14.9.15

'திங்க'க் கிழமை 150914 கடலை (வடை) போடக் கற்றுக்கொள்ளுங்கள் + சொ யா கே ... 1/7


வாங்க எல்லோரும் வரிசையாய். 

உங்களுக்கு கடலை வடை போடக் கற்றுத் தருகின்றேன் 

கடைக்குச் சென்று, இதெல்லாம் வாங்கிகிட்டு வாங்க:

பொட்டுக்கடலை : (Fried gram) : கால் கிலோ.
பச்சை மிளகாய் : ஐந்து.
பெரிய வெங்காயம் : மூன்று.
முந்திரிப்பருப்பு : பத்து.
கச முசா ஓ சாரி --- கச கசா  (poppy seeds) ஒரு மேசைக் கரண்டி. (சின்ன பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு மே க அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்) 
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு. 
பொடி உப்பு :தோராயமாக இரண்டு மேசைக்கரண்டி. (சுவைக்கேற்ப மாறலாம்) 
ஒரு தேங்காய் மூடி. 
கொஞ்சம் கொத்தமல்லித் தழை. 

நல்லெண்ணெய் : கால் லிட்டர்.

பொட்டுக்கடலையை மிக்சியில் இட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றை பொடிப்பொடியாய் அரிந்து கடலைப்பொடியில் போடவும். முந்திரிப்பருப்பு, கசகசா, தேங்காய்த்துருவல் இவற்றையும் மிக்சியில் அரைத்து, கடலைமாவில் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து, வடை மாவு பிசைந்துகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், வடைகளை ஒவ்வொன்றாகத் தட்டி, எண்ணெயில் இட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாகப் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
      
(இது கூகிளில் சுட்ட வடை) 

கடலை வடை தயார். 
   ============================================================

சொல்லாதே யாரும் கேட்டால் ... 1/7  

பெங்களூரு.

ஒரு பொன்மாலைப் பொழுது.

பார்க்கில் அதிகக் கூட்டம் இல்லை.

முகநூல், ட்விட்டர், ப்ளாக் என்று பல்வேறு சிந்தனைகள் பின்தொடர, பார்க்கில் சுற்றி வந்துகொண்டிருந்தேன்.

பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்து முறுவலித்த மாதிரித் தோன்றியது.
  
(இது அவர் படம் இல்லை)

(தொடரும்) 
     

13.9.15

ஞாயிறு 323 மா ஜா மு! கே கே 7/7

                       
 
  

கேட்டது கேட்டபடி - இறுதிப்பகுதி.
     

"நான் முன்பு ஒரு தடவை வந்தப்போ சின்னம்மா அருமையான சுக்குக் காபி தயார் பண்ணிக் கொடுத்தாங்க. அதைக் குடித்தபின் தலைவலி, உடல்வலி, ஜலதோஷம் எல்லாம் போயே போச்சு. அன்றிலிருந்து சுக்குக் காபின்னா சின்னம்மா தயார் செய்து கொடுத்த அந்த சுக்குக் காபிதான் நினைவுக்கு வருது. சின்னம்மா எங்கே? "

"இதோ சமையலறையில்தான்  இருக்காங்க. சின்னம்மா - இங்கே வாங்க. முகுந்தன் சாருக்கு சுக்குக் காபி வேணுமாம்."

"அஞ்சே நிமிஷத்துல கொண்டு வரேன் அய்யா" என்று சமையல்கார சின்னம்மா சொன்னார்.

"அட ஜானகீ! இங்கேதான் இருக்கியா! ஆபீசிலேருந்து வந்துட்டியா! ஓஹோ இன்று சனிக்கிழமை! உங்க கம்பெனி அரை நாள்தான் வேலை! அதை மறந்துவிட்டேன். வா வா உன் ரூமுக்குப் போகலாம். உன்னிடம் தனியா கொஞ்சம் பேசணும்."

ஜானகியின் பதிலை எதிர்பார்க்காமல் ஜானகியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஜானகியின் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டான் முகுந்தன்.

"முதல் விஷயமா உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். உன்னுடைய தோழி மோகனா பற்றி நான் அடித்த கமெண்ட்தான் உன் கோபத்திற்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்தமாதிரி பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு."

"பெரிய வார்த்தைகள் எல்லாம் நீங்க என்னிடம் ........"

"முதலில் இந்த நீங்க வாங்க போங்க என்ற மரியாதை வார்த்தைகளை மறந்துவிடு ஜானகி. "

"சரி."

"அப்புறம், நான் உன்னிடம் பிரபோஸ் செய்யலாம் என்று வந்திருக்கின்றேன். உன்னுடைய முழுச் சம்மதத்தைப் பெற்றால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உன் அண்ணன் சொல்லிவிட்டான்!" 

"பிரபோஸ்? என்ன பிரபோஸ்?" 

"பிசினெஸ்." 

"பிசினெஸ் !"

"ஆமாம்டா ஜானகிராமா! நீயும் உன் அண்ணனும் சேர்ந்து இங்கே மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியை சிறப்பாக நடத்தி வருகின்றீர்கள். இந்த கம்பெனியின் மலேசியக் கிளையைத் தொடங்கி, மலேசியக் கிளையின் சி இ ஓவாக நான் செயல்படலாம் என்று இருக்கின்றேன்." 

"அட! மலேசியாவிலும் இதே பெயர் வைக்கப் போகின்றீர்களா?" 

"கொஞ்சம் பெயர் மாற்றி, மா ஜா மு எண்டர்ப்ரைசஸ் என்று வைத்துவிடலாம் என்று நானும் மாதவனும் முடிவெடுத்திருக்கின்றோம். மா ஜா மு என்றால், மலேசிய மொழியில் என்ன அர்த்தம் என்று தெரியுமாடா?" 

"தெரியாதே! என்ன அர்த்தம்?" 

" எனக்கும் தெரியாது! எனக்கு மலேசிய மொழியே தெரியாது! "

முகுந்தனும், ஜானகிராமனும் வாய்விட்டு பெரிதாகச் சிரித்தார்கள்!
         
 (முற்றும்)
 

இது என்னங்க கேடயம்?

பதிவாசிரியர் தாக்க வருகின்ற வாசகர்களிடமிருந்து தப்பிக்க இதற்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கிறார்! 
            

12.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். + கேட்டது கேட்டபடி 6/7




1)  ஆறு வயதில் கிராமத்துக்கே ரோல் மாடலாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!  சானியாவின் பெருமையில் அர்த்தம் உண்டு.




2)  சுய அனுபவம் சமுதாயத்துக்குப் பாடுபடும் எண்ணத்தை விதைக்கிறது.  மும்தாஜ் போல!  அதையும் செயல்படுத்த வேண்டுமே..  நாலுபேருக்கு நல்லது செய்யும் மனுஷி.





 
3)  A 4,818 வயது மனிதர்,  120வயது மனிதர்...  இதெல்லாம் எங்கு?  வாக்காளர் பட்டியலில்!  18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் பலரைச் சொல்லி இருக்கிறார்களாம்.  இதைச் சரிப்படுத்த முனைந்திருக்கும் 66 வயது P G பட்.





 
4)  நடனமாடிய குழந்தைகளின் பாதங்களை அவ்வப்போது குத்தியது, இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியதோ இல்லையோ மேடையில் விழா தலைவராக அமர்ந்திருந்த ஒருவருக்கு வலியை ஏற்படுத்தியது.




அவர் யாரையாவது கூப்பிட்டு நடனத்தை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தச்சொல்லி இருக்கலாம், யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவரே விறுவிறுவென எழுந்துவந்து குழந்தைகளை ஒரு ஒரமாக இருக்கச்சொல்லிவிட்டு துருத்திய கற்களை எந்த கவுரவமும் பார்க்காமல் குனிந்து பொறுக்கி ஒரு
ரமாக போட்டுவிட்டு தரையை செம்மைப்படுத்திவிட்டு பிறகு குழந்தைகளை ஆடவைத்தார்.   பி.சங்கர் மகாதேவன்.



5)  எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மனைவி திருமதி சீதாலட்சுமி.





6) விதைக் kalaam குழுவினருக்கு நம் பாராட்டுதல்களைத் தெரிவிப்போம்.





7)  நல்ல மனம் வாழ்க.. உலகம் போற்ற வாழ்க.. எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.






9)  இலவசமாகத் தருகிறார் என்றதும், நான் கூட மக்கள் இதை உபயோகப் படுத்திக் கொள்வார்களே தவிர, இதனால் அர்த்தமில்லை என்றுதான் நினைத்தேன்.  நல்லெண்ணத்தைப் பரப்பச் சொல்கிறார்,  தேவையில் இருப்போருக்கு உதவச் சொல்லி, அதைத்தான் விலையாகக் கேட்கிறார் என்றதும் மதிப்பு வந்தது.  மிராஜுதின் சையத்.






 
10)  சென்னபுரி அன்னதான சமாஜத்தைப் பாராட்டுவதா?  அறியத்தந்த நடராசன் அவர்களை பாராட்டுவதா?





11)  இப்படியும் ஒரு அடேடே பள்ளி!  மதுரை அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி.




12)  விளையும் பயிர்.  அனிருத் கதிர்வேல்




 

13)  நெகிழ வைக்கிறார் திவ்யா.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.







======================================================================





கேட்டது கேட்டபடி 6/7 





அந்த மறுநாளும் இதோ வந்துவிட்டது. 
              
அது சனிக்கிழமை. 
            
மா ஜா எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு அரை நாள் வேலை, அரை நாள் லீவு. மறுநாள் ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் எல்லோருமே ரொம்ப உற்சாகமாகக் காணப்பட்டனர். 
           
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. 
            
'முகுந்தன் எப்போது வருவான்?  அவனிடம் நாமே பேச்சை ஆரம்பிப்பதா அல்லது அவன் பார்த்து மன்னிப்புக் கேட்கட்டும் என்று இருந்துவிடுவதா? ' ஜானகிக்கு ஒரே குழப்பம். 
              
மாலை நாலரை மணிக்கு டாக்சி வந்தது. அதிலிருந்து கோட் சூட் அணிந்து, டை, கூலிங் கிளாஸ் சகிதம் இறங்கிய முகுந்தனை மாடி பால்கனியிலிருந்து நோட்டமிட்ட ஜானகியின் மனம், 'அட ஆள் எப்படி மாறிப் போயிட்டான்! முந்தி இருந்த முகுந்தன் எங்கே? இப்போ இருக்கின்ற இந்த முகுந்தன் ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டானே! ' என்று எண்ணியது. 
               
மாடி அறையிலிருந்து கீழே முகுந்தன் பேசியது எல்லாம் நன்றாகக் கேட்டது. அந்த வெண்கலக் குரல் மட்டும் மாறவே இல்லை. 
              
"நாராயணன் ! வெந்நீர் ரெடியா இருக்கா? முதல் விஷயமா குளிக்கணும். பார்க் ஹோட்டல் பாத் டப் குளியல் பிரயோசனமே இல்லை. சின்னம்மா எங்கே? " 

"சின்னம்மாவை ஏன் தேடறீங்க?" 
     
(தொடரும்)

11.9.15

வெள்ளிக்கிழமை வீடியோ 150911 + கே கே 5/7


      


இரவு மணி பத்து ஆக பத்து நிமிடங்கள் இருக்கும்போது வாசலில் கார் சப்தம். ஸ்விப்ட் கார் வந்து நின்றது. 

'ஏதேனும் பேச்சுக் குரல் கேட்கிறதா?' 

'ஒன்றும் இல்லையே! ' 

'ஓட்டை வாய் முகுந்தன் எப்படி ஒன்றும் பேசாமல் மெளனமாக....' 

நாராயணன் மட்டும் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து, செருப்பை வாசலில் கழற்றிவிட்டு, கெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றார். 

"முகுந்தன் வரலியா? அவர் எங்கே, நாராயணன்?" 

"அவரு பிரீப் கேசை மட்டும் எடுத்துக்கொண்டு, பார்க் ஹோட்டலுக்குப் போயிருக்கார். வந்துகொண்டு இருக்கும்பொழுது, நேரே ஹோட்டலுக்கு வரச் சொல்லி அவருடைய ஆபீஸ் நண்பரிடமிருந்து ஒரு கால் வந்தது." 

"ஓஹோ! எப்போ இங்கே வருவாராம்?" 
         
"நாளைக்கு சாயந்திரம் வருவேன் என்று சொன்னார்." 
           
"கார் கீ எங்கே?" 
           
" இதோ இந்தாங்க." நாராயணன் கொடுத்துவிட்டுப் போனார். 
             
ரெக்கார்டிங் டிவைசைக் கொண்டுபோய், தன அறையில், கம்பியூட்டரில் இணைத்து, உரையாடல்கள் எல்லாவற்றையும் கேட்ட ஜானகிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தன்னைப் பற்றி சம்பிரதாய விசாரிப்புகள் மட்டுமே முகுந்தன் கேட்டிருந்ததுதான் அந்த ஏமாற்றத்தின் காரணம். 
                 
" நாராயணன் எப்படி இருக்கீங்க?" 
             
"நல்லா இருக்கேன் ஐயா."
             
" மாதவன்  எப்போ ஊரிலேயிருந்து வராரு?" (நன்றி கீ சா)  
         
"இன்னும் ரெண்டு நாளில் அல்லது அதிகமாப் போனா மூன்று நாளில் வந்துவிடுவார் ஐயா ."
           
"சின்னம்மா சௌக்கியமா?" 
             
" உம். சௌக்கியம்." 
            
அப்புறம் ஏதோதோ அலைபேசி அழைப்புகள், கேள்விகள், பதில்கள். 
               
"மெட்ராஸ் இந்த ஆறு வருஷத்துல ரொம்ப மாறிப்போயிடிச்சு நாராயணன்."
                
"ஆமாம் ஐயா. " 
             
"நாராயணன் - உங்க கிட்டே ஜானகியின் மொபைல் நம்பர் இருக்கா?" 
            
"இல்லை சார். என் கிட்ட மாதவன் சார் நம்பர் மட்டும்தான் இருக்கு. மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியின் லாண்ட்லைன் நம்பர்கள் இருக்கு." 
            
"ஜானகி கிட்ட ....." 
            
திரும்பவும் அலைபேசி அழைப்பு. "சரி சார் நான் நேரே ஹோட்டலுக்குப் போய் அந்த பிரசன்டேஷன் சரியா இருக்கா, ஏன் ஓபன் ஆகவில்லை என்று செக் செய்கின்றேன். அன்சாரி ரூமிலேயே அவர் கூடவே இருந்து பார்த்து, நீங்க சொன்ன கரெக்ஷன் எல்லாம் செய்து விடுகின்றேன். அது ஒன்றும் பிரச்னை இல்லை. நாளைக்கு சாயந்திரம் என்னுடைய நண்பன் வீட்டுக்குப் போய்க்கொள்கின்றேன் .. சரி சார். ஓ கே. " 
            
"நாராயணன் என்னை நேரே பார்க் ஹோட்டலில் கொண்டு போய் இறக்கிவிடுங்கள். என் பெட்டியிலிருந்து, நாளைக்கு வேண்டிய டிரஸ் மட்டும் எடுத்துக்கொள்கின்றேன். பெட்டியை மாதவன் வீட்டு கெஸ்ட் ரூமில் வைத்துவிடுங்கள். ஜானகி கேட்டால் நாளை சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிடுங்கள்." 
            
"சரி ஐயா " 
              
(தொடரும்) 
      

10.9.15

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் & கேட்டது கேட்டபடி 4/7



வாரப் பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பி அந்தந்தப் பத்திரிகாசிரியரின் பதிலுக்காய்க் காத்திருப்போம்.  இங்கு நாமே ராஜா... நாமே மந்திரி!  எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிக் கலக்கலாம்!


முன்னர் 'எங்கள் ப்ளாக்'கில் வந்து கொண்டிருந்த ஒரு பகுதிதான் இது.   பயப்பட வேண்டாம்!  மீண்டும் தொடங்கவில்லை.  அவ்வப்போது கேள்விகள் வரும்..  ஆனால் வாரா வாரம் தொடராக வராது!  ஏனென்றால், ஏற்கெனவே, திங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்களால் நிரம்பி இருக்கிறது!
 
ரெடியா....  ஜூட்....!
 

கேள்விகள் :


1)  முதலாளிகளிடம் இருக்கும் பணம் அல்லது தொழிலாளிகளிடம் இல்லாத பணம் - எதற்கு சக்தி அதிகம்?
 
 
2)  இரண்டு நண்பர்கள்.  ஒருவர் ஈஃபில் டவர் உச்சியில்.  மற்றவர் அதன் அடியில், அல்லது பத்து மீட்டர் உயரத்தில்.  இருவருக்கும் சூர்யோதயம் ஒரே நேரத்தில் தெரியுமா?
 
 
3)  ஹர்திக் படேல்?
 
 
 
====================================================================

 கேட்டது கேட்டபடி 4/7


டிரைவர் நாராயணன் வந்தார். 

" நான் ஏர் போர்ட் போகின்றேன். முகுந்தன் ஐயாவை அழைத்து வருவதற்கு. நீங்க வரீங்களா?"  

"நான் வரவில்லை. ஒரே தலைவலியாக இருக்கு. நீங்க போய் கூப்பிட்டு வாருங்கள். எத்தனை மணிக்கு கோலாலம்பூர் பிளைட் அரைவல்?" 



"இரவு மணி எட்டு பத்துக்கு என்று சொன்னார்கள்." 

"எந்தக் கார் எடுத்துக்கிட்டுப் போகப்போறீங்க? " 

" ஸ்விப்ட் கார்." 

"இருங்க கார் சாவியைக் கொண்டு வந்து தருகிறேன்." 
      
கார் சாவி வளையத்தில்,  மிக விரைவாக அந்த ரெக்கார்டிங் டிவைஸ் மாட்டப்பட்டு, ஆன் செய்யப்பட்டு,அது நாராயணனிடம் கொடுக்கப்பட்டது.  
நாராயணன் அதை கவனிக்கவில்லை. சாவிக்கொத்தில் இருக்கின்ற பிளாஸ்டிக் பட்டை என்று நினைத்தாரோ என்னவோ. 
         
"முகுந்தன் வீட்டுக்கு வந்து சேரும்பொழுது, நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். கார் சாவியை, இந்த கீ ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, நீங்க வீட்டுக்குப் போகலாம்." 
             
"சரி" என்று கூறியபடி, காரை நோக்கிச் சென்றார் நாராயணன். 
                
(தொடரும்) 
                 
    

9.9.15

குறையொன்றுமில்லை + கே கே 3/7



குறையொன்றுமில்லை 



அதீதம் மின்னிதழில் இந்த மாதம் வெளியான என் சிறுகதை.



                                        


"ம்மா.. உனக்கு என்ன குறைம்மா?"

திடீரென தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்வியில் பலமான காற்று முகத்தில் மோதியது போல நிமிர்ந்தாள் பூமா.


தன்னைப் பார்க்க இரவு பத்து மணிக்கு மேல் வந்தவன், ஒருமணி நேரம் கழித்துக் கிளம்புகிறான்.  'இருந்து விட்டு, காலைல போயேண்டா' என்று சொன்னதற்கு 'மதுவோட அம்மா தனியா இருப்பாம்மா... போகணும்' என்று கிளம்பிக் கொண்டிருந்தவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி.

மது அவன் மனைவி.   அவனை விட ஆறு மாதம் பெரியவள்.  காதல்!


'நானும் தனியாத்தானேடா இருக்கேன்?' என்ற கேள்வி வாய்க்குள்ளேயே பஞ்சு மிட்டாய் போலக் கரைந்து போனது.  கசந்த பஞ்சு மிட்டாய்!


"ஏன் சுந்தர்?  எதைக் கேக்கறே?  திடீர்னு என்ன கேள்வி?"


"இல்லை..!  உங்க ஃபிரெண்ட் அகிலா ஆன்ட்டி இன்னிக்கி என்னை ஹோட்டலில் பார்த்தாங்க.. அவங்க பேசியதைக் கேட்டதுனால கேக்கிறேன்.. அம்மாவுக்கு என்மேல எதுவும் குறை இருக்காதுன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன்.  அதான் உன்னை இப்போ கேக்கறேன்..  சொல்லு.. உனக்கு ஏதும் என்மேல குறை இருக்கா?"


"இல்லடா கண்ணா..  நீ அப்படிக் கேட்டதே சந்தோஷம்.. எனக்கென்ன குறை உன்மேல..?"


மலர்ந்து போனது சுந்தர் முகம்.  கிளம்ப ஆரம்பித்தவன், மறுபடி ஸோஃபாவில் அமர்ந்து கொண்டான்.


"சின்ன குறை ஏதாவது இருந்தாலும் சொல்லும்மா..."


"நீ என் மகன் சுந்தர்..  குஞ்சு மிதிச்சு கோழி முடமாகுமான்னு சொல்வாங்க.. என்ன இப்போ?   விடு"


"அப்படீன்னா?  அப்பா உன்னை சரியாவே கவனிச்சுக்க மாட்டார் இல்லம்மா?  ஆனா, நான் அப்படி இருக்கக் கூடாதுன்னுதான் மதுவை கண் கலங்காமப் பார்த்துக்கறேன்..  உனக்கே தெரியும் அது..  உனக்குக் கூட அதுலதான் சந்தோஷம் இல்லையாம்மா?"


"உண்மைதான் சுந்தர்..." பெருமூச்சு விட்ட பூமா சற்றுப் பொறுத்துத் தொடர்ந்தாள்.


"ஆனால் சுந்தர்.. மதுவோட அம்மா தனியா இருப்பான்னு போறே..  நானும் தனியாத்தாண்டா இருக்கேன்..  நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டோடயே தங்கிட்டே சரி..  எப்பவாவது என் கூடயும் இருக்கலாமில்லன்னு தோணும் அவ்வளவுதான்.  விடு.. அது ஒரு பெரிய குறை இல்ல..."


"சுபா உன் கூட இருந்தாளே அம்மா..."


"அவ இருந்தா என்னடா...  நீ என் மகன் இல்லையா?  அவளுக்கும்தான் கல்யாணம் பண்ணி வச்சாச்சு..  அவளக் கூட நீ போய்ப் பார்க்கவே மாட்டேங்கறே..  இன்னும் ஒரு மாசத்துல நான் சென்னை போயிடுவேன்.  நீதான் அவளப் பார்த்துக்கணும்.சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்கறே..  விடு... அது ஒரு பெரிய குறை இல்ல"


"போம்மா.. எனக்கு அவனப் பிடிக்கலை"


"யாரை?"


"சுபா ஹஸ்பெண்டைத்தான்..  ரொம்ப அலட்டறான்மா..."


"சுபா கிட்ட உன்னப் பத்தியும் மாப்பிள்ளை அதையேதாண்டா சொல்லி இருக்கார்"


சுந்தர் மௌனமாக இருந்தான்.


"கொஞ்சம் பால் சுட வச்சுத் தரவா சுந்தர்?"


"வேண்டாம்மா... நான் கிளம்பறேன்.. கல்யாணத்துக்கு முதல் நாள் நம்ம ரிலேடிவ்ஸுக்கு ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிக் கொடுத்தேனே..  அந்தக் காசை நீ இன்னும் தரலம்மா... இலை கூட வாங்கி வைக்காம இருந்தே நீ..  நானும் மதுவும்தான் வாங்கி வந்தோம்"


"தரேண்டா..  இப்போ கைல பைசா இல்ல.. நாளைக்கு சுபாவுக்கு ஒரு வெள்ளியில் ஒரு அம்மன் முகம் வாங்கித் தந்துடுடா..நாளைக்கு அவ ஹனிமூனுக்குக் கிளம்பறா.. அதுக்குள்ளே வாங்கிக் குடுத்துடு.."


"போம்மா.  என் கிட்ட பைசா இல்ல..  காசு குடு. வாங்கித் தரேன். நீ அவங்கள மறு வீடு கூப்பிடப் போகச் சொல்ல பூ பழம் வாங்கித் தரச் சொன்னே..  அப்பவும் காசு தராமத்தான் அனுப்பினே..  அந்தக் காசும் வரணும்..  எவ்வளவு வேலை செய்திருக்கேன் சுபா கல்யாணத்துக்கு..  நான்தான் நடத்திக் கொடுத்தேன்"


சிரிப்பு வந்ததை அடக்கிக் கொண்டு  ஒன்றும் பதில் பேசாமல் அவனையே பார்த்தாள் பூமா.  எல்லா காசும் இவள் ஓய்வூதியத்தில் வந்தது.  சத்திரம் பிடிக்கத் தொடங்கி அழைப்பிதழ் கொடுப்பது வரை இவளும் சுபாவும்தான் அலைந்திருந்தார்கள்.  "அண்ணனைக் கூப்பிடாதம்மா...  நாமளே முடிப்போம்" என்றாள் ரோஷத்துடன்.  இவன்தான் 'நடத்திக் கொடுத்தானா'ம்!


தங்கையின் திருமணத்துக்கு நிஜமாக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை சுந்தர்.  செய்த ஒரு சிலவற்றுக்கும் காசு கேட்கிறான்.  நிச்சயதார்த்தத்துக்குக் கூட அது நடக்கும் ஒருமணி நேரத்துக்கு முன்புதான் வந்தான்.  முதல் பந்தியில் மதுவுடன் சாப்பிட்டான்.  விருந்தினர்கள் கிளம்பு முன்னரே கிளம்பிப் போய்விட்டான்.


'கல்யாணத்துக்கு சத்திரம் பார்க்க, அழைப்பிதழ் கொடுக்க என்று எதற்குமே வரவில்லையே, ஏண்டா' என்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொன்னான்.


ஊர் விட்டு ஊர் மாற்றலாகி வந்தபோது கூட இவன் தன்னைக் கேட்ட கேள்வி "லேடீஸ் ஹாஸ்டல்ல இடம் பார்த்துடவா அம்மா?"


'இவனுக்கு ஏன் தன் வீட்டில் அம்மா வந்து தங்கட்டும் என்று தோன்றவில்லை?  மாமியாரைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவன் தன்னை ஏன் அங்கு தங்க வைக்க யோசிக்கிறான்?' என்று தோன்றும்.


தான்தான் அவனுக்கு எதுவும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லை என்று நினைத்துக் கொள்வாள்.


அதைவிட சென்ற வருடம் முதல் வரலக்ஷ்மி பூஜை தன் வீட்டில் செய்ய ஆரம்பித்திருப்பதாய்ச் சொன்னவன், இவளைக் கூப்பிடவே இல்லை.  சுபாவை அழைத்தபோது, "அம்மா கிட்ட சொன்னியோ" என்று கேட்டாளாம்.  "சும்மா இரு... இது சுமங்கலி பூஜை" என்றானாம்.  சுபா இதைச் சொல்லும்போது அழுது விட்டாள்.


சனி ஞாயிறு அவனுக்கு விடுமுறை.  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெள்ளி இரவுகளில் வருவான்.  அதுவும் ஒன்பது மணிக்கு மேல்தான் வருவான்.  இரவு 12 மணியானாலும் கிளம்பிப் போய்விடுவான். மதுவும் எப்போதும் அவனுடனேயே ஒட்டிக் கொண்டுதான் வருவாள்.  சுபாவுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு தனியாகத்தான் இருக்கிறாள் பூமா.


இவளது தோழிகளுக்கு இவள் நிலை தெரியும்.  அவர்களிடம் கூட இவள் சுந்தரைப் பற்றி எதுவும் குறையாகச் சொன்னதில்லை.  ஆனாலும் அவளாகக் கேட்டிருக்கிறாள் போலும்.


"அகிலா வேற என்னடா சொன்னா?  என்னைக் கேட்டாளா?  பார்த்து ஒரு மாசமாச்சு அவளை"


"உன்னைத்தான் கேட்டாங்க ஆன்ட்டி.  அவங்கதான் உன்னைக் குறைபடும்படி வைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.. அதுதான் கேட்டேன்.. எனக்குத் தெரியாதாம்மா?  நான் தப்பா நடந்துக்கலைன்னு எனக்கே தெரியும்.. உனக்கெப்படிக் குறை இருக்கும்?  இருந்தாலும் உன் வாயால கேட்டுக்கலாம்னுதான் கேட்டேன்மா.. குறை இல்லைதானே?


"ஒன்றும் குறை இல்லை சுந்தர்... "


எம் எஸ் பாடலின் இறுதியில் "ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா" என்று அழுத்தி, வலியுறுத்திப் பாடும்போது எப்போதுமே இவளுக்குக் கண்கள் கலங்கி விடும்.


இப்போதும்!
           

=======================================================================


கேட்டது கேட்டபடி 3/7 (ஏழுநாள் தொடர்) 


முந்தைய பகுதிகள், முந்தைய பதிவுகளில் (திங்கள், செவ்வாய்) 



"ஆமாம், உங்களுக்குள் அப்படி என்ன தகராறு?" 
                    
"உன்னுடைய பிரெண்ட் பொண்ணுங்களைப் பார்த்தா அவங்களைப் பற்றி  ஏதேனும் மட்டமான கமெண்ட் பாஸ் பண்ணுவார் தெரியுமா?" 
               
"தெரியும். அவன் அந்த மாதிரி பேசுவது எனக்கும் பிடிக்காது. அவனிடம் இப்படி எல்லாம் கமெண்ட் அடிக்காதே. ஜானகிக்கும் இதெல்லாம் பிடிக்காது என்று அடிக்கடி சொல்லுவேன். " 
                 
"அது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒருநாள் நம்ம வீட்டுக்கு வந்தபோது நான் என்னுடைய பிரெண்ட் மோகனா கூட ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். மோகனாவைப் பார்த்தவுடன், என்னிடம், "ஜானகீ இது உன்னோட பிரெண்டா?" என்று கேட்டுவிட்டு சிரித்தபடி, உன் ரூமுக்கு வந்தான். 

பிறகு மோகனா கிளம்பிச் சென்றபின், ஐந்து நிமிடம் கழித்து உன் ரூமிலிருந்து வந்த முகுந்தன், என்னிடம், " எங்கே உன்னுடைய நண்பி - - -   - - - -  - - - - (edited) "  என்று கேட்டு சிரித்தான். எனக்கு பயங்கரக் கோபம். 

அப்போதிலிருந்து அவன் முகத்தைப் பார்ப்பதில்லை, அவன் பேச்சுக் கேட்பதில்லை, அவனோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்து, அப்படியே இருந்து வந்தேன். 




 அப்புறம் இரண்டு மாதங்கள் கழித்து அவன் மலேசியா போய் அங்கேயே செட்டில் ஆகிவிடுவான் என்று நீ சொன்னதும் எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்போ எதுக்கு வருகின்றானாம்?  சரி, சரி.   வருகின்றாராம்? " 

"இங்கே ஒரு வாரம் ஒரு பிசினெஸ் மீட் இருக்கின்றதாம். அடையார் பார்க் ஹோட்டலில். அங்கேயே தங்கிக்கும்படி அவன் பாஸ் சொன்னாராம். நாந்தான் அதெல்லாம் முடியாது, நீ எங்கள் வீட்டில்தான் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன். அவன், கெஸ்ட் ரூமில் தங்கிக்கொள்ளட்டும். நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துடறேன்." 

"சரி அண்ணா." 

"சரி . இப்போ நாம நம்ப கம்பெனிக்குப் போகலாம் வா. டிரைவர் ரெடியா?" 

===============  


மாலையில், மாதவன் கிளம்புவதற்கு முன்பு கூறியது: 

"நீ பழசை எல்லாம் ஞாபகம் வெச்சிகிட்டு அவனைக் கஷ்டப்படுத்தாதே. அவன் இப்போ எவ்வளவோ மாறியிருப்பான். அவன் பேசினால், நீயும் பேசு. சிரித்தால் நீயும் சிரி. எவ்வளவு தூரம் இயல்பாக இருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் இயல்பாக இரு. ஓ கே எனக்கு டாக்சி வந்தாச்சு. பை. " 



(தொடரும்)  . 
                 

8.9.15

கேட்டது கேட்டபடி 2/7

               
"இங்கேதான் இருக்கியா? நான் பேசினதை எல்லாம் ஒட்டுக் கேட்டியா?"
   

"அப்படித்தான் வெச்சுக்கோயேன்! "
           
"சரி சரி - முகுந்தன் வரானாம்." 
              
"வரட்டுமே!"
                
"ஒருவாரம் இங்கே நம்ம வீட்டிலே தங்கிப்பானாம்." 
               
"அண்ணா உன்னுடைய பிசினெஸ் ட்ரிப் எவ்வளவு நாள்?" 
                
"இன்னிக்கு சாயந்திரம் கிளம்பிப் போயிட்டு மூன்றே நாளில் திரும்பி வந்துடுவேன்." 
                    
"முகுந்தன் எப்போ வரானாம்?" 
               
" என் நண்பன் முகுந்தன் என்னை விட இரண்டு வயது பெரியவன். அவனை நீ மரியாதை இல்லாமல் வரான் போறான் என்று பேசக்கூடாது." 
               
"சரி - அந்தப் பெரியவர் எப்போ வருவாராம்?" 
             
"இன்னிக்கு நைட்டே வரானாம்." 
              
"அண்ணா நானும் உன் கூட பிசினெஸ் ட்ரிப் வந்துவிடுகிறேன். அந்த முகுந்தர் கூட இங்கே நான் தனியாக இருக்க ஒரு மாதிரியா இருக்கு." 
               
"அது முடியாதுடா செல்லம்! நான் ஏற்கெனவே ரிசர்வ் செய்துள்ளேன். மேலும் வீட்டைப் பார்த்துக்கொள்ள நீ மட்டுமாவது இங்கு இருக்கவேண்டும். அதான் வேலைக்காரர்கள், வாட்ச்மேன் எல்லோரும் இருக்காங்களே! உனக்கு என்ன பயம்?" 
              
"அண்ணா! முகுந்தன் கூட நான் கோபித்துக்கொண்டு அவரோடு பேசுவதை நிறுத்தி ஆறு வருஷம் ஆயிடிச்சு. இப்போ, அதுவும் நீ ஊரில் இல்லாதபோது, இந்த சிக்கலில் நான் மாட்டிக்கணுமா?  "  
   
(தொடரும்)