Thursday, September 10, 2015

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் & கேட்டது கேட்டபடி 4/7வாரப் பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பி அந்தந்தப் பத்திரிகாசிரியரின் பதிலுக்காய்க் காத்திருப்போம்.  இங்கு நாமே ராஜா... நாமே மந்திரி!  எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிக் கலக்கலாம்!


முன்னர் 'எங்கள் ப்ளாக்'கில் வந்து கொண்டிருந்த ஒரு பகுதிதான் இது.   பயப்பட வேண்டாம்!  மீண்டும் தொடங்கவில்லை.  அவ்வப்போது கேள்விகள் வரும்..  ஆனால் வாரா வாரம் தொடராக வராது!  ஏனென்றால், ஏற்கெனவே, திங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்களால் நிரம்பி இருக்கிறது!
 
ரெடியா....  ஜூட்....!
 

கேள்விகள் :


1)  முதலாளிகளிடம் இருக்கும் பணம் அல்லது தொழிலாளிகளிடம் இல்லாத பணம் - எதற்கு சக்தி அதிகம்?
 
 
2)  இரண்டு நண்பர்கள்.  ஒருவர் ஈஃபில் டவர் உச்சியில்.  மற்றவர் அதன் அடியில், அல்லது பத்து மீட்டர் உயரத்தில்.  இருவருக்கும் சூர்யோதயம் ஒரே நேரத்தில் தெரியுமா?
 
 
3)  ஹர்திக் படேல்?
 
 
 
====================================================================

 கேட்டது கேட்டபடி 4/7


டிரைவர் நாராயணன் வந்தார். 

" நான் ஏர் போர்ட் போகின்றேன். முகுந்தன் ஐயாவை அழைத்து வருவதற்கு. நீங்க வரீங்களா?"  

"நான் வரவில்லை. ஒரே தலைவலியாக இருக்கு. நீங்க போய் கூப்பிட்டு வாருங்கள். எத்தனை மணிக்கு கோலாலம்பூர் பிளைட் அரைவல்?" "இரவு மணி எட்டு பத்துக்கு என்று சொன்னார்கள்." 

"எந்தக் கார் எடுத்துக்கிட்டுப் போகப்போறீங்க? " 

" ஸ்விப்ட் கார்." 

"இருங்க கார் சாவியைக் கொண்டு வந்து தருகிறேன்." 
      
கார் சாவி வளையத்தில்,  மிக விரைவாக அந்த ரெக்கார்டிங் டிவைஸ் மாட்டப்பட்டு, ஆன் செய்யப்பட்டு,அது நாராயணனிடம் கொடுக்கப்பட்டது.  
நாராயணன் அதை கவனிக்கவில்லை. சாவிக்கொத்தில் இருக்கின்ற பிளாஸ்டிக் பட்டை என்று நினைத்தாரோ என்னவோ. 
         
"முகுந்தன் வீட்டுக்கு வந்து சேரும்பொழுது, நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். கார் சாவியை, இந்த கீ ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, நீங்க வீட்டுக்குப் போகலாம்." 
             
"சரி" என்று கூறியபடி, காரை நோக்கிச் சென்றார் நாராயணன். 
                
(தொடரும்) 
                 
    

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு + சிந்தனை தவிர வேறு ஏதும்.... ஜூட்...!

Dr B Jambulingam said...

உண்மையில் நாமே ராஜா, நாமே மந்திரி

Geetha Sambasivam said...

கேள்விகளுக்கு பதில் இல்லை! அதுவும் அந்தக் கடைசிக் கேள்விக்கு நிச்சயமாய் இல்லை! :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

1.இல்லாத பணத்திற்கே சக்தி அதிகம்.
2.தெரியாது (எப்படிப் பார்த்தாலும் சரியான விடைதானே? ஹிஹிஹி)
3.ஏதோ ஒரு மாற்றத்தில் தொடக்கமாக தோன்றுகிறது

Avargal Unmaigal said...

1) முதலாளிகளிடம் இருக்கும் பணம் அல்லது தொழிலாளிகளிடம் இல்லாத பணம் - எதற்கு சக்தி அதிகம்?
யாருக்கு சக்தி அதிகம் என்று கேட்டு இருந்தால் தொழிலாளிக்கு என்று சொல்லி இருப்பேன் ஆனால் எதற்கு என்று கேட்டதால் முதலாளியிடம் இருக்கும் பணத்திற்குதான் சக்தி அதிகம்


2) இரண்டு நண்பர்கள். ஒருவர் ஈஃபில் டவர் உச்சியில். மற்றவர் அதன் அடியில், அல்லது பத்து மீட்டர் உயரத்தில். இருவருக்கும் சூர்யோதயம் ஒரே நேரத்தில் தெரியுமா?
மேலே இருப்பவர்ருக்கு தெரிய வாய்ப்புகள் அதிகம் கிழே இருப்பவருக்கு வாய்ப்புக்கள் குறைவு காரணம் பல ஆப்ஜெக்ட்டுகள் மறைக்க வாய்ப்புகள் இருக்கிறது


3) ஹர்திக் படேல்?
மோடியால் மறைமுகமாக உருவாக்கப்பட்டவர்
மோடிக்கு செக் வைக்க RSS உருவாக்கப்பட்டவர்
அல்லது மோடியின் இந்துத்துவா பிடிக்காத மேலை நாடுகளின் உளவுதுறையால் உருவாக்கப்பட்டவர்

‘தளிர்’ சுரேஷ் said...

தொழிலாளிகளிடம் இல்லாத பணத்தைக் கொண்டே பல முதலாளிகள் உருவாகிறார்கள்! எனவே இல்லாத பணத்திற்கே சக்தி அதிகம். இரண்டாவதுகேள்விக்கு விடை : எனக்குத் தெரியாது. மேத்ஸில் நான் வீக்! ஹர்திக் படேல்: இதுவும் ஓர் விளம்பரமாக மாறிவிடக் கூடாது என்று தோன்றுகிறது!

G.M Balasubramaniam said...

1) இருக்கும் பணத்துக்குத்தான் சக்தி அதிகம். இல்லாத பணத்துக்கு சக்தி ஏது.?
2)மேலே இருப்பவருக்கு. அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம்
3) யாராலோ தூண்டிவிடப்பட்ட ஒரு கோமாளி இளைஞர்
சரியான பதில் என்று இருந்தால் தரவும்

Madhavan Srinivasagopalan said...

My answers for 1 & 2 are same as that of Shri. GM Balasubramaniam.
3 Q goes unattempted..

I think I got 66.666666 % --- crossed the pass mark limit..

KILLERGEE Devakottai said...

இதோ வந்து பதில் சொல்கிறேன்

சென்னை பித்தன் said...

2)துபாயில் உயரமான கட்டிடத்தில் மேலே இருப்பவர்களுக்குக் ரம்ஜான் நோன்பு கீழே இருப்பவர்களை விட சீக்கிரம் தொடங்கி சீக்கிரம் முடியுமாமே!

வலிப்போக்கன் - said...

எனக்கும் கேள்வி கேட்கத்தான் தெரியும்...தலைவரே...

தனிமரம் said...

முதலாளியின் பணம் பாதாளம் வரை பாயும் சக்தி அதிகம். இரண்டாவது ஈபிள் டவரில் இருப்பவருக்கே முதலில் மூன்றாவது இதுவும் ஒரு விளம்பர யுத்தி.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் கேள்வி....இதில் யாருக்குச் சக்தியதிகம் என்றால் இந்த உலகத்தைப் பொருத்தவரை பணம் தான் பாயும்.....ஜெயில்வரை...(பாதாளம் என்பதெல்லாம் பழசு...)

ஆனால் முதலாளியா, தொழிலாளியா என்றால் தொழிலாளிதான்....அவன் முடங்கினால் முதலாளியிடம் இருக்கும் பணம் கோவிந்தா....

இரண்டாவது....மேலே இருப்பவருக்குத்தான் தெரியும்......கீழே இருப்பவர் என்றால் கஷ்டம்...பல கட்டிடங்கள் மறைக்கலாம்...பரந்தவெளி என்றால் மேலே கீழே இருந்தாலும் தெரியும்....

மூன்றாவது ம்ஹும் தெரியலை......

Thulasidharan V Thillaiakathu said...

கதை தொடர்கின்றோம்...

Mythily kasthuri rengan said...

உங்க பதில் எதுவும் இருக்கானு பார்த்தேன்......
நான் மதுரை தமிழன் சகா சொன்னதை வழிமொழிகிறேன்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!