துபாய் சாக்லேட்
தேவையான பொருள்கள்:
பிஸ்கெட்டுகள் - (க்ரீம் பிஸ்கெட் தவிர எந்த பிஸ்கெட்டுகள் வேண்டுமனாலும் எடுத்துக் கொள்ளலாம்)
டார்க் சாக்லேட் பார்(Dark chocolate bar) - 1
பிஸ்தா க்ரீம் அல்லது ஊற வைத்து அரைக்கப்பட்ட பிஸ்தா பருப்புகள்
பூசணி விதைகள் - சிறிதளவு
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை:
ஒருஅகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெய் தடவி க்ரீஸ் செய்து கொள்ளவும். அல்லது பட்டர் பேப்பர் போட்டுக் கொள்ளலாம்.
பிஸ்கெட்டுகளை பொடி செய்து அதோடு உருக்கிய நெய்யை கலந்து அந்த பொடியை க்ரீஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் போடவும். இதை ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
பொடி செய்த பிஸ்கெட் தூளின் அளவு நாம் வைக்கும் பாத்திரத்தில் 1/2 இஞ்ச் இருக்க வேண்டும். 1/2 இஞ்ச் என்பது ஒரு ரஸ்கின் அளவு இருக்கும்.
அதன் மீது பிஸ்தா க்ரீம் அல்லது நன்றாக அரைக்கப்பட்ட பிஸ்தா கலவையை சீராக பரப்பவும்.
பின்னர் அதை ஃப்ரீசரில் 30 நிடங்கள் வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதன் மீது இன்னொரு பாத்திரம் வைத்து அதில் முதலில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, அது உருகியதும் அதில் சாக்லேட் பாரை போட்டு உருக்கவும். மைக்ரோ வேவ் அவனிலும் உருக்கலாம், ஆனால் மொத்தமாக அப்படியே உருக்காமல், முதலில் 10 செகண்டுகள் உருக்கி, பின்னர் மீண்டும் 10 செகண்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக உருக்க வேண்டும். இப்படி செய்யாமல் ஒரேயடியாக 2 நிமிடம் என்று கொடுத்தால் சாக்லேட் கருகி விடும்.
ஃப்ரீசரிலிருந்து எடுத்த பிஸ்கெட் கலவை மீது granola தூள், பூசணி விதைகள் போன்றவற்றை தூவ வேண்டும்.
அதன் மீது உருக்கிய சாக்லேட் கரைசலை சீராக ஊற்றி மீண்டும் ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
நன்றாக செட் ஆனதும் பட்டர் பேப்பரோடு வெளியே எடுத்து துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.
உறைந்த சாக்லேட் மேல் பிஸ்தா சாஸ் அல்லது க்ரீம் கொண்டு அலங்காரம் செய்யலாம்.
பிஸ்கெட் வைத்து செய்வதை விட ப்ரௌணி கேக் செய்து அதன் மீது பிஸ்தா மற்றும் வறுத்த சேமியா பரப்பி அதன் மீது சாக்லேட் குழம்பு ஊற்றுவதுதான் அசல் துபாய் சாக்லேட்டாம், மகள் சொன்னாள்.
சும்மா சொல்லக் கூடாது, சுவை அபாரம். இன்னும் ப்ரௌணி கேக்கில் செய்திருந்தால் வேறு லெவலுக்கு சென்றிருக்கலாம்.
இந்த துபாய் சாக்லேட் என்பது இங்கிருக்கும் ஸ்டார் பக்ஸ் போன்ற பெரிய காபி கடைகளில் ஆனை விலைக்கு விற்கப்படும் வஸ்து. அதை குழந்தைகளுக்காக என் மகள் செய்தாள்.
=========================================================================================
முத்துலிங்கம் எம் ஜி ஆர் வாலி
"அரச கட்டளை' படத்தில் ஒரு காட்சி.
அந்த நாட்டுமன்னன் ஒரு சர்வாதிகாரி. அவனுடைய ஆட்சியைக் கண்டித்தும் அவனுக்கு எதிராகவும் மக்கள் மனதில் புரட்சிக் கருத்துக்களை தன் பாடல் மூலம் விதைக்கிறாள் ஒரு நாட்டியக்காரி. இதைக் கேள்விப்பட்ட சர்வாதிகாரி, "நீ ஆடல் பாடலை நிறுத்த வேண்டும். இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று ஆணையிடுகிறான்.
அந்த அரசாணையை ஒரு படை வீரனிடம் கொடுத்தனுப்புகிறான். அந்த ஓலையைப் பறித்துக் கொண்ட கதாநாயகன், "எல்லாருடைய கட்டளைக்கும் மேற்பட்ட ஒரு கட்டளை இருக்கிறது. அதுதான் இறைவன் கட்டளை. இறைவன் கட்டளைக்கு முன்னால் எந்த சர்வாதிகாரியின் கட்டளையும் நிற்காது. இதை உன் அரசனிடம் போய்ச் சொல்'' என்கிறான். இதுதான் காட்சி.
"இது நான் பாடுவது போல இருக்க வேண்டும். இங்கேயே பல்லவி எழுதுங்கள்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். வாலியும் அதற்குத் தகுந்தாற்போல் பல்லவி எழுதிக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் "என்னை இழிவுபடுத்த வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தீர்கள் வாலி?'' என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.
உடனே வாலி, உடல் வியர்த்து வெலவெலத்துப் போய், "நீங்கள் சொன்ன காட்சிக்கு நான் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன். இதில் என்ன தவறு?'' என்று கேட்டிருக்கிறார்.
"காட்சிப்படி சரிதான். ஆனால் இதில் வேறொரு கருத்தும் வருகிறதே அது புரியவில்லையா உங்களுக்கு? பல்லவியை நீங்களே படியுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.
ஆண்டவன் கட்டளை முன்னாலே - உன்
அரச கட்டளை என்னாகும்
என்று வாலி பல்லவியைப் படிக்கத் தொடங்கினார்.
"நிறுத்துங்கள். நம் படத்திற்குப் பெயர் என்ன?'' இது எம்.ஜி.ஆர். கேள்வி
"அரச கட்டளை'' - இது வாலியின் பதில்.
"சிவாஜி நடித்து நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம் ஆண்டவன் கட்டளை. இது உங்களுக்குத் தெரியுமல்லவா?''
"ஆமாம். தெரியும்.''
"அப்ப, ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும் என்றால் சிவாஜி நடித்த "ஆண்டவன் கட்டளை' படத்திற்கு முன்னாலே நீ நடிக்கும் 'அரச கட்டளை'ப் படம் நிற்க முடியுமா என்று கேட்பது போல் இல்லையா?''
"அண்ணே, நான் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. காட்சிக்கு இது சரியென்று நினைத்து எழுதினேன், மன்னிக்க வேண்டும். வேறு பல்லவி எழுதுகிறேன்'' என்று வாலி சொல்லியிருக்கிறார்.
"வேண்டாம். இனிமேல் இந்தப் படத்திற்கு நீங்கள் எந்தப் பாட்டும் எழுத வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு கவிஞர் நா.மா.முத்துக்கூத்தனை அழைத்து, காட்சியை விளக்கிப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
உடனே முத்துக் கூத்தன்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடிவா ஆடிவா ஆடிவா
ஆடப் பிறந்தவனே ஆடிவா
என்ற பல்லவியை எழுதினார். இந்தப் பாடல் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடலாக இன்றும் விளங்குகிறது.
கவிஞர்களை விட எம்.ஜி.ஆர். பாடல்களில் எவ்வளவு நுட்பமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
-கவிஞர் முத்துலிங்கம்
நன்றி: தினமணி
துபாய் சாக்லேட் பெயர் பார்த்ததும் கேள்விப்பட்டதே இல்லையே என நினைத்தேன். சமீபத்தில் மனைவியின் பிறந்த நாளுக்காக இது ஒரு பாக்கெட் சிறு சிறு துண்டுகளாக வந்திருந்தது. நன்றாக இருந்தது. மனைவிக்கு மிகவும் பிடித்திருந்ததால் நான் ஒரு பிஸ்கட்/சாக்லெட் மாத்திரம் எடுத்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குபுதிய செய்முறை
//சமீபத்தில் மனைவியின் பிறந்த நாளுக்காக இது ஒரு பாக்கெட் சிறு சிறு துண்டுகளாக வந்திருந்தது.// அப்படியா? நம் ஊரில் கிடைக்கிறதா? பெயர் என்ன?
நீக்குஇதை வாலி வேறு விதமாக்க் கூறியிருந்தார். முத்துலிங்கம் ஹார்ஷாக எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குஎம்ஜிஆர் அப்ரூவல் இருந்தால்தான் அவர் படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவுக்குச் செல்லும். தன்னுடைய இமேஜை பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டவர் அவர். இதில் ஆச்சர்யம் என்னன்னா, நாற்பது வயது வரை மிகச் சாதாரண நடிகராக நல்ல வாய்ப்பில்லாமல் இருந்தவர் அவர்.
கடவுள் நினைத்தால் ஒருவனின் வாழ்க்கை எங்கோ போய்விடும், நல்ல நேரம் வரும்போது. வாழ்க்கையில் உயரத்துக்குச் சென்றவர்களின் வாழ்க்கை கூறும் செய்தி இது.
/கடவுள் நினைத்தால் ஒருவனின் வாழ்க்கை எங்கோ போய்விடும், நல்ல நேரம் வரும்போது. வாழ்க்கையில் உயரத்துக்குச் சென்றவர்களின் வாழ்க்கை கூறும் செய்தி இது./
நீக்குஉண்மை. அப்படி உயரத்திற்கு சென்றவர்களை யாராலும் தடுக்கவும் முடியாது. ஏனெனில் அது கடவுளின் அனுக்கிரகம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான துபாய் சாக்லெட் நன்றாக உள்ளது. படங்கள், செய்முறைகள் அருமையாக உள்ளது. நானும் ஒருநாள் இப்படி செய்து பார்க்கிறேன். தங்கள் மகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமக்கள் திலகத்தின் படங்களில் அவரின் பாடல்கள் பற்றிய கவனிப்பை படித்துத் தெரிந்து கொண்டேன். அதனால்தான் அவர் பாடல் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குதுபாய் சாக்லேட் தயாரிப்பு முறை அருமை...
பதிலளிநீக்குஇருந்தாலும் பிஸ்கேட்களில் கலக்கப்பட்டிருக்கும்
இரசாயனங்கள் நல்லதல்ல என்கின்றதே மருத்துவ உலகம்...
//துபாய் சாக்லேட் தயாரிப்பு முறை அருமை...// நன்றி
நீக்குஉணவுப் பொருள்களில் கலக்கப்படும் ரசாயனங்கள் நல்லதில்லை. எப்போதாவது ஒரு முறைதானே சாப்பிடுகிறோம்.
எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியாகத்தான் செயல்பட்டார்.
பதிலளிநீக்குபானுக்கா ரொம்ப நன்றாக பிரமாதமாக வந்திருக்கிறது. உங்க பெண்ணிடம் சொல்லிடுங்க.
பதிலளிநீக்குதுபாய் சாக்லேட் என்றதும், என்னவாக இருக்கும்னு பார்த்தேன்...
இப்படிச் செய்திருக்கிறேன் சொல்றேன்.
கீதா
2003-2004ல் இதைப் போலவே ஆனால் அப்ப பூஷணி விதை எல்லாம் அறிமுகம் இல்லையே எனவே உலர் பருப்புகள் போட்டுச் செய்திருக்க்றேன். மகனுக்கு பால் மணம் ரொம்பப் பிடிக்கும் என்பதால், பிஸ்கட் தூளுடன் பால் பௌடர் கலந்தோ அல்லது கொஞ்சம் மில்க்மெய்ட் கலந்தோவும் செய்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇதே போல சாக்லேட் உருக்கி விட்டு .
கீதா
என் நாத்தனார் அவங்க rice crispy என்று கொண்டு வந்து தருவாங்க. nestle crunch சாக்கலேட் வருமே அப்படி வீட்டில் செய்ததுண்டு. இந்த rice crispy போட்டு
பதிலளிநீக்குஇந்த பிஸ்கட்டைப் பொடி பண்ணாமல், ஒரு சில் ட்ரேயில் அடுக்கி வைத்து, மில்க் மெய்ட் அல்லது திக் பால் கொஞ்சமாக விட்டு... மேலே உலர் பழங்கள் பருப்புகள் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு தூவிவிட்டு, சாக்கலேட் உருக்கிய சாஸ் விட்டு அதன் மீது மீண்டும் பிஸ்கட் பொடியோ அல்லது பிஸ்கட்டையோ அடுக்கி வைத்து அதில் மில்க் மெய்ட் அல்லது திக் பால் கொஞ்சம் சேர்த்து rice crispy wheat crispy இப்படி அல்லது உலர் பழங்கள் சேர்த்து மீண்டும் மேலே சாக்கலேட் சாஸ் விட்டு இப்படி லேயர் லேயராக அடுக்கி ஃப்ரீஸ் செய்து பிஸ்கட் சாக்கலேட் கேக் என்று வீட்டுக்கு வரவங்களுக்கு எல்லாம் டெஸர்ட் என்று...
அப்போது சென்னையில் இந்த rice crispy, wheat crispy எல்லாம் கிடைத்தன. அடையார் நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் இல்லைனா இன்னொரு கடை இப்ப பெயர் மறந்து போச்சு சூப்பர்மார்க்கெட் அதில் கிடைக்கும். Spencer food world இல்லை வேறு ஒரு சூப்பர் மார்க்கெட் சிக்னல் பக்கத்துல வலப்பக்க வரிசையில்...பேக்கரி அருகில். இப்ப தெரியலை எதுவும்
இந்த rice crispy, wheat crispy எல்லாம் cereal breakfast என்று சாப்பிட்டதுண்டு. பால் விட்டு அதில் உலர் பழங்கள் பருப்புகள் போட்டு. இல்லைனா பழங்கள் சேர்த்து
இங்கு இந்த crispies கிடைப்பதில்லைக்கா. நான் பார்த்த வரையில். எங்கே என்று பார்க்க வேண்டும். ஒரு வேளை லுலு மாலில் கிடைக்கும் அது ரொம்ப தூரம் நமக்கு.
கீதா
இந்த பிஸ்கட் தூளில் சாக்கோ பை என்று இப்ப விற்கிறார்களே பாக்கெட்டுகளில் அப்படி நாம வீட்டில் செய்யலாம். சில் ட்ரேயில் அடியில் சாக்கோ சாஸ் / சாக்கலேட்டை உருக்கியதை விட்டு அதன் மீது பிஸ்கட் தூள் பரப்பி மீண்டும் அதன் மீது சாக்கலேட் உருக்கியதை விட்டு ஃப்ரீஸ் செய்ய வேண்டும். என்ன வடிவங்களில் வேண்டுமானாலும் இரண்டு மூன்று லேயராகவும் செய்யலாம். இதில் வெனிலா, சாக்கோ ஸ்ட்ராபெர்ரி என்றும் செய்யலாம். சாக்கோ பிஸ்கட்டைப் பொடிதுப் போட்டும், இடையில் க்ரீம் வைத்தும்...
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருக்கும் அந்த ப்ரௌனி கேக்கிலும் செய்யலாம் என்பது இப்பதான் தெரிந்து கொண்டேன் ஆனால் அது கிட்டத்தட்ட சாக்கோ பை போலவே இருக்கும்ன் என்று தோன்றுகிறது.
படங்கள் எல்லாம் செமையா இருக்குக்கா...
கீதா
கவிஞர் முத்துலிங்கம் - பகுதி....நிஜமாகவே எம் ஜி ஆர் செய்தது ஆரோக்கியமான விஷயமாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குகீதா
மக்கள் திலகம் பற்றிய செய்தி புதியது..
பதிலளிநீக்குமுன்னே கேள்ள்விப்பட்டிருந்தாலும் என்ன ஆகப் போகின்றது?...
///எப்போதாவது ஒரு முறைதானே சாப்பிடுகிறோம்.///
பதிலளிநீக்குநல்லது...