ஆஸ்பத்திரி அனுபவம் அறுவை அனுபவம் என்று "அறுத்து"க் கொண்டிருப்பதற்கு நடுவே கொஞ்சம் இளமைக்கால நினைவுகள் பக்கம் உலாவலாம் என்று நினைக்கிறேன். வியாழக்கிழமை அறுவையையே அப்ரப்ட்டாக நிறுத்தி விடலாமா என்று கூட யோசிக்கிறேன்.
இந்த உலா உங்கள் இளமைக்காலத்தையும் நினைவுபடுத்தலாம். ஏறத்தாழ இதே மாதிரி அனுபவங்கள் இருக்கலாம். மாறுதலாகவும் இருக்கலாம்.
ஆசிரியர் தினமோ என்றோ, நமக்கு வாழ்க்கையில் பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் எல்லாருமே ஆசான்கள்தானே என்று வழக்கமாக விடும் டயலாக்கோடு பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் அப்படி கற்றுக் கொண்ட பாடங்கள் இருந்தால் சொல்லுங்களேன் என்று பேச்சு வந்தது. சிலர் சில அனுபவங்கள் சொன்னார்கள். நானும் ஏதோ ஒன்றிரண்டு சொன்னேன்.
நண்பன் ஒரு அனுபவம் சொல்லி அதுதான் தான் வாழ்வில் மூன்றாமவரிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் பாடம் என்றான். அது எப்படி அதுதான் முதல் பாடம் என்று சொல்வாய் என்றெல்லாம் நாங்கள் கலாய்த்தோம். விளையாடப்போகும் நாளிலிருந்து அப்பா, அம்மா, ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் இருக்கும்தானே.. அதையெல்லாம் பெரிய கணக்கில் எடுக்கவில்லை.
பேச்சு எங்கெங்கோ ஓடி சில அந்தரங்க விஷயங்களிலும் வந்து நின்றது. அதைப் பகிர்ந்து கொண்ட ஓரிரு நண்பர்கள் என்னைப்பற்றிக் கொஞ்சம் தெரியும் என்பதால் கூடவே எனக்கு வேண்டுகோளும் வைத்தார்கள். நான் அதை பெயர் குறிப்பிடாமல் கூட பொதுவெளியில் எழுதி விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். நிச்சயம் எழுத மாட்டேன் என்று உறுதியளித்தேன். ஆனால் பாவிகள் இதோ சொல்கிறேன், அதோ சொல்கிறேன் என்று முழுதும் சொல்லாமல் பொழுதை ஒட்டி விட்டார்கள். ஒன்றும் பெயரவில்லை.
இந்த உரையாடல் முடிந்து சில நாட்கள் ஆகியிருக்கும். திடீரென்று ஜான் கென்னடி நினைவுக்கு வந்தான். அமெரிக்கன் முன்னாள் ஜனாதிபதி அல்ல. என்னுடன் படித்தவன். அந்த வயதில் அவன் எனக்கு அவன் செயலால் ஒரு பாடம் கற்றுக் கொடுத்தான். சிறிய வயது. சிறிய அனுபவம். ஆனாலும் அது நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
அதைப் பற்றி சும்மா கொஞ்சம் கதைக்கலாம் என்று நினைத்தபோது மதுக்கூர் கண்ணனின் இந்த வரிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன.
பால்யத்திற்குத் திரும்புதல்
நினைவுகளின் வழியாகக் கூட
கிணற்றில் முங்கி எழுவதைப் போல
தெருமுனைத் தேநீர்க் கடைக்கு
வயதென்னும் ரயில் வண்டி
தெரிந்த துரோகத்தை;
முறியாத முட்காடுகளை:
மீண்டும் சென்று தொடுவதில்
நீ நடந்து சென்ற
உன் நூலில் பறந்த
என் ப்ரிய நண்பா...
*
இந்தக் கவிதைக்கு முரணாக, நான் இந்தக் கட்டுரைகளில் என் பால்யத்தைத் திரும்பிப் பார்த்திருக்கிறேன்.
கச்சேரி ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடந்து முடிந்தது. எப்படித் தெரியுமா? சராசரி எட்டு நிமிடத் துக்கு ஒரு கீர்த்தளை வீதம் மூன்று மணி நேரம் கச்சேரி நடத்தினார். முடிந்த ஒரு பாட்டுக்கும் மறுபடி ஆரம்ப மாகும் மற்றொரு பாட்டுக்கும் இடைவெளி நேரம் ஐந்து வினாடிகள்!
நேரில் கேட்டவர்: 'மணி'
இதுவே இந்தகதையின் அடி முடிச்சு. அழுத்தமான பார்வை. ஆழ்ந்து பார்த்தால் இதன் உண்மை புரிகிறது.... இதை எழுதி இத்தனை காலம் ஆன பின்பும் நாம் இன்னும் இந்த வட்டத்துக்குள்ளேயே மேலும் மேலும் சுற்றி வருவதும் புரிகிறது. அப்படிச் சமைந்திருக்கும் தலைமுறைகள் இடையே ஏற்படும் சிறு கால மாற்றங்கள் கூட பாறையை அறித்துச்செல்லும் நீர்போல நிகழும். அந்த நிகழ்ச்சியின் எதிர்வினை ஏற்படுத்தும் வலிகளை, அழுத்தங்களை மற்றும் அவற்றின் விளைவுகளை படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்.
அருமையான கதைக்களம், கலையைப்பற்றியும், கலைஞனின் மனம் பற்றியும், அவனை எதிர் நோக்கும் சமூகத்தைப்பற்றியும் மிக அழகாக பிணைந்தளித்துள்ளார்.
பின்னாலான வாசிப்புகள் இந்த கதையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவியது. முக்கியமாக கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இருக்கும் இடைவெளி மிக முக்கியமான ஒருப்பார்வை. ஆனால் அக்காலத்தில் மிக வெளிப்படையாக எழுதி சமூகத்திற்க்கு கொண்டு சேர்த்ததில் ஆசிரியர் வெற்றி கண்டுள்ளார்.
இந்த நாவலை ஒரு தொடர்கதையாக ஆனந்த விகடனில் எழுத நான் துணிந்தபோது இது என்னென்ன அவஸ்தைகளுக்கெல்லாம் ஆளாக நேரும் என்று முன் கூட்டியே அறிந்து வைத்திருந்ததால் அல்லது எதிர்பார்த்திருந்ததால் இதற்கொரு எச்சரிக்கை போலும் விளக்கம் போலும் முன்னுரை என்ற பெயரில் எனது நிலையைத் தெளிவுபடுத்தி இருந்தேன்.
என்ன துரதிர்ஷ்டம்! அந்த முன்னுரையே, பெருத்த தாக்குதலுக்கு இலக்காயிற்று. நம்மவர்கள் நாம் எதை எத்தனை விதமாக விளக்கினாலும் அவர்கள் தாங்கள் எண்ணியிருக்கும் ஏதோ ஒன்றை அவர்களுக்குத் தெரிந்த ஒரே விதமாகப் புரிந்து கொள்வதில் மூர்க்கமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே காலத்தை நம்பியே இங்கு காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது.
ஆனால் நம்மவர்கள் விவாதம் செய்வதில் மிக்க விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் அவசரக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு தர்க்கசாஸ்திரத்திற்கு இருக்க வேண்டிய விசாலமாக ஹ்ருதயமோ தீக்ஷ்ணயமான ஞானமோ இன்றி, வெறும் அவசரக்காரர்களாய் விவாதத்தில் ஈடுபடுவதன் விளைவு வெறும் சந்தைக்கடை இரைச்சல்தான் என்பது இவர்களுக்கு விளங்குவதே இல்லை.
ஒரு தர்க்கவாதத்திற்கு வேண்டிய அடிப்படை வசதி பொறுமை. இவர்கள் அந்த வசதியை மறந்து விடுகிறார்கள். எனவே தங்களுக்குத் தோன்றிவிட்டம் என்பதனால் மறுபரிசீலனைக்கு இடமே இல்லாத நியாயமாக ஒன்றை வரித்துக் கொண்டு அதிலே தன்மயமான ஒரு ஆவேசத்தோடு, அறிவூ பூர்வமாக ஆராயவேண்டிய விஷயத்தை வெறும் உணர்ச்சிபூர்வமாக ஏற்றுக்கொண்டு தீந்த சன்னதர்களாகி விடும் இவர்கள் வெகு விரைவில் பிறரை ஆத்திரமூட்டுகிறவர்களாகவும் அதே மாதிரி ஆத்திரமடைகிறவர்களாகவும் மாறுகிறார்கள்.
வெறும் உணர்ச்சிவயப்பட்டவர்கள் உடல்பலங் கொண்டு தாக்கிக் கொண்டு சண்டையிட்டு ஓய்வதிலாவது ஒரு நிம்மதி இருக்கும்; ஒரு அமைதி பிறக்கும். ஆனால் இந்தச் சண்டைக்குப் பிறகு பரஸ்பரம் வெறுப்பூட்டும் அர்த்தமற்ற பகையையும் அவசியமின்றி வளர்த்துக் கொள்ள நேரிடுகிறது.
நமது மொழியின் தலைவிதியைப் பார்த்தீர்களா? அது என்ன, அவ்வளவு சக்தியற்றுக் கிடக்கிறது? உண்மையைத் தாங்கிச் செல்லும் வாகனமாக அது செயல்படவே முடியவில்லையா? இந்த மொழியில் உருவாகும் - இந்த மொழியை உருவாக்கும் ஒரு இலக்கியச் சந்தானத்தில் பொய்மையின் இருளிலிருந்து போய்ப் அறிவற்ற பகைமையென்னும் சைத்தானா ஆட்சி செய்து கொண்டிருப்பது?
ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.
அதை உங்களுக்காகவோ எனது திருப்திக்காகவோ கூட நான் எழுதிக்கொள்ள முடியாது. உங்களை ஏமாற்றவோ என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவோ கூட அதை நான் எழுதக்கூடாது. இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சியல்ல; எனது அகந்தையுமல்ல. உங்களை வெல்வது ஒரு வெற்றியே அல்ல... சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி. இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி. நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.
இந்த நாவலை எழுதியதன் மூலம் எனது வாசகர்களை நான் இழந்து விடுவதாகச் சிலர் என்னிடம் வந்து வருத்தப்பட்டுக்கொண்டார்கள்.
‘நீங்கள் சிறுகதை மட்டுமே எழுதுங்கள். எதற்கு இதெல்லாம்?’ என்று சிலர் யோசனை சொன்னார்கள்.
ஏதோ உலகத்திலுள்ள மகத்தானவர்களின் பெயர்களை எல்லாம் நான் அடுக்கி கொண்டு போவதாகச் சிலர் ஆயாசப்பட்டார்கள்.
ஆழம் தெரியாமல் நான் காலை விட்டுவிட்டதாகச் சிலர் அனுதாபப்பட்டார்கள்.
சிலர் எதற்கு என்று தெரியாமலே என்னை இழித்தும் பழித்தும் எழுதினார்கள்.
எனது காலத்தில் கத்துலக நாகரிகத்திற்குப் புறம்பான பகையை என் அளவு சம்பாதித்துக் கொண்டவர்கள் எவரும் இல்லை என்று உணர்கிறேன். இந்த அனுபவத்தை வைத்து இதைவிட ஒரு பெரிய நாவலே எழுதலாம்.
நான் ஒருமுறை எழுதிவிட்ட ஒரு விஷயத்தைப் பின்னிப் பின்னி எழுதிக்கொண்டே இருப்பதால் அதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் விளங்கிக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதே மாதிரி எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுபவர்களிடம் சென்று எதிர்வாதம் செய்வது வீண் என்று நான் கருதுகிறேன்.
இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் எனது கருத்துக்களின் மீது மூர்க்கமாகத் தாக்குதல் தொடுத்தவர்கள். இது ஒரு வீண் வேலை என்று அவர்களுக்குத் தோன்றவில்லையே என்பதற்காக நான் அனுதாபப்படுகிறேன்.
எனது வாசகர்கள் என்பவர்கள் இதுவரை பொறுமையாக இருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் அந்தத் தாக்குதலுக்கு ஆளானதால் தங்களது அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் முறையில் இந்த நாவலைப் பாராட்டி கடிதங்கள் எழுதி இருந்தார்கள். இந்த நாவல் பற்றி எழுந்த விவாதங்களில் அவர்களுக்கு விளைந்த பிரச்சினைகள் குறித்தும் சிக்கல்கள் குறித்தும் விளக்கம் தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்கள்.
ஓர் எழுத்தாளன் என்ற முறையில் ஒன்றை எழுதிவிட்ட பிறகு அது அவரவர்களின் மனோ தர்மத்திற்கு விட்டுவிடப்பட்ட ஒன்று என்பதால் அதுபற்றி மேலும் மேலும் பரிசீலனை செய்து கொண்டிருப்பதோ அல்லது அபிப்பிராயம் உருவாக்க வேண்டுமென்ற ஆவேசம் கொள்வதோ ஆகியவை எனக்கு ஒவ்வproperty காரியம் என்பதால் அத்தகைய கடிதங்களுக்கு நான் பதில் எழுதாமல் இருந்துவிட்டேன்.
நமது சமூகத்தில் பலதரப்பட்ட அறிவு ஜீவிகளின் சம்வாதங்களும் விவாதங்களும் நிகழ வேண்டுமென்பதுதான் எனது லட்சியம்! ஞானவான்கள் பலர் கூடி மிகுந்த சிரமத்திற்கிடையே தீர்வுக் காண வேண்டிய - அல்லது தீர்வுக் காணவே முடியாத - எத்தனையோ சூக்ஷ்மமான மிகப்பரிய விஷயங்களின் மீது மூடர்களே கூட மிகவும் சுலபமாக அவசரத் தீர்ப்பளித்து விடுவதையே நான் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறேன். அந்த ஒரு காரியம் தவிர அறிவுப் பூர்வமான சகல வாதங்களையும் அவை என் கருத்துக்களிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும் கூட நான் மரியாதையாக வரவேற்கிறேன்.
எனவே எனது மதிப்பிற்குரிய வாசகர்கள் தந்தம் வழியிலேயே அந்தப் பிரச்சினைகளைச் சிந்திக்கட்டுமென்று விட்டு விட்டேன்.
இந்த நாவலை எழுதி முடித்த பின் வாசகர் கடிதங்களை வெளியிட வேண்டும் என்று ஆனந்தவிகடன் காரியாலயத்தார் என்னிடம் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். எனக்கு வந்த பாராட்டுக்கடிதங்களை மட்டுமே பிரசுரித்து இந்த காலத்தில் வெளிவந்த இந்த நாவலை இந்த காலமே அங்கீகரித்துவிட்டதாக ஒரு பொய்மையை உருவாக்கி அந்தப் பொய்மையில் ஒளிந்து கொள்ள நான் கூசினேன். அது நியாயமே என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
ஒரு விஷயத்தை மட்டும் நான் எண்ணி எண்ணி மனப்பூர்வமாக நன்றி பாராட்டுகிறேன். அது, பெரும்பான்மையான வாசகர்களின் பெரும்பான்மையான ரசனைக்கு ‘விருந்து’ அளிப்பதே தன் கடன் என்று பணியாற்றி வரும் ஆனந்தவிகடன் எனது இந்த காரியத்திற்கு உடன்பட்டு ஒத்துழைக்கும் ஒரு சோதனைக்கு உட்பட்ட ஒரு காரியம் இருக்கிறதே... ஓ! அதற்கு எத்தனை நன்றி பாராட்டினாலும் தகும்!
இப்போது மீண்டும் ஒருமுறை வாய்விட்டுப் படித்துப் பார்க்கும்போது இந்தச் சிருஷ்டியினால்என் கர்வமே மிகுகிறது. இந்த உண்மையை மறைத்துக் கொள்ளும் அடக்கம் உயர்வானது எனினும் இந்தச் சூழ்நிலையில் அது அவசியமில்லை என்று கருதுகிறேன். உங்களுக்கு ஒரு சூத்திரம் தெரியுமா?
'மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்
தன்னை மறுதலை பழித் காலையும்
தன்னுடை பெற்றி அறியா ரிடையினும்
தான் தற்புகழ்தல் தகும் புலவோர்க்கே'
தகுதிக்குரியவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது எவ்வளவு துயரகரமானது என்பது எனக்குப் புரிகிறது. எனது குறைகளை என் நெஞ்சில் எப்போதும் கனத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நாவலின் அந்தி அத்தியாயங்களில் இந்த நாவலின் ஆரம்ப அத்தியாயங்களின் போக்குக்குப் புறம்பான ஒரு துரிதகதி நேர்ந்து விட்டது. புத்தகமாக வெளியிடும்போது அதை மாற்றி அமைக்க நான் விரும்பினேன்.
அந்த எனது ஊனத்திலேயே நான் ஒரு அழகு கண்டுவிட்டாலும் அதை மாற்றுவதன் மூலம் ‘ஏதோ நிர்பந்தங்களுக்கு உட்பட்டு நான் அவசரமாக அந்தக்கதையை முடித்துவிட்டேன்’ என்ற எண்ணம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதாலும் அது பிறந்த மேனியாகவே இருக்க அனுமதித்து விட்டேன்.
இந்தக் கதையை நடத்திச் செல்லும் பாத்திரங்கள் அனைவரும் எந்த அளவுக்கு உணர்ச்சி மயமானவர்களோ அந்த அளவுக்கு அறிவு மயமானவர்கள். அவர்களுக்கிடையே ஏற்படும் மோதல்களில் யார் வெல்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. யார் வெல்ல வேண்டும், யார் தோற்க வேண்டும் என்று நான் ஆசைப்படவும் இல்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாக்கருத்துக்களுக்கும் அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அறிவுமயமான ஓர் உலகத்தின் பலதரப்பட்ட பிரஜைகளையே நான் கதாபாத்திரங்களாக இதில் வகுத்தேன். தர்மமும் அதர்மமும்தான் மோதிக்கொள்ளும் என்பதில்லை. தர்மங்களுக்குள்ளாகவே மோதல்கள் நடலாம். அந்த மோதல்கள் எவ்வளவு அழகாக இருக்கும்!... எவ்வளவு தீவிரமாக இருக்கும்!...
நாவல் என்பது தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகள் என்று நம்பிக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கும் நமது பத்திரிகை எழுத்தாளர் - வாசகர் - விமர்சகர் உலகில் அறிவுப்பூர்வமாக பிரச்சினைகளுக்கும் உணர்ச்சிமயமான தர்மங்களுக்கும் முதன்மை தந்து, ‘நான் எழுதப் போவது ஒரு நாவல்’ என்று சொல்லிவிட்டதில் ரொம்பப் பேருக்கு என் மேல் கோபம். நான் எதையோ சொல்லிவிட்டு எல்லாரும் செய்வதையே செய்து கொண்டிருந்தால் உங்கள் கோபத்திற்கு ஆளாவதே நியாயம். நான் என்ன சொன்னேனோ அதையே செய்திருக்கிறேன்.
நான் ஒரு தீர்மானமான திட்டத்தோடு, விளைவுகளின் தன்மையைப் புரிந்து கொண்டே எனது காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். எனது கதைகளைப் படித்ததனாலேயே தங்களுக்கு ஒரு தரத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டவர்கள் எனக்கு எழுதும்போது என் பேசும்போது அதனை மறந்துவிட்டுப் பேசுவது குறித்து நான் மிகவும் ஆயாசப்படுகிறேன். எழுதுபவனோடு பகைமை பாராட்டி கொண்டிருப்பது ஒரு சமூக வீழ்ச்சிக்கு அறிகுறி.
இதனைப் படிக்கும்போது உங்களுக்கு ஒன்று தோன்றலாம்; ‘ஒரு தனி மனிதனான இவனைப் பகைத்துக் கொள்வது ஒரு சமூக வீழ்ச்சி என்று இவன் சொல்கிறானே; இவன் தன்னைப்பற்றி எவ்வளவு அதிகமாக கணித்துக் கொண்டிருக்கிறான், என்று எடுத்த எடுப்பில் ஒருமுறை நீங்கள் நினைப்பது தவறே ஆகாது. ஏனென்றால் இதைச் சொல்லும் முன் எனக்கே அவ்வளவு ஓர் எண்ணம் தோன்றியதுண்டு.
ஒரு தனி மனிதன் என்ற முறையில் உங்களுக்கும் எனக்குமே ஒரு சம்பந்தமும் கிடையாதல்லவா? உங்களோடு நான் பேசும்போது இந்தச் சமூகத்தால் எனக்குத் தரப்பட்ட - நீங்கள் விரும்புவதானாலும் தடுத்துக் கொள்ள முடியாத ஒரு பீடத்தில் அமர்ந்து பேசுகிறேன்.
இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள் இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த விஷயமல்ல. ஆனால் இலக்கியத்தின் மீது மாளாத காதல் கொண்டுவிட்டதாக மடம்பூர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வ பரித்தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள் கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை ஏதோ கிள்ளுக்கீரை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் வெளியில் சொல்வது அவமானம் என்று நான் கருதவில்லை. அவமானமெனினும் அதை மறைத்துப் பயனில்லை. எனவேதான் என்னோடு, எனது கருத்துக்களோடு, எனது வாழ்வியல் நெறிகளோடு ஒத்துப்போகக் கூடிய, உடன்பாடு காணக்கூடிய முகம் தெரியாத வாசகர்கள், முகம் தெரிந்த நண்பர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நாவலுக்காக என்னைப் பாராட்டியபோதிலும் நமது சமூகத்தின் பொது நிலைமைப் பிரதிபலிக்கும் இதற்கு மாறான கருத்துக்களையும் முதன்மைப்படுத்திக் கவலையோடும் பொறுப்போடும் சிந்திப்பது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்.சர்ச்சைக்குரிய இந்த நாவலைத் தொடர்ந்து விகடனில் வெளியிட்ட சாதனை ஒன்றுக்கு அவர்களை நான் என்றுமே மறக்க முடியாது.
இந்தப் பதிப்பகத்தாருக்கும் அந்த நன்றி உரியதுதானே?
19.1.66
சென்னை







பாரீசுக்குப் போ -- உள்ளடக்கி எல்லாவற்றையும் வாசித்து விட்டே உங்கள் உழைப்பு அசர அடிக்கிறது. ஒரு கை ஓசையற்ற அசைவாய் நான் எதையும் குறிப்பிட்டு என் விமரிசனமாய் எதையும் சொல்லாமலிருப்பது குற்ற உணர்வாய் என்னில் சுட்டாலும் இதுவே இப்போது சரி என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதே நேரத்தில் இந்த பதிவுகள் மற்றவர்களிடம் என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் வாசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... நன்றி.
நீக்கு// ஒரு கை ஓசையற்ற அசைவாய் நான் எதையும் குறிப்பிட்டு என் விமரிசனமாய் எதையும் சொல்லாமலிருப்பது //
இந்த வார்த்தை அமைப்பு எதனைக் குறிக்கிறது என்று புரியவில்லை. சரியான ரெஸ்பான்ஸ் வராது என்று கொள்ளலாமா? மற்றவர்கள் என்ன பிரதிபலிப்பை கொடுப்பார்கள் என்று நானும் காத்திருக்கிறேன்!
மெளனமே பதிலாய் பிறர் திறமை பார்க்க வேண்டும்...
பதிலளிநீக்குபார்த்தவை அலை படிமமாய் மனதில் படிய வேண்டும்...
..................................................................................
...........................................................
ஆசை தோசை அப்பளம் வடை.....!
நீக்குபால்யத்திற்கு திரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு முத்துக்குமாரின் பால்யத்திற்கு திரும்பாதே என்ற புதுக் கவிதையையும் பதித்திருக்கிறீர்கள். இது தான் முரண் நகை எனப்படுவதோ??
பதிலளிநீக்குதிரை உலகில் (சௌகார்) ஜானகி, பானுமதி போன்றவர்கள் ஒரு தனி ஆளுமை கொண்டவர்கள். கிசு கிசுக்களில் மாட்டாதவர்கள்.
சௌகாரின் நினைவாஞ்சலி போற்றற்குரியது. எனக்கு என்னவோ 'பார்த்த ஞாபகம் இல்லையோ' நடிப்பு தான் இயற்கையான சௌகார் நடிப்பாக தற்போதும் நினைவில் நிற்கிறது.
//..பிளவுபடாத ஒரே மனம் யாருக்காவது சாத்தியமாகி இருந்திருக்குமா?
'மகான்கள்' என்கிறார்களே அவர்கள் உட்பட...?// உண்டு... குழந்தைகளுக்கு. குழந்தைகள் எப்போதும் நிகழ் காலத்தில் தான் வாழ்பவை. அப்பாவிடம் ஜேகேசி கூறியதாக சொல்லுங்கள்.
ஜெயகாந்தனின் நாவல்கள்/தொடர் கதைகள் வாசித்ததில்லை. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் மற்றும் சிறுகதைகள் தொகுப்பு வாசித்திருக்கிறேன். குமுதத்தில் அவருடைய படைப்புகள் வெளியானபோது வாசித்திருக்கிறேன்.
ஜீவி சார் மற்ற வாசகர்களின் எதிர்வினைகளை எதிர் பார்ப்பதாக கூறுகிறார். என் எதிர்வினை... எந்த ஒரு திறமைசாலிக்கும் அவரவருடைய திறமை மேல் ஒரு மதிப்பு இருக்கும். அது சாதாரண பிளம்பர், தச்சர் ஆனாலும் சரி. அவர்கள் அத்திறமையை செயலில் காட்டுவார்கள்.
இலக்கியவாதிகளின் செயல் எழுத்தே. ஆக அவர்கள் சொந்தத் திறமையை எழுத்தில் வடிக்கிறார்கள். எழுத்தாகையால் பலரும் படிக்க நேர்கிறது, இத்தகைய பெருமை வெளிப்பாடு சுய தம்பட்டம், கர்வம், தற்ப் பெருமை, அடக்கமில்லாமை என்று பலராலும் கருதப்படுவது இயற்கை. இது போன்ற கருத்து மற்ற திறமை சாலிகள் மேல் தோன்றுவது அபூர்வம், அற்ற திறமைசாலிகள் வாயைத் திறக்காதவரை நல்ல அபிப்பிராயங்களே நிற்கும். , இளைய ராஜா, வைரமுத்து போன்று சிலர் உண்டு.
Jayakumar
'அப்படிச் சொன்னாலும் முத்துக்குமார் அணிலாடும் முன்றிலில் பால்யத்துக்குதான் போகிறார் JKC ஸார்...
நீக்குசௌகார் ஓகே பானுமதி பற்றி அண்ணாவும் தி மு கவும் திட்டமிட்டு புரளி கிளப்பினார்கள்.
பார்த்த ஞாபகம் இல்லையோ.. எல்லோரும் அதைத்தானே சொல்வார்கள் என்றுதான் நான் மாற்றி பகிர்ந்தேன்!
பிளவுபடாத மனம் - உண்டு... குழந்தைகளுக்கு. -- குழந்தைகளுக்கு மனம் உண்டா? மனம் பெற்ற குழந்தைகள் இன்னொரு குழந்தைக்கு கிடைக்கும் அட்டெங்ஷனைப் பார்த்து பொறாமை படுவதில்லை?
Sp, உங்கள் கருத்தை முழுமையாக ஏற்க முடியாது!
ஜீவி ஸார் எதிர்பார்ப்புக்கான உங்கள் பதில் என்னைக் கவர்ந்தது. இதைச் சொன்னாலும் எதிராளிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உங்கள் கருத்தை வைக்கிறீர்கள்!
இலக்கியவாதிகளின் திறமை என்பதை விடுங்கள் JKC ஸார்.. அந்தக் கதையின் கருவில் உங்களுக்கு உடன்பாடா?
ஜேகேசி குழந்தைகளிடம் பிளவு படாத மனம் இருக்கும் எனச் சொல்கிறார். உண்மை தான். ஆனால் அவங்க உலகமே வேறே இல்லையோ? அதுக்காக ஸ்ரீராமை இப்போவே அப்பாவிடம் சொல்லச் சொல்லுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர். :(
நீக்குஸ்ரீராம் குழந்தை தான். அப்பாவுக்கு ..... எப்போதும்.
நீக்குJayakumar
வியாழக்கிழமை அறுவை என எதைச் சொல்கிறீர்கள்? புரியலை. வியாழன் அன்று வேறே யாரையும் எழுத வைக்க உத்தேசமா? ஆஸ்பத்திரி அனுபவங்கள் அப்படி ஒண்ணும் மோசமாக இல்லை.
பதிலளிநீக்குஇளமைக்கால அனுபவங்கள் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாகக் கிடைக்கும். ஆகவே அவற்றைப் பகிரலாம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காதே!
நெல்லை கண்ணனை வழக்கம் போல் தவிர்த்து விடுகிறேன். நல்லவேளையாக வீடியோ இல்லைனு வேறே வந்திருக்கு. பிழைச்சேன்.
அது சரி, திரு துரை செல்வராஜை எங்கே காணவே காணோம்? உடல் நலம் தானே? தாமதமாக வருவாரோனு நினைச்சால் ஆளையே காணோம்.
சாண்டில்யன் பக்கம் சொதப்பலோ சொதப்பல்.
என்ன கீதா அக்கா இப்படி கேக்கறீங்க... வியாழன் எழுதும் அறுவை சிகிச்சை பற்றிதான் சொல்றேன்.
நீக்கு// ஆஸ்பத்திரி அனுபவங்கள் அப்படி ஒண்ணும் மோசமாக இல்லை. //
அப்ப கொஞ்சம் மோசம்தான் இல்லையா?!!
நெல்லை கண்ணன் வீடியோ இல்லையா? பார்க்கிறேன்.
Grrrrrrrr......... நெல்லை கண்ணன் வீடியோ Run ஆகுதே...
நீக்குVideo Unavailable
நீக்குThis video may no longer exist, or you don't have permission to view it.
Learn more
அது தோஹா பிரச்னை!
நீக்குஅறுவை சிகிச்சை அறுவையாக இல்லாமல் அருமையாகவா இருக்கும்.
நீக்குஆனால் ஸ்ரீராம் செய்துகொண்ட FESS அறுவை இல்லை. அது endosope என்ற குழாய் நுழைத்து அடைப்பை சரி செய்யும் முறை. நம்ம வீட்டில் சாக்கடை அடைப்பை சரி செய்வது போல.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇல்லை கீதா அக்கா... தலைப்பைப் பார்த்து தவிர்க்காதீர்கள். அவ்வளவு மோசமானதை பகிர மாட்டேன்.
நீக்கு// நான் எழுதினது எனச் சொல்லி இருக்கீங்க? நீங்களா? முத்துக்குமாரா? யார் எழுதினது? //
முத்துக்குமார்தான். முன்னுரையில் எழுதி இருக்கார். புரியும்னு நினச்சேன். அவரோட கவிதைதான் அது. வெள்ளிக்கிழமைல என் கவிதை வராது!!
அடுத்ததைத் தவிர்த்து விட்டேன். தேவையா இதெல்லாம்? :(
பதிலளிநீக்குநா.முத்துக்குமார் கவிதைனு குறிப்பிட்டு விட்டு அதற்கான அறிமுகத்தில் "கணையாழி"யில் நான் எழுதினது எனச் சொல்லி இருக்கீங்க? நீங்களா? முத்துக்குமாரா? யார் எழுதினது? ஏன்னா முத்துக்குமார் நிச்சயமாகச் சில மாதங்கள் முன்னர் இதை எழுதி இருக்க முடியாது. ஆனாலும் கவிதை மனதைத் தொடுகிறது. உண்மையில் நான் சின்ன வயசில் பார்த்த மதுரை மார்கழி வீதிகளை என்னால் இன்னிக்கும் மறக்க முடியாது. ஆனால் அதைத் தேடி மதுரைக்கு இப்போப் போவது என்பது பைத்தியக்காரத் தனம் இல்லையா?
கீழேயும் இந்தக் கவிதையில் நான் என் பால்யத்தைத் திரும்பிப்பார்த்திருக்கேன் எனச் சொல்லி இருக்கீங்க. பார்த்தது யார்? நீங்களா? முத்துக்குமாரா?
Grrrrrr... Previous comment deleted.
நீக்குஇல்லை கீதா அக்கா... தலைப்பைப் பார்த்து தவிர்க்காதீர்கள். அவ்வளவு மோசமானதை பகிர மாட்டேன்.
// நான் எழுதினது எனச் சொல்லி இருக்கீங்க? நீங்களா? முத்துக்குமாரா? யார் எழுதினது? //
முத்துக்குமார்தான். முன்னுரையில் எழுதி இருக்கார். புரியும்னு நினச்சேன். அவரோட கவிதைதான் அது. வெள்ளிக்கிழமைல என் கவிதை வராது!!
பாஹே பக்கம் வழக்கம் போல் அருமை. மஹான்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படியாகப் பகிர்வதில்லை. ஆகவே அவங்க மனம் பிளவு பட்ட்டிருக்கா இல்லையானு நமக்குத் தெரியாதே. என்றாலும் இது நல்ல கேள்வி தான். பதில் சொல்ல முடியாத ஒன்று.
பதிலளிநீக்குமாலியின் இந்தச் செயல் பற்றி முன்னரே படிச்சிருக்கேன். மாலி சென்னை அம்பத்தூரில் நாங்க இருந்த வீதியில் தான் கடைக்கோடியில் இருந்தார். ரேஷன் கடைக்கு எதிரே வீடு. பித்துக்குளி முருகதாஸும் அங்கே தான் இருந்தார் என்பார்கள். பார்த்ததில்லை. மௌலி, விசு, எஸ்.வி.சேகர் இன்னும் சில பிரபலங்கள் எல்லாம் அம்பத்தூர் வாசிகளாக இருந்தவங்களே. முன்னரே சொல்லி இருப்பேன். இப்போ மறுபடியும் அறுவை போடறேன் போல. :)))))
போச்சுடா.. எதையாவது அல்லது யாரைப்பற்றியாவது சொன்னால் எங்க வீட்டுக்கு எதிரேதான் இருந்தாங்க.. தினம் காய்கறி வாங்கப் போவாங்க பார்த்திருக்கேன்னு சொல்றாங்களே.....!!!
நீக்குhahahahahahahaahahahaahaha In addition to it Ra.Ganapathi, and Vinu were also in Ambattur, Thiruvengada Nagar, (near Ambattur bus stand, and I talked to them also)
நீக்குhahahahahahahahahahahahahahahahaha. They were neighbours. and Ra.Ganapathy, my friend and U.Pi.Sa. Thi.Va's (Thirumurthy Vasudevan) athai paiyar. Thi.Va."s father is Ra.Ganapathy's mama.
"பாரீஸுக்குப் போ" நாவல் விமரிசனம் முதலில் பகிர்ந்திருப்பது யாரெனத் தெரியலை. ஆனால் இங்கேயும் "நான்" "நான்" என்றே எழுதி இருக்காங்க. யாருனு எப்படி எடுத்துக்கறது? ஆனால் தொடர்ந்து வரும் வரிகள் இவை வேறே யாரோ இருவரால் எழுதப்பட்டது என்பதைச் சொல்கிறது.
பதிலளிநீக்குபாரீஸுக்குப் போ நாவலை அது விகடனில் வெளிவந்தப்போ நான் வாசிக்கவில்லை. விகடன் வாங்குவதையே நிறுத்திட்டாங்க. மற்ற யாரும் விகடனை எனக்குப் படிக்கக் கொடுத்ததில்லை. இந்த நாவல் வந்ததாலேயே என வைச்சுக்கலாம். பின்னர் தான் வாசித்தேன். மிகுந்த சர்ச்சைக்குரிய நாவல். அந்தக் காலத்துச் சூழ்நிலையில் இப்படி ஒரு நாவல் ஆனந்த விகடனில் வெளி வந்ததே ஓர் அதிசயம் தான். முடிந்தால் மறு வாசிப்புச் செய்யணும்.
கீழே ஜெயகாந்தன் எழுதியதாகச் சொல்லப்பட்டிருக்கும்/பகிர்ந்திருக்கும் முன்னுரைகளில் ஏகப்பட்டக் குழப்பங்கள். ஆங்காங்கே வார்த்தைகள் விடுபட்டு, எழுத்துக்கள் மாறி பொருளே இல்லாமல் சில இடங்களில் என வந்திருக்கு. அதை மறு வாசிப்பு அல்லது முழுவதையும் மறுபடி திருத்திவிட்டு வெளியிட்டால் நல்லது. அதிலும் முதலில் வந்திருக்கும் பகுதியில் ஏகப்பட்ட வாக்கியங்கள் பொருள் மாறி வந்திருக்கு.
கீதா அக்கா.. என்ன ஆச்சு உங்களுக்கு? இரண்டும் ஜெயகாந்தன் வெவ்வேறு காலகட்டங்களில் அதே நாவலுக்கு எழுதிய முன்னுரை.
நீக்கு// ஆங்காங்கே வார்த்தைகள் விடுபட்டு, எழுத்துக்கள் மாறி பொருளே இல்லாமல் சில இடங்களில் என வந்திருக்கு. அதை மறு வாசிப்பு அல்லது முழுவதையும் மறுபடி திருத்திவிட்டு வெளியிட்டால் நல்லது. //
ஆமாம் அக்கா.. காபி செய்யும்போது அப்படி ஆகிறது. இப்போதிருக்கும் நிலையில் திருத்த முடியவில்லை.
சௌகார் பற்றிய இந்தச் செய்திகள் அனைத்தும் அருமை. சௌகார் எழுதி பொம்மை அல்லது வேறே ஏதோ சினிமாப் பத்திரிகையில் வெளிவந்த அவருடைய சுய சரிதையை முழுதும் வாசிச்சிருக்கேன். மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். சுய கௌரவம் அதிகம் உண்டு. அதுவும் பிடிக்கும். சுயப் பச்சாத்தாபம் கிடையாது. குடும்பத்தில் பற்றுள்ளவர். பேத்தி வரைக்கும் ஈடுபாடுடன் இருப்பவர். நல்லதொரு நடிகை. நிறை வாழ்வு வாழ்ந்துட்டுப் போயிருக்கார். ஆகவே வருந்துவதற்கு ஏதும் இல்லை. உண்மையான அறிவு ஜீவியும் கூட.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா... ( நல்லவேளை சௌகார் உங்க ஏரியால இல்லை! .வேற ஏரியாலதான் இருந்திருக்கார்!!)
நீக்குமுத்துக்குமாரின் பால்யத்துக்கு திரும்புதல் கவிதை கண்டோம் வித்தியாசமான பார்வை.
பதிலளிநீக்குபாஹே பக்கம் அருமை.
வாங்க மாதேவி... கருத்துகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்கு//திடீரென்று ஜான் கென்னடி நினைவுக்கு வந்தான். அமெரிக்கன் முன்னாள் ஜனாதிபதி அல்ல. என்னுடன் படித்தவன். //
பதிலளிநீக்குமுன்பு ஒரு பதிவில் இவரை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
மதுக்கூர் கண்ணனின் கவிதை நன்றாக இருக்கிறது.. பள்ளிப்பருவம் இனிமையான காலம்.
// முன்பு ஒரு பதிவில் இவரை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //
நீக்குஅச்சச்சோ... முன்னாலேயே சொல்லி இருக்கிறேனா? என்ன சொல்லி இருக்கிறேன் என்று தெரியவில்லையே... மறுபடி ஒரு மீள்பதிவாகி விடப்போகிறது!
நெல்லை கண்ணன் பேசியதை கேட்டேன் உண்மையை சொல்லி இருக்கிறார்.
பதிலளிநீக்குஅப்பாடி.. அவரைக் கேட்டு ரசிக்க என்னுடன் இன்னொரு ஆள்...
நீக்குசாண்டில்யன் பக்கம் படித்தேன். தத்துவம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅணிலுரை அணிலாடும் முன்றில் படித்து இருக்கிறேன், இங்கும் படித்தேன்.
அப்பாவின் பக்கம் நன்றாக இருக்கிறது.
சௌகார் பகிர்வு பாடல், படம் எல்லாம் மிகவும் பிடித்தது.
பார்த்தேன், கேட்டேன்.
சுவாரஸ்ய துணுக்குகள் : 1967 விகடனிலிருந்து...
மாலி பற்றி படித்தேன்.
ஜெயகாந்தன் ஒரே நாவலுக்கு இரண்டு முன்னுரைகள் படித்தேன்.
நன்றி அக்கா. 'படித்தேன் படித்தேன்' என்று ரிப்போர்ட் கொடுத்து விட்டீர்கள். அபிப்ராயம் ஏதும் இல்லையா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார வெள்ளி பதிவும் நன்றாக உள்ளது. நேற்று வராமல் பால்யத்தை திரும்பி பார்ப்பது போல் இன்று வந்துள்ளேன். மன்னிக்கவும். ஒவ்வொருவரும் தத்தம் பால்யத்தை திரும்பி பார்க்காமல் முன்னேற முடிவதில்லை. அவை மலர்ந்த நினைவுகள். அப்படித்தான் தங்களின் வியாழன் பதிவும். அடுத்து என்ன என்ற ஆவலைத் தரக்கூடியது..
/எழுதிய நேரமோ என்னவோ, மறுபடி பயமுறுத்தும் அனுபவங்கள் வந்து சேர, அலுத்துதான் போனது மனம்!/
இந்த இடம் புரியவில்லை. ஏன் மீண்டும் ஏதாவது பிரச்சனைகளா? நல்லபடியாக கநலமாக்கி தந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏
முத்துக்குமார் அவர்களின் கவிதையும் நன்றாக உள்ளது. ஆனால், அதிலும் நீங்கள் சொல்வது போல பழைய நினைவுகள்தாம் கவிதையாக உருப் பெற்றுள்ளது.
சாண்டில்யன் அவர்களின் தத்துவமும், உங்கள் தந்தையின் பக்கமும் சுவாரஸ்யமாக இருந்தது. படித்து ரசித்தேன்.
திரு. மாலி அவர்களின் புல்லாங்குழல் சாதனை பற்றி தெரிந்து கொண்டேன். முன்பு அடிக்கடி ரேடியோவில் அவரின் குழல் இசைகளை ரசித்து கேட்டுள்ளோம்.
சௌகார்ஜானகி அவர்களின் நடிப்பு பழையகால படங்களிலும் நன்றாக இருக்கும். தில்லுமுல்லு படத்தில் கொஞ்சமே வந்தாலும் நன்றாக தன் பாத்திரத்தை செய்திருப்பார். உயர்ந்த மனிதன், இரு கோடுகள் என பல படங்கள் அவரின் நடிப்புக்கு பெயர் பெற்றவை. இப்போதும் நீங்கள் பகிர்ந்த பாடலையும், நடிப்பையும் கேட்டு பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி கமலா அக்கா. பால்யத்தை திரும்பிப் பார்த்து முன்னேறுகிறோமோ இல்லையோ, அடிக்கடி அசைபோடுவோம்!
நீக்குசௌகார் ஜானகி மிகவும் பண்பட்ட ஒரு கலைஞர். நீண்ட காலம் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.