன்ற படங்கள் பார்த்திருந்தேன். எல்லாம் ஓசிப்பாஸ்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபிரபலங்கள் எல்லாம் பழக்கம். நடிகை நடிகையர் வீட்டுக்கு எதிரே உள்ள பில்டிங்குக்கு வந்து சென்றார்கள். வீட்டுக்கே சித்தப்பாவைப் பார்க்க பிரபலங்கள்... ம்ம்ம்ம்.. கீதா அக்கா நீங்க லக்கிதான்.
நீக்குகமலா, ஜேகேசி, தி/கீதா (லீவ் முடியலையா)ஜீவி சார், இன்னும் பயண்மா?) இப்படி இன்னும் பலர் இப்போல்லாம் வருவதில்லை.
பதிலளிநீக்குமாதேவி வருகிறாரா? அவர் இருக்கும் பகுதியில் வெள்ளப் பிரச்னை இருக்காதுனு நம்பறேன். பின்னர் வரேன்.
வணக்கம் சகோதரி
நீக்குதினமும் அதுவும் நான் வாராத நாட்களை நினைவு கூர்ந்து என்னைப் பற்றி அன்புடன் அக்கறையுடன் விசாரிக்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களுக்கு என் மேல் உள்ள அன்பை நினைத்து பெருமிதமும் அடைகிறேன். மிக்க நன்றி சகோதரி.
எனக்கு இன்று காலையில் எப்போதும் போல் வர இயலவில்லை. அதனால் இப்போதுதான் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். பதிவைப் புரட்டிய பின் கருத்துக்களை ஒன்று விடாமல் படிப்பது என் வாடிக்கை. அதன்படி தங்களின் இக்கருத்தும் என் கண்களில் பட்டது. உங்களுக்கு என் அன்பான நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தினமும் வருகிறேன். கருத்து கூறுவதில்லை. தற்போதெல்லாம் தலைமை செயலகம் லோ பிரஷர் என்ற எரிபொருள் பற்றாக் குறையினால் செயல்பாடு தடுமாறுகிறது.
நீக்குJayakumar
நானும் கூட இவர்களை எல்லோரையும் மிஸ் செய்கிறேன். JKC உற்சாகமாக படித்து கருத்து சொல்வார்.. ஜீவி ஸார் ஆளையே காணோம். கமலா அக்கா விசிட்டிங் ப்ரொபஸர் ஆயிட்டாங்க.. பானு அக்கா அவ்வப்போதுதான் எப்போதுமே வருவாங்க... கீதா வேறு வேலையில் பிஸி...
நீக்குநானும் லீவு போட்டு விட்டு இரண்டு மாதம் கழித்து வந்து ஜாயின் பண்ணலாமான்னு பார்க்கறேன்.
அடாடா.. நீங்கள் எதற்காக லீவெல்லாம் போட வேண்டும். நீங்கள்தான் எபிக்கு உயிர்நாடியே. . இப்போதே உங்கள் வீட்டின் விஷேடங்களுக்காக அடிக்கடி காணாமல் போகிறீர்கள். அது இயற்கை நியதி. மற்றபடி இரண்டு மாதமெல்லாம் அதிகம். கல்யாண பிஸிகள் நன்றாக நடைபெற்றதும் தினமும் வந்து விடுங்கள். நாங்களும் இனி விடுமுறைகள் ஏதும் எடுக்காமல் தினமும் வந்து விடுவோம். சரியா.?
நீக்கு//நாங்களும்// இந்த நாங்களும், யார் யார்?
நீக்குஹா ஹா ஹா. என்னையும் சேர்த்து, குறிப்பிட்ட அந்த மூவரும். :)) நீங்கள் பயணத்தில் அடிக்கடி சென்று விடுவதால், / விட்டால் நீங்களும், அந்த "நாங்களில்" சேர்த்தி.
நீக்கு//பானு அக்கா அவ்வப்போதுதான் எப்போதுமே வருவாங்க...// நான் லேட்டாக வருவேனே ஒழிய வராமல் இருப்பது துர்லபம். இருந்தாலும் என்னைப் பற்றி இப்படி ஒரு கருத்து. ததாஸ்து என்று சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது.
நீக்குபொழுது போகாத பொம்மு போல கடந்த 15 நாட்களில் எத்தனை நாட்கள் நான் கருத்து சொல்லியிருக்கிறேன் என்று கணக்கு பார்த்தேன். 9 நாட்கள் சொல்லியிருக்கிறேன். ஆறு நாட்கள் மட்டுமே ஆப்சென்ட். அதிலும் செவ்வாய் கிழமைக்கான கருத்தை புதனில் சொல்லியிருந்தேன். அப்படியிருக்க அவ்வப்போதுதான் எப்போதுமே வருவாங்க என்பது very disheartening :((
நீக்குநான் கருத்து மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவேன், அதை ஒரு உரையாடலாக மாற்றுவதில்லை. ஒருவேளை கருத்தை கவரும் வண்ணம் கருத்து கூற தெரியவில்லையோ என்னவோ?
Cool cool பானு அக்கா.. நான் அப்படி சொல்ல வரவில்லை. நீங்கள் கிர்ர்ர்ர் என்றெல்லாம் சொல்லி பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தால் உங்களுக்கு வருத்தமாகி விட்டது போல.. மன்னிச்சுக்கோங்க..
நீக்குநான் பாட்டுக்கு ஏதோ ஆதங்கத்தில் யாரையுமே காணோமேனு ஸ்ரீராம் பா.வெ..வும் எப்போதானும் வருவார்னு சொல்ல அது பானுமதியை எங்கேயோ தாக்கி வருந்த வைச்சிருக்கு. கஷ்டமாக இருக்கு. நானெல்லாம் நாள் கணக்கில்/மாதக்கணக்கில் எல்லாம் வராமல் இருந்திருக்கேன். இப்போவும் பலர் பதிவுகளுக்குப் போவதில்லை. :( இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க பா.வெ. மன்னிச்சுடுங்க. :))))நீங்க எவ்வளவு பிசினு எனக்குத் தெரியும். கனடாவில் இருந்தால் கூட வட அம்பேரிக்க மத்யமர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஏதேதோ சந்திப்பெல்லாம் நடத்தறீங்க. ஒருங்கிணைப்பாளர் நீங்க தான்னு நினைக்கிறேன். அதோடு யூ ட்யூப் சானல், உங்கள் வலைப்பக்கம் பதிவு, இங்கே வருவதுனு உங்களை முழுசாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் அவ்வப்போது வர முடியாமல் போவது இயல்பான ஒன்று.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வெள்ளி சிதறல்கள் அருமை. ஒட்டுனரின் பண்புகளை தெரிந்து கொண்டேன். வழக்கமாக எங்கு சென்றாலும் ஒரே ஓட்டுனரை வைத்துக் கொண்டால் நலந்நான். .! தி. லி யில் முன்பு எங்கள் அண்ணா அப்படித்தான் வைத்துக் கொள்வார்கள். எங்கு சென்றாலும் அவர்தான் வருவார். எங்கள் வீட்டுக்கும் தவறாது வரும் அவருக்கும் (நாங்கள் எங்கு, எந்த வீட்டிலிருந்தாலும்) மரியாதை செய்வோம். அண்ணாவும் அவரை நன்கு கவனிப்பதிலேயே கவனம் . (உணவு, படுக்கை வசதிகள்) கொள்வார்கள்.
குறுக்கெழுத்துப் போட்டி விடை வெளியான பின் பழைய பதிவை பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்காது. இனி வரும் போட்டிகளில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.இக் குறுக்கெழுத்துப் போட்டிக்காக உழைக்கும் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சிவாஜி நாகேஷ், பாலாஜி செய்திகளுக்கு நன்றி. வைத்தி புரிந்தது. முதலில் சிவாஜி புரியவில்லை. காணொளிகள் பார்க்கிறேன்.
எம். வி அவர்களின் இந்தக்கதை படித்ததாக நினைவு. பைத்தியகார பிள்ளைய கதையின் தலைப்பு. அம்மாவின் கட்டுப்பாடுகளும், மகனின் மனத்தவிப்பும்... கதை மிக சோகமாக முடியும்.
உங்கள் தந்தையின் பக்கமும் அருமை. சிறந்த கவித்துவம் கை வரப் பெற்றவர். நீங்கள் வாரம் ஒருமுறை உங்கள் பதிவில் அவரை கௌரவிக்கும் செயல் போற்றத்தக்கது. தங்களது செயலுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கலந்து கட்டி எல்லாவற்றுக்கும் எல்லாவற்றையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா அக்கா.
நீக்குகதை இப்படியும் தாயா என எண்ணத் தோன்றுகிறது..
பதிலளிநீக்குபடம் பார்த்ததில்லை பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.
வாங்க மாதேவி. நன்றி.
நீக்குhttps://engalblog.blogspot.com/2022/05/positive-jc.html#more
பதிலளிநீக்குஆ... ஆ.... மன்னிச்சுக்குங்க பாஸ்... நினைவில்லை!
நீக்குGeetha Sambasivam21/5/22 7:19 AM
நீக்கு"பைத்தியக்காரப் பிள்ளை" தலைப்பைப் பார்த்ததுமே கதை எது என ஊகித்துவிட்டேன். இதையும் எம்..வி.வெங்கட்ராமின் "வேள்வித் தீ:" நாவலையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. மனதை உலுக்கிப் பல நாட்கள் வேதனையில் ஆழ்த்தியவை. எழுத்தாளருக்கு இளகிய மனதே இல்லையா என எண்ண வைத்தவை. ஜேகே சாரின் தேர்வுகள் அனைத்துமே வித்தியாசமாகவும் அதே சமயம் மனதைத் தொடுவதாகவும் உள்ளன. ஆழ்ந்த படிப்பறிவு இருந்தால் ஒழிய இப்படித் தேர்வெல்லாம் செய்ய முடியாது. _/\_
பதிலளி
பதில்கள்
Jayakumar Chandrasekaran21/5/22 4:57 PM
பாராட்டுகளுக்கு நன்றி.
Geetha Sambasivam today!
//அந்தப் பதிவுக்கு நான் எழுதிய கருத்தும் திரு ஜேகேசி அவர்களின் பதிலும். //
Where is Nellai today? Travelling?
நீக்குநெல்லை, காலையில் என்னவோ எழுந்துகொள்ள 5:10 ஆகிவிட்டது. பிறகு சுதர்ஷன் க்ரியா 45 நிமிடங்கள். பிறகு 1 மணிநேர யோகா. பிறகு 10 கிமீ நடை. 40 நிமிடங்கள் ஜிம். பிறகு குளித்துவிட்டு பிரபந்த வகுப்பு. பிறகு மார்க்கெட்டுக்குச் சும்மா போனேன், நுங்கு, பலாப்பழம் வாங்கிவந்தேன் (நான் சாப்பிட). காலையில் முதல் ஆளா எவ்வளவு படிக்கிறேனொ அவ்வளவுக்கு கருத்து போட்டுவிடுவேன். இன்று நேரமில்லை, அதனால் ஒரே கருத்துதான்.
நீக்குமூன்று நாட்கள் சென்னை பயணம்... அநியாயத்துக்கு இப்போ பெங்களூர்ல மேக மூட்டமா இருக்கு. சென்னையை நினைத்தால் கலங்குது.
நீக்குமேக மூட்டம் வரும் நல்ல மழையை குறிக்கிறது. சென்னையில் இன்று நல்ல மழையோ என்னவோ.?
நீக்குகஹ மேடம்... நம்மூர்ல வெயில் குறைய ஆரம்பிச்சிருச்சு. சென்னைல வடாம் காயப்போடற வெயில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு.
நீக்குநேற்றெல்லாம் சென்னையில் வெயில் இல்லை. மேகமூட்டம். ஆனால் மழையும் இல்லை. இரண்டு நாளில் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒரு சிறு குழப்பம். இந்த மாத அமாவாசை நாளையா ? இல்லை நாளை மறுநாளா ? ஒரு குழப்பம் நிலவுகிறது. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நலம். செய்வீர்களா.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாளை தான் என்று காலண்டர் சொல்கிறது , கூகுளும் மே 16 என்று தான் சொல்கிறது கமலா. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
நீக்குநன்றி சகோதரி. நானும் அப்படித்தான் பஞ்சாங்கம், பல வகை காலண்டரகளில் பார்த்து தெளிவடைந்தேன். ஆனால் சென்னையில் நெருங்கிய உறவினர் அவரது வீட்டு சாஸ்திரிகள் ஒருவர் நாளை மறுநாள்தான் அமாவாசை தர்பணத்திற்கு உகந்தது எனவும், நாளை சூன்ய திதி எனவும் சொன்னதால் ஒரு குழப்பம். அதை தெளிவுபடுத்திக் கொள்ளவே இங்கும் கேட்டேன். சென்னை வாழ் பதிவர்கள் யாரேனும் குழப்பம் தீர்த்தால் சரிதான். என்னவோ இந்த தடவைதான் இக்குழப்பம். நன்றி சகோதரி.
நீக்குஆமாம், கமலா. நாளை சூன்ய திதிதான். அதனால் தான் மாமாவின் ஆப்திகம் வைகாசி மாதக் கடைசிக்குப் போய்விட்டது. நாளை ரொம்பவும் சாஸ்திரம் பார்ப்பவர்கள், இன்னும் சொல்லப் போனால் வீட்டு சாஸ்திரிகள் எல்லாம் தர்ப்பணம் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது பற்றி எனக்குப் பல ஆடியோ, வீடியோக்கள் வந்தன. எல்லாத்தையும் படிச்சுட்டுப் பார்த்துட்டு டெலீட் செய்துட்டேன் யாருக்கு ஆர்வம் இருக்கப் போகிறது என்னும் நினைப்பில். என்றாலும் நீங்கள் மிகவும் சாஸ்திரம் அறிந்த நபர் யாரிடமானும் கேட்டுக் கொள்ளவும். நாளை தர்ப்பணம் செய்வது உகந்தது அல்ல.
நீக்குநாளைத்தான் நான் தர்ப்பணம் செய்யப்போகிறேன்.
நீக்குபோன மாதத்தை அதாவது சித்திரையை "அதிக மாசம்" என்றார்கள். அதனால் இம்முறை இரண்டு அமாவாசைகள் ஒரெ மாதத்தில் வருகின்றன. பஞ்சாங்கங்களில் முஹூர்த்த நாட்கள் கூட இருக்காது. திருமணம் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தே ஆகணும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அபிஜித் நக்ஷத்திரத்தில் பண்ணிக்கலாம். வேறே வழி இல்லைனா இது.
நீக்குஇந்த அதிக மாசம் என்பது எல்லாப் பஞ்சாங்கக்காரர்களுக்கும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசின் அதிகாரபூர்வமான த்ரிகணிதப் பஞ்சாங்கமும் "அதிக் மாஸ்" என்றே குறிப்பிடுகிறது. ஆகவே இந்தியா முழுதும் உள்ள சநாதனவாதிகள்/இந்துக்களுக்கு இது பொருந்தும்.
நீக்குநாளைதான் அமாவாசை. அது சூன்ய திதியில் வருகிறது. அதனால் பலர் தர்ப்பணம் செய்யும் சங்கல்பத்தை நாளைக்குள்ள அமாவாசைக்குக் கொடுக்கவில்லை. நான் வாத்தியார்களைச் செக் பண்ணினேன். அவர்கள் வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிறது. இரண்டு நாட்களிலும் தர்ப்பணம் பண்ணணும் என்றார். அதனால் நாளை தர்ப்பணம் உண்டு.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநாங்களும் இங்கு பல சாஸ்திரிகள் கண்டும், தொலைப்பேசியில் கேட்டும் விளக்கம் பெற்றோம். .மேலும், இங்கு நான் சந்தேகங்களைச் சொல்லி கேட்டவுடன் வந்து விளக்கமான பதில்கள் தந்த சகோதரர்கள் நெ. தமிழருக்கும், ஸ்ரீராம் சகோதரருக்கும் சகோதரி கீதா சாம்பசிவம், சகோதரி கோமதி அரசு அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
@Kamala Hariharan, //நாளை அமாவாசை தர்ப்பணம் உண்டு. ச்ராத்த திதிக்குதான் சூன்ய திதி கணக்கு. தர்ப்பணத்திற்கு அல்ல//
நீக்குமுகநூலில் கேட்டிருந்தேன், நண்பர் ஒருத்தர் விசாரித்துச் சொல்லி இருக்கார். ஆகவே தர்ப்பணம் பண்ணுபவர்கள் ப்ண்ணலாம். எங்களுக்குத் தான் அடுத்த திதியில் ஸ்ராத்தம் பண்ணணும். :)
வணக்கம் சகோதரி
நீக்குஇன்றுதான் அமாவாசை என நாங்களும் விசாரித்ததில் தெரிய வந்தது. தாங்களும் எனக்காக தொடர்ந்து பலவிடங்களிலும் விசாரித்து தந்த தகவல்களுக்கும் மிக்க நன்றி சகோதரி . மாமாவின் (ஆப்திகம்) ஸ்ராத்தம் சமயம் தாங்கள் இந்தியா வருவீர்களா? விளக்கமாக சொன்னதற்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விஷயம் செட்டிலாகி ஒருவழியா ஒரு முடிவுக்கு வந்தா சரிதான்.. என்ன சொல்றீங்க!!
நீக்குநீங்க சொன்னா சரிதான் சார்"//
பதிலளிநீக்குதிரும்ப திரும்ப டிரைவர் "நீங்க சொன்னா சரிதான் "என்று சொல்வதை கேட்டு உங்களுக்கு சிரிப்பதா அவர் மேல் கோபபடுவதா என்ற நினைப்பு வந்து இருக்கும்.
ஆமாம் அக்கா. பணிவா, பகடியா என்று!
நீக்குவருவாய் என நான்' பாடல். பாடியவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை ஒரு படத்தில் கதை ஆக்கினார்கள். அம்பிகா பாடுவார் , அதை கேட்க மோகன் காரில் வரும் போது விபத்து ஏற்பட்டு இறந்துவிடுவார். படம் பேர் நினைவு இல்லை.
பதிலளிநீக்குஅங்கேயே கொடுத்திருக்கிறேனே.. நான் பாடும் பாடல்
நீக்குஅறம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி சோ சொன்னது சரிதான். முன்பு வாலி கூட இப்படி சொல்லி இருந்தார். தன் பாடல்களில் அறம் பாடியதால் ஏர்பட்ட விளைவுகளை
பதிலளிநீக்குஅதற்குதான் முன்னோர்கள் நல்லதே பேச வேண்டும், நினைக்கவேண்டும் என்றார்கள்.
வானில் பறவை அப்படியே ஆகட்டும்" (ததாஸ்து) என்று சொல்லும் என்பார்கள்.
ஆமாம். நல்லது சொன்னால் நடக்கிறதோ இல்லையோ, தவறாகச் சொன்னால் அவை தவறாது நடந்து விடுகின்றன!!
நீக்குகதையை படித்து இருக்கிறேன் செளராஷ்டிர மக்களைப்பற்றிய கதை மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறேன் கதையை படித்து விட்டு.
பதிலளிநீக்குகவிதைப் பக்கம் : கண்ணதாசன் பல பாடல்களில் இந்டஹ் வரிகளை கேட்டு இருக்கிறேன்.
//சும்மா சட்டத்தையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காமல் மனிதாபிமானத்தையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காரியங்களைக் கவனித்தால் எந்தச் சிக்கலையும் எளிதாகத் தீர்க்கலாம் என்பது என் நம்பிக்கை.//
பாஸ்கர தொண்டைமான் நம்பிக்கை நன்றாக இருக்கிறது.
JKC ஸார் நமது தளத்திலேயே நான் படிச்ச கதையில் அது வந்திருக்கிறது என்று மேலே சுட்டிக் காட்டி இருக்கிறார்.
நீக்குஅப்பா குற்றாலம் போகாமலேயே குற்றாலம் அழகை பாடலில் கொண்டு வந்து விட்டார்.
பதிலளிநீக்குமிஸ்ஸியம்மா எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. பாடல்களும் , அனைவரின் நடிப்பும் பிடிக்கும். இன்று பாடலை கேட்டேன். ஒரு பின்னூட்டத்தில்" வஞ்சியரின் வார்த்தைக்கு அர்த்தமே வேறுதான்" என்று பதில் கொடுத்து இருந்தீர்கள் அப்போதே இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
ஆஹா.. நினைவு வைத்திருக்கிறீர்கள். அதேதான் என்னையும் இந்தப் பாடலைப் பகிர வைத்தது!
நீக்குகுற்றாலம் போகாமலேயே குற்றாலம் பற்றிய வர்ணனை அழகு. ஹிஹி மீ த கைக்குழந்தை இந்தக் கவிதை எழுதினப்போ. :)))))
பதிலளிநீக்கு:))
நீக்குநான் ஒரு ராசியில்லா ராஜா பாடலைப் பாடிய டி எம் எஸ் மட்டுமில்லாமல் அதிலே நடித்த நடிகர் சங்கர் கூடப் பிரபலம் ஆக முடியவில்லை. பாடலின் ராசிதான் என்பார்கள். கல்யாணி மேனன் பற்றி இப்போத் தான் படிச்சுத் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅந்தப் பாடலால் சங்கர் பிரபலமாகவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவர் நடிப்பு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கக் கூடியவர்!
நீக்கு