Friday, September 11, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150911 + கே கே 5/7


      


இரவு மணி பத்து ஆக பத்து நிமிடங்கள் இருக்கும்போது வாசலில் கார் சப்தம். ஸ்விப்ட் கார் வந்து நின்றது. 

'ஏதேனும் பேச்சுக் குரல் கேட்கிறதா?' 

'ஒன்றும் இல்லையே! ' 

'ஓட்டை வாய் முகுந்தன் எப்படி ஒன்றும் பேசாமல் மெளனமாக....' 

நாராயணன் மட்டும் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து, செருப்பை வாசலில் கழற்றிவிட்டு, கெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றார். 

"முகுந்தன் வரலியா? அவர் எங்கே, நாராயணன்?" 

"அவரு பிரீப் கேசை மட்டும் எடுத்துக்கொண்டு, பார்க் ஹோட்டலுக்குப் போயிருக்கார். வந்துகொண்டு இருக்கும்பொழுது, நேரே ஹோட்டலுக்கு வரச் சொல்லி அவருடைய ஆபீஸ் நண்பரிடமிருந்து ஒரு கால் வந்தது." 

"ஓஹோ! எப்போ இங்கே வருவாராம்?" 
         
"நாளைக்கு சாயந்திரம் வருவேன் என்று சொன்னார்." 
           
"கார் கீ எங்கே?" 
           
" இதோ இந்தாங்க." நாராயணன் கொடுத்துவிட்டுப் போனார். 
             
ரெக்கார்டிங் டிவைசைக் கொண்டுபோய், தன அறையில், கம்பியூட்டரில் இணைத்து, உரையாடல்கள் எல்லாவற்றையும் கேட்ட ஜானகிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தன்னைப் பற்றி சம்பிரதாய விசாரிப்புகள் மட்டுமே முகுந்தன் கேட்டிருந்ததுதான் அந்த ஏமாற்றத்தின் காரணம். 
                 
" நாராயணன் எப்படி இருக்கீங்க?" 
             
"நல்லா இருக்கேன் ஐயா."
             
" மாதவன்  எப்போ ஊரிலேயிருந்து வராரு?" (நன்றி கீ சா)  
         
"இன்னும் ரெண்டு நாளில் அல்லது அதிகமாப் போனா மூன்று நாளில் வந்துவிடுவார் ஐயா ."
           
"சின்னம்மா சௌக்கியமா?" 
             
" உம். சௌக்கியம்." 
            
அப்புறம் ஏதோதோ அலைபேசி அழைப்புகள், கேள்விகள், பதில்கள். 
               
"மெட்ராஸ் இந்த ஆறு வருஷத்துல ரொம்ப மாறிப்போயிடிச்சு நாராயணன்."
                
"ஆமாம் ஐயா. " 
             
"நாராயணன் - உங்க கிட்டே ஜானகியின் மொபைல் நம்பர் இருக்கா?" 
            
"இல்லை சார். என் கிட்ட மாதவன் சார் நம்பர் மட்டும்தான் இருக்கு. மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியின் லாண்ட்லைன் நம்பர்கள் இருக்கு." 
            
"ஜானகி கிட்ட ....." 
            
திரும்பவும் அலைபேசி அழைப்பு. "சரி சார் நான் நேரே ஹோட்டலுக்குப் போய் அந்த பிரசன்டேஷன் சரியா இருக்கா, ஏன் ஓபன் ஆகவில்லை என்று செக் செய்கின்றேன். அன்சாரி ரூமிலேயே அவர் கூடவே இருந்து பார்த்து, நீங்க சொன்ன கரெக்ஷன் எல்லாம் செய்து விடுகின்றேன். அது ஒன்றும் பிரச்னை இல்லை. நாளைக்கு சாயந்திரம் என்னுடைய நண்பன் வீட்டுக்குப் போய்க்கொள்கின்றேன் .. சரி சார். ஓ கே. " 
            
"நாராயணன் என்னை நேரே பார்க் ஹோட்டலில் கொண்டு போய் இறக்கிவிடுங்கள். என் பெட்டியிலிருந்து, நாளைக்கு வேண்டிய டிரஸ் மட்டும் எடுத்துக்கொள்கின்றேன். பெட்டியை மாதவன் வீட்டு கெஸ்ட் ரூமில் வைத்துவிடுங்கள். ஜானகி கேட்டால் நாளை சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிடுங்கள்." 
            
"சரி ஐயா " 
              
(தொடரும்) 
      

15 comments:

KILLERGEE Devakottai said...

காணொளி ரசித்தேன் தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு சொடுக்கில் பயமுறுத்தி விட்டாரே அம்மணி...!

Thulasidharan V Thillaiakathu said...

அந்த கார் ட்ரைவிங்க் சூப்பர்! ஹஹஹஹஹ் ரொம்ப ரசித்தோம்...

கதை தொடர்கின்றோம்....நல்லா போகுதே...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/

sury Siva said...

வீடியோ பார்த்தேன்.
நியூசன்ஸ் ஆக்ட் லே புக் பண்ணனும்
போன் போட்டு சொல்லுங்க சார்.
வண்டி நம்பரை.

சுப்பு தாத்தா.

www.subbuthatha72.blogspot.com

G.M Balasubramaniam said...

ஒரே காருக்கு இரண்டு ஸ்டீரிங்குகளா?லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவில் ரைட் ஹாண்ட் ஸ்டீரிங் வீல்....?

mageswari balachandran said...

நல்லா இருக்கு,
தொடருங்கள்,,,,,,,

வலிப்போக்கன் - said...

காண் ஒளியில் ஆ...ஆ..... இதுக்குத்தானப்பா...நான் வண்டியே ஓட்டுறதில்லையே.....

வலிப்போக்கன் - said...

காண் ஒளியில் ஆ...ஆ..... இதுக்குத்தானப்பா...நான் வண்டியே ஓட்டுறதில்லையே.....

Geetha Sambasivam said...

//முகுந்தன் எப்போ ஊரிலேயிருந்து வராரு?" //

ஊரிலிருந்து வந்திருப்பது முகுந்தன் தானே? அப்போ இவர் யாரைக் கேட்கிறார். அல்லது எனக்குத் தான் புரியலையோ? சுட்டி இருப்பது தவறானால் மன்னிக்கவும். சரியானால் திருத்தவும். நன்றி. :)

Geetha Sambasivam said...

மாதவன் தானே ஊருக்குப்போயிருக்கார்? வந்திருக்கும் முகுந்தனின் நண்பர், ஜானகியில் அண்ணன்? குழப்பறேனோ?

Geetha Sambasivam said...

ஃப்ரீவேயிலே இப்படி எல்லாம் விளையாடினாப் போலீஸ் வந்துடுமே உடனே! இது எந்த நாடுனு கேட்க வேண்டாம். ஏனெனில் அம்பேரிக்காவில் மட்டும் தான் மாறுபட்ட முறை! அம்பேரிக்கானா இப்படிச் செய்ய முடியாது. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வீடியோவுக்காக எடுத்ததா?

பரிவை சே.குமார் said...

வீடியோ அருமை...
கதையினை மொத்தமாகப் படித்து கருத்து இடுகிறேன் அண்ணா...

பரிவை சே.குமார் said...

கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்...
ரொம்ப நல்லா இருக்கு...
அவரு திருந்தி வந்திருக்கிறா... அல்லது இன்னும் அப்படியே இருக்கிறாரா என்பதை அறிய கதைப்படி நாளை மாலைவரை காத்திருக்க வேண்டுமா... இல்லை அண்ணன் காலையிலேயே பதிவீர்களா...?

குறையொன்றும் இல்லை அதீதத்தில் வாசித்தேன்... அருமை... வாழ்த்துக்கள் அண்ணா...

ராமலக்ஷ்மி said...

நாளை சாயந்திர சந்திப்பு எப்படி இருக்கப் போகிறதோ.. தொடருகிறோம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!