இன்று ஜூன் இருபத்தெட்டு.
எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
எங்கள் ப்ளாக் பிறந்தது, இதே நேரத்தில் (காலை மணி ஏழு இருபத்திரண்டு) இதே தேதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2009 ஆம் ஆண்டு). இட்லி வடை வலைப்பூவைப் பார்த்து, படித்து, பெரிதும் கவரப்பட்டு, தொடங்கப் பட்டது, இந்த 'எங்கள் ப்ளாக்' என்று முன்பே எங்கேயோ தெரிவித்திருக்கிறோம் என்று ஞாபகம். ஆனால், நாங்கள் (தீவிர) அரசியல் எழுதுவதில்லை என்று முடிவு எடுத்து, அதன்படி இருந்து வருகிறோம்.
இது எங்களுடைய எழுநூற்று எழுபத்து ஒன்பதாவது பதிவு. 'ஒரு நாளைக்கு ஒரு பதிவு' என்பதை இயன்றவரையிலும் கடைப்பிடித்து வருகிறோம். சற்றேறக் குறைய, மூன்று நாட்களுக்கு ஒரு உறுப்பினர், எங்கள் ரசிகர் மன்றத்தில் ரசிகராக (follower) சேர்ந்து வருகிறார்.
எங்கள் ப்ளாக் பதிவுகளை, இ-மெயில் மூலமாகப் பெற்று படிப்பவர்கள் முன்னூற்றைம்பது பேர். Google buzz மூலமாகப் படிப்பவர்கள் (அல்லது படிக்க வாய்ப்பு இருப்பவர்கள்) எழுநூறுக்கு மேல். Engal Blog facebook நண்பர்கள் இன்றைய நிலையில் எழுநூற்று ஐந்து பேர்.
ஆக மொத்தம் ஆயிரக் கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கும் வலைப்பூ எங்கள் ப்ளாக் என்றும், உங்கள் அமோக ஆதரவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் இட்டு, வலை உலகை மேன்மேலும் கலக்குவோம் என்றும், உறுதி கூறுகிறோம்.
உங்கள் ஆதரவை, தொடர்ந்து இன்ட்லி வோட்டு, கருத்துரைத்தல், ரியாக்ஷன் பெட்டியில் டிக் அடித்தல் போன்று பல வழிகளிலும், எங்களுக்குத் தெரிவியுங்கள்.
எங்கள் முகநூல் (facebook) நண்பர்கள், ஒவ்வொரு பதிவிற்கும் கீழே, காணப்படும் like பட்டனை அமுக்குவதின் மூலம் தங்களுடைய முக நூல் நண்பர்களுக்கு, எங்கள் ப்ளாக் பதிவுகளைப் பரிந்துரைக்க இயலும். உங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் எங்கள் ப்ளாக் பதிவை விரும்புகின்ற விவரம் வெளியாவதால், உங்கள் மற்ற நண்பர்களின் கவனத்திற்கும், எங்கள் ப்ளாக் வலை பற்றி தெரிய வரும்.
இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமாக, எங்கள் ப்ளாக் வலையில், உங்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, இன்னும் என்ன வகைப் பதிவுகளை எதிர்பார்க்கின்றீர்கள், என்பது போன்ற விவரங்களை, தயங்காமல் பதிவு செய்யுங்கள். வாசகர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்!
என்றும் உங்கள் ஆதரவை நாடும்,
எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள்.